Jump to content

பயங்கர பவுன்சரில் காயமடைந்த ஆஸி. வீரர் பிலிப் ஹியூஸ் உயிருக்குப் போராட்டம்


Recommended Posts

phil_hiughes_hit_b_2220277g.jpg
இடது கை வீரர் பிலிப் ஹியூஸ், பவுன்சரில் அடிபட்டு மயக்கமடைந்தார். | படம்: ஏ.எஃப்.பி.
 
phil_hugues_strech_2220278g.jpg
மயங்கிய நிலையில் மைதானத்திலிருந்து ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் செல்லபப்டும் பிலிப் ஹியூஸ்.
 
 
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஸி. உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் ஆடிய பில் ஹியூஸ், பவுன்சர் ஒன்று தாக்கியதில் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.
 
அவர் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்று ஆஸ்திரேலிய செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் பின்னால் இடம்பெறலாம் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் தெற்கு ஆஸ்திரேலியா அணிக்காக 63 ரன்களில் ஆடி வந்த பில் ஹியூஸ், நியூசவுத் வேல்ஸ் பவுலர் ஷான் அபோட் வீசிய பயங்கர பவுன்சர், இடது காதையொட்டி மண்டையில் பந்து பயங்கரமாகத் தாக்க அவர் சிறிது நேரம் முழங்காலில் தன் கையை ஊன்றி தள்ளாடினார். ஆனால் உடனடியாக பிட்சில் மயங்கி விழுந்தார்.
 
மயங்கி விழும் போதும் தரையில் தலை சற்றே வேகமாக மோதியுள்ளது. பவுன்சரை ஹூக் அட முயன்றார் ஆனால் பந்து மட்டையில் சிக்கவில்லை. இதனையடுத்து மூளையை தாக்கும் விதமாக மண்டையில் அடிபட்டுள்ளது.
 
உடனடியாக மைதானத்திற்கு உதவி வாகனம் வரவழைக்கப்பட்டு, அவர் செயிண்ட் வின்செண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனேயே அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அடிபட்டதினால் மூளையில் ஏற்பட்டுள்ள அழுத்தம் அல்லது அதிர்ச்சியை குறைக்க மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
 
அறுவை சிகிச்சையின் விளைவுகள் தெரிய 24 மணி முதல் 48 மணி நேரங்கள் ஆகலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இப்போதைக்கு அவர் மருந்துகள் மூலம் கோமா நிலைக்கு செலுத்தப்பட்டுள்ளார். உயிர்காப்பு அமைப்புகளுடன் அவர் தற்போது இருந்து வருகிறார். இப்போதைக்கு ஒன்றும் கூறுவதற்கில்லை என்று மருத்துவர்கள் கூறினர். 
 
இன்று இவர் ஆடும்போது மைதானத்தில் இவரது ஆட்டத்தை இவரது தாயாரும், சகோதரியும் கண்டு களித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் முன்னிலையில் பில் ஹியூஸ் ஆபத்தான காயமடைந்துள்ளார்.
 
ஆஸ்திரேலிய வீரர்கள் இவர் உயிர் பிழைக்க தங்கள் வேண்டுதல்களை எற்கெனவே ட்விட்டரில் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.
 
Link to comment
Share on other sites

பிலிப் ஹியூஸ் நிலை பற்றி ஆஸி. மருத்துவர்கள் கூறுவது என்ன?
 

 

சிட்னியில் இன்று ஷெஃபீல்ட்ஷீல்ட் போட்டியில் பவுன்சர் பந்தை எதிர்கொண்ட போது மண்டையில் படுகாயம் அடைந்த பிலிப் ஹியூஸ் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதால் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று முன்னணி அவசரசிகிச்சை மருத்துவர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நியூசவுத்வேல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சான் அபோட் வீசிய பவுன்சரை ஹூக் செய்ய முயன்ற போது பந்து பின் தலையில் ஹெல்மெட் கவர் செய்யாத இடத்தைத் தாக்கியது. அவர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். இதனையடுத்து செயிண்ட் வின்செண்ட் மருத்துவமனையில் அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, கோமா நிலையில் இருக்கச் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மருத்துவமனை செய்தி தொடர்பாளர் கூறும்போது, முதலில் ஸ்கேன்கள் எடுக்கப்பட்டன. மாலை 4.15 மணி வரை அவர் அறுவைசிகிச்சையில்தான் இருந்தார் என்றார்.

 

அறுவைசிகிச்சை முடிந்த பிறகு ஆஸ்திரேலிய நேரம் மாலை 5 மணியளவில் ஃபேர்பேக்ஸ் மீடியாவிடம் மருத்துவர்கள் தெரிவிக்கையில், அறுவை சிகிச்சையின் பலன்கள் என்னவென்பது இப்போதைக்கு கூறமுடியாதது என்றும் இப்போதைக்கு அவர் மருந்துகள் மூலம் கோமாவில் ஆழ்த்தப்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளது.

ஆஸ்ட்ரலேசியன் காலேஜ் ஆஃப் எமர்ஜென்சி மெடிசின் தலைவர் அந்தோனி கிராஸ், பிலிப் ஹியூஸிற்கு ஏற்பட்ட காயத்தின் தன்மை குறித்து விளக்கும் போது, “கிரிக்கெட் பந்தின் கடினமான தன்மையும், முழு ஹெல்மெட் அவர் அணியாததால் பந்தின் முழு வேகமும் அவரது பின் மண்டையில் தாக்கியதும் பிரதானமான காரணம்.

கிரிக்கெட் காயங்கள் பெரிய சீரியசாக இதுவரை வந்ததில்லை. குறிப்பாக உயிருக்கு ஆபத்தான தலைக்காயங்கள் இப்போதெல்லாம் ஏற்படுவதில்லை, காரணம் ஹெல்மெட்கள்.

ஆனால் ஹியூஸ் அணிந்திருந்த ஹெல்மெட் முழு ஹெல்மெட் அல்ல, மேலும் பந்து, ஹெல்மெட் கவர் செய்யாத மண்டைப்பகுதியை தாக்கியுள்ளது.

 

கடினமான பந்துகள் முதலில் தலையில் உள்ள மேற்புறத் தோலை கிழித்திருக்கும். ஆனால் இது ஒன்றும் ஆபத்தில்லை, மண்டை ஓடு உடைந்திருந்தால் ஆபத்து அதிகம்.

ஏனெனில் பந்து வேகமாகத் தாக்கும் போது உள்ளேயிருக்கும் மூளை சற்றே ஆட்டம் கண்டுவிடும். ஆனால், இதில் பெரிய கவலை என்னவெனில் மூளையின் உட்பகுதியில் ரத்தக் கசிவு ஏற்பட்டுவிட்டால் கடினம். ரத்தக் கசிவு ஏற்பட்டால் மண்டை ஓட்டினுள் ரத்தக்கட்டு ஏற்படும். இது மூளையில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி காயத்தின் தீவிரத்தை அதிகப்படுத்தும்.

 

அதாவது மூளையின் செல்களே கசக்கப்பட்டது போல் ஆகிவிடும். இதனால் ஏற்படும் கூடுதல் அழுத்தம், பிராணவாயு கலந்த ரத்தம் மூளைக்குள் வருவதை தடுக்கத் தொடங்கும். மேலும் காயத்தினால் நச்சான ரத்தம் வெளியேறுவதும் தடைபடும்.

