Jump to content

மதிமுக-வுடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சியே: கருணாநிதி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 மதிமுக-வுடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சியே, அதை நான் வரவேற்பேன் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இன்று காலை, சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இதனை தெரிவித்தார்.

கருணாநிதி கூறும்போது, " ஸ்டாலின் - வைகோ சந்திப்பு புதிய கூட்டணிக்கு தொடக்கமாக இருந்தால் மகிழ்ச்சி.நானும் வைகோவும் பகைவர்கள் அல்ல நீண்ட கால நண்பர்கள். புதிய கூட்டணி உருவானல் திமுக பொதுக் குழு,செயற் குழு கூடி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இல்ல திருமண விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர். பா.ம.க. தலைவரின் முன்னிலையில் மு.க.ஸ்டாலின், வைகோ சந்தித்துப் பேசிக் கொண்டது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2016-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய புதிய கூட்டணி உருவாகக் கூடும் என்ற யூகங்களை இந்த சந்திப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சந்திப்பு குறித்து மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “வைகோவுடன் நடந்த சந்திப்பு நட்பு ரீதியானது” என்றார். “இதனை புதிய கூட்டணிக்கான சந்திப்பாக எடுத்துக் கொள்ளலாமா?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “உங்கள் விருப்பம் அதுதான் என்றால், அதில் எனக்கும் மகிழ்ச்சியே” என்று கூறினார்.

“கூட்டணி ஏற்பட்டால் மகிழ்ச்சியே” என்று ஸ்டாலின் கூறியது பற்றி வைகோவின் கருத்தை கேட்ட போது, “ஸ்டாலின் அவ்வாறு விரும்பினால் அதில் எனக்கும் மகிழ்ச்சியே” என்று கூறினார்.

இந்நிலையில், வைகோ, ஸ்டாலின் கருத்துகளை மேலும் உறுதிப்படுத்துவதுபோல் மதிமுக - திமுக கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சியே என திமுக தலைவர் கருணாநிதியும் தெரிவித்துள்ளார். 

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/article6547389.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மதிமுக-வுடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சியே, அதை நான் வரவேற்பேன் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

...

நிலையான எந்தக் கொள்கையும் இல்லாத சந்தர்ப்பவாத கூட்டணிகளால் வை.கோ எஞ்சியிருக்கும் மரியாதையையும் கெடுத்துக்கொள்கிறார். :wub:

தமிழக -அரசியலில் நல்லவனுக்கு அங்கீகாரமோ, ஆதரவோ கிட்டாதிருப்பது சாபக்கேடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேட்பாளர் மனு கொடுக்கும் கடைசி நிமிடம் வரைக்கும்  கூட்டனி நீடிக்கும். பின் தில்லு முல்லுடன் ழட்டி விடும்...!

Link to comment
Share on other sites

ராமதாஸ் இல்ல திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் - வைகோ சந்திப்பு: புதிய கூட்டணிக்கான அச்சாரமா?

vaikostalin_2178084f.jpg

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இல்ல திருமண விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர்.
 
ராமதாஸின் மகன் வழிப் பேத்தி (அன்புமணி ராமதாஸ் மகள்) சம்யுக்தா சௌமியா அன்புமணிக்கும், ராமதாஸின் மகள் வழிப் பேரன் ப்ரித்தீவன் பரசுராமனுக்கும் மாமல்லபுரத்தில் இன்று (வியாழக்கிழமை) திருமணம் நடைபெறுகிறது. இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (புதன்கிழமை) மாலை நடைபெற்றது.
 
இந்நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், கே.வி.தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
 
இரவு சுமார் 7.30 மணிக்கு விழா அரங்குக்கு வந்த மு.க.ஸ்டாலின் மேடையில் இருந்த மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு அவரை அருகேயிருந்த முக்கியப் பிரமுகர்களுக்கான உணவுக் கூடத்துக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அழைத்துச் சென்றார்.
 
அதனையடுத்து சற்று நேரத்துக்குப் பின்னர் வைகோ அரங்குக்கு வந்தார்.
 
மணமக்களை வாழ்த்திய பிறகு வைகோவையும் மு.க.ஸ்டாலின் இருந்த அறைக்கு ஜி.கே.மணி அழைத்துச் சென்றார்.
 
அங்கு இருவரும் கைகுலுக்கி, ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். சில நிமிட சந்திப்புக்குப் பிறகு அவர்கள் அங்கிருந்து விடை பெற்றுச் சென்றனர்.
 
