Jump to content

லண்டனில் நடந்த தேசியத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
london-birthday-200-news.jpg

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 60 வது பிறந்த நாளை வடமேற்கு லண்டன் மக்கள் நேற்று மிகச் சிறப்பாகக் கொண்டாடினர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியக் கிளையின் இளையோர் அமைப்பான TYCA இன் ஏற்பாட்டில் 227 Preston Road, Wembley, HA9 8NF இல் அமைந்துள்ள TGTE Office இல் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறுவர் முதல் முதியோர் வரையாக நூற்றுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். குறிப்பாக அதிகளவான இளையோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மண்டப வாசலில் நிறைகுடமும், தேசியத்தலைவரின் முழு அளவிலான பிரமாண்ட பனரும் வைக்கப்பட்டிருந்தது. அகவணக்கத்தோடு ஆரம்பித்த இந்த நிகழ்வில் மங்கள விழக்கினை மகளிர் ஏற்றிவைத்த பின் உறுதி மொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து இந்த நிகழ்வில் வருகை தந்திருந்த மிகச்சிறியவர்களான இரு சிறுவர்கள் கேக் வெட்டி வயதில் முதியவரான ஒரு அம்மாவிற்கு ஊட்டி மகிழ்ந்தனர். தொடர்ந்து இளையோர் உட்பட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியாவிற்கான மக்கள் பிரதிநிதிகள் பலரும் தேசியத் தலைவனை வாழ்த்தியும், தொடர்ந்து தமிழீழ விடுதலை நோக்கி தலைவனின் வழியில் பயணிக்க வேண்டியது தொடர்பாகவும் உரையாற்றினர்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு கேக், இனிப்புவகை என பலவற்றை வழங்கியதோடு, வான வேடிக்கையையும் நடத்தி மகிழ்ந்தனர்.

london-birthday-271114-seithy%20(1).jpg

london-birthday-271114-seithy%20(2).jpg

london-birthday-271114-seithy%20(3).jpg

london-birthday-271114-seithy%20(4).jpg

london-birthday-271114-seithy%20(5).jpg

http://seithy.com/breifNews.php?newsID=121591&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பிறந்த நாளையொட்டி லண்டன் வீதிகளில் வைக்கப்பட்ட பதாகைகள்
 
1472055_885725578113527_6140363987484826

10291860_885818468104238_286202275131474

லண்டன் excel மண்டபத்தில் இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம்

10409553_886154448070640_103526778875005

11415_886154471403971_623766234489651162

10628628_886178448068240_309142529489974

1896849_886178564734895_7873687707839100

10624716_886178501401568_268286283362370

10153707_886176211401797_129392319686021

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்

ஆட்டம்

பாட்டம்

குத்தாட்டம்

அடுத்த நாள்

கண்ணீர் மல்க

மாவீரர் தின அஞ்சலி

மாவீரர் வாரத்தினை இந்தளவுக்கு கேவலமாக அனுட்டிக்க

உலகின் வேறு எந்த இனத்தினாலும் முடியாது

ஒரு பக்கம்

நாதி அற்றுப் போய் தெருத்தெருவாய் அலையும் முன்னால் ஆண் போராளிகள்

உடலையே மூலதனமாக்கி உயிர்வாழ வேண்டிய நிலையில் முன்னால் பெண் போரளிகள்

காணாமல் போன தம் உறவுகளை மீட்க கோரி அழுது குளறி போராடும் பெற்றோர்கள்

ஆனால் இவர்களுக்கு தலைவர் பெயரில் குத்தாட்டமும், கேக் வெட்டி கொண்டாட்டமும்

தலைவரின் உண்மையான விசுவாசி எவரும்

தலைவரின் கொள்கைகளை பின்பற்றும் எந்த தமிழரும்

அவரின் எளிமையான வாழ்வை புரிந்த யாரும்

இப்படி

முதல் நாள் கொண்டாட்டம்

அடுத்த நாள் நாற்பதாயிரம் போராளிகளுக்கு கண்ணீர் அஞ்சலி

என்று

இரட்டை வேடம் போட மாட்டினம்.

