Jump to content

யாழில் ரவுடிகளை துரத்தித் துரத்தி வெட்டிய பிரபல பாடசாலையின் மாணவன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna-Dath-275x130.jpg

யாழ் இந்துக் கல்லுாரிக்கு அண்மையில் பஸ்சிற்காக காத்திருந்த 16 வயது மாணவனை அங்கு வந்த சில ரவுடிகள் செயின்கள் மற்றும் பொல்லுகளால் தாக்கிய போது மாணவன் தான் மறைத்து வைத்திருந்த வாளினால் அவா்களைத் துரத்தித் துரத்தி தாக்கியதில் மாணவனைத் தாக்கிய ரவுடிகள் கழுத்து மற்றும் கைகளில் கடும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ஓடி மறைந்துள்ளனா். இச் சம்பவத்தை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

இதனையடுத்து அங்கு வந்து பொலிசாாா் மாணவனைக் கைது செய்துள்ளனா். இதே வேளை மாணவனைத் தாக்கியவா்கள் யாா் என்பது பற்றியும் பொலிசாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

மாணவன் எதற்காக பாடசாலைக்கு வாள் கொண்டு வந்தாா் என்பதும் மாணவனை எதற்காக ரவுடிகள் தாக்கினாா்கள் என்பது பற்றியும் பொலிசாா் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.

இதே வேளை யாழ்ப்பாணபப் பாடசாலைகளில் மாணவா்களிடேயே போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள அதே வேளை ரவுடிகளுடனான தொடா்புகளும் அதிகரித்துக் காணப்படுவது கவலைக்குரிய ஒன்றாக உள்ளதாக கல்விச் சமூகம் தெரிவிக்கின்றது.

http://www.jvpnews.com/srilanka/85606.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயலில், ரவுடிகள் (ஒட்டுக் குழுக்கள்) ஈடுபட முயற்சிக்கின்றார்கள் எனும் போது..... 

வாளை அவர் எப்படி கொண்டு வந்தார் என்று ஆராய்வது,  ஸ்ரீலங்கா காவல் துறைக்கு தேவையற்ற விடயம்.

 

அந்த 16 வயது மாணவன், ஒட்டுக்குழுக்களால்....தாக்கப் பட்டு, மரணம் அடைந்திருந்தால்,

சிறிலங்கா பொலிஸ் என்ன விசராணை நடத்தும் என்பதும், நாமறிவோம்.

 

சென்ற வருடம்.... யாழ் இந்துவில் இருந்து, பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப் பட்ட மாணவனை...

உடுவிலில் வைத்து பெற்றோர் முன்பாகவும் இதே.... ஒட்டுக்குழுவும், புலனாய்வுத் துறையும்,

கொலை செய்த சோகம் தீராமல் அவர்கள் இருக்கிறார்கள்.

 

அந்த ஒட்டுக் குழுக்களை, கைது செய்வதற்கு, வக்கில்லாத சிங்கள காவல் துறை,

16 வயது மாணவனை கைது செய்து.... விசாரணை நடத்துகிறார்களாம், துப்புக் கெட்டவங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Jaffna-Dath-275x130.jpg

யாழ் இந்துக் கல்லுாரிக்கு அண்மையில் பஸ்சிற்காக காத்திருந்த 16 வயது மாணவனை அங்கு வந்த சில ரவுடிகள் செயின்கள் மற்றும் பொல்லுகளால் தாக்கிய போது மாணவன் தான் மறைத்து வைத்திருந்த வாளினால் அவா்களைத் துரத்தித் துரத்தி தாக்கியதில் மாணவனைத் தாக்கிய ரவுடிகள் கழுத்து மற்றும் கைகளில் கடும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ஓடி மறைந்துள்ளனா். இச் சம்பவத்தை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

இதனையடுத்து அங்கு வந்து பொலிசாாா் மாணவனைக் கைது செய்துள்ளனா். இதே வேளை மாணவனைத் தாக்கியவா்கள் யாா் என்பது பற்றியும் பொலிசாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

மாணவன் எதற்காக பாடசாலைக்கு வாள் கொண்டு வந்தாா் என்பதும் மாணவனை எதற்காக ரவுடிகள் தாக்கினாா்கள் என்பது பற்றியும் பொலிசாா் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.

