Jump to content

கத்தி திரைவிமர்சனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பல தடைகளை தாண்டி திரைக்கு வந்திருக்கும் படம் கத்தி. விஜய், சமந்தா, சதீஷ், நீல்நிதின் முகேஷ் நடித்துள்ள இந்த படம் இன்று ரசிகர்களின் பேராதரவோடு திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய்யுடன் முருகதாஸ் இணையும் இரண்டாவது படம் கத்தி.

கத்தின்னு தலைப்பு வெச்சுட்டாங்களே இந்த மாதிரி தலைப்பையெல்லாம் இயக்குநர் ஹரி படத்துக்குதானே இருக்கும்னு நினைச்சேன். கதிரேசன், ஜீவானந்தம் என்று இரட்டை வேடத்தில் விஜய் நடித்திருக்கிறார். தன்னூத்து என்கிற கிராமத்தில் இருக்கு வறட்சியை காரணமாக வைத்து ஐடி கம்பெனி ஒன்று அந்த கிராமத்தை விலைக்கு வாங்க முயற்சி செய்கிறது. ஆனால் அதே ஊரில் பிறந்து வளர்ந்த மேல்படிப்பு வரை படித்த ஜீவானந்தம் அதை தடுக்க முயற்சி செய்கிறார். தன்னூத்து என்கிற கிராமம் பல வருடங்களுக்குமுன் நல்ல செழிப்புடைய கிராமமாக இருந்ததும், அந்த கிராமத்தில் ஒரு நீர் ஊத்து கால்வாய் இருப்பதும் தெரிந்து கொண்டு அதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். ஆனால் இதை தடுக்க ஜீவானந்தத்தை கொலை செய்ய முயற்சி செய்கிறார் ஐடி நிறுவனத்தின் முதலாளியான நீல்நிதின் முகேஷ். கோர்ட்டில் கேஸ் போட்டு அதை நடத்துவதற்காக பணம் தேவை என்ற காரணத்திற்காக அந்த கிராமத்திலிருக்கும் அனைத்து ஆண்களும் வெளியூர் சென்று வேலைப்பார்க்கிறார்கள். சம்பாதிக்கும் பாதி பணம் வீட்டிற்கும், மீதி பணம் கேஸ் நடத்தவும் உதவுகிறார்கள்.

கொல்கத்தா சிறையில் கைதியாக இருப்பவர் கதிரேசன் இன்னொரு விஜய். அதே சிறையில் இருக்கும் ஒரு கைதி தப்பித்துவிட அவரை பிடிக்க கைதியான விஜய்யின் உதவியை நாடுகிறது போலீஸ், தப்பி சென்ற கைதியை பிடிக்க இவர் போடும் பிளான், அடங்கப்பா கைத்தட்டல்களை அள்ளுகிறது திரையரங்கில். தப்பிச்சென்ற கைதியை பிடிக்க உதவும் கதிரேசன். போலீசுக்கு டிமிக்கி காட்டிவிட்டு சென்னைக்கு வந்துவிடுகிறார். உடனே பாங்காக் செல்ல திட்டமிட்டுக் கொண்டிருக்க யதேர்ச்சையாக சமந்தாவை பார்க்கிறார். ‘இவள எப்படியாவது கரெக்ட் பண்ணிடனும்டா’ என்று விஜய் சொல்லும் அழகு ஐய்யோ… சூப்பர்ஜி…

சந்தர்ப்பமும், சூழ்நிலையும் கதிரேசனை ஜீவானந்தம் இடத்துக்கு வர நேர்கிறது. ஆரம்பத்தில் ஜீவானந்தம் யார் என்று தெரியாமல் கிடைத்த பணத்தை சுருட்டிக் கொண்டு பாங்காக் செல்ல திட்டமிடும் கதிரேசன். பின் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு ஜீவானந்தமாகவே மாறி எதிரிகளை நய்யப்புடைக்கிறார். படத்தின் இரண்டாம் பாதியில் கதிரேசன் செய்யும் அனைத்து காரியங்களும் நம் கண் இமை மூடாமல் சீட்டின் நுனிக்கு கொண்டு வந்துவிடுகிறது. இறுதியில் அந்த கிராமம் என்ன ஆனது? விவசாயிகளின் நிலை என்ன? என்பதே க்ளைமேக்ஸ்…

கதிரேசன், ஜீவானந்தம் என்று இரண்டு வேடங்களில் பட்டைய கிளப்பியிருக்கிறார் விஜய். இதுவரை விஜய் நடித்த இரண்டு வேடங்கள் படங்களில் இது வித்தியாசமனாதாகவும் விஜய்க்கு முக்கிய படமாகவும் இது அமைந்திருக்கிறது. பாடல்களில் எப்பவும்போல விஜய்யின் நடனத்தை குறை சொல்லவே முடியாது, அடிக்கடி இவர் காட்டும் அந்த குழந்தைதனமான சிரிப்பும், செய்கையும் மனதை அள்ளுகிறது.

சமந்தாவுக்கு தமிழில் ஒரு நல்ல படம் என்றால் அதில் கத்தி படம் முதல் இடத்தில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, பாடல் காட்சி, முத்தக்காட்சி என்று கதாநாயகியை பயன்படுத்தாமல் ஏ.ஆர்.முருகதாஸின் ஸ்டைலில் நாயகிக்கும் ஒரு முக்கிய பொருப்பை கொடுத்திருக்கிறார். வாழ்த்துகள் சமந்தா இனி சமத்தா நடிக்கனும் சரியா…

காமெடிக்கு சதீஷ், விஜய் இரண்டு பேரும் செய்யும் அட்டகாசம் கொஞ்சம் நஞ்சமல்ல, இருந்தாலும் சதீஷ்க்கு இடம் கொடுத்து அவரை வளர வைத்திருக்கிறார் விஜய். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பாதியில் கழண்டு கொள்ளாமல் படத்தின் இறுதி வரை பயணிக்கிறார்கள்.

இசை அனிருத். இளைஞர்களின் நாடி, நரம்பை தேடி தேடி அதை சுண்டிவிட்டும்படி பாடல்களை அமைத்திருக்கிறார். பின்னணி இசையில்தான் கொஞ்சம் அதிக கவனம் செலுத்தியிருக்காலாமோ என்று தோன்றுகிறது. ஒளிப்பதிவு ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் பாடல் காட்சிகளும், சண்டைக்காட்சிகளும் அவ்வளவு அற்புதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக “ஆத்தி என நீ” பாடல் இன்னும் கண்ணுக்குள்ளே நிற்கிறது…

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்று சொல்லும் பல அரசியல்வாதிகள் வெளிநாடு கம்பெனிகளிடமிருந்து கோடி கோடியாய் பணத்தை வாங்கிக் கொண்டு சொந்த பூமியை விபச்சார பூமியாக்கிக் கொண்டிருக்கிறோம். தினம் தினம் நாம் உண்ணும் உணவை வியர்வை சிந்தி உற்பத்தி செய்யும் விவசாயி ஒருவேளை உணவை வயிறு நிரம்ப சாப்பிடுகிறானா என்றால் அது கேள்விக்குறியே?… இப்படி ஒரு படைப்பை தர முன்வந்த விஜய்க்கும், ஏ.ஆர்.முருகதாஸ்க்கும் பெரிய நன்றி கலந்த வாழ்த்துகளை சொல்லியாக வேண்டும்.

