Jump to content

'உன்­னிடம் மயங்­கு­கிறேன்', 'கல்­யாண சாப்­பாடு போடவா', 'அடுத்­தாத்து அம்­பு­ஜத்தை பார்த்­தேளா' முத­லான பாடல்­க­ளுக்கு இசை­ய­மைத்த வி.குமார்


Recommended Posts

அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா
 
"மத­னோற்­சவம் ரதி­யோ­டுதான்" - 1978 இல் வெளி­யான சது­ரங்கம் என்ற ரஜி­னியின் படப்­பா­ட­லிது. இந்தப் பாடலைக் கேட்டு எத்­த­னையோ வரு­டங்­க­ளா­கி­ன்றன. ஆனால் பாலுவின் குரல் அப்­ப­டி­யேதான் இருக்­கின்­றது.
 
பாடலின் முத­லா­வது சர­ணத்தில்
மீனாடும் கண்­ணி­லி­ருந்து
 நானா­டவோ..
தேனாடும் செவ்­விதழ் தன்னில்
நீரா­டவோ..
என்று பாலு இரண்­டு­ த­டவை பாடு­கிறார். இரண்டு தட­வையும் வித்­தி­யா­ச­மாகப் பாடு­கிறார். அதற்குள் இரண்­டா­வது தடவை நீரா­டவோ என்று பாடும்­போது அதை நீ...ரா..டவோ என்று சில்­மிஷம் வேறு வைக்­கிறார். அது மட்­டு­மல்ல..
 
பாலு உச்­சஸ்­தா­யியில் பாடி முடிக்­கவும் வாணி அம்மா ,
.. புரி­யாத பெண்­மை­யிது .
பூப்­போன்ற மென்­மை­யிது..
பொன்­னந்தி மாலை .
என்­னென்ன லீலை..
என்று கீழ் ஸ்தாயில் பாடும் அழகே தனிதான்.
 
 
 
 
உண்­மையில் இதன் காங்­கோ­வுடன் கூடிய வித்­தி­யா­ச­மான தாளக் கட்டும் பின்­ன­ணியில் கிட்டார் செய்யும் அலங்­கா­ரமும் 70 களின் கடை­சியில் வெளி­வந்த இசை­ஞா­னியின் பாடல்­க­ளி­லுள்ள ஆர்­கஸ்ட்­ரே­ஷ­னையே நினை­வு­ப­டுத்­து­கின்­றது. ஆனால் ...
இந்தப் பாட்­டுக்கு இசை இசை­ஞா­னி­யல்ல, வி.குமார்.
 
29_vkumar2.jpg
 
மெல்­லிசை மன்­னர்கள் பிரிந்து அவர்­களில் எம்.எஸ்.வி. உச்­சத்தில் கோலோச்­சிய காலத்தில் அறி­மு­க­மான மற்றைய இசை­ய­மைப்­பா­ளர்­களில் வி.குமார் குறிப்­பி­டத்­தக்­கவர். இவரின் மெல­டிப்­பா­டல்கள் எம்.எஸ்.வியின் பாணி­யி­லி­ருந்து வித்­தி­யா­ச­மாக இருந்­தன. உன்­னிடம் மயங்­கு­கின்றேன், என்ற ஜேசு­தாசின் மகு­டத்தில் வைர­மாக ஜொலிக்கும் பாடலை உரு­வாக்­கி­யவர் இவர்தான்.
 
சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் பழைய சஞ்­சி­கை­யொன்றில் ஒரு பேட்டி படித்த நினைவு. . அது வி.குமாரின் மனைவி திரு­மதி.சொர்­ணா­வி­னு­டை­யது. இவரும் ஒரு பாட­கி­யாக அறி­மு­க­மாகி வி,குமா­ருடன் ஏற்­பட்ட காதல், திரு­ம­ணத்தில் முடிந்­த­வுடன் பாடு­வதை நிறுத்­தி­யவர் .
 
அந்தக் கட்­டு­ரையில் சொர்­ணாவும் அவ­ரது மகனும் தமிழ்த்­தி­ரை­யு­லகை மிகவும் வெறுப்­பது தெரிந்­தது. அமெ­ரிக்­காவில் செட்­டி­லாக முயற்­சிக்கும் மக­னுடன் எப்­ப­டி­யா­வது போய்த் தங்­கி­விட வேண்டும் என அந்தத் தாய் ஆதங்­கப்­பட்­டி­ருந்தார். அந்த வெறுப்­புக்­கான காரணம் வி.குமார் என்ற இசை­ய­மைப்­பா­ளரின் இறுதிக் காலத்தில் அவ­ருக்கு சினிமா உலகம் இழைத்த அநீ­தி­யெனக் குறிப்­பிட்­டுள்­ளார்கள். 
 