இதே வேளை யாழ்ப்பாணபப் பாடசாலைகளில் மாணவா்களிடேயே போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள அதே வேளை ரவுடிகளுடனான தொடா்புகளும் அதிகரித்துக் காணப்படுவது கவலைக்குரிய ஒன்றாக உள்ளதாக கல்விச் சமூகம் தெரிவிக்கின்றது.

http://www.jvpnews.com/srilanka/85606.html

 

முந்தி நாங்கள் இருந்த காலங்களிலேயே ... சிலர் மூக்குபொடி போடுவதை பார்த்திருக்கிறேன்.
 
புலிகள் இல்லாது போனதன் பயன் மக்களுக்கும் மாணவர்களுக்கும் கொஞ்சம் பவரான வெளிநாட்டு சரக்குகள் கிடைக்க தொடங்கி  இருக்கின்றது.
இது எதோ இப்பதான் வந்ததுபோல சில புலம்பெயர் புண்ணியவான்களும் கொடிபிடிக்கிற கூட்டமும். இப்படியான ஊடகமும் ஆட்டம் போடுகிறார்கள். 
 
யாழ்பாணத்தில் போய் யாழ்தேவியில் இறங்கினால் வீடு போகும் வரை எல்லாம் நன்றாக நடப்பதை பார்க்க கூடியதாக இருக்கிறது.
மக்கள் சுதந்திரமாக திரிகிறார்கள்.
 
இவற்றுள் பவர் குறைந்த போதைவஸ்த்துக்கள் யாழ்பாணம் வருவதற்கு நிறைய சாத்திய கூறுகள் இருக்கிறது.
 
அதனால் ஒரு ரேகுலசனை Regulation யாழில் அமுல் படுத்த வேண்டும்.
 
எக்காரணம் கொண்டும் அதை Prohibition பண்ண கூடாது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் தேவி....
வந்ததுக்கு,  மருது... சொன்னதும், முக்கிய காரணம்.
கஞ்சா, அபின், கள்ளச்சாராயம் கடத்துற,

இழனி, விக்கிகிற நிழலி, சாரி... தெமிலி போன்ற,

சிங்கள காடையன் எல்லாம்... யாழ்ப்பனாத்திலை  நிக்கிறான்.
இதுக்குள்ளை...  எந்தக் கள்ளனை, கண்டு பிடிப்பது. :lol::D

 

வாள் வெட்டுத்தான்..... நல்ல மறுமொழி.
அடுத்து..பிஸ்டல். அதுக்கு அடுத்து ஏ. கே. பாட்டி செவன். :wub:

அதுக்கடுத்து... சஸ்பென்ஸ்... :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிங்களவர்கள் படு மோசம். யாழ்தேவிலியே கஞ்சா கஞ்சா, கெரொயின் வாங்கலியோ கெரோயீன் எண்டு கூவி கூவி விக்கிறாங்கள். இந்தியா ரெயில் விட்டதே கஞ்சா வியாபாரத்தை கூட்டத்தான். கொழும்பில் இருந்து வவுனியாவரை விறபதில்லை. எல்லா விற்பனையும் வவுனியா தாண்டியதும்தான்.

யாழ்ப்பாணம் என்பது கற்புகோட்டை இலங்கையில் மற்றய பகுதி மக்கள் எல்லாம் பழக்க வழக்கம் சரியில்லை அதப் போல் யாழையும் மாற்றப் பார்க்கிறார்கள். இதுக்கு விடக்கூடாது.

95-09 வரை யாழ் முழு ராணுவ கட்டுப்பாட்டில் இருந்தாலும் அரசு அங்கு போதை வஸ்தை பரப்பவில்லை. ஏனெண்றால் கப்பல் விமானம் மூலம் கொண்டு போக செலவாகும். இப்ப அப்படியில்லை ஏ9 மூலம் ஆமிகாரன் சைக்கிளில் சென்று கஞ்சா விக்கிறான்.

சில மொக்குகூட்டம் இதை ஐஸ்கிறீம் எண்டும் நம்பும்.

வண்ணான் துறையில் பாவாடை காணாம போறது உட்பட என்ன சின்ன கெடுதல் நடந்தாலும் புலிகள் அழிந்ததுதான் அதுக்கு காரணம் எண்டு நாம் சொல்குவோம்.

அப்படிச் சொல்வதுதான் தமிழ்தேசியம். மீறி கதச்சா காதுக்க சுடுவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
செய்தியில் என்ன எழுதி இருக்கிறது என்பதை தெரிந்து .... புரிந்து கொள்வதற்கு.
 
சில விடயங்கள் முக்கியம்.
 