இது போன்ற காயங்கள் பெரும்பாலும் கார் விபத்து, பைக் விபத்தில் சிக்குபவர்களுக்குத்தான் ஏற்படும். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டால் காப்பாற்றுவது சுலபம். எனவே கால நேரம் என்பது இத்தகைய காயத்தின் தீவிரத்தை தீர்மானிக்கும் ஒரு விஷயம்” என்றார்.

உயிருக்கு ஆபத்தான காயங்கள் அவரது மூளையில் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். ஆனால் அறுவை சிகிச்சை எத்தகைய பலன்களை அளிக்கும் என்பதை அறிய குறைந்தது 24 மணி நேரங்களாகவது ஆகும் என்று கூறியுள்ளனர்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/article6633457.ece

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீக்கிரம் குணமாகி மீண்டும் வந்து விளையாட வேண்டும்

Link to comment
Share on other sites

பிலிப் ஹியூஸ் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை: ஆஸி. மருத்துவர்
 

 

பவுன்சரில் அடிபட்டு தலையில் படுகாயத்துடன் உயிருக்குப் போராடி வரும் ஆஸி, வீரர் பிலிப் ஹியூஸ் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக ஆஸ்திரேலிய மருத்துவர் தெரிவித்தார்.

பவுன்சரில் தலையின் பின்பகுதியில் படுகாயம் ஏற்பட்டு சுயநினைவு இழந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் ஆஸி. வீரர் பிலிப் ஹியூஸ் நிலையில் முன்னேற்றம் இல்லை என்று செயிண்ட் வின்செண்ட் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா மருத்துவர் பீட்டர் புரூக்னர் கூறுகையில், “பிலிப் ஹியூஸின் நிலையில் மாற்றமில்லை. அவர் இன்னமும் அபாயக் கட்டத்தைத் தாண்டவில்லை, நிலைமையில் முன்னேற்றம் இருந்தால் உடனடியாக தெரிவிக்கப்படும்” என்றார்.

 

மேலும் ஸ்கேன்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவுகள் வந்தால்தான் அறுவை சிகிச்சை வெற்றியா தோல்வியா என்பது தெரியவரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், மற்றும் வீரர்கள் தங்கள் பிரார்த்தனைகளை நடத்திக் கொண்டிருக்கையில், நியுசவுத்வேல்ஸ் அணி இந்த சம்பவத்தினால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

பிலிப் ஹியூஸ் ஏற்கெனவே நியுசவுத்வேல்ஸ் அணிக்கு விளையாடியவர்தான்.

இந்த நிலையில் இந்த அணியின் வீரர்களுக்கும் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/article6636209.ece

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Phillip Hughes dies aged 25

ESPNcricinfo staff

November 27, 2014

Comments: 62 | Login via connect_fb_icon.png | Text size: A | A
 

Phillip Hughes has died as a result of the injuries he sustained when struck by a bouncer on Tuesday, Cricket Australia has confirmed. He was 25.

Team doctor Peter Brukner confirmed the news in a statement released on Thursday afternoon.

"It is my sad duty to inform you that a short time ago Phillip Hughes passed away," Brukner said. "He never regained consciousness following his injury on Tuesday. He was not in pain before he passed and was surrounded by his family and close friends.

"As a cricket community we mourn his loss and extend our deepest sympathies to Phillip's family and friends at this incredibly sad time. Cricket Australia kindly asks that the privacy of the Hughes family, players and staff be respected."

Players, coaches and other friends had been in and out of St Vincent's Hospital in Sydney throughout Wednesday and Thursday, visiting Hughes and supporting his family, and each other. Australia's captain Michael Clarke, a close friend of Hughes, had been at the hospital until after midnight on Wednesday night and returned at about 6am on Thursday.

Brad Haddin, Steven Smith, Shane Watson, David Warner, Nathan Lyon, Moises Henriques, Mitchell Starc and Daniel Smith all spent time at the hospital, as did Ricky Ponting, Simon Katich, Phil Jaques and Brett Lee. Some flew in from interstate, including Aaron Finch, Matthew Wade, Peter Siddle, Peter Forrest, George Bailey, Ed Cowan, Justin Langer, and Cricket Australia's CEO James Sutherland and high performance manager Pat Howard. The national coach Darren Lehmann was there as well.

The Hughes family had kept vigil at the hospital, including his mother and sister, who had been at the Sheffield Shield match between South Australia and New South Wales on Tuesday when Hughes was struck by the bouncer while batting on 63.

Hughes missed his attempted hook and the ball struck him below the helmet, causing a cerebral haemorrhage. He underwent surgery on Tuesday after being rushed to hospital from the SCG, and was then in an induced coma.

"It's really a matter of millimetres and the bad luck of the actual site of the impact," sports doctor Peter Larkins told the Australian on Wednesday. "It's very critical what part of the brain gets hit, you can actually just get a bruised brain or simply a crack in the skull when you get hit in certain parts of the head and not have anything as serious as Phillip has got. In this case it's hit a particular artery at the base of the neck that has burst.

"So it's like bursting a water-main and there's just an incredible release of blood from the burst artery and that's where the bleeding in the brain, the cerebral haemorrhage, occurs."

More to follow

http://www.espncricinfo.com/australia/content/story/803649.html

 

Link to comment
Share on other sites

சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் பிலிப் ஹியூக்ஸ்

 

Phillip-Hughes.jpg

 

கிரிக்கெட் பந்து தலையில் தாக்கி உயிருக்காக போராடிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக அவுஸ்திரேலிய அணியின் மருத்துவர் பீற்றர் புருக்னர் தெரிவித்தார்.

 
ஷெட்பீல்ட் ஷில்ட் முதல் தர போட்டியில் விளையாடிய பிலிப் ஹியூக்ஸ், பவுன்சர் பந்து தலையின் இடது பக்கத்தில் பலமாக தாக்கியதில் மயங்கி ஆடுகளத்தில் விழுந்தார்.
இந்நிலையில் ஹெலிகொப்டர் மூலம் ஆபத்தான நிலையில் சிட்னியில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்காக கடந்த இரண்டு நாட்களாக போராடி வந்தார். 
 
காயத்தின் தீவிர தன்மையை கண்டறிந்து அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் பலர் அவரின் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்த நிலையில் அனுதாபங்களை தெரிவித்தும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.
 
26 டெஸ்ட், 25 ஒருநாள் போட்டி மற்றும் ஒரேயொரு 20 ஓவர் போட்டியில் விளையாடியுள்ள 25 வயதான ஹியூக்ஸ{க்கு எதிர்வரும் 30 ஆம் திகதி 26 ஆவது பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
102558.jpg
Link to comment
Share on other sites

சர்வதேச கிரிக்கெட் வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய பிலிப் ஹியூஸ் மரணம்
 

 

பவுன்சர் பந்து தாக்கி உயிரிழந்த ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸின் மறைவுக்கு சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலர், ட்விட்டரில் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

அதிவேக பவுன்சர் தாக்கியதில் தலையில் படுகாயமடைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை சிட்னி மருத்துவமனையில் உயிரிழந்தார். | படிக்க: பவுன்சர் தாக்கி காயமடைந்த பிலிப் ஹியூஸ் உயிரிழப்பு

"இது கிரிக்கெட் உலகிற்கு வருத்தமான நாள். மும்பை இந்தியன்ஸ் அணியின் மூலம் அவரது பரிச்சயம் ஏற்பட்டது. செய்யும் வேலையின் மீது ஆழ்ந்த சிரத்தை கொண்டவர்" என்று முன்னாள் இந்திய வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

 

25 வயதான ஹியூஸின் மரணம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாகவும், தன்னை சோகத்தில் ஆழ்த்தியதாகவும் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

மேலும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் ஆடம் கில்கிறிஸ்ட், க்ளென் மெக்ரா, தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஷான் பொல்லாக், ஏ பி டிவில்லியர்ஸ், இலங்கை வீரர் ஜெயவர்த்தனே உள்ளிட்ட பலரும் ஹியூஸின் மரணத்திற்கு அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்துள்ளனர்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article6639232.ece

Link to comment
Share on other sites

கவலையான செய்தி.. இந்த நேரத்தில் தலைக்கவசமே அணியாமல் mat விரிப்பில் கிரிக்கட் பந்துகளை விளையாடியது நினைவில் வந்து தொலைக்கிறது.

