Jump to content

நோர்வேயில் தொடரும் நிறவெறி : நவநீதம்பிள்ளையிடம் ஒப்படைத்த பைல்களுக்கு என்னவானது?


Recommended Posts

navaneetham-pillai_6.jpg

நோர்வேயின் குடியுரிமை பெற்றுள்ள இலங்கை உட்பட வெளிநாட்டவர்கள் மீதான நிறவெறி அடக்குமுறை செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றனவே தவிர அவற்றில் எந்தவித குறைவும் இடம்பெறவில்லையென பாதிக்கப்பட்ட தரப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
 
நோர்வேயில் குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் பிள்ளைச் செல்வங்களை நோர்வே குழந்தைகள் காப்பகங்களால் கொண்டு செல்லப்படுவதுடன் அவர்களது கலாச்சாரங்களை சீரழித்து பெற்றோரிடமிருந்து நிரந்தரமாக பிரிந்து விடுவதற்கான திட்டமிட்ட வகையிலான சூழ்ச்சி நடவடிக்கைகளை நோர்வே சிறுவர் காப்பங்கள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
 
பிள்ளைகளை இழந்த பெற்றோர் தனது நிலைமைகளை வெளிப்படுத்தியும் தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு ஒரு வருடம் கடந்து விட்ட போதிலும் இதுவரையிலும் எந்தவித முன்னேற்றத்தையும் காணவில்லையென நோர்வேயில் வதிவுரிமை பெற்றுள்ளவர்களும் தமது குழந்தைகளை நோர்வே சிறுவர் காப்பங்களிடத்தில் பறிகொடுத்து நிற்பவர்களும் தெரிவிக்கின்றன.  
 
2013 ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினது முன்னாள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையின் கவனத்துக்கு  கொண்டுவப்பட்ட மேற்படி விவகாரம் தொடர்பில் நோர்வேயின் குழந்தைகள் காப்பகத்தினால் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளை தெளிவுபடுத்தும் தமது குழந்தைகளை மீட்டுத் தருமாறு மன்றாடியும் எழுத்து மூலமான ஆவணக் கோவைகள் மூன்று நவநீதம்பிள்ளையிடம் வழங்கப்பட்டிருந்தன.
 
இதன் மூலம் தமது பிள்ளைகள் தமக்கு கிடைத்துவிடுவர் என்று இதுவரையிலும் எதிர்பார்த்திருந்த பெற்றோருக்கு ஏமாற்றம் மாத்திரமே எஞ்சியுள்ளது.
 
நோர்வேயில் வாழும் இலங்கையர்களே இந்த ஆவணக் கோவையை வழங்கியுள்ளனர்.
ஆனாலும் நவநீதம்பள்ளையிடம் கையளிக்கப்பட்ட ஆவணக் கோவைகள் அல்லது எழுத்து மூலமான முறைப்பாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக ஆகியுள்ளது.
 
அது மாத்திரமின்ற உலகம் முழுவதும் கண்களை விழித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்ற ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் மனித உரிமைகள் பேரவை என்பன நோர்வேயில் இடம்பெற்று வருகின்ற அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கண்டு கொள்ளாதாதிருப்பதாக நோர்வே வாழ் வெளிநாட்டு வதிவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
நோர்வேயில் பொலிஸாரையோ நீதிமன்றங்களையோ இல்லாவிட்டால் அரசாங்கத்தையோ எந்தத் தரப்பினரையோ நம்பமுடியாதிருப்பதாக தெரிவித்துள்ள அவர்கள் நோர்வேயில் சிறுவர்கள் தொடர்பிலான அனைத்து செயற்பாடுகளும் தான்தோன்றித் தனமாக அமைந்திருப்பதாகவும் கூறுகின்றனர்.
 
பெற்றோரிடமிருந்து சிறுவர்களை பிரித்து வைத்து இரு தரப்பினரையும் மன நோயாளிகளாக மாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.
 

http://virakesari.lk/articles/2014/11/28/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே நாட்டில் நடைமுறையிலுள்ள இறுக்கமான சிறார் பராமரிப்பு சட்ட விதிகளுக்கு ஈடுகொடுக்க கற்றுக்கொள்ளாமல் நம்மவர்கள் ஊரில் பிள்ளை வளர்ப்பதுபோல் வளர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு சிறார்களை அல்லும் பகலும் கஸ்டப்படுத்துவதை நோர்வே அரசு பார்த்துகொண்டா இருக்கும். இதை தவறாக நிறவெறி அடக்குமுறை என்று குறிப்பிடுவது எம்மினத்தவர் தமது பிழையை மறைக்க செய்யும் ஒரு முயற்சியாகவே நான் கருதுகிறேன். ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் சொந்த நாட்டுக்கு திரும்பிச் சென்று உங்கள் பிள்ளையை நீங்கள் விரும்பியபடி வளருங்கள் யார் தடுக்கப்போகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி இதனை, "நோர்வேயில் நிறவெறி" என்று போட்ட தலைப்பு மிகவும் கண்டிக்கப் பட வேண்டியது.
 

ஒவ்வொரு நாட்டும் தங்கள் நாட்டு குழந்தைகளை கவனமாக வளர்க்கப் பட வேண்டும் என்பதற்காக கடுமையான சட்டங்களை வரையறுத்துள்ளனர். அதனை மீறினால்... குழந்தைகளை காப்பகம் கொண்டு சென்றுவிடும்.
 

அதனை அறியாமல்... குழந்தைகளை பெற்று விட்டு,
தாயும், தகப்பனும் வேலை, அத்துடன் "ஓவர்டைம்" செய்து பணத்தில் குறியாக இருந்தால்...

குழந்தைகளை காப்பகம் தான் பார்க்கும்.

 

எனக்குத் தெரிந்த பலர், நோர்வேயில்... நினைத்துப் பார்க்க முடியாத உயர் அரச அலுவலகங்களிலும், சிறந்த பொறுப்பான வேலைகளிலும் உள்ளார்கள். நிறவெறி இருந்தால்... இது சாத்தியமா?
 