ஒன்று எந்த மொழியில் செய்தி இருக்கிறதோ. அந்த மொழி தெரிந்திருக்க வேண்டும்.
அதாவது செய்தி எழுத்து வடிவில் இருந்தால் வாசிக்க தெரிந்திருக்க வேண்டும். 
 
வாசிக்க தெரியாதவர்கள் வாசிக்க தெரிந்தவர்களின் உதவியை நாடலாம். அதோடு பள்ளிகூடம் வகுப்புகள் என்று ஏதாவது ஒன்றுக்கு போய் அந்த மொழி பற்றிய அறிவை கொஞ்சம் வளர்க்க முயற்சிக்க வேண்டும்.
 
மேலே ஒரு செய்தி இருப்பதால் ....அதையே உதாரணம் கொள்ளலாம்.
 
செய்தி "யாழ்பாணத்தில் மாணவர்கள் இடையே  போதைவஸ்து பாவனை அதிகரித்து உள்ளது" இது யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த ஒரு செய்தி என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். (அதற்கும் வசதி இல்லாதவர்கள். வாசிப்பது எழுதுவது என்பதை படிக்குமட்டும் என்றாலும் மட்டுபடுத்தி வைக்க வேண்டும்)
இதன்பொருள்: கலிபோர்னியாவிலோ  கராச்சியிலையோ போதைவஸ்து பாவனை சாதாரணமானது  என்பதல்ல.
யாழ்பாணம் என்ற இடத்தில் முன்பு எப்போதும் இல்லாதவாறு இப்போது போதைவஸ்து பாவனை அதிகரித்து இருக்கிறது  என்பதாகும்.
 
இதற்கும் மற்றைய நகரங்களில் என்ன நடக்கிறது என்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. 
 
இதற்கு பல  காரணம் இருக்கலாம் அதை ஆய்வது செய்தியாளருக்கு தேவை இல்லை. அதை வேண்டுமானால்  ஆய்வாளர்கள் சமூக ஆவலர்கள் செய்யலாம். 
 
செய்தி தமிழ் மொழியில் இருப்பதால். இந்த செய்தியை தமிழர்கள் படிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு செய்தியாளருக்கு  இருந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன். தமிழர் அல்லாதவர்கள் யாழ்பாணம் பற்றிய செய்திகள்  ஆங்கிலம் சிங்களம் போன்ற மொழிகளில் வேறு தளங்களில் வேறு செய்தி ஊடகங்களில் சென்று  படித்து கொள்ளலாம்.
 
தமிழ் மொழியை கலப்பிடம் செய்ய சிலர் எத்தணித்தால் அதை தமிழர்கள் எதிர்பார்கள். தமிழ் மொழி தமிழர்களின்  மூதையார்கள் சங்கம் வைத்து வளரத்த ஒரு செம்மொழியாகும். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள நிர்வாகத்தின் கவனத்துக்கு,

இங்கே நான் பதியும் சில கருத்துகள் நாகரீகமானவையாக இருந்தும், சககருதாளர்கள் அதை பற்றி முறைப்பாடு எதும் சொல்லாதபோதும் ஒரு காரணமும் இன்றி அடியோடு தூக்கப்படுகிறது.

நிர்வாகிகளின் உரிமைக்கு நான் முழுதும் கட்டுப்படுகிறேன். குறிப்பாக, நிழலி, இணையவன், இராவணனன், நியானி (எனும் கற்பனை) நிர்வாகிகள் மறுத்தூட்டும் போது அதில் ஒரு நியாயம் இருக்கும். வெட்டும் போதும் சில பதங்களை மட்டுமே நீக்குவர்.

கடந்த சில முறைகளில் நான் சில மூத்த உறுப்பினர்கள், நிர்வாக உரிமை உள்ளவர்களுடன் கருத்து முரண் பட்டுள்ளேன்.

ஒருவர் நிர்வாக பொறுப்பில் இருந்தும் அப்பட்டமாக களவிதிகளை மீறியதை சுட்டியும் காட்டினேன்.

இதனாலோ என்னமோ தெரியவில்லை - என் கருத்துக்களை தர்க்க ரீதியாக எதிர்கொள்ளும் திராணியற்ற ஒரு சிலர் நிர்வாக உரிமைகளை தவறாக பயன்படுத்தி என் கருத்துக்களை அடியோடு அகற்றுகிறார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

நிர்வாகத்தின் மறுத்தூட்டும் உரிமையை முழுதாக ஏற்று கொள்ளும் அதேவேளை, தடி எடுத்தவன் தண்டல் காரன் என்று இல்லாமல், மறுத்தூட்டலில் ஒரு குறைந்த பட்ச நியாயத்தையாவது எதிர்பார்க்கிறேன்.

