Jump to content

பொது வேட்பாளர் வெற்றிபெற்றால் தேசிய அரசாங்கம் அமையும்?


Recommended Posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்கும் போரில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா-

MR%20Ranil%20Ms%20Cbk_CI.png

 

முரண்பாட்டிலும் ஓர் உடன்பாடு என்ற அடிப்படையில் செயற்படும் பொது எதிரணியின் அரசியல் நகா்வுகள் தென்பகுதியில் புதிய அரசியல் கலச்சாரத்தை உருவாக்கலாம். ஆனால் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்ந்தும் இருட்டறைக்குள் இருக்கும் ஆபத்து.

பொது வேட்பாளர் வெற்றிபெற்றால் ஆறுமுகன், டக்ளஸ், ஹக்கீம், கருணா, றிஷாட் பதியுதீன் ஆகியோரை அழைத்து அமைச்சுப் பதவி கொடுத்து மீண்டும் அந்த அசிங்கமான அரசியலை தொடருவாரா?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்கும் போரில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

-அ.நிக்ஸன்-

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் யார் என்பதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போட்டியிட்டு மூன்றாவது முறையாகவும் வெற்றிபெறுவாரா இல்லையா என்பதும்தான் தற்போது எல்லோருடைய பேச்சாகவும் உள்ளது. இலங்கையில் தேர்தல் என்றாலே அரசியல்வாதிகள் கட்சி மாறுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்று சேருவதும் வழமை. வேட்பு மனுத் தாக்கல் முடிவடையும் வரை எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாத நிலைதான் காணப்படும். ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வித்தியாசமான நகர்வுகள் இடம்பெறுவதை காணக்கூடியதாக உள்ளது.

கட்சியை காப்பாற்றுவதே நோக்கம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் பிரதான கட்சியாக விளங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள் மூத்த உறுப்பினர்கள்தான் இம்முறை எதிரணிக்கு மாறிச் செல்கின்றனர். ஐக்கியதேசிய கட்சி ஜே.வி.பி உள்ளிட்ட ஏனைய எதிர்க்கட்சிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா உட்பட பல பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து எதிராணியாக செயற்படும் நிலையில் அந்தப் பக்கமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மாறிச் செல்கின்றனர். ஆனால் அதனைக் கட்சித் தாவல் என்று கூற முடியாது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை புதுப்பிக்கும் ஏற்பாடு என்றுதான் சொல்ல முடியும்.

ஏனெனில் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் முன்னாள் தலைவியுமான சந்திரிக்கா பொது எதிரணியில் முக்கியமான செயற்பாட்டாளராக விளங்குகின்றார். ஆகவே அந்தப் பக்கம் மாறிச் சென்று பொதுச் சின்னம் ஒன்றில் பொது வேட்பாளரை போட்டியிடச் செய்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்கலாம் என்பது பிரதான நோக்கம். பொது வேட்பாளர் வெற்றி பெற்றதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை புதுப்பிக்கலாம் என்பது அவர்களுடைய எதிர்ப்பார்ப்பு. இதனால் அரசாங்கத்தில் இருந்து பொது எதிரணிக்கு மாறிச் செல்லும் உறுப்பினர்களை கட்சிதாவும் உறுப்பினர்கள் என கூறமுடியாது. ஜாதிக ஹெல உறுமயவும் அரசாங்கத்தில் இருந்து விலகி எதிரணியின் பொது வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்கின்றதே தவிர கட்சி மாறினார்கள் என்று அர்த்தப்படுத்த முடியாது. 

முஸ்லிம் தமிழ் கட்சிகள்

இந்த இடத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் முஸ்லிம் கட்சிகள் தொடர்பான கேள்விகள் எழுகின்றன. இந்தக் கட்சிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு கொடுப்பதாக கூறிக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் தமிழ் முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை இம்முறை பொது வேட்பாளராக யாரை நிறுத்தினாலும் அவருக்கே வாக்களிப்பது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். ஆதரவு கொடுக்கும் தமிழ் முஸ்லிம் கட்சிகள் உள்ளக அச்சுறுத்தல்கள், அல்லது செஞ்சோற்றுக் கடன் என்ற பல்வேறு விதமான சங்கடங்களுக்குள் கட்டுண்டு கிடப்பதால் அரசாங்கத்தை விட்டு வெளியே வர முடியாத நிலையில் ஆதரவு வழங்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது எனலாம். சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்தபோது 2001ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்த கட்சிகள் மிகவும் இலகுவாக எதிரணிக்கு மாறிச் சென்றிருந்தன.