Link to comment
Share on other sites

பிலிப் ஹியூஸ் கிரிக்கெட் பயணம்: ஒரு விரிவான பார்வை
hugh_2223531f_zpsac6c8f7f.jpg

 

கிரிக்கெட் விளையாட்டு வரலாற்றில் நிகழ்ந்த துர்மரணம் ஒன்று உண்டென்றால் அது ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸின் மரணமாகவே இருக்கும். அவரது கிரிக்கெட் பயணம் மிகவும் ஆரோக்கியமாக வளர்ந்து வந்த நேரத்தில் இந்தத் துயரம் ஏற்பட்டு கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

அவரது கிரிக்கெட் பயணத்தின் முழு விபரம் இதோ:

 

இவரது முழு பெயர் பிலிப் ஜோயெல் ஹியூஸ். நவம்பர் 30, 1988-ல் அவர் நியூசவுத்வேல்ஸில் பிறந்தார். இன்னும் 3 நாட்களில் அவருக்கு பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

26 டெஸ்ட் போட்டிகளில் 32.65 என்ற சராசரியுடன் 1535 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக எடுத்த 160 ரன்களாகும். 3 சதங்கள் மற்றும் 7 அரைசதங்கள் எடுத்துள்ளார்.

 

ஒருநாள் சர்வதேச போட்டிகளில், 25 ஆட்டங்களில் 826 ரன்கள். 2 சதங்கள், 4 அரைசதங்கள். சராசரி 35.91.

18 வயதில் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகம்:

 

தனது 18-வது வயதில் நியூசவுத்வேல்ஸ் அணிக்காக டாஸ்மேனியா அணிக்கு எதிராக புரா கோப்பை போட்டியில் முதன்முதலில் அறிமுகமானார். தொடக்க வீரராகக் களமிறங்கி 51 ரன்கள் எடுத்தார்.

 

இளம் வயதில் முதல் தர சதம் எடுத்து சாதனை:

பிப்ரவரி 2008-ல் புரா கோப்பை இறுதிப் போட்டியில் விக்டோரியா அணியை வெற்றி கொண்ட அந்த போட்டியில் 19-வயதில் சதம் எடுத்த வீரர் என்ற ஆஸ்திரேலிய சாதனையை நிகழ்த்தினார்.

5_2223497a_zps25cde10b.jpg
இளம் கிரிக்கெட் வீரருகான பிராட் மேன் விருது:

 

பிப்ரவரி, 2009-ல் இளம் கிரிக்கெட் வீரருக்கான பிராட்மேன் விருதைப் பெற்றார் பிலிப் ஹியூஸ். அப்போதுதான் மேத்யூ ஹெய்டன் ஓய்வு அறிவிக்க, அவரது மிகப்பெரிய இடத்தை இந்த இளம் பிலிப் ஹியூஸ் இட்டு நிரப்ப ஆஸ்திரேலிய அணிக்கு அழைக்கப்பட்டார். ஜொகான்னஸ்பர்க் மைதானத்தில் டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல், மகாயா நிடினி ஆகியோருக்கு எதிராக தொடக்க வீரராகக் களமிறங்கினார். ஆனால் முதல் இன்னிங்ஸில் 4-வது பந்தில் டேல் ஸ்டெய்ன் பந்தில் பவுச்சர் கேட்ச் பிடிக்க வெளியேறினார்.

2-வது இன்னிங்சில் 121 பந்துகளில் 11 பவுண்டரி 1 சிக்சருடன் 75 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா 207 ரன்களில் மடிந்தது. ஆனால் பிலிப் ஹியூஸ் 75 ரன்கள். அனைத்து ஷாட் பிட்ச் பந்துகளையும் பாயிண்ட், ஸ்லிப் திசையில் தூக்கி அடித்தார் அவர். ஆஸ்திரேலியா அந்தப் போட்டியில் வென்றது. பிலிப் ஹியூஸ் 2-வது இன்னிங்ஸில் 3 கேட்ச்களையும் பிடித்தார்.

3_2223500a_zpsb2a459b0.jpg

2-வது டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்து சாதனை:

அதே தென் ஆப்பிரிக்க தொடரில் 2-வது டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்றது. இரு இன்னிங்ஸ்களிலும் சதம் கண்டார் பிலிப் ஹியூஸ், அதாவது 115 மற்றும் 160 ரன்கள். 20 வயதில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்து புதிய சாதனை படைத்தார். இது மார்ச் 2009-ல் நடைபெற்றது.

 

ஆஷஸ் தொடரிலிருந்து நீக்கம்:

2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஷாட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்வதில் பெரும் பிரச்சினைகளைச் சந்தித்ததால் ஆஷஸ் தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஷேன் வாட்சன் அப்பொது இவருக்குப் பதிலாக சைமன் கேடிச்சுடன் தொடக்க வீரராகக் களமிறக்கப்பட்டார்.

1_2223501a_zpscaa512e4.jpg

மீண்டும் 2010-ல் டெஸ்ட் வாசம்:

 

ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆட அழைக்கப்பட்டார். காரணம் அப்போது கேடிச் காயமடைந்தார். பிறகு வாட்சன் காயமடைய வெலிங்டனில் நியூசிலாந்துக்கு எதிராக 2-வது இன்னிங்ஸில் வெற்றி பெற 106 ரன்கள் தேவை என்ற நிலையில், 75 பந்துகளில் 12 பவுண்டரி ஒரு சிக்சருடன் 86 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

 

டிசம்பர் 2010:

 

சைமன் கேடிச்சிற்கு காயம் ஏற்பட மீண்டும் ஆஷஸ் தொடரில் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கு அழைக்கப்பட்டார். ஆனால் மீண்டும் ஷாட் பிட்ச் துர்கனவு அவரைத் துரத்தியது சரியாக ஆட முடியவில்லை.

 

சர்ச்சைக்குரிய முறையில் மீண்டும் 2011-ல் ஆஸ்திரேலிய அணியில்:

 

சைமன் கேடிச் கிரிக்கெட் வாழ்வை கிரெக் சாப்பல் முடித்து வைக்க பிலிப் ஹியூஸ் தனது டெஸ்ட் இடத்தைத் தக்க வைத்தார். இது அப்போது சர்ச்சையானது. ஆனால் அந்தத் தொடரில் இலங்கைக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டியில், கொழும்புவில் 126 ரன்கள் எடுத்து தனது 3-வது டெஸ்ட் சதத்தை 2 ஆண்டுகள் கழித்து எடுத்தார் பிலிப் ஹியூஸ்.

2011-ஆம் ஆண்டு இவரது பலவீனத்தை வெளிக்கொணர்ந்த நியூசி. பவுலர் கிறிஸ் மார்டின்:

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4 இன்னிங்ஸ்களிலும் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் மார்ட்டினின் வெளியே செல்லும் பந்துகளை தொட்டு ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.

