Jump to content

புலிகள் மீதான தடை இரத்து; மஹிந்தவுக்கு வழங்கப்போகும் வெற்றி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் கடந்த வாரம் இரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. தடை விதிப்பதற்காக முன்வைக்கப்பட்ட காரணங்கள் பொருத்தமில்லாத காரணத்தினாலேயே புலிகள் மீதான தடை இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பாட்டு நிலையில் இருந்து முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலேயே அவர்கள் மீதான தடை இரத்தாகியுள்ளது. இந்த தடை மீதான இரத்தினால் செயற்பாட்டு நிலையில் இல்லாத விடுதலைப் புலிகளுக்கு என்ன பயன்? புலிகளை முன்னிறுத்திய போராட்டங்கள் முடிந்துவிட்ட நிலையில், அது மக்களுக்கு என்ன மாதிரியானை பயனைத் தரும் என்கிற மாதிரியான வாதப்பிரதி வாதங்கள் தீர்ப்பு வெளியான நாள் முதல் பல தளங்களிலும் இடம்பெற்று வருகின்றன.

ஆனால், இலங்கையிலிருக்கும் தமிழ் மக்கள் மத்தியில் குறித்த தடை இரத்து குறித்து எந்தவிதமான சலனமும் இல்லை. அதனை அவ்வளவுக்கு கண்டுகொள்ளவும் இல்லை. ஏனெனில், விடுதலைப் புலிகளின் அழிப்போடு ஆயுதப் போராட்டங்களின் எல்லாத் தளங்களும் முடிவுக்கு வந்துவிட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். அதுவே, எதிர்கால யதார்த்தங்களைப் புரிந்து கொண்ட சரியான நிலை என்றும் கருதுகிறார்கள்.

விடுதலைப் புலிகள் மீதான தடை இரத்து தொடர்பில் இலங்கையிலிருக்கும் தமிழ் மக்கள் தான் அக்கறை கொள்ளவில்லையே தவிர, சிங்களப் பெரும்பான்மை அரசாங்கம் அதனை பெருமெடுப்பில் தேர்தல் அரசியலுக்காக முன்வைக்க ஆரம்பித்து விட்டது. அதுவும், வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய படை பரிவாரங்களுக்கு ஊடாக புலி மாயையை பெருமெடுப்பில் முன்னெடுக்கின்றார். ஏனெனில், அது, தேர்தலை வெல்லும் சூத்திரம் என்று அவரும், அவர் தலைமையிலான அரசாங்கமும் நம்பிக்கை கொண்டிருக்கின்றது.

அதன் உச்ச கட்டம் என்னவெனில், எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கும் இடையில் காணப்பட்டுள்ள இணக்கப்பாட்டின் பிரகாரமே ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளதாகவும், மீண்டும் புலிகளின் பெரும் உருவாக்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதவி புரிவதாகவும் அரசாங்கம் குற்றச்சாட்டுக்களை கடந்த நாட்களில் முன்வைக்க ஆரம்பித்து விட்டது.

அதற்கு, ஜனாதிபதியும், அரசாங்கமும் ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய பிரித்தானிய விஜயத்தினை காரணமாகவும் முன்வைக்கின்றன. கொழும்பின் வீதிகளில் புலிகளின் தடை நீக்கத்துக்கு காரணமான எதிர்க்கட்சித் தலைவர் யார்?, என்ற கேள்விகளை முன்வைக்கும் சுவரொட்டிகளையும்  காண முடிந்தது.

இன்னொரு புறத்தில், அறிக்கைகளினூடு அரசியல் முன்னெடுப்புக்களைச் செய்து வரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரியும் விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். புலம்பெயர் தமிழ்ச் சமூகம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் இணக்கத்தோடு அது, சாத்தியமாகலாம் என்ற ரீதியிலான கருத்தையும் முன்வைத்திருக்கின்றார்.

மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டுக்குள் மீண்டும் புலிப் பூச்சாண்டியை முன்னிறுத்தி சிங்களப் பெரும்பான்மை அரசாங்கம் அரசியல் செய்கின்ற போது, முதுபெரும் தமிழ் அரசியல்வாதியான ஆனந்தசங்கரியின் மேற்குறித்த கருத்து சிங்கள பெரும்பான்மை வாதத்துக்கு எண்ணை ஊற்றி எரியவிடும் வகையிலானது. ஆனந்தசங்கரி அவர்களின் தேர்தல் அரசியல் தமிழ் மக்களினால் நிகாரிக்கப்பட்ட நிலையில், அறிக்கை அரசியல் தமிழ் மக்களை சிக்கலுக்குள் தள்ளுவதாக அமைகின்றது.

இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை மீதான இரத்து யாருக்கு என்ன பயனைக் கொடுக்கப் போகின்றது? அதற்கு, சர்வதேச ரீதியில் புலிகளின் சொத்துக்களை (குறிப்பாக பிரித்தானியா தவிர்த்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில்) தனிப்பட்ட நபர்கள் சிலர் கையாள்வதற்கான வாய்ப்புக்கள் உருவாகம் என்று நம்பப்படுகின்றது.

விடுதலைப் போராட்டத்திற்கான ஆதாரமாக புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினால் பெருமளவாக வழங்கப்பட்ட நிதியுதவிகளை தனிப்பட்ட நபர்கள் தங்களது தனிப்பட்ட வியாபார தேவைகளுக்கு கையாளும் சூழல் உருவாகுவது என்பது தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையையும் வழங்காது. மாறாக, அதை சட்ட ரீதியான அமைப்பினூடு பெற்றுக் கொண்டாலும் அது, தமிழ் மக்களுக்கான பயனை வழங்குவதற்கான சாத்தியங்களும் இல்லை.

ஏனெனில், மோதல்களின் கோரத்துக்குள் சிக்கி வாழ்வாதரத்துக்கான உதவிகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கும் பயன்படும் வாய்ப்புக்கள் இல்லை. அதனை, இலங்கை அரசாங்கம் என்றைக்கும் அனுமதிக்காது.

நிலைமை இப்படியிருக்க, விடுதலைப் புலிகள் மீதான தடை இரத்து என்பது ஐரோப்பிய ஒன்றியத்தையும், ஏனையை நாடுகளையும் முறையான ஆதாரங்களுடன் போராட்ட அல்லது பயங்கரவாத அமைப்புக்களைத் தடை செய்யக் கோருவதற்கான முன் ஆணையை வழங்குவதாகவே அமையும். அது, சர்வதேச ரீதியில் எதிர்காலத்தில் முன்னுதாரணமாக கொள்ளப்படும். மற்றப்படி, ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் வெளிப்படையாக விடுதலைப் புலிகளாக தங்களை முன்னிறுத்தும் குழுக்கள் உருவாகும் வாய்ப்புக்களை சில வேளை உருவாக்கலாம். ஆனால், அதற்கான வாய்ப்புக்கள் என்பது மிகவும் குறைவு.

இவ்வாறான நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை இரத்து, இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சியில் அமர்த்துவதற்கு துணை செய்வதாகவே அமையும். மற்றப்படி, தமிழ் மக்களுக்கும், செயற்பாட்டு நிலையிலிருந்து அழிந்து போன விடுதலைப் புலிகளுக்கும் எந்த நன்மையையும் கொடுக்கப் போவதில்லை. அவ்வாறானதொரு நிலையில், ஊடகங்களும், புலம்பெயர் சமூகத்தின் சில கூறுகளும் கொள்ளும் ஆர்ப்பரிப்புக்கள் அர்த்தமற்றவை!

Link to comment
Share on other sites

புலம்பல்கள் பலவகைப்படும் . :lol:

Link to comment
Share on other sites

ஆனால், இலங்கையிலிருக்கும் தமிழ் மக்கள் மத்தியில் குறித்த தடை இரத்து குறித்து எந்தவிதமான சலனமும் இல்லை. அதனை அவ்வளவுக்கு கண்டுகொள்ளவும் இல்லை.

இது தவறு. இலங்கையில் இருந்து கருத்து வெளியிட்டால் பிரச்சினை என தெரிந்தும் பலர் முகநூலில் இது பற்றி எழுதியுள்ளார்கள். சிலர் மறைமுகமாக சுட்டிக்காட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று அரசுக்கெதிரான சிங்கள இணையம் ஒன்றில் இந்தத் தடை தொடர்பான கட்டுரை ஒன்றை படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. சந்திரிக்காவினதும், ரணிலினதும் நெருங்கிய நண்பரும், 2006 சந்திரிக்கா அரசில் அரசில் வெளியுறவுத்துரை அமைச்சராகவுமிருந்த மங்கள சமரவீரவின் பேட்டியுடன் அந்தக் கட்டுரை அமைக்கப்பட்டிருந்தது.