பா.ம.க. தலைவரின் முன்னிலையில் மு.க.ஸ்டாலின், வைகோ சந்தித்துப் பேசிக் கொண்டது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2016-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய புதிய கூட்டணி உருவாகக் கூடும் என்ற யூகங்களை இந்த சந்திப்பு ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் சந்திப்பு குறித்து மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “வைகோவுடன் நடந்த சந்திப்பு நட்பு ரீதியானது” என்றார். “இதனை புதிய கூட்டணிக்கான சந்திப்பாக எடுத்துக் கொள்ளலாமா?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “உங்கள் விருப்பம் அதுதான் என்றால், அதில் எனக்கும் மகிழ்ச்சியே” என்று கூறினார்.
 
சந்திப்பு பற்றி வைகோ கூறும்போது, “தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் நான் விசாரித்தேன். எனது தாயார் உடல் நலம் பற்றி என்னிடம் ஸ்டாலின் விசாரித்தார். இது அரசியல் நாகரிகமான சந்திப்பு” என்றார்.
 
“கூட்டணி ஏற்பட்டால் மகிழ்ச்சியே” என்று ஸ்டாலின் கூறியது பற்றி வைகோவின் கருத்தை கேட்ட போது, “ஸ்டாலின் அவ்வாறு விரும்பினால் அதில் எனக்கும் மகிழ்ச்சியே” என்று கூறினார்.
 
Link to comment
Share on other sites

வைகோ ஐயா மறுபடியும் சறுக்குகிறார்.

Link to comment
Share on other sites

ராமதாஸ் மீதான அன்பு என்றும் மறைந்ததில்லை: கருணாநிதி

karu_ramdoss_2178758f.jpg

ராமதாஸ் இல்லத் திருமண விழாவில் கருணாநிதி.

பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் கருணாநிதி, மணமக்களை வாழ்த்தியதோடு தனக்கும் ராமதாசுக்கும் இடையேயான நட்பை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். ராமதாஸ் மீதான அன்பு என்றைக்கும் மறைந்ததில்லை என தெரிவித்தார்.
 
திருமண விழாவில் கருணாநிதி பேசியதாவது, "எனக்கும் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கும் இன்று நேற்றல்ல - பல ஆண்டுக் காலமாக நெருங்கிய பழக்கம் உண்டு. அவர்களுக்கும் எனக்கும் கோபதாபங்கள் ஏற்பட்டாலும், உறவு முறையிலே இடையிடையே தடங்கல்கள் ஏற்பட்டாலும், அவர் பால் எனக்குள்ள அன்பும், அவருக்கு என் பால் உள்ள அன்பும் என்றைக்கும் மறைந்ததில்லை.
 
இரண்டு நாட்களாக என் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால்; அதன் காரணமாக நான் மண விழாவுக்கு செல்ல முடியாவிட்டாலும், முதல் நாளே நீ போய் மணவிழா வரவேற்பில், என்னுடைய வாழ்த்துகளையும் இணைத்து, மணமக்களை வாழ்த்தி விட்டு வா என்று தம்பி மு.க. ஸ்டாலினை அனுப்பி வைத்திருந்தேன். அவர் நேற்று வந்து வாழ்த்தியிருக்கிறார். இன்றைக்கு ஸ்டாலினுடைய தந்தை, நான் வந்து மணமக்களை வாழ்த்தியிருக்கிறேன்.
 
இந்த விழாவினைப் பொறுத்தவரையில், ராமதாஸ் இந்த விழாவிற்கு நான் வர வேண்டுமென்று அழைத்த போது, "நீங்கள் அழைத்தா நான் வர வேண்டும், என்னுடைய பேரன், பேத்தி திருமணத்திற்கு நான் வராமல் வேறு யார் வருவார்கள்" என்று உரிமையோடு சொல்லி, அந்த உரிமையை நிலைநாட்டுகின்ற வகையில் இன்றைக்கு இந்த மணவிழா மேடையில் பல்லாயிரக்கணக்கான பாட்டாளி பெருமக்களைச் சந்திக்கின்ற அரிய வாய்ப்பை பெற்றமைக்காக இந்த வாய்ப்பினை அளித்த மணமக்கள் இல்லத்தாருக்கும், குறிப்பாக என்னுடைய அருமை கெழுதகை நண்பர், சகோதரர் டாக்டர் ராமதாசுக்கும், தம்பி டாக்டர் அன்புமணிக்கும், அவர்களுடைய குடும்பத்தார் மாத்திரமல்ல; இயக்கத்தார் ஜி.கே. மணி உட்பட அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" என பேசினார்.
 
Link to comment
Share on other sites

ராமதாசும் இன்று கருணாநிதியை ஆஹா ஒஹோ என்று புகழ்ந்து இருக்கின்றார். அநேகமாக பா.ம.க வும் கூட்டணியில் இணையலாம்.

