Jump to content

ப்ரியங்கா-நளினி சந்திப்பு ரகசியங்கள் குறித்த டாக்டர் சு.சுவாமியின் பேட்டி தொடர்கிறது …. (சாமிகளின் சாகசங்கள் -பகுதி-11 )


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ கமிஷன்கள் நியமிக்கப்பட்டன….

எவ்வளவோ விசாரணைகள் நடந்தன….

எத்தனையோ ரிப்போர்ட்டுகள் அளிக்கப்பட்டன ….

ஆனால் ஒரு முக்கியமான,

மிக மிக முக்கியமான கேள்வி -

இரண்டு (ஆ) சாமிகளும் – ராஜீவ் கொலை நிகழ்ந்த நேரத்தில் எங்கே இருந்தார்கள் ….?

-என்பதற்கான விடை இன்று வரை காணப்படவே இல்லை என்பதே உண்மை. இதற்கான விடையை கண்டுபிடிக்கும் முயற்சியிலும், இதுவரை எந்த அரசும் தீவிரமாக ஈடுபடவில்லை….. ஏன் …?

இந்த கேள்விக்கான சரியான விடைகடைசி வரை

காணப்படாமலே போகக்கூடும்..

ஏனென்றால், சம்பந்தப்பட்டவர்களின் கையில்

சிக்கி இருக்கும் ரகசியங்கள் எக்கச்சக்கம்…!

தீவிரமாக விடை காணும் முயற்சியில் எந்த அரசு

இறங்கினாலும், அதை ஒரே வாரத்தில் கவிழ்ப்பதற்கான

ரகசியங்கள் ஒருவரின் கைவசம் இருக்கிறது

என்பதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்குமோ

எனக்குத் தெரியாது…! ஆனால், சில சமயங்களில் உண்மை – கற்பனையை விட அதிசயமாக இருக்கும் என்பதும்

நிஜம் தானே …?

முதல் சாமியை அவரது இன்றைய வடிவத்தில் – பலருக்கும் தெரியும். ஆனால், அவரது முன் கதை அநேகமாக -இன்றைய பலருக்குத் தெரிந்திருக்காது. இரண்டாவது ஆசாமியை – அனேகமாக எல்லாரும் மறந்தே போயிருப்பார்கள்.

இரண்டாவது ஆசாமியைப் பற்றி முதலில் சில செய்திகள்.

இவரை தாந்த்ரீக் என்று சொல்வாகள் ( மந்திரவாதி …..?)

முன்னாள் பிரதமர்கள் சந்திரசேகர்,

பி.வி.நரசிம்மராவ் இரண்டு பேருக்கும் “ராஜகுரு”….

நமது முதல் சாமிக்கு “ஜிக்ரி தோஸ்த்” – அதாவது,

“என்னுயிர்த் தோழன் “

இந்திரா காந்திக்கும் வேண்டியவர் ( இந்திராவுக்கு மிகவும்

வேண்டப்பட்டவர் வேறோரு மந்திரவாதி – அவர் பெயர்

திரேந்திர பிரம்மச்சாரி )

படித்தால் நம்ப மாட்டீர்கள்.

ஆனால் – இதைச் சொல்லி இருப்பவர் முன்னாள்

வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங்.

இப்போது தான் சொன்னார் என்றாலும், நம்பிக்கை குறையும்.

ஆனால் 09/04/2013 -அன்று – பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் இறந்த மறுநாள் ‘இந்து’ ஆங்கில செய்தித்தாளில் வெளிவந்த கட்டுரை இது – எனவே நம்பலாம் தானே -

சந்திராசாமியுடனான ஒரு அனுபவம் பற்றி நட்வர் சிங்

சொல்வதை, அவரது வழியிலேயே படிக்கலாம் -

( from K. Natwar Singh’s book

“Walking with Lions -Tales from a Diplomatic Past”)

chandraswami.jpg?w=640&h=436

——————

நட்வர்சிங் இங்கிலாந்தில் படித்தவர்.

படிக்கும்போது, இங்கிலாந்தில் இந்திய தூதரகத்தின் வனப்பை பார்த்து வியந்தவர் பின்னாளில் தமது படிப்பை முடித்தபிறகு indian foreign service -ல் தேர்வு செய்யப்பட்டு,

ஒரு நாள் அதே இங்கிலாந்தின் இந்திய தூதரகத்திற்கே

துணை உயர் ஆணையர் (டெபுடி ஹை கமிஷனராக) ஆகிறார்.

அடிக்கடி, இந்தியாவில் இருந்து வரும் நண்பர்கள் அவரைப் பார்க்கவேண்டும், இவரைப் பார்க்க வேண்டும் ஏற்பாடு செய்ய முடியுமா என்று தொல்லை கொடுப்பது வழக்கம் என்றும் அதற்கு தாம் வளைந்து கொடுத்ததில்லை என்றும் கூறுகிறார்.

அப்படி இருந்த காலக் கட்டத்தில், 1975ல் ஒரு நாள்

சந்திராசாமி என்பவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு :

“நான் இங்கிலாந்து வந்திருக்கிறேன். யஷ்பால்கபூர் உங்களை சந்திக்கச் சொன்னார். வந்து சந்திக்க முடியுமா” என்று.

“நான் எல்லாம் உங்களை வந்து சந்திக்க முடியாது.

நீங்கள் வேண்டுமானால் வந்து என்னை இந்தியத் தூதரக

அலுவலகத்தில் அல்லது என் இருப்பிடத்தில் சந்திக்கவும்” என்று சொல்லிவிட்டேன்.

அடுத்த நாள் சந்திராசாமி இவரை வந்து சந்தித்தது மட்டும்

இல்லாமல் அவரது இருப்பிடத்திற்கு விருந்துக்கு வருமாறு அழைத்து பிரமாதமான விருந்தொன்றும் அளித்திருக்கிறார்.

விருந்துக்குப் போன இடத்தில்,

சந்திராசாமி, நட்வர்சிங்கின் மனைவியை அழைத்து -

ஒரு வெள்ளைத் தாளில் 5 கோடுகளை கிழித்து

அதை 5 ஆகப் பிரித்து கிழித்து ஒவ்வொன்றிலும்

ஒரு கேள்வி எழுதவைத்து அவற்றை ஒரு சதுரங்க

பலகையில் வைத்து அதிலிருந்து எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

அந்த சுருட்டப்பட்ட காகிதத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது

என்று பார்க்காமலேயே சொல்லிவிட்டு -

மிஸஸ் நட்வர்சிங்கை அந்த சுருட்டப்பட்ட காகிதத்தை பிரித்துப் பார்க்கச் சொல்ல, அந்த கேள்வி அந்த காகித துண்டில் அப்படியே இருந்தது கண்டு சந்திராசாமி விஷேச சக்தி பெற்றவர்

என வியந்தாராம் மிஸஸ் நட்வர்சிங்.

இதெல்லாம் நட்வர்சிங்குக்கு அறவே

பிடிக்கவில்லை என்றாலும் வேண்டாவெறுப்பாக

பார்த்துக் கொண்டிருந்தாராம்.

அடுத்ததாக சந்திராசாமி, இங்கிலாந்தில் மௌண்ட்பேட்டன் மற்றும் மார்கரெட் தாட்சர் ஆகியோரைச் சந்திக்கவேண்டும்

ஏற்பாடு பண்ண முடியுமா என்று கேட்டிருக்கிறார்…..

margaret-thatcher-2.jpg?w=640

வேறு வழியின்றி முயற்சித்திருக்கிறார் நட்வர் சிங்.

நல்ல வேளையாக மௌன்ட் பேட்டனுக்கு வெளியூர்

செல்ல வேண்டியிருந்ததால் தப்பித்தார்.

மார்கரெட் தாட்சர் கன்சர்வேடிவ் கட்சியின் சீனியர் தலைவர். அப்போதைய – பார்லிமெண்டில் எதிர்க்கட்சித் தலைவர்…

நம்பிக்கையின்றியே, நட்வர் சிங், மார்கரெட் தாட்சரிடம் முயற்சி செய்தபோது, அவர் கூலாக, “பார்க்கலாம் – ஆனால் 10 நிமிடம்

தான் ஒதுக்க முடியும்…. ஆமாம் எதற்காக சந்திராசாமி

என்னைச் சந்திக்க விரும்புகிறார்” என்றாராம்.

(தொடர்கிறது ….பகுதி-2-ல் )

நன்றி http://vimarisanam.wordpress.com/

சந்திராசாமியும் – மார்கரெட் தாட்சரும் …..!!! (சாமிகளின் சாகசங்கள் -( பகுதி-2 )

அப்போது சந்திராசாமிக்கு இந்தியைத் தவிர வேறு எந்த

மொழியும் தெரியாது.( பிற்காலத்தில், தொழில் தேவைக்காக ஆங்கிலம் கற்றுக்கொண்டார்…) எனவே சந்திப்பின்போது, மொழி பெயர்ப்பாளர் வேலையையும் நட்வர்சிங்கே மேற்கொண்டிருக்கிறார்.

அப்போது, முப்பது வயது கூட நிரம்பாதவராக இருந்தார் சந்திராசாமி. அவரை கடனே என்று அழைத்துக் கொண்டு, சொன்ன நேரத்திற்கு நட்வர்சிங் மார்கரெட் தாட்சரை சந்திக்கச் சென்றிருக்கிறார்.

margaret-thatcherchandraswamy-natwarsing

மார்கரெட் தாட்சரின் உதவியாளர் ஒருவர்,

இவர்களை ஒரு சிறிய அறைக்கு அழைத்துச் சென்று

உட்கார வைத்து விட்டு, எதற்காக தன்னைச் சந்திக்க சந்திராசாமி விரும்புகிறார் என்று தாட்சர் தெரிந்து கொள்ள விரும்புகிறார் என்று கேட்டிருக்கிறார்.. இதற்கு “மேடம் சற்று நேரத்தில் தானாகவே தெரிந்து கொள்வார்” என்று சொல்லி இருக்கிறார்

சந்திராசாமி.

சில நிமிடங்கள் கழித்து இவர்களை சந்தித்த தாட்சரிடம்,

நட்வர்சிங்கின் மனைவியிடம் செய்தது போலவே,

ஒரு வெள்ளை காகிதம் கொண்டுவரச்செய்து, அதை கோடிட்டு, 5 பகுதிகளாக்கி, சந்திராசாமி, தாட்சரிடம் நீங்கள் உங்களுக்குத் தோன்றும் கேள்விகளை எழுதி வையுங்கள் என்றாராம்.

அதே போல் தாட்சரும் செய்ய, முதல் தாளில் தாட்சர் எழுதி இருந்த விஷயத்தை காகிதத்தைப் பார்க்காமலே சொன்னாராம். பின்னர் தாட்சரை காகிதத்தை பிரித்து சரி பார்த்துக் கொள்ளச் சொன்னாராம். இதே போலவே, இரண்டு, மூன்று, நான்கு என்று 5 காகிதங்களையும் கரெக்டாகச் சொன்னாராம் ச.சாமி. அசந்து போன மார்கரெட் தாட்சர் -

“உங்களிடம் மேலும் சில கேள்விகள் கேட்கட்டுமா” என்று

கேட்க, சந்திராசாமி சரியாக பதில் சொல்லிகொண்டே வர,

நட்வர்சிங் மாற்றி மாற்றி மொழி பெயர்த்து சொல்ல

நேரம் ஓடிக்கொண்டே இருந்ததாம்.

ஒரு குறிப்பிட்ட கேள்வியுடன் “சன் செட்” (சூரிய மறைவு)

ஆகி விட்டது. கேள்விகள் போதும் இனி வேண்டாம் என்று

சந்திராசாமி முடித்துக்கொண்டாராம்.

ஆரம்பத்தில் 10 நிமிடம் தான் தருவேன் என்ற தாட்சர்,

நேரம் காலம் பற்றி எல்லாம் நினைக்கும் நிலையிலேயே இல்லையாம்.அந்த அளவிற்கு பேச்சு தொடர்ந்து கொண்டே இருந்ததாம். நட்வர்சிங்க்குக்கு ஒன்றும் புரியவில்லையாம். நாம் சந்திராசாமியை மிகச் சிறியவராக எடைபோட இங்கு மார்கரெட் தாட்சரே இவருக்கு கீழ் படிந்து விட்டாரே – என மலைப்பு எய்த, தாட்சர் “மறுபடியும் உங்களை சந்திக்கமுடியுமா?” எனக் கேட்க நட்வர்சிங் மொழிபெயர்ப்பு செய்வதற்குள் சந்திராவே “ட்யூஸ்டே

ஈவ்னிங் – 5 ஓ க்ளாக் அட் நட்வர்சிங் ரெசிடன்ஸ்”

(செவ்வாய் மாலை 5 மணிக்கு நட்வர்சிங் இல்லத்தில் ) என்று உடைசல் ஆங்கிலத்தில் சொல்லி விட்டாராம்.

அதை விட ஆச்சரியமான ஒன்று – சந்திராசாமி அலுவலகம் வரும்போதே கையில் இருந்த திருநீறை இறைத்தபடி, தெளித்தபடி வந்தாராம். ஏய், இங்கெல்லாம், இதெல்லாம் இப்படி செய்யக் கூடாது என்று நட்வர்சிங் எச்சரித்தாராம். கையில் திருநீறு, கழுத்தில் ருத்திராட்சக் கொட்டையுடன் இருந்த சந்திராசாமி ஒரு தாயத்தை எடுத்து தாட்சரின் இடதுகையில் கட்டிக் கொள்ளச் சொன்னாராம்.

அதை நட்வர் சிங்க் மொழிபெயர்க்க மறுக்க – அந்த அம்மாவே தானாகவே “என்ன இது ..?” என்று விளக்கம் கேட்டு,வாங்கி கட்டிக் கொண்டாராம்.அடுத்த அதிர்ச்சியாக சந்திரா,இந்த அம்மாவை செவ்வாய் கிழமை வரும்போது சிவப்பு வண்ண ஆடை அணிந்து வரச் சொல்லுங்கள் என்றாராம்.

நட்வர்சிங்க் கோபம் அடைந்தாராம். இங்கிலாந்தின்

இரும்புப் பெண்மணி என கூறப்படும், எதிர்கட்சித் தலைவராய் இருக்கும் ஒருவரிடம் நாம் எப்படி சிவப்பு ஆடை அணிய வேண்டும் எனச் சொல்வது , இதெல்லாம் அதிகமாகத் தெரியலையா உனக்கு என சந்திராவை திட்ட ஆரம்பிக்கும்போது அது என்ன என தாட்சரே நட்வர்சிங்கிடம் கேட்டு தெரிந்து  கொண்டாராம். பிறகு அப்படியே ஆகட்டும் என்றாராம்.

செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு சிவப்பு ஆடையுடன் கையில் கட்டிய தாயத்துடன் மார்கரெட் தாட்சர் சரியாக நட்வர்சிங்க் இல்லம் வந்து விட்டார்.

பேசும்போது – சந்திரா சாமியிடம், நான் இங்கிலாந்தின் பிரதமர் ஆவேனா? எப்போது ? என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு சந்திராசாமி இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளில் பிரதமர் ஆவீர்கள். நீங்கள் 9,11,அல்லது 13 ஆண்டுகள் நீங்கள் இந்த இங்கிலாந்தை பிரதமராக ஆள்வீர்கள் என்றாராம்,

இது நடந்தது 1975ல். அதன்பிறகு 1979ல் ஜாம்பியாவில்

காமன்வெல்த் சம்மிட் நடைபெறும்போது இங்கிலாந்தின் பிரதமராக மார்கரெட் தாட்சரை வரவேற்கும் பொறுப்பில் நட்வர்சிங்   இருந்தாராம்.

ஜாம்பியாவுக்கு இந்திய தூதராக 1977ல் நட்வர் சிங்அனுப்பப்பட்டு அதுமுதல் அங்கே பொறுப்பில் இருந்தாராம்.