வீரகேசரி... விசர்கேசரியாக, செய்தி போடாமல் உலக நடப்புக்களை அவதானித்து செய்தி பிரசுரிக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு காரணம் நாங்கள் அடிப்படை சர்வதேச சமுதாய விதிகளை புரிந்துகொள்ள தவறிவிடுகிறோம் இந்த உலகில் மனிதனாக பிறந்த எவரையும், அவரின் வயது, பால், இனம், சமயம், நாடு எதுவாக இருந்தாலும் இன்னொருவர் உரிமை கோர முடியாது. பெற்றோர்கள் கூட தம் குழந்தைகளை உரிமை கோர சட்டம் இடமளிக்காது. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வெறும் உறவுக்காரர்கள் மட்டும் தான். பெற்றோர் தமது குழந்தைகளை சட்டப்படி பராமரித்து வளர்க்க கடமைப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பல பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கத்தையும் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதாக சொல்லிக்கொண்டு செய்யும் பல விடயங்களுக்கு நம் புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள சட்டங்களில் இடமில்லை. பெற்றோர்கள் தமது சொந்த விருப்பத்தை குழந்தைகளில் திணிக்கிறார்கள் தாங்கள் சிறு வயதில் கண்ட கனவுகளை தமது குழந்தைகள் ஊடாக நனவாக்கி கொள்ள எத்தனிக்கிறார்கள். குழந்தைகளுக்கு சிறு பராயத்தில் தேவையான பெற்றோரின் அரவணைப்பை புறந்தள்ளுகிறார்கள். உடலிலும் மனத்திலும் மாறாத தழும்பு வரும் வரைக்கும் தண்டனை வழங்குகிறார்கள். இதற்கும் புலம்பெயர் நாடுகளில் உள்ள நிறவெறி போக்கிற்கும் தொடர்பு இல்லை. இதற்காக புலம்பெயர்ந்த நாடுகளில் நிறவெறி இல்லை என்று நான் சொல்வதாக அர்த்தமில்லை. அது வேறு இது வேறு என்று தான் சொல்ல வந்தேன். நாங்கள் அவற்றை சரியான முறையில் புரிந்துகொண்ட பின் எமது வாழ்க்கை பயணத்தை மாற்றியமைக்க கற்றுக்கொள்ளவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகள் மீது தமது விருப்பு வெறுப்புக்களை வன்முறை ரீதியில் (சொல் மற்றும் பெளதீக) திணிக்கும்.. இந்திய.. பாகிஸ்தான்.. சிறீலங்கா பூர்வீகப் பெற்றோர் மீது எடுக்கும் நடவடிக்கைக்கு இனவெறி என்று பெயர் வைத்தால்.. சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிங்களவனின் இனவெறியை.. இன அழிப்பை சொல்ல ஏன் வீரகேசரி போன்ற பத்திரிகைகளுக்கு அதிக காலம் எடுக்குது.. எடுத்தது..???????????????????????????!  :(  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலான பிரச்சனைகலள் வீட்டு வாசலைத் தாண்டும் போது வேறு விதமான வடிவ்ம் எடுப்பது வழமை!

உதாரணமாக வீட்டிலிலிருன்து ஒரு பெண் குழன்தை ஓடிப்போனால், உறவினர்களுக்குப் 'பிள்ளை' ஒடிப் போனாள் என்று எவ்வாறு சொல்ல முடியும்?

அதனால் என்ர மகளை..அவன் இழுத்துக் கொண்டு போட்டான் என்று கூறுவது வழமை!

ஏதோ என்ர பிள்ளைக்கு  விரலைக் குடுத்தால் கடிக்கத் தெரியாது எனட மாதிரி!

அது போலத் தான் இதுவும்!

Link to comment
Share on other sites

நோர்வே குழந்தைக் காப்பகம் தொடர்பாக முன்பு வெளிவந்த‌ செய்திகளை இங்கே இணைக்கிறேன். இவை அங்குள்ள நிலமை தொடர்பாக சில தெளிவுகளைத் தரும் என நிணைக்கிறேன். ஆதவன்

 

எமது குழந்தைகளை எம்மிடத்தில் தந்துவிடுங்கள் – நோர்வே சிறுவர் காப்பகத்தில் தமது பிள்ளைகளை பறிகொடுத்து தவிக்கும் பெற்றோர்கள்!

 

 

 

norway-7.jpg
இலங்கை மண்ணில்  சுவாலை விட்டு ௭ரிந்து கொண்டிருந்த நெருப்பினை பார்த்து கண்ணீர் வடிக்காத குரலில் ஆறுதல் கூறிய ஐரோப்பிய நாடுகளில் நோர்வே பிரதான இடத்தை வகிக்கின்றது ௭ன்று கூறினால் அது மிகையாகாது.  இது கடந்த கால துன்பங்களை அனுபவித்த,  ஒவ்வொரு  தமிழனும்   அறிந்திராத ஒன்றல்ல.   இலங்கை மண்ணை யுத்தம் ஆட்கொண்டிருந்த கால கட்டத்தில் பாதிக்கப்பட்ட  மக்களுக்காக  போராடிய  நோர்வே  நாட்டின்  உள்ளார்ந்த  விடயங்களை  சற்று தேடிப் பார்ப்பதற்கு யாரும்  துணியவில்லை ௭ன்பதே உண்மையான விடயமாகும்.

 

சுதந்திரத்திற்கும் சுயாதீனத்துக்கும் அதேநேரம் அரவணைப்புக்கும் உகந்த நாடாக ௭ண்ணியே உலகத்தின் அநேகமானோர் நோர்வேயை நாடுகின்றனர். அந்த வகையில் இலங்கையிலிருந்து பாதிக்கப்பட்ட ௭ம்மவர்களும் அங்கு சென்றதிலும் குறையேதும் கிடையாது ௭ன்றே கூற வேண்டும். ஆனாலும் இலங்கையினதும் நோர்வேயினதும் அடிப்படை சட்ட திட்டங்கள் முற்றிலும் மாறுபட்டவையாகும்.

