Jump to content

ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்கிறது தமிழ் தேசிய மக்கள் முன்னணி


Recommended Posts

TNPF%20964141.jpg

 

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைப்பு சார் இன அழிப்புக் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆட்சி மாற்றம் என்ற போர்வையில் வெறும் ஆள்மாற்றம் மட்டுமே இடம்பெறப்போகின்றது. எனவே இந்தத் தேர்தலை புறக்கணிக்குமாறு தமிழ் மக்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது.
 
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் -
 
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைப்பு சார் இன அழிப்புக் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆட்சி மாற்றம் என்ற போர்வையில் வெறும் ஆள்மாற்றம் மட்டுமே இடம்பெறப்போகின்றது. மஹிந்த ராஜபக்‌ஷ தமிழ் மக்கள் மீது இன அழிப்பை மேற்கொண்டவர். தொடர்ந்தும் கட்டமைப்பு சார் இன அழிப்பை மேற்கொண்டு வருபவர். மிகக் கொடூரமான ஆட்சியைத் தமிழ் மக்கள் மீது நடத்திக் கொண்டிருப்பவர். அவர் நிராகரிக்கப்படல் வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
 
மைத்திரியை எடுத்துக்கொண்டால், அவருக்கு முன்பாக ரணில் என்னும் சமாதான முகமும், தமிழருக்கு சார்பானவர் என்ற முகமூடியும் போடப்படுகின்றது. ஆனால் அவருடன் அருகில் இருப்பது ரணில் போன்று காட்டப்பட்டாலும் உண்மையில் அவருக்குப் பக்கபலமாக உள்ளவர்கள், இனவாதகச் கட்சிகளான ஹெலஉறுமய, ஜே.வி.பி. மற்றும் சந்திரிகா. இந்த சந்திரிகா ஆட்சியில் நடந்தது என்ன? சமாதான தேவதையாக தன்னைக்காட்டி வெளிப்படையாகத் தமிழ் மக்களுக்கு சமஷ்டித் தீர்வு கொடுப்பேன் என்று கூறி 62 வீதமான வாக்குகள் பெற்று ஆட்சிப்பீடமேறியவர். பின்னர் சமாதானத்திற்கான யுத்தம் நடத்தி 5 லட்சம் மக்களை குடாநாட்டிலிருந்து பலவந்தமாக இடம்பெயர வைத்தவர். '
 
சத்ஜெய' இராணுவ நடவடிக்கை, 'எடிபல' இராணுவ நடவடிக்கை, 'ஜெயசிக்குறு' இராணுவ நடவடிக்கை உள்ளிட்ட தீவிரமான போர் நடவடிக்கைகளை நடத்தியவர். பல்லாயிரம் பேரை செம்மணியில் கொன்று புதைத்தவர். நவாலி தேவாலயம், மடு தேவாலயப் படுகொலைகள் உள்ளிட்ட தமிழர் தேசத்தில் பெருமளவு படுகொலைகளை அரங்கேற்றியவர்.
 
தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுத்த மாமனிதர் குமார் பொன்னம்பலத்தை கொலை செய்தவர். ரணிலுக்கும் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது புலிகள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை வரைபை முன்வைத்த போது ரணிலிடமிருந்த முக்கிய மூன்று அமைச்சுக்களைப் பறித்து சமாதான சூழலை குழப்பியவர்.
 
இந்த மைத்திரிபால அன்று வாகரையிலும் முள்ளிவாய்க்காலிலும் தமிழ் மக்கள் லட்சம் லட்சமாக கொல்லப்பட்ட போது ராஜபக்‌ஷவுடன் கூடியிருந்து யுத்தத்தை நடத்தியவர். சர்வதேச ரீதியில் போரையும் ராஜபக்‌ஷவையும் நியாயப்படுத்தியவர். இன்று தெளிவாகக் கூறியிருக்கின்றார், ராஜபக்‌ஷவுக்கும் இராணுவத்தினருக்கும் எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு இடமளியேன். சமஷ்டித்தீர்வு கொடேன் ஒற்றையாட்சியை பேணிப் பாதுகாப்பேன். பௌத்தத்திற்கு அரசியலமைப்பிலுள்ளவாறு முன்னுரிமை என்று இனவாதக் கட்சிகளுடன் ஒப்பந்தமிட்டுள்ளார். எனவே மைத்திரியின் ஆட்சியிலும் போரக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வாய்ப்பில்லையெனில், தமிழர்கள் விடயத்தில் சட்டத்தின் ஆட்சி நல்லாட்சி என்ற பேச்சுக்கும் இடமில்லை.
 
