Jump to content

பலஸ்தீன சிறுமியின் துணிவு

Recommended Posts

பலஸ்தீன சிறுமியின் துணிவு
 
இஸ்ரேலியரை பார்த்து நீங்கள் பயங்கரவாதிகள் என்றும் முழு உலகமும் எம்பக்கம் என்கிறார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசட்டுத் துணிவு. எல்லாம் சரிதான். இஸ்ரேலியர்கள் பயங்கரவாதிகளாக இருக்கட்டும், ஆனால் பாலஸ்த்தீனர்கள் மட்டும் தேவர்களா? இருவரும்தானே அப்பாவிகளைக் கொல்கிறார்கள்.

இப்போது அரபுலகில் தனது சொந்த மத மக்களையே நாய்களிச் சுடுவதைப் போல வீதிகளில் சுட்டு வீசுகிறது ஐஸிஸ், அது என்னவாதம் என்று இந்த சிறுமிக்குச் சொல்லிக் கொடுத்தவர்கள் சொல்வார்களா??

Link to comment
Share on other sites

எதை வைத்து சிறுமிக்கு சொல்லிக்கொடுத்தார்கள் என்ற முடிவுக்கு வந்தீர்கள்??
ஐ எஸ் ஐ எஸ் ஐ ஏன் பலஸ்தீனதுக்குள் கொண்டு வந்து நுழைக்கிறீர்கள்?
பலஸ்தீனதுக்கும் இஸ்ரேலுக்கும் சொந்தமான நிலத்தில் ஏன் இஸ்ரேல் பலஸ்தீனியர்களீன் நிலத்தை அபகரிக்கிறது?
 பலஸ்தீனிர்களின் சிறிய இயக்கமாக உள்ள ஹமாசை ஏன் பலமுள்ள இஸ்ரேலால் அழிக்க முடியவில்லை??
 
அதி பலம் வாய்ந்த இஸ்ரேலின் கண் மூடித்தனமான தாக்குதலை நிறுத்த ஒரே வழி இஸ்ரேல் மக்கள் மீது தாக்குவது தான். லெபனானின் ஹிஸ்புல்லா மீதான தரை வழி தாக்குதலும் அவர்கள் இஸ்ரேல் மக்கள் மீது தாக்குதல் நடாத்த தொடங்கியதும் நிறுத்தப்பட்டது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5 வயது அரசியல் மேதையை இப்போதுதான் பார்க்கிறேன். எனக்கும் 5 வயதில் ஒரு மகள் இருக்கிறார்ள், ஆனால் அவளுக்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது. உங்களுக்கும் பிள்ளைகள் இருக்கலாம், அவர்களில் யாராவது 5 வயதில் இருந்தால், இதேயளவு அரசிய அறிவுடன் (நீங்கள் சொல்லிக் கொடுக்காத) இருந்தால் மகிழ்ச்சியே.

நீங்கள் அறியவில்லை என்பதற்காக அப்படி நடக்கவில்லை என்று சொல்வீர்களா?? பாலஸ்த்தீனத்தில் 4-5 வயதுப் பாலகர்களுக்கு முதன் முதலில் சொல்லிக் கொடுக்கப்படும் விடயம், இஸ்ரேலியர்கள் எமது எதிரிகள், ஆகவே அவர்களைக் கொல்வது அவசியம்.

நீங்கள் கேட்டதற்காக இங்கே ஒரு சில காணொளிகளை இணைத்திருக்கிறேன்.

பாலஸ்த்தீனத்துக்கும் ஐஸிஸ் அமைப்பிற்கும் உள்ள தொடர்பு முஸ்லீம்கள் என்பதுதான். முதலில் சுன்னி சியா என்று படுகொலை செய்து, அரபு நிலங்களையே ஆக்கிரமிக்கும் ஐஸிஸ் பற்றிப் பேசாத முஸ்லீம்கள் இஸ்ரேல் பற்றிப் பேசுவது வேடிக்கை.

இஸ்ரேல் இன்று ஆக்கிரமித்து நிற்கு நிலம் இஸ்ரேலுக்குச் சொந்தமானது. அரேபிய முஸ்லீம்கள் ஆக்கிரமிக்கும்வரை அது யூத நிலம்தான். இன்று மிகப்பெரிய பள்ளிவாசல் இருக்கும் ஜெருசலேம் பகுதி யூதர்களின் புனித பூமியாகவிருந்து அரேபிய ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதுதான். அதற்காக ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தவில்லை. அப்பகுதி இருவருக்கும் உரித்தானது என்பதுதான் எனது வாதம்.

ஹமாஸை அழிக்கமுடியாது, பாலஸ்த்தீனர்களினதும், அரபுலகினதும் ஆதரவு இருக்கும்வரை அவர்களை அழிக்கமுடியாது. ஆனால் இதேகேள்வியை நான் உங்களிடம் திருப்பி கேட்கலாம். மக்கள் ஆதரவு இருந்தும் ஏன் புலிகள் அழிக்கப்பட்டார்கள் ??

2000பாலஸ்த்தீனர்களைக் கொன்றதும் இஸ்ரேல் யுத்தத்தினை நிறுத்திக் கொண்டது. அதன் பக்க இழப்பு வெறும் 67 மட்டும்தான். ஆனால் சிங்களம் 150,000 பேரைக் கொன்றும் யுத்தத்தினை நிறுத்தவில்லை, அதனால்த்தான் புலிகளை அழிக்க முடிந்தது. அரபுலகம் போல புலிகளுக்கு ஆதரவு வெளியில் இருக்கவில்லை. இப்படி வெளிநாட்டு ஆதரவு ஹமாசுக்கோ அல்லது ஹிஸ்பொல்லாவுக்கோ இல்லாதிருந்தால் நிச்சயம் இவை இரண்டும் இஸ்ரேலினால் அழிக்கப்பட்டிருக்கும். ஒன்றை நினைவில் வைத்திருங்கள், 1967 இலும், 1973 இலும் மொத்த அரபுலகமும் இஸ்ரேல் மீது மேற்கொண்ட ஆக்கிரமிப்பு அழித்தொழிக்கும் போரை இஸ்ரேல் தனியாக நின்று வென்றது மட்டுமல்லாமல், பல இடங்களையும் கைப்பற்றிக் கொண்டது.

