Jump to content

சொல்லத் தோணுது - தங்கர் பச்சான்


Recommended Posts

thangarbachan_2118232g.jpg

 

மனமும் புத்தியும் கிழித்த நேர்க்கோட்டில் நின்று எப்போதும் நிஜம் பேசுபவர் எழுத்தாளர், ஒளி ஓவியர், இயக்குநர் தங்கர் பச்சான். இது, முந்திரிக்காட்டு மண்வாசம் அடிக்கும் அவருடைய எழுத்துப் பாசனம்…

 

இதை எல்லாம் எதுக்கு எழுதணும்? எழுதலேன்னா என்னாகும்? ஏன் எழுதலேன்னு யாராவது கேட்கப் போறாங்களா? இருந்தாலும் எழுதப் போறேன். எழுதி வெளியில தூக்கிப் போட்டாத்தான் நிம்மதியா இருக்க முடியும்னு மனசு சொல்லுது. கண்டும் காணாமப் போவது, நல்லா நின்னு நிதானமாப் பார்ப்பது, பார்க்கவே வேணாம்னு முடிவு செய்து எதைப் பத்தியும் கண்டுக்காமப் போய்ட்டே இருப்பதுன்னு நானும் இருக்கப் பார்க்கிறேன், முடியல. இருக்கிற வேலையைப் பார்க்குறதுக்கே நேரம் பத்தல. திரைப்படக் கல்லூரி கடைசித் தேர்வு எழுதிய சமயம், கடைசி வரியை எழுதி முடிச்சுட்டு, அந்த முருகனையும் குலதெய்வம் பச்சைவாழி அம்மனையும் கும்பிட்ட கும்பிடு எனக்குத்தான் தெரியும்.

‘எப்பா… ஆளை விடுங்கடா சாமி. இனிமே எவனும் என்னைப் படிடா, பரீட்சை எழுதுடானு சொல்ல முடியாதுல்ல. அது போதும்டா. வேலை கிடைக்காட்டாலும் பரவாயில்லை. பச்சத் தண்ணியக் குடிச்சுட்டு வாழ்ந்துடலாம்’னு அன்றைக்கு ஓடி வந்தவன்தான் நான்.

இப்போ வகையா, ’தி இந்து’ தமிழ் நாளிதழ்கிட்டே மாட்டிக்கிட்டேன். தினமும் காலையில எழுந்து மகிழ்ச்சியா செய்தித்தாள் படிச்சதுபோய், இப்போ இந்த பேப்பரைப் பார்த்தாலே பயம் வர்ற மாதிரி ஆசிரியர்க் குழு பண்ணிடுச்சு. ஏற்கெனவே பத்து பனிரண்டு சினிமா கதை, இருபது சிறுகதைகள், அதுபோக இரண்டு நாவல் இவை எல்லாத்தையும் இந்த சின்ன மண்டைக்குள்ளே வெச்சுக்கிட்டு அலைஞ்சுக்கிட்டு இருக்கேன்.

 

அதை எல்லாம் எப்போ வெளியில கொண்டாந்து போடப் போறோமோனு பெருங்கவலையோடு இருக்கிற நேரத்தில், எந்த வேலை எப்படி கெடந்தாலும் வாரா வாரம் ‘சொல்லத் தோணறதை' எழுதித் தான் ஆகணும். மரத்தில் தொங்குறது, சருகுக்குள்ளேக் கிடக்கிறது, பழுத்து விழுந்து கிடக்கறதுனு முந்திரித் தோப்புல வெயிலு மழைனு பார்க்காம, ஒவ்வொரு முந்திரிக் கொட்டையாக் கொண்டாந்து சேர்க்குறது மாதிரிதான் இந்த எழுதுற வேலையும். பார்த்தது, கேட்டது, அனுபவிச்சதுனு மண்டைக்குள்ளே தூங்கிட்டுக் கிடக்கிறதை எல்லாம் பீராய்ஞ்சி எடுத்துட்டு வந்து எழுதிக் கொடுக்கணும்.

 

திடீர்னு வந்து அடிச்சுக்கிட்டுப் போற காட்டு வெள்ளம், நல்லது கெட்டது பாத்தா அடிச்சுட்டுப் போவுது? அப்படித்தான் வேண்டியவன், வேண்டாதவன்னு பாக்காம காலம் வாழ்நாளை முடிச்சுடுது.

 

சொந்த வேலைகளைப் பார்த்தாலும், சொந்தக் குடும்பத்தைப் பார்த்தாலும் மத்தவங்களையும் கொஞ்சம் நெனைச்சுப் பார்க்கணும். அப்படி எல்லாம் நெனச்சுப் பார்த்ததைத்தான் எழுதப் போறேன். யார் மனசாவது வலிக்குமே, யாராவது கோபப்படுவாங்களேனு நினைச்சா உண்மையை பல நேரம் சொல்ல முடியாமலே போயிடும். ஒரு மனுஷனுக்கு நம்மை பிடிக்காமப் போகணும்னா உண்மையை பேசிட்டாப் போதும். உண்மை மாதிரி சுடுறது வேற எதுவுமே இல்லீங்க. பொய்யையும், உங்களுக்குப் பிடிக்கிறதை மட்டும்தான் எழுதணும்னா அதுக்கு நான் தேவையில்லை. நான் எழுதப் போறது என் மனசுல மட்டும் தோணியது இல்லை. எல்லோருக்குமே அடிக்கடி மனசுல வந்துட்டுப் போறதுதான். மனசில் தோணுற நல்ல விஷயத்தை எல்லாம் நமக்குள்ளேயே எழுதி வெச்சுக்க முடியாது.

அதை யாரோ ஒருத்தர் எழுதலாம். அதை உங்களோடு பகிர்ந்துக்கலாம். அதைத்தான் நான் செய்யப் போறேன்.

 

சரி, எழுதிப் பாத்துட வேண்டியது தான்னு ஒப்புக்க ஆரம்பிச்ச ஒடனே, படத்துக்கு என்ன செய்யலாம்ன்னு ஒரு கேள்விய அவுத்து உடறாங்க! சினிமாப் படமுன்னா நானே எழுதி, படம் புடிச்சி இயக்கி தயாரிச்சி டுவேன். ஓவியம் வரையிற அளவுக்கு எனக்கு தேர்ச்சியில்லன்னு சொன்னப்புறம், நீங்க எடுத்தப் படம் இருக்குமே... அதக் குடுங்களேன்னு கேக்கறாங்க.

முப்பது வருஷத்துக்கு முன்னாடியி லிருந்து, கண்ணுல படறத... கைய்யில இருந்த சின்னச் சின்ன தொழில்நுட்பத் திறன்ல வலு இல்லாத கேமராவ வெச்சி யும் கைப்பேசியிலும் எடுத்தப் படங்கள... உக்காந்து தேடிப் பாத்தேன். விவசாயி கண்ணு ரோட்டுல கெடக்கிற சாணி வீணாப் போறத பாக்கப் புடிக்காம காலாலேயே மண்ண சேத்து ஒரு தள்ளுத் தள்ளி, அப்பிடியே ரெண்டு கையாலேயும் உருட்டிட்டு வந்து வீட்டுக் குப்பைக் குழிக்குள்ளப் போட்டு சேத்து வைக்கிற மாதிரிதான் நானும் அந்த நேரத்துக்கு முக்கியமாப் பட்டதெல்லாம் எடுத்துவெச்சி சேத்து வெச்சிருக்கேன்.

 

ஒவ்வொரு வாரமும் எழுதப்போறத் தலைப்புக்கு ஏத்த படங்கள எடுத்துப் பயன்படுத்திக்கலாம்னு இப்போதைக்கு மனசுக்கு சமாதானம் சொல்லிக்கிட்டேன்.

இன்னும் தோணும்..

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-1/article6431729.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

சொல்லத் தோணுது 2 - வானொலிக் காதலி

 

artthangar_2129857g.jpg

 

radio_2129858g.jpg

 

 

நான்கு வயதில் நான் பார்த்த முதல் சினிமா ‘பெற்றால்தான் பிள்ளையா’. மாடு மேய்க்கும்போதும் பள்ளிக்குப் போகும்போதும் தோளில் வானொலிப் பெட்டியோடு அலைந்தவன்.
 
எனக்குத் தெரியாத பாடல்களே இல்லை என்று அடித்துச் சொல்லலாம். 5-ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த என்னை, எங்கள் ஊர் உயர்நிலைப் பள்ளியில் இருந்து தலைமை ஆசிரியர் அழைப்பதாக கூட்டிக்கொண்டுப் போனார்கள். அனைத்து ஆசிரியர் களுக்கும் இடையில் சின்னஞ் சிறுவனாகிய என்னைக் கொண்டுபோய் நிறுத்தினார்கள்.
 
‘ஆகாய வீதியில்… அழகான வெண் ணிலா…’ இது எந்தப் படத்தின் பாடல்? யார் யார் பாடினார்கள் என்று கேட்டார் கள். அவர்களுக்குள்ளான பந்தயத்தில், என் பதிலை வைத்து ஒரு முடிவுக்கு வரக் காத்திருந்தார்கள்.
 
சற்றும் யோசிக்காமல், படம் ‘மஞ்சள் மகிமை’. பாடியவர்கள் பி.சுசீலா, கண்டசாலா எனச் சொன்னதும், தமிழாசிரியர் சுப்பிரமணியம் என்னைத் தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்துவிட்டார். சரியான பதிலைச் சொன்னதற்காக 5 ரூபாயைப் பரிசாகக் கொடுத்தார்கள்.
 
‘பத்திரக்கோட்டை தங்கராசு’ என்று சொல்லாத வானொலியே அந்த நாளில் இல்லை. ரேடியோ மாஸ்கோ (ரஷ்யர), ரேடியோ பீகிங் (சைனா), ரேடியோ வெரித்தாஸ் (மணிலா), ரேடியோ கோலாலம்பூர் (மலேசியா), இலங்கை வானொலி, ரேடியோ பிபிசி என அனைத்து வானொலிகளுக்கும் கடிதம் எழுதி, என் பெயரைக் கேட்பதிலேயே அப்போது என் காலம் கழிந்துகொண்டிருந்தது. அதிகாலை 4 மணிக்கே எழுந்து உட்கார்ந்துகொண்டு ரேடியோ கோலாலம்பூர் கேட்க ஆரம்பித்துவிடு வேன். பாதிப் பாடல்தான் தெளிவாகக் கேட்கும். மீதியைக் கேட்க கண்களை மூடிக்கொண்டு அதன் கொர... கொர... சத்தத்தோடு கற்பனையில் நானும் ஒன்றிவிடுவேன்.
 
என் பெரிய அண்ணன் மெட்ராஸ் மூர் மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்திருந்த இங்கிலாந்து வால்வு ரேடியோதான் எனக்குத் தோழனாக இருந்தது. எப்படியும் குறைந்தது 15 கிலோ எடை இருக்கும். ஒரு நிலையில் வைத்தால் பாடல் தெளிவாகக் கேட்காது என்பதால், எல்லாத் திசைகளிலும் திருப்பிப் பார்த்து, பின் தலைகீழாகவும் கவிழ்த்து வைத்துவிடுவதும் உண்டு. இந்த வானொலிப் பெட்டியைப் பாடாய்ப்படுத்தியதாலேயே என் அண்ணன்களிடம் கணக்கில்லாத அடி, உதை வாங்கியிருக்கிறேன். அழகுப் பெட்டகமாக இருந்த வானொலிப் பெட்டி அதன் கடைசிக் காலத்தில் உருக்குலைந்து, மேல்பகுதி இல்லாமல் வெறும் எலும்புக்கூடாகக் கிடந்தும்கூட அதனால் முடிந்தவரை பாடிக்கொண்டேதான் இருந்தது.
 
இருப்பதிலேயே மிகப் பெரிய சவுக்கு மரத்தினை வெட்டிவந்து, அதன் உச்சியில் ஒரு கம்பியைக் கட்டி, ஒயர் ஒன்றினை இணைத்து ஏரியல் ஏற்பாடு செய்திருந்தோம். செடிக்குத் தினமும் தண்ணீர் ஊற்றுவதைப் போல் வானொலிப் பெட்டியில் இருந்து தரைக்குள் இழுத்து புதைக்கப்பட்ட ஒயருக்கும் தண்ணீர் ஊற்றுவது தினசரி என் முதல் கடமையாக இருந்தது.
 
எல்லாப் பிள்ளைகளும் நேரத்துக்கு பள்ளிக்குச் சென்றுவிட்டாலும் நான் மட்டும் எதையோ படிக்கிற மாதிரியோ, எழுதுகிற மாதிரியோ பாவனை செய்தபடி வானொலியின் காலை இறுதி நிகழ்ச்சியான ’பொங்கும் பூம்புனல்’ பாடல்களைக் கேட்டுவிட்டுத்தான் பல நாட்கள் பள்ளிக்குப் போயிருக்கிறேன். பாவிகள்! காலை 9.30-க்குத்தான் நல்ல நல்லப் பாடல்களாக ஒலிபரப்புவார்கள். அதிலும் இந்த இலங்கை வானொலி அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா வந்து விட்டால் அன்றைக்கு எந்தப் பரீட்சை யாக இருந்தாலும் அந்த இடத்தைவிட்டு நகரவே மாட்டேன். என் தொல்லை தாங்காமல் ஒருநாள் என் அப்பா, விறகு உடைக்கும் கோடாரியோடு வந்துவிட்டார். சொல்லிச் சொல்லிப் பார்த்துவிட்டு இறுதியாக பாடிக்கொண் டிருந்த இங்கிலாந்து வானொலிப் பெட்டியைப் பார்த்து கோடாரியாலேயே ஒரு போடு போட்டார். அன்றோடு அதன் ஆயுள் முடிந்தது.
 
எப்படி ஒன்றுக்குள் ஒன்றாகப் பழகி உயிரோடு இணைந்துவிட்ட காதலியை மறக்க முடியாதோ, அப்படித்தான் நானும் என் வானொலிப் பெட்டியை மறக்க முடியாமல் அலைந்தேன். இன்று நான் போகிற இடங்களில் எல்லாம் அலுவலகமானாலும், வீடானாலும் எல்லா அறைகளிலும் வெவ்வேறு வடிவங்களில், உருவங்களில் பாடல்களைக் கேட்கும் கருவிகள் இருந்தாலும் எதிலும் நாட்டமில்லை. என் மனது இளம் பருவத்திலேயே சிக்கித் தவிக்கிறது. அழகுத் தமிழ் பேசி ஒவ்வொரு பாடலுக்கும் விளக்கம் சொல்லி ஒலிபரப்பும் அறிவிப்பாளர்களின் குரல் கேட்க மனம் அலைகிறது.
 
பண்பலை எனச் சொல்லி இன்று என் மொழியை சீர்குலைத்து கொலை செய்யும் போக்கினைக் கண்டு கொதித்துப் போயிருக்கிறேன். வானொலியைத் தொடவே அச்சமாக இருக்கிறது. தமிழை ஆங்கிலம் மாதிரி உச்சரிப்பதும், ஆங்கிலத்தோடு கலந்து பேசுவதும்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்?
 
ஒரு மொழி என்பது காலம் காலமாக வளர்த்தெடுக்கப்பட்ட ஓர் இனத்தின் சொத்து. மொழி, பண்பாடு, கலாச்சாரம், அரசியல் அறிவு எதுவுமே இல்லாமல் இவர்கள் பணம் பறிப்பதற்காக இந்தப் பிழைப்பு பிழைப்பதை எவ்வாறு அனுமதிப்பது? இந்தக் கூட்டத்தைப் பார்த்து தனியார் தொலைக்காட்சிகளும் இந்த மொழிக் கொலையைச் செய்கின்றன. பணம் கொடுத்து, எவ்வளவு விலையானாலும் எதையும் வாங்கிக் கொள்ளலாம் என்பது மாதிரி மொழியை விலைக்கு வாங்கிவிட முடியுமா?
 
ஒருத்தரும் இதைப் பற்றி சிந்திப்பது இல்லை; பேசுவதும் இல்லை; கண்டனக் குரல் எழுப்புவதும் இல்லை. அடித்தட்டு மக்களிடத்தில்தான் தமிழ் கொஞ்சமாவது பிழைத்திருந்தது. இப்போது இந்த மொழிக் கொலையால் மேலும் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. என் மக்களும் அது போலவே வேறுமொழி கலந்து பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
 
இவர்களின் பேச்சு போலவேதான் இவர்கள் ஒலிபரப்புகிற பாடல்களும் இருக்கிறது. பேசுகிறார்களா? பாடுகிறார் களா? அது எந்த மொழிப் பாடல்? எதைப் பற்றி பாடுகிறான்? யாருக்காகப் பாடு கிறான் என்று எதுவுமே புரியாமல் எல்லா தனியார் வானொலிகளும் இதையே தான் போட்டு கத்திக்கொண்டிருக் கிறார்கள். அதிலும் ஒரு வானொலி தமிழ் மக்களைப் பார்த்து மச்சான் (மச்சி) எனச் சொல்லி அழைக்கிறது. ஒரு நடிகை தமிழர்களைப் பார்த்து மச்சான் என அழைக்கிற மாதிரி இரண்டுமே வடநாட்டு கைங்கர்யம்தான்.
 
நானும் நீங்களும் இப்படிப்பட்ட வானொலிகளிடமிருந்து தப்பித்துவிட லாம். நம் மொழி தப்பிக்க என்ன செய்யப் போகிறோம்?
 
- இன்னும் சொல்வேன்…
 
Link to comment
Share on other sites

சொல்லத் தோணுது 3 - சுதந்திரம் கொடுத்த நட்டமில்லாத் தொழில்

 

thangar_2140115f.jpg

 

சுதந்திரம் கொடுத்த நட்டமில்லாத் தொழில்

ஆடிப் பட்டத்தில் விதைப்பதற்காக உழவர்கள் நிலத்தைச் சீர்செய்து, தயார்படுத்தி ஆடி மாதம் எப்போது வரும் எனக் காத்திருப்பது போல் அரசியல்வாதிகள் தேர்தலுக்காகக் காத்திருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தல் வரப் போகும் மாதங்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. என்னென்ன கணக்கு போட்டு? எப்படியெல்லாம் ஆள்பிடித்து? யார் யாருக்கு எதை எதைக் கொடுத்து? எப்படியெல்லாம் வாக்காளர்களைத் தங்கள் வலையில் வீழ்த்தலாம் என்கிற கணக்கு தொடங்கிவிட்டது.

24 மணி நேரத்தில் தூங்குகிற நேரம் போக மற்ற நேரங்கள் முழுக்க இந்த மண்ணுக்கும், இனத்துக்கும், மொழிக்கும், மக்களுக்கெல்லாம் எந்தெந்த விதங்களில் நன்மைகளைச் செய்யலாம் எனச் சிந்திப்பதைவிட, எப்படி எல்லாம் தங்களின் பெருமைகளைப் பறைசாற்றிப் பீற்றிக்கொள்வது, மற்றவர்களின் செயல்பாடுகளைக் குற்றம் சொல்வது, எந்தக் கட்சியும் தங்களுடைய கட்சியை மிஞ்சாமல் பார்த்துக்கொள்வது, இதுபோக முக்கியமாக எவ்வாறு மக்களைத் தங்களின் கட்சியின் வலையில் விழவைப்பது எனச் சிந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

 

அரசியல் என்பது தொண்டாக இருந்தது மாறிப் போய், முதலீடு இல்லாமல், நட்டத்தைச் சந்திக்காத, மிகப்பெரும் வியாபாரமாக மாறிப்போனதுதான் நம் மக்களாட்சியின் மிகப்பெரும் சோகம். அளவுக்கு அதிகமாகக் கோடி கோடியாகப் பணம் குவிக்க, மற்றவர்களை மிரட்ட, விரும்பியபடி எல்லாம் குற்றங்களைச் செய்ய, செய்த குற்றங்களில் இருந்து தப்பித்துக்கொள்ள என இவைகளுக்காகவே பெரும்பாலும் மேலும் மேலும் அரசியல் கட்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.

எதற்கெல்லாமோ சட்டம் இயற்றுபவர்கள், எல்லா மாற்றங்களையும் பற்றி பேசுபவர்கள் இதற்கென்று ஒரு சட்டத்தை உருவாக்குவார்களா? இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் ஆளுக்கு ஒரு தொலைக்காட்சி, ஆளாளுக்கு ஒரு பத்திரிகை என நடத்துகிறார்கள். எவ்வாறு நேர்மையான செய்தியையும் நியாயமான கருத்துகளையும் மக்களுக்கு அவர்களால் தர முடியும்? அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருப்பதைப் போன்ற தேர்தல் அரசியலுக்குள் களம் இறங்குபவர்கள் ஊடகத்தைக் கைக்குள் வைத்திருக்கக்கூடாது. எந்த ஒரு தொலைக்காட்சியோ, பத்திரிகையோ, வானொலியோ தொடங்கக்கூடாது. 10 விழுக்காடு முதலீடு செய்த பங்குதாரராகக் கூட இருக்கக்கூடாது. இதே போல் நம்நாட்டிலும் சட்டத்தை உருவாக்குவார்களா? இவர்களிடம்தானே நாடாளுமன்றம் இருக்கிறது.

 

குடிக்கும் நீரிலிருந்து, நமக்கு உணவளிக்கும் மண்ணிலிருந்து, உயிர் வாழத் தேவையான உள்ளிழுக்கும் காற்றிலிருந்து எல்லாவற்றையுமே நாசமாக்கிவிட்டார்கள். இவற்றை எல்லாம் செய்யச் சொன்னவர்கள், அனுமதி கொடுத்தவர்கள், திட்டம் தீட்டியவர்கள் எல்லாம் யார்? அன்றாடங்காய்ச்சி களாக வாழ்க்கையை நடத்திக்கொண்டு திரியும் இந்த மக்களா செய்தார்கள்?

 

சரிந்துபோன தங்களின் வாக்குவங்கியைச் சரிசெய்துகொள்ளவும், மேலும் தங்களின் செல்வாக்கை வளர்த்துக்கொள்ளவும் கொண்டுவருகிற திட்டங்களால் இந்த மக்களின் எதிர்கால வாழ்வு, எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்பதாகவே இருந்ததன் விளைவுதானே இந்நிலைக்குக் காரணம்!

 

எந்தக் கட்சி எப்போது மாநாட்டு அறிவிப்பை வெளியிடுவார்களோ என அஞ்ச வேண்டியிருக்கிறது. இந்த மாநாடுகள் சொல்லும் சேதி என்ன? இங்கே பாருங்கள்… ‘எங்களுக்கு இவ்வளவு கூட்டம் உண்டு. எங்களைச் சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல; எங்கள் செல்வாக்கைப் புரிந்துகொள்ளுங்கள்’ என மக்களை மிரட்டும் செயல்தானே தவிர, வேறென்ன?

 

தேர்தல் என்பதை மக்களுக்கும் ஒரு வருமானம் தரும் நாளாக மாற்றியதில் பலருக்கும் பங்கு உண்டு. இனி, இந்தக் கூட்டத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முடியாது. கிடைத்தவரை லாபம், வாங்கிக்கொள்வதால் அவர்களுக்கு எந்த நட்டமும் இல்லை. நம்மை வைத்துப் பணம் சம்பாதிப்பதற்குத்தானே இதைத் தருகிறார்கள் என்கிற மனநிலைக்கு மக்களும் பக்குவப்பட்டுவிட்டார்கள். மக்களையும் தங்களின் கொள்ளைக்கு துணைச் சேர்த்துக்கொண்டதைப் பார்த்துக் கொதித்தெழும் செயலுக்கு இங்கு எந்தப் பதிலும் இல்லை.

 

உண்மையில் மக்கள் நலன் குறித்து, அவர்களின் எதிர்காலம் குறித்து சிந்திப்பவர்களை ஊடகங்களும் கண்டுகொள்வதே இல்லை. இதனால், மக்களும் இதனை உணர்வதில்லை. இதனாலேயே உண்மையில் மக்களுக்கானவர்கள் யாரோ, அவர்கள் இந்தத் தேர்தல் அரசியலுக்குள் வந்து பாழ்பட்டுப்போவதை விரும்பாமல் ஒதுங்கிவிடுகிறார்கள். பணபலம் இல்லாமல் இங்கு எதனையும் செய்ய முடியாது எனும் மனநிலைக்குத் தள்ளப்பட்டு ஒதுங்கிவிடுவது போல், அவர்களின் கருத்தினைப் பின்பற்றி மக்களுக்குப் பணியாற்ற வருபவர்களும் ஒதுங்கிவிடுகிறார்கள்.

 

தன்னைப் போல தங்களுடன் இருந்த சாதாரணமானவர்கள் இன்று அரசியல் கட்சிகளில் சேர்ந்து அதனை ஒரு தொழிலாகவே நடத்திப் பணம் குவிப்பதைக் கண்டு, மனசாட்சிகளை உதறித் தள்ளிவிட்டுத் தாங்களும் வெள்ளை உடை உடுத்தி வெளிப்படையாகத் தெரிந்தும் தெரியாத மாதிரிச் சட்டைப் பையில் தங்கள் தலைவரின் படத்தை வைத்துக்கொண்டு, கொடியுடன் தொழிலுக்குப் புறப்பட்டு விடுகிறார்கள்.

இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவிலும் நடந்துகொண்டிருக்கிற மும்முரமான வியாபாரம்... அரசியல் எனும் தொழில்மட்டும்தான்!

 

அந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்துவிட்டால் எந்தத் தொழிலையும் தொடங்கி விடலாம். எதையும் சாதித்துவிடலாம் என்கிற நிலையைத்தான் இந்தச் சுதந்திரம் நமக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. ஒரு சில வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆண்டது போல், ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே இந்தத் தேர்தல் அரசியலால் ஆண்டு கொண்டிருக்கின்றன. இதில் சுதந்திரம் எனச் சொல்லப்படுகிற விடுதலை என்ன சாதித்துக் கொண்டிருக்கிறது?

நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனைப் பேர் மக்களுக்காக உழைப்பதற்காகவே சென்றிருப்பார்கள் என்பதை யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. அப்பழுக்கற்ற, தூய்மையான எண்ணத்தோடு மக்களுக்குப் பாடுபடுவது என்ற எண்ணத்தோடு மட்டுமே உருவாக்கப்பட்ட தேர்தலில், ஒரு ரூபாய் கூடச் செலவழிக்க முடியாத ஒருவர்… இனிமேல் நாடாளுமன்ற உறுப்பினராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதா? இது என்னுடைய கேள்வி மட்டுமே அல்ல; வாக்குகளைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிற ஒவ்வோர் இந்திய வாக்காளனும் கேட்டுக்கொண்டிருக்கிறான்.

 

வெள்ளையனின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையைப் பெற்றுத் தந்த நம் முன்னோடித் தலைவர்களின் ஆன்மா, நிச்சயம் அரசியலை ஒரு தொழிலாக மாற்றிவிட்டவர்களைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்கும் என நினைக்கிறேன். ஒருவேளை கேட்டால்… ‘ஆமாம்! தொழில்தான் செய்கிறோம்’ என அவர்களையாவது மதித்து உண்மையை ஏற்றுக்கொள்வார்களா?

thangar2_2140113a.jpg

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-3-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/article6473086.ece?ref=relatedNews

 

Link to comment
Share on other sites

சொல்லத் தோணுது 4 - மறந்துடாதீங்க

 

walkwa_2150197f.jpg

 

மறந்துடாதீங்க!

இப்ப எல்லாருக்கும் எந்த வேலை இருக்கோ தெரியாது! கட்டாயம் ஒரே ஒரு வேலையை செஞ்சே ஆகணும். மத்த வேலையா இருந்தா செய்ய லாம், செய்யாம விட்டுட்டும் போகலாம். இதை செய்யாமப் போனா வீட்டுக்காரம்மா சாப்பாடுப் போடாது. முன்னெல்லாம் முன்னாடி 40 வயசுக்கு மேல இருக்கறவங்க தான் நடக்க ஆரம்பிச்சாங்க. இப்ப இருவத்தஞ்சு வயசுப் பசங்கல்லாம் தெருவுல எறங்கிட்டாங்க. ஏதோ மக்கள் போராட்டத்துக்குத்தான் தெருவுல எறங்கிட்டாங்கன்னு நெனைக்காதீங்க. எல்லாரும் அவுங்க அவுங்க உயிரக் காப்பாத்திக்குறதுக்குத்தான்!

 

இதெல்லாம் நம்மூர் சமாச்சாரமே இல்ல. வெள்ளக்காரன் குடுத்துட்டுப் போனதுல இதுவும் ஒண்ணு. அப்பல்லாம் சினிமா நடிகருங்க மட்டும்தான் உடம்பைக் கட்டுப்கோப்பா வெச்சிக்கணும்னு கர்லாக் கட்டை சுத்தறதுன்னும், குஸ்திக் கத்துக்கற துன்னும் இருந்தாங்க. கொஞ்சம் கிராமங் கள்ல இருக்குற இளவட்டப் பிள்ளைகள் இதை செஞ்சாங்க. இப்ப ஏறக்குறைய எல் லாருமே அவுங்க மாதிரிதான் ஆயிட்டாங்க.

 

கருக்கல்ல சூர்ய வெளிச்சம் பூமியில படறதுக்கு முன்னாடி நாலரை மணிக் கெல்லாம் ஆரம்பிக்கிற ஓட்டம் ஒன்பது, பத்து வரைக்கும் கூட போய்ட்டிருக்கு. சின்ன வயசுல போட்ட கால் சட்டையை, நரை விழுந்த வயசுலேயும் போட வெச்சிட்டான் வெள்ளக்காரன்.

 

இந்த நடைப்பயிற்சிய முதன்முதலா எப்போப் பாத்தேன்னு எனக்கு நெனப்பு இல்ல. நிச்சயமா சினிமாவுலதான் பாத்து ருக்கணும். ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்துல சுஹாசினி ஓடி வர்றதுதான் ஞாபகத்துக்கு வருது. 40 வயசுல நான் மறுபடியும் கால்சட்டையைப் போட ஆரம்பிச்சேன். என்னோட ஓடிக்கிட்டிருந்த எந்த முகமும் தெரிஞ்சதா இல்ல. ஊர்ல தொலைஞ்சுபோன ஆடு, மாடைத் தேடறப்ப ஓடுற மாதிரியும், ஏதோ தொலைஞ்சுப்போன நகையையோ, காசையோத் தேடற மாதிரியும், சில பேர் தலைக்கு மேலப் பறந்து போற ஏரோப்ளேனப் பாத்துக்கிட்டே ஓடுற மாதிரிதான் நடந்துக்கிட்டிருந்தாங்க.

 

நாள்பூரா செருப்பில்லாதக் காலோட கொதிக்கிற பொட்ட மண்ணுலேயும் கல்லுலேயும் முள்ளுளேயும் நடந்துட்டு, நாலு மைல் நடந்து ஓடி சினிமாப் படம் பாத்துட்டு வந்து, தூக்கத்திலேயே சாப்புட் டுட்டு அசந்து விழற ஒடம்ப, அதிகாலை நாலு மணியிலிருந்தே அம்மா எழுப்ப ஆரம்பிச்சிடுவாங்க. கூழுக் கலயத்தோடவும் முந்திரிப்பழம் பொறுக்க தட்டுக்கழி யோடவும் கருக்கல்லேயே நாலு மைல் தூரம் நடந்து போனதுதான்… அப்ப எனக்கு ஞாபகத்துக்கு வந்திச்சி.

 

நண்பர்களோட, அண்ணன் தம்பியோட சினிமாவுக்கு நடந்து ஓடினதும், தெருக் கூத்துப் பாக்கறதுக்காக தீப்பந்தத்தையும், டயரையும் கொளுத்திப் புடிச்சிக்கிட்டு காட்டு வழியா அப்பாவோட சாதாரணமா 10 மைல் நடந்து போனதும், ஒருமுறை ஆனத்தூர் சீனிவாசன் சொல்லிட்டாருன்னு பள்ளிக்கூடத்துக் குக்கூட மத்தியானத்து மேலப் போவாம, குறுக்குவழியா 20 மைலுக்கு மேல நடந்து, கட்டு சோத்தோட அப்பாவுடன் உளுந்தூர் பேட்டைக்குப் பக்கத்துல தெருக்கூத்துப் பாக்கப் போன தெல்லாம் மனசுக்கு மகிழ்ச் சியா இருந்துச்சு. தூங்குற நேரத்துல இந்த வயசுல ஒடம்ப குறைக்கறதுக்காக எழுந்து ஓடுன்னா… எப்படி இருக்கும்? நெறைய்ய நண்பர்கள் சேர்ந்துட்டதால, ஆரம்பத்துல இருந்த தயக்கமும், கூச்ச மும், சோம்பேறித்தனமும் கொஞ்ச நாள்ல காணாமப்போச்சு.

 

ஒவ்வொருத்தரும் பிரச்சினைகளுக்கு மேல பிரச்சினையோட வாழ்க்கைய ஓட்டிக் கிட்டிருக்கிறதெல்லாம் போய், தொந்தி தொப்பையப் பாத்துப் பாத்து ஒடம்பக் கொறைக்கறதை நெனைச்சுக் கவலைப் படறதே பெரும் பிரச்சினையாப் போச்சு.

 

மனுசன் உடலுழைப்ப நிறுத்தினான். மருந்துக் கடையும், மருத்துவமனையும் பெருகிப்போச்சு. இயந்திரங்கள்கிட்ட வேலையைக் குடுத்துட்டு உக்கார ஆரம்பிச்சாச்சு. ஆம்பிளைங்கதான் அப்பிடி உருண்டு புரண்டு ஓடி, ஒரு நாலு சொட்டு வேர்வையப் பாத்து சந்தோஷப்படறோமுன்னா, பாவம்… நம்மப் பொம்பளைங்க நெலமை படுமோசம். ‘குனிஞ்சு நிமிர்ந்து எவ்வளவு நாளாச்சு’ன்னுக் கேட்டா, ‘அதெல்லாம் ஞாபகம் இல்லே’ன்னுதான் பதில் வருது.

 

வீட்டுக்காரரு அதிக நாள் வாழ்ந்தாப் போதும்ன்னு நெனைக்கிறாங்க அவங்க. தன்னோட உடம்பு நல்லா இருந்தாப் போதுமா, மனைவியும் நல்லா இருக்கட்டு மேன்னு கொஞ்சம் பேரு அவுங்களையும் இழுத்துப் புடிச்சி… அவங்களுக்கும் ‘ஷூவை மாட்டிவிட்டு இழுத்துட்டு வந்துட றாங்க.

 

இப்போ நாடு பூரா நடக்குற ஒரே வேல இந்த நடக்குற வேலதான். தெனமும் அதே எடத்துல, அதே நிமிஷத்துல, அதே முகத்தப் பார்க்க யாரும் தவறுவதில்ல. தெரிஞ்சவங்களக் கடந்துபோனா அதே சிரிப்பு, அதே ஒண்ணு ரெண்டு சுருக்கப்பட்ட வார்த்தை. இப்பிடித் தான் ஒவ்வொரு காலையும் கழியுது. இப்படிப்பட்ட ஆளுங்களாப் பார்த்து பிடிக்கறதுக்காகவே மூலைக்கி மூல நின்னுக்கிட்டு, ‘இலவசமா சோதனப் பண்றேன்’னு கைய, காலப் புடிச்சி… கடைசியா ஒரு முகவரியக் குடுத்து, ‘வந்துடுங்க, நாளைக்கே… ஒங்க உடம்ப நாங்க சரிபண்ணிடறோம்’னு சொல்லிட்டு நிக்கிற கூட்டம் பாடாப்படுத்துது.