மொத்தத்தில் கத்தி, சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்லும் புத்தி

http://kalasal.com/kaththi-movie-review/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தீபாவளியையே வேண்டாம் எண்டு சொல்லுற சனத்துக்கு.......
தீபாவளி வெளியீட்டு படம் மட்டும் வேணும்.... :lol:  :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தின் இரண்டாம் பாதியில் கதிரேசன் செய்யும் அனைத்து காரியங்களும் நம் கண் இமை மூடாமல் சீட்டின் நுனிக்கு கொண்டு வந்துவிடுகிறது. இறுதியில் அந்த கிராமம் என்ன ஆனது? விவசாயிகளின் நிலை என்ன? என்பதே க்ளைமேக்ஸ்…

 

 

தமிழ் படத்தில க்ளைமேக்ஸ் என்ன என்று சொல்ல மாட்டினமாமில்ல. முடியல்லடா சாமி...இவங்க பில்டப்...!!! :lol::D

உப்படி எத்தினையோ படம் வந்திட்டு. அப்ப.. கத்தி... மொட்டைக் கத்தி.. என்றீங்க. :icon_idea::)

Link to comment
Share on other sites

ஆயிரம் வார்தைகள் சொல்வதை ஒரு புகைப்படம் சொல்லிவிடும்..

ஆயிரம் புகைப்படம் சொல்வதை ஒரு திரைப்படம் சொல்லிவிடும்...

மீத்தேன் பிரச்சினையில் நாங்கள் ஆயிரம் பதிவுகளில் சொல்ல வேண்டியதை கத்தி என்னும் ஒற்றை திரைப்படம் சொன்னதில் மகிழ்ச்சி...

படம் துப்பாக்கி அளவு இல்லை... வழக்கமான முருகதாஸ் படமுமல்ல... ஆனாலும் ஒரு மனதிருப்தி...

லைக்கா மட்டும் கொஞ்சம் ப்ரச்சனை.

பூவதி முருகேஷ் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கத்தி சார்ப்பு பட் புடி லூசு  :D  :lol:

Link to comment
Share on other sites

இன்று தீபாவளி ரிலீஸ் கத்தியை உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறது அதற்கு ஆதரவாகவும் எதிர்மறையாகவும் ஸ்டேடெஸ் போட்டு பலர் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் இந்த படத்தின் கதையை நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் எனது நண்பன் கோபியிடம் கேட்டிருக்கிறேன், அவன் இதற்கு வைத்திருந்த பெயர் ’மூத்த குடி’. ஒன்றரை ஆண்டுகள் அவன் இயக்குனர் முருகதாஸ் அவர்களின் அலுவலகத்திற்கு சென்ற வண்ணம் இருந்தான், அவனுக்கு எல்லா உயரிய உபசரிப்புகளும் வழங்கப்பட்டது, இறுதி உபசரிப்பாக அவனது கதை களவாடப்பட்டுவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தான், வாய்தா மேல் வாய்தா, அவனது கதையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தான், வழக்கம் போலவே பணம் பாதாளம் வரை பாய்ந்தது, சாதி படுக்கை அறை வரை பாய்ந்தது, மிச்ச மீதி எல்லாம் பாய வேண்டிய அளவுக்கு பாய்ந்தது. இரு மாதங்கள் முன்பு நக்கீரன், ஜீவி யில் கோபியின் கதை பெரும் செய்தியாக பிரசூரமானது, ஆனால் இன்று மொத்த உலகமும் வேறு ஏதேதோ கதைத்துக் கொண்டும் கத்திக் கொண்டும் எல்லாவற்றையும் கடந்து செல்கிறது, ஒன்று மட்டும் நிச்சயம் இது போல் ஓராயிரம் கோபக்கள் சென்னையின் ஏதோ ஒரு மொட்டை மாடியில் இரவு உணவுக்கு வழி இல்லாமல் உறக்கமில்லாமல் புரண்டுகொண்டிருப்பார்கள், அல்லது தங்களின் அடுத்த கதையை பற்றி சிந்தித்துக் கொண்டு நட்சத்திரங்களையும் வான வேடிக்கைகளையும் பார்த்துக் கொண்டிருப்ப்பார்கள். உலகமே வழுத்தவர்கள் பக்கம் நின்றாலும் கூட எனது மனம் இவர்களின் பக்கமே நிற்க முயலுகிறது.

 

https://www.facebook.com

 

Link to comment
Share on other sites

ஏமாற்றுப்பேர்வழிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நங்கள் இப்போதைக்கு கத்தியை எடுக்காமல் இருப்பதே நன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏமாற்றுப்பேர்வழிகள்.

இசை யார் ஏமாற்றுக்காரர் முருகதாசா?...இவர்கள் சொல்வது மட்டும் எப்படி உண்மை என நம்புகிறீர்கள்?...அதுக்காக இப்படி ஏமாத்து வேலைகள் நடக்கவேயில்லை என சொல்லவில்லைகு:lol:

Link to comment
Share on other sites

இசை யார் ஏமாற்றுக்காரர் முருகதாசா?...இவர்கள் சொல்வது மட்டும் எப்படி உண்மை என நம்புகிறீர்கள்?...அதுக்காக இப்படி ஏமாத்து வேலைகள் நடக்கவேயில்லை என சொல்லவில்லைகு:lol:

தீபச்செல்வன் சொல்வதால் உண்மை இருக்கும் என நம்புகிறேன். :D சினிமா உலகில் உள்ளவர்களை நம்ப முடியாது. :huh:

பயணங்கள் முடிவதில்லை படத்தின் கதை தன்னுடையதுதான் என பாக்யராஜ் அண்மையில் சொல்லியிருந்தார்.. அதுவும் ஆர் சுந்தரராஜனை மேடையில் வைத்துக்கொண்டு.. :wub:

Link to comment
Share on other sites

இந்தியாவில் சினிமாவில் இவை மிக சகஜம் .முக்கால் வாசி திருட்டுத்தான் ,அதை எங்கே இருந்து திருடுகின்றார்கள் என்பதுதான் பிரச்சனை .

 

எந்திரன் கதை அப்படமான நான் வாசித்த ஒரு சிறுகதை .ரோபோ காதல் செய்வதெலாம் அதில் இருக்கு . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனத் திருப்தி என்னவென்றால் இங்கே யாருமே படத்தைப் பார்க்க வேண்டாம், அது மகிந்தவின் மைத்துனனான லைக்கா முதலாளியின் படம் என்று சொல்லாததுதான். வெளியே பொய்யிற்கு நான் இந்தப் படத்தைப் புறக்கணிக்கிறேன் என்று சொல்வதும், பின்னட் இன்ரர்நெட்டிலோ அல்லது தியெட்டரிலோ பார்ப்பதும் தேசியம் ஆகிவிடாது.

