Jump to content

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை தீர்ப்பை கண்டித்து சென்னையில் இலங்கை துணை தூதரகம் முற்றுகை.


Recommended Posts

சென்னை, அக்.31

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் இன்று காலை முற்றுகையிட்டனர்.

போதை பொருள் கடத்தியதாக கூறி தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 5 பேரையும் உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள இலங்கை சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் மீது தமிழ் அமைப்புகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் எதிரொலியாக நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள இலங்கை துணை தூதரகம், எழும்பூரில் உள்ள புத்த மகா போதி சொசைட்டி, இலங்கை வங்கி, நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை ஏர்லைன்ஸ் ஆகியவற்றிற்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் நேற்று இரவு அறிவித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. திட்டமிட்டபடி 150க்கும் மேற்பட் தமிழர் அமைப்புகள் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். அப்போது, தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

10506945_339858872863311_428353346982471

10714166_339858886196643_428637033633899

https://m.facebook.com/story.php?story_fbid=339860169529848&id=152515898264277

Link to comment
Share on other sites

Today's protest siege of Srilankan Embassy, opposing death penalty verdict by Srilankan govt against Tamil fishermen.

மீனவர் தூக்கு தண்டனைக்கு எதிரான இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்.

அநீதியைக் கண்டித்து, இன்று (31.10.2014) வெள்ளிக்கிழமை - காலை 10 மணிக்கு, பல்வேறு கட்சி - இயக்கங்கள் உறுப்பு வகிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் சிங்களத் தூரகத்தை அகற்றக் கோரி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தை தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பண்ரூட்டி திரு. தி. வேல்முருகன் அவர்கள் ஒங்கிணைத்தார்.

புரட்சி பாரதம் கட்சி தலைவர் திரு. ஜெகன்மூர்த்தி, தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ.மணியரசன், திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராசேந்திரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர் தியாகு, தமிழர் முன்னேற்றப்படைத் தலைவர் தமிழினி கி.வீரலட்சுமி, தந்தைப் பெரியார் திராவிடர் கழக மண்டல அமைப்பாளர் தோழர் கரு.அண்ணாமலை, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சி, இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், தோழர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் கைதாயினர்.

கொடுங்கோலன் இராசபட்சேயின் உருவபொம்மை தீயிட்டு கொளுத்தப்பட்டது.

”விடுதலை செய், விடுதலை செய் அப்பாவி மீனவர்களை உடனடியாக விடுதலை செய்”, ”மோடி அரசே, இலங்கையுடன் கூடிக் குலவாதே” என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தமிழ்த் தேசிய பேரியக்கம் சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, தாம்பரம் செயலாளர் தோழர் இளங்குமரன் உள்ளிட்ட திரளான தமிழ்த் தேசியப் பேரியக்க தோழர்கள் கலந்து கொண்டு கைதாகியுள்ளனர்.

கைதாகியுள்ள தோழர்கள் தற்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தலைமைச் செயலகம்,

தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

10342912_10205149867969841_6959778998578

10616249_10205149867809837_2181289057342

7113_10205149867769836_83479512402508994

67317_10205149868009842_2584406310410228

(Facebook)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நெடுமாறன் ஐயா முதலில் காங்கிரசில் இருந்தவர்தான். இந்திரா காந்திக்கு மிக நெருக்கமாக இருந்தார். ஆனால் என்றும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை மாற்றியதில்லை. பிஜேபி எதிர்ப்பு என்பது இப்போ தமிழகத்தில் உள்ள மதவாத எதிர்ப்பு சக்திகள் அனைத்துக்கும் வாழ்வா, சாவா போராட்டம். இதில் எங்களுக்கு காங்கிரசை பிடியாது என்பதால் நெடுமாறன் போனோர் இந்தியா கூட்டணியை ஆதரிக்க கூடாது என நாம் நினைப்பது சுயநலமும், தேவையில்லாமல் அவர்கள் வீட்டு விசயத்தில் மூக்கை நுழைக்கும் செயலுமாகும். ஈழ போராட்டம் தமிழ்நாட்டு அரசியலில் தீர்மானிக்கும் விடயம் அல்ல. அவர்கள் தமக்கு முக்கியமான விடயங்களின் அடிப்படையிலேயே விடயங்களை தீர்மானிப்பர். மன்சூரும் ஈழவிடுதலை நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை எனிலும், இவர் காங்கிரசில் சேர்ந்தது சுய இலாபத்துக்கு. நெடுமாறன் ஐயா இந்தியா கூட்டணியை ஆதரிப்பது பிஜேபி வரக்கூடாது என்பதால்.
    • இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது.   வித்துபோட்டம் என்று சொல்வதற்கு வெட்கம் ....இதிலை பீலா வேறை..
    • வயது கூடும் போது வந்த ஞானோதயங்களில் இந்த உறைப்பு குறைப்பும் ஒன்று. தவிரவும் இறைச்சியின் சுவையே தெரியாது - மிளகாய்தூள் கறிக்குள் இறைச்சி துண்டை போட்டு சாப்பிட்டால், மான் ஏது, மரை ஏது - தூளின் சுவைதான் தெரியும்.  
    • நீங்க‌ள் ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யா ப‌ற்றி எழுதின‌து100/100 உண்மை இதை விய‌ன‌ரசு ஜ‌யா கூட‌ அன்மையில் சொல்லி இருந்தார் ஆனால் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யா கூட‌ ப‌ய‌ணம் செய்த‌ சில‌ருக்கு கூட‌ ஜ‌யாவின் செய‌ல் பாடு பிடிக்க‌ வில்லை   க‌ந்துப்பு அண்ணா கோவிக்க‌ வேண்டாம் 2009த‌லைவ‌ரின் ம‌றைவோட‌ இல‌ங்கை அர‌சிய‌லை நான் எட்டியும் பார்ப்ப‌து கிடையாது   க‌ண்ண‌ க‌ட்டி காட்டில‌ விட்ட‌ மாதிரி தான் என‌க்கும் இல‌ங்கைக்குமான‌ அர‌சிய‌ல் அங்கு ந‌ட‌ப்ப‌து ப‌ற்றி என‌க்கு ஒரு கோதாரியும் தெரியாது.........................த‌லைவ‌ர் 2002க‌ளில் உருவாக்கின‌ த‌மிழ்தேசிய‌ கூட்ட‌மைப்பில் இருப்ப‌வ‌ர்க‌ள் ஒரு சில‌ர‌ தெரியும் மீதிப் பேர‌ தெரியாது....................................................
    • அவுஸ்திரேலிய கடற்கரையில் 100ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. அவுஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியான டோபிஸ் இன்லெட்டில், குறித்த திமிங்கிலங்கள் நேற்று (25) காலை கரை ஒதுங்கியுள்ளன. இவ்வாறு கரை ஒதுங்கிய திமிங்கிலங்களைக் காப்பாற்றுவதற்கு, கடல் உயிரியலாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் கரை ஒதுங்கிய 26 திமிங்கிலங்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய திமிங்கிலங்களை மீட்டு கடலில் விடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://thinakkural.lk/article/300286
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.