Jump to content

பிறவிப் பகைவர்கள் – பாலஸ்தீனம், இஸ்ரேல்


Athavan CH

Recommended Posts

palestine_2220060f.jpg
இஸ்ரேல் - பாலஸ்தீன வரைபடம்
 
யூதர்கள் என்றவுடனே உங்கள் நினைவுக்கு வருவது என்ன?
 
அந்த இனத்தைக் கூண்டோடு (குறைந்தபட்சம் ஜெர்மனி யிலிருந்து) ஒழிப்பதற்கு ஹிட்லர் எடுத்துக் கொண்ட முயற்சிகளா? பல நாடுகளுக்குச் சிதறினார்கள் அவர்கள்.
 
உலகின் பல பகுதிகளிலும் யூதர்கள் பரவிக் கிடந்தாலும் அவர்கள் தங்கள் சிறப்பான பங்களிப்பைப் பல விதங்களிலும் உலகிற்கு அளிக்கத் தவறவில்லை. (விஞ்ஞானி ஐன்ஸ்டீன், கம்யூனிஸத் தந்தை கார்ல் மார்க்ஸ், எழுத்தாளர்கள் சால் பெல்லோ மற்றும் போரிஸ் பாஸ்டர்நாக், மதியூகி கிஸிங்கர் ஆகியோர் மறக்கக் கூடியவர்களா?)
 
அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் மிகவும் செல்வாக்கான பதவிகளில் யூத இனத்தவர் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். இவர்களுக்கெல்லாம் நெஞ்சு நிறைய ஏக்கம் - ‘’நாம் என்னதான் செல்வாக்கோடு இங்கு இருந்தாலும் நமக்கென்று ஒரு தாய்நாடு இல்லையே!’’. சிந்தனையோடு நின்றுவிடாமல் செயலில் காட்ட முடிவெடுத் தார்கள். ‘நமக்கென்று ஒரு நாடு. அது எங்கே இருக்கலாம்?’. அவர்களின் பார்வை பாலஸ்தீனத்தின் மீது படிந்தது.
 
அத்தனை நாடுகளையும் விட்டு பாலஸ்தீனத்தின்மீது ஏன் பதிய வேண்டும்?
 
அது ஒரு நாடாக அப்போது இல்லாததினாலா? (இப்போதும் அது ஒரு நாடா என்று கேள்வி எழுப்புபவர்கள் உண்டு. இதைப் பிறகு அலசுவோம்). அதைவிட அழுத்தமான காரணம் ஒன்று இருந்தது.
 
ஒரு காலத்தில் யூதர்கள் தங்களுக்கென்று ஒரு மத மற்றும் தேசிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டது பாலஸ்தீனத்தில்தான். ‘’யூதர்களின் புனிதத் தந்தை’ எனப்படும் ஏபிரஹாம் அங்கு வாழ்ந்திருக்கிறார். ரோமானிய அரசர்கள் யூதர்களை அங்கிருந்து ஓட ஒட விரட்டினார்கள்’’ என்கிறது சரித்திரம். எனவே தங்களது ஒருகாலத்திய தாய்நாடான பாலஸ்தீனத்தைக் குறி வைக்கத் தொடங்கினார்கள் செல்வாக்கு மிக்க யூதர்கள்.
 
ஐரோப்பாவில் உள்ள யூதர் கள் ஒன்று சேர்ந்து ஏற்கனவே ‘’ஜியோனிசம்’’ என்ற கொள்கை அமைப்பை உருவாக்கியிருந்தார்கள். ‘’பாலஸ்தீனியர்கள் வசிக்கும் பகுதிதான் எங்கள் தாயகம். அப்படித்தான் பைபிள் (பழைய ஏற்பாடு) கூறுகிறது. எனவே அந்தப் பகுதி யூதர்களின் சொந்த நாடாக வேண்டும்’’ என்று முடிவெடுத்த அவர்கள் சாரிசாரியாக பாலஸ்தீனத்தில் குடியேறத் தொடங்கினார்கள்.
 
யூதர்களின் வாதம் சரிதான். ஆனால் அதெல்லாம் ரொம்ப ரொம்பப் பழமைவாதம். அதற்குப் பிறகு சரித்திரம் பாலஸ்தீனத்தில் பல மாறுதல்களைக் கொண்டு வந்துவிட்டிருந்தது. பின்னாளில் அரபு மன்னர்கள் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றிவிட, பிறகு பல நூற்றாண்டுகளாக அங்கு முஸ்லிம்கள் மெஜாரிட்டியினராக இருந்து வந்தார்கள்.
 
எப்படியோ, வல்லரசு நாடுகள் யூதர்களின் தனிநாடு ஏக்கத்தைப் போக்க முன்வந்தன. 1947ல் ஐ.நா. ஒரு திட்டத்தை அறிவித்தது ‘’பாலஸ்தீனம் இரண்டாக்கப்பட வேண்டும். ஒரு பகுதி அரபு மக்களுக்கு. மற்றொன்று யூத இனத்தவருக்கு’’.
 
அதற்கு அடுத்த வருடமே, மேற்கத்திய நாடுகளின் பெரும் ஆதரவோடு, யூதர்களுக்காக ஒரு தனிநாடு உருவானது - அதுதான் இஸ்ரேல்!
 
அது எப்படி ஒரு நாட்டின் ஒரு பகுதியை ஐ.நா. துண்டாடும் என்றால் அதற்கான விளக்கத்தை ஐ.நா. இப்படி அளித்தது (வெளிப்படையாக அல்ல, வல்லரசுகளின் மூலமாக).
 
பாலஸ்தீனம் என்பது ஒரு பூகோளப் பகுதியைக் குறிப்பதாக மட்டுமே 1948 வரை இருந்தது (வெஸ்ட் இன்டீஸ், மத்திய கிழக்கு என்றெல்லாம் சொல்வது போல). மத்திய தரைக் கடலுக்கும் ஜோர்டான் நதிக்கும் இடைப்பட்ட பகுதியைத்தான் பாலஸ்தீனம் என்று அழைத்தார்கள்.
 
முதலாம் உலகப் போருக்குப் பிறகு ‘லீக் ஆஃப் நேஷன்ஸின்’ (அந்த நாளைய ஐ.நா. சபை) ஆணைப்படி 1922லிருந்து பாலஸ்தீனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு பிரிட்டனுக்கு அளிக்கப்பட்டது. (இதனால் அந்தப் பகுதி ‘பிரிட்டிஷ் பாலஸ்தீனம்’ என்றும் அழைக்கப்பட்டது). தனது இந்த ஆணையை முடிவுக்குக் கொண்டுவரும் விதத்தில் தான் ஐ.நா. அந்தப் பகுதியை இரண்டாகப் பிரித்தது.
 
அப்படிப் பிரித்தபோதே அங்கு சிக்கல்கள் முளைக்க வாய்ப்பு உண்டு என்பது சம்பந்தப்பட்ட எல்லோருக்குமே துல்லியமாகத் தெரிந்திருந்தது. அதனாலதான் ஜெருசலேம்-பெத்லகேம் அடங்கிய பகுதியைப் ‘பாதுகாக்கப்பட்ட பகுதி’ என்று அறிவித்து , அந்தச் சிறிய பகுதி மட்டும் தன்னால் நிர்வகிக்கப்படும் என்றும் ஐ.நா. தெரிவித்தது.
 
ஐ.நா.வின் தீர்மானம் என்னவோ மிக விளக்கமாகத்தான் இருந்தது. எந்த நாட்டுக்கு எந்தப் பகுதி என்று எல்லைக்கோடுகளையெல்லாம் வரைந்து கொடுத்தது. பிரிட்டிஷ் பாலஸ்தீனத்தின் நடுவே ஒரு கோடு போட்டுக் கிழித்தது போல் இல்லை இந்த எல்லைக்கோடு. ஆங்காங்கே பாலஸ்தீனம், நடு நடுவே இஸ்ரேல் என்கிற மாதிரி தான் இருந்தது. முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகள் பாலஸ்தீனத்துக்கு, யூதர்கள் அதிகம் உள்ள பகுதிகள் இஸ்ரேலுக்கு என்று பிரித்திருந்தார்கள்.
 
வெளியே இஸ்ரேலின் பகுதி, அதற்குள்ளே பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி, அதற்கும் உள்ளாக ஜெருசலேம் என்று அமைந்திருந்தது. 1948 ஆகஸ்ட்டுக்குள் பிரிட்டன் தன் ராணுவம் உள்ளிட்ட நிர்வாகத்தை வாபஸ் பெறவேண்டும். அதே ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் புதிய நாடுகள் உருவாக வேண்டும். இதுதான் ஐ.நா.வின் நிபந்தனை.
 
மேற்கத்திய வல்லரசுகளும் யூதர்களும் சிரித்து மகிழ்ந்திருக்க வேண்டும். ஆனால் மிக அதிகமாக அப்போது சிரித்தது விதியாகத்தான் இருக்க வேண்டும்.
 
(இன்னும் வரும்..)
 
Link to comment
Share on other sites

பிறவிப் பகைவர்கள் - பாலஸ்தீனம், இஸ்ரேல் 2

 

palestine_2221359f.jpg

டெம்பிள் மவுண்ட்

இஸ்ரேலைப் பற்றி ஒரு தனித் தொடர், பாலஸ்தீனத்தைப் பற்றி ஒரு தனித் தொடர் என்று எழுதுவது வீண் வேலை. அந்த அளவுக்கு இவை ஒன்றோடொன்று பின்னிப் படர்ந்திருக்கின்றன. இரண்டும் கடும் எதிரிகள். ஆனால் ஒன்றின் சரித்திரத்தில் இன்னொன்றுக்குப் பெரும் பங்கு உண்டு. சொல்லப்போனால் அதனால்தான் பகைமையே. அதனால்தான் இரண்டு நாடுகளும் ஒரு சேரவே இத்தொடரில் பயணம் செய்கின்றன.

 
வரலாறு, அரசியல் என்பதோடு நிறுத்திக் கொள்ள முடியாமால் மதம் என்ற மிக முக்கியமான கோணம் இந்த நாடுகளின் பகைமைக்கு ஒரு முக்கிய அடித்தளமாக இருக்கிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் வெளியாகும்போதெல்லாம் அதை அரசியல் பகைமை போலவே நாளேடுகள் வெளியிட்டாலும், நீறுபூத்த நெருப்பு போல இதன் அடித்தளமாக இருப்பது மதம்.
 
யூதர்களின் மதமான ஜூடாயிஸம் மிகப் பழமையானது. மத்திய கிழக்குப்பகுதியில் 3,500 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. தூய்மை மற்றும் நல்லொழுக்கத்துக்கு உதாரணமாக இருக்கத் தகுந்தவர்களைப் படைக்க வேண்டும் என்று எண்ணித்தான் இறைவன் யூதர்களைப் படைத்தார் (என்று அவர்கள் நம்புகிறார்கள்).
 
ஏபிரகாமை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கைகளில் வளர்ந்த மதங்கள்தான் யூத மதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மூன்றுமே. ஆனால் காலப் போக்கில் இவை ஒன்றுக்கொன்று கடுமையான எதிரிகள் ஆயின. இப்போது இஸ்ரேலின் வசம் உள்ள ஜெருசலேம் இந்தப் பகைமைக்கு மையப் புள்ளியாகிவிட்டது. மூன்று மதங்களின் முக்கிய சங்கமங்கள் நடைபெறும் நகரம் ஜெருசலேம்.
 
ஜெருசலேம் - இது பாலஸ்தீனத்தின் தலைநகர். ஆனால் இதை ஏற்றுக்கொள்ள இஸ்ரேல் தயாரில்லை. ஜெருசலேம் என்பதை ‘எதிரணியினரின்’ தலைநகராக ஏற்றுக் கொள்வதற்கு மட்டுமல்ல, பாலஸ்தீனத்தை ஓர் அதிகாரபூர்வமான நாடாக ஏற்றுக் கொள்ளவே இஸ்ரேல் தயாரில்லை!
 
யூதர்களுக்கு மிக முக்கியமான புனிதத்தலம் ஜெருசலேம். வெளிநாடுகளில் இருக்கும் யூதர்கள்கூட பிரார்த்தனை செய்யும்போது இந்த நகரம் இருக்கும் திசையை நோக்கிதான் வணங்குவார்கள். கி.மு. பத்தாம் நூற்றாண்டிலிருந்தே இந்த நகரில் யூதர்கள் அதிக அளவில் வசித்தனர். இந்த நகரில் உள்ள ஆலயம் (டெம்பிள் மவுண்ட்) யூதர்களுக்கு மிக முக்கியமானது. தங்கள் விவசாய விளைச்சலில் பத்தில் ஒரு பங்கை இந்த ஆலயத்துக்குக் கொண்டு வந்து (சமைத்தோ அப்படியேவோ) உண்ண வேண்டும் என்கிறது யூதர்களின் புனித நூல். அதிக அளவு என்றால் பிறருடன் பங்கிட்டுக் கொள்ளலாம்.
 
மன்னன் சாலமனால் கி.மு. 957ல் எழுப்பப்பட்டது இந்த ஆலயம். யூதர்கள் பலி செலுத்தும் இடம் என்றால் அதிகாரபூர்வமாக இது ஒன்றுதான். சரித்திரத்தில் இந்த ஆலயம் முழுவதுமாக இடிக்கப்படுவதும், பிரமாதமாக மீண்டும் எழுப்பப்படுவதும், மீண்டும் இடிக்கப்படுவதும், உருவாக்கப்படுவதும் என்று பலமுறை நடந்திருக்கிறது. என்றாலும் புனிதத் தலம், புனித ஆலயம் என்கிற ஆழமான நம்பிக்கை யூதர்களுக்கு வேரோடு இருப்பதால் ஜெருசலேம் நகரை அவர்களால் வேறுபடுத்திப் பார்க்கவே முடியவில்லை.
 