 

மீண்டும் டிசம்பர் 2012:

 

டிசம்பர் 2012-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் ஆடி, இரண்டு அரைசதங்களை எடுத்தார்.

 

6_2223502a_zps1ab6d909.jpg

ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியில் சதம் எடுத்த ஆஸி. வீரர் என்ற சாதனை:

 

நீண்ட கால கனவிற்குப் பிறகு ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டு ஆடவைக்கப்பட்டார். மெல்பர்னில் இவர் இலங்கைக்கு எதிராக அறிமுக ஒருநாள் போட்டியில் சதம் எடுத்து புதிய ஆஸ்திரேலிய சாதனை படைத்தார். பிறகு ஹோபார்ட்டிலும் இலங்கைக்கு எதிராக 138 ரன்கள் எடுத்தார்.

 

அனைத்து வடிவங்களிலும் சிறந்து விளங்கியதற்காக விருது:

 

பிப்ரவரி 2013-ல் ஆஸ்திரேலியாவின் சிறந்த உள்நாட்டு வீரர் என்ற விருதைப் பெற்றார். அந்த ஆண்டு அனைத்து வடிவங்களிலும் சேர்த்து 1108 ரன்களை எடுத்தார் பிலிப் ஹியூஸ்.

தொடக்க வீரர் நிலையிலிருந்து 6-ஆம் இடத்திற்கு இறக்கம்:

 

2013-ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் அவர் 6ஆம் நிலையில் களமிறங்கி முதல் டெஸ்ட் போட்டியில் 81 ரன்கள் எடுத்தார். ஆனால் அடுத்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஒரு ரன்னை எடுத்ததால் மீண்டும் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

 

லிஸ்ட் ஏ ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் கண்ட முதல் ஆஸி. வீரர்:

 

ஆஸ்திரேலியா ஏ அணிக்காக ஜூலை 2014-ல் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக டார்வின் மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் 202 ரன்கள் அடித்து இரட்டை அடித்த முதல் ஆஸி.வீரரானார்.

கடைசியாக அக்டோபர் 12, 2014-ல் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக ஒருநாள் போட்டி ஒன்றில் ஆஸ்திரேலியாவுக்காக ஆடினார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/article6639698.ece

Link to comment
Share on other sites

மிகவும் அரிதான காயத்தினால் மரணம்: பிலிப் ஹியூஸிற்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்
 

 

பவுன்சர் பந்தில் அடிபட்டு இத்தகைய தீவிர காயம் ஏற்படுவது அரிதிலும் அரிது என்று பிலிப் ஹியூசிற்கு அறுவை சிகிச்சை செய்த செயிண்ட் வின்செண்ட் மருத்துவமனை மருத்துவர் டோனி கிராப்ஸ் தெரிவித்துள்ளார்.

பவுன்சர் பந்து நேராக அவரது முதுகெலும்பு தமனியில் சேதங்களை ஏற்படுத்தியது. மூளையுடன் தொடர்புடைய மிக முக்கிய தமனிகளில் இதுவும் ஒன்று. அடிபட்டவுடன் இந்த தமனி முறிந்தது. இதனால் கடுமையாக குருதிப்போக்கு ஏற்பட்டது. இதுவே அவரது மரணத்திற்குக் காரணம் என்றார். அவர்.

 

இது குறித்து டோனி கிராப்ஸ் கூறுவதாவது:

 

முதுகுத் தண்டையும், மூளையையும் பாதுகாக்கும் subarachnoid சவ்வுகளில் குருதிப்போக்கு ஏற்பட்டு பிலிப் ஹியூஸ் மரணமடைந்தார். இது மிகவும் அரிதாக நிகழ்வதே.

மொத்தமாகவே இதுவரை இது போன்ற நிலை 100 பேர்களுக்குத்தான் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கிரிக்கெட் பந்தில் அடிபட்டு இப்படி நிகழ்வது ஒரேஒரு முறை ஏற்பட்டுள்ளது.

 

பிலிப் ஹியூஸ் எங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டவுடன் சி.ஏ.டி. ஸ்கேன் எடுத்து மேற்கொண்டு சிகிச்சையைத் திட்டமிட்டோம்.

அடிபட்டதால் மூளையின் அந்தப் பகுதியில் அழுத்தத்தைக் குறைக்க சிகிச்சை அளிக்க முடிவெடுத்தோம். அதன் பிறகு மண்டை ஒட்டின் சில பகுதிகளை அகற்றி மூளை விரிவடைய வழிவகை செய்தோம், ஏனெனில் மூளை ரத்தக்கட்டினால் சுருங்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்.

அறுவை சிகிச்சை சுமார் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நடந்தது. அதன் பிறகு தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு அவரை மாற்றினோம்.

 

இவ்வகை விஷயங்களில் எங்களது அணுகுமுறை என்னவெனில் அவரை கோமாவில் ஆழ்த்துவது. ஏனெனில் மூளைக்கு ஓய்வு அளிக்கப்படவேண்டும். ஆனால் அதே சமயத்தில் உடலின் மற்ற செயல்பாடுகளை கண்காணித்து வந்தோம்.

24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை காத்திருந்தோம், எங்களால் முடிந்தவற்றைச் செய்து பார்த்தோம், ஆனால் முன்னேற்றம் ஏற்படவில்லை. கடைசியாக அவர் உயிர் பிரிந்தது” என்றார்

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/article6639808.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சோகமான செய்தி

கழுத்தின் மேல் பகுதியில் உள்ள vertebral என்ற நாடி வெடித்ததால் ரத்தம் மூளைக்குள் பரவி கோமா நிலைக்கு சென்றவர், நினைவு திரும்பாமலே நேற்று மரணமார். vertebral நாடி வெடிப்பு என்பது மிகச் சிலருக்கே உலகத்தில் நடந்திருக்கின்றது (100 பேர் வரை ).

ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

பிலிப் ஹியூக்ஸ்க்கு பவுன்சர் வீசிய பவுலர் அப்பாட்டுக்கு மனநல கவுன்சலிங்!

 

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஷெபீல்டு ஷீல்டு போட்டியில், தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அணிகள் மோதும் 4 நாள் ஆட்டம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வந்தது. தெற்கு ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்திருந்த நிலையில் நியூ சவுத் வேல்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்பாட் வீசிய அதிவேக பவுன்சர் பந்து, பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ் (25 வயது) தலையில் பலமாகத் தாக்கியது. ஹெல்மெட் அணிந்திருந்தாலும், படுகாயம் அடைந்த ஹியூஸ் களத்திலேயே சுருண்டு விழுந்தார்.

 

சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் இறந்தார். பிலிப் ஹியூக்ஸ்க்கு பவுன்சர் வீசிய பவுலர் அப்பாட்டுக்கு மனநல கவுன்சலிங்! இதனால் பிலிப் ஹியூஸ் குடும்பம், நண்பர்கள், கிரிக்கெட் உலகம் அதிர்ச்சியடைந்துள்ளதைபோலவே சீன் அப்பாட்டும் மிகவும் மனமுடைந்த நிலையில் உள்ளார். ஏனெனில் பந்து தலையில் தாக்கியதும் சில வினாடிகள் பிலிப் ஹியூக்ஸ் குனிந்தபடியே நின்று கொண்டிருந்தார். அப்போது அப்பாட் அவர் அருகே சென்று ஆறுதல் கூறினார். அப்போது மயக்கமடைந்த பிலிப் ஹியூக்ஸ் தலைகுப்புற பவுலரின் காலடியில் விழுந்தார். இந்த சம்பவம் அப்பாட் மனதில் அப்படியே பதிந்துள்ளது. அப்பாட் 22 வயதேயான இளைஞர் என்பதால் இந்த சம்பவத்தை இலகுவாக அவரால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே பதறியபடியே ஹியூக்ஸை தூக்கிச் சென்ற ஸ்ட்ரக்சரின் பின்னாலேயே ஓடிச் சென்றார். மருத்துவமனைக்கு சென்றும் நலம் விசாரித்தார்.

