Jump to content

ஐக்கிய இராச்சியத்தில் முதன்முறையாக தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான பணிக்கால மதிப்பளிப்பும், அதிதிறன் பெற்ற மாணவர்க்கான பரிசளிப்பும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய இராச்சியத்தில் முதன்முறையாக தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான பணிக்கால மதிப்பளிப்பும், அதிதிறன் பெற்ற மாணவர்க்கான பரிசளிப்பும்

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஐக்கிய இராச்சியக் கிளை தன்னோடு இணைந்து செயலாற்றும் பள்ளிகளின் 250ற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பணிக்கால மதிப்பளிப்பும் இப்பள்ளிகளில் கல்வி கற்று தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனைத்துலகத் தேர்வு 2014இல் அதிதிறன் (90-100 புள்ளிகள்) பெற்ற 430ற்கு மேற்பட்ட மாணவர்களுக்குப் பரிசளிப்பினையும் 25.01.15 ஞாயிறு இன்று BYRONHALL, HARROW LEISURE CENTRE இல் நடாத்திக்கொண்டிருக்கிறது.

mathippalithal_uk_01.png

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர் மாணவர் இந்நிகழ்வில் பங்கேற்றுக் கொண்டிருக்கின்றனர். இந்நிகழ்வானது தமிழ்மொழியின் மீது பற்றுக்கொண்ட அனைத்துப் பெற்றோரையும் ஆசிரியர்களையும் மாணவர்களையும் உற்சாகப்படுத்தி தமிழின் நிரந்தர இருப்பை உறுதிப்படுத்தும் ஒரு நிகழ்வாக அமைந்துகொண்டிருப்பது சிறப்பாகும்.

mathippalithal_uk_02.png

பிரமாண்டமான மண்டபத்தில் நேர்;த்தியாகத் திட்டமிடப்பட்டு, சீராக ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி நடாத்தப்பட்டு கொண்டிருப்பது, தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை மாணவரின் வாழ்வின் வழிகாட்டியாய் நிற்கும் என்பதனை உறுதிப்படுத்துகின்றது. ஆசிரியர் பணிக்காலத்தை 5, 10, 15 ஆண்டுகளுக்கு மேல் என வகைப்படுத்தி தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் தலைமைச் செயற்திட்ட நிறைவேற்றுநர் திருமதி அரியரட்ணம் அவர்களினால் மதிப்பளிப்புபட்டயங்கள் வழங்கப்பட்டு ஆசிரியர்கள் மதிப்பளிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். 

mathippalithal_uk_04.png

இங்கு உரையாற்றிய திருமதி அரியரட்ணம் “எமது பணி எனறென்றும் தொடரும் எம் எதிர்கால தலைமுறையினர் இதனை எடுத்துச்செல்வர்.” என்று கூறியமை அனைத்துத் தமிழ் ஆர்வரலர்களுக்கும் மனநிறைவைத் தருவதாக இருந்தது. கலந்து கொண்ட அனைவரும் மகிழ்ச்சி கொண்டமை இவ்விழாவின் சிறப்பாக அமைந்துள்ளது.

mathippalithal_uk_05.png

uk_mathipplaithal_01.png

 

http://www.pathivu.com/news/37254/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இனியும் வாழும்.........

 

நன்றி  இணைப்புக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி, நொச்சி... பார்க்க சந்தோசமாய் இருக்கு...!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.