நட்வர்சிங் மற்றும் மிஸஸ் நட்வர்சிங்கும் இங்கிலாந்தின்

பிரதமர் மார்கரெட் தாட்சரை விமானத்தில் இருந்து

இறங்கும்போது வரவேற்க நின்று கொண்டிருக்கும் போது

தாட்சர் விமானத்திலிருந்து இறங்கி வர,

“சந்திராசாமி சொன்னது அப்படியே பலித்துவிட்டது போலிருக்கிறதே” என்று மனைவியிடம் மெதுவாக

சொன்னாராம். அருகில் அதைக்கேட்டுக் கொண்டே வந்த

மார்கரெட் தாட்சர் -

நட்வரை தனியாக அழைத்து , “அதைப்பற்றி எல்லாம் இனி வெளியே சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்” என்றாராம்.

அதற்கு நட்வர்சிங்கும் , “சொல்ல மாட்டேன், ஒருபோதும்

சொல்ல மாட்டேன்” என்றாராம்.

-சந்திராசாமி கூறியதை உறுதிப்படுத்தும் வண்ணம் -

இங்கிலாந்தின் பிரதமராக 11 ஆண்டுகள்

6 மாதங்கள் பதவி வகித்தார் தாட்சர்.

ஆச்சரியமாக இல்லை ….?

இந்தியாவின் உச்சத்தில் இருந்த அரசியல்வாதிகள் பலர்

இவருக்கு அடிமையானதன் பின்னணி சந்திராசாமியின்

இந்த சாமர்த்தியம் தான்.

இப்பேற்பட்ட அசகாய சூரர்களான சாமிகள் இருவரும்

மே-21 ந்தேதி ராஜீவ் காந்தியின் மரணம் நிகழ்ந்த அன்று சென்னையில் இருந்தார்கள் என்பது ஒரு செய்தி.

இந்த செய்தியை உறுதி செய்பவர் யார் ….?

ஜெயின் கமிஷன் முன்பாக திரு.சுப்ரமணியன் சுவாமியிடம் இது குறித்த கேள்வி கேட்கப்பட்டபோது -

அவரது “ரீ-ஆக்-ஷன் என்ன ….?

(தொடர்கிறது -பகுதி-3-ல்)

நன்றி http://vimarisanam.wordpress.com/

நரசிம்மராவ் காலத்தில் அழிக்கப்பட்ட தகவல்கள்…. (சாமிகளின் சாகசங்கள் – பகுதி- 3 )

நரசிம்மராவ் பிரதம மந்திரியாக இருந்தபோது 

ராஜீவ் கொலை விசாரணை

சம்பந்தப்பட்ட மிக முக்கியமான சில கோப்புகள் காணாமல் போயின.

அதெப்படி எப்படி பிரதமரின் அலுவலகத்தில் இருந்த கோப்புகள்,

அதுவும், நாட்டையே உலுக்கிய ராஜீவ் கொலை வழக்கு சம்பந்தமான

பைல்கள் காணாமல் போகும்..?

அவை அழிக்கப்பட்டன அல்லது வேண்டுமென்றே

ஒழி(ளி…? )க்கப்பட்டன என்பது தானே உண்மையாக இருக்க முடியும் …?

யார் கொடுத்த செய்தி இது …?

எப்படி இதை நம்புவது …?

அப்படிக் காணாமல் போன கோப்புகளின் பட்டியலை ஆதாரங்களுடன்

அப்போதைய ‘அவுட் லுக்’ ஆங்கில ஏடு (24.11.1999 இதழ்) பட்டியலிட்டுக்

காட்டி இருக்கிறது. 

‘அவுட் லுக்’ தந்த விவரங்கள் கீழே -

———————–

outlook-logo.jpg?w=640

File containing intercepted messages from foreign intelligence agencies, said to be

addressed to Chandraswami and Janata Party president Subramanian Swamy,

destroyed by senior officials in the PMO.

File on IB’s assessment of the role played by Zail Singh and Chandraswami in 1987

to topple Rajiv Gandhi missing.

File with records of official briefings by intelligence agencies on the assassination to

Rao’s home minister S.B. Chavan missing. The former minister confirms he was

briefed orally.

File No. 8-1-WR/JSS/90/Vol.III—containing notings of bureaucrats regarding security

arrangements for Rajiv Gandhi from November ’89—was lost from the PMO in ’91.

Later, it was doctored and reconstructed by the Narasimha Rao government before

it was submitted to the Jain Commission.

File No. 1/12014/5/91-IAS/DIII reported missing since 1995. It pertained to the

terms of reference of the Verma and Jain commissions of inquiry.

The April 20, 1991, wireless intercept with the leading question—should Rajiv be

killed in Delhi or Madras?—missing.

———————-

1989 நவம்பரிலிருந்து ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி

அதிகாரிகள் எழுதிய குறிப்புகளைக் கொண்ட கோப்பு (8-1-WR/JSS/90/volIII)

பிரதமர் அலுவலகத்திலிருந்து 1991 ஆம் ஆண்டே காணாமல் போய் விட்டது.

ஜெயின் ஆணையம் இந்தக் கோப்பை கேட்டபோது இந்த கோப்பு

கிடைக்கவில்லை…… பிறகு, இருக்கும் தகவல்களை வைத்து,

ஒட்டு வேலைகள் செய்து புதிதாக ஒரு கோப்பை தயாரித்து, ஆணையத்தின் முன் சமர்ப்பித்தார்கள்.

இந்தக் கோப்புகளை எழுதிய அதிகாரிகளில் ஒருவர் வினோத் பாண்டே.

இவர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது அமைச்சரவை செயலாளராக

இருந்தவர். ஜெயின் ஆணையத்தின் முன் சாட்சியமளித்த அந்த அதிகாரி,

கோப்புகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, இந்தக் கோப்புகளில் தான் எழுதிய

குறிப்புகள் இடம் பெறவில்லை; இவை திருத்தப் பட்டவை என்றார்.

அப்போது உள்துறையில் துணை அமைச்சராக இருந்தவர்,

திரு. ப. சிதம்பரம் அவர்கள்…. !!

கோப்புகள் திருத்தி, ஒட்டி, போலியாக தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து ஜெயின் ஆணையம் உள்துறை அமைச்சகத்தை அழைத்துக் கேட்டது. திரு.ப.சிதம்பரம் கூண்டில் ஏறி, ‘ஆம், ஒரிஜினல் கோப்புகளை எவ்வளவு தேடியும் கிடைக்காததால், இருக்கின்ற தகவல்களை

வைத்துக்கொண்டு கோப்புகளை புதிதாக தயாரித்தது உண்மைதான்’ என்று ஒப்புக் கொண்டார்.

அதே போல், சந்திரசாமி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி

ஆகியோருடன் வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் தொடர்பு கொண்டு

பேசியபோது, உளவுத்துறையால் இடைமறித்துக் கேட்கப்பட்ட

உரையாடல்களைப் பதிவு செய்த கோப்பை பிரதமர் அலுவலகத்தைச்

சேர்ந்த மூத்த அதிகாரிகளே அழித்து விட்டனர்.

இந்த தகவல், ஆதார அழிப்புகளுக்கு – என்ன காரணம் …..?

சந்திராசாமி வெறும் ஜோசியம் கூறும் சாமியார் மட்டுமல்ல…

தாந்த்ரீக வேலைகளுடன் அவர் நின்று விடவில்லை….

அவருடைய தொடர்புகள் வெறும் அரசியல்வாதிகளோடும்

நின்று விடவில்லை.

அகில உலக அளவில், நேரிடையாகவும், கள்ளத்தனமாகவும் கூட

ஆயுத பேர, வியாபாரங்களில் ஈடுபட்ட மிகப்பெரிய புள்ளிகளான

அட்னன் கஷொகி (Adnan Khashoggi) மற்றும் என்ரி மில்லர் (Ernie Miller)

ஆகியோருடன் வியாபாரத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு -

கள்ள ஆயுத பேரங்களில் ஈடுபட்டிருந்தார். ( இந்த விஷயம்

பிற்பாடு நிரூபிக்கப்பட்டு, அவருக்கு எட்டு கோடி ரூபாய் அபராதம்

விதிக்கப்பட ஒரு காரணமாகவும் இருந்தது. )

அப்போதைய பிரதமரான நரசிம்ம ராவுக்கு இவர் குரு.

பல முக்கியமான விஷயங்களில் நம்பிக்கையான ஆலோசகர்…!

இருவருக்கும் 25 ஆண்டுக்கால நெருங்கிய பழக்கம்.

சந்திராசாமியின் வியாபாரங்களில் சுப்ரமணியன் சுவாமிக்கு

என்ன பங்கு, எந்த அளவிற்கு தொடர்பு – என்பது நமக்குத் தெரியாது.

ஆனால் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பது

அனைவருக்கும் தெரிந்த உண்மை.

1998 ஆம் ஆண்டு ராஜிவ் சர்மா என்பவர் ராஜீவ் காந்தி கொலையைப்

பற்றி ‘Beyond the Tigers’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

இந்த புத்தகத்திற்கு ராஜீவ் கொலை நடந்தபோது மத்திய புலனாய்வுத்

துறையின் இயக்குனராக இருந்த விஜய்கரன் என்ற அதிகாரியே முன்னுரை எழுதியிருப்பதைப் பார்க்கும்போது, இதில் கூறப்படும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது..

அவர் தனது முன்னுரையில், இந்த புத்தகம் ஒரு போலீஸ் டைரியைப் போல்

இருப்பதாக குறிப்பிடுகிறார்.

போலீஸ் டைரியைப்போல் என்பதைவிட, போலீஸ் டைரியிலிருந்தே

பல செய்திகள் அப்படியே பிரதி எடுக்கப்பட்டுள்ளது போல் இருக்கிறது

என்று இந்த புத்தகத்தைப் பற்றிய விமரிசனங்கள் கூறுகின்றன.

எனவே, புலனாய்வுத் துறையில் ஈடுபட்டிருந்த ஒரு அதிகாரியே

இந்த புத்தகத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு கொண்டிருப்பார் என்றும் தோன்றுகிறது. இந்த புத்தகத்திற்கு பின் இணைப்புகளாக தரப்பட்டுள்ள ஆவணங்கள் புலனாய்வுத் துறை தொடர்புள்ளவையாகவே இருக்கின்றன….

இந்தப் புத்தகத்தின் முக்கிய கருத்து எப்படிப் போகிறது ……?

ராஜீவ் காந்தியை கொலை செய்தது விடுதலைப் புலிகள்தான் என்று

இந்த புத்தகம் கூறுகிறது. ஆனால், அந்தக் கொலைக்குப் பின்னால்,

சில சர்வதேச சக்திகள் இருந்தன. அந்த சர்வதேச சக்திகளுக்காக

விடுதலைப் புலிகள் இந்தக் கொலையை செய்து முடித்துவிட்டு,

அதற்கு பிரதிபலன்களாக சக்தி வாய்ந்த கப்பல்களையும் ஆயுதங்களையும்

பெற்றுக் கொண்டார்கள். ராஜிவ் காந்தி கொலைக்குப் பிறகுதான் புலிகளுக்கு

கப்பல்களில் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் வரத் தொடங்கின.

எனவே, இதனைச் செய்து முடித்தால், பெரிய அளவிலான ஆயுத சப்ளைகள் செய்வதாகக்கூறி சில வெளிசக்திகள் விடுதலைப் புலிகளை இதில் செயல்பட வைத்திருக்கின்றன என்பதே இந்த புத்தகத்தின் மையக்கருத்து…!!

அந்த சர்வதேச சக்திகள் எவை …..?

சந்திராசாமிக்கு அதில் என்ன பங்கு ….?

ராஜீவ் காந்தி கொலை நிகழ்ந்த சமயத்தில், மத்தியில் பிரதமராக

ஆட்சி புரிந்தவர் சந்திரசேகர். அவரது அரசில், சட்ட அமைச்சராக

இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தவர் திரு.சுப்ரமணியன்சுவாமி.

கொலை நிகழ்ந்த நாளில், திருவாளர்கள் சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி

இருவரும் சென்னையில் தான் இருந்தார்கள் என்று ஜெயின் கமிஷன்

முன்பாக சாட்சியம் கூறப்படுகிறது…

ஆனால், இந்த விஷயங்களை மறைக்க முயற்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

(இந்த விவரங்கள் பின்னால் வருகின்றன…)

” File containing intercepted messages from foreign intelligence agencies,

said to be addressed to Chandraswami and Janata Party president Subramanian

Swamy, destroyed by senior officials in the PMO. “

எனவே, நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, ராஜீவ் காந்தி

கொலை வழக்கில் சந்திராசாமி மற்றும் சுப்ரமணியன் சுவாமி

சம்பந்தப்பட்ட தகவல்கள் அழிக்கப்பட்டன என்று ‘அவுட் லுக்’

இதழ் ஆதாரங்களுடன் கூறுவது எங்கே கொண்டு போய் விடுகிறது …..?

இது விஷயத்தில் தீவிரமாகத் தோண்ட ஆரம்பித்த ஜெயின் கமிஷனை

முடக்குவதற்கான அனைத்து வேலைகளிலும் ராவ் அரசு இறங்கியது….

முதலில், நரசிம்ம ராவ் ஆசியுடன் முஷ்டாக் அஹ்மத் என்கிற

அட்ரஸ் இல்லாத வக்கீல் ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில்,

ஜெயின் கமிஷனைக் கலைக்க வேண்டும் என்று ஒரு பெட்டிஷன்

போட்டார். இது கோர்ட்டால் நிராகரிக்கப்பட்டவுடன் -

மத்திய அரசு வெளிப்படையாக சுப்ரீம் கோர்ட்டில் இதே விஷயத்திற்காக,

ஒரு special leave petition (SLP) தாக்கல் செய்தது…..

 

(தொடருகிறது – பகுதி-4-ல் )

நன்றி http://vimarisanam.wordpress.com/

ராஜீவ் காந்தி – டிஜிபி மோகன்தாஸ் கூறிய “அசல்” கதை…. (சாமிகளின் சாகசங்கள் – பகுதி-4 )

ராஜீவ் கொலை தொடர்பாக மூன்று விசாரணைக் குழுக்கள் அமைந்தன. 

ஒன்று – திரு.டி.கார்த்திகேயன் அவர்கள் தலைமையிலான சிபிஐ

சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை.

இரண்டாவது – ராஜீவ் மரணமடைந்த 7 நாட்களில் ராஜீவுக்கு வழங்கப்பட்ட

பாதுகாப்புகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்ததா என்பதைக் கண்டறிய உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில், 1991 ஆம் ஆண்டு

மே 27 ம் தேதி அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம். ஓராண்டு

காலத்தில் இந்த விசாரணை ஆணையம் தனது பணியை முடித்து

1992 ஜூன் மாதம் அரசிடம் பரிந்துரையை தாக்கல் செய்தது.

இந்த ஆணையம் நியமிக்கப்பட்டபோது பிரதமராக இருந்தவர் சந்திரசேகர். சட்ட அமைச்சராக இருந்து இதற்கான நடவடிக்கைகளை எடுத்தவர் திரு.சுப்ரமணியன் சுவாமி. ஆனால் இந்த கமிஷன் தனது அறிக்கையை தாக்கல் செய்த போது பிரதமராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த திரு.நரசிம்மராவ்.

ஆனால் நரசிம்ம ராவ் காலத்திலும், சுப்ரமணியன் சுவாமி

அமைச்சராக இல்லையே தவிர, சில செல்வாக்கான கமிட்டிகளில் பதவியில் இருந்தார்.

