Jump to content

இந்தியா எதிர் ஸ்ரீலங்கா ஒருநாள் போட்டி தொடர்


Recommended Posts

India-v-Sri-Lanka_zps7154ffb2.jpg5 போட்டிகளில் ஆடுவதற்காக இந்தியா வந்தது இலங்கை அணி! 

மும்பை: இந்தியாவுடன் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் ஆடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. ஏஞ்சலே மாத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி மும்பைக்கு வந்து சேர்ந்தது. விமான நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்து மூலம் இலங்கை அணியைச் சேர்ந்த வீரர்களும், நிர்வாகிகளும் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி பாதியிலேயே கிளம்பிப் போய் விட்டதால் நிலைமையைச் சரிக்கட்டவும், விட்ட பணத்தை எடுக்கவும் இலங்கையைக் கூப்பிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். இந்தியாவே கூப்பிட்டு விட்டதே என்பதற்காக எல்லா வேலையையும் போட்டு விட்டு ஓடி வந்துள்ளது இலங்கை.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/sl-team-arrives-odi-series-213884.html

 

Link to comment
Share on other sites

ரோகித் சர்மா, மணீஷ் பாண்டே அதிரடி சதத்தில் மூழ்கியது இலங்கை அணி
 

 

இலங்கைக்கு எதிராக நடைபெறும் பயிற்சி ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்க்கு 382 ரன்கள் குவித்துள்ளது. தொடர்ந்து ஆடிய இலங்கை 50 ஓவர்களில் 294 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தோல்வி தழுவியது.

மும்பை பிரபர்ன் மைதானத்தில் இன்று நடைபெறற இந்த ஒருநாள் பயிற்சி போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் இந்தியா ஏ அணியை பேட் செய்ய அழைத்தது.

ரோகித் சர்மா, உன்முக்த் சந்த் தொடக்கத்தில் இறங்கி அதிரடி ஆட்டம் ஆடி 13வது ஓவரில் 96 ரன்களை எடுத்தனர். உன்முக்த் சந்த் 43 பந்துகளில் 8 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து சங்கக்கரா கேட்ச் பிடிக்க கமகே பந்தில் வெளியேறினார்.

 

அதன் பிறகு ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார் மணீஷ் பாண்டே. இருவரும் இலங்கைப் பந்து வீச்சை புரட்டி எடுத்தனர். 27 ஓவர்களில் இருவரும் சேர்ந்து 2-வது விக்கெட்டுக்காக 284 ரன்களை விளாசித் தள்ளினர்.

ரோகித் சர்மா 111 பந்துகளில் 18 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 142 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். மணீஷ் பாண்டே, 113 பந்துகளில் 15 பவுண்டரி ஒரு சிக்சருடன் 135 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

கேப்டன் மனோஜ் திவாரி 26 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 36 ரன்கள் எடுத்தார்.

இலங்கை அணியில் 10 பவுலர்கள் வீசினர். தம்மிக பிரசாத் என்ற வேகப்பந்து வீச்சாளர் 6 ஓவர்களில் 57 ரன்கள் கொடுத்து அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மற்ற வீச்சாளர்களில் கமகே சிக்கனமாக வீசினார்.

 

கரண் சர்மா அபார பந்து வீச்சு:

தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தியா ஏ சுழற்பந்து வீச்சாளர் கரண் சர்மா 10 ஓவர்கள் வீசி 47 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தவல் குல்கர்னி மற்றும் காஷ்மீர் சுழற்பந்து வீச்சாளர் பர்வேஸ் ரசூல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இலங்கை அணியில் உபுல் தரங்கா மட்டுமே அதிகபட்சமாக 76 ரன்களை எடுத்தார். தில்ஷன் 14 ரன்களில் வெளியேறினார். சங்கக்காரா 34 ரன்களையும் மகேலா ஜெயவர்தனே 33 ரன்களையும் எடுத்தனர். கேப்டன் மேத்யூஸ் 3 ரன்களில் வெளியேறினார்.

 

26வது ஓவர் முடிவில் இலங்கை 146/4 என்று இருந்தது. ஆட்டத்தின் எந்த நிலையிலும் வெற்றி பெறும் நிலையில் இலங்கை இல்லை.

அபாரமாக வீசியுள்ள கரண் சர்மா, இலங்கையின் தில்ஷன், ஜெயவர்தனே, தரங்கா, மேத்யூஸ் ஆகியோரது முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தவல் குல்கர்னியும் 7 ஓவர்களில் 41 ரன்களை மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பயிற்சி ஆட்டத்தில் இலங்கை தோல்வி அடைந்தது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/article6548532.ece

 

Link to comment
Share on other sites

அனைத்து போட்டிகளும் பகலிரவு ஆட்டங்களாக நடைபெறும்.

போட்டி அட்டவணை:

நவம்பர் 2: முதல் ஒருநாள் போட்டி, கட்டாக்.

 

நவம்பர் 6: 2-வது போட்டி, அகமதாபாத்

 

நவம்பர் 9: 3-வது ஒரு நாள் போட்டி, ஐதராபாத்

 

நவம்பர் 13: 4-வது ஒருநாள் போட்டி, கொல்கத்தா

 

நவம்பர் 16: 5-வது ஒருநாள் போட்டி, ராஞ்சி

Link to comment
Share on other sites

இந்தியாவிற்கு எதிரான தொடரில் சிறப்­பான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்த முடி­யுமா என்­பது சந்­தே­கமே : மெத்தியூஸ்
 

 

இந்­தியா போன்ற சிறப்­பா­ன­தொரு அணி­யுடன் விளை­யா­டு­வ­தற்கு பூரண பயிற்சி தேவை அதனை மேற்­கொள்­வ­தற்­கான கால அவ­காசம் வழக்­கப்­ப­டா­மையால் இந்தத் தொடரில் சிறப்­பான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்த முடி­யுமா என்­பது சந்­தே­கமே என இலங்கை அணியின் தலைவர் அஞ்­சலோ மெத்யூஸ் தெரி­வித்தார்.


ஐந்து போட்­டி­களைக் கொண்ட ஒருநாள் தொடரில் பங்­கேற்­ப­தற்காக நேற்று முன்­தினம் இந்­தியா சென்­ற­போதே நிரு­பர்கள் மத்­தியில் அஞ்­சலோ மெத்யூஸ் மேற்­ கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசு­கையில்,

இந்­தியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளை­யா­டு­வ­தற்கு நாங்கள் தயக்கம் காட்­ட­வில்லை.

ஆனால் இந்­தியா போன்ற நாட்­டுக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொள்­வ­தற்கு ஏற்ப நாங்கள் மிகச்­சி­றப்­பான முறையில் தயார் ஆக­வில்லை.


இந்­திய மண்ணில் கிரிக்கெட் ஆடு­வது எவ்­வ­ளவு கடி­ன­மா­னது என்­பது எங்­க­ளுக்கு தெரியும். அதிலும் இந்­தி­யாவை அதன் சொந்த மண்ணில் எதிர்­கொள்­வ­தற்கு, மிக உய­ரிய நிலையில் ஆயத்­த­மாக வேண்­டி­யது அவ­சியம்.

