Jump to content

சித்தர்கள் வரலாறு


Recommended Posts

riday, July 12, 2013

சித்தர்கள் வரலாறு
 
   என் அனுபவத்தில்  இவை அனைத்தும் நான் படித்து திரட்டிய தகவல் மட்டுமே.இதில் மாற்று கருத்து இருந்தால் அனுபவம் உள்ளவர்கள் உடனே தெரிவிக்கவும். என்னை நான் மாற்றிக்கொள்கிறேன். இங்கே உள்ள தலைப்புகள் அனைத்திலும்  சித்தர்கள் வாசம்  இருப்பது அனைவரும் அறிந்த உண்மை. அதுமட்டுமல்லாமல் ஒன்றோடுஒன்று தொடர்புள்ளது.

                          மனுசன் உலகம் முழுவதும் ஆதாயபடுத்திகொண்டாளும் தன் ஜீவனை நஷ்டபடுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

  எனது நோக்கம் படித்து தெளிவதல்ல நடைமுறையில் தெளிவுபடுத்துவது.       

                   

               சித்தர்கள்

   "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள்.  பொது வாழ்வு முறை, வழி முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு, வழி முறைகளை உருவாக்கி சமூகத்துடன் ஒரு முரண்பாடான உறவு வைத்திருப்பவர்கள். சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள்.அறிவு படைத்தவர்கள் சித்தர்கள்.சித்தம் என்றால் அறிவு ;  சித்து என்றால் என்றும் நிலைத்திருக்கும் பேரறிவு ; சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்னும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவத்தோடு யோகம் சோதிடம் மந்திரம் இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். மேலும் ஐந்து தகுதிகளாக உள்ளடக்கி சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

                  சித்தர்கள் மீவியற்கை (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பொருளியல் வாதிகள் அல்ல. “மெய்ப்புலன் காண்பது அறிவு” என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிச நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பை (existence), உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை (understanding), அறநிலை உணர்வை (external awareness), மெய்யடைதலை (actuality) சித்தி எய்தல் எனலாம்.மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.

                     

                            முதல் சித்தர் பதினெட்டு சித்தர்கள் என்கிற கணக்கு ஏனோ, எப்போதுமே சொல்லப் பட்டு வந்திருக்கிறது. நமக்குக் கிடைத்திருக்கும் சித்தர்களின் எண்ணிக்கை பதினெட்டோடு நின்றுவிடவில்லை. அகத்தியர் முதலாய் வள்ளலார் வரையில் அநேக சித்தர்கள் பல்வேறுபட்ட காலப்பகுதிகளில் வாழ்ந்திருக்கின்றனர். நாம் அறிந்தும், அறியாமலும் இப்போதும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இவர்கள் எல்லாருக்கும் முதல்வராய், ஆதி சித்தர் யாரென தேடினால்......,

 "நீ கேளு புலத்தியனே கற்ப மார்க்கம்

நிர்மலமாம் சதாசிவனார் என்னக்குச் சொன்னார்"

- அகத்தியர் -

 "சிவனார் உரைத்த மொழி பரிவாய் சொன்னார்"

- தேரையர் -

"தாரணிந்த ஈசன்று ஆயிக்குச் சொல்ல

தாயான ஈஸ்வரியும் நந்திக்குச் சொல்ல"

- போகர் -

"சொல்லவே தேவிக்கு சதாசிவன்தான்

சொல்லிடவே தேவியும் நந்திக்குச் சொல்ல"

- தன்வந்திரி -

"பாதிமதி அணிந்தவர் தான் சொன்னதிது

பதியான விதியாளி அறிவாள் பாரே"

- யூகிமுனி -

இது மாதிரி இன்னும் எத்தனையோ சித்தர்களின் பாடல்களை எடுத்தக் காட்டாய்ச் சொல்லலாம். இவர்கள் அனைவரும் சிவன் எனும் சிவபெருமான் சொன்னதாகவே சொல்லுகின்றனர். ஆக, சிவனே முதல் சித்தர் என்று அறுதியிட்டுக் கூறலாம். சித்தர்கள் வாழ்ந்ததாக கருதப் படும் இடங்களிலெல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை காணப்படுவது மூல குருவுக்கு வணக்கமாக இருக்கலாம்.

                  வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர்.இந்தப் பதினெட்டுச் சித்தர்கள் யார், யார்? என்பதில் பலரது கூற்றுக்களில், சில பெயர்கள் மாறுபடுகின்றன. எனினும், முற்காலத்தில் உயரிய இறைநிலையை எய்தியவர்களின் எண்ணிக்கை பதினெட்டிற்கும் மேற்படும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. சித்தர்கள் அனைவருமே, தாம் உயர்நிலை எட்டியது மட்டுமின்றி, உலக மக்கள் நலனுக்காக பல விதங்களிலும், உயரிய நுட்பங்களை வெளிப்படுத்தியதன் மூலமும், தம்முடைய காலத்தில் பிறருக்காக செயல்கள் புரிந்தும், சேவை புரிந்துள்ளனர். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.சாதி, சமயம், சாத்திரம், சடங்குகள் மீறிய உலக நோக்கு, பொது இல்லற, துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு முறைகள். விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பன எனலாம்.நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.சொல்லப்போனால், சித்தத்தை அடக்கி, தாங்களும் சிவமாய், இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள்.

 முதல் தகுதி:      சித்தத்தை அடக்கவல்லவர்கள். இரண்டாம் தகுதி:      எண்வகை சித்துக்களை செய்ய வல்லவர்கள்.

மூன்றாம் தகுதி:     முற்றும் துறந்தவர்கள் பாச இருளகற்றவர்கள் யான் என்ற அழுக்கற்றவர்கள்.

நான்காம் தகுதி:     பிறப்பிற்குத் காரணமான வினைவித்தைக் கெடுத்து தூய உணர்வில் மாறி ஐம்புலன்களை அடக்கி சித்தத்தை ஒருமுகப்படுத்தி ஆன்மீக ஆற்றலைப் பெற்று புற உணர்வில் செத்துக்கிடப்பவர்கள்.

ஐந்தாம் தகுதி:      உயிரினங்களின் இன்னல்களை நீக்க இடையராது சிந்தித்து முழு முயற்சியுடன் தெரிந்து ஆயக்கலைகள் அறுபத்தி நான்கையும் உணர்ந்து இயற்கையோடு இணைந்த எளிய வாழ்வே உடல் நலனுக்கும் உள்ள நலனுக்கும் சாலச் சிறந்தது எனக் கண்டறிந்து மக்களினத்திற்கு ஏற்ற மருத்துவ முறையைக் கொண்டு வந்தவர்கள்.முக்காலமும் உணர்ந்த முழுமுதல் ஞானிகள். எக்காலமும் எத்தி போற்றப்பட வேண்டிய தமிழ் குலத் தலைவர்கள். இப்பதினெட்டு சித்தர்களுக்கு முன் இரேதாயுகத்தில் இரண்டு லட்சம் திரேதாயுலகத்தில் ஒரு லட்சம் துவாபரயுகத்தில் ஐம்பதாயிரம் கலியுகத்தில் இருபத்தைந்தாயிரம் ஆகமொத்தம் 375000 சித்தர்கள் தோன்றினர் என்று தேரையர் கூறுகின்றார்.

சித்தர்கள் வரலாறு இம்மண்ணுலகில் பிறந்த உயிரினங்களில் தலைமையான உயிரினமே மனித இனம். இந்த மணீசர்களோடு பதினெண் சித்தர்கள் உறவு கொண்டு உருவாக்கிய விந்து வழி வாரிசுகள் நவகோடி சித்தர்கள், நவநாத சித்தர்கள், ஞானசித்தர்கள், தவ சித்தர்கள், ஓம சித்தர்கள், ஓக சித்தர்கள், யாக சித்தர்கள், யக்ஞ சித்தர்கள்.... என்று 48 வகைப் படுகிறார்கள். இவர்களல்லாமல் பல வகைப்பட்ட குருவழிச் சித்தர்களும் உருவாக்கப் பட்டிருக்கிறார்கள்.

 குருபாரம்பரியத்தில் குறிக்கப் படும் 48 வகைச் சித்தர்கள்:1.     பதினெட்டாம்படிக் கருப்புகள்

2.     நவகோடி சித்தர்கள்

3.     நவநாத சித்தர்கள்

4.     நாத சித்தர்கள்

5.     நாதாந்த சித்தர்கள்

6.     வேத சித்தர்கள்

7.     வேதாந்த சித்தர்கள்

8.     சித்த சித்தர்கள்

9.     சித்தாந்த சித்தர்கள்

10.     தவ சித்தர்கள்

11.     வேள்விச் சித்தர்கள்

12.     ஞான சித்தர்கள்

13.     மறைச் சித்தர்கள்

14.     முறைச் சித்தர்கள்

15.     நெறிச் சித்தர்கள்

16.     மந்திறச் சித்தர்கள்

17.     எந்திறச் சித்தர்கள்

18.     மந்தரச் சித்தர்கள்

19.     மாந்தரச் சித்தர்கள்

20.     மாந்தரீகச் சித்தர்கள்

21.     தந்தரச் சித்தர்கள்

22.     தாந்தரச் சித்தர்கள்

23.     தாந்தரீகச் சித்தர்கள்

24.     நான்மறைச் சித்தர்கள்

25.     நான்முறைச் சித்தர்கள்

26.     நானெறிச் சித்தர்கள்

27.     நான்வேதச் சித்தர்கள்

28.     பத்த சித்தர்கள்

29.     பத்தாந்த சித்தர்கள்

30.     போத்த சித்தர்கள்

31.     போத்தாந்த சித்தர்கள்

32.     புத்த சித்தர்கள்

33.     புத்தாந்த சித்தர்கள்

34.     முத்த சித்தர்கள்

35.     முத்தாந்த சித்தர்கள்

36.     சீவன்முத்த சித்தர்கள்

37.     சீவன்முத்தாந்த சித்தர்கள்

38.     அருவ சித்தர்கள்

39.     அருவுருவ சித்தர்கள்

40.     உருவ சித்தர்கள்

பெயர் குறிப்பிடக் கூடாது எனத் தடை விதிக்கப் பட்டுள்ள சித்தர்கள் ஏழு வகைப்படுவர்.                

“எண்ணற்கரிய சித்தர் எழுவர் (ஏழு பேர்)"              

“எடுத்துரைக்கலாகாச் சித்தர் எழுவர்”                

“ஏதமில் நிறை சித்தர் எழுவர்”             

“விண்டுரைக்க வொண்ணாச் சித்தர் எழுவர்”                            

-- என்று பல குறிப்புகள் உள்ளன.

சித்தர் பழமொழிகள்.  சித்தர்கள் தனியாகப் பழமொழிகள் ஏதும் பாடியவரல்லர். பதினெண் சித்தர்கள் பாடல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்பட்டவைகளை  தொகுத்தளித்திருக்கிறார்.

1. பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.

2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும். 

3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.

4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்.

5. புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும். 

6. உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம் 

1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்  உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.

2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.  உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும். 

3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.  சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள். 

4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்  மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு. 

5. புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்  ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி. 

6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம் விரும்பிப் போனால் விலகிப் போகும்.  விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார். மனம் உணருமா?

 108 சித்தர்கள் 4732306.jpg?324

108 சித்தர்கள் 1. திருமூலர் - சிதம்பரம்.

2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.

3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.

4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.

5. கொங்கணர் - திருப்பதி, திருமலை

6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்

7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.

8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.

9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.

10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)

11. கோரக்கர் – பேரூர்.

12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.

13. சிவவாக்கியர் - கும்பகோணம்.14. உரோமரிசி - திருக்கயிலை

15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.

16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை

17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை

18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.

19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.

20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.

21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.

22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.

23. இராமதேவ சித்தர் - அழகர் மலை

24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.

25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.

26. காசிபர் - ருத்ரகிரி

27. வரதர் - தென்மலை

28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்

30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.

31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.

32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.

33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.

34. கமல முனி - ஆரூர்

35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.

36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.

37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.

38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.

39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.

40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.

41. வள்ளலார் - வடலூர்.

42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.

43. சதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்

45. ராகவேந்திரர் - மந்திராலயம்.

46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.

47. குமரகுருபரர் - காசி.

48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.

49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.

50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.

51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.

52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.

53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.

54. யுக்தேஸ்வரர் - பூரி.

55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை

56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.

57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.

58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.

59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.

60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.

61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.

63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.

64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.

65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.

66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.

67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.

68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.

69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.

70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.

71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.

72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.

73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.

74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.

75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.

76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.

77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.

78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.

79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.

80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.

82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.

83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.

84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.

85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.

86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.

87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.

88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.

89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.

90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.

91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.

92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.

93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.

94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.

95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.

96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.

97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.

98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.

99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.

100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.

101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.

102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.

103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.

104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.

105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.

106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)

107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.

108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.

பதினெண் சித்தர்களும் சமாதியான ஸ்தலங்களைப் பற்றி குறிப்பிடும் பழைய ஓலைச்சுவடி :

ஆதி காலத்திலே தில்லை திருமூலர்

அழகுமலை இராமதேவர்

அனந்த சயன கும்பழனி திருப்பதி கொங்கணவர்

கமலமுனி ஆரூர்

சோதி அரங்க சட்டமுனி கருவை கருவூரார்

சுந்தரானந்தர் கூடல்

சொல்லும் எட்டிக்குடியில் வான்மீகரோடு நற்

றாள் காசி நந்திதேவர்

ப்லாதி அரிச்சங்கரன் கோவில் பாம்பாட்டி

பழனி மலை போகநாதர்

திருப்பரங்குன்றமதில் மச்சமுனி

பதஞ்சலி இராமேசுவரம்

சோதி வைத்தீஸ்வரம் கோவில் தன்சந்திரி பேரையூர்

கோரக்கர் மாயூரங்குதம்பர்

திருவருணையோர் இடைக்காட சமாதியிற்

சேர்ந்தனர் எமைக் காக்கவே.

இது நெற்கட்டும் செவல் மன்னர் பூலித்தேவர் காலத்தில் உள்ள ஓலைச்சுவடியின் சான்று.

                           மதுரை அழகர் கோவிலின் முன்பாக 18-ம் படி கருப்பண்ணசாமியாக உள்ள 18 படிகளும், 18 சித்தர்கள் ஆவார்கள். ஆடி 18 அன்று சிறப்பு பூசை நடைபெறுகிறது.அப்படிப்பட்ட சித்தர்களில் 18 பேர் தலையாய சித்தர்கள் ஆவர்.அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் இன்றும் அருள் தரும் சன்னதிகளின் விவரம் இதோ

திருமூலர் - சிதம்பரம்

இராமதேவர் - அழகர்மலை

அகஸ்தியர் - திருவனந்தபுரம்

கொங்கணர் - திருப்பதி

கமலமுனி - திருவாரூர்

சட்டமுனி - திருவரங்கம்

கரூவூரார் - கரூர்

சுந்தரனார் - மதுரை

வான்மீகர் - எட்டிக்குடி

நந்திதேவர் - காசி

பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில்

போகர் - பழனி

மச்சமுனி - திருப்பரங்குன்றம்

பதஞ்சலி - இராமேஸ்வரம்

தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில்

கோரக்கர் - பொய்யூர்

குதம்பை சித்தர் - மாயவரம்

இடைக்காடர் - திருவண்ணாமலை

சக்தி மிகுந்த சித்தர்களை வணங்கி அருள் பெறுக. நலம் பெறுக.