இந்நிலையில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் எவருக்கேனும் தமிழ் மக்கள் தமது வாக்குகளை வழங்குவதானது எதிர்காலத்தில் அந்த வேட்பாளர் வெற்றி பெற்ற பின்னர் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்போகும் இன அழிப்பை தமிழர்களே சரி என்று ஏற்றுக் கொள்வதாகவே அமையும். இந்தத் தேர்தல் வெறுமனே இலங்கையில் குடும்ப ஆட்சியையும், ஜனாதிபதி ஆட்சி முறையையும் ஒழித்து நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான தேர்தல் போன்ற ஒன்றைத் தோற்றப்பாடு மட்டுமே காட்டப்படுகின்றது. ஆனாலும் இந்தத் தேர்தலின் பின்னால் சர்வதேச வல்லாதிக்க சக்திகள் தமது நலன்களைப் பேணக்கூடிய ஒருவரை ஆட்சிக் கொண்டுவந்து விட வேண்டும் என்பதிலும் போட்டியிட்டுக் கொண்டுள்ளனர் என்பதனையும் எமது மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
 
குறிப்பாக சீன சார்பு நாடுகள் ஓர் அணியாகவும், இந்திய மற்றும் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் ஓரணியாகவும் திரண்டுள்ளன. அந்த சக்திகள் தமது நலன் பேணும் தலைமையை ஆட்சியிலமர்த்தும் போட்டியில் நாம் வெறும் கருவிகளாக மட்டும் இருப்பதில் எந்தப் பயனும் இல்லை.
 
இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் தராதது மட்டுமல்ல நிச்சயமாகத் தீமையை உண்டு பண்ணாது என்ற உத்தரவாதம் கூட இல்லா நிலையில் நடைபெறப் போகும் இந்தத் தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்களைக் கோருகின்றது. இதன் மூலம் தமிழ் மக்கள் தமிழ் தேசியவாத நிலைப்பாட்டை அதாவது சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான அரசியல் தீர்வுக் கோரிக்கை கைவிடவில்லை; கைவிடப் போவதுமில்லை என்ற செய்தியையும், அது அடையப்படும் வரை அமைதியாக இருக்கப் போவதில்லை அதற்காக அவர்கள் அரசியல் ரீதியாகப் போராடிக் கொண்டேயிருப்பார்கள் என்ற செய்தியையும் சர்வதேச சமூகத்திற்குத் தெளிவாக உணர்த்த இதனை நல்லதொரு சந்தர்ப்பமாக தமிழ் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
இதன் மூலம் தமிழ் மக்களது அரசியல் பிரச்சினையைத் தீர்க்காது இந்தத் தீவில் ஓர் ஆட்சியை உண்டு பண்ணுவதும் தமது நலன்களை அடைந்து கொள்வதும் சாத்தியமில்லை என்பதனையும் சர்வதேச சமூகத்திற்கு நாம் தெளிவாக உணர்த்த வேண்டும். இதனைத் தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு தங்களது அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்தத் தேர்தலை பகி‌ஷ்கரிக்குமாறு கோருகின்றோம் எனத் தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும் கலந்து கொண்டார். -
 
 
 
Link to comment
Share on other sites

கோமாளிகளின் தொல்லை சகிக்கமுடியவில்லை .

Link to comment
Share on other sites

கோமாளிகளின் தொல்லை சகிக்கமுடியவில்லை .

அவங்க ஒன்றும் உங எ வீட்டுக்கு வந்து தொல்லை கொடுக்கல. நீங்க தான. எப்ப பார்த்தாலும் அவங்களு கரிச்சு ்கொட்டிக்கிட்டே இருக்குறீங்க. விடிஞ்சா பொழுதுபட்டா அவங்கள திட்டுறதே உங்கட தொழிலாச்சு. சும்மா போங்க சாரு.

Link to comment
Share on other sites

அவங்க ஒன்றும் உங எ வீட்டுக்கு வந்து தொல்லை கொடுக்கல. நீங்க தான. எப்ப பார்த்தாலும் அவங்களு கரிச்சு ்கொட்டிக்கிட்டே இருக்குறீங்க. விடிஞ்சா பொழுதுபட்டா அவங்கள திட்டுறதே உங்கட தொழிலாச்சு. சும்மா போங்க சாரு.

நான் பிறந்த மண்ணில் வந்து எங்களுடைய பிரநிதித்துவத்தை இல்லாது ஒழிக்க பாடுபட்ட கோமாளிக்கூட்டத்தை விமர்சித்தால் ஏன் உங்களுக்கு உறைக்குது மகிந்தவிடம் வேண்டிய கோடிகளில் உங்களுக்கும் பங்கு தாறாங்க போல .

Link to comment
Share on other sites

நான் பிறந்த மண்ணில் வந்து எங்களுடைய பிரநிதித்துவத்தை இல்லாது ஒழிக்க பாடுபட்ட கோமாளிக்கூட்டத்தை விமர்சித்தால் ஏன் உங்களுக்கு உறைக்குது மகிந்தவிடம் வேண்டிய கோடிகளில் உங்களுக்கும் பங்கு தாறாங்க போல .