Link to comment
Share on other sites

லண்டன் நாடு கடந்த அரசாங்கத்தின் அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் 60வது பிறந்தநாள் நிகழ்வின் நிழல் படத் தொகுப்பு

20141126_183329.jpg

20141126_183408.jpg

20141126_192708.jpg

20141126_192745.jpg

20141126_193602.jpg

20141126_193648.jpg

20141126_194211.jpg

20141126_200126.jpg

20141126_200135.jpg

20141126_200224.jpg

20141126_200244.jpg

http://www.vivasaayi.com/2014/11/thalaivar-birthday.html

10712984_10204211155813121_2218994288569

64792_10204211159253207_7089570670616690

10502034_1417721395184456_61587020854839

10665870_1417721605184435_67228513223720

10698461_1417721441851118_57409945002521

10336704_1417721475184448_48892861050318

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்

ஆட்டம்

பாட்டம்

குத்தாட்டம்

அடுத்த நாள்

கண்ணீர் மல்க

மாவீரர் தின அஞ்சலி

மாவீரர் வாரத்தினை இந்தளவுக்கு கேவலமாக அனுட்டிக்க

உலகின் வேறு எந்த இனத்தினாலும் முடியாது

ஒரு பக்கம்

நாதி அற்றுப் போய் தெருத்தெருவாய் அலையும் முன்னால் ஆண் போராளிகள்

உடலையே மூலதனமாக்கி உயிர்வாழ வேண்டிய நிலையில் முன்னால் பெண் போரளிகள்

காணாமல் போன தம் உறவுகளை மீட்க கோரி அழுது குளறி போராடும் பெற்றோர்கள்

ஆனால் இவர்களுக்கு தலைவர் பெயரில் குத்தாட்டமும், கேக் வெட்டி கொண்டாட்டமும்

தலைவரின் உண்மையான விசுவாசி எவரும்

தலைவரின் கொள்கைகளை பின்பற்றும் எந்த தமிழரும்

அவரின் எளிமையான வாழ்வை புரிந்த யாரும்

இப்படி

முதல் நாள் கொண்டாட்டம்

அடுத்த நாள் நாற்பதாயிரம் போராளிகளுக்கு கண்ணீர் அஞ்சலி

என்று

இரட்டை வேடம் போட மாட்டினம்.

அவர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடவிட்டால் ..........
தாயகத்தில் நிலைமை எல்லாம் தலைகீழாக மாறிவிடுமா ??
 
மாவீரர் மக்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காகத்தான் தம்மை ஆகுதி ஆக்கினார்கள்.
தமக்காக மக்கள் அழுதுகொண்டு இருக்கவேண்டும் என்று எந்த போராளியும் உலகில் நினைப்பதில்லை.
 
சயிக்கிள் காப்பிட்குள் ஆட்டோவை தள்ளிவிடுபவர்களுக்குதான் எல்லா பக்காத்தாலும் வில்லங்கம்.
 
மக்களுக்கு எந்த பிரச்சனியும் இல்லை.  தலைவர் எமது நாட்டை சிருஸ்டித்த தந்தை. மாவீரர்கள் வில்லங்கம் ஆனவர்களுக்குதான் துரமனவர்கள். தமிழ் மக்களுக்கு அவர்கள் பிள்ளைகள்.
எங்களின் பிள்ளைகளை தெய்வங்களை நினைவு கூறுவதற்கு முதல் நாள் ............... அவர்களின் தந்தையின் தோற்றத்தை நினைவு கூறுவதில் எந்த சிக்கலும் இல்லை.
 
நீங்கள் என்ன காட்டு கத்து கத்தினாலும் ................
 
முன்னாள் போராளிகள் ............ அந்நாள் போராளிகளாக இருந்தபோதும்  அரவணைத்தது கேக் வெட்டி கொண்டாடுபவர்கள்தான் . முன்னாள் போராளிகளை   முடிந்த அளவில் அணைப்பதும் அவர்கள்தான்.
 