கடந்த ஒன்­றரை மாதங்­க­ளாக நாங்கள் எங்­க­ளது உடல்­த­கு­தியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தோம். ஆனால் திடீ­ரென இந்த தொடர் வந்து விட்­டதால், அதை கவ­னத்தில் கொள்ள வேண்­டி­ய­தாகி விட்­டது.

டோனி, இந்­திய அணியின் தூண் ஆவார். அவர் அபா­ய­ க­ர­மான வீரர் என்­பதை அறிவோம். இந்­திய அணியில் அவர் இடம்பெறாவிட்டால் அதை எதி­ரணி தங்­க­ளுக்கு கூடுதல் வாய்ப்­பாக நினைக்கக் கூடும். ஆனால் அவர் இல்லா­விட்­டாலும் இந்­திய அணியை குறைத்து மதிப்­பிட முடி­யாது என அஞ்­சலோ மெத்யூஸ் மேலும் தெரிவித்தார்.

 

 

http://www.virakesari.lk/articles/2014/10/31/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%C2%AD%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%C2%AD%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%C2%AD%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D

Link to comment
Share on other sites

தோனி இல்லாத இந்தியா; மலிங்கா இல்லாத இலங்கை: வெற்றி யாருக்கு?
 

 

கட்டாக் மைதானத்தில் நாளை இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. தோனி இல்லாத இந்திய அணியை விராட் கோலி வழிநடத்துகிறார்.

5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 4-1 என்று வெற்றி பெற்றால் தென் ஆப்பிரிக்காவுடன் 115 புள்ளிகள் பெறும். தசம புள்ளிக்கு அப்பால் கணக்கிடப்பட்டால் இந்தியா நம்பர் 1 இடத்தைப் பிடிக்கும்.

5-0 என்று இலங்கை வீழ்த்தினால் தென் ஆப்பிரிக்காவைக் காட்டிலும் 2 புள்ளிகள் கூடுதல் பெற்று தெளிவாக நம்பர் 1 இடத்திற்கு முன்னேறும்.

மாறாக இலங்கை அணிக்கும் நம்பர் 1 இடத்தைப் பிடிக்க வாய்ப்பிருக்கிறது ஆனால் 5-0 என்று அந்த அணி இந்தியாவை வீழ்த்த வேண்டும். இது கடினம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இரு அணிகளுக்கும் ஒரு விதமான பகைமை இருக்கிறது என்றே கூற வேண்டும். வெளிப்படையாக அல்ல. வீரர்களின் மனதளவில் கூட இது இருக்கலாம்.

2011 உலகக் கோப்பை இறுதியில் நுவன் குலசேகரா பந்தை சிக்சர் அடித்து தோனி வெற்றி பெறச் செய்தது இலங்கை வீரர்களிடத்தில் காயத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதேபோல் உலக டி20 இறுதிப் போட்டியில் திசர பெரேரா, அஸ்வின் பந்தை நேராகத் தூக்கி அடித்து வெற்றிபெறச் செய்தார். இதுவும் இந்திய வீரர்கள் மறக்க வாய்ப்பில்லாத இறுதிப் போட்டியாகும்.

ஆனால், தோனியின் தலைமையில் இலங்கையை நிறைய இருதரப்பு ஒருநாள் தொடர்களில் இந்தியா வீழ்த்தியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையைப் பொறுத்தவரை, இந்தியாவுக்கு சமீபமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத அல்லது தெரிந்தாலும் அவ்வளவாக தாக்கம் ஏற்படுத்தியிருக்க முடியாத ஒரு விஷயம் இலங்கை கேப்டன் அஞ்சேலோ மேத்யூஸின் எழுச்சியாகும். அவர் சிறந்த உத்திகளை வகுக்கும் சிறந்த கேப்டனாக உருவாகியுள்ளதை விராட் கோலியும் இந்திய வீரர்களும் மறக்கலாகாது.

 

ஆனாலும், இலங்கை கடந்த 2 மாதங்களாக போதிய வலைப்பயிற்சி செய்யாமல் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தொடரில் பங்கேற்கிறது. அது அன்று இந்தியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத் தோல்வியில் வெளிப்பட்டது. இந்தியா எடுத்த 382 ரன்களை இலங்கையால் துரத்த முடியாது என்று அர்த்தமல்ல, சரியான வலைப்பயிற்சி இல்லாத போது, பேட்டிங் பயிற்சிக்கான களமாக பயிற்சிப் போட்டியில் அந்த அணி விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி ஆட்டத்தில் சதம் எடுத்த ரோகித் சர்மா முதல் 3 போட்டிகளுக்கு இல்லை. அதே போல் பந்து வீச்சில் மொகமது ஷமி, புவனேஷ் குமார் இல்லை. எனவே இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், வருண் ஆரோன் ஆகியோரிடையே போட்டி நிலவும் என்பது இயற்கை.

 

ரெய்னாவின் 200வது ஒருநாள் போட்டி:

தோனி இல்லாத நிலையில் பினிஷிங் பொறுப்பு தலையில் விழுந்துள்ள சுரேஷ் ரெய்னா 200வது ஒருநாள் போட்டியில் நாளை களமிறங்குகிறார். இவர் 44 ரன்களை எடுத்தால் 200வது போட்டியில் 5000 ஒருநாள் போட்டி ரன்களை எட்டுவார்.

 

சங்கக்காரா:

இலங்கை அணியில் மேட்ச் வின்னர் சங்கக்காரா என்றால் மிகையாகாது. இந்த ஆண்டில் 18 ஒருநாள் போட்டிகளில் 728 ரன்களை குவித்து சரியான பார்மில் உள்ளார். ஆனால்.. இவர் இந்த அவசரத் தொடர் குறித்து விமர்சனன் வைத்ததும் அவர் ஆட்டத்தைப் பாதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இலங்கை அணியில் மலிங்கா இல்லை. எனவே பந்து வீச்சு நுவன் குலசேகரா, திசர பெரேரா, தம்மிக பிரசாத் ஆகியோர் கையில் உள்ளது. மேத்யூசும் சிக்கனமாக வீசுபவரே.

 

புள்ளி விவரங்கள்:

இந்தியாவில் இதுவரை 8 இருதரப்பு ஒருநாள் தொடர்களில் இலங்கை விளையாடியுள்ளது. இதில் 1997-98- தொடரில் 1-1 என்று டிரா செய்ததே அதன் சிறப்பான தொடர். மீதி 7 தொடர்களில் இந்தியா இலங்கையை வீழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிராக இந்தியாவில் நடந்த இருதரப்பு ஒரு நாள் தொடர்களில் இந்தியா எந்தத் தொடரிலும் 1 போட்டிக்கு மேல் தோற்றதில்லை.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/article6555571.ece

Link to comment
Share on other sites

இலங்கை - இந்தியா முதலாவது ஒருநாள் போட்டி நாளை
 

 

இலங்கை - இந்தியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இடம்பெறவுள்ளது.

மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிரான தொடரை அரைவாசியில் ரத்து செய்து விட்டு நாடு திரும்பியது.

இதைத்தொடர்ந்து இலங்கை அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கை அணி இந்தியாவுடன் 5 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

 

இந்திய அணியின் தலைவர் டோனிக்கு முதல் 3 போட்டிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் வீராட் கோலி அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடியதால் இத் தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய 'ஏ" வெற்றி பெற்று இருந்ததால் நம்பிக்கையுடன் இருக்கிறது.

இந்திய அணிக்கு எல்லா வகையிலும் இலங்கை அணி சவாலாக விளங்கும். ஏனென்றால் ஜெயவர்தன, சங்கக்கரா, அணித் தலைவர் மெத்தியூஸ், டில்சான், திஸர பெரேரா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

 

வீராட்கோலி, ரகானே, ரெய்னா, அம்பதி ராயுடு, ஷிகர் தவான், ஜடேஜா ஆகியோர் துடுப்பாட்டத்திலும் உமேஷ்யாதவ், அஸ்வின், அமித் மிஸ்ரா ஆகியோர் பந்து வீச்சிலும் பலம் சேர்ப்பார்கள்.

பகல்- இரவு போட்டியாக இடம்பெறுவதால் இந்த ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகிறது. பனிபொழிவால் 5 போட்டிகளுமே 1 மணி நேரத்துக்கு முன்னர் தொடங்குகிறது.
இரு அணி வீரர்கள் வருமாறு:
இலங்கை: மெத்தியூஸ் (அணித்தலைவர்), உபுல் தரங்க, டில்சான், சங்கக்கரா, ஜெயவர்தன, திஸர பெரேரா, சத்துரங்க டிசில்வா, நிரோஷன், லகிரு கமகே, குலசேகர, ரந்தீவ், குஷல் பெரேரா, அசான் பிரியரஞ்சன், தம்மிக்க பிரசாத், பிரசன்னா.

 

இந்தியா: வீராட்கோலி (அணித் தலைவர்), ஷிகர்தவான், ரகானே, ரெய்னா, அம்பதி ராயுடு, ரவிந்திர ஜடேஜா, விர்த்திமான்சகா, அஸ்வின், உமேஷ்யாதவ், இஷாந்த்சர்மா, அமித்மிஸ்ரா, குல்கர்னி, முரளிவிஜய், அஸ்கர் பட்டேல், வருண் ஆரோன்.

 

http://www.virakesari.lk/articles/2014/11/01/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88

 

Link to comment
Share on other sites

இந்திய அணி முதலில் துடுப்பாட்டம்
 

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.
மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை பாதியிலே ரத்து செய்ததால், இலங்கை அணி இந்தியாவுக்கு பயணம் செய்து இந்திய அணியுடன் 5 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று கட்டாக்கில் நடக்கிறது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து இந்திய அணி களமிறங்கி விளையாடுகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே, தவான் விளையாடுகின்றனர்.

 

http://www.virakesari.lk/articles/2014/11/02/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

Link to comment
Share on other sites

இந்திய அணி அசத்தல் வெற்றி: வீழ்ந்தது இலங்கை
நவம்பர் 01, 2014.

 

கட்டாக்: இலங்கைககு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தவான், ரகானே சதம் அடித்து அசத்த இந்திய அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் இன்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இந்திய லெவன் அணியில் ரவிந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, முரளி விஜய் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. அஷ்வின், அக்சர் படேல் வாய்ப்பு பெற்றனர்.

 

இந்திய அணிக்கு ஷிகர் தவான், அஜின்கியா ரகானே ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. இலங்கை பந்துவீச்சை நாலா புறமும் விளாசித் தள்ளிய இவர்கள் இருவரும் சதம் அடித்தனர். அபாரமாக ஆடிய ரகானே (111), தவான் (113) நம்பிக்கை தந்தனர். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 34 பந்தில் 52 ரன்கள் எடுத்து அவுட்டானார். கேப்டன் விராத் கோஹ்லி (22) அம்பதி ராயுடு (27)  பெரிய அளவில் சோபிக்கவில்லை.

இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 363 ரன்கள் குவித்தது. அக்சர் படேல் (14), விரிதிமன் சகா (10) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் சுராஜ் ரந்திவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

 

இலங்கை அணிக்கு உபுல் தரங்கா, தில்ஷன் ஜோடி துவக்கம் தந்தது. தில்ஷன் 18 ரன்களில் அவுட்டானார். இஷாந்த் வேகத்தில் அனுபவ வீரர் சங்ககரா (13) வெளியேறினார். தரங்கா 28 ரன்களில் கிளம்பினார். அக்சர் படேல் ‘சுழலில்’ பிரசன்னா (5), ஜெயவர்தனா (43) சிக்கினர். கேப்டன் மாத்யூஸ் (23), பிரியன்ஜன் (12) சோபிக்கவில்லை. போராடிய திசரா பெரேராவும் 29 ரன்களில் அவுட்டானார். முடிவில், இலங்கை அணி 39.2 ஓவரில் 194 ரன்களுக்கு ஆல–அவுட்டாகி தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக இஷாந்த் 4 விக்கெட் வீழ்த்தினார்.

 

http://sports.dinamalar.com/2014/11/1414860091/IndiaSriLankaCricketOneDayInternationalViratKohli.html

Link to comment
Share on other sites

இந்திய அணி வெற்றி: சில புள்ளி விவரங்கள்

 

கட்டாக்கில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை 169 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 28 முறை தொடக்க விக்கெட்டுக்காக 150 அல்லது அதற்கும் அதிகமாக ரன்கள் சேர்த்துள்ளது இந்திய தொடக்க வீரர்களே. உலக அணிகளில் 28 முறை தொடக்க விக்கெட்டுக்காக இத்தகைய சாதனையை வேறு எந்த அணியும் செய்ததில்லை. தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர்கள் 20 முறை 150 அல்லது அதற்கும் அதிகமாக தொடக்க விக்கெட்டுக்காக ரன்கள் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அஜிங்கிய ரஹானே தனது அதிகபட்ச ஒருநாள் போட்டி ஸ்கோரை எடுத்தார். நேற்று அவர் 108 பந்துகளில் எடுத்த 111 ரன்களே அவரது அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராகும். மேலும் ரஹானே சதன் எடுத்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஒருநாள் போட்டிகளில் ரஹானே 4 முறை ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்.

ரஹானே, ஷிகர் தவன் இணைந்து எடுத்த 231 ரன்கள் தொடக்க விக்கெட்டுக்காக இலங்கைக்கு எதிராக இந்தியாவின் 2-வது பெரிய ரன் சேர்ப்பாகும். முன்னால் ஜூலை 7, 1998-ஆம் ஆண்டு கொழும்புவில் சச்சின், கங்குலு இணைந்து எடுத்த 252 ரன்களே இலங்கைக்கு எதிரான சிறந்த தொடக்க விக்கெட்டுக்கான ரன் சேர்ப்பாகும்.