இஸ்ரேலின் தாக்குதல் நிறுத்தப்பட்டது பதில் தாக்குதலால்த்தான் என்று நீங்கள் நினைத்தால் அது முட்டாள்த்தனம். இஸ்ரேலின் எல்லைகளை பாலஸ்த்தீன ராக்கெட்டுக்கள் எட்டாத தூரம்வரை அதனால் பெருப்பிக்க முடியும், ஆனால் அதைச் செய்யவில்லை. மக்களை லட்சக்கணக்கில் கொலவதன்மூலம் சில ஆயிரம் தீவிரவாதிகளைக் கொன்று அழித்திருக்க முடியும், ஆனால் அதற்கு அரபுலகமோ, ஐ. நாவோ இடம் கொடுத்திருக்காது.

ஆக்கிரமிப்புத் தாக்குதலை நிறுத்துவதற்கான ஒரே வழி பொதுமக்கள் மீது திருப்பித் தாக்குவதுதான் என்றால், அது நமது விடயத்தில் ஏன் சரிவராமல்ப் போனது? தெற்கிலும், குடியேற்றக் கிராமங்களிலும் சிங்களப் பொதுமக்கள் மீதான தாக்குதல்களால் போரை முடிவிற்குக் கொண்டுவர முடிந்ததா எம்மால்? முறாக அழிக்கப்பட்டதைத் தவிர ?

இறுதியா நீங்கள் குத்திமுறியும் பாலஸ்த்தீனர்கள் 2009 இனவழிப்புப் போரி நடந்துகொண்ட விதம் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். எம்மீதான இனவழிப்பைப் பயங்கரவாதத்திற்கெதிரான போர், அழிக்கப்படவேனண்டியவர்கள் புலிகள் என்று அப்பாஸ் மகிந்தவுக்கு வாழ்த்துச் சொன்னதை நினைத்துப் பாருங்கள். இன்றுவரை ஐ.நா மனிதவுரிமைக் கவுன்ஸில் அமர்வுகளில் சிங்களத்துக்கெதிரான தீர்மாங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களில் அவர்களும் அடங்குவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசட்டுத் துணிவு. எல்லாம் சரிதான். இஸ்ரேலியர்கள் பயங்கரவாதிகளாக இருக்கட்டும், ஆனால் பாலஸ்த்தீனர்கள் மட்டும் தேவர்களா? இருவரும்தானே அப்பாவிகளைக் கொல்கிறார்கள்.

இப்போது அரபுலகில் தனது சொந்த மத மக்களையே நாய்களிச் சுடுவதைப் போல வீதிகளில் சுட்டு வீசுகிறது ஐஸிஸ், அது என்னவாதம் என்று இந்த சிறுமிக்குச் சொல்லிக் கொடுத்தவர்கள் சொல்வார்களா??

ஐயா ! பாலஸ்தீனர்களுக்கும் ஐ எஸ் ஐ எஸ் இற்கும் என்ன தொடர்பு?
உங்களுக்கு ஐ எஸ் ஐ எஸ் யை யார் இயக்குகிறார்கள் என்பது தெரியவில்லை. அவரும் முஸ்லிம் ஐவரும் முஸ்லிம் அகவே இரண்டையும் செர்த்துவோடுவோம் என்று நினைத்திருக்கிறீர்கள்.
நல்ல வேளை ............. அவரும் மனிதர் ஈழ தமிழரும் மனிதர் என்று எங்களை சேர்க்காமல் விட்டீர்கள். 
 
அந்த சிறுமியின் வரலாறு தெரியுமா உங்களுக்கு? அவளது அன்றாட வாழ்வு புரியுமா உங்களுக்கு?
இவளின் தந்தை பிறந்ததே நாடு என்ற பெயரில் சுற்றி அடைக்கபட்ட முள் வேலிகளுக்குள். அவருக்கு பிறந்தவள் இந்த சிறுமி. 
எழுத தெரியும் என்பதற்காக எழுதுகிறீர்களா ..........? அல்லது என்ன எழுதுகிறோம் என்று தெரிந்துதான் எழுதுகிறீர்களா?
 
40 வீதமான இஸ்ரேல்லியர்களே  இப்போதைய இஸ்ரேல்ன் மிருகத்தனத்தை வெறுக்க தொடங்கி  இருக்கிறார்கள். அவர்களுடைய நாடு ஐநாவல் உரிமம் பெற்று இருக்கிறது ........ அவர்களின் எல்லையை வரையறுக்க இஸ்ரெலியர்கள் யார்? இத்தனை கொடுமை செய்யும்போது ............. அவர்களுக்கு ஒரு குண்டை ஏறிய நியாமில்லையா?  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5 வயது அரசியல் மேதையை இப்போதுதான் பார்க்கிறேன். எனக்கும் 5 வயதில் ஒரு மகள் இருக்கிறார்ள், ஆனால் அவளுக்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது. உங்களுக்கும் பிள்ளைகள் இருக்கலாம், அவர்களில் யாராவது 5 வயதில் இருந்தால், இதேயளவு அரசிய அறிவுடன் (நீங்கள் சொல்லிக் கொடுக்காத) இருந்தால் மகிழ்ச்சியே.