 

அவ்வாறான  சட்டங்களுக்குள் சிக்குண்டுள்ள ௭ம்மவர்கள் இன்று அங்கு கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பதையும் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களாய் காணப்படுவதனையுமே இங்கு விளக்குவதற்கு விழைந்துள்ளோம்.   நோர்வேயின்   சட்டங்களின் அடிப்படையில் அங்கு பிறந்த குழந்தை முதல் உயிரை ௭மனிடம் கையளிக்கும் தருணம் வரையில் ஜீவிக்கின்ற ஒவ்வொருவரும் சுதந்திர பிரஜைகளாவர். பெற்ற பிள்ளைக்கு அதாவது அது சிசுவாக இருந்தாலுமே தீங்கு இழைக்கப்படுமானால் அல்லது கவனிப்பில் குறைபாடு இருக்குமானால் அதனை நோர்வே சட்டமோ அந்நாட்டு அரசோ பொறுத்துக் கொள்வதில்லை.


அந்த வகையில் அந்நாட்டு சட்டத்திற்குள் ௭ம்மவர்களும் சிக்கிக் கொண்டிருக்கின்ற செய்திகள் தற்காலத்தில்தான் சிறிது சிறிதாக கசிந்து கொண்டிருக்கின்றன. குழந்தையொன்று பெற்றோரினால் தீங்கு விளைவிக்கப்படும் பட்சத்தில் குறித்த குழந்தையை அந்நாட்டின் சிறுவர் பாதுகாப்பு மையம் யாருடைய அனுமதியையும் பெறாத வகையில் தானே பொறுப்பெடுத்து தத்தெடுத்து வளர்க்கவும் கல்வி வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவும்    நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் குறித்த    குழந்தை 18 வயதை அடைந்த பின்னரே பெற்றோரிடம்   ஒப்படைக்கப்படுகின்ற நடைமுறையும் அமுலில் இருந்து வருகின்றது.

 

அது நோர்வேக்கும் அந்நாட்டு மக்களுக்கும் ஒத்துப் போகின்ற ஒன்றானாலும் ௭மது நாட்டிரை போன்றவர்களுக்கு அது சரியானதாகவோ அல்லது நேர்மையானதாகவோ அனுமானிக்க முடியாத விடயமாகும். இவ்வாறான வகையில் தான் நோர்வேயில் தஞ்சம் புகுந்துள்ள ௭மது நாட்டைச் சேர்ந்த சுமார் 60க்கும்மேற்பட்ட குடும்பங்கள் தமது பிள்ளைகளை சிறுவர் காப்பகத்திற்கு பறிகொடுத்து   தவித்துக் கொண்டிருக்கின்ற நிலைமைகளும் வெளியாகியுள்ளன.

 

குழந்தைகளை   தத்தெடுக்கின்ற   நோர்வேயின்  சிறுவர்   காப்பக மையமானது அக் குழந்தைகளை வளர்ப்பு பெற்றோரிடமே கையளிக்கின்றதே தவிர, காப்பகத்தில் வைத்து பராமரிக்கின்ற நிலைமை அங்கு இல்லை. மேலும் இவ்வாறு தாய், தந்தையரை விட்டு பிரித்தெடுக்கப்பட்டு சிறுவர் காப்பகத்தின் பேரில் பேணப்படுகின்ற குழந்தையானது தாய், தந்தையரின் நினைவினை இழக்கும் வகையில் வளர்க்கப்படுகின்ற அதேவேளை, உணவு, கலாசார ரீதியிலும் நோர்வே பிரஜையாகவே மாற்றப்படுகின்றது.

 

இது இவ்வாறிருக்க வளர்ப்பு பெற்றோரினால் பராமரிக்கப்படுகின்ற குழந்தைகள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் வேலை வாங்கப்படுவதுமான நிலைமைகளும் காணப்படுவதாக பாதிக்கப்பட்டுள்ள   பிள்ளைகளின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். அத்துடன் காப்பகத்தினால் வளர்க்கப்படுகின்ற குழந்தைகள் அல்லது சிறுவர்களை வருடத்துக்கு நான்கு முறை மாத்திரமே அதாவது மூன்று மாதத்திற்கு ஒரு தடவையே அதுவும் இரண்டு மணித்தியாலங்களே பெற்றோர் சந்தித்து பேசக் கூடிய கட்டுப்பாடும் விதிக்கப்பட்டிருப்பதாக சம்பந்தப்பட்ட பெற்றோர் அங்கலாய்க்கின்றனர்.

 

அந்த வகையில்  இலங்கையில் இருந்து 1994 ஆம் ஆண்டு ஜேர்மனிக்கு சென்று அங்கிருந்து 98 இல் நோர்வேக்கு சென்ற தாமோதரம் பிள்ளை ஆனந்தராஜா மற்றும் ரஜிதா ஆனந்தராஜா ஆகியோரது   நான்கு பிள்ளைகளான   ஆனந்தராஜா தமிழினி (வயது 13), ஆனந்தராஜா ஈழவன் (வயது 10),    ஆனந்தராஜா யாழினி (வயது 8), ஆனந்தராஜா தமிழ்ப்பிரியன் (வயது 5) ஆகியோரும்

1998 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து சென்ற ௭ரிக் ஜோசப்– டேஸ் நிலந்தி தம்பதியினரின் மூன்று பிள்ளைகளான இனுக்கா ஜோசப் (வயது 13), மெலோனி ஜோசப் (வயது 9), மெரியோ ஜோசப் (வயது 6) ஆகியோரும் 90 ஆம் ஆண்டு நோர்வேக்கு சென்ற மஹாத்மா ஜோதி செல்லத்துரை– சித்ராதேவி ஆகியோரின் பிள்ளைகளான நபீலா செல்லத்துரை (வயது 6) நிலோத் செல்லத்துரை (வயது 5) மற்றும் நிமித்தா செல்லத்துரை (வயது 3) ஆகியோர் மேற்படி குழந்தைகள் காப்பகத்தினால் பலவந்தமாக ௭டுத்துச் செல்லப்பட்டிருப்பதாக அந்தப் பெற்றோர் கண்ணீர்க் கதை கூறுகின்றனர்.