கரூர் அருகில் உள்ள அய்யர் மலையில் உள்ள சுனையில் பஞ்சமாசித்தர்களான பஞ்சமுக சுரேஸ்வர சித்தர்,

  1. சதுர்முக சுரேஸ்வர சித்தர்,
  2. திரிபலாதர சுரேஸ்வர சித்தர்,
  3. ஸ்கந்த பதுமபலாதி சித்தர்,
  4. திரி மதுர நீற்று முனீஸ்வர சித்தர் வசிக்கிறார்கள்.
 சித்தர்கள் பட்டியல் 392708.jpg?441

                        உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்த சித்தர்களின் பெயர்கள்,குலங்கள் மற்றும் அவர்கள் செய்த தொழில்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன: ஆதாரம்: "நந்தி அகத்தியர் மூலர் புண்ணாக்கீசர் நற்றவத்துப் புலத்தியரும் பூனைக்கண்ணர் நந்தியிடைக் காடரும் போகர் புலிக் கையீசர் கருவூரார் கொங்கணவர் காலாஞ்சி(காளாங்கி) சிந்தி எழுகண்ணர்(அழுகண்ணர்) அகப்பேயர் பாம்பாட்டி தேரையரும் குதம்பையரும் சட்டைநாதர் செந்தமிழ் சேர்த்த பதினெண்மர் பாதம் சிந்தையுண்ணிச் சிரத்தணியாய்ச் சேர்த்தி வாழ்வாம்."

சித்தர் மரபு அடங்கிய தலம் நந்தி வேதியர் காசி அகத்தியர் வேளாளர் அனந்த சயனம் திருமூலர்  வேளாளர் தில்லை(சிதம்பரம்) புண்ணாக்கீசர் இடையர் நாங்குனேரி புலத்தியர் சிங்களவர் யாழ்ப்பாணம் பூனைக் கண்ணர் எகிப்தியர் எகிப்து இடைக்காட்டு சித்தர் இடையர் திருவண்ணாமலை போகர் சீனக் குயவர் பழனி புலிக் கையீசர்

கருவூரார் கன்னரர் கருவூர் கொங்கண சித்தர் கன்னட இடையர் திருப்பதி காளங்கி நாதர் சீனத்து ஆசாரியார் காஞ்சீபுரம் அழுகண்ணச் சித்தர் சீனத்து ஆசாரியார் திருக்குறுங்குடி அகப்பேய் சித்தர் வேளாளர் அழகர் மலை பாம்பாட்டி சித்தர் கோசாயி விருத்தாசலம் தேரையர் வேதியர் பொதிகை மலை குதம்பைச் சித்தர் இடையர் மாயூரம் சட்டை முனி் சிங்களவர் திருவரங்கம்

பின் வருபவர்களும் சித்தர்களே என்பர் சிலர்;

சித்தர்கள் மரபு அடங்கிய தலம் இராம தேவர்

இராமலிங்க சுவாமிகள் கருணீகர் குலம் மேட்டுக்குப்பம் கமல முனி உவச்சர் திருவாரூர் கடுவெளிச் சித்தர்

கணபதி தாசர்

காக புசுண்டர் சமணர் அன்னவாசல் காளைச் சித்தர்

கோரக்கர் மராட்டியர் / கள்ளர் பேரூர்(கோவை) கைலயக் கம்பளிச் சட்டை முனி

சிவவாக்கியர் சங்கர குலம் சூரியானந்தர்

சுந்தரானந்தர் வேளாளர் மதுரை தன்வந்திரி அந்தணர் வைத்தீசுவரன் கோயில் பதஞ்சலியார் கள்ளர் இராமேசுவரம் பத்திரகிரியார்

பட்டினத்தார்

பீரு முகமது

பூரணானந்தர்

மச்ச முனி செம்படவர் திருப்பரங்குன்றம் வாம தேவர் ஓதுவார் அழகர் மலை வான்மீகர் வேடர் எட்டிக்குடி மதுரை வாலைச் சாமி

உரோமரிஷி மீனவர்

இவர்களும் சித்தர்கள்தாம் என்று சில புத்தகங்களில் உள்ளது. ஆயினும் இவர்கள் பாடிய பாடல்கள் காணக் கிடைப்பது இல்லை.

சித்தர் மரபு அடங்கிய தலம் எனாதிச் சித்தர்

சேட(ஷ)யோகியார்

காரைச் சித்தர்

குடைச் சித்தர்

பூகண்டம் வன்னியர் புலிப்பாணி வேடர் வியாசர் சந்திர குலம் சோதி முனி பள்ளர் டமரகர் மறவர் வரரிடி(ஷி) கள்ளர் அறிவானந்தர் வள்ளுவர் ச(ஜ)மதக்கினி சைனர் சண்டேசர் வள்ளுவர்

சித்தர்கள் தினம்: 374306.jpg

                       "உலகத்தின் தொன்மையான மொழி தமிழ் மொழி. இந்தப் பண்பாட்டின் ஒரு அம்சமாக வளர்ந்த அறிவியல்தான் சித்த மருத்துவம். சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய தமிழகத்தின் பண்டைய அறிவியலாளர்கள்தான் சித்தர்கள்.சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், உலக சித்தர் தினம் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று கொண்டாடபடுகிறது.சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வண்ணமும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக சித்தர் தின விழா  கொண்டாடப்படுகிறது.
சித்தர்கள் பற்றிய வாழ்க்கை குறிப்புகள்.. 5783009.jpg?489

சித்தர்மரபை நோக்குங்கால், இதுவரைகண்டுள்ள எண்ணிக்கைகட்டுக்கடங்காதது. பதினெட்டு சித்தர் என்ற மரபு பன்னெடுங்காலமாய் இருந்து கொண்டேவந்துள்ளது. நூலுக்குநூல் எண்ணிக்கை வேறுபட்டபோதிலும் கீழ்க்கண்ட சித்தர்கள் மிகமுக்கியமானவர்களாக கருதப்பட்டு அவர்களின் பாடல்கள் ஞானக்கோவையாகவும் சித்தர்பாடல்களாகவும் பல்வேறு காலங்களில் தொகுக்கப்பட்டுள்ளன.சித்தர்களின் எண்ணிக்கையை பதினெட்டு என்றுபல சித்தர்பாடல்களே கூறுகின்றன.

“சித்தர்கள் தான் பதினென்ப ராத்தாள் சொன்ன/செயலெல்லாம் கண்டுணர்ந்து தெளிந்திட்டார்கள்”

என ஞானவெட்டியான்

1500ல் பாடல் 220ம்,

“பாடுவார் பதிணென்பேர் நூல்கள் எல்லாம்/பாலகனே இத்தயிலம் கொண்டு சாதி”

என்று அகத்தியர் பரிபாஷை 500ல் பாடல் 100ம்,

“வாத நூல் ஆதீதம் பதிணென்பேர் சித்தர் வசனித்த நூல்களும் பலிதம்”

என புலத்தியர் கற்பம் 300ல் பாடல்54ம்

“மூலரோடு பதிணென்பேர் பரநாதாக்கள்’’

என மச்சமுனி பெருநூல் பாடல் 2ம்

“துலக்கு மந்தப் பதினெட்டுச் சித்தரையா/ தொல் புவியில் சொல்லாமல் மறைத்தார்”

என யாகோபு வைத்திய வாத சூத்திரம் 400ல் பாடல் 179ம்

சித்தர்களின் எண்ணிக்கையை வரையறுத்து

சொல்லுவதாக பாடல் பல உள்ளன. ஒவ்வொரு சித்தர்களின் காலமும் வெவ்வேறானபோது எவ்வாறு அவர்களே அவர்களின் எண்ணிக்கையை பற்றி எப்படி இயலும் என ஐயமும் எழத்தான் செய்கிறது. இருந்தபோதும் முக்கியமாகக் கருதப்படும் சித்தர்களின் எண்ணிக்கை பதினெட்டையும் தாண்டி அதிகமாக உள்ளது என்பதே உண்மை.

அபிதான சிந்தாமணியில் சித்தர்கள் பற்றிய குறிப்பில் சித்தர் ஒன்பதின்மர் என்று

1.சத்தியநாதர்

2.சதோகநாதர்

3.ஆதிநாதர்

4.அனாதிநாதர்

5.வெகுளிநாதர்

6.மாதங்க நாதர்

7.மச்சேந்திரநாதர்

8.கடேந்திரநாதர்

9.கோரக்க நாதர் ஆகிய ஒன்பதுபேரையும்,தொடர்ந்து சித்தர் பதிணென்மர் என்று

அகத்தியர்,

போகர்,

கோரக்கர்,

கைலாச நாதர்,

சட்டைமுனி,

திருமூலர்,

நந்தி,

கூன் கண்ணர்,

கொங்கணர்,

மச்சமுனி,

வாசமுனி,

கூர்மமுனி,

கமல முனி,

இடைக்காடர்,

புண்ணக்கீசர்,

சுந்தரானந்தர்,

உரோமரிஷி,

பிரமமுனி இவர்களின்றி

தன்வந்திரி,

புலஸ்தியர்,

புசுண்டர்,

கருவூரார்,

ராமதேவர்,

தேரையர்,

கபிலர் முதலியவரும் பட்டியலிடப்படுகின்றனர்.சித்தரின் வாழ்க்கை முறை மற்றும் அவர்களைப் பற்றிய உண்மைகளைப் போலவே

அவர்களின் எண்ணிக்கை குறித்தும் ஒவ்வொரு நூலிலும் முரண்களைக் காண முடிகிறது. எனினும் சித்தர் ஒன்பதின்மர் எழுதியதாக எந்த ஒரு பாடலும் நமக்குக் கிடைக்கவில்லை. பதிணென் சித்தர்கள் பெரிய ஞானக்கோவை என்ற நூலில் 44 சித்தர் வகை பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது.

அவற்றில் சிவவாக்கியரின் பாடல் முதன்மைப்படுத்தப்பட்டு

பட்டினத்தார்,

பத்திரகிரியார்,

திருவள்ளுவர்,

சட்டைமுனி,

பாம் பாட்டி,

இடைக்காடர்,

அகப்பேய்ச்சித்தர்,

குதம்பைச் சித்தர்,

கடுவெளிச்சித்தர் என மூன்று பாகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.

.

                      சித்தர்கள் தம் வாழ்வை எவ்வித வெற்று ஆடம்பரங்களுக்கோ தேவைகளுக்கோ உட்படுத்தாமல் இயற்கையோடு இயைந்த பெருவாழ்வை வாழ்ந்துள்ளனர். எதைப்பற்றியும் கவலைப்படாது, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றிவாழ்ந்த சித்தர்கள், பாமரர் நலனுக்காக உண்மையான முறையில் அன்றைக்கே செய்தவர்கள் சித்தர்கள். மக்களின் நம்பிக்கையை பெறவும், மூடநம்பிக்கைகளிலிருந்து வெளிக்கொணரவும், தெய்வங்கள்பற்றிய தேவையற்ற பயத்தை போக்கவுமே விண்ணில் பறப்பது, இரும்பைத் தங்கமாக்குவது போன்ற இரசவாத வேலைகள் செய்து சித்தர்பால் மக்களுக்குள்ள பயங்களை போக்கியும், தம் கருத்துக்களை மக்கள் முன்வைத்து செயல்பட்டுள்ளனர்.மேலும் எந்தவொரு இடத்திலும் சித்தர்கள் தங்களது பணியினை சிறப்பானதென்றோ, தங்களால் மட்டுமே மக்களை கடைத்தேற்றமுடியும் என்ற பிரச்சார வழியையோ ஒரு போதும் கையாளவில்லை என்பதினின்றே அவர்களின் மாண்பினை உணரலாம். அதுபோன்றே மதப்பிரச்சாரங்கள் பின்னாளில் நிகழக்கூடும் என்பதனையும் அவர்கள் உணர்ந்தே செயல்பட்டவர்கள் என்பதனை கொங்கணச் சித்தர் எழுதிய இப்பாடலின் மூலமாக அறியலாம்:

எல்லாமறிந்தவரென்றுசொல்லியிந்தப்

பூமியிலேமுழு ஞானியென்றே

உல்லாசமாகவே வயிறுபிழைக்கவே

ஓடித்திரிகிறார்வாலைப்பெண்ணே

-இதுதான்சித்தர்கள்நமக்குவிட்டுச்சென்றசெய்தி.

சித்தரின் பெயர் பிறந்த மாதம் நட்சத்திரம்  வாழ்நாள  சமாதியடைந்த இடம்  

1.பதஞ்சலி   பங்குனி   மூலம்  5 யுகம் 7நாட்கள்  இராமேசுவரம். 

2.அகத்தியர்   மார்கழி   ஆயில்யம்  4 யுகம் 48 நாட்கள்  திருவனந்தபுரம். 

3.கமலமுனி   வைகாசி   பூசம்  4000 வருடம் 48 நாட்கள திருவாரூர். 

4.திருமூலர்  புரட்டாதி   அவிட்டம்  3000 வருடம் 13 நாட்கள்  சிதம்பரம். 

5.குதம்பையார்   ஆடி   விசாகம்  1800 வருடம் 16 நாட்கள்  மாயவரம். 

6.கோரக்கர்   கார்த்திகை ஆயில்யம்  880 வருடம் 11 நாட்கள்  பேரூர். 

7.தன்வந்திரி   ஐப்பசி   புனர்பூசம்  800 வருடம் 32 நாட்கள்  வைத்தீச்வரன் கோவில். 

8.சுந்தரானந்தர்   ஆவணி   ரேவதி  800 வருடம் 28 நாட்கள்  மதுரை. 

9.கொங்கணர்   சித்திரை   உத்திராடம்  800 வருடம் 16 நாட்கள்  திருப்பதி. 

10.சட்டமுனி   ஆவணி  மிருகசீரிடம்  800 வருடம் 14 நாட்கள்  திருவரங்கம்.

11.வான்மீகர்   புரட்டாதி   அனுசம்  700 வருடம் 32 நாட்கள்  எட்டுக்குடி. 

12.ராமதேவர்   மாசி   பூரம்  700 வருடம் 06 நாட்கள்  அழகர்மலை. 

13.இடைக்காடர்   புரட்டாதி   திருவாதிரை  600 வருடம் 18 நாட்கள்  திருவண்ணாமலை. 

14.மச்சமுனி   ஆடி   ரோகிணி  300 வருடம் 62 நாட்கள்  திருப்பரங்குன்றம். 

15.கருவூரார்   சித்திரை   அஸ்தம்  300 வருடம் 42 நாட்கள்  கருவூர், தஞ்சை. 

16.போகர்   வைகாசி   பரணி  300 வருடம் 18 நாட்கள்  பழனி.