3வது – ராஜீவ் கொலைக்குப் பின்னால் நடந்த சதி, பின்னணி காரணங்கள்

தொடர்புள்ள தனி நபர்கள், நிறுவனங்கள் பற்றிய விசாரணைகளை

நடத்த அமைக்கப்பெற்ற நீதிபதி ஜெயின் தலைமையிலான ஜெயின் கமிஷன்.

12 முறை கால நீட்டிப்புப் பெற்று 6 ஆண்டுகாலம் விசாரணை நடத்திய இந்த ஆணையம், நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசின் மனப்பூர்வமான ஒத்துழைப்பு கிடைக்காத

நிலையில் கடைசியில் ரெண்டுங்கெட்டான் அறிக்கை

ஒன்றை மட்டும் சமர்ப்பித்து விட்டு ஒதுங்கிக் கொண்டது.

இதற்குப் பின்னரும் ஒரு கமிட்டி – மல்டி டிஸிப்ளின் மானிடரிங்க் ஏஜென்சி ( Multi-Disciplinary Monitoring Agency (MDMA) என்ற பெயரில் டிசம்பர்,2, 1998-ல் அமைக்கப்பட்டு, அது தனது வேலையைஇன்ன்ன்ன்ன்ன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

புலிகளின் ஆயுதக் கொள்முதல் விஷயத்தை மொத்த பொறுப்பேற்று

செய்துவந்ததாக சொல்லப்படும் ‘கே.பி.’ என்கிற குமரன் செல்வராஜா என்கிற  செல்வராசா பத்மநாதன் ஏற்கெனவே, இலங்கை போலீசாரால் வெளிநாடு ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, விசாரிக்கப்பட்டு, அவரிடமிருந்து தேவையான அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்ட பின்னர் – இலங்கையிலேயே ஓரளவு சுதந்திரமாக  நடமாட விடப்பட்டுள்ளார். தற்போது அவர் ராஜபக்சே அரசின் ஆதரவிலும், பாதுகாப்பிலும் தான் இருக்கிறார்.

இதே ஆசாமியைக் கைது செய்ய முன்னர் இண்டர்போல் உதவிய நாடிய

இந்திய புலனாய்வு நிறுவனம், உலகின் 23 நாடுகளுக்கு கைது வேண்டுகோள் விடுத்த புலனாய்வு நிறுவனம் – இன்று இவரைப் பிடித்து விசாரிக்க எந்த அக்கரையும் காட்டுவதாகத் தெரியவில்லை …..

அது ஏன் என்பது அந்த “சாமி”க்கே வெளிச்சம்…..!!!

ராஜீவ் காந்தி கொலைச் சம்பவம் நிகழ்ந்ததும், அதனை விசாரிக்க

சிபிஐ யின் சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்று அமைக்கப் பட்டது.

இதனைத் தலைமை தாங்கி இயக்க தகுந்த போலீஸ் அதிகாரிகள்

3 பேர் அடங்கிய ஒரு பட்டியலைத் தருமாறு, பிரதமர் சந்திரசேகர்

தமிழக அரசைக் கேட்டுக் கொண்டார். தமிழகமும் தந்தது.

அதில் முதலாவது நபராக இருந்தவர் முன்னாள் தமிழக டிஜிபியும்,

புலிகளைப் பற்றி நன்கு அறிந்தவருமான மோகன் தாஸ்.

சந்திரசேகர் இந்தப் பட்டியலை திருமதி சோனியா காந்தியிடம்

காட்டி, அவரது விருப்பத்தைக் கேட்டிருக்கிறார். “அன்னை” இந்த

மூன்று பேர் அடங்கிய பட்டியலை ஒரு பக்கம் ஒதுக்கி விட்டு,

அவராகவே ஒரு பெயரைச் சொல்லி இருக்கிறார் -

அவர் – கர்னாடகா ஐபிஎஸ் கேடரைச் சேர்ந்த திரு.டி.ஆர்.கார்த்திகேயன்.

பின்னர், அவரது தலைமையில் தான் சிபிஐ யின் சிறப்பு புலனாய்வுக் குழு

அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

தமிழகத்தில் எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில் அவருக்கு

மிகவும் பிடித்தமானவராகவும், டிஜிபி யாகவும் செயல்பட்டவர்

திரு. மோகன் தாஸ். எம்ஜியாருக்கும் -பிரபாகரனுக்கும் இருந்த

தொடர்புகள் அனைத்தும் இவர் மூலமாகவே நிகழ்ந்தன.

k-mohandas.jpg?w=640

ராஜீவ் கொலைச் சம்பவம் நடந்து சில காலங்களுக்குப் பிறகு,

பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த மோகன் தாஸ் ” the assasination “

என்கிற பெயரில் ஒரு புத்தகம் எழுதினார். புலனாய்வுத் துறைகளின்

மூலம் அவருக்குக் கிடைத்த தகவல்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி,

ராஜீவ் காந்தியின் கொலை பற்றிய பின்னணியை அவர் ஒரு

கற்பனைக் கதை போல் அதில் தந்தார். சட்டச்சிக்கல் எதுவும் வந்துவிடக்

கூடாது என்பதால் சம்பவத்தில் இடம் பெற்றிருந்த அத்தனை

பாத்திரங்களுக்கும் புனைப்பெயர் கொடுத்திருந்தார்.

(இந்த புத்தகம் வெளியில் கிடைக்காதவாறு பிறகு, மத்திய அரசு

பார்த்துக்கொண்டது …!!)

கீழ்க்கண்ட புனைப்பெயர்களைத் தொடர்பு படுத்தி கதையை படிக்க

வேண்டும்.

ராஜீவ் – ஜார்வின்

இந்தியா – டயானோ

வி.பி.சிங் – வப்சப்

அருண் நேரு – நேரோ

செய்தியாளர் சித்ரா சுப்ரமணியன் – டிச்ரா

சந்திரசேகர் – பேர்ட்ஸ்லே

சந்திரா சாமி – பாதர் மூன்ஷைன்

பிரபாகரன் – சுந்டன்

சிவராசன் – சைலோப்ஸ்

டிஜிபி மோகன்தாஸ் எழுதிய கதையில் -

ராஜீவ் கொலை வழக்கில் நிகழ்த்தப்பட்ட விசாரணைகளை

மறைமுகமாகக் குறை சொல்கிறார் மோகன் தாஸ்.

——————–

டயானோ நாட்டின் பிரதமராக இருந்த ஜார்வின்,

அவரது அமைச்சரவையிலேயே பாதுகாப்பு அமைச்சராக இருந்த

வப்சப் என்பவரால் ஆயுதங்கள் வாங்கிய விவகாரத்தில்

லஞ்சம் வாங்கியதாக காட்டிக் கொடுக்கப்படுகிறார்.

இந்த ஆயுத பேரங்களை நிகழ்த்தியவர் ஜார்வின் அமைச்சரவையில்

இருந்த இன்னொரு அதிகாரம் மிக்க அமைச்சரான நேரோ….!!!

இந்த ஊழல், ஜெனீவாவில் ஒரு செய்தித்தொடர்பாளராகப்

பணிபுரியும் டிச்ரா என்பவரால் பகிரங்கப்படுத்தப்படுகிறது.

ஜார்வினின் அரசு கவிழ்கிறது. நாட்டில் தேர்தல்கள் நடக்கின்றன.

இப்போது வப்சப், பிரதமர் ஆகிறார்.

ஆனால், வப்சப் ஆட்சியில் தொடர முடியாதவாறு,

ஜார்வினும் -பேர்ட்ஸ்லே யும்

கூட்டு சேர்ந்து கவிழ்க்கிறார்கள்.

உலக அளவில் ஆயுத பேர தொடர்புகளை உடையவரும்,

ஆட்சிகளை மாற்றுவதிலும், கவிழ்ப்பதில் கைதேர்ந்தவருமான

பாதர் மூன்ஷைன் களத்தில் இறங்குகிறார். சுந்டனுக்கு,

அவரது போரட்டத்திற்குத் தேவையான ஆயுதங்களைத் தருவதாகச்

சொல்லி, ஜார்வினை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டுகிறார்.

சைலோப்ஸ் மூலமாக ஜார்வினை தீர்த்துக் கட்டும் திட்டம்

நிறைவேறுகிறது.

—————————————-

திருமதி மரகதம் சந்திரசேகர் போட்டியிட்ட தொகுதியில் ராஜீவ் காந்தி

தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தபோது

தான் துயர சம்பவம் நிகழ்கிறது.

இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய சில விஷயங்கள் இன்னும் சரியாக

வெளிப்படுத்தப்படாமலே இருக்கின்றன -

திருமதி மரகதம் சந்திரசேகரின் மகன் லலித் என்பவருக்கு ஐந்து லட்சம்

ரூபாய் கொடுக்கப்பட்டதாக சிவராசனின் டைரியில் ஒரு குறிப்பு

காணப்படுகிறது. இந்த லலித் என்பவர் இலங்கையைச் சேர்ந்த ஒரு

பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். அந்த இலங்கைப் பெண்ணின்

தொடர்பை வைத்துக் கொண்டு, தனு திருமதி மரகதம் சந்திரசேகரின்

வீட்டிற்கும் விஜயம் செய்திருக்கிறார்.

ராஜீவ் காந்தி – திருமதி மரகதத்தின் தொகுதியில் பிரச்சாரம் செய்யும்

நிகழ்ச்சி முழுவதையும் வீடியோவில் ஒளிப்பதிவு செய்து கொடுக்க

ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள

விஜயா வீடியோ சென்டரை சேர்ந்தவர், கூட்டமேடையில் நின்றபடி

அந்த நிகழ்ச்சியை பதிவு செய்தார். ராஜீவ்காந்தியின் கொடுமையான

கடைசி நிமிடங்கள் அந்த வீடியோவில் நிச்சயம் பதிவாகியிருக்கும்.

அவ்வாறு எடுக்கப்பட்ட வீடியோ கேசட்டை பிற்பாடு எஸ்.ஐ.டி

கைப்பற்றி இருக்கிறது.

இந்த கேசட்டை எஸ்.ஐ.டி. யிடமிருந்து, அப்போதைய உளவுத்துறை

தலைவராக இருந்த எம்.கே.நாராயணன், ‘மேல் விசாரணைக்காக” என்று  சொல்லி வாங்கிக் கொண்டிருக்கிறார். அதன் பின்னர்

அந்த வீடியோ கேசட் கடைசி வரையில் நாராயணனிடமிருந்து

திரும்ப வரவில்லை. விசாரணை ஆவணங்களில் அது குறித்த

தகவல்கள் எதுவும் சேர்க்கப்படவும் இல்லை.

அந்த வீடியோ கேசட் என்ன ஆயிற்று…? அதில் அப்படி என்ன இருந்தது …? என்று பலரும் இன்று வரை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

ராஜீவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த பலவீனம்

குறித்து ஆராய அமைக்கப்பட்ட வர்மா கமிஷனும் அந்த வீடியோ

கேசட்டை கேட்டது.

இதே காரணத்திற்காக அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன்,

பல் நோக்கு விசாரணை கமிஷன் ஆகியவையும்

அந்த சேட்டை கேட்டன.

ஆனால் எம்.கே.நாராயணனிடமிருந்து இன்று வரை

சரியான பதில் இல்லை…..!!!

அந்த நாராயணனை உரிய முறையில் ( ? ) கேள்வி கேட்க

ஆளும் யாரும் இல்லை….!!!

இது குறித்த சில தகவல்கள் திரு.ரகோத்தமனின் குறிப்புகளிலும்

இடம் பெற்றன.

நரசிம்மராவ் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு -

நாராயணனின் நடவடிக்கைகளில் பெரிதும் அதிருப்தி கொண்டு,

1992-ல்,அவரை பொறுப்பிலிருந்து விடுவித்ததோடு அல்லாமல் -

அவர்மீது முதல் தகவல் அறிக்கையும் ( FIR 1 of 1995 ) பதியச்செய்து,

விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

mkn.jpg?w=640ஆனால் – “அன்னை”யின் அருளைப் பெற்ற நாராயணனைநரசிம்மரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வெளிச்சத்தைப் பார்க்காமலே FIR 1 of 1995 முடிவைச் சந்தித்தது.

வேடிக்கை என்று சொல்வதோ -வயிற்றெரிச்சல் என்று சொல்வதோ

தெரியவில்லை.. நரசிம்ம ராவ் காலத்திற்குப் பிறகு மீண்டும்

“அன்னையின் அருளை” பெற்ற நாராயணன்,

தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் -

அதன் பிறகு மேற்கு வங்க ஆளுநராகவும் கூட உயர்கதி (!) அடைந்தார்….!!!

(தொடர்ச்சி – பகுதி-5- ல் )

நன்றி http://vimarisanam.wordpress.com/

ஜெயின் கமிஷன் முன்பு – சுப்ரமணியன் சுவாமி வாக்குமூலம் – (சாமிகளின் சாகசங்கள் – பகுதி-5 )

ராஜீவ காந்தி கொலை வழக்குக்கும், சுப்ரமணியன் சுவாமி மற்றும்

சந்திரா சாமிகளுக்கு என்ன சம்பந்தம் …?

பின்னால் ஒளிந்துள்ள சம்பந்தங்கள் என்னவோ ? அவை குறித்து

நம்மிடையே தகவல்கள் இல்லை.

ஆனால், கண்ணெதிரே தோன்றும் ஒரு காட்சி அவர்களை இந்த

சம்பவத்துடன் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புடையதாக

கருதச் செய்கிறது – ஆனால் எந்த விதத்தில் என்பது தெரியவில்லை….!!!

திரு.சுப்ரமணியன் சுவாமி, (அப்போது அவர் மத்திய சட்ட அமைச்சராக

பதவி வகித்து வந்தார் ) சம்பவம் நடந்த மே 21-ந்தேதியன்று

சென்னை ‘ட்ரைடண்ட்’ ஹோட்டலில் தங்கி இருந்ததாகவும்,

அவரது நண்பரான சாமியார் சந்திராசாமி, அப்போலோ ஹாஸ்பிடல்ஸ்

குழுவினரின் ஹோட்டலான ‘சிந்தூரி’ யில் தங்கி இருந்ததாகவும்

ஜெயின் கமிஷன் முன்பாக சாட்சி கூறப்பட்டிருக்கிறது.

சம்பவம் நிகழ்ந்த இரவன்று இருவரும், கார் மூலம் -சென்னையிலிருந்து -ஸ்ரீபெரும்புதூர் வழியாக – பெங்களூர் சென்று மறுநாள் காலையில்

பெங்களூரிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் சென்றதாகவும் ஜெயின் கமிஷன் முன்பாக சாட்சியம் கூறப்பட்டுள்ளது.

இது யார் கூறிய சாட்சியம் …..?

திரு.சுப்ரமணியன் சுவாமி அவர்களின் ஜனதா கட்சியின் அப்போதைய

தமிழ்நாடு பிரிவின் தலைவராக இருந்த திரு.ஆர்.வேலுசாமி அவர்கள்

தான் இந்த தகவலை ஜெயின் கமிஷன் முன்பாகக் கூறியுள்ளார்.

அதற்கு திரு.சுப்ரமணியன் சுவாமியின் ரீ-ஆக்-ஷன் என்ன ….?

வேலுசாமியின் வார்த்தைகளில் -

“இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் சுப்பிரமணியன் சுவாமியிடமிருந்து

பதிலே இல்லை. அவரது சட்டையெல்லாம் நனைந்து,

வேர்வை கொட்டியது. அமைதி என்றால்

அப்படி ஒரு அமைதி அங்கே.

நீதிபதி ஜெயின் சுவாமியையே உற்று பார்த்தபடி கோர்ட் கலைகிறது

என்றுகூட சொல்லாமல் எழுந்து போய்விட்டார்.”

பின்னர், ஜெயின் கமிஷன், ‘சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை விசாரிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை’ – என்று தனது ரிப்போர்ட்டில் எழுதி தன் பொறுப்பை முடித்துவிட்டது.