 

லைக்கா தமிழ்ப்படம் எடுக்கவில்லையென்றால் மட்டும் அவனது பனம் நல்ல பணமாகி விடுமா?? இன்று லைக்கா இலங்கையில் கைய்யடக்கத் தொலை பேசியில் ஒரு பெரிய பங்குதாரர்.

 

அவனுக்கு கத்தியில்லையென்றால், இந்தியில் குல்லாவோ, முல்லாவோ என்று படம் எடுக்கிறதில் அவ்வளவாக ஒன்றும் பிரச்சினையிருப்பதாக நான் நினைக்கவில்ல.

 

ஆகவே விரும்பியவர்கள் பாருங்கள், முடியாதவர்கள் விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்று சொல்லும் பல அரசியல்வாதிகள் வெளிநாடு கம்பெனிகளிடமிருந்து கோடி கோடியாய் பணத்தை வாங்கிக் கொண்டு சொந்த பூமியை விபச்சார பூமியாக்கிக் கொண்டிருக்கிறோம். தினம் தினம் நாம் உண்ணும் உணவை வியர்வை சிந்தி உற்பத்தி செய்யும் விவசாயி ஒருவேளை உணவை வயிறு நிரம்ப சாப்பிடுகிறானா என்றால் அது கேள்விக்குறியே?… இப்படி ஒரு படைப்பை தர முன்வந்த விஜய்க்கும், ஏ.ஆர்.முருகதாஸ்க்கும் பெரிய நன்றி கலந்த வாழ்த்துகளை சொல்லியாக வேண்டும்.

மொத்தத்தில் கத்தி, சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்லும் புத்தி

 
முருகதாஸ்: வெளிநாடு கம்பெனிகளிடமிருந்து கோடி கோடியாய் பணத்தை வாங்கி நாங்க வழங்கும் இப்படியான படங்களை பார்த்து வெளிநாடு கம்பனிகளுக்கு பணத்தை வாரி இறைக்கும் ரசிகர்களுக்கு நன்றி
 
 
 
விஜய்: எனது அறிவில் ஆதவ  ரசிக பெருமக்களே  பட இடைவேளைக்கு மறக்காமல் நான் ஸ்பொன்செர் பண்ணும் வெளிநாடு குளிர்பானத்தை குடித்து மகிழுங்கள்.
 
 
coca-cola-actor-Vijay-latest-stills-pics
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கடைசியா என்ன சொல்ல வாறீங்க.. கத்தி திருட்டுக் கத்தின்னா. அப்ப திருட்டு விசிடில வரேக்க பார்ப்பம் என்றீங்க. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருட்டு விசிடிகள் அல்ல இனி அவை மக்கள் விசிடிகள் .. என்று அழையுங்கள்!!

ஊழலுக்கு, மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பத்ற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் செய்யும் தமிழ்க திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு, நடிகர்களுக்கு திருட்டு விசிடிகள் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை... திருட்டு விசிடிகள் அல்ல மக்கள் விசிடிகள் .. 60 கோடிகள், 100 கோடிகள் ஊழல் செய்து மக்கள் பணத்தை கொள்ளை அடித்த தண்டனை குற்றவாளி மக்கள் முதல்வர் என்றால் 50 ரூபாய் விசிடிகள் திருட்டு விசிடியா அல்ல அவை மக்கள் விசிடிகள்... மக்களுக்கான விசிடிகளை கொண்டாடுவோம்..மக்கள் விசிடிகளை பரவலாக்குவோம்..! 

ஏழை மக்கள் புத்தம் புதிய திரைப்படங்களை பார்க்க உதவும் மக்கள் தொழிற்சாலைகள்தான் எளிய திருட்டு(மக்கள்) விசிடி தயாரிப்பு நிலையங்கள் ... அதை ஊக்கு விப்போம். கொள்ளை இலாபம் அடிக்கும் , ஊழல்-கொள்ளை-வரி ஏய்க்கும், ஆதரிக்கும் தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு, நடிகர்களுக்கு பாடம் புகட்டுவோம்..!! 

கத்தி, புலிபார்வை திரைப்படங்கள் புத்தம் புதிய மக்கள் விசிடிகள் கிடைக்கிறதா..?

https://www.facebook.com/natarajan.krishnan.1

 

----------

 

சரியாக ஐந்தாண்டுகள் இருக்கும். குமுதத்தில் இருந்த நேரம். பத்திரிகையாளர் தேவா மூலம் அறிமுகமானார் கோபி.அதிக படிப்பாளி. படைப்பாளியும்கூட. திரைப்படக்கதை மற்றும் இயக்கம் பற்றி பிரமிப்பாக பேசுவார். வீட்டிற்கு வந்தாரானால் மணிக்கக்கில் விவாதம் நீளும். அப்படித்தான் தண்ணீருக்கான அரசியல், பன்னாட்டு பெரு முதலாளிகளின் பங்கு என்ற விதத்தையும் விவரித்தார். அவரது பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து. எப்படி என்றால் திரைக்கதையாகவே. முற்போக்கு சிந்தனையோடு இப்படி மக்கள் பிரச்சனையை அனுகும் விதம் சினிமாவில் குறைவு.

இப்படியான சந்திப்பின் போதுதான் ஒரு நாள் எனக்கும் அவருக்குமான ‘எடக்கு முடக்கான’ கதையும் நடந்தது. “காவிரி தண்ணீர் பிரச்சனை என்றால் தஞ்சை விவசாயி மட்டும்தானே போராடுறான். அங்கிருந்து கொஞ்சம் விவசாயிகள் சென்னை வந்து நம்ப கண்ணு முன்னதான் போராட்டம், ஆர்ப்பாட்டம்னு நடத்துறான். இதை சென்னை வாசிகள் வேடிக்கை பார்த்தபடியே, ‘நமக்கென்ன வந்தது’ என்று போகிறானே ஏன். தண்ணீர் கஷ்டம் பற்றி அவனுக்கு தெரியல.

தெரியனும்னா என்ன செய்யனும் வீராணம் குழாய உடைக்கனும். பூண்டி நீர்தேக்கத்தை முடக்கனும். அதுவும் விவசாயிகளே செய்யனும். நமக்கு சோறு போடுற விவசாயிகளோட கஷ்டம் அப்பதான் இந்த நகரவாசிகளுக்கு புரியும். ரெண்டு நாள்..இரண்டே இரண்டு நாள், குடிக்கவும் குடிநீர் இல்லாம தவிச்சானா, காவிரி நதிநீர் பிரச்சனையும், தஞ்சை விவசாகிளோட போராட்டத்தையும் புரிஞ்சுக்குவான் இல்ல” என்று கோபி உணர்ச்சிவசப்பட்டு பேச, அது தீவிரவாதமில்லையா என்று நான் கூற, காவல்துறையை ஏவி மக்களை தாக்குவது என்ன புனித போராட்டமா, இல்ல தீவிரவாதமா என்று அவர் கேட்க கடைசியில் கரடுமுரடா முடிந்தது…

பிறகு ஒரு நாள் வந்தார். பிரபல! இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸிடம் இந்த கதையை பற்றி சொன்னதாக கூறினார். இன்னும் சில மாதம் கழித்து சந்தித்தபோது, ஷாட் பை ஷாட்டாக சொல்லி விவாதித்துள்ளேன். படத்தை அவர் தயாரிப்பதாகவும், நான் இயக்குவதாகவும் திட்டம் என்றார். மகிழ்ச்சி, தீவிர உழைப்பிற்கு வெற்றி கிடைக்கட்டும் என்றேன்.

