Jump to content

'த.தே. கூ அவசரமாக முடிவெடுக்காது' - இரா. சம்பந்தன்


Recommended Posts

140908132022_rajavarothiam_sampanthan__6
 
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேன அவர்கள் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிலைமைகளை ஆராய்ந்தே முடிவெடுக்கும் என்று அந்த அமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
 
மைத்திரிபால சிறிசேன அவர்கள் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவரது செவ்வியையும் தான் கேட்டதாகக் கூறிய சம்பந்தன் அவர்கள், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாக அவர் கூறிய சில அம்சங்களை வரவேற்ற போதிலும் அவை குறித்தும், யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்தும் தமது கட்சியே ஆராய்ந்து முடிவெடுக்கும் என்றும் கூறினார்.
 
இந்த விடயங்கள் குறித்த சம்பந்தன் அவர்களது பிபிசிக்கான முழுமையான செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன்ஸ் முன்னணியின் நிலைப்பாடு என்னவாயிருக்கும்? புறக்கணிப்பதன் மூலம் மகிந்தவுக்கு ஆதரவளிப்பார்களா? இல்லை நேரடியாகவே மகிந்தவுக்கு ஆதரவளிப்பார்களா? :D

Link to comment
Share on other sites

முடி வெட்ட தலயில் முதல் முடி வேணும் ஐயா ... :D

 

ஓ அவசரப்பட்டு நான் தான் வாசிச்சு போட்டன் போல... ஓகே முன்னமே அவரு சந்திரிகா வலது கரம் இனி சொல்லவே வேணும் விடுங்கோ  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை இனி....என்னத்தை முடிச்ச்சு... என்னத்தை எடுத்து....! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவையள் எப்பவாவது அவசரப்பட்டு முடிவெடுத்ததாய் சரித்திரமேயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாலி - கஜன் அண்ட் கஜன் காமெடிக் கம்பனி 2005 இல் எடுத்தது போல தேர்த்தலை புறக்கணிப்பதாய் ஒரு தூரதிருஸ்டி மிக்க முடிவை எடுப்பார்கள் பாருங்களேன்.

கூட்டமைப்புக்கு வேறு வழியில்லை - மைதிரியை ஆதரிப்பதை தவிர.

Link to comment
Share on other sites

எவருக்கும் ஆதரவு தராமல் இருப்பதே ஆட்சி மாற்றாத்தை ஏற்படுத்தும். த தே கூ அமைப்பு பொது வேட்பாளாருக்கு பகிரங்கமாக ஆதரவு வழங்கினால் அது மகிந்தவின் சிங்களா பெருந்தேசியவாதப் பிரச்சாரத்துக்கு அனுகூலமாக இருக்கும். தமிழ் மக்களீடமே யாருக்கு வாக்களீப்பது என்னும் முடிவை விட்டு விடுகிறோம் என்றூ சொல்லி விட்டு ஒதுங்கி இருந்து பார்ப்பதே புத்தி சாதுரியமான முடிவு.

 

எந்த சிங்களாக் கட்சி வந்தாலும் மேற்குலகும் இந்தியாவும் தரும் அழுத்தத்தின் ஊடாக மட்டுமே எதுவும் சாத்தியப் படும். 

Link to comment
Share on other sites

முடிவை மக்களிடம் விடுகிறோம். என று உத்தியோகபூர்வமாய் அறிவித்து விட்டு மக்கள் மத்தியில் மைத்திரிக்கு வாக்களிக்குமாறு மறைமுகமான தீவிர பிரச்சாரத்தை நடத்தலாம்.

Link to comment
Share on other sites

வாலி - கஜன் அண்ட் கஜன் காமெடிக் கம்பனி 2005 இல் எடுத்தது போல தேர்த்தலை புறக்கணிப்பதாய் ஒரு தூரதிருஸ்டி மிக்க முடிவை எடுப்பார்கள் பாருங்களேன்.

கூட்டமைப்புக்கு வேறு வழியில்லை - மைதிரியை ஆதரிப்பதை தவிர.

மைத்திரியை ஆதரித்து மைத்திரியும் தோற்றுப்போனால் அடி பலமா இல்லா விழும்?

 

இதுக்கு பேசாமல் ஒதுங்குவதே நலம்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லுமாப்போல் ஒதுங்கி இருந்தால் - கூட்டமைப்பு இல்லாமல் தமிழர் எம் மீது நம்பிக்கை வைத்து வோட்டுப் போட்டனர் எனவே தமிழ் மக்களுக்கு பெரிதாக தீர்வு தேவையில்லை என எதிர்காலத்தில் சொல்ல அது வழிகோலும்.

ஆதரவை சொல்லிவிட்டு, பிரச்சாரம் செய்து கடும்போக்காளரை கடுப்பேத்தாமல் ஒதுங்குவதே புத்திசாலித்தனம்.

Link to comment
Share on other sites

தமிழ்மக்கள் சிந்தித்து முடிவெடுப்பார்கள் என்று அறிக்கை விட்டால் நல்லம்.. :D

Link to comment
Share on other sites

மக்களிடம் கேட்டு முடிவு எடுப்போம் என்றுதான் சம்பந்தர் பி பி சி யில் சொன்னார் .ஆனால் நாலு பேர் தான் முடிவு எடுப்பார்கள் அநேகமாக மகிந்த ஆதரவு தான் முடிவு .

 

பலர் மகிந்தாவுடன் ரகசிய கூட்டில் இருப்பதாக கேள்வி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை அர்ஜூன் - கூட்டமைப்பு மகிந்தவை ஆதரிக்காது. சம், சும் சீவி இருக்கும் வரை அப்படி ஓர் முட்டாள்தன முடிவு எடுபடாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.