Jump to content

தமிழர்களின் அரசியல்தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்புக்கான கோரிக்கை இலங்கையில் முன்வைக்கப்படவில்லை : - ருவிற்றரில் ரணில் பதில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
RANIL-350-seithy-news.jpg

தமிழ்மக்கள் தங்களின் அரசியல்தீர்வு குறித்தான விருப்பினை வெளிப்படுத்துவதற்கு பொதுசன வாக்கெடுப்பொன்றினை நடத்துமாறு இலங்கையில் எவரும் கோரவில்லை என சிறிலங்காவின் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். ஸ்கொட்லாந்து மக்கள் தங்களின் விருப்பினை வெளிப்படுத்துவதற்கான ஒர் வாய்ப்பாக அமைந்த பொதுசன வாக்கெடுப்பு மாதிரி, இலங்கையின் வடகிழக்கில் பொதுசன வாக்கெடுப்பு நடத்துவீர்களா என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர் உசா சிறீஸ்கநத்ராஜா அவர்கள் ருவிற்றரில் கேள்வியொன்றினைத் தொடுத்திருந்தார்.

   

இதற்கு பதில் அளிக்கும் பொழுதே மேற்குறித்த கூற்றினை சிறிலங்காவின் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

சுதந்திரமாக கருத்தினை வெளிப்படுத்துவதற்கு இலங்கையில் தடையாக உள்ள சிறிலங்காவின் 6வது அரசியல் திருத்தச் சட்டத்தினை நீக்கினால், பொதுசன வாக்கெடுப்புக்கான கோரிக்கை எழும். அதற்கு 6வது அரசியல் திருத்தச் சட்டத்தினை நீக்கிவீர்களா என ரணில் விக்கிரமசிங்கேவிடம் மறுகேள்வியினை உசா சிறீஸ்கநத்ராஜா ருவிற்றரில் தொடுத்த போது ரணில் விக்கிரமசிங்கே பதில் எதனையும் அளிக்கவில்லை.

நடந்து முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் தமிழீழத் தாயக மக்கள் மற்றும் தமிழீழத்தினை பூர்வீகமாக கொண்ட புலம்பெயர் மக்கள் பங்குகொள்ளும் பொதுசன வாக்கெடுப்புக்கான கோரிக்கையினை, அனைத்துலகத்திடம் முன்வைக்கும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

http://seithy.com/breifNews.php?newsID=122923&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

இதுதான் வெளி நாடுகளிலுள்ள புத்தியீவிகள் கூட்டணியினரிடம் கையளித்த விவகாரம்.முடிவெடுக்க காலம் தாழ்த்திய கூட்டணி அதற்குள் ஓங்கிய ரணிலின் கை...இக்கட்டைச் சமாளிக்க சம்பந்தருக்கு வந்த வருத்தம்.இலங்கையிலிருக்கும் டாக்டர்கள் கைவிடும் அளவுக்கு பெரும் வியாதி போல.இந்தியாவில்தான் மருத்துவம் சிறந்ததும் போல.அவரின் வருத்தம் மாறவும் தேர்தல் திகதி நெருங்கவும் சரியாகவிருக்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.