Jump to content

இன்று மாவீரர் நாள் 27/11/2014


SUNDHAL

Recommended Posts

இன்று மாவீரர் நாள் 27/11/2014

தமிழ் மண்ணின் தவப்புதல்வராக பிறந்து அந்த மண்ணின் அடக்கு முறை ஆட்சிக்கெதிராக கிளர்ந்தெழுந்து தமிழீழ தாயின் மடியில் உறங்குகின்ற வேங்கைகளின் நாள்.......

தமிழர்களுக்கு சுய விருப்புடன் ஆளக்கூடிய ஆட்சி வேண்டி மிகப்பலம் பொருந்திய எதிரியுடன் தீரத்துடனும் துணிவுடனும் களமாடி கண் தூங்குகின்ற புலி வீரர்களின் நாள்.....

சரித்திரத்தில் படித்த தமிழர்களின் வீர வரலாறுகளை சமகாலத்தில் நிகழ்த்திக்காட்டிய எங்கள் கண்மணிகளின் நாள்......

தலைவன் வழியில் ஆயிரம் ஆயிரமாய் அணி திரண்டு தமிழர்களின் தன்மானம் காத்திட்ட தமிழர் வீர விழுதுகளின் நாள்.......

அலைகடல் என திரண்டு வந்த எதிரிகளை.....தமிழர் அரணாக நின்று தடுத்துக் களமாடிய......எங்கள் மாவீரர்களின் நாள்

உங்களுக்காக ஒரு கணம் குனிந்த எம் தலைகள்....தமிழர்களின் விடுதலைப்பாதை நோக்கி நிமிர்கின்றன..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாள் நவம்பர் 27

குனிந்த தலைகள் நிமிர்ந்து செல்ல

ஊன்று கோலாக இருந்த

உதிரிப்புக்களை நினைவூட்டும்

உயர்வான நன் நாள்.

புற முதுகு காட்டி ஓடாமல் நெஞ்சிலே

எதிரியின் குண்டை

தாங்கி மடிந்த வீரநாயகர்களை

நினைவுபடுத்தும் நாள்.

தமிழ்தேசத்தின் விடிவுக்காக

தம் தேகத்தை இளந்தவீரர்களை

நினைவுபடுத்தும் நிதர்சனமானநாள்...

சத்திய இலட்சியத்தீயில் தம்மையே ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி அவர்களின் கனவுகள் நிறைவேற உழைப்போம் என்று உறுதி எடுத்து கொள்வோம்

Link to comment
Share on other sites

சத்திய இலட்சியத்தீயில் தம்மையே ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி அவர்களின் கனவுகள் நிறைவேற உழைப்போம் என்று உறுதி எடுத்து கொள்வோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எமக்காக.. எம் சந்ததிக்காக.. எம் மண்ணின் விடுதலைக்காக.. நிம்மதியான வாழ்வுக்காக.. தம் வாழ்வை நெருப்பாக்கி வித்தாகி வீழ்ந்துவிட்ட தமிழ் தாயின் பிள்ளைகளுக்கு வீரவணக்கம்.

 

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரணக்கம்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

Link to comment
Share on other sites

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !

 
Link to comment
Share on other sites

மாவீரர்கள் என்றென்றும் நினைவு கூரப்படுவார்கள். அவர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரித்த இன்னுயிர்களை நினைத்து கலங்கும் இவ்வேளையில், இனிவரும் காலமாவது ஈழத்தமிழர்களின் துயரம் நீங்கி என்றும் சிறப்புடன் வாழ, தங்களின் ஆன்மா வழிகாட்ட நம்பிக்கையுடனான எனது பிரார்த்தனைகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் விடுதலைக்காக போராடி மண்ணில் வீழ்ந்து வித்தான மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

தனித் தமிழீழம் என புறப்பட்டு மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடி தங்கள் இன்னுயிரை மாய்த்த அனைத்து இயக்கப் போராளிகளுக்கும். போராட்டத்திற்கு உறுதுணையாய் நின்று மரணித்த அனைத்துமக்களுக்கும். என் தலைவனுக்கும் வீர வணக்கமும் அஞ்சலிகளும் ...சிரம் தாழ்த்துகிறேன்..

10806401_10202054944574920_7656199072352

 

Link to comment
Share on other sites

தமது எதிர்கால சந்ததி சுதந்திர மனிதர்களாக வாழவேண்டும். என்ற உன்னத லட்சியத்திற்காக மண்ணில் வீழ்ந்த அனைத்து மாவீர்ர்களுக்கும் வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.