 

இது தொடர்பில் நோர்வே ஒஸ்லோவிலிருந்து தாமோதரம் பிள்ளை ஆனந்தராஜா கூறுகையில், 

நான் 1994 ஆம் ஆண்டு  இலங்கையில் இருந்து ஜேர்மனுக்கு வந்து அங்கிருந்து  98 ஆம் ஆண்டு நோர்வேயை வந்தடைந்தேன். ௭னது மனைவியின் பெயர் ரஜித்தா ஆனந்தராஜா. ௭னது நான்கு பிள்ளைகளையும் தற்போது நோர்வேயின் குழந்தைகள் காப்பகம் தத்தெடுத்துள்ளது. இவ்வாறு தத்தெடுக்கப்பட்டுள்ள நான்கு குழந்தைகளும் தற்போது சகோதர பாசம் மறுக்கப்பட்ட நிலையில் வெவ்வேறு வளர்ப்பு பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

 

௭ம்மிடம்  இருந்து பிரித்தெடுக்கப்பட்ட இந்த குழந்தைகள் ஒஸ்லோவிலிருந்து சுமார் 200 கிலோ மீற்றருக்கும் அப்பாலுள்ள கிராமங்களிலேயே வளர்ப்பு பெற்றோரிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளனர். ௭மது குழந்தைகளை நாம் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையே அதுவும் இரண்டு மணி நேரமே சந்திக்க முடியும். இதனால் ௭மக்கும் ௭மது பிள்ளைகளுக்கும் இடையேயான பாசமும் பிணைப்பும் வேரறுக்கப்பட்டுள்ளன.

 

சில சமயங்களில் குழந்தைகளை நாம் சந்திக்கும்போது அவர்கள் நடத்தப்படுகின்ற விதங்கள் உணவு முறைமைகள், உறவாடுதல்கள் குறித்து ௭ம்மிடம் தெரிவிப்பவை ஜீரணிக்க முடியாதவையாகும். பெற்றோராகிய நாம் ௭மது பிள்ளைகளுக்கு கொடுமைகளைப் புரிபவர்கள் அல்லர். ௭னவே, ௭மது பிள்ளைகளை ௭ம்மிடத்தில் தந்து விடுங்கள் ௭ன்பதையே நாம் வலியுறுத்துகிறோம். தமிழினி ௭ன்ற ௭னது 13 வயது மகள் சற்று மலநலக் குறைவானவராவார்.

 

அதற்கான வைத்திய அறிக்கையும் உள்ளது. இந்நிலையில் அவரை பராமரிக்கும் வழிமுறைகள் அல்லது அணுகுமுறைகள் பெற்றோரைத் தவிர ஏனையவர்களால் சாத்தியமற்றது ௭ன்பதே ௭மது வாதமாகும். ௭மது பிள்ளைகளை ௭ம்மிடத்தில் தருவதற்கு நோர்வே சட்டம் இடமளிக்காது ௭ன்றால் அவர்களை ௭மது உறவினர்களிடமாவது கையளித்தால் ௭மது பிள்ளைகளைப் பார்ப்பதற்கும் அவர்களுடன் பாசத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஏதுவாக அமையும்.

 

இதனை   நாம் வழக்குத் தொடர்ந்த நீதிமன்றங்களிலும் ஏற்றுக் கொண்டு அதன் பிரகாரமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படுவதாக இல்லை ௭ன அவர் தழுதழுத்த குரலில் தெரிவித்தார்.

 

இதேபோன்று தான் ௭ரிக் ஜோசப் ௭ன்பவரின் பாரியார் டிலாந்தி ஜோசப் கூறுகையில், 

இன்று மூன்று பெண் குழந்தைகளும் ௭ம்மிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு விட்டன. 13 வயதுக்கு வந்த ௭னது மகளை  பார்த்து பாசத்தை காட்டுவதற்கோ, 9 வயதான ௭னது இரண்டாவது மகளையோ, அல்லாவிட்டால் 6 வயதேயான ௭னது மூன்றாவது மகளையோ பார்த்து கட்டியணைத்து கொஞ்சுவதற்கான நிலையில்லாது தவிக்கின்றோம்.

௭மது பிள்ளைகள் பாடசாலைகளில் இருந்த நிலையிலேயே நோர்வே சிறுவர் காப்பக வாகனங்களில் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தாம் ௭ங்கே கொண்டு செல்லப்படுகிறோம் ௭ன்பதை அறியாத ௭மது பிள்ளைகளின் அப்போதைய மனநிலை ௭வ்வாறாக இருந்திருக்கும் ௭ன்பதை நினைத்துப் பார்க்கும்போது நெஞ்சம் பதைக்கின்றது.

கதறக் கதற ௭மது பிள்ளைகளை மனிதாபிமானமே இல்லாது கொண்டு சென்ற காட்சி நினைத்து பார்க்க முடியாத ஒன்றாகும். ஒருவருடமாக நாம் ௭மது பிள்ளைகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றோம். நிம்மதியான வாழ்க்கையை தேடி வந்த இடத்தில் ௭மது பிள்ளைகளை இழந்து நிற்கின்றோம். இதனால் ௭மது பிள்ளைகள் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களாய் இருப்பதைக் கண்டு பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர் நடை பிணங்களாக திரிகின்றனர் ௭னக் கண்ணீர் வடிக்கின்றார்.

 

இதில் மற்றுமொரு தம்பதியர் தான் மகாத்மா ஜோதி செல்லத்துரை சித்திரா தேவி செல்லத்துரையாவர்.

