Jump to content

MS VS MR ஆரம்பம் - பொலன்னறுவையில் மகிந்தவின் பதாதைகள் அகற்றப்பட்டன


Recommended Posts

Mr%20Ms_CI.jpg

பொலன்னறுவை மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதாதைகள்முற்றாக சேதப்படுத்தி கழற்றியெறியப்பட்டுள்ளன.

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நண்பகல் பொலன்னறுவை சோமாவதிய விகாரைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

 

நேற்று நள்ளிரவு முதல் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரும் பொலிசாரும் பொலன்னறுவையில் நிலைகொண்டுள்ளனர்.

 

எனினும் இவர்களைக் கண்டு அஞ்சாமல் சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஆதரவாளர்கள் பகிரங்கமாக களமிறங்கி ஜனாதிபதியின் பதாதைகளை அகற்றியுள்ளனர்.

 

இந்த விடயம் தொடர்பாக அறிந்தவுடன் பொலன்னறுவைக்கான தனது விஜயத்தை ரத்து்ச் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வரவு செலவுத்திட்ட வாக்களிப்பின் பின்னர் அங்கு விஜயம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113827/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

மைத்திரிபாலவின் ஆதரவாளர் மாகாண அமைச்சுப் பதவியை இழந்தார்

 

maithri%20Mahi_CI.jpg

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர் மாகாண அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.


வடமத்திய மாகாணசபையின் உணவு, கூட்டுறவு, கைத்தொழில் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பேசல ஜயரட்னவே இவ்வாறு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.


இந்த அமைச்சுப் பதவியை வட மத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம். சமரக்கோன் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.


வட மத்திய மாகாண ஆளுனர் கருணாரட்ன திவுல்கனே முன்னிலையில் சற்று முன்னர், முதலமைச்சர் சமரக்கோன் குறித்த அமைச்சிற்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.


இதேவேளை, அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை குறித்து பேசல ஜயரட்னவிற்கு அறிவிக்கப்படவில்லை.


மைத்திரிபால சிறிசேனவின் நெருங்கிய சகாவாக பேசல ஜயரடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மைத்திரிபால ஆளும் கட்சியை விட்டு விலகியதன் பின்னர், அண்மையில் பொலனறுவையிலும் அனுராதபுரத்திலும் ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வுகளில் பேசல ஜயரட்ன பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113840/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.