இந்த நியாயம் இலாதவிடத்து - இங்கே அபூர்வமாக கிடைக்கும் கருத்துச் சுதந்திரவெளி அர்தமற்றதாகப் போய்விடும். வேறு விதமாக சிந்திப்பவர்களை கதைக்கவிடாமல் பண்ணியதன் விளைவுகளை எம்மினம் ஏலவே ஒருதரம் அனுபவித்துளது.

மறுபடியும் அதே பிழையைவிட்டு, நம்மை நாமே உயர்வாக பேசிக்கொள்ளும், விமர்சனமற்ற, துதிபாடும், பழங்கதை பேசி மகிழும் ஒரு மந்தை சமூகத்தைதான் நாம் மீளவும் அமைக்கப்போகிறோமா?

விவாதங்களில் சூடாக பங்கேற்பவரை ஏன் மறுத்தூட்டுனராகவும் அனுமதிக்கிறீர்கள்? நானே வக்கீல், நானே நீதிபதி எனுமாப்போல.

தொடர்ந்தும் இந்த நிலை தொடர்ந்தால் என் கருத்துக்களை, பங்களிப்பை குறைப்பது அல்லது நிறுத்த வேண்டியும் வரலாம். இதை நான் ஒரு மிரட்டலாக சொல்லவில்லை. ஒரு கோசானில் யாழ் தங்கியில்லை என்று எனக்குத்தெரியும்.

ஆனால் ஏற்கனவே இங்கு மிகச்சிலரே பெரும்பாலானோர் சிந்திப்பதற்க்கு மாற்றாக எழுதுகிறோம். நாமும் களத்தில் இருந்து அகற்றப்பட்டால், உங்கள் தளத்தின் பன்முகதன்மைக்கு அது ஒரு பெரும் அடியாக போகக்கூடும்.

யாழ் ஒரு பஜனை மடம் போல துதிபாடும் கூடமாயிருக்க போகிறதா, அல்லது ஒரு சூடுபறக்கும் விவாதகளமாக இருக்கப்போகிறதா என்பது உங்கள்கைகளிலேயே இருக்கிறது.

நான் மேலே சொன்னது எதற்கும் என்னிடம் ஆதாரமில்லை. என் மனதில் பட்டதை சொல்கிறேன். அவ்வளவே.

Link to comment
Share on other sites

வணக்கம்,

தலைப்புக்கு சம்பந்தமற்ற சீண்டும் வகையில் அமைந்த கருத்துக்களும் திரியின் திசையைத் திருப்பும் அரட்டைத்தனமான கருத்துக்களும் நீக்கப்படுவது வழமை.

யாழ் களம் ஆக்கபூர்வமான கருத்தாடலை எப்போதும் ஊக்குவிக்கின்றது. எனினும் உணர்ச்சிவசப்பட்டு களவிதிகளை மீறும் கருத்துக்களை எழுதுவதையும், ஆக்கபூர்வமான கருத்தாடல்களைத் தொடராமல் வெறுமனே மற்றவரைத் நேரடியாகவோ/மறைமுகமாகவோ தாக்கவேண்டும் என்பதற்காகவே கருத்துக்களை பதிவதையும் வரவேற்பதில்லை. இத்தகைய கருத்துக்கள் வைக்கப்படும்போது திரியைச் சரியான பாதையில் நகர்த்த நிர்வாகம் தேவையான மட்டுறுத்தலைச் செய்கின்றது. இதில் பாரபட்சம் பார்க்கப்படுவதில்லை என்பதைக் கள உறுப்பினர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

எனவே, தலைப்பில் உள்ள விடயங்களுக்கு ஆரோக்கியமான முறையில் விமர்சனங்களை/மறுப்புக்களை வைக்குமாறு கள உறவுகள் மீண்டும் மீண்டும் வேண்டப்படுகின்றனர்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியானி,

பதிலுக்கு நன்றி.