ஒரு காலத்தில் மிகப் பிர­ப­ல­மாக இருந்து பல நடி­கர்­களை உயர்த்­தி­விட்ட இந்தக் கலைஞன் தனக்குக் கிடைத்த ஏமாற்­றத்­தாலோ என்­னமோ 80 களில் ஒருநாள் திடீ­ரென வந்த மார­டைப்பால் தனது குடும்­பத்தை தவிக்க விட்டு இறந்­து­போனார்.
 
வி.குமார் எம்.எஸ்.வி. கோலோச்சிக் கொண்­டி­ருந்த கால­கட்­டத்தில் பால­சந்­தரால் "நீர்க்­கு­மிழி" படத்தில் அறி­மு­க­மாகி அவரின் படங்­க­ளுக்கு தொடர்ந்து இசை­ய­மைத்துக் கொண்­டி­ருந்­தவர், நீர்க்­கு­மி­ழியில் சீர்­காழி நாகேஸுக்­காகப் பாடும் ஆடி அடங்கும் வாழ்க்­கை­யடா என்ற பாடல் இன்றும் ஒலித்­த­ப­டி­யேதான் இருக்­கின்­றது.
 
 
பி.பி.ஸ்ரீவாஸின் "தாம­ரைக்­கன்­னங்கள்.. தேன் மழைக் கிண்­ணங்கள்..." என்ற அதி அற்­பு­த­மான பாடலும் வி.குமாரின் இசையில் வெளி­வந்­த­துதான்.
---
 
70 களின் ஆரம்­பத்தில் வெளி­வந்த அவ­ரது மெல­டிப்­பா­டல்கள் ராஜாவின் பாடல்­க­ளாக இருக்­கலாம் என்ற பிர­மையை ஏற்­ப­டுத்­து­வ­தென்­னமோ உண்­மைதான்.
 
பாலு பாடி­யுள்ள "பொன்னை நான் பார்த்­த­தில்லை" என்ற பாடல் உரு­வாக்­கப்­பட்­டுள்ள விதமும் அதில் ட்ரம்பட் முக்­கிய வாத்­தி­ய­மாக பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பாங்கும் அந்­தப்­பா­டலை ராஜாவின் பாடல் என்றே என்னை பல வரு­டங்­க­ளாக எண்ண வைத்­தி­ருந்­தது. இவ­ரது உத­வி­யா­ள­ராக இருந்­தவர் ஏ.ஆர்.ரஹ்­மானின் தந்தை சேகர்.
 
'மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்­லக்கு... எனும் பாடல்
ஜேசு­தா­சுக்கு வி.குமார் கொடுத்த இன்­னொரு மாஸ்டர் பீஸ்.
 
கடந்த வருடம் தொலைக்­காட்சி பாடல் போட்டி நிகழ்ச்­சி­யொன்றில் எம்.எஸ்.வி யையும் கே.பால­சந்­த­ரையும் சிறப்பு விருந்­தி­னர்­க­ளாக அழைத்து அவர்கள் இரு­வரும் சேர்ந்து படைத்த பாடல்கள் என் சில­வற்றை போட்­டி­யா­ளர்­களைக் கொண்டு பாட வைத்­தார்கள். பால­சந்­தரும் அருமை ..அருமை என்று எம்.எஸ்.வியுடன் சேர்ந்து போட்­டி­யா­ளர்­களை வாழ்த்தி விட்டுச் சென்­று­விட்டார்.
 
 ஆனால் உண்­மையில் பாலச்­சந்தர் என்ற இயக்­குனர் பிர­ப­ல­மா­கி­யதன் பிற்­பா­டுதான் எம்.எஸ்.வியுடன் சேர்ந்து படங்­களை உரு­வாக்­கினார். ஆனால் இதே பால­சந்தர் தன்னை நிலை நிறுத்தப் போரா­டிய ஆரம்­ப­கா­லத்தில் அவரின் ஆஸ்­தான இசை­ய­மைப்­பா­ள­ராக வி.குமார்  இருந்­துள்ளார்.
 
பால­சந்­தரின் நாட­கங்­க­ளுக்கு இசை­ய­மைத்­தவர் குமார். அதே பால­சந்தர் பின்னர் பட இயக்­கு­ன­ராக வாய்ப்புப் பெற்­ற­போது வி.குமாரையே தனது நீர்க்­கு­மிழி படத்­துக்கு இசை­ய­மைக்­கும்­படி வேண்டிக் கொண்டார். தொடர்ந்து பல படங்கள் இரு­வரும் சேர்ந்து பணி­யாற்­றினர்.
 