நீங்கள் அறியவில்லை என்பதற்காக அப்படி நடக்கவில்லை என்று சொல்வீர்களா?? பாலஸ்த்தீனத்தில் 4-5 வயதுப் பாலகர்களுக்கு முதன் முதலில் சொல்லிக் கொடுக்கப்படும் விடயம், இஸ்ரேலியர்கள் எமது எதிரிகள், ஆகவே அவர்களைக் கொல்வது அவசியம்.

பல பலஸ்தீனிய குழந்தைகள் 6-7 வயதை அடைவதில்லை ......... அதற்கு முன்னமே இஸ்ரேல்  கொடிய அரசால் கொல்லபட்டு விடுவார்கள். அதனால் அவர்கள் இருக்குபோதே சொல்லிகொடுக்கிறார்கள் ... உங்கள் மூத்த அக்காவையும் அண்ணனையும் கொன்றது இஸ்ரெலியர்கள் என்று.
 
விஷ பாம்புகள் கூடிய பிரதேசத்தில் வாழும் சிறுவர்களுக்கு ........ விஷ பாம்புகள் பற்றி சொல்லி கொடுப்பதில் என்ன அவளவு பெரிய குற்றம் இருக்கிறது? 
பாம்புகளால் விஷம் ஏறி அவர்கள் இறந்த பின்பு ..... சொல்லி கொடுக்காமை அவர்கள் உயிரை மீழ பெற்று கொடுக்குமா? 

நீங்கள் கேட்டதற்காக இங்கே ஒரு சில காணொளிகளை இணைத்திருக்கிறேன்.

பாலஸ்த்தீனத்துக்கும் ஐஸிஸ் அமைப்பிற்கும் உள்ள தொடர்பு முஸ்லீம்கள் என்பதுதான். முதலில் சுன்னி சியா என்று படுகொலை செய்து, அரபு நிலங்களையே ஆக்கிரமிக்கும் ஐஸிஸ் பற்றிப் பேசாத முஸ்லீம்கள் இஸ்ரேல் பற்றிப் பேசுவது வேடிக்கை.

உங்களுக்கு கேட்கவில்லை என்பதற்காக .......... அவர்கள் உங்கள் வீட்டு வாசலிலா வந்து பேச முடியும்?
அதற்கான வசதி வாய்ப்புகள்தான் அவர்களுக்கு இருக்கிறதா??

இஸ்ரேல் இன்று ஆக்கிரமித்து நிற்கு நிலம் இஸ்ரேலுக்குச் சொந்தமானது. அரேபிய முஸ்லீம்கள் ஆக்கிரமிக்கும்வரை அது யூத நிலம்தான். இன்று மிகப்பெரிய பள்ளிவாசல் இருக்கும் ஜெருசலேம் பகுதி யூதர்களின் புனித பூமியாகவிருந்து அரேபிய ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதுதான். அதற்காக ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தவில்லை. அப்பகுதி இருவருக்கும் உரித்தானது என்பதுதான் எனது வாதம்.

உங்களுடைய வாதம் என்ன என்பது பாலஸ்தீனர்களுக்கு விடிவு தராது. அவர்களுடைய வாதம் நீதியானது என்றதன்பின்புதான் ஐநாவில் அவர்களுக்கு உரிமம் வேண்டும் என்று பெருவாரியான நாடுகள் வாக்களித்தார்கள். 
 
உங்களின் வாத படி பார்த்தால் ........... ஆப்ரிகா உலகில் உள்ள அனைவருக்கும் சொந்தம். அதை தற்போதைய ஆப்ரிக்கர்கள் உரிமை கோர முடியாது. வேண்டுமானால் எங்களுக்கு இருக்கும் அதே அளவு உரிமையை அவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கலாம். 
அங்கே டைமன் தங்கம் எண்ணை எல்லாம் இருக்காம் கேட்க நல்லா இருக்கிறது. 

ஹமாஸை அழிக்கமுடியாது, பாலஸ்த்தீனர்களினதும், அரபுலகினதும் ஆதரவு இருக்கும்வரை அவர்களை அழிக்கமுடியாது. ஆனால் இதேகேள்வியை நான் உங்களிடம் திருப்பி கேட்கலாம். மக்கள் ஆதரவு இருந்தும் ஏன் புலிகள் அழிக்கப்பட்டார்கள் ??

உங்கள் அளவிற்கு அறிவு பூர்வமாக கேள்விகள் எனக்கு வருகுதில்லை.
நேற்று இங்கே மழை பெய்தது .... இன்று பெய்யவில்லை. கடல் நீர் ஆவியாகி மழையாகும் என்றால்? இன்று நேற்று இருந்த இடத்தில் கடல் இருக்க வில்லையா? கடல் அதே இடத்தில் இருந்தும் ஏன் இன்று  இங்கே மழை பெய்யவில்லை ?? 

2000பாலஸ்த்தீனர்களைக் கொன்றதும் இஸ்ரேல் யுத்தத்தினை நிறுத்திக் கொண்டது. அதன் பக்க இழப்பு வெறும் 67 மட்டும்தான். ஆனால் சிங்களம் 150,000 பேரைக் கொன்றும் யுத்தத்தினை நிறுத்தவில்லை, அதனால்த்தான் புலிகளை அழிக்க முடிந்தது. அரபுலகம் போல புலிகளுக்கு ஆதரவு வெளியில் இருக்கவில்லை. இப்படி வெளிநாட்டு ஆதரவு ஹமாசுக்கோ அல்லது ஹிஸ்பொல்லாவுக்கோ இல்லாதிருந்தால் நிச்சயம் இவை இரண்டும் இஸ்ரேலினால் அழிக்கப்பட்டிருக்கும். ஒன்றை நினைவில் வைத்திருங்கள், 1967 இலும், 1973 இலும் மொத்த அரபுலகமும் இஸ்ரேல் மீது மேற்கொண்ட ஆக்கிரமிப்பு அழித்தொழிக்கும் போரை இஸ்ரேல் தனியாக நின்று வென்றது மட்டுமல்லாமல், பல இடங்களையும் கைப்பற்றிக் கொண்டது.