 

நகரம் மட்டும்தான்னு இப்பிடி இல்ல. கிராமங்கள்ல என்ன வாழுதாம். அவன் இவனுக்கு மேல தொந்திய வளர்த்துட்டு நிக்கிறான். இந்த மெஷினெல்லாம் அங்கேயும் போயி எவ்வளவோ நாளாச்சு!

 

மாசக் கணக்குல, வருஷக் கணக்கு லெல்லாம் எதிர்லப் போகும்போது, கூடப் போகும்போது வணக்கம் சொன்னவங்க, திடீர்னு ஒருநாளு காணாமப் போயிட றாங்க. ஞாபகம் இருந்தா, அந்த நேரம் மட்டும் நண்பர்கள்கிட்ட விசாரிச்சுட்டு விட்டுட றோம். அப்புறம் அவங்கள மறந்தே போயிட றோம். ஒருவேளை வாழற இடத்த மாத்தி யிருக்கலாம். ஒருவேளை இறந்துபோய் நமக்கு செய்தி தெரியாம இருக்கலாம். புதிய புதிய முகங்களோடு நடைப்பயிற்சி தொடர்ந்துக்கிட்டேதான் இருக்கு.

 

ஒருநாள் எனக்கு நடந்த அந்த சம்பவத்த மறக்கவே முடியல. ஒரு ஏழெட்டு வருஷமாவே அவர நான் பார்க்கறேன். நான் சிரிச்சாத்தான் சிரிப்பாரு. தனியா யாரோடயும் சேராம ஒரு ஓரமா நடந்துக் கிட்டே இருப்பாரு. ஏழையும் இல்ல, பணக்காரன் மாதிரியும் தெரியல. ஒருநாள் நடந்துக்கிட்டிருந்தப்ப சாலையில சுருண்டு விழுந்துட்டாரு. 9 மணிக்கு மேல ஆயிட்டதால, யாரும் உடனே அவரை கவனிக்கல. இறந்துபோனவர கொண்டு போய் சேக்கறதுக்கு அவர்கிட்ட எந்த அடையாளப் பொருளும் இல்ல. வங்கிக்குப் போனப்பதான் நானே பாத் தேன். நானும் அங்கிருந்தவங்களோட சேந்து கண்டுபிடிக்க முயற்சி செஞ்சேன். பலனில்லை. என்னை மாதிரியேதான், தெனமும் அவரப் பாக்கறவங்களும் சொன் னாங்க. போலீஸ்காரங்க வந்து அவரோட ஒடம்ப எடுத்துக்கிட்டுப் போய்ட்டாங்க.

 

கொஞ்ச நாள் எங்க நண்பர்கள் வட்டத்துல இதேப் பேச்சா இருந்துச்சி. அவருக்கு நடந்த துயரம் நமக்கும் நடந்துடக் கூடாதேன்னு நெனைக்கிறதால, ஒரு துண்டு தாள்ல வீட்டோட முகவரியையும், கைப்பேசியையும் நடைப் பயிற்சி போறப்ப எடுத்துக்க மறக்கறதே இல்ல.

thangar2_2140113a.jpg

 

- இன்னும்சொல்லத்தோணுது… 
எண்ணங்களைத் தெரிவிக்க
thankartamil@gmail.com
 
 

 

Link to comment
Share on other sites

சொல்லத் தோணுது 5 - முறைப்படுத்தப்பட்ட முறைகேடுகள்

 

thangar_2162786h.jpg

 

முறைப்படுத்தப்பட்ட முறைகேடுகள்

எப்போது இந்த நாட்டுக்கு விடுதலை கிடைத்ததோ, அப்போதே இந்த மண்ணில் லஞ்சமும் ஊழலும் முளைக்கத் தொடங்கிவிட்டன. விடுதலை பெற்ற இந்த 68 ஆண்டுகளில் எது வளர்ந்ததோ இல்லையோ, ஊழலும் லஞ்சமும் மட்டும் யாராலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எல்லாத் துறைகளிலும், எல்லோரின் மனங்களிலும் வளர்ந்து நிற்கிறது. சமூகத்தில் நிகழும் ஏற்றத்தாழ்வுக்கு எல்லாருக்கும் எல்லாமுமே கிடைக்கும் என்கின்ற உத்தரவாதமற்ற நிலைதானே காரணம்.

 

குழந்தைகளிலிருந்து கடவுள் வரைக்கும் லஞ்சம் கொடுக்கப் பழக்கப்பட்டுவிட்டது இந்த சமூகம். பணம் இருந்தால் எவ்வளவு பெரிய கூட்டத்திலும், எல்லோரையும் கடந்து தனி ஆளாக அனைத்து மரியாதைகளோடு கடவுள் சந்நிதானத்தின் முன் நின்றுவிடலாம். பணம் இல்லாதவன் தொலைவில் நின்று, இருளில் நிற்கும் சிலையைப் பார்த்து தோராயமாகக் கும்பிட்டுவிட்டுத் திரும்ப வேண்டியதுதான்.

 

இளம் பருவத்திலேயே தன்னைச் சுற்றிலும் நிகழ்கின்ற இது போன்றச் செயல்களைப் பார்த்து வளரும் குழந்தைகள், அதனை ஒரு குற்றமாகவும் சீர்கேடாகவும் நினைக்காமல், அதனை ஒரு முறையாகவே பார்த்து தாங்களும் அதனைக் கடைபிடிக்க பழகிவிடுகிறார்கள்.

 

எனது பள்ளிப் பருவத்தில் நிகழ்ந்த அந்த நிகழ்வு ஒன்றுதான், இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான உதவித்தொகை 70 ரூபாயைப் பெறுவதற்குள் நான் பட்டப் பாட்டைச் சொல்லாமலிருக்க முடியவில்லை. தொடர்ந்து நான்கு நாட்கள் வட்டாட்சியரிடம் கையெழுத்துப் பெறுவதற்காக, எங்கள் ஊரிலிருந்து புறப்பட்டுச் சென்று பண்ருட்டியில் காலை 9 மணிக்கெல்லாம் நின்றுவிடுவேன். என்னைப் போலவே என் பள்ளியில் இருந்து நிறைய மாணவர்கள் வருவார்கள். வட்டாட்சியர் வேகமாக வருவார். அலுவலகத்தில் பல மணி நேரம் இருப்பார்.

 

பின்னர் விர்ரென்று ஜீப்பில் புறப்பட்டுப் போய்விடுவார். இப்படியே நான்கு நாட்கள் கழிந்தன. பள்ளிக்குப் போகாமல் அந்த ஒரே ஒரு கையெழுத்துக்காக காத்துக் கிடந்த நான்காவது நாளில்தான், அந்தக் கையெழுத்து எங்களுக்குக் கிடைத்தது. மாணவர்கள் ஆளுக்கு இரண்டு ரூபாய் போட்டு வட்டாட்சியருடைய உதவியாளரிடம் கொடுத்தப் பின்னர்தான் அதுவும் சாத்தியமாயிற்று.

 

இறுதி வரைக்கும் வட்டாட்சியரின் முகத்தை நாங்கள் பார்க்கவே இல்லை. பேருந்துக்காக வைத்திருந்த பணத்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டதால், அந்த 13 கிலோ மீட்டர் தொலைவை செருப்பில்லாத கால்களோடு நடந்து இரவு 9 மணிக்கு வீடு வந்து சேர்ந்ததையும் அம்மா சுடுதண்ணீர் வைத்து கால்களுக்கு ஒத்தடம் கொடுத்ததையும் இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

 

எப்படியாவது மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்து வாக்குகளைப் பெற்றுவிடுகிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் செலவழித்த தொகையை அறுவடை செய்வதற்காகவும் மேலும் ஆட்சியைத் தொடர்வதற்காகவும் லஞ்சம், ஊழல் என்கிற ஆயுதங்கள் கையில் எடுக்கப்படுகின்றன. தங்களின் காரியங்கள் நிறைவேறப் பணத்தைக் கொண்டுபோய்க் கொடுக்கின்ற மக்களே, இந்தக் கொடுமைக்கு துணையாயிருப்பதுதான் நம் சமூகத்தின் மிகப்பெரும் இழிவான, அவமானகரமான அவலநிலையாகும்.

 

நான் ஆட்சிக்கு வந்தால் லஞ்சம், ஊழல் இருக்கவே இருக்காது என்று சொல்லி ஒருவர் மாற்றத்தை ஏற்படுத்த முற்பட்டாலும், மக்கள் அதனை நம்பத் தயாராக இல்லை. இந்தப் பரிதாபமான நிலைக்கும் காரணம் மக்கள்தான். பணம் கொடுத்தால் நம்முடைய வேலை நடக்கிறதல்லவா… அதுவே போதும் என மக்கள் நினைக்கிறார்கள்.

லஞ்சத்தை வளர்த்ததற்காக ஒருவர் இங்கே தேர்தல் மூலம் தண்டிக்கப்பட்டிருந்தால், ஊழல் மூலம் கோடிக் கோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் இங்கே நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டிருந்தால், சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றங்களிலும் நுழைய முடியாத மாதிரி சட்டத்தின் வாயிலாகத் தடுக்கப்பட்டிருந்தால்… தவறு செய்பவர்களுக்கு நிச்சயம் பயம் இருக்கும்.

 

எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வழக்கைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கலாம் என்பதால், இங்கே என்ன மாற்றம் நிகழ வாய்ப்பு இருக்கிறது? சட்டத்தின் மீதும் நீதிமன்றத்தின் மீதும் பயம் போய்விட்டது. இங்கே சட்டத்துக்கும், நீதிமன்றத்துக்கும், காவல்துறைக்கும் பயந்து வாழ்ந்து கொண்டிருப்பதும் அலைக்கழிக்கப்படுவதும் அன்றாடங்காய்ச்சிகளாக வாழும் மக்கள் மட்டும்தான். பாதிக்குப் பாதி குற்றவியல் வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல்வாதிகளைக் கொண்டு எவ்வாறு தூய்மையான ஆட்சியைத் தந்து விட முடியும்?

 

ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றவர் முகத்தை மூடிக்கொள்ள, அவரை காவல்துறையினர் இழுத்துக் கொண்டுப் போவதை ஊடகங்களில் வெளியிடுவதும், நாட்டின் சொத்தையும் மக்களின் வரிப் பணத்தையும் குறுக்கு வழியில் கொள்ளையடிப்பவர்களை கொண்டாடுவதும் நடைமுறையாக இருக்கிறது.

 

நீதி, காவல்துறை, ஆட்சித்துறை, கல்வித்துறை என எல்லாத் துறைகளிலும் எனக்கு நண்பர்களும், என்மேல் அன்புள்ள பற்றாளர்களும் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் நேர்மையாகச் செயல்படுவதனாலேயே எப்படியெல்லாம் பழி வாங்கப்படுகிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள், அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் நான் தொடர்ந்து பார்த்துக்கொண்டேதான் இருக்கிறேன். இத்தகைய மாசற்ற மனிதர்களும் இந்த லஞ்ச, லாவண்யக் கூட்டத்தோடு சேர்ந்துவிட நெடுநேரம் ஆகாது.

 

தகுதியுடைய எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கும் என்றால், யாரும்யாருடையதையும் பறிக்க வேண்டியதில்லை. இங்கு தகுதி இல்லாதவர்களுக்கு மட்டுமே இடம் தரப்படும்போது, தகுதி உடையவர்களும் லஞ்சம் தரத் தயாராகிறார்கள். கொடுத்ததை மீண்டும் எடுக்க அந்தச் செயலை இவர்களும் செய்து, இறுதியாக ஊழல்வாதிகளாகி செத்து மடிகிறார்கள்.

 

இரண்டு பேருக்கு மட்டுமே தரப்போகிற வேலைக்காக ஆயிரம் பேர்கள் வரிசையில் நிற்கின்றனர். இதுவே லஞ்சம் கொடுக்க வழி வகை செய்கிறது. எல்லோருக்கும் வேலை வேண்டும் என்பதை யாருமே முன்வைப்பதில்லை. உற்பத்தித்துறை முற்றாக முடங்கிவிட்டது. அதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை. சேவைத்துறை மட்டுமே வளர்ந்து கொண்டிருக்கிறது. இங்கே தொடர்ச்சியாக மீறப்பட்ட முறைகேடுகளே முறையானவையாக மாற்றப்பட்டுவிட்டன.

இந்த அவல நிலைக்கு இதனை யாரும் கண்டுகொள்ளாத சமூக நிலையே காரணம். ஒரு இயந்திரம் இயல்பாக இயங்க, அதற்கு உராய்வு எண்ணெய் அவ்வப்போது இடப்படுவதைப் போல, சமூக இயக்கத்துக்கு லஞ்சம் என்கிற எண்ணெய்யை அவசியமாக்கிவிட்டார்கள்.

 

 இன்னும் சொல்லத்தோணுது...

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6515370.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

சொல்லத் தோணுது 6 - சிந்தனை செய் மனமே!

 

 

train_2172178f.jpg

 

அப்போது ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அப்பாவுடன்தான் முதன் முதலாக ரயிலில் பயணம் செய்தேன். ஏழு ரூபாய் நாற்பது பைசாவில் பண்ணுருட்டியில் இருந்து மெட்ராஸ் எழும்பூருக்கு வந்து இறங்கினோம். சென்னை அப்போது மெட்ராஸாக இருந்தது.

 
ரயிலை வைத்து அதிகமாக படப்பிடிப்பு நடத்தியவன் நானாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
 
ரயில் நிலையத்தில் நின்றாலும் நாற்றம், ரயிலுக்குள் போனாலும் நாற்றம். தூய்மைக் கேட்டின் முதல் இடமாக இன்னும் அதை நாம் வைத்துக் கொண்டிருக்கிறோம்.
 
வெளிநாடுகளுக்கு எங்குச் சென்றாலும் நான் செல்ல விரும்புவது ரயிலில்தான். அது ஒரு சுகம். ஒரு வீடு போலவேதான் ரயிலை தூய்மையாக வைத்திருக்கின்றனர். அங்கு மக்களை ஆடு, மாடுகள் மாதிரி அடைத்து வைப்பது இல்லை. ஏழை நாடுகள், பணக்கார நாடுகள் என எல்லாமும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. நெடுந்தொலைவானாலும், குறைந்த தொலைவானாலும் ரயிலைத்தான் பயன்படுத்துகிறார்கள். பொருட்களைக் கொண்டுச் செல்ல பயன்படுத்தப்படும் பெரியப் பெரிய வாகனங்கள் மட்டுமே பெரும்பாலும் நெடுஞ்சாலையில் ஓடிக் கொண்டிருக்கின்றன.
 
ரயிலில் இரண்டாயிரம் மைல்களை மிகச் சாதாரணமாக பயணம் செய்கிறார்கள். நேரம், எரிபொருள், அலைச்சல் என எல்லாவற்றையும் பற்றி சிந்தித்துதான் ரயில் போக்குவரத்தை விரிவுப்படுத்தினார்கள். எல்லா நாடுகளும் சிந்தித்தன. இந்தியா மட்டும் ஏன் சிந்திக்க மறுக்கிறது? நாட்டை ஆண்டவர்கள், ஆள்பவர்கள் மட்டுமல்ல; இந்த மக்களும் இதுபற்றி சிந்திப்பதே இல்லை. எது, எதற்கெல்லாமோ போராட்டங்கள் நடந்தன.
 
மக்களின் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதைவிட பாதுகாப்புக்கு மட்டுமே 2 லட்சத்து 200 கோடி ரூபாய் ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கப்படுகிறது. விதவிதமான ஏவுகணைகளை செலுத்தி வல்லரசு நாடாக பறைசாற்றிக் கொள்ள நினைப்பவர்கள் மக்களை ஆடு, மாடு போல நடத்துவதையும் கவனிக்க வேண்டும்.
 
இந்தக் காலம்… உலகம் முழுவதும் மனிதர்கள் இடம்பெயர்கிற காலகட்டமாக மாறிவிட்டது. பறவைகளும் காட்டு விலங்குகளும் மட்டும்தான் இடம்பெயரும் என்பதெல்லாம் மாறி வெகு நாட்களாகிவிட்டது. நாளுக்கு நாள் நகரங்கள் உருமாறிக் கொண்டேயிருக்கின்றன. 40 ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்த சென்னை இது இல்லவே இல்லை. அந்த மக்கள் எங்கே போனார்கள் எனத் தெரியவில்லை. நான் வசிக்கும் தெருவில் மட்டுமல்ல; எல்லாத் தெருக்களிலும் அப்படித்தான். உள்ளூர்வாசிகள் எங்கோ ஒருத்தர்தான். பண்டிகைக் காலங்கள் வந்தால் இதனை உணர முடியும். அதுவும் நான்கைந்து நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துவிட்டால், நீர் வற்றிய குளம்தான் சென்னை. இதே போல்தான் எல்லாப் பெருநகரங்களும்!
 
தான் பிறந்த மண்ணை, தன் உறவுகளை நினைத்தபடியேதான் பிறந்த மண்ணைவிட்டு வெளியேறிவர்களின் வாழ்வு கழிகிறது. என் ஊர் சென்னைக்கு கொஞ்சத் தொலைவிலேயே இருப்பதால் எனக்குப் பிரச்சினை இல்லை. தமிழ்நாட்டின் மையப் பகுதிகளில் இருந்தும் கடைகோடியில் இருந்தும் பிழைக்க வந்தவர்களின் மனநிலையையும் போராட்டத்தையும் உணர்ந்திருக்கிறேன். இந்த நவீன காலத்தில்கூட இன்னமும் பத்து, பதினைந்து மணி நேரங்கள் பயணம் செய்கிறக் கொடுமையை யாருமே உணரவில்லையா? இதற்காக என்ன செய்தீர்கள்? கறிக் கோழி மாதிரி நம்மை அடைத்து பேருந்திலும், ரயிலிலும் ஏற்றிக் கொண்டு போகிறார்களே. இதற்காக யாராவது வாய் திறந்து பேசுகிறீர்களா? தீபாவளியோ, பொங்கலோ வந்துவிட்டால் ஊர்ப் போய் சேருவது பற்றிய பயம் வந்து தொற்றிக் கொள்கிறது. பத்து நிமிடங்களில் ரயிலில் முன்பதிவு தீர்ந்துவிடுகிறது. அதே நிலைதான் பேருந்துகளிலும். வசதி படைத்தவர்கள் சொந்த வாகனங்களில் போய்விடுகிறார்கள். வாகனம் இல்லாதவனின் நிலையைப் பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லை. போய்ச் சேர்ந்தால் போதும் என எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுத்துவிட்டு, ஊர்ப் போய்ச் சேர்ந்துவிடுவதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
 
இது மக்கள் தொகை அதிகமான நாடு. இங்கு இப்படித்தான் இருக்கும் என ஆட்சியாளர்கள் சொல்லலாம். போக்குவரத்தைச் சீர் செய்யாத, ஒழுங்கு செய்யாத குணத்தை என்னவென்று சொல்வது? வெளிநாடுகளுக்குச் செல்லும் அமைச்சர்களும், அதிகாரிகளும் எதைப் பார்க்கப் போகிறார்கள்? எதைப் பார்த்துவிட்டு வருகிறார்கள்? விமானத்தில் இருந்து இறங்கி, நட்சத்திர விடுதிகளுக்குள் சென்று தங்குவதோடு முடிந்துவிடுகிறதா?
 
ஏதோ வெள்ளைக்காரன் புண்ணியத்தில் இந்த வசதியாவது நமக்குக் கிடைத்தது. 68 ஆண்டுகளாக ரயில் போக்குவரத்துத்துறை மட்டும் பாதாளத்தில் கிடப்பதற்கு என்ன காரணம்? நம் ஊர் ரயில் ஓடுகிற நேரத்தைவிட நிற்கின்ற நேரம்தான் அதிகம் என்பது விவரம் அறிந்தவர்களுக்குத் தெரியும். உலகத்தில் உள்ள எல்லா கார் கம்பெனிகளையும் கொண்டு வருவதிலும், ஒப்பந்தம் போடுவதிலும் இருக்கின்ற ஆர்வம், ஏன் இதில் இல்லை?
 
லண்டலில் இருந்து பிரான்ஸுக்குக் கடல் வழியாக ரயில் போக்குவரத்து செய்து வைத்திருப்பது மாதிரி உங்களை செய்யச் சொல்லவில்லை. ஏற்கெனவே இருக்கிற ரயில் பாதையைத்தான் விரிவுபடுத்தக் கேட்கிறோம். மூன்று ரயில் போகிற மாதிரி, மூன்று ரயில் வருகிற மாதிரி பாதையை விரிவுபடுத்தி மாற்றிப் பாருங்கள். எவ்வளவு பொருளாதாரம் உயரும்! மக்களின் நேரம், அலைச்சல், பணம் என எல்லாமும் மிச்சமாகுமே. இந்தக் காற்று மண்டலத்தை நச்சாக்கும் புகையை உருவாக்கும் எரிபொருளில் இருந்து விடுதலைக் கிடைக்குமே! நெடுஞ்சாலைகளில் சுமை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டுமே அல்லவா இருக்கும். இதைச் செய்வதை விட்டுவிட்டு சுங்கச் சாவடிகளில் கட்டணம் அதிகம் எனச் சொல்லி கத்திக் கொண்டிருக்கிறோம்.
 
இவைகள் மட்டுமல்ல; நெடுஞ்சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைக் கூடிக் கொண்டேப் போகிறதே ஒழிய குறைந்திருக்கிறதா? சாலைகளை உருவாக்குகிற முறையை வெளிநாட்டவர்கள் நம் நாட்டில்தான் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். பூம் பூம் மாட்டுக்காரன் சட்டை மாதிரி ஒட்டுப் போட்டு சாலைகளை பராமரிக்கிற முறை உலகத்தில் எங்குமே பார்த்திருக்க முடியாது.
 
துள்ளியெழும் அலைகளில் பயணம் செய்யும் படகுப் பயணம் போலத்தான் சரிசமம் இல்லாத நம் சாலைகள். என்ன பாவம் செய்தோமோ! உயிர்ப் பலி தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
 
நம் ஆட்சியாளர்கள் யார் வந்தாலும், யாரும் ரயில் பாதையை விரிவுப்படுத்தும் திட்டத்தை முன்னெடுக்க சிந்திப்பதில்லை. இந்திய அரசாங்கம்தான் இதைச் செய்ய வேண்டும் எனச் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம். அல்லல்படுபவர்கள் தமிழ்நாட்டு மக்கள், முன்னேற்றத் தடை தமிழ்நாட்டுக்குத்தான். ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது பற்றி சிந்தித்திருப்பார்களா?
 
எனக்கு இந்தக் கேள்விதான் இப்போது எழுகிறது:
 
எந்தக் காரணத்துக்காக தமிழ்நாட்டில் உள்ளவர்கள் எந்த வேலைக்கானாலும் சென்னைக்குத்தான் வரவேண்டும்? மற்ற நகரங்கள் எல்லாம் நகரங்கள் இல்லையா? இந்த வசதி வாய்ப்புகளை நம் மக்களுக்கு அங்கே உருவாக்கித் தர முடியாதா? ஆந்திராவையும், கர்நாடகத்தையும் தொட்டுக் கொண்டுள்ள சென்னையில் மட்டும்தான் அமைச்சரவையும், மற்ற அனைத்துத் துறை தலைமை அலுவலகங்களும் செயல்பட முடியுமா? கன்னியாகுமரியில் இருப்பவனும், கோயம்புத்தூரில் இருப்பவனும் இன்னமும் எதற்காக எதற்கெடுத்தாலும் சென்னைக்கு ஓடி வர வேண்டும். ஆட்சியாளர்கள் சிந்திக்க மறந்தாலும் மக்களும் சிந்திக்க மறந்துவிட்டார்களா அல்லது சிந்திக்க மறுக்கிறார்களா?
 
எம்.ஜி.ஆர் ஒருமுறை சொன்னார். ‘திருச்சிராப்பள்ளிதான் தமிழ்நாட்டுக்குத் தலைநகரமாகச் செயல்படத் தகுதியான மையப் பகுதி. அதுதான் இம்மாநிலத்துக்கு வளர்ச்சியைக் கொடுக்கும்’ எனச் சொன்னார். எனக்கும் அதுதான் மிகச் சரியாகப்படுகிறது.
 
‘கத்தி’ திரைப்படத்தில் ராஜபக்சவுடன் வணிகம் செய்பவரின் பணம் இருக்கிறது என்பதாகச் சொல்லிப் போராடும் நம் மூளைகள் இது பற்றியும் சிந்திக்கலாமே!
 
Link to comment
Share on other sites

சொல்லத் தோணுது 7 - வாயில்லாப் பூச்சிகள்

 

thangar_2183146f.jpg

 

வாயில்லாப் பூச்சிகள்
 
மக்கள்தொகைப் பெருகுவதற்கேற்ப நோய்களும் பெருகுவதைப் போல அவர்களின் மனமும் நோயால் பீடிக்கப்படுவதும் பெருகிக் கொண்டே செல்கிறது. நோயைக் கட்டுப்படுத்த மருத்துவர்களைத் தேடி ஓடுகின்றோம். அவர்கள் உண்மையிலேயே அந்த நோயைத் தீர்க்கக் கூடியவர்களா? அதற்கான தகுதியும் திறமையும் அவர்களிடம் இருக்கிறதா என்பதெல்லாம் வேறு பிரச்சினை. நம் நாட்டில் எல்லாவற்றிலும் போலிகள் பெருகிக் குவிந்துவிட்ட மாதிரி, அதிலும் போலிகள் என்பது நமக்கு ஒரு செய்தியாகவே முடிந்துவிடுகிறது.
 
நமக்கு உணவை உருவாக்கித் தருகின்ற விதைகளில் போலி, விளைச்சலுக்குப் பயன்படுத்துகிற இடுபொருள், பூச்சிக்கொல்லிகளில் போலி, நம் பிள்ளைகளுக்குக் கல்வி கற்றுத் தருகிற கல்விக் கூடங்களில் போலி, பாடம் சொல்லித் தந்து இந்தச் சமுதாயத்தை உருவாக்குகின்ற ஆசிரியர்களில் போலி, அன்றாடம் பயன்படுத்துகின்ற, ஒவ்வொரு குழந்தைக்கும் கட்டாயம் தேவைப்படுகிற பாலில் போலி, விற்கப்படுகிற உணவுப் பண்டங்களில் போலி, வயிற்றுப் பசியைத் தீர்க்கின்ற உணவகங்களில் போலி, குடிக்கின்ற உயிரைத் தருகிற தண்ணீரில் போலி, மூக்கு வழியாக ஒவ்வொரு நொடியும் உள்ளே போய்க் கொண்டிருக்கின்ற காற்றும் போலி, மக்களை நல்வழிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதாகச் சொல்லிக்கொள்கின்ற மத வழிபாடுகளை வழிநடத்துபவர்களிலும் போலி, மக்களுக்கு தொண்டாற்றுவதற்காகவேதான் தன் வாழ்நாளை ஒப்படைத்துவிட்டதாகச் சொல்லும் அரசியல்வாதிகளிலும் போலி!
 
எதில்தான் போலிகள் இல்லை. இதற்கு ஒரே சொல்லில் அசலே இல்லாத உலகம் என உடனே சொல்லியிருக்கலாம். தூய்மை இல்லாத ஒன்றை போலி எனச் சொல்லாமல் எவ்வாறு சொல்வது? அவ்வாறு சொல்ல எது தடையாக இருக்கிறது? நம் மனமா? சூழலா? எது? எல்லாவற்றிலும் போலிகள் உருவானதற்கும், உருவாகிக்கொண்டு இருப்பதற்கும் யார் காரணம் என ஒரு நொடி சிந்திக்க நாம் பயப்படுகிறோம். அதற்கான பதில் நமக்கு மகிழ்ச்சியைத் தராது என்பதால் உடனே விலகிக்கொள்கிறோம்.
 
ஓரிடத்தில் தவறு நேரும்போது எதிர்க் குரல் எழுப்பவோ, எதிர் நடவடிக்கைகளில் செயல்படவோ நம்மால் முடிவது இல்லை. கண்டும் காணாதது போல் விலகிவிடுகிறோம். ஒரு குழந்தைப் பிறந்து இந்த உலகத்தைக் கண்டு, ஒவ்வொரு நொடியும் கற்றுக்கொள்ளும்போது, அதன் மனதில் விதைக்கப்படுவதுதானே பின்பு விளைச்சலாகக் கிடைக்கும்? நம் குழந்தை நம்மைப் பார்த்துக் கேள்வி எழுப்புவதையோ, எதிக் குரல் எழுப்புவதையோ நாம் விரும்புவது இல்லை. உடனே, அப்பாவும் அம்மாவும் மாறி மாறி அடக்கியாள நினைக்கிறோம்.
 
உலகத்திலே சிறந்த இடம், மனித வாழ்வில் மிகமிக முக்கியமான இடம்... பாடசாலைகளைவிட எதுவாக இருக்க முடியும்? அறிவை உருவாக்கித் தருகின்ற இடமும், சூழலும், அந்தப் பாடங்களும், அதனைப் போதிக்கின்ற ஆசிரியர்களும் அவர்களுக்குப் பிடித்தமானவர்களாக இருக்கிறார்களா?
 
ஒரு குற்றமும் செய்யாதப் பிள்ளைகளை மூன்று வயதிலேயே சிறைக்கு அனுப்பி, அடைத்துவிடுகிறோம். இரவில் மட்டும் வீடு போன்ற ஒன்றில் தூங்கவைத்து, மீண்டும் சிறையில் கொண்டுபோய் அடைத்துவிடுகிறோம். ஒழுக்கம் என்கிற பெயரிலும், அறிவு என்கிற பெயரிலும் அங்கு கற்றுக் கொடுக்கப்படுபவைகளைப் பற்றி நமக்கெல்லாம் ஒரு நிமிடம் சிந்திக்க நேரம் இருக்கிறதா?
 
தன் தலையிலேயே குப்பையைக் கொட்டினாலும், தன்னை எந்தெந்த வகைகளில் இடையூறு செய்தாலும், தனக்கு எதிராக எது நடந்தாலும் ஓடிவந்து வீட்டுக்குள் உட்கார்ந்துக்கொண்டு, பாதுகாப்பான வாழ்க்கை வாழத்தானே பழகியிருக்கிறோம். அதைப் பார்த்து வளரும் நம் பிள்ளைகள் அதே போலத்தானே வளர்கிறார்கள்? அவர்களின் வயிற்றுப் பிழைப்பைப் பற்றி மட்டுமே சிந்திக்கக் கூடிய கல்வியைத்தானே சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
 
இதையே சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டவர்கள், தங்களை மட்டுமே அல்லது அதிகப்படியாகத் தன் குடும்பத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுபவர்களாக வளர்கிறார்கள். நாட்டில் எது நடந்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படுவது இல்லை. அவனுக்கு, அவன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு, அவனது வேலைக்கு சிக்கல் வந்தால் மட்டுமே போராடுகிறான். துள்ளிக் குதிக்கிறான். மனிதனைத் தவிர ஆடு, மாடு போன்ற விலங்குகளும் மற்ற உயிரினங்களும் மேற்கொண்டு சிந்திக்கத் தெரியாமல் இதைத்தானே செய்துகொண்டிருக்கின்றன?
 
அதிகாரத்தாலும், ஆட்சியாளர்களாலும், அரசியல்வாதிகளாலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மிரட்டப்படுகின்ற இந்த மக்களுக்காகப் போராடுகின்றவர்களாக உங்கள் மாணவர்களை உருவாக்கியிருக்கிறீர்களா? அல்லது இந்த மண்ணுக்கோ, இந்த இனத்துக்கோ, இந்த மொழிக்கோ சிக்கல்கள் வரும்போதெல்லாம் எதிர்ப்புகளைத் தெரிவித்துப் போராட முன் நிற்கின்றவர்களாக உருவாக்கியிருக்கிறோமா?
 
ஒவ்வொரு வேளையும் விதவிதமாக உண்டு மகிழ்கிறோமே! வாழ்வு முழுக்க உழைத்து உழைத்து வறுமையிலேயே கிடந்து, கடனாளியாகவே மாண்டுவிடுகின்ற உழவனாக மாறுங்கள்... அவன் விதியை மாற்றுங்கள்... என எந்தப் பெற்றோராவது, ஆசிரியராவது, அரசியல்வாதியாவது, ஆட்சியாளர்களாவது சொல்லியிருக்கிறோமா? உழவுத் தொழிலைச் செய்யச் சொல்லித் தராமல் போனாலும், அதைச் செய்பவனையும், அந்தத் தொழில் ஒன்று இருப்பதையும் சொல்லியாவது கொடுத்திருக்கிறோமா? அந்தத் தொழிலையும், அவர்களையும் மதிக்கக்கூடச் சொல்லித் தராதக் கொலையாளிகள்தான் நாம்.
 
வகுப்பில் உள்ள மாணவர்களைப் பார்த்து நீங்கள் என்னவாகப் போகிறீர்கள்? எதைச் செய்து கிழிக்கப் போகிறீர்கள் எனக் கேட்கிறீர்களே. ஒரே ஒரு மாணவனாவது, ‘‘நான்... உழவுத் தொழில் செய்து இந்த மக்களுக்கு உயிர் காக்க உணவளிக்கும் வேலையைச் செய்யப் போகிறேன்’’ எனச் சொல்லியிருக்கிறானா? அவ்வாறு அவன் ஒருவேளை சொன்னால், அது அங்குள்ள மாணவர்களுக்கு கவுண்டமணி, வடிவேல் நகைச்சுவைக் காட்சி போலல்லவா அது ஆகியிருக்கும்.
 
அல்லது எந்த ஆசிரியராவது இந்தத் தொழிலைச் செய்யுங்கள் என்றாவதுதான் சொல்லிருயிப்பீர்களா? ஒன்று நீங்களும் சொல்ல மாட்டீர்கள். அப்படிச் சொன்னால் அவர்களின் பெற்றோர்களும் உங்களை உயிரோடு விட மாட்டார்கள். பிறகு நீங்கள் சார்ந்திருக்கின்ற கல்வி நிறுவனமே உங்களின் வேலையைப் பறித்துவிடும்.
 
‘உழவுத் தொழில் படிக்காதவன் செய்கிற வேலை‘ என நாம் சொன்னதால்தான், இன்று நாம் தன்னலவாதியாக, சோம்பேறிகளாக, வேலையில்லாதவர்களாக மாறிவிட்டோம். இதைச் செய்ததெல்லாம் இந்தக் கல்வி நிறுவனங்களும், அதற்குத் துணையாக இருந்த நம் பெற்றோர்களும், எல்லாரையும் வழிநடத்துகின்ற அரசாங்கங்களும்தானே பொறுப்பேற்க வேண்டும்? தமிழ்நாட்டில் மட்டும் ஐநூரைத் தாண்டும் பொறியியல் கல்லூரிகள். ஆனால், வேளாண்மைக் கல்லூரிகளை இரண்டு கை விரல்களுக்குள் எண்ணிவிடலாம்.
 
