Jump to content

அப்ரிதி ஓய்வு எப்போது


Recommended Posts

அப்ரிதி ஓய்வு எப்போது
டிசம்பர் 21, 2014.

 

கராச்சி: பாகிஸ்தான் வீரர் அப்ரிதி, அடுத்த ஆண்டு உலக கோப்பை தொடருக்கு பின், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.     

பாகிஸ்தான் அணியின் ‘ஆல்–ரவுண்டர்’ அப்ரிதி, 34. இதுவரை 27 டெஸ்ட் (1716 ரன், 48 விக்.,), 389 ஒருநாள் (7870 ரன், 391 விக்.,), 77 சர்வதேச ‘டுவென்டி–20’ (1142 ரன், 81 விக்.,) போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 2010ல் டெஸ்ட் போட்டியில் இருந்து விடை பெற்ற அப்ரிதி, தற்போது ஒருநாள் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.  

   

இதுகுறித்து அப்ரிதி கூறியது: நல்ல நிலையில் இருக்கும் போதே ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். எனவே அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கவுள்ள உலக கோப்பை தொடருக்கு பின், ஒருநாள் போட்டிகளில் இருந்து மட்டும் விடைபெற முடிவு செய்துள்ளேன். இது தான் சரியான நேரமாக கருதுகிறேன். வரும் 2016ல் இந்தியாவில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக நிறைய ‘டுவென்டி–20’ போட்டிகளில் விளையாட உள்ளேன். வரும் 2016க்கு முன், சிறந்த ‘டுவென்டி–20’ அணியை உருவாக்க முயற்சிப்பேன். 

    

முறையாக ஓய்வு அறிவிக்கும் முதல் பாகிஸ்தான் வீரர் நானாக தான் இருப்பேன். ஒருநாள் போட்டிகளில் என்னால் முடிந்தவரை பாகிஸ்தானுக்கு நிறைய செய்துள்ளேன். இது போதும் என நினைக்கிறேன். இந்த அறிவிப்பு மூலம், என் மனதில் இருந்த சுமை குறைந்துள்ளது. இதன்மூலம் உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.     

இவ்வாறு அப்ரிதி கூறினார்.

 

http://sports.dinamalar.com/2014/12/1419176202/AfridiPakistanCricketOneDayInternationalRetirement.html

Link to comment
Share on other sites

உலகக் கிண்ணத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து பாகிஸ்தான் சகலதுறை வீரர் அவ்ரிடி ஓய்வு
 

 

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நிறைவுடன் தனது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையும் நிறைவுபெறும் என பாகிஸ்தான் சகலதுறை வீரர் ஷஹீத் அவ்ரிடி தெரிவித்துள்ளார்.


எனினும் அணித் தலைவர் பதவியை வகிக்கும் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது உபாதைக்குள்ளான மிஸ்பா உல் ஹக்கிற்குப் பதிலாக, அணித் தலைவர் பதவி ஷஹீத் அவ்றிடியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.


இந்தத் தொடரில் அவர் 164 என்ற அதிரடி வேகத்துடன் 205 ஓட்டங்களை மொத்தமாக பெற்றதுடன் 8 விக்கெட்களையும் கைப்பற்றி தனது சகலதுறை ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தார்.

உலகக் கிண்ணப் போட்டிகளின்போது 35ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ள அவ்றிடி, இலங்கைக்கு எதிராக நைரோபியில் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகவீரராக விளையாடிய அதிவேக சதத்தைப் பதிவு செய்து சாதனை நிலைநாட்டியிருந்தார்.
17 வருடங்களின் பின்னர் நியூஸிலாந்தின் கோரி அண்டர்சன் அந்த சாதனையை முறியடித்தார்.


389 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள அவ்ரிடி, 7870 ஓட்டங்களை மொத்தமாக குவித்துள்ளதுடன் 391 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து 2010 இல் ஓய்வுபெற்ற அவ்ரிடி, 2011 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானை அரை இறுதிவரை வழிநடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=8191#sthash.oaneekPJ.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.