 

ஆனால் ஹியூக்ஸ் துரதிருஷ்டவசமாக இன்று உயிரிழந்துள்ள நிலையில் அப்பாட் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து அணியின் சார்பில் மனோதத்துவ நிபுணத்துவ டாக்டர்களை கொண்டு அப்பாட்டுக்கு கவுன்சலிங் அளிக்கப்படுகிறது. அன்றைய போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுமே கவுன்சலிங்கிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளரின் மனநிலை, அவர் எதற்காக பந்தை பவுன்சராக வீசினார் என்பவையெல்லாம் வேகப்பந்து வீச்சாளர்களுக்குதான் நன்கு தெரியும் என்பதால் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் அப்பாட்டுக்கு சப்போட் செய்துள்ளனர். கிளன் மெக்ராத், பிரெட்லீ, ஷான் பொல்லாக் போன்றோர், அப்பாட்டுக்காகவும் வேண்டிக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். அவர் சோர்ந்து விட கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/sean-abbott-receives-counselling-after-bowling-bouncer-that-struck-phillip-hughes-215777.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

26 வயதில், மிகவும் சோகமான மரணம்.

இரண்டு நாட்களுக்கு, முன்... இசைக் கலைஞன் இணைத்த  இந்தக் காணொளியில் அவர்,

திடீரென்று நிலத்தில் விழும் காட்சியை....

பார்த்த போது, மிகவும் கவலையாக இருந்தது.

Link to comment
Share on other sites

பவுன்சர் வீசிய சான் அபாட்டிற்கு பெருகும் ஆறுதல்கள்
 

 

பிலிப் ஹியூஸிற்கு பவுன்சர் வீசிய நியூசவுத் வேல்ஸ் பவுலர் சான் அபாட் துயரார்ந்த மனநிலையில் இருப்பதால் அவருக்கும் ஆறுதல்கள் குவிகின்றன.

ஒரு புறம் பிலிப் ஹியூஸ் மரணம் ஏற்படுத்திய சோகம், அதிர்ச்சியினால் அவரது குடும்பத்தினருக்கு அனுதாப மழை பொழிய, பவுன்சர் வீசிய சான் அபாட்டிற்கும் ஆறுதல்கள் பெருகியுள்ளன.

 

சமூக வலைத்தளங்களில் 'முற்றிலும் உடைந்து போன’ சான் அபோட்டிற்கு கிரிக்கெட் வட்டாரத்திலிருந்து ஆறுதல்கள் குவிந்து வருகின்றன.

சான் அபாட் வீசிய பவுன்சரை ஆடிய போது பிலிப் ஹியூஸின் பின் மண்டையை பந்து தாக்கியதால் ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் மரணமடைந்தார்.

அன்றைய தினத்தில் பிலிப் ஹியூஸ் நிலைகுலைந்து விழுந்த போது அவர் அருகில் மிகுந்த வேதனையோடு அவருக்கு உதவ வந்தவர் சான் அபாட்.

சான் அபாட் செயிண்ட் வின்செண்ட் மருத்துவமனைக்கு நேற்று வந்து பிலிப் ஹியூஸ் குடும்பத்தினரை சந்தித்தார். அவர் மருத்துவமனைக்கு வந்த போது கேப்டன் மைக்கேல் கிளார்க் அவருடன் நீண்ட நேரம் பேசி ஆறுதல் கூறினார். பிலிப் ஹியூசின் சகோதரி மீகனும் சான் அபாட்டிற்கு மன ஆறுதல் அளித்தார்.

நிச்சயம் சான் அபாட்டிற்கு ஹியூஸின் மரணம் பெரிய துர்கனவாகவே அமைந்திருக்கும். அவருக்கும் ஆறுதல் அளிக்க கிரிக்கெட் உலகம் கடமைப்பட்டுள்ளது என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

 

இதனிடையே முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பிலிப் ஹியூஸ் மரணத்திற்கு அஞ்சலி குறிப்பு வெளியிட்டதோடு, பவுன்சர் வீசிய சான் அபாட்டிற்கும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

சான் அபாட்டை அவர் இப்போது இருக்கும் துயாரார்ந்த மனநிலையில் விட்டுவிடக்கூடாது என்று பல கிரிக்கெட் வீரர்களும் ஆறுதலாக கருத்து தெரிவித்துள்ளனர்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6640287.ece

Link to comment
Share on other sites

பிலிப் ஹியுஸ் உயிரை பறித்த ‘பவுன்சர்’

 

சிட்னி: சர்வதேச கிரிக்கெட்டில் நேற்று கருப்பு நாளாக அமைந்தது. ‘பவுன்சர்’ பந்து தாக்கியதில் தலையில் பலத்த காய­ம­டைந்த பிலிப் ஹியுஸ், கடைசி வரை நினைவு திரும்பாமல் மரணம் அடைந்தார். இதனால், கி­ரிக்கெட் உலகம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.       

          

ஆஸ்திரேலியாவில் நடக்கும் முதல் தர போட்டி ‘ஷெபீல்டு ஷீல்டு’ தொடர். இதில் நியூ சவுத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலிய அணிகள் மோதின. அப்போது, சியான் அபாட் வீசிய ‘பவுன்சர்’, தெற்கு ஆஸ்­தி­­ரே­லிய வீரர் பிலிப் ஹியுஸ், 25, தலை­யில் பலமாக தாக்கியது. உடனடியாக நிலை குலைந்த இவர், நினைவு இழந்து கீழே சரிந்தார். செயின்ட் வின்சன்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்­லப்­பட்ட இவ­ருக்கு, தலையில் ‘ஆப்­ப­ரே­ஷன்’ செய்யப்­பட்­டது. மூளைக்கு ஏற்படும் அதிர்ச்சியை தடுக்கும் வகையில், தொடர்ந்து ‘கோமா’ நிலை­யில் வைக்­கப்பட்­டி­ருந்தார். 48 மணி நேரத்துக்குப் பின் தான் எதுவும் சொல்ல முடியும் என, டாக்டர்கள் தெரிவித்தனர். மூளையில் தொடர்ந்து ரத்தக் கசிவு இருந்த நிலையில், மருத்துவ கருவிகள் உதவியுடன் தாக்குப்பிடித்து வந்தார். ஆனால், இவரது உடல் நிலையில் எவ்வித முன்­னேற்­றமும் ஏற்­படவில்லை. சிகிச்சை பலன் அளிக்காத நிலையில், நினைவு திரும்பாமலேயே, நேற்று ஹியுஸ் மரணம் அடைந்தார்.                  

 

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி டாக்டர் பீட்டர் புருக்னர் கூறுகையில்,‘‘ஹியுஸ் மரணச் செய்தியை அறிவிப்பது சோகமாக உள்ளது. மிகவும் அரிதான விதத்தில், இவரது கழுத்து பகுதியில் பந்து தாக்கியுள்ளது. இதில், தமனியில் பிளவு ஏற்பட, மூளையில் அதிகமான ரத்தக் கசிவு ஏற்பட்டு மரணத்தை சந்தித்துள்ளார். கோமா நிலையில் வைக்கப்பட்டிருந்த இவருக்கு, கடைசி வரை நினைவு திரும்பவில்லை. இறக்கும் முன் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உடன் இருந்தனர்,’ என்றார். 