நான் ஒன்றும் அவங்கட்ட வாங்கல. மகிந்தட்ட நேரடியாக வாங்கினேங்க. எனக்கு முன்னுக்கு நின்று நீங்க வாங்கினீங்களே. உங்கள விட கொஞ்சம் ஜாஸ்தியா எனக்கு கொடுத்தாருங்க.

Link to comment
Share on other sites

கிளம்பிட்டாங்க , என்ன சிந்திதித்து தான் அறிக்கை விடுறிங்களா , அந்த காலம் வேற இப்ப வேற . இப்ப உள்ள சூழலில் என்ன செய்ய வேண்டுமோ அது தான் நல்லது . கூட்டமைப்பில் இருந்து விலகி நீங்கள் அடிக்கிற தொல்லை தாங்க முடியல . எல்லா ஜனாதிபதிகளும் ஒன்றுதான் ஆனால் மஹிந்த வை போல மிக மோசமானவன் ஒருவரும் இல்லை . சீனாவின் உதவியுடன் அவன் தமிழன் எல்லாரையும் நாட்டை விட்டு அனுப்பிவிடுவான் . இங்கே இந்தியாவும் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லை . அவர்களால் இதனை தடுக்க முடியாது . இதுதான் உண்மையான யதார்த்தம் . மைத்திரி வந்தால் கட்டாயம் அமெரிக்க , இந்தியா வின் சொல்லை தட்டமாட்டர்கள் . 
 
குறைந்தது 13 ஆம் சட்டத்தை ஆவது கொடுக்க சொல்வார்கள் அவரும் அதனை செய்வர் . அதில் இருந்து நாங்கள் இன்னும் பயணிக்க வேண்டும் அது எம் கைகளில் உள்ளது . இப்போதைக்கு இந்த ராஜபக்ச கும்பலை துரத்த வேண்டும் . இவங்கள் செய்த அநியாயத்தை விட இனி ஒருவரும் செய்ய முடியாது .
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமாளிகளின் தொல்லை சகிக்கமுடியவில்லை .

பல பந்திகளில் ஏன் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் என்று சொல்லப்பட்டதை அக்கட்சியின் மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்வு மூலம் ஒற்றை வரியில் நிராகரிக்க அரசியலில் ஆர்வம் உள்ள உங்களால் முடிகின்றது. ஆனால் கோமாளித்தனத்திற்குக் காரணத்தைச் சொல்லியிருக்கலாம்.

முன்னர் மகிந்தவை ஜனாதிபதியாக்க தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் என்பது இராஜதந்திரமாகத் தெரிந்திருக்கும். ஆனால் அது எவ்வளவு முட்டாள்தனம் என்று இப்போது புரிந்திருக்கவேண்டும்.

அதே நேரத்தில் இந்தியா போய் வந்தும் தேர்தல் தொடர்பாக இன்னும் ஒரு முடிவை எடுக்கத் திராணியற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் மும்மூர்த்திகளான கனவான்களும் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க முழுத் தகுதியும் உள்ளவர்கள் என்று நினைப்பதும் முரண்நகையான விடயம்!

கூட்டமைப்பினரை ஆட்டுவிப்பவர்கள் சொல்லுவதை அவர்கள் தமது சொந்தத் தீர்மானமாக 20ந் தேதிக்குப் பின்னர் சொல்லுவார்கள். அது என்னவாக இருக்கும் என்பது எப்போதோ தெரிந்தவிடயம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஜனாதிபதியை தமிழர்கள் தேர்வு செய்து என்ன பயன். அவர் எந்தக் கட்சியை சேர்ந்திருந்தாலும் சிங்களவர் சிங்களவர் தான்.

 

சந்திரிக்காவை சமாதான தேவதை என்று சொன்னவர்களில் ஐயா சம்பந்தன் அடக்கம். இன்று அந்தத் தேவதை தானே தமிழர்களை வெற்றி கொண்டேன் என்று பகிரங்கமாக கூவுகிறார். மகிந்தவும் இதே. மைத்திரியும் இதே. சரத்தும் இதே. ரணிலும் அதே..!

 

இப்படி இருக்க இவங்களில் எவருக்கு வாக்குப் போட்டு தமிழர்களுக்கு என்ன. அதிலும் வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்கி தங்கள் எதிர்ப்பை எதிர்பார்ப்பை தமிழர்கள் ஜனநாயக வழியில்.. உலகறியச் செய்யலாம். 15..20 இலட்சம் வாக்குகள் வடக்குக் கிழக்கில் செல்லுபடியற்றதாக்கப்பட்டது என்றாலும்.... உலகம் அதை கொஞ்சம் என்றால் கருத்தில் எடுக்கத்தானே வேண்டும். சிங்களவனுக்கு வாக்குப் போட்டு அவனிட்ட அடி வாங்கிறதிலும்.. இது எவ்வளவோ மேல். :icon_idea::)


அந்த வகையில்.. வாக்கைச் செலுத்துக்கோ.. செல்லுபடியற்ற வாக்காக. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுக்குள் ஒரு முடிவை எடுக்கும் நிலையிலிருக்கும்

அந்த முடிவை மக்களுக்கு அறிவிக்கும் துணிவை

தெளிவை

சரியோ பிழையோ அதை எதிர்கொள்ள முயலும் 

இவர்களை  பாராட்டுகின்றேன்.....