அதே சமயம் கிறிஸ்தவ மதமும் ஜெருசலேம் நகரோடு நீரும் செம்புலச் சேறும்போல கலந்துள்ளது. குழந்தையாக இருக்கும் போதே ஏசுநாதர் அழைத்துவரப்பட்ட இடம் இது. ஜெருசலேம் நகரில் நடைபெற்ற திருவிழாக்களை ஏசுநாதர் கண்டதாகக் கூறுகிறது பைபிள். இங்குள்ள புனித ஆலயத்தை (யூதர்கள் கொண்டாடும் அதே ஆலயம் தான்!) ஏசுநாதர் சுத்தம் செய்திருக்கிறார்.
 
ஏசுநாதரின் இறுதி உணவு மிகப் பிரபலமானது. அது நடைபெற்றது இந்த நகரில்தான். ஏசுநாதர் மீதான வழக்கு நடைபெற்றதும் இங்குதான். அவர் சிலுவையில் அறையப்பட்டது ஜெருசலேம் நகருக்கு மிக அருகிலுள்ள ஒரு பகுதியில். அவர் புதைக்கப்பட்ட இடமும், உயிரோடு மீண்டு வந்த இடமும்கூட ஜெருசலேம்தான்.
 
தொடக்கத்தில் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்கள் ரோம் சாம்ராஜ்ய மன்னனால் கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள். அதாவது கொலை செய்யப்பட்டார்கள். எனவே கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொள்ள மீன்போல விரல்களால் ஒரு சங்கேதக் குறியைப் பகிர்ந்து கொண்டார்கள்.
 
நாளடைவில் கிறிஸ்தவ மதம் பிரபலமடைந்தது. எந்த அளவுக்கு என்றால், ரோமானியச் சக்ரவர்த்தி கான்ஸ்டன்டெயின் ‘‘கிறிஸ்தவ மதம்தான் இனி என்னுடைய மதம்’’ என்று சொல்லும் அளவுக்கு இதற்கு அடிகோலியதும் ஜெருசலேம்தான். தூய மேரியின் நந்தவனமும் ஜெருசலேம் ஆலயத்தைச் சுற்றி அமைந்திருப்பதாகக் கருதுகிறார்கள் கிறிஸ்தவர்கள்.
 
பைபிளின்படி மன்னன் டேவிட் தான் இஸ்ரவேலின் (அப்போதைய இஸ்ரேலின் பெயர்) தேசத்துக்குத் தலைநகராக ஜெருசலேத்தை நிர்மாணித்தான். அவன் மகன் மன்னன் சாலமன் அங்கு முதல் ஆலயத்தை எழுப்பினான். உலகின் மற்றொரு பெரிய மதமான இஸ்லாமுக்கும் ஜெருசலேம் நகர் என்றால் ரொம்ப ஸ்பெஷல்தான். நபிகள் நாயகம் ஓர் இரவில் ஜெருசலேம் நகருக்கு விஜயம் செய்ததிலிருந்து முஸ்லிம் மக்களிடையே தனிச்சிறப்பு பெற்றது ஜெருசலேம்.
 
ஜெருசலேம் நகரிலுள்ள ஒரு பாறையின் மீது நின்றபடிதான் முகம்மது நபிகள் சொர்க்கத்துக்குச் சென்றாராம். குரானில் ஜெருசலேம் நகர் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும் அதன் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வரும் விளக்கங்கள் ஜெருசலேம் நகரைக் குறிப்பிடுவதாகவே உள்ளனவாம். ‘’மிகத் தொலைவிலுள்ள மசூதி என்று குரானில் குறிக்கப்படுவது ஜெருசலேம் நகரிலுள்ள மசூதிதான். அங்கு தான் இஸ்லாமின் பிற தூதர்களை அவர் சந்தித்தார். ஏபிரஹாம், டேவிட், சாலமன் போன்று ஜெருசலேம் நகரோடு தொடர்பு கொண்டவர்கள் முஸ்லிம்களுக்கும் முக்கியமானவர்கள்தான்.
 
அது மட்டுமா?
 
(இன்னும் வரும்..) 
 
Link to comment
Share on other sites

பிறவிப் பகைவர்கள் - பாலஸ்தீனம், இஸ்ரேல் 3

palestine_2223076f.jpg

ஜெருசலேம் நகரம்
 
முஸ்லிம்களுக்கான முதல் வழிபாட்டு திசையாக விளங்கியது ஜெருசலேம் தான். மெக்காவில் இருக்கும்போது முஸ்லிம்கள் ஜெருசலேம் உள்ள திசையை நோக்கிதான் வணங்குவார்கள். தொடக்கத்தில் மெதினாவிலுள்ள மசூதிகள்கூட ஜெருசலேம் உள்ள திசையை நோக்கியே கட்டப்பட்டன. (பின்னர் இவை மெக்காவை நோக்கி கட்டப்பட்டன). நபிகள் நாயகத்துக்குப் பிறகு அவரு டைய பல தோழர்களும், சீடர் களும் ஜெருசலேம் நகரில் வாழ்ந்து மறைந்தனர். அவர்கள் புதைக்கப்பட்டது இந்த நகரில்தான்.
 
ஆக வெறும் ஒரு சதுரகிலோ மீட்டர் பரப்பு கூட இல்லாத ஜெருசலேம் நகரில் யூத ஆலயம், மசூதி, மாதாகோவில் என்று பெரும் சரித்திரச் சிறப்பு பெற்ற பல மதச் சின்னங்கள் அமைந்துவிட்டன. பிரச்னைகள் கிளம்பாமல் இருந்தால்தானே அதிசயம்?
 
இப்போது அந்தப் பிரபல ஆலயத்தில் வழிபாடு செய்பவர்கள் யார்? ஒரு காலத்தில் பிரம்மாண்ட யூத ஆலயமாக இருந்து பின்னர் தரைமட்டமான அதன் கீழ்த் தளத்தில் யூதர்கள் இப்போதும் பிரார்த்தனை செய்கிறார்கள். அங்கு இதற்காக ஒரு பெரிய அரங்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
 
அதற்கு மேல் தளத்தில் இருக்கிறது ஹரம் அல் ஷாரிஃப் (இதற்குப் பொருள் ‘புனிதமான சரணாலயம்’). மெக்காவுக்கும், மெதினாவுக்கும் அடுத்ததாக இஸ்லாமிய மார்க்கத்தினரின் மூன்றாவது புனிதத் தலம் இதுதான். அதாவது இங்குள்ள தங்கத்தால் மூடப்பட்ட மேற்கூரை.
 
யூதர்கள் கட்டடத்தின் மேல் பகுதிக்குச் சென்று தங்கள் பிரார்த்தனைகளை நடத்த வேண்டுமென்று கோரி வருகிறார்கள். பழைய ஆலயத்தில் அப்படித்தானே அவர்கள் வழிபாடு இருந்தது! ஆனால் முஸ்லிம்கள் மறுக்கிறார்கள்.
 
2014 அக்டோபர் 29 அன்று யூத மதத்தின் தீவிர ஆதரவாளர் ஒருவர் பாலஸ்தீனியர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட, கலவரம் பெரிதானது. இதற்குப் பிறகு கடுமையான சோதனைக்குப் பிறகே, குறைந்த எண்ணிக்கையில் முஸ்லிம்கள் அந்த ஆலயத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பகைமை அதிகமாகிவிட்டது. ஜெருசலேம் நகரம் பலத்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது..
 
ஜெருசலேம் நகரை யூதமயமாக்குகிறார்கள் என்பதைக் கிண்டலாக ‘Re-jew-venating’ என்று குறிப்பிடுகிறார்கள் பாலஸ்தீனியர்கள். இஸ்ரேலின் இந்தப் போக்குக்குக் காரணம் பயம் என்றுகூடச் சொல்லலாம். படமெடுக்கும் பாம்பின் பின்னணி!
 
1947ல் ஐ.நா. ஒரு திட்டத்தை அறிவித்ததைக் குறிப்பிட்டோம் ‘’பாலஸ்தீனம் இரண்டாக்கப்பட வேண்டும். ஒரு பகுதி அரபு மக்களுக்கு. மற்றொன்று யூத இனத்தவருக்கு’’. கூடவே அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் பிரிட்டன் தன் ராணுவம் உள்ளிட்ட நிர்வாகத்தை வாபஸ் பெறவேண்டும் என்றும் அதற்கடுத்த இரு மாதங்களில் புதிய நாடுகள் உருவாகிவிட வேண்டும் என்றும் கூறியிருந்தது.
 
யூதர்கள் உடனடியாக மேற்படி ஏற்பாட்டுக்கு ஒத்துக் கொண்டுவிட்டனர். ஆனால் அரபுத் தலைவர்கள் ஐ.நா.வின் முடிவை ஏற்க மறுத்தனர். பாலஸ்தீனப் பகுதியைத் துண்டாக்கினால் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றனர்.
 
ஐ.நா.வின் கெடு முடிவதற்கு முன்பாகவே இஸ்ரேல் தன்னை தனிச்சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது. அரபு நாடுகள் போர்க் கொடி உயர்த்தின. எகிப்து, ஜோர்டான், சிரியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து பாலஸ்தீனப் பகுதிக்குள் நுழைந்தன. அங்கிருந்தபடியே யூதர்கள் குடியிருப்புகளின்மீது தாக்குதல்களைத் தொடங்கின.
 
கர்ப்பம் அடைந்திருந்தால் பிரசவம் நடந்திருக்கும். ஆனால் பத்து மாதங்கள் போர் நடந்த பிறகும் எந்த அமைதியும் பிரசவித்துவிடவில்லை. பாலஸ்தீனப் பகுதியில் மட்டுமல்லாது (எகிப்தின் ஒரு பகுதியான) சினாய் தீபகற்பத்திலும், தெற்கு லெபனானிலும்கூட போர் நடைபெற்றது. விளைவு பொதுவான தர்க்கத்துக்கு எதிரானதாக இருந்தது. குட்டியூண்டு இஸ்ரேல் தன்னைவிட மிகப் பெரும் அரபு நாடுகளின் தாக்குதலை தாக்குப்பிடித்தது மட்டுமல்ல, அதைத் தாண்டியும் சென்றது.
 
தனது முழுப் பகுதியையும் பாதுகாத்துக் கொண்டதோடு பாலஸ்தீனத்துக்காக ஐ.நா. ஒதுக்கிய பகுதியில் சுமார் 60 சதவிகிதத்தை தன் வசம் எடுத்துக் கொண்டது. இதில் யூதர்கள் அதிகம் வாழும் பகுதிகளாகக் கருதப்பட்ட (ஆனால் ஐ.நா.வால் அவர்களுக்கு அளிக்கப்படாத) ஜஃப்பா, லிட்டா போன்ற பகுதிகளும், மேற்குக் கரையும் அடக்கம்.
 
ஆக அதிகாரபூர்வமாக பாலஸ்தீனம் என்ற நாடு பிறக்கவில்லை. ஆனால் இஸ்ரேல் என்ற நாடு பிறந்து ஐ.நாவின் அங்கீகாரத்தையும் பெற்றுவிட்டது.
 
1949-ல் அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இஸ்ரேலையும், பாலஸ்தீனப் பகுதியையும் பிரிக்கும் ‘பச்சைக் கோடு’ ஒன்றை போரிட்ட அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டன. இந்தப் புதிய கோட்டின் படி ஐ.நா. அறிவித்த பகுதியைவிட இஸ்ரேலுக்கு மிக அதிகமான பகுதிகள் வசமாயின. புதிய எல்லைகளை அதிகாரபூர்வமாக அரபுநாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றா லும் அந்த எல்லைக்குள் ஆக்ரமிக்க மாட்டோம் என்று அமைதிக் கோணத்தில் கையெழுத்திட்டன.
 
இதன் விளைவு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இஸ்ரேலின் வசப்பட்ட புதிய பகுதிகளில் வாழ்ந்த ஏழு லட்சம் பாலஸ்தீன அரபு மக்கள் அங்கிருந்து வெளியேறினர் அல்லது வெளியேற்றப்பட்டனர். ‘பாலஸ்தீன அகதிகள்’ என்ற புதியதொரு பரிதாபக் கூட்டம் உருவாகத் தொடங்கியது.
 
இதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் யூதர்கள் அங்கிருந்து வெளியேறு மாறு கட்டாயப்படத்தப்பட்டனர். இருதரப்பையும் சேர்ந்த அமைதி விரும்பிகளான அப்பாவி மக்களும் இதனால் மிகப் பெரும் துன்பத்துக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளானார்கள்.
 
(இன்னும் வரும்..)
 
Link to comment
Share on other sites

பிறவிப் பகைவர்கள் - பாலஸ்தீனம், இஸ்ரேல் 4

 

palestine_2225194f.jpg

இஸ்ரேல் ராணுவம்

 

கோலான் ஹைட்ஸ், சினாய் தீபகற்பம், காஸா நிலப்பரப்பு, மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் என்று பல புதிய பகுதிகளைத் தன் வசம் கொண்டு வந்துவிட்டது இஸ்ரேல்.

 
அளவில் சின்ன நாடு. அதுவும் அப்போதுதான் உருவான நாடு. அப்படியிருந்தும் இஸ்ரேலினால் எப்படி பல்வேறு திசைகளிலிருந்து தாக்குதல் நடத்திய அரபு நாடுகளை சமாளிக்க முடிந்தது?
 