இவர்கள் தமது 3 வயது, 5 வயது மற்றும் 6 வயது ௭ன்ற அடிப்படையிலான சின்னஞ் சிறுசுகள் குழந்தைகள் காப்பகம் ௭ன்ற பெயரில் வளர்ப்புப் பெற்றோரிடம் விடப்பட்டிருப்பது தொடர்பில் குமுறிக் கொண்டிருக்கின்றனர். மேற்படி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்களாவர். நோர்வேயில் தமது பிள்ளைகள் நடத்தப்படுகின்ற விதங்கள், அவர்களை ௭ந்தளவில் பெற்றோரிடமிருந்து பிரித்து வைத்துள்ளனர் ௭ன்பது தொடர்பிலான வீடியோ, புகைப்படம் உள்ளிட்ட ஆதாரங்கள் இருப்பதாக கூறுகின்ற அதேவேளை தமது பிள்ளைகள் தமிழ் மொழியை உச்சரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

 

நோர்வேயானது  தமது நாட்டுக்கு வரும் பிரஜைகளை அரவணைத்துக் காக்கின்ற அதேவேளை, அவ்வாறு அரவணைப்புக்குள்ளாகின்ற மூன்றாம் தலைமுறையை முன்னைய பூர்வீகம் அறியாத வகையில் நோர்வே பிரஜையாக மாற்றியமைப்பதே அதன் திட்டமாகும். அதனையே இன்று நோர்வே மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளரும் மனித உரிமைகளுக்கான பிரதிச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன கூறுகின்றார்.

 

இதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை ௭ன்றே ௭ண்ணத் தோன்றுகின்றது. இவ்விவகாரம் தொடர்பில் நீதிமன்றங்கள் மனித உரிமைகள் அமைப்புகளில் ௭ன பல இடங்களில் முறைப்பாடுகளை மேற்கொண்டும் பலனேதும் கிடைக்கவில்லை. குழந்தைப் பருவம் ௭ன்பது பெற்றோருடன் சேர்ந்திருக்க வேண்டியபருவமாகும். அது பலவந்தமாக பிரித்தெடுக்கப்படும்போது குழந்தைப் பருவம் ௭ன்ற அர்த்தம் புதைக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோரின் மனோ நிலையைக் கருத்திற்கொண்டு சட்டங்களை சற்று தளர்த்துவதில் தவறுகள் கிடையாது ௭ன்பதே பாதிக்கப்பட்டவர்களினது வாதமாக அமைந்துள்ளது.

http://nadunadapu.com/?p=5324

Link to comment
Share on other sites

பெற்றோரிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் நோர்வே ! - ஓர் ஆய்வு
 
இந்தியா, இலங்கை இலிருந்து புலம்பெயர்ந்து, நோர்வே நாட்டில் வாழும்  பெற்றோருக்கு, தமது  குழந்தைகளை சரியாக வளர்க்கத் தெரியாது!" 
 
இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்து, நோர்வே அரச அலுவலர்கள், அவர்களது பிள்ளைகளை பிரித்துச் சென்று, குழந்தைகள் நல காப்பகத்தில் தடுத்து வைத்திருக்கின்றனர். இந்தச் செய்தி , அண்மையில் இந்திய, தமிழ் ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. இந்தச் சம்பவம் ஏற்கனவே, பல தடவைகள் நோர்வேயில் நடந்துள்ளன. கடந்த வருடம், மூன்று சோமாலியக் குடும்பங்களை சேர்ந்த ஆறு பிள்ளைகள், இவ்வாறு குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டனர். ஆனால், வேற்றின சமூகத்தில் நடந்த சம்பவம் என்பதால், தமிழ் ஊடகங்கள் அதையிட்டு அக்கறை காட்டவில்லை. இந்த வருடம் ஒரு இந்திய குடும்பமும்,  ஒரு இலங்கைத் தமிழ் குடும்பமும், குழந்தை  உரிமைகள் சட்டத்தினால் பாதிக்கப் பட்ட பின்னர் தான், நமது ஊடகங்கள் அதிலே கவனம் எடுத்தன. 
 
நோர்வேயில், Stavanger நகரில் வாழ்ந்த ஒரு இந்தியக் குடும்பத்தின் கதை, அனைத்து இந்திய ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப் பட்டது. இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்திய ஊடகங்களைப் பொறுத்த வரையில், அது ஒரு "அரசு நடத்திய ஆட் கடத்தல்".  ஊடகங்களுக்கு பேட்டியளித்த பெற்றோர்கள், "கலாச்சார  வித்தியாசங்களைப் புரிந்து கொள்ளாத  நோர்வீஜிய அரசுப் பணியாளர்களின் செயல்." என்று சாடினார்கள். "இது கலாச்சார வித்தியாசம் காரணமாக எழுந்த பிரச்சினையல்ல. குழந்தைகளின் உரிமைகள் சம்பந்தமானது." என்று நோர்வே அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், குழந்தைகளை பறிகொடுத்த இந்திய பெற்றோர்கள், மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், ஊடக பலம் காரணமாகவும், அரசு நேரடியாக தலையிட்டதாலும், குழந்தைகளை மீளப் பெற்றுக் கொண்டனர். ஆனால், இந்தளவு ஆதரவற்ற பெற்றோரின் குரல்கள் வெளியே கேட்பதில்லை. 
 
தமது குழந்தைகளை பறிகொடுத்த இலங்கைத் தமிழ்ப் பெற்றோரின் கதை, பிபிசி தமிழோசையில் ஒலிபரப்பானது. Bergen நகரில் வாழும் அந்த தமிழ்த் தாயும், "கலாச்சார வேறுபாடு காரணமாகவே, குழந்தையை தன்னிடம் இருந்து பிரித்ததாக," தெரிவித்தார். கடந்த மூன்று மாதங்களாக குழந்தைகளை இழந்து தவிப்பதாகவும், நித்திரை கொள்ள முடியாமல் தூக்க மாத்திரைகளை பாவிப்பதாகவும்," நோர்வீஜிய பத்திரிகை ஒன்றிற்கு தெரிவித்தார்.  "கையால் உணவூட்டுவது, மடியில் இருத்தி வைப்பது, ஒரே கட்டிலில் படுப்பது" போன்றன குழந்தைகள் உரிமைகளை மீறும் செயல் என்று தமக்கு தெரிவிக்கப் பட்டதாக அந்த தாய் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்தார். இந்தியப் பெற்றோரும் இதே போன்ற கருத்துகளைத் தான் கூறினார்கள். அப்படியானால், நமது நாடுகளில் சாதாரணமானது என்று நினைத்துக் கொண்டிருக்கும் பழக்க வழக்கங்கள், மேலைத்தேய நாட்டவர் கண்களுக்கு காட்டுமிராண்டித் தனமாக தெரிகின்றதா? இது கலாச்சார வேறுபாட்டால் எழும் பிரச்சினையா? 
 
