Jump to content

ஒரு நடிகரை, 20 வருஷமாவா அரசியலுக்கு கூப்பிடுவீங்க?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நடிகரை, 20 வருஷமாவா அரசியலுக்கு கூப்பிடுவீங்க? பாரதிராஜா சாட்டையடி.

 

சென்னை: நடிகனிடம் ஆஸ்கார் விருது எப்போது வாங்குவீர்கள் என்று ஊடகங்கள் கேட்பதை விட்டுவிட்டு, அரசியலுக்கு எப்போது வருவீர்கள் என்று ஏன் கேட்கிறீர்கள்... அரரசியலில் ஈடுபட நடிகனுக்கு என்ன தகுதி இருக்கிறது.. ஒரு நடிகரை 20 வருஷமாவா அரசியலுக்கு கூப்பிட்டுகிட்டே இருப்பீங்க.. என்பது போல தடாலடியாக பேட்டியளித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா

 

ஒரு வார இதழுக்கு தந்துள்ள பேட்டியின்போது, விஜயகாந்த், ரஜினி, விஜய் என நடிகர்கள் அரசியலுக்கு வர்றதுக்கு சினிமாதான் பாதையா? என்ற கேள்விக்கு பாரதிராஜா பதிலளித்துள்ளதாவது:

 

28-bharathiraja-pandiya-nadu-sucess-meet

 

இதுக்கு அடிப்படையான காரணம் யார் சொல்லுங்க? ஊடகம்தான். நடிகர்களைத் தூண்டிவிட்டு, 'அரசியலுக்கு வருவீங்களா?'னு முதல் கேள்வி கேட்குது. சினிமாவில் சிறந்த படைப்புகளைக் கொடுத்திருக்கீங்க. மேடையில உணர்ச்சிகரமாப் பேசுறீங்க. நீங்க ஏன் அரசியலுக்கு வரக் கூடாது'னு என்கிட்டயே கேக்கிறாங்க.

 

ஒய் தே ஆர் டூயிங் லைக் திஸ்? ஒரு நடிகன்கிட்ட, 'எப்போ ஆஸ்கர் விருது ஜெயிப்பீங்க?'னு கேளுங்க. அதை விட்டுட்டு அரசியல் பத்தி எல்லாம் ஏன் கருத்து கேக்கிறீங்க? சரி... அப்படியே யாராவது கேட்டாலும், அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும்.

 

அரசியலில் ஈடுபட எனக்கு என்ன தகுதி இருக்கு? சமூகத்தில் என் பொறுப்பு, ஒரு கதை சொல்லி! அதுக்கு மேல எனக்கு எந்த முக்கியத்துவமும் வேண்டாம்.

 

ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல்... ஒரு நடிகனுக்கு அரசியலில் ஈடுபட என்ன தகுதி இருக்கு? இந்த நாட்ல எத்தனை ஜீவநதிகள் ஓடுதுனு சொல்லச் சொல்லுங்க. 'எத்தனை நதிகள் வற்றி வறண்டு காணாமல்போச்சுனு தெரியுமா?'னு கேளுங்க. 'இந்தியாவுல எத்தனை டேம் இருக்கு?'னு கேட்டுப் பாருங்க. வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் கலாசாரரீதியா என்ன வித்தியாசம்னு தெரியுமா?

 

சும்மா நாலு ரசிகர் மன்றங்கள் வெச்சு 50 பேருக்குத் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்துட்டா, அரசியலுக்கு வந்துரலாமா? வாட் இஸ் திஸ்? எனக்கு எந்தப் பயமும் இல்லை. நான் சொல்றதை அப்படியே போடுங்க. கர்நாடகா, கேரளாவில் இப்படிப் பண்ண முடியுமா? ஏன் தமிழ்நாட்ல மட்டும் இப்படி எல்லாம் நடக்குது?''.

 

சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரவே கூடாதா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் "சினிமாவில் இருந்து விலகி 10 வருஷம் மக்கள் மத்தியில் வேலை பார்த்து, சோஷியல் சர்வீஸ் எல்லாம் செய்து, மேடையில் பேசி அப்புறமாத்தான் அரசியலுக்கு வரணும். கோ அண்ட் வொர்க் ஃபர்ஸ்ட்!

 

நேத்து நடிக்க வந்துட்டு நாளைக்கு சி.எம் ஆக ஆசைப்படக் கூடாது. 20 வருஷமாவா ஒருத்தரை (ரஜினி) அரசியலுக்குக் கூப்பிட்டுட்டே இருப்பீங்க. வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்? அட்லீஸ்ட் முனிசிபாலிட்டி, பஞ்சாயத்துத் தேர்தல் நின்னு ஜெயிச்சுட்டு, அப்புறம் அரசியல் கட்சியில சேர்ந்து மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யட்டும்!".

 

நன்றி தற்ஸ் தமிழ்.

 

#########

 

பாரதிராஜாவின் கோபம் நியாயமானதே....
ஆனால், தமிழ்நாட்டு மகாஜனங்களுக்கு விளங்கவில்லையே..... :rolleyes:  :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது அதுகளுக்கு விளங்காது!

Link to comment
Share on other sites

இயக்குனர் எழுதுகின்ற வசனத்தை பேசுகின்ற இந்த நடிகன் எல்லாம் (M .G .R  விதிவிலக்கு) எப்படி தலைவனகமுடியும் . என்ன இது சினிமா வா , ஒரு தடவை , நூறு தடவை , இதெல்லாம் சந்தியில நின்று அலட்ட மட்டும் தான் . அரியணை ஏற முடியாது . அதுவும் ரஜனி , என்ன காமெடியா .

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாரதிராஜாவுக்கும் பாலச்சந்தருக்கும் தான் தெரியும் சூப்பர் ஸ்டாரின் தண்டவாளம் வண்டவாளங்கள்..... :lol:

Link to comment
Share on other sites

MGR விதிவிலக்கு . :icon_mrgreen:  சம கொமடி .

 

இதில் கொமடி என்ன இருக்கிறது... அண்ணாவுக்குத் தொண்டனானார்... திமுகவுக்கு பிரச்சாரகரானார்... அதன் கொள்கைகலை திரைப் படங்களீன் மூலம் பரப்பினார்... அவர் வீட்டால் வெளியே வருவதை எதிர்பார்த்து வாசலின் இருமருங்கும் காத்திருக்கும் ஏழைகளை ஏமாற்றாது, அவர்களின் அன்றாட காஞ்சிக்காவது சில்லறை இட்டார்... 

 

இப்படி படிப்படியாக அரசியலில் தன்னை வளர்த்து இருத்திய MGR மற்றவர்களில் இருந்து விதிவிலக்கானவரேதான்!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.