வெட்டி பேச்ச்சு பேசுபவர்கள் .............. கடந்த 35 வருடமாக அதே திண்ணை பேச்சுதான்.
எனபதும் மக்களுக்கு தெரியும். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10384129_591792217616685_492988447135860

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இந்த வருடம் ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு பிறந்த நாள் விழா கொண்டாடுகிறார்கள்!...மக்கள் தலைவரை மறந்து விடுவார்கள் என்று நினைத்து விட்டார்களா?...அப்படி நினைத்தால் அது தலைவருக்கு செய்யும் அவ மரியாதை...இப்படி கேக் வெட்டி அவருடைய பிறந்த நாளை கொண்டாடுவதை தலைவர் எங்கேயாவது இருந்து பார்த்துக் கொண்டு இருந்தால் ஆனந்தக் கண்ணீர் வடிப்பார்

கருத்தில் தடுமாற்றம்  உள்ளதே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் மாவீரர் சங்கரின் நினைவாகத் தலைவர் தன்னுடைய பிறந்தநாளன்று விரதம் இருப்பார் என்று முன்னர் படித்திருக்கின்றேன். அதை கேக் வெட்டிக் கொண்டாடுபவர்களுக்குச் சொன்னால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரை உண்மையாக நேசிப்பவர்கள் அவரது பாதையை தொடர வேண்டும்.அது தான் அவருக்கு கொடுக்கும் மரியாதை.அவர் சங்கர் அண்ணாவை நினைத்து அன்று உண்ணா[மெளன] விரதம் இருப்பார்.இங்கு எத்தனை பேர் அதை செய்யினம். எல்லாம் ஒரு சோவாகா(show) போய் விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரை உண்மையாக நேசிப்பவர்கள் .... உண்ணா[மெளன] விரதம் இருப்பார்
நீங்கள் அதை செய்தீர்களா? அப்படியாயின் வாழ்க வளமுடன்.

எல்லாம் ஒரு சோவாகா(show) போய் விட்டது .. show is  better than no show at all "

வைரவன்... அது சரி இந்த குத்தாட்டம் போடுவது பற்றி ... இது கொஞ்சம் ஓவரா தெரியல
"பொய் சொன்னாலும் ...பொருந்தச் சொல்லவேணும்" 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் மாவீரர் சங்கரின் நினைவாகத் தலைவர் தன்னுடைய பிறந்தநாளன்று விரதம் இருப்பார் என்று முன்னர் படித்திருக்கின்றேன். அதை கேக் வெட்டிக் கொண்டாடுபவர்களுக்குச் சொன்னால் நல்லது.

உண்ணாவிரதம் இருக்கும் தலைவரின் வாயில் கேக்கை திணித்தால்தான் தவறு.
இது அவர்கள் தாங்கள்தானே சாப்பிடுகிறார்கள். 
தலைவர் ஒரு போராளி அவருக்கும் மக்களுக்கும் நூறு வித்தியாசம் இருக்கத்தானே செய்யும்.
இப்படி ஒரு தலைவன் பிறந்ததால்தான் ............. எங்களால் தமிழராக உலகில் பிறக்க முடிந்தது என்ற ஒரு பூரிப்பு உணர்வை அவர்கள் கொண்டாடுகிறார்கள்.
அது அந்த அச்சுறுத்தலும் இன்றி அவர்களாக செய்கிறார்கள் ...... அதில் என்ன தவறு ?? 

தலைவரை உண்மையாக நேசிப்பவர்கள் அவரது பாதையை தொடர வேண்டும்.அது தான் அவருக்கு கொடுக்கும் மரியாதை.அவர் சங்கர் அண்ணாவை நினைத்து அன்று உண்ணா[மெளன] விரதம் இருப்பார்.இங்கு எத்தனை பேர் அதை செய்யினம். எல்லாம் ஒரு சோவாகா(show) போய் விட்டது.

இதுக்கு முன்னம் இப்படி ஒருவர் பிறந்தார் என்பது நினைவில் இருக்க வேண்டும்.

என்ன இந்த வருடம் ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு பிறந்த நாள் விழா கொண்டாடுகிறார்கள்!...மக்கள் தலைவரை மறந்து விடுவார்கள் என்று நினைத்து விட்டார்களா?...அப்படி நினைத்தால் அது தலைவருக்கு செய்யும் அவ மரியாதை...இப்படி கேக் வெட்டி அவருடைய பிறந்த நாளை கொண்டாடுவதை தலைவர் எங்கேயாவது இருந்து பார்த்துக் கொண்டு இருந்தால் ஆனந்தக் கண்ணீர் வடிப்பார்

ஆக்கிரமிப்பு வடிவங்கள் மாறும்போது ......... போராட்ட வடிவங்களும் மாறிவிடும்.
அது கொஞ்சம் புரிய கஷ்டமாக இருக்கலாம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரை உண்மையாக நேசிப்பவர்கள் .... உண்ணா[மெளன] விரதம் இருப்பார்

நீங்கள் அதை செய்தீர்களா? அப்படியாயின் வாழ்க வளமுடன்.

