Jump to content

காலத்தால் அழியாத எங்கள் மாவீரச் செல்வங்களின் நினைவாக ,யேர்மனியில் பிரதானமாக அமையும் நினைவுத்தூபி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன், நவம்பர் 13, 2014 - 08:07 மணி தமிழீழம் |
காலத்தால் அழியாத எங்கள் மாவீரச் செல்வங்களின் நினைவாக ,யேர்மனியில் பிரதானமாக அமையும் நினைவுத்தூபி
தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்து மாவீரர் நினைவிடங்கள், துயிலிடங்கள், நினைவுத்தூபிகள்  முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.குறித்த துயிலும் இல்லங்கள் சிறீலங்காப் படையினரின் கனரக வாகனங்களால் முற்றாக இடித்தழிக்கப்பட்டு அதன் எச்சங்கள் அங்கிருந்து வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 

துயிலும் இல்லம் அமைந்திருந்த பகுதியால் செல்வோரால் அங்கு உள்ள பூமரங்களையும், ஏனைய மரங்களையும் வைத்து மட்டுமே அடையாளம் காணக்கூடியதாக இருந்தும் அவை கூட இன்று அழித்தொழிக்கப்பட்டது.சர்வதேச சட்டங்களை மீறி மனிதநேயமற்ற இனவெறி பிடித்த ஸ்ரீலங்காப் படையினர் தமிழர்களின் வரலாற்று தொன்மைகளை அழிக்கும் நடவடிக்கையின் உச்சகட்டத்தை வெளிக்காட்டும் செயலாக அவைகள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகெங்கும் பரந்து வாழும் கோடானுகோடி தமிழ் மக்களின் கனவை, ஆசையை, உணர்வை, நனவாக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் தமது இளைமைக் காலத்து ஆசைகளை, விருப்புகளை, குறும்புகளை எல்லாம் துறந்து உன்னத நோக்கிற்காகப் போராடித் தமிழ் மண்ணில் வித்தானவர்கள் எம் மாவீரர்கள்.

தமிழ் மண் விடுதலையடைய வேண்டும், தமிழ் மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டும் என்பதற்காய் தம் உயிர்களைத் தந்த மாவீரர்களின் நினைவுகளைச் சுமந்ததாய் புலம்பெயர் தேசத்தில் யேர்மனியில் இப் பிரதான   நினைவுத்தூபி அமைகின்றது .

maaveerar%20ninaiwuthupi.jpg

தாயகத்தில் எமது மாவீரர்களின் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டாலும் இன்றைய நிலையில் புலம்பெயர் தேசத்தில் ஒவ்வொரு நாடுகளிலும் மாவீரர்களின் நினைவாக நினைவுத்தூபி அமையும் என்பது நிச்சயம் . அதே போல்  எந்த மண்ணுக்காக எமது  மாவீரர்களும் மக்களும் தங்கள் உயிர்களை கொடுத்தார்களோ அந்த தமிழீழ தேசத்தில் மீண்டும் சுதந்திர காற்று வீசும் மாவீரர்களின் துயிலும் இல்லங்கள் மீளமைக்கப்படும். 

சாவு நிச்சயம் என்று தெரிந்த பொழுதும்கூட எதிரியிடம் மண்டியிடாது, உயிரைத் துச்சமென மதித்துத் தமது இறுதி மூச்சு அடங்கும் வரை அடங்காது வீரப்போர் புரிந்து, அடங்காப்பற்றாக விளங்கும் வன்னி மண்ணில் வீர சுவர்க்கம் எய்தியவர்கள் எமது வீர மறவர்களின்   மற்றும் மக்களின் நினைவாக "நடுகல்" ,  நாட்டும்  அடிக்கல் நடும் ஆரம்ப வணக்க  நிகழ்வு 23.11.2011 அன்று நடைபெற்று 3 வருட நிறைவில் எதிர்வரும் 29.11.2014 அன்று நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட இருக்கின்றது .