                 

ஹியுஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல், இவரது நெருங்கிய நண்பர் மற்றும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க், உடன் இருந்தார். ஹியுஸ் மரணத்தை அறிந்து கிளார்க், ஹாடின், வாட்சன் என, பலரும் பெரும் சோகத்துடன் காணப்பட்டனர். பின், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் உள்ளிட்ட சக வீரர்கள் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறினர். ஹியுசிற்கு ‘பவுன்சர்’ வீசிய அபாட்டும், கனத்த இதயத்துடன் கிளம்பினார்.

 

தடை வருமா            

ஆடுகளத்தில் ‘பிட்ச்’ ஆகாமல், நேரடியாக பேட்ஸ்மேனை நோக்கி வரும், ‘பீமர்’ வீச தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் ‘பவுன்சரையும்’ சேர்க்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. களத்தில் பாதியில் ‘பிட்ச்’ ஆகும் பந்து, நல்ல உயரத்தில் எழுந்து, பேட்ஸ்மேனின் தலை, மார்பை நோக்கி வரும்.

 

கடந்த 1932–33ல் நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய ஜாம்பவான்  பிராட்மேனை கட்டுப்படுத்த முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் திணறினர். பின் இவரது உடலை பதம் பார்க்கும் வகையில் பந்துவீசி மிரட்டினர். இந்த ‘பாடி லைன்’ தொடருக்கு பின் ‘பவுன்சர்’ பிரபலமானது. கடந்த 1970, 80 களில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் இதை அதிகம் பயன்படுத்தினர். இதனால், 1991ல் ஓவருக்கு ஒரு ‘பவுன்சர்’ வீச அனுமதித்த ஐ.சி.சி., 1994ல் இரண்டு என, மாற்றிக் கொண்டது. பிறகு, 2001ல் மீண்டும் ஒன்று என்றும், 2012ல் மறுபடியும் இரண்டு எனவும், ஐ.சி.சி., மாற்றிக் கொண்டுள்ளது.         

   

* பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின் களமிறங்கிய முதல் டெஸ்ட் தொடரில் சச்சின், வக்கார் யூனிஸ் ‘பவுன்சரில்’ காயம் அடைந்தார். 2009ல் வெஸ்ட் இண்டீசின் தில்லான் வீசியதில், கும்ளே தாடை உடைந்தது.           

 

* இதுபோல, பாண்டிங் (ஆஸி.,), லாரா (வெ.இண்டீஸ்), பிராட் (இங்கிலாந்து) என, பலர் காயம் அடைந்தாலும், சிகிச்சைக்குப் பின் தப்பினர். தற்போது, ஹியுஸ் மரணத்தால், ‘பீமரைப்’ போல, இந்த ‘பவுன்சரையும்’ தடை செய்வது குறித்து தீவிர விவாதம் எழுந்துள்ளது.       

     

144 ஆண்டில் 6 மரணம்           

பேட்டிங் செய்த போது பந்து தாக்கியதில், இதுவரை 6 பேர் மரணம் அடைந்துள்ளனர்.            

* முதன் முதலில் 1870, இங்கிலாந்து வீரர் ஜார்ஜ் சம்மர், 25, தலையில் காயம் அடைந்தார். முதலுதவி சிகிச்சைக்குப் பின், மருத்துவமனை செல்லாத இவர், வீட்டுக்கு திரும்பிய நான்காவது நாளில் மரணம் அடைந்தார்.        

   

* 1959ல் அப்துல் அஜிஸ், 18, (பாக்.,) மார்பில் பந்து பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.           

 

* இயான் போலே, 30, (இங்கிலாந்து), உள்ளூர் போட்டியில், கண்ணுக்கு கீழே மோசமாக அடிபட்டது. மருத்துவமனையில் மயக்க நிலையில் வைக்கப்பட்டு இருந்த இவர், மாரடைப்பில் மரணம் அடைந்தார்.           

 

* 2013ல் பாகிஸ்தானின் ஜுல்பிகர் பட்டி, 22, மார்பில் பந்து தாக்கி உயிரிழந்தார்.     

      

* இதே ஆண்டில் தென் ஆப்ரிக்காவின் ராண்டல், 32, உள்ளூர் போட்டியில் தலையில் பந்து தாக்கி மரணம் அடைந்தார்.    

       

* தற்போது 6வது வீரராக ஹியுஸ், தலையில் பந்து தாக்கி, இரு நாட்களுக்குப் பின் மரணம் அடைந்துள்ளார்.      

      

லாம்பா சோகம்

கடந்த 1998ல் இந்திய வீரர் ராமன் லாம்பா, 38, வங்கதேச உள்ளூர் தொடரில், பீல்டிங் செய்த போது, பந்து இவரது தலையில் பலமாக தாக்கியது. கோமா நிலைக்கு சென்ற இவர், 3 நாட்களுக்குப் பின் மரணம் அடைந்தார்.     

 

‘ஆம்புலன்ஸ்’ தாமதம் காரணமா     

ஹியுஸ் அடிபட்ட 6வது நிமிடத்தில், மதியம் 2.29 மணிக்கு அழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ், வர தாமதம் ஆனதால் (2.53க்குத் வந்தது). அடுத்து 8வது நிமிடம் (2.37 மணி) அழைக்கப்பட்ட மற்றொரு ஆம்புலன்ஸ் 2.44க்கு வந்து விட்டது. ஒரு வழியாக ஹியுஸ் அடிபட்டு, ஒரு மணி நேரத்துக்குப் (3.30 மணி) பின் தான், மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். மாலை 4.15 மணிக்கு அவசர ஆப்பரேஷன் செய்யப்பட்டது. ஆஸ்திரேலியாவில் அவசர அழைப்பு விடப்பட்ட, 8 நிமிடத்தில் குறிப்பிட்ட இடத்துக்கு ஆம்புலன்ஸ் வர வேண்டும். இங்கு, முதல் ஆம்புலன்ஸ் வர 23 நிமிடம் தாமதம் ஆனது. இது கூட ஹியுஸ், மரணத்துக்கு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

26க்கு முன் வந்த எமன்

ஹியுசின்  26வது பிறந்த நாள் நவ. 30ல் வருகிறது. இதுவரை முதல் தர போட்டிகளில் 26 சதம் அடித்துள்ள இவர், நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் எடுத்திருந்தார். இன்னும் சில நாட்களில் தனது பிறந்த நாள் வரவுள்ள நிலையில், தொடர்ந்து அசத்தி, 27வது முதல் தர சதம் அடிக்க திட்டமிட்டு இருந்தாராம். ஆனால், துரதிருஷ்டவசமாக பந்து தாக்கி, மரணம் அடைந்தார்.     

      

முதல் டெஸ்ட் நடக்குமா           

ஹியுஸ் மரணத்தை அடுத்து, ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த உள்ளூர் போட்டிகள் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டன. ஹியுஸ் அடிபட்ட போட்டியில் பங்கேற்ற டேவிட் வார்னர், வாட்சன், ஹாடின் உள்ளிட்ட வீரர்கள், அதிர்ச்சியில் உள்ளனர்.            