 

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா 4-வது முறையாக 200 ரன்களுக்கு மேல் தொடக்க விக்கெட்டுக்காக சேர்த்துள்ளனர். இருப்பினும் கடந்த 5 ஆண்டுகளில் இதுவே தொடக்க விக்கெடுக்கான முதல் 200 ரன்களுக்கும் அதிகமான கூட்டணியாகும். 2009-ஆம் ஆண்டு நியூசிலாந்தின் ஹாமில்டனில் சேவாக், கம்பீர் இணைந்து 201 ரன்கள் சேர்த்த போட்டிக்குப் பிறகு நேற்று இந்திய ஜோடி 200 ரன்களுக்கும் மேல் தொடக்க விக்கெட்டுக்காக சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இஷாந்த் சர்மா (4/34) தனது சிறந்த ஒருநாள் பந்துவீச்சை நேற்று நிகழ்த்தினார். இதற்கு முன்பாக 2008-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4/38 என்று இசாந்த் எடுத்திருந்தார். மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் 5 முறை 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் இஷாந்த் சர்மா. இலங்கைக்கு எதிராக 23 ஒருநாள் போட்டிகளில் 41 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் அவர்.

 

100 விக்கெட்டுகளுக்கு மேல் விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் என்ற வகையில் அதிக முறை ஒருநாள் போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் மேற்கிந்திய தீவுகளின் மால்கம் மார்ஷல். இவர் 6 முறை 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இஷாந்த் அவருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

169 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை இந்தியா வீழ்த்தியிருப்பது இலங்கைக்கு எதிரான 2வது பெரிய வெற்றியாகும். 2003 உலகக் கோப்பைப் போட்டிகளின் போது இலங்கையை இந்தியா 183 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

350 ரன்களுக்கு மேல் இந்தியா 20 முறை எடுத்துள்ளது. அனைத்து தருணங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 20 முறை 350 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ள ஒரே அணி இந்திய அணியே.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6560652.ece

Link to comment
Share on other sites

மூன்று ‘முத்துக்கள்’ *தவான் பெருமிதம்
நவம்பர் 03, 2014.
 

கட்டாக்: ‘‘இந்திய அணிக்கு மூன்று சிறந்த துவக்க வீரர்கள் கிடைத்திருப்பது அதிர்ஷ்டம் தான்,’’ என, ஷிகர் தவான் தெரிவித்தார்.

கட்டாக்கில் நடந்த இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் துவக்கத்தில் அசத்திய ஷிகர் தவான்(113), ரகானே(111) சதம் அடித்து இந்திய அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தனர். இதையடுத்து 363 ரன்களை எட்டிய இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது.

தற்போதைய நிலையில் தவான், ரகானே தவிர துவக்க இடத்தில் களமிறங்க ரோகித் சர்மாவும் தயாராக உள்ளார். இதனால், துவக்க இடத்துக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஷிகர் தவான் கூறியது:

ரோகித் சர்மா, ரகானே மற்றும் நான் என, மூன்று முத்தான துவக்க வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்துள்ளனர். மூன்று பேரும் சிறப்பான ரன்குவிப்பை வெளிப்படுத்துவது நமக்கு அதிர்ஷ்டம் தான். முதலில் ‘பேட்’ செய்யும் போதும், ‘சேஸ்’ செய்யும் போதும், சிறப்பான துவக்கம் அமைவது முக்கியம்.

இருவரும் முக்கியம்:

என்னைப் பொறுத்தவரையில் நல்ல ‘பார்ட்னர்’ என, ரோகித் அல்லது ரகானே என, யாராவது ஒருவரை மட்டும் கூற முடியாது. இருவருடன் களமிறங்கும் போதும் நன்றாகத்தான் விளையாடுகிறேன்.

 

அவர்களும் என்னுடன் சிறப்பாக விளையாடுவதாக நினைப்பர் என்று நம்புகிறேன். ரோகித், ரகானே வெவ்வேறு ‘ஸ்டைலில்’ விளையாடுபவர்கள்.

துவக்க வீரராக நான் தொடர்வது குறித்து அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். இதற்கு பதில் சொல்ல முடியாது. இலங்கைக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம் எனது தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. 

இஷாந்துக்கு பாராட்டு:

கட்டாக் போட்டியில் இந்திய அணியின் பவுலிங்கும் துடிப்பாக இருந்தது. சரியான அளவில் துல்லியமாக பந்துவீசினர். மீண்டும் அணிக்கு திரும்பிய இஷாந்த் சர்மா 4 விக்கெட் வீழ்த்தியது வரவேற்கத்தக்க விஷயம்.

நமது வீரர்கள் மணிக்கு 145 கி.மீ.,க்கும் அதிகமான ‘வேகத்தில்’ பவுலிங் செய்கின்றனர். இது எதிரணி பேட்ஸ்மேன்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இப்படி சிறந்த ‘வேகப்புயல்கள்’ உருவாவது இந்திய அணிக்கும் நல்ல செய்தி.

இவ்வாறு ஷிகர் தவான் கூறினார்.

 

நிதானம் ஏன்

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதல் 10 ஓவர்களில் 43 ரன்கள் மட்டும் எடுத்தது குறித்து ஷிகர் தவான் கூறுகையில்,‘‘துவக்கத்தில் பந்து நல்ல வேகத்தில் ‘சுவிங்’ ஆனது. இதை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல. இதனால், தான் ஆரம்பத்தில் நிதானமாக ஆடினோம். பின் அதிரடிக்கு மாறினோம்,’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2014/11/1415036894/wehavethreeopeningoptionsDhawanindia.html

Link to comment
Share on other sites

ஆரோன் சந்தேகம்
நவம்பர் 03, 2014.கட்டாக்:

 

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வருண் ஆரோன் விளையாடுவது சந்தேகமாக உள்ளது.      

இந்தியா, இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடந்தது. இதில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன், மணிக்கு 152 கி.மீ., வேகத்தில் பவுலிங் செய்து அசத்தினார்.      

துரதிருஷ்டவசமாக தனது 4.1 வது ஓவரில் காயம் காரணமாக (தொடை தசைப்பிடிப்பு) களத்தை விட்டு வெளியேறினார். இவர் வரும் 6ம் தேதி ஆமதாபாத்தில் நடக்கவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.      

இந்திய அணி மானேஜர் ஒருவர் கூறுகையில்,‘‘ வலது தொடை தசைப்பகுதியில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக வருண் ஆரோன் அவதிப்படுகிறார். இதனை ஆய்வு செய்த பின், உரிய முடிவு எடுக்கப்படும்,’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2014/11/1415035948/VarunAaroninjureslegindia.html

Link to comment
Share on other sites

இந்தியாவுக்கு எதிரான நாளைய போட்டியில்இலங்கை அணி சாதிக்குமா?
 

 

இந்திய அணிக்கெதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி சாதிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டித் தொடரில் கட்டாக்கில் இடம்பெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 169 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.

கடந்த போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி இப் போட்டியில் தனது வெற்றிக் கணக்கை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்து.

