Jump to content

எதற்காக மைத்திரிபால சிறிசேன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
எதற்காக மைத்திரிபால சிறிசேன?
 
பல தலைகள் இருந்தாலும், எதற்காக மைத்திரிபால சிறிசேன தேர்வு செய்யப்பட்டார் என்பது பலரது கேள்வியாயிருந்தாலும், சந்திரிகாவின் இந்த ரணிலுடன் சேர்ந்த நடவடிக்கையில் பெரும்பாலும், இந்திய, அமெரிக்க திரை மறைவு பங்களிப்பு உள்ளதாக கொழும்பு அவதானிகள் கருதுகின்றனர். காரணம் மகிந்தரின் சீன அன்பு.
 
பயமுறுத்தல் என்ற ஒரே ஒரு ஆயுதத்தினை வைத்தே, நாடு முழுவதனையும் ஆள முனைந்தனர், மெடுமுலன சண்டியர்களான அண்ணன் தம்பிமார். 'ஆத்தில ஓடுது தண்ணி, அண்ண பிடி, தம்பி பிடி' என எல்லாம் எமக்கே என்று ஆட்டையினைப் போட்டு கொண்டிருந்தார்கள்.
 
'சிறிய பாம்பாயினும் பெரிய தடி கொண்டு அடி' என்ற வகையில் எந்த சிறிய தேர்தலிலும் பெரு வெற்றி அடைந்தால் தான், எதிராளி பயப்படுவான், இருப்பவன் ஓடான் என நம்பினார்கள். 
 
சுதந்திரக் கட்சியின் வாக்குகள் முழுவதும் லட்டு போல வரும். ஐதேக வாக்குகளை பொது பல சேன மூலம், மத வெறியூட்டி பிரித்து எடுத்தால் வெல்ல முடியும் என தப்புக் கணக்கு போட்டார்கள். இதற்காக பர்மாவில் இருந்து கொலைகார பிக்கன் ஒருவனையும் அழைத்து மகாநாடு போட்டு, பின்னணியில் இருந்து, பிலிம் காட்டினார் கோத்தா.
 
ஊவா மாகாண தேர்தலில், தமிழ், இஸ்லாமிய வாக்குகள் தத்தம் தலைமைகளின் விருப்பதிற்க்கு எதிராக வாக்களிக்க, புதிய தேர்தல் கணக்கு போட வழி சமைத்தது.
 
சகோதரர்கள் எதிர்பாராவண்ணம், உள்ளிருந்தே மைத்திரி கிளம்ப, ஆடிப் போய் விட்டார்கள். காரணம் மைத்திரிபால சிறிசேன கட்சியின் பொதுச் செயலாளர். அவரது நியமனத்தினை மேலும் நீடிக்கவோ, அல்லது அவரை நீக்கவோ, பொது சபை கூட்டப்பட வேண்டும். கூட்டத்தினைக் கூட்டும் அதிகாரமோ அவரிடமே உண்டு. 
 
தமிழர் விடுதலைக் கூட்டணி, ஆனந்தசங்கரியாரிடம் இப்படி தான் சிக்கி விட்டது. அந்தாள் தானும் இரான், தள்ளியும் நில்லான் என்ற நிலைமையில் இருந்த படியால் தான் கூட்டமைப்பு உருவானது.
 
கட்சியின் தலைவர் என்ற முறையில் மகிந்தர், யப்பாவினை,  கட்சியின் புதிய பொதுச் செயலாளர் ஆக நியமித்தாலும், அவ்வாறு அவர் செய்ய முடியாத நிலையில், அது எந்த கட்சியின் பொதுச் செயலாளர் என்ற கேள்வி எழுகின்றது. எனவே பெரும்பாலும், மகிந்தர் சுதந்திர கட்சியின் பெயரையோ, சின்னதினையோ பயன்படுத்த முடியாது போகலாம். பயன்படுத்த வேண்டுமாயின் நீதிமன்று செல்ல வேண்டும். தீர்ப்பு வர முன் தேர்தல் முடிந்து விடும்.
 
அதேவேளை சுதந்திரக் கட்சியின் கோட்டைகள் என கருதப்படும், அனுராதபுர, பொலநறுவ (மைத்திரியின் சொந்த இடம்), களுத்துறை, கம்பகா, குருணாகல் ஆகிய மாவட்டங்களின் கட்சிகாரர்கள் மைத்திரியின் / சந்திரிகாவின் அணியே உண்மையானது என அவர்களுடன் நிற்கிறார்கள். அடுத்தவர் கட்சிகளை எல்லாம் பிரித்து மேய்ந்த சகோதரகளுக்கு தமது கட்சியின் மத்தியில், பூகம்பமாய் எழுந்த இந்த பிரிவு எதிர்பாராதது. 
 
இதுவே மைத்திரிபால சிறிசேன தேர்ந்து எடுக்கப் பட்டதன் காரணம். மேலும் அவர் சந்திரிகாவின், பெரும் நம்பிக்கைக்கு உரிய ஒருவர்.
 
தேர்தல் திகதி அறிவிக்கப் படும் வரை காத்திருந்து, திடீரென்று எழுந்த இந்த நிலைமையினை சமாளிக்கவும், அதேவேளை தேர்தலையும் சந்திக்கவும் நேரகாலம் போதுமானதல்ல.
 