 குழந்தைகளை பறிகொடுத்த இந்திய, இலங்கை, சோமாலியப் பெற்றோர் அனைவரும் ஒருமித்த குரலில் ஒரு விடயத்தைக் கூறுகின்றனர். நோர்வேயில் வாழ வந்த தமக்கு, அந்த நாட்டின் சட்டதிட்டங்கள் பற்றி அறிவுறுத்தப்படுவதில்லை என்று குற்றம் சுமத்துகின்றனர். எழுதப்படிக்கத் தெரியாத சோமாலியப் பெற்றோர் முதல், பன்னாட்டுக் கம்பனியில் வேலை செய்த, இந்திய பெற்றோர் வரை அந்த விமர்சனத்தை தான் முன்வைக்கின்றனர்.  ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளின் உரிமைகள் பற்றிய சட்டங்கள் கடுமையானவை என்பதை மறுப்பதற்கில்லை. அண்மைக் காலமாக அதிகரித்து வரும் சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகம் காரணமாக சட்டம் இறுக்கப் படவில்லை. "நடுநிலை பேண விரும்பிய" பிபிசி தமிழோசையும், அவ்வாறு நினைத்துக் கொண்டிருப்பது, பேட்டி எடுத்தவரின் கேள்விகளில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. 
 
மேலைத்தேய நாடுகளின் அரசாங்கங்கள், குழந்தை வளர்ப்பிலும், பராமரிப்பிலும் தலையிட்டு, தாமே  பெற்றோரின் பொறுப்பையும்  ஏற்றுக் கொள்ளும்   காரணம் என்ன?
 
“குழந்தைகள் அவர்களுடைய பெற்றோரால் சுரண்டப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம் என்றா எங்கள் மீது குற்றம் சாட்டுகிறீர்கள்? நாங்கள் இந்தக் குற்றத்தைப் புரிகிறவர்கள்தான். ஒப்புக்கொள்கிறோம்…. உங்களுடைய கல்வி இருக்கிறதே, அதுமட்டும் என்னவாம்? அதுவும் சமூக முறையிலான கல்விதானே?….. கல்வியில் சமுதாயம் தலையிடுதல் என்பது கம்யூனிஸ்டுகளுடைய கண்டுபிடிப்பு அல்ல; இந்தத் தலையீட்டின் இயல்பினை மாற்றவும், ஆளும் வர்க்கத்தினுடைய செல்வாக்கிலிருந்து கல்வியை விடுவிக்கவுமே கம்யூனிஸ்டுகள் முயலுகிறார்கள்…” - கார்ல் மார்க்ஸ் (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் இருந்து)
 
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒரு பாரிய கலாச்சாரப் புரட்சி நடந்தது. குடும்ப உறவுகள்  இப்படித் தான் இருக்க வேண்டும், குழந்தைகளை இப்படித் தான் வளர்க்க வேண்டும்  என்று அரசு தீர்மானித்து சட்டம் இயற்றியது. அதன் அர்த்தம், ஒரு குழந்தையை வளர்ப்பது அதன் தாய், தந்தையர் மட்டுமல்ல. குழந்தை வளர்ப்பில் அரசின் பங்களிப்பும் கணிசமான அளவு இருக்க வேண்டும். உண்மையில், பெற்ற தாய், தந்தையை விட, அரசு அதிக பொறுப்பை எடுத்துக்  கொண்டுள்ளதோ என சில நேரம் நினைக்கத் தோன்றும். அந்தளவுக்கு ஒரு குடும்பத்தினுள் அரசின் தலையீடுகள் அதிகம். இதுவே ஒரு சோஷலிச நாட்டில் நடந்திருந்தால், "மனித உரிமை மீறல்கள்" குறித்து  இன்று எல்லோரும் பேசியிருப்பார்கள். "கம்யூனிச அரசுகள் குடும்பங்களை சிதைத்து, பிள்ளைகளை பெற்றோரிடம் இருந்து பிரிக்கின்றனர்." என்று பிரச்சாரம் முடுக்கி விடப் பட்டிருக்கும். பனிப்போர் காலத்தில் அப்படியான கதைகள், ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்தன. அது வேறு விஷயம். 
 
இப்போது நோர்வேக்கு வருவோம். இன்றுள்ள குழந்தைகள் நல உரிமைகள், நோர்வீஜிய சமூகத்தில் ஆதி காலத்தில் இருந்தே நிலவி வந்துள்ளதா?  அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட, வைகிங் கால  குடிமனைகளில், ஒரே வீட்டில் பல குடும்பங்கள் வாழ்ந்துள்ளமை தெரிய வந்துள்ளது. கூட்டுக்  குடித்தனம் அந்தக் காலத்தில் சர்வசாதாரணமாக இருந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில், பொருளாதார வசதிகள் பெருகிய பின்னர், வீட்டு வசதிகளும் பெருகின. பிள்ளைகளுக்கென தனியான அறைகள் ஒதுக்கப் பட்டன. . அதே போன்று, கரண்டியால் உணவுண்ணும் பழக்கம் கூட 19 ம் நூற்றாண்டில் அறிமுகமான  கலாச்சாரம் தான். தீவிர கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்களான நோர்வீஜியர்கள் வீடுகளில், குழந்தைகளை அடித்து வளர்ப்பது  பெற்றோரின் கடமையாக கருதப் படுகின்றது. (பார்க்க: Vår gude gitte rett å slå barn) ஆகவே நோர்வீஜியர்கள் (அல்லது ஐரோப்பியர்கள்) தமது பாரம்பரிய கலாச்சாரத்தை எம் மீது திணிக்கிறார்கள் என்று பொருள்கொள்ள முடியாது. குழந்தை வளர்ப்பு பற்றிய பிரச்சினை, கலாச்சார முரண்பாடுகளால் எழுந்த பிரச்சினை அல்ல. துரதிர்ஷ்டவசமாக, நோர்வேயில் வாழும் இந்திய/இலங்கைப் பெற்றோர் நிலைமையை அவ்வாறு தான் புரிந்து கொள்கின்றனர்.
 