ஜெயவர்தன, சங்கக்கர, அணித் தலைவர் மெத்தியூஸ், டில்சான் போன்ற முன்னணி வீரர்களை கொண்ட இலங்கை அணி பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது.
இந்நிலையில் கடந்த போட்டியில் விடப்பட்ட தவறுகளை விடாது விளையாடும் பட்சத்தில் இலங்கை அணி வெற்றியை உறுதிசெய்யலாம்.

இதேவேளை அபாரமாக விளையாடி வெற்றி பெற்றதைப்போல் நாளைய போட்டியிலும் இந்திய அணியின் அதிரடி நீடிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

தொடக்க வீரர்கள் ஷிகர் தவான், ரகானே ஆகியோர் கடந்த போட்டியில் சதம் அடித்து நல்ல நிலையில் இருப்பதால், அவர்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

இதைப்போல ரெய்னா, அணித் தலைவர் வீராட் கோலி ஆகியோரும் நல்ல நிலையிலுள்ளனர்.

பந்துவீச்சில் இஷாந்த் சர்மா சிறப்பாக உள்ளார். கடந்த போட்டியில் அவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்திய அணியின் வருண் ஆரோன் காயம் அடைந்ததால் அவருக்குப் பதிலாக குல்கர்னி இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது போட்டி பகலிரவுப் போட்டியாக நாளை இடம்பெறவுள்ளது.

http://www.virakesari.lk/articles/2014/11/05/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE

 

Link to comment
Share on other sites

அகமதாபாத்தில் இன்று 2-வது ஒருநாள் ஆட்டம்: வெற்றியைத் தொடரும் முனைப்பில் இந்தியா
 

 

இந்திய-இலங்கை அணி களுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாதில் இன்று நடக்கிறது. முதல் ஆட்டத்தில் 169 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்ட இந்திய அணி, வெற்றியைத் தொடரும் முனைப்பில் இலங்கையை எதிர்கொள்கிறது.

அதேநேரத்தில் இலங்கை அணியில் மலிங்கா, ஹெராத் போன்ற முன்னணி பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக இடம்பெறாததால் அந்த அணி தடுமாறி வருகிறது.

கடந்த போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 231 ரன்கள் குவித்த அஜிங்க்ய ரஹானே-ஷிகர் தவன் ஜோடி இந்த ஆட்டத்திலும் இலங்கை பந்துவீச்சாளர்களை பந்தாட காத்திருக்கிறது. இந்தியாவின் தொடக்க ஜோடி மற்றும் விராட் கோலி, ரெய்னா ஆகியோரை ஆரம்பத்தில் வீழ்த்தாத பட்சத்தில் இலங்கை அணியால் இந்தியாவின் ரன் குவிப்பை தடுக்க முடியாது.

 

இந்தியாவின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் காயமடைந்த வருண் ஆரோனுக்குப் பதிலாக ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்படுவார் என தெரிகிறது. 3-வது வேகப்பந்து வீச்சாளராக தவல் குல்கர்னி இருந்தாலும், ஆல்ரவுண்டரான பின்னிக்கே வாய்ப்பு அதிகம். மற்ற படி பந்துவீச்சில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது.

இலங்கை அணி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே தடுமாறி வருகிறது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான தில்ஷான், சங்ககாரா, ஜெயவர்த்தனா ஆகி யோர் தடுமாறி வருவது கவலை யளிப்பதாக உள்ளது. இவர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த அணியின் வெற்றி வாய்ப்பு அமையும்.

அந்த அணியைப் பொறுத்த வரையில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இருக்காது என தெரிகிறது. ஒருவேளை மாற்றம் இருந்தால் பிரசன்னாவுக்குப் பதிலாக டி சில்வா சேர்க்கப்படலாம்.

போட்டி நடைபெறும் அகமதா பாத் மோதிரா மைதானத்தில் இந்திய அணி கடைசியாக 3 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கிந் தியத் தீவுகளுடன் விளையாடியுள் ளது. அதில் இந்தியா 16 ரன்களில் தோல்வியடைந்துள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article6570305.ece

Link to comment
Share on other sites

இந்திய அணி இலக்கு 275 ரன்கள்
நவம்பர் 05, 2014.

ஆமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் சங்ககரா, மாத்யூஸ் அரை சதம் அடிக்க இலங்கை அணி 274 ரன்கள் குவித்தது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. 

இன்று இரண்டாவது போட்டி, குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் மைதானத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் காயத்தால் வெளியேறிய வருண் ஆரோனுக்குப்பதில் ஜடேஜா வாய்ப்பு பெற்றார்.

 

இலங்கை அணிக்கு குசல் பெரேரா டக்–அவுட் ஆனார். அக்சர் படேல் ‘சுழலில்’ தில்ஷன் (35) வெளியேறினார். ஜெயவர்தனா (4) நிலைக்கவில்லை. சிறப்பாக செயல்பட்ட சங்ககரா அரை சதம் அடித்தார். இவர் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். தன் பங்கிற்கு மாத்யூஸ் அரை சதம் விளாசினார். ஜடேஜா ‘சுழலில்’ பிரசன்னா (13) சிக்கினார். பிரியன்ஜன் (1), திசரா பெரேரா (10), ரந்திவ் (10) விரைவில் வெளியேறினர். இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்திருந்தது. மாத்யூஸ் (88), தமிக்கா பிரசாத் (29) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி சார்பில் உமேஷ், அஷ்வின், அக்சர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

 

http://sports.dinamalar.com/2014/11/1415207326/Dhawanindiacricket.html

 

Link to comment
Share on other sites

அம்பதி ராயுடு சதம்: இந்தியா மீண்டும் வெற்றி
நவம்பர் 05, 2014.

 

ஆமதாபாத்: இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், அம்பதி ராயுடு சதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. 

இன்று இரண்டாவது போட்டி, குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் மைதானத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் காயத்தால் வெளியேறிய வருண் ஆரோனுக்குப்பதில் ஜடேஜா வாய்ப்பு பெற்றார்.

 

இலங்கை அணிக்கு குசல் பெரேரா டக்–அவுட் ஆனார். அக்சர் படேல் ‘சுழலில்’ தில்ஷன் (35) வெளியேறினார். ஜெயவர்தனா (4) நிலைக்கவில்லை. சிறப்பாக செயல்பட்ட சங்ககரா அரை சதம் அடித்தார். இவர் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். தன் பங்கிற்கு மாத்யூஸ் அரை சதம் விளாசினார். ஜடேஜா ‘சுழலில்’ பிரசன்னா (13) சிக்கினார். பிரியன்ஜன் (1), திசரா பெரேரா (10), ரந்திவ் (10) விரைவில் வெளியேறினர். இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்திருந்தது. மாத்யூஸ் (88), தமிக்கா பிரசாத் (29) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி சார்பில் உமேஷ், அஷ்வின், அக்சர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

 

இந்திய அணிக்கு கடந்த போட்டியில் சதம் அடித்த ரகானே இம்முறை 8 ரன்களில் அவுட்டானார். தவான், ராயுடு இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தவான் (79) அரைசதம் விளாசினார். அபாரமாக ஆடிய அம்பதி ராயுடு சதம் அடித்தார். கேப்டன் விராத் கோஹ்லி (49) அரைசத வாய்ப்பை இழந்தார். சுரேஷ் ரெய்னா (14) நிலைக்கவில்லை.