எல்லாம் ஒரு சோவாகா(show) போய் விட்டது .. show is better than no show at all "

உங்கள் கேள்விக்கு சிம்பிளாக ஓம் நான் தலைவர் செய்கின்ற மாதிரித் தான் செய்கிறேன் என சொல்லலாம்.

அதை விட இன்னொரு பதிலையும் சொல்லலாம்.நான் எப்பவும் என்னைத் தீவிர தேசியவாதியாக காட்டிக் கொண்டதில்லை.தலைவரை பின் தொடர வேண்டிய அவசியமோ,அவரின் பாதையை கடைப் பிடிக்க வேண்டிய அவசியமோ எனக்கில்லை.ஆர்,ஆரார் தங்களுக்கு தலைவர் தான் எல்லாம்,அவரது பாதையைத் தான் தாங்கள் கடைப்பிடிக்கிறம் என்று சொல்கிறார்களோ அவர்கள் தான் முக்கியமாக தலைவரது பாதையை நோக்கிக் போக வேண்டும்.அது அவர்கள் தலைவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்.

தலைவர் இருக்கும் போது அவருக்கு பிடிக்குதோ,இல்லையோ அவரது பிறந்த நாளை கொண்டாடுவதில் தப்பில்லை.ஆனால் அவர் இல்லாத நேரம் என்றும் இல்லாதவாறு இப்படிக் கொண்டாடுவது தப்பு என்பது என் கருத்து

Link to comment
Share on other sites

60 ஆவது பிறந்தநாள் என்பதால் மணிவிழாவாக கொண்டாடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

முதல் மாவீரர் சங்கரின் நினைவாகத் தலைவர் தன்னுடைய பிறந்தநாளன்று விரதம் இருப்பார் என்று முன்னர் படித்திருக்கின்றேன். அதை கேக் வெட்டிக் கொண்டாடுபவர்களுக்குச் சொன்னால் நல்லது.

இந்த பாடலில் 21 ஆவது செக்கனில் இருந்து 41 ஆவது செக்கன் வரை பாருங்கள்.

http://youtu.be/AU0HcuxQeZw

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

60 ஆவது பிறந்தநாள் என்பதால் மணிவிழாவாக கொண்டாடுகிறார்கள்.

அவர்களுடைய பிரச்சனை ............ மக்கள் இன்னமும் ஏன் தலைவரை தூக்கி பிடிக்கிறார்கள் என்பதுதான்.
எதோ இதற்கு முன்பு இவர்கள் தலைவருடன் கூடியிருந்து தாமும் உண்ணாவிரதம் இருந்ததுபோல். 
தலைவர் உண்ணாவிரதம் இருப்பது இவர்களுக்கு மட்டும்தானாம் தெரியும்.
அவளவு அருகில் தாம் இருந்தார்களாம்.
இப்படி எழுதுவதற்கு பதிலாக .... அப்படி எழுதுகிறார்கள். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாடலில் 21 ஆவது செக்கனில் இருந்து 41 ஆவது செக்கன் வரை பாருங்கள்.

உண்மையில் இப்படியான கொண்டாட்டம் நடந்தது எல்லாம் தெரிந்திருக்கவில்லை. 2002 க்குப் பின்னர் எல்லாம் தலைகீழாக மாறியது ஏன் என்று இப்போது புரிகின்றது.

Link to comment
Share on other sites

உண்மையில் இப்படியான கொண்டாட்டம் நடந்தது எல்லாம் தெரிந்திருக்கவில்லை. 2002 க்குப் பின்னர் எல்லாம் தலைகீழாக மாறியது ஏன் என்று இப்போது புரிகின்றது.

தெரியாமலேயே எல்லாம் தெரிந்த மாதிரி ஆலோசனை கூற மட்டும் வந்து விடுவீர்கள்.

இப்படியொரு தலைவர் கிடைத்ததற்காக தலைவருடைய பிறந்தநாளை மற்றவர்கள் கொண்டாடுவதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.