அங்குப் படிக்க வந்தவர்களில் பெரும்பாலானோர் ஆர்வத்தோடு அதனைப் படிக்க வந்தவர்கள் இல்லை. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்... என இந்திய அரசுப் பணிகளில் சேருவதற்காகக் குறுக்கு வழிகளைத் தேடி வந்தவர்கள். இந்த லட்சணத்தில் எங்கள் பள்ளிதான் சிறந்தப் பள்ளி, எங்கள் கல்லூரிதான் சிறந்தக் கல்லூரி... என ஆர்ப்பாட்டமும் பெருமிதமும் வேறு. ‘எங்கள் கல்லூரியில், பள்ளியில் படித்தவர்கள் தாங்கள் ஆற்றிவரும் பதவிகளில், பொறுப்புகளில், நிர்வாகத்தில் நேர்மையாகவும் கண்ணியமாகவும், பொறுப்புடனும் சமுதாயத்துக்கு வழிகாட்டுபவர்களாகவும், எதிர்காலத் தலைமுறைக்கு முன்னோடிகளாகவும், நம் சமுதாயத்துக்கு அடையாளமாகவும் விளங்குகிறார்கள்.
 
அவர்களெல்லாம் இவர்கள்தான்‘ எனும் பட்டியலைக் கொஞ்சம் வெளியிடுங்களேன். ‘எங்கள் கல்லூரியில் படித்தால் உடனே வேலை‘ என மட்டும் விளம்பரப்படுத்துகிறீர்கள். வேலையை வாங்கிகொண்டு அவன் என்ன செய்வான்? ‘அவன் உண்டு... அவன் வேலை உண்டு‘ எனச் சமுதாயத்தைவிட்டு ஒதுங்கிவிடுகிறான். அல்லது இந்த ஊரே வேண்டாம் என நாட்டைவிட்டே ஓடிவிடுகிறான்.
 
எல்லா போலிகளையுமே உருவாக்கித் தருகிற கூடமாக கல்விக்கூடங்கள் மாற்றப்பட்டுவிட்டது என எப்போது நாம் உணரப் போகிறோம்? இவர்கள்தான் தூய்மையானவர்கள், இவர்கள்தான் நம் தலைவர்கள், இவர்களெல்லாம் நாம் போற்றப்பட வேண்டியவர்கள், இவர்கள் போல்தான் நீயும் உருவாக வேண்டும் என யார், யாரை சுட்டிக் காட்டிப் பிள்ளைகளை வளர்க்கப் போகிறோம்? கொஞ்சம் நம் இளைய தலைமுறைகளிடம், நம் மாணவர்களிடம், நம் மக்களிடம் யார் யாரெல்லாம் இந்தச் சமூகத்தில் முக்கியமானவர்கள்? யார் யாரை நீங்கள் மதிக்கிறீர்கள்... எனக் கேளுங்களேன்.
 
அவ்வப்போது ஒரு நேர்மையான அதிகாரியையோ, மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடுபவர்களையோ நாம் பார்க்கிறோம், கேள்விப்படுகிறோம். அந்த நேரத்தில் எல்லாம் மனதளவிலோ, அருகில் உள்ளவர்களிடத்திலோ பாராட்டிவிட்டு, நம் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடுகிறோம். இந்தச் சமுதாயத்தில் நிகழ்கிற அநியாயத்தைக் கண்டு போராடுபவர்களுக்கும், கொதித்தெழுபவர்களுக்கும் நாம் எப்போதாவது துணையிருந்திருக்கிறோமா?
 
நேர்மையான அதிகாரி என்றால்... சகாயம் மட்டும்தானா? அவர்களைப் போன்றவர்கள் நேர்மையான கடமையைச் செய்வதற்காகவே எவ்வாறெல்லாம் பழிவாங்கப்படுகிறார்கள்? எவ்வாறெல்லாம் பந்தாடப்படுகிறார்கள்? அவர்களைப் போன்றவர்களுக்கு நாம் வெறும் பாராட்டை மட்டும் தெரிவித்துவிட்டால், நம் கடமை முடிந்துவிடுகிறதா? நம்மால் செய்ய முடியாததை, அவர்கள் செய்கிறார்கள். நம்மால் சாதிக்க முடியாததை, அவர்கள் சாதிக்கிறார்கள். நம் சமுதாயத்துக்கு வழிகாட்டியாக மாறுகிறார்கள்.
 
அதே போல் தொடர்ந்து பொதுநல வழக்குகளைத் தொடுத்து, எத்தனை இன்னல்கள் வந்தாலும் போராடிக்கொண்டேயிருக்கிற டிராபிக் ராமசாமியை எத்தனைப் பேருக்குத் தெரியும்? மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிப்பதாகச் சொல்லி, விளம்பர பதாகைகளுக்கு உயர் நீதிமன்றம் தடைவிதித்தபோதும், சிறிதும் உத்தரவை மதிக்காமல் தங்களுக்குப் பிழைப்புக் காட்டும் தலைவர்களுக்கு வினைல் விளம்பரம் வைத்து நன்றி செலுத்த நினைத்தார்களே... இதனை எதிர்த்து எத்தனையோ முறை அவர் போராடியிருப்பார். தாக்குதலுக்கும் ஆளாகியிருப்பார். எந்த மக்கள் அவருக்குத் துணையாய் நின்றார்கள்?
 
தன்னுயிரையும், தன் குடும்பத்தையும் பொருட்படுத்தாமல் அவ்வப்போது கோடியில் ஒருவராக உருவாகும் இவர்களைப் போன்ற ஆளுமைகளை... நாம் எவ்வாறு பாதுகாக்கப் போகிறோம்? அவர்கள் செல்லும் நேர்மையான பாதையை வேடிக்கை பார்த்துக்கொண்டு கைகட்டி நிற்கப் போகிறோமா? பொதுநலவாதிகளை, சிந்தனைவாதிகளை, போராளிகளைப் பாதுகாப்பதுதான் நம் கடமை. வெறும் பாராட்டை மட்டும் தெரிவிப்பதல்ல. சமூக வளைதளங்களில் லைக் போட்டு, ஷேர் போட்டு கடமையை முடித்துக் கொள்வதல்ல. அதைச் செய்யக்கூட நம் தலைமுறை போலி பெயரில்தான் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்கிறது.
 
நம் பெற்றோர்களும், நம் ஆசிரியர்களும், கல்விக்கூடங்களும் சமுதாயப் பற்றை, மொழிப் பற்றை, மண் பற்றை, இனப் பற்றை விதைக்க மறுத்தாலும்... மறந்தாலும்... நம் பிள்ளைகளிடம் முற்றிலுமாக அந்தத் தீ அணைந்துபோய்விடவில்லை. நெறிப்படுத்தி வழிகாட்டும் ஒரு தலைமைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் மட்டும் கனன்று கொண்டிருக்கிற நம் சிந்தனைகளும் போராட்டக் குணங்களும் கணினியோடு முடங்கிப் போகக் கூடியதா? எல்லாருடைய போராட்டக் குணமும், உணர்ச்சிகளும் கணினிக்குள்தான் அடக்கி வைக்கப்பட்டிருக்கிறதா? மின்சாரத்தை நிறுத்திவிட்டால் கணினி இயங்காது. கணினி இயங்காமல் போனால் நம் உணர்வுகளும் அடங்கிப் போகும். அவ்வப்போது தடைபடும் மின்சாரத்தை நம்பி விடுதலை உணர்வை நம்பிக் கொண்டிருப்பது... இந்த மண்ணுக்கும், இனத்துக்கும், மொழிக்கும், சமுதாயத்துக்கும் இழைக்கும் பெரும்துரோகம் இல்லையா? எகிப்து மற்றும் சூடான் நாட்டில் சமூக வலைதளத்தால் நடந்த எழுச்சி இங்கு நடக்கும் எனச் சொன்னால் நான் நம்ப மாட்டேன்.
 
வெளியில் நிரம்பிக் கொண்டிருக்கிற அதே சமூக அவலங்கள்தான் சமூக வலைதளங்களில் நிரம்பிக் கிடக்கின்றன. சாதி நோய், மத நோய், சினிமா நடிகர்கள் நோய், தேர்தல் அரசியல் நோய் போன்ற நோயால்... எது தமிழ் அரசியல்? எது தமிழர்களுக்கான அரசியல்? யார், யாரை நாம் வளர்த்தெடுக்க வேண்டும? இந்தச் சமுதாய மேம்பாட்டுக்கு வேண்டியவர்கள் யார்... என்பதை எல்லாம் விழிப்புணர்ச்சி இல்லாதவர்களும், உணர மறுப்பவர்களும்தான் நிரம்பிக் கிடக்கிறார்கள்.
 
இந்த வலைதளங்களில் என்னதான் நடக்கிறது என்பதைக் கவனிக்கத்தான் நானும் கணக்கைத் தொடங்கினேன். மிக மிக முக்கியமான சிந்தனையாளர்கள் என் நட்பு வட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களின் கருத்துக்கள் கவனிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், அநீதிகள், துரோகங்கள் பற்றியெல்லாம் பெரும்பாலானவர்கள் பெரிதாகக் கண்டுகொள்வதே இல்லை. இரண்டு வாரங்களாக ‘கத்தி‘ திரைப்படம் பற்றிக் கருத்துத் தெரிவித்தவர்களுக்கு, இதற்கு முன்பு தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு நடந்தவைகளுக்கோ, இந்த இடைப்பட்டக் காலகட்டத்திலோ நடந்தவைகளுக்கு தன் பார்வையையும், கவனத்தையும் திருப்பவில்லை. ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நாளும் இந்த மக்களுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிற இழப்புக்களைக் கண்டுகொள்ளாமல், இன்னொரு பிரச்சினைக் கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.
 
Link to comment
Share on other sites

சொல்லத் தோணுது 8 - மேரேஜ் எனும் திருமணம்!

 

marriage_2193933f.jpg

 

தமிழர்கள் அடையாளத்தை இழந்து வருவது போலவே திருமண அழைப் பிதழ்களும் அதன் தோற்றத்தை இழந்து கொண்டு வருகின்றன. ஒரு சாதாரண மஞ்சள் தாளில் அச்சடித்திருந்த அந்தப் பழைய அழைப்பிதழ்களில் இருந்த உயிரும் நெருக்கமும் புதிதில் இல்லை. பழைய அழைப்பிதழ்கள் நடை பெறவிருந்த திருமணத்தை மட்டும் நினைவுப்படுத்தின. புதிய பத்திரிகைகள் நமக்குத் தொடர்பில்லாத, ஆடம்பர விழாவுக்கு அழைப்பது போலவே தோன்றுகின்றன.
 
ஒருவர்கூட தவறாமல் ஆங்கிலத்தில் அழைப்பிதழ் அச்சடிப்பதை வாடிக் கையாகக் கொண்டிருப்பதன் நோக்கம் விளங்கவேயில்லை. அழைப்பிதழ் களில் இருக்கிற அந்நியத்தனத்தை அப்படிப்பட்டத் திருமணங்களுக்குச் செல்லும்போது உணர்கின்றேன். வரவேற்பு எனும் பெயரில் நடக்கும் நிகழ்வுகள் திரைப்படப் படப்பிடிப்புப் போலவே எனக்குத் தோன்றுகிறது. மகிழ்ச்சியோடு பேசி, உறவாடும் நிலை இல்லாமல் போய்… வாசலில் நிற்கிற முன்பின் தெரியாத இளம் பெண் களிடமும் குழந்தைகளிடமும் பொய் சிரிப்பை உதிர்த்துவிட்டு, சந்தனத்தை எடுத்து தடவிக் கொள்வதிலிருந்து திருமணக் கூடத்தை விட்டு வெளி யேறுவது வரை எல்லாமும் செயற் கையாகவே நடந்தேறுகிறது.
 
இசைக் கச்சேரி எனும் பெயரில் நடத்தப்படுகிற அந்தக் கொடுமையான பாட்டையும், சத்தத்தையும் எப்படி இந்த மக்கள் ரசிக்கிறார்கள்? நாம் யாரைப் பார்க்கப் போகிறோமோ, அவர் மணமக்களின் பக்கத்தில் நின்று கொண்டு வீடியோ கேமராவுக்கும், புகைப்படக் கேமராவுக்கும் ஒத்துழைப்புக் கொடுத்து மணமக்களிடத்தில் விருந்தினர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருப்பார். போட்டோவுக்கு பேசாமல் முறைத்துக் கொண்டிருப்பது போலவே, வீடியோ கேமராவுக்கும் நிற்கிற நம் மக்களின் முகத்தைப் பார்க்கிறபோது எனக்குப் பரிதாபமாக இருக்கும். இயல்பான நிகழ்வுகளைப் படம் பிடிக்கத் தெரியாத வர்களையும், இயல்பாக கேமரா முன் இருக்கத் தெரியாத நம் மக்களை யும் எவ்வளவு காலமாற்றம், கண்டு பிடிப்புகள் நிகழ்ந்தாலும் மாற்றவே முடியாது.
 
பாட்டுக்காரர்கள் போடுகிற சத்தத்தில் யார் பேசுவதும் யாருக்கும் கேட்பதில்லை. ஒரு சிலரைத் தவிர எவரும் மணமக்களை வாழ்த்துவதும் இல்லை. வாக்குச் சாவடிகளில் வரிசை யில் நிற்கிற மாதிரி நின்று, மொய் உறையைக் கொடுத்துவிட்டு கேம ராவைப் பார்த்து முறைத்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். அதேபோல் பளபளப்புத் தாள் சுற்றப்பட்ட மலர்க் கொத்தைக் கொடுப்பதும், வாங்கிய வேகத்திலேயே மணமக்கள் அடுத்த விருந்தினருக்குத் தயாராவதையும் பார்க்கும்போது, எதற்காக இதனை எல்லாம் நடத்திக் காட்ட வேண்டும் எனும் கேள்வி எனக்கு எழுகிறது.
 
இவை முடிந்து, சாப்பிடப் போனால் ஹோட்டலுக்குத்தான் சாப்பிட வந்திருக்கிறோமா என்பது போலவே கூலிக்கு அமர்த்தப்பட்ட முன்பின் தெரியாதவர்கள், சமைத்த உணவுப் பண்டங்களை இலையில் வைத்துக் கொண்டே போவார்கள். பின் அவற்றில் பாதிக்கு மேல் குப்பையில் கொண்டு போய்க் கொட்டுவதும் சகித்துக்கொள்ள முடியாதது.
 
வந்த விருந்தினர்களுக்கு விருந்து படைப்பது அவசியம்தான். அதற்காக அவர்கள் விரும்புகிறார்களோ, இல்லையோ தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக வந்து கொட்டி, வீணாக்கப் படுகிற உணவுப் பண்டங்களைப் பற்றி யாராவது நினைத்துப் பார்க்கிறார்களா? பரிமாறப்படும் உணவுப் பண்டங்களின் பெயர்களே நம் மக்களில் பாதி பேருக்குத் தெரியாது.
 
இந்தப் பண்டங்கள் இந்த இலைக்கு எவற்றையெல்லாம் கடந்து வந்திருக்கிறது எனத் தெரியுமா? உழவுக்கு முன்னும் பின்னும் நிலம் காத்துக் கிடக்கின்ற காலம், பின் விதைப்பு, களையெடுப்பு, இரவு பகலாக பாம்பு, பூச்சி எனப் பார்க்காமல் நீர்ப் பாய்ச்சல், உரம், பூச்சி மருந்துத் தெளிப்பு, அதன்பின் அறுவடை! இதோடு முடிந்து விடுவதில்லை. சுத்தப் படுத்தி பல கைகளுக்கு மாற்றப் பட்டு எவ்வளவோ கணக்கற்ற உழைப்பு களுக்குப் பின் பக்குவமாக சமைத்து பரிமாறப்படும் உணவுப் பண்டங்களை, ஒரு நொடிகூட சிந்திக்காமல் மூடி வைத்துவிட்டு வந்து விடுகிறோமே… இது குற்றச்செயல் இல்லையா?
 
பணக்கார விருந்துகளில் வீணாக் கப்படும் உணவுப் பண்டங்களை மிச்சப் படுத்தினாலே கோடிக் கணக்கான மனிதர்கள் உயிர் வாழ முடியுமே! பகட்டுத்தனத்துக்காக உணவுப் பண்டங்களை வீணாக்குபவர்கள் யாரும் படிக்காதவர்கள் இல்லை. தங்கள் பண பலத்தை காண்பிப்பதற்காகவே இன்றைக்குப் படித்தவர்களின் திரு மணங்கள் அரங்கேறுகின்றன.
 
படிக்காத மற்றும் ஏழை, எளிய மக்களின் திருமணங்கள்தான் தன் சுற்றத் தோடும், ரத்த உறவுகளோடும் எளிய முறையில் நடந்தேறுகின்றன. உண் மையான அன்பையும், நெருக் கத்தையும், மனமகிழ்ச்சியையும் அந்த வியர்வை வழியும் மக்களிடம்தான் கவனிக்க முடிகிறது. நம் கலாச்சாரத்தில் இல்லாத கேரளக்காரர்களின் செண்டை மேளம் இல்லை. காதைப் பிளக்கும் பாட்டுக் கச்சேரி இல்லை. கண்கள் கூசும் விளக்கொளிகள் இல்லை. ஆடம் பர உடைகள் இல்லை. சாப்பிட முடியாமல் மூடி வைத்துவிட்டுப் போகும் அளவுக்கு விருந்தோம்பல் இல்லை. ஆனால், அந்த எளிய மஞ்சள் பத்தி ரிகை மாதிரி உண்மையான திருமண மாக இருக்கிறது.
 
ஒருநாள் வாடகையை மிச்சப்படுத்து வதற்காகத்தான் அண்மைக் காலமாக உருவாக்கப்பட்டது இந்த ரிசப்ஷன் எனும் வரவேற்பு.
 
சென்ற ஆண்டு, நண்பர் ஒருவருடைய மகள் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். கட்டுக்கடங்காதக் கூட்டம். எந்தெந்த வகைகளிலெல்லாம் செலவு செய்ய முடியுமோ, அவ்வாறெல்லாம் செலவு செய்திருந்தார். 60 லட்சம் ரூபாயில் மணமகனுக்கு ஆடம்பரக் கார் பரிசளித்திருந்தார்.
 
வெளிநாட்டில் தொழில் செய்யும் அந்த நண்பரின் மகளை இரண்டு மாதங் களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் பார்த்தேன். அவளின் அப்பா பற்றி விசாரித்துவிட்டு மாப்பிள்ளைப் பற்றியும் விசாரித்தேன். பதில் சொல்லாமல் போய்விட்டாள். என் விமானத்தில்தான் பயணித்தாள். கோயம் புத்தூரில் இறங்கி வெளியேறும்போது என்னிடம் வந்து பேசினாள். வரவேற்பு முடிந்த அன்று இரவு நண்பர்களுடன் வெளியில் சென்றபோது கார் விபத்தில் தலையில் அடிபட்டு நினைவு இழந்து போனாராம் அவளுடைய மாப்பிள்ளை. இதுவரை அவர் குணம் அடைய வில்லையாம். திருமணம் நின்று போனதும், அப்பா வேறு திருமணத்தை நடத்தி வைக்க முயன்றும் அவள் ஏற்றுக் கொள்ளவில்லையாம். இனி அவர் தேறி வரமாட்டார் எனத் தெரிந்தும் அவளால் அவரை மறக்க முடியவில்லை. திருமணத்துக்கு முன்பாக நான்கு மாத காலம் நெருங்கிப் பழகியதால் மட்டு மல்ல; திருமண வரவேற்பே தனக்கு திருமணம் போல்தான் இருந்தது. தாலி மட்டும்தான் அவர் எனக்குக் கட்டவில்லை என அவள் சொன்னாள்.
 
அதன்பின் நண்பரிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டேன். மாப்பிள்ளையை மறக்க முடியவில்லை என மகள் அழுகிறாள். திருமணத்துக்கு முன்பு மாப்பிள்ளையிடம் நேரில் சந்திக் கவும், போனில் பேசவும் மகளை அனுமதித்ததே பெரும் வினையாகி விட்டது. ஒரு வழியாக சமாதானம் சொல்லி வேறொரு மாப்பிள்ளை தயார் படுத்தியிருக்கிறேன். கண்டிப்பாக நீங்கள் திருமணத்துக்கு வரணும். இந்த முறை வரவேற்பெல்லாம் கிடை யாது. முதலில் திருமணம் அதன் பின் மாலையில்தான் வரவேற்பு எனச் சொன்னார். அந்த மேரேஜை விட இந்தத் திருமணம் நண்பரின் மகளுக்கு இனிதாக அமைய எனக்குள் வேண்டிக் கொள்கிறேன்.
 

thangar_2162786h.jpg

- இன்னும் சொல்லத் தோணுது...

 
Link to comment
Share on other sites

சொல்லத் தோணுது 9 - பாடாய்ப் படுத்தும் பாட்டு

 

thang_2206917f.jpg

 

முன்பெல்லாம் பாடல்கள் என்றால் திரைப்படத்தில் அதற்கான காரணமும் சூழ்நிலையும் இருக்கும். கூடவே அதில் மனநிலையும் வெளிப்படும். கவிதைநயமும், மொழி வளமும், குரல் வளமும்கூட இருக்கும். மெட்டுக்களும் இசையும் நம்மை மெய்மறக்க செய்யும்.
 
இப்போது உள்ள பல பாடல்கள் எல்லாம் பாடல்கள்தானா?
 
காக்காய் கூட்டத்தை விரட்டுவதற் குப் பயன்படும் தகர டப்பா பாடல்களைத்தான், என் மகன்களும் காது சவ்வு கிழியும் அளவுக்கு வைத்து என் வீட்டு உடற்பயிற்சி அறையில் ஒலிக்க விடுகிறார்கள். பொருளற்ற, இசையற்ற, மொழியற்ற, குரல் வளமற்ற இந்தச் சத்தத்தை வேறு வழியே இல்லாமல் நானும் தினமும் இரண்டு மணிநேரம் கேட்டுத் தொலைக்கிறேன். தலைமுறையைக் கடந்தவன் எனச் சொல்லிவிடுவார்களோ என்பதற்காக எவ்வளவுதான் சகித்துக்கொள்வது? ஏதோ நூற்றில் ஒன்று தேறுகிறது எனும் என் கருத்து அவர்களுக்கு என் மீது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.
 
நான் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, சென்னைக்குப் புறப்படும்போது என் வீட்டிலிருந்து அறுநூறுக்கும் மேற்பட்ட இசைத் தட்டுக்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்மாக எடுத்து வந்து என்னுடன் வைத்துக்கொண்டேன். உலகம் முழுக் கப் பரவியிருக்கிற இலங்கைத் தமிழர்களிடத்தில் இருந்தும், போகிற நாடுகளில் எல்லாம் வாங்கி வந்து சேகரித்தும் வைத்திருக்கிறேன். எனக்குப் பிடித்தப் பாடல்களை மட்டும் சுமார் 400 மணி நேரம் கேட்கும் அளவுக்கு கணினியில் சேகரித்து வைத்துள்ளேன். அவை நான் பயணப்படுகிற எல்லா இடங்களுக்கும் என்னுடன் பயணப்படுகின்றன. நினைக்கும்போது கேட்கிறபடி கைப்பேசியிலும் சேமித்து வைத்திருக்கிறேன்.
 
வாழ்க்கை பற்றிய குழப்பங்கள், அமைதி, மகிழ்ச்சி, தனிமை என எது ஏற்பட்டாலும் எனக்கு ஒரே துணை இந்தப் பழைய திரைப்படப் பாடல்கள்தான். அதனை உருவாக்கிய கவிஞர்களும், பாடகர்களும், இயக்குநர்களும், இசையமைப்பாளர்களும், தயாரிப்பாளர்களும் இந்தத் தமிழனுக்கு விட்டுவிட்டுப் போன சொத்துக்கள் அவை. அவர்கள் இதற்காகப் பெற்ற ஊதியமும், வசதி வாய்ப்புகளும், அனுபவித்ததும் இன்றைய நிலையைப் பார்க்கும்போது ஒன்றுமே இல்லை.
 
முன்பெல்லாம் ஒரு பாடலைக் கேட் கும் போது அதில் இருந்த மெட்டையும், இசையையும், பொருளையும், குரலையும் ரசிப்பேன். எப்போது நம் மொழியைப் பற்றிய அறிவும், சிந்தனையும், உணர்வும் வளரத் தொடங்கியதோ அப்போது முதல் என் மனதில் குடிகொண்ட, மெய்மறந்த பாடல்கள் கூட எனக்குப் பிடிக்காமல் போய்க் கொண்டிருக்கின்றன. என் படங்களில் இடம்பெற்ற, என் பங்களிப்பும் முழுமையாக இருந்த பாடல்களும் இதில் அடக்கம்.
 
தமிழ்த் திரைப்பாடல்களில் அந்த நாளில் இருந்து இந்த நாள் வரை சமஸ்கிருதச் சொற்களைப் பயன்படுத்தாமல் பாடல்களை உருவாக்க முடியவில்லை. மெட்டுக்கு ஏற்றபடி சொற்களைப் பொருத்த வேண்டியிருக்கிறது. இது இப்படியென்றால், முதலில் பாடலை எழுதிவிட்டு பின்பு மெட்டுக்கள் அமைத்து உருவாக்கிய பாடல்களுக்கும் இதே கதிதான். பிற மொழி கலந்து பேசுவதையோ, எழுதுவதையோ பற்றி கேள்வி எழுப்பியவர்கள்… இந்தச் சிக்கலைக் கண்டுகொண்டதே இல்லை. அதனால் காலப்போக்கில் ஒரு பாடலில் இருக்கிற நூற்றில் இருபத்தைந்து சமஸ்கிருதச் சொற்களும் தமிழ் சொற்களாகவே மாறி போய்விட்டன.
 
நான் அடிக்கடி நினைப்பது உண்டு. இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் கண்ணதாசன் உயிரோடு இருந்து இளையராஜாவின் இசைக்கு முழு மூச்சாக எழுதியிருந்தால், காலத்தால் அழிக்க முடியாத இன்னொரு பெரும் இசைச்செல்வம் நமக்குக் கிடைத்திருக்கும். இளையராஜா எனும் பெரும் கலைஞனின் மெட்டு, ராகம், இசையைத் தாங்கியே பெரும்பாலானப் பாடல்கள் நிலைத்து நிற்கின்றன. அவர் இசையில் உருவாகிய கதைச் சூழலுக்கும், பாத்திரத்துக்கும் பொருந்திய பாடல்கள் என்றும் அழியாதவை. வெறும் மெட்டுக்காக வரிகள் இட்டு நிரப்பப்பட்ட அவர் இசையமைத்த பல பாடல்களை இப்போது கேட்கும்போது மீண்டும் எனக்குக் கண்ணதாசனே நினைவுக்கு வருகிறார். இனிமேலாவது நேரம் இருந்தால் நீங்களும் கேட்டுப் பாருங்கள். குறிப்பிட்ட ஒரு மெட்டில் அடங்குகிறது என்பதற்காக குறிப்பிட்ட பத்துக்கும் குறைவான சொற்கள் பல பாடல்களில் கையாளப்பட்டிருப்பது புரியும். அதில் பெரும்பாலான பாடல்கள் எனக்கு மட்டுமல்ல; எல்லோருக்குமே பிடித்தவை.
 
இளையராஜா என்னும் பெருங்கலைஞனின் ஓட்டத்துக்கும் கலைத் திறமைக்கும் ஈடுகொடுக்க முடியாமல் பாடலின் வரிகள் திணறுவதை எளிதாக கவனிக்கலாம். அப்பாடல்களில் சிறிதும் தன் மொழியைப் பற்றிக் கவலைப்படாமல் எழுதப்பட்ட சமஸ்ககிருதச் சொற்கள் என்னை எரிச்சல் அடைய வைக்கின்றன. எப்படியிருந்தாலும் அவை என் தமிழ்ப் பாடல்கள் அல்லவா! இனிவரும் காலங்களிலாவது திரைப்படப் பாடல் எழுதும் கவிஞர்கள் இது பற்றிச் சிந்திக்க வேண்டும்.
 
உண்மையான தமிழ்ச் சொத்தாக மாறிவிட்ட சில பாடல்களை நான் கேட்கும்போது என் காதலியின் காலில் விழுந்துக் கிடக்கின்றேன். என் தாய், தந்தையரை நினைத்து அழுகின்றேன். உடன் பிறந்தவர்களை நினைத்து ஏங்குகின்றேன். கண்ணதாசன், பட்டுக்கோட்டையார், வாலி எனும் பெருங்கலைஞர்களைத் தினம் பல முறை வணங்குகிறேன். கே.வி.மகாதேவன், விஸ்வநாதன், ராமமூர்த்தி, ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்புராமன், வி.குமார், இளையராஜா போன்ற பெருங்கலைஞர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். டி.எம்.சவுந்த ரராஜனையும், சுசீலாவையும், பி.பி.சீனிவாசனையும் பாராட்டிப் பாராட்டி ‘பைத்தியக்காரன்’ எனச் சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டேன்.
 
எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், கே.ஜே.யேசுதாசும், பி.சுசீலாவும் சேர்ந்து பாடிய பாடல்கள் ...மெட்டுக்களும், ராகங்களும், குரல் வளமும், பாடல் வரிகளும், சூழ்நிலைகளும் ஒன்றுக்கொன்றுக் குறையாமல் கேட்பவர்களைக் கர்வம் கொள்ளச் செய்கின்றன.
 
வேற்று மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்ட டி.எம்.சவுந்தரரா ஜனும்,பி.சுசீலாவும், எஸ்.ஜானகியும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் எப்படியெல்லாம் தமிழை அழகாக… அதன் உணர்ச்சி, வளமைக் குறை யாமல் உச்சரித்தார்கள்! தமிழன் எனச் சொல்லிக் கொள்கிற இந்தத் தலைமுறையில் பாட்டுப் பாடுபவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. இவற்றையெல்லாம் என் மகன்களிடம் பேசினால் என்னை ஏளனமாகப் பார்த்து பரிகாசம் செய்கின்றனர்.
 
எவ்வாறு கெட்ட நீரை, கெட்ட காற்றை, ரசாயனத்தில் தோய்ந்த உணவை உண்பதைப் பற்றியெல்லாம் உணராமல் பெருமிதமாக சிந்திக்க மறந்து வாழ்கிறார்களோ, அவ்வாறேதான் ஒன்றுக்கும் உதவாத தரம் குறைந்த பாடல்களை விதவிதமான நவீன கருவிகளில் ஒலிக்கவிட்டு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இது தலைமுறை இடைவெளியின் பிரச்சினை மட்டுமல்ல...வாழ்க்கையை உணராமல் போனதன் சீர்கேடு என்பதை அவர்களின் பிற்காலத்தில் உணர்வார்கள் என்கின்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
 
பேட்டரி வாங்க காசு இல்லாமல் பழைய பேட்டரிகளைத் தேடித் தேடி எடுத்துப்போட்டு ஒரு பாட்டுக் கேட்பதும், உடனே பிடிக்காத பாடல் வரும் நேரத்தில் பேட்டரியைக் கழற்றி வெய்யிலில் காய வைத்து சக்தியேற்றி மீண்டும் பொருத்தி, பாடலைக் கேட்ட காலங்கள்தான் என் வாழ்நாளில் நான் வாழ்ந்த காலங்கள். பழைய பாடல்களும், பழைய அறிவிப்பு குரல்களும், வானொலியில் இருந்து மறைந்து கொண்டிருக்கின்றன. என் மொழியைத் தூய்மையாகப் பேச என் வானொலி மறுக்கிறது. என் தமிழைக் கவிதையாகப் பாடாமல் இரைச்சலிடுகிறது. ஏனென்று கேட்டால், ‘எதைப் பற்றியும் சிந்திக்காத என் இளைய தலைமுறையை மேலும் மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவே’ என்கின்றனர் பொறுப்புணராத சில திரைப் படைப்பாளிகளும், ஊடகத்தினரும். நான் யாரிடம் போய்ச் சொல்வது?
 
Link to comment
Share on other sites

சொல்லத் தோணுது 10 - கருவேல மரங்களும், கான்வென்ட் பள்ளிகளும்

 

solla_2217470f.jpg

 

கருவேல மரங்களும், கான்வென்ட் பள்ளிகளும் தான் பிறந்த மண்ணை, மக்களை, பெற்றோர்களை, உறவினர்களை விட்டு பிரிப்பது கல்வி ஒன்று மட்டும்தான்.
 
பிறந்ததில் இருந்து அவர்களை ஒரு பணியில் அமர்த்திவிடும் வரை இன்று ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளின் கல்விக்காக மட்டுமே உழைக்க வேண்டியிருக்கிறது. இவற்றுக்கு செலவழிப்பதற்காகவே நெறிமுறைகளை மீறி, பொருள் சேர்க்க வேண்டியிருக்கிறது.
 
வணிகர்கள் கையில் கல்வியைக் கொடுத்து விட்டு, அரசு மெல்ல நழுவிக்கொண்டுவிட்டது. கல்வித்துறை எனும் பெயரில் தேர்வு ஒன்றை நடத்தி, இருக்கிற ஏதோ ஒன்றைக் கொடுத்துப் படிக்கச் செய்வது மட்டுமே போதும் என நினைத்துவிட்டது. இங்கு இருக்கிற கல்வி எதற்கும் உதவாது என்பதைச் சொல்லிப் போராட ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் துணிவும் இல்லை, நேரமும் இல்லை. சம்பளத்துக்காகவும் பணியில் அமர்த்தும் தகுதி குறித்தும் மட்டுமே போராடினால் போதும் என ஆசிரியர்கள் நினைத்துவிட்டார்கள்.
 
தங்களின் சொந்தப் பிரச்சினைகளுக்குப் போராடுவது போல் அரசியல் கட்சிகளும் கல்வி போன்ற நம் தலைமுறையினரின் முதன்மையான பிரச்சினைகளுக்காக ஒன்றுசேர்ந்து போராடுவது இல்லை. இங்கு எல்லாமே தனித் தனி அறிக்கையோடு முடிந்து போகிறது. இங்குள்ள மக்கள் கொத்தடிமைகளாகவும் அகதிகளாகவும் ஆக்கப்படுவது குறித்து கவலைப்படாமல், ராஜபக்சவின் செயல்பாடுகளை மட்டுமே கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
வயது வந்தவர்களின் மூளைகளை மதுக்கடைகள் பிடுங்கிக் கொள்கின்றன. இளம் தலைமுறையினரின் மூளைகளை முடக்கி தனியார் கல்வி நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றன. 'அடிமையாக இருப்பவர்களைவிட தாங்கள் அடிமைகள்தான் என்பதை உணராதவர்களின் நிலைமைதான் கொடுமையானது' என்று சொன்ன ஒரு சிந்தனையாளனின் இந்த வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. கருவேல மரங்களை அழிக்க இன்று எத்தனைத் திட்டங்கள் போட்டாலும் அதனை அழிக்கவே முடியாது. கருவேல மரங்கள் நாடெங்கிலும் பரவி, நிலத்தின் வளத்தையும் நீர்ப்பிடிப்பையும் அழித்துவிட்டன.
 