இந்த விவரங்களை திரு.வேலுசாமி அவர்களின் வாய் மூலம் கேட்பது

இன்னும் தெளிவாக இருக்கும். வேலுசாமி ஒரு தொலைக்காட்சிக்கு

அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள் இவை -

———————

என்ன நோக்கத்திற்காக ஜெயின் கமிஷன் சென்றீர்கள்?

1991- மே 21ம் தேதி இரவு ராஜீவ் படுகொலை நடக்கிறது. அன்று இரவு

பத்து மணிக்கு நான் டெல்லியில் இருந்த சுப்ரமணியன் சுவாமியை

தொடர்பு கொண்டேன். அப்போது நான் ஜனதா கட்சியில் இருந்தேன்.

தேர்தல் பிரசார உச்சகட்ட நேரம். அடுத்த நாள் மதுரையில் நடக்க

இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரவேண்டியிருந்தது.

அது பற்றி பேசுவதற்காக இரவு 10.25 மணிக்கு தொடர்பு கொண்டேன்.

எடுத்த எடுப்பிலேயே ‘‘என்ன ராஜீவ்காந்தி செத்துட்டாரு. அதைத்தானே

சொல்ல வரே… தெரியுமே.. என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது தகவல் தொடர்பு வசதி

ஏதும் இல்லை. பதட்டமடைந்த நான், திருச்சியில் உள்ள உளவுத்துறை

அதிகாரிகளிடம் தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்டேன்.

‘அப்படி ஏதும் தெரியவில்லையே’ என்றார்கள். அந்த நேரத்திற்கெல்லாம்

ராஜீவ்காந்தி இறந்தாரா இல்லையா என்பதையே உறுதிப்படுத்த

முடியவில்லை.

இரவு 10.10 க்கு குண்டு வெடிக்கிறது. பெரும் புகை மூட்டம்.

கூச்சல்.. குழப்பம்.. கொஞ்ச நேரம் கழித்து ஜெயந்தி நடராஜன்தான்

தனியே கிடந்த ராஜீவ் காலை பார்க்கிறார். மூப்பனாரிடம் சொல்லி

கத்துகிறார். அவர் வந்து மற்ற சடலங்களுக்கு இடையே தேடுகிறார்.

கடைசியில் ராஜீவின் எல்லா பாகத்தையும் பார்த்து உறுதிப்படுத்தவே

அரை மணி நேரம் ஆனது என்று அடுத்த நாள் மாலை நாளேட்டிற்கு

பேட்டி கொடுத்தார். ஆக 10.40 மணிக்குதான் படுகொலையான தகவலை

உறுதிப்படுத்த முடிந்தது.

அப்படியிருக்கும்போது சுப்ரமணிய சுவாமிக்கு மட்டும் எப்படி

முன்பாகவே தெரியும்? யார் சொன்னார்கள்? முதன்முதலாக அவர்தான்

மீடியாவிற்கு ‘விடுதலைப்புலிகள்தான் இந்த படுகொலையை செய்தார்கள்’ என்று செய்தி தருகிறார். அடுத்த நாள்தான் விசாரணையே தொடங்குகிறது.

திடீரென்று புலிகள் மீது ஏன் பழி போட வேண்டும்? இதெல்லாம்

என்னை சந்தேகிக்க வைத்தது. அது மட்டுமின்றி அந்த படுகொலை

சம்பவத்திற்கு முன்னும் பின்னுமாக பார்த்தால் சுவாமியின்

நடவடிக்கைகளில் பல சந்தேகம். மர்மம். அதிர்ச்சி. இதுவெல்லாமும்தான்

என்னை ஜெயின் கமிஷனுக்கு போக வைத்தது.’’

சுப்பிரமணியன் சுவாமி மேல் சந்தேகித்து மனு கொடுத்ததை ஏற்றுக்

கொண்டார்களா? அந்த அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்..

நான் எதிர்த்து நிற்பது சாதாரண ஆட்களை அல்ல என்பது எனக்கு

நன்றாகத் தெரியும். இருந்தாலும், துணிந்து ஜெயின் கமிஷன் முன்பு

நின்றேன். எனது மனுவை வாங்கிப் பார்த்த கமிஷனின் செகரட்டரி

மனோகர் லால் என்னை மேலும் கீழுமாக பார்த்தார். படித்துவிட்டு

நிமிர்ந்தவர் முகத்தில் கடுகடுப்பு. ‘சுப்ரமணியன் சுவாமி மீதா குற்றம்

சொல்கீறீர்கள். சந்தேகிக்கிறீர்கள்?’ என்றார். ‘ஆமாம்’ என்றேன்.

அந்த மனுவை அப்படியே டேபிள்மீது போட்டுவிட்டு, ‘நாளை வாருங்கள்..

பார்க்கலாம்’ என்றார். என்னுடைய மனுவை ஏற்கமாட்டர்கள்

என்று எனக்கு சந்தேகம்.

பெரிய மன உளைச்சல். என்னுடைய பாதுகாப்புக் காரணம் கருதி,

சாதாரணமான ஓட்டல்களில்.. வேறு பெயரில் தங்கினேன்.

அந்த நேரத்தில்தான் மூத்த காங்கிரஸ் எம்.பியான ரஜினி ரஞ்சன் சாகு

என்னை சந்திப்பதற்காக தேடி அலைந்திருக்கிறார். இவர் சோனியாவின்

குடும்பத்திற்கு நெருக்கமானவர். இது பற்றி எனது தஞ்சை நண்பர் என்னிடம்

சொன்னார்.

நானே ரஜினி ரஞ்சன் வீட்டிற்கு நேராக சென்றேன்.

‘உங்களை சந்திக்க வேண்டும் என்று சோனியாஜி வீட்டில் தேடுகிறார்கள்’

என்றார். பிறகு, அங்கிருந்து ரஜினி ரஞ்சனுடன் சோனியாவின் வீட்டிற்கு

சென்றேன். ‘மேடம் இல்லை’ என்று என் பெயரைச் சொன்னதும்

பதட்டமாய் சொன்னார்கள். ஏமாற்றத்தோடு அடுத்த நாள் காலையில்

வருவதாக சொல்லி திரும்பிவிட்டேன்.’’

அதன் பிறகு சோனியா காந்தியை சந்தித்தீர்களா?

இதுவரை எந்த ஊடகத்திற்கும் சொல்லாத செய்தியை உங்களிடம்

கூறுகிறேன். அடுத்த நாள் நான் சோனியாவை சந்தித்தேன்.

அந்த வீடே ஒருவித நிசப்தமாக இருந்தது. இப்போதும் அங்கே இருக்கும்

மாதவன், பிள்ளை என்ற சோனியாவின் உதவியாளர்கள் என்னை உள்ளே

அழைத்துச் சென்றார்கள். ஜெயின் கமிஷனில் நான் அபிடவிட் தாக்கல்

செய்யப் போவதைப்பற்றி கேட்டார்கள். படுகொலைக்கான சந்தேகம்

யார் மீது? அதற்கான பின்னணி? வேறு பல சந்தேகம்?

என்று ஒவ்வொன்றையும் கேட்டார்கள். மாதவனும், பிள்ளையும்தான்

நான் பேசியதை சோனியாவிற்கு மொழி பெயர்த்தார்கள். நான் பேசப் பேச

பென்சிலால் குறிப்பெடுத்துக்கொண்டே இருந்தார். டேபிளில் இருந்த டேப்

ரிக்கார்டரும் பதிவாகிக் கொண்டிருந்தது.

மூன்று மணி நேர சந்திப்புக்குப் பின், ‘இதில் உங்களுக்கு என்ன ஆர்வம்?

கட்சியிடம் இருந்து ஏதாவது எதிர்பார்க்கிறீர்களா? எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல் இதை நீங்கள் ஏன் செய்ய வேண்டும்?’ என்றெல்லாம் கேட்டார். ‘எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. உண்மை வெளிவந்தால் போதும்.’ என்பதை விளக்கினேன்.

அதோடு சரி. அதன் பிறகு நான் அவரை சந்திக்கவே இல்லை.

இருபது ஆண்டுகள் ஓடிவிட்டது. அவர்களிடம் உதவி வேண்டிதான்

அல்லது ஏதாவது பதவியை வேண்டிதான் நான் இந்த காரியத்தை

செய்தேன் என்று தவறாக நினைத்துவிடக்கூடாது. அந்த ஒரே

காரணத்திற்காக தொலைபேசியில்கூட பேசாமல் விட்டுவிட்டேன்.’’

சோனியாவிடம் என்ன பேசினீர்கள் என்பதை சொல்லவில்லையே?

அதன்பிறகு டெல்லியில் என்ன நடந்தது?

அதை எந்த காலத்திலும் சொல்ல மாட்டேன்.

அது நாகரீகமாக இருக்காது. ஆனால், அதன் பிறகு என்ன மாதிரியான

உதவி கிடைத்தது என்பதையும் சொல்ல வேண்டும். என்னுடைய மனுவை

விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்ற குழப்பம்

வந்த நாளில் திடீரென்று பார்த்தால் அந்த பகுதியே பெரும் பரபரப்பானது.

அதிரடிப்படை போலீசாரின் பதட்டம். கருப்பு பூனை பாதுகாப்பு வீரர்கள் சூழ

பிரியங்கா உள்ளே வந்துகொண்டிருந்தார். வந்தவர் அமைதியாக

உட்கார்ந்துகொண்டார். என் மனு மீதான விசாரணை வந்தது.

நான் என்னுடைய காரணங்களை சொன்னேன். ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதோடு சரி. பிரியங்கா என்னை பார்த்து சிரித்தபடியே கிளம்பிவிட்டார்.

எனக்கு செய்த ஒரே உதவி அதுதான்.

பிறகு, நான் சுப்ரமணியன் சுவாமியை குறுக்கு விசாரணை செய்த

மூன்று நாட்கள் பிரியங்கா காந்தி மீண்டும் நேரில் வந்திருந்தார்.

அந்த மூன்று நாட்களும் நடப்பவற்றை குறிப்பெடுத்து கொண்டிருந்தார்.

புறப்படும்போது என்னை பார்த்து சிரித்தபடியே போவார்.’’

சுப்ரமணியன் சுவாமியிடம் நடந்த அந்த குறுக்கு விசாரணை

எப்படி அமைந்தது?

ராஜீவ் படுகொலை உங்களுக்கு மட்டுமே எப்படி முன் கூட்டியே

தெரிந்தது.? கொலை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று

எதை வைத்து சொன்னீர்கள்? லண்டனில் இருந்து புலிகள் சார்பாக

அறிக்கை கொடுத்த கிட்டு ‘கொலைக்கு காரணம் புலிகள் இயக்கம்

இல்லை’ என்ற போது -

நீங்கள் விடுதலைப்புலிகள்தான் காரணம் என மீடியாவிற்கு செய்தி

கொடுக்கக் காரணம் என்ன? என்றெல்லாம் கேட்டேன்.

சுப்பிரமணியன்சாமியோ ‘எனக்கு இலங்கையில் இருந்து

தகவல் வந்தது.’ என்றார்.

சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை.

தமிழக காவல்துறை உறுதி யாக சொல்லவில்லை. மத்திய அரசும்

உறுதியாக தகவலை பெறவில்லை. அப்படியிருக்கும்போது

இலங்கைக்கு தெரிகிறதென்றால் யார் அந்த நபர்?‘ என்றேன்.

திருதிருவென முழித்தார். அதே போன்று ராஜீவ் படுகொலை நாளான

மே- 21 க்கு அடுத்த நாள் சுவாமிக்கு மதுரையில் ஒரு பொதுக்கூட்டம்

இருந்தது. மாலை நாளேடுகளில் பெரிய விளம்பரம் எல்லாம்

கொடுத்திருந்தார்கள்.

மதுரை பொதுக்கூட்டத்துக்கு நீங்கள் வருவதற்கு விமானத்திற்கு

முன்பதிவு செய்த டிக்கெட் எங்கே?’ என்று கேட்டதும் அவருக்கு

வியர்த்து கொட்ட தொடங்கியது. அது தேர்தல் காலம்.

விமான டிக்கெட் எல்லாமே முன்பதிவு செய்யப்பட்டிருக்கும்.

சுவாமி அப்படி ஒரு விமான டிக்கெட்டை பதிவு செய்யவே இல்லை.

காரணம், ராஜீவ் படுகொலை திட்டம் அவருக்கு தெரிந்திருக்கிறது.

அசம்பாவிதம் நடக்கப் போகிறது. எதற்கு போகவேண்டும்?

என நினைத்திருக்கிறார்.

அது மட்டுமல்ல. மே-21 -க்கு முன்பாக தமிழக பிரசாரத்தில்தான்

இருந்தார் சுவாமி. நான்தான் அவருக்கு மொழிபெயர்ப்பாளர்.

அப்போது அவருக்கு தமிழ் தெரியாது. படுகொலைக்கு முதல் நாள்

20 -ம் தேதி சேலத்தில் தங்கியிருந்தோம். ‘கட்சி செலவுக்கு பணம்

இன்னும் வரவில்லையே?’ என்று நிர்வாகிகள் கேட்டார்கள்.

அதற்கு சுவாமி ‘தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம்.

என்ன அவசரம்?‘ என்று சொன்னார். அதைப் பற்றிக் கேட்டும்

பதில் இல்லை.

அதைவிட முக்கியம், அன்று இரவு ஒரு மணிக்கு சேலம் ஆத்தூரில்

கூட்டம். முடிந்தவுடன் அவசர வேலை, டெல்லிக்கு போக வேண்டும்

என்று சென்னைக்கு பறந்தார். இது திடீரென்று நடந்தது. அந்த

நேரத்திற்கு விமானம் இல்லையே என்றபோது பரவாயில்லை நான்

பார்த்துக்கொள்கிறேன் என காரில் பறந்தார். அவருக்கு பின்னால்

வந்த நிர்வாகிகளின் கார் அச்சிரப்பாக்கம் அருகே விபத்தில் சிக்கியது.

முன்னாள் எம்.எல்.ஏ குருமூர்த்தி சேலம் மாவட்ட ரத்தினவேல்,

காஞ்சிபுரம் ஏகாம்பரம் ஆகியோருக்கு படுகாயம். சுவாமி அதைக்கூட

பொருட்படுத்தாமலே சென்னைக்கு ஓடினார்.

இதைப்பற்றி கேட்பதற்கு நான் டெல்லிக்கு போன் செய்தேன்.

காலை ஃபிளைட்டில் சுவாமி சென்றிருந்தால் ஒரு ஒன்பது

மணிக்குள்ளாக வீட்டில் இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து

பேசினேன். சுவாமியின் மனைவிக்கு என்னை நன்கு தெரியும்.

அவரது குடும்பத்தில் ஒருவராக பார்த்தார். ‘என்ன வேலுசாமி..

அவர் அங்கதானே இருக்கிறார்.. இங்கு கேட்கிறீர்களே?’ என்றார்.

எனக்கு குழப்பம். உடனே அவரது அலுவலகத்திற்கு பேசினேன்.

அங்கிருந்தும் அதே பதில்தான். சென்னையில்தான் இருக்கிறாரோ

என்று சென்னைக்கு பேசினேன். சுவாமிக்கு வேண்டிய நண்பர்களிடம்

எல்லாம் பேசினேன். எல்லோரும் அவர் டெல்லியில் இருப்பதாக

சொன்னார்கள். சுவாமி அப்போது மத்திய அமைச்சராக இருந்தார்.

தினசரி ‘மூவ்மெண்ட் ரிப்போர்ட் பைல்’ என்பது அமைச்சர்களுக்கு

கட்டாயம் உண்டு. அது எங்கே என்று கேட்டால் தொலைந்துவிட்டது 

என்றார். என்னவென்றால் அன்றைய தினம் சுவாமி டெல்லிக்கே

போகவில்லை. சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனை

அருகில் இருக்கும் ஒரு ஓட்டலில் சந்திராசாமி பதிவு ஏதும் செய்யாமல்

ரகசியமாக தங்கியிருந்தார். அவரோடுதான் சுவாமியும் இருந்துள்ளார்.