சிறிய  கட்சியோ

பெரிய கட்சியோ

இதுதான் மக்கள் தமது முடிவுகளை எடுக்கவும்

கட்சிகள் பற்றிய நம்பிக்கைகளை வளர்த்துக்கொள்ளவும்  உதவும்

இந்த முடிவை அறிவித்ததன் மூலம் என்னை இவர்கள் திரும்பிப்பார்க்கவைத்துள்ளார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி. கஜேந்திரகுமார் ஒருவேளை மகிந்தவிடம் காசு வாங்கிக் கொண்டு தேர்தலை பகிஷ்கரிக்க சொல்லியிருப்பாரோ.. எப்படியும் தமிழர்கள் வாக்குகள் மகிந்தவுக்கு எதிராக விழவே சான்ஸ் அதிகம்.  அதாவது, மைத்திரிக்கு வாக்களிக்க சான்ஸ் அதிகம். அதை தடுக்க வேண்டுமென்றால் தமிழர்களை வாக்களிக்காமல் செய்ய வேண்டும். அதை செய்வதற்கு கொஞ்சம் செலவாகும். மகிந்தவிடம் முன்பைவிட இப்ப அதிகம் காசு உள்ளதே.. கொடுத்தால் போச்சு. யாரெல்லாம் காசு வாங்குவார்கள் என்று பல வருட அனுபவசாலி மகிந்தவுக்கு தெரிந்திருக்கலாம் அல்லவா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி. கஜேந்திரகுமார் ஒருவேளை மகிந்தவிடம் காசு வாங்கிக் கொண்டு தேர்தலை பகிஷ்கரிக்க சொல்லியிருப்பாரோ.. எப்படியும் தமிழர்கள் வாக்குகள் மகிந்தவுக்கு எதிராக விழவே சான்ஸ் அதிகம்.  அதாவது, மைத்திரிக்கு வாக்களிக்க சான்ஸ் அதிகம். அதை தடுக்க வேண்டுமென்றால் தமிழர்களை வாக்களிக்காமல் செய்ய வேண்டும். அதை செய்வதற்கு கொஞ்சம் செலவாகும். மகிந்தவிடம் முன்பைவிட இப்ப அதிகம் காசு உள்ளதே.. கொடுத்தால் போச்சு. யாரெல்லாம் காசு வாங்குவார்கள் என்று பல வருட அனுபவசாலி மகிந்தவுக்கு தெரிந்திருக்கலாம் அல்லவா?  

 

அப்போ

கஜேந்திரகுமார்  துரோகி  என்கிறீர்கள்

நீங்க சொன்னால் சரியாகத்தான் இருக்கும்

பாம்பின் கால் பாம்பறியும்..... :( 

Link to comment
Share on other sites

மகிந்த அரசின் இன அடக்குமுறைக்கு எதிராக முன்பெல்லாம் இங்கு கள உறுப்பினர்களால் கருத்து வைக்கபடும்போதும் மகிந்த ஐரோப்பிய விஜயம் மேற்கொண்ட போது நடத்தபட்ட ஆர்பாட்டங்களை கூட கண்டித்து  மகிந்தவிற்கு வக்காலத்து வாங்கி அவ்வாறு எதிர் கருத்து வைத்தவர்களை திட்டி தீர்த்தவர்கள் எல்லாம் தற்போது மகிந்த அடக்குமுறையாளன் என்று தாங்களே கூறி  எதிராக மைத்திரிக்கு வக்காலத்து வாங்க முன்வந்துள்ளதை யாழ்களத்தின் முன்னைய பதிவுகளை பார்க்கும்போது தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2 வேட்பாளர்களுமே தமிழர்களுக்கு எதுவும் தரப்போவதில்லை. கூட்டமைப்பு காலத்தை வீணடித்து விட்டது.கூட்டமைப்பு தனியான வேட்பாளரை நிறுத்தி இதனை தமிழரின் சுயநிர்ணயக் கோரிக்கைக்கான வாக்கெடுப்பாக மாற்றியிருக்கலாம்.தமிழர் அல்லது தேர்தலைப்புறக்கணிக்குமாறு கூறலாம். அல்லது தமிழ்மக்களை சுயமாக வாக்களிக்குமாறு கூறலாம்.இந்த 3 விடயங்களையும் முன்னிறுத்தி பிரச்சாரத்தை எப்பொழுதோ மேற் கொண்டிருக்க வேண்டும்.ஆனால் காலம் கடந்து விட்டதுஇதமிழர்களை வழிநடத்துவதற்கான தகுதி கூட்டமைப்புக்கு அற்றுப் போய்விட்டதா?கூட்டமைப்பு யாருக்காவது ஆதரவளித்தால் அது எதிரணிக்குச்சார்பானதாகவே மாறும்.அதனாலேயே இருதலைவர்களும் பகிரங்கமாக கூட்டமைப்பிடம் ஆதரவைக் கேட்கவில்லை.கள்ள வாக்குகளைத் தவிர்ப்பதற்காகவும் தாங்கள் இந்தத்தேர்தலில் வாக்களித்தோம் என்பதைக் காட்டுவதற்காகவும் தமிழ்மக்கள் அனைவரும் சென்று வாக்களித்து தங்கள் வாக்குகளை செல்லாத வாக்குகளாகப் போடவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போ

