Jump to content

யாழுக்கு சமர்ப்பிக்கின்றோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

10153713_10152396113007944_3553973248613

 

மேற்படி படம்.. பிரித்தானியாவில்.. பரிசில் பெற்ற.. முக்கிய அறிவியல் சஞ்சிகை ஒன்றில் பிரசுரிக்கப்பட தெரிவாகியுள்ளது.

 

காரணம்.. இந்தப் படத்தில் இருப்பது.. வெறும் பூவும்.. தேனீயும் அல்ல.

 

தேனீயைப் போல.. உருவ இசைவாக்கம் பெற்ற ஒரு வகை ஈ... என்பதாகும். உலக அளவில்.. தேனீக்களின் குடித்தொகை பல்வேறு காரணங்களால்..பெருமளவில் வீழ்ச்சி கண்டு வரும் நிலையில்.. பூக்களில் உள்ள மகரந்தத்தை ஒட்டி உணவு தேடி வாழும் இந்த ஈக்கள் தேனீக்கள் போல வேடமிட்டு.. எதிரிகளிடம் இருந்து தப்பும் தந்திரோபாயத்தை உபயோகிக்கின்றன. இந்தத் தோற்றம் அவற்றின் ஜீன்களில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டு அது டார்வினின் இயற்கைத் தேர்வுக் கொள்கைக்கு ஏற்ப தெரிவு செய்யப்பட்டு பெறப்பட்டுள்ளது ஆகும். இதன் மூலம் தேனீக்களுக்கு அச்சப்படும் எதிரி விலங்குகள்.. இந்த ஈக்களையும் கண்டு அஞ்சுகின்றன..!!

 

இது Myathropa florea என்ற உயிரியல் பெயரும்.... Hoverfly என்ற பொதுப்பெயரும் கொண்ட ஈ வகையாக இருக்கலாம் என்றே கருதப்படுகிறது. தமிழில் இதற்குரிய பெயர் என்ன என்று தெரியவில்லை..! தெரிந்தவர்கள் பகிர்ந்து கொண்டால் நல்லம்.

 

மேற்படி படத்தை எங்கள் வீட்டுத் தோட்டத்தில் கிளிக் செய்திருந்தோம். யாழுக்காக முகநூலுக்காக இயற்கையை படம் எடுக்கும் ஆர்வம் வரப்போய்த் தான்.. இந்த ஈயை அதன் இயல்புகளை அடையாளம் காண நேரிட்டது. அவற்றை சஞ்சிகைக்கு அனுப்பி வைக்கவும் முடிந்தது. அந்த வகையில்.. குறித்த சஞ்சிகை எமக்களித்த.. இந்த சிறிய ஊக்குவிப்பை.. யாழுக்கு சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

 

குறித்த சஞ்சிகையில்.. தனிப்பட்ட விபரங்கள் பகிரப்படும் ஆதலால்.. மேலதிக விபரங்களை இங்கு பிரசுரிக்க முடியாமைக்கு வருந்துகிறோம்.

 

519742656_0b2323bc8e.jpg

 

(நிஜ தேனீ)

 

honey-bee-wallpapers-3.jpg

 

மேற்படி படத்தில் உள்ள ஈ. (வேறு ஒரு புகைப்பிடிப்பாளரால்.. பிடிக்கப்பட்ட படம்.)

 

உருவ அமைப்பில் தேனீயைப் போலவே தோற்றமளிக்கும் ஈ.

 

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அண்ணா.மேலும் உங்கள் முயற்சிகள்,கண்டுபிடிப்புக்கள் தொடர வேண்டும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனை கண்டுபிடிப்பு என்று சொல்ல முடியாது.ஏலவே இந்த வகை ஈக்கள் உலகெங்கும் அறியப்பட்டுள்ளன. இது தேனீக்களின் வீழ்ச்சியோடு.. மகரந்தச் சேர்க்கையில் செலுத்தும்.. முக்கியத்துவம்.. தேனீக்களின் பிரசன்னம்.. தோட்டங்களில் குறைந்துள்ளமையும்.. இந்த ஈக்கள் மீதான கவனத்தை அதிகம் ஈர்த்து வருவதும்.. தான் முக்கிய விடயம். மேலும்.. இந்த ஈ வழமையான இதே இன ஈகளில் இருந்து சிறிது வேறுபட்டுள்ளது. அதற்காக இதனை கண்டுபிடிப்பு என்று சொல்ல முடியாது. ஒரு புதிய ஆதாரமாக.. அவதானிப்பாக.. மேலதிக ஆய்வுக்குரிய ஒன்றாக மட்டுமே கருத முடியும். :):icon_idea:

 

நன்றி யாயினி.. உங்கள் வாழ்த்துக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்து & நன்றி ஸார்.

அந்த சஞ்சிகையைக் கண்டுபிடிச்சுருவம்ல :D

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்.. இதை அப்பிடியே உங்கட கூட்டாளிகளுக்கும் சொல்லிடுங்க.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய அறிவியல் சஞ்சிகையில், பிரசுரிக்கப் பட இருக்கும் உங்கள் படத்துக்கும், உங்களுக்கும்... வாழ்த்துக்கள், நெடுக்ஸ். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  நெடுக்காலபோவான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துச் சொன்ன.. விருப்புச் சொன்ன எல்லா உறவுகளுக்கும் நன்றி. உங்களின் முன்னைய ஊக்குவிப்புக்களே.. இப்படி ஒன்றை செய்யத் தூண்டுதலாகவும் இருந்துள்ளது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் உடையார் அண்ணா மற்றும் கறுப்பி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், நெடுக்கர்!