அதேபோல் இந்த ஆங்கிலக் கல்வி நம் தாய்மொழி முதற்கொண்டு வாழ்விய லின் அனைத்து அடிப்படைக் கூறுகளையும் அழித்தொழித்துவிட்டன. இந்தக் கல்வித் திட்டம் நம்மை அடிமைகளாக வைத்திருந்தவர்கள் கொண்டு வந்தத் திட்டம். 1835-ம் ஆண்டில் பிரிட்டன் அரசாங்கத்தின் பணியாளாக இந்தியாவுக்கு வந்த லார்ட் மெக்காலே இந்தியாவைச் சுற்றிப் பார்த்துவிட்டு இரண்டாண்டுகளுக்குப் பின், ஆங்கிலேய அரசாங்கத்துக்கு இப்படி எழுதுகிறான்: 'இந்தியாவை இரண்டு ஆண்டுகள் குறுக்கி லும் நெடுக்கிலும் சுற்றிப் பார்த்து இந்த மடலை எழுதுகிறேன். எல்லா வளங்களும் நிறைந்த நாடு. பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கும் மக்கள். அறநெறிகளை உருவாக்கி அதனை மதித்து வாழும் இவர்கள், ஒன்றைப் பார்த்து மட்டும் பயப்படுகிறார்கள். அந்நியர்களும் அந்நிய மொழியும்தான் அது.
 
குறிப்பாக ஆங்கிலம் பேசினால் பயப்படுகிறார் கள். மதிக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கையை சிதைத்து நம் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. இவர்களின் கல்வி, மருத்துவம், கணிதம், அறிவியல் என எல்லாவற்றையும் அழித்துவிட்டு நம் முறையைப் புகுத்தினால் நிரந்தர அடிமைகளாகி விடுவார்கள்'என எழுதியிருந்தான். இந்தக் கடிதத்தைக் காண்பித்துதான்… சென்ற ஆண்டு 'தலைமுறைகள்', 'தங்கமீன்கள்' படங்களுக்காக என் கருத்துகளை ஆணித்தரமாக எடுத்துரைத்து தேசிய விருதுகளைப் பெற செயல்பட்டேன். மெக்காலே 185 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கடிதம் செயலாக்கப்பட்டதில் நாம் இப்போது நம் அடையாளங்களை இழந்து நிற்கிறோம். தாய்மொழியும் தெரியாத, அயல் மொழியும் தெரியாத ஒரு சமூகமாக சிதைந்து கிடக்கிறோம்.
 
நம் மக்களைப் பற்றி சிந்தித்த, நம் மக்களுக்காகவே வாழ்ந்த தலைவர்களையும் உருவாக்கிய நம் அரசுப் பள்ளிக்கூடங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து மாணவர்களே இல்லாத மாட்டுக் கொட்டகைகளாகிவிட்டன. எல்லாப் பெற்றோர்களைப் போலவேதான் நானும் ஒரு தவறு செய்தேன். நண்பர் ஒருவரின் கேட்கக் கூடாத சொல்லைக் கேட்டு, கறிக்கோழிகள் உருவாக்கப்படும் இடங்களைப் போன்ற வெளியூரில் உள்ள ஓர் ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் என் மகனை சேர்த்தேன். அந்த இரண்டாண்டு காலத்தில்தான் இந்த மாணவர்கள் படும் துயரங்களும், அவர்களுக்குக் கொடுக்கப்படும் கல்வியும், அவை தரப்படும் விதங்களும் புரிந்தன. ஒவ்வோர் ஆங்கிலப் பள்ளிக்கூடமும் ஒரு சிறைக்கூடம்தான் என்பதை உணர்ந்தேன்.
 
மனநோயாளி அளவுக்கு மாற்றப்படும் பிள்ளைகள் ஆசிரியரைக் கொலை செய்யும் அளவுக்கு மாற்றுவதும் இதுபோன்ற பள்ளிகளில்தான். அவர்கள் அதிக அளவில் தேர்ச்சிப் பெற்று அதனை வெளியுலகுக்குக் காட்டுதற்குத்தான் அத்தனைக் கொடுமைகளும் நிகழ்த்தப்படுகின்றன. தனது குடும்பத்துக்கும், தனது சமூகத்துக்கும், இந்த உலகத்துக்கும் அவர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல. பயந்து நடுங்கிய மனதோடும், சோர்ந்து போய் குழி விழுந்த இருண்ட கண்களோடும்தான் என் மகனை வீட்டுக்கு அழைத்து வந்தேன். தன்னம்பிக்கை இழந்த, தன்னைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிற, சிறு பிரச்சினைகளைக் கண்டுகூட அஞ்சுகிற, சமூகத்தைப் பற்றி சிந்திக்க மறுக்கிற அவனை சமநிலைக்குக் கொண்டு வருவதைப் பற்றித்தான் இப்போது கவலைகொள்கின்றேன்.
 
ஒட்டுமொத்த சமூகமும் அழிக்கப்படுவதைப் பார்த்துவிட்டு கொள்ளும் கவலை இது. அந்தப் பள்ளி மட்டுமல்ல; தமிழ் நாட்டின் எல்லாப் பள்ளிகளிலுமே ப்ளஸ் 1 பாடங் களை கற்பிக்காமல் பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்களை மட்டுமே மனப்பாடம் செய்ய கட்டாயப்படுத்துகிறார்கள். இதனால்தான் ஐ.ஐ.டி மற்றும் ஐ.எம்.எம் போன்ற தேர்வுகளில் நம் தமிழ்நாட்டு மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை மிகவும் குறைந்துப்போகிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பருவத்தேர்வை நடத்தி இதனைச் சரி செய்யலாம். யாருக்கு இங்கே இதற்கெல்லாம் நேரம் இருக்கிறது?
 
தங்களுக்கு நல்ல அடிமைகள் வேண்டும் என்பதற்காகவே எந்த மாற்றத்தையும் கொண்டுவரத் தயங்குகிறார்கள். கல்வி என்பது வெறும் விவரங் களைக் கொடுப்பது என்பதாக இல்லாமல், அறிவைக் கொடுப்பதாக இருக்க வேண்டும். உலக அளவில் தலை சிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதல் இருநூறில்கூட இந்தியாவில் இருந்து ஒன்றுமே இல்லை. ஆனால், உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நாடு!
 
வல்லரசாக உருவெடுக்க கனவு காணும் நாடு! ஆங்கிலக் கல்வி கொடுத்து எங்கள் மக் களை முன்னேற்றுபவர்களாகச் சொல்லி மார் தட்டிக்கொள்பவர்கள் கொஞ்சம் இதற்கு பதில் சொல்லுங்களேன். விதை தானியத்தைத் தின்று வயிறு வளர்ப்பவர்களால் எதுவும் சொல்ல முடியாது. மொழி, பண்பாடு, கலாச்சாரம், அறம், நாட்டுப்பற்றை வளர்ப்பதாகக் கல்வி இருக்க வேண்டும். அதனைப் புரிந்து கொண்ட நாடுகள்தான் இன்று உண்மையாக கல்வியைக் கற்றுத் தருகின்றன. முதல் மதிப்பெண் பெறும் ஒரே நோக்கத்துக் காகவே ஒரு மாணவனை உருவாக் கிக்கொண்டிருக்கும் இந்த பெற்றோர்களிடமும், கல்வி நிறுவனங்களிடமும், ஆசிரியர்களிடமும் நான் ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ள நினைக்கிறேன். கொஞ்சம் விசாரித்து சொல்ல முடியுமா?
 
'கடந்த 25 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மதிப்பெண் தேர்ச்சியில் முதல் 25 இடங்களில் தேறிய மாணவர்களெல்லாம் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? யாருடன், எங்கே, எப்படி வாழ்கிறார்கள்' என்பதை விசாரித்துச் சொல்லுங்களேன். இதிலிருந்து நிச்சயம் தெரிந்துவிடும் நம் கல்வித் திட்டத்தின் அருமை பெருமை.
 
 
Link to comment
Share on other sites

30chrgn_-nlc-pictu_2227659g.jpg

 

30chrgn_-vayal-pad_2227658g.jpg

 

 

முதன்முதலாக மின்சார விளக்கை எங்கள் பக்கத்து ஊர் ராஜா டாக்கீஸில்தான் பார்த்தேன். அங்கிருந்து எங்கள் ஊருக்கு மின்சார இணைப்பைக் கொண்டுவர ஐந்து ஆண்டுகள் பிடித்தது. வெறும் இரண்டு கிலோ மீட்டர் தொலைவுதான். சிறிய மண்ணெண்ணெய் விளக்கில்தான் எல்லோருடைய படிப்பும். ஒரு விளக்குக்கு வீட்டில் மூன்று பேர் சுற்றி உட்கார்ந்து படித்தோம். வீட்டுக்கு மின்சார இணைப்பு வரப் போகிறது என்கிற செய்தியில் திக்கு முக்காடித்தான் போனோம். புதுச்சேரியில் இருந்து அதற்கான உபகரணங்களை வாங்கி வந்து பொருத்தினார்கள். மின்சாரம் இல்லாத அந்தப் பொத்தானைத் தொட்டுப் பார்க்கவும், இயக்கிப் பார்க்கவும் நண்பர்களிடம் இருந்து அதற்கான கட்டணமாக முந்திரிக் கொட்டைகளை நானும் என் அண்ணனும் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் வாங்கிக் கொள்வோம்.
 
மூன்று மாதங்கள் இருக்கலாம். திடீர் என ஒருநாள், ’நாளை காலையில் உங்கள் வீட்டுக்கு மின் இணைப்பு தரப்படும்’ எனத் தெரிவித்தார்கள். இரவு முழுக்கவும் தூக்கம் பறந்துபோனது.
 
ஊரில் எங்கள் வீ்ட்டுக்குத்தான் முதல் மின் இணைப்பைக் கொடுத்திருந்தார்கள். செய்தியைக் கேள்விப்பட்டு பள்ளிக்கூட மணி அடித்தவுடன் முதல் ஆளாக சிட்டாகப் பறந்து ஓடி வந்தோம்.
 
ஒவ்வொரு பொத்தானையும் அழுத்திப் பார்த்து விளக்கை எரிய வைத்து சோதனை செய்தோம். எனக்கு முந்தைய அண்ணனுக்குப் பொத்தானில் இருந்த துளையில் விரலை வைத்துப் பார்க்க ஆசை. இரண்டு விரலையும் கொண்டு போய் துளைக்குள் செருகினார். அந்த அலறலை என் காலம் உள்ளவரை மறக்கவே முடியாது.
 
மின்சாரம் வந்தவுடன் ஊரில் எல்லோருடைய வாழ்க்கைப் போக்கும் மாறிப் போனது. அதன் பிறகான காலங்களில் தெரு விளக்கில் தொடங்கி வீடுகளுக்குள்ளும் குண்டு பல்பு மறைந்து வாழைத் தண்டு பல்புகள் வந்தன. இதுபோலவே உழவுத் தொழிலிலும் பெரிய மாற்றங்கள் வந்தன. ஊரில் இருந்த வாய்க்காலில் இருந்தும் குளம், கிணறு மற்றும் ஏரியில் இருந்தும் கபிலை, ஏற்றம், டீசல் இன்ஜின் கொண்டு நீர் இறைத்த முறை மாறி, மின்சாரத்தில் நீர்ப் பாசனம் செய்யும் பம்ப் செட் முறைக்கு விவசாயிகள் மாறினார்கள். நீர் இறைக்கப் பயன்படுத்திய வடமும் சாலும் பரணையில் தூக்கிப் போடப்பட்டன.
 
விவசாயத்தை செழிக்க வைக்கவும், உழவர்களை வாழ வைக்கவும் எனச் சொல்லி அரசாங்கம் கிணறு வெட்டவும், பம்ப் செட் வாங்கவும் கடன் கொடுத்தது. கிணற்றை மட்டும் வெட்டி வைத்துவிட்டு, வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமலும், மேற்கொண்டு கடனை வாங்கி விவசாயம் செய்ய முடியாமலும் ஊருக்கு 10 குடும்பங்கள் கொத்துக் கொத்தாகத் தற்கொலை செய்துகொண்டன. கொஞ்சம் கையில் பசை இருந்தவர்களும், இருந்த நிலத்தில் ஒரு பகுதியை விற்று பணம் புரட்டியவர்களும் மட்டுமே மின்சாரத்தைப் பயன்படுத்தி உழவுத் தொழில் செய்து வந்தார்கள்.
 
இரவில் மட்டுமே விவசாயத்துக்கு மின்சாரம் கொடுத்ததால் வயலுக்கு நீர் பாய்ச்சப் போனவர்களில் பலரை பாம்பு கடித்ததால், அவர்களைப் பிழைக்க வைக்க முடியாமல் போய்ச் சேர்ந்தார்கள். தொடக்கத்தில் 55 அடி ஆழத்தில் நீர்மட்டம் தென்பட்டது போய், இப்போது 700 அடியைத் தாண்டிவிட்டது. 40 ஆண்டுகளில் நிலத்தடி நீர் மட்டும் 600 அடி கீழே போய்விட்டது.
 
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மழைக் காலம் வந்துவிட்டால் ஊரைச் சுற்றியிருக்கிற ஓடைகளில் சிறிய நீர்வீழ்ச்சியில் இருந்து மாதக்கணக்கில் தண்ணீர் கொட்டிக் கொண்டேயிருக்கும். ’குத்துப்பள்ளத்து’ ஓடையில் ஓட்டமாக ஓடிவந்து மூன்று கரணம் போட்ட காலமும் உண்டு. சுற்றுவட்டாரத்தில் உள்ள நாற்பத்துக்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்தும், எங்கள் ஊரில் தேவநதி என அழைக்கப்படும் ஆண்டு முழுவதும் வற்றாத தாழம்பூ அடர்ந்த நீரோடையில் கரிநாளன்று குளிப்பதற்காகவே வருவார்கள். ஆனால், இன்று அதே ஊரில் ஓடை இருந்த தடயம் மட்டுமே கொஞ்சம் மிச்சமிருக்கிறது.
 
இன்று மின்சாரம் இல்லாத நீர் நிலைகள் முற்றிலுமாக அருகிவிட்டன. இந்நிலை எங்கள் ஊரில் மட்டுமில்லை; சுற்றியுள்ள 150 கிலோ மீட்டர் வரைக்கும் நிலத்தடி நீர் பாதாளத்துக்குப் போய்விட்டது.
 
ஆர்ட்டீசியன் ஊற்றுப் பகுதியாக இருந்த எங்கள் பகுதி, இன்று பாலைவனமாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. என்றைக்கு நெய்வேலிப் பகுதியில் நிலக்கரி கண்டுபிடித்தார்களோ… அன்றைக்கே இந்த மண் பாலைவனமாகத் தொடங்கிவிட்டது.
 
2,400 அடியில் கிடக்கின்ற நிலக்கரியை வெட்டி எடுக்க, அதுவரை உள்ள எல்லாத் தண்ணீரையும் வெளியேற்றினால்தான் முடியும். 12 அடி விட்டம் உள்ள மூன்று குழாய்கள் மூலம் 24 மணி நேரமும் ராட்சத இயந்திரங்களை வைத்து விடாமல் நீரை இறைத்துக் கொண்டே இருக்கிறார்கள். வெறும் 8 நிமிடங்கள் இயந்திரங்கள் நின்று போனால் சுரங்கம் மூழ்கத் தொடங்கிவிடுமாம். இது மட்டுமில்லை; வெளியேற்றிய நீர் வயலில் பாய்ந்து கரித் துகள்கள் படிந்து நிலத்தை மலடாக்கி விடுகின்றன. இந்தச் செய்தி கொஞ்ச காலத்துக்கு முன்புதான் இந்த மக்களுக்குத் தெரியவந்தது.
 
இதுபோக 24 மணி நேரமும் நிலக்கரியை எடுப்பதினால் வெளியேற்றப்படும் கரித் துகள்கள் அவ்வளவு மக்களுக்கும் நோய்களை வாரி வாரி வழங்குகின்றன. ஐந்தே ஐந்து நிமிடங்கள் மட்டும் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு எடுக்கும்போது பளிச்சென்றுத் தெரியும் அளவுக்கு, உங்களின் பெயரை வாகனத்தின் மேல் படர்ந்திருக்கும் கரித்தூளில் எழுதிப் பார்க்கலாம். இந்தத் துகள்கள் உணவுப் பயிர்களின் மேல் படிந்து விளைச்சலை பெரிதும் பாதித்துவிட்டன.
 
நெய்வேலியைப் பற்றித் தமிழர்கள் பெருமையாகப் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், இந்தச் செய்தி பலருக்குத் தேவையற்றதாகவும் அதிர்ச்சியூட்டுவதாகவும் கூடத் தோன்றலாம். சுரங்கத்துக்காக விரட்டப்பட்ட இருநூறுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்கள் மனநோயாளிகளாக, அகதிகளாக அங்கேயே சுற்றிக்கொண்டு வருவதை யாரும் கேள்விப்பட்டிருக்க நியாயமில்லை. எந்தெந்த மாநிலத்துக்காரர்களோ வந்து கோலோச்சி அவர்களை ஆட்டிப் படைக்கிறார்கள். மூன்றில் ஒரு பகுதியை விடக் குறைவாகவே தமிழ்நாட்டுக்கு மின்சாரத்தைக் கொடுத்துவிட்டு, பிற மாநிலங்களுக்குக் கடத்திவிடுகிறார்கள்.
 
இதனைக் காரணம் காட்டித்தான் 10 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி சிக்கல் பெரிதாக உருவானபோது, தமிழ்த் திரையுலகத்தினர் கூட்டியிருந்த ஆலோசனைக் கூட்டத்தில் நெய்வேலியில் போராட்டத்தை முடுக்கி, மின்சாரத்தை முடக்க வேண்டும் என கடுங்கோபத்துடன் என் கருத்தினை வெளியிட்டுப் பேசினேன். பெரும் பரபரப்பினையும், எழுச்சியினையும் உருவாக்கிய அந்தக் கூட்டத்தால் போராட்டம் வெடித்தது. நெய்வேலியில் நடந்த கூட்டத்தில் யார், யாரெல்லாமோ பேசி தங்களின் அரசியல் ஆதாயத்தைத் தேடிக் கொண்டார்கள். என்னைப் பேச அனுமதிக்காததால் ஆறு கிலோ மீட்டர் நடந்தே என் உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டேன்.
 
எல்லோரும் புகழ்ந்து கொண்டிருந்த நெய்வேலி எனக்கு எமனாகத் தெரிந்தது. அதனால்தான் ’எமன்’ எனும் நாவலை 1992-ம் ஆண்டு எழுதத் தொடங்கினேன். 1874-ம் ஆண்டு மேட்டுக்குப்பத்தில் வடலூர் ராமலிங்க அடிகள் மறைந்த 10 நிமிடத்துக்குப் பின், பக்கத்து வீட்டில் பிறக்கிற ஒரு குழந்தையிடம் இருந்து நாவல் தொடங்குகிறது. 2009-ம் ஆண்டு மேல்மருவத்தூரில் முடிகிற இந்த நாவல், கடந்த காலங்களில் ஏற்பட்ட அனைத்துத் துறை சார்ந்த மாற்றங்களினால் சீரழிந்த தமிழர்களின் வாழ்வியல் போக்குகளைத் தோலுரிக்கும் படைப்பாகும். எனக்கு இருந்த தொழில் சிக்கல், பொருளாதார சிக்கல் என எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு, 1950-ம் ஆண்டு வரையிலான நிகழ்வுகளை 800 பக்கங்களுக்கு மேலாக புனைந்திருந்தேன்.
 
இரண்டு ஆண்டுக்கு முன்ப்ய், நான் தற்போது குடியிருக்கும் சென்னை வீடு புதுப்பிக்கப்பட்டபோது என்னுடைய கவனக்குறைவால் அந்த நாவல் காணாமல் போனது. அதனைத் தேடி கிடைக்காத வேளைதான் என் வாழ்வில் தாங்கிக்கொள்ள முடியாத துயரமான நாட்கள். பொருள் வைத்திருந்த பெட்டிகள் இடம் மாற்றப்பட்டதில் ‘எமன்’ நாவலை இழந்ததோடு, என் மன நிம்மதியையும் இழந்துவிட்டேன். தேடி அலைந்து முடிந்து ஒரு மாதம் கடந்திருக்கலாம். வீட்டின் மாடியில் நின்று இருந்தபோதுதான் அதனைக் கவனித்தேன். இரண்டு குப்பைப் பொறுக்கும் சிறுவர்கள் வெற்றிடமாகக் கிடந்த பக்கத்து மனைப் பரப்பில், சிதறிக்கிடந்த தாள்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். காலம் கடந்துதான் அந்தத் தாள்கள் கண்ணில்பட்டன. 150 பக்கங்களுக்குத் தேறலாம். ஒன்றுக்கொன்றுத் தொடர்பில்லாத பக்கங்கள். என்னால் எதனையும் ஒரு வரியைக் கூடப் படித்துப் பார்க்க முடியவில்லை. கண்டுபிடித்த பக்கங்கள் மேலும் மேலும் என் மனச் சுமையைத்தான் கூடுதலாக்கின. நெய்வேலி அனல்மின் நிலையம்தான் எமனாக வந்து எங்களின் வாழ்வாதாரத்தையும் இயற்கை வளங்களையும் அழித்தது என்றால், இந்த ‘எமன்’ நாவலும் என்னைக் கொன்றுவிடும் என முடிவு செய்து, எடைக்குப் போடப்படும் செய்தித் தாள்களுக்கு இடையில் யாருக்கும் தெரியாமல் வைத்துவிட்டேன். இனி மறுபடியும், எப்போது எனக்கு எழுதுகிற மனநிலையும் நேரமும் கிடைக்கப் போகிறது என்பதும், எப்படி நான் அந்த நாவலை முழுமையாக எழுதி முடிப்பேன் என்பதும் எனக்குத் தெரியவில்லை.
 
ஊர்ப் பக்கம் போகவே பிடிக்கவில்லை. மின்சாரம் வந்ததும் கிணற்றை மறந்துபோனார்கள். ஊருக்கு ஒரு கிணறு கூட இல்லை. மின்சாரம் வந்தால்தான் குடிக்கவே நீர் கிடைக்கும் என்கிற நிலையில் 700 அடி ஆழத்தில் இருந்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து பிழைக்க முடியுமா? காலம் காலமாக ஏதோ கொஞ்சம் வயிற்றுக்குக் கஞ்சி ஊற்றி வந்த பலா மரங்களும், முந்திரி மரங்களும் ’தானே’ புயலால் பாலைவனமாகிப் போனது. ஒரு பக்கம் நெய்வேலிகாரன் 24 மணி நேரமும் நிலத்தடி நீரை உறிஞ்சி வெளியேற்றுகிறான். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சென்னைக்குத் தண்ணீர் தேவைப்படும்போதெல்லாம், அரசு அமைத்த ராட்சத ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு, யானை மாதிரியான பெரியப் பெரிய குழாய்கள் மூலம் இந்த மண்ணுக்குள்ளிருந்து தண்ணீர் வெளியேறிக்கொண்டே இருக்கின்றது. ’தானே’ புயல் நிவாரண நிதியின் மூலம் வளர்க்கப்பட்ட பலா, முந்திரிக் கன்று நாற்றுகள் தோண்டிக் கொண்டிருக்கும் 700 அடி ஆழக் கிணறுகளில் இருந்து தண்ணீரைப் பெற்று மீண்டும் மரமாகக் காத்திருக்கின்றன.
 
காத்திருப்பது நாற்றுகள் மட்டுமல்ல; பிழைக்க வேறு வழியே தெரியாத இந்த மக்களும்தான்.
 
- இன்னும் சொல்லத்தோணுது…
எண்ணங்களைத் தெரிவிக்க: thankartamil@gmail.com
 
Link to comment
Share on other sites

சொல்லத் தோணுது 12 - கண்கள் இழந்த தமிழன்!

thangar_2235914f.jpg

கி.மு. 3-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 19-ம் நூற்றாண்டு வரை தமிழ் எழுத்து வடிவ மாற்றத்தைக் காட்டும் பட்டியல்
 

திரைப்படக்கலை உருவானப்பின் உலக வரலாற்றிலேயே சினிமாவுக்குள்ளேயே வாழ்க்கையை குழிதோண்டி புதைத்துக் கொண்டவன் தமிழன் மட்டுமே. நூறு ஆண்டுகள் கடந்தும் இன்னும் சினிமாவின் போதை மயக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை. சினிமாக்காரர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்கத் தயங்குபவர்கள் மகிழ்ச்சியோடு நாட்டைக் கொடுப்பார்கள். ஐந்து முதலமைச்சர்களை நாற்காலியில் அமர்த்தி அழகு பார்த்தவர்கள் ஆறாவதாக ஒரு ஆளைத் தேடி விடுவார்களோ என்பதில் குழப்பத்திற்கும், அச்சத்திற்கும் இடமிருப்பதாகவேத் தோன்றுகிறது.

 
சென்ற ஆண்டு தேசிய திரைப்பட விருதுக்குழுவில் இருந்தபோது மற்ற மாநிலத்து உறுப்பினர்களால் ஒரு நாள் அளவுக்கதிமாக இதற்காகவே நையாண்டி செய்யப்பட்டேன். உங்கள் அறிவியல் அறிவு, இலக்கிய அறிவு, அரசியல் அறிவு, கலை அறிவு அத்தனையையும் சொல்ல உங்களுக்குத் தகுதியில்லை என்றார்கள். பழம் பெருமைகளைப் பேசி காலந்தள்ளுவதை விட்டுவிட்டு நிகழ்கால வாழ்க்கைக்கு வாருங்கள் எனச் சொன்னார்கள். அன்றைக்கு நான் வேட்டியில்தான் படம் பார்க்க அரங்குக்கு சென்றிருந்தேன்.
 
சொல்லி வைத்த மாதிரி எல்லோரிடமிருந்தும் ஒரே முகபாவம். அந்த சிரிப்பில் ஏளனம் ஒட்டிக்கொண்டிருந்தது. விவரம் புரியாமல் நான் விழித்தபோது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அந்த படைப்பாளி எனக்கு அதற்கான காரணத்தைச் சொல்லி, மென்மையாக இதனை எடுத்து கொள்ளுங்கள் எனச்சொன்னபோது வெட்கித் தலை குனிந்துபோனேன். அதன்பின் திரையில் என் மனது ஒன்றுவதற்கு நெடுநேரம் எடுத்துக்கொண்டது.
 
அன்றைய இரவும் அதே நண்பர்களிடம் வெளிப்படையாகவே இதுபற்றி உரையாடினேன். வேட்டியைப் பார்த்தாலே எங்களுக்கு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்தான் நினைவுக்கு வருகிறது. ஊழலை இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கற்றுக்கொடுத்தது அவர்கள்தான். ஆனால் அதைப்பற்றி எந்த குற்றவுணர்வும் இல்லாமல் பெருமையோடு அலைவதுதான் வேதனையாக இருக்கிறது எனச் சொன்னார்கள். நாங்கள் வேட்டியை மடித்துக்கட்டாமல் கட்டுகிறோம். நீங்கள் வளைத்து முறுக்கி விதம் விதமாகக்கட்டி அதே ஊழலைச் செய்யவில்லையா என நானும் பதிலுக்குக் கேட்டேன். அதன் பிறகும் பல நாட்கள் வேட்டியுடன்தான் படங்களைப் பார்த்தேன்.
 
நான் அவர்களுடன் இருந்த ஆறு வாரங்களில் நம்மைப்பற்றிய மதிப்பீடு அவர்களின் மனதில் என்னவாக இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டேன். ‘மொழி வெறியர்கள்’ என ஒற்றை வரியில் எல்லாரும் சொல்கிறார்கள். அவ்வாறு உண்மையிலேயே நாம் இருந்தால் என்னைவிட மகிழ்ச்சி அடைய யார் இருக்கிறார்கள்? அப்படித்தானடா ஒரு காலத்தில் இருந்தோம்! இப்போது நாம் இருக்கிற நிலையை நெருங்கி வந்து பார்த்தால் பொறாமைப்பட்டு வயிறு எரிந்தவர்கள் மகிழ்ச்சியில் மூழ்கிப் போவார்கள். இந்தியை எதிர்த்த ஒரே காரணத்துக்காக மட்டுமே நம்மை எதிரியாக பார்க்கிறார்கள்.
 
தமிழர்களில் 99 விழுக்காடு மக்களுக்கு தமிழில் பெயர்கள் கூட இல்லை என்பதும், தமிழில் தங்கள் குழந்தைகள் பேசுவதையோ, தமிழைப் படிப்பதையோ அவர்கள் விரும்புவதில்லை என்பதும், தமிழில் பேசிவிட்டால் குழந்தைகள் பள்ளிகளில் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதும், ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் தமிழில் பேசுவதை இழிவாக நினைக்கிறான் என்பதும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கும், விழாக்களுக்குமான அழைப்பிதழில் கூட தமிழை ஒதுக்கிவிட்டான் என்பதும், கோவில்களில் தமிழில் வழிபாடு செய்யச்சொல்லி வற்புறுத்தாமல் சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் மந்திரத்தையே விரும்புகிறான் என்பதும் தன் வாழ்வில் தமிழுக்காக எந்த இடத்தையும் தராமல் மகிழ்ச்சியோடு தமிழன் என நினைத்து வாழ்கிறான் எனவும், நீதிமன்றங்களில் தமிழில் வாதாடுவதற்காக மனுபோட்டு கெஞ்சிக் கொண்டிருக்கிறான், அதுமட்டுமா ஒரே ஒரு நிமிடம் ஆங்கிலத்தையோ, சமஸ்கிருதத்தையோ கலக்காமல் தமிழில் பேசச்சொன்னால் எல்லா தமிழனும் தோற்றுப் போகிறான் என்பதும் அவர்களுக்குத் தெரியவாய்ப்பில்லை.
 
ஆனால் எங்களுக்காக ஒரு மாநிலம் வேண்டும் எனச்சொல்லி 72 நாட்கள் உண்ணாநிலையிலிருந்து போராடி சங்கரலீங்கனார் உயிர் நீத்தார். நாங்களும் எங்கள் மாநிலம் தமிழ்நாடு எனவும், எங்கள் அரசு தமிழ்நாடு அரசு எனவும் அழைத்துக்கொண்டு வருகிறோம்.
 
நாங்கள் தமிழர்கள்தான் என்பதை காட்டிக்கொள்ள ஒரு தமிழர் அவமானப்படுத்தப்பட்டதற்காக கொதித்து எழுந்து உடனடியாக சட்டமன்றத்தில் வேட்டிகட்ட உரிமை வாங்கித்தந்து சட்டம் இயற்றினோம். இந்தப் பெருமை எந்த மாநிலத்துக்காவது இருக்கிறதா?
 
உடனடியாக ஊடங்கள் முழுக்க அதற்கு பாராட்டு தெரிவித்து கொண்டாடினார்கள். இதைவைத்து வியாபாரம் செய்யும் ஆடை நிறுவனமும் மலையாள நடிகர் வேட்டி கட்டி வணக்கம் செலுத்தும் படத்தைப்போட்டு பத்திரிக்கைகளில் முதல் பக்கத்திலேயே தமிழர்களின் மானத்தை மீட்டுத்தந்தததற்காகப் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கும் விதமாக ‘தமிழக அரசுக்கு’ சல்யூட் என்றார்கள்.
 
உலகம் முழுக்க முக்கால்வாசி நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறேன். தமிழன் தன் தாய்மொழியைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட அவல நிலை உலகத்தில் எங்குமே இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இலக்கணத்தை வகுத்த செம்மொழி இன்று தமிழனின் நாக்கில் ஒரு நிமிடம் பேச முடியாமல் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. எல்லாருமே சூப்பர் தமிழராகிவிட்டோம்.
 
தன் தாய்மொழி, தன் இசை, தன்கலை, தன் இலக்கியம், தன் மருத்துவம், தன் அறிவியல் என எல்லாவற்றையும் வெளிநாட்டவர்கள் தங்களின் பிள்ளைகளுக்குத் தொடக்கத்திலேயே கற்றுக்கொடுக்கிறார்கள். பின் உலகத்திலுள்ள அவர்கள் விரும்பிய மொழியை எல்லாம் கற்கிறார்கள். இதனால் அவர்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அவனது இனத்தையும் மொழியையும் நாட்டையும் கண்களாக கருதுகிறார்கள்.
 
அறிவுக்காக உருவாக்கப்பட்ட கல்வி இன்னும் வயிற்றுப்பிழைப்புக்காக என மாறிப்போயிருக்கிறது. நான் அரசமரத்தடியில் தரையில் அமர்ந்து படித்த சிறிய கிராமத்துப் பள்ளிகளில் கூட இன்று தமிழ் வழியில் படிக்க ஆள் இல்லை. என் கிராமத்தில் அரசுப்பள்ளித்தவிர மூன்று ஆங்கிலப் பள்ளிகள் தொடங்கப்பட்டுவிட்டன. இதுபோக பக்கத்து சிறு நகரங்களிலிருந்தும் பேருந்துகள் வந்து அதிகாலை ஆறரை மணிக்கே குழந்தைகளை அள்ளிக்கொண்டு போய்விடுகின்றன. எல்லாருமே இன்று டாக்டர், எஜ்ஜினியர் ஆக வேண்டும் என பெற்றோர்கள் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.
 
ஏற்கெனவே தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலையில்லை. அவர்களுக்கு வேலைத்தர அனைவருமே மறுக்கிறார்கள். இதனால் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. இதுபற்றிய எந்தக் கவலையும் நம்மை ஆண்டவர்களுக்கும்,ஆள்பவர்களுக்கும் இல்லை. தமிழில் படிப்பவர்களுக்கு வேலைத்திட்டங்களை உருவாக்கித் தரவும் முயலவில்லை.
 
பெயரளவிற்கே தொலைக்காட்சிகளும், வானொலிகளும் தமிழை இணைப்பு மொழியாக ஆங்கிலத்தோடும், சமஸ்கிருதத்தோடும் பயன்படுத்தி தமிழ்மொழியை சிதைத்து கொலை செய்துகொண்டிருக்கின்றன. சட்டமன்றத்திலிருந்து கீரை விற்கும் பாட்டி வரைக்கும் சூப்பர் எனச்சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.
 
தமிழ்த்திரைப்படத்துறையில் பலபேருக்கு வெளியில் காட்டிக்கொள்ள முடியாத கோபமிருக்கிறது. எதற்காக நாம் தமிழில் படத்தின் பெயரை சூட்டவேண்டும் என நினைக்கிறார்கள். பிறமொழிகளில் பெயர் சூட்டக்கடாது தமிழிலேயேதான் இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட விதியின்படி வெளியாகியிருக்கிற படங்களில் எழுபது விழுக்காடுப் படங்கள் சமஸ்கிருதத்தைத் தலைப்பாகக் கொண்டவைகள்தான். தமிழை நன்கறிந்தவர்களுக்கும், தமிழறிஞர்களுக்கும் மட்டுமே இதுத் தெரியும். மக்களுக்கும், மற்றவர்களுக்கும் இந்த சூழ்ச்சி புரிவதில்லை. அரசாங்கமும் இதனைக்கண்டு கொள்லாமல் வரிச்சலுகை வழங்கிவிடுகிறது. சமஸ்கிருதத்தில் தலைப்பு வைக்கும் போது ஆங்கிலத்திலேயே சூட்டி விடலாமே! பிறகு ஏன் இதற்கு ஒரு விதி, வரிச்சலுகை அதற்கு சான்றிதழ் வழங்க ஒரு அமைச்சரகம்?
 
