Jump to content

விமான விபத்தில் உயிர்தப்பிய விமானப்படைச் சிப்பாயும் மரணம்!


Recommended Posts

விமான விபத்தில் உயிர்தப்பிய விமானப்படைச் சிப்பாயும் மரணம்!

 

 

antovo_fligh_down_001-300x171.jpgஹோகந்தர வடக்கு ஹொரஹேன பிரதேசத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற விமான விபத்தில் கடும் எரிகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த விமானப்படை சிப்பாய் உயிரிழந்துள்ளார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிப்பாய் நேற்று இரவு உயிரிழந்ததாக தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

ஜி.கே.என்.சத்துரங்க என்ற விமானப்படை சிப்பாயே உயிரிழந்துள்ளார்.

இந்த விமான விபத்தில் விமானி, உதவி விமானி உள்ளிட்ட நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

http://tamilleader.com/?p=45352

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.