இஸ்ரேல் யுத்தம் செய்வது அமெரிக்கர்களின் வரி பணத்தில் ...... அவர்களின் இன அழிப்பு கட்டம் கட்டம் ஆனது.
அங்கீகரிக்க பட்ட நாட்டினுள் ஆக்கிரமிப்பு செய்வதற்கும்.
உள்நாட்டில் பயங்கரவதத்தை ஒழிக்கிறோம் என்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.

இஸ்ரேலின் தாக்குதல் நிறுத்தப்பட்டது பதில் தாக்குதலால்த்தான் என்று நீங்கள் நினைத்தால் அது முட்டாள்த்தனம். இஸ்ரேலின் எல்லைகளை பாலஸ்த்தீன ராக்கெட்டுக்கள் எட்டாத தூரம்வரை அதனால் பெருப்பிக்க முடியும், ஆனால் அதைச் செய்யவில்லை. மக்களை லட்சக்கணக்கில் கொலவதன்மூலம் சில ஆயிரம் தீவிரவாதிகளைக் கொன்று அழித்திருக்க முடியும், ஆனால் அதற்கு அரபுலகமோ, ஐ. நாவோ இடம் கொடுத்திருக்காது.

உங்களுடைய main topic என்ன என்று இனியாவது சொன்னால் நல்லாய் இருக்கும்.

ஆக்கிரமிப்புத் தாக்குதலை நிறுத்துவதற்கான ஒரே வழி பொதுமக்கள் மீது திருப்பித் தாக்குவதுதான் என்றால், அது நமது விடயத்தில் ஏன் சரிவராமல்ப் போனது? தெற்கிலும், குடியேற்றக் கிராமங்களிலும் சிங்களப் பொதுமக்கள் மீதான தாக்குதல்களால் போரை முடிவிற்குக் கொண்டுவர முடிந்ததா எம்மால்? முறாக அழிக்கப்பட்டதைத் தவிர ?

இதை யார் எப்போது செய்தார்?

இறுதியா நீங்கள் குத்திமுறியும் பாலஸ்த்தீனர்கள் 2009 இனவழிப்புப் போரி நடந்துகொண்ட விதம் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். எம்மீதான இனவழிப்பைப் பயங்கரவாதத்திற்கெதிரான போர், அழிக்கப்படவேனண்டியவர்கள் புலிகள் என்று அப்பாஸ் மகிந்தவுக்கு வாழ்த்துச் சொன்னதை நினைத்துப் பாருங்கள். இன்றுவரை ஐ.நா மனிதவுரிமைக் கவுன்ஸில் அமர்வுகளில் சிங்களத்துக்கெதிரான தீர்மாங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களில் அவர்களும் அடங்குவர்.

அமைச்சர் டகிளசிட்கும் தமிழர்களுக்கும் ஏதும் தொடர்பு இருக்கிறதா ??
கப்பாஸ் அப்பாஸின் கருத்து எப்படி பாலஸ்தீனர்களின் கருத்து ஆகும்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தச் சிறுமிக்கு எவரும் சொல்லிக் கொடுக்காமல் தானாகவே பேசுகிறார் என்பதற்கான பதில்தான் அது. நீங்களே சொல்லிவிட்டீர்கள், நச்சுப் பாம்புகள் பற்றி சொல்லித்தான் கொடுக்கவேண்டும் என்று, ஆகவே அந்தச் சிறுமி தானாகப் பேசவில்லை, பேச வைக்கப்பட்டிருக்கிறார் என்பது தெளிவு.

ஆப்பிரிக்காவில் மனித இனம் தோன்றியதற்கும் இஸ்ரேல் பாலஸ்த்தீனப் பிணக்கிற்கும் சம்மந்தமில்லை. நான் சொல்ல வருவது எமக்குத் தெரிந்த வரலாறு பற்றி . இன்று பாலஸ்த்தீனர்கள் வாழும் ஜெருச்சலேம் , பெத்லகேம் பகுதிகள் முன்னர் யூதர்களின் தாயகமாக இருந்த பகுதிகள். கிறீஸ்துவுக்குப் பின்னர் நடைபெற்ற ஆக்கிரமிப்புக்கள் போர்களுக்குப் பின்னர் அவை வேற்றினத்தவர்களின் ஆளுகைக்கு உற்பட்டு யூதர்கள் விரட்டப்பட்டதே நடந்தது. இப்போது மீண்டும் அந்தப் பகுதிகளுக்குள் யூதர்கள் வாழ விரும்புகிறார்கள். இது சரியென்று நான் வாதிடவில்லை. நடப்பதைச் சொல்கிறேன்.

உங்களின் மழை நீர், கடல், ஆவியாதல் வியாக்கியானங்களுக்குள் நேரத்தைச் செலவிட விரும்பவில்லை. நான் சொல்ல வந்தது இதுதான், இஸ்ரேலினால் ஹமாஸினை ஏன் அழிக்க முடியாமல் போனதென்று கேட்டிருந்தார். அந்தக் கேள்வியின் அர்த்தமே ஹமாஸிற்கு மக்கள் ஆதரவு இருக்கிறது, அதனால்த்தான் இஸ்ரேலினால் முடியாமல் இருக்கிறது என்பதுதான். என்னைப் பொறுத்தவரை மக்கள் ஆதரவு மட்டும் ஒரு இயக்கத்தின் இருப்பைத் தீர்மானித்து விடாது, வேறு காரணிகளும் இருக்கின்றன எனபதுதான். அதற்கு சிறந்த உதாரணம் புலிகளியக்கமும் நாமும். இதைத்தான் கூறியிருந்தேன்.