இரண்டு காரணங்கள். ஒன்று, அமெரிக்காவிடமிருந்து வந்து சேர்ந்த நவீன போர்க்கருவிகள். இரண்டு, ஏரியல் ஷாரன். இஸ்ரேல் ராணுவத்தின் தளபதியாக அப்போது விளங்கினார் ஏரியல் ஷாரன் (பல வருடங்களுக்குப் பிறகு அந்த நாட்டின் பிரதமரும் ஆனார்).
 
ராணுவச் சிப்பாயாகச் சேர்ந்து ராணுவ அதிகாரியாக வெகுவேகமாக உயர்ந்தவர் இவர். இஸ்ரேலின் சரித்திரத்தில் மிக முக்கியப் பங்கு வகித்தவர். 1948 போரில் மட்டுமல்ல அதற்குப் பிறகு நடந்த மிக முக்கியமான இரு போர்களிலும் இஸ்ரேல் அடைந்த வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தா.
 
இஸ்ரேல் மக்கள் இவரை ‘இஸ்ரேலின் மன்னர்’ என்று அன்புடன் அழைத்தனர். அமெரிக்க ராணுவம் இவரை வியந்து பார்த்தது. ‘போரில் இவ்வளவு புதுமையான வியூகங்களை ஒருவர் வகுக்க முடியுமா!’ என்று வெளிப்படையாகவே பாராட்டியது.
 
எடுத்துக்காட்டாக எகிப்து ராணுவத்தை இஸ்ரேல் ராணுவம் எதிர்கொண்டதைக் கூறலாம். சின்னச்சின்னப் பகுதிகளாக தன் ராணுவத்தை பல்வேறு இடங்களுக்குக் கொண்டு சென்று எகிப்து ராணுவத்தை தாக்கச் செய்தார் ஷாரன். இதன் காரணமாக எகிப்து ராணுவம் ஒன்றுபட்டு செயல்பட முடியாமல் அந்தந்தப் பகுதிகளைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. இது இஸ்ரேலுக்குப் பெரும் சாதகமாக அமைந்தது.
 
ராணுவத்திலிருந்து ஓய்வெடுத்த பிறகு ஷாரன் அரசியலில் சேர்ந்தார். லிகுட் என்ற கட்சியின் உறுப்பினராகி 2000ல் அந்தக் கட்சியின் தலைவரானார். பின்னர் 2001லிருந்து 2006 வரை இஸ்ரேலின் பிரதமராகவும் செயல்பட்டார். (பிரதமரான பிறகு இவர் சில சமாதானச் செயல்களில் ஈடுபட்டதைப் பிறகு பார்ப்போம்).
sharon_2225199a.jpg 
 - ஏரியல் ஷாரன்
 
2006ல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சுமார் எட்டு வருடங்கள் படுத்த படுக்கையாகக் கிடந்து விட்டு 2014 ஜனவரியில் இறந்தார். தற்காப்பு என்ற இலக்கைத் தாண்டி ஆக்கிரமிப்பு என்ற கட்டத்தை இஸ்ரேல் அடைந்ததும் ஐ.நா. குறுக்கிட்டது.
 
‘‘ஆக்கிரமித்த பகுதிகளை திருப்பிக் கொடுத்துவிடு. அவர்களை உன்னிடம் இனி வாலாட்டாமல் இருக்கச் சொல்கிறேன்’’ என்று ஐ.நா. போட்ட டீலுக்கு இஸ்ரேல் ஒத்துக் கொள்வதாயில்லை. பாலஸ்தீனியர்கள் ஆக்கிரமிப்புப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
 
‘‘எங்களுக்கென்று தாய் நாடே இல்லையே’’ என்று யூதர்கள் புலம்பியதுபோக, ‘‘எங்கள் தாயகம் எங்கள் கையைவிட்டுப் போயிடுச்சே’’ என்று பாலஸ்தீனியர்கள் கதறத் தொடங்கினார்கள். வருடங்கள் கழிந்தன. வன்மம் மட்டும் அப்படியேயும் அதிகமாகவும் மனங்களில் சுற்றிச் சுற்றி வந்தது. 1973ல் யோம் கிப்பூர் நாள் வந்தது. அது யூதர்களுக்கு மிக முக்கியமான ஒரு நாள். அந்த வருடம் அது முஸ்லிம்களுக்குப் புனிதமான ரம்ஜான் மாதத்தில் வந்தது.
 
அரபு முஸ்லிம்கள் அந்த நாளை வேறுவிதமாகக் ‘கொண்டாடத்’ தீர்மானித்துவிட்டனர். எகிப்து மற்றும் சிரியா நாட்டு ராணுவங்கள் தாங்கள் அமைதி உடன்படிக்கையில் ஒத்துக் கொண்ட எல்லைகளைத் தாண்டின. சினாய் தீபகற்பத்தை எகிப்து ராணுவம் தாண்டியது. கோலான் ஹைட்ஸ் என்ற பகுதியை சிரியா நாட்டு ராணுவம் தாண்டியது.
 
ஆறு நாட்கள் உக்கிரமான போர் நடந்தது. வேகவேகமாக அமெரிக்கா தனது ஆதரவை வார்த்தைகளின் மூலமும், போர்க்கருவிகளின் மூலமும் இஸ்ரேலுக்கு அளித்தது. சோவியத் யூனியன் தனது எக்கச்சக்கமான போர்க் கருவிகளை அரபு நாடுகளுக்கு அனுப்பியது.
 
ஆக மேலுக்கு இது அரபு நாடுகள்–இஸ்ரேல் போர் என்றாலும் ஒருவிதத்தில் இது அமெரிக்க - சோவியத் வல்லரசுகளின் போராகவே விளங்கியது.
 
சூயஸ் கால்வாயைத் தாண்டியது எகிப்திய ராணுவம். சினாய் தீபகற்பத்தை எளிதில் கடந்த எகிப்து அடுத்த மூன்று நாட்களில் தனது ராணுவம் முழுவதையும் இஸ்ரேலைத் தாக்குவதற்குத் தயார் நிலையில் வைத்துக் கொண்டது.
 
எகிப்திய ராணுவம் இஸ்ரேலைத் தாக்கும் அதே நேரத்தில் தங்களது தாக்குதலும் இருக்க வேண்டுமென்று திட்டமிட்டது சிரியா. அப்போதுதானே இஸ்ரேல் பரிதவிக்கும், அதன் ராணுவம் பிளவு படும், தோற்கும்! ஆனால் இஸ்ரேலிய ராணுவம் மீண்டும் தன் திறமையை நிரூபித்தது. சிரியாவின் ராணுவத்தைத் தனது எல்லைக் கோட்டை நெருங்க விடாமல் செய்தது. சொல்லப்போனால் சிரியாவுக்கு உள்ளேகூட இஸ்ரேலிய ராணுவம் நுழைந்தது.
 
அடுத்த வாரமே இஸ்ரேலிய ராணுவம் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை நோக்கி எரிகுண்டுகளை வீசத் தொடங்கியது.
 
எகிப்தின் பிரதமர் அன்வர் சதாத் கவலைப்படத் தொடங்கினார். சினாய் தீபகற்பத்தின் இரண்டு முக்கிய கணவாய்களை தங்கள் வசம் கொண்டுவந்து விட்டால் தங்களை அசைக்க முடியாது என்று அவர் நினைத்திருந்தார். ஆனால் இஸ்ரேல் கடுமையாக பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சூயஸ் கால்வாயைத் தாண்டி எகிப்துக்குள் நுழைந்தது. எகிப்தின் தலைநகரம் கெய்ரோவை நோக்கி தன் தாக்குதலைத் தொடங்கியது.
 
திரைப்படத்தின் முடிவில் வரும் போலீஸ்போல இருதரப்பிலும் கடும் பாதிப்புகள் ஏற்பட்ட பிறகு ஐ.நா. அமைதி ஒப்பந்தத்துக்கு முயற்சி செய்தது.
 
அக்டோபர் 24 அன்று இஸ்ரேல் ராணுவம் தான் ஒருபடி மேல் என்பதை தெளிவாகவே நிலைநிறுத்திக் கொண்டது. எகிப்து ராணுவத்தை சுற்றி வளைத்திருந்தது இஸ்ரேல் ராணுவம். இத்தனைக்கும் போரின் தொடக்க நாட்களில் இஸ்ரேலுக்குக் கொஞ்சம் பின்னடைவுதான்.
 
எகிப்துடன் மட்டும் சமாதானமாகப் போக இஸ்ரேல் ஒத்துக் கொண்டது. தான் எகிப்திடமிருந்து ஆக்கிரமித்த சினாய் தீபகற்பத்தை எகிப்துக்கு மீண்டும் அளிக்கவும் தயாரானது. ஏன் இந்த தாராளம்? எகிப்து சமாதான முயற்சிகளுக்கு தானாகவே முன்வந்தது முதல் காரணம். சோவியத் யூனியனிடமிருந்து எகிப்து தன்னைப் பிரித்துக் கொண்டது அடுத்த காரணம்.
 
யோம் கிப்பூர் போர் என்றே குறிப்பிடப்படும் இந்த ஆறு நாள்போரில் எகிப்து-சிரியா கூட்டணியை இந்த அளவுக்கு இஸ்ரேல் சிதறடித்தது அரபு நாடுகளுக்குப் பேரதிர்ச்சி கொடுத்தது. அமைதிப் பாதையை அவை கொஞ்சம் அதிகமாகவே யோசிக்கத் தொடங்கின.
 
(இன்னும் வரும்..)
 
Link to comment
Share on other sites

பிறவிப் பகைவர்கள் - பாலஸ்தீனம், இஸ்ரேல் 5

 

paslestine_2226700f.jpg

கோல்டா மேயர் - யாசர் அராபத்

இரும்புப் பெண்மணி என்று பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சரைச் சொல்வார்கள். ஆனால் அவருக்கு முன்பு இந்தப் பட்டத்தைப் பெற்றிருந்தவர் கோல்டா மேயர். இஸ்ரேலின் பிரதமராக 1969லிருந்து சுமார் பத்து வருடங்கள் ஆட்சி செய்தார்.

 
ஆட்சியின்போது பலவிதங்களில் தன் மன உறுதியை வெளிக்காட்டியவர் கோல்டா மேயர். அவ்வப்போது அது மனிதாபிமானம் கலக்காத மன உறுதியாகவும் இருந்தது!
 
போலந்து நாட்டிலுள்ள யூதர்கள் இஸ்ரேலுக்கு அதிக அளவில் வரத் தொடங்கிய நேரம் அது. அப்போது கோல்டா மேயர் போலந்து அரசுக்கு அனுப்பிய கடிதம் இது. ‘‘யூதர்கள் வரட்டும். ஆனால் நோய்வாய்ப்பட்ட, மற்றும் உடல் ஊனமுற்ற யூதர்களை இனியும் நாங்கள் ஏற்கத் தயாராக இல்லை. இதை அவர்கள் மனம் புண்படாமல் விளக்க முடியுமா என்று பாருங்கள்’’.
 
இஸ்ரேலுக்கு சுதந்திரம் 1948-ல் கிடைத்தபோது கோல்டா மேயர் அந்த நாட்டின் சோவியத் யூனியனுக்கான தூதராக நியமிக்கப்பட்டிருந்தார். பிறகு தொழிலாளர் அமைச்சர், வெளியுறவு அமைச்சர் என்று பல பதவிகளை வகித்தபின் 1969-ல் பிரதமரானார். ஆனால் பாதுகாப்பு அமைச்சர் மோஷே தயானுடன் அவருக்குப் பல கருத்து வேறுபாடுகள் உருவாகித் தொடர்ந்தன. யோம் கிப்பூர் போர் வரை எப்படியோ இருவருமே ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொண்டனர். பிறகு ஒரு கட்டத்தில் திடீரெனத் தன் பதவியை ராஜினாமா செய்தார் கோல்டா மேயர். 1973-ல் அவரது கட்சிதான் வென்றது. ஆனால் போதிய மெஜாரிட்டி கிடைக்காததால் கூட்டணி அரசை அமைத்தார். எனினும் அதற்கு அடுத்த ஆண்டே ராஜினாமா செய்தார். அது மட்டுமல்ல, அரசியலிலிருந்தே விலகிவிட்டார். அதற்கான காரணம் என்ன என்பது இன்றுவரை புரியாத புதிர்தான்.
 
இதைத் தொடர்ந்து இஸ்ரேல் அதிபரானார் ராபின். அதே சமயம் பாலஸ்தீனில் பெரும் அச்சுறுத்தல் ஒன்று புதிய இயக்கம் ஒன்றின் மூலம் தோன்றியது. அது பாலஸ்தீன விடுதலை இயக்கம். தனது நாற்பதாவது வயதில் அந்த இயக்கத்தை நிறுவியிருந்தவர் பாலஸ்தீனத்தின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தவர்.
 
‘‘என் ஒரு கையில் ஆலிவ் கிளை உள்ளது. மறு கையில் துப்பாக்கி உள்ளது’’ என்று ஐ.நா.சபையில் 1974ல் பேசி அதிர்ச்சியைக் கிளப்பியவர் யாசர் அராபத். அவர்தான் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை நிறுவியவர். வன்முறை, அமைதிவழி இரண்டுக்கும் அவரை உதாரணமாகக் காட்டுபவர்கள் உண்டு.
 
யாசர் அராபத் எகிப்து தலைநகரமான கெய்ரோவிலும் ஜெருசலேமிலும் வளர்ந்தவர். 1948 இஸ்ரேல்-அரபு நாடுகள் போரில் பங்கேற்றவர்.
 
