Jump to content

மகிந்த பயப்பிடத் தொடங்கிட்டார்: யாழ்ப்பாணத் தம்பி


Recommended Posts

ஈழ மண்ண புடிச்சு சிங்கள மண் ஆக்கின மகிந்தவுக்கு இந்த நிலையா?

Jaff%20thambi%2017_CI.jpg

 
மகிந்த ராஜபக்ச நல்லா பயப்பிடத் துவங்கிட்டார். உள்ளம் நிறைய பயம். முகம் நிறைய பீதி.. ஓ.. போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலையப் பற்றி ஒரு சர்வதேச ஊடகவியலாளர் கேள்வி கேட்ட நேரமும் அவர் பயந்தத பாத்திருக்கிறம்.. ஆனால் சிங்கள மக்கள யுத்த வெற்றி மாயைக்குள்ள வைச்சு காலம் கடத்தி எல்லாத்தையும் மறைச்சு பிழைக்கலாம் எண்டு நினைச்சார்... 
ஆனால் அது பிழைச்சுப்போச்சுது...
 
சிங்கள மக்களுக்கு கொட்டிய அழிச்சு, கொட்டியின்ட நிலத்த பிடிச்சது நல்ல கொந்தாய் எண்டாலும் மகிந்த ராஜபக்சவின்ட சர்வாதிகார ஆட்சியில வாழ முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது சிக்கலாயிருக்குது.. ராஜபக்ச கோஷ்டி எல்லாத்தையும் வித்து தாங்கள் நல்லா உழைச்சிட்டினம். ஆனால் நாமல் சொல்லுறார் தங்கட அப்பா கதிர்காமத்தில முந்தி விளையாட்டு சாமான் தான் வங்கி தந்தவராம்..
 
நல்ல கொமடி... 
 
ஊடகங்கள் பொய் சொல்லுதாம்... சரி.. நீங்களும் உங்கட அப்பாவும் சித்தப்பா பெரியப்பாக்களும்தான் மெய் சொல்லுறினம்.. இப்ப சந்தோசமே? ஆனால் பெரிய பெரிய பூசனிக்காயள சோத்தில மறைக்க ஏலாது நாமல் அண்ணே... உங்கட அப்பாவின்ட உள்நாட்டு பூசனிக்காயளயும் வெளிநாட்டு பூசனிக்காயளயும் மறை;கக ஏலாமல் எல்லா இடமும் ஆப்பு வருது பர்ததியள்தானே? 
 
மைத்திரிபால தான் ஜனாதிபதி ஆனதும் ஊழல் செய்த ஆக்கள பிடிச்சு உள்ள போடுவன் எண்டார். அவர்கள் நாட்ட விட்டு வெளியேற முற்படுவினம் எண்டும் சொன்னார். உடனே மகிந்த அந்த ஊழல்ககாரனும் நான்தான் எண்டுற மாதிரி என்ன விமான நிலையத்தில வைச்சு பிடிக்கப்போறினமாம். நான் நாட்ட விட்டுப் போக மாட்டன் எண்டு புலம்புறார்...
 
ஆள் பயப்பிடுறார்... 
 
பிறகென்ன? உப்ப திண்டால் தண்ணி குடிக்கத்தானே வேணும்? 
அது ஊழல் உப்பென்ன? யுத்த உப்பென்ன? ஏற்கனவே மனுசன் கடாபிக்கும் சதான்குசைனுக்கும் செய்தத தனக்கு செய்ய முற்படுறினம் எண்டு புலம்பினது. இப்ப நிலமை இன்னும் கிலிக் கலக்கத்த குடுக்கிற மாதிரி ஆகுது பாத்தியளே? 
 
உங்க ஒரு கிழவி திட்டுது. எங்கட மண்ணில எங்கள நிம்மதியாய இருக்க விடாமல் அகதிகமுகாங்களில எங்கள அலைக்கிறவர் இப்ப எங்க போறது எண்டு தெரியால் அல்லாடத் துடங்கிட்டார் எண்டு கிழவி சொல்லுது... 
 
தோத்தால் நாட்ட விட்டு போக மாட்டன் எண்டவர். இப்ப ஆள் வைச்சு என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமே? தோத்தாலும் அவர்தானாம் இரண்டு வருசத்திற்கு ஜனாதிபதியாம்... பேசால் தேர்தல் நடாத்தாமல் நானே நூறு வருசத்துக்கு ஜனாதிபதி எண்டு அறிவிக்கலாமே? அறிவிச்சாலும் அறிவிப்பார்... 
 
மகிந்த தோத்ததும் 24 மணிநேரத்துக்குகூட அவர் வெளியில இருக்க ஏலாது எண்டு ஜே.வி.பிக்காரர் சொல்லுறினம். அவைதானே இவர கொண்டு வந்தவையள். தாங்கள்தானாம் மகிந்தவுக்கு போஸ்டர் அடிக்க காசு குடுத்ததாம்.. 
 
கடவுளே ஈழ மண்ண புடிச்சு சிங்கள மண் ஆக்கின மகிந்தவுக்கு இந்த நிலையா? புத்தரே இது ஆரின்ட சோதினை? 
 
யாழ்ப்பாணத் தம்பி
 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.