Jump to content

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது சுவீடன்


Recommended Posts

5907_content_swedish-flag.jpg

 

இஸ்ரேலின் கடும் எதிர்ப்புகளையும் மீறி பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது.  இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு, சுவீடன் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கட் வால்ஸ்டிரம் கூறுகையில், பாலஸ்தீன நாட்டுக்கு அங்கீகாரம் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது.பாலஸ்தீனர்கள், தங்களது சுய நிர்ணய உரிமையைப் பெறுவதற்கு இந்த நடவடிக்கை உதவும்.

 

எங்களைப் பின்பற்றி, பிற நாடுகளும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் என நம்புகிறோம் என்றார் அவர். அண்மையில் சுவீடனின் பிரதமராகப் பதவியேற்ற ஸ்டெஃபான் லோஃப்வென், நாடாளுமன்றத்தில் தொடக்க  உரையாற்றுகையில், பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் விசயத்தில், மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த முதல் ஐரோப்பிய யூனியன் நாடாக சுவீடன் இருக்கும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

மேற்கு ஐரோப்பா, மத்தியத் தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த 7 ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் ஏற்கெனவே பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.மேலும்  ஐரோப்பிய யூனியன் உறுப்பினர் அல்லாத ஐஸ்லாந்தும் பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையில்,பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக சுவீடன் அறிவித்துள்ளதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கான சுவீடன் தூதரை நேரில் அழைத்து, அவரிடம் தனது எதிர்ப்பையும், அதிருப்தியையும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. -

 

http://thinakkural.lk/article.php?world/dhh8ecgdox4445580796a88814797oeeqndf897b38097bd6c1fdaa96eafxe#sthash.XvjZt2pm.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்..தோளான், துருத்திகளுக்கெல்லாம் அங்கீகாரம் கிடைக்கிறது, தமிழ் ஈழத்திற்கு இன்னமும் நேரம் வரவில்லை..!

So sad..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான தலைமை இருக்குமெனில்... எமக்கும் ஒரு 'அங்கீகாரம்' கிடைக்கும் சாத்தியக்கூறு உண்டு!

 

நோர்வேயின் அங்கீகாரத்தை... அமெரிக்காவின்.. அங்கீகாரமாகவே நான் பார்க்கிறேன்!

 

காலவோட்டத்தில், வரலாறுகள் திரும்பவும் எழுதப் படுவது... தவிர்க்க முடியாதது!

 

குறிப்பாக, ISIS போன்றவற்றின் எழுச்சியானது, மேற்கு நாடுகளின் கொள்கைகளில் நிச்சயம் மாற்றங்களை ஏற்படுத்தியாக வேண்டும்!

Link to comment
Share on other sites

ம்..தோளான், துருத்திகளுக்கெல்லாம் அங்கீகாரம் கிடைக்கிறது, தமிழ் ஈழத்திற்கு இன்னமும் நேரம் வரவில்லை..!

So sad..! :(

கொஞ்சம் இடைக்கிடை வெளியிலும் எட்டி பார்க்கிறது . :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் இடைக்கிடை வெளியிலும் எட்டி பார்க்கிறது . :mellow:

பார்த்து என்ன பலன் உங்களை மாதிரி பெரியவர்கள் சாபம் போடுகையில் தமிழிற்க்கு விடிவேது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்..தோளான், துருத்திகளுக்கெல்லாம் அங்கீகாரம் கிடைக்கிறது, தமிழ் ஈழத்திற்கு இன்னமும் நேரம் வரவில்லை..!

So sad..! :(

 

யாராக இருந்தாலும் அடக்குமுறைக்கும் இன அழிப்புக்கும்

ஆக்கிரமிற்புக்கும் உட்பட்ட மக்கள் விடுதலை பெறுவதில்

மகிழ்ச்சியும் அவர்களுக்கான வாழ்த்துக்களும் கிடைக்கட்டும்.

சுவீடனைத் தொடர்ந்து இன்னும் பல நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும்

 

Link to comment
Share on other sites

பார்த்து என்ன பலன் உங்களை மாதிரி பெரியவர்கள் சாபம் போடுகையில் தமிழிற்க்கு விடிவேது? 

தமிழனின் விடிவிற்கு தானே நெடுக பங்கருக்க இருக்காமல்  வெளியிலும் எட்டிப்பார்க்க சொல்லுகின்றம்.நாங்கள் வெளியில வாங்கோ என்றால் உங்களுக்கு சாபம் மாதிரி கிடக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கவிதை எழுதுவம் " குனிந்து வாங்க யசீர் அரபாத் இல்லை " என்று. (வரிகள் சரியான தெரியவில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் இடைக்கிடை வெளியிலும் எட்டி பார்க்கிறது . :mellow:

 

'புண்ணியவான்கள்' கொஞ்சம் பொத்திக்கொண்டு இருக்கிறது..! :):(

 

Link to comment
Share on other sites

நல்வாழ்த்துக்கள். மிக நீண்டகாலமாக போராடும் இனம்.அமெரிக்கா இஸ்ரேலுக்காக குரல் கொடுத்து தன்பெயரையும் கெடுக்கிறது. இந்தியா {இந்திரா காந்தி) பலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரித்தது.
 
எமக்காக தற்போது இருக்கும் கூட்டமைப்பே தமிழீழம் வேண்டாம் எனும் போது வேறு நாடுகள் அங்கீகரிக்குமா? பலஸ்தீனியர்கள் ஒரே குறிக்கோளோடு போராடினார்கள். அங்கீகாரம் கிடைக்கிறது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'புண்ணியவான்கள்' கொஞ்சம் பொத்திக்கொண்டு இருக்கிறது..! :):(

இப்படியான கருத்தை ராசவன்னியனிடமிருந்து எதிர் பார்க்கவில்ல:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனின் விடிவிற்கு தானே நெடுக பங்கருக்க இருக்காமல்  வெளியிலும் எட்டிப்பார்க்க சொல்லுகின்றம்.நாங்கள் வெளியில வாங்கோ என்றால் உங்களுக்கு சாபம் மாதிரி கிடக்கு .

கருனா கூட நூற்றுக்கனகிலை சிங்களவர்களை வெட்டி போட்டு இப்ப அதே சிங்களவனே தலையில் வைச்சு கருனாவை கொண்டாடுகிறார்கள் நீங்கள்தான் என்னமும் கடுப்பிலையே நாங்கள் வெளியிலை வந்திட்டம் நீங்களும் வாங்க சிறிது கருத்துக்களை நம் மக்கள் எனும் ரீதியில் அனுகி வையுங்கள் ......

Link to comment
Share on other sites

இப்படியான கருத்தை ராசவன்னியனிடமிருந்து எதிர் பார்க்கவில்ல :(

தமிழ் ஈழத்திற்கு அங்கிகாரம் கிடைக்கவில்லை என்று அங்கலாய்த்தால் பரவாயில்லை பாலஸ்தீனத்தை பார்த்து தோளான், துருத்தி என்று எழுதுபவரிடம் வேறு என்ன எதிர்பார்கின்றீர்கள்.

 

தனக்கு கிடைக்காவிட்டால் எவனுக்கும் கிடைக்ககூடாது என்ற சிந்தனை எம்மவர்கள் பலருக்கு இருக்கின்றது .

பாலஸ்தினர்கள் எம்மைவிட ஆயிரம் மடங்கு அடக்குமுறைக்குள்  இருக்கின்றார்கள் அதைதான் எட்டி பார்க்க சொன்னேன் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.