17.பாம்பாட்டி   கார்த்திகை   மிருகசீரிடம்  123 வருடம் 14 நாட்கள்  சங்கரன்கோவில்.

18.சிவவாக்கியர் காலம் தெரியவில்லை கும்பகோணம்.

சித்தர்களை பற்றிய தொகுப்புகள்.

சித்தர்கள் சிவ சிவா வென்றாற் றிரு நடமாகும் சிவ சிவா வென்றாற் சீவனும் முக்தியாம் 

சிவ சிவா வென்றாற் சீவனும் சித்தியாம் 

சிவ சிவா வாசி சிவசிவந் தானே!  சித்தர்

              சித்தர்கள் – தியானம், மருத்துவம், ஆன்மீகம், தத்துவம், விஞ்ஞானம், ரசாயனம், சிற்பம், மொழியறிவு என பல்வேறுபட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் நம் சித்தர்கள். செம்பு, கல், மண் என எதுவையும் தங்கமாக்கும் சொர்ண ரகசியம், ஒருவரின் உடலிலிருந்து மறு உடலுக்கு உயிர் மாறும் கூடுவிட்டு கூடு பாயும் முறை, விலங்குகளுடன் பேசுதல், வசிகரித்தல், உயிர் கொடுத்தல், நீரில் நடத்தல், காற்றில் மிதத்தல் என பல்வேறு சித்துகள் எனப்படும் திறன்களையும் பெற்றிருந்தார்கள்.

பராபரத்தில்  பரம்,  பரத்தில் சிவம், சிவத்தில் சக்தி,சக்தியிலிருந்து தான் பஞ்ச பூதம் உள்ளிட்ட அனைத்தும் தோன்றியது.  இந்த சிவன் தான் சித்தன் எனவும் கூறப்படுவதுண்டு.சித்தர் வழி தனி வழி ! யாம்  பெற்ற பேறு பெறுக இவ்வையகம் என்ற உயரிய நோக்கு அவர்களுடையது.  சித்தர்களின் விடா முயற்சியும், உழைப்பும்,தன்னலமற்ற பணியும் நமக்கு எப்போதும் வேண்டும் வேண்டும்.சீவனே சிவன் என்று துணிவதே சித்தர் தம் மதம்.சித்தர் தம்மைக் காலங்கடந்தவராகக் கூறிக் கொளல் மிகையும் அன்று. பொய்யும் அன்று.சித்தம் என்பது புத்தி, மனம்,சித்து  புத்தியால் ஆகிற காரியம் சித்தர்  புத்தியைக் கட்டுப்படுத்தியவர்.

சித்தர் இலக்கியங்களுள் சில மரபுச் செய்யுட்களால் அமைந்தவை. சில நாட்டுப்புறப் பாடல்களால் இயன்றவை. எளிய நடையில் உயய கருத்துக்களைப் பொது மக்களுக்காகப் பாடியிருப்பது இச்சித்தர்களின் தனிச் சிறப்பு என்றுகூறலாம். மேலும் அவர்தம் பாடல்கள் எல்லாக் காலத்திற்கும் பொருந்தி வரும் உயிரோட்டம் உடையவை.

                சித்தின் பாடல்கள் வெண்பா, அகவற்பா, ஆசிய விருத்தம், கட்டளைக் கலித்துறை, கலித்தாழிசை, கலிவிருத்தம் முதலான யாப்பு வரையறையோடு இயற்றப்பெற்றவை. தொல்காப்பியர் குறிப்பிடும் பண்ணத்தி வகையைச் சார்ந்த இசைப்பாடல்களாகவும் சில காணப்படுகின்றன.  அவை கும்மி, கண்ணி, ஆனந்தக்களிப்பு, காவடிச்சிந்து, கீர்த்தனை முதலிய நாட்டுப்புற இசைப் பாடல்களாகும். இப்பாடல்கள் பெரும்பாலும் இசைப்பாடல்களாக அமைந்திருத்தலால், அவற்றைப் பொது மக்கள் மகிழ்ச்சியோடு தெருக்களில் பாடிச் செல்வதை இன்றும் நாம் காண்கிறோம்.  கேட்போரும் அப்பாடல்களின் பொருளை எளிதில் உணர்ந்து இன்புறுகின்றனர். சித்தர்களைப் பற்றிய செய்திகள் தொல்காப்பியம், சங்க இலக்கியம் ஆகியவற்றில் குறிப்புக்களாகக் காணப்படும் போக்கு சித்தர்கள் என்போர் யாவர் என்பதனைப் பல்வேறு சித்தர் பாடல்களும் விளக்கியிருக்கும் பாங்கு, தாயுமானவர், பாம்பாட்டி சித்தர், இராமலிங்க அடிகளார் முதலானோர் பல்வேறு சித்து விளையாடல்கள் புந்துள்ளமை பற்றிய செய்திகள், சித்தர்கள் தத்தம் பாடல்களில் சமயங்கள் கடந்த எல்லாச் சமயங்களுக்கும் பொதுவான அடிப்படை நெறிகளையே பாடியிருக்கும் நிலை, பல வகையான யாப்பு வகைகளில் சித்தர் பாடல்கள் பாடப்பெற்றிருக்கும் பெற்றி முதலானவை விளக்கப்பட்டிருத்தலை காணலாம்.              பதினெட்டு என்னும் எண்ணின்பால் கொண்ட ஈடுபாட்டினால் சித்தர்களையும் பதினெண்மராகக் காட்டியிருக்கலாம் என்ற செய்தி சித்தர்களின் எண்ணிக்கை குறித்து அறிஞர்களிடையே  நிலவும் கருத்து வேறுபாடுகள்,  சித்தர்களின் எண்ணிக்கை பதினெட்டிலிருந்து ஐம்பதுவரை எட்டியுள்ள நிலை குறித்த அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. பதினெட்டு என்னும் எண்ணின்பால் கொண்ட ஈடுபாட்டினால் சித்தர்களையும், பதினெண்மராக அடக்கிக் காட்டுகின்றனர். பதினெண்கணக்குள், பதினெண்கீழ்கணக்கு  பதினெண் மேற்கணக்கு பதினெண் நாள் பாரதப் போர் என்பவனற்றைக் காணுங்கால், அவ்வெண்ணிடம் வைத்த மதிப்பினை உணரலாம்.  தமிழிலுள்ள பதினெட்டு மெய்யெழுத்துக்களோடு சித்தர் எண்ணிக்கையை ஒப்பிட்டு இயையு காண்போரும் உளர்.சிறுபிரபந்த வகைகளை 96 எனக் கூறி அவற்றையெல்லாம் 90க்குள்ளேய அடக்கிக் காட்டுவர். காலப்போக்கில் அவ்விலக்கிய வகை வளர்ந்து. தொண்ணுற்றானும் மிகுந்து ஏறத்தாழ இரட்டிப்பாகி உள்ளது. அது போலவே, சித்தர்களின் எண்ணிக்கையும் பதினெட்டினைக் கடந்து ஐம்பதினை எட்டியுள்ளது. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரதியாரும் எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா, யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில் (1 பாரதி அறுபத்தாறு) எனத் தம்மைச் சித்தராகக் கூறிக் கொள்கிறார்.  இவர் போன்றோரை எல்லாம் சித்தர்களின் பட்டியலில் சேர்த்தால் எண்ணிக்கை ஐம்பதிலும் மேலாகிறது.

சித்தர்கள் 18 பேர்.1. திருமூலர் 2. இராமதேவர்   3. கும்பமுனி    4. இடைக்காடர்     5. தன்வந்தி    6. வான்மீகர்       

7. கமலமுனி  8. போகர்     9. மச்சமுனி    10. கொங்கணர்  11. பதஞ்சலி   

12. நந்திதேவர் 13. சட்டைமுனி    

14. சுந்தரானந்தர்        

15. குதம்பை         

16. கருவூரார்  

17. கோரக்கர்      

18. பாம்பாட்டி சரசுவதி மகால் நூலகப் படத்தில் பதினெண் சித்தர் பெயர்கள் காணப்படுகின்றன. 1. கும்ப முனி,

2. நந்தி முனி,

3. கோரக்கர்,

4. புலிப்பாணி,

5. புகண்டரிஷி,

6. திருமுலர்,

7. தேரையர்,

8. யூகி முனி,

9. மச்சமுனி,

10.புண்ணாக்கீசர்,

11. இடைக்காடர்,

12. பூனைக் கண்ணன்,

13. சிவவாக்யர்,

14.சண்டிகேசர்,

15. உரோமருஷி,

16. சட்டநாதர்,

17. காலாங்கி,

18. போகர் என்று கருவூரார் எழுதிய அட்டமாசித்து நூல் கூறுகிறது. 1. அகத்தியர்,

2. போகர்,

3. நந்தீசர்,

4. புண்ணாக்கீசர்,

5. கருவூரார்,

6. சுந்தரானந்தர்,

7. ஆனந்தர்,

8. கொங்கணர்,

9. பிரம்மமுனி,

10.உரோமமுனி,

11. வாசமுனி,

12. அமலமுனி,

13. கமலமுனி,

14. கோரக்கர்,

15.சட்டைமுனி,

16. மச்சமுனி,

17. இடைக்காடர்,

18. பிரம்மமுனி என்கிறது நிஜானந்த போதம்.

1. அகத்தியர்,

2. போகர்,

3. கோரக்கர்,

4. கைலாசநாதர்,

5. சட்டைமுனி,

6.திருமுலர்,

7. நந்தி,

8. கூன் கண்ணன்,

9. கொங்கனர்,

10. மச்சமுனி,

11.வாசமுனி,

12. கூர்மமுனி,

13. கமலமுனி,

14. இடைக்காடர்,

15. உரோமருஷி,

16.புண்ணாக்கீசர்,

17. சுந்தரனானந்தர்,

18. பிரம்மமுனி என்கிறது அபிதானசிந்தாமணி.

                 அபிதான சிந்தாமணி ஆ. சிங்காரவேலு முதலியாரால் (1855 - 1931) தொகுக்கப்பட்ட இலக்கியக் கலைக்களஞ்சியமாகும். இதன் முதற் பதிப்பு மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக 1910 ஆம் ஆண்டு வெளிவந்தது. அது 1050 பக்கங்களைக் கொண்டிருந்தது. 1634 பக்கங்களுடன் இரண்டாவது பதிப்பு 1934 இல் நூலாசிரியரின் புதல்வரான ஆ. சிவப்பிரகாச முதலியாரின் முன்னுரையுடன் வெளிவந்தது. 1981 இலே தில்லி ஏசியன் எடுகேஷனல் சர்வீஸஸ் இரண்டாம் பதிப்பினை மறு பிரசுரம் செய்தது. அண்மையில் 2001ம் ஆண்டு தில்லி ஏசியன் எடுகேஷனல் சர்வீஸஸ், 11ம் பதிப்பினை வெளியிட்டுள்ளது. தமிழிலே தோன்றிய முதல் கலைக்களஞ்சியமான அபிதானகோசத்திலும் விரிவாகவும் விடயப் பரப்பிலே ஆழமாகவும் அமைந்து வெளிவந்தது அபிதான சிந்தாமணி. இதில் வேதகால பாத்திரங்களின் கதைகளும், உறவு முறைகளும் குறிப்பிடப்பட்டு உள்ளன. செங்கிருதம் எனும் சமஸ்கிருத சொற்களின் கலப்பு அதிகமாக உள்ளது.

             

                                  அபிதானகோசம் என்பது தமிழிலே முதன் முதலாகத் தோன்றிய இலக்கியக் கலைக்களஞ்சியமாகும். வடமொழி, தென்மொழி ஆகிய இரு மொழிகளிலும் இயற்றப்பெற்ற வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், தருமநூல்கள், இலக்கியங்களிற் காணப்பெற்ற தெய்வம், தேவர், இருடி, முனிவர், அசுரர், அரசர், புலவர், புரவலர் முதலிய விபரங்களை அகர வரிசையிலே தொகுத்தளிக்கும் முயற்சி அபிதானகோசம் ஆகும். அபிதானகோசத்தைத் தொகுத்தளித்தவர் மானிப்பாய்

ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1858-1917) சுயமாக எழுதியும் உரையெழுதியும் பதிப்பித்தும் உதவியவர்; சஞ்சிகை நடத்தியவர்; அகராதி தொகுத்தவர். அபிதான கோசம் 1902 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்படடு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி (1910) வெளிவரும் முன் இது வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் அபிதானகோசத்தைக் காட்டிலும் விரிவாகவும் விடயப் பரப்பிலே ஆழமாகவும் அமைந்து வெளிவந்தது அபிதான சிந்தாமணி.இவர்களேயன்றி  வேறு சிலரையும் அபிதான சிந்தாமணி சித்தர்களாகக் குறிப்பிட்டுள்ளது. அவர்கள்

தன்வந்தி,

புலத்தியர்,

புசுண்டர்,

கருவூரார்,

இராமதேவர்,

தேரையர்,

கபிலர் போன்றோராவர். கலைக்களஞ்சியம் குறிப்பிடும் பதினெண் சித்தர்களும் அபிதான சிந்தாமணியால் சுட்டப் பெற்றவர்களே.  சிலர் சித்தர்களின் எண்ணிக்கை இருபத்தொன்று என்பர்.  அவர்கள் சிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்தில் 21 சித்தர்கள் தவம் சித்திக்கப் பட்டிருத்தலைச் சான்றாக எடுத்துக் காட்டுவர். 

நம் நாட்டுச் சித்தர்கள் என்னும் நூலை எழுதிய முனைவர் இரா. இராசமாணிக்கம் சித்தர்களின் பெயர்களை அகர வசைப்படுத்திப் பின் வருமாறு 25 என்ற எண்ணிக்கையில் காட்டியுள்ளார்

1. அகத்தியர்        

2. அகப்பேய்                  

3. அழுகணிச் சித்தர்  4. இடைக்காடர்  5. இராமதேவர்     

6. இராமலிங்கர் 7. உரோமமுனி         

8. கபிலர்                       

9. கருவூரார் 10. காகபுசுண்டர்  11. குதம்பைச் சித்தர்            

12. கொங்கணர்

13. கோரக்கர்           

14. சட்டைமுனி             

15. சிவவாக்கியர் 16. தன்வந்தி           

17. திருமாளிகைத்தேவர்       

18. திருமூலர் 19. தேரையர்            

20. நந்தி 21. பாம்பாட்டி

22.புலத்தியர்          

23. புலிப்பாணி      

24. போகர் 25. மச்சமுனி சித்தர்

                              சித்தர் பாடல்கள் ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற திருமதி இளமதி தன் ஆய்வேட்டின் பின்னிணைப்பில் 47 சித்தர்கள் பெயர்களைத் தொகுத்துத் தந்துள்ளார். அவை.