ஜெயாவின் தண்டனையின் பின்னிருக்கும் அரசியல் நிலவரத்தில் பா.ஜ.க என்ற பார்ப்பன இந்திய தேசியக் கட்சி  தமிழகத்தில் பலம் பெறுவதை விட ஸ்டாலின் முக்கியத்துவம் பெறும் தி.மு.க பலம் பெறுவது நல்லது. காங்கிரஸ் தமிழகத்தில் மீண்டும் எழும்புதவற்கு தேவையான தலைமை தமிழகத்தில் இல்லை. ஜெயா இல்லையேல் அதிமுக இல்லை, அதுவும் தீர்ப்பு பாதகமாக செல்வின் அழிந்து விடும். திமுக வில் கருணாநிதியின் பின்னான காலம் விரைவில் உருவாகக் கூடிய சூழ்நிலை இருப்பதால்  மோடி தலைமையிலான பா.ஜ.வ விட ஸ்டாலின் தலைமை கொண்ட திமுக கூட்டணியே நல்லது.

ஸ்டாலின் ஒரு போதும் நல்ல தலைமைத்துவமுடையவராக தன்னை இனம் காட்டியதில்லை

வளைந்து  குழைந்து 

தனது தேவைக்கேற்ப செயற்படுபவராகவே  தொடர்ந்து இருந்துவருகிறார்

இப்படியான தலைவர்

தமிழகத்து சாபக்கேடு..

இவர் வந்தால்

மத்தியிலும் தமிழகத்திலும் தனது குடும்ப அரசியலையும்

பதவிக்காக  தமிழக ஈழ நலன்கள் எதையும்  பலியிடும் சுயநலவாதியாகவே வருவார்.

பாஐக

அதிமுக

திமுக

தேதிமுக

காங்கிரஸ்............ இல்லாத  இடத்தை புதியவர்கள்

அல்லது  தமிழகத்தில் அக்கறை கொண்டோர்  நிரப்ப நல்லதொரு சந்தர்ப்பம்............

பார்க்கலாம்......

Link to comment
Share on other sites

காவிரிப் படுகையில் எரிவாயு எடுக்க கையெழுத்துப் போட்டவர்தான் முன்னாள் துணைமுதல்வர் ஸ்டாலின். தெரியாமல் செய்திட்டன் என்று இப்ப சொல்லுறாராம்.. :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி, தேர்தல் நேரம்... இவர்களின் காலை வாரிவிடுவார்கள்.
மீண்டும்... ஏமாற்றமே மிஞ்சும்.
அரசியலில்...அடிப்படை நேர்மை இல்லாதவர்களிடம் கூட்டு, வைக்கப் படாது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தி மு க வை மீளமைக்க கருணாநிதி பேயோடும் கூட்டு வைக்கத் தயார். வை.கோ ஐயா சிந்திச்சு முடிவெடுக்கட்டும். கருணாநிதி முள்ளிவாய்க்காலில்.. தந்திரமாக ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த..தமிழினத் துரோகி என்ற கறையை வை.கோ ஐயாவின் இணைவை வைச்சு சரிக்கட்ட கருணாநிதி முனைந்தால்.. அது அவ்வளவு இலகுவாக நடக்காது.  :icon_idea:

இப்போது புரியனும்.. நாம் தமிழர் சீமான் போன்றவர்கள் ஏன் வை.கோ ஐயாவை.. திருமாவளவனை அவரின் வழியில் செயற்படவிட்டுள்ளார்கள் என்று. தங்களோடு இணைத்துக் கொள்ளவில்லை என்று..!!  :icon_idea:

Link to comment
Share on other sites

வை கோ தனது சொந்த தொகுதியிலேயே  வெல்லமுடியாது என்ற நிலைக்கு வந்தபின் இனி நாலு சீட் வெல்லவேண்டும் என்றால் யாருடனாவது கூட்டுத்தான்  ஒரே தெரிவு .ஆக கூடியது பத்து பன்னிரண்டு சீட்டுக்கள் தான் அவர் இலக்கு .

திருமா ,சீமான் கட்டுகாசுதான் அவர்கள் இலக்கு . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வை கோ - தி மு க கூட்டணி  
தி முக  வை கோவின் பிறந்த வீடு ஸ்ராலின் அவரின் நெருங்கிய நண்பன்
ஆனாலும் இவர்களின் கூட்டணியால்  யாரோ ஒருவருக்கு லாபம் அதிகம்.
ஆனால் ஈழத்தமிழர்களுக்கு இந்தக் கூட்டணியால் எதுவும் கிடைக்காது.
வை கோ வில் வைத்திருக்கும் நம்பிக்கையை அவர் ஈழத்தமிழர்களிடம் இருந்து இழப்பார் என்பது மட்டும் உறுதி.

Link to comment
Share on other sites

திமுகவுடன் கூட்டணி சேரும் எண்ணம் துளி கூட இல்லை - ஈரோடு கணேசமூர்த்தி இல்ல விழாவில் தலைவர் வைகோ பகிரங்க அறிவிப்பு

https://m.facebook.com/story.php?story_fbid=776065075786774&id=145371905522764

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.