 

அதில், 2006 தானே முன்னின்று ஐரோப்பிய நாடுகளில் புலிகளைப் பயங்கரவாதிகளாகக் காட்டித் தடை செய்ய வேண்டும் என்று கடமையாற்றி வந்ததாகக் கூறியிருந்தார். அப்படி தான் பல ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து தமது கோரிக்கைக்கு இணங்கவைக்க முயன்ற வேளையில், 7 நாடுகள் மட்டும் தமது நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகள் தடை செய்யப்படுவது சாத்தியப்படாமல்ப் போகலாம் என்று தமது அரசு அஞ்சியதாகவும் கூறியிருந்தார். ஏனென்றால், புலிகள் ஐரோப்பிய நாடுகளில் வலுவாகக் காலூன்றி நிதிச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்ததாகவும், இடந்த நிதியினைக் கொண்டு அரசுக்கெதிராக கடுமையான யுத்தமொன்றினை நிகழ்த்தும் திறனைப் பெற்றிருந்ததாகவும் கூறியிருந்தார்.

 

ஆகவே எப்பாடுபட்டாவது புலிகளுக்கு ஐரோப்பாவிலிருந்து கிடைத்து வந்த பணத்தினைத் தடுத்து நிறுத்தி அவர்களைப் பலவீனப்படுத்துவது தமது பிரதான நோக்கமகா இருந்ததாகக் குறிப்பிடும் அவர், இதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலராக இருந்த கொண்டலீஸா ரயிஸையும், ஆசியாவுக்கான அமெரிக்க பாதுகாப்புச் செயலராக இருந்த கிளென் பார்ன்ஸையும் அனுகியதாகவும், இவர்களிருவரதும் கடுமையான அழுத்தங்களுக்குப் பின்னர் அந்த 7 நாடுகளும் தடைக்குச் சம்மதித்ததாகவும் கூறுகிறார்.

 

இவ்வாறு தமது அயராத முயற்சியினால் கொண்டுவரப்பட்ட தடையானது புலிகளைப் பலவீனப்படுத்தி இறுதியில் முற்றாக அழிக்க ஏதுவாகியது என்றும் கூறும் அவர், இந்தத் தடையினால் புலிகளது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, சொத்துக்கள் புலிகளிடமிருந்து பிடுங்கப்பட்டதாகவும் கூறுகிறார்.

 

ஆனால் இப்போது வந்துள்ள தடை நீக்கத்திற்கான நீதிமன்ற உத்தரவென்பது மகிந்த அரசின் கையாலாகாத்தனமாக வெளியே தெரிந்தாலும் கூட, இது மகிந்த அரசினால் விரும்பி வரவழைக்கப்பட்ட ஒரு தீர்ப்பாக இருக்கலாம் என்று மங்கள நம்புகிறார். தடையினை நீக்கத்தேவையான சூழலை வேனண்டுமென்றே திட்டமிட்டு உருவாக்கிய மகிந்த, இந்தத் தடைக்கெதிராக எதையுமே செய்யப்போவதில்லை என்றும் மங்கள கூறுகிறார்.

 

தடை உண்மையாகவே நீக்கப்படுமிடத்து புலிகளின் பெயரில் வங்கியிலிருந்த முடக்கப்பட்ட பணமெல்லாம்   அதன் உரிமையாளர்களைப் போய்ச் சேரும் என்றும், அவ்வாறான பெருமளவு பணத்தினை  தனது பெயரில் இன்றுவரை வைத்திருக்கும் கே. பி இனூடாக தனது பெயருக்கு மாற்ற மகிந்த விரும்புவதாகவும் மங்கள கூறுகிரார்.

 

சிங்களவர்களுக்கு இந்தத் தடைக்கெதிரான தீர்ப்பைக் காட்டி இனத்துவேசத்தைக் கிளறி தனது வாக்கு வங்கியை அதிகரிக்கும் அதேவேளை, புலிகளின் பெயரிலிருந்த மில்லியன் கணக்கான பணத்தை கே. பீ யினூடாக தனது கணக்கிற்கு மாற்றும் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் விளையாட்டை மகிந்த மேற்கொண்டிருப்பதாகக் மங்கள மேலும் கூறுகிறார்.

 

நாங்கள் தடை நீக்கப்பட்டால் புலிப் பினாமிகள் மீண்டும் காசு சேர்க்கத் தொடங்கிவிடுவார்கள் என்று பயப்பட சிங்களவனோ புலிகளின் பெயரில் முடங்கிக் கிடக்கும் பெருமளவு பணத்தினை எப்படிக் கொள்ளையடிக்கலாம் என்று திட்டம் தீட்டுகிறான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.