இந்திய அணி 44.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 275 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2–0 என முன்னிலை பெற்றது.

மூன்றாவது போட்டி வரும் 9ம் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது.

 

http://sports.dinamalar.com/2014/11/1415207326/Dhawanindiacricket.html

Link to comment
Share on other sites

புதிய சாதனை படைத்தார் சங்கா
 

 

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிக அரைச்சதம் எடுத்தவர்கள் வரிசையில் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார்சங்கக்கார இரண்டாவது இடத்திற்கு முன்னேறி புதிய சாதனை படைத்துளளார்.

சங்கக்கார இதுவரை 2 ஆவது இடத்தில் இருந்து வந்த தென்னாபிரிக்க வீரர் காலிஸை பின்தள்ளி 2 ஆவது இடத்திற்கு முந்தியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய சங்கக்கார தனது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 87ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் தென்னாபிரிக்க வீரர் காலிஸை பின்தள்ளி சாதனை படைத்துள்ளார்.

இந்திய அணியின் மாஸ்ட பட்ஸ்மன் சச்சின் தொடர்ந்து 96 அரைச்சதத்துடன் முதலிடத்திலுள்ளார். இரண்டாவது இடத்திற்கு சங்கக்கார முன்னேறியுள்ளார். காலிஸ்(86), டிராவிட்(83), இன்சமாம்(83), பொண்டிங் (82), ஜெயவர்தன (74) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

 

http://www.virakesari.lk/articles/2014/11/07/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE

 

Link to comment
Share on other sites

இலங்கை இந்தியாவின் அழைப்பையேற்றமை சரியானதே : முரளி
 

 

இந்தியாவின் அழைப்பை ஏற்று இலங்கை அணி விளையாடுவது சரியான முடிவு என்று இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.


இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, தொடரை பாதியிலே ரத்து செய்தது. இதனால் இந்திய அணி இலங்கை அணியை ஒருநாள் தொடரில் விளையாடுமாறு அழைப்பு விடுத்தது.

இந்த அழைப்பை ஏற்று இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணி அங்கு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையிலேய இந்தியாவின் அழைப்பை ஏற்றது சரியான முடிவு தான் என முத்தையா முரளிதரன் தெரிவித்துளளார்.

இதுபற்றி அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்தியா, இலங்கை தொடர் என்பது ஒரு சிறந்த தொடர். கடந்த ஒரு வருடமாக ஆசிய கிண்ணம், இருபதுக்கு 20 உலகக்கிண்ணம், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆகியவற்றை கைப்பற்றிய

இங்கை அணி சிறந்த ஒரு நிலையில் இருக்கிறது. அதனால் இந்திய அணியுடன் மோதல் என்பது சரியான முடிவு தான்.

மேலும் இந்த தொடரில் காயத்தால் வெளியேறியுள்ள மலிங்க அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலகக்கிண்ணப் போட்டிகளில் நல்லநிலையில் களமிறங்குவார் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலகக்கிண்ண தொடருக்கு தயாராகிக் கொண்டு இருக்கும் போது இந்த அவசர தொடரில் விளையாடுவது மற்றும் இந்தியாவின் அழைப்பை ஏற்பது சரியான முடிவு இல்லை என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/articles/2014/11/08/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF

Link to comment
Share on other sites

வாழ்வா-சாவா ஆட்டத்தில் இலங்கை! தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 

 

இலங்கை-இந்தியா மோதும் 3ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று நடக்கிறது. தொடரை இந்திய அணி கைப்பற்றுமா அல்லது இலங்கை கைப்பற்றுமா என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 5 போட்டி கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 169 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், ஆமதாபாத்தில் நடந்த 2அவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி மகத்தான வெற்றி பெற்று தொடரில் 2–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

 

இந்த நிலையில் இந்தியா-இலங்கை இடையிலான 3–வது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி அரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் தீவிரத்துடன் தயாராகி வரும் இளம் இந்திய அணியினர், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தொடரையும் வசப்படுத்தி விடுவார்கள். முதல் இரு ஆட்டங்களிலும் இந்தியாவின் துடுப்பாட்டம் நேர்த்தியாக இருந்தது. ஷிகர் தவான், ரஹானே, அம்பத்தி ராயுடு ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்தனர். அதே துடுப்பாட்டம் இன்றைய ஆட்டத்திலும் தொடரும் பட்சத்தில் இலங்கையின் நிலைமை மோசமானதாக இருக்கும்.

 

இது இலங்கை அணிக்கு வாழ்வா-சாவா ஆட்டமாகும். தொடரை வெல்வதற்கான வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. எனவே அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம். முதல் இரு ஆட்டத்திலும் சோபிக்க தவறிய மஹேல ஜயவர்தன சிறப்பாக செயற்பட வேண்டிய அழுத்தத்தில் உள்ளார். மொத்தத்தில் முந்தைய தோல்விகளுக்கு பரிகாரம் தேடும் வகையில் இன்றைய போட்டியில் விறுவிறுப்பாக செயற்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐதராபாத் ஆடுகளமும் துடுப்பாட்ட வீரர்களுக்கு உகந்த வகையில் இருக்கும் என்றே தெரிவிக்கப்படுகின்றது. இங்கு இதுவரை 4 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்தியா ஒன்றில் வெற்றியும் (இங்கிலாந்துக்கு எதிராக), மூன்றில் தோல்வியும் (அவுஸ்திரேலியா (2), தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக) கண்டுள்ளது. சச்சின் டெண்டுல்கரின் 175 ஓட்டங்கள் உள்பட 4 சதங்கள் இங்கு பதிவாகியுள்ளன.

 

வீரர்கள் விவரம்
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

இலங்கை: குசேல் பெரேரா, டில்ஷான், சங்கக்கார, மஹேல ஜயவர்தன, மெத்யூஸ் (அணித் தலைவர்), பிரியஞ்சன், பிரசன்னா, திசர பெரேரா, தம்மிக பிரசாத், ரந்தீவ் அல்லது குலசேகர, லாஹிரு கமகே.

 

இந்தியா: ரஹானே, ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, விராட் கோலி (அணித் தலைவர்), சுரேஷ் ரெய்னா, விருத்திமான் சஹா, ரவீந்திர ஜடேஜா அல்லது தவால் குல்கர்னி, அக்ஷர் பட்டேல், அஸ்வின், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ்.

 

‘ஒவ்வொரு ஆட்டத்தையும் நொக்–அவுட் சுற்றாக நினைக்கிறோம்’–கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் தற்காலிக அணித் தலைவர் 26 வயதான விராட் கோலி இன்னும் 50 ஓட்டங்கள் எடுத்தால், ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 6 ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரர் என்ற புதிய சாதனையை படைப்பார். இன்றைய ஆட்டத்தில் அந்த மைல்கல்லை கடக்க வாய்ப்புள்ளது. 3–வது ஆட்டம் குறித்து விராட்கோலி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

 

ஒவ்வொரு ஆட்டங்களையும் நாங்கள் நொக்–அவுட் சுற்று ஆட்டம் போன்று பாவித்து விளையாடுகிறோம். எனவே 2–0 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பது குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு ஆட்டத்திற்கும் திட்டங்கள் வகுத்து அதை களத்தில் செயல்படுத்த முயற்சிக்கிறோம்.