ஐரோப்பாவில் லிபரல் சமுதாயத்தை படைத்த முதலாளித்துவம், அதற்கான கலாச்சாரத்தையும் புதிதாக அறிமுகப் படுத்தியது. இந்த முதலாளித்துவ-லிபரல் சமுதாயம் குடும்ப உறவுகளில் இருந்தே ஆரம்பிக்கின்றது. ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து, அதனை வளர்த்து, கல்வி புகட்டுவது எல்லாமே ஒரு முதலாளித்துவ அரசின் கடமைகள். அந்தக் குழந்தைக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட்ட நாளில் இருந்து, அது தேசத்தின் சொத்தாக கருதப் படுகின்றது. அரை நிலப்பிரபுத்துவ   சமுதாய அமைப்பில் இருந்து புலம்பெயரும் இந்திய/இலங்கைப் பெற்றோர் இந்த முரண்பாட்டை புரிந்து கொள்வதில்லை. "குழந்தைகளை கீழ்ப்படிய வைத்து, அடித்து வளர்க்க வேண்டும்" என்ற நிலப்பிரபுத்துவ போதனையும், "குழந்தைகளை அடிக்காமல், சுதந்திரமாக வளர விட வேண்டும்" என்ற முதலாளித்துவ போதனையும், நோர்வே போன்ற ஐரோப்பிய நாடுகளில் மோதிக் கொள்கின்றன. சுருக்கமாக, இது கலாச்சாரங்களின் மோதல் அல்ல, மாறாக, சித்தாந்தங்களின் மோதல். 
 
நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில், குழந்தைகள் தாய், தந்தைக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். குடி மக்கள் மன்னனுக்கும், கடவுளுக்கும்  கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். முதலாளித்துவ-லிபரல் சமுதாயத்தில் தனி நபரின் உரிமைகள் முக்கியமானவை. அது சமுதாயத்தை "சுதந்திரமான தனி நபர்களின் கூட்டமைப்பாக" கருதுகின்றது. சுதந்திரமான தனி நபர்களை, அரசும், முதலாளிகளும் சேர்ந்து உருவாக்கிய பொதுக் கல்வி ஒன்றின் ஊடாக நடைமுறைப் படுத்துகின்றனர். ஐரோப்பிய நாடுகளில், ஒரு பிள்ளை, ஐந்து வயதில் இருந்து பதினாறு வயது வரையில், கட்டாயமாக பாடசாலை செல்ல வேண்டும். 
 
பெற்றார் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மறுத்தால், தண்டப்பணம் அறவிடப்படும். நெதர்லாந்தில் வாழும், மொரோக்கோ, துருக்கி போன்ற இஸ்லாமியப் பின்னணியைக் கொண்ட பெற்றோர்கள் சிலர், தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப விரும்பாமல், வீட்டில் வைத்திருந்திருக்கிறார்கள். அவர்கள் அரசினால் கடுமையாக எச்சரிக்கப் பட்டனர். பெரும்பாலும் கிராமங்களில் இருந்து வந்த, பழமைவாத கலாச்சாரம் பேணும் பெற்றோர், தமது பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்று, "சீரழிந்த ஐரோப்பிய கலாச்சாரத்தை" கற்றுக் கொள்வதை விரும்புவதில்லை. மறு பக்கத்தில் ஐரோப்பிய கல்வி நிலையங்கள், ஒரு பிள்ளை எந்த நாட்டில் இருந்து வந்திருந்தாலும், தமது நாட்டுக் கலாச்சாரத்துடன் வாழ வேண்டும் என்று விரும்புகின்றன. ஐரோப்பியர்கள் தமது நாகரீகம்  உலகில் சிறந்தது என்று நம்புகின்றனர். 
 
கையால் உணவூட்டல் போன்ற கலாச்சார வேறுபாடுகளே, குழந்தைகளை தம்மிடம் இருந்து பிரிப்பதற்கு காரணம் என்று, இந்திய/இலங்கைப் பெற்றோர் நம்புகின்றனர். நோர்வீஜிய அதிகாரிகள் மீதும் அத்தகைய குற்றச்சாட்டை வைக்கின்றனர். ஆனால், நோர்வீஜிய அரசும், குழந்தைகள் காப்பக ஊழியர்களும் முற்றிலும் மாறுபட்ட குற்றச்சாட்டுகளை பெற்றோர் மீது சுமத்துகின்றனர். நோர்வேயில் குழந்தைகளை அடிப்பதற்கு சட்டத்தால் தடை செய்யப் பட்டுள்ளது. இருப்பினும், வெளிநாட்டுக் குடியேறிகள் சமூகத்தில் குழந்தைகளை அடித்து வளர்ப்பது சர்வசாதாரணம். இலங்கை, இந்தியா, சோமாலியா போன்ற நாடுகளில் உள்ள பெற்றோர் தம் பிள்ளைகளை வளர்ப்பதைப் போன்று, நோர்வேயில் செய்ய முடியாதுள்ளது. 
 
சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கு (Nursury) செல்லும் பிள்ளைகள், வீட்டில் தாயாரிடம் அடிவாங்கியதாக முறைப்பாடு செய்துள்ளன. இந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே, தாம் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்ததாக, குழந்தைகள் நல காப்பக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகள் நல காப்பகத்தில், பணியாளர்களின் பராமரிப்பில் வளரும் குழந்தைகளை பெற்றோர் பார்க்க முடியாது.  இந்த "பறிமுதல் நடவடிக்கைக்கு" பின்னர், சம்பந்தப்பட்ட பெற்றோர்  மனநல மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டுமென  அறிவுறுத்துகின்றனர்.  Gjøvik எனும் இடத்தில், பிள்ளைகளை பறிகொடுத்த சோமாலியத் தாய்மார், வாரந்தோறும் நகரசபை கட்டிட வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். "எங்கள் குழந்தைகளை எம்மிடம் திருப்பித் தாருங்கள்" என்ற கோஷத்தை முன்வைத்து போராடினார்கள். அவர்களது போராட்டத்திற்கு, பத்து மாதங்களுக்குப் பின்னர் பலன் கிடைத்தது. இறுதியில் பிள்ளைகள், தாய்மாரிடம் ஒப்படைக்கப் பட்டனர். 
 