கஜேந்திரகுமார்  துரோகி  என்கிறீர்கள்

நீங்க சொன்னால் சரியாகத்தான் இருக்கும்

பாம்பின் கால் பாம்பறியும்..... :( 

ஐயா.. நான் பாம்போ, டைனசரோ.. அது சிக்கல் இல்லை. மக்களை தேர்தலை புறக்கணிக்க வைத்தால், மகிந்தவுக்கு சாதகம். காசு வாங்கிக் கொண்டு அதை செய்தால், ராஜதந்திரம். ஏன், கஜேந்திரகுமாருக்கு ராஜதந்திரம் தெரிந்திருக்காதா என்றுதான் கேட்டேன். அவர் அப்படி செய்தார் என்று சொல்லவில்லை. ஒருவேளை அப்படி செய்தால் துரோகமா? இது என்னய்யா புது கதையாக இருக்கு?  இது நம்ம கதைதானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2 வேட்பாளர்களுமே தமிழர்களுக்கு எதுவும் தரப்போவதில்லை. கூட்டமைப்பு காலத்தை வீணடித்து விட்டது.கூட்டமைப்பு தனியான வேட்பாளரை நிறுத்தி இதனை தமிழரின் சுயநிர்ணயக் கோரிக்கைக்கான வாக்கெடுப்பாக மாற்றியிருக்கலாம்.தமிழர் அல்லது தேர்தலைப்புறக்கணிக்குமாறு கூறலாம். அல்லது தமிழ்மக்களை சுயமாக வாக்களிக்குமாறு கூறலாம்.இந்த 3 விடயங்களையும் முன்னிறுத்தி பிரச்சாரத்தை எப்பொழுதோ மேற் கொண்டிருக்க வேண்டும்.ஆனால் காலம் கடந்து விட்டதுஇதமிழர்களை வழிநடத்துவதற்கான தகுதி கூட்டமைப்புக்கு அற்றுப் போய்விட்டதா?கூட்டமைப்பு யாருக்காவது ஆதரவளித்தால் அது எதிரணிக்குச்சார்பானதாகவே மாறும்.அதனாலேயே இருதலைவர்களும் பகிரங்கமாக கூட்டமைப்பிடம் ஆதரவைக் கேட்கவில்லை.கள்ள வாக்குகளைத் தவிர்ப்பதற்காகவும் தாங்கள் இந்தத்தேர்தலில் வாக்களித்தோம் என்பதைக் காட்டுவதற்காகவும் தமிழ்மக்கள் அனைவரும் சென்று வாக்களித்து தங்கள் வாக்குகளை செல்லாத வாக்குகளாகப் போடவேண்டும்.