ஹமாஸும், ஹிஸ்பொல்லாவும் ஏன் அழிக்கப்படவில்லை என்றதற்கு நான் எழுதிய காரணத்துக்கு நீங்கள் எழுதியிருக்கும் அங்கீகரிக்கப்பட்ட நாடு, அங்கீகரிக்கப்படாத நாட்டின் கதைக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா என்று இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

ஹமாஸின் எதிர்த்தாக்குதல்தான் இஸ்ரேலினின் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது என்கிற நுணாவின் கருத்துக்கான பதில்தான் நான் குடியேற்றக் கிராமங்கள் பற்றி எழுதியது. புலிகள் சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் மீது தாக்கி அப்பாவிகளைக் கொல்லவில்லை என்று நீங்கள் இன்னும் நம்பினால், நான் சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. சின்ன உதாரணம், 1996 முல்லைத்தீவு ஓயாத அலைகள் பெருவெற்றிக்குப் பின்னர் தெகிவளைப் புகையிரத நிலையத்தில் வைத்து ரயில் மீது சூட்கேஸ் குண்டுவைத்து நூற்றுக்கணக்கான அப்பாவிகளைக் கொன்றது யாரென்று நினைக்கிறீர்கள் ? 2009 இல் போர் முடிவுறும் தறுவாயில் கூட கட்டுப்பெத்தை பயணிகள் பஸ்மீது கிளேமோர் வைத்து அப்பாவிகளைக் கொன்றது யார் ? ஆனால் இந்த தாக்குதல்களுக்கெல்லாம் நாம் வைத்த காரணமும் நியாயப்படுத்தலும், "வடக்கில் அடித்தால் தெற்கில் அடிப்போம்" என்பதுதான். (அதாவது நுணா சொல்வதைப் போல, "இஸ்ரேல் தாக்கினால் திருப்பித் தாக்குவோம், ராக்கெட் வீசுவோம், அதனால்த்தான் பயந்துபோய் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்திக்கொண்டது) ஆனால் இப்படியான தாக்குதல்களால் முள்ளிவாய்க்காலினைத் தடுக்கமுடியாமல்த்தான் போய்விட்டது.

எனது மெயின் டொப்பிக்கே என்னனவென்று தெரியாமல்த்தான் நீங்கள் இவ்வளவும் எழுதினீர்களா??

அமைச்சர் டக்கிளஸ் இருக்கட்டும். அப்பாஸ் பாலஸ்த்தீனர்களால் 2005 இல் 62% வாக்குகளைப் பெற்று தெரிவுசெய்யப்பட்ட பாலஸ்தீன ஜனாதிபதி. ஆகவே அப்பாஸின் கருத்து பாலஸ்த்தீனர்களின் கருத்துத்தான் என்று எண்ணித் தெரியாமல் எழுதிவிட்டேன். மன்னித்து விடுங்கள். அதுசரி, நீங்கள் பாலஸ்த்தீனர்கள் என்று குறிப்பிடுவது அவருக்கு வாக்களிக்காது விட்ட மீதி 38% வீதத்தினரையா?? சொல்லவேயில்லை ??!!!

Link to comment
Share on other sites

வீட்டோ அதிகாரம் +இஸ்ரேலின் சர்வாதிகாரம் 

உலகில் அதிகமான அளவில் கண்டனங்களை பெற்றுக்கொண்ட நாடு எதுவெனில் தயக்கமில்லாமல் இஸ்ரேல் தான்.மேலும் ஐநா சபையில் அதிகமான முறை வீட்டோ என்று அழைக்கப்படும் ரத்து அதிகாரத்தை கொண்டு காப்பாற்றப்பட்ட நாடும் இஸ்ரேல் தான்.கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பயங்கரவாத இஸ்ரேல் அரசு 98 முறை மனித உரிமை மீறல்களை அப்பாவி பாலஸ்தீனர்களுக்கு எதிராக நிகழ்த்தியுள்ளதாக ஐநா மனிதஉரிமை கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும் இஸ்ரேலிற்கு எதிராக கிட்டத்தட்ட 26 தீர்மானங்கள் ஐநா சபையில் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவில் வெற்றி பெற்றும் கூட வீட்டோ என்று அழைக்கப்படும் ரத்து அதிகாரம் மூலம் 26 தீர்மானங்களும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.இந்த 26 முறையும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இஸ்ரேலை காப்பாற்றிய ஒரே நாடு அமேரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.இப்படி அமெரிக்க தான் மட்டும் உலக நாடுகளில் ஆக்கிரமிப்பையும் அத்துமீறல்களையும் நிகழ்த்துவதோடு மட்டுமில்லாமல் இஸ்ரேல் என்ற பயங்கரவாத நாட்டையும் அப்பாவி பலஸ்தீன மக்களுக்கு எதிராக கொம்பு சீவி விடுவதை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.வீட்டோ அதிகாரம் என்று ஐநா சபையில் இருந்து நீக்கப்படுகிறதோ அப்பொழுது தான் ஐநா சபை மக்களுக்கான அமைப்பாக இருக்கும்.மற்றபடி சில நாடுகளின் சர்வாதிகார போக்கை ஆதரிக்கும் அமைப்பாக தான் இருக்கும்.