அந்­தப்­ப­டங்­கள்தான் பால­சந்தர் என்ற இயக்­கு­னரின் தனித்­து­வத்தை தமிழ்த்­திரையுல­கிற்கும் ரசி­கர்­க­ளுக்கும் வெளிப்­ப­டுத்தி அவரை பிர­ப­லப்­ப­டுத்­திய படங்கள். அவற்றால் கிடைத்த பிர­ப­லத்தின் பின்­னர்தான் எம்.எஸ்.வி. போன்ற நட்­சத்­திர இசை­ய­மைப்­பா­ள­ருடன் படம் பண்­ணத்­தொ­டங்­கினார். 
 
ஆனால், இவற்­றைப்­பற்றி எந்த நிரு­பர்­களோ டி.வி. தொகுப்­பா­ளர்­களோ எங்­குமே பால­சந்­தரைக் கேட்­ப­தில்லை பால­சந்­தரும் ஏனோ வி.குமா­ரைப்­பற்றி எங்கும் கூறி நான் கேட்­ட­தில்லை.
 
பல ஹிட் பாடல்­களைக் கொடுத்தும், பால­சந்­தரின் ஆத­ரவு இருந்தும், பல வெற்­றிப்­ப­டங்­க­ளிற்கு இசை­ய­மைத்­தி­ருந்தும் வி.குமாரால் 70 களின் நடுப்­ப­கு­திக்குப் பின்னர் ஒரு எல்­லைக்கு மேல் பய­ணிக்க முடி­ய­வில்லை. இதற்கு இளை­ய­ராஜா என்ற இளம் இசை­ய­மைப்­பா­ளரின் வரு­கையும் அவர் உரு­வாக்­கிய வித வித­மான பாடல்கள் மற்றும் பின்­ன­ணி­யி­சை­யுமே காரணம் என பலர் நினைக்­கலாம் அது ஓர­ள­வுக்கு ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்­டிய கார­ண­மாக இருந்­த­போ­திலும் என் மனதில் வேறு எண்­ணங்­களும் தோன்­று­கின்­றன.
 
ஒரு இசை­ய­மைப்­பா­ள­ரா­னவர் தான் இசை­ய­மைக்கும் படத்தின் ஒரு பாடலை அல்­லது இரண்டு பாடல்­களை மட்டும் ஹிட்­டாக்­கினால் போதாது. தொடர்ந்து வெற்­றி­களைக் கொடுக்க வேண்டும். அது­த­விர அவர் அமைக்கும் பின்­ன­ணி­யி­சை­யா­னது அதன் காட்­சி­க­ளுடன் பேச­வேண்டும். அந்த விட­யத்தில் வி.குமாரின் சாத­னைகள் என்று கூறக்­கூ­டி­யவை எவை என எனக்குப் புரி­ய­வில்லை.
 
வி.குமார் மிகச்­சி­றந்த சில மெல­டிப்­பா­டல்­களை தமிழ்த் திரை­யி­சைக்கு விட்டுச் சென்­றுள்­ளார்தான் ஆனால் அவர் தன்னை மென்­மேலும் வித்­தி­யா­ச­மா­ன­வ­ராக காட்ட முய­ல­வில்­லையோ என்றே நான் எண்­ணு­கின்றேன்.
 
அவர் வித்­தி­யா­ச­மாக செய்­துள்­ளது என எண்­ணும்­போது துள்­ளல் நடனப் பாடல்­க­ளுக்குப் பாடிக்­கொண்­டி­ருந்த எல்.ஆர்.ஈஸ்­வ­ரியை "காதோ­டுதான் நான் பாடுவேன்" என்ற சிறந்த மெல­டிப்­பா­டலைப் பாட வைத்து ஈஸ்­வ­ரியால் இப்­ப­டிக்­கூடப் பாட­மு­டியும் என நிரூ­பித்து வென்ற ஒரு விட­யமே நினை­வுக்கு வரு­கின்­றது.
 
எந்த ஒரு இசை­ய­மைப்­பா­ளரும் புதிது புதி­தாகத் தேட வேண்டும், நதி­போல ஓடிக்­கொண்டே இருக்க வேண்டும் குளம் போல தேங்­கக்­கூ­டாது அப்­படி ஓடிக்­கொண்­டி­ருப்­ப­தைத்தான் அவர்கள் புதிது புதி­தாகத் தேடு­வ­தாகக் கொள்­ளப்­படும். அந்த வகையில் தனக்குக் கிடைத்த படங்களில் ஓரிரு பாடல்களைக் ஹிட்டாக்கினாலே போதுமென நினைத்திராமல். புதியவைகளைப் பரீட்சித்திருந்தால் இந்தத் திறமைசாலி இன்னும் தொலைதூரம் நிதானமாகப் பயணித்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது.
 