முகமது அப்த் அல் ரஃபல் குத்வா அல் உசயின் மொகம்மது யாசர் அப்தெல் ரஹ்மான் அப்தெல் ராஃப் அராபத் அல் குத்வா அல் ஹுசேனி. இதுதான் யாசர் அராபத்தின் முழுப் பெயர். (‘‘என் முழுப் பெயரையும் மூன்று முறை தடுமாறால் எந்த யூதராவது சொன்னால் ஜெருசலேம் யூதர்களுக்கு. இல்லையேல் அது பாலஸ்தீனர்களான எங்களுக்கு’’ என்று அவர் சவால் விட்டிருக்கலாமோ!)
 
யாசர் அராபத் பிறந்தது கெய்ரோவில் (எகிப்தின் தலைநகர்). அவர் அம்மா இறந்தவுடன், மாமா வீட்டுக்குப் பயணமானார். அந்த மாமா வசித்தது ஜெருசலேத்தில். நான்கு வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் தன் தந்தை வசித்த கெய்ரோவுக்குத் திரும்பி வந்தார். ஏனோ தன் அப்பாவுடன் யாசர் அராபத்துக்கு ஒட்டுதல் இல்லாமல் இருந்தது. (தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கூட பிறகு அவர் கலந்து கொள்ளவில்லை).
 
இள வயதிலிருந்தே பாலஸ் தீனம் முழுமையும் அரபுகளுக் குதான் என்பதில் தீவிரமாக இருந்தவர் யாசர் அராபத். பாலஸ்தீனப் பகுதிக்கு ஆயுதக் கடத்தலைச் செய்தார். இந்த ஆயுதங்கள் யூதர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டன. ஃபாட் பல்கலைக்கழகத்தில் (இப்போதைய கெய்ரோ பல் கலைக்கழகம்) படித்துக் கொண் டிருந்த அவர் யூதர்களுக்கெதிராகப் போரிடுவதற்காகவே தன் கல்வியைப் பாதியில் துண்டித்துக் கொண்டார். 1948 அரபு-இஸ்ரேல் போரில் பங்கு கொண்டார்.
 
அப்படியும் இஸ்ரேல் தனி நாடாக ஆனதில் அவருக்குக் கடும் அதிர்ச்சி உண்டானது. போதாக்குறைக்கு முன்னிலும் அதிகப் பரப்பை வேறு அது வளைத் துக் கொண்டது! கொதித்துப் போன யாசரும் அவரது சில நண்பர்களுமாக இணைந்து அல்-ஃபடா என்ற அமைப்பை நிறுவினார்கள். இஸ்ரேலுக்கெதி ராகச் செயல்படுவJதான் இதன் ஒரே நோக்கம். ஆயுதக் கடத்தல் போன்ற அண்டர் கிரவுண்ட் வேலைகளில் இந்த அமைப்பு முனைப்போடு ஈடுபட்டது.
 
நாளடைவில் அரசியல் முகம் கிடைத்தால்தான் உலக அரங்கில் தனக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கும், இஸ்ரேலுக்கெதிராக மேலும் செயல்பட முடியும் என்ற முடிவுக்கு வந்தார் யாசர் அராபத். பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை 1964-ல் நிறுவினார். பாலஸ்தீன விடுதலை இயக்கம் வெளிப்படையான அரசியல் அமைப்பாகவே தன்னை அறிவித்துக்கொண்டது. வேறு பல குழுக்களும் அதில் இணைந்து கொண்டன.
 
அந்த சமயத்தில்தான் ஆறு நாள் போர் நடைபெற்றது. இந்தக் காலகட்டத்தில் யாசர் அராபத் தனது இயக்கத்தின் செயல் குழுவின் தலைவராக 1969-ல் தேர்வு செய்யப்பட்டார்.
 
இயக்கத்தை வளர்ப்பதில் தன் முழு சக்தியையும் செலவழித்தார் யாசர் அராபத். ஜோர்டானிலிருந்து இவர் வெடிகுண்டு தயார் செய்வதிலிருந்து பலவித வன்முறைச் செயல்களைத் திட்டமிட, ஒரு கட்டத்தில் ஜோர்டான் மன்னர் உசேன் இவரைத் தன் நாட்டைவிட்டு வெளியேற்றினார்.
 
சின்ன நாடான இஸ்ரேல் அரபு நாடுகளை வென்றது குறித்து பிரமிக்கும் உலக நாடுகளை உலுக்க வேண்டும். பாலஸ்தீனர்கள் நினைத்தால் எந்த எல்லைக்குச் செல்வார்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்கான நியாயத்தை வழங்க உலக நாடுகள் முன்வர வேண்டும். என்ன செய்யலாம்? யாசர் அராபத் ‘தீவிரமாக’ யோசித்தார்.
 
அப்போது உலக நாடுகளெல்லாம் பங்குபெறும் ஒரு நிகழ்ச்சி நெருங்கிக் கொண்டிருந்தது. அதைத் தனது அடுத்த களமாகத் தேர்ந்தெடுத்தார் யாசர் அராபத்.
 
அந்த நிகழ்ச்சி உலக நாடுகளின் நட்பு மற்றும் சமாதானத்துக்கான முயற்சியாகக் கருதப்படும் ஒலிம்பிக்ஸ்!
 
(இன்னும் வரும்..)
 
Link to comment
Share on other sites

பிறவிப் பகைவர்கள் - பாலஸ்தீனம், இஸ்ரேல் 6

 

gss_2227716f.jpg

 

ஜெர்மனியின் மூனிச் நகரில் 1972 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. பல நாடுகளிலிருந்தும் வந்திருந்த விளையாட்டுக் குழுக்கள் ஒலிம்பிக் கிராமம் எனும் பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
 
செப்டம்பர் 5 - அன்று பலவிதங் களிலும் ஒரு கருப்பு தினமாக விடிந்தது. உண்மையில் அது விடியாத நேரம் - காலை நான்கு மணி.
 
ஒலிம்பிக் கிராமத்தின் வேலியைத் தாண்டி உள்ளே நுழைந்தனர் ப்ளாக் செப்டம்பர் அமைப்பைச் சேர்ந்த சிலர். அவர்கள் மனதில் வன்மமும் கைகளில் வெடிகுண்டுகளும், துப்பாக்கிகளும் நிறைந்திருந்தன.
 
பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்பதை அரசியல் இயக்கமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் யாசர் அராபத். ஆனால் அதன் வன்முறைக் கிளையாக (அதாவது வெளிப்படையான வன்முறை!) செயல்பட்டுக் கொண்டிருந்தது ப்ளாக் செப்டம்பர் அமைப்பு.
 
அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இரண்டாகப் பிரிந்து ஒலிம்பிக் கிராமத்தின் இரண்டு பகுதிகளை நோக்கி விரைந்தனர்.
 
ஒரு பகுதி அங்கிருந்த ஆறு இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் விளையாட்டுப் பயிற்சியாளர்களை வளைத்துப் பிடித்தது. இன்னொரு பகுதி ஐந்து இஸ்ரேலிய விளை யாட்டு வீரர்களை தங்கள் வசம் கொண்டு வந்தது. இவர்கள் மல்யுத் தம் மற்றும் பளுதூக்கும் பிரிவு களில் சிறப்புத் தகுதி பெற்றவர்கள்.
 
ஆக இந்தப் பதினொரு பேரையும் பணயக் கைதிகளாக்கி தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள தீவிரவாதிகள் முயற்சி மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
 
ஆனால் வளைக்கப்பட்ட இஸ்ரேலியர்கள் முரண்டுபிடிக்கத் தொடங்கினார்கள். பதிலுக்கு தாக்குதல் நடத்த ஆரம்பித்தார்கள். இவர்களை அடக்க துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர் தீவிர வாதிகள். இதில் யோசப் ரொமானோ என்ற விளையாட்டு வீரரும், மோஷே வெயின்பெர்க் என்ற பயிற்சியாளரும் இறந்தனர். அதற்குப் பிறகு மீதி ஒன்பது பேரும் அடங்கிப் போயினர்.
 
தீவிரவாதிகளின் முதல் நோக்கம் உடனடியாக நிறைவேறி யது. உலக நாடுகளின் கவனம் முழுமையாக அரபு- இஸ்ரேல் போராட்டத்தின்புறம் தீவிரமாகத் திரும்பியது. ஒலிம்பிக் நிகழ்ச்சிகள் ஒரு நாளுக்கு ரத்து செய்யப்பட்டன. என்றாலும் உலக நாடுகளின் ஒளிப் பதிவுப் பிரதிநிதிகள் அத்தனை பேரின் கவனமும் மைதானங்களை விட்டு ஒலிம்பிக் கிராமத்தை மையம் கொள்ளத் தொடங்கியது.
 
பாலஸ்தீனர்கள் உற்சாகம் கொண்டனர். ஆனால் கூடவே கொஞ்சம் கவலையும் வந்தது. பணயக் கைதிகளை வைத்துக் கொண்டு போதிய ஆதாயங்களை அடைய வேண்டுமே!
 
முதல் கட்டளையாக இஸ்ரே லியச் சிறைச்சாலைகளில் உள்ள 234 பாலஸ்தீனக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றான் ‘இஸ்ஸா’. இவன்தான் அந்தத் தீவிரவாதக் குழுவின் தலைவன். ஆனால் ‘உடனடியாக விடுதலை’ என்பது வாயளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் செயலள வில் நடக்கக் காணோம். அன்று மாலையே ‘நாங்களும் பணயக் கைதிகளும் மத்திய கிழக்குப் பகுதிக்குச் செல்ல வேண்டும். அதற்காக தனி விமானம் ஏற்பாடு செய்’ என்றான் இஸ்ஸா.
 
வேறு வழியில்லாமல் ஜெர்மன் அதிகாரிகள் இதை ஏற்றனர். பல்வேறு நாடுகளிலிருந்து மூனிச் வந்துள்ள விளையாட்டு வீரர்களின் நலனுக்கு அவர்கள்தானே பொறுப்பு.
 
கெய்ரோவுக்கு தீவிரவாதி களையும், பணயக் கைதிகளையும் ஏற்றிச் செல்ல ஒரு தனி போயிங் 727 விமானம் தயார் நிலையில் வைக்கப்பட்டது. விமானநிலை யத்தில் ஒரு சாகச நாடகத்தை அரங்கேற்றி பணயக்கைதிகளை விடுவித்து விடலாம் என்று திட்ட மிட்டது ஜெர்மனி. இந்தத் திட்டத்தில் பங்கேற்க இஸ்ரேலின் உளவு நிறுவனம் மொஸாத் தனது முக்கிய அதிகாரிகளை அங்கு அனுப்பியது.
 
ஆனால் பலரும் எதிர்பாராத விதமாக ஜெர்மனி உளவு மற்றும் காவல் துறைகள் சொதப்பின. ‘‘சாகச ஏற்பாடுகள் மட்டரகமாக இருந்தன. அந்தப் பகுதியே இருளாக இருந்தது. அதே சமயம் நிழல் மறைவில் எந்தவித ஆயுத வண்டிகளும் நிறுத்தப்படவில்லை. மொத்தத்தில் இந்த விஷயத்தில் ஜெர்மானியர்கள் மிகவும் வேஸ்ட்’ என்று பின்னர் கருத்து தெரிவித்தார் இஸ்ரேலிய உளவுத் துறையின் தலைவர் ஜெமீர்.
 
பணயக் கைதிகளோடு தீவிர வாதிகள் இரவு 10.40க்கு விமான நிலையத்தை அடைந்தனர். அடைந்த உடனேயே தங்களை வளைத்துப் பிடிக்க பொறி வைக்கப் பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டான் இஸ்ஸா. எனவே ஜெர்மானியக் காவலர்கள் சுடத் தொடங்கிய அடுத்த கணமே பாலஸ்தீன தீவிரவாதிகள் பதிலுக் குச் சுடத் தொடங்கினர்.
 
நான்கு பணயக் கைதிகள் இருந்த ஒரு ஹெலிகாப்டரை நோக்கி வெடிகுண்டு ஒன்றை வீசினான் ஒரு தீவிரவாதி. ஹெலிகாப்டர் பற்றி எரிந்தது. உள்ளே இருந்தவர் களின் தொடர் மரணக் கூக் குரல்கள் விமான நிலையத்தை நிறைத்தன. மீதி இஸ்ரேலியர்கள் மிரட்டி வைக்கப்பட்டிருந்த ஹெலி காப்டர் மீது மற்றொரு தீவிர வாதி தன் பங்குக்கு ஒரு வெடிகுண்டை வீசினான். ஜெர்மனி காவல்துறையினர் தீவிரவாதிகளை நோக்கி சுடத் தொடங்கினர். கொஞ்ச நேரத்திலேயே 9 இஸ்ரேலியர் கள், 5 பாலஸ்தீனர்கள் மற்றும் 1 ஜெர்மன் போலீஸ் அதிகாரி ஆகியோர் இறந்தனர்.
 
உலக நாடுகள் (பெரும்பாலான அரபு நாடுகள் நீங்கலாக) தங்கள் வருத்தத்தையும், கண்டனத்தையும் பதிவு செய்தன. இஸ்ரேலைப் பொருத்தவரை ஹிட்லருக்கு அடுத்தபடியாக தங்கள் இனத்தை வேரறுக்க முயற்சி செய்யும் சக்தியாக யாசர் அராபத் தோற்ற மளிக்கத் தொடங்கினார்.
 
அப்போதைய இஸ்ரேலியப் பிரதமரான கோல்டா மேயர் எடுத்த சில முடிவுகள் புதிய, அதிபயங் கரமான விளைவுகளுக்கு அடிகோலின. பாலஸ்தீன ராணுவப் பகுதிகளின்மீது குண்டு வீசியது இஸ்ரேலின் போர் விமானங்கள். இதில் அப்பாவிப் பொதுமக்களும் இறந்தனர்.
 