1.அகத்தியர்  2.அகப்பேய்   3.அமலுமுனி  4.அழுகண்ணர் 5.ஆனந்தர்  6.இராமதேவர்    7.இடைக்காடர்  8.உரோமமுனி 9.கமலமுனி 10.கருவூரார்  11.கபிலர்  12.காகபுசுண்டர்  13.காலாங்கி  14.குதம்பை 15.கூர்மமுனி  16.கூன்கண்ணர்  

17.கைலாசநாதர்  18.கொங்கணர்  19.கோரக்கர் 20.சட்டைமுனி 21.சண்டிகேசர் 22.சனகர்  23.சனந்தனர்  24.சனற்குமாரர் 

25.சனாதனர்  26.சாகமமுனி 27.சிவவாக்கியர்  28.சுந்தரானந்தர்  29.சூதுமுனி  30.தன்வந்தி  31.திருமூலர் 32.தேரையர் 

33.நந்தீசர் 34.பதஞ்சலி  35.பாம்பாட்டி  36.பிரம்மமுனி  37.புண்ணாக்கீசர்  38.புலத்தியர் 39.புலிப்பாணி  40.பூணைக்கண்ணர்  

41..போகர் 42.போககுரு 43.மச்சமுனி 44.யூகிமுனி  45.வாசமுனி 46.வான்மீகி 47.வியாசர் .  

                  சித்தர் இலக்கியம் ஒளவையார், மாணிக்கவாசகர், திருமாளிகைத் தேவர், சேந்தனார், காரைக்காலம்மையார், பட்டினத்தார் ஆகியோரையும் சித்தர் கூட்டத்தில் அடங்கியுள்ளார். மாணிக்கவாசகன் சிவபுராணம், கீர்த்தித்திருவகவல், திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல் என்பனவற்றையும் ஒளவையார் குறள், விநாயகர் அகவல் ஆகியனவற்றையும் ஒன்பதாம் திருமறையிலுள்ள திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருபூர்த் தேவர் ஆகியோர் பாடல்களையும் பதினோராம் திருமுறையிலுள்ள காரைக்காலம்மையார், பட்டினத்தார் பாடல்களையும் சித்தர் இலக்கியங்கள் எனக் குறிப்பிட்டு அவற்றுக்கு விளக்கமும் எழுதியுள்ளார்.சித்தர் பாடல்கள் தொகுக்கப்பெற்று வெளிவந்துள்ள சித்தர் ஞானக் கோவையில் ஒளவையான் குறள், விநாயகர் அகவல், மாணிக்கவாசகன் சிவபுராணம் முதலிய பகுதிகளும் ஒன்பதாம் திருமுறையிலுள்ள திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர் ஆகியோருடைய பாடல்களும் பதினோராந் திருமுறையிலுள்ள காரைக்காலம்மையார் பாடல்களும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

                  சித்தர் இலக்கியங்களில் திருக்குறள் என்னும் இந்நூலில் மீ.ப . சோமு அவர்கள் தம் சித்தர் இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ள ஒளவையின் குறள், விநாயகர் அகவல், திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த் தேவர், காரைக்காலம்மையார் ஆகியேன் பாடல்கள் இடம் பெறுகின்றன.  மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம். கீர்த்தித் திருவகவல், திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல் ஆகியவை இடம் பெறவில்லை.  சித்தர் ஞானக்கோவையில் இடம்பெறும் குறள் ஒப்புமை காணப்படும் எல்லா நூல்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.  சிவயோக சாரம், திருவள்ளுவர் ஞானம், நந்தீஸ்வரர் பூஜாவிதி, இராம தேவர் பூஜாவிதி, உரோமஷி ஞானம், ஞானசர நூல், நிஜானந்த போதம், ஞான ஏற்றம், சூயானந்தர் சூத்திரம் என்னும் நூல்களில் குறளாட்சி காணப்பெறாமையின் அவை இந்நூலில் இடம் பெறவில்லை.சித்தர்களுள் திருமூலர் தலையாயவராக இருத்தலின் அவர் முதலில் இடம் பெறுவர்.

1. திருமூலர் 2. ஒளவையார் 3. திருமாளிகைத் தேவர் 4.கருவூர்த்தேவர் 5.காரைக்காலம்மையார் 6.பட்டினத்தடிகள்

7.பத்திரகியார் 8.சிவவாக்கியர்  9.பாம்பாட்டி சித்தர் 10.இடைக்காட்டுச் சித்தர் 11.அகப்பேய்ச் சித்தர் 12.குதம்பைச் சித்தர்

13.கருவெளிச் சித்தர் 14.அழுகணிச் சித்தர்  15.கொங்கண நாயனார் (வாலைக்கும்மி) 16.சிவானந்தபோதம் 17.நெஞ்சறி விளக்கம்

18.ஞானக்கும்மி 19.திருவருட்பா திரட்டு 20.சிவபோக சாரம் 21.சொக்கநாத வெண்பா 22.சட்டைமுனி ஞானம்

23.அகஸ்தியர் ஞானம் 24.வால்மீகர் சூத்திர ஞானம் 25.காகபுசுண்டார்.

சித்தர்களை பற்றிய தொகுப்புகள் (தொடர்ச்சியும்……முடிவும்.) 9032592.jpg?496

                         சித்தர்களின் எண்ணிக்கையைப் பொதுவாகக் குறிக்குமிடத்துப் பதினெண் சித்தர் என்று குறிப்பிடுவர்.சித்தர்கள் யார் யார் என பல்வேறு கருத்துகள் நிகழ்கின்றன?  

  1. திருமூலர்,   2. இராமதேவர்,  3. கும்பமுனி,  4. இடைக்காடர்,  5.தன்வந்திரி,

6. வான்மீகி, 7. கமலமுனி, 8. போகநாதர், 9. குதம்பைச் சித்தர், 10. மச்சமுனி,

11. கொங்கணர், 12, பதஞ்சலி,  13. நந்திதேவர், 14. போதகுரு,15. பாம்பாட்டிச் சித்தர்.  

16. சட்டைமுனி,   17. சுந்தரானந்த தேவர்,   18. கோரக்கர்.இது ஒரு அனைவரும் அறிந்த பட்டியல்.

 

 1. அகப்பேய் சித்தர்,  2. அழுகணிச் சித்தர், 3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர், 4. சதோகநாதர்,  5. இடைக்காட்டுச் சித்தர்,  6. குதம்பைச் சித்தர், 7.புண்ணாக்குச் சித்தர்.  8. ஞானச்சித்தர், 9. மௌனச் சித்தர், 10. பாம்பாட்டிச் சித்தர்,

11. கல்லுளி சித்தர், 12, கஞ்சமலைச் சித்தர். 13. நொண்டிச் சித்தர், 14.விளையாட்டுச் சித்தர்,   15. பிரமானந்த சித்தர்,  

16. கடுவெளிச் சித்தர், 17. சங்கிலிச் சித்தர், 18. திரிகோணச்சித்தர்.இது மற்றொரு பட்டியல்.

இந்தப் பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர்.    

1. வான்மீகர், 2. பதஞ்சலியார்,  3. துர்வாசர், 4. ஊர்வசி,  5. சூதமுனி, 6. வரரிஷி,  7. வேதமுனி,  8. கஞ்சமுனி,

9. வியாசர், 10. கௌதமர் - இது இன்னொரு பட்டியல்.  பெரிய ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.

1. காலாங்கி, 2. கமலநாதர், 3. கலசநாதர், 4. யூகி, 5. கருணானந்தர், 6.போகர்,

7. சட்டைநாதர்,  8. பதஞ்சலியார்,  9. கோரக்கர், 10. பவணந்தி, 11. புலிப்பாணி, 12, அழுகணி,

13. பாம்பாட்டி,  14. இடைக்காட்டுச் சித்தர்,  15. கௌசிகர், 16. வசிட்டர், 17. பிரம்மமுனி, 18. வியாகர்,

19. தன்வந்திரி, 20. சட்டைமுனி, 21. புண்ணாக்கீசர்,22. நந்தீசர்,  23, அகப்பேய்,  24. கொங்கணவர்,

25. மச்சமுனி, 26. குருபாத நாதர், 27. பரத்துவாசர், 28. கூன் தண்ணீர், 29. கடுவெளி, 30. ரோமரிஷி,

31.காகபுசுண்டர்,  32. பராசரர். 33. தேரையர், 34. புலத்தியர், 35. சுந்தரானந்தர், 36. திருமூலர், 37. கருவூரார், 38, சிவவாக்கியர், 39. தொழுகண், 40. நவநாதர்.   (அ. சத்ய நாதர்,  ஆ. சதோக நாதர்,  இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ.வகுளி நாதர்,  ஊ. மதங்க நாதர்,

 எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர்,ஐ. கோரக்க நாதர்) 41. அஷ்டவசுக்கள், 42. சப்த ரிஷிகள்.

இப்படி சித்தர்கள் பட்டியல் கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது.  ஆயினும் பதினெட்டுப் புராணங்கள்,  பதினெட்டுப் படிகள், பதினெண் குடிமை,  பதினெண் பாஷை என்று வரையறை செய்தது போல் சித்தர்களையும் பதினெண் சித்தர்களாக ஒரு வரையறை செய்தனர். சங்கப் புலவர்கள்  செய்த நூல்கள் பத்துப்பாட்டு,   எட்டுத்தொகை,  பதினெண்கீழ்க்கணக்கு என்று எண்ணிக்கையில் தொகுத்தது போலவே இப்பதினெண் சித்தர் பாடல்களும் பெரிய ஞானக்கோவை என்ற நூலாகத் தொகுத்தனர். ஏனைய சித்தர் பாடல்கள் அவரவர் பெயராலேயே தொகுக்கப்பட்டன.

                       இந்தப் பதினெண் சித்தர் பாடல் தொகுதியினுள் அகப்பேய், அழுகணி,கடுவெளி,  குதம்பை, பாம்பாட்டி, சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார், காகபுசுண்டர்,  ஞானசித்தர்,  கந்துளிச் சித்தர், கஞ்சமலைச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர்,  புண்ணாக்குச் சித்தர்,  குதம்பைச் சித்தர், விளையாட்டுச் சித்தர், ஆகிய பாடல்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. பொதுவாக எல்லோறும் கூறுவது போல சித்தர்கள் வெறும் 18 பேர்கள் இல்லை.சித்தர்களின் பெயர்களை பல்வேறு புத்தகங்கள் வெவ்வேறு விதமாக அச்சிட்டு இருக்கின்றன.ஆனால் சித்தர்கள் நூற்றுக்கும்  மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள் அந்த பதினென் சித்தர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட சித்தர்கள் ஒரு 18 சித்தர்களின் பெயர் பட்டியல்

1. திருமூலர் 2. இராமதேவர் 3. கும்பமுனி 4. இடைக்காடர் 5. தன்வந்திரி 6. வால்மீகி

7.கமலமுனி 8. போக நாதர் 9. மச்ச முனி 10. கொய்கணர் 11. பதஞ்சலி 12. நந்தி தேவர்

13. போதகுரு 14.பாம்பாட்டி 15. சட்டைமுனி 16. சுந்தரானந்த தேவர் 17. குதம்பைச் சித்தர் 18. கோரக்கர்

அடுத்த 18 சித்தர்களின் பெயர் பட்டியல் – 1. கௌதமர் 2. அகத்தியர் 3. சங்கரர் 4. வைரவர் 5. மார்க்கண்டர்,

6. வன்மிகர்,7.உரோமர் 8. புசண்டர் 9. சட்டைமுனி 10. நந்தீசர் 11. திருமூலர்

12. பாலாங்கிநாதர் 13. மச்சமுனி 14. புலத்தியர் 15. கருவூரார் 16.கொங்கணர் 17. போகர் 18. புலிப்பாணி .

                        சித்தர்கள் வேறுபாடுகள் அற்றவர்கள் – இனம், மதம், மொழி, நாடு என்ற நம்முடைய பிரிவினைகளுக்கெல்லாம் கட்டுப்படாதவர்கள் சித்தர்கள். காற்று, நீர், நிலம், நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆண்டவர்களுக்கு சமூகத்தின் பிரிவுகள் பாதிக்கவே இல்லை. பல நாடுகளில் பயணம் செய்து, பல மொழிகளில் புத்தகங்கள் எழுதியுளார்கள். உதாரணமாக  ராமதேவராகிய யாக்கோபு என்ற சித்தர் இஸ்லாமிய மதத்தின் புனித இடமான மெக்காவில் தங்கி தான் கற்றவற்றை, இங்கு வந்து தமிழிலும் எழுதியுள்ளார். அந்தந்த நாடுகளுக்கு தக்கபடி பெயர்கள் இருப்பதால் சில சித்தர்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களும் இருக்கின்றன.அதுமட்டுமல்லாமல் பல மொழித் திறமையால் பல நாடுகளில் அவர்களின் புத்தகங்கள் இருக்கின்றன. சித்தரியல் என்னும் ஒரு இயலே இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. சித்தர்களின் நூல்களை ஆராந்து பார்த்து பல நாடுகளிலும் நவீன மருத்துவத்தில் அதனை சேர்க்க தொடங்கியுள்ளனர்.இவர்களின் கண்டுபிடிப்பான மனநிலையை ஒழுங்கு செய்யும் யோகா, இன்று மிகப்பெரிய அளவில் மக்களை சென்றடைந்துள்ளது. ஜக்கிவாசுதேவ், பரமஹம்ஸ நித்தியானந்தர் , வேதாந்திர மகரிசி போன்றவர்கள் தங்களது வாழ்க்கையை மக்கள் நல்வாழ்வுக்காக தந்து யோக நிலைகளை கற்று தருகிறார்கள்.மதம்,இனம் கடந்து தங்கள் சேவையை செய்து கொண்டிருக்கிறார்கள். 108 சித்தர்களின் பெயர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட சித்தர்கள் இந்த உலகில்வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி விரிவாக பார்க்கும் முன்பு 108 சித்தமாமுனிகளின் பெயர்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுக்கு தெரிந்த பழக்கமான பலசித்தர்கள் இருப்பார்கள். 1. திருமூலர். 2. போகர். 3. கருவூர்சித்தர். 4. புலிப்பாணி. 5. கொங்கணர். 6.மச்சமுனி.7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்.8. சட்டைமுனி சித்தர்.9. அகத்தியர்.10. தேரையர்.11. கோரக்கர்.12. பாம்பாட்டி சித்தர்.13. சிவவாக்கியர்.14.உரோமரிசி.15. காகபுசுண்டர்.16. இடைக்காட்டுச் சித்தர்.17. குதம்ப்பைச் சித்தர்.18.பதஞ்சலி சித்தர். 19. புலத்தியர்.20. திருமூலம் நோக்க சித்தர். 21. அழகண்ண சித்தர். 22. நாரதர். 23. இராமதேவ சித்தர். 24. மார்க்கண்டேயர்.25. புண்ணாக்கீசர்.26. காசிபர். 27. வரதர். 28. கன்னிச் சித்தர்.29. தன்வந்தரி.30. நந்தி சித்தர் 31. காடுவெளி சித்தர்.32. விசுவாமித்திரர் .33. கௌதமர் 34. கமல முனி 35. சந்திரானந்தர் 36. சுந்தரர்.37. காளங்கி நாதர் 38. வான்மீகி 39. அகப்பேய் சித்தர் 40. பட்டினத்தார் 41. வள்ளலார் 42. சென்னிமலை சித்தர் 43. சதாசிவப் பிரம்மேந்திரர் 44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் 45. ராகவேந்திரர் 46. ரமண மகரிஷி.47. குமரகுருபரர் 48. நடன கோபால நாயகி சுவாமிகள் 49. ஞானானந்த சுவாமிகள் 50. ஷீரடி சாயிபாபா  51. சேக்கிழார் பெருமான் 52. ராமானுஜர் 53. பரமஹம்ச யோகானந்தர் 54. யுக்தேஸ்வரர் 55. ஜட்ஜ் சுவாமிகள் 56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன. 57. கண்ணப்ப நாயனார்.58. சிவப்பிரகாச அடிகள்.59. குரு பாபா ராம்தேவ் 60. ராணி சென்னம்மாள். 61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி 62. குழந்தையானந்த சுவாமிகள்.63. முத்து வடுகநாதர். 64. இராமதேவர்  65. அருணகிரிநாதர். 66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் 67. மௌன சாமி சித்தர் 68. சிறுதொண்டை நாயனார்.69. ஒடுக்கத்தூர் சுவாமிகள். 70. வல்லநாட்டு மகாசித்தர்.71. சுப்பிரமணிய சித்தர்.72. சிவஞான பாலசித்தர். 73. கம்பர்.74. நாகலிங்க சுவாமிகள்.75. அழகர் சுவாமிகள்.76. சிவஞான பாலைய சுவாமிகள் 77. சித்தானந்த சுவாமிகள். 78. சக்திவேல் பரமானந்த குரு79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் 80. அக்கா சுவாமிகள்

81. மகான் படே சுவாமிகள் 82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் 83. பகவந்த சுவாமிகள்.84. கதிர்வேல் சுவாமிகள்.

