Jump to content

சந்திரிகா குமாரதுங்க – சம்பந்தன் இரகசியச் சந்திப்பு? ஒப்பந்தமும் கைச்சாத்து?


Recommended Posts

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாக்க குமாரதுங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கூட்டமைப்பின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

இதன் போது பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் அவருக்கும், சந்திரிக்காவுக்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த உடன்படிக்கையின் கீழ் 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்கவும், கிழக்கு மாகாண சபையில் மாற்றங்களை ஏற்படுத்தவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அளுநர்களை மாற்றவும் இணங்கப்பட்டுள்ளது.

ஆனால் 13ம் திருத்தச்சட்டத்துக்கு அப்பால் எந்த தீர்வையும் தற்போதைக்கு எதிர்பார்க்க வேண்டாம் என்று, சந்திரிக்கா இதன் போது சம்பந்தனிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உடன்படிக்கை குறித்த செய்திகள் மிகுந்த இரகசியமாக பேணப்பட்டு வருகிறது. http://www.pathivu.com/news/35599/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு மைத்திரியை ஆதரிக்கும் முடிவை எடுக்குமானால்
மகிந்தவின் வெற்றி உறுதிப்படுத்தப்படும்

Link to comment
Share on other sites

கூட்டமைப்பு மைத்திரியை ஆதரிக்கும் முடிவை எடுக்குமானால்

மகிந்தவின் வெற்றி உறுதிப்படுத்தப்படும்

 
கூட்டமைப்பு ஆதரிச்சாலென்ன ஆதரிக்காவிட்டாலென்ன மகிந்தவை அசைக்க முடியாது.
தலைவரை அழிச்சதுக்காகவே சிங்களவன் ஆயுள் முழுக்க மஹிந்தவுக்கு வோட்டு போடுவான்.
தலைவர் நேரில் வரும் போது சிங்களவனே மஹிந்தவுக்கு ஆப்படிப்பான்.  :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப்படாமல் முதலில ஆட்டை வெட்டலாமா எண்டு பாருங்கோ சம்பந்தர் ஐயா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹக்ஹீமும், சம்பந்தரும் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் வாக்குப் போட போற அவையிண்ட ஆக்கள், மைத்திரிக்கு தான், போடுவினம்.

 

கோத்தாவுக்கு நன்றிகள் சொல்லவேண்டும் மைத்திரி !  :D

Link to comment
Share on other sites

சிங்கள மக்களோ தமிழ் மக்களோ முஸ்லீம் மக்களோ இந்த தேர்தலை தீர்மானிக்கப் போகிறவர்கள் இல்லை. 

 

எல்லாம் வல்ல ஊடகங்களே... எல்லாவற்றையும் நடத்தி முடிக்கும். அதன் பின்னணியில யார் இருக்கிறார் என்று கேட்க கூடாது.  :)

Link to comment
Share on other sites

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவெடுக்கவில்லை எனத் தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. இந்த விடயம் குறித்து தமிழ் மக்களின் கருத்துக்களை கேட்டறியப் போவதாகவும், அத்துடன் கட்சிக்குள்ளும் பேச்சுக்களை நடத்தவோம் எனக் கூறினார். ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பல்வேறு மட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டம் தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிடுகையில், "அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்த இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் நாம் யாரை ஆதரிப்பது என்பது குறித்து கலந்துரையாடினோம். பல்வேறு மட்டங்களில் நாம் ஆராய்ந்தோம். இந்தக் கூட்டத்தில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்கு முடிவெடுத்துள்ளது. புத்திஜீவிகள், சிவில் சமூகத்தினரின் கருத்துக்களையும் கவனத்தில் கொள்ளவுள்ளோம். ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதியே இடம்பெறவுள்ளது. டிசம்பர் மாதம் 8ஆம் திகதியே வேட்புமனுத்தாக்கல் தாக்கல்செய்யும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன. ஆகவே, குறித்த விடயம் தொடர்பாக தீர்க்கமான முடிவொன்றை எடுப்பதற்கு எமக்கு கால அவகாசம் இருக்கின்றது. அது தொடர்பில் அவசரப்படவேண்டிய தேவையில்லை. மிகவும் பக்குவமான அந்தக் கருமங்கள் தொடர்பில் நாம் தீர்க்கமான முடிவெடுப்போம். அதற்காக தொடர்ந்தும் எமக்குள்ளே பேச்சுக்களை நடத்தவுள்ளோம்" - என்றார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவிக்கும் கருத்துக்களே உத்தியோகபூர்வமானது என்று நேற்றைய கூட்டத்தில் கூட்டமைப்பின் எம்.பிக்கள் தீர்மானம் நிறைவேற்றினர். எனவே, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களை சம்பந்தன் எம்.பியே ஊடகங்களுக்குத் தெரிவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. -

 

 http://malarum.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sampanthan suspected of clandestine deal

[TamilNet, Sunday, 23 November 2014, 23:28 GMT]

Tamil National Alliance (TNA) Parliamentary Group Leader R. Sampanthan is suspected of making a clandestine deal on his own with former SL president Chandrika Kumaratunga on supporting the common opposition candidate Maithiripala Srisena, informed sources in Colombo said on Sunday. The deal harps of implementing the 13th Amendment, bringing in changes in the Eastern Provincial Council (EPC) and in changing the governors of the North and East. There was no discussion on international investigations of the war crimes. Sampanthan’s suspected secret deal raises eyebrows within the TNA and there is already heated discussion on the issue, the sources further said.

Ms Chandrika Kumaratunga has met Mr Sampanthan this weekend and urged TNA’s support for Maithiripala Srisena, the sources in Colombo told TamilNet.

Kumaratunga has also asked not to seek anything above the implementation of the 13th Amendment at the moment.

The debated question within the TNA is whether it should support any of the presidential contesters of the genocidal State or to keep quite leaving the choice of the next government to the conscience of the Sinhala nation, the informed sources said.

Senior leaders of Ilangkai Thamizh Arasuk Kadchi (ITAK) have sought explanation from the executive committee on the stand taken by Mr Sampanthan without consulting his own party and the other parties in the Tamil alliance. They have also demanded to convene a meeting of the general body.

In the meantime, Suresh Premachandran MP, a spokesperson of the TNA and the leader of the EPRLF (Suresh-wing) has told media circles that TNA parliamentarians would be meeting in Colombo on Monday to discuss the issue.

Link to comment
Share on other sites

  • 3 months later...

கருத்துகள் மீளாய்வு   :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.