அடுத்த ஓரிரு மாதம் கழித்து சந்தித்த போது ‘தினமும் முருகதாஸிடம் கதை விவாதம் நடப்பதாக சொல்கிறீர். முன்பணம் ஏதாகிலும் கொடுத்தாரா. அல்லது செலவுக்கு ஏதேனும் தந்ததாரா என்றேன். நக்கலாக சிரித்துவிட்டு ‘இந்த ஒன்னறை வருஷத்தில் நாலே நாலு இட்லி. ஒரு டீ அவ்வளவுதான் வாங்கிக் கொடுத்திருக்கிறார். பிறகு ஒரு தடவை நூறு ரூபாய் மட்டும் கொடுத்தார். அதுவும் அன்று இரவு விவாதம் முடிய நடுநிசியானது. போக்குவரத்து வாகனம் இல்லை என்பதால் அந்த 100 ரூபாய் கொடுத்தார் என்றார் வேதனையோடு.

இப்படி ஒன்னறை வருடமாக சிரமப்பட்டு போய் கதைசொல்லி விவாதித்து முடிந்த படம்தான் இன்றைய ‘கத்தி’ திரைப்படம்.

பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸே ‘சொந்தமா யோசிச்சு’ எடுத்த படம்….

போகட்டும். இந்த படம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் நண்பர் கோபி. இவருடைய கதை ஸ்கிரிப்ட், ஷாட் பை ஷாட்டாக கொடுத்திருந்தார். வழக்கு சொதப்பலானது. காரணம் வேற. இப்போது மீண்டும் புதிய வழக்கறிஞரை பிடித்து..மீண்டும் வழக்கு போட்டிருக்கிறார். ஆனால் நண்பர் கோபி நீதிமன்றத்தில் கதையை கொடுத்ததை போல தைரியமாக எதிர் தரப்பு கொடுக்கவில்லை. உதவாத காரணங்களை சொன்னது. இப்போது படத்தை பார்த்துவிட்டு கோபி கதறுகிறார். ஒவ்வொரு காட்சியும் நான் சொன்னதேதான். காவிரி விவசாயி பிரச்சனைகூட, பூண்டி நீர் தேக்கத்தை முடக்கனும், வீராணம் குடிநீர் குழாயை மூடனும் என்று சொன்னதைகூட எடுத்து காட்சி படுத்தியிருக்கிறார்கள். நான் நீதிமன்றத்தில் ஒப்படைத்த ஸ்கிரிப்ட்ல எல்லாமும் அப்படியே இருக்கு என்று புலம்புகிறார்.

பணபலம், அதிகார பலம், செல்வாக்கு எல்லாம் ‘எப்போதும் ஏற்றமாகவே’ இருந்துவிடுமா என்ன?

மீண்டும் வழக்கு தொடர்கிறது. இந்தமுறை தாஸுக்கு தாவு தீர்ந்துவிடும் என்கிறார்கள். பார்ப்போம்.

பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை.

உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை.

http://www.aanthaireporter.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%80-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/

Link to comment
Share on other sites

இவர் அவர் ஆனால் உழைப்பு வேறு ..

Link to comment
Share on other sites

"கத்தி படத்தை வெளியிட்டால் 150க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் அற வழியில்" போராடும் என்ற அறவிப்பு எல்லாம் வெளியிட்டுட்டு இப்ப லைக்கா பெயர் இல்லாததால் போராட்டம்  இல்லை சொல்லுராங்க . அப்ப இவ்வளவு நாளும் தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்துவோம்னு சொன்னது எல்லாம் பெயர மாத்துரதுக்குத்தானா?? 
 
 அடடா !!         "அறப்போராட்டம்" எல்லாம் காமெடி நீயுஸ் தெரியாமா சீரியஸா வாசிசுட்டுனே !! :(
Link to comment
Share on other sites

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவ மென்ப திழுக்கு

ஐயன் வள்ளுவர் அப்பவே சொல்லிவிட்டார். போராட்டம் என்று ஆரம்பித்தவர்கள் அதை செய்திருக்க வேண்டும். இப்போது அவர்கள் மக்கள் நம்பிக்கையை இழக்கிறார்கள்.

"கத்தி படத்தை வெளியிட்டால் 150க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் அற வழியில்" போராடும் என்ற அறவிப்பு எல்லாம் வெளியிட்டுட்டு இப்ப லைக்கா பெயர் இல்லாததால் போராட்டம் இல்லை சொல்லுராங்க . அப்ப இவ்வளவு நாளும் தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்துவோம்னு சொன்னது எல்லாம் பெயர மாத்துரதுக்குத்தானா??

அடடா !! "அறப்போராட்டம்" எல்லாம் காமெடி நீயுஸ் தெரியாமா சீரியஸா வாசிசுட்டுனே !! :(

Link to comment
Share on other sites

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவ மென்ப திழுக்கு

ஐயன் வள்ளுவர் அப்பவே சொல்லிவிட்டார். போராட்டம் என்று ஆரம்பித்தவர்கள் அதை செய்திருக்க வேண்டும். இப்போது அவர்கள் மக்கள் நம்பிக்கையை இழக்கிறார்கள்.

 

 

இவங்க போராட்டம் நடத்தா விட்டாலும்  பரவாயில்லை... சொல்லுகிற மொக்க காரணத்ததான் சகிக்க முடியல...
 
இந்த மாதிரி ஆட்கள் இப்படியும் சொல்லுவார்கள்...
"ராஜபக்சே என்கிற பெயர்தான் பிரச்சனை... அவர் நாளைக்கே ராஜான்னு பெயர் மாத்திகிட்டா எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்ல.. அவர் தமிழ்நாட்டுக்கு வரலாம் போகலாம்" 
Link to comment
Share on other sites

விஜய்யின் "கத்தி " வெளியீடு- இருவர் மரணம்.

 

286.jpgவிஜய்யின் "கத்தி " வெளியீடு- இருவர் மரணம்.

நீங்கள் விரும்புகின்ற அல்லது நேசிக்கின்ற ஒன்றின் மீது தீராத ரசிகனாக இருப்பதில் தவறொன்றும் இல்லை.ஆனால் வெறியனாக இருப்பதில் தான் விபரீதங்கள் நேர்கின்றன.அண்மைய நாட்களில் கத்தி திரைப்படம் மூலமாக நாம் அறிந்த தெரிந்த விடயங்கள் வேதனையை  கொடுத்து நிற்கின்றன.