புலம்பெயர் தேசத்தவரில் பிழை பிடிக்க வந்தீர்கள். தாயகத்திலேயே பிறந்த நாள் நடந்தது என்றதும் இப்ப கதையை மாற்றி நழுவ முற்படுகிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாமலேயே எல்லாம் தெரிந்த மாதிரி ஆலோசனை கூற மட்டும் வந்து விடுவீர்கள்.

இப்படியொரு தலைவர் கிடைத்ததற்காக தலைவருடைய பிறந்தநாளை மற்றவர்கள் கொண்டாடுவதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.

புலம்பெயர் தேசத்தவரில் பிழை பிடிக்க வந்தீர்கள். தாயகத்திலேயே பிறந்த நாள் நடந்தது என்றதும் இப்ப கதையை மாற்றி நழுவ முற்படுகிறீர்கள்.

தெரியாமல் இருப்பதை தெரிந்ததாகச் சொல்லுவதில்லை. அதே நேரம் தவறுகளை ஒத்துக்கொள்ளவும் தயங்குவதில்லை.

தாரகி தமிழ்நெற்றில் எழுதியதைப் படித்துத்தான் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை என்று தெரிந்திருந்தது. ஆனால் அவர் எழுதியதும் உண்மையில்லை என்று நீங்கள் இணைத்த வீடியோ மூலம்தான் தெரிந்தது. அதைப் பார்த்ததும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. உயிரைத் துச்சமாக மதித்து ஓர்மம் மிக்க போராளிகளாக இருந்தவர்கள் பலர் 2002க்குப் பின்னர் அரசுகளில் இருப்பவர்கள் போன்று செயற்பட ஆரம்பித்ததும் அழிவுக்குக் காரணம் என்று சொல்லுவதிலும் உண்மை இருக்கின்றது.

எனவே இனி நானும் எனது பிறந்த நாளையும் கேக் வெட்டிக் கொண்டாடலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

வணக்கம் வணக்கம் வணக்கம் , :)
 
உலகமே வியக்கும்,எமக்கு வரப்பிரசாதமாய் கிடைத்துள்ள  எம் தலைவரின் 60 ஆவது பிறந்த நாளை  கொண்டாடுவதில் என்ன தப்பு என்பதே எம் கேள்வி...... .எமக்காக தனது அத்தனை சுகங்கள், இன்பங்கள் ,அனைத்தையும் துறந்த அந்த மகானின்  பிறந்தநாளை கொண்டாடுவது உலகத்தமிழர்கள் அனைவரதும் உரிமை ,உணர்வு ,மனிதாபிமானம் 
 
நாம் கண்ணால காணா ,உருவம் தெரியாத   ஜேசு பிறந்த நாளை விட ,முருகன் பிறந்தநாளை விட ,அல்லா உருவாகிய நாளை விட ,எம் கண்ணால் கண்ட ,எம் யுகத்தில் எமது கண்ணுக்கு ,உணர்வுகளுக்கு கடவுளாய் தெரிந்த மகானின் பிறந்த நாள் முக்கியமான நாள் .அதை கொண்டாடுவதில் எந்த தப்பும் இல்லை .
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுவாசம் என்பதற்கும் வேடம் என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு தமிழ்சூரியன்.

மேலே கேக் வெட்டிக் கொண்டாடும் படத்தில் கோர்ட் போட்டுக்கொண்டு நிற்பவர் கடந்த ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் ஏதோ பெயர் தெரியாத கட்சியின் பெயரில் இலண்டனில் தேர்தலில் நின்றவர். முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் இதே கோர்ட்டுடன் வந்து தனது தேர்தல் விளம்பரங்களை விநியோகித்தவர். எனக்கும் ஒன்று தந்தார். அங்கு நின்றவர்களுடன் இதே புன்சிரிப்புடன் படங்கள் எடுத்துக்கொண்டவர். அவர் என்ன செய்கின்றார் என்று நன்றாகவே தெரியும்!

விசுகு ஐயா அடிக்கடி எழுதுவது மாதிரி பலரின் சோற்றுப் பிழைப்புக்குப் புலிதான் வழிவிட்டிருக்கின்றது.

Link to comment
Share on other sites

தெரியாமல் இருப்பதை தெரிந்ததாகச் சொல்லுவதில்லை. அதே நேரம் தவறுகளை ஒத்துக்கொள்ளவும் தயங்குவதில்லை.