அங்கிருந்து காரிலேயே பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார்கள்.

ராஜீவ் படுகொலைக்கு ஒரு நாள் முன்பு அந்த இரண்டு சாமிகளின்

நடவடிக்கை மர்மாகவே இருந்தது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம்

சுப்பிரமணியன் சுவாமியிடம் பதிலே இல்லை. அவரது சட்டையெல்லாம் நனைந்து, வேர்வை கொட்டியது. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி அங்கே. பிரியங்கா என்னையும் பார்க்கிறார். சாமியையும் பார்க்கிறார். பிரியங்காவின் முகத்தில் அப்படி ஒரு ஆவேசம்.

கோபம். நீதிபதி ஜெயின் சுவாமியையே உற்று பார்த்தபடி

கோர்ட் கலைகிறது என்றுகூட சொல்லாமல் எழுந்து போய்விட்டார்.

ராஜீவ் படுகொலையை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று

சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன், ரகோத்தமன் கூறியிருக்கிறார்களே?

அதை மறுக்கின்றேன். என்னுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ஜெயின் கமிஷன், ‘சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை விசாரிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை’ என்றது. அதை ஏற்று பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு போட்டார்கள். அந்த குழு சுப்ரமணியன் சுவாமியையும், சந்திராசுவாமியையும் 20 வருடங்கள் ஓடியும் இன்றுவரை அழைத்து விசாரிக்கவே இல்லை.

——————–

(தொடர்கிறது – பகுதி-6-ல் )

நன்றி http://vimarisanam.wordpress.com/

 

சாமிகளின் சாகசங்கள் தொடர்கிறது…… சிவராசன் தப்பிக்க சந்திராசாமி உதவியா …? ( சா.சா. பகுதி-6 )

chandra-and-subramanian-swamy.jpg?w=640&

(  சேர்ந்தே இருந்தவர்கள் தான்  –  சந்திராசாமியும் அவரது நண்பர் சுப்ரமணியன் சுவாமியும் …….  !!!  )

——-

அரசியல்வாதி என்கிற போர்வையில் இயங்கிக்

கொண்டிருக்கிற ஒரு political blackmailer பற்றிய

இடுகைத் தொடர் இது. பயங்கரமான கிரிமினல் மூளை,

பல முக்கிய மனிதர்களைப் பற்றிய தனிப்பட்ட

ரகசியங்கள் கைவசம், (தற்போதைக்கு மத்தியில்

ஆளும் கட்சியின் அதிகாரத் துணை ) ஆகியவை

இந்தப் பெரியமனிதரின் பலம்.

நான் இந்த இடுகைத் தொடரில் தரும் தகவல்களை

ஏதோ எரிச்சல் காரணமாக எழுதப்படுகிற இடுகை என்று யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் இங்கு எழுதும் அத்தனை விஷயங்களுக்கும் தகுந்த ஆதாரங்கள் உள்ளன. (பல விஷயங்கள் பப்ளிக் டொமெய்னிலேயே உள்ளன ). பெரும்பாலான மக்களிடமிருந்து மறைத்து வைக்கப்பட்ட மற்றும் பெரும்பாலான மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லாத பல தகவல்களை சேகரித்து நான் இங்கு தருகிறேன். இதில் எதுவுமே என் கற்பனை அல்ல.

இந்த தலைப்பில் நான் இதற்கு முன் தந்த தகவல்களுக்கும் இனி தரவிருக்கின்ற தகவல்களுக்கும் இது பொருந்தும்.

முதலில் தனித்தனியான சில தகவல்கள் -

—————

அமெரிக்காவில் BCCI bank scam-ஐ விசாரிக்க

William Carry என்கிற அமெரிக்க செனட்டர் தலைமையில்

ஒரு சப்-கமிட்டி நியமிக்கப்பட்டது. அந்த கமிட்டி

BCCI bank-ன் கணக்குகளை பரிசீலித்த பிறகு

சில தகவல்களை வெளியிட்டது. அதன்படி -

உலக அளவில் அறியப்பட்ட ஆயுத வியாபாரிகளான -

(international arms dealers )

Adnan Khashoggi,

Ernie Miller

ஆகியோர் அந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தது

கண்டறியப்பட்டது. இதில் விசேஷம் என்னவென்றால், இவர்கள் இருவரும் சாமியார் சந்திராசாமியின் சீடர்கள்.

இந்த கமிட்டி மேலும் வெளியிட்ட தகவல் -

இவர்களது கணக்கிலிருந்து விடுதலைப்புலிகளுக்கு

84 மில்லியன் டாலர் பணம் செலுத்தப்பட்டிருக்கிறது.

அந்தப் பரிமாற்றம் ராஜீவ் கொலை தொடர்புடையதாக

இருக்கலாம்….

——————-

ராஜீவ் கொலை வழக்கு விசாரணையின் போது

ஜூலை 17, 1991 அன்று – மிராசுதார் ஷண்முகம் என்பவர் SIT யிடம் சிக்கினார்.

மே 1, 1991 -அன்று சிவராசன் குழுவினர் இலங்கையிலிருந்து கடல்மார்க்கமாக தமிழகம் வந்து சேர்ந்தபோதுஷண்முகம் தான் அவர்களை வரவேற்று அதன் பின் பல விஷயங்களில் அவர்களுக்கு உதவியாக இருந்தவர்.

அவர் வசம் ராஜீவ் கொலைக்கான சதித்திட்டம் மற்றும்

அதில் சம்பந்தப்பட்டிருந்த இந்திய அரசியல்வாதிகள் பற்றிய சில தகவல்கள் ரகசிய குறிப்புகளாக (coded messages ) இருந்தன என்று ஒரு செய்தி. SIT அவரை விசாரணைக்காக பிடித்து, தன் பாதுகாப்பில் வைத்திருந்தபோது, அவர் தப்பித்து ஓடி விட்டதாக SIT- யால் பிறகு சொல்லப்பட்டது.

பிற்பாடு அவர், பிணமாக ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவரிடமிருந்த ராஜீவ் கொலை பற்றிய விவரங்கள் அடங்கிய ரகசியத் தகவல்கள் என்ன ஆயின என்பது பற்றிய விஷயம் எதுவுமே பின்னர் வெளிவரவில்லை.

முன்னாள் தமிழக டிஜிபி மோகன் தாஸ் இது பற்றிக்

கூறும்போது,

“சண்முகம் தற்கொலை செய்துகொண்டிருக்க முடியாது -

அவர் நிச்சயமாகக் கொலை தான் செய்யப்பட்டிருக்கிறார்.

SIT பிடியிலிருந்தபோதும், அங்கிருந்து தப்பி ஓடியபோதும், வெள்ளை வேட்டி கட்டியிருந்த சண்முகம் – பின்னர் பிணமாகத் தொங்கும்போது லுங்கியில் தொங்கிக் கொண்டிருந்தது எப்படி ..?” என்று வினா எழுப்பினார்…. ஆனால் – பதில் ஏதும் கிடைக்கவில்லை….

——————–

முன்னாள் மத்திய அமைச்சர் கே.கே.திவாரி

“ராஜீவ் கொலைக்கான சதித்திட்டம் உதித்தது

சந்திராசாமியிடமிருந்து தான். அவருடன் சில

அந்நிய சக்திகளும் சேர்ந்திருந்தன” என்று கூறினார்.

ஆனால், இது அவரது அனுமானம் மட்டுமே. அவரால்

ஆதாரங்கள் எதையும் கொடுக்க முடியவில்லை.

————–

இந்த கொலையில் புலிகள் மட்டும் தான் சம்பந்தப்பட்டிருந்தனரா அல்லது இதன் பின்னணியில் உள்நாட்டு, வெளிநாட்டு சதி எதாவது இருக்கிறதா என்பதைப் பற்றி,

இந்தக் கொலை பற்றி தீவிரமாக விசாரித்த ஜெயின் கமிஷனால் எந்த முடிவிற்கும் வர முடியவில்லை.

ஆனால், நரசிம்ம ராவ் அரசு ஜெயின் கமிஷனிடமிருந்த

பல தகவல்களை மறைத்ததும்,

கமிஷனின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தராததும்,

கொலைக்குற்றத்தின் பின்னணியில் இருந்த சில முக்கிய மனிதர்களை பாதுகாக்க நரசிம்ம ராவ் அரசு முயன்றதோ என்கிற எண்ணத்தை உண்டு பண்ணுவது உண்மை.

சந்திராசாமிக்கும், சுப்ரமணியன் சுவாமிக்கும்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்த தொடர்புகள்

குறித்து பலர், ஜெயின் கமிஷன் உட்பட பல இடங்களில் கேள்விகள் எழுப்பினர்.

ஜெயின் கமிஷன், சுப்ரமணியன் சுவாமியை தீவிர சிபியை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறி இருந்தது.

ஆனாலும், சிபிஐ இவர்களை விசாரிப்பதில் அக்கரை

காட்டவில்லை. ஏனோ …?

அந்த சாமிக்கும், இந்த சாமிகளுக்கும் தான் வெளிச்சம்….!!!

————————

ஜெ. ரங்கனாத்….40 வயதுடைய இவர்

கர்னாடகாவில் வசித்து வந்த ஒரு தமிழர்.

சிவராசனும், சுபாவும் – தன்னுடைய வீட்டில் இருக்கிறார்கள் என்ற தகவலை போலீசுக்குத் தெரிவித்தவரே இவர் தான்.

ஆனால், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக

ஆகஸ்டு 18,1991-அன்று, SIT யால் இவரும் கைது

செய்யப்பட்டு, ராஜீவ் கொலைவழக்கில் ஒரு குற்றவாளியாக ( 26வது எண் ) சேர்க்கப்பட்டு, அவருக்கும், முதலில் சிறப்பு நீதி மன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ( பின்னர், ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பிறகு, அப்பீலில் – 1998, மே 11 அன்று சுப்ரீம் கோர்ட்டால் ரங்கனாத் விடுவிக்கப்பட்டார்.)

வழக்கு நடந்து கொண்டிருந்த போது, ஜெயிலில் இருந்தே இந்த ரங்கனாத் ‘Outlook,’ ஆங்கில செய்தி இதழில் பணிபுரிந்து வந்த செய்தியாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் மூலமாக ஜெயின் கமிஷனுக்கு ஒரு வாக்குமூலம் கொடுத்தார்.

கொலைக்கும்பலைச் சேர்ந்த சிவராசன், சுபா ஆகியோரும், அவர்களைச் சேர்ந்த இன்னும் 5 பேரும்,

1991, ஆகஸ்ட் 6-ந்தேதி – ரங்கனாத் வீட்டின் பின்புற வாசல்

வழியே, பலவந்தமாக உள்ளே நுழைந்து ஆகஸ்ட்            20-ந்தேதி பிணமாகப் பிடிபடும் வரை அங்கேயே தங்கி இருந்தனர்.

அவர்கள் தன் வீட்டில் தங்கி இருக்கும் விவரத்தை

போலீசுக்குத் தெரிவித்தவரே ரங்கனாத் தான். பின்னர்,

குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கைது

செய்யப்பட்டு தண்டனை பெற்றவரும் அவரே.

அவர் வீட்டில் தங்கி இருந்தபோது, சிவராசன், சுபா

ஆகியோர் பேசிக்கொண்டிருந்த பல விஷயங்களைப்

பற்றிய விவரங்களை அறிந்தவர்கள் இந்த

ரங்கனாத் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மட்டுமே.

ஜெயின் கமிஷன் முன்னர் ரங்கனாத் கொடுத்த

வாக்குமூலத்தில் அவர் சிபிஐ மீது பல குற்றச்சாட்டுக்களை கூறி இருக்கிறார்.

சிவராசனும், அவனது கூட்டாளிகளும், பத்திரமாக

இந்தியாவை விட்டு வெளியேறி, மேற்கத்திய நாடு ஒன்றுக்கு தப்பிச்செல்ல உதவுவதாக சந்திராசாமி கூறி இருந்தாராம்.

சந்திராசாமி மற்றும் சில முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் இதில் சம்பந்தப்பட்டிருப்பது அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது தனக்கு தெரிய வந்தது என்றும்,

ஆனால் இந்த தகவல்களை எல்லாம் ரங்கனாத் சிபிஐ யிடம் கூறியபோது, அவர்கள் பதிவு செய்ய மறுத்து விட்டனராம்.

ராஜீவ் காந்தி கொலைக்கு விடுதலைப்புலிகள் காரணம் என்கிற தியரியை விட்டு வெளியே வழக்கை கொண்டு செல்ல சிபிஐ விரும்பவில்லை -என்று புகார் சொல்லி இருக்கிறார் ரங்கனாத். எந்தவித அரசியல் தொடர்போ, பின்னணியோ இல்லாத தன் சாட்சியத்தை, ஜெயின் கமிஷன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் ரங்கனாத்.

அதிகபட்ச பாதுகாப்பைக் கொண்டிருந்த பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரங்கனாத், சிறை அதிகாரியின் ஒப்புதல் கையெழுத்துடன், தன்னிடம் பேட்டி கண்ட outlook -இதழின் செய்தியாளர் திரு பன்னீர்செல்வம் கேட்ட பல கேள்விகளுக்கு

பதில் கூறி இருக்கிறார்.

பொதிந்திருக்கும் மிக முக்கியமான ரகசியங்கள் பல

அவற்றிலிருந்து வெளி வருகின்றன -

கேள்வி – சிவராசனும், சுபாவும் – தங்களுக்கு சந்திராசாமியுடன் உள்ள தொடர்பு பற்றி உங்களிடம் கூறினார்களா …?

பதில் – அவர்கள், சந்திராசாமியோடு தங்களுக்குள்ள

தொடர்புகளைப் பற்றி என்னிடம் கூறினார்கள். அதோடு,  கர்னாடகாவைச் சேர்ந்த, ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இருந்த ஒரு காங்கிரஸ் தலைவரைப் பற்றியும் – அவர் மூலம் ராஜீவ் காந்தியின் சுற்றுப்பயணங்கள் பற்றிய விவரங்கள் தங்களுக்கு எப்படிக் கிடைத்தன என்பதைப்பற்றியும் கூட கூறினாகள்.

அதுமட்டுமல்லாமல், சிவராசன், சந்திராசாமியை

தன்னுடைய ‘God Father’ என்றும் கூறினான்.,

( தொடர்கிறது – பகுதி-7-ல் )

நன்றி http://vimarisanam.wordpress.com/

 

சு.சுவாமியையும், ச.சாமியையும் பாதுகாத்தது யார்….? நரசிம்மராவா… அல்லது ….. ? (சாமிகளின் சாகசங்கள் -பகுதி -7 )

( ரங்கனாத் வாக்குமூலம் தொடர்ச்சி ) -

கேள்வி – சிவராசன் பத்திரமாகத் தப்பித்துச் செல்வது

குறித்து அவனுக்கு எத்தகைய வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது ?

பதில் – சிவராசன், தான் ஜாப்னா திரும்பச் சென்றால்,

கொல்லப்படுவோம் என்று நினைத்தான். எனவே,

பங்களூரிலிருந்து நேரடியாக வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று விடவே பங்களூர் வந்தான். ‘ஜெயின் முனி’ ( சந்திரா சாமியின் நிஜப்பெயர் “நேமி சந்த் “ஜெயின்” ) வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல தனக்கு உதவி செய்வார் என்று கூறினான். (டெல்லியிலிருந்து எந்தவித பயண ஆவணங்களும் இல்லாமலேயே வெகு சுலபமாக நேபாளம் சென்று விடலாம்…)

முதலில், சந்திராசாமி, சிவராசனை டெல்லி வரச்செய்து, அங்கிருந்து வெளிநாட்டுக்கு அனுப்புவதாகச் சொல்லி இருந்தார்.