ஒரு சமுதாய விழிப்புணர்வாகவும் இனிவரும் நாட்களில் நாம் இவ்வாறனவற்றை தவிர்ப்பது வேண்டாத உயிர்ப்பலியை தவிர்க்கும் என்பதற்காகவும்  இதனை உங்களோடு பகிர்கின்றோம்.

இந்தியாவின் பாலக்காட்டை அடுத்த வடக்கஞ்சேரியில் உள்ள ஜெயபாரத் திரை அரங்கில் ஒருவர் "கத்தி" திரைப்படத்திற்காகவைக்கப்பட்டிருந்த விஜயின் காட்சிப்பலகைக்கு பாலாபிஷேகம் மேற்கொள்ள முனைந்து  தவறி விழுந்ததில் மரணமடைந்திருந்தார்.

இதேபோன்றொரு இன்னொரு சம்பவமும் பதிவாகியிருக்கின்றது.சென்னையை அடுத்த திருநின்ற ஊரில் நடிகர் விஜயின் கத்தி படம் ரசிக்க வந்த ரசிகர்கள் மோதலால் திரையரங்கு உரிமையாளர் பரிதாபமாக பலியாகியுள்ளார். 

திரையரங்கு முன்னால்  ரசிகர்கள் இரு பிரிவினராக பிரிந்து  மோதலில் ஈடுப்பட்டனர். மோதலைத் தடுக்க முயன்ற திரையரங்கு உரிமையாளர் கிருஷ்ணன் கூட்டத்திற்குள் மாட்டிக்கொண்டார். இரு தரப்பினரிடமும் மாட்டிக்கொண்ட கிருஷ்ணன் பலத்த தாக்குதலுக்கு ஆளாகி மரணமானார்.

இளையதளபதி விஜய்யின் "கத்தி" திரைப்படம் சர்ச்சைகள் தாண்டிஇப்போது திரைக்கு வந்து தீபாவளி விருந்து படைத்தாலும்,இச்சந்தர்ப்பத்தில் இரண்டு உயிர்கள் அநியாயமாய் காவுகொள்ளப்பட்டமை கவலையே!

விரும்பும் ஒன்றில் ரசிகனாய் இருந்து ரசிப்போம் ,

வெறியனாய் இருப்பதை மட்டும் வேரோடு ஒழிப்போம். 

http://gossip.sooriyanfm.lk/286/2014/10/kaththi-relese-2-death

Link to comment
Share on other sites

அணைவரது தடையையும் மீறி இலங்கை சென்று மகிந்தவுக்கு வாலாட்டிய அசினை காவலன் படத்தில் கதாநாயகி ஆக்கிய போதே நாம் விஜய் என்னும் கூத்தாடியை தூக்கி எறிந்திருக்க வேண்டும்...... இதனை யாராவது சொல்லித் தான் நாம் செய்ய வேண்டும் என்றில்லை ........

மனிதராக இருப்பதால் எமக்கு கொஞசம் என்றாலும்  சூடு சுரணை , வெட்கம், மானம் , சுய அறிவு எல்லாம் இருக்கவேண்டும் .
Link to comment
Share on other sites

கத்தி விமர்சனம்

 

-எஸ் ஷங்கர் நடிகர்கள்: விஜய், சமந்தா, நீல் நித்தின் முகேஷ், சதீஷ் ஒளிப்பதிவு: ஜார்ஜ் வில்லியம்ஸ் இசை: அனிருத் தயாரிப்பு: கருணாமூர்த்தி இயக்கம்: ஏ ஆர் முருகதாஸ் ஒரு பெரிய ஹீரோ படத்தில், வெகுஜனங்களின் வாழ்வாதாரப் பிரச்சினை - விவசாயத்துக்கான தண்ணீரை குளிர்பான கார்ப்பொரேட்டுகள் திருடும் அயோக்கியத்தனம்- பற்றிப் பேசுவதை நினைத்தால் ஒரு சின்ன சந்தோஷம்.

 

 கத்தி விமர்சனம் ஆனால் அந்தப் பிரச்சினையைப் பேசுபவர்கள் யார் பாருங்கள்? இதே தமிழ் மண்ணில் நீர் வளமுள்ள பகுதிகளாகப் பார்த்து மெகா குளிர்பான ஆலைகள் அமைத்து தண்ணீர் உறிஞ்சிக் கொண்டிருக்கும் கோக் நிறுவனத்தின் விளம்பரத் தூதரான விஜய்யும், கார்ப்பொரேட் தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளையான இயக்குநர் ஏ ஆர் முருகதாஸும்.. என்ன ஒரு முரண்பாடு!! பெரிய லாஜிக் ஓட்டையுடன் ஆரம்பிக்கிறது கதை. கொல்கத்தா சிறையிலிருந்து தப்பிக்கிறான் ஒரு கைதி. அவனைப் பிடிக்க, அதே சிறையில் தப்பித்துச் செல்வதில் எக்ஸ்பர்ட்டான இன்னொரு கைதி கதிரேசன் (விஜய் நெ 1) உதவியை நாடுகிறது போலீஸ் (என்னா ஒரு டக்கு!). இதான்டா சான்ஸ் என்று எஸ்கேப்பாகிறான் கதிரேசன். கத்தி விமர்சனம் தப்பிச் செல்லும் முயற்சியில் இருக்கும்போதுதான் ஜீவானந்தம் (விஜய் நெ 2) என்பவனை சிலர் துப்பாக்கியால் சுடுவதைப் பார்க்கிறான். அவனைக் காப்பாற்றி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, கதிரேசனைத் துரத்தி வருகிறது கொல்கத்தா போலீஸ். அவர்களிடம் ஜீவானந்தத்தை சிக்கவைத்துவிட்டு, தப்பிக்கும் கதிரேசன், ஜீவானந்தம் நடத்தும் முதியோர் இல்லத்துக்கு வந்து சேர்கிறான்.

 