"மாவீரர்களது  நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்கவேண்டும்" எனும் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு வடிவம் கொடுக்கும் வகையில் யேர்மனியில் பிறந்து வளரும் எமது இரண்டாவது தலமுறையினருக்கு எமது விடுதலைப் போராட்ட வரலாற்றை பறைசாற்றும் வகையில் பல தடைகளையும் தாண்டி யேர்மனியில் வாழும் தமிழ் மக்களின் ஆதரவுடனும் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களின் கடுமையான உழைப்பாலும் பிரசித்தி பெற்ற சிற்பி Georg Schaab அவர்களால் ஈழத்தமிழர்களின் உணர்வுகளை கொண்டு உருவாக்கம் பெறுகின்றது இந்த நினைவுத்தூபி.

12 000 ஆயிரம்  கிலோ பாரத்தை கொண்ட கருங்கல்லில் மாவீரர்களின் எதிரிக்கு அடிபணியாத வைர உணர்வை காட்டும் வகையில் இத் தூபி செதுக்கப்பட்டு 27 மாவீரர் துயிலும் இல்லங்களின் பெயர்கள் அடிக்கல்லில் பதியப்பட்டு எதிர்வரும் 29.11.2014 அன்று மதியம் 12 மணிக்கு திறந்து வைக்கப்படும் . மேலதிக விபரம் மிக விரவில் அறிவிக்கப்படும் .

நினைவுத்தூபி விடையமாக யேர்மன் ஊடகத்தில் வெளியாகிய செய்தி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

https://www.derwesten.de/staedte/essen/sued/frohnhauser-bildhauer-schafft-ein-denkmal-fuer-die-tamilen-id10014020.html

http://www.pathivu.com/news/35315/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மகிழ்ச்சிகரமான செய்தி மாவீரர்களுக்கு அளிக்கப்படும் அதியுயர் மரியாதைகளில் ஒன்றாக இந்த நினைவுத்தூபி விளங்கட்டும். யேர்மனியில் அமைவதுபோல் உலகெங்கும் அமையட்டும். 
 
இந்தப் புனிதத் தூபியை அமைக்கும் கைகள் மாசுபடியாத கைகளாக இருக்கவேண்டும் என்பதே என் பிரார்த்தனை. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லசெய்தி...

 

செயற்பட்டவர்களுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  நினைவுத்தூபி DORTMUND  நகருக்கு அண்மையில் ESSEN  நகருக்கும் MUELHEIM நகருக்கும் இடையில் அமைக்கப்பட்டிருக்கின்றது.

 

செயற்பட்டவர்களுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

தமிழ்த் தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்துக்காக களமாடித் தம்முயிரீந்த மாவீரர்களதும் ,அவ் இலட்சியப் போராட்டத்தின் கவசங்களாகவிருந்து குருதி சிந்தி சாவடைந்த மக்களதும் நினைவாக யேர்மனியின் எசன் நகரில் நிலை பெறுகின்றது ஓர் நினைவுத் தூபி.

தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமையப் பெற்றிருந்த மாவீரர் துயிலுமில்லங்களின் பிரதிபலிப்பாகவும் தோற்றம் பெற்றுள்ள இத் தூபி,ஐரோப்பா நாடுகளில் வாழும் அனைத்து தமிழ் மக்களினதும் வழிபாட்டுக்குரிய உணர்வுபூர்வமான வரலாற்று மையமாகத் துலங்கும்.

எதிர்வரும் 29.11.2014 (சனிக்கிழமை ) நண்பகல் 12.00 மணிக்கு திரைநீக்கம் செய்யப்படவுள்ள நிகழ்வில் தாயக உறவுகள் அனைவரையும் உணர்வு பூர்வமாக கலந்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

1093938_653664441419483_5419731662221299

(Facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் ஸ்தூபியை நிறுவ, உழைத்த... அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.