நம் இளம் படைப்பாளிகளும், தயாரிப்பாளர்களும் பத்திரிகைகளில் வெளியிகின்ற சில விளம்பரங்களில் படத்தின் தலைப்பு மட்டுமே தமிழில் இருக்கின்றன. மற்ற விவரங்கள் குறிப்பாக தொழில் நுட்பக்கலைஞர்கள் பற்றிய விவரங்கள் ஆங்கிலத்தில் இருப்பதையே பெருமையாகக் கருதுகிறார்கள். போராட்டம், எதிர்ப்பு என்றால் அது ஈழத்தமிழர் அரசியல்தால் என்றாகிவிட்டப் பிறகு இதனையெல்லாம் கேட்க யார் இருக்கிறார்கள்?
 
தமிழர்கள், தமிழில் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதிலோ, தமிழைப் பேசுவதிலோ, வேலைவாய்ப்பை பெருவதிலோ, வாழ்வியலில் தமிழர்களின் அடையாளத்தை மீட்டெப்பதிலோ தமிழில் பெயர் சூட்டுவதிலோ காட்டுவதில்லை. வேட்டிக்கு நேர்ந்த அவமானத்தை தமிழனுக்கு நேர்ந்த அவமானமாக கருதிய அரசு தமிழ்படிக்காதப் பிள்ளைகளை தமிழில் படிக்க வைக்கவும், அவர்களுக்கு வேலை தரவும் ஏன் சட்டங்களையும், திட்டங்களையும் உருவாக்க மறுக்கிறது?
 
தமிழ்நாடு எனும் பெயரில் தமிழர்களாக தமிழ் இனமாக வாழ்ந்துகொண்டிருக்கும் எங்களுக்கு தமிழில் கல்வி கொடுங்கள், தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே உயர்நிலை பதவி கொடுங்கள், எங்களுக்கு 80 விழுக்காடு வேலை கொடுத்ததுபோக மீதியை மற்றவர்களுக்குக் கொடுங்கள். அப்பொழுதுதான் தமிழர் வேட்டிக்கட்டுவது பொருத்தமாகவும், பெருமையாகவும் இருக்கும். அதுவரை வேட்டி கட்டும் மலையாளியைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருக்க வேண்டியதுதான். ஏனென்றால் வேட்டியிருந்தும் மொழியிழந்த கண்களிழந்த குருடர்கள்தான் இந்தத் தமிழர்கள்.
 
- இன்னும் சொல்ல தோணுது… 
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com
 
Link to comment
Share on other sites

சொல்லத் தோணுது 13 - கடவுள் என்ன செய்கிறார்?

 

st_2243710f.jpg

 

 

கோயில்களில் எனக்குப் பிடித்தது அங்கு இருக்கும் சிற்ப வேலைப்பாடுகள் தான். அதுதான் கலையின் உச்சம் என்றே சொல்லலாம். நம் முன்னோர்களின் மிகச் சிறந்த கலை ஆளுமை நம் பழைய கோயில்களில் மட்டுமே இன்னும் கிடைக்கின்றன. நம் வாழ்வின் அறங்களைக் கற்றுக்கொடுத்த இடமாக நம் கோயில்கள் இருந்திருக்கின்றன.
 
பிரான்ஸில் இருந்து வந்திருந்த திரைப்பட இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஒருவரை யும் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அழைத்துச் சென்றிருந்தேன். கிழக்கு வாசல் கோபுரத்தைப் பார்த்தவுடனையே அவர்களின் பயணத் திட்டங்கள் மாறிப் போனது. இரண்டு மணிநேரம்தான் அங்கு இருக்கத் திட்டமிட்டிருந்தோம். புதுச்சேரியில் இருந்த பணிகளையெல்லாம் உடனே தள்ளிப் போட்டுவிட்டு கேமராவை எடுத்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்துவிட்டார்கள். பின்னர் மனமே இல்லாமல்தான் நடராஜர் கோயிலில் இருந்து திரும்பிப் போனார்கள்.
 
அவர்களுடன் நானிருந்த ஒருவார காலமும் நம் வாழ்க்கை நிலையும் முறைகளும் சீரழிந்தது பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கேள்விகளுக்கு என்னிடமிருந்து பதில்களே இல்லை. நந்தனார் பற்றிய கதையைச் சொன்னபோது, அதனை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இவ்வளவு மிகச் சிறந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் ஏன் இவ்வளவு மோசமாகவும் வாழ்ந்தார்கள் என்கிற கேள்வியை அவர்கள் எழுப்பினார்கள். எந்த சாதியைப் பற்றியோ, எந்த ஒரு மதத்தைப் பற்றியோ, எந்த ஒரு கடவுளைப் பற்றியோ குறிப்பிட்டு திருவள்ளுவர் எழுதாதபோது, எவ்வாறு இவை உள்ளே நுழைந்தன… என்கிற கேள்விகள் எனக்கு அதன்பின் எழுந்தன.
 
அன்று ஏழைகள்தான் ஒவ்வொரு கல்லாக, மண்ணாக, பாறைகளாகச் சுமந்து வெறும் சோற்றுக்காக மட்டுமே அத்தனை சிற்பங்களையும் வடிவமைத்து, கோபுரங்களையும், கோயில்களையும், குளங்களையும் கட்டி முடித்தார்கள். ஆனால், வானைத் தொட்டுக் கொண்டு நிற்கும் இந்தக் கோபுரங்களின் மீது ஒருமுறை ஏறச் சொன்னால் மயக்கம் போட்டு விழுந்துவிடுபவர்கள் எல்லாம், இன்று இந்தக் கோயிலுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். இவர்கள் ஒரே ஒரு கல்லையோ, ஒரு கைப்பிடி மண்ணையோ சுமந்திருப்பார்களா? எல்லாவற்றையும் அரும்பாடுபட்டு உருவாக்கி சிலையையும் செய்து முடித்து கருவறையில் வைத்தப் பின், அதற்குத் தண்ணீர்த் தெளித்து, அதற்கு ‘உயிர் உண்டாகிவிட்டது’ எனச் சொல்லி… அத்தனைப் பேரையும் வெளியில் நிற்கச் செய்துவிட்டார்கள். மற்றவர்களுக்கு சிலை வரைக்குமாவது சென்று தொலைவில் நின்று பார்க்க அனுமதி கிடைத்தது. ஆனால், கல்லையும் மண்ணையும் சுமந்த பரம்பரை யில் வந்த நந்தனாரைக் கூட வெளியில் நிறுத்திவிட்டார்களே!
 
இந்த மக்கள் தாழ்ந்த சாதிக்காரனாக, பிற்பட்ட சாதிக்காரனாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார்களா? தங்களை நல்ல நிலைக்குக் கடவுள் உயர்த்துவார் என நினைத்துத்தானே கல்லையும் மண்ணையும் சுமந்திருப்பார்கள்? அவர்களை எல்லாம் குடியிருக்க இடமில்லாமல் சாக்கடையிலும் கொசுக்கடியிலும் இருக்கச் செய்தவர்தான், கடவுளா?
 
இருக்கின்ற கோயில்களெல்லாம் போதா தென்று இன்னும் மூலைக்கு மூலை கோயிலைக் கட்டிக் கொண்டே போகிறோமே... எப்போது இதனைப் புரிந்துகொள்ளப் போகிறோம்? எங்களைக் கோயிலைக் கட்டவும், குளத்தை வெட்டவும் சொல்லிவிட்டு… சிலருக்கு மட்டும் கல்வியைக் கொடுத்தாயே! எங்கள் கண்களில் இப்போதுதானே எழுத்தைக் காட்டினாய். எங்கள் பிள்ளைகள் இந்த ஒரே தலைமுறையில் எல்லாவற்றையும் கற் றுக் கொண்டபோது… இந்தக் கல்வியை அவர்களுக்கும் கொடுத்தபோதே எங்களுக்கும் கொடுத்திருந்தால், நாங்கள் எங்கோ அல்லவா போயிருப்போம்? வெறும் கையெழுத்து மட்டுமே போடத் தெரிந்த என் அப்பாவுக்கும், அதுகூடத் தெரியாத அம்மாவுக்கும் பிறந்த நான் சிந்திக்கத் தொடங்கியிருக்கும்போது, இனி எங்கள் பிள்ளைகள் எப்படியெல்லாம் உன்னைக் கேள்வி கேட்பார்கள்… என்பது, கடவுளாகிய உனக்கு கட்டாயம் புரிந்திருக்கும்.
 
பிச்சைக்காரர்கள் இல்லாதக் கோயில்களை யும், உன்னைப் பார்க்கப் பணம் கேட்கும் பூசாரி கள் இல்லாத கோயில்களையும் எப்போது நாங்கள் பார்க்கப் போகிறோம்? ஆயிரம் ரூபாய் கொடுப்பவனை உன் பக்கத்திலேயும், ஒன்றும் கொடுக்காதவனை உன் கண்களுக்கே தெரி யாத தொலைவிலேயும் நிற்க வைக்கிறாயே… உனக்கு உண்மையிலேயே கண்கள் இருக்கிறதா? உன்னுடைய வேலைதான் என்ன? பாமர மக்களின் உழைப்பைச் சுரண்டி, அவர்களின் சிந்தனையை மழுங்கடித்து, ஏமாற்றி, ஏழை களின் வயிற்றெரிச்சலில் கொள்ளையடித்தப் பணத்தை எல்லாம் உன்னிடத்தில் கொண்டு வந்து கொட்டுகிறார்களே! அதானால்தான் அவர்களை எல்லாம் மேலும் மேலும் ஒரு வீட்டுக்குப் பத்து வீடாக, ஒரு காருக்குப் பத்து காராக, ஊரில் இருக்கிற எல்லா சொத்துக் களையும் அவர்களுடைய சொத்தாக மாற்றிக் கொண்டிருக்கிறாயா?
 
சரி, எப்படியாவது உன்னைப் பார்த்தால் போதும் என எல்லா வேலைகளையும் விட்டுவிட்டுக் கோயிலுக்குள் நுழைந்தால்… அங்கே நடக்கிற கூத்தெல்லாம் உனக்குத் தெரியுமா? ஏகப்பட்ட சண்டை போட்டு, வழக்கெல் லாம் போட்டு, ‘தமிழ்க் கடவுளுக்கு… தமிழ் நாட்டில் தமிழில் வழிபாடு செய்யுங்கள்’ என ஆணை பிறப்பித்தால், அதாவது நடக்கிறதா? ‘தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்’ என ஒரு மூலையில் எழுதி வைத்திருப்பதோடு சரி!
 
நான் கோயிலுக்குப் போகும்போதெல்லாம் தமிழில் வழிபாடு செய்யுங்கள் அதுதான் எனக்குப் புரியும். எங்கள் சாமிக்கும் புரியும் எனச் சொல்கிறேன். பெயருக்கு இரண்டு வரி தமிழில் சொல்லிவிட்டு மீதியை சமஸ்கிருதத்தில் சொல்லி முடித்துவிட்டு, என்னை எப்போது வெளியில் அனுப்பலாம் என்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள். சில பூசாரிகள் எங்களுக்கு தமிழில் மந்திரம் தெரியாது என்கிறார்கள். உண்மை யிலேயே தெரியவில்லையா? கற்றுக் கொள்ளப் பிடிக்கவில்லையா? அல்லது வேண்டாம் என நினைக்கிறீர்களா எனக் கேட்டால், இத்தனை பேர் பேசாமல் கும்பிட்டுவிட்டுப் போகும்போது உங் களுக்கு மட்டும் என்ன எனக் கேட்பவர்களும் உண்டு.
 
என்னுடன் அங்கு இருக்கிற ஒரே ஒருவர்கூட எனக்கு ஆதரவாகவோ, தங்களுக்கும் சமஸ்கிருதம் புரியவில்லை, தமிழில் மந்திரத் தைச் சொல்லுங்கள் என்றோ கேட்டதில்லை.
 
என்னைப் போன்ற பலருக்கும் இதுபோன்ற கசப்பான அனுபவங்கள் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது. எல்லாவற்றையும் போல் இதைப் பற்றியும் யாரும் கண்டுகொள்வதாக இல்லை. எல்லாவற்றையும் எதிர்த்துக் கேள்வி எழுப்பும் என் மனைவியும், மற்றவர்களும் எதையும் கேட்காமல் கோயிலுக்குள் சென்று கொண்டிருக்கும் காட்சியைப் பரிதாபத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
 
சட்டத்தைக் கரைத்துக் குடித்து மக்கள் நலனுக்காகவே செயல்படும் மனிதர்களில் எவராவது ஒருவர், ‘கடவுளுக்கு முன் எல்லோ ரும் சமம்’ எனும் சட்டத்தைக் கொண்டுவர மாட்டாரா?
 
- இன்னும் சொல்லத்தோணுது…
 
Link to comment
Share on other sites

சொல்லத் தோணுது 14 - தூய்மை இந்தியாவும், நாறும் மனிதர்களும்!

thangar_2251858f.jpg

 

 

தூய்மையை விரும்பாத மனித மனம் இருக்க முடியுமா? ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தூய்மை உருவாக என்ன செய்யலாம்? இதற்கும் திட்டம் உருவாக்க முடியுமா? திட்டத்தை யார் உருவாக்குவது?
 
இந்தியா தூய்மைப் பெற வேண்டும் என்பதை நமது தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்கள் மட்டும் விரும்பவில்லை. நாம் எல்லோரும்தான் விரும்புகிறோம். தூய்மை என்றால் எது என்பதை சிந்திக்க வேண்டிய நெருக்கடியான காலகட்டம் இது.
 
சென்ற மாதத்தில் இத்திட்டம் அறிவித்தவுடன் ஊடகங்களில் நான் கண்ட காட்சி இது.
 
ஏதோ ஒரு வட மாநிலத்தில் இத்திட்டம் தொடங்குவதற்காக அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். அவசர அவசரமாக அதற்கான வாசகங்கள் பொறித்த பதாகைகள் சாலையில் நாட்டப்படுகின்றன.
 
தூய்மை என்றால் அப்படி ஒரு தூய்மையான ஆடையோடு அமைச்சர்களும், அரசியல்வாதிகளும், உயர் அதிகாரிகளும் ஊர்திகளிளிருந்து வந்து இறங்குகிறார்கள். இதனைப் படம் பிடித்து மக்களுக்கு தூய்மைத் திட்டத்தை அறிவுறுத்த ஊடகத்தினர் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். இப்போது எல்லோரும் ஆயத்தமாகிவிட்டார்கள். கையில் நின்றபடியே பெருக்கித் தள்ளக்கூடிய நீண்ட துடைப்பத்தை உரியவர்களிடம் கையில் கொடுத்துவிட்டார்கள். எதை தூய்மைப்படுத்துவது என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை. அதிகாரிகளின் ஆணைப்படி கடைநிலை ஊழியர் ஒருவர் தள்ளுவண்டியை இழுத்துக்கொண்டு ஓடுகிறார். மரத்தின் கீழே குவித்து வைக்கப்பட்டிருந்த காய்ந்த சருகுகளை அள்ளிப்போட்டு கொண்டு விறுவிறுப்புடன் வந்து காத்திருந்தவர்கள் முன்னே அவைகளைக் கொட்டுகிறார். சருகுகள் தரையெங்கும் இறைக்கப்படுகின்றன. ஒரே நேரத்தில் அத்தனைத் துடைப்பங்களும் சருகுகளை கூட்டிப் பெருக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றன. இக்காட்சி ஊடகத்தினால் படம் பிடிக்கப்பட்டு மக்களின் பார்வைக்கு வருகின்றன. இப்போது தூய்மைத் திட்டம் தொடங்கப்பட்டுவிட்டது. இத்திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்ல இந்தியா முழுமையிலும் உள்ள மக்களுக்கு நன்கு தெரிந்த முகங்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுகின்றன.
 
இவைகளெல்லாம் ஒரு திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட காட்சிதான் என்றாலும் அவை நம் மனத்தில் விதைக்கும் செய்தி, நாம் நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதுதான்.
 
தூய்மை என்பது புறம் சார்ந்தது மட்டுமல்ல; அகம் சார்ந்ததும்தான். எவ்வளவோ மேலை நாடுகளுக்குச் செல்கிறோம். அதுபோல் ஏன் நம் நாடு இருப்பதில்லை? விமானத்தில் ஏறி அமர்ந்ததுமே அசுத்தம் ஏற்படுத்தினால் தரப்படும் தண்டனைக்கும் பயந்து தூய்மைவாதியாக மாறிவிடுகிறோம். ஆனால் நம் நாட்டில் விமானம் தரையிறங்கி நாம் வெளியேறிய உடனேயே அங்கேயே நம்மிடமிருந்த தூய்மை எண்ணம் தூக்கியெறியப்படுகிறது. விமான நிலையத்திலிருந்து வீடு வருவதற்குள் மீண்டும் மனம் குப்பையாகி அசுத்தமாகிவிடுகிறது. சிறுதுண்டுத் தாளைக்கூட வீசுவதற்குக்கூட குப்பைத் தொட்டியைத் தேடிக்கொண்டிருந்தவர்கள், வரும் வழியிலேயே அதுவரை பத்திரப்படுத்தியதை எல்லாம் சாலையிலேயே வீசியெறிந்து விடுகிறோம். இம்மனநிலைக்கு என்ன காரணமாக இருக்க முடியும்? தூய்மை இந்நாட்டுக்குத் தேவையில்லை என நினைக்கிறோம் . அல்லது நாம் ஒருவன் நினைத்தால் மட்டும் போதுமா?, எல்லாமுமே குப்பையாகத்தானே இருக்கிறது என்கிறது எண்ணமும் சேர்ந்து கொள்கிறதா?
 
வெளிநாடுகள் போல நம் நாடும் தூய்மைப்பெற வேண்டும் என ஒவ்வொருவரும் நினைக்கிறோம். நாம் நினைத்தால் மட்டும் இது நிறைவேறுமா? நம்மை ஆள்கின்ற அரசுகளும் இதை நினைக்க வேண்டும். ஆண்டு முடித்த அரசுகளும் நினைத்திருக்க வேண்டும். வெளிநாடுகளில் அரசாங்கம் நினைப்பதைப் போலவே, மக்களும் அதன் வழி நடந்து தூய்மையைக் கடைபிடிக்கிறார்கள். அதனால் அங்கு வீடுபோன்றே தெருக்களும் மிளிர்கின்றன. சுற்றுப்புரத்தை மட்டுமல்ல; உணவுகளை உற்பத்தி செய்து தரும் மண்ணை, அத்தனை உயிர்களும் உயிர்வாழத் தேவையான நீரை, காற்று மண்டலத்தை என அனைத்தையும் தூய்மையாக வைத்திருப்பது பற்றி சிந்திக்கிறார்கள். அதற்காக திட்டமிடுகிறார்கள்.அதன்பாடு செயல்படுகிறார்கள்.
 
இங்கு எல்லாமுமே கெட்டுப் போன பின்தான் திட்டமிடப்படுகிறது., இனி எந்தக் குப்பையை எங்கே கொண்டுபோய் போடுவது? நம்நாட்டில் அழுக்கு என்பதோ, குப்பை என்பதோ வெறும் சாலைகளிலும், சுற்றுப்புறங்களில் மட்டுமா இருக்கிறது? முதலில் நாம் தூய்மைத் திட்டத்தைத் தொடங்க வேண்டிய இடம் ஆள்பவர்களிடத்திலும், அடுத்து அந்த இடத்துக்கு வர ஏங்குபவர்களிடத்திலும், அனைத்து மக்களிடத்திலும் இந்த மண்ணுக்கும் இயற்கை வளங்களுக்கும் கேட்டினை உருவாக்கித் தருகின்றன அதிகாரிகளிடத்திலும்தான்.
 
எதையும் புள்ளிவிவரமாகத் தருவதில் வல்லுநர்கள் உலகத்திலேயே நம்மவர்கள்தான். உறக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட ஒவ்வொன்றையும் மனப்பாடமாகக் கொட்டுவார்கள். வெறும் புள்ளிவிவரங்களை மக்களிடத்தில் அறிவிப்பதோடு எல்லாம் முடிந்துவிடுகிறதா? எல்லோருக்கும் கல்வி கொடுத்தால் போதும் வளமான நாடாக மாற்றிவிடலாம் என நினைக்கிறோம்.
 
உலக சுகாதார நிறுவனங்களால் தடைசெய்யப்பட்ட அத்தனை தொழிற்சாலைகளையும் நீங்கள் எங்கேயும் தேட வேண்டாம். எல்லாமுமே நம் நாட்டில் மட்டும்தான் இருக்கிறது. ஒவ்வொரு முன்னேற்றத் திட்டமும் வெளிநாட்டினரால் வகுக்கப்படும்போது, வெளியேற்றப்படும் கழிவுகளை எங்கே கொண்டுபோய்க் கொட்டலாம் என பட்டியலிடும்போது ஏழை நாடுகள்தான் அவர்களுக்கு முதலில் நினைவில் வருமாம். அதில் முதலில் அவர்கள் மனதில் உதிப்பது இந்தியாதான்.
 
எந்தெந்தப் பொருள்கள் அவனுக்கு வேண்டுமோ, அதை உற்பத்தி செய்துத் தருவதற்குத்தானே நாம் இருக்கிறோம், நம் மக்கள் இருக்கிறார்கள்! சுற்றுப்புறத்தையும், மண்ணையும், நீர் நிலைகளையும் நச்சுப்படுத்துகிற கழிவுகளை உருவாக்குகிற எந்தப் பொருளையும் அவர்கள் உருவாக்குவது இல்லை. அப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு அங்கு அனுமதியும் இல்லை.
 
பொன்னாய் விளைந்த மண்ணையும், அமுதமாய் இருந்த நீரையும், என் மக்களையும் 18 வயதிலேயே நோயாளிகளாக மாற்றிப் படுக்க வைத்துவிட்டவர்கள், படிக்காதவர்கள் இல்லை.
 
எப்போது இத்தகையைக் கொலைகள் தொடங்கப்பட்டன. எல்லாமுமே நம் நாட்டின் விடுதலைக்குப் பின்தான். வேலைவாய்ப்பினை உருவாக்கித் தருகிறோம், எல்லோருக்கும் உணவினைத் தருகிறோம் எனச் சொல்லியே எல்லாவற்றையும் நஞ்சாக்கிவிட்டதோடு, இம்மக்களின் மனத்திலும் நஞ்சை விதைத்துவிட்டார்கள்.
 
இந்தியா என்பது உலக நாடுகளின் பார்வையில் ஒரு குப்பை நாடு என்பதை எப்போது இந்த அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் புரிந்துகொள்ளப் போகிறார்கள்? எப்போது ஏற்கெனவே கொண்டுவந்த குப்பைத் திட்டங்களை நிறுத்தப் போகிறார்கள்? இதனைப் படிக்கின்ற நாம் இன்னும் ஒரு நூறு ஆண்டில் இறந்துபோய்விடலாம். இனி, நமக்கு அடுத்த நம் தலைமுறைக்கு எதைக் கொடுத்துவிட்டுப் போகப் போகிறோம்? மலடாகிவிட்ட மண்ணையும், நஞ்சானக் காற்றையும் கேடு விளைவிக்கும் தண்ணீரையுமா?
 
தூய்மைப் பற்றிப் பேசுகிறோம். திட்டம் போடுகிறோம். இத்திட்டத்தை அறிவித்தவுடனேயே என் மனதுக்கு வந்தது இந்த ஊர்கள்தான். நம் மதிப்புக்குரிய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, ஒரே ஒரு முறை இந்த ஊர்களுக்கு மட்டுமாவது வர வேண்டும்.
 
அமிலங்களையும், வேதிப் பொருட்களையும் உற்பத்தி செய்து தருகிற கடலூர் சிப்காட், ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ஏற்றுமதிக்கான ஆடைகளை உற்பத்தி செய்து தருகிற திருப்பூர், தோல் தொழில்களை உள்ளடக்கிய காலணிகள், தோல் ஆடைகளை உற்பத்தி செய்து தரும் ஆம்பூர், வாணியம்பாடி,பேர்ணாம்பட்டு, ராணிப்பேட்டை பகுதிகள் என இம்மூன்றையும் மட்டும் பாருங்கள். ஒருநாள் முழுக்க நீங்கள் இருக்க வேண்டாம். ஒரு இரண்டு மணி நேரம் ஒவ்வோர் ஊரிலும் அந்தப் பகுதிகளிலும் நடந்து சென்று பாருங்கள். முடிந்தால் தூய்மைத் திட்டத்தை விளம்பரப்படுத்தும் ஒன்பது தூதர்களையும் துணைக்கு அழைத்துகொள்ளுங்கள். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு நாள்போதும்.அதன் பின் சொல்லுங்கள்! நாம் முதலில் பிடிக்கப் போவது துடைப்பத்தையா? வெளியேற்ற வேண்டியது இத்தகைய தொழிற்சாலைகளையா?.
 
ஒரு மணிநேரம் கூட இந்தக் காற்றை உள்ளிழுத்து உயிர் வாழ முடியாத இம்மக்களின் நிலையை, புல் பூண்டுகள் கூட முளைக்காத இம்மண்ணை, பாட்டில்களில் அடைக்கப்பட்டு எங்கிருந்தோ கொண்டு வரப்படும் தகுதியற்ற குடிநீர் என அனைத்தையும் பாருங்கள்.
 
இந்த இயந்திரங்களை எல்லாம் உருவாக்கித் தந்த வெளிநாட்டுக்காரனுக்கு இந்த நூலையும் ஆடைகளையும் உற்பத்தி செய்யத் தெரியாதா? தோல் காலணிகளும் ஆடைகளும் இல்லாமல் அவனால் வாழ முடியுமா? அவன் ஊரில் இந்தத் தோல் இல்லையா? அங்கேயே அவனால் இதனை உற்பத்தி செய்துகொள்ள முடியாதா? கண்டுபிடித்த அத்தனை அமிலங்களும், வேதியியல் பொருட்களும் நம்நாட்டில் மட்டும்தான் உற்பத்தி செய்ய இயலுமா? நாம் செய்து ஒழியட்டும் நம் வாழ்வாதாரங்கள் வீணாகி அழியட்டும் என நினைத்துதானே இந்நிலைக்கு நம்மைத் தள்ளிவிட்டான்.
 
இந்த நிலைக்கு இந்த நாட்டைக் கொண்டுவந்ததற்கு யார் பொறுப்பேற்கப் போகிறோம்? ஆட்சியாளர்களா… அதிகாரிகளா? சில முதலாளிகள் மட்டும் பணம் கொழித்தால் போதும்; எவன் செத்தால் நமக்கு என்ன… என கண்டும் காணாமல் துணைபோன அரசியல் கட்சிகளா?
 
இப்படிப்பட்ட ஆபத்தானப் பகுதிகளில் அந்த தொழிற்சாலைகளுக்கு உரிமையான முதலாளிகளோ அவர்களின் குடும்பங்களோ வசதிப்பதில்லை என்பதெல்லாம் எத்தனைப் பேருக்குத் தெரியும்?
 
தூய்மையை எங்கிருந்து தொடங்கலாம் என்பதை இப்போது மக்களுக்குச் சொல்லுங்கள் ஐயா!
 
- இன்னும் சொல்லத்தோணுது…
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தலைப்பு.
தங்கர் பச்சானின், வித்தியாசமான சிந்தனைப் பதிவுகள்.

Link to comment
Share on other sites

சொல்லத் தோணுது 15 - படிக்க... கிழிக்க...

 

solla_2259732f.jpg

 

மாற்றங்களை எளிதில் ஏற்றுக் கொள்ளாத மனங்கள் எல் லாம் எல்லாவற்றையும் ஏற் றுக் கொள்ளத் தயாராகிவிட்டன. மாற்றங்கள்தான் வாழ்க்கை என ஒரு வரியில் சொல்லிவிடலாம். எதில்தான் மாற்றம் இல்லை? உண்ணும் உணவில், உடுத்தும் உடைகளில், அன்றாடப் பழக்க வழக்கங்களில், பேசும் பேச்சுக்களில், நினைக்கும் நினைப்புகளில், சிந்திக்கும் சிந்தனைகளில், வசிக்கும் வீடுகளில், போக்குவரத்து ஊர்திகளில், ஊடகங்களில், சுற்றுப்புறச் சூழ்நிலை களில்… என எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன.

 
மாற்றங்களை நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்… அது நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.
 
இது இப்படித்தான் இருக்க வேண் டும் என இனி எதைப் பற்றியும் சொல்வதற்கு இல்லை. அரசியல் என்பது தொண்டாக இருந்தது மாறிப் போய்… பிழைப்பாகவும், பணம் சேர்க்கும் தொழிலாகவும் மாறிப் போன மாதிரிதான்!
 
காந்தியையும், காமராஜரையும், கக்கனையும் இன்னும் எவ்வளவு நாட் களுக்குத்தான் சொல்லிக் கொண்டே இருக்கப் போகிறோம்?
 
நகரங்களில் நாள்தோறும் புதிதாக வந்து குடியேறுபவர்கள் மீண்டும் கிராமங்களுக்குத் குடியேறுவதில்லை. பண்டிகை விடுமுறைகளுக்கோ, நெருங்கிய உறவினர் காரியங்களுக்கோ எப்போதாவது சென்று வருகிற மாதிரி மட்டும் அவரவர்கள் பிறந்து வளர்ந்த கிராமங்கள் தொலைவில் போய்க் கொண்டிருக்கின்றன.
 
நகரம்தான் தனக்கு சோறு போடும் என ஒவ்வொருவரும் எண்ணத் தொடங்கிவிட்டனர். இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளில் நகரங்கள் மட்டுமே இருக்கும்.
 
கிராமங்கள் தேய்ந்து நகரங்களாக மாறிக் கொண்டிருப்பது நல்லதுதானா? நல்லது என்றால் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டுவிடலாம். நல்லதில்லை என்றால்… என்ன செய்யலாம்? யார் செய்வது? ஆட்சியாளர்கள்தான் செய்ய வேண்டும்!
 
‘ஒரு நாட்டுக்கு கிராமங்கள்தான் முதுகெலும்பு’ என காந்தி சொன்னார். ஆனால், கிராமங்களை அழிக்கிற வேலை மட்டும்தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு மேல் இந்தப் பலூனை ஊத முடியாது. ஊதினால் வெடிக்கும் எனத் தெரிந்தும் ஊதிக் கொண்டேயிருக்கிறோம்.
 
நகரத்துக்கு வந்து குவிபவர்களைக் கட்டுப்படுத்தாமல், அவர்களுக்கான நலத் திட்டங்களையும், நகர வளர்ச்சியையுமே செய்து கொண்டிருக் கிறோம் என்று சொல்லிக்கொண்டு… ஆள்பவர்கள் பெருமை அடைவது எந்த வகையில் சரியானது? மக்கள் எதற்காக நகரங்களை நாட வேண்டும்? அந்த மக்களின் தேவைதான் என்ன? என்பது பற்றி அவர்கள் சிந்திக்கிறார்களா?
 
இந்தியாவில் குடியரசுத் தலைவரோ, தலைமை அமைச்சரோ, மற்றைய அமைச்சர்களோ, முதலமைச்சர்களோ, அதிகாரிகளோ... கிராமங்களில் என்ன தான் நடக்கிறது என அங்கு நேரில் சென்று பார்த்திருக்கிறார்களா? கிரா மத்து மக்களின் வாக்குகள் வேண்டும் என்பதற்காக தேர்தல் வந்தால் மட்டும் அங்குச் சென்று 20 நாட்கள் ஓயாமல் உழைக்கிறார்கள். ஹெலிகாப்டரில் இருந்து கிராமங்களைப் பார்த்தால் என்ன தெரியும்? சாலை வழியாக வந்தால் நெடுஞ்சாலைகளில் நட்டு வைக்கப்பட்டுள்ள அவர்களின் விளம்பரப் பதாகைகளே மக்களை மறைத்துவிடும் என்பதால்தான் ஹெலிகாப்டரில் இருந்து பார்க்கிறார்களோ எனத் தோன்றும்.
 
இவர்களெல்லாம் வாரத்துக்கு இரண்டு நாள்… என கிராமங்களில் தங்கி மக்களின் தேவைகளை அறிந்து கொள்ள முடியாதா? தங்களின் தலைவர் களுக்குப் ஏதாவது பிரச்சினை என்றால் மண்சோறு தின்பவர்கள், தரையில் விழுந்து புரள்பவர்கள் கிராமத்து வீட்டில் தங்கி அந்த மக்கள் தருகின்ற உணவை உண்டு, அலுவல்களைக் கவனிக்க முடியாதா?
 
குடியரசுத் தலைவர் அந்த மாளி கையை விட்டு வெளியே வருவதே அரிதாக நிகழ்கிறது. தலைமை அமைச் சரோ… நாடு நாடாக பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார். சத்தியமாக முதல் அமைச்சர்கள் எந்தக் காலத்துக்கும் கீழிறங்கி வந்து, கிராமங்களில் தங்கி வேலைகளைக் கவனிக்க முன்வர மாட்டார்கள். தலைநகரத்தில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மக்களுக்காக, அத்தனை அமைச்சர்களும் ஒரே இடத்தில் தலை
 
நகரத்தில் இருந்தபடிதான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். மக்க ளால் தேர்ந்தெடுக்கப்படுகிற இவர்களே இப்படி என்றால்… கடிகாரத்தைப் பார்த்து வேலை செய்கிற அதிகாரிகளைப் பற்றி நாம் கேட்க முடியுமா?
 
உலகத்துக்கே சட்டாம்பிள்ளையாக இருக்கிற அமெரிக்காவின் தலைவர் ஒபாமாவே தனக்கும், தன் குடும்பத்துக்கும் தேவையான பொருட்களை கடைகளுக்குச் சென்று அவரேதான் வாங்குகிறார். உணவகத்துக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு, தன்னுடைய கடன் அட்டை செயல்படாமல் போனதால் மனைவியின் அட்டையில் இருந்து பணத்தைச் செலுத்திவிட்டுச் செல் கிறார்..
 
ஒபாமாவும் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்டவர்தான். பாதுகாவல் என்கிற பெயரில்… நம் நாட்டுத் தலைவர்கள் போல் ஒரு பெருங்கூட்டத்தையும், அணிவகுத்து மிரட்டிச் செல்லும் கார்களையும், கூட்டத்தையும் அவர் வைத்துக் கொள்ளவில்லை. தலைவன் எவ்வழி செல்வானோ… அவ்வழிதானே தொண்டனும் செல்வான்.
 
மக்களின் அடிப்படைத் தேவைகளை உணராதவர்கள், அவர்களுடன் பழகி பணியினை செய்யத் தெரியா தவர்கள், அவர்களின் வாக்கு களுக்காக மட்டுமே திட்டங்கள் தீட்டுபவர்கள் எவ்வாறு அவர்களை வழி நடத்துவார்கள்?
 
நம் ஆட்சியாளர்கள் மனமிருந்தால் ஒரு முறை தனியாளாக மாறு வேடத் திலாவது ஒவ்வொரு கிராமங் களுக்கும் சென்று பாருங்கள். வேளாண் தொழி லுக்கு ஆட்கள் இல்லை. நீர் கொடுத்த குளம், குட்டைகள், ஓடைகள், ஏரிகள் என எதுவும் இல்லை. ஒருவேளை இருந்தால் அங்கே நீர்ப்பிடிப்பு இல்லை.
 