தீவிரப் பிரச்சாரத்துக்குப் பிறகு பல முஸ்லிம் இளைஞர்கள் பாலஸ் தீன விடுதலைப் போராட்ட அமைப் பில் உறுப்பினர்கள் ஆனார்கள்.
 
மூனிச் படுகொலைகளுக்கு யார் காரணம் என்பதைக் கண்டு பிடித்துத் தண்டிக்க ஒரு செயல் திட்டம் தீட்டினார் கோல்டா மேயர். இதற்குக் ‘கடவுளின் வெஞ்சினம்’ (Wrath of God) என்று பெயரிடப் பட்டது.
 
(இன்னும் வரும்..)
 
Link to comment
Share on other sites

பிறவிப் பகைவர்கள் – பாலஸ்தீனம், இஸ்ரேல் 7

palestine_2230251f.jpg

ராபின் - கிளிண்டன் - அராபத்
 

மூனிச் படுகொலைகளைத் தொடர்ந்து அடுத்த இருபது ஆண்டுகளில் தேடித்தேடி பல பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். கார்களுக்குக் கீழே வெடிகுண்டுகள் வெடித்தன. தொலைபேசிகளில் சிறு குண்டு கள் வைக்கப்பட்டன. ஒலிம்பிக் படு கொலைகளுக்கு சம்பந்தமில்லாத, ஆனால் புகழ்பெற்ற பாலஸ்தீனர்களில் பலரும் இப்படிக் கொல்லப்பட்டனர். பாலஸ்தீனம் ரத்த நதியில் மிதக்கத் தொடங்கியது. கோல்டா மேயருக்குப் பின் இஸ்ரேலின் பிரதமர் ஆனார் ராபின்.

 
ராபின் பிறந்ததே ஜெருசலேம் நகரில்தான். அப்போது அது ‘பிரிட்டிஷ் பாலஸ்தீனத்தில் இருந்தது’. ராபின் சிறுவனாக இருந்தபோதே அவர் அப்பா இறந்து விட்டார். குடும்பத்தை ராபின்தான் உழைத்துக் காப்பாற்ற வேண்டியிருந்தது. அதிக ஊதியம் பெறுவதற்காக தனது பதினெட்டாவது வயதில் அமெரிக்காவுக்குச் சென்றார்.
 
அதுவரை நெஹேமியா ருபிட்ஜோவ் என்றிருந்த தனது பெயரை இட்சிக் ராபினாக மாற்றிக் கொண்டார். அங்குள்ள போலே ஜியான் என்ற கட்சியில் சேர்ந்தார். ஜியோனிஸத்தை பெருமளவில் ஆதரித்த கட்சி இது. அதாவது உலகிலுள்ள யூதர்கள் கொத்து கொத்தாகச் சென்று பாலஸ்தீனத்தில் குடியேற வேண்டும் என்பதைக் கொள்கையாகவே வைத்திருந்த யூதக்கட்சிகளில் ஒன்று.
 
1948ல் அரபு இஸ்ரேல் போரின்போது எகிப்திய ராணுவத்திற்கு எதிராக போர் புரிந்தார். பின்னர் ராணுவத்தின் துணை கமாண்டர் ஆனார். ராபினுக்கு மத நம்பிக்கை கிடையாதாம். அமெரிக்கத் தூதரான டென்னிஸ் ராஸ் என்பவர் ‘ராபின் அளவுக்கு மதச்சார்பற்ற யூதர் ஒருவரை நான் இதுவரை கண்டதில்லை’ என்று கூறியிருக்கிறார்.
 
1988ம் ஆண்டு அராபத்திடமும் அவரது பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடமும் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் தெரிந்தது. ஐ.நா.சபையில் அவர் ஆற்றிய உரையில் அனைவரும் சமாதானத்துடன் அமைதியாக வாழ்வது அவசியம் என்றார். (அராபத்தின் இந்த மாற்றத்துக்கு அவர் சம்சாரியானதும் ஒரு காரணமாக இருக்குமோ என்ற விமர்சனங்கள் எழுந்தன. தனது 61வது வயதில் 27 வயது பாலஸ்தீனப் பெண்மணி ஒருவரை யாசர் திருமணம் செய்து கொண்டிருந்தார். அந்தப் பெண்மணி ஒரு கிறிஸ்தவர்!). ராபினும் அமைதியின் அவசியத்தை ஏற்றுக் கொண்டார்.
 
‘’பொங்கியது போதும் .. பொறுத்திருப்போம்’’ என்ற முடிவுக்கு இரு தரப்பினருமே வந்ததும் உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டன. ஆஸ்லோ உடன்படிக்கைகள் எனப்படும் இவை பாலஸ்தீனத்துக்கு சில அங்கீகாரங்களை அளித்தன. காஸாவின் சில பகுதிகளிலும் மேற்குக்கரையிலும் பாலஸ்தீன தேசிய அமைப்புக்கு அதிகாரம் உண்டு என்பது ஒத்துக் கொள்ளப்பட்டது.
 
இதற்கு ஓர் உத்தரவாதத்தைக் கேட்டார் ராபின். யாசர் அராபத் தன் வன்முறைப் பாதையை கைவிட வேண்டும். இஸ்ரேல் என்ற நாட்டை அங்கீகரிக்க வேண்டும். இந்த இரண்டையும் ஒப்புக் கொண்டு ராபினுக்குக் கடிதம் எழுதினார் யாசர் அராபத். கடிதம் கிடைத்த அன்றே (1993 செப்டம்பர் 9) தான் பாலஸ்தீன விடுதலை அமைப்பை அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதாக ராபின் அறிவித்தார்.
 
வெள்ளைக் கொடிகள் உயர்த் தப்பட்ட வேகம் சமாதான விரும்பி களுக்கு சந்தோஷத்தை அளித்தது. ஆனால் வன்முறையாளர்களின் எண்ணிக்கை அங்கு கொஞ்ச நஞ்சம் இல்லையே. இந்த உடன் படிக்கைகளுக்கு எதிராக இஸ்ரே லில் எதிர்ப்பு ஊர்வலம் நடந்தது. யாசர் அராபத்தும், ராபினும் கைகுலுக்கிக் கொண்ட அசாதாரண சம்பவம் வரலாற்றில் பதிவானது. ‘பாலஸ்தீனியர்களாகிய உங்க ளோடு போரிட்ட இஸ்ரேலியர் களாகிய நாங்கள் உரத்த குரலில் கூறுகிறோம். போதும் நாம் சிந்திய ரத்தமும், கண்ணீரும்... போதும்’’.
 
அதுமட்டுமல்ல 1994ல் இஸ்ரே லுக்கும், ஜோர்டானுக்கும் உண் டான அமைதி ஒப்பந்தத்துக்கும் ராபின் வழிவகுத்தார். ஆஸ்லோ-2 என்ற ஒப்பந்தம் மிகக் குறிப்பிடத்தக்கதாக இருந் தது. பாலஸ்தீனியர்களை ஆட்சி செய்ய இஸ்ரேல் அனுமதித்துள்ள காஸா பகுதியைத் தாண்டியும் பாலஸ்தீனிய சுயாட்சிக்கு வழிவகுத்தது அது!
 
இந்த ஒப்பந்தத்துக்கு இறுதி வடிவம் கொடுக்க யாசர் அராபத்தும், இஸ்ரேலின் வெளியுறவு மந்திரி ஷிமான் பெரெஸும் பல நாட்கள் இரவு பகலாக உழைத்தனர்.
 
ஒப்பந்தப்படி பாலஸ்தீனியர் களின் சுயாட்சிப் பகுதி எல்லை முன்னைவிடக் கொஞ்சம் (4%) அதிகமாகியிருந்தது. ஆனால் மேற்குக் கடற்கரையில் 73 சதவீதப் பகுதியை இஸ்ரேல் தன்னிடமே தக்க வைத்துக் கொண்டிருந்தது. இதன் மூலம் சுமார் 68 சதவீத பாலஸ்தீனியர்கள் ‘அன்னிய’ ஆளுகையின்கீழ் இருக்க வேண்டி வந்தது.
 
அது மட்டுமல்ல, பாலஸ்தீனர் களின் சுயாட்சிக்காக அனுமதிக் கப்பட்ட பகுதி தொடர்ச்சியாக இல்லை. அங்கே கொஞ்சம், இங்கே கொஞ்சம் என்று பிரித் தளிக்கப்பட்டிருந்தது பிற்காலத்தில் `தனிப் பாலஸ்தீன நாடு’ எழு வதைத் தவிர்க்க ராபின் செய்த சூழ்ச்சி இது என்ற பரவலான கருத்து எழுந்தது.
 
பாலஸ்தீனர்களின் எல்லைக் குள்ளும் நுழைந்து (ஹமாஸ் என்ற பயங்கரவாதக் குழுவினர் உள்ளிட்ட) தீவிரவாத கெரில்லாக் களைப் பிடிக்க இஸ்ரேலுக்கு அதிகாரம் உண்டு என்பதும் ஒப்பந்தத்தில் இருந்தது. தன் தரப்புக்கு பலவீனம் சேர்க்கும் ஓர் ஒப்பந்தத்துக்கு அராபத் ஏன் ஒத்துக் கொள்ள வேண்டும்?
 
இஸ்ரேலின் தீவிர எதோச் சாதிக்காரம் ஒருபுறம், ஏற்கெனவே தன் ஆளுகையில் வந்துள்ள காஸா பகுதியையே அமைதியாக ஆள முடியாமல் அங்கு நடக்கும் பயங்கரவாதங்கள் ஒருபுறம். இவை தவிர அமெரிக்காவின் ப்ளாக்மெயிலும் ஒரு முக்கியக் காரணம். இந்த ஒப்பந்தத்துக்கு ஒத்துக் கொள்ளாவிட்டால் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி
 
`வெளியிடங்களிலிருந்து’ அராபத் இயக்கத்திற்குக் கிடைத்து வரும் எல்லாப் பொருளாதார உதவி களையும் நிறுத்தி விடுவதாக அமெரிக்க அரசு வெளிப்படையாக பயமுறுத்தி உள்ளது! ஹமாஸ் என்ற ஒரே வார்த்தை இந்தக் கட்டுரையில் இடம்பெற் றுள்ளது. ஆனால் அது பாலஸ் தீன-இஸ்ரேல் போக்கைத் தீர் மானிக்கும் சக்திகளுள் முக்கிய மான ஒன்றாக மாறிவிட்டது. அதைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.
 
(இன்னும் வரும்..)
 
Link to comment
Share on other sites

பிறவிப் பகைவர்கள் பாலஸ்தீனம், இஸ்ரேல் 8

 

palestine_2231152f.jpg

காஸாவில் 2012-ம் ஆண்டு டிசம்பர் 8-ல் நடைபெற்ற ஹமாஸ் இயக்கத்தின் 25-வது ஆண்டு தின நிகழ்ச்சி. | கோப்பு படம்: ஏஎப்பி
 

ஹமாஸ் என்பது 1987-ல் தொடங்கப்பட்ட ஒரு தீவிரவாத அமைப்பு. இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தில் செயல்படுகிறது. ராக்கெட் ஏவுவது, தற்கொலைப் படையாக மாறும் உறுப்பினர்கள் என்று பலவிதங்களில் இஸ்ரேலுக்குக் குடைச்சல் கொடுத்து வருகிறது. ‘’இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருக்கக் கூடாது. அது அங்கீகரிக்கத்தக்கதே அல்ல’’ என்று தொடர்ந்து தெளிவாக அறிவிக்கும் ஹமாஸ் இஸ்ரேலை அழிப்பதையே தன் லட்சியம் என்று தனது சட்டத்தில் குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறது.

 
இரு கோடுகள் தத்துவப்படி ஹமாஸ் உருவானபிறகு பாலஸ்தீன விடுதலை அமைப்பு மிதவாத இயக்கமாகவே பார்க்கப்படுகிறது. பாலஸ்தீன அரசைக்கூட (அதாவது பாலஸ்தீன விடுதலை அமைப்பு) இது ஏற்கவில்லை. ‘‘கோழைத்தனமாக நடந்து கொள்கிறார்கள்’’
 
2006ல் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த சிலரும் பாலஸ்தீன சட்டசபைத் தேர்தலில் வென்றனர். ‘‘இதற்குமுன் பாலஸ்தீனம் இஸ்ரேலோடு செய்து கொண்ட சமரச ஏற்பாடுகளை நாங்கள் ஏற்க மாட்டோம்’’ என்று தெளிவாகவே இந்த ‘அரசியல்வாதிகள்’ அறிவித்தனர்.
 
எகிப்திலுள்ள முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திலிருந்து (Muslim brotherhood) பிறந்தது ஹமாஸ். 1980களில் பாலஸ்தீன மக்களின் ஆதரவும் இதற்குக் கிடைத்தது. இஸ்ரேலின் அராஜகப் போக்கை தாக்குப்பிடிக்க ஹமாஸ் போன்ற தீவிர அமைப்புகள்தான் சரி என்ற முடிவுக்கு அப்போது மக்களில் பலரும் வந்திருந்தனர்.
 
ஒரு கட்டத்தில் இஸ்ரேலைத் தாக்குவதற்குச் சமமாக பாலஸ்தீன விடுதலை அமைப்பைத் தாக்கத் தொடங்கியது ஹமாஸ்! காஸா பகுதியை வன்முறை மூலம் கைப்பற்றியது ஹமாஸ். இஸ்ரேல்மீது ராக்கெட் தாக்கு தல்களை நடத்தியது. எகிப்து தலையிட்ட பிறகு கொஞ்சம் சமாதானம் உண்டானது. 2008 இறுதியில் காஸா பகுதியைத் தாக்கிய இஸ்ரேல் ஒரு மாதத் திற்குப் பிறகு தன் ராணுவத்தை பின் வாங்கிக் கொண்டது.
 