85. சாந்த நந்த சுவாமிகள் 86. தயானந்த சுவாமிகள் 87. தஷிணாமூர்த்தி சுவாமிகள்.88. ஞானகுரு குள்ளச்சாமிகள்.

89. வேதாந்த சுவாமிகள்   90. லஷ்மண சுவாமிகள். 91. மண்ணுருட்டி சுவாமிகள்.92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள். 93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்).94. கோட்டூர் சுவாமிகள்.95. தகப்பன் மகன் சமாதி 96. நாராயண சாமி அய்யா சமாதி 97. போதேந்திர சுவாமிகள் 98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள்.99. வன்மீக நாதர்.

100. தம்பிக்கலையான் சித்தர் 101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் 102. குகை நாச்சியார் மகான். 103. வாலைகுருசாமி.

104. பாம்பன் சுவாமிகள்.105. குமாரசாமி சித்தர் சுவாமிகள்.106. பெரியாழ்வார் சுவாமிகள்  .107. மாயம்மா

108. பரமாச்சாரியார்.ராணி சென்னம்மாள், மாயம்மா என்ற பெயர்கள் பெண் சித்தர்களை குறிக்கின்றன. அதனால் பெண் சித்தர்களும் உலகில் மகிமை புரிந்திருக்கின்றனர்.இந்தப்பட்டியல் படித்து தொகுக்கப்பட்ட்து என்பதால் ஏதேனும் சித்தர்களின் பெயர்கள் விடுப்பட்டிருந்தாலோ, உங்களுக்கு சித்தர்களைப் பற்றி செய்திகள் தெரிந்தாலோ எனது மின்னஞ்சலுக்கு தெரிவிக்க மிகவும் தாழ்மையுடன் அழைக்கிறேன்

சித்தர்களின் சித்துவிளையாட்டுகள். 4280501.jpg?483

                        சித்தர்களின் சித்துவிளையாட்டுகள் –சித்தர்கள் என்றால் அறிவு நிறைந்தவர்கள் என்று பொருள். சித்திகள் என்ற மனித அறிவுக்கு எட்டாத பல காரியங்களில் ஈடுபடுபவர்கள். இந்த சித்திகளில் எட்டு பெரும் சித்திகள் உள்ளன. இதை அட்டமா சித்திகள் என கூறுகின்றார்கள். அவைகளை அறிந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்கள் சித்தர்கள்.

அட்டாங்க யோகங்கள்  இயமம் - கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, வெஃகாமை (பிறர் பொருள் விரும்பாமை) புலன் அடக்கம் என்பனவாம்.

நியமம் - தவம், மனத்தூய்மை, தத்துவ நூலோர்தல், பெற்றது கொண்டு மகிழ்தல், தெய்வம் வழிபடல்.

ஆதனம் - பத்திரம், கோமுகம், பங்கயம் , கேசரி, சுவத்திகம் (மங்கலம்), சுகாதானம் (சுகமும்,திடமும் எவ்வாறிருக்கின் எய்துமோ அவ்வாறிருத்தல்), வீரம், மயூரம் முதலிய இருப்பினுள் ஒன்றாயிருத்தல்.

பிராணாயாமம் - பிராண வாயுவைத் தடுத்தல், வாயுவை உட்செலுத்துதல், வெளிச்செலுத்துதல், இரேசக,பூரக கும்பங்களால் தடுத்தல் (இரேசகம் என்பது மூச்சை வெளிவிடுதல், பூரகம் என்பது வாயுவை உட்செலுத்துதல்). இதுவும் இரண்டு வகைப்படும்.1- அகற்பம் - மந்திரமில்லாது நிறுத்தல். 2- சகற்பம் - பிரணவத்துடன் காயத்திரி மந்திரத்தை, உச்சரித்து நிறுத்தல்.

பிராத்தியாகாரம் - மனமானது, புலன்கள் வாயிலாக விஷயாதிகளில் சென்று பற்றி உழலாவண்ணம் அடக்குதல்.

தாரணை - உந்தி,இதயம்,உச்சி என்னும் மூன்றிடத்தும் உள்ளத்தை நிலைநிறுத்தல்; இதற்கு 'முழங்கால்,குதம், இதயம்,கண்டம்,கபாலம்' என்னும் ஜந்து இடங்களிலும் ஜம்பூதங்களை (நிலம், நீர், தீ, காற்று, வானம்) ஆகியவைகளையும் ஒடுக்கி அவ்விடங்களில் முறையே பிரம்மன், விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் பஞ்ச மூர்த்திகளையும் இருத்திப்பாவித்தல் எனவும் கூறுவர். தியானம் - ஜம்புலத்தையும், அந்தக்கரணத்தையும் அடக்கி, ஒரு கரத்து மழுவும் ஒருகரத்துமானும் ஏந்தியதாய், அபயவரத அத்தங்களையுடையனவாய் சதுர்ப்புயம்,காளகண்டம்,திரிநேத்திரம் உடையனவாய் விளங்கும் சிவமூர்த்தியைத் தியானித்தலாம். சமாதி - ஓரிடத்தேனும் மந்திரத்தோடு நோக்காமல் எங்கணும் சிவவியாபகமாய், நோக்கி, அவ்வஸ்துவையும், தன்னையும் பிரிவறப் பொருத்துதல். இத்தகு அட்டாங்க யோகத்தினால் அட்டமா சித்திகளை அடைந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள்.

                அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். இவை இயற்கை அளித்த திறமைகள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சியினால் பெற்றனர்.

1. அணிமா – அணுவைக் காட்டிலும் சிறியதாக வடிவெடுத்தல்.

2. மகிமா – மலையை விட பெரிய வடிவெடுத்தல்.

3. கரிமா – மெல்லிய வடிவாக இருத்தலும், கைகளால் தூக்க இயலாத அளவிற்கு கனமாக இருத்தலும், நுகர்ச்சியின் தொடக்குகள் பற்றாமல் இருப்பதுவுமான ஆற்றல். 4. இலகிமா – காற்றை விட மெல்லிய வடிவெடுதல்.

5. பிராப்தி – நினைத்த பொருளை, நினைத்த நேரத்திலே பெரும் ஆற்றல்.

6. பிராகாமியம் – பல பல வடிவங்களை எடுத்தலுக்கும், அளவுக்கதிகமான வலிமை அல்லது ஆற்றல் உள்ளமைக்கும் இப்படி பெயர்.

7. ஈசாத்துவம் – தேவர்கள் முதல் சிறு உயிர்கள் வரை தன்னை வணங்கி வழிபடும் நிலை.

8. வசித்துவம் – தன்னை கண்டவர் அனைவரையும் தன் வயப்படுத்துவதும், கோள்களையும், மீன்களையும் தன் வசம் செய்வதுமான ஆற்றல். வசியம் என அனைவராலும் அறியப்பட்டுள்ளது. இதைவிட சிறந்த பல்வேறான சித்திகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் கூடுவிட்டு கூடுபாயும் நிலை. சித்தர்கள் இந்த அட்டமா சித்திகளில் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். அதற்கு ஆதாரங்களும் இருக்கின்றன. அந்த ஆதாரங்கள் சித்தர்களின் தனிப்பட்ட வாழ்கைகளைகளை விவரிக்கும் போது உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். சித்தர்களின் மதம் –எல்லா மதங்களிலும் ஞானிகள் இருக்கிறார்கள். இஸ்லாமிய மதத்தில் அவர்களுக்கு சூப்பிக்கள் என்று பெயர், பௌத மதத்தில் அவர்களுக்கு ஜென் ஞானிகள் என்று பெயர். நம் மதத்தில் சித்தர்கள். ஞானிகளுக்கும் சித்தர்களுக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது, அது என்னவென்றால் ஞானிகள் அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள், சித்தர்கள் ஞானத்தில் சிறந்தவர்களாகவும், சித்திகளில் வல்லவர்களாகவும் இருப்பார்கள். மற்ற மதங்களில் இறை தூதர்களுக்கு மட்டுமே சித்திகள் தெரிந்திருக்கின்றன.சித்தர்கள் நம் இந்துமத்த்தினை சார்ந்தவர்கள். அதற்காக தற்போது கோவில்களில் வேதமந்திரங்கள் சொல்லி சிலைகளுக்கு அபிசேகம் செய்யும் பிராமணர்கள் போல எண்ணிவிடாதீர்கள். இவர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள் சீவனே சிவம் என உணர்ந்து, அதையே மக்களுக்கு போதித்தவர்கள். இதனால் சித்தர்களை ஏற்காத பல மதவாதிகளும் உண்டு.இயற்கையான இயல்புகளை உடைத்தெறியக் கூடியவர்களாக மட்டுமல்லது மனதினை மட்டுமே கடவுளாக போற்றுகின்ற சித்தர்களும் உண்டு. ஆன்மீகத்தில் தன்னையே கடவுளென போதிக்கும் வகையிலும் சிலர் வருகின்றார்கள். மனதினை அடக்கி ஆளும் வகையிலே யோகிகளாகவும், பல துறைகளில் சிறந்து விளங்கும் ஞானிகளாகவும் இருந்திருக்கின்றனர். இப்படி பல்வேறுபட்ட கருத்துகளை சித்தர்கள் பாடல்கள் நமக்கு சொல்லுகின்றன. குறிப்பாக நான்கு வழிகள். 1. சாலோகம் – இறைவன்  இடத்தில் இருக்கும் நிலை. பூவுலகம் விட்டுப்போனபின் தேவர் உலகத்தில்  வாழ்வதை சாலோகம் என்பர்.

2. சாமீபம் – இறைவனை நெருங்கியிருக்கும் நிலை.கடவுளின் அருகே இருப்பதை சாமீபம் என்பார்கள். 

3. சாரூபம் – இறைவனை உருப்பெற்று விளங்கும் பேறு. கடவுளின் உருவினைப் பெற்று வாழ்வதை சாரூபம் என்றும்; 

4. சாயுச்சியம் – இறைவனுடன் இரண்டறக் கலத்தல் நிலை.கடவுளோடு இரண்டறக்கலந்து வாழ்வதை சாயுஜ்ஜியம் என்றும் சொல்வர்.

அடியா ரானீர் எல்லீரும்

அகல விடுமின் விளையாட்டைக்

கடிசே ரடியே வந்தடைந்து

கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்

செடிசேர் உடலைச் செலநீக்கிச்

சிவலோ கத்தே நமைவைப்பான்

பொடிச்சேர் மேனிப் புயங்கன்தன்

பூவார் கழற்கே புகவிடுமே.  - யாத்திரைப் பத்து

பதப்பொருள் : அடியார் ஆனிர் எல்லீரும் - அடியாராகிய நீங்கள் எல்லீரும், விளையாட்டை - உலக இன்பங்களில் ஈடுபட்டுப் பொழுது போக்குகின்ற நிலையை, அகல விடுமின் - நீங்கிப் போமாறு விட்டு ஒழியுங்கள்; கடிசேர் அடியே - மணம் தங்கிய திருவடியையே, வந்து அடைந்து - வந்து பொருந்தி, திருக்குறிப்பை - திருவுள்ளக் குறிப்பை, கடைக்கொண்டு இருமின் - உறுதியாகப் பற்றிக்கொண்டிருங்கள்; பொடி சேர் மேனி - திருவெண்ணீறு பூசப்பெற்ற திருமேனியையுடைய, புயங்கன் - பாம்பணிந்த பெருமான், செடி சேர் உடலை - குற்றம் பொருந்திய உடம்பை, செல நீக்கி - போகும்படி நீக்கி, சிவலோகத்தே - சிவபுரத்தே, நமைவைப்பான் - நம்மை வைப்பான், தன் பூ ஆர் கழற்கே - தனது தாமரை மலர் போன்ற திருவடி நிழலிலே, புகவிடும் - புகும்படி செய்வான்.

விளக்கம் : முத்தி நால்வகை; சாலோகம் சாமீபம் சாரூபம் சாயுச்சியம் என்பன. சிவலோகத்தே வைத்தல், சாலோக பதவியளித்தல். பூவார் கழற்கே புகவிடுதல், சாயுச்சிய பதவியளித்தலாம். சாயுச்சிய பதவி பெற்றோர்க்கு மீண்டும் பிறவி இல்லை என்க. பிறவி வேண்டாதவர் உலகப் போகங்களில் மனத்தைச் செலுத்தாது இறைவன் திருவுள்ளக் குறிப்பின்வண்ணம் நடந்தால் மீண்டு வாரா வழியாகிய சாயுச்சிய பதவி கிட்டும் என்பதாம். இதனால், இறைவன் தன் அடியார்க்குப் பரமுத்தியை நல்குவான் என்பது கூறப்பட்டது.