கேள்வி – முழு உண்மையையும் சொல்லக் கூடாது என்று

சிபிஐ உங்களைத் தடுத்ததா …?

பதில் – ஆமாம். சிபிஐ என்னை முழு உண்மைகளையும்

சொல்ல விடாமல் தடுத்தது – பயமுறுத்தியது.

விடுதலைப் புலிகளைத் தவிர மற்றவர்கள் யாரும் இதில்சம்பந்தப்பட்டிருந்ததைப் பற்றி நான் எதுவுமே சொல்லக்கூடாது என்று என்னைத் தடுத்தது. கொலைக்கு காரணமானவர்கள் விடுதலைப்புலிகள் தான் என்று கூறக்கூடிய சாட்சியங்களை மட்டுமே சிபிஐ அனுமதித்தது. சதியின் பின்னணியில் இருந்தவர்களைப் பற்றி எல்லாம் பேசுவதை  அது விரும்பவில்லை.

கேள்வி – எத்தகைய உண்மைகளை சிபிஐ – பதிவு பண்ணவோ, ஏற்றுக் கொண்டு செயல்படவோ மறுத்தது ….?

பதில் – சிபிஐ-யின் தலைவர், ராஜீவ் கொலையில்,

காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் சந்திராசாமி ஆகியோரின் தொடர்பு பற்றிய எதையும் நான் பேசக்கூடாது என்று என்னை எச்சரித்தார். ராஜீவ் காந்தி கொலைப் பின்னணி பற்றிய முழு உண்மைகளையும், அதில் சம்பந்தப்பட்டிருந்த ‘சக்தி’களைப் பற்றியும் அவர் முழுமையாக அறிந்திருந்தார் என்றே எனக்குத் தோன்றியது.

மாஜிஸ்டிரேட்டிடமோ, வேறு யாரிடமாவதோ -

இது குறித்த விவரங்களைக் கூறினால், நான் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர் என்னை கடுமையாக எச்சரித்தார். அவர் என்னிடம் சொல்லிய விதத்திலிருந்து, அவர் சந்திராசாமியையும் இன்னும் சில காங்கிரஸ் தலைவர்களையும் பாதுகாக்க விரும்புகிறார்

என்றே தோன்றியது. நான் எவ்வளவோ கேட்டுக்கொண்டும் – சிபிஐ – சிறப்பு புலனாய்வுக் குழு என்னுடைய வாக்குமூலத்தை பதிவு செய்ய மறுத்து விட்டது.

நான் கர்னாடகா போலீசைச் சேர்ந்த DCP கெம்பையா

அவர்களை பங்களூரில் சிவராசனும், சுபாவும் மறைவாக

தங்கியிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றேன். ஆனால், அவரது வாக்குமூலம், கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவில்லை…

( ரங்கனாத் வாக்குமூலம் இங்கு முடிவடைகிறது )

———————————

இந்த இடத்தில் முக்கியமான கேள்வி ஒன்று எழுகிறது …

1990-ம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் பத்மநாபா மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் சென்னையில் கொல்லப்பட்டார்கள். இந்தக் குழுவில் சிவராசனும் ஈடுபட்டிருந்தது பற்றி சொல்லப்பட்டது.

அந்த சமயத்தில் இவர்கள் எல்லோரும்

கொலைச்சம்பவத்திற்குப் பிறகு, உடனடியாக சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்குத் தப்பிச் சென்றனர். அதே போல், ராஜீவ் கொலை நிகழ்வு முடிந்தவுடன் சிவராசன் குழுவினர்

உடனடியாக இலங்கைக்கு தப்பிச் செல்லாதது ஏன்

என்பது தான் அந்த கேள்வி…!!!

1991 மே 21-ம் தேதி மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் கொலை நடந்தது.கிட்டத்தட்ட ஜூன் 23-ம் தேதி வரை -

ஒரு மாதத்திற்கும் மேலாக – சிவராசன் சென்னையில்தான் இருந்திருக்கிறான். சம்பவம் நடந்த ஸ்ரீபெரும்புதூருக்கும் கடற்கரைக்கும் அதிக தூரம் கிடையாது.

புலிகள் படகில் பறப்பதில் மிகவும் கெட்டிக்காரர்கள். இருந்தும் கொலைச் சம்பவத்திற்குப் பிறகு, சிவராசன் சாலை மார்க்கமாக டெல்லி செல்லவே திட்டமிட்டிருந்ததாக தெரிய வருகிறது….. அது ஏன்….?

இதில் எழும் இன்னுமொரு முக்கியமான சந்தேகம், சிவராசன் இரட்டை வேடம் போட்டானோ என்பது. சிவராசன் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு 1991 மார்ச் மாதம் சிங்கப்பூர், சவூதி அரேபியா, துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று வந்தது தெரிய வந்திருக்கிறது… இது விசாரணையின் ஒரு முக்கிய பகுதி. ஆனால், இதற்கான விளக்கங்கள் எதுவும் கூறப்படவில்லை.

சிவராசன் எல்.டி.டி.இ. இயக்கத்தில் சேரும் முன்னர்

‘டெலோ’ வில் இருந்திருக்கிறார். டெலோ இயக்கத்தை

சேர்ந்தவர்கள் பணம் பெற்றுக்கொண்டு, அந்நிய சக்திகளுக்காக சில செயல்களில் ஈடுபட்ட விவரங்களும் வெளியாகி இருக்கின்றன.சிவராசன் -எல்.டி.டி.இ-யிலும் இருந்து ண்டு மற்றவர்களுக்காகவும் செயல்பட்டு இருக்கலாம் என்கிற கோணமும் இங்கு தெரிகிறது.

ஜெயின் கமிஷன் ரிப்போர்ட்டின்படி பிரபல

ஆயுத வியாபாரிகளான அட்னன் கஷொகி (Adnan Khashoggi) மற்றும் எர்னி மில்லர் (Ernie Miller)

மற்றும் சாமியார் சந்திராசாமி போன்றவர்களுக்கிடையே

மில்லியன் கணக்கில் டாலர் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.

(சில வருடங்களுக்குப் பின் ஆட்சி மாறிய பிறகு,

சந்திராசாமி ஆசிரமத்தில் ரெய்டு நடந்தபோது,

இது பற்றிய ஆவணங்கள் ( Adnan Khashoggi பெயரில்

ச.சாமி வைத்திருந்த ட்ராப்டு உட்பட ) கைப்பற்றப்பட்டன…

நீண்ட கால விசாரணைகளுக்குப் பிறகு அந்நியச் செலாவணி மோசடி குற்றங்களுக்காக – மொத்தம் 13 வழக்குகள் – சந்திராசாமிக்கு டெல்லி கோர்ட் ஒன்று ஜூலை 2011-ல் ஒன்பது கோடி ரூபாய் அபராதம் விதித்தது )

அவுட்லுக் ஆங்கில இதழ் கூறியதன்படி சில ஆவணங்கள், கோப்புகள் அழிக்கப்பட்டன அல்லது காணாமல் போயின. அவற்றில் இருந்த தகவல்களுள் -

sswamy-and-rajiv.jpg?w=640&h=409

                            -( நண்பரா – பகைவரா….? )-

 

ச.சாமி மற்றும் சு.சாமிக்கும் வெளிநாட்டு சக்திகள்

சிலவற்றிற்கும் இடையே நிகழ்ந்த ரகசிய உரையாடல்களை இந்திய உளவு அமைப்பான ‘ரா’ இடைமறித்துக் கேட்ட தகவல்களும், கொலை நிகழ்ந்த நாளில் இரண்டு சாமிகளும் போய் வந்த இடங்கள், பயணங்கள் குறித்த  தகவல்களும் அடங்கும்.

இந்த ஆவணங்கள் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில்

அழிக்கப்பட்டன அல்லது காணாமல் போயின என்றால் -

யாரைக் காப்பாற்றுவதற்காக, பாதுகாப்பதற்காக

அது நடந்திருக்கும் …?

ச.சாமியையா, சு.சாமியையா அல்லது

காங்கிரஸ் தலைவர்கள் வேறு யாரையேனுமா ……. ?

ஜெயின் கமிஷன் ச.சாமிக்கும் – சு.சாமிக்கும் இடையே

நிலவிய உறவைப்பற்றி பல துண்டு துண்டான

தகவல்களைச் சேகரித்திருக்கிறது. அதில் ஒன்று -

கொலை நிகழ்ந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு

-1995-ல் ச.சாமியும், சு.சாமியும் ஒன்றாகச் சேர்ந்து

லண்டனுக்குச் சென்றிருக்கிறார்கள்.

இருவரும் Halkin Hotel என்கிற ஒரே ஹோட்டலில்

தங்கி இருந்திருக்கிறார்கள். இருவருக்குமான

ஹோட்டல் பில்’லை சந்திராசாமியே கொடுத்திருக்கிறார்.

இது குறித்து ஜெயின் கமிஷன் அறிக்கையில்

ஒரு பகுதி கூறுகிறது -

“Dr Swamy cannot be believed when he changes

his versions and when he is indefinite and

when he does not support his version by

any corroboratory evidence.

The divergence in the statements of Chandraswami

and Dr Swamy on the purpose of their joint visit to

London in 1995 does raise suspicions.”

……..

On the explanation of D.R. Karthikeyan, special director, CBI,

regarding the international ramifications, Jain writes that -

” it does not completely rule out the possibility of involvement beyond the LTTE.

If the SIT had investigated Chandraswami, Mahant Sewa Dass and interrogated ChandraShekhar, Swamy, T.N. Seshan and Narasimha Rao, it would have helped the Commission….”

ஜெயின் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட பின்னரும்

இவர்களது வெளிநாட்டு பயணங்கள், மற்றும் தொடர்புகள் பற்றிய தகவல்களை எல்லாம் சி.பி.ஐ-யும் சிறப்புப் புலனாய்வும் தீவிர கவனத்தில் எடுத்துகொண்டு விசாரணை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

( நான் முன்னதாகச் சொல்லியிருந்த, (Part4)

தமிழக டிஜிபி மோகன் தாசின் ‘the Assasination’

நாவல் நினைவிற்கு வருகிறதா …?

அந்த நாவலின்படி பாதர் மூன்சைன்னுக்கு (சந்திராசாமி)

ஜார்வின் (ராஜீவ் காந்தி) மீது போபர்ஸ் இராணுவ பீரங்கி

பேரத்திலிருந்து விரோதம் தொடங்குகிறது.

டிஜிபி மோகன் தாஸ் கூறியிருந்த மற்றொரு முக்கியமான தகவல், சிறப்பு புலன் விசாரணைக்குழுவின் தலைவரை

திருமதி சோனியா காந்தி தான் தேர்ந்தெடுத்தார் என்பது….!!! )

புலன் விசாரணை தொடக்கம் முதல் – சுப்ரீம் கோர்ட் வரை – அனைத்து உண்மைகளையும் குழப்பி,

பல சாட்சியங்களையும் அழித்து அல்லது மறைத்து -

புலிகள் மட்டும் தான் இதற்குக் காரணம் என்கிற

பிடிவாதமான ஒரு முடிவு திணிக்கப்பட்டிருக்கிறது

என்று சி.பி.ஐ- மீது ஒரு சாரார் குற்றம் சாட்டினால் -

அதற்கான சரியான விளக்கங்களையோ, பின்னணிகளைக்

குறித்த காரணங்களையோ -

சம்பந்தப்பட்டவர்கள் கொடுக்காமல்,

இந்த வாதங்கள் புறம் தள்ளப்பட்டது ஏன்….?

யாரைக் காப்பாற்ற….?

சந்திராசாமியையா …?

சுப்ரமணியன் சுவாமியையா …?

அல்லது காங்கிரஸ் தலைவர் யாரையாவதா …?

( தொடர்கிறது – பகுதி -8- ல்)

நன்றி http://vimarisanam.wordpress.com/

 

சு.சுவாமியின் மனைவியை நீதிபதி ஆக்க மறுத்ததற்கு ஆர்வி க்கு கிடைத்த தண்டனை ….!!! (சாமிகளின் சாகசங்கள் – பகுதி -8 )

 

“ஆர்வி” என்கிற ஆர்.வெங்கட்ராமன் தமிழக மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். முதலில் காமராஜர் அமைச்சரவையில் தமிழ்நாட்டில் தொழிலமைச்சராக அவர் ஆற்றிய பணிகள்

அற்புதமானவை. தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகள், ஐடிஐ, பாலிடெக்னிக் பயிற்சிப் பள்ளிகள் ஆகியவை துவங்க முழுமுதல் காரணம் அவர் தான்

பின்னர் மத்தியில், பாதுகாப்பு அமைச்சராகவும், அதன் பின் துணை ஜனாதிபதியாகவும், பிறகு July 1987 முதல் July 1992 வரை இந்தியாவின் ஜனாதிபதியாகவும் பணியாற்றினார். மிகச்சிறந்த நேர்மையாளர்.

அவர் ஜனாதிபதியாக இருந்த கால கட்டத்தில் பல அரசியல் சட்ட சிக்கல்கள் எழுந்தன. அவர் ஜனாதிபதியாக பதவி வகித்த 5 வருட காலத்திற்குள் -வி.பி.சிங், சந்திரசேகர், நரசிம்மராவ் என்று 3 பிரதமர்கள் மாறி மாறி பதவிக்கு வந்தனர். எந்தவித பாரபட்சமுமின்றி மிக நேர்த்தியாக நிலைமையை சமாளித்தவர் ஆர்வி அவர்கள்.

rvenkataraman.jpg?w=640

subramaniamswamy-laughing.jpg?w=640

அப்பேற்பட்ட மனிதரையும் விடவில்லை -

சாமி என்னும் பூதம்…..!!!

ஆர்வி அவர்கள் 1995-ல் “My Presidential Years” என்கிற

தலைப்பில் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவர்

சந்திக்க வேண்டியிருந்த சில வித்தியாசமான சம்பவங்களைப்

பற்றி புத்தகம் ஒன்றை எழுதினார்.

 

சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் மத்திய சட்ட அமைச்சராக இருந்தவர் திருவாளர் சுப்ரமணியன் சுவாமி. வக்கீலாகத் தொழில்புரிந்து வந்த தன் மனைவியை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய

முயற்சி செய்திருக்கிறார். இது குறித்து ஆர்வி அவர்களின் புத்தகத்திலிருந்து அவரே கூறியிருப்பது -

———————

“திருமதி ரோக்சனா சுப்ரமணியன் சுவாமி அவர்களை

டெல்லி உயர்நீதி மன்றத்தில், ஒரு அடிஷனல் ஜட்ஜாக

நியமிப்பது குறித்த ஒரு கோப்பு என்னிடம் ஒப்புதலுக்காக வந்தது. அந்த கோப்பில், என்னிடம் வருவதற்கு முன்னர் – சட்டப்படி யார் யாரிடம் எல்லாம் கையெழுத்து வாங்கப்பட வேண்டுமோ, அவை எல்லாம் வாங்கப்பட்டிருந்தன.

திருமதி சுவாமி, பத்து வருடங்கள் நாலு மாதங்களுக்கு

வக்கீலாகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருந்தார்.

(சட்டப்படியான குறைந்த பட்ச தேவை – 10 வருட அனுபவம்…. ) அவரது வருட வருமான சுமார் 20,000/- என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. டெல்லி உயர்நீதிமன்றத்தில், அவரை விட அதிகமான அனுபவமும், அவரை விட அதிகமான வருமானமும்

பெறும் இன்னும் பல பெண் வழக்கறிஞர்கள் பணியாற்றி வந்தனர். தகுதியுடைய பல சீனியர்களை தவிர்த்து விட்டு, திருமதி சுவாமியை நீதிபதி பதவிக்கு நியமனம் செய்வது பார் கவுன்சில் நடைமுறைகளுக்கு ஏற்ப அமையாது.