16217_179999242144937_1235992193_n.jpg?o

Link to comment
Share on other sites

பாலஸ்தீன வரலாறு - இஸ்ரேல் பற்றிய காந்தியின் கருத்து 

இஸ்ரேல் அரசு உருவாக ஆதரவு திரட்டுவதில் ஈடுபட்டிருந்த ஜியோனிசத் தலைவர்கள் தங்களுக்குச் சாதகமான அறிக்கை ஒன்றை மகாத்மா காந்தியிட மிருந்து பெறப் பெரிதும் முயன்றனர். அத்தகைய அறிக்கை தங்கள் நோக்கத்திற்கு மாபெரும் தார்மீக வலுச்சேர்க்கும் என்று அவர்கள் நம்பினர். ‘‘யூதர்கள் பாலான எனது பரிவு, நீதியைப் பார்ப்பதில் எனது கண்களை மறைத்துவிடவில்லை. தங்களுக்கென்று ஒரு தாய்நாடு வேண்டுமென்ற யூதர்களின் கோரிக்கையை என்னால் ஏற்க முடியவில்லை. மற்ற மக்களைப் போலவே அவர்களும் ஏன் தாங்கள் பிறந்து வளர்ந்த நாட்டையே சொந்த நாடாகக் கொள்ளக் கூடாது?’’ பாலஸ்தீனர்களது உரிமையைப் பற்றிப் பேசுகிறபோது, ‘‘ஆங்கிலேயர்களுக்கு எப்படி இங்கிலாந்து சொந்தமோ பிரெஞ்சுக்காரர்களுக்கு எப்படி பிரான்ஸ் சொந்தமோ அதைப் போலவே பாலஸ்தீனம் அராபியர்களுக்குச் சொந்தமானது. அராபியர்கள்மீது யூதர்களைத் திணிப்பது தவறானதும் மனிதத்தன்மையற்றதும் ஆகும். மானமிகு அராபியர்களை ஒழித்துப் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையுமோ யூதர்களின் தேசமாக்குவது என்பது மனித குலத்திற்கே எதிரான குற்றம்’’ என்றார் காந்தி. நேர்மையும் நீதியுணர்வும் கொண்ட யாருமே இஸ்ரேல் அரசை ஒருபோதும் ஆதரித்ததில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

285661_218313121646882_1465422018_n.jpg?

வடக்குக் கிழக்கு தமிழர் தாயகமும் இப்படித்தான் ஆகிக்கிட்டு இருக்குது. அங்கினை ஒரு இஸ்ரேல் தான். எங்களட்ட சிங்களவன்.. முஸ்லீம்.. சீனன்.. இந்தியன்.. அமெரிக்கன்.. பாகிஸ்தானியன்.. என்று எல்லாரும் பிடிங்கிறாங்கள்..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தச் சிறுமிக்கு எவரும் சொல்லிக் கொடுக்காமல் தானாகவே பேசுகிறார் என்பதற்கான பதில்தான் அது. நீங்களே சொல்லிவிட்டீர்கள், நச்சுப் பாம்புகள் பற்றி சொல்லித்தான் கொடுக்கவேண்டும் என்று, ஆகவே அந்தச் சிறுமி தானாகப் பேசவில்லை, பேச வைக்கப்பட்டிருக்கிறார் என்பது தெளிவு.

ஆப்பிரிக்காவில் மனித இனம் தோன்றியதற்கும் இஸ்ரேல் பாலஸ்த்தீனப் பிணக்கிற்கும் சம்மந்தமில்லை. நான் சொல்ல வருவது எமக்குத் தெரிந்த வரலாறு பற்றி . இன்று பாலஸ்த்தீனர்கள் வாழும் ஜெருச்சலேம் , பெத்லகேம் பகுதிகள் முன்னர் யூதர்களின் தாயகமாக இருந்த பகுதிகள். கிறீஸ்துவுக்குப் பின்னர் நடைபெற்ற ஆக்கிரமிப்புக்கள் போர்களுக்குப் பின்னர் அவை வேற்றினத்தவர்களின் ஆளுகைக்கு உற்பட்டு யூதர்கள் விரட்டப்பட்டதே நடந்தது. இப்போது மீண்டும் அந்தப் பகுதிகளுக்குள் யூதர்கள் வாழ விரும்புகிறார்கள். இது சரியென்று நான் வாதிடவில்லை. நடப்பதைச் சொல்கிறேன்.

உங்களுக்கு தெரிந்ததுதான் உலக வரலாறா? அதையும் தாண்டி அது நீள்கிறது எனபதே எனது நிலைப்பாடு. தற்போதைய அடக்குமுறைகள் பற்றித்தான் பேச முடியும். 1000 ஆண்டு முன்பு இருந்த வரைபடத்தில் இப்போ எந்த நாடு இருக்கிறது?அங்கே இஸ்ரேலின் கொடிய கொலை வெறியாட்டம் நடக்கிறது என்று நானும் நடப்பதைத்தான் சொன்னேன்.  

உங்களின் மழை நீர், கடல், ஆவியாதல் வியாக்கியானங்களுக்குள் நேரத்தைச் செலவிட விரும்பவில்லை. நான் சொல்ல வந்தது இதுதான், இஸ்ரேலினால் ஹமாஸினை ஏன் அழிக்க முடியாமல் போனதென்று கேட்டிருந்தார். அந்தக் கேள்வியின் அர்த்தமே ஹமாஸிற்கு மக்கள் ஆதரவு இருக்கிறது, அதனால்த்தான் இஸ்ரேலினால் முடியாமல் இருக்கிறது என்பதுதான். என்னைப் பொறுத்தவரை மக்கள் ஆதரவு மட்டும் ஒரு இயக்கத்தின் இருப்பைத் தீர்மானித்து விடாது, வேறு காரணிகளும் இருக்கின்றன எனபதுதான். அதற்கு சிறந்த உதாரணம் புலிகளியக்கமும் நாமும். இதைத்தான் கூறியிருந்தேன்.