பள்ளிகளில் மாணவர்கள் இல்லை. ஆரம்ப சுகாதார மருத்து வமனை, நூலகங்கள், கால்நடை மருத்துவமனைகள் என எல்லாமுமே பெயர்ப் பலகைத் தாங்கிக் கொண்டுப் பெயரளவுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆடு, மாடுகள் எங்கேயாவது ஒன்றிரண்டைப் பார்த்துவிட்டால்… நீங்கள் கொடுத்து வைத்தவர்தான். எல்லா வீடுகளிலும் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது. வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோர் 24 மணி நேரமும் சிரிப்பு மூட்டிக் கொண்டிருப்பார்கள்.
 
அப்படியே கொஞ்சம் தெருக்களை இணைக்கிற சாலைக்கு வாருங்கள். கட்டாயம் தேநீர்க் கடைகள் இருக்கும். வெட்டிப்பேச்சு பேசியபடி வேலை செய்ய விரும்பாத படித்த இளைஞர்கள், வேலை செய்ய முடியாத மது போதையில் இருக்கிற, இன்றையோ, நாளையோ சாகப் போகிறவர்களைப் பார்க்கலாம். அநேகமாக எல்லா வீடுகளிலும் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் படங்களைப் போட்டு, திரைப்படக் கதாநாயகர்களுடனோ, அரசியல்வாதிகளுடனோ காட்சியளிக் கும் பதாகைகளை வாசலிலோ, வீட்டுக் கூரையிலோ, வைக்கோல போரிலோ காண்பீர்கள் என்பதைக் குறிப்பிட மறந்துவிட்டேன்.
 
அந்த இளைஞர்களெல்லாம் வேறு யாருமில்லை. தொழிற்கல்லூரிகளில் படிப்பதற்காக, குடும்பத்துக்கு சோறு போட்ட கொஞ்ச நிலத்தையும் விற்றுக் கொடுத்துவிட்டு, தொழில் இல்லாமல் வீட்டிலேயே முடங்கப் பிடிக்காமல் தேநீர்க் கடையிலும், பேருந்து நிலையத்திலும் போவோர் வருவோர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிற இளைஞர்கள்தான் அவர்கள். எல்லாவற்றுக்கும் புள்ளி விவரங்களைத் தரத் தயாராக இருப் பவர்கள், 50 வயதுக்கு மேல் உயிர் வாழ்கிற ஆண்களின் பட்டியலைத் தாருங்கள். முடிந்தால் தெருவுக்கு எத்தனை இளம் விதவைகள் இருக் கிறார்கள் என்கிற கணக்கினையும் மறைக்காமல் தாருங்கள்.
 
கிராமத்தில் தன்னுடன் இருந்த யார், யாரெல்லாம் பணக்காரர்களாகி விட்டார்கள் என்பதை மக்கள் பார்த்து விட்டார்கள். மற்றெல்லாரையும்விட அரசியல் கட்சியில் சேர்ந்தால் மட்டுமே கார், பங்களா, அடியாட்கள், பெரிய மனிதர்கள் தொடர்பு, ஊடகங்களில் இடம் கிடைக்கும் என நினைத்த இளைஞர்கள் தொழிலுக்குப் புறப்பட்டுவிட்டதையும் அங்கே தவறாமல் அறியலாம்.
 
- இன்னும் சொல்லத் தோணுது…
எண்ணங்களைத் தெரிவிக்க: thankartamil@gmail.com
 
Link to comment
Share on other sites

சொல்லத் தோணுது 16 - வாய்கள் பேசாது... காதுகள் கேட்காது

tnagar_2267912f.jpg

சென்னை, தியாகராய நகரில் உள்ள ரெங்கநாதன் தெரு...
 

முன்பெல்லாம் பண்டிகைக் காலங் களில் மட்டும்தான் நகரங்கள் மக்கள் நெருக்கடியில் திணறி மூழ்கும். இப்போது ஒரு குறிப்பிட்ட நாளில்தான் புத்தாடை, தங்க நகை கள் வாங்குவது என்றில்லாமல், நினைத்த நாளில் வாங்கி விடுகிறபடி வாழ்க்கைமுறை மாறிவிட்டது. கிராமத் துக்கும் நகரத்துக்குமான இடைவெளி குறையக் குறைய எல்லாத் தேவை களுக்குமே சிறு நகரத்துக்கும் பெரு நகரத்துக்கும் தேடிப் போவது வழக்க மாகிவிட்டது.

 
நகரங்களில் இப்போதே இவ்வளவு போக்குவரத்து நெருக்கடி என்றால், மிச்ச காலத்தும் என்ன ஆகப் போகி றதோ தெரியவில்லை. இரண்டு சக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்பது மாறிப் போய், நான்கு சக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்கிற நிலைமை உருவாகிக் கொண்டிருக்கிறது. அத் துடன், ஒன்றுக்கு இரண்டு வாகனங்கள் பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் அதை நிறுத்தி வைக்கவோ, ஓட்டிச் செல் லவோதான் இடமில்லை.
 
100 அடி சாலைகளை 60 அடிகளா கவும், 60 அடி சாலைகளை 40 அடி சாலைகளாகவும் மாற்றுவதில் உலகத்திலேயே நம்மவர்களை யாரும் மிஞ்ச முடியாது. சாலைகளில் நடந்து செல்வதற்கு என்று தனிப் பாதைகள் வேண்டும் என்பதை, இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் நாம் உணராமல் இருக்கப் போகிறோம்?
 
சாலைகளில் நான் அதிகமாக கவனிப்பது நடந்து செல்லும் மக் களைத்தான். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இவர்கள் நடக்க வேண்டியிருக்கிறது. நடந்து செல்பவர்களை ஏளனமாகப் பார்ப்பதும், பயந்து பயந்து அவசர அவசரமாகக் சாலையைக் கடப்பவர்களை வசை மொழியில் திட்டுவதும் நம் ஊரில்தான் பார்க்க முடியும். அதிலும் வேகமாக நடக்க இயலாதவர்கள், சிறுவர்கள், முதியவர்கள் என இவர்களுக்கெல்லாம் சாலையைக் கடந்து போகக்கூடிய நேரத்தை ஒதுக்கி நாம் முன்னுரிமைத் தருவதில்லை.
 
விதியை உருவாக்கக் காரணமாக இருப்பவர்களும் நாம்தான். அதை மீறும்போது ஏற்படும் விளைவுகளைக் கண்டு குற்றம் சொல்பவர்களும் நாம் தான். மக்கள் குடியேறுவதற்கு முன் பாகவே, நகரங்கள் உருவாக்கப் படும்போதே… அடிப்படைத் தேவை களையும், நெடுங்காலத் தேவைகளை யும், தொலைநோக்கில் உணர்ந்து திட்டங் களை வரைபவர்கள் வெளிநாட்டினர். அதனால் நடந்து செல்பவர்கள், மிதிவண்டியில் செல்பவர்கள், பெரிய வாகனங்களில் செல்பவர்கள் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பாதை அமைக்கவும், இது குடியிருப்புப் பகுதி, இது வணிக வளாகப் பகுதி என ஒவ்வொன்றையும் முறையாக தனித் தனியாக உருவாக்கவும் அவர்கள் பழகி யிருக்கிறார்கள். இதனால் யாருக்கும் நேரம் விரையமில்லை; விபத்துகள் இல்லை; விரைவாகச் செல்வதால் வெளியேறும் எரிபொருள் மாசுவின் பாதிப்பும் குறைவாக இருக்கிறது. எரிபொருளும் மிச்சமாகிறது.
 
வெள்ளைக்காரனிடம் இருந்து ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்டு பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம், அவனிடம் உள்ள நல்ல பழக்கங்களைப் பின்பற்ற மறுக்கிறோம். மக்கள் குடி யேறிய பின்தான் இங்கு எல்லாத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் நகரங்களுக்கு நிரந்தரமாகக் குடியேறுபவர்கள் எவ் வளவு பேர்? அவசர அலுவல்கள் காரணமாக நகரத்துக்கு வந்துபோகிறவர் கள் எவ்வளவு பேர்… எனக் கணக் கெடுத்தால், அதிர்ச்சிதான் நேரிடும்!
 
சிக்கல்கள் உருவாவதற்கு முன்னே இம்மக்களுக்கானத் தேவைகளை அறிந்து திட்டங்கள் தீட்டி, உருவாக்கித் தருவதற்குப் பெயர்தான் அரசாங்கம்! வணிக வளாகப் பகுதிகளாக இருந் தவை, மேலும் மேலும் அடுக்கடுக் கானக் கட்டிடங்களாக அதன் ஆபத் தைப் பற்றி கவலைப்படாமல் உயர்ந்து கொண்டே போவதும், குடியிருப்புப் பகுதிகள் அதன் காரணமாக வணிக வளாகப் பகுதிகளாக மாறிக்கொண்டே போவதும் இனி நிற்கப் போவதில்லை.
 
30 ஆண்டுகளுக்கு முன்பு நான் திரைப்படக் கல்லூரிப் படிப்பை முடித்து, சென்னை தியாகராய நகர் பகுதியில்தான் 10 ஆண்டு காலம் தங்கியிருந்தேன். அப்போது இருந்த அந்தச் சாலைகளின் அகலங்களும் தெருக்களின் அகலங்களும் அப் படியே இருக்கின்றன. ஆனால், மக்கள் தொகை நெருக்கடியும் கட்டிடங்களின் எண்ணிக்கையும் 100 மடங்கு உயர்ந் திருக்கிறது. இதைவிடக் கூடுதலான எண்ணிக்கையில் அரசுப் பேருந்து களும், 100 மடங்கு வாகனங்களும் அந்த சாலைகளில் சென்று கொண்டிருக் கின்றன. இந்த அளவுக்கு இங்கே நெருக்கடி உருவாக காரணம், அந்த இடம் முழுக்கவும் வணிகப் பகுதிகளாக மாறிக்கொண்டே இருப்பதுதான்.
 
இன்று நேரம் என்பது ஒவ்வொரு வருக்கும் மிக முக்கியமானதாகிவிட்டது. தியாகராய நகரைக் கடக்காமல் சென்னையின் பிற பகுதிகளை அடைய முடியாது. இதே போல்தான் சென்னை நகரம் மட்டுமல்ல; இந்திய நகரங்களின் அனைத்துப் பகுதிகளும் மாறிக்கொண்டு வருகின்றன.
 
அதுவும் பண்டிகைக் காலங்கள் என்றால் போக்குவரத்தே முடங்கிவிடு கிறது. விபத்து என ஒன்று ஏற்பட்டால் தான் நடவடிக்கைகளும், திட்டங்கள் தீட்டுவதும் இங்கே நடைபெறுகிறது. அதைகூட நீதிமன்றம் செல்லாமல் பெற முடிவதில்லை. ஒருமுறை அங் கிருக்கின்ற கடைகளுக்கு இதுதொடர் பான அதிகாரிகள் சென்று பாருங்கள். ஒரு குண்டுமணி போட்டால்கூட கீழே விழாதபடி காலையிலிருந்து இரவு வரைக்கும் மக்கள் வெள்ளம் திணறிக்கொண்டேயிருக்கிறது. இந்த மக்களெல்லாம் எங்கிருந்து வருகிறார்கள்? எதில் வருகிறார்கள்? வாகனங்களை எங்கே நிறுத்துகிறார்கள்? அவர்களுக்கான அடிப்படை வசதிகள் இருக்கின்றதா… என கண்காணித்து செய்து தருபவர்கள் யார்?
 
இப்பகுதிகளில் கும்பகோணம் போன்ற தீ விபத்தோ, சென்னை மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டிடம் போன்ற கட்டிட விபத்தோ ஏற்படாது என யாராவது உறுதியாக சொல்லிவிட முடியுமா? அவ்வாறு நிகழாது என ஒருவேளை யாராவது சொன்னால்… நீங்கள் அதனை ஏற்றுக்கொள்கிறீர்களா? என்றைக்காவது அதுபோன்ற ஒரு விபத்து ஏற்பட்டால், எவ்வாறு அம்மக் களைக் காப்பாற்றுவீர்கள்?
 
ரெங்கநாதன் தெரு போன்ற தெருக்களில் தீயணைப்பு வண்டி நினைத்த மாத்திரத்தில் சென்று பாதிப்புக்கு உள்ளாகுபவர்களைக் காப்பாற்றிவிட முடியுமா? சென்று சேர்வதற்குள் தீ விபத்து ஒரு கடையோடு நின்றுவிடுமா?
 
ஏகப்பட்ட காவல்துறையினரை நிறுத்தி நகைத் திருட்டு, துணித் திருட்டு செய்பவர்களைத்தான் நம்மால் பிடிக்க முடியும். நகரத்தின் தொலை நோக்கு வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு… எந்தெந்த வணிகப் பகுதி கள் போக்குவரத்துக்கும், சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கும், மக்க ளின் பாதுகாப்புக்கும் தடையாக இருக் கின்றதோ, அவற்றை இப்போதே கணக்கெடுத்து அகற்றி இடம் மாற்று வதுதானே சரியானதாக இருக்கும். இந்த நகைகளையும், பாத்திரங்களையும், துணிகளையும் எங்கு வைத்தும் விற்கலாமே!
 
அயல்நாடுகளில் இருப்பது போல ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விற்பனை பகுதியை உருவாக்கி, அவர் களுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தந்து, இவைகளை இடம் மாற்று வது பற்றி முடிவெடுக்க வேண்டிய நெருக்கடியான காலகட்டம் இது.
 
சாலைகளை விரிவுபடுத்தி போக்கு வரத்து நெரிசலை சீராக்காமல், வருகின்ற எல்லா வெளிநாட்டு கார் கம்பெனிகளுக்கும் அனுமதி கொடுத்துக் கொண்டேயிருப்பதும் எந்த வகையில் சரியானது?
 
மக்கள் கேட்டால்தான் செய்வோம் என பொறுப்பில் இருப்பவர்கள் நினைக்கலாம். இந்த மக்கள் எந்தக் காலத்திலும் எதையும் வாய்த் திறந்து கேட்கவே மாட்டார்கள் என்பது எல்லோருக்குமேத் தெரியும். இருந்தும் எனக்கு சொல்லத் தோணுது!
 
- இன்னும் சொல்லத் தோணும்
 
Link to comment
Share on other sites

சொல்லத் தோணுது 17 - யாருக்குப் பொங்கல்?

 

sugarcane_2275518f.jpg

 

ஒரு மாதத்துக்கு முன்பே பல பேருடைய மனதில் பொங்கல் பண்டிகைக் குடிகொண்டுவிட்டது. சூரிய வெளிச்சத்தைக் கண்டால் ஓடி மறைபவர்கள், சூரியனைக் கண் டால் தொப்பியையும் கருப்புக் கண்ணாடி யையும் போட்டுக் கொள்பவர்கள், குடை இல்லாமல் வெளியில் செல்ல முடியாத வர்கள், ஒரு நொடி வியர்வைக்கே மின்சார வாரியத்தை தொலைபேசியில் அழைத்து புகார் தெரிவிப்பவர்கள், குளிர் சாதன வசதி இல்லாமல் ஒரு நிமிடத்தைக் கூட தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் என பொங்கல் பண்டிகைக்காகத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 
இது தவிர, பரபரப்பாக… வாழ்த் துச் சொல்ல, மகிழ்விக்க, நடிகர் - நடிகைகளைத் தேடி ஓடிக் கொண் டிருக்கும் ஊடகக்காரர்களும், எந்தப் படத்தைப் போடலாம் என காத் திருக்கும் திரைப்படத் துறையினரும், விண்வெளிக் கலத்தை விண்ணில் செலுத்திவிட்டு பதைபதைப்புடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திருக்கும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களைப் போல், திரைப் படத்தின் வெற்றி - தோல்விக்காகக் காத் திருக்கும் ரசிகர்களும்தான்… பொங்கல் திருநாளுக்காகக் காத்திருக்கிறார்கள்.
 
பொங்கல் திருநாள் வந்தால் யார் முகத்தில் மகிழ்ச்சி உருவாக வேண் டுமோ... யாரெல்லாம் கொண்டாடி மகிழ வேண்டுமோ… அந்த உழவர்கள் எல்லாம் கடன்காரனுக்கு எந்த பதிலைச் சொல்வது... பொங்கல் செலவுகளை எப்படி சமாளிப்பது... குழந்தை குட்டி களுக்கு துணி எடுக்க யாரிடம் கையேந்துவது என கலங்கிப் போய் நிற்கிறார்கள். ஆனால், மிகச் சிறப்பாக அதாவது ஊடகத்தினர் மொழியில் ‘கோலாகலமாக’ பொங்கலை தமிழ் நாட்டு உழவர்கள் கொண்டாடி மகிழ்ந்த தாக செய்திகள் வெளியாகத்தான் போகிறது, ஊடகங்களில்!
 
அதேபோல் மழை பெய்தாலும், காய்ந்தாலும் உழவன் கொத்துக் கொத் தாகத் தற்கொலை செய்துகொண்டு செத்தாலும், எப்போதும் போல் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவிக்க, வாழ்த்துச் செய்திகளை அச்சடித்து வைத்துக்கொண்டு அரசியல்வாதிகளும் காத்திருக்கிறார்கள்.
 
உழவனுடைய நிலை எப்படியிருந்தா லும், உழவர்கள் பெருவாழ்வு வாழ்வதா கச் சொல்லி ஆள்பவர்கள் வாழ்த்துவதில் ஒரு பொருள் இருக்கிறது. எதிர்க்கட்சியும் மற்ற இதரக் கட்சித் தலைவர்களும்கூட சிறிதும் சிந்திக்காமல் அதே போன்ற வாழ்த்துகளைத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருப்பது எந்த விதத்தில் சரியானது?
 
கரும்பு வெட்டத் தொடங்கி ஆறு வாரமாகிவிட்டது. கத்தியை வைத்து கரும்பை சாய்த்துவிட்டால், அது உடனே ஆலைக்கு ஏற்றப்பட்டு எடை போட்டுவிட வேண்டும். இல்லையென்றால் தாமதிக் கிற ஒவ்வொரு நொடியும் வெய்யி லில் காய்ந்து எடைகுறைந்து கொண்டே யிருக்கும். வெட்டாமல் விட்டு வைத்திருந் தாலும் முற்றிப்போய், பூ பூத்து, சாற்றை இழந்து கரும்பு தக்கையாகிவிடும். கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்தச் சொல்லி போராட்டங்கள் நாள்தோறும் நடைபெற்றுக்கொண்டே தான் இருக்கின்றன.
 
நடுவண் அரசு 2012-ம் ஆண்டு அறிவித்த 1,700 ரூபாயிலிருந்து 2,200 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. ஆனால் தமிழக அரசு அளித்துவந்த 550 ரூபாயை 450 ரூபாயாக குறைத்து அறிவித்திருக் கிறது. உற்பத்திவிலை கூடிப் போனதால் தங்களின் வேதனையை யாரிடத்தில் சொல்வதென நமக்கெல்லாம் இனிக்கும் சர்க்கரையை தரும் உழவன் கசந்து போய் கிடக்கிறான்.
 
இதுபோக ஏற்கெனவே தனியார் ஆலை நிறுவனங்கள் இவர்களிடம் வைத் திருக்கிற நிலுவைத் தொகையைக் கொடுக்காததால் அத்தனைப்பேரும் வேதனையில் வெந்து கொண்டிருக் கிறார்கள் .
 
திரைப்பட நடிகர்கள் உண்ணாவிரதம் எனச் சொல்லி வள்ளுவர் கோட்டத் தின் முன் உட்கார்ந்தால், எல்லா தொலைக்காட்சிகளும் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்து அங்கே வருகின்ற ஒவ்வொருவரின் வாயிலும் ஒரு ஒலிவாங்கியைக் கொடுத்து நேரலை ஒளிபரப்பைச் செய்கின்றன.
 
ஆனால், உழவருடைய போராட் டத்தை ஒரு போராட்டமாகவே எவருமே பார்ப்பதில்லை. சென்ற மாதம் டெல்லி வரைக்கும் சென்று நாடாளுமன்றத்தின் முன் இந்தக் கடுங்குளிர் பருவத்திலும் வேட்டி - சட்டையுடன் கிடந்து கத்திப் பார்த்தார்கள். ‘இவர்கள்’ செத்துத் தொலைந்தால்… தங்கள் கட்சிக்குத் தான் இழுக்கு என நினைத்த அமைச் சர்கள், பழச்சாறு கொடுத்து படம் எடுத்துக்கொண்டு அனுப்பி வைத்து விட்டார்கள்.
 
எந்தப் பொருளை யார் உருவாக்கி னாலும், அதற்கான விலையை அவன் குறித்துக்கொள்ள முடியும். உழவ னுக்கு மட்டும்தான் அந்த உரிமை இல்லை. வணிகர்கள் கேட்கிற விலைக் குக் கொடுத்துவிட்டு எப்போது பணம் கொடுப்பார்கள் என காத்திருக்க வேண் டும். பல நேரங்களில் விலையில்லை எனச் சொல்லி திருப்பி அனுப்பி விடுவதால், வீதியில் கொட்டிவிட்டு வீடு வந்து சேர்கிறான். அப்போதுகூட உழவனின் நிலையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், ஓடிப் போய் போட்டிப் போட்டு அள்ளிக் கொள்பவர்களும் நம் மதிப்புக்குரிய மக்கள்தான்.
 
வேலை செய்கிற நாட்களுக்கும், விடுமுறை நாட்கள் எனச் சொல்லி வேலை செய்யாத நாட்களுக்கும் சேர்த்து ஊதிய மும்; அதுபோக, ஊக்கத் தொகை என அனைத்தையும் பெற்றுக்கொள்கிற பல்வேறு அலுவலக ஊழியர்களுக்கும் பொங்கல் திருநாள்தான். தலைமுறைத் தலைமுறையாக கடனி லேயே உழன்று, வறுமையிலேயே செத்து மடிகிற உழவனுக்கும் பொங்கல் தான். அனைவருடைய வயிற்றுக்கும் உணவளித்துவிட்டு யார் கையையும் எதிர்பார்த்து வாழாத உழவன், அரசாங் கம் கொடுத்த 100 ரூபாயை வாங்குவதற் காக வெய்யிலில் வரிசையில் காத்துக் கிடந்த காட்சிகளையும் கண்டுகொண்டு தான் இருந்தோம்.
 
உழவனின் குரல் ஓங்கி ஒலித்த காலங்களும் உண்டு. இறுதிவரைப் போராட்டத்தை ஒடுக்க முடியாமல், வேறு வழியில்லாமல் உழவர் சங்கத் தலைவரை சந்திக்க, புதுடெல்லியில் இருந்து அப்போது தலைமை அமைச்ச ராக இருந்த இந்திரா காந்தியும், சென்னையில் இருந்து முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனும் அவருடைய கிராமத்துக்கேச் சென்று பேசித் தீர்த்ததெல்லாம் அன்று நடந்தன.
 
யார் ஆட்சிக்கு வந்தாலும் அவன் குறை தீர்ந்தபாடில்லை. அவனது சிக்க லின் அடிவேரை ஆராய்ந்து பார்க்கத் தெரியாததாலும், விரும்பாததாலும் வெறும் இலவசங்களையும், மானியங் களையும் கொடுத்து தப்பித்துக் கொள்கிறார்கள்.
 
உழவனின் மரபுக் குடிகளெல்லாம் உடம்பில் தீப்பிடித்துக் கொண்டதுபோல் தன் கிராமத்தை விட்டும், தன் நிலத்தை விட்டும் வெளியூருக்கும், வெளி நாட்டுக் கும் ஓடிவிட்டன. மீதமுள்ளவர்களும் ஓடிப் போக நெடுங்காலமாகாது. அப் போது இன்று கொண்டாடுவதுபோல் உழவனின் பெயரைச் சொல்லி பொங் கல் திருநாளைக் கொண்டாட முடியாது.
 
ஏற்கெனவே உழவன் இல்லாத பொங்கலும், கால்நடைகள் இல்லாத மாட்டுப் பொங்கலும் நம்மவர்களால் உருவாக்கப்பட்டுவிட்டன. ‘இல்லை… நாங்கள் பொங்கல் கொண்டாடியே தீருவோம். உழவன் அழிந்தால் எங்களுக்கென்ன? நாங்கள் தமிழர்கள்’ எனச் சொல்லி கொண்டாடலாம். அப்படி யானால் தமிழர்களாக இருக்கின்ற கிறித்துவர்களும், இசுலாமியர்களும் பொங்கலைக் கொண்டாட வேண்டு மல்லவா? அவர்களும் இந்த உழவுத் தொழிலை செய்கிறவர்களும், செய்த வர்களும்தானே. இதை ஒரு மதம் சார்ந்த பண்டிகையாக மாற்றியவர்கள் யார்? உணவளிக்கும் சூரியனுக்கு நன்றி சொல்லும் நாள் என்றால் அப்படி ஒன்றை நாம் எல்லோரும் கொண்டாடுவதுதானே சரி?
 
உலகத்தில் எந்த மொழியிலாவது ‘ஓர் அரசாங்கம் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும்’ எனச் சொல்லியிருப் பார்களா?
 
‘வரப்புயர நீர் உயரும்
 
நீர் உயர நெல் உயரும்
 
நெல் உயரக் குடி உயரும்
 
குடி உயரக் கோல் உயரும்
 
கோல் உயரக் கோன் உயரும்!’
 
- என ஒளவை பாடியது போல நடந்தால் அப்போதுதான் அது அரசாட்சியாக இருக்கும். ஆனால், இங்கே எதெல்லாம் உயர்ந்துகொண்டு இருக்கிறது என்பதை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்.
 
திருக்குறளையும், திருவள்ளுவன் புகழையும் பரப்பி அவனுக்கு சிலை வைத்துவிட்டால் தமிழன் வாழ்ந்துவிடு வான் என நினைப்பவர்களுக்கு, ஒளவையின் இந்தப் பாடலை நினைவு படுத்த விரும்புகிறேன். வள்ளுவனை ஒருவேளை ஆட்சி யாளர்கள் மதித்தால் (நடுவண் அரசையும் சேர்த்துதான்) வள்ளுவன் பாடியிருக்கிற ஒரு குறளின்படியாவது உழவுத் தொழிலை முன்னேற்றும் காரியத்தை முதலில் செய்து காட்டுங்கள்.
 
- இன்னும் சொல்லத்தோணுது…
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சொல்லத் தோணுது 18 - என்ன செய்யப் போகிறோம்?

solla_2281511f.jpg

 

நெடுநாட்களாக எனக்கு இருந்த விருப்பத்தின்படி அண்மையில் வேளாண்மை பல்கலைக்கழம் ஒன்றில் உரையாற்றச் சென்றிருந்தேன். நான் ஓர் உழவனின் மகன் என்பதும், இன்னும்கூட உழவுத் தொழிலை விடாமல் செய்துவருபவன் என்பதாலும் மாணவர்களோடு நெருக்கமாக உரை யாடினேன். ஒரு சிலரைத் தவிர வேளாண்மைத் தொழிலுக்கான ஆராய்ச் சியிலோ, அதன் பொருட்டு வாழ்வை கழிப்பதிலோ விருப்பமில்லாதவர்களாக அவர்கள் இருந்தார்கள். ஐ.ஏ.எஸ் படித்து ஆட்சிப் பணிக்குச் செல்ல இந்தப் படிப்பு எளிதாகவும், குறுக்கு வழியாகவும் இருப்பதால்தான் இதனைப் படிப்பதாகவும் அவர்கள் சொன்னது எனக்குள் வேளாண்மைப் பற்றிய கவலையை மேலும் அதிகரித்தது.

 
மானியத்தையும், இலவசங்களை யும் கொடுத்து உழவுத் தொழிலை வளர்த்துவிடலாம் என எல்லா அரசாங்கங்களும் நினைப்பதுபோலத் தான் அவர்களும் பொறுப்பற்றவர்களாக இருந்தார்கள். அரசாங்கம் எந்த ஒரு திட்டத்துக்கு, செயலுக்கு மானியம் கொடுக்கிறதோ… அப்போதே அந்தத் திட்டம் செத்து விட்டது அல்லது செத்துக் கொண்டிருக் கிறது என்பதுதான் பொருள். 100 நாள் வேலை, 20 கிலோ அரிசி, இலவச மின்சாரம் இப்படி அனைத்தும் எதைக் காட்டுகிறது? வேளாண்மை லாபகரமாக இல்லை, செத்துக் கொண்டிருக்கிறது அல்லது செத்துவிட் டது என்பதைத்தானே!
 
அதனை மீட்டெடுக்க, சரிசெய்ய எந்த விதத் திட்டமும் வழிவகைகளும் தெரியாமல் உயிர் தண்ணீர் - பால் ஊற்றுகிற வேலைதான் இந்த மானியங்கள். பிச்சைக்காரர்களுக்கு என்ன மரியாதையோ அதேதான் இந்த நாட்டில் ஒவ்வோர் உழவனுக்கும். இனி, எந்தத் திசையில் பயணிப்பது எனத் தவித்து, தடுமாறிக் கொண்டிருக்கும் வேளாண்மை, இன்று ஒரு தொழிலாக வளர்ச்சி பெற்றுள்ளது.
 
ஆனால், அதற்கான உள்கட்டுமானங் களோ, சந்தையோ ஏற்படுத்தவில்லை. கோடிக் கோடியாக திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. அவை செயல் படுத்தப்படுகிறதா என்பதை கண் காணிப்பது யார்? வேளாண்மைப் பற்றிய அடிப்படை அறிவில்லாதவர்கள், மரபுரீதியாக அதனைத் தொழிலாகச் செய்யாதவர்கள், நிலத்தில் கால் பதிக்காதவர்கள், ஒரு பிடி மண் ணைக்கூட அள்ளித் தொட்டுப் பார்க்காதவர்கள்.
 
இவர்கள்தான் இந்தத் தொழிலை வழி நடத்துகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களுடன், பன் னாட்டு தரகர்களுடன் கைகோத்து அசாங்கத்துக்கு திட்டங்களைத் தீட்டிக் கொடுத்து, வேளாண்மை விஞ்ஞானி எனும் பெயரில் கோடிக்கணக்கில் கல்லாக் கட்டுவதும், இந்திய அரசின் உயரிய விருதினைப் பெற்று உழவர்களுக்கு ஆலோசனை அளிப்பதும் இவர்கள்தான்.
 
‘தானே’ புயலின் போதுதான் நான் வேளாண்மைத் தொடர்பாக அதிகாரம் செலுத்தும் பதவியில் உள்ளவர்களையும், அதிகாரிகளையும் தொடர்ந்து சந்தித்தேன். மனமொடிந்த நிலையில் நேரத்தை வீணாக்குவதை உணர்ந்து இனி சந்திப்பதில் பலனில்லை எனும் முடிவுக்கு வந்தேன். இதே துறையில் பல சிறந்த வல்லுநர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் எனக்கு நன்கு தெரியும்.
 
அவர்களை செயல் படவிடுவது இல்லை. ஒன்று, அவர்களை ஓரிடத்தில் தொடர்ந்து செயல்படாமல் வேறு இடத்துக்கு மாற்றுவது அல்லது அவர்களுக்குத் தொடர்பு இல்லாத கடைநிலைப் பணிகளைத் தந்து அவமானப்படுத்தி, அடக்கி வைப்பது என்பதைத்தான் அவர்களுக்கு மேலுள்ளவர்கள் செய்து வருகிறார்கள். அவர்களை செயல்படவிடாமல் தடுப்பதால் இந்த வேளாண்மைத் துறைக்கும், நம் உற்பத் திக்கும் எவ்வளவு பெரிய இழப்பு, முட்டுக்கட்டை!
 
இந்தத் தொழிலைச் செய்ய பெரும்பான்மையான உழவர்கள் இன்னும் கந்து வட்டிக்குத்தான் கடன் வாங்குகிறார்கள். வங்கிகள் ஏற்கெனவே நல்ல நிலையில் உள்ள உப வருமானமுள்ள ஆசிரியர்கள், வணிகர்கள், சிறுதொழில் செய் வோர், அரசு ஊழியர்கள் என இவர்களுக்குத்தான் கடனைக் கொடுக்கிறது. அரசும், பல்கலைக்கழகங்களும், வேளாண்மைத் துறையும் தரும் மானியங்களைப் பெரியப் பெரிய பண்ணைகளும், பணம் படைத்தவர் களும், பெரிய நிறுவனங்களும்தான் பயன்படுத்திக் கொள்கின்றன.
 
உதாரணத்துக்கு டிராக்டர் வாங்க நான்கு லட்சம் தேவைப்பட்டால், இரண்டு லட்சத்தை மானியமாகப் பெறலாம். இதனை நமது பெரும்பான்மையான சிறிய உழவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.
 
சில நாட்களுக்கு முன் சாலை வழியாக மதுரை சென்று வந்தேன். இந்த 480 கிலோ மீட்டர் தொலைவில் சாலையின் இரு பக்கங்களிலும் விளைபயிர்களைக் காண்பது அரிதா கவே இருந்தது. கால்நடைகள் தென்படவே இல்லை. அவ்வளவு விளை நிலங்களும் ஒன்று விவசாயம் செய்வது நிறுத்தப்பட்டு விற்றுத் தீர்ந்துவிட்டன. அல்லது விற்பனைக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் எந்த ஊருக்குப் பயணப்பட்டாலும் இதே நிலைதான்.
 
ஏற்கெனவே உழவுத் தொழிலை செய்த குடும்பம் ஆங்கிலக் கல்வி, கம்ப்யூட்டர் தொழில், நகர வாழ்க்கை என அதனைச் செய்யாமல் விட்டுவிட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. அதனையும் மீறி செய்பவர்கள் மின்சாரத்தை மட்டுமே நம்பி ஆயிரம் அடிகளுக்கும் மேலாக ஆழ்துறை கிணறு அமைத்து விவசாயம் செய்து நட்டத்துடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
 
வீடுகளில் கால் நடைகளில் இருந்து கிடைத்த குப்பைக் கழிவுகளைக் கொண்டு உழவுத் தொழிலைச் செய்தவர்களை அதிக பணம் செலவழித்து உரத்தையும், பூச்சி மருந் தையும் போட்டு இன்று ஒவ்வோர் உழவனையும் கடனாளியாக்கி, அர சாங்கத்திடம் கையேந்தி பிச்சைக் கேட்க வைத்ததும், தற்கொலை செய்து கொள்ளச் செய்ததும் இந்த ஆய்வு மையங்கள்தான். வசதி படைத்தவன் இயந்திரங்களைக் கொண்டு செய்கிறான். இல்லாத பெரும்பான்மை உழவர் கள் உழவுக் கருவி களும், உழவு மாடுகளும் இன்றி கைபிசைந்து கோவ ணத்துடன் நிற்கின்றனர்.
 