அங்கு தங்கி கிடைப்பதை சுருட்டிக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் எண்ணத்திலிருக்கும் கதிரேசனுக்கு, ஒரு கட்டத்தில் ஜீவானந்தத்தின் பின்னணி, மக்களுக்கான அவனது போராட்டம் புரிகிறது. அருமையான நீரூற்று ஓடும் வளமான அந்த கிராமத்தில், நீரை உறிஞ்சி குளிர்பான ஆலை அமைக்கப் பார்க்கிறது ஒரு பகாசுர குளிர்ப்பான நிறுவனம். அதைத் தடுத்து நிறுத்தப் போராடும் ஜீவானந்தத்தின் இடத்திலிருந்து மக்களையும் விவசாயத்தையும் எப்படிக் காப்பாற்றுகிறான் கதிரேசன், அந்த ஜீவானந்தம் என்ன ஆனான் என்பது மீதிக் கதை! கத்தி விமர்சனம் இன்றைக்கு மக்கள் முன் விஸ்வரூபமெடுத்து நிற்கும் தண்ணீர்ப் பிரச்சினை, அது எப்படி மண்ணின் மைந்தர்களை மீறி களவாடப் படுகிறது என்பதைக் கையிலெடுத்திருக்கிறார் இயக்குநர் முருகதாஸ். ஆனால் அந்த நல்ல விஷயத்தை அவரே கெடுத்திருக்கிறார், சொதப்பலான திரைக்கதை மூலம். இப்படி ஒரு வலுவான கதைக் களம் இருக்கும்போது, அதற்கான திரைக்கதையை ரமணா பாணியில் இறுகக் கட்டியிருக்க வேண்டாமா? ஆனானப்பட்ட விஜயகாந்தையே அந்த அளவு அடக்கி வாசிக்க வைத்து, பார்ப்பவர்களை ஆவேசப்பட வைத்த முருகதாஸ், இந்தப் படத்தில் கதிரேசன் விஜய்யை கோமாளித்தனமாகக் காண்பித்திருக்கிறார். காமெடி என்ற பெயரில் அந்த விஜய்யும் படுத்துகிறார். சமந்தாவை கொஞ்ச காலம் தமிழ் சினிமாவில் பார்க்காமல் இருந்தாலே தேவலாம். அவர் சிரிப்பு சாகடிக்கிறது (அழகால் அல்ல!). முதல் பாதி படம் எரிச்சலைக் கிளப்புவதில், விஜய் - சமந்தா காதல் காட்சிகளுக்கும் கணிசமான பங்குண்டு. சென்னைக்கு வரும் குடிநீரைத் தடுக்க விஜய் போடும் திட்டமெல்லாம், கத்தியில் காமெடி இல்லாத பஞ்சத்தைப் போக்க வரும் காட்சிகள்!

 

மீடியாவை ஒரு பிடி பிடித்திருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ். எத்தனை ஆண்டு கால கோபமோ.. அவரது விமர்சனங்களில் பாதியை ஏற்க முடியாது என்றாலும், மீதி உண்மைதான்! ஆனால் மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிகள் கார்ப்பொரேட்டுகளில் சோரம் போய் கள்ளமவுனம் காக்கும் தருணங்களில், இதே மீடியாதான் இப்போதும் விவசாயப் பிரச்சினையைப் பேசுகிறது, மோசடிகளை அம்பலமாக்குகிறது. இரட்டை வேடங்கள் விஜய்க்கு. தோற்றத்தில் பெரிய மாற்றமில்லை (அது வேலைக்காகாது என்று இயக்குநருக்கும் தெரியும் போலிருக்கிறது!). ஆனால் நடிப்பில் வித்தியாசம் காட்ட முயன்றிருக்கிறார். அந்த விருது வாங்கும் விழாவில் கதிரேசன் நடந்து கொள்ளும் விதம் ஏனோ அழகிய தமிழ் மகனை நினைவூட்டுகிறது! சதீஷ் என்ற நடிகர் செய்வதையெல்லாம் காமெடி என்று எடுத்துக் கொண்டால்... கஷ்டம்டா சாமி! வில்லனாக வரும் நீல் நிதின் முகேஷ் கவனிக்க வைக்கிறார். படத்தின் பல காட்சிகள், ஏற்கெனவே தமிழில் வெளியான பல படங்களை நினைவூட்ட, ஐயாம் வெய்ட்டிங் என விஜய் பஞ்சடிக்கும் இடம், இதே விஜய் - முருகதாஸ் கூட்டணியின் துப்பாக்கியை நினைவூட்டுகிறது. என்னாச்சு முருகதாஸுக்கு? ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் அந்த கிராமம் அழகு. அனிருத் இசை... இன்னும் கொலைவெறி வட்டத்தைத் தாண்டவே இல்லை. இதில் அவரிடமிருந்து காட்சிக்கேற்ற பிஜிஎம்மெல்லாம் எதிர்ப்பார்ப்பது நம்ம தவறு! ஏ ஆர் முருகதாஸ் எடுத்துக் கொண்ட களம் சரி... கதைப் பின்னல் சொதப்பல்!

 

 

Read more at: http://tamil.filmibeat.com/reviews/kaththi-review-031429.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகன்ற வெண் திரையில் இலண்டன் குடிமக்களோடு நானும் கத்தியைப் பார்த்து என்னையே நொந்தேன் :(

கத்தி என்னும் துருப்பிடித்த பிளேடு : மனுஷ்ய புத்திரன்

vijay-with-Murugadoss-in-kaththi-movie-s

இன்று காலை புதிய தலைமுறையில் கத்தி படம்பற்றி மிகவும் கடுமையான விமர்சங்களை முன்வைத்தேன். தோழர் அ.குமரேசன் நான் தூயகலைவாதம் பேசுவதாக அதைப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்றினார். நான் தூய கலைவாதமோதூய அரசியல் வாதமோ பேசவில்லை. அப்படி ஒன்று இருப்பதாகவும் நான் நம்பவில்லை. ‘கத்தி மக்கள் போராட்டங்களை கொச்சைப்படுத்துகிறது என்பதுதான் எனது வாதம். சினிமாவில்சில கம்யூனிஸ சார்பு வசனங்கள் இடம் பெற்றாலோ அல்லது சில மக்கள் பிரச்சினைகளை நமதுஹீரோக்கள் போகிற போக்கில் வசனங்களாக உதிர்த்தாலோ மக்களிடம் அதன் வழியாக பெரியவிழிப்புணர்வு வந்துவிடும் என்பது வேடிக்கை. எம்.ஜி.ஆரும் ரஜினியும் கமலஹாசனும்விஜயகாந்தும் பேசாத மக்கள் பிரசிச்சினைகளா?எவ்வளவு சோஷலிச வசனங்களை அவர்கள் உதிர்த்திருக்கிறார்கள்? உண்மையில் அந்தக் கருத்துக்கள் அவர்களது ஹீரோயிஸத்தைவளர்ப்பதற்கான பின்புலங்களாக பயன்பட்டிருக்கிறனவே தவிர எந்த ஒரு சமுக அரசியல் விழிப்புணர்வுக்கும்அவை பயன்பட்டதில்லை. நேற்று பண்ணையாரைஎதிர்த்து ஒர் ஹீரோ பேசினார் என்றால் இன்று கார்பரேட்டைஎதிர்த்துப் பேசுகிறார். இப்படியெல்லாம் காற்றில் துண்டு துண்டாக பரவும் சொற்களால்எந்தப் புரட்சியும் வந்த்ததாக சரித்திரம் இல்லை.