வி.குமாரின் இசையமைப்பில் ஹிட்டான  சில பாடல்கள்:
 
* சிகப்புக் கல்லு மூக்குத்தி
* உன்னிடம் மயங்குகிறேன்
* புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்
* தேவன் கீதமும் கண்ணன் கீதையும்
* உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
* ஒருநாள் யாரோ
* மோகம் என்னும் ராகம் பாடும்
* மதனனோற்சவம் ரதியோடுதான்
* ஆடி அடங்கும்
* உன்னை தொட்ட காற்று வந்து
* நேற்று நீ சின்ன பப்பா
* கல்யாண சாப்பாடு போடவா
* வாழ்வில் சௌபாக்கியம்
* கண்ணொரு பக்கம்
* இளமை கோவில் ஒன்று
--
 
 
://www.metronews.lk/others.php?othernews=29&display=0#sthash.Nccr2peY.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகளும் வாழ்த்துக்களும் கலைச்செல்வன் .....இணைப்புக்கு நன்றிகள் ஆதவன்....

Link to comment
Share on other sites

வீ. குமார், ஏ.எம். ராஜா இருவரும்கூட எனக்குப் பிடித்த இசையமைப்பாளர்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக குறுகிய காலமே பயணித்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்த இன்னுமோர் இசையமைப்பாளர் 'சிற்பி'.

அற்புதமான பாடல்களைத் தருவார்

Link to comment
Share on other sites

பொன்னை நான் பார்த்ததில்லை
 
 
 
மிகவும் இனிமையான பாடல்.

ஒரு செவ்வியில் தனக்கு பிடித்த பாடலாக இப்பாடலை குறிப்பிட்டு இருந்தார்.
 
Link to comment
Share on other sites

1380404_10204710127254277_68922946411625

V .குமார் என்ற இந்த தமிழ் இசைஅமைப்பாளர், " மென்மையான மேலோடி கிங் "என்று அழைக்கப்பட்டவர், அவர் காலத்தில் இருந்த M S விஸ்வநாதன் ,K V மகாதேவனுக்கு சவாலாக அருமையான பல பாடல்களை MILD MELODY ஸ்டைலில் உருவாகினார்! "உன்னிடம் மயங்குகின்றேன் உளத்தால், நெருன்குகின்றேன் " என்றபாடலுக்கு அவர் இசைஅமைத்தபோது அந்தப் பாடலுக்கு இசைஞானி இளையராஜா கிடார் வாசித்ததாக சொலுறார்கள், அந்தப் பாடல் " தேன் சிந்துதே வானம் " என்ற ஒரு படத்தில் வந்ததாம்.,"உன்னிடம் மயங்குகின்றேன்" என்ற இந்தப் பாடல் ஸ்டைலில், வெஸ்டர்ன் "சோல் ." ப்ளூ கிராஸ் " கர்நாடிக் கலந்தது போல வேறு யாரும் பாடல் இசை அமைத்ததா எனக்கு தெரியவில்லை!

சத்தமில்லாமல் பல புதுமை செய்த V .குமார்ஐ தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தவர் டைரக்டர் K பாலச்சந்தர்,அதால் அவரும் எப்பவுமே அவரோட படங்களுக்கு இசை அமைதாரம், அதை பிடிக்காத அந்தகாலகட்ட " ஜாம்பவான்கள் " அவரை திடமிட்டு ஒதுக்கியதாக சொல்லுறார்கள் .மற்ற எல்லா துறைகளை விடவும் இசைதுறையில் உள்ளவர்களுக்கு போட்டி,பொறாமை, அல்டர் ஈகோ அதிகம் என்கிறார்கள்,,,ஜோசித்துப் பார்த்தல் இந்த உண்மை அப்பவும்தான் இப்பவும் தான் இந்தப்பாடலை நீங்கள் ரசித்தால் அதன் எல்லாப் புகழும் V ,குமார் என்ற இந்த இசை மேதைக்கே சேரும்...

 

https://www.youtube.com/watch?v=aa8Z72qh2P8

 

முகநூல்
நாவுக் அரசன் 
ஒஸ்லோ
Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றி ஆதவன் , இந்தப், பக்கத்தை எடுத்துத் தந்ததற்கு...! அவர் ஒரு அற்புதமான ஜாம்பவான், என்ன வெளிச்சம் படவில்லை....!

Link to comment
Share on other sites

பாடல்: ஓராயிரம் கற்பனை
படம்: ஏழைக்கும் காலம் வரும் (1975)

சரணத்தில் (நான் பாடும் ராகங்கள்..) மெட்டு அமைத்த விதம் எப்பிடி இருக்கு..?! 50px-Facebook_logo_thumbs_up_like_transptw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.