தாரகி தமிழ்நெற்றில் எழுதியதைப் படித்துத்தான் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை என்று தெரிந்திருந்தது. ஆனால் அவர் எழுதியதும் உண்மையில்லை என்று நீங்கள் இணைத்த வீடியோ மூலம்தான் தெரிந்தது. அதைப் பார்த்ததும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. உயிரைத் துச்சமாக மதித்து ஓர்மம் மிக்க போராளிகளாக இருந்தவர்கள் பலர் 2002க்குப் பின்னர் அரசுகளில் இருப்பவர்கள் போன்று செயற்பட ஆரம்பித்ததும் அழிவுக்குக் காரணம் என்று சொல்லுவதிலும் உண்மை இருக்கின்றது.

எனவே இனி நானும் எனது பிறந்த நாளையும் கேக் வெட்டிக் கொண்டாடலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.

நான் இணைத்த வீடியோவில் உள்ள படத்தில் தலைவர் கேக் சாப்பிடும் படம் எதுவும் இல்லையே. உங்களுக்கு ஏன் இந்த குழப்பம்.

தலைவர் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறாரோ இல்லையோ மற்றவர்கள் அவர் பிறந்தநாளை கொண்டாடுவதில் தவறில்லை. அவ்வாறு கொண்டாடியுள்ளார்கள் என்பதற்கே அதை இங்கு இணைத்தேன்.

அடுத்து,

உங்கள் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுவதற்கும் தேசிய தலைவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுவதற்கும் இடையிலான அடிப்படை வித்தியாசமே தெரியாதவரா நீங்கள்? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இணைத்த வீடியோவில் உள்ள படத்தில் தலைவர் கேக் சாப்பிடும் படம் எதுவும் இல்லையே. உங்களுக்கு ஏன் இந்த குழப்பம்.

தலைவர் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறாரோ இல்லையோ மற்றவர்கள் அவர் பிறந்தநாளை கொண்டாடுவதில் தவறில்லை. அவ்வாறு கொண்டாடியுள்ளார்கள் என்பதற்கே அதை இங்கு இணைத்தேன்.

அடுத்து,

உங்கள் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுவதற்கும் தேசிய தலைவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுவதற்கும் இடையிலான அடிப்படை வித்தியாசமே தெரியாதவரா நீங்கள்? :)

எதிர்காலத்தில் கேக் ஊட்டும் படங்களும் வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

தாரகி எழுதிய கட்டுரை அகப்படவில்லை. அதைப் படித்தால் ஏன் குழப்பம் வந்தது என்று உங்களுக்குப் புரியும்.

என்னுடைய பிறந்தநாளை நான்தான் கொண்டாடப்போகின்றேன். மற்றவர்களைக் கொண்டாடச் சொல்லிக் கேட்கவில்லை என்பதை விளங்காமல் நீங்கள் எழுதுவீர்கள் என்பது தெரியும்தானே துள்சி :wub:

Link to comment
Share on other sites

விசுவாசம் என்பதற்கும் வேடம் என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு தமிழ்சூரியன்.

மேலே கேக் வெட்டிக் கொண்டாடும் படத்தில் கோர்ட் போட்டுக்கொண்டு நிற்பவர் கடந்த ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் ஏதோ பெயர் தெரியாத கட்சியின் பெயரில் இலண்டனில் தேர்தலில் நின்றவர். முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் இதே கோர்ட்டுடன் வந்து தனது தேர்தல் விளம்பரங்களை விநியோகித்தவர். எனக்கும் ஒன்று தந்தார். அங்கு நின்றவர்களுடன் இதே புன்சிரிப்புடன் படங்கள் எடுத்துக்கொண்டவர். அவர் என்ன செய்கின்றார் என்று நன்றாகவே தெரியும்!

விசுகு ஐயா அடிக்கடி எழுதுவது மாதிரி பலரின் சோற்றுப் பிழைப்புக்குப் புலிதான் வழிவிட்டிருக்கின்றது.

கிருபன் அண்ணா வணக்கம் .
 