மேலும் அந்த சித்தரிப்புகள்அந்தப் பிரச்சினைகளை மேலோட்டமாக கையாளுகின்றன. மக்களிடம் நாம் செய்ய வேண்டியபணிகளுக்கு இந்தகையை அரைவேக்காட்டுதனமான அரசிய சவடால்கள் எந்த விதத்திலும்உதவப்போவதில்லை என்பதை விஜய் பேசும் வசங்களைப் பார்த்து ஆறுதல் அடைபவர்கள் உணரவேண்டும். ஆம் அரசியல் சார்ந்த நம் கைலாகாத தன்ங்களுக்கு இவை ஒரு அரைவேகாடுதனமானஆசுவாசத்தை அளிக்கின்றன. அதனால்தான் ராமநாராயணின் ஆடு மாடுகளை வைத்துஎடுக்கப்படும் படங்களால் எந்த அபயாமும் இல்லை;ஆனால் ஒரு சூப்பர்ஹீரோ முன்னால் மக்கள் ஆடுமாடுகள் போல பயன்படுத்தப்படும் இத்த்கைய போலி அரசியல்படங்கள் ஆபத்தானவை, அவை எப்போதும் போகாத ஊருக்கு வழிகாட்டுபவை என்று சொன்னேன்

விஜய் இந்தப் படத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஊழலுக்கும் எதிராக பேசும் சில வசனங்களைக் கேட்டு பலரும் புளகாங்கிதம் அடைகின்றனர். நமது அரசியல் சிந்தனைகள் எப்படி ’கத்தி’என்ற துருப்பிடித்த பிளேடால் மழிக்கப்படுகின்றனஎன்பதன் அடையாளம்தான் கத்தி.

தன்னூத்து என்ற கிராமத்தில் விளைநிலங்களை ஒரு பன்னாட்டு நிறுவனம் ரவுடிகளை பயன்படுத்தி அபகரிக்கிறது. ஜீவானந்தம்(விஜய்) என்ற இளைஞர் விவசாயிகளை திரட்டிப் போராடுகிறார். விவசாயிகளை கொலை செய்து அவர்கள் கட்டைவிரல் பதிவின் மூலம் போலி ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றன.ஊடகங்கள் இதைக் காட்ட மறுக்கின்றன. அந்த கிராம விவசாயிகள் சிலர் கூட்டாக தற்கொலை செய்து ஊடக கவனத்தை ஈர்க்கிறார்கள்.

கல்கத்தா சிறையில் இருந்து ஜீவானந்தத்தைப் போலவே உருவ அமைப்பு உள்ள கதிரேசன் என்ற கைதி( இன்னொரு விஜய்) தப்புகிறான். தப்பி வரும்போது பன்னாட்டு நிறுவனத்தின் அடியாட்களால் சுடப்படும் ஜீவானந்தத்தை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு ஜீவானந்தமாக நடித்து கதிரேசன் மக்கள் தலைவனாக மாறுகிறான். இன்டெர்நெட்டில் படித்து பிரச்சினைகளையெல்லாம் தெரிந்துகொள்கிறான். ஊடகங்களில் இந்தப் பிரச்சினையை தெரிய வைப்பதற்காக ஏரிகளில் இருந்து சென்னைக்கு குடி தண்ணீர் வரும் குழாய்களுக்குள் மக்களை இறக்கி தண்ணீர் வரவிடாமல் செய்து தன்னை நோக்கி ஊடகங்களை வரவழைக்கிறான். ஊடகங்களின் முன் விளைநிலங்கள் அபகரிக்கப்படுவதிலிருந்து தொடங்கி 2ஜி அலைக்கற்றை வரை 6 நிமிடம் பொரிந்து தள்ளுகிறார்.இதற்கிடையில் பல்வேறு அடிதடிகள் மூலம் கார்ப்பரேட் குண்டர்களை தனி ஒருவனாக துவம்சம் செய்கிறான். கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றாக கூடிப் பேசி(!) ஒரு கிராமத்திற்கு எதிராக சதி செய்கிறார்களாம். கதிரேசன் என்கிற விஜய் அதையெல்லாம் முறியடிக்கிறார்.

ஒரு முக்கியமான பிரச்சினையை எவ்வளவு மலினப்படுத்தமுடியுமோ அவ்வளவு மலினப்படுத்துகிறது இந்தப் படம். மக்கள் தலைவராக இருக்கும் ஜீவானந்தம் மிகவும் மங்கலான பலவீனமான கதாபத்திரமாக, எந்த நிலையிலும் அழுதுவிடுபவர்போலவே படம் முழுக்கக் காட்டப்படுகிறார். ஆனால் அடிதடிகளில் ஈடுபடுபவரும் குற்றப் பின்னணி கொண்டவருமான கதிரேசனாக வரும் விஜய்யோ எல்லையற்ற ஆற்றல் கொண்டவராக சித்தரிக்கப்படுகிறார்.ஒரு மக்கள் போராட்டத்தில் மக்களிடமிருந்து வரும் தலைவர்களை பலவீனமானர்களாகவும் வெளியே இருந்து வருபவர்களை ஆற்றல் மிக்கவர்களகாவும் காட்டுவதன் மூலம் போராட்டங்கள் அல்ல,தனிமனித சாகசங்களே வெற்றியைத் தேடித்தரும் என்ற மனநிலையை கட்ட விரும்புகிறது. மேலும் இது விஜய்யின் அரசில் கனவுகளை நேரடியாகப் பிரதிபலிக்கிறது. ‘நான் வந்து உங்களை மீட்பேன்’ என்று அவர் மக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்கிறார்.

மக்களின் போராட்டத்தை இந்த அளவு கொச்சைப்படுத்துகிற இந்த படம், ஒரு நல்ல ‘மெசேஜ்’ஜை சொல்வதாக நம்புகிறவர்களுக்கு ஒரு கேள்வி. தமிழில் எந்தப் படம்தான் நல்ல ‘மெசேஜ்’ சொல்லவில்லை?ஊழலுக்கும் லஞ்சத்துக்கும் எதிராக நமது ஹீரோக்கள் எவ்வளவு வசனங்களை உதிர்த்திருக்கிறார்கள். அதெல்லாம் சமூகத்தில் ஊழலுக்கு எதிரான மனநிலை எதையேனும் உருவாக்கியிருக்கிறதா?ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு கைது செய்யப்பட்டபோது பெரும்பாலான தமிழர்கள் ஜெயலலிதாவிற்காக இரக்கப்பட்டார்களே தவிர அவர் செய்தது தவறு என்று சொல்ல முன்வரவில்லை.அப்படியென்றால் ஊழலை எதிர்த்து எடுக்கப்பட்ட படங்களின் நிலை என்ன? வர்த்தக சினிமா எப்படி காதலையும் காமத்தையும் கேளிக்கையாக்குகிறதோ அதேபோலத்தான் சமூகப்பிரச்சினைகளையும் கேளிக்கையாக்குகிறது.இந்தக் கேளிக்கைகாக பிரச்சினைகள் வெட்டி சுருக்கப்படுகின்றன. உருமாற்றப்படுகின்றன.உண்மையான எதிரிகள் மறைக்கப்பட்டு போலி எதிரிகள் காட்டப்படுகிறார்கள். தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் உண்மையான மக்கள் மறைக்கப்பட்டு போலிப் போராளிகள் முன்னிறுத்தப்படுகிறார்கள்.