எனவே, நான் கோப்புகளை, மறு ஆலோசனை செய்வதற்காக, பிரதமருக்கே திருப்பி அனுப்பி விட்டேன்.

இதன் விளைவாக, டாக்டர் சுப்ரமணியன் சுவாமி,

பாராளுமன்றத்தின் ‘செண்ட்ரல் ஹாலில்’ எனக்கு எதிராக மிக பலமான தாக்குதல் ஒன்றை மேற்கொண்டார்.

என் மனசாட்சிக்கு விரோதமாக நான் நடந்து கொள்ளவில்லை என்பதால் - நான் இவற்றைப் பொருட்படுத்தவில்லை.”

——————–

தகுதியற்ற ஒருவர் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக

நியமனம் செய்யப்பட ஒப்புதல் அளிக்காததற்காக “ஆர்வி” அவர்களுக்கு கிடைத்த வெகுமதி என்ன …?

சு.சுவாமியால் விஷ வார்த்தைகள் உமிழப்பட்டன -

என்னவென்று ….?

1) பாகிஸ்தான் ஒற்றராக மாறிய, இந்திய கப்பற்படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு, ஆர்வி, ராஷ்டிரபதி பவனில் அடைக்கலம் கொடுத்தார்…..

2) ஆர்வி அவர்களின் மகள், ராஷ்டிரபதி பவன் என்கிற

விலாசத்தைப் பயன்படுத்தி, தான் நிர்வகித்து வந்த ஒரு

தனியார் ட்ரஸ்டுக்கு 18 கோடி ரூபாய் அளவிற்கு

பணம் வசூலித்தார்.

(தொடர்கிறது – பகுதி- 9-ல் )

நன்றி http://vimarisanam.wordpress.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நிதியமைச்சர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமியா…..??!!! (சாமிகளின் சாகசங்கள் – பகுதி-9 )

 

திரு.பத்ரி சேஷாத்ரி அவர்கள் டாக்டர் சுப்ரமணியன் 

சுவாமியை பேட்டி கண்டதும், அந்த பேட்டி தந்தி 

தொலைக்காட்சியில் வந்ததையும் பலர் பார்த்திருப்பீர்கள்.  அப்போதே சுவாமி சொன்னது தான் …. தனக்கும் மோடி  அவர்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் இருப்பதாகவும்,  தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சில assignment- களை  முடித்த பிறகு, தான் மோடிஜியின் அமைச்சரவையில்  சேரப்போவதாகவும்……!!

நிதியமைச்சர் பதவி என்பது சு.சுவாமி அவர்களின்

நீண்ட காலக் கனவு….( முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் 

கேட்டு, கிடைக்காமல் போனதிலிருந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக – இன்னமும் தொடர்வது …..)

வாழ்க்கையின் உச்சபட்ச

லட்சியத்திற்கான முதல் படி …!!!

( உடனடித் திட்டம் – மத்திய நிதியமைச்சர்

நீண்டகாலத் திட்டம் – இந்தியாவின் பிரதம மந்திரி ….!!!! )

அந்த assignment -கள் என்னென்ன என்பதும் -

சு.சுவாமியால் உண்மையிலேயே அவற்றைச் 

செய்து முடிக்க முடியுமா என்பதும்,

ஒருவேளை செய்து முடிக்கப்பட்டால் -

அவை நிறைவேற்றப்பட்டதும் சு.சுவாமி அவர்களை,

திரு.நரேந்திர மோடி அவர்கள் தன் அமைச்சரவையில்

நிதியமைச்சராகச் சேர்த்துக் கொள்வாரா என்பதும்

திரு நரேந்திர மோடி அவர்களுக்கு மட்டுமே (ஒரு வேளை  அமித் ஷாவுக்கும் கூட ) தெரிந்திருக்கக்கூடிய விஷயம்…..!!!

திரு சு.சுவாமி அவர்கள் தனிப்பட்ட முறையிலும் பலரிடமும் சொல்லிக் கொண்டிருக்கும் விஷயம் தான் – நிதியமைச்சர் பதவி தனக்காகக் காத்திருப்பதாக…..!!!

(திரு அருண் ஜெட்லி தற்காலிகமாகவே பாதுகாப்பு, நிதி

ஆகிய இரண்டு முக்கியமான துறைகளையும் வைத்துக்

கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததே…..).

இது எந்த அளவிற்கு நடைமுறையில் வருமோ – 

நமக்குத் தெரியாது. ஆனால் சு.சுவாமி பல கனவுகளைக் கொண்டிருக்கிறார் …..

அவர் நிதியமைச்சராக பதவிக்கு வருவது நிச்சயம் 

என்றும், அப்படி வந்தால் என்னென்ன நடக்கும் என்பதையும் அவரே கூறி இருக்கிறார்.

நான் சும்மா சொல்லிக்கொண்டே போவதை விட சிலவற்றைசு.சுவாமியின் வார்த்தை ஜாலங்களிலேயே பார்த்தால் -

இன்னும் சுவையாக இருக்குமல்லவா …?

அவரது ட்விட்டர் ஜாலங்கள் சில கீழே -

————–

ஒரு ரூபாய்க்கு ஒரு டாலர் நிலை 2014-ல் 

வருமென்று முன்பு சொன்னீர்களே …..?

ஆம் – NDA ஆட்சிக்கு வரும்… அவர்கள் நான் 

சொல்வதைக் கேட்கும் நிலை உருவாகும் என்கிற 

நம்பிக்கையில் சொன்னேன்…..!!!

st-11.jpg?w=640&h=382

 

என் தாயின் கனவு – 2014-ல் மோடியை பிரதமராகவும்,

சுப்ரமணியன் சுவாமியை நிதியமைச்சராகவும் காண்பது ….!

-பெர்னார்ட் ஷா வே சொல்லி இருக்கிறார் ….

கனவு நிச்சயம் நிஜமாகும்…..!!!

st-51.jpg?w=640

 

 

நான் டாக்டர் சுவாமியை மட்டுமே நம்புகிறேன்.

இந்த நாட்டை அழிவிப்பாதையிலிருந்து மீட்டு,

உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல உங்களால் 

மட்டுமே முடியும் …..

விதி விரும்பினால் அதை யாரால் தடுக்க முடியும் …?

 

st-2.jpg?w=640&h=352

 

( நரேந்திர மோடி தலைமைக்கும் ஆபத்து ……!!!)

நாஸ்டர்டாம் சொன்னது அனைத்துமே அநேகமாக

நடக்கிறது. அப்படியென்றால், நாம் அனைவரும் உங்கள் 

தலைமையில் புதிய இந்தியாவை காணப்போகிறோமா…?

நாஸ்டர்டாம் சொன்னார் – மூன்று கடல்கள் சங்கமிக்கும் இடத்திலிருந்து வரும் இறைவனடியார் பெயரைக்கொண்ட  ஒருவரால் அது நடக்கும் என்று – அது தமிழ்நாட்டிலிருந்து சுவாமி (யாகத் தானே இருக்க முடியும் ) ….??!!!

st-3.jpg?w=640————————————————–

பின் குறிப்பு -

அடுத்த பகுதியில்( பகுதி-10 ) – ராஜீவ் கொலை, 

மற்றும் அதில் சம்பந்தப்பட்ட சிலர் குறித்து,

திருவாளர் சு.சுவாமி அவர்கள் நேரிடையாகக் கூறியவை – அவரது சொந்த வார்த்தைகளில் ……..

(தொடர்கிறது -பகுதி -10 -ல் )

https://vimarisanam.wordpress.com/2014/10/27/அடுத்த-நிதியமைச்சர்-டாக்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் குடும்பத்தின் பத்தாயிரம் கோடி சொத்து இன்று யாரிடம் இருக்கிறது ? கேட்பது சு.சுவாமி….!! (சா.சா. பகுதி -10 )

திருவாளர் சுப்ரமணியன் சுவாமி எத்தகைய நம்பகத்தன்மை உடையவர் என்பதை புரிந்துகொள்ள உதவும் பேட்டி ஒன்று  இங்கே …..

19/03/2008 அன்று ராஜீவ்-சோனியா தம்பதியின் மகள்

திருமதி பிரியங்கா வாத்ரா வெளியுலகம் அறியாமல்,

ரகசியமாக வேலூர் வந்து அங்கே சிறைப்பட்டிருந்த

திருமதி நளினியை சந்தித்திருக்கிறார்.

சந்திப்பு ரகசியமாக நிகழ்ந்தாலும், பிற்பாடு எப்படியோ

(நளினியின் வழக்குரைஞர் மூலமாக ….? ) விஷயம்

வெளிவந்து விடுகிறது.

இந்த சந்திப்பைப் பற்றி கேள்விப்பட்டு கொதிக்கிறார் சு.சுவாமி. சு.சுவாமி ஏன் கொதிக்க வேண்டும்…..?

அவர் செய்தியாளருக்கு கொடுத்த பேட்டியைப் பார்த்தால்

ஓரளவு புரியலாம்.

திருவாளர் சுப்ரமணியன் சுவாமி சொல்வதிலிருந்து -

‘ரீல்’ எது – ‘ரியல்’ எது என்று பிரித்தறிவதற்கு 

தனி சாமர்த்தியம் வேண்டும்…. பேட்டியைப் படிக்கும்போது, உங்கள் திறமையை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள் ..!

பேட்டிக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் -

( இந்த பேட்டி வெளியானது – ஏப்ரல் 2008 -ல் )

————————

dr-swamy-and-mrs-gandhi.jpg?w=640&h=426

-( நண்பரா ..? பகைவரா….? )-

பிரியங்கா-நளினி சந்திப்பு விவகாரத்தை அரசியல் புயல்

கிளப்பும் ஆயுதமாகக் கையில் எடுத்திருக்கிறார், ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி.

‘ ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை 

விதிக்கப்பட்டிருக்கும் கைதி நளினியை, சிறை ஆவணங்களில் கூட தன்னுடைய பெயரைப் பதிவு செய்யாமல், பிரியங்கா ஏன் வேறொருவர் பெயரில் சந்திக்க வேண்டும்?

சட்டவிரோதமான இந்தக் காரியத்தை சிறைத்துறை எப்படி அனுமதித்தது? ‘ -

என்றெல்லாம் கேள்விகளை அடுக்கி, தமிழகத் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பி இருக்கிறார் சுப்ரமணியன் சுவாமி. (அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது -திமுக.

கலைஞர் கருணாநிதி தான் முதலமைச்சர் ….)

மேலும், ‘தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம்

அதிகமாகி விட்டது. அவர்களோடு தொடர்புடையவர்களுடன் சோனியா காந்தி குடும்பம் நெருக்கமாக இருக்கிறது.  இங்கே ஆளும் தி.மு.க. அரசும் அதற்கு துணை போகிறது.

எனவே, தமிழக அரசை உடனடியாகக் கலைக்க வேண்டும்………..!!!

நளினி-பிரியங்கா சிறை சந்திப்புத் தொடர்பாக நான் கேட்டிருக்கும்  விவரங்களை தலைமைச் செயலாளர் திரிபாதி தரவில்லை யென்றால், நிச்சயம் நான் தமிழக அரசு மீது வழக்குப்  போடுவேன்…’ என்கிறார் சுப்ரமணியன் சுவாமி.

‘தன் அப்பாவைக் கொன்றது ஏன்?’ என்ற தகவலைக் கேட்டு அறிவதற்காக மட்டும் பிரியங்கா நளினியைப் பார்க்கவில்லை!  ராஜீவ் இறந்து பதினேழு வருடங்களுக்குப் பிறகு இது என்ன திடீர் அக்கறை?

நான் ஆரம்பத்திலிருந்து சொல்லிவரும் விஷயம், 

‘ராஜீவ் கொலை பற்றிய நிஜமான மர்மங்கள் சோனியா காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தெரியும்’ என்பதுதான்.

எனக்குக் கிடைத்திருக்கும் உறுதியான தகவல்களைச்

சொல்கிறேன் -

தன் சிறை அனுபவங்கள் குறித்து நளினியின் கணவர் முருகன் ஒரு புத்தகம் எழுதி வருகிறாராம். அதில், ராஜீவ் காந்தி கொலையில் சோனியா காந்தியின் அம்மாவான பவுலா மெய்னோவுக்கு ஏதோ தொடர்பு இருப்பதாக தெளிவாக எழுதி இருக்கிறாராம். இதெல்லாம் சோனியாவுக்குத் தெரியவர…  பதறிப்போய் தன்னுடைய மகளை சமாதானத் தூதுவராக வேலூர் அனுப்பி இருக்கிறார். இதுதான் உறுதியான உண்மை!”

”ரொம்ப அதிரடியாகச் சொல்கிறீர்களே… இதற்கெல்லாம் என்ன ஆதாரம்?”

”நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லிவரும் இந்தக் 

குற்றச்சாட்டுக்களை இதுநாள் வரையில் சோனியா 

குடும்பத்தினர் மறுக்கவில்லையே? அவருடைய அம்மா  பவுலா மெய்னோ, பாரீஸில் இருக்கும் ஒரு ஹோட்டலில் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த மறைந்த ஆன்டன் பாலசிங்கத்தை சந்தித்துப் பேசியதுண்டு.

சோனியா குடும்பத்துக்கு நெருக்கமான குவாத்ரோச்சி,

விடுதலைப் புலிகளுக்கும் ஆயுத சப்ளை செய்து

கொண்டிருந்தவர்தான். சோனியா காந்தியின் அப்பா

ஸ்டெஃபினோ மெய்னோ, ஹிட்லரின் படையில் சிப்பாயாக இருந்தவர். பிற்பாடு ரஷ்ய உளவுப்படைக்கு ஏஜென்டாக இருந்தவர். இந்தக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நான்கு ஆண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டவர்.

இப்படியெல்லாம் குடும்ப வரலாற்றுப் பின்னணி சோனியா காந்திக்கு உள்ளது. ஆரம்பத்தில் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களுக்கும் இவர்களுக்கும் ஏற்பட்ட புரிந்துகொள்ளலின்படி இப்போது இவர்களால் நடந்துகொள்ள முடியவில்லை. அதை மீறி விட்டார்கள்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிடும் இலங்கை

அரசாங்கத்துக்கு இந்தியா எல்லா உதவிகளும் செய்கிறது.

இதனால், புலிகள் நசுக்கப்படுகிறார்கள்.

‘வாக்குறுதிகள் மீறப்படுகின்றன’ என்பதை சோனியா தரப்புக்கு உணர்த்துவதற்காகத்தான், நளினி மூலமாக சில காய்களை புலிகள் நகர்த்தியிருக்கிறார்கள். அதன் விளைவுதான் புலிகளோடு சமாதானம் பேசுவதற்காக நளினியை சந்திக்கப் பிரியங்காவை அனுப்பி இருக்கிறார் என்கிறேன் நான்!”

”நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள்?”

”இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை?! ராஜீவ் உயிரோடு இருந்தால், சோனியா அரசியலுக்கு வந்திருக்க முடியுமா?

ராஜீவ் குடும்பத்தின் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இன்றைக்கு யாரிடம் இருக்கிறது? 

கூட்டிக் கழித்துப் பாருங்கள், புரியும்.

அதுமட்டுமல்ல, ‘ராஜீவ் காந்தி ஃபவுன்டேஷன்’ என்ற பெயரில் நூற்றுக்கணக்கான கோடிகளை வசூலித்து டிரஸ்ட் போன்று  அமைத்திருக்கிறார் சோனியா. ராஜீவ் கொலையானபோது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உயிரைவிட்ட போலீஸ்காரர்கள், காங்கிரஸ்காரர்கள், பொதுமக்கள் ஆகியோரின் குடும்பத்துக்குத்தானே இந்த ஃபவுன்டேஷன் உதவ வேண்டும்?