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை புரிந்துகொண்டே எனது கருத்தை எழுதுகிறேன் .உண்மையில் தற்போதைய சூழலில் எமக்கு எம் கண்ணுக்கு முன் வேலைக்கு ஆகாதவர்கள் என்று தெரிந்தும் ஒரு சில காரணங்களுக்காக அணைத்து  செல்ல வேண்டிய சூழலில் இருக்கிறோம் .நீங்கள் கூறிய நபரைப்போல பலர் இன்று மீண்டும் தேசியவாதிகளாய் காட்டிக்கொண்டு  நாம் பயணிக்கும் இந்த கரடுமுரடான விடுதலைப்பாதையில் பயணிப்பது போல இணைந்துள்ளார்கள் .ஆனால் முள்ளிவாய்க்கால்  மையத்திற்கு பிறகு எத்தனை எத்தனை சவால்கள ,குழப்பங்கள் .உளவியல் போராட்டாங்களை சந்தித்து அவற்றை நாம் ஊடறுத்து நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பது  மறுக்க முடியாத ஓர் உண்மை ,நிச்சயம் நீங்கள் குறிப்பிடுபவர்கள் எம் பாதையில் இடையில் தங்கள் நரி விளையாட்டை காட்டுவார்கள் என்று தெரிந்தும் கூட்டிக்கொண்டு செல்கிறோம் .இவர்களை கூட்டிச்செல்லாவிட்டால் ,வேறு விதமாய் குழி பறித்துவிடுவார்கள் .....
கொச்சையாக சொன்னால்  நாமே கூட்டிக்கொண்டுபோய் அவர்களை விட நாம் முந்துவதே தற்போதுள்ள காலத்தின் கட்டாயம் .இன்னும் விரிவாக எழுதலாம் அண்ணா ,அதற்கான நேரம் இதுவல்ல .
Link to comment
Share on other sites

விசுவாசம் என்பதற்கும் வேடம் என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு தமிழ்சூரியன்.

மேலே கேக் வெட்டிக் கொண்டாடும் படத்தில் கோர்ட் போட்டுக்கொண்டு நிற்பவர் கடந்த ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் ஏதோ பெயர் தெரியாத கட்சியின் பெயரில் இலண்டனில் தேர்தலில் நின்றவர். முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் இதே கோர்ட்டுடன் வந்து தனது தேர்தல் விளம்பரங்களை விநியோகித்தவர். எனக்கும் ஒன்று தந்தார். அங்கு நின்றவர்களுடன் இதே புன்சிரிப்புடன் படங்கள் எடுத்துக்கொண்டவர். அவர் என்ன செய்கின்றார் என்று நன்றாகவே தெரியும்!

விசுகு ஐயா அடிக்கடி எழுதுவது மாதிரி பலரின் சோற்றுப் பிழைப்புக்குப் புலிதான் வழிவிட்டிருக்கின்றது.

அவர் ஒன்றும் பெயர் தெரியாத கட்சியில் இணைந்திருக்கவில்லை.

Nations without states என்ற பெயரில் பல நாட்டவர்கள் இணைந்து செயற்படுகிறார்கள். இந்த இணைப்பில் இறுதிப்படத்தில் உள்ளது. பாருங்கள். http://www.yarl.com/forum3/index.php?/topic/148153-லண்டனில்-பொது-கவனயீர்ப்பு-கூட்/#entry1054335

இவ்வாறு இணைந்து செயற்படுபவர்கள் National Liberal Party (NLP) என்ற கட்சி பெயரில் போட்டியிட்டார்கள்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திலும் உள்ளார்.

அதே முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் பல்வேறு கோரிக்கைகைகளுடன் கூடிய petition இல் கையொப்பங்கள் சேகரித்திருந்தார்கள். பின்னர் டேவிட் கமரூனின் அலுவலகத்தில் கையளித்திருந்தார்கள். அதை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்காதே.

அவர் பலவற்றை செய்கிறார். நான் யாழில் இணைத்திருக்கிறேன்.

ஐ.நா விசாரணை குழுவுக்கு தமது சாட்சியத்தை பதிவு செய்வதற்கு பிரித்தானிய தமிழ் மக்களுக்கு உதவி செய்வதற்காக ஒவ்வொரு கிழமையும் 4,5 நாட்கள் ஒதுக்கி தொடர்ச்சியாக உதவி செய்தார்கள். அப்பதிவுகளில் சிலவற்றை தவற விட்டிருந்தாலும் சிலவற்றை யாழில் ஏற்கனவே இணைத்திருக்கிறேன். அனைத்தும் அவர் முகநூலிலிருந்து பெற்று இணைத்தது தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.