துணிவோடு அரசியல் நகர்வுகளை செய்ய வேண்டிய சூழலில் கிந்தியாவுக்குப் போவதும் வருவதும் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது என்பதை உணர மறுக்கிறார்களா அல்லது நடிக்கிறார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி கஜேந்திரகுமாருக்கு குடுத்த காசுக்கு அவர் தன்ரை முடிவைச் சொல்லி விட்டார்சம்பந்தருக்கு அதைவிடக் கூடக் குடுத்ததாலா அவர் முடிவைச் சொல்லாமல் இழுக்கின்றார்.கஜேந்திரகுமாரை விட கூட்டமைப்பின் முடிவுக்குத்தான் மக்கள் செவிமடுப்பர்(தற்போதைய நிலையில்)என்பது மகிந்தருக்கோ,மைத்திரிக்கோ தெரியதா விடயமல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கப் பாராளுமன்றமும் தமிழர்களுக்கான ஒரு தீர்வைத் தரப்போவதில்லை. எனவே வரும் பொதுத் தேர்தலையும் கயேந்திரன்ஸ் முன்னணி புறக்கணிக்கச் சொல்லுவார்களா? இங்கு தேர்தலைப் புறக்கணிப்பது நேரடியாக டக்கிளஸ் அங்கிளுக்கு உதவுவது போன்றது. நிச்சயம் கள்ள வாக்குகளை அள்ளிப் போடுவார்கள். மொத்தத்தில் மகிந்தவுக்கு மேலும் வாய்ப்பாகவே இருக்கும். இங்கு விரும்பியோ விரும்பாமலோ புலிகளின் கோரிக்கைக்கு அமைய 2005 இல் தேர்தலைப் புறக்கணித்து மகிந்த பதவிக்குவர தமிழர்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள். அதற்கான விலையையும் வட்டியுடன் செலுத்தியிருக்கிறார்கள். இங்கு மகிந்தவை பதவியில் இருந்து அகற்றும் பலம் தமிழர்களுக்கு இருக்குமாயின் அதனை நிரூபித்துக் காட்டுவது தார்மீகக் கடமையாகும். புலம்பெயர் புண்ணியவான்களின் தாளத்துக்கு ஆடாமல் மக்களை தம் விருப்புக்கு சுயாதீனமாக வாக்களிக்கக் கயேந்திரன்ஸ் முன்னணி கோரியிருக்கலாம். இதனையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சொல்லக் கூடும். சொல்லவும்வேண்டும். அப்படிச் செய்யும் எனத்தான் நான் நினைக்கிறேன். இதன் மூலம் புலத்துக்கு தமிழர் தாயகத்திலிருந்து ஒரு காட்டமான செய்தியை சொல்லமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலுக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் உறுப்பினர்கள் நேரடியாகத் தெரிவாவதால் அதனைப் பகிஸ்கரிப்பது மடமை. ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் பிரச்சினையைப் பற்றியே வாய் திறக்காத மைத்திரிக்கும், தமிழர்களை புலிகளிடம் இருந்து காப்பாற்றி புனர்வாழ்வு அளிக்கின்றேன் என்று சொல்லி தாயகப் பகுதிகளை சிங்கள மயமாக்கும் மகிந்தவுக்கும்தானே போட்டி. இதில் கூட்டமைப்பினர் ஒரு முடிவை எடுக்கமுடியாத கையாலாகாதவர்களாக உள்ளனர். ஆனால் தாங்கள் புத்திசாதுரியமாகச் செயற்படுகின்றோம் என்று சொல்லி தமிழ் மக்களுக்கு குளிசை போடுவார்கள். இப்படித் திரிசங்கு நிலையில் இருப்பதைவிட கோட்பாட்டு ரீதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு முடிவை எடுத்திருக்கின்றது. அதனைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது வேறு விடயம். ஆனால் கூட்டமைப்பு சொல்லித் தமிழ் மக்கள் கேட்கப்போவதில்லை!

யதீந்திராவின் பத்தியில் இருந்து..

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு மைத்திரிபாலவை பகிரங்கமாக ஆதரிக்கும் முடிவை எடுக்குமாயின் அது ஒரு தூரநோக்குள்ள, சிறந்த முடிவாக அமையாது. இந்த தேர்தலில் கூட்டமைப்பு அமைதி காப்பதே சாலவும் சிறந்தது. கூட்டமைப்பால் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கூறமுடியுமாயின் அதனை செய்யலாம். ஆனால் அது ஜனநாயகத்திற்கு முரணானது என்று கூட்டமைப்பு கருதினால், அமைதியாக இருப்பது பயனுடைய ஒன்றாக அமையும். தமிழ் மக்கள் தமது சொந்த முடிவின் அடிப்படையில் சிந்திப்பதாயின், அவர்கள் ஒன்றில் பகிஸ்கரிப்பர் அல்லது தங்களின் சொந்த முடிவில் வாக்களிப்பர். தமிழ் மக்கள் தமது சொந்த முடிவில் வாக்களிப்பின், அது முன்விரோதத்திற்கு வழிவகுக்காது.

ஆக யார் அடுத்த ஜனாதிபதியாக வருகின்றார் என்பது தெளிவில்லாத நிலையில் தோற்பவருக்கு ஆதரவளித்து முன்விரோதத்தை ஏற்படுத்த கூட்டமைப்பு விரும்பவில்லையாம். இதனை இணக்க அரசியல் செய்ய ஆயத்தமான நிலையாகக் கொள்ளலாம். அதைத்தானே காலங்காலமாக டக்ளஸ், ரவூப் ஹக்கீம், ஆறுமுகம் தொண்டமான், கருணா, பிள்ளையான், கேபி எல்லாம் செய்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

எமது (தமிழர்) பக்கம் 100 % சரியாகவே இதுவரை நிகழ்ந்திருக்கிறது அல்லது செய்திருக்கிறோம். சிங்களவர் பக்கம் மட்டுமே தவறு நிகழ்ந்திருக்கிறது என்ற வழமையான சிந்தனையில் எழுதப்பட்ட மற்றுமொரு கட்டுறை. ( தமிழர் புறொடக்க்ஷன்).
 
ஆனால் யதார்த்தம் வேறு. 
 
சர்வதேச சமூகம் பார்ப்பது வேறு.
 
Link to comment
Share on other sites

சிங்கள ஜனாதிபதியை தமிழர்கள் தேர்வு செய்து என்ன பயன். அவர் எந்தக் கட்சியை சேர்ந்திருந்தாலும் சிங்களவர் சிங்களவர் தான்.