ஆனால் மஹிற்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து அவ்வாறு இலகுவாக மாறிச் செல்லக்கூடிய சூழல் இல்லை என்பதை அவர்கள் உணருகின்றனர். ஆனால் அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற சிறிய சிங்களக் கட்சிகள் அரசாங்கத்தில் இருந்து விலகுவது இலகுவானது. ஏனெனில் அவர்களை கடுமையாக அச்சுறுத்தினால்; பெளத்த சிங்கள வாக்குகளை இழந்து விடுவோம் என்ற அச்சத்தில் அரசாங்கம் குறைந்த பட்சமேனும் அவர்கள் மீதான ஆத்தித்திரத்தை அமர்த்தி வாசிக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. ஆனால் ஆதரவு வழங்கும் தமிழ் முஸ்லிம் கட்சிகளை அச்சுறுத்தி ஆதரவு வழங்குமாறு கோருவது அரசாங்கத்துக்கு இலகுவானது.

நான்கு கேள்வி

சரி, இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிப்பது என்ற ஒரு பொதுக் கொள்கையின் கீழ் இடம்பெறும் வழமைக்கு மாறான வித்தியாசமான அரசியல் நகர்வுகள் தொடர்பாக நான்கு கேள்விகள் எழுகின்றன. ஒன்று- பொதுவேட்பாளர் வெற்றி பெற்றால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை புதுப்பிக்கும் திட்டத்தில் ஜாதிக ஹெல உறுமய ஒத்துழைத்தாலும் ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைக்குமா? அல்லது ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் எதிர்க்கட்சியாகவே இருக்குமா? இரண்டாவது- மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈபிடிபி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், போன்ற தமிழ்க் கட்சிளை புதிய ஜனாதிபதி தனது அணியில் சேர்த்து மீண்டும் அந்த அசிங்கமான அரசிலை தொடருவாரா? மூன்றாவது இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன? சர்வதேச விசாரணைக்கு புதிய ஜனாதிபதி ஒத்துழைப்பாரா? அல்லது சர்வதேச விசாரணை தேவையில்லை, போரை நடத்தியர்களை மட்டும் விசாரித்தால் போதும் என புதிய ஜனாதிபதி கூறி இனப்பிரச்சினையின் சர்வதேச முக்கியத்துவத்தை குறைக்க முற்படுவாரா? நான்காவது வடக்கு கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய இராணுவ முகாம்களை அகற்றவும் சிங்கள குடியேற்றங்களை நிறுத்தவும் உத்தரவிடுவாரா?

ஆகவே அந்த வெற்றியின் பின்னால் உள்ள மேற்படி நான்கு கேள்விகளுக்கு விடையளிக்கக் கூடிய முறையில் பொது எதிரணியை உருவாக்கிய பிரமுகர்கள் முன் நின்று செயற்படுவார்களா? அல்லது வெற்றிபெற்றதும் அதே பல்லவிதான் பாடப்படுமா என்பதும் சந்தேகமாகவுள்ளது. அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகியுள்ள சில உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியில் இணைவதாகவும் கூறப்படுகின்றது. ஏனெனில் அவர்களுக்கும் சந்திாிக்காவுடன் ஏற்கனவே முரண்பாடுகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் என்ற ஒரே நோக்கில் முரண்பாட்டிலும் ஓர் உடன்பாடு என்ற அடிப்படையில் தற்போது செயற்படும் பொது எதிரணி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்பது வெளிப்படையானது.

தேசிய அரசாங்கம் 

ஆகவே பொது எதிரணி வேட்பாளர் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றதும் உடனடியாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலை நடத்தி தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டிய நிலை ஏற்படலாம். வெற்றியின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீளவும் புதுப்பிககப்பட்டாலும் ஆதரவு வழங்கிய பிரதான கட்சிகளின் ஆதரவு பொதுத் தேர்தலிலும் தேவைப்படும் நிலையில் இம்முறை தேசிய அரசாங்கத்தை நோக்கி பயணிக்கக் கூடிய புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்று உருவாகக் கூடிய சாதகமான நிலைமையும் உள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை மாற்றி பிரதமர் தலைமையிலான ஆட்சியை எற்படுத்துவதே தமது இலக்கு என பொது எதிரணியின் முக்கியத்தர்கள் கூறுகின்றனர். வெற்றி பெற்று மூன்று மாதங்களில் ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றி நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படுவார் என மனோ கணேசனிடம் சந்திரிகாக உறுதியளித்துள்ளார்.

ஆகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை புதிப்பிக்கும் அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சிஉள்ளிட்ட ஏனைய கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டால் அது சந்திரிக்காவினுடைய அரசியல் வெற்றியாக இருப்பதுடன் சிங்கள அரசியலின் புதிய கலாச்சாரமாகவும் மாறலாம். 2003இல் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு இழைத்த அநீதிக்கான மன்னிப்பாகவும் அமையலாம். ஆனால் கடந்த 60 ஆண்டுகால இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது தொடர்ந்தும் இருட்டறைக்குள்ளேதான் இருக்கும் நிலை?

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113776/language/ta-IN/article.aspx

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.