இந்தப் படம் எழுப்பும் விவசாயிகள் பிரச்சினையைப் பார்ப்போம்.விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு கூலித்தொழிலாளிகளாக மாறி நகரங்களிலும் வெளிநாடுகளிலும் குப்பை கூட்டுபவர்களாக வாழ்வதாகவும் அவர்கள் தங்கள் ஊருக்கு வந்து விவசாயம் செய்து வாழ ஆசைப்படுவதாகவும் இந்தப் படத்தில் காட்டப்படுகிறது. மேலும் விவசாயத்தின் அழிவிற்கான ஒட்டுமொத்த பழியும் பன்னாட்டு நிறுவனங்களின் தலையில் போடப்படுகிறது.

நமது கிராமங்களில் விவசாயத்தின் அழிவு பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே வருவதற்கு முன்பே தொடங்கிவிட்டது. உள்ளூர் ஆக்ரமிப்பு சக்திகளாலும் மணல் கொள்ளையர்களாலும் நமது நீர்நிலைகள் அழிக்கப்பட்டன. பூச்சிக்கொல்லி மருந்துகளால் நமது விளைநிலங்கள் பாழ்படுத்தப்பட்டன. விவசாயம் செய்வதற்கான செலவு பல மடங்கு அதிகரித்தது. ஆனால் விளைவித்த பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. கடன்பட்ட விவசாயிகள் இலட்சக்கணக்கில் நாடு முழுக்க தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார்கள். இதெல்லாம் நமது அரசாங்கங்கள் பின்பற்றிய மோசமான வேளாண் கொள்கைகள் காரணமாக நடந்தவை.

கார்ப்பரேட்டுகள் நமது அரசுகள் உருவாக்கிய புதிய பொருளாதார கொள்கைகள் வழியாக உள்ளே வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான நிலங்களை அரசு கையகப்படுத்திக்கொடுக்கிறது. நாடு முழுக்க கார்ப்பரேட்டுகளுக்காக நிலங்களைக் கையகப்படுத்தும் வேலையை அரசுகள் செய்கின்றன. இதை மக்கள் எதிர்க்கும்போது காவல்துறையை விட்டு ஒடுக்குகிறது. கார்ப்பரேட்டுகள் நேரடியாக அடியாட்களை வைத்து நிலங்களை அபகரிப்பதுபோல ஒரு சித்திரம் உருவாக்கப்படுகிறது. உண்மையில் பன்னாட்டு நிறுவனங்களின் அடியாட்களாகச் செயல்படுவது அரசும் அதிகார வர்க்கமும் காவல்துறையும்தான். ஆனால் இந்தப் படத்தில் ஏ.ஆர்.முருகதாஸின் சுட்டுவிரல்கூட அவர்களை நோக்கி நீள்வதில்லை. இதைக் கேள்வி கேட்க வேண்டிய இடதுசாரிகள் பலர் ‘விஜய் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகப் பேசிவிட்டார்.இனி மக்களிடம் விழிப்புணர்வு வந்துவிடும்’ எனமனக்கிளர்ச்சி அடைவதுதான் ஏன் என்று புரியவில்லை.

மக்களுக்கு உண்மையில் விஜய் இந்தப் படத்தில் பேசும் பிரச்சினைகள் எல்லாம் தெரியாதா?இன்று ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் இந்தப் பிரச்சினைகள் எல்லாம் அலசி ஆராயப்படுகின்றன.இதில் நூறில் ஒரு பங்கு கூட கத்தி படத்தில் ஆராயப்படவில்லை. மக்களுடைய துயரம் எல்லாம் இவற்றிற்கு எதிராக உண்மையிலேயே என்ன செய்யவேண்டும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை என்பதுதான். அவர்கள் எதிர்ப்பை வழிநடத்தும் வலுவான அரசியல் இயக்கங்கள் இல்லை.விஜய் காட்டிய வழியில் வீராணம் குழாயில் போய் உட்காருவதுதான் தீர்வு என இந்தப் படத்தை ஆதரிப்பவர்கள் நம்புகிறார்களா?

இன்னொன்று விவசாய கிராமம் என்ற புனிதக் கனவு ஒன்று இந்தப் படத்தில் காட்டப்படுகிறது. நமது கிராமங்கள் அவ்வளவு புனிதமானவையல்ல.இந்தப் படத்தில் சாதியக் கொடுமைகளுக்கு ஆளாகும் நிலமற்ற விவசாய கூலித்தொழிலாளிகளுக்கு எந்த இடமும் இல்லை. கிராமத்தில் இருக்கும் மனிதர்கள் கிராமங்களைவிட்டு வெளியேறுவதை பல சமயங்களில் ஒரு விடுதலையாகத்தான் நினைக்கிறார்கள்.அப்படி வெளியேறுபவர்கள் எல்லாம் கிராமத்தில் தங்களுக்கு கிடைத்த சாதிய இழிவைவிட நகரங்களில் குப்பை அள்ளினாலும் தலை நிமிர்ந்து வாழ்கிறார்கள். சாதியத்தின் பெண் அடிமைத்தனத்தின் கூடாரங்கள் நமது விவசாய கிராமங்கள்.

தனிமனித சாகசத்தை முன்வைக்கும் படத்திற்கு புரட்சிகர முலாம் பூசுவதைப் போன்ற ஆபத்து வேறு எதுவும் இல்லை.விஜய் ஒரு இடத்தில் வில்லனை பார்த்து ‘உன்னை 17 வயசுப் பையனை வைத்து கொல்வேன். அவன் மூணு வருஷத்துல வெளிய வந்துடுவான்’ என்று மிரட்டுகிறார். இளம் குற்றவாளிகள் பிரச்சினையை எவ்வளவு மோசமகா அணுகுகிறார் என்று பாருங்கள். இன்னொரு இடத்தில் கம்யூனிஸம் என்றால் என்ன என்ற கேள்விக்கு ‘உன் பசிக்கு மேல் நீ சாப்பிடும் ஒவ்வொரு இட்லியும் அடுத்தவனுடையது’ என்கிறார். 4ஜி லைசன்ஸ் வாங்குவதற்காக இங்கிலாந்து அரசியல்வாதிகளுக்கே இலஞ்சம் கொடுத்த லைக்காவின் தயாரிப்பில், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டதை கண்டித்து உண்ணாவிரதம் இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இந்தப் படத்தில் 2ஜி ஊழலைப் பற்றியெல்லாம் பேசுகிறார்.தில் இருந்தால் 1 ரூபாய் சம்பளம் வாங்கிய முதல்வர் எப்படி இத்தனை கோடி ரூபாய் சொத்துச் சேர்த்தார் என்று படத்தில் டயலாக் வைத்திருக்க வேண்டும். ஊடகங்களைப் பற்றி இந்தப் படம் வைக்கும் விமர்சனங்கள் எல்லாம் அபத்தத்தின் உச்சம். நமது ஊடகங்களில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் இந்த ஊடகங்கள் முன்வைத்த சமூகப் பிரச்சினைகளின் ஒரு நுனியைக்கூட தமிழ் சினிமா தொட்டதில்லை.

ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யின் இந்த மசாலா சகதியில் தங்களுக்கான புரட்சிகர பருக்கைகளைத் தேடுகிறவர்களை நினைத்தால் உண்மையிலேயே கண்ணீர் வருகிறது.

http://inioru.com/?p=42495

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.