 

சந்திரிக்காவை சமாதான தேவதை என்று சொன்னவர்களில் ஐயா சம்பந்தன் அடக்கம். இன்று அந்தத் தேவதை தானே தமிழர்களை வெற்றி கொண்டேன் என்று பகிரங்கமாக கூவுகிறார். மகிந்தவும் இதே. மைத்திரியும் இதே. சரத்தும் இதே. ரணிலும் அதே..!

 

இப்படி இருக்க இவங்களில் எவருக்கு வாக்குப் போட்டு தமிழர்களுக்கு என்ன. அதிலும் வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்கி தங்கள் எதிர்ப்பை எதிர்பார்ப்பை தமிழர்கள் ஜனநாயக வழியில்.. உலகறியச் செய்யலாம். 15..20 இலட்சம் வாக்குகள் வடக்குக் கிழக்கில் செல்லுபடியற்றதாக்கப்பட்டது என்றாலும்.... உலகம் அதை கொஞ்சம் என்றால் கருத்தில் எடுக்கத்தானே வேண்டும். சிங்களவனுக்கு வாக்குப் போட்டு அவனிட்ட அடி வாங்கிறதிலும்.. இது எவ்வளவோ மேல். :icon_idea::)

அந்த வகையில்.. வாக்கைச் செலுத்துக்கோ.. செல்லுபடியற்ற வாக்காக. :)

நெடுக்கரின் கருத்தை ஆதரிக்கிறேன். :D புறக்கணிப்பு செய்யாமல் செல்லுபடியற்ற வாக்கை செலுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

தினக்குரல் பத்தியில் இருந்து
 

 

 

இன்னாருக்கு வாக்களியுங்கள் என்று சுட்டிக்காட்டி வழிநடத்த வேண்டிய அரசியல் அறிவற்றவர்களல்ல தமிழர்கள் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். தமிழ் மக்கள் தமது மனச்சாட்சியின் படி சிந்தித்து வாக்களிப்பர். கடந்த காலங்களில் தமிழ் அரசியலரங்காடிகள் விட்ட தவறும் அதன் தாக்கமும் புரிந்தவர்கள் தமிழர்கள்.  இன்றைய நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சுயமாகச் சிந்தித்து வாக்களிக்க வழிவிட்டு ஒதுங்கி நிற்பதே தமிழர் கூட்டமைப்பு மேற்கொள்ள வேண்டிய கடமையாகும்.

 

தமிழரை, தமிழர்  கூட்டமைப்பைக் காட்டி வாக்குகளை அள்ளிக்கொள்ள அலைந்து திரியும் இன வெறிப் பயங்கரவாத அரசியலரங்காடிகளின் முகத்தில் கரிபூச ஏற்ற சந்தர்ப்பம் இது.

 

 

 

http://www.thinakkural.lk/article.php?article/br1mucxolc122343cca4b3de2994pltsc2097b9558efefd0ecc3588bowzr#sthash.DYt83Qmt.dpuf

 

 

Link to comment
Share on other sites

ஜனாதிபதித் தேர்தலில் சிறிசேன வெற்றி பெற்றால் தமிழரின் அரசியல் உரிமை தொடர்பில் பெரிதாக ஒன்றும் நடந்து விடப் போவதில்லை. 

 

ஆனால் சொற்ப வாக்குகளால் பாராளுமன்றம் சென்று அரச ஆதரவுடன் அமைச்சராகி இன்றைக்கு வட மாகாண அபிவிருத்திக் கூட்டங்களில் இணைத் தலைமை என்ற பேரில் வலம் வந்து தனது அடியாட்களுடன் அட்டகாசம் செய்யும் டக்ளசின் கொட்டம் அடங்கும். 

 

இராணு ஆளுநர் சந்திரிசிறிக்கும் பதிலாக சிவில் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படலாம். 

 

தமிழர் தாயகத்தைக் கூறு போட்டு இயற்கை அழகுமிக்க கடற்கரைகள் வனப் பகுதிகளையெல்லாம் தனது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளும் மகிந்தரின் நடவடிக்கையில் சற்றுப் பின்னடைவு ஏற்படலாம்.

 

இப்படியாக ஆங்காங்கே சற்றே மூச்சுவிட தமிழர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். 

 

அது ஒன்றும் வேண்டாம். மகிந்த வென்றால் சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்காது. தமிழீழத்தை அமைத்துத் தமிழர்களிடம் கொடுப்பதோடு மகிந்தவை மின்சாரக் கதிரையி;ல அமர்த்தும் என்று யாராவது சொன்னால் நடக்கட்டும்.