இவர்கள் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் (டிச. 4) போட்டிக்கு, மனதளவில் தயாராக முடியுமா எனத் தெரியவில்லை. இதனால்,  பிரிஸ்பேன் டெஸ்ட் துவங்குவது தள்ளிப் போகும் என்று தெரிகிறது.      

 

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறுகையில்,‘‘ முதல் டெஸ்ட் துவங்க இன்னும் ஒரு வாரம் உள்ளது என்றாலும், வீரர்கள் யாரும் விளையாடும் மனநிலையில் இருப்பர் என்று உறுதியாக சொல்ல முடியாது. இதனால், முதல் டெஸட் போட்டியை பிறகு நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என, பி.சி.சி.ஐ., மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு இணைந்து முடிவு செய்ய வேண்டும்,’’ என்றார்.  

    

சார்ஜா டெஸ்ட் ரத்து

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் சார்ஜாவில் நடக்கிறது. ஹியுஸ் மரணம் காரணமாக, நேற்று நடக்க இருந்த இரண்டாவது நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதற்குப்பதில், கூடுதலாக ஒருநாள் போட்டி நடக்கும்.   

        

மறக்க மாட்டேன்           

ஹியுஸ் மரணம் என்பது மிகவும் பயங்கரமான செய்தி. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.           

ஹியுஸ் மரணம் குறித்து கிரிக்கெட் வீரர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதன் விவரம்: 

          

கோஹ்லி: ஹியுஸ் மரணம் அடைந்தது, மிகவும் அதிர்ச்சி, சோகமான செய்தி. கிரிக்கெட்டில் இது மிக மோசமான நாள்.     

      

ரோகித் சர்மா: கிரிக்கெட் உலகின் சோகமான நாள், அவரது ஆன்மா சாந்தியடையவும், அபாட்டுக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.   

         

டேவிட் வார்னர்: ஹியுசை நான் இழந்து விட்டேன், மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான உன்னை, எனது வாழ்க்கையில் எப்போதும் மறக்க மாட்டேன்.  

         

பிரட் லீ: ஹியுஸ் இழப்பு குறித்து விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஹியுஸ் மரணம் என்ற செய்தியால் இதயமே அதிர்ந்து விட்டது. இது கறுப்பு நாள், ஹியுசை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.     

      

இதேபோல, சவுரவ் கங்குலி (இந்தியா), ரெய்னா, யுவராஜ் சிங், பவுச்சர் (தெ.ஆப்.,), ஜெயவர்தனா (இலங்கை), கெய்ல் (வெ.இண்டீஸ்), அப்ரிதி (பாக்.,) என, பலரும் இரங்கல் தெரிவித்தனர்.  

         

பிரதமர் இரங்கல்           

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,‘ ஏராளமான கனவுகளுடன் இருந்த இளம் வீரர் ஹியுஸ். இவரது மரணம் கிரிக்கெட்டுக்கு சோக நாள். கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போதே, காயத்தால் மரணம் ஏற்பட்டது அதிர்ச்சியாக உள்ளது,’ என, தெரிவித்துள்ளார்.

 

இந்திய அணி இரங்கல்           

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி வெளியிட்ட இரங்கல் செய்தியில்,‘ எங்கள் மத்தியில் இருந்து பிரிந்து சென்ற ஹியுஸ், குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். துரதிருஷ்டவசமான இந்த சம்பவத்தை சமாளித்து, மீண்டு வர தேவையான வலிமையை தருமாறு, இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்,’ என, தெரிவிக்கப்பட்டது. 

         

1998க்குப் பின்...           

கடந்த 1998ல் இந்திய வீரர் ராமன் லாம்பா, 38, வங்கதேச உள்ளூர் தொடரில் விளையாடினார். ‘பீல்டிங்’ செய்த போது, பந்து இவரது தலையில் தாக்கியதில், மூன்று நாட்களுக்குப் பின், மரணம் அடைந்தார். இதன் பின், 16 ஆண்டுகள் கழித்து இப்போது, ஹியுஸ் மரணம் அடைந்துள்ளார்.     

       

ஐ.சி.சி., வருத்தம்           

ஐ.சி.சி., தலைவர் சீனிவாசன் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,‘ ஹியுஸ் மரணச் செய்தி கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம். இவரை இழந்து வாடும் கிரிக்கெட் உலகிற்கும், அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,’’ என, தெரிவித்துள்ளார்.           

துரதிருஷ்டவசமானது          

 

கடந்த 1962ல் வெஸ்ட் இண்டீசில் பார்படாஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய வீரர் நாரி கான்டிராக்டர், 80, சார்லியே கிரிப்த் வீசிய வேகப்பந்துவீச்சில் தலையில் பலத்த காயம் அடைந்தார். இதில் இருந்து ஒரு வழியாக மீண்ட போதிலும், மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பவில்லை.      

      

தற்போது ஹியுஸ் மரணம் குறித்து கான்டிராக்டர் கூறுகையில்,‘‘ இது மிகவும் துரதிருஷ்டவசமானது, சோகமானது,’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2014/11/1417107325/PhilpHughesAustraliaCricketDiedBouncer.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைக் காலங்களில் என்னை மிகவும் பாதித்த மரணங்களில் இதுவும் ஒன்று!

 

இருபத்தைந்து வயது மட்டும்... ஒரு நாளுக்கு முன்னால், வாழ்க்கை என்னும் பாய்... உன் முன்னால்  நீள விரிந்து கிடந்தது... ஒரே நொடியில்.. நிழலாய் மறைந்தது!

 

ஆழ்ந்த அனுதாபங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். எப்படியும் உயிர் தப்பிவிடுவார் என்று நினைத்திருந்தேன். கிரிக்கட்டை இனி ரசித்துப் பார்க்கமுடியுமா தெரியவில்லை.

Link to comment
Share on other sites

பிலிப் ஹியூஸ் கடந்து வந்த பாதை

4kxtgy.jpg
முதல் படம்: ஆஸ்திரேலியா கேப்டன் கிளார்க் கதறி அழுத காட்சி இரண்டாவது படம்(வலது) : ஹியூஸின் பெற்றோர்கள் மூன்றாவது படம் (கீழே) : ஹியூஸுக்கு பவுன்சர் வீசிய சீன் அபோட் அழுது கொண்டே மருத்துவமனையிலிருந்து வெளியேறுகிறார்

நவம்பர் 30, 1988

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள மேக்ஸ்வில்லியில் பிறந்தார். முழுப் பெயர் பிலிப் ஜோயல் ஹியூஸ

 

நவம்பர் 2007

18 வயதில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். முதல் போட்டியில் டாஸ்மானியாவுக்கு எதிராக 51 ரன்கள் எடுத்தார்.

 

பிப்ரவரி 2008

புரா கோப்பை இறுதிப் போட்டியில் விக்டோரியா அணிக்கு எதிராக 116 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். முதல்தர கிரிக்கெட்டில் ஹியூஸ் அடித்த முதல் சதம் இது. இதன்மூலம் செப்பீல்ட் ஷீல்ட்/புரா கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த இளம் வீரர் (19 வயது) என்ற பெருமையைப் பெற்றார்.

 

பிப்ரவரி-மார்ச் 2009

மேத்யூ ஹேடன் ஓய்வுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக உருவெடுத்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அறிமுக டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் டக்அவுட்டான ஹியூஸ், அடுத்த இன்னிங்ஸில் 75 ரன்கள் எடுத்தார்.

டர்பனில் ஆடிய இரண்டாவது டெஸ்டில், இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்தார். இதன்மூலம் ஒரு டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த இளம் வீரர் (20 வயது) என்ற சாதனையைப் படைத்தார்.