1994-ல் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் ராபின், வெளியுறவு அமைச்சர் பெரஸ், பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசர் அராபத் ஆகியோருக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.
 
அப்போது இஸ்ரேலிய நாவலாசிரியரான மோவ் ஷாலஸ் என்பவர் ‘‘பாதி நூலை எழுதியதற்காகவோ, பாதி ஆராய்ச்சி செய்ததற்காகவோ நோபலுக்கான இலக்கியம் மற்றும் விஞ்ஞானப் பரிசுகள் கொடுக்கப்பட்டதாக நினை வில்லை. ஆனால் அமைதிக்கான நோபல் பரிசுக்கு விதிவிலக்கு அளித்திருக்கிறார்கள் போலும்’’ என்று கிண்டலடித்தார். ‘’அராபத்தின் கடந்த காலம் ரத்தக்கறை படிந்த ஒன்று. அவருக்குப் போய் நோபல் பரிசா?’’ என்று கூறி, நோபல் பரிசளிப்பு குழுவிலிருந்தே ஒருவர் விலகி விட்டார்.
 
என்றாலும் அப்போதுள்ள ஒரு சூழலில் தாக்குதல் முழுமையாக நிறுத்தப்படாவிட்டாலும், காஸா நகரை பாலஸ்தீன மக்களுக்கு அளிக்க ராபின் முன்வந்ததும், போர் நிறுத்தத்துக்குச் சம்மதம் அளிப்பதாக அராபத் ஒப்புக் கொண்டதும் அங்கீகாரம் அளிக்க வேண்டிய விஷயம்தான் என்று பலரும் கருதினர்.
 
ஆனால் ‘ஹமாஸ் இயக்கத் தினை அராபத் கண்டும் காணாமலும் இருக்கிறார்’ என்று கருதியது இஸ்ரேல் அரசு. ஆனால் ‘ஹமாஸ் இயக்கத்தினர் தங்கள் கட்டுக்குள் இல்லை’ என்பது அராபத்தின் வாதம். இந்த நிலையில் இஸ்ரேல் அரசு தங்கள் எல்லைக்கும் (பாலஸ்தீனர் அதிகம் உள்ள) மேற்குக் கடற்கரைப் பகுதிக்கு மிடையே ஒரு நீண்ட சுவரை எழுப்ப முயற்சி செய்தது.
 
இந்த நிலையில் அடுத்த அதிர்ச்சி ஏற்பட்டது. ‘இஸ்ரேல் மன்னர்களின் சதுக்கம்’ என்ற பிரபல இடத்தில் ஒரு பெரும் கூட்டம் கூடியிருந்தது. ஆஸ்லோ உடன்படிக்கைகளை ராபின் நடைமுறைப் படுத்தியதற்கான பாராட்டுக் கூட்டம் அது. ராபினும் அங்கு அழைக்கப் பட்டிருந்தார். மிதவாதிகள் அவரை புகழ்ந்து தள்ளினார்கள்.
 
கூட்டம் முடிந்தது. அங்கிருந்து கிளம்பிய ராபின் தன் காரின் கதவுகளைத் திறந்தார். அப்போது மூன்று துப்பாக்கிக் குண்டுகள் சீறிப் பாய்ந்தன. இரண்டு ராபின் உடலிலும் மற்றொன்று ராபினின் பாதுகாவலர் உடலிலும் துளைத்தது.
 
சுட்டவன் இகல் அமீர் என்ற இளைஞன். வலதுசாரியைச் சேர்ந்த தீவிர யூதன். ஆஸ்லோ ஒப்பந்தங்களை சிறிதும் ஏற்க முடியாதவன். இஸ்ரேலின் கெளரவமே இதனால் அடகுவைக் கப்பட்டதாக அவன் எண்ணினான். அந்தக் கோபத்தின் விளைவுதான் படுகொலை வன்முறையாக வெடித்தது.
 
ராபின் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த நாற்பது நிமிடங்களில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் உயிர் பிரிந்தது. நுரையீரலில் ஓட்டை, மிக அதிக ரத்தம் இழப்பு என்றார்கள் மருத்துவர்கள். பல ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ராபின் சுடப்பட்ட சதுக்கத்துக்குச் சென்று தங்கள் அஞ்சலியைச் செலுத்தினார்கள். அந்தச் சதுக்கம் ராபின் சதுக்கம் என்று புதுப் பெயரிடப்பட்டது. சதுக்கத்துக்கு மட்டுமல்ல இஸ்ரேலின் பல தெருக்களுக்கும் கூட அவர் பெயர் வைக்கப்பட்டது.
 
உலகையே அதிர வைத்தது இந்தப் படுகொலை. இனி இஸ்ரேல் - பாலஸ்தீன உறவு என்ன ஆகும் என்ற கேள்வி பலரிடம் எழுந்தது. ராபினின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட தலைவர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கம். எகிப்துப் பிரதமர் மொபாரக், அமெரிக்கப் அதிபர் பில் கிளிண்டன், ஜோர்டான் மன்னர் உசேன், ஆஸ்திரேலியப் பிரதமர் பால்கீட்டிங் என்று அந்தப் பட்டியல் மிக நீளம்.
 
ஆக என்னதான் தன் வாழ்வின் தொடக்கத்தில் போரில் ஈடுபட்டு வன்முறைச் செயல்களை ராபின் புரிந்திருந்தாலும், தன் வாழ்வின் பிற்பகுதியில் அவர் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் காரணமாக ‘உலகின் அமைதித் தூதர்களில்’ ஒருவராக அவர் பார்க்கப்படுகிறார்.
 
(இன்னும் வரும்..)
 
Link to comment
Share on other sites

பிறவிப் பகைவர்கள் பாலஸ்தீனம், இஸ்ரேல் 9

palestine_2232309f.jpg

ஷமின் பெரெஸ் - பெஞ்சமின் நெதன்யாஹு
 

ராபின் இறுதி ஊர்வலத்துக்கு யாசர் அராபத் செல்லவில்லை. வீண் குழப்பங்கள் விளைய வேண்டாமே என்பதுதான் காரணம். பிறகு ராபினின் மனைவியை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். அப்போது ‘’ராபின் ஒரு சமாதானக் கதாநாயகன் மட்டுமல்ல. என் நெருங்கிய நண்பரும்கூட’’ என்று அராபத் கூற, “உங்களைத் தன் சமாதான முயற்சிகளின் கூட்டாளி என்றே ராபின் என்னிடம் கூறுவதுண்டு’’ என்று நெகிழ்ச்சியாகக் கூறியிருக்கிறார் திருமதி ராபின்.

 
பொதுவாக ஒரு நாட்டின் பிரதமர் திடீரென்று இறந்து போய், தற்காலிகமாக மற்றொருவர் அந்தப் பொறுப்பை ஏற்றால் அந்தப் புதியவரைப் பற்றி மற்ற நாட்டினர் அறிந்து கொள்ள கொஞ்ச காலம் ஆகும். ஆனால் இஸ்ரேல் பிரதமர் ராபின் படுகொலை செய்யப்பட்ட வுடன் தற்காலிகப் பிரதமராகப் பொறுப்பேற்ற ஷமின் பெரெஸைப் பற்றி உலக அளவில் ஏற்கெனவே பலர் அறிந்திருந்தனர் என்றால் அதற்கு முக்கியக் காரணங்கள் உண்டு.
 
யாசர் அராபத்துடன் இஸ்ரேல் செய்து கொண்ட ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் இதற்கு முதல் காரணம். தனி பாலஸ்தீனம் பிறந்ததற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வெள்ளை மாளிகைக்குச் சென்ற போது அங்கு தனக்கு இணையான கவனிப்பு பெரெஸுக்கும் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டார் இஸ்ரேலியப் பிரதமர் ராபின்.
 
மற்றொரு காரணம் பெரெஸுக் குக் கிடைத்த அமைதிக்கான நோபல் பரிசு. அமைதிக்கான நோபல் பரிசு அராபத், ராபின், பெரஸ் ஆகிய மூவருக்கும் இணைந்துதான் வழங்கப்பட்டிருந்தது.
 
பெரெஸ் உலகறிந்தவராகி விட்டாலும் உள்ளூரிலும் அவருக்குப் போதிய ஆதரவு இருந்தால்தான் அவரால் ‘தற்காலிகப் பிரதமர்’ என்ற அடைமொழியை நீக்கிக் கொள்ள முடியும். அவர் ‘நெஸ்ஸெட்’டின் (இஸ்ரேல்பாராளுமன்றத்தின் பெயர் அது) நம்பிக்கையைப் பெற்று பிரதமராகி விடுவார் என்றே பலரும் நம்பினார்கள்.
 
இஸ்ரேல் பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவரான நெதன் யாஹு, பெரஸின் தேர்வுக்கும் அவரது முயற்சிகளுக்கும் குறுக்கே நிற்கப் போவதில்லை என்று வேறு கூறியிருந்தார். அடுத்த பாராளுமன்றக் கூட்டம் கூடும்போது பெரஸ் பெறவிருக்கும் நம்பிக்கைத் தீர்மா னத்துக்குத் தான் எந்தவித இடைஞ்சலும் செய்யப் போவதில்லை என்று அவர் கூறினார். என்றாலும் ராபினுக்கு உள்ள ‘கவர்ச்சி’ பெரெஸுக்கு மக்களிடையே இல்லை என்கிற உண்மையை அரசியலாக்காமல் எதிர்கட்சி விடுமா என்பது பலருக்கும் சந்தேகமாகவே இருந்தது.
 
ராபின் மறைவுக்குப் பின் இஸ்ரேல் சீரான வேகத்தில் பாலஸ்தீனத்துடனான சமாதான முயற்சிகளைத் தொடருமா என்ற கேள்வியும் உலகெங்கும் தோன்றியது.
 
ஏற்கெனவே எடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளின் பல்வேறு கட்டங்களில் பெரெஸ் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார் என்பதால் சமாதானம் தொடருமென்ற நம்பிக்கையும் படர்ந்தது. பெரெஸும் இதற்கான உறுதி மொழியை அளித்தார். அடுத்த வருடம் பொதுத் தேர்தல் வந்தது.
 
வெளியுறவு அமைச்சரும், அமைதி ஒப்பந்தத்திற்குப் பாடுபட்டவருமான பெரஸ்தான் பிரதமராவார் என்று பல நாடுகளும் எதிர்பார்த்திருக்க, தேர்தலில் நெதன்யாஹு வென்றார். இவர் ஒரு தீவிர யூதர்!
 
“பாலஸ்தீனர்களுக்கு அதிகம் விட்டுக் கொடுத்ததால்தான் இஸ்ரேலின் பிரச்சினை தொடரு கிறது’’ என்று தேர்தலின்போதே முழுக்கமிட்டவர் இவர். அமைதி ஒப்பந்தத்தை இவர் மதிப்பாரா என்பது கேள்விக் குறியானது. பிரதமரான பிறகு வெளிப்படை யாக இப்படிச் சொல்லவில்லை என்றாலும், ஒப்பந்த விதிகளை செயல்படுத்துவதில் இவர் போதிய முனைப்பு காட்டவில்லை.
 
எல்லாம் கிடக்க ரொம்ப ஸென்ஸிடிவான ஒரு விஷயத்தில் யோசிக்காமல் (அல்லது வேண்டு மென்றே?) நடந்து கொண்டு பல விபரீதங்களுக்கு வழிவகுத்தார். ஜெருசலேம் நகரிலுள்ள ஒரு குகைப்பாதை மிகவும் பிரசித்த மானது. மூன்று மதங்களின் முக்கியப் பகுதிகளை இணைக்கிறது இது.
 
யூதர்களின் ஹெராம் புனிதக் கோயில், நபிகள் நாயகம் சொர்க் கத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இடம், ஏசுநாதர் சிலுவையில் அறையப்படுவதற்காக இழுத்துச் செல்லப்பட்ட பாதை. இப்படி மூன்று பகுதிகளை இணைக்கும் இந்த குகைப் பாதைக்கு ஒரு வழிதான் உண்டு. அது இஸ்ரேலின் எல்லைக்குள் இருந்தது.
 
“இந்த குகைப் பாதைக்கு இன்னொரு புதிய வழியும் இருந் தால் சுற்றுலாப் பயணிகளுக்கு ரொம்ப சவுகரியமாக இருக்கும்’’ என்ற படி ஒரு புதிய நுழைவுப் பாதையை சமீபத்தில் உண்டாக் கியது இஸ்ரேல் அரசு. இந்த நுழைவுப் பாதையை அமைத்தது பாலஸ்தீனர்களின் பகுதியில்!.
 
பாலஸ்தீனர்கள் கொதித்தெழுந் தார்கள். கற்களிலிருந்து துப்பாக்கி வரை சகல ஆயுதங்களும் பயன் படுத்தப்பட்டன. இதற்கு நடுவே ஐரோப்பியச் சுற்றுப் பயணத்தில் இருந்த நெதன்யாஹு “இந்தப் புதிய நுழைவுப் பாதையை திறந்ததில் நான் பெருமைப் படுகிறேன்’’ என்று ஓர் அறிக்கை விட்டுத் தொலைத்தார்.
 
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனர் களுக்கும் நடைபெற்ற போராட் டத்தில் நூறு பேர் இறந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமானவர் களுக்குக் கடுமையான காயம். ஆக ஒப்பந்தங்களுக்குப் பிறகும் அமைதி என்பது இரு நாட்டு மக்களுக்குக்கும் கிட்டாத தாகவே இருந்தது. செப்டம்பர் 11, 2001 அன்று பாலஸ்தீன தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து யாசர் அராபத் அவரது தலைமையகமான ரமல்லாவைத் தாண்டி வெளியேறாதவாறு பார்த்துக் கொண்டது இஸ்ரேல்.
 