                                                    

                           ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஐக்கியமாகும் நிலை. அகத்தியர் லிங்க வழிபாட்டினை விரும்பியவராக இருந்துள்ளார். பாம்பாட்டி சித்தர், அகப்பேய் சித்தர் போன்றோர் மனதினையை கடவுளாக நினைத்துள்ளனர். இப்படி பலவகையான கொள்கைகள் உடையவர்களாக சித்தர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் சொன்னது மனதினை வென்று உயரிய வழிக்கு செல்லும் முறை மட்டுமே.சித்தர்களினால் ஏற்பட்ட பலன் –சித்தர்களின் அறிவு திறத்தால் ரசவாதம், நாடிசோதிடம், பட்சி சாத்திரம், சித்த வைத்தியம், யோகா, தியானம் போன்ற பல துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டது. இவர்களைப் பற்றி ஆய்வு செய்தவர்கள் தற்போது உள்ள சோதனைக் கூடங்கள் போல சிலவற்றை அமைத்து சித்தர்கள் தங்களது துறையில் வல்லுனர்கள் ஆனார்கள் என்கின்றனர்.அது மட்டுமல்லாது உலோக வகைகள், உப்பு வகைகள், பாஷாண வகைகள், வேர் வகைகள்,பட்டை வகைகள்,பிராணிகளி்ன் உடம்பிலே உற்பத்தியாகும் கோரோசனை கஸ்தூரி, மூத்திரம், மலம் முதலியவைகளின் குணங்களை ஆராய்ந்து கண்டிருக்கின்றனர். முழுக்க முழுக்க காட்டிலும் குகையிலும் ஆராட்சி செய்ததால் மக்களுக்கு தெரியாத பல அரிய மூலிகைகளையும், முறைகளையும் சித்தர்கள் அறிந்து வைத்திருந்தனர்.                         சதுரகிரி மலையில் வாழ்ந்த சித்தர் கூட்டம் பற்றி அகத்தியர் ஆயிரத்து இருநூறு என்ற நூல் கூறும் வரலாறு இங்கே எண்ணற்பாலது.

1. எக்கிய மா முனி என்பவர் அகத்தியருக்கு சிங்கி வித்தை கற்றுக்கொடுத்தார். அதனால் அகத்தியர் சிங்கி வித்தையில் குருமுடித்தார்.

2. சிங்கி வித்தை கருவூரார்க்கு உணர்த்தப்பட்டு அவர் சிங்கி வேதைமுடித்து போகத்தில் இருந்து பூரணத்தில் மகிழ்ந்தார். 3. கொங்கணர் வீரம் என்கிற பாடாணத்தால் வேதை முடித்து சிவயோக நிட்டையில்பலகாலம் இருந்து மேருகிரியில் பூரணத்தில் நின்று ஒடுங்கினார்.

4. போகர் ஏமரசம் கண்டு அதனை உண்டு ஒரு கோடி காலம் சிவயோகம் இருந்துபூரணத்தில் தங்கினார்.

5. கயிலாசச் சட்டைமுனி சவுக்காரச் சுண்ணம் கண்டு வேதை பார்த்து கோடிகற்பகாலம் இருந்து சிவயோகியாய் சாலோக பதிவியை அடைந்தார்.6. கமல முனி அண்டச்சத்து கண்டு மெழுகுபண்ணி வேதை பார்த்து மதியமிர்தமுண்டு மேருவில் தவம் பண்ணி சதகோடி யுகாந்தம் இருந்து கமலமலரில் சென்று பரவெளியில் கலந்தார்.

7. மச்ச முனி கெந்தியில் சத்து எடுத்து வேதை பார்த்து செந்தூரம் செய்து சடம் அழியாமல் சிவயோகத்தில் இருந்து சிவமயமானார்.

8. திருமுலர் கௌரி சத்து எடுத்து வேதை பார்த்து செந்தூரம் செய்து கோடான கோடி காலம் பூரணமாய் நிட்டை கூடி மணி மகுட முடியில் சென்று பூரணத்தில் அடங்கினார்.

9. நந்தீசர் அயக்காந்த சத்து எடுத்து வேதைபார்த்து செந்தூரித்து பூரணத்தில் நின்று வெகு கோடி யுகாந்த காலம் இருந்து சோதியில் கலந்தார்.

10. சுந்தரானந்தர் களி உப்பு வாங்கி நீற்றி சுண்ணாம்பாக்கி நவலோக வேதை பார்த்து தன்னிலை அறிந்து பொற்கமலம் மீதேறி அனந்தகாலம் தவம் இருந்து பூரணத்தில் மகிழ்ந்தார்.

11. கோரக்கர் நவக்கிரக பூசை பண்ணி பூரணத்தில் சொக்கி கோடியுகம் நிட்டை கூடி கைலாயம் சென்று பூரணத்தில் இருந்து பரமபதம் அடைந்தார்.

12. காலாங்கி

13. புண்ணாக்கீசர்

14. வியாக்ரபாதர்

15. கூனக் கண்ணர்

16. சிவவாக்கியர்

17. இடைக்காடர்

18. சண்டிகேசர் ஆகியோர் வாசியோகம் செய்து மௌனமாகி சோதியில் ஏழு பேரும் சிவபூசை செய்து மௌனமாகி சோதியில் கலந்தார்.  இதனால் பதினெண்சித்தர்கள் யாவர் என்பதும் அவர்கள் நவபாடாணங்களை வேதை செய்து குரு முடித்து காயகல்பம் உண்டு பன்னெடுங்காலம் வாழ்ந்து சோதியில் கலந்தார்.

வாசியோகம். 7181486.png?484

                        வாசியோகம்என்பது குருமுகமாக நெற்றிப் பொட்டைத் தொட்டுக் காட்டிப் பூட்டுத் திறக்க வழி செய்து, மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து வெளிப்படுத்தாது உள்ளுக்குள்ளேயே மேலும் கீழுமாக ஓட்டிச் சமாதி நிலை எய்தச் செய்வதாகும். அவ்வாறு இடகலை, பிங்கலை வழியாக மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கில் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு செய்தால் கபமெனும் எமனை எட்டி உதைக்கலாம். வாசியோகத்தினால் பிராணன் (காற்று) தங்கு தடையற்றுச் சுழுமுனையை நாடிச் செல்லும். வாசியோகம் பயிலப் பயில உடலில் மறைந்துள்ள தேவையற்ற ஊன் (கபம்) மறையும். இதனால் குண்டலினியை எழுப்ப அநுபவங்களைப் பெற்று சித்தியடையலாம்.இரு மூக்குத் துவாரம் வழியாகப் பிராணனை வெளிவிடாமல் ஒன்று சேர்க்கும்போது புருவ மத்தியில் அக்னிகலை தோன்றும். இந்த அக்னியில் நாட்டம் வைத்தால் (மனதை நிறுத்தினால்) கோபுரத்துக்குச் செல்லும் வாயில் பூட்டான நாசிமுனை புருவமத்தி திறந்து கொள்ளும். மறக்காமல் தினம் ஒருதடவை சாதனை செய்துவரவேண்டும். மெளனத்துடன் அடங்கி அமைதியாக இருந்தால் மதிஅமுதம் சுரந்துவிடும். மனம் தூங்காமல் தூங்கி சுகம் பெறும். இந்நிலை ஏற்பட மூக்கு மார்க்கமான மற்றோர் வீட்டிற்குச் செல்லாமல் நெற்றி மார்க்கமாக மேலே செல்லவேண்டும்.பிராணன் இயல்பாக உலவும் வழி இடகலை, பிங்கலைகளாகும். அவைகளை மாற்றிச் சுழுமுனையில் செலுத்துவதையே திருமூலர் கூறுகிறார். மூக்கின் வழியாக உள்ளே சென்று மீண்டும் மூக்கின் வழியாக வெளியே ஏறுகிற காற்றை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி மூலாதாரத்தில் மேல் உள்ள முதுகெலும்பின் அடிப்பாகத்தில் இருந்து முதுகெலும்பின் உள்ளே உள்ள சிறு துவாரம் வழியாகச் செலுத்தினால் அதாவது சுழுமுனை வழியாகச் செலுத்தினால் மூச்சானது சிறிது சிறிதாக மேலேஏறி அண்ணாக்கில் உள்ள துவாரத்தின் வழியாகப் புருவ மத்திக்கு வந்து அங்கிருந்து உச்சிக்குச் செல்லும். இவ்வாறு ஏற்றி இறக்கிச் செய்யும் மூச்சுப் பயிற்சியே வாசியோகம் எனப்படும்.                                                               

                                         

                            சுழுமுனை வாசல் திறப்பதற்கான விபரம் :வாதம், பித்தம், சிலேத்துமம்(கபம்) மூன்றும் ஆகாது. எனினும் சிலேத்துமத்தின் சேர்க்கைதான் (சேத்துமம்) உச்சிக்குழிக்குக் கீழே உள்நாக்குக்கு மேலே எரிகிற பச்சை விளக்கை பங்கப் படுத்துகிறது. ஆகவே தான் சுழுமுனை வாசல் திறக்க கபம் வெளியேற வேண்டும். இதற்குக் காலைப் பிடித்தல் ஒன்றே வழி. (கால்-காற்று) காற்றில் உட்கலந்து ஊடாடி நிற்கும் நெருப்பை யோகிகள் உட்கொள்கிறார்கள். இந்தக் கனலால் கபம் அறுபடுகிறது. இந்தக் கபம் வெறும் சளி மாத்திரம் அல்ல. உடலெங்கும் ஒட்டிக் கிடக்கும் கசிறு. இதை புத்தவேதம், " உட்கவிழ்ந்த மேகம்" என்று கூறுகிறது. ஊத்தை சடலம், உட்குழிந்த பாண்டம் என்று உடல் அழைக்கப்பட்டதற்கு "கபமே" மூலகாரணம். எனவே கபத்தை எமன் என்றே அழைக்கலாம்."ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி" என்கிற திருவாசக அடியால் இதைத் தெளிவு பெறலாம். ஊன் என்பது ஊத்தைக்கசிறு, உடல் என்பதாக நாம் கொள்கிற பொருள் தவறு. இந்த ஊன் உருகுவதற்கு உள்ளொளி பெருகவேண்டும். வாசியோக சாதகர்கள் காற்றிலிருந்து (பிராணன்) நெருப்பைக் கொள்முதல் செய்கிறார்கள். இந்த நெருப்பின் நேயச் சேர்க்கையால் உள் ஒடுங்கிய பொறி உள்ளொளியாக விளக்கம் பெற்றுப் பெருகுகிறது. பிறகு உவப்பிலா ஆநந்தமாய்த் தேன் அமிர்ததாரையாக வருகிறது. இது வாசியோகத்தின் சிகர சாதனை என்று கருதலாம்.

கபம் என்பது உடல் துரியநிலை பெற (நிர்விகல்ப சாயுச்யநிலை) இடையூறாக இருக்கிறது. மாவுப்பொருட்கள் நிறைந்த உணவுகள் அனைத்தும் கபம் விளைகிற கால்வாய்கள் எனலாம். "கோழை கபம் தான் யமன்!" இதை நீக்க சித்தர்களால் ஆகாது. வாசியோகக் கனலாலே தான் எரிக்க முடியும்.

                               புருவ மத்தியாம் நெற்றிக் கண் பூட்டுத் திறக்க :சுகாசனத்தில் அமர்ந்து தலை, கழுத்து உடல் நேராக நிமிர்த்தி, புருவமத்தியில் மனம்பதிந்து இரு இமைகளுக்கும் இடையில் நுண்ணறிவால் (உணர்வால்) பார்த்தால் அந்த இடத்தில் அசைவு காணும். பிராணனை மேலே தூக்கி உடலைத் தளர்த்தி,மனதை அந்த இடத்தில் செலுத்திப் பார். அறிவு நிற்கும் இடமாகிய புருவ மத்தியில் மனதை நிறுத்தி, காலை, மாலை 2 வேளையும் 11/2 மணி நேரம் பார்த்து வர வேண்டும். இவ்வாறு பழகி வந்தால்தான் பலன் காண முடியும். புருவ மத்தியில் உள்ள வாசல் திறக்கும்போது நீலம், பச்சை, வெள்ளை போன்ற நிறங்கள் தோன்றும்.புருவமத்தியில் நினைவை வைத்துத் தூண்டும்போது உண்டாகும் துன்பங்கள்:காதடைப்பு, கிறுகிறுப்பு உண்டாகிக் கண்கள் இருளும். உடல் வலி எடுத்து நடுக்கம் ஏற்படும். புலன்கள் வலிமை குன்றும். இந்நிலையை அநுபவித்துப் பார்த்தவர்களுக்கே தெரியும். மன உறுதி உள்ளவர்கள் மட்டுமே இதைத் தாண்டி மேலே வரமுடியும். மற்றவர்கள் தாண்ட மாட்டார்கள்.

                                வாசி பார்க்கும் நெறி :வாசியானது மூக்குத் தண்டு நடுவில் (புருவமத்தி) வருவதே வல்லபம் ஆகும். யோகத் தண்டான முதுகுத் தண்டு நிமிரும். அப்போது கண்ணை இறுக்கி சிரமத்துடன் கிடந்து நெற்றியைப் பார்க்காதே. மனதால் அந்த இடத்தைக் காணவேண்டும். நடு நெற்றி முதல் பிரம்மரந்திரம் என்ற நாமம் போன்று வாசி ஏறும். (அந்நிலையைக் குறிக்கவே நாமம் என்கின்றோம்) அப்போது குமரியாகிய வாலை விளையாடுவதைக் காணலாம்.ஏமாந்து போகாமல் ஒரு நாமமார்க்கத்தில் தொட்டேறி உச்சி வழியாக பிரம்மரந்திரத்திற்குச் செல்லவேண்டும். அப்போது பேசாமல் சித்திரம் போல் அசையாமல் மோனத்தில் இருந்துகொண்டு புருவமத்தியை மனதால் காணும்போது உடல் லேசாகும். மேலே தூக்கும். மனமும், வாசியும் இடது புறம் போகாமல் வலது புறமாக சூரிய கலையில் ஓடும். இந்நிலையில் தன்னைத் தான் காணலாம். சாதாரண மனிதனுக்கும் தாது உயிர் நின்ற இடம் இதுதான். தன்னைத் தானே காணும் இடமும் (ஆன்ம தரிசனம்) நெற்றியடி புருவமத்தி, ஊசிமுனை துவாரம் உள்ள மூக்கின் அடிமத்தியாகும். எனவே, புருவ மத்தியில் நின்று உருளும் வாசியை அநுபவித்துப் பார்க்கவேண்டும். சாதனையில் முன்னேறினால் அந்தச் சித்தியை ஓராண்டுக்காலத்தில் பெறலாம். அதன் பின் நெற்றியில் நடு நாம வழியைப் பற்றிச் செல்வதே முத்திக்கு நேரான வழியாகும். இவ்வாறு செல்பவர்கள் முனிவர்களாக ஆகலாம்.இவ்வாறு கண் இரண்டையும், புருவ மத்தில் சுழிமுனையின் நடுவில் அசையாமல் பார்த்தால் அங்கு மூன்றாவது கண்ணாகிய ஞானக்கண்ணைக் காணலாம். இதனால் ஞானரசத்தைப் பருகலாம். உடல் ஒளியுறும். புலன்கள் தோறும் தேவையற்ற கருவிகள் அடங்கிப் போகும். அப்போது உடல் கற்பூர வாசனை வீசும். உலக விவகாரம் அற்றுப் போகும். வயோதிகம் குறைந்து வாழ்நாள் நீடிக்கும். மூக்கு மத்தியில் வாசி கொண்டு ஏற்றினால் நாசி மத்தியில் வாசி நீண்டு விடும். இந்நிலையில் தானாகவே வேண்டும்போது திறக்க, பூட்டச் செய்யலாம். அதாவது நினைத்த மாத்திரத்தில் புருவ மத்தியில் நின்று சமாதி நிலையை எய்தலாம் மேலும் அந்த வாயிலைத் தாண்டி உட்புகுந்து மேலே, (பிரமரந்திரம்) ஏறினவர்களுக்கு யோகத்தின் புராதனமாகிய யோகதண்டம், கமண்டலம், குகை போன்றவைகள் வேண்டாம்.