ஆனால், ராஜீவைக் கொன்ற கொலையாளிகளான நளினியும் முருகனும் படிப்பதற்கல்லவா இந்த ஃபவுன்டேஷன் ஸ்காலர்ஷிப் கொடுக்கிறது!

”நளியின் வழக்கறிஞருக்கு இந்த சந்திப்பு எப்போது தெரிந்திருக்கும் என நினைக்கிறீர்கள்?”

”துரைசாமி, நளினியின் வழக்கறிஞர் மட்டுமல்ல.

விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் திராவிடர் கழகப் பிரமுகர்.  அவர், எதுவுமே தெரியாதது போல தனது தரப்பு ஆட்களை விட்டுத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்  பிரியங்கா-நளினியை சந்தித்து விட்டுச் சென்ற விவகாரத்தை சிறைத்துறை அதிகாரிகளிடமிருந்து புதுசாகக் கேட்பதுபோல் கேட்கிறார். ரகசியமாக நடந்த சந்திப்பை இதன் மூலம் உலகறிய வெளிப்படுத்துகிறார். அப்படியென்றால், பின்னணியில் மிகப் பெரிய நாடகம் நடந்து கொண்டிருக்கிறது என்றுதானே அர்த்தம்?

அவரைவிடுங்கள்… தமிழ்நாடு காங்கிரஸார் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்? ராஜீவ் கொலை பற்றி விசாரணை நடத்திய வர்மா கமிஷன், ‘ராஜீவ் இறப்பதற்கு முன்னால் காங்கிரஸ்காரர்கள் அவருடைய பாதுகாப்பைக் குலைப்பதில் நடந்த விவகாரங்களைக் குறித்து நிறைய விசாரிக்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறது. அதுபற்றி என்றைக்காவது சோனியா யோசித்தாரா?

ஆனால், வர்மா கமிஷன் ஃபைல்களைத் தொலைத்ததில் பொறுப்பு உள்ள ப.சிதம்பரத்துக்கு நிதியமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்திருக்கிறார். புலிகளுக்கு இரங்கற்பா பாடும் தி.மு.க-வோடு கூட்டணி ஏற்படுத்திக்கொள்கிறார்.”

—————

பேட்டி இன்னமும் முடியவில்லை ……

https://vimarisanam....ியமைச்சர்-டாக்/

( தொடர்கிறது – பகுதி- 11-ல் )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப்ரியங்கா-நளினி சந்திப்பு ரகசியங்கள் குறித்த டாக்டர் சு.சுவாமியின் பேட்டி தொடர்கிறது …. (சாமிகளின் சாகசங்கள் -பகுதி-11 )

dr-swamy.jpg?w=185&h=350

ப்ரியங்கா – நளினி சந்திப்பைக் குறித்த 

சுப்ரமணியன் சுவாமி அவர்களின் பேட்டி தொடர்கிறது -

—————-

”ராஜீவ் கொலையில் முக்கியமான ‘ரோல்’ நளினிக்கு உண்டு.

இந்த வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை

ஏதோ கருணையால் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

வேலூர் சிறையில் தண்டனைக் கைதியாக இருக்கும் அவரை

ஒரு கைதிக்குரிய மரியாதை மட்டுமே கொடுத்துப் பார்ப்பதை 

விட்டுவிட்டு, புனித ஆத்மாவைப் பார்ப்பதுபோல 

சந்தித்திருக்கிறார் பிரியங்கா காந்தி.

ஆரம்பத்தில் இதை ரகசியமாக வைத்திருந்தவர்கள், தற்போது

அம்பலத்துக்கு வந்துவிட்டது என்றவுடன், அதை வைத்து

அனுதாபம் தேடப் பார்க்கிறார்கள். ‘ராஜீவைக் கொன்றவர்களையே

மன்னிக்கும் குணம் படைத்தது சோனியா காந்தி குடும்பம்’

என்று பெயர் தேடப்பார்க்கிறார்கள்.

சட்டத்தின்முன் நிறுத்தப்பட்ட குற்றவாளிகளை மன்னிக்க 

இவர்கள் என்ன கடவுளா? நளினியை பிரியங்கா சந்தித்ததன் 

பின்னணியில் நிறைய உள்சூட்சுமங்களும் ரகசியங்களும் 

இருக்கிறது.

கேள்வி – ”நளினியை பிரியங்கா ஆரவாரம் இல்லாமல்

சந்தித்துப் பேசியது அவரது பாதுகாப்புக் காரணங்கள்

கருதித்தானே இருக்கமுடியும்?”

”நளினி ஆயுள்தண்டனைக் கைதி. அவரை அவருடைய 

ரத்த சொந்தங்கள்தான் பார்க்க சிறைத்துறை விதிகள் 

அனுமதிக்கிறது. தேவையானால் வழக்கறிஞர்கள் பார்க்கலாம். 

அதுவும் குறிப்பிட்ட சில நாட்களில்தான். அப்படி இருப்பவரை 

எவ்வித விண்ணப்பமும் இல்லாமல் ரத்த சொந்தம் அல்லாத 

ஒருவர் எப்படிப் பார்க்க முடியும்?

ஒருவேளை, அனுமதியோடுதான் நளினியைப் பிரியங்கா

பார்த்தார் என்று வைத்துக்கொண்டாலும், இருவரும்

சந்திக்கும்போது பேசிக்கொள்வதை ஜெயில் நிர்வாகம் சார்பில்

குறிப்பெடுத்து இருக்க வேண்டும். ஏன் எடுக்கவில்லை?

எடுத்திருந்தால், அந்த குறிப்பு என்ன சொல்கிறது?

எனக்குக் கிடைத்திருக்கும் ஒரு தகவல்படி, நளினியும் 

பிரியங்காவும் சந்தித்த இடம் வேலூர் சிறைச்சாலையே அல்ல! 

அந்த ஜெயில் இருக்கும் பாகாயத்துக்கும் தொரப்பாடி என்ற 

ஏரியாவுக்கும் இடையில் ‘ரிக்கா’ (Regional institute of correctional 

administration) என்ற ஜெயில் அதிகாரிகளுக்கான பயிற்சி 

அலுவலகம் இருக்கிறது. அங்குள்ள கெஸ்ட் ஹவுஸில்தான் 

சந்தித்திருக்கிறார்கள்.

கெஸ்ட் ஹவுஸில் இருந்த பிரியங்காவை சந்திக்க,

சிறையில் இருந்து நளினியைத் தனது காரில் அழைத்துச் 

சென்றிருக்கிறார், சிறைத்துறை டி.ஐ.ஜி-யான செந்தூர் பாண்டியன்.

ஒரு கொலைக் குற்றவாளியை சட்ட ஆவணங்களில்

எந்தக் குறிப்பும் போடாமல், நினைத்த இடத்துக்கு ஒரு 

சிறைத்துறை அதிகாரியே தனது காரில் அழைத்துச் 

சென்றது ஏன்?

மேலும், ராஜீவ் காந்தி கொலையின்போது இறந்தவர்கள்

எத்தனையோ பேர். ஆனால், நளினிக்காக ராஜீவின் குடும்பம்

ஒன்று மட்டுமே இரக்கம் காட்டி விடுதலை வாங்கித் தரப்பார்ப்பது

என்ன நியாயம்? ராஜீவ் காந்தி படுகொலையின்போது பறிபோன

மற்ற அப்பாவி உயிர்களுக்கான விலையை அந்தந்தக் குடும்பங்கள்

அல்லவா நிர்ணயிக்க வேண்டும். மன்னிப்பதா, வேண்டாமா என்ற

உரிமை அவர்கள் எல்லாருக்கும்தான் இருக்கிறது!”

நளினியை சந்தித்த பிரியங்கா, என்றைக்காவது 

குண்டுவெடிப்பில் பலியான மற்றவர்களின் குடும்பத்தினரைப் 

போய்ப் பார்த்திருக்கிறாரா?

ராஜீவ் இறப்பதற்கு முன்பு மனித வெடிகுண்டு தணுவை

பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த அப்போதைய

செங்கல்பட்டு (கிழக்கு) எஸ்.பி-யான இக்பால் தடுத்திருக்கிறார்.

அதற்குப் பிறகுதான் குண்டு வெடிக்கிறது. அதில் ராஜீவ்

காந்தியோடு இக்பாலும் இறந்து போகிறார். இக்பாலின் குடும்பம்

இன்றைக்குக் கஷ்டத்தில் தத்தளிக்கிறது. அவருடைய மகன்

ஜாவீத், படிக்கப் பணம் இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில்

தடுமாறிக் கொண்டிருக்கிறான். உண்மையான அக்கறை 

இருந்தால் சோனியா காந்தி இவர்களுக்கும் உதவியிருக்கலாமே?”

கேள்வி ”இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கு கடிதம் 

எழுதியுள்ளீர்களாமே..?”

”அவர்களையும் நான் குற்றம் சாட்டுகிறேன்!

ஒரு கொலைக் குற்றவாளியை சந்திக்க பிரியங்காவுக்கு

அனுமதி கொடுத்தது யார்? சிறைத்துறைக்குப் பொறுப்பான

அமைச்சருக்குத் தெரியாமல் இது நடந்திருக்க முடியுமா?

அதையும் உள்ளடக்கி, உள்துறைக்கு அமைச்சராக இருக்கும் 

முதல்வருக்குத் தெரியாமலா நடந்திருக்கும்?

முதல்வருக்குத் தெரியாமல் இதெல்லாம் நடந்திருக்க 

வாய்ப்பே இல்லை. இந்த ஒரு விஷயத்துக்காகவே 

தமிழக அரசைக் கலைக்க வேண்டும். இப்படித்தான் புலிகள்

விஷயத்தை முன்வைத்து 1990-ம் ஆண்டில் தி.மு.க.

ஆட்சியை நான் கவிழ்த்தேன். அதே நிலைமை மீண்டும்

ஏற்பட்டிருக்கிறது. பட்ட அனுபவம் இருந்தாலும் கருணாநிதி

ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இப்படி ஏதாவது

செய்துகொண்டே இருக்கிறார்!”

இன்னொரு விஷயமும் கேள்விப்பட்டேன். லண்டனில் 

வசிக்கும் நளினியின் மகள் ஹரித்ராவை சோனியா 

குடும்பத்தினர் மறைமுகமாக தத்தெடுத்துக் கொள்ளப் 

போகிறார்களாம். இதெல்லாம் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும்

தேர்தலில் அனுதாபம் தேடிக்கொள்ளவும் உதவும் என்று

சோனியா தப்புக் கணக்குப் போட்டு, பாம்புக்குப்

பால் வார்த்துக் கொண்டிருக்கிறார். அவரும் அவருடைய

குடும்பத்தாரும் கடவுள்களின் மறு உருவமாக இருந்து,

யாரை வேண்டுமானாலும் ரட்சிக்கட்டும். அதற்கு முன்பு

ராஜீவ் காந்திக்காக உயிரைவிட்ட பலருடைய குடும்பத்தினரைப் 

பற்றியும் கொஞ்சம் யோசிக்கட்டும். இல்லையென்றால், இறந்து 

போனவர்களின் ஆத்மா அவர்களை மன்னிக்காது!

தமிழ்நாடு காங்கிரஸ்காரர்களைப் பற்றிக் கேட்டீர்கள் அல்லவா…

சோனியாவை நம்பி மட்டுமே அரசியல் நடத்திக்கொண்டிருக்கும்

அந்த பாரம்பரிய கட்சிக்காரர்கள் இதுபற்றியெல்லாம்

பேசுவார்களா என்ன? காங்கிரஸ்காரர்களை நான் வாயில்லா 

ஜீவன்கள், கால்நடைகள் என்றுதான் சொல்வேன். ஆறாவது 

அறிவை அவர்கள் ஒருபோதும் பயன்படுத்தியதில்லை!”

——————

இத்துடன் விடவில்லை திருவாளர் சுப்ரமணியன் சுவாமி…!

வேலூர் சிறையில் நளினியை சந்தித்த பிரியங்காவிடம் 

தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை 

விடுத்துள்ளார்.

தமிழக அரசு இதற்கான நடவடிக்கையை மே 21-க்குள் (2008 ….!!!)

எடுக்கவில்லை எனில், பிரியங்காவிடம் போலீசார்

விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல்

செய்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

“நளினியுடன் நடத்திய சந்திப்புக்கான காரணத்தை பிரியங்கா 

வெளியிடவில்லை. இந்நிலையில், பத்திரிகைகளில் 

வெளியான செய்திகள் அனைத்தும், இரண்டாம் நபர் அல்லது 

மூன்றாம் நபர்கள் கூறியதாகத் தான் உள்ளன.

இதற்கிடையே, வேலூர் சிறைக்குள் செல்ல பிரியங்கா

உரிய அனுமதியைப் பெறவில்லை. இதை, சிறை அதிகாரிகள்

உறுதி செய்துள்ளனர். எனவே, பிரியங்காவிடம் தமிழக 

போலீசார் விசாரணை நடத்த வேண்டும்.

என்டிஏ. அரசு நளினியின் மரண தண்டனையை,

ஆயுள் தண்டனையாகக் குறைத்தது சட்டப்புறம்பானது.

இந்நிலையில், நளினியை விடுதலை செய்ய பிரியங்கா 

முயற்சித்தால், இதை எதிர்த்து பொதுநல வழக்குத் 

தொடருவதுடன், அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனைக் 

குறைப்பை ரத்து செய்யவும் கோருவேன்” என்றார்.

——————————————

சு.சுவாமியின் மேற்கண்ட பேட்டியை இன்னுமொரு முறை

படித்துப் பாருங்கள்….பேட்டியிலேயே எவ்வளவு 

முரண்பாடுகள் (contradictions …)…என்பது தெரிய வரும்…

அனுமதி பெறாமல் பிரியங்கா சிறைக்கு சென்றார்….

வேறோரு பெயரில் சென்றார் …

சந்திப்பு சிறையில் நடைபெறவே இல்லை …

நளினியை சிறை அதிகாரி அனுமதி இன்றி வெளியே

அழைத்துச் சென்றார்….

நளினியின் மகள் ஹரித்ராவை திருமதி சோனியா காந்தி

தத்து எடுத்துக் கொள்ளப்போகிறார்….

என் கேள்விகளுக்கு உரிய விளக்கம் சொல்லாவிட்டால்,

தமிழக அரசு மீது வழக்கு தொடர்வேன் ….

இதில் வேடிக்கை என்னவென்றால் - அன்று இத்தனை 

சவால்களை விட்ட – சுப்ரமணியன் சுவாமி, அதற்குப் பிறகு,

இன்று வரை – இவற்றைப் பற்றி மூச்சே விடவில்லை….!!!

-

பின் குறிப்பு -

அடுத்த பகுதியுடன் (பகுதி-12) இந்த தொடர் இடுகை

முடிவுக்கு வருகிறது. 5-6 பகுதிகளில் முடிந்து விடுமென்று

நினைத்த இந்த தொடர், செய்திகள் நிறைய இருந்ததால்,

12 பகுதிகள் வரை நீண்டு விட்டது. இந்த இடுகைத் தொடரின்

இடையில்-நடுவே, நான் நிறைய விவாதங்களை

எதிர்பார்க்கவில்லை. நண்பர்களும் அதே மன நிலையில் தான்

இருந்தார்கள். கடைசிப் பகுதி முடிந்த பிறகு -நாம் ஓரளவு 

விவாதித்தால் தான் இந்த தொடர் இடுகைக்கான ஒரு முழுமை 

கிடைக்கும் என்று கருதுகிறேன்.

பகுதி-12 -ல் சந்திப்போம்.

—————

இந்த சாமிகளின் சாகசங்கள் தொடரின்

முந்தைய பகுதிகளைக் காண -

(உதவி – நண்பர் todayandme )

http://vimarisanam.wordpress.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.