ஷெரீன் சலமா என்ற ஆஸ்தி ரேலிய பத்திரிகையாளர் ஒருவர் 2004-ல் யாசர் அராபத்தைப் பேட்டி கண்டார். பத்திரிகையாளர் சந்திப்பு என்ற பொதுவான தளத்தில் மட் டுமே ஊடகங்களை எதிர்கொண்ட யாசர் அராபத் அளித்த கடைசிப் பேட்டியாக அது அமைந்தது.
 
(இன்னும் வரும்..)
 
Link to comment
Share on other sites

பிறவிப் பகைவர்கள் – பாலஸ்தீனம், இஸ்ரேல் 10

 

palestine_2233886f.jpg

யாசர் அராபத்தின் இறுதி ஊர்வலம்
 
பத்திரிகையாளர் ஷெரீன் சலமாவுக்கு யாசர் அராபத்தைப் பேட்டி காண சுலபத்தில் அனுமதி கிடைக்கவில்லை.தொடர்ந்து சில வாரங்கள் அவர் இதற்கான முயற்சியில் ஈடுபட்ட போது யாசர் அராபத்தின் வளாகம் மூன்று முறை இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்டது. அவர் தங்கியிருந்த இடத்தைத் தவிர சுற்றிருந்த பல பகுதிகளும் தரைமட்டமாயின. பாலஸ்தீனர்கள் அந்த வீட்டைச் சூழ்ந்து கொண்டு ஓர் அரண் போலச் செயல்பட்டனர்.
 
அவர்கள் யாசர் அராபத்தை ஒரு தந்தை போலக் கருதியதைத் தன்னால் உணர முடிந்தது என்றார் ஷெரீன். ஒரு வன்முறையாளராக மட்டுமே யாசரை எண்ணியிருந்த அவருக்கு யாசரின் மறுமுகம் புலப்படத் தொடங்கியது. 74 வயது முதியவர் ஒருவர் இப்படிப்பட்ட சூழலைத் தாக்குப் பிடிப்பதை ஒரு பெரும் சவாலாகவே கருதினார் அந்தப் பத்திரிகையாளர்.
 
ஒரு மாதக் காத்திருப்புக்குப் பின் பேட்டிக்கான வாய்ப்பு கனிந்தது. தனியொரு மனிதராக பாலஸ்தீனர்களுக்கு யாசர் அராபத் ஓர் அடையாளம் கொடுத்ததை ஷெரீனால் உணர முடிந்தது. அடுத்த 15 நாட்களில் (2004 அக்டோபரில்) யாசர் அராபத்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. குமட்டல், வாந்தி என்று தொடங்கியது உடல்பாதிப்பு. துனீசியா, எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளிலிருந்து மருத்துவர்கள் வந்து அவர் உடல்நிலையை சோதித்தார்கள்.
 
உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் கருதினார்கள். இஸ்ரேல், பாலஸ்தீன மருத்துவமனைகள் வேண்டாம் என்பதில் ஒருமித்த கருத்து நிலவியது. பதற்றமான சூழல், பாதுகாப்புக்குக் கேடு என்பவைதான் முக்கியக் காரணங்களாகக் கருதப்பட்டன.
 
ஃபிரான்ஸிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப் பட்டார். அது பாரிஸின் புறநகர்ப் பகுதி ஒன்றில் அமைந்திருந்தது. சேர்த்த சில நாட்களிலேயே அவரது சிறுநீரகங்கள் பழுதடைந்தன. நவம்பர் 3 அன்று அவர் மெல்ல மெல்ல கோமா கட்டத்தை அடைந்தார். ஃபிரான்ஸ் சென்றிருந்த பாலஸ்தீன அதிகாரிகளுக்கும் யாசர் அராபத்தின் மனைவி சுஹாவுக்குமிடையே கருத்து வேற்றுமைகள் வளர்ந்தன.
 
‘’அபு அம்மரை (யாசர் அராபத்தை) உயிரோடு புதைக்கப் பார்க்கிறார்கள்’’ என்று அறிவித்தார் சுஹா. யார்? அதைச் சொல்லவில்லை அவர்! பிரான்ஸ் நாட்டு சட்டப்படி நோயாளி குறித்த நிலைமையை மருத்துவர்கள் பிறரிடம் விவாதிக்கக்கூடாது. அப்படியே தெரிவித்தாலும் நோயாளியின் நெருங்கிய உறவினரிடம் மட்டும்தான் அது குறித்து தெரிவிக்கலாம், விவாதிக்கலாம். எனவே அராபத் உடல்நிலைகுறித்த விவரங்களை அவர் மனைவியிடம் மட்டுமே தெரிவித்துக் கொண்டிருந்தனர் மருத்துவர்கள். இதில் அதிகாரிகளுக்கு கடும் அதிருப்தி. சுஹா தகவல்களை வடிகட்டித்தான் தங்களுக்கு அளிக்கிறார் என்ற குற்றம்சாட்டினர்.
 
2004 நவம்பர் 11 அன்று யாசர் அராபத் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. கடும் மாரடைப்பு என்று காரணம் கூறினார்கள் மருத்துவர்கள். ஆனால் மர்மம் தொடர்ந்தது.
 
கல்லீரல் பாதிக்கப்பட்டு ‘சிரோஸிஸ்’ என்ற நிலை அவருக்குத் தோன்றியதாக சில மருத்துவ வட்டாரங்கள் கூறின. ஆனால் இதை வெளியே தெரியாமல் மறைத்து விட்டார்கள். யாசர் அராபத் மது அருந்தியதில்லை. சிரோஸிஸ் நிலை மதுவினால் மட்டும்தான் உண்டாகும் என்பதுமில்லை. என்றாலும் அதை மதுவுடன் சம்பந்தப்படுத்தியே பலரும் நினைப்பதால் எதிரணியினர் (இஸ்ரேல் மட்டுமல்ல ஹமாஸும்தான்) இதை ஒரு வாய்ப்பாகக் கருதி பிரச்சாரம் செய்து விடக் கூடாது என்பதனால் இந்த விவரத்தை வெளியே வரவிடாமல் இருக்க முயற்சித்ததாக ஒரு வதந்தி பரவியது. அவரது ரத்தத்தில் புதிரான பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
 
பல வருடங்களுக்குப் பிறகு யாசர் அராபத்தின் எஞ்சிய உடலைச் சோதித்த சுவிட்சர்லாந்து மருத்துவர்கள் அவர் உடலில் அதிக அளவு போலோனியம் காணப்பட்டதாக தெரிவித்தனர். போலோனியம் என்பது மிக அதிக அளவு கதிரியக்கம் கொண்ட ஒரு நஞ்சு. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இஸ்ரேலின் சதியால்தான் யாசர் அராபத் விஷம் செலுத்தப்பட்டு இறந்தார் என்ற குரல்கள் மீண்டும் எழும்பத் தொடங்கியிருக்கின்றன. ஆனால் இஸ்ரேல் இதை மறுத்திருக்கிறது.
 
யாசர் அராபத் இறந்தவுடன் முகம்மது அப்பாஸ் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவரானார். 2005 ஜனவரியில் பாலஸ்தீனத்தின் ஜனாதிபதியாகவும் ஆனார். ஃபடா கட்சியின் உறுப்பினர் இவர். (ஃபடா கட்சியின் முக்கிய எதிர்கட்சி ஹமாஸ். ஹமாஸைப் பொருத்தவரை அப்பாஸ் ஒரு தலைவரே இல்லை).
 
1950களிலேயே முகம்மது அப்பாஸ் பாலஸ்தீன அரசியலில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டவர். இஸ்ரேல் ஆக்ரமித்த பகுதிகளிலிருந்து பாலஸ்தீனர்களில் ஒரு பகுதியினர் கட்டாருக்குச் சென்றபோது இவரும் சென்றார். 1961ல் யாசர் அராபத் ஃபடா கட்சியைத் தொடங்கியபோது அதில் உறுப்பினரானார். கத்தார், குவைத் மற்றும் வளைகுடா நாடுகளில் வசித்த பணக்கார பாலஸ்தீனர்களின் நிதி உதவியை யாசர் அராபத் நாடினார். இந்தவிதத்தில் பாலமாகச் செயல்பட்ட முகம்மது அப்பாஸ் வேகமாக வளர்ந்தார்.
 
என்றாலும் அப்பாஸ் பெரும் வளர்ச்சி கண்டது 2003ல். அந்த ஆண்டில் யாசர் அராபத்தோடு இனி பேச்சு வார்த்தை கிடையாது என்று இஸ்ரேல், அமெரிக்கா இரண்டுமே அறிவித்து விட்டன. ஃபடா கட்சியின் மற்றொரு தலைவரான மர்வான் பர்கவ்டி என்பவர் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு இஸ்ரேல் சிறையில் இருந்தார். முகம்மது அப்பாஸ் பெரும் புகழ் வெளிச்சத்துக்கு வந்தது அப்போதுதான்.
 
(இன்னும் வரும்..)
 
 
 
 

 

Link to comment
Share on other sites

பிறவிப் பகைவர்கள் பாலஸ்தீனம், இஸ்ரேல் 11

 

palestine_2235044h.jpg

முகம்மது அப்பாஸ் - ஏரியல் ஷரோன் (கோப்புப்படம்)

யாசர் அராபத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்த மேலை நாடுகள் முகம்மது அப்பாஸுடன் பேச்சு வார்த்தை நடத்த சம்மதித்தன. இந்த ஏற்பாட்டில் யாசர் அராபத்துக்கு முழு சம்மதமில்லை. என்றாலும் மேலை நாடுகள் தொடர்ந்து பிடிவாதம் காட்டியதால் வேறுவழியின்றி இதற்குச் சம்மதித்தார்.

2003 மார்ச்சில் அப்பாஸை ’பாலஸ்தீன தேசிய சக்தி’ என்ற அமைப்பின் தலைவர் ஆக்கினார் யாசர் அராபத். ஆனால் அடுத்த ஆண்டே இருவருக்குமிடையே பல கருத்து மோதல்கள் ஏற்பட்டன. எந்த அளவுக்கு, யார் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது என்பதில் பிரச்சினைகள் வெடித்தன.

 

மேலை நாடுகளும், இஸ்ரே லும் “உங்கள் அதிகார மனப் பான்மையில் அப்பாஸுக்குரிய உரிமையைக் கொடுக்க மாட்டேன் என்று மறுக்கிறீர்கள்” என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டின. போதாக்குறைக்கு ‘எனக்குரிய அதிகாரம் கொடுக்க வில்லை என்றால் நான் ராஜினாமா செய்கிறேன்’ என்று அறிவித்த அப்பாஸ், பாலஸ்தீன பாராளுமன்றத்துக்கும் இந்தப் பிரச்சினையை எடுத்துச் சென்றார்.

 

இதைத் தொடர்ந்த நாட்களில் யாசர் நோய்வாய்ப்பட்டு பாரிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.

யாசர் அராபத் இறந்தபிறகு 2005 ஜனவரியில் நாட்டின் (Palestinian National Authority) அதிபராக மக்கள் அப்பாஸைத் தேர்ந்தெடுத்தனர். 60 சதவிகிதத் திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார் அப்பாஸ். ‘இந்த வெற் றியை அராபத்தின் ஆத்மாவுக் குக் காணிக்கையாக்குகிறேன். இந்த வெற்றி நமது மக்கள், நமது தியாகிகள் மற்றும் 11,000 சிறைக் கைதிகளுக்கும் உரித்தானது’’ என்றார். கூடவே இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதம் தாங்கும் செய்கையை ஒரு போதும் நியாயப்படுத்தக் கூடாது என்பதில் குறியாக இருந்தார்.

இஸ்ரேலியப் பிரதமர் ஏரியல் ஷரோனும், பாலஸ்தீன தலைவர் முகம்மது அப்பாஸும் இணைந்து ‘வன்முறைகளின் வேரறுப்போம்' என்று அறிவித்ததன் தொடர்ச்சியாக காஸாவில் அமைந்துள்ள 21 யூதக் குடியிருப்புகளில் ஐந்து காலி செய்யப்பட்டன. மேற்குக் கரையில் உள்ள ஐந்து சிறு நகரங்களை உடனடியாக பாலஸ்தீனர்களுக்கு அளித்து விடுவதாகவும் 500 பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்வ தாகவும் இஸ்ரேல் கூறியது

 

இஸ்ரேலிய ராணுவம் வெளி யேறிய பிறகு ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள், இடையில் யூதர்கள் ஆக்கிரமித்திருந்த குடியேற்றங்களில் உற்சாகக் கூக்குரலோடு மறுபிரவேசம் செய்தார்கள். மசூதிகளில் மீண்டும் மீண்டும் குரான் ஓதப்பட்டது. வாணவெடிகள் சீறிப்பாய்ந்தன.

 

இப்போதைய நிலை என்ன? அதைப் பார்ப்பதற்குமுன் இப்போது அடிக்கடி எழுப்பப்படும் ஒரு முக்கியமான கேள்விக்கான விடையை அறிந்து கொள்வோம்.

 

பாலஸ்தீனம் ஒரு நாடா?

 

நவம்பர் 2012ல் ஐ.நா.பொதுச்சபை பாலஸ்தீனத்துக்கு ‘அப்சர்வர் ஸ்டேட்’ (Observer State) என்ற அந்தஸ்தைக் கொடுத்தது. பாலஸ்தீனக் கொடி முதன்முறையாக ஐ.நா.சபை வளாகத்தில் பறந்தது.

அப்படியானால் பாலஸ்தீனம் ஒரு நாடு இல்லையா?

