Jump to content

‘வடிவம் மாறலாம் ஆனால் போராட்டம் முடியவில்லை’ : தமிழ்கவி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

141127133521_thamilkavi_tamilkavi_ltte_l

இலங்கையில் தமிழர் போராட்டம் முடிவுறவில்லை என்று கூறும் எழுத்தாளர் தமிழ்கவி, அதன் வடிவங்கள் மாற்றம்பெறலாம் என்கிறார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியாகவும், போராளியின் தாயாகவும், ஊடகவியலாளராகவும் இறுதி யுத்தம் வரை, யுத்த மண்ணிலேயே இருந்த தமிழ்கவி அவர்கள், தனது போராட்ட அனுபவங்கள் குறித்து நூல் ஒன்றையும் எழுதியுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் ஒரு உண்மையான போராளி என்று கூறும் அவர், அந்த அமைப்பின் உள்ளே நடந்த காட்டிக்கொடுப்புகளே, உள்முரண்பாடுகளே போரின் தோல்விக்கு காரணம் என்று கூறுகிறார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இறந்துவிட்டதாகக் கூறும் அவர், பிரபாகரன் இறக்கவில்லை என்று கூறுபவர்களை கடுமையாக விமர்சிக்கிறார்.

அதேவேளை, தற்போதைய நிலையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வே முதன்மையானது என்று கூறும் அவர், அடிபட்டுப் போயிருக்கும் ஒருவனால், தற்போதைக்கு தமிழ் தேசியம் பேசிக்கொண்டிருக்க முடியாது என்றும் குறிப்பிடுகிறார்.

அரசாங்க புனர்வாழ்வுத்திட்டம் முன்னாள் போராளிகளுக்கு போதிய உதவிகளை செய்யவில்லை என்று கூறும் அவர் ஊரில் எஞ்சியுள்ள போராளிகளின் குடும்ப நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறுகிறார்.

இராணுவ பிரசன்னம், நில ஆக்கிரமிப்பு ஆகியவை குறித்தும் அவர் விமர்சிக்கிறார்.

 

 

http://tamil24news.com/news/?p=40692

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கிறது உங்கட வாதம் , தலைவர் இறந்துவிட்டார் அப்புறம் என்ன சொல்ல வருகிரிங்க , எந்த உளவு ஆட்கள் உங்களுக்கு இப்படி சொல்ல சொன்னது ,------------------ , உங்களை மாதிரி நிறைய பேர் புலிகளுடன் நெருங்கி வேலை செய்தவர்க்ள உள்ளார்கள் . நீங்கள் மட்டும் என்ன புதுசா படம் காட்டிரிங்க .
தலைவர் என்பவர் உங்களது கணிப்புகளுக்கு அப்பாட்பட்டவர் . ஏதாவது உருப்படியாய் வேலையை பாருங்க .
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் ஒரு நேர்காணலில் சொன்னதைத்தான் திரும்பவும் சொல்லியுள்ளார். வடிவங்கள் மாறித்தான் உள்ளன. ஆனால் எதுவுமே புரியாத குழப்பமான வடிவங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.