 

இந்த இடத்தில் கூட்டமைப்பு மௌனமாக இருப்பதே நல்லது. அதை விடுத்து தேர்தலுக்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னதாக மைத்திரியை ஆதரியுங்கள் என்று அறிக்கை விட்டால் அம்போ தான். தேர்தல் பிரச்சாரங்கள் செய்ய முடியாத கடைசி இரண்டு நாட்களிலும் அரச ஊடகங்கள் இதையெ பேசு பொருளாக்கி சிங்கள மக்களை மகிந்த பக்கம் திருப்பி விடுவார்கள்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்தில் கூட்டமைப்பு மௌனமாக இருப்பதே நல்லது. அதை விடுத்து தேர்தலுக்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னதாக மைத்திரியை ஆதரியுங்கள் என்று அறிக்கை விட்டால் அம்போ தான். தேர்தல் பிரச்சாரங்கள் செய்ய முடியாத கடைசி இரண்டு நாட்களிலும் அரச ஊடகங்கள் இதையெ பேசு பொருளாக்கி சிங்கள மக்களை மகிந்த பக்கம் திருப்பி விடுவார்கள்...

இப்படித்தான் நானும் நினைக்கின்றேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1) யாழ்ப்பாணத்தில் பெரும்பாலானோர் மகிந்தவுக்கு வாக்களிக்க போவதில்லை (2010 இல் இருந்து யாழில் வசிப்பதால் தெரியும்)

 

2) பலர் மெனக்கெட்டு வாக்குச் சாவடிக்கு போக மாட்டார்கள். போனால், மைத்திரிக்கு வாக்களிப்பார்கள்.

 

3) இது மகிந்தவுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும்.

 

4) அதனால், தேர்தலை புறக்கணிக்கும்படி ஏதாவது கட்சி சொன்னால், (முன்பு போல) மகிந்தவிடம் இருந்து காசு கிடைக்கும்.

 

5) அதற்காக கஜேந்திரன்ஸூக்கு பெரிதாக காசு கிடைத்திருக்கும் என்று சொல்ல முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் கஜேந்திரன்ஸ் தமக்கு வாக்களிக்க சொன்னபோதே அதை கேட்டு யாரும் வாக்களிக்கவில்லை. பகிஸ்கரியுங்கள் என்று சொன்னால் இவர்கள் சொல்வதை சீரியசாக எடுத்து மக்கள் கேட்கவா போகிறார்கள். கிடைத்தால், சுமாரான அளவில் காசுதான் கிடைத்திருக்கும் (சில லட்சங்கள் மட்டும்)

 

6) உதயன் சரவணபவனுக்கு மைத்திரி வந்தால் பலன் அதிகம். இதனால், யாழின் பிரபல பத்திரிகையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மைத்திரிக்கு வாக்களிக்கும் பிரச்சாரம் இருக்கும்.

 

7) கடைசி நேரத்தில் கூட்டமைப்பு “மைத்திரிக்கு வாக்களியுங்கள்” என்று சொன்னால், அது மகிந்தவுக்கு சூப்பர் அதிஷ்டம். கூட்டமைப்பு சொல் கேட்டு மைத்திரிக்கு கிடைக்கும் வாக்குகளைவிட, ‘தமிழ் ஈழம் அமைக்க த.தே.கூ. - மைத்திரி ரகசிய ஒப்பந்தம்’ என்று தெற்கே சொல்லி வாக்குகளை அள்ளலாம். அந்த உதவியை கூட்டமைப்பு செய்தால், மகிந்தவின் ‘கவனிப்பு’ பலமாக (சில கோடிகள்) இருக்கும்.

 

8) உங்கள் இஷ்டப்படி வாக்களியுங்கள் என த.தே.கூ. சொன்னால், வடக்கே வாக்குச் சாவடிக்கு செல்பவர்கள் (பலர் போக மாட்டார்கள். maybe 40% வாக்காளர்கள் வாக்களிக்க போகலாம்) மைத்திரிக்கு வாக்களிப்பார்கள். ஆனால் மகிந்தவிடமிருந்து கூட்டமைப்புக்கு காசு கிடைக்காது.

 

9) இரு வேட்பாளர்களும் ஏதும் செய்யப் போவதில்லை என்பதால், கிடைத்தவரை ஆதாயம் என உள்ளது, மகிந்த கொடுக்கும் காசுதான் என கூட்டமைப்பு யோசிக்கலாம். (மகிந்தவை மீண்டும் ஜனாதிபதியாக்கும் முடிவை எடுத்தால், கூட்டமைப்பு கட்சியும் அழியாது. யுத்தம் புரியாத அதன் தலைவரும் உயிரை விட வேண்டிய நிலை ஏற்படாது. தைரியமாக முடிவு எடுக்கலாம்)

 

10) தனிப்பட்ட முறையில் நான் மைத்திரிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளேன்.

Link to comment
Share on other sites

த.தே.கூ. - வன்னி மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு

DSC05215.JPG
-நவரத்தினம் கபில்நாத்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் வன்னி பிரதேச மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை (21) ஈடுபட்டது. 

வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், வினோநோகதாரலிங்கம், சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
DSC05206.JPG

 

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/136296-2014-12-21-06-46-34.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.