ஓரிடத்தில் இல்லாமல் போனது இன்னோரிடத்தில் இருக்க முடியாதா??
மக்கள் ஆதரவு இருந்த புலிகள் அழிந்து போனால்.......... மக்கள் ஆதரவு இருக்கும் எல்லோரும் அழிந்து போவார்களா? 

ஹமாஸும், ஹிஸ்பொல்லாவும் ஏன் அழிக்கப்படவில்லை என்றதற்கு நான் எழுதிய காரணத்துக்கு நீங்கள் எழுதியிருக்கும் அங்கீகரிக்கப்பட்ட நாடு, அங்கீகரிக்கப்படாத நாட்டின் கதைக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா என்று இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

ஹமாஸின் எதிர்த்தாக்குதல்தான் இஸ்ரேலினின் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது என்கிற நுணாவின் கருத்துக்கான பதில்தான் நான் குடியேற்றக் கிராமங்கள் பற்றி எழுதியது. புலிகள் சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் மீது தாக்கி அப்பாவிகளைக் கொல்லவில்லை என்று நீங்கள் இன்னும் நம்பினால், நான் சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. சின்ன உதாரணம், 1996 முல்லைத்தீவு ஓயாத அலைகள் பெருவெற்றிக்குப் பின்னர் தெகிவளைப் புகையிரத நிலையத்தில் வைத்து ரயில் மீது சூட்கேஸ் குண்டுவைத்து நூற்றுக்கணக்கான அப்பாவிகளைக் கொன்றது யாரென்று நினைக்கிறீர்கள் ? 2009 இல் போர் முடிவுறும் தறுவாயில் கூட கட்டுப்பெத்தை பயணிகள் பஸ்மீது கிளேமோர் வைத்து அப்பாவிகளைக் கொன்றது யார் ? ஆனால் இந்த தாக்குதல்களுக்கெல்லாம் நாம் வைத்த காரணமும் நியாயப்படுத்தலும், "வடக்கில் அடித்தால் தெற்கில் அடிப்போம்" என்பதுதான். (அதாவது நுணா சொல்வதைப் போல, "இஸ்ரேல் தாக்கினால் திருப்பித் தாக்குவோம், ராக்கெட் வீசுவோம், அதனால்த்தான் பயந்துபோய் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்திக்கொண்டது) ஆனால் இப்படியான தாக்குதல்களால் முள்ளிவாய்க்காலினைத் தடுக்கமுடியாமல்த்தான் போய்விட்டது.

நீங்கள் புலிகளின் முக்கிய தளபதியாக இருந்து அந்த தாக்குதல்களை முன்னெடுத்ததோடு. நீங்கள் இஞ்ச அடிச்ச அங்கே அடிப்போம் என்று  அறிக்கையும் விட்ட விடயம் பற்றி எனக்கு துளியளவும் தெரியாது அதுதான் அப்படி எழுதினேன். 

எனது மெயின் டொப்பிக்கே என்னனவென்று தெரியாமல்த்தான் நீங்கள் இவ்வளவும் எழுதினீர்களா??

மாற்றி மாற்றி எழுதி கொண்டிருந்தால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்ற கேள்விதான் யாருக்கும் வரும். 

ஒரு கருத்தை நிறுவ முயன்றால்.... அதோடு நின்று அதற்கு ஆதரமனவையை வைத்து அதை நிறுவுவதுதான் உலக எழுத்து வழக்கம்.

அமைச்சர் டக்கிளஸ் இருக்கட்டும். அப்பாஸ் பாலஸ்த்தீனர்களால் 2005 இல் 62% வாக்குகளைப் பெற்று தெரிவுசெய்யப்பட்ட பாலஸ்தீன ஜனாதிபதி. ஆகவே அப்பாஸின் கருத்து பாலஸ்த்தீனர்களின் கருத்துத்தான் என்று எண்ணித் தெரியாமல் எழுதிவிட்டேன். மன்னித்து விடுங்கள். அதுசரி, நீங்கள் பாலஸ்த்தீனர்கள் என்று குறிப்பிடுவது அவருக்கு வாக்களிக்காது விட்ட மீதி 38% வீதத்தினரையா?? சொல்லவேயில்லை ??!!!

காசாவில் காமாசும் பெரும்பான்மை வாக்குளால் ஜெனநாயக ரீதியாக ஆட்சிக்கு வந்தவர்கள்தான். 

நுனாவிட்கு தனியாக பதில் எழுதுவது என்றால் ..... தனிமடலில் எழுதலாம்.
குறைந்த  பட்சம் மேற்கோள் காட்டியாவது  எழுதலாம்.
தனி கருத்தாக பத்தி செய்து விட்டு ........... பின்பு நுனாவிட்கு எழுதினேன் குனாவிட்கு எழுதினேன் .... என்றால்? நாங்கள் பதில் கருத்து எழுத முன்பு எல்லோருக்கும் யாருக்கு எழுதினீர்கள் என்று தனிமடலா இட முடியும் ??
Link to comment
Share on other sites

ஏப்ரல் 9 - 1948 ஆம் ஆண்டு சியோனிச யூத தீவிரவாத குழுக்களான செல் , இர்கம் மற்றும் ஹகனா (Tsel, Irgun and Hagana) ஒன்றிணைந்து அகண்ட இஸ்ரேல் என்ற கனவை நிறைவேற்ற அப்பாவி பாலஸ்தீனியர்களை தொடர் கொலைகள் மூலம் அவர்களின் பூர்வீக இடங்களில் இருந்து வெளியேற்றி வந்தனர்.அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 9 ஆம் நாள் இரவு நேரத்தில் டயர் யாசின் (Dair Yasin) என்ற இடத்தில் அந்த கோர சம்பவம் அரங்கேறியது.இரவு நேரத்தில் தொடங்கிய இந்த கோரத்தாக்குதல் மறுநாள் ஏப்ரல் 10 தேதி மதியம் வரை தொடர்ந்தது.பலஸ்தீனியர்கள் தங்களது வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த வேலையில் அவர்களின் வீடுகளை காட்டுமிராண்டி இஸ்ரேலிய பயங்கரவாதிகள் தரைமட்டமாக்கினர்.இது குறித்து இஸ்ரேலிய பயங்கரவாதி மணாசெம் பிகின் (Menachim Begin) "அரபிகள் தங்களது வீடுகள் பிள்ளைகள் மற்றும் மனைவியரை காப்பாற்ற உறுதியுடன் போராடினர் " என்று குறிப்பிட்டான்.இந்த கொடூரமான தாக்குதலில் கிட்டத்தட்ட 250 அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.

