Jump to content

வடக்கு பயணக் கட்டுப்பாடுகளை தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையாகவே நோக்க வேண்டும் - மன்னார் ஆயர்


Recommended Posts

Mannar%20ayar_CI.jpg

வடக்கு மாகாணத்திற்கான பயணக் கட்டுப்பாடுகளை தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையாகவே நோக்க வேண்டுமென மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டவர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வடக்கிற்கு பயணம் செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள வரையறைகள் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பிட்ட ஒரு நபரின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் ஏற்பட்டால் அந்த நபர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தை விடவும் அதிகளவான படையினர் வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நடவடிக்கைகளினால் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை மையமாகக் கொண்ட ஓர் வரவு செலவுத்திட்டத்தை அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்ட பரிந்துரைகள் எந்தளவிற்கு அமுல்படுத்தப்படும், எவ்வளவு நாளைக்கு அமுலில் இருக்கும் என்பது சந்தேகமே என தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினைவாதத்தை கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்துசெய்வதாக ஜனாதிபதி விடுத்துள்ளஅறிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண பொதுமக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை திரட்டிக்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களும் மனிதர்களே எனவும் அவர்களையும் மதிக்க வேண்டியது அவசியமானது எனவும் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை கொழும்பு ஊடகமொன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113088/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.