இதுபற்றி உங்களிடம் இருந்து ஒரு stock answer வரும் என்பதும் நான் எதிர்பார்த்ததுதான். போர்க்குற்ற விசாரணை பற்றிய கேள்விகளுக்கு இலங்கையரசு சொல்லும் பதில்கள் போல :)

இந்த பதிவில் இப்போ என்கருத்துக்கு நேர் மேலே இருக்கும் கருத்தை வாசித்துப்பாருங்கள் அதில் இல்லாத சீண்டலா. அதுக்கு நான் இட்ட பதிலில் ஒரு சீண்டலுமில்லை. ஆனால் அந்த பதில் தூக்கப்பட்டிருக்கு. முதல் சீண்டல் அப்படியே இருக்கு. இன்னொரு திரியில் விஜயகலா மானம் கூவிக்கூவி விக்கப்படுது, ஒரு தடையும் இல்லை. இப்படி பல உதாரணங்கள். இங்கே பல கருத்தாளர்கள் எனக்கெதிராக ganging up செய்கிறார்கள் என்பது கண்கூடு. அதைப்பற்றி நான் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அந்த வேலையில் சில மறுத்தூட்டுனரும் ஈடுபடுகிறார்களா எனும் சந்தேகம் வரும் போது அதைச் சொல்லவேண்டியதாயிற்று.

பரவாயில்லை - சுயவிமர்சனம் சுய விசாரணை என்பது தமிழர் மத்தியில் அரிதுதானே. சொல்லும் போதே எனக்குத்தெரியும் இதுக்குப் பெரிய பலன் இராது என்றும் ஒப்புக்கு கூட ஒரு விசாரணை இராது என்றும். ஆனால் என்மனதில் பட்டதை சொல்ல வேண்டும் என்பதற்காகவே எழுதினேன்.

என் பதிவை வாசித்துப் பதில் போட்டமைக்கு நன்றி. இதை இத்துடன் விட்டு விடுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நல்ல செயல். ஒருசில நபர்களின் சேட்டைகளுக்கு இதுதான் சரியான வேலை. கப்பம் கேட்கும் பொலிசாரும் இருட்டடி வாங்குவதாக கேள்வி.
முள்ளை முள்ளாள்த்  தான் எடுக்க வேண்டும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளில் உள்ள வன்முறைக் குழுக் கலாச்சாரம் யாழ்ப்பாணத்திற்கும் தொற்றியுள்ளது என்று கவலைப்படவேண்டாம். இது தினமும் நடக்காமல் செய்தியாக வருவதே அங்கு அதிகமான பிரச்சினை இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  பாடசாலை  மாணவன்

ஆயுதத்துடன் திரிவதென்பது

ஒரு ஆரோக்கியமாக சூழ்நிலைக்காட்டவில்லை..... :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்து மாணவன் வாளுடன் பாடசாலைக்கு வருகின்றார் என்றால்

அந்தப் பாடசாலையின் தரம் இப்போது எப்படி இருக்கின்றது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்து மாணவன் வாளுடன் பாடசாலைக்கு வருகின்றார் என்றால்

அந்தப் பாடசாலையின் தரம் இப்போது எப்படி இருக்கின்றது?

பாடசாலையின் தரத்தில் எந்த மாறுதலும் இல்லை என நினைக்கிறேன், வாத்தியார்!

 

அரசாங்கங்களின் ஓரவஞ்சகங்களினால், ஆசிரியர்கள் குறைந்து போனாலும்,  கல்விக்கான தேடல் வேறு வகைகளில் நிவர்த்தி செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றதை, நான் அவதானித்துள்ளேன்!

 

பழைய மாணவர் சங்கங்கள், மற்றும் சமூக நிறுவனங்கள் மூலம் தனது ' கல்வித் தேவையை' அது ஓரளவுக்குப் பூர்த்தி செய்து கொண்டே உள்ளது!

 

கொட்டடி.. கோணாந்தோட்டம் போன்ற கூட்டங்களையும்... வாள்கள் மட்டுமல்ல, சைக்கிள் செயின்.. சோடாப்போத்தல் என்று மாணவர்கள் அந்தக் காலத்திலேயே, இப்படியான பல 'குழு மோதல்களை' அவதானித்தும், ஈடு பட்டும் வந்துள்ளனர்!

 

ஆயிரத்தில ஒண்டு.. 'கெடுகிறன்...பிடி பந்தயம்' என்று நின்றால், அதற்கெல்லாம் கல்லூரி பொறுப்புக் கூற வேண்டுமா? 

 

அனைத்தையும் கடந்தும்.. கல்லூரி.. வாழ்கின்றது... வாழும்! :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.