இது போன்ற மனநிலையை எங்களுக்குள் வலுப்படுத்தி உலக கிண்ண போட்டிக்கு செல்ல விரும்புகிறோம். ஏனெனில் உலக கிண்ணத்தில் நொக்–அவுட் சுற்று வரும் போது, ஒரு ஆட்டத்தில் மோசமாக ஆடினாலும் வெளியேற வேண்டியது தான்.

எதிரணி என்ன திட்டத்துடன் உள்ளது? அவர்களின் பலம், பலவீனம் என்ன? என்பது ஒரு பிரச்சினையே இல்லை. களத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் தான் எங்களது கவனம் உள்ளது. நமது பலவீனமான பகுதியில் முன்னேற்றம் கண்டால், எதிரணி பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இதன் அடிப்படையில் தான் இந்த அணியை தயார் செய்கிறோம்.

எந்தவித கருணையும் இன்றி ஒவ்வொரு ஆட்டத்திலும் இலங்கையை தோல்வியடைய செய்ய விரும்புகிறோம். அப்படிப்பட்ட அணியாக இருக்க வேண்டும் என்றால், பலவீனங்களை சரி செய்து, ஒவ்வொரு ஆட்டத்திலும் சுலபமான மிகப்பெரிய வெற்றிகளை ஈட்ட வேண்டும் என்றார்.
இவ்வாறு கோலி கூறினார்.

 

http://www.virakesari.lk/articles/2014/11/09/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE

Link to comment
Share on other sites

இந்திய அணி இலக்கு 243 ரன்கள்

 

ஐதராபாத்: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில்  மகிளா ஜெயவர்தனா சதம் அடிக்க இலங்கை அணி 242 ரன்கள் எடுத்தது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி 2–0 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் மோதும் மூன்றாவது போட்டி இன்று ஆந்திராவின் ஐதராபாத்தில் உள்ள உபெல் மைதானத்தில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி ‘பவுலிங்’ செய்கிறது. இந்திய அணியில் ஜடேஜாவுக்குப்பதில் வேகப்பந்துவீச்சாளர் குல்கர்னி இடம்பெற்றார். இலங்கை அணியில் ரந்திவ், தமிக்கா பிரசாத் நீக்கப்பட்டு சதுரங்கா டி சில்வா, குலசேகரா வாய்ப்பு பெற்றனர்.

 

இலங்கை அணிக்கு உமேஷ் யாதவ் துவக்கத்திலேயே தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தி்ல்’ குசல் பெரேரா (4), சங்ககரா (0) அடுத்தடுத்து சிக்கினர். இலங்கை அணி 9 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 40 ரன்கள் எடுத்திருந்தது. பின் இணைந்த தில்ஷன், மகிளா ஜெயவர்தனா ஜோடி பொறுப்பாக ஆடியது. இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த தில்ஷன் அரைசதம் அடித்தார்.  மூன்றாவது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த போது அம்பதி ராயுடு பந்தில் தில்ஷன் (53) அவுட்டானார். அக்சர் படேல் ‘சுழலில்’ மாத்யூஸ் (10), பிரியன்ஜன் (2), சதுரங்கா (2) சிக்கினர். திசரா பெரேரா (1) ஏமாற்றினார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட ஜெயவர்தனா ஒரு நாள் அரங்கில் 17வது சதம் அடித்தார். இவர் 118 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்வந்தவர்கள் விரைவில் வெளியேற, இலங்கை அணி 48.2 ஓவரில் 242 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. இந்திய அணி சார்பில் உமேஷ் 4, அக்சர் 3 விக்கெட் வீழ்த்தினர்.

 

http://sports.dinamalar.com/2014/11/1415466248/IndiaSriLankaODICricket.html

Link to comment
Share on other sites

கோஹ்லி அரை சதம்: தொடரை வென்றது இந்தியா
நவம்பர் 08, 2014.

ஐதராபாத்: இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தவான், கோஹ்லி அரை சதம் விளாச இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரையும் 3–0 என கைப்பற்றியது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி 2–0 என முன்னிலை வகித்தது. இரு அணிகள் மோதிய மூன்றாவது போட்டி இன்று ஆந்திராவின் ஐதராபாத்தில் உள்ள உபெல் மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி ‘பவுலிங்’ செய்கிறது. இந்திய அணியில் ஜடேஜாவுக்குப்பதில் வேகப்பந்துவீச்சாளர் குல்கர்னி இடம்பெற்றார். இலங்கை அணியில் ரந்திவ், தமிக்கா பிரசாத் நீக்கப்பட்டு சதுரங்கா டி சில்வா, குலசேகரா வாய்ப்பு பெற்றனர்.

 

இலங்கை அணிக்கு உமேஷ் யாதவ் துவக்கத்திலேயே தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தி்ல்’ குசல் பெரேரா (4), சங்ககரா (0) அடுத்தடுத்து சிக்கினர். இலங்கை அணி 9 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 40 ரன்கள் எடுத்திருந்தது. பின் இணைந்த தில்ஷன், மகிளா ஜெயவர்தனா ஜோடி பொறுப்பாக ஆடியது. இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த தில்ஷன் அரைசதம் அடித்தார்.  மூன்றாவது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த போது அம்பதி ராயுடு பந்தில் தில்ஷன் (53) அவுட்டானார். அக்சர் படேல் ‘சுழலில்’ மாத்யூஸ் (10), பிரியன்ஜன் (2), சதுரங்கா (2) சிக்கினர். திசரா பெரேரா (1) ஏமாற்றினார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட ஜெயவர்தனா ஒரு நாள் அரங்கில் 17வது சதம் அடித்தார். இவர் 118 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்வந்தவர்கள் விரைவில் வெளியேற, இலங்கை அணி 48.2 ஓவரில் 242 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. இந்திய அணி சார்பில் உமேஷ் 4, அக்சர் 3 விக்கெட் வீழ்த்தினர்.

இந்திய அணிக்கு ரகானே 31 ரன்கள் எடுத்தார். தவான், ராயுடு ஜோடி சிறப்பாக விளையாடியது. ராயுடு 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அரை சதம் விளாசிய தவான் 91 ரன்களில் அவுட்டானார். தன் பங்கிற்கு அரை சதம் அடித்த கோஹ்லி 53 ரன்களில் வெளியேறினார்.

இந்திய அணி 44.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 245 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரெயனா (18), சகா (6) அவுட்டாகாமல இருந்தனர். இதன் மூலம் தொடரையும் 3–0 என வென்று அசத்தியது.

