Jump to content

பொது வேட்பாளர் தெரிவு தொடர்பான பேச்சுவார்த்தைகள் செய்மதி தொலைபேசி ஊடாக மேற்கொள்ளப்பட்டது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பொது வேட்பாளர் தெரிவு தொடர்பான பேச்சுவார்த்தைகள் செய்மதி தொலைபேசி ஊடாக மேற்கொள்ளப்பட்டது
22 நவம்பர் 2014
 
saterliter_CI.jpg

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தெரிவு தொடர்பான பேச்சுவார்த்தைகள் செய்மதி தொலைபேசி ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்கத்தைய நாடு ஒன்றின் தூதரகத்தினால் இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு தேவையான செய்மதி தொலைபேசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டத்தினர் ஆளும் கட்சியிலிருந்து தாவக் கூடியவர்களை கண்காணித்து வந்த காரணத்தினால், பேச்சுவார்த்தைகள் மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு விசேட செய்மதி தொலைபேசிகளை முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினர் பயன்படுத்தியுள்ளனர்.

பொது வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்து, ஆட்சி அதிகாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் குறித்த தூதரகம் முக்கிய பங்கு வகித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆகியோர் ஊடாக பொது வேட்பாளர் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளும் இணைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


பொது வேட்பாளர் தெரிவு தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கான பயணங்களை மேற்கொள்ள இலக்கத் தகடு மாற்றப்பட்ட அதி சொகுசு ஜீப் வண்டியொன்றும், மோட்டார் கார் ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113756/language/ta-IN/article.aspx
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குநாடுகளுக்கு பெப்பே கொடுக்க வெளிகிட்டு- பிரபா போன அதே ரயிலில் - அடுத்த பெட்டியில் மகிந்தரும் ஏறுகிறார் என்று நான் முன்பு எழுதிய போது, சில கருத்து கந்தசாமிகள் மேற்குநாடுகள் என்று ஒன்று இல்லை எனவும், இலங்கை தொடர்பாய் அவை ஒரு பொது நிலைப் பாடு எடுப்பதில்லை இதெல்லாம் நான் இட்டுக்கட்டும் "பேய் பிசாசு" கதைகள் என்றும் கூவிச்சென்றனர்.

இப்ப விளங்குதா யார் பேய்கதை கதைச்சதெண்டு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குநாடுகளுக்கு பெப்பே கொடுக்க வெளிகிட்டு- பிரபா போன அதே ரயிலில் - அடுத்த பெட்டியில் மகிந்தரும் ஏறுகிறார் என்று நான் முன்பு எழுதிய போது, சில கருத்து கந்தசாமிகள் மேற்குநாடுகள் என்று ஒன்று இல்லை எனவும், இலங்கை தொடர்பாய் அவை ஒரு பொது நிலைப் பாடு எடுப்பதில்லை இதெல்லாம் நான் இட்டுக்கட்டும் "பேய் பிசாசு" கதைகள் என்றும் கூவிச்சென்றனர்.

இப்ப விளங்குதா யார் பேய்கதை கதைச்சதெண்டு?

 

ஐயா,
 
மேற்கு நாடுகள் இப்போ கவனம் எடுப்பதன் காரணம், சீனா. மகிந்தர் தேர்தலுக்கு செல்ல வைத்தும் அவர்கள் தான். 'Good cop, Bad Cop', விளையாடினைக் காட்டி, நீங்கள் தேர்தலில் வென்று மக்கள் உங்கள் பக்கம் என்று காட்டினால், UNHCR தாக்கம் பெரியதாக இருக்க முடியாது என்று அவருக்கு குளுசை கொடுத்து, மறுபக்கம் இந்த விளையாட்டு.
 
பார்க்கலாம், மேலும் பணத்தினை எறிந்து பலரை இழுத்து எதிர்த் தரப்பில் விடுவார்கள். அதே போல், ஆயுதப் படைகளில் இருக்கும்  கோத்தவின் நம்பிக்கைக்குரிய பலரும் விலைக்கு வாங்கப் பட்டிருக்கலாம். சர்வதேச விசாரணைகளை எதிர்நோக்கும், மகிந்தா,  கோத்தவை நம்புவதிலும் பார்க்க, மேற்கினை நம்புவது நல்லது என அவர்களுக்கு புரிய வைக்கப் பட்டிருக்கலாம்.
 
பார்ப்போம். 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.