‘‘ஒரு புதிய நாட்டிற்கான அங்கீகாரம் என்பது பிற நாடுகள் அதை அளிக்கத் தயாரா இல்லையா என்பதைப் பொறுத்தது. தூதரக உறவை புதிய நாட்டுடன் வைத்துக் கொள்ள பிற நாடுகள் தயாராகும்போது நாடு என்ற அந்தஸ்து அதற்குக் கிடைக்கும் எனலாம். இப்படிப் பார்க்கும்போது ஐ.நா. ஒரு நாடும் அல்ல, அரசும் அல்ல. எனவே இந்த அங்கீகாரத்தை வழங்க முடியாது’’. இப்படி வேறு யாரோ கூறவில்லை. ஐ.நாவே இப்படி அறிவித்தது.

 

ஆனால் சில சமயம் இது உண்மையல்ல என்று தோன்றுகிறது. கொசோவோ என்பதை ஒரு நாடாக பிற நாடு கள் அங்கீகரித்து விட்டன. ஆனால் ஐ.நா.சபை அதை உறுப் பினராக்கிக் கொள்ளவில்லை.

அரிதாக, முழுச் சுதந்திரமும் கிடைப்பதற்கு முன்பாகக் கூட சில நாடுகளுக்கு உறுப்பினர் அந்தஸ்தை ஐ.நா. அளித்திருக் கிறது. நம் நாடே கூட இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. 1945லேயே இந்தியா ஐ.நா.வின் உறுப்பினராகி விட்டது. (அதற்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் நாம் சுதந்திரம் பெற்றோம்).

 

அப்சர்வர் ஸ்டேட் என்கிற அந்தஸ்தை ஐ.நா.சபை பாலஸ் தீனத்துக்கு அளித்தவுடன் அமெரிக்கா இது குறித்து என்ன கூறப்போகிறது என்று ஊடகங்கள் காத்திருக்க, அமெரிக்கா மெளனத் தையே விடையாகத் தந்தது.

கேள்விகளால் நெருக்கிய பிறகு, ஐ-நா.வுக்கான அமெரிக்கத் தூதர் சூசன் ரைஸ் ‘பாலஸ்தீனம் இன்னமும் ஒரு நாடாக அங்கீ கரிக்கப்படவில்லை என்பதைத் தான் இந்த அறிவிப்பு சுட்டிக் காட்டுகிறது’’ என்றார்.

 

ஐ.நா.சபையின் உறுப்பினராக வேண்டும் என்றால் அதற்கு ஐந்து தகுதிகள் வேண்டுமென்று சர்வதேச நீதிமன்றம் 1948ல் கருத்து தெரிவித்தது. அது ஒரு நாடாக இருக்க வேண்டும். அமைதியை விரும்புவதாக இருக்க வேண்டும். ஐ.நா.சபையின் சட்டங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இவற்றின்படி செய்ய வேண்டிய காரியங்களை அது செய்யும்வகையில் இருக்க வேண்டும். இவற்றை விருப்பத்துடன் செய்ய வேண்டும். (அதாவது பிற நாடுகளின் கட்டயாத்தினால் மட்டுமல்ல).

பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அங்கீகரிக்கலாமா வேண் டாமா என்ற கேள்வி எழுந்தபோது, இந்த ஐந்து நிபந்தனைகளில் சில பாலஸ்தீனத்துக்குப் பொருந்தவில்லை என்று ஐ.நா.பாதுகாப்புக் குழு கருத்து தெரி வித்தது. முக்கியமாக ‘அமைதியை விரும்பும் நாடாக இருக்க வேண்டும்’ என்ற நிபந்தனையும், தன் எல்லைப் பகுதிகள்மீது அதற்குப் பிடிமானம் இல்லாமல் இருப்பதும் பாலஸ்தீனம் தனி நாடாக ஏற்றுக்கொள்ளப்பட தடைகளாக உள்ளனவாம். அதனால்தான் ‘அப்சர்வர் ஸ்டேட்’ என்ற அரைகுறை அந்தஸ்தை பாலஸ்தீனத்துக்கு வழங்கியது ஐ.நா.சபை.

‘அப்சர்வர் ஸ்டேட்டாக’ இருப்ப தால் என்ன பயன்? ஐ.நா.வின் ஏஜென்ஸிக்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் பாலஸ்தீனமும் இணைந்து பணியாற்றலாம்.

 

தனக்கென்று ஓர் அரசு, வரையறுக்கப்பட்ட எல்லை, நிரந்தர மக்கள் தொகை, பிற நாடுகளுடன் வெளியுறவு விவகாரங்களில் ஈடுபடும் திறன் - இந்த நான்கும் இருந்தால் பொதுவாக ஒரு பகுதி நாடாக ஏற்றுக் கொள்ளப்படும். ஆக பாலஸ்தீனம் அங்கீகாரத்துக்காக ஊசலாடிக் 

 

http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-11/article6667783.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

பிறவிப் பகைவர்கள் - பாலஸ்தீனம், இஸ்ரேல் 12

 

isrel_2235937f.jpg

பாலஸ்தீனம், இஸ்ரேல் கொடிகளுடன் போராட்டம். (கோப்புப் படம்)
 

ஜெருசலேம் நகர் இஸ்ரேலின் ஒரு பகுதி யாகவே உள்ளது. என்றாலும் 1967க்கு முன்பாகவே அந்தப் பகுதியில் தங்கிவிட்ட அரேபியர்கள் இன்னமும் அங்கு தொடர்கிறார்கள். இப்படி இஸ்ரேலியக் குடியுரிமையை அனுபவித்துக் கொண்டிருப் பவர்கள் சுமார் 17 லட்சம் பேர்.

 

இவர்களுக்குதான் சமீபகாலமாக சோதனை. கட்டடங்கள் எழும்புவதற்கான விதிமுறைகளை மீறியதாகக்கூறி ஜெருச லேம் நகரில் பல கட்டடங்கள் இடிக்கப்படு கின்றன. அவையெல்லாமே இஸ்ரேலில் தங்கிவிட்ட பாலஸ்தீனியர்களின் வீடு களாகவே உள்ளன.

 

இதனால் கோபமடைந்த ‘இஸ்ரேலிய முஸ் லிம்கள்’ கற்களை எறிந்தும், பட்டாசுகளை வீசியும் அரசுக்கு எதிரான தங்கள் கோபத்தை வெளிக்காட்டுகிறார்கள். இஸ்ரேல் அரசோ ஸ்டென் கன்னை அவர்களை நோக்கித் திருப்பியபடி பயமுறுத்திக் கொண்டிருக் கிறது. மேற்குக் கரை, காஸா ஆகிய இரண்டுமே தன்னுடையது என்கிறது பாலஸ் தீனம். ஆனால் இரண்டுமே இஸ்ரேலால் ஆக்ரமிக்கப்பட்ட இடங்களாகவும் இருந்துள் ளன. 2005-ல்தான் இஸ்ரேல் காஸாவிலிருந்து வெளியேறியது. 2007-ல் ஹமாஸ் குழுவின் கையில் காஸா சென்று விட்டது.

 

கல்வியறிவு மிக அதிகம் கொண்ட நாடாக (90 சதவீதத்திற்கும் அதிகம்) இஸ்ரேல் இருக்க, பாலஸ்தீனம் இதில் பின்னடைவில் உள்ளது. நாலாபுறமும் பகை நாடுகளென்ப தால் இஸ்ரேலுக்கு பலத்த ராணுவம் தேவைப் படுகிறது. பதினெட்டு வயதான எல்லோரும் (திருமணமான பெண்களைத் தவிர) ராணு வத்தில் சேருவது கட்டாயம். ஆணாக இருந் தால் குறைந்தபட்சம் மூன்று வருடங்களும், பெண்னென்றால் இரண்டு வருடங்களும் ராணுவப் பணியைத் தொடர வேண்டும்.

 

சராசரி மனிதனின் ஆயுள் உலகிலேயே மிக அதிகம் இஸ்ரேலில்தான் (!) என்கிறார்கள். அற்புதமான மருத்துவமனைகளும், சிகிச்சை முறைகளும் முக்கிய காரணம்.

 

1950 ‘மறுபிரவேச சட்டம்’ ஒன்றைக் கொண்டு வந்தது அரசு. இதன்படி உலகின் எந்த மூலையில் இருக்கும் யூதரும் இஸ்ரே லில் வந்து தங்கிக் குடியுரிமை பெறலாம். ஆனால் 1970ல் ஒரு சட்டத் திருத்தம். இதன் படி யூத ரத்தம் அம்மா வழியில் வந்திருக்க வேண்டும். தவிர அவர் யூத மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறியிருக்கக் கூடாது என் பது இப்போதைய கூடுதல் நிபந்தனைகள்.

 

பாராளுமன்றம் ‘நெஸ்ஸெட்’ என்று அழைக்கப்படுகிறது. மக்களே நேரடியாகப் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் முறை சமீபத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. நெதென்யாகுவைப் பிரதமராக மக்கள் தேர்ந்தெடுத்தாலும், நாடாளுமன்றத்தில் அவரது லிகுட் கட்சிக்கான இடங்கள் முன்பைவிட குறைந்துவிட்டன. அதே சமயம் ராபின், பெரெஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்த தொழிலாளர் கட்சிக்கும் கணிசமான நாடாளுமன்ற இடங்கள் கிடைக்கவில்லை. பல்வேறு உதிரிக் கட்சிகளுக்கு நிறைய சீட்கள். இவற்றில் பெரும்பான்மையானவை தீவிரவாதிக் கட்சிகள் என்பது பயமுறுத்தும் உண்மை.

இஸ்ரேல் பாலஸ்தீனர்கள் மீதான பிடியை இறுக்குகிறது. தங்கள் பகுதியில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் ஐந்து வருடங்களுக்குமேல் அங்கு தங்காவிட்டால் அவர்களுக்கான குடியுரிமையை இழந்துவிடுவார்கள் என்று சட்டம் இயற்றியிருக்கிறது. இப்படிக் குடியுரிமையை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 14,000.

ஓரிரு மாதங்களுக்குமுன் பாலஸ்தீனியர் களின் கூட்டத்தில் பங்கேற்ற பாலஸ்தீன அதி பர் முகம்மது அப்பாஸ், ‘’ஜெருசலேம் நகரில் உள்ள நமது ஆலயத்துக்குள் எந்த யூதரும் நுழையக் கூடாது. எப்படியும் இது தடுக்கப்பட வேண்டும்’’ என்று கூறியது வன்முறைக்கு உரமிடுவதாக அமைந்துள்ளது.

 

தங்கள் மனஉளைச்சலை பாலஸ்தீனர்கள் பலவிதங்களில் வெளிப்படுத்துகிறார்கள்.

‘’அப்பாஸ் போன்றவர்களும், ஹமாஸ் இயக்கத்தினரும் நாட்டில் வன்முறைகளைத் தூண்டி விடுகிறார்கள்’’ என்கிறது இஸ்ரேலிய அரசு. ‘’தெருக்களில் ஒவ்வொரு மணி நேரமும் பாலஸ்தீன அமைப்புகளால் வன்முறை தூண்டப்படுகிறது’’ என்கிறார் அதன் பிரதமர்.

 

‘’அமைதிக்காக நாங்கள் பாடுபடும்போது ஓரிரு வாக்கியங்கள் மூலம் ஹமாஸ் அதை மொத்தமாகச் சிதைத்து விடுகிறது’’ என்கிறார் அப்பாஸ்.

ஹமாஸ் இயக்கத்தினர் அப்பாஸை ‘பொய் கூறுபவர், கோழை’ என்று ஏசுகிறார்கள். யாசர் அராபத் மட்டும் இப்போது இருந்திருந்தால் பாலஸ்தீனம் பிளவுபட்டிருக்காது என்கிறார்கள் இப்போது!

 

என்னதான் தீர்வு?

பாலஸ்தீனம்-இஸ்ரேல் இரண்டும் இணைக்கப்பட்டு ஒரே நாடாக ஆகவேண்டும் என்கிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள். ஆனால் இதை இஸ்ரேல் ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளாது. அந்தநாட்டின் பெயர் என்ன என்பதிலிருந்து இன்னொரு ஹிட்லர் ராஜ்யம் உருவாகாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்பதுவரை இஸ்ரேல் எழுப்பக்கூடிய பல கேள்விகளுக்கான பதில்கள் சங்கடம் அளிக்கக் கூடியவை.

மற்றொரு தீர்வை 2013 நவம்பரில் ஐ.நா. அறிவித்தது. 1967க்கு முந்தைய எல்லைகளை பாலஸ்தீனமும், இஸ்ரேலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இரு நாடுகளும் அங்கீகரிக்கப்படும். 165 நாடுகள் இதை ஏற் றுக்கொள்ள 6 நாடுகள் எதிர்த்து வாக்களித் தன. அந்த ஆறு நாடுகள் இஸ்ரேல், கனடா, அமெரிக்கா, மைக்ரோனேஷியா, மார்ஷல் தீவுகள். பலாவு. 165 நாடுகள் ஆதரித்தாலும் வீட்டோ அதிகாரம் அமெரிக்காவுக்கும் உண்டே. தவிர ஜெருசேலம் என்னவாகும்? ஆக தொடங்கிய நிலையிலேயே இருக்கிறது பிரச்னை.

மும்மதங்கள் சங்கமித்த ஜெருசலேம் அந்த மதங்களின் முக்கிய போதனையான சகிப்புத் தன்மை மற்றும் சக உயிர்களிடம் அன்பு என்பதைக் காற்றில் பறக்கவிட்டதன் பலனாக நிம்மதி இழந்து தவிக்கின்றது.

 

http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-12/article6669794.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.