Jump to content

"கத்தி" வெளியாக இருந்த தியேட்டர் மீது குண்டு வீச்சு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
சென்னையில் கத்தி திரைப்படம் வெளியாக இருந்த தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
 
001.jpgசென்னையில் நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படம் வெளியாக இருந்த தியேட்டர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல்நடத்தினர். இதையடுத்து தியேட்டருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
 
ராஜபக்சேவின் நிறுவனத்துடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறி 'கத்தி' திரைப்படத்தை தயாரித்த லைகா நிறுவனத்தை எதிர்த்து வரும் தமிழ் அமைப்புகள் ''கத்தி' படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என போராடி வருகின்றன. மேலும், தங்களின் எதிர்ப்பை எழுத்துப் பூர்வமாக திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இந்நிலையில், தீபாவளிக்கு வெளியாக இருக்கும் "கத்தி' திரைப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் தியேட்டரில் நேற்று இரவு 11.30 மணியளவில் தொடங்கியது. அப்போது அங்கு வந்த 30-க்கும் மேற்பட்டவர்கள், தியேட்டர் வாயிலில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்தெறிந்து, திரைப்படத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் தியேட்டர் மீது 3 பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் தியேட்டர் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. தியேட்டர் ஊழியர்கள் போராடித் தீயை அணைத்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

நக்கீரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளில் புதன் கிழமை கத்தி வெளியீட்டுக்கு ஆன்லைன் புக்கிங் எல்லாம் புள்ளாம்.

 

அங்க ராஜபக்சவின் பினாமி நிறுவனமாக உருவெடுத்துள்ள லைக்காவுக்கு எதிர்ப்பைக் காட்ட கத்தியை எதிர்க்கும் தமிழக மக்கள்..!!!

 

ஒரே இன மக்கள்.. இரு வேறு கோணங்களில்.. இரு வேறு பாதைகளில். இதுதான் எதிரிக்கு தெம்பை.. விலை கொடுத்து எம்மவரை வாங்க வசதியும் செய்து கொடுக்கிறது..!! :icon_idea::rolleyes:

Link to comment
Share on other sites

நேற்று திருமாவளவன் விட்ட அறிக்கையின் எதிரொலியோ என்னவோ??
 
நான் பச்சை தமிழன், மஞ்ச தமிழன் அப்படி இப்படின்னு டயலாக் விட்டுட்டு கத்தி படத்தை ஓட்ட  சுப்பிரமணி சுவாமி கிட்ட போய் உதவி கேக்குறாங்க!! சுப்பிரமணி சுவாமி ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது கேக்குறாரு ??  
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.