சோமாலியர்கள் போன்று, தமிழர்களும் போராட்டம் நடத்தியதாக நான் கேள்விப்படவில்லை. நோர்வேயில் இயங்கும் பத்துக்கும் குறையாத தமிழர் அமைப்புக்கள் எவையாவது மத்தியஸ்தம் வகிக்க முன் வந்தனவா, என்று தெரியவில்லை. ஆனால், சோமாலியர்களின் அமைப்பொன்று (Internasjonal Somalisk Forum i Norge), பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தி, சுமுகமான தீர்வைக் காண உதவியது. தாய்மாருக்கும், குழந்தைகள் நல காப்பகத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் வகித்தது. அவர்கள் இரண்டு பக்க தவறுகளையும் ஏற்றுக் கொள்ள வைத்தனர். சோமாலியப் பெற்றோர் தமது குழந்தைகளை அடித்து வளர்ப்பதை கண்டிக்க வேண்டும். அதே சமயம், நோர்வீஜிய அதிகாரிகள் தகவல்களை வழங்கி, எச்சரிக்கை விடுத்த பின்னர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டியுள்ளது. 
 
 
 
 
 
 
Ads delivered by FeedBlitz
குழந்தைகள் நல காப்பக பணியாளர்கள், சில நேரம் வேண்டுமென்றே வெளிநாட்டவர் சமூகங்கள் மீது கடுமையாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டப் படுகின்றது. நிர்வாகத்தில் உள்ளோரின் ஊழல், ஊடகங்களில் எதிர்மறையான செய்திகளை வழங்கும் உள்நோக்கம், என்று பல்வேறு காரணங்கள் கூறப் படுகின்றன. சோமாலியச் சமூகமும் சில மாற்றங்களுக்குட்பட வேண்டும். குறிப்பாக, பிள்ளைகளை அதிகம் வெளியே செல்ல விடாமல், வீட்டுக்குள்ளே அடைத்து வைக்கப் படுகின்றனர். நண்பர்களை வைத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை. பிள்ளைகள் மீது பெற்றோர் தமது அபிலாஷைகளை திணிப்பதால் எழும் முரண்பாடுகள். இவை போன்ற செயல்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என சோமாலிய நலன் பேணும் அமைப்பு கேட்டுக் கொண்டது. பல குடும்பங்களில் பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் இடையில் பெரும் போராட்டம் நடைபெறுவதாக, சோமாலிய-நோர்வீஜிய எழுத்தாளர் Amal Aden சுட்டிக் காட்டினார். இந்தப் பிரச்சினைகள் எல்லாம், சோமாலிய சமூகத்தில் மட்டும் நடைபெறுகின்றதா? இந்தியா, இலங்கையை சேர்ந்த குடும்பங்களிலும் அது தான் நிலைமை. 
 
குழந்தைகள் நல காப்பகத்தில், வெளிநாட்டு குடிவரவாளர்களின் குழந்தைகளை மட்டுமே தடுத்து வைத்திருப்பது போன்று, ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. எங்காவது ஒரு வெளிநாட்டவரின் குழந்தையை எடுத்துச் செல்வது மட்டுமே அவர்களுக்கு செய்தி. குழந்தைகள் நல காப்பகத்தில், பெருமளவு நோர்வீஜியக் குழந்தைகள் தங்க வைக்கப் பட்டுள்ளன. இதெல்லாம் அவர்கள் கண்களுக்கு செய்தியாக தெரிவதில்லை. உண்மையில் குழந்தைகள் நல காப்பகங்கள், முதன் முதலாக நோர்வீஜிய குடும்பங்களில் தான் கைவைத்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், அடித்தட்டு மக்களின் குழந்தைகள் பல அங்கே தங்க வைத்து, "நாகரீகம்" சொல்லிக்  கொடுத்தனர். தற்பொழுது, போதைவஸ்து பாவிக்கும், அல்லது நோயாளிகளான பெற்றோரின் பிள்ளைகள் குழந்தைகள் நல காப்பகத்தில் தான் வளர்கின்றன. ஆனால், அந்நிய கலாச்சாரப் பின்னணியில் இருந்து வந்து குடியேறிய மக்களையும், அவ்வாறான பிரிவுக்குள் அடக்குவது கொஞ்சம் நெருடலான விடயம். 
 
இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு, பேச்சுவார்த்தை அவசியமாகின்றது. வெளிநாட்டுக் குடியேறிகளின் சமூகங்களும், அரசு அதிகாரிகளும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முன்வர வேண்டும். புதிதாக பிரஜாவுரிமை பெற்றவர்களை, "அண்மைய வரவாளர்கள்" பெயரிட்டு அழைக்கிறார்கள். அவர்களும் நோர்வீஜியர்களின் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என்ற, தேசியவாத சிந்தனை அரச மட்டத்திலும் காணப்படுகின்றது. நோர்வேயில் பன்முகக் கலாச்சாரம் ஒரு மாயை என்பதையே, குழந்தைகள் மீதான அரசின் ஆளுமை எடுத்துக் காட்டுகின்றது. 
 
இந்தக் கட்டுரை எழுத உதவிய உசாத்துணை தொடுப்புகள்,
மேலதிக தகவல்களுக்கு: 
1.குழந்தைகள் பராமரிப்பு: நார்வே- இந்தியா சர்ச்சை 
2.நார்வே: குழந்தைகளின் பராமரிப்பைக் கோரும் தமிழ் பெற்றோர் 
3.Fikk ingen oppfølging da barnevernet tok barna hennes 
5.Diplomatisk drakamp etter barnevernsak i Stavanger 
6.Somaliske barn får komme hjem 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.