 

http://sports.dinamalar.com/2014/11/1415466248/IndiaSriLankaODICricket.html

 

Link to comment
Share on other sites

12,000 ஓட்டங்களை கடந்து மஹேல சாதனை
ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014

 

இலங்கை அணிவீரர் மஹேல ஜயவர்தன ஒருநாள் போட்டிகளில் 12ஆயிரம் ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டியில் 116 ஓட்டங்களை பெற்றபோது, அவர் இந்த சாதனையை படைத்தார்.

 

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த நிலையில்  சிறப்பாக விளையாடிய மஹேல, சதம் அடித்தார்.

426 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மஹேல, 17 சதம், 74 அரைசதம் அடித்துள்ளார். அதிகபட்சமாக 144 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

இவருக்கு முன் ஜெயசூரிய 445 போட்டியில் 13,430 ஓட்டங்களும்;, சங்கக்கார 383 போட்டியில் 12,918 ஓட்டங்களும் எடுத்துள்ளனர்.

ஓருநாள் போட்டிகளில் 12 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 3ஆவது இலங்கை வீரர் மஹேல ஆவார்.

 

இதேவேளை இந்திய வீரர் டெண்டுல்கர் 463 போட்டிகளில் 18,426 ஓட்டங்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/132588-12000-.html

Link to comment
Share on other sites

18 ஆவது சதம் குவித்தார் மஹேல; ஆனால் இந்திய அணி 3 ஆவது போட்டியிலும் வெற்றி
 

 

இலங்கை அணியுடனான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற இப்போட்டியில் 6 விக்கெட்களால் இந்திய அணி வென்றது. இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட இத்தொடரின் வெற்றியை இந்திய அணி தனதாக்கியுள்ளது.

 

ஹைதராபாத்தில்  நடைபெற்ற இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி  48.2 ஓவர்களில்  242 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. மஹேல ஜயவர்தன அபாரமாக துடுப்பெடுத்தாடி 124 பந்துகளில் 118 ஓட்டங்களைப் பெற்றார்.

 

தனது 18 ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்த அவர், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 12,000 ஓட்டங்களையும் கடந்தார். திலகரட்ன டில்ஷான் 53 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எவரும் அரைச்சதத்தை நெருங்கவில்லை.

 

இந்திய பந்துவீச்சாள்களில் உமேஷ் யாதவ் 53 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும்  அக்ஷார் பட்டேல் 40 ஓட்டங்களுக்கு  3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 44.1  ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 245 ஓட்டங்களைப் பெற்றது. ஷிகர் தவான் 79 பந்துகளில் 91 ஓட்டங்களையும் அணித்தலைவர் விராட் கோஹ்லி 61 பந்துகளில் 53 ஓட்டங்களையும் குவித்தனர். இப்போட்டியின் ஆட்டநாயகனாக மஹேல ஜயவர்தன தெரிவானார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=7640#sthash.ppn4dVo9.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்குது தோக்கிறதிற்கு என்றே போயிருக்காங்கள் போல

Link to comment
Share on other sites

இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக 6-வது ஒருநாள் தொடரை வென்ற இந்தியா: சுவையான தகவல்கள்
 

 

நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி தொடரை 3-0 என்று இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றியது. தொடர்ச்சியாக இலங்கையை 6-வது ஒருநாள் தொடரில் இந்தியா வீழ்த்தியுள்ளது.

விராட் கோலி இலங்கைக்கு எதிராக தனது 9-வது அரைசதத்தை எடுத்தார். ஒருநாள் போட்டிகளில் அவரது 32-வது அரைசதமாகும் இது.

2014-ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றார். 19 போட்டிகளில் 49.94 என்ற சராசரி விகிதத்தில் அவர் 849 ரன்களைக் குவித்துள்ளார்.

 

அதிவிரைவில் 6000 ரன்களைக் கடந்த விராட் கோலி, விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடித்து முதலிடம் வகிக்கிறார். கோலியின் சராசரி தற்போது 51.30.

ஷிகர் தவன் (79 பந்துகளில் 91 ரன்கள்) ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 11-வது அரைசதத்தை நேற்று எடுத்தார். இலங்கைக்கு எதிராக அவரது 4-வது ஒருநாள் சதம். இந்தியாவில் ஷிகர் தவனின் ஒருநாள் போட்டி சராசரி 55.33 என்பது குறிப்பிடத்தக்கது.

உமேஷ் யாதவ் (4/53) நேற்று அவரது சிறந்த ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சை நிகழ்த்தினார். இதற்கு முன் 2013-ஆம் ஆண்டு தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் 32 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே அவரது சிறந்த பந்துவீச்சாக இருந்தது.

 

இந்தியாவுக்கு எதிராக குமார் சங்கக்காரா 3-வது முறையாக ரன் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். ஒட்டு மொத்தத்தில் அவர் 15 முறை ரன் எடுக்கும் முன்பு ஆட்டமிழந்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 12,000 ரன்களை எடுத்த ஜெயவர்தனே 399 இன்னிங்ஸ்களில் இந்த ரன்களை எடுத்ததன் மூலம் அதிக போட்டிகளில் 12,000 ரன்கள் எடுத்த வீரர் ஆனார். சச்சின் டெண்டுல்கர் 300 போட்டிகளில் 12,000 ரன்களை எட்டினார். பாண்டிங் 314 போட்டிகளில் 12,000 ரன்களை எட்டினார். குமார் சங்கக்காரா 336 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்ட, சனத் ஜெயசூரியா 379 ஒருநாள் போட்டிகளில் 12,000 ரன்களை எட்டினார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-6%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6583152.ece

Link to comment
Share on other sites

லங்கை திரும்பும் சங்ககரா
நவம்பர் 10, 2014.

கொழும்பு: மோசமாக விளையாடிய சங்ககரா, பிரசாத் உள்ளிட்ட நான்கு வீரர்கள், இலங்கை திரும்புகின்றனர்.      

இந்தியா வந்த இலங்கை அணி முதல் மூன்று போட்டிகளிலும் தோற்று 0–3 என, தொடரை இழந்தது. இத்தொடர் துவங்கும் முன்பே ‘சரியாகத் தயாராகவில்லை’ என, எதிர்ப்பை பதிவு செய்த சங்ககரா, முதல் மூன்று போட்டிகளில் 13, 61, 0 ரன்கள் எடுத்தார்.      

 

தவிர, 2 போட்டியில் விளையாடிய ரந்திவ் (3 விக்.,), தம்மிகா பிரசாத் (1 விக்.,) மற்றும் தரங்கா (28 ரன்கள், 1 போட்டி) சிறப்பாக செயல்படவில்லை.      

இவர்களை உடனே நாடு திரும்புமாறு, இலங்கை கிரிக்கெட் போர்டு உத்தரவிட்டது. இவர்களுக்குப் பதில், இந்தியாவுக்கு எதிரான மீதமுள்ள 2 ஒருநாள் போட்டிகளில், சண்டிமால், திரிமான்னே, அஜந்தா மெண்டிஸ், எரங்கா பங்கேற்பர் எனத் தெரிவிக்கப்பட்டது.

 

http://sports.dinamalar.com/2014/11/1415634778/SangakkaraSriLankaIndiaOneDayCricket.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.