மேலும் அடுத்து யார், யார் பாயப் போகின்றனர் என்று பெரும் குழப்பம் வரப் போகிறது. நண்பன் யார், துரோகி யார், நன்பேண்டா என்று நடிப்பவன் யார் என்று குழம்பப் போகின்றனர். தவிர, இந்த விடயங்களில் பழுத்த அனுபவம் கொண்ட அமெரிக்கா, கோத்தாவின் நம்பிக்கையான அதிகாரிகளில் யார், யாரை விலைக்கு வாங்கி இருக்கும், பொறுத்த நேரத்தில் யார் காலை வார்வார்கள் என்று வேறு கவலை உண்டாகும்.
 
இந்தியாவின் ஆலோசனையில், கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும், மலையக கட்சிகளும் யாருக்கு வாக்களிக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. 
 
மேலும், UNP, JVP, Hela Urumaiya, சரத்தின் கட்சி, போன்ற பலவும் எதிரணியில். மேலும், சரத் சில்வா எனும் முன்னால் உயர் நீதிமன்ற நீதிபதி, மகிந்தரின் மூன்றாம் முறை தேர்தலில் போட்டியிடும் தகுதி குறித்து ஆட்சேபம் தெரிவித்து நீதிமன்று போகக் கூடும், வேட்புமனுத் தாக்கல் செய்யும் கடைசி நாளான டிசம்பர் 8 க்குப் பின்னர் இது நடக்கலாம். 
 
விடயம் என்னவெனில் இந்த ஆட்சேபனை, உயர் நீதிமன்றில் அல்ல, மேன்முறையீட்டு நீதிமன்றில் தான் போடப்படும். அங்கே அவருக்கு தற்காலிக தடை வந்தாலும் அம்போதான்.   
 
சரியான முறையில் பார்த்தால், தீவில் எல்லாமே அன்று புலிகளுக்கு எதிராக திரும்பி நின்று சாய்த்த வரலாறு, மீண்டும் ஒருமுறை மகிந்தர் சகோதரர்களுக்கு எதிராக திரும்பி உள்ளதா ? 
 
ஜனவரி 8 ல் பதில் கிடைக்கும்.
Link to comment
Share on other sites

இந்த கட்டுரையில் பல உண்மைகள் இருந்தாலும் மகிந்தவை  ஒருவராலும் அசைக்க முடியாது.  
பொன்னர் அல்லது அம்மையார் நின்றிருந்தால் கட்டுகாசாவது மிஞ்சியிருக்கும். 
கடைசில போனமுறை பொன்னரை போல இந்தமுறை மைத்திரியை எல்லோரும் 
சேர்ந்து பலிக்கடா ஆக்கிட்டாங்கள்.  :D  :D  :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த கட்டுரையில் பல உண்மைகள் இருந்தாலும் மகிந்தவை  ஒருவராலும் அசைக்க முடியாது.  
பொன்னர் அல்லது அம்மையார் நின்றிருந்தால் கட்டுகாசாவது மிஞ்சியிருக்கும். 
கடைசில போனமுறை பொன்னரை போல இந்தமுறை மைத்திரியை எல்லோரும் 
சேர்ந்து பலிக்கடா ஆக்கிட்டாங்கள்.  :D  :D  :D

 

 

அப்ப மகிந்தனை இடையிலை விட்டுட்டு ஓடுறவைக்கு பெரிய திருக்கூத்து இருக்கெண்டுறியள்.... :lol:  :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தேர்தலில், எவர் வென்றாலும்....
வாக்கெடுப்பு முடிந்த பின், பெரிய பழிவாங்கல் படலம் ஆரம்பிக்கும்,
அதில் பெரிய பல தலைகள் உருளும்.
சிங்கள தேசம், தமக்குள்.... ஒரு அடிபாட்டை சந்திக்க வேண்டி வரும்.

Link to comment
Share on other sites

ராஜபக்ஸ தோல்வி நிட்சயம் .

மேற்குலகு எப்படி இயங்குகின்றது என்பதை புரியாமல் அரசியல் செய்யமுடியாது .போர் வெற்றியின் பின் மேற்குலகிற்கு காதில் பூ சுற்ற வெளிக்கிட்டதன் விளைவுதான் இன்று நடக்கும் அரசியல் .

 

போர் வெற்றிக்கு பின் சர்வதேசத்திற்கு கொடுத்த உறுதிகளை காற்றில் பறக்க விட்டு சிங்கள மக்களின் ஆதரவு தனக்கு இருக்கமட்டும் எவராலும் தன்னை அசைக்கமுடியாது என்று ஆடத்தொடங்கிய ஆட்டம், குடும்ப ஆட்சி ,மூன்றாவது தடவை ஜனாதிபதி ஆசை, அதி உச்ச சீனா நட்பு, எல்லாம் சேர்ந்துதான் இந்த ஆப்பை அவருக்கே இறக்கவைக்கிறது .

 

தனது தேவைக்கு செத்த புலிகளை திரும்ப திரும்ப அடித்து சிங்கள மக்களின் வாக்குகளை பெறலாம் என்று அவர் நினைப்பது அறியாமையின் உச்சம் .

 

இதற்குள் மகிந்த தேர்தலில் தோற்றால் அவரை போர்குற்றங்களுக்காக உள்ளே போடுவது இலகு என்று லண்டனில் இருந்து புலி ஒன்று ஊளையிட தொடங்கிவிட்டது .மகிந்தாவை காப்பாற்ற இவர்கள் இதையும் செய்வார்கள் இன்னமும் செய்வார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு யாரை ஆதரிக்கின்றதோ அவர் வென்றதாக இலங்கையில் சரித்திரம் இல்லையாம் :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.