 

காலம் காலமாக அப்பிள் பழங்கள் பூமியை நோக்கி விழுந்தாலும், அதற்கு விளக்கம் கொடுக்க ஒரு நியூட்டன் தேவைப்பட்டது!

 

அது போல எத்தனை ஈக்களைக் கண்டு இளித்து விட்டுப் போய்க்கொண்டிருப்போம்!

 

அதை எடுத்துக்காட்ட எங்களுக்கு ஒரு நெடுக்கர் கட்டாயம் தேவை!

 

யாழுக்கான உங்கள் சமர்ப்பணத்தினால் 'யாழ்'அன்னை நிச்சயம் பூரிப்படைவாள்!! நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், நெடுக்கர்!

 

காலம் காலமாக அப்பிள் பழங்கள் பூமியை நோக்கி விழுந்தாலும், அதற்கு விளக்கம் கொடுக்க ஒரு நியூட்டன் தேவைப்பட்டது!

 

அது போல எத்தனை ஈக்களைக் கண்டு இளித்து விட்டுப் போய்க்கொண்டிருப்போம்!

 

அதை எடுத்துக்காட்ட எங்களுக்கு ஒரு நெடுக்கர் கட்டாயம் தேவை!

 

யாழுக்கான உங்கள் சமர்ப்பணத்தினால் 'யாழ்'அன்னை நிச்சயம் பூரிப்படைவாள்!! நன்றிகள்!

 

இந்த ஈக்களின் நல்ல பக்கம்..

 

1. இவை மகரந்த சேர்க்கைக்கு உதவுவது.

 

2. தேனீக்கள்.. குளவிகள் போன்று காணப்படுவதால்.. அவை சார்ந்து அச்சப்படும்.. பீடைகளை கட்டுப்படுத்த இந்த ஈக்களை பாவிக்க முடியும். (biological pest control)

 

3. இவற்றை ஒப்பீட்டளவில் இலகுவாக.. மரபணு மாற்று தொழில்முறைக்கு உட்படுத்தி இன்னும் வினைத்திறனாக விவசாய நோக்கங்களுக்கு பாவிக்க முடியும்.

 

பாதகப் பக்கம்..

 

1. இந்த ஈக்கள் மூலம் பரவக் கூடிய தாவர நோய்கள்.

 

2. மற்றும் இவற்றின் வாழ்க்கை வட்டத்தில் உள்ள புழு நிலையில்.. அவை பயிர்களையே சாப்பிட நேரிடலாம் என்பது.

 

இவை குறித்த ஆய்வுகள் செய்யப்படுதல் அவசியமாகிறது..!

 

தேனீக்களின் குடித்தொகை வீழ்ச்சி என்பது உலக அளவில் விவசாய உற்பத்திகளில்.. பழங்களின் உற்பத்தியில் பாதிப்பை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற இன்றைய  நிலையில்.. இந்த ஈக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.. என்றால் மிகையாகாது..!

 

அதனால் தான்.. இந்தப் படத்துக்கு முக்கியம் அளித்திருக்க வேண்டும். மேலும்.. இந்த ஈ இதே வகை ஈக்களில் இருந்து சிறிது மாறுபட்டுள்ளது. இதனை.. அவற்றின் உப இனமாக (sub- species) அடையாளம் காண முடியுமா.. அல்லது இந்த வகை ஈக்களில் தொடர்ந்து ஏற்படும் இயற்கையான மரபணு மாற்ற நிலை இந்த மாற்றத்துக்குக் காரணமா என்று ஆராய வேண்டி உள்ளது.

 

அறிவியல் என்பது அவதானங்களில் இருந்தும்.. ஆதாரங்களில் இருந்தும்..எழும் வினாக்களுக்கு.. சரியான விளக்கத்தை.. விடையை தேடுவது என்பதாகும்..! அந்த வகையில்.. இந்தப் படம் பல வினாக்களுக்கு வித்திடுவதால் முக்கியம் பெறுகிறது என்று தான் கருதி இருக்கிறார்கள்...போல. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கு நன்றி புங்கை அண்ணா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் நந்து அண்ணா மற்றும் அன்புத்தம்பி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தம்பி

 

உங்கள் ஒவ்வொரு படியும் எமக்கானது

தொடருங்கள்

வாழ்க  வளமுடன்......

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நெடுக்ஸ் அண்ணா. :)

Link to comment
Share on other sites

நெடுக்கிடம் அம்பிடுகிறவை எல்லாரும் வேடதாரிகள்போலை.. :icon_mrgreen: என்ன நெடுக்கு நான் சொல்லுறது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கிடம் அம்பிடுகிறவை எல்லாரும் வேடதாரிகள்போலை.. :icon_mrgreen: என்ன நெடுக்கு நான் சொல்லுறது.. :D

 

 

சரி

எண்ணெய் ஊற்றியாச்சா.... :lol:  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.