Jump to content

ஜனாதிபதிக்கு கொடுத்த ஆதரவை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்: மலையக மக்கள் முன்னணி


Recommended Posts

ஜனாதிபதிக்கு கொடுத்த ஆதரவை பற்றி மீண்டும் பரிசீலிக்க வேண்டியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஏ.லோரண்ஸ் தெரிவித்தார்.

அட்டனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…..

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் இருந்த காலத்திலும் சரி இன்றும் சரி என்றும் சரி முக்கியமான தேர்தல் காலத்திலேயே நாங்கள் பாரிய பங்களிப்பை செய்திருக்கின்றோம்.

நாங்கள் சிந்தித்து பார்த்து தான் ஆதரவு கொடுப்போம். மக்களின் பிரச்சினைகளை முக்கியப்படுத்தி தான் ஆதரவு கொடுப்போம்.

அந்தவகையில் மலையக மக்கள் 200 வருடகாலமாக இன்னும் லயன் குடியிருப்புகளியிலே இருக்கின்றார்கள். இந்த லயன் முறையை மாற்றி காணி உரிமையோடு தனி தனி வீடுகள் கட்டியமைப்பது தலைவர் சந்திரசேகரனின் கனவு.

அதை தான் நாங்கள் இன்றும் வலியுறுத்தி வருகின்றோம். இந்த நாட்டில் இன பிரச்சினை இருக்கின்றது. அந்த இன பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. இந்த இன பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வும் வரவேண்டும்.

தற்போது அரசியல் ரீதியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் நாங்கள் கூறிய ஆதரவை மீண்டும் சிந்திக வேண்டியுள்ளது. இருக்கின்ற அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பதா அல்லது வேறு தீர்மானத்தை எடுப்பதா என்று சிந்திக வேண்டியிருக்கின்றது.

இங்கு ஏற்பட்டுள்ள அரசாங்க மாற்றத்தினாலேயே இந்த சிந்திக வேண்டியுள்ள நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சில கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்திருந்தாலும் நாங்கள் ஜனாதிபதியிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தே ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்திருந்தோம்.

ஆனால் இங்கு ஏற்பட்டுள்ள மாற்றத்தினாலேயே சிந்தித்து பார்க்க வேண்டியுள்ள நிலைமையுள்ளது.

http://www.virakesari.lk/articles/2014/11/23/ஜனாதிபதிக்கு-கொடுத்த-ஆதரவை-மீண்டும்-பரிசீலிக்க-வேண்டும்-மலையக-மக்கள்-முன்னணி

Link to comment
Share on other sites

குடிகாரன் பேச்சும், இந்த அரசியல்வாதிகளின் பேச்சும் விடிஞ்சால் போச்சு. :(

Link to comment
Share on other sites

அமைச்சர் பதவிக்காக ஆமாம் சாமி போட முடியாது

 

141123190748_v_radhakrishnan_640x360_sri

 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அளிக்கவிருந்த ஆதரவு தொடர்பில் மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான மலையக மக்கள் முன்னணி கூறியுள்ளது.

 

மலையக மக்களின் வீடமைப்பு, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட விடயங்களில் தமது கட்சி முன்வைத்திருந்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து தெளிவான பதில் கிடைக்காத காரணத்தினாலேயே தமது கட்சியினர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறைத் தலைவர் வி. இராதாகிருஷ்ணன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாடு அடுத்தவாரம் நடக்கவுள்ள கூட்டத்தின் பின்னரே தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
 
ஏற்கனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தாங்கள் அறிவித்திருந்த போதிலும், தற்போதைய அரசியல் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு தமது முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டியுள்ளதாகவும் துணையமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் பொது எதிரணியின் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது பற்றியும் சிந்திக்கமுடியும் என்றும் அவர் கூறினார்.
 
மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவர் இராதாகிருஷ்ணன் ஒரு மாதத்துக்கு முன்னர் தான் ஜனாதிபதி முன்னிலையில் பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
பிரதி அமைச்சராக பொறுப்பேற்று ஒருமாதத்தில் கட்சியின் முடிவை மீள்பரிசீலனை செய்யும் அளவுக்கு அரசியல் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றதா என்று தமிழோசை கேள்வி எழுப்பியது.
'அமைச்சர் (பதவி) எடுத்ததற்காக அவர்கள் சொல்வதற்கெல்லாம் நாங்கள் ஆம் போடுகின்ற ஆமாம் சாமியாக இருக்கமுடியாது' என்றார் இராதாகிருஷ்ணன்.
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.