இந்த கோர சம்பவம் குறித்து தாக்குதலில் தப்பித்து வந்தவர்கள் கூறியது நெஞ்சை உறைய வைப்பவையாக இருந்தது.ஹலிமா என்ற பெண் கூறியதாவது " என் கண் முன்னே ஒன்பது மாத கர்பிணியான எனது சகோதரி சாலிஹா அல் ஹலபியை யூத ராணுவ வீரன் எந்திர துப்பாக்கியை கொண்டு தலையில் சுட்டுக் கொன்று பின்னர் தனது கையில் இருந்த கத்தியை கொண்டு இறந்துபோன பெண்ணின் வயிறை கிழித்து பிஞ்சு குழந்தையை வெளியில் எடுத்துக் கொன்றான்.(இந்த சம்பவம் 50 ஆண்டுகளுக்கு பின் 2002 ஆம் நடந்த குஜராத் கலவரத்தை நினைவுறுத்துகிறது.)" மேலும் ஹன்னா கலீல் என்ற மற்றொரு பெண் கூறியதாவது " இவர் கண் முன்னே யூத பயங்கரவாதி தன்னிடம் வைத்திருந்த மிகப்பெரிய கத்தியை கொண்டு இவரது அண்டை வீட்டை சேர்ந்த ஜமீல ஹபசு என்ற பெண்ணை தலையிலிருந்து பாதம் வரை வெட்டி உடலை இரண்டு கூறுகளாக துண்டாக்கியுள்ளான்.இதை போல இந்த மனித மிருகம் பாத்தி என்ற அண்டை வீட்டு பெண்ணையும் மேலும் பலரையும் கொன்றுள்ளான்."மேலும் சபியா என்ற பெண் கூறியதாவது "ஊரின் பெண்கள் பலரையும் கூட்டு பலாத்காரம் செய்ததையும் அவர்களின் உடல் உறுப்புக்களை வெட்டி கொடூரமாக கொலை செய்தத ஒரு பயங்கரமான நிகழ்வை தான் கண்டதாகவும் கூறினார்"

மிகப் பெரிய கூட்டுப் படுகொலை நடந்த பின்னரும் கூட அந்த இடத்திற்கு செஞ்சிலுவை சங்கத்தினரை பயங்கரவாத இஸ்ரேலிய ராணுவம் உடனடியாக அனுமதிக்கவில்லை.மாறாக தடயங்கள் அனைத்தையும் அளித்து பின்னர் மனித உரிமை அமைப்புக்களை சம்பவ இடத்திற்கு பயங்கரவாத இஸ்ரேலிய அரசு அனுமதித்தது.செஞ்சிலுவை சங்கத்தினர் இடத்தை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்ட அனைவரையும் அங்கிருந்து அப்புறப் படுத்தினர்.மேலும் தங்களால் முடிந்த வரை தடயங்கள் அனைத்தையும் அளித்தனர் இஸ்ரேலிய பயங்கரவாதிகள்.

இந்த சம்பவம் குறித்து கூறிய ஹக்னா தீவிரவாத குழுவின் தலைவன் இந்த சம்பவங்களுக்கு காரணமான சம்பத்தப்பட்ட யூதர்களுக்கு எதிராக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறினான்.அது வரை பலஸ்தீனியர்கள் ஆயுதங்கள் ஏந்தாமல் போராடினர்.இது பின்னாளில் பாலஸ்தீனர்கள் ஆயுதம் ஏந்தி தங்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடும் சூழ்நிலையை ஏற்படுத்தியது.

156974_178346752310186_366013569_n.png?o

https://www.facebook.com/pages/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/170818139729714?hc_location=timeline

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரை இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்த்தீனர்களுக்கும் அதிக வேறுபாடில்லை. இஸ்ரேல் பாலஸ்த்தீனத்தை ஆக்கிரமித்து நிற்கும் அதேவேளை, இஸ்ரேலினை உலக வரைபடத்திலிருந்து முற்றாக அழிப்பதென்று பாலஸ்த்தீனியர்கள் முரண்டு பிடிக்கின்றனர். ஆகவே இவர்களுக்கிடையிலான பிணக்கு முடிவடையப் போவதில்லை.

Link to comment
Share on other sites

பாரிய வேறுபாடு  சிறிலங்கா அரசு தமிழ் மக்களை ஒடுக்குவது போல் இஸ்ரேல் பலஸ்தீனிய மக்களை வதைக்கிறார்கள். பலஸ்தீனிய மக்கள் தமது எதிர்ப்பை ஆயுத ரீதியாகவும் அகிம்சை ரீதியாகவும் போராடுகிறார்கள். இஸ்ரேலின் அடாவடித்தனத்தை ஐ நாவில் 26 முறை தனது வீட்டோ சக்தியால் அமெரிக்கா காப்பாற்றி உலக சாதனை செய்துள்ளது.அத்தோடு ஆயுத குழு ஹமாஸ்  கடந்த தேர்த்தலில் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.