                        இதனால் குருவருளும் திரிகால ஞானத்திலுள்ள எல்லா சித்திகளும் உண்டாகி கர்மவினை மாறி தர்மம் ஆகும். நரை, மூப்பு, மரணம் இவை போகும்.மூலாதாரத்தில் இருந்து மூலக்கனல் எனும் வாசி முதுகுத் தண்டின் வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறி, பிடரி வரை வரும். உடல் முழுதும் ஓடாது முதுகுத் தண்டின் உள்ள நடு நாடிவழியாக வரும். அப்போது வாய் மூடி மெளனமாக உடல் ஆடாமல் அசையாமல் இருந்தால் வாசி சீறி எழும் வேகத்தால் உடலைப் பின்னால் தள்ளும். மீண்டும் வாசி கீழ் நோக்கிச் செல்லாமல் உள் நாக்கின் வழியாக மேலே செல்லும். அதன் பின்பு பிரம்மரந்திரத்தை அடைந்து வாசியானது உச்சிவெளியான சிதாகாசத்தில் கலந்ததால் அனைத்தும் தோன்றும். பஞ்ச பூதங்களும் அவர்களுக்கு ஏவல் செய்யும். சூரியன், சந்திரன், நட்சத்திரம், ஆகியவை அவர்களுடன் பேசும். இவர்களே சித்தர் நிலையை அடைந்தவர்கள் ஆவார்.இவர்கள் உடல் பல மாறுதல்களை அடையும். நடந்து செல்லாமலேயே ஆகாய மார்க்கத்தில் செல்லமுடியும். தொலைதூரம் நடப்பதைக் காணவும், தொலைதூரம் பேசுவதைக் கேட்கவும் முடியும். இவை எல்லாம் ஒரு நொடியில் நடக்கும். சாதாரண மனிதன் தெருவில் நடப்பது போல் பல உலகங்களில் உலவிவர முடியும். இவை எல்லாம் வாலையாகிய குண்டலினி சக்தி உடலில் உள்ளதால் நடைபெறும்.

                                  காயசுத்தி விபரம் :காலனுக்கு உயிரை உண்ணும் வேலைதான். அவன் ஏவலால் சூலாயுதம் கொண்டு உயிரை எமன் கொண்டு செல்கிறான். எமனுக்கு எமனாய் இருக்கவேண்டுமானால் சூலனுக்கு சூரனாய் இருக்கவேண்டும். அதற்குக் கால சித்தியே துணையாகும். காலசித்தி பெற்றால் எமன் அணுகமாட்டான். வேலாயுதமாகிய வாசியில் எல்லாக்குற்றங்களையும் இரையாக இட்டால் பிராணன் வெந்து காயாது, பசி நீங்கும். கபம் போகும். காம உணர்வு நீங்கும். இவ்வாறு இருந்தால் காலன் நம்மை அணுக மாட்டான்.காயகல்பநிலை பெற விரும்பு துறவியர்களுக்கான உணவு, இருப்பிடம் மற்றும் பல விபரங்கள் கல்ப சாதனை செய்யவிரும்புபவர்கள் கடுமையான சக்தியுடன் இருக்கவேண்டும். தனிக்குடிசை (வீடு-மாடி) கட்டிக் கொள்ளவேண்டும். இந்நிலையில் நல்ல குருவும், சிஷ்யனும் தேவை.கருங்குறுவை அரிசி, பாசிப்பயிறு, மிளகு, சீரகம் இவைகளை வேகவைக்கக் கூடிய அளவுக்குக் காராம்பசுவின் பாலைச் சேர்த்துப் பொங்கி ஒரு வேளை சாப்பிடவேண்டும். மற்ற நேரங்களில் காராம்பசுவின் பால் மட்டும்தான் சாப்பிட வேண்டும். வேறு ஒன்றும் சாப்பிடக் கூடாது. மழை, வெயில், பனி, காற்று நான்கும் ஆகாது. பிரம்மசரிய விரதம், ஆகாரப் பத்தியம் கடுமையாக இருக்கவேண்டும். தவறினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இதனால்தான் இக்காயகல்ப சாதனை பற்றி சித்தர்கள் விவரமாகச் சொல்லாமல் மறைத்து விட்டுப் போய்விட்டார்கள். இந்தக் கடுமையான பத்தியம் இருந்து அஜபா காயத்திரி மந்திரம் செய்து வரும்போது மெளனமும் தொடர்ந்து இருந்து வந்தால், மாதாமாதம் செய்தால் 12 மாத பலனைப் பெறலாம். சிரத்தையுடன் தொடர்ந்து ஒவ்வொரு வருடமாகப் பனிரண்டு வருடங்கள் செய்து வந்தால் 12 வருட பலனையும் பார்க்கலாம். இதற்கு இடம், பொருள், ஏவல் மூன்றும் தேவை.

                                   புருவ நடு திறந்து சஹஸ்ராரத்தில் நடனம் கண்டபின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்: சஹஸ்ராரத்தில் திருநடனம் காணும்போது கண்கள் சிவந்து காணப்படும். பாதம், ஆசனவாய் இவைகளில் எரிச்சலும், வலியும் இருக்கும். தினமும் கொஞ்சம் கொஞ்சமாகப் பயிற்சி செய்யவேண்டும். அப்போது வாசி செந்தீ போல் இருப்பதை நுண்ணறிவால் உணரலாம். இந்தச் செந்தீயாகிய வாசிய இடுப்பிற்குக் கீழே இருபிளவாக இருக்கும் கால்களுக்குச் செல்லுமாறு செலுத்தவேண்டும். ஒளி காணும்வரை செலுத்தவேண்டும். சாதனை காலத்தில் புருவமத்தி, உச்சி, பிடர் போன்ற இடங்களில் சுலபமாக ஒளி காணமுடியும். ஆனால் இடுப்பிற்குக் கீழே பாதம் வரை யோகக்கனல் வருவதற்கு நீண்ட காலப் பயிற்சி வேண்டும்.காலை, மாலை இருவேளையும் மூக்கு முனையில் இருவிழிகளை நிறுத்திப் பார்த்தால் இரு விழிகளுக்கிடையில் நேர் மத்தி புருவ மத்தியில் வாசியாகிய உயிர் புருவம் தட்டும். இந்த இடத்தில் மனம் பதிவதையே குரு என்பர். இந்நிலை வந்தால் கருவிக்கூட்டங்கள் ஒடுங்கி ஓடிப் போய் விடும். அதாவது புலன்களும், கருவிகளும் செயலிழந்துவிடும். மனம் திறந்து ஒளி வீட்டைக்காணலாம்.கருவி கரணங்கள் என்னும் தத்துவங்களை வென்ரதால் மனதை விட்டுக் கவலைகள் ஒழிகின்றன. புலன்கள் சுத்தமாகும். முயற்சி செய்தால் முடியாதது எதுவுமே இல்லை. புருவமத்தி என்னும் குன்றின்மீது ஏறி, பிரம்மரந்திரமாகிய மலை உச்சிக்குச் சென்று அம்பலதரிசனம் கண்டவரே மறையோகியும் குருவும் ஆவார்.

                      குரு வருளால் திருவாகும் யோக்கியதை உண்டாகும். சித்தர்களுக்கெல்லாம் அரசனாக வாழலாம். திரிகால தரிசனம் கிடைக்கும்.யோகிகள் தன் மரணத்தை மறந்து, சரீரத்தை பேணிப்பாதுகாப்பதை மறந்து நேரங்களையும் துறந்து காலை, மதியம், மாலை என்று மூன்று காலமும் வாசியை ஏற்றிச் சாதனை செய்தவர்கள். தூண்டாத ஜோதியுடன் வெளிச்சம் காண்பர். காயகற்பம் கண்டவர்கள் அமுதத்தை உண்டு கலை சித்தி பெறுவார்கள். ஒளியைப் புருவ மத்தியில் ஏற்றியவருக்குக் கூட சஹஸ்ரார தரிசனம் சிலசமயம் கிட்டுவதில்லை. சஹஸ்ராரத்தில் சென்ற பிராணன் குளிகை போல் ஆகிவிடும். அவ்வாறு உச்சிக்குச் சென்று குளிகை ஆனால் ஆகாய மார்க்கத்தில் பறக்கும் ஆற்றல் உண்டாகும். பிராணன் பலப்பட பலப்பட ககனமார்க்கம் செல்லும் திறன் உண்டாகும். முக்திநிலை கூடும். இந்நிலையில் மனம் மெளனத்தில் இருந்து மோனத்தில் ஒடுங்கும். அஜபா காயத்ரியை (ஓம்) தியானம் செய்யச் செய்ய உயிர் வலுக்கும் குளிகையாகும். சஹஸ்ர தளத்தின் நடுவில் உள்ள கேசரங்களில் உயிர் நிற்கும். இதை விட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை.நெஞ்சுப்பள்ளமாகிய அநாஹதத்தில் பிராணன்(வாசி) வரும்போது நீண்ட காலத்திற்கு அங்கேயே சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும். இந்நிலையில் யோகிகளுக்குத் திட சித்தம் ஏற்படாமல் சலனங்கள் உண்டாகும். உயிர் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும். அதற்கு மேல் விசுத்தி சக்கரத்திற்கு வரும். அதற்கு மேல் விரைவாக ஏறி புருவ மத்தியாகிய ஆக்ஞாசக்கரத்திற்கு வந்தால் சலனங்கள் மறைந்துவிடும். அதன் பிறகு நெற்றி வழி உச்சிக்குச் சென்று முட்டும். உச்சிக்குச் சென்று முட்டும் பிராணன் அங்கு சுற்றிச் சுழன்று வட்டமிடும். இதைப் பார்ப்பதே ஞானம் எனப்படும்.

                             இஞ்ஞானநிலையை விட்டு உயிர் கீழே இறங்கி பிடரிக்கு வந்தால் வாத, பித்த, சிலேத்துமம் அதிகரிக்கும். பித்தம் அதிகமாகும். மேன்மக்கள் இருவர் கூடினால் பலம் அதிகமாவது போல் பிராணனும் பித்தநீரும் ஒன்று கூடினால் உடல் தொல்லை அதிகமாகும். பிராணன் இன்னும் கீழே இறங்கி வந்தால் மும்மூர்த்தியானாலும் மரணம் அடைவார்கள். அதனால் எப்போதும் உச்சியிலே நிற்கவேணும். அப்படி இறங்கினாலும் மீண்டும் லகுவாக மேலே ஏற்ற வேண்டும். காலை, மாலை இரண்டு வேளையும் அமைதியான இடத்தில் மனமும், உடலும் இணங்கிய (காலம்) சுகாசனத்தில் இருந்து சாதனை செய்தால் வெட்டவெளியில் மனம் ஒடுங்கும். யோகசாதனையின் முடிவில் யோகத்திற்குத் தடையாக இருந்த நீர் கழிந்துவிடும். பிராணன் கபாலம் ஏறும். யோகம் 12 ஆண்டில் சித்தியாகும். அவரவர் புண்ணியத்திற்குத் தகுந்தபடி 3 ஆண்டு, 5 ஆண்டு, 8 ஆண்டு, 10 ஆண்டு, 2 ஆண்டு என யோகம் சித்திக்கும். மேலே செல்லச் செல்ல யோகம் எளிதாகும். இடைவிடாது பயின்றால் சிற்பரத்தைக் காணலாம். இதுவே நெற்றிக்கண் திறத்தலாகும். இதற்கு மேலெ ஞானநிலை கூட உச்சி ஏறுவர். தலை உச்சியில் கபால மத்தியில் அண்ணாக்கிற்கு நேர் தூண்போல் 1 சாண் நீளம் ஒளி உண்டாவதைக் காணலாம். இந்நிலை வந்தால் நாவால் உணவு உண்ணாமல் உள்நாவால் அமுதம் உண்ணலாம்.அண்ணாக்கில் உள்ள துவாரமே 10-ம் வாசல். இதை ஊடுருவி மூலத்துண்டின் மூலம் உள்நாக்கு வழியே பற்றி வாசிக்குதிரை ஏறி ஒளி இடமாகிய காசிக்குச் செல். அங்கு பரை ஆடுவதைக் காண்பாய். அண்ணாக்கில் இருந்து உச்சிவரை செல்லும் மூல மார்க்கத்தை நடுநாடி, உயிர்நாடி, பிராணநாடி ஆகிய வழி சென்று உயிர் நடனத்துக்குக் கூத்தாடும்.

                   புருவ மத்தியை நோக்கி சாதனை செய்து கொண்டிருக்கும்போது நோய்கள் வந்தால் மருந்துகளால் குணமாகாது. யோகத்தால் அதை நிவர்த்தி செய்யமுடியும். சாதனையைப் பாதியில் நிறுத்தினால் நோயினையே அடைவார்கள். பொய் யோகியாகி விடும். ஞானபதம் கண்டவர்கள் பித்தர்கள் போல் தன்னை மறந்து காணப்படுவார்கள். சுழலில் அகப்பட்ட துரும்பு போல துடிப்பார்கள். இச்சமயத்தில் ஞானத்தால் ஊன்றி நின்று பித்தம் போக்கி எச்சரிக்கையுடன் இருந்து 1 வருடம் வரை சாதனை செய்யவேண்டும்.சாதனை செய்யும் ஒரு வருட காலத்தில் கிறுகிறுப்பு, மயக்கம் இவை தோன்றும். மயங்கி விழுந்த மண்டைக்குள் வாலை கூத்தாடும். இவ்விளையாட்டு ஒருவருடம் வரை நடக்கும். இதைக் குளிகை என்பர். இந்நிலை வரவிரும்பினவர்கள் யோகத்தில் மேல்நிலையில் உள்ளவர்கள். கபாலத்தில் உயிர் குளிகையாகி நிற்கும்போது ஏற்படும் உணர்வுகளாகும். முக்தி நிலையில் முழுமை பெற்று சித்தி பெற்ற ஞானிகளுக்கு நாடி, நரம்புகள் இறுகிக் காணப்படும். உடல், உயிர் இவைகளில் உண்டான மும்மலக் கசடுகள் நீங்கும். குண்டலினி சக்தி உடலில் இருந்து ஆடிப்பாடும். மனம், உடல், உயிர் மூன்றும் ஒன்றாய் கூடி ஒடுங்கி நிற்கும். ஒளி பெருகும், இருள்விலகும். இந்நிலை வந்தால் நரை, மூப்பு ஓடிப் போகும்.ஞானசித்தி பெற்ற பின்பு நாடி, நரம்புகள் இறுகும். ககன மார்க்கத்தில் செல்ல முடியும். பூமியில் நடப்பது போன்று வானத்தில் நடக்கலாம். வல்லபங்கள் அநேகம் உண்டு. மனதில் உற்சாகம் தோன்றும். கேட்டதெல்லாம் கிடைக்கும். வாலைத்தாய் குண்டலினி சக்தி முன்னே நின்று தொண்டு செய்வாள். இத்தகைய சக்தி பெற்ற உடல் உயிர் கேவலப் பிறவியாகாது. மனம் சித்தியும், உயிர் முத்தியும் பெறும். 2 வருடம் யோகம் செய்து சித்தி பெற்று அந்த சித்தியில் ஏமாந்துவிடாமல் அதன் பின் ஞானமார்க்கத்தில் இரட்னு வருடம் சித்துடன் சேர்ந்து விளையாடி முதிர்ச்சி அடைய வேண்டும்.