 

ஜூலை 2009

அமர்க்களமாக ஆரம்பித்த ஹியூஸின் டெஸ்ட் வாழ்க்கை ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பின்னடைவை சந்தித்தது. இங்கிலாந்தில் நடந்த முதல் இரண்டு ஆஷஸ் டெஸ்டுகளில் சரியாக ஆடாததால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். பிறகு 2010 ஆரம்பத்தில் மீண்டும் டெஸ்ட் அணிக்குத் தேர்வானார்.

 

டிசம்பர் 2010

ஆஷஸ் தொடரில், மூன்று டெஸ்டுகளில் ஆட வாய்ப்பு கிடைத்தது.

ஆகஸ்ட்-டிசம்பர் 2011

இலங்கை சுற்றுப் பயணத்தில் 3-வது டெஸ்டில் சதம் அடித்தார் ஹியூஸ். ஆனால் டிசம்பரில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்டுகளிலும் சரியாக ஆடாததால் பின்னர் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான தொடரில் சேர்க்கப்படவில்லை.

 

டிசம்பர் 2012

ஓர் ஆண்டுக்குப் பிறகு இங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்தார். 3 டெஸ்டுகளில் இரண்டில் 85 ரன்களுக்கு மேல் எடுத்து இந்திய சுற்றுப் பயணத்துக்குத் தயாரானார்.

 

ஜனவரி 2013

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார் ஹியூஸ். அதில் 112 ரன்கள் குவித்த ஹியூஸ் அறிமுகப் போட்டியில் சதம் அடித்த முதல் ஆஸ்திரேலியர் என்ற சாதனையைப் படைத்தார். (இதுவரை மொத்தம் 9 வீரர்கள்தான் அறிமுக ஒருநாள் போட்டியில் சதம் அடித்துள்ளனர்.)

 

பிப்ரவரி – மார்ச் 2013

இந்தியாவில் மிகவும் தடுமாறினார். மொஹாலி டெஸ்டில் மட்டும் அதிகபட்சமாக 69 ரன்கள் எடுத்தார்.

 

ஜூலை 2013

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ட்ரென்ட்பிரிட்ஜ் டெஸ்டில் 81 ரன்கள் எடுத்தார். அடுத்த டெஸ்டில் சரியாக ஆடாததால் 3-வது முறையாக அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

 

ஜூலை 2014

லிஸ்ட் ஏ ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து 200 ரன்களைக் கடந்தார்.

 

ஆகஸ்ட் 2014

முதல் தர போட்டியில் 25 வயதில் அதிக ரன்களை எடுத்த ஆஸ்திரேலியர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார் ஹுயூஸ். அவருக்கு வளமான எதிர்காலம் உண்டு. இன்னும் பத்து வருடங்கள் கழித்து ஆஸ்திரேலிய அணிக்காக 100 டெஸ்டுகள் விளையாடிய ஹியூஸ் பற்றி நாம் பேசத்தான் போகிறோம் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் பேட்டி கொடுத்தார். இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஹியூஸ் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகியிருந்தன.

 

நவம்பர் 2014

ஆஸ்திரேலியாவில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது பவுன்சர் பந்தை அடிக்க முயன்ற ஹியூஸூக்கு கழுத்தில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது. பலமணி நேரப் போராட்டங்களுக்குப் பிறகு மரணம் அடைந்தார்

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88/article6642799.ece

Link to comment
Share on other sites

பிலிப் ஹியூக்ஸின் நிறைவேறாத ஆசை
333kie8.jpg

 

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் தந்தையின் வாழைத்தோட்டத்துடன், பெரிய மாட்டுப்பண்ணை வைக்க வேண்டும் என்பதே பிலிப் ஹியூக்ஸின் ஆசையாக இருந்துள்ளது.

ஆவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரேக்- இத்தாலியைச் சேர்ந்த  விர்ஜினியா தம்பதியின் மகனாக 1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம்திகதி அவுஸ்திரேலியாவின் மாக்ஸ்வில்லே என்ற சிறிய நகரத்தில் பிறந்தார்.

 

பிலிப் ஹியூக்ஸின் தந்தை கிரேக் அவுஸ்திரேலியாவில் வாழைத்தோட்டம் வைத்து வாழைப்பழ உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்.

தனது தந்தையின் வாழைத் தோட்டத்திற்கு ஹியூக்ஸ் அடிக்கடி செல்வார். அப்போதெல்லாம் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தந்தையின் வாழைத்தோட்டத்துடன், பெரிய மாட்டுப்பண்ணையும் வைக்க ஆசைப்படுவதாகவும், அதுவே தனது கனவு என்றும் கூறுவார். ஆனால் விதி அவரது வாழ்க்கையில் வேறு விதமாக விளையாடி விட்டது.

 

உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி திறமையை வளர்த்த பிலிப் ஹியூக்ஸ் 5 ஆண்டுக்கு முன்பு அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடித்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஜோகன்ஸ்பேர்க்கில் இடம்பெற்ற டெஸ்டின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். அவர் அவுஸ்திரேலிய அணிக்காக பங்கேற்ற 408 ஆவது டெஸ்ட் வீரர் ஆவார். அந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் 4 ஆவது பந்தில் டக்-அவுட் ஆன ஹியூக்ஸ் 2ஆவது இன்னிங்சில் 75 ஓட்டங்களை எடுத்தார்.

 

இதைத் தொடர்ந்து டேர்பனில் இடம்பெற்ற 2ஆவது டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் (115 ,160 ) சதம் விளாசி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.
அப்போது அவரது வயது 20 ஆண்டு 96 நாட்கள். டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த இளம் வீரர் என்ற புதிய உலக சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

ஆனாலும் அவரால் அணியில் நிலையான இடத்தைப் பிடிக்க முடியவில்லை. அணியில் இடம் பிடிப்பதும், வெளியேற்றப்படுவதுமாக இருந்தார்.
கடந்த மாதம் 12 ஆம் திகதி டுபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் பங்கேற்றதே அவர் விளையாடிய இறுதி சர்வதேச போட்டி. அதில் அவர் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

 

பிலிப் ஹியூக்ஸ் இதுவரை 26 டெஸ்டில் விளையாடி 3 சதம், 7 அரைச்சதம் உட்பட 1,535 ஓட்டங்களையும் (சராசரி 32.65), 25 ஒரு நாள் போட்டிகளில் 2 சதம், 4 அரைசதத்துடன் 826 ஓட்டங்களையும் (சராசரி 35.91 ), 20 ஓவர் போட்டியில் ஒன்றில் பங்கேற்று 6 ஓட்டங்களையும் எடுத்துள்ளார். இதே போல் முதல்தர கிரிக்கெட் போட்டியில் 114 போட்டிகளில் 26 சதத்துடன் 9,023 ஓட்டங்களை குவித்துள்ளார்.

ஹியூக்ஸ் எப்போதும் பவுன்சர் எனப்படும் எகிறும் பந்துகளை சமாளிப்பதில் தடுமாறுவது உண்டு. தொடர்ந்து பவுன்சர் பந்து வீச்சுக்கு திணறியதால் ஒரு முறை ஆஷஸ் தொடரில் இருந்தும் கழற்றி விடப்பட்டார். இறுதியில் அப்படிப்பட்ட ஒரு பவுன்சர் பந்தே அவரது உயிரைக் குடித்து விட்டது.

 

http://www.virakesari.lk/articles/2014/11/28/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.