Jump to content

கனவுகள்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

201592.jpg

 

எழுத்தில் நிலைக்க முன்

படத்தில் பதிய முன்

எழுந்த வேகத்தில்

கரைந்திடும்

மன அலைகளே..!

 

கலியாணம் கட்டி

காண வேண்டியதை

கண நேரத்தில் காட்டி

மறைகிறீர்..

மனததை தவிக்க விடுகிறீர்..!

 

காதலிக்க நினைப்பவரை

கட்டியணைக்க வைக்கிறீர்

மீண்டும் தவிக்கையில்

தலையணையை

தருகிறீர்...!

 

நடந்ததை மறந்தாலும்

நினைவுக் கிடங்கதை

கிண்டிக் கிளறி விடுகிறீர்

நன்றும் தீதும்

இரட்டையராய் தருகிறீர்..!

 

கலரா.. கறுப்பு வெள்ளையா

வகை வகையாய்

போகாத காட்டிலும் போக விடுகிறீர்

ராக்கெட் இல்லாமலே

எட்டாத வெளியிலும் பறக்க விடுகிறீர்

விழுந்து சாகவும் செய்கிறீர்..!!

 

அலறி அடிக்கும் கணங்கள் போக

அடித்து வீழ்த்த நினைக்கும் எதிரியை

அடிக்க வைக்கிறீர்

அலைகள் கடந்து நடுக்கடலில்

நிறுத்தியும் வைக்கிறீர்...!

 

நாளும் உம் விளையாட்டு

மூளையதை வதைத்தாலும்..

உணர்வதில்  உடல் சுகிக்கவும் வைக்கிறீர்

சாவினில் கூட சாக விடாத

அற்புத உணர்வலைகளே

கனவுகள்..!!!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்சியும் கவிதையும் அருமையாக இருக்கிறது நெடுக்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அக்கா வருகைக்கும்.. ரசனைக்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனவுதான் எல்லாம்

 

ஒவ்வொரு செயலின் ஆரம்பப்புள்ளியே அங்குதான் இடப்படுகிறது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.