                            பிரமரந்திர உற்பத்தி: பிரமரந்திரத்தில் ஊசி துவாரத்தில் உயிர் நிற்கும் நிலையே ஞானம் ஆகும். இந்நிலையில் உள்ளபோது திரிகால உணர்வும் தெரியும். ஆன்மா உச்சி மண்டையில் ஏறி வெட்டவெளியில் சென்று மூன்று காலத்தையும் உணரும். முதுகுத் தண்டின் எலும்பின் உள்ளே சிறிய ஊசியைச் செலுத்தும் அளவுள்ள துவாரத்தின் வழியாகப் பிராணன் செல்லும். இந்த எலும்பின் உள்ளே ஓடுகிற வாசியே ஆன்மாவாகும். இவ்வாறு எறிமுனை மூக்குக்கு வரும். வாயுவான ஆன்மா எலும்பில் உள்ள துளையின் வழியாகப் புருவ மத்தி ஏறும். இவ்வாறு ஆறு ஆதாரங்களைக் கடந்து புருவமத்தியின் வழியாக உச்சி மண்டைக்குச் செல்லும்.காயசித்தி பெற்ற பின்பு நரைத்த முடி கறுத்துவிடும். உடல் பலமடையும். சரீரம் வெகு காலத்துக்கு நிலைத்து நிற்கும். ஆன்மா உச்சி ரோமம் வழியாகச் சேர்ந்து ஏறி, ரோமக்கால்களைத் தொடர்ந்து பற்றி 12 அங்குலம் மேலே ஏறும். உச்சிக்கு மேலே 12 அங்குலம் மேலே துவாதசாந்தப் பெருவெளியில் ஆன்மா செல்லும். அப்போது கூடுவிட்டுக் கூடு பாயும் நிலை உண்டாகும். பிராணன் முதுகுத் தண்டு வழிமேலே ஏறிப் பிடரி, மூக்கு நுனி கடந்து சதா புருவ மத்தியிலோ, சஹஸ்ராரத்திலோ ஒடுங்கிவிட்டால் நிர்விகல்பசமாதி நிலையை அடையலாம். மெளன நிலை போல் மோனநிலை கிடைக்கும். மோன நிலையில் பிராணன் ஒடுங்கியபின் உயர்வு, தாழ்வற்ற நிலை ஏற்பட்டுவிடும். இதுவே எல்லாம் பிரம்மமயம். இதை எல்லாரும் அடையலாம். இதற்கே மறு பிறவி கிடையாது.

ஆயகலைகள் அறுபத்தி நான்கு -சித்தர்கள். 1545548.jpg?505

                                சித்தர்களின் அடிப்படையில் 

64 ஆயகலைகள், 

48 அருட்கலைகள், 

9 கடவுட்கலைகள், 

9 தெய்வீகக் கலைகள், 

9 நோய்க் கலைகள், 

9 பேய்க்கலைகள், 

9 தேய் கலைகள் என்று எண்ணற்ற கலைகளும், பலவகைப்பட்ட சாத்திறங்களும், தோத்திறங்களும், மந்திறங்களும், வழிபாட்டு முறைகளும் உருவாக்கப் பட்டிருக்கின்றன. 

இவற்றின் செயலகங்களாக ஆதியில் 

108 திருப்பதிகள், 

243 சத்தி பீடங்கள், 

1008 சிவாலயங்கள் படைக்கப் பட்டன. கால வேகத்தாலும், கருத்து வளர்ச்சியாலும், தேவையாலும் 48 வகைப்பட்ட வழிபாட்டு நிலையங்கள் தோற்றுவிக்கப் பட்டன. இவை காலந்தோறும் தோன்றிய அருளாளர்களால் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளாக வளர்ந்து விட்டன. அருளாளர்களும் காலங்கள் தோறும் தங்கள் தங்களுடைய பத்தி நிலைகள், சத்தி நிலைகள், சித்தி நிலைகள், முத்தி நிலைகள் முதலியவைகளுக்கேற்பத் தங்களுடைய அநுபவங்களைப் பத்தி இலக்கியங்களாகப் படைத்திருக்கிறார்கள். ஆயகலைகள் அறுபத்தி நான்கு -சித்தர்கள் ஆயகலைகள் அறுபத்தி நான்கில் (சிலவற்றை தவிர) சிறந்து விளங்கியிருக்கின்றனர். அறுபத்தி நான்கிலும் சிறந்து விளங்கியதாக கூட கருத்துகள் நிலவுகின்றன. இக்கூற்று எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை.ஆனால் ஒவ்வொறு சித்தரும் ஒரு கலையிலாவது சிறந்து விளங்கியிருக்கின்றனர். போகர் என்னும் சித்தர் சிற்பங்களை வடிப்பதில் வல்லவராக திகந்திருக்கிறார், பாம்பாட்டி சித்தர் விஷமுறிவு மருத்துவதுறையிலும், அகத்தியர் முதலானோர் எழுத்தாற்றல் கலையிலும் சிறந்து விளங்கி உள்ளதற்கான குறிப்புகள் கிடைக்கின்றன.

                    சரி அறுபத்தினான்கு கலைகள் என்னென்ன? என்று தெரிந்தால் தானே நாம் ஒரு முடிவுக்கு வர இயலும். அதற்காக இங்கே பட்டியல். இந்த பட்டியலும் காலத்திற்கு ஏற்றாற் போல மாறுபட்டுள்ளது. முதல் பட்டியல் -

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்);2. எழுத்தாற்றல் (லிகிதம்);

3. கணிதம்;4. மறைநூல் (வேதம்);

5. தொன்மம் (புராணம்);6. இலக்கணம் (வியாகரணம்);

7. நயனூல் (நீதி சாத்திரம்);8. கணியம் (சோதிட சாத்திரம்);

9. அறநூல் (தரும சாத்திரம்);10. ஓகநூல் (யோக சாத்திரம்);

11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);

13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);

15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);16. மறவனப்பு (இதிகாசம்);

17. வனப்பு; 18. அணிநூல் (அலங்காரம்);

19. மதுரமொழிவு (மதுரபாடணம்);20. நாடகம்;

21. நடம்; 22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);

23. யாழ் (வீணை);24. குழல்;

25. மதங்கம் (மிருதங்கம்);26. தாளம்;

27. விற்பயிற்சி (அத்திரவித்தை); 28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);

29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை); 30. யானையேற்றம் (கச பரீட்சை);

31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை); 32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);

33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை); 34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);

35. மல்லம் (மல்ல யுத்தம்);36. கவர்ச்சி (ஆகருடணம்);

37. ஓட்டுகை (உச்சாடணம்);38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);

39. காமநூல் (மதன சாத்திரம்);40. மயக்குநூல் (மோகனம்);

41. வசியம் (வசீகரணம்);42. இதளியம் (ரசவாதம்);

43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);

45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்); 46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);

47. கலுழம் (காருடம்);48. இழப்பறிகை (நட்டம்);

49. மறைத்ததையறிதல் (முஷ்டி);50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்); 51. வான்செலவு (ஆகாய கமனம்);52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);

53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);54. மாயச்செய்கை (இந்திரசாலம்);

55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);

57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);

59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);

61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);

63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்).

வேறொரு பட்டியல்

1. பாட்டு (கீதம்);2. இன்னியம் (வாத்தியம்);3. நடம் (நிருத்தம்);

4. ஓவியம்;5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;

7. பூவமளியமைக்கை;8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;

10. படுக்கையமைக்கை;11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்); 12. நீர்வாரி யடிக்கை;

13. உள்வரி (வேடங்கொள்கை);14. மாலைதொடுக்கை;15. மாலை முதலியன் அணிகை;16. ஆடையணிகளாற் சுவடிக்கை;

17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;18. விரை கூட்டுகை;19. அணிகலன் புனைகை;20. மாயச்செய்கை (இந்திரசாலம்);

21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);22. கைவிரைவு (ஹஸ்தலாவகம்);23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);

24. தையல்வேலை; 25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);

27. விடுகதை (பிரேளிகை);28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை; 29. நெருட்டுச் சொற்றொடரமக்கை;

30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;

32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;34. கதிரில் நூல் சுற்றுகை;

35. மரவேலை; 36. மனைநூல் (வாஸ்து வித்தை);37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);

38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்);39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;40. தோட்டவேலை;

41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;

43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);

45. மருமமொழி (ரகசிய பாஷை);46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி); 47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;

48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை; 49. பொறியமைக்கை;50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);

51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை; 53. வனப்பு (காவியம்) இயற்றுகை;

54. உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி);55. யாப்பறிவு;56. அணியறிவு (அலங்காரவுணர்ச்சி);57. மாயக்கலை (சாலவித்தை);

58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);59. சூதாட்டம்;60. சொக்கட்டான்;

61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;

63. படக்கலப் பயிற்சி;64. உடற் (தேகப்) பயிற்சி (சது.).போர் பயிற்சிகள், யானையேற்றம்,குதிரையேற்றம் போன்ற மன்னர்கள் செய்யக்கூடிய கலைகளில் சித்தர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது சந்தேகமே. சில சித்தர்கள் மன்ன்னாக இருந்து பின் சித்தர்களாக மாறியவர்கள் என்பதனை நாம் மறக்க கூடாது. ஆனால் அழற்கட்டு (அக்கினித் தம்பனம்), நீர்க்கட்டு (சலத்தம்பனம்), வளிக்கட்டு (வாயுத்தம்பனம்), கண்கட்டு (திருட்டித்தம்பனம்), நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்), விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்),புதையற்கட்டு (கனனத்தம்பனம்),வாட்கட்டு (கட்கத்தம்பனம்),சூனியம் போன்றவற்றில் தேர்ந்திருப்பதற்கான வழிகள் உண்டு. சித்தர்களைப் பற்றிய செவிவழிச் செய்திகள் இதை உறுதி படுத்துகின்றன.

நந்தீசர் 5482661.gif?359

                        நந்தீசர்      கயிலாய பரம்பரையைச் சார்ந்தவர். சிவகணங்களில் ஒருவரான நந்தீசர், கயிலாயத்தின் காவலர் எனப் புராணங்கள் கூறும். சித்தர்கள் மரபு தோன்றுவதற்கு இவர் காரணமானவர். இவர் திருமூலர், பதஞ்சலி, வியாக்ரமர், சிவயோகி ஆகியோர்க்கு உபதேசம் செய்து சித்தர் மரபு தோன்றக் காரணமாக விளங்கியவர். அகத்தியர், போகர் போன்றோர் நந்தீசரைத் தம் பாடல்களில் குறிக்கின்றனர். வைத்திய, யோக, ஞானக் கலைகளில் சிறந்து விளங்கி, தாம் இயற்றிய நூல்களைத் தமது மாணாக்கர்கள் மூலம் உலகெங்கும் பரவும்படி செய்தார். சிவகணங்களில் ஒருவர் நந்தீசர் என்றும் அவர் மானிட வடிவம் பெற்று வாழ்ந்ததாக பல்வேறு கதைகள் சொல்கிறார்கள்.சிவகணங்களில் ஒருவரான நந்தீசர் பார்வதி தேவியின் அந்தப்புரத்தினை காவல் காத்து வந்தார். அப்போது அம்மையை தரிசிக்க அடிலகன் என்னும் அரசன் வந்தான். அம்மையின் அனுமதியின்றி யாரையும் உட்செல்ல விடமாட்டேன் என்று நந்தீசர் தடுத்தார். இதையறிந்த சிவன் கோபங்கொண்டு அவரை பன்னிரெண்டாண்டுகள் பூலோகத்தில் வாழ்ந்து வரும்படி சபித்துவிட்டாராம்.பூலோகத்தில் சிலாத முனிவர் யாக பூமி உழுத போது, கண்டெடுத்த பெட்டியில் அந்தக் குழந்தை இருந்தது.அதற்க்கு வீரகன் என்று பெயரிட்டு, சிலாதர் தம்பதிகள் வளர்த்து வந்தனர்.தங்கள் குழந்தை பன்னிரண்டு வயதில் இறந்துவிடும் என்பதறிந்து மனம் வருந்தினர்.அவர்கள் வருத்தத்தை அறிந்த வீரகன் (நந்தீசர்) அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி,.கடுந் தவம் செய்ய ஆரம்பித்தான். ஆதன் விளைவாக சிவனார் அவனுக்குக் காட்சி கொடுத்து, நீ சிவலோகத்தில் சிரஞ்சீவியாய் வாழ்ந்திருப்பாய், சிவகணங்களின் தலைவனாகவும் விளங்குவாய், உனக்கு அனைத்து ஞானத்துடன்,சிவஞானமும் அருளினோம் என்று கூறு மறைந்தார்.நந்தீசர் தேவர்சஞ்சை( பித்ரு தேவரின் மகள் ) என்பவளை மணந்தார்.நந்தீசரே திருமூலரின் குரு ஆவார்.வைத்திய காவியம், கலை ஞானம், கலைஞான சூத்திரம், நிகண்டு, கருக்கிடை, சம் வாதம், ஞான சூத்திரம் ஆகிய நூல்கள் நந்தீசர் எழுதியதாக அறிய முடிகிறது.இவரது சமாதி திருவாவடுதுறையில் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. நந்தி.1969 இல் வெளியிடப்பட்ட 6 ஆவது ஆண்டின் 7 ஆவது இதழ் இது. சென்னை செனாய் நகரிலிருந்து சித்த மருத்துவத்திற்காக சித்தமருத்துவக் குழுவினரால் வெளியிடப்பட்ட இதழ். இந்த இதழ் பதிவு பெற்ற இதழாக வெளிவந்துள்ளது. சமயம், சமூகம், தமிழ் இலக்கியம், சித்த வைத்தியம், மக்கள் உடல்நலம் என்கிற கூறுகளை உள்ளடக்கியதாக இதழ் வெளிவந்துள்ளது. மருத்துவர் பு.மு.வேணுகோபால் எழுதியுள்ள அகத்தியர் பற்றிய குறிப்பு அகத்தியர் என்ற பெயருடைய பலர் இருந்தனர் அவர்களைப் பற்றிய குறிப்பு எனப் பட்டியலிட்டுள்ளது. மரணமில்லா வாழ்வும், சித்தர் காயகற்பமும், கருவின் லீலைகள், மருத்துவ வெண்பா, பத்துப்பாட்டில் ஒரு பாட்டு, மரபுப்பாடல் என இதழ் இலக்கியத் தரமான மருத்துவ இதழாக மலர்ந்துள்ளது.http://sivasakthipandian.blogspot.in/2013/07/blog-post.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.