இந்த லட்சணத்தில் 100 நாள் வேலைத்திட்டம் ஒட்டுமொத்த உழவுத் தொழிலை யும் குழி தோண்டி புதைத்து விட்டது. வேலைக்கு ஆளின்றி தவிக்கும் ஒவ்வொரு விவசாயி யையும் கேட்டுப் பாருங் கள், அவன் குமுறல் புரிய வரும். இலவசத் திட்டங்கள் மூலம் மக்களை உழைப்பில், உற்பத்தியில் ஈடுபடாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே இருங்கள் எனச் சொல்லி அவர்களை சோம்பேறியாக்கி, எதைப் பற்றியும் சிந்திக்காதபடி பெயரளவில் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது மாதிரி செய்துவிட்டார்கள். இந்த குடிமகன்கள் வாக்களித்தால்தானே ஆட்சி நாற்காலியில் அமர முடியும் அதற்காகத்தான் இப்படிப்பட்ட திட்டங் கள் அனைத்தும்.
 
உற்பத்தியில் மாற்றம் கொண்டு வருவதற்கும், விளைநிலங்களை மலடு ஆகாமல் தடுப்பதற்கும் எந்த முயற்சியும், திட்டமும் இல்லை. அதற்கான ஆராய்ச்சியும் இன்று நடைமுறையில் இல்லை. அத்தனை ஆராய்ச்சிகளும் அடித்தட்டு மக்களுக் காக பயன்படவில்லை. வசதி படைத்த பணக்கார விவசாயிகளுக்கும், பன் னாட்டு, இன்னாட்டு நிறுவனங்களுக்கும் பயன்படுவதாகவே உள்ளது. இதைத் தான் ஒரு கவிஞன் இப்படி கூறுகிறான்.
 
‘வேளாண் தொழில்நுட்பங்கள்
 
அளவெடுக்கப்படாமல்
 
தைக்கப்பட்ட
 
ஆயத்த ஆடைகள்.
 
பொருந்தியவர்கள்
 
போட்டுக் கொண்டார்கள்.
 
பொருந்தாதவர்கள்
 
இன்னும் கோவணத்துடன்!’
 
- சொல்லத் தோணுது…
 
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com
 
 
Link to comment
Share on other sites

சொல்லத் தோணுது 19 - குற்றவாளிகள்

 

criminals_2289264f.jpg

 

நம்மைச் சுற்றி நிகழும் சீர்கேடுகளையும், குற்றங்களையும், வன்முறைகளையும், முறை கேடுகளையும் கண்டும் காணாதது போல் இருக்க நாம் பழகிவிட்டோம். அவை வெறும் செய்திகளாக உலவி தீர்வில்லாமலேயே முடிந்து போகின்றன. இவைகளுக்கெல்லாம் காரணம் மற்றவர்கள்தான் எனச் சொல்லி ஒவ்வொருவரும் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறோம்.

 
சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு, 17 முறை களுக்கு மேல் ஆட்சியாளர்கள் மாறியும் சீர்கேடுகளும், குற்றங்களும் பெருகிக் கொண்டே இருப்பதன் காரணம் என்ன?
 
பிரிட்டிஷ்காரர்களிடம் நாம் எதை இழந்தோம் என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்தால், நம் குடியரசு ஆட்சி மூலம் நாம் இழந்ததையும், பெற்றதையும் அறியலாம்!
 
ஒவ்வொரு குடிமகனும் நம் சிக்கல்கள் அனைத்துக்குமே காரணம் அரசாங்கம்தான் என நினைத்தால் இதற்குத் தீர்வே இல்லை. வாக்களிப்பதாலும், வரிகளை செலுத்துவதாலும் மட்டுமே நம் கடமை தீர்ந்துவிடுவதாக, நாம் நினைப்பதுதான் எல்லாக் கொடுமைகளுக்கும் காரணம்.
 
கருவுற்ற நாளில் இருந்தே ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையின் கல்வியைப் பற்றி கவலைப்படத் தொடங்கி, அன்று முதல் பள்ளியில் இடம் பிடிக்க அவர்கள் படும் அவஸ்தையை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். எவ்வளவு விலை கொடுத்தாவது, உரிமைகளை இழந்தாவது, அவமானப்பட்டாவது நாம் உயர்வாக நினைக்கிற பள்ளியில் சேர்க்கத் துடிக்கிறோம்.
 
ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக செலவழிக்கின்ற பணத்தை அடைவதற்காக அவர்கள் கடக்கும் பாதைகள் என்னென்ன என்பதெல்லாம் யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாதவை. இதை எல்லாம் மீறி, அங்கு வழங்குகிற கல்வியின் தரம் பற்றியும் சிந்திக்க நமக்கு நேரமும் இல்லை.
 
நேற்று நான் பிறந்த கிராமத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. ‘ஐந்து முறை ஆசிரியர் பணித் தேர்வு எழுதியும் தேர்ச்சி அடையாத என் மகனுக்கு, யாரையாவது பிடித்து தேர்வில் மதிப்பெண் வாங்கித் தந்து வேலையும் வாங்கிக் கொடுங்கள். நிலத்தை விற்று பணம் ஏற்பாடு செய்து தருகிறேன்’ என ஊர்க்காரர் ஒருவர் கெஞ்சினார்.
 
மூன்று பிள்ளைகளையும் வெளியூர் விடுதி யில் தங்க வைத்து, ஆங்கிலப் பள்ளியில் படிக்க வைக்க ஆசைப்பட்டு, இருந்த நிலத்தை எல்லாம் விற்றதுபோக இன்னும் ஒன்றரை ஏக்கர்தான் மீதம் வைத்திருக்கிறார் அவர். நாடு முழுக்க கறிக்கோழிப் பண்ணைகளைப் போல் திறந்துவிடப்பட்ட ஆங்கிலப் பள்ளிகள் எல்லாமே இப்படிப்பட்ட பெற்றோர்களின் பணத்தால்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
 
தங்களுக்குத் தெரிந்த அரசு ஊழியர்கள், செல்வந்தர்கள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் என எல்லோரின் பிள்ளைகளும் படிக்கிறபோது, அதற்கு இணையான கல்வியை நம் பிள்ளைகளுக் கும் தர வேண்டும் என்பதற்காகவே பொருளாதார சிக்கலில் மாட் டிக் கொண்டு தவிக்கும் பெற்றோர்களின் மனக் குமுறல்களுக்குத் தீர்வுதான் என்ன?
 
தனியார் பள்ளிகளில்தான் சிறந்த கல்வி தரப்படுகிறது என்கிற எண்ணம் முளைத்த போதே, அரசுப் பள்ளிகள் தரத்தை உயர்த்த முயற்சித்திருந்தால் இன்று அரசுப் பள்ளி களெல்லாம் ஒவ்வொன்றாக மூடப்பட்டு, மாட்டுக் கொட்டகைகளாக மாறிக் கொண்டிருக்காது.
 
கல்விச் சாலைகளில் கவனம் செலுத்தாத அரசுகள் தொடர்ந்து உருவானதன் சீர்கேடுதான், இன்று கல்வியை தனியாரிடம் கொடுத்துவிட்டு மதுக் கடைகளை வைத்தும், கனிம வளங்களை சுரண்டியும் நல்லாட்சி(?) செய்து கொண்டிருக்கிறது.
 
ஒவ்வொரு பெற்றோரும் முதல் நாள் இரவில் இருந்தே விண்ணப்பப் படிவம் வாங்க ஒவ்வொரு தனியார் பள்ளியின் வாசலிலும் கால்கடுக்க நின்று கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
 
கடந்த ஆண்டு அறுபதுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்களை சந்தித்து உரையாற்றச் சென்றிருந்தேன். எனக்குப் பெரும் கவலைதான் மிஞ்சியது.
 
வெறும் மதிப்பெண்களை மட்டுமே குறிக் கோளாகக் கொண்டு பயிலும் மாணவர்களையும், தனது பிள்ளை ஒரு வேலையில் சேர்ந்து பணம் மட்டுமே சம்பாதித்தால் போதும் என நினைக்கும் பெற்றோர்களையும், மதிப்பெண்களுக்காகவே பயிற்றுவிக்கும் ஆசிரியர்களையும், பெற்றோர் களிடம் இருந்து பணத்தைக் கொள்ளையடிக் கவும்... அரசாங்கத்தை எப்படி தந்திரமாக ஏய்த்து பணம் பறிக்கலாம் எனக் கற்றுக்கொண்ட கல்வி கடை உரிமையாளர்களையும் கண்டு வந்த பின்னர், இந்த சீர்கேடுகளுக்கு எல்லாம் சிகிச்சை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதை உணர்ந்தேன்.
 
மக்களின் பொருளாதாரத்தை அழித்து, தரமற்ற கல்வியைத் தந்து இந்த சமுதாயத்தை அழித்துக் கொண்டிருக்கும் கொள்ளையர்களின் பிடியில் இருந்து, அரசு நினைத்தால் சில மாதங்களிலேயே விடுதலை பெற்றுத் தந்துவிடலாம். இரண்டு மாதங்களுக்கு முன் சென்னையில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளை நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. தமிழகத்தின் முதல் மதிப்பெண் பெறும் மாணவனாக சென்னை மாநகராட்சிப் பள்ளியில் பயிலும் மாணவன்தான் வர வேண்டும் என்பதற்காக திட்டம் தீட்டப்பட்டு செயல்படுவதாகக் கேள்விப்பட்டேன். அதற்காக மாணவர்களுக்கு அடிப்படை பயிற்சியளிக்கும் சிலரையும் சந்தித்தேன். பல பள்ளிகளுக்கு நேரில் சென்று அங்கு உருவாக்கப்பட்டு வரும் மாற்றங்களையும், மாணவர்களுக்கான தேவைகளையும், அதன் சூழலையும் உருவாக்கித் தருவதை கவனித்த பின்னர் எனக்கு இப்படித்தான் தோன்றியது.
 
இதே போன்ற நடவடிக்கைகளை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிக்கூடங்களிலும் செயல்படுத்தினால், இந்தச் சமுதாயத்தை நாசமாக்கும் தனியார் பள்ளிகளின் கொள்ளை களில் இருந்து மாணவர்களையும், பெற்றோர் களையும் காப்பாற்றிவிடலாம் என்கிற நம்பிக்கைப் பிறந்தது.
 
அரசு எத்தனை சட்டங்களை உருவாக்கினா லும், நீதிமன்றங்கள் எவ்விதமான ஆணைகளை பிறப்பித்து, இவர்களின் கொள்ளையைத் தடுக்க நினைத்தாலும் தனியாரின் கொடுமை களைக் களைய முடியாமல் போவதற்குக் காரணம்... இதில் மக்களின் பங்களிப்பு இல்லாததுதான்.
 
அரசு அறிவித்த கட்டணங்களுக்கு மேல் அவர்கள் கேட்கிறபடி எல்லாம் கொடுப்பதும், அது பெற்றதற்கான அத்தாட்சி நகலைக் கேட்டுப் பெறாமல் திருட்டுத்தனத்துக்கு உடன்படுவதும் பெற்றோர்கள்தான். ஒருவர்கூட இதனைக் கண்டித்து நடவடிக்கை எடுக்கக் கூறி புகார் அளிப்பதில்லை.
 
இந்த அநியாயங்களுக்குத் துணை போகாமல், அரசு அறிவித்துள்ள திட்டங்களின்படிதான் பள்ளியை நடத்த வேண்டும் என, அனைத்துப் பெற்றோரும் ஒரே ஒரு பள்ளியின் முன்பு போராடினால்... ஒரே வாரத்தில் தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் முன்பும் போராட்டம் தொடங்கிவிடும். தனியார் பள்ளிகளும் வழிக்கு வருவார்கள். அரசாங்கமும் உண்மை நிலையை உணர்ந்து, தன் தவறைத் திருத்திக்கொண்டு தன் கடமையை உணர்ந்து செயல்படும்.
 
அரசியல் கட்சிகள் போராடிப் பெற்றுத் தரும் என நினைத்தால், அது எந்தக் காலத்திலும் நடக்கப் போவதில்லை.
 
தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைத் தாங்கள் மட்டுமே உருவாக்கிக் கொள்ளவேண்டும் என முடிவெடுத்து, மக்களே கல்விப் புரட்சியில் குதித்தால்தான் இதற்கு விடிவு. இதற்கு மட்டுமல்ல தங்களுக்கு எதிரான அனைத்துக்குமே மக்கள் வீதியில் இறங்கிப் போராடினால்தான் முடியும் என்பதை எப்போது உணர்கிறோமோ... அதுவரை குற்றவாளிகள் மற்றவர்களில்லை; மக்களாகிய நாம்தான்!
 
- சொல்லத் தோணுது…
 
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சொல்லத் தோணுது 20: மக்களாட்சியும் - புழுத்த அரிசியும்

ration_2296750f.jpg

 

சென்னையில் என் தெருவில்தான் அப்பகுதிக்கான உணவு வழங்கு துறையின் கிளை உள்ளது. தெருவின் இரண்டு பக்கங்களிலும் அதன் வாசல் பகுதி இருப்பதால் மக்கள் கூட்டம் தெருவை அடைத்துகொள்ளும் போதெல்லாம் வரிசையில் பரபரப்புட னும், கவலையுடனும் நிற்கும் அவர்களின் முகத்தை கவனிக்காமல் செல்லத் தவறு வதில்லை. ஒவ்வொரு மாதமும் வழங் கும் உணவுப் பொருட்கள் பற்றிய பேச் சுக்களையும், அவர்களின் குமுறல்களை யும் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.

 
பெரும்பாலான நாட்களில் ஒருவர் கூட அங்கு காத்திருக்காததும், சில நாள் வரிசையில் கூட்டம் காத்துக் கிடப்பதை யும் பார்த்துக்கொண்டேதான் இருக் கிறேன்.
 
அரிசியோ, மண்ணெண்ணெயோ. சர்க்கரையோ எதுவாக இருந்தாலும் ஒருநாள் இரண்டு நாள் மட்டுமே வழங் கப்படுவதும், மறுநாள் கேட்டால் தீர்ந்து விட்டதாகச் சொல்வதும் காலங்கால மாக நடந்துகொண்டே இருக்கிறது. பொருள் வழங்குவதாக அவர்கள் குறிப்பிடும் நாட்களில் பொருட்களை வாங்காவிட்டால் அந்த மாதத்தில் அவர்களுக்குக் கிடைக்க வேண்டியதை மறந்துவிட வேண்டியதுதான். இதனால் தான் அடித்துப் பிடித்து வரிசையில் இடம்பிடித்து, வெய்யிலில் கால் கடுக்க நிற்கிறார்கள். அப்போதெல்லாம் அந்த இடத்தை கடக்கும்போது கையில் சாப்பாட்டுத் தட்டுடன் வரிசையில் நிற்கும் சிறைவாசிகள்தான் எனக்கு நினைவுக்கு வருகிறார்கள்.
 
இவ்வாறெல்லாம் வரிசையில் காத் துக்கிடந்து வாங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து மக்கள் அவர்களுக்குள் பேசிக் குமுறுவதுடன் முடிந்துவிடுகிறது. பல நேரங்களில் நாற் றம் பிடித்த புழுத்த அரிசியை ஏன் தருகிறீர்கள் என அந்தத் துறையில் பணியாற்றும் தெரிந்தவர்களிடம் கேட் டேன். அரசாங்கம் தருவதைத்தானே மக்களுக்குத் தர முடியும். இடையில் நாங்கள் வெறும் ஊழியர்தான் என கழன்று விடுகிறார்கள்.
 
அரசு நடைமுறைப்படுத்தாத, இவர் களாக வகுத்துக் கொண்ட இப்படிப்பட்ட செயல்பாடுகளால் மக்கள் துன்பப் படுவது பற்றி யாருக்கும் கவலை யில்லை. எதிர்த்து கேள்வி எழுப்பி னால் தங்களுக்கு ஏற்கெனவே கிடைப் பதும் கிடைக்காமல் போய்விடுமே என்ப தால் யாருமே இவர்களைக் கண்டு கொள்வதில்லை. இவர்களாக உருவாக் கிக் கொண்ட நடைமுறையினால், உணவு வழங்கப்படாத அட்டைகளுக்கான உணவுப் பொருட்கள் ஏற்கெனவே இருப்பில் உள்ள கணக்குடன் சேர் வதே இல்லை. அப்படியென்றால் மாயமாய்ப் போகும் மக்களுக்குச் சேர வேண்டிய அந்த உணவுப் பொருட் கள் எங்கே போகின்றன... என நான் நண்பர்களிடம் கேட்டதற்கு, போகின்ற இடம் உனக்குத்தான் தெரியவில்லை; அது மக்களுக்கும் தெரியும், அரசாங் கத்துக்கும் தெரியும் என நமுட்டு சிரிப்புடன் கூறுகின்றார்கள்
 
ஆயிரக்கணக்கான கோடிகளை விழுங்கிக் கொண்டிருக்கும் நாற்ற மெடுத்த, புழுத்த அரிசிகளை தடுத்து நிறுத்த ஒருவருக்குமே அக்கறை யில்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அரசு மாதாமாதம் வழங்கு கிற விலையற்ற 20 கிலோ அரி சியை வாங்கியவர்களுக்கும், அதனை சமைத்து சாப்பிட்டுப் பார்த்தவர்களுக் கும் உண்மை நிலை தெரியும். ஒரு அரசு, மக்களுக்குப் பயன்பட வேண்டுமென ஒருதிட்டத்தை உருவாக்கி தரமற்றப் பொருளைத் தரவேண்டுமென்கின்ற கட்டாயமோ, தேவையோ இல்லைதான். ஆனால் அதுதானே நடைமுறையில் நிகழ்கிறது.
 
அரசுப் பதவிகளில் இருப்பவர்கள், பொறுப்பில் இருப்பவர்கள், அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர் களோ என யாராக இருந்தாலும் ஒரே ஒரு கைப்பிடி இந்த உணவை உண்டு பார்த்திருக்கிறார்களா?
 
ஒருவேளை உண்டு பார்த்திருந்தால் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது புரிந்திருக்கும். உயர்ந்த பொருட்களெல்லாம் உள்ளவர்களுக்கு, வீணாய் போனதெல்லாம் இல்லாதவர் களுக்கு என இருந்து விடப்போகி றார்களா?
 
இந்தப் பொறுப்பில் இருப்பவர்கள், இதற்குக் காரணமானவர்கள் கொஞ்சம் இங்கே என்னதான் நடக்கிறது என்பதை அறிய ஏழை மக்களின் வீட்டுக்குச் சென்று பாருங்கள். தொடக்கத்தில் இந்த நாற்றமெடுத்த புழுத்த அரிசியை பண மில்லாமல் இலவசமாகத் தானே தரு கிறார்கள் என்பதால் ஓரளவுக்கு வசதி படைத்தவர்கள் மட்டும் அதை வாங்கி வீட்டிலுள்ள ஆட்டுக்கும், மாட்டுக்கும், நாய்க்கும், பூனைக்கும், வேலையாட் களுக்கும் பயன்படுத்தினார்கள். ஆனால், இப்போது அப்படிப்பட்ட அரிசியை வாங்கும் அனைவருமே அதனை தாங்கள் உண்ணாமல் ஆடு, மாடு, கோழி, நாய்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
 
ஒரு கிலோ அரிசி இன்றைய விலை யில் மிகக் குறைவாக மதிப்பிட்டாலும் கிலோ 30 ரூபாய் என்றால் 600 ரூபாய் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் இலவச மாக மாதந்தோறும் வழங்கப்படுகின்றது. இந்த கோடிக்கணக்கான நிதி முழுவதையும் நடுவண் அரசும், மாநில அரசும் பகிர்ந்து கொள்கின்றன என்றா லும் அவை மக்களிடமிருந்து பெறப் பட்ட வரிப் பணம்தானே! இப்படிப்பட்ட தரமற்றப் பொருளை வழங்க ஒரு அமைச் சகம், ஒரு துறை, லட்சக்கணக்கான ஊழியர்கள் எனக் கணக்கிட்டால்... ஒவ்வொரு மாதத்துக்கும் எத்தனை ஆயிரம் கோடியாகும் என்பதை கணக்கிட்டுக் கொள்ளலாம்.
 
நுகர்பொருள் வாணிபக் கழகம்தான் அரிசியை விளைவிக்கும் உழவனிடம் இருந்து நேரடியாக நெல்லை கொள் முதல் செய்கிறது. பின் அதன் பராமரிப் பில்தான் ஆலைகளுக்குச் சென்று அரிசி யாக மாற்றப்பட்டு நுகர்வோர்களாகிய மக்களுக்கு தரப்படுகிறது.
 
இதில் உழவர்களுக்கு முறையான விலையில் அவர்களுக்கான பணமும் போய்ச் சேர்கிறது. நெல்லை கொள்முதல் செய்து பாதுகாத்து அரிசியாக்கி மக்க ளிடம் வழங்கும் இந்த இடைப்பட்ட காலத் தில்தான் நன்றாக இருந்த அரிசி விலங்கு கள், கால்நடைகள் மட்டுமே உண்ணும் உணவாக மாறிவிடுகிறது. ஒருமுறை இந் தத் தவறு நடந்திருந்தால் அதைத் தவறு எனலாம். இதையே வழக்கமாகிக் கொண்டதை என்னவென்று அழைப்பது?
 
நல்ல மனதோடு திட்டங்களை தீட்டும் அரசு அது மக்களை முழுமையாகச் சென்றடைகிறதா என்பதில் கவனம் செலுத்துவதில்லை. இதனால் கோடிக் கணக்கான பொருளாதாரம் இழப்பு, உணவு இழப்பு, உழவர்களின் உழைப்பு இழப்பு. ஏற்கெனவே கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கும் உழவன் தன் கையி லிருந்து போனால் போதும் என அறு வடைக் களத்தில் இருந்தபடியே அதனை உலர்த்த நேரமில்லாமலும், இடமில்லா மலும், கொடுத்துவிடுகிறான். எடை போட்டுவாங்குபவர்கள் அதனை உலர்த் திப் பாதுகாத்து வைக்க இடமில்லாமல் மூட்டையாக்கித் தேக்கி விடுகின்றார்கள். தேக்கப்பட்ட மூட்டைகள் ஈரப் பதத்துடன் அரவை ஆலைகளுக்குச் செல்வதால் பக்குவத்தில் இருக்கும் நெல்லுக்கும், ஈரமான நெல்லுக்கும் அதே நேரம் தரப் பட்டு அரிசியை மீண்டும் மூட்டையாக்கி கிடங்கில் சேமித்து வைக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட அரிசிதான் மக்களுக்கு வழங்கப்பட்டு பின் கால்நடைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவாக மாறு கின்றன.
 
ஒவ்வொரு கிராமத்திலும் தானியங் களை அறுவடை செய்யவும், உலர்த்த வும் ஒதுக்கப்பட்டிருந்த களங்கள் எல் லாம் அந்தந்த ஊர்களில் திறமையுள்ள வர்களால் கையகப்படுத்தப்பட்டு விட்டன. நெல் அறுவடை செய்யும் பகுதி களில் உலர் தானியக் களங்களை உரு வாக்கிக் கொடுப்பதும், ஏற்கெனவே தஞ்சாவூரில் இருப்பதைப் போல் ஒவ் வொரு கொள்முதல் நிலையங்களிலும் தானியங்கி உலர்தானியக் கருவிகளை அமைத்துக் கொடுப்பதும், நெல்மூட்டை களை சேமித்து வைக்க இடமில்லாமல் வாடகைக்கு இடம்பிடித்து தார்பாயிட்டு வெட்டவெளிகளில் சேமித்து வைப்பதை தவிர்ப்பதும் அரசு உடனடியாக செய்ய வேண்டிய இன்றியமையாத செய லாகும்.
 
உழவர்கள் விளைவித்த உணவையே அவர்களே பயன்படுத்த முடியாத கொடு மைக்கு யார் பதில் சொல்லப் போ கிறார்கள்?
 
Link to comment
Share on other sites

சொல்லத் தோணுது 21: போலிகளின் காலம்!

 

doctor_2304163f.jpg

 

உணவின் தேவை எவ்வளவு தவிர்க்க முடியாததோ அது போலவே மருந்தின் தேவையும் தவிர்க்க முடியாததாகிவிட்டது. உயிர் பயம் வந்தால் மருத்துவரிடம் செல்லாத வர்கள் யாராவது இருக்க முடியுமா? அதுவரை, தான் சம்பாதித்த எல்லா வற்றையும் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை, உயிர் பிழைத்தால் மட் டும் போதும் என எண்ணும் நிலைதான் இறுதி நிலையாக இருக்கிறது.

 
மருந்து மாத்திரைகளை எப்போது உண்ணத் தொடங்குகிறார்களோ அப் போதே அவர்களின் இறப்பின் நாட்களும் நெருங்குகிறது என நான் அண்மையில் சந்தித்த ஒருவர் கூறினார். மருந்தில் இருக்கின்ற அசலும் போலியும் நம்மைப் போன்றவர்களுக்குத் தெரிவதே இல்லை.
 
எனது நெருங்கிய நட்பில் மருந்தை அதிக அளவில் வாங்கி விற்பவரும், சிறந்த மருத்துவர்களும் இருக்கிறார் கள். அவர்கள் சொல்வதைப் பார்த்தால் மருந்து என்கிற பெயரிலும், மருத்துவர் கள் என்கிற பெயரிலும் இயங்கிவரும் போலிகள் சமுதாயத்துக்கு எவ்வளவு பெரிய இழப்பை இழைத்துக்கொண் டிருக்கிறார்கள் என்பது பெருங்கவ லையை ஏற்படுத்துகிறது.
 
காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு என்பதெல்லாம் உடல் ஏற்றுக்கொள்ளாத வைகளை வெளியேற்றும் வேலையைத் தொடங்கிவிட்டது என்பது பலருக்கும் புரிவதில்லை. இது புரியாமல் உடனே மருந்து, மாத்திரை, மருத்துவர் எனத் தேடி ஓடி அதனைக் கட்டுப்படுத்தி விடுகிறோம்.
 
நாம் ஒவ்வொருவரும் உடல்கூறுகள் பற்றிய செயல்பாடுகள், கோளாறுகள், அதற்கானத் தீர்வுகளைப் பற்றிய அறிவை தொடக்கத்திலேயே பெற வேண்டிய இடம் கல்விக்கூடங்கள்தான். ஆனால், அப்படிப்பட்ட பாடத் திட்டங்களோ, அதனை சொல்லித் தருபவர்களோ இல்லை.
 
மக்களாட்சி என சொல்லிக்கொண்டா லும் ஒவ்வொரு மனிதனுக்கும் பணம் இல்லாமல் கட்டாயம் தரப்பட வேண்டிய கல்வியும், மருத்துவமும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதால், அடிப் படைத் தேவைகளைக்கூட அதிகப் பணம் செலவு செய்துதான் ஒவ்வொருவரும் பெற வேண்டியிருக்கிறது.
 
அண்மைக் காலமாக அடிக்கடி செய்தி களில் காணக் கிடைக்கிற போலி மருத்து வர்களின் வேட்டை பற்றிய செய்திக்குப் பின்னால், கண்டெடுக்கப்பட வேண்டிய உண்மைகள் நிறையவே இருக்கின்றன.
 
மனது வைத்தால் போலி மருத்துவர் களை ஒரே நாளில் முடக்கிவிட முடி யாதா எனும் கேள்வி எழும்போது, அதற் கான சட்ட திட்டங்கள் முறையாக உருவாக்கப்படாததும், அதில் உள்ள ஓட்டைகள் அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுப் பதும் தெரியவருகிறது.
 
மரபுமுறை மருத்துவத்தில் நாட்டமில் லாமல் இருப்பவர்கள், யாரோ உருவாக் கிய ஆங்கில மருந்து, மாத்திரைகளை யும், வெறும் சான்றிதழையும் மட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்டு சமூக அக்கறையின்றி திறனற்ற ஒரு சில ஆங்கில மருத்துவர்களிடம் சிக்கி சீரழிவதை, யார் நினைத்தாலும் காப் பாற்ற முடிவதில்லை. அவர்கள் கொடுக் கிற மருந்து, மாத்திரை, ஊசி என எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறோம். குறிப்பாக அதிகப் பணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் என்றால் எதையும் கேட்காமல் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்கிறோம். எது நல்லது, கெட்டது என்பதை நமக்கு சொல்ல யாருமே இல்லை. சோதனை எலி, பூனை, குரங்குகளுக்குப் பதிலாக அவர்கள் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு புதுப் புது மருந்துக்கும் நாம் பலியாகிக் கொண்டிருக்கிறோம்.
 
ஒரு கடையில் 200 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு மாத்திரை, இன்னொரு கடையில் 60 ரூபாய்க்குக் கிடைக்கிறது. விவரம் அறிந்தவர்கள் போலி மருந்து கம்பெனிகள்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள். 200 ரூபாய் விற்கக்கூடிய அந்த மாத்திரையின் அடக்கவிலையே 30 ரூபாய்க்குள்தான் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.
 
எங்கேயாவது, சந்தேகத்துக்கு இடமா கப் பலியாகும்போதுதான் மருத்துவ ரைக் குற்றம்சாட்டி கேள்வி கேட்கி றோம். ஏற்கெனவே முறையற்ற மருத்துவத்தி னாலும், மருந்துகளாலும் சிறிது சிறிதாகக் கொல்லப்பட்டுதான் முழுமையாக அந்த உயிர் போயிருக்கிறது என்கிற உண்மை நமக்குப் புரிவது இல்லை.
 
முறையற்ற மருத்துவக் கல்வியை யும், அது உற்பத்தி செய்த மருத்துவர் களையும், முறைகேடாக அனுமதிப் பெற்ற மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்களையும் வளர்த்துக் கொண் டிருப்பதுப் பற்றி யாருக்கும் கவலை யில்லை. ஒவ்வொரு நொடியும் பலியா கிக் கொண்டிருக்கும் உயிர்களின் எண் ணிக்கை கணக்கில் வருவதும் இல்லை. காலங்காலமாக இவற்றுக்கு அனுமதி அளித்து வருபர்கள் நம் கண்களுக்குத் தெரிவதும் இல்லை.
 
எல்லா மருத்துவ சாதனைகளும், எல்லா கண்டுபிடிப்புகளுமே பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே பயன்படு கிறது. தாங்கள் உருவாக்கிய, தாங்கள் அனுமதி கொடுத்த அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சைப் பெறாமல் அத் தனை அமைச்சர்களும், அரசியல்வாதி களும் தனியார் மருத்துவமனைக்குத் தான் ஓடுகிறார்கள். இந்நேரத்தில், தன் உயிர் போகும் நிலை வந்தபோது கூட அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெறுவேன் என அடம்பிடித்த தமிழகத்தின் முதல் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி அவர்களை நினைத்துக்கொள்கிறேன்.
 
சிறந்த மருத்துவம் என்றால் அது நக ரத்து மக்களுக்கு மட்டும்தான். சிறந்த மருத்துவர்கள் என்றால் அவர்கள் நக ரத்தை விட்டு வெளியே வர மாட்டார்கள் என்பதை, கடந்த இரண்டு வாரங்களாக நேரில் கண்டுவருகிறேன். படுக்கையில் விழுந்துவிட்ட என் அம்மாவுக்கு ஊசி போட, சிறிய சிறிய சோதனை செய்ய. நாடிப் பிடித்துப் பார்க்கக் கூட மருத்துவர் கள் இல்லாமல், அலைந்து தவித்ததை என்னால் கூறாமல் இருக்க முடிய வில்லை.
 
எனக்கு நேர்ந்த அவலம் நாள்தோறும் இந்நாட்டில் கோடிக்கணக்கான கிராம மக்களுக்கு நிகழ்ந்து கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்தபடியேதான் இருக்கப் போகிறோமா? என்னுடைய கவலையை யும், ஆதங்கத்தையும் தமிழக சுகாதாரத் துறை உயர் அதிகாரியிடம் தொலைபேசி யில் பகிர்ந்து கொண்டதைத் தாண்டி, எதையும் என்னால் செய்துவிட முடியவில்லை.
 
மக்களாட்சி முறை என்பதே எல்லா மக்களும் எல்லாவற்றுக்கும் உரிமை யுள்ளவர்கள் என்பதுதான். 67 ஆண்டுகள் கடந்தும் இது நிகழ்ந் திருக்கிறதா?
 
ஏழைகளுக்கு ஒன்று, பணக்காரர் களுக்கு ஒன்று, நகர மக்களுக்கு ஒன்று. கிராமத்து மக்களுக்கு ஒன்று என்றால், எதற்கு இப்படிப்பட்ட இந்த மக்களாட்சி ?
 
அன்புமணி இராமதாசு சுகாதார அமைச்சராக இருந்தபோது அந்தத் துறையில் அதுநாள் வரையில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறையில் பல சீர்திருத்தங்களை யும், சில நல்லத் திட்டங்களையும் கொண்டு வந்தார். அதில் ஒன்று: இள நிலை மருத்துவம் படித்தவர்கள் மேற்படிப்புப் படித்து மருத் துவராக தொழிலைச் செய்ய வேண்டு மென்றால் கட்டாயம் இரண்டு ஆண்டுகள் கிராமப் புறங்களில் மருத்துவ சேவை புரிந்திருக்க வேண்டும் .
 
இந்தியா முழுக்க மருத்துவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும், இறுதியில் அந்தந்த மாநில அரசுகளால் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டார்கள். படித்து முடித்த பிறகு கிராமத்தில் தங்கியிருந்து இரண்டு ஆண்டுகள் மக்களுக்கு மருத்துவம் பார்த்ததால்தான் அன்புமணிக்கும் மக்களின் பிரச்சினை புரிந்திருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் கடந்த கால தமிழக அரசு அந்தச் சட்டத்தை ஆதரிக்காமல் எதிர்த்தது. அன்புமணி இராமதாசு கொண்டுவந்த ‘108 அவசர ஊர்தி சேவை’ மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டதால், கிராமப்புற மக்களுக்கு ஓரளவுக்கு ஆறுதல். இதிலும் அவசர உடனடி மருத்துவம் அளிக்கப்பட வேண்டியவர்களை, பெரிய அளவில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல், அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட தொலைவில் உள்ள, அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதால் பலரைக் காப்பாற்ற முடிவதில்லை. இப்படிப்பட்ட குறைபாடுகளை யாரிடம் சொல்வதெனத் தெரியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அசலைவிட எல்லாத் துறைகளிலும் போலிகள் நிறைந்துவிட்ட காலத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
 
- சொல்லத் தோணுது…
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சொல்லத் தோணுது 22: தலைவர்கள் பஞ்சமும் தடுமாறும் மக்களும்!

 

sollathonuthu_2311432f.jpg

 

டெல்லியில் கிடைத்த தேர்தல் முடிவால் தூக்கத்தைத் தொலைத்த தலைவர்களும் தொண்டர்களும் கணக்கில் அடங்குவார்களா என்பது தெரியவில்லை. டெல்லி தேர்தல் முடிவுக்குப் பின்பு ’வாக்களித்தால் மட்டும் போதும்’ என்றிருந்த சாதாரண மக்களெல்லாம் அரசியலைப் பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
 
இது முதல்முறை அல்ல; இரண்டாம் முறையும் ஒருவர் வெற்றிப் பெற்றிருக்கிறார் என்றால், அதுவும் பெரும்பான்மையோடு ஆட்சி செய்து கொண்டிருக்கிற ஒரு கட்சியையும், ஏற்கெனவே ஆட்சி செய்த கட்சியையும் தூக்கமில்லாமல் செய்துவிட்டார் என்றால் அதனை இலகுவில் கவனிக்காமல் விட்டுவிட முடியாது. படித்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய பகுதி டெல்லி என சொல்லி நழுவிடப் பார்க்கிறார்கள்.
 
அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் என்கிற பெயரில் இவர்கள் செய்கிற அநியாயத்தையும், அட்டூழியத்தையும் முடிவுக்குக் கொண்டுவர ஒட்டுமொத்த ஊழல் இருட்டில் கிடக்கும் இந்தியாவுக்கே வெளிச்சத்தைக் கொண்டுவர, டெல்லி மக்கள் மெழுகுவத்தியை ஏற்றி வைத்திருக்கிறார்கள். அந்த வெளிச்சம் மேற்கொண்டு எங்கும் பரவாமல் இருக்க வேண்டுமே என்கிற கவலை அரசியலை ஒரு தொழிலாகக் கொண்டவர்களுக்கு வந்துவிட்டது.
 
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு இனியாவது நல்ல தலைவர்கள் நமக்குக் கிடைக்க மாட்டார்களா எனவும், மக்கள் ஏங்கத் தொடங்கிவிட்டார்கள்.
 
மக்களுக்கானத் தலைவர்கள் என்பவர்கள் வானத்தில் இருந்து திடீரென எங்கிருந்தோ குதிப்பவர்கள் இல்லை. மக்களிடம் இருந்தேதான் நாம் வணங்குகிற பல நல்லத் தலைவர்கள் கிடைத்தார்கள்.
 
பொதுவாக தேர்தல் முடிவுக்கு முன்புதானே கருத்துக்கணிப்பை நடத்துவார்கள். நான் மக்களின் மனங்களை அறிவதற்காக வெவ்வேறு தளத்திலும் வெவ்வேறு வயதிலும் உள்ளவர்களிடமும் பேசியபோது, ஒவ்வொருவரின் மனதில் உள்ள ஏக்கமும், தவிப்பும், தடுமாற்றமும்தான் இதனை என்னை எழுதத் தூண்டியது.
 
நிகழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் போக்கும், அரசியல்வாதிகளின் போக்கும் அனைவருக்குமே மனநிறைவைத் தராததை எளிதாக உணர முடிந்தது. இளைஞர்களிடம் இருக்கின்ற கேள்விகளும், கோபமும் அவர்களை நெருங்கிப் பார்த்தால் புரியும். தங்களைப் பற்றி அக்கறை கொள்பவர்களும், மக்களுக்காகவே தன் வாழ்வை ஒப்படைத்தத் தலைவர்களும் எங்கே இருக்கிறார்கள் காட்டுங்கள் என்கிறார்கள்? எங்களுக்கு அரசியல் தெரியாது என நினைத்துவிடாதீர்கள்? நாங்கள் பங்கு கொள்கிற மாதிரி இங்கு அரசியல் இல்லை என்பதே அவர்களின் வாதமாக இருக்கிறது. அரசியல்வாதிகள் நேர்மையற்றவர்கள், தன்னலவாதிகள் என்கின்ற எண்ணம் அவர்களின் மனதில் குடிகொண்டுவிட்டது.
 
குடும்பப் பொறுப்பில் உழன்று கொண்டிருப்பவர்களும், தொழில் நடத்துபவர்களும் இதையெல்லாம் எங்களிடம் கேட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா? எங்களைப் பார்த்தால்… நாங்கள் மகிழ்ச்சியோடுதான் வாழ்வதாக உங்களின் கண்களுக்குத் தெரிகிறதா எனவும் அவர்கள் கேட்கிறார்கள்.
 
ஊடகங்களில் அறிக்கையை வெளியிட்டுவிட்டு, தெருவில் இறங்கி மக்களின் வாழ்க்கையில் பங்கு கொள்ளாமல் நேரடியாக செயலில் இறங்கி போராடாதவர்கள்தான் தலைவர்களா? கோடி கோடியாகப் பணத்தை இறைத்து கூட்டத்தைக் கூட்டி, குளிரூட்டப்பட்டக் காரில் படு வேகமாக அவர்களின் முன்னேயும் பின்னேயும் கார்களைப் போகவிட்டு, மக்களை விரட்டியடித்து, சாலையில் அவர்களே வைத்துக் கொண்ட பதாகைகளின் விளம்பரத்தைப் பார்த்தே மகிழ்பவர்களா தலைவர்கள் என்பதையும் கேட்கிறார்கள்.
 
ஆளாளுக்கு ஒரு தொலைக்காட்சியையும், ஒரு பத்திரிகையையும் வைத்துக்கொண்டு தங்கள் புகழையேப் பாடிக் கொண்டும், உண்மைச் செய்திகளை மக்களுக்குத் தெரியப்படுத்தாமல் அதனைத் திரித்து அவரவர்களுக்குத் தகுந்த மாதிரி வெளியிடுவதை எல்லாம் இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் சகித்துக் கொண்டிருப்பது?
 
மக்களைப் பற்றி மட்டுமே சிந்தித்து, அவர்களுக்காகவே தான் கொண்ட உறுதியில் இருந்து மாறாமல் அவர்களுடனேயே கிடந்து ஊழலுக்கு எதிராகவும், மக்களின் வாழ்வு நலனுக்காகவும் ஓடி உழைத்துக் கொண்டிருக்கும் தலைவர்களை எங்கள் கண்ணில் கொஞ்சம் காட்டுங்களேன் என்கிறார்கள்.
 
தலைவர்களிடம் மட்டும் நேர்மையை எதிர்பார்க்கும் நாம்தானே அத்தனை சீர்கேடுகளுக்கும் காரணமாக இருக்கிறோம். நம் காரியம் நடந்தால் போதும் என கேட்பதைக் கொடுத்துவிட்டு, சுருட்டுபவர்களை சுட்டிக் காட்டாமல் கண்டும் காணாமல் இருந்துவிடுகிறோமே என நான் கேட்டதற்கு, வழிகாட்டும் தலைவர்கள் நேர்மையாக இருந்தால்தானே நாங்களும் நேர்மையாக இருப்போம் என கேள்வியைத் திருப்புகிறார்கள்..
 
இவர்கள் அரசியலில் நுழைந்தபோது கொண்டுவந்த சொத்து எவ்வளவு? என்ன தொழிலை செய்து இவ்வளவு பணத்தை இவர்கள் சம்பாதித்தார்கள்? இவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் என்ன செய்து சம்பாதிக்கிறார்கள்? அவர்களுக்கு எங்கே இருந்து இவ்வளவு மூலதனம் வந்தது என்பதையெல்லாம் கவனிக்காமலா இருக்கிறோம் என்றும் அந்த இளைஞர்கள் கோபத்துடன் கேட்கிறார்கள்.
 
அப்பழுக்கற்ற சீரியத் தொண்டனே தலைவனாக மாறுகிறான். அவன்தான் மக்களின் அன்றாட வாழ்வு நிகழ்வுகளை அறிந்து உணர்ந்து திட்டங்களைத் தீட்டி, தீர்வைத் தேடுகிறான். சாதியோ, மதமோ யாருக்கும் விருப்பமில்லைதான். சாதியை விதைத்து அந்த உணர்வில் மக்களை கூறுபோட்டு, அதற்கேற்றபடி வேட்பாளர்களைத் தேடி காண்பதுதானே காலம்காலமாக நடக்கிறது. தன் சாதிக்காரனுக்கு மட்டுமே கட்சிப் பொறுப்பும் பதவியும் கொடுத்து சாதி வெறியை மக்களா வளர்த்தார்கள்?
 
மதம்தானே முதலில் மனிதனை கூறுபோட்டு தனித் தனியாகப் பிரித்தது. மனிதனை நல்வழிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட மதம்தான், இன்று உலகத்தின் பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. அதன் அடிப்படையில்தான் ஒவ்வொரு நாடும் எதிர்ப்பை வளர்த்துக்கொண்டு சண்டையிட்டுக்கொள்கின்றன. கழிப்பிட வசதிக்கே வழியில்லாத நம் மக்களின் வரிப் பணம் பாதிக்கும் மேல் பாதுகாப்பு எனும் பெயரால் ராணுவத்துக்கு செலவிட வேண்டியிருக்கிறது.
 
சாதியும் மதமும் ஒன்றாகச் சேர்ந்து அரசியல் எனும் பெயரால் நம்மை சீரழித்துக் கொண்டிருப்பதை இனியும் தடுத்து நிறுத்திவிட முடியுமா? சாதிக் கட்சிகளை அடையாளம் கண்டு எதிர்ப்பை வெளிப்படுத்துபவர்கள், மதக் கட்சிகளைக் கண்டுகொள்வதே இல்லை. இவற்றையெல்லாம் சீர் செய்ய வேண்டிய ஊடகங்களில் பல, தங்களின் சாதியைச் சேர்ந்தவர்களை மட்டுமே பணியில் சேர்த்துக்கொள்வதும் அவர்களின் செய்திகளுக்கு மட்டுமே முன்னுரிமை தந்து தகுதியற்றவர்களை வளர்த்துக்கொண்டிருப்பதும் நடந்துகொண்டுதானே இருக்கிறது. ஆனால், இவர்கள்தான் அரசியலில் சாதி, மதமற்ற தூய்மைக்காக வரிந்து கட்டுகிறார்கள் என்பதெல்லாம் மக்களுக்குத் தெரியாதா?
 
முதலில் நமக்குத் தேவை நேர்மையான ஊடகங்கள். அவைகள் கிடைத்தால் நல்ல நேர்மையான தலைவர்கள் கிடைத்துக்கொண்டே இருப்பார்கள்.
 
ஊழல் இருட்டில் இருக்கும் இந்தியாவுக்கு, நேர்மையான அரசியலை முன்னெடுத்துச் செல்ல இனியும் ஒரு தலைவர் பிறந்து வரப் போவதில்லை. ஒன்று, தவறு செய்துவிட்டவர்கள் மனம் திருந்தி முற்றிலும் மாறி அர்விந்த் கேஜ்ரிவால் செய்ததைப் போல் மக்களிடம் மன்னிப்புக் கேட்டு, நேர்மையான தலைவர்களாக மக்கள் மனதில் கண்ணுக்குத் தெரியலாம். அல்லது, மக்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் அவர்களின் தீவிரமான செயல்பாடுகளால் ஊடகங்களால் கண்டுபிடிக்கப்பட்டு மக்களின் முன்னிறுத்தப்பட்டு இனம் காட்டப்படலாம். தலைவர்கள் பஞ்சம் தீருமா? தடுமாறும் மக்களின் மனம் மாறுமா?
 

 

- சொல்லத் தோணுது…
 

 

 

சொல்லத் தோணுது 23: அடங்காத வெறி!

 

sollathonudhu_2318965f.jpg

 

பெண்களை இழிவுப்படுத்துவதும், அடிமைப்படுத்துவதும் மட்டுமே நம் கண்களுக்குத் தெரிகிறது. கலாச்சாரத்தில் சிக்குண்டு எல்லா வற்றுக்கும் பலியாவது பெண்கள் சமுதாயம்தான். தவறுகளை யார் செய்தாலும் எல்லாமும் அவர்கள் தலையிலேயே விழும்.

 
செய்தித்தாள்களில் நாள்தோறும் தவ றாமல் இடம்பெறும் ஒரே செய்தி பாலியல் குற்றங்களும், வன்முறைகளும்தான். படிக்கவே பதறுகிற செய்திகள், காதில் கேட்கவே பிடிக்காத அருவருப்பான செயல்பாடுகள். இவை எல்லாம் சமுதாயத்தை எதிர்காலத்தில் எங்கே போய் கொண்டுவிடும் எனத் தெரியவே இல்லை.
 
நகரம், கிராமம் என்றில்லாமல் தொட ரும் இந்தக் கொடுஞ்செயல்கள், ஒன்று மறியாத பிஞ்சுக் குழந்தைகளைப் பலி யாக்கிக் கொண்டேயிருக்கிறது. குழந்தைகளைக்கூட விட்டு வைக்காத இந்தக் குற்றங்களை செய்பவர்களின் மனம், எதனால் இப்படி மாறுகிறது? சமூ கத்தில் இருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டவர்களாக எப்படி இவர்கள் மாறிப் போகிறார்கள்? பால் உணர்வு பற்றிய புரிதல் இல்லாமல் இவர்கள் தடம் மாறிப் போகக் காரணம் என்ன? பெருகி வரும் குற்றங்களைப் பட்டியலிடுவதும், கவலை கொள்வதும் மட்டுமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பாதிக்கப்படுபவர் களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உதவிப் பணத்தைக் கொடுத்துவிட்டு அரசாங்கம் தன் கணக்கை முடித்துக் கொள்கிறது. எந்தெந்த சிக்கல்கள் உடனடியாகத் தீர்க் கப்பட வேண்டுமோ, அவை எல்லாம் கண்டுகொள்ளப்படாமல் போவதுதான் பொதுவிதியாக இருக்கிறது.
 
நான் மறக்க நினைத்தாலும் என் கண் முன்னே என் சிந்தனையை இடைஞ்சல் செய்து நிற்கின்ற இச்செய்தியை நீங் களும் அறிந்திருக்கலாம். மயிலாடு துறை அருகே ஒரு பள்ளி மாணவி சிறைக்கு அனுப்பப்பட்டதன் பின்னணி யைப் படித்தபின், என் மனம் அந்த மாணவியையும் அவ்வாறு சிக்குண்டு இருக்கும் இளம் பெண்கள் பற்றியுமே சுற்றுகிறது.
 
மதுக் குடிக்கு அடிமையாகிப் போன அப்பனிடம் இருந்து பருவமடைந்த தன் இரண்டு மகள்களையும் காப்பாற்ற, அந்த மாணவியின் தாய் ஒவ்வொரு நாளும் போராடியிருக்கிறார். குடித்துவிட்டு வருகிற கணவனைத்தான் அவரால் கண்டிக்க முடிந்திருக்கிறது. தெருவில் இருக்கும் அரசு மதுக் கடையை அவளால் எதுவுமே செய்ய முடியவில்லை. அந்தத் தாயால் முடிந்ததெல்லாம் பகலும் இரவும் தன் மகள்களிடம் அவர்களின் அப்பனை நெருங்கவிடாமல் பார்த்துக் கொண் டதுதான்.
 
தொடர்ந்து வன்புணர்ச்சிக் கொடுமையை அனுபவித்து வந்த மூத்த மகள், யாரிடம் இதைப் பற்றி சொல்ல முடியும்? எந்த மன நிலையில் அவளால் பள்ளிக்குச் சென்று படித்திருக்க முடி யும்? தன் தந்தையிடம் இருந்து தங்கையையாவது காப்பாற்றிவிடலாம் என நினைத்தவள், ஒருநாள் நஞ்சு வாங்கி வந்து மதுவுடன் கலந்து வைத்து விட்டாள். அதனைக் குடித்த அப்பன் இறந்து போனான்.
 
அவளைத் தொடர்ந்து இடைஞ்சல் கொடுத்துவந்த தந்தையின் கூட்டாளிகள் இருவரும் மீதியிருந்த மதுவைக் குடித்ததினால் இறந்து போனார்கள். வழக்கம் போலவே பெயரை மாற்றி ஊடகங்கள் செய்தியை வெளியிட்டன. ஒரு பெண் பிள்ளையாகப் பிறந்ததினா லேயே மனதையும், உடல் வதையை யும் அனுபவித்து வந்தவள் மூவரும் இறந்துபோன காரணத்துக்காக சிறையில் கிடக்கிறாள். இறந்துபோன குற்ற வாளிகள் மூவருக்கும்தான் அவளால் தண்டனை கொடுக்க முடிந்தது.
 
மதுவைக் கொடுத்து குடிகாரர்களாக ஆக்கி யவர்களைத் தண்டிக்க முடியவில்லை. கல்வி கற்று வாழ்க்கையை வாழவேண்டிய ஒரு குடிமகள், கொடுஞ்சிறையில் குற்றவாளியாகக் காலத்தைக் கழிக் கிறாள். இப்படி நாள்தோறும் நடக்கிற குற்றங்கள் ஒன்றா, இரண்டா? அந்தக் குடும்பத்தின் கதி என்ன? யாருக்காவது தெரியுமா? அது பற்றிய அக்கறை யாருக்குத் தேவை? மதுவின் விற்பனை எண்ணிக்கைக் கூட்டுத் தொகையைவிட பாதிப்புக்குள்ளாகும் சீரழிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை, குழந்தை களின் எண்ணிக்கை, குடும்பங்களின் எண்ணிக்கைக் குறைவுதானே என நினைக்கிறார்களா?
 
புத்தகங்களையும், புத்தகப் பையை யும், மிதிவண்டிகளையும், மடிக்கணினி யையும் கொடுப்பவர்களுக்கு மதுவைக் கொடுப்பதால் ஏற்படும் சீரழிவுகளைப் பற்றித் தெரியாமலா இருக்கும்? என் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்ய வந்திருந்த ஏழைத் தாய் ஒருவரிடம் அவருக்கு உதவியாக வந்திருந்த மகளை, ‘ஏன் படிக்கிற பெண்ணை வேலைக்கு அழைத்து வந்தீர்கள்?’ எனக் கேட்டதற்கு இதையேதான் காரண மாகச் சொன்னார். பள்ளி விடுமுறை என்பதால் மகளை வேலைக்கு அழைத்து வந்துவிட்டதாகவும், கணவன் குடிகார னாக இருப்பதால் வீட்டில் விட்டுவிட்டு வர அச்சமாக இருப்பதாகவும் சொன்னபோது அதிர்ந்து போனேன்.
 
‘மதுக் கடைகளை மூடுங்கள். சமுதாயம் அழிந்து கொண்டிருக்கிறது எனச் சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டால், கடைகளை மூட முடியாது. முடிந்தால் மதுவின் கேடுகளைச் சொல்லி பரப்புரை செய்யுங்கள்’ என அந்தத் துறையைச் சார்ந்த மாண்புமிகு அமைச்சர் சட்டமன்றத்தில் வாய் கூசாமல் சொல்கிறார். அதற்கும் மேசை உடைகிற மாதிரி தட்டி அரசுக்கு ஆதரவைத் தெரிவிக்கிறார்கள்.
 
பெண்களுக்கான பாதுகாப்பற்ற நிலையைப் பற்றி எவருக்குமே கவலை இல்லை. வீட்டில் இருந்து வெளியில் புறப்படும் பெண், தான் அணிந்து கொள் ளும் ஆடை முதற்கொண்டு, தான் பயணிக்கும் வாகனம், பணிபுரியும் பணிக் கூடம் என எல்லாவற்றையும் கருத்தில் கொண்டேதான் உயிரைக் கையில் பிடித் துக் கொண்டு வாழவேண்டியிருக்கிறது. ‘கண்காணிக்கும் கேமரா’ வைத்துவிட் டால் கடமை முடிந்துபோகும் என நினைக்கிறார்கள். குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தருவதோடு காவல் துறையின் கடமை முடிந்துபோகிறது. பாலியல் குற்றங்களும், வன்முறைகளும் நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சிந்திக்க இங்கே யாருக்கும் நேரம் இல்லை.
 
இணையதளங்கள், வலைதளங்கள் எல்லாம் மனிதர்களைத் தனிமைப்படுத்தி யது. உறவுகளைக் கொன்றொழித்தது. பாலுறவு பற்றிய புரிதல்களைக் கற் றுக் கொடுக்காமலேயே, ஒவ்வொரு பிள்ளையின் கையிலும் கைப்பேசி, மடிக்கணினி கொடுக்கப்பட்டுவிட்டன. அதை வைத்து பொழுது விடிந்து உறங்கும் வரைக்கும் அதனை நோண்டிக் கொண்டே இருக்கிறார்கள். அதில் பார்ப்பதை எல்லாம் அனுபவித்து விடத் துடிக்கிறார்கள். பெற்றோர்களுக் கும் அவர்களைக் கவனிக்க நேரம் இல்லை.
 
தந்தை, உடன் பிறந்தவர்கள், உறவி னர்கள், தெரிந்தவர்கள் என இவர் களால் மட்டுமா இந்தப் பாலியல் வன் முறை நிகழ்கிறது? ஆசானாக இருக்கிற ஆசிரியர்களின் மனதையும் நச்சாக்கி விட்டது. ஒவ்வொரு நாளும் வெளியாகிக் கொண்டிருக்கிற செய்திகளால் பெற் றோர்களும், குழந்தைகளும் கதிகலங் கிப் போய்தான் நிற்கிறார்கள்.
 
பணவெறிப் பிடித்த தொலைக்காட்சி களின் அட்டூழியங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. பச்சிளம் குழந்தைகளுக்கு கவர்ச்சி உடை அணி வித்து, திரைப்பட நடிகர், நடிகைகள் செய்யும் அருவருப்பான அங்க அசைவுகளைக் கற்றுக் கொடுத்து ஆடவிட்டு, பாடவிட்டு மதிப்பெண்கள் அளித்து கலைஞர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் கொடுஞ்செயல்களை யார் தடுத்து நிறுத்துவது? தடுத்து நிறுத்த வேண்டிய நாமே பல் இளித்து கைத்தட்டிக் கொண்டிருக்கும்போது, பாவம் குழந்தைகள் என்ன செய்வார்கள்?
 
உறவுகளின் விழுமியங்களை, அதன் மதிப்பீடுகளை நம் குழந்தைகளுக்கு உணர்த்தத் தவறிவிட்டோம். அவர் களுக்கு எல்லாருமே அங்கிள், ஆண்ட்டி தான். சித்தப்பா, பெரியப்பாவுக்கும், மாமன், மச்சானுக்கும் அவர்களுக்கு வேறுபாடு தெரிவதே இல்லை. முறைப் பெண்ணுக்கும், அக்காள், தங்கை உறவுமுறைக்கும் வேறுபாடு தெரியாமல் எல்லாருமே ‘கசின்கள்தான்!’
 
பணத்தாசை, பணவெறி அனைத்து மதிப்பீடுகளையும் உடைத்தெரிந்துவிட் டது. இதை அனைவரும் உணர்ந்து ஒன்றுசேர்ந்து முடிவெடுத்தால் சமு தாயம் தப்பிப் பிழைக்கும். அதுவரை நம் உயிராகப் போற்றுகிற கலாச்சாரங்கள் காணாமல் போய்க் கொண்டேதான் இருக்கும். என்ன செய்யலாம்?
 
Link to comment
Share on other sites

  • 4 weeks later...

சொல்லத் தோணுது 24: கருகும் பிஞ்சுகள்!

 

sollathonuthu_2334674f.jpg

 

ஊரைவிட்டுத் துரத்துவதற்காக வும், பிரிப்பதற்காகவுமே பள்ளிக்கூடங்கள். அதை சிறப்பாக செய்து தருவதுதான் சிறந்த பள்ளி. உடன் பயின்றவர்களைப் பின்னா ளில் காணாமலே போக நேரிடுகிறது. நடுவில் சேர்ந்துகொண்டவர்களோடு வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. மகிழ்ச்சியைத் திருப்பித் தருவதற்கு, கடந்துபோன பள்ளி நாட்களாலும் இழந்த காதலி, காதலனாலும் மட்டுமே முடியும்.

 
‘பள்ளிக்கூடம்’ திரைப்படத்துக்குப் பின் ஏராளமான பள்ளிகளுக்கு நான் செல்ல நேர்ந்தது. இரண்டு ஆண்டு களுக்கு முன்பு மட்டும், ஒரே ஆண்டில் 60 பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களுடன் உரையாடினேன். நான் கூர்ந்து கவனிக்கக்கூடிய முகங்கள் அவர்களுடையதாகவே இருக்கின்றன.
 
அந்தப் படத்துக்குப் பின் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த எத்த னையோ பள்ளிக்கூடங்கள் முன்னாள் மாணவர்களால் மீண்டும் உயிர்பெற்றன. அத்துடன் இளமைக் கால நட்புகளும் உயிர்பெற்றன. தாய் தந்தையர், உற வினர் போலவே தன்னை உருவாக்கிய பள்ளியையும் நன்றிப் பட்டியலில் சேர்த்துக்கொண்டார்கள்.
 
எனது படைப்பின் பாத்திரங்கள் போலவே, அண்மையில் நான் பங் கேற்ற பாலக்கோடு அரசினர் பள்ளியின் மாணவர்கள் சந்திப்பும் இருந்தது.
 
இளம் பருவத்திலேயே பெற்றோரை இழந்து அந்த அரசுப் பள்ளியில் கல்விப் பயின்று, அஸ்ஸாம் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றும் முன்னாள் மாணவரையும் அந்த நிகழ்வுக்கு அழைத் திருந்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பின் அவரின் காலடி அந்தப் பள்ளி வளாகத்துக்குள் நடந்தபோது அவருக் குள் ஏற்பட்ட நெகிழ்ச்சியும், மாணவர் களுடனான உரையாடலும், அவரின் ஆசிரியர்களைப் பற்றிய பின்னோக்கிய நினைவுகளும் மீண்டும் ‘பள்ளிக்கூடம்’ திரைப்படத்துக்கே என்னை அழைத்துச் சென்றன.
 
தன்னை மீட்டெடுத்து சமூகத்தில் தன்னை அடையாளப்படுத்தக் காரண மாக இருந்த அந்தப் பள்ளிக்கு, அவர் நன்றி செலுத்திய விதம் என் கண்களைக் கலங்கச் செய்தது. ‘பள்ளிக்கூடம்’ படத் தின் உச்சக்கட்டக் காட்சியில் கதை நாய கன் பேசுவது போலவே அது இருந்தது.
 
அதன்பின் நான் அந்த மாணவர்களு டன் நெருக்கமாக உரையாடினேன். ஏற்கெனவே எல்லா தளத்திலும் முன் னேறிய கல்வி பெற்ற குடும்பத்தில் இருந்து ஒருவனை உருவாக்குவது எளிது என்பதையும், யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் பொருளா தாரத்தில் பின்தங்கிய படிப்பறிவற்ற குடும்பத்தில் இருந்து முதல் தலைமுறை கல்வியைப் பெறுகிற, ஏழைக் குழந் தையை வளர்த்தெடுப்பதில் இருக்கின்ற தடைகளையும் எடுத்துக்கூறினேன்.
 
இப்படிப்பட்டவர்கள் அனைவருமே தஞ்சம் அடையும் புகலிடம் அரசுப் பள்ளிதான் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்? குரோட்டன் செடிகள் போல ஒவ் வொரு நாளும் பார்த்து நீர் ஊற்றி பராமரித்து வளர்ப்பது போல வளரும் பிள்ளைகளுக்கு இடையில்தான் இவர் களும் வளர்கிறார்கள்.
 
எப்போது மழை வரும்? எப்போது புயல் வரும்… எனத் தெரியாது. நீரில் லாதக் காட்டில் உயிரைப் பிடித்துக் கொண்டு நாலு இலைகள் துளிர்விட்டால் திடீரென ஆடு, மாடு கடித்துவிடும். மீண் டும் துளிரெடுத்து ஆளாகி மரமாக… காட்டுச் செடிகள் படும் போராட்டங் களைப் போன்றதுதான் அரசுப் பள்ளி களில் பயிலும் பிள்ளைகளின் நிலை!
 
அரசாங்கம் நடத்துகின்ற அரசுப் பள்ளிகளில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளை களோ, மற்ற எந்த அரசுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்களின் பிள்ளைகளோ படிப்பதில்லை. அதை அவர்கள் விரும்புவதும் இல்லை. அந்தப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தருகின்ற ஆசிரியர்கள் கூட தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளி களுக்குத்தான் அனுப்புகிறார்கள்.
 
எதற்கெல்லாமோ சட்டம் இயற்றுபவர் கள் மனது வைத்தால் அடுத்த ஆண்டி லேயே இதற்கு ஒரு சட்டத்தை இயற்ற முடியாதா? அந்தச் சிந்தனைக் கூட இல்லாமல் காரணம் தேடி, இப்படிப்பட்ட பள்ளிகளை வரிசையாக மூடிக்கொண்டு வர எப்படித்தான் மனசு வருகிறதோ தெரியவில்லை.
 
தருமபுரி மாவட்டத்தில் எங்குப் பார்த் தாலும் மலைகள், வேளாண்மை நிலங் கள், பயிர் செய்யத்தான் ஆட்கள் இல்லை. தமிழ்நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றா லும், இந்த மாவட்டத்து மக்கள்தான் கூலியாட்களாக இருக்கிறார்கள்.
 
கர்நாடகத்துக்கும், ஆந்திராவுக்கும் பஞ்சம் பிழைக்க ஓடிய இவர்கள், ஆண்டுக்கு ஒருமுறைதான் ஊர்த் திருவிழாவுக்குத் திரும்புகிறார்கள். மீதியிருக்கிற மக்களையும் விட்டு வைக் காத மதுக் கடைகள் இல்லாத இடங்களே இல்லை. நூறு குடிசைகள் இருந்தாலும் அங்கும் பெயர்ப் பலகையோடு அரசு மதுக்கடை கடமையாற்றிக் கொண்டிருக் கிறது. குடிப்பதற்கு நீண்டதூரம் நடந்து போக வேண்டியது இல்லை. குழந்தைகளைப் படிக்க வைக்கவும், மருத்துவமனைக்கும்தான் நீண்ட தூரம் நடந்து போக வேண்டும்.
 
விபத்துக்களின் இறப்பானாலும், மதுக் குடியால் இறப்பவர்களானாலும், ஊட்டச் சத்து இல்லாமல் நோய் நொடி யில் இறப்பவர்களானாலும் இந்தப் பகுதி மக்களுக்குத்தான் முதல் இடம்.
 
மாணவர்களுடனான எனது உரை யாடல்களுக்கு இடையே அவர்களின் எதிர்காலம் பற்றியும் கேட்டேன். எல்லோரும் ‘கலெக்டராக வேண்டும், ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும்’ எனச் சொன்னார்கள். அதன் பின்தான் டாக்டர் கள், இன்ஜினீயர்கள் மற்ற படிப்பெல் லாம். ‘யார் யாரெல்லாம் தாத்தா, அப்பா செய்த விவசாயத் தொழிலைச் செய்யப் போகிறீர்கள்’ எனக் கேட்டேன். தயங்கித் தயங்கி மூன்று பேர் மட்டும் அதுவும் என் விருப்பத்துக்காக கையை உயர்த்தினார்கள். எல்லோருமே ஊரை விட்டு ஓடிவிட்டால் பின் யார்தான் மக் களுக்கு உணவைத் தருவது எனக் கேட் டேன். யாரிடமிருந்தும் பதில் இல்லை.
 
அதே போல் அன்போடு மேலும், ‘மறைக்காமல் சொல்லுங்கள், யார் யாரின் பெற்றோர் மதுக் குடிப்பவர்கள்’ எனக் கேட்டேன். ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு மெதுவாக பாதி பேருக்கு மேல் கையை உயர்த்தினார்கள். பின், ‘யார், யாருக்கு பெற்றோர்கள் இல்லை, எதனால் இல்லை’ எனவும் கேட்டேன். அந்த நேரத்தில் அந்த முகங்களைப் பார்த்தவர்களுக்குத்தான் உண்மை நிலைப் புரியும். கால் பகுதிக்கு மேல் தலை கவிழ்ந்து கை உயர்த்தியவர்களின் கண்களில் இருந்து முட்டியக் கண் ணீரை மறைக்க பெரும்பாடுபட்ட அந்த பிஞ்சுகளின் முகங்கள் கண்களிலேயே நிற்கிறது. அருகில் இருந்த தலைமை யாசிரியரும், முன்னாள் ஐஏஎஸ் மாணவரும் பதைத்துப் போனார்கள். குடியினால் அப்பா இறந்த பின் பள்ளிக்கு வராமல் படிப்பை நிறுத்தியவர்களின் எண்ணிக்கை இதில் அடங்காது.
 
இலவசப் புத்தகம், புத்தகப் பை, மிதி வண்டி, மடிக்கணினி கொடுப்பவர்கள் ஒருநாள் இந்த மாணவர்களைத் தேடிச் சென்று சந்தியுங்கள். அதன் பிறகாவது அவர்களுக்குத் தர வேண்டியது எது என்பது புரியும். ‘எல்லாவற்றையும் கொடுத்து அப்பாவை உங்களிடம் இருந்து பிடுங்கிக் கொள்கிறார்களே… உங்களுக்கு அப்பா வேண்டுமா? இந்த இலவசங்கள் வேண்டுமா’ எனக் கேட்டேன். ‘அப்பாதான் வேண்டும்’ என உரக்கச் சொன்னார்கள்.
 
எதையும் காதில் போட்டுக்கொள்ளாத வர்களிடத்தில் ‘உயிருடன் இருக்கிற எங்கள் அப்பாக்களின் உயிராவது எங்களுக்கு வேண்டும். உடனே மதுக் கடைகளை மூடுங்கள். அப்போதுதான் நாங்கள் தேர்வு எழுதுவோம்…’ என ஒவ்வொரு மாணவரும் சொன் னால்தான் இந்தக் கொடுமைக்கு ஒரு முடிவு கிடைக்கும் போலிருக்கிறது. அதுவரை யார் யாருக்கு என்ன கொடுக்கலாம் எனப் பட்டியல் தயா ரித்துக் கொடுப்பவர்கள், தயவு செய்து அப்பாவை இழந்தவர்களின் பட்டியலையும் அரசிடம் தயாரித்துக் கொடுங்கள். அதற்கும் ஒரு திட்டத்தை உருவாக்கட்டும்!
 
- சொல்லத் தோணுது…
 
Link to comment
Share on other sites

சொல்லத் தோணுது 25: கலையும் கள்வர்களும்!

 

solla_2342076f.jpg

 

முதல் காதலன், முதல் காதலி போல முதன்முதலாகப் பார்த்த சினிமாவையும் யாரும் மறந்திருக்கவே முடியாது. தமிழர்களின் வாழ்க்கையைத் திருடிக்கொண்டதில் சினிமாவுக்குத்தான் முதலிடம். இந்த சினிமா இப்படியெல்லாம் பேராசைக்காரர்களையும், திருடர்களையும், பைத்தியக்காரர்களையும் உருவாக்கும் எனத் தெரிந்திருந்தால் தாமஸ் ஆல்வா எடிசனோ பின்னர் அந்த தொழில்நுட்பத்தை வளர்த்தெடுத்தவர்களோ சற்று சிந்தித்திருப்பார்கள். ஒவ்வொரு இனத்துக்கான, மண்ணுக்கான அடையாளக் கலைகளைக் கூட அழித்தொழித்ததில் சினிமாவின் பங்கே முதன்மையானது.

 
இரவு வந்தால் தங்கள் கலைகளுட னும், இசையுடனும் கட்டுண்டு கிடந்த மக்கள் பெரிய திரையைப் பார்த்து ஓடிய பின்… அத்தனைக் கலைகளும், அதனை நம்பியிருந்தக் கலைஞர்களும் போன இடம் தெரியவில்லை. அது பற்றி எவரும் கவலை கொள்ளவும் இல்லை.
 
இது பெரும் தொழிலாகவும், வணிகமாகவும் மாறவேண்டும் என்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது இல்லை.
 
கலையாகப் பார்த்தக் கண்களை விடவும் வணிகமாகப் பார்த்த மூளைகள்தான் அதிகம். பிரான்சு நாட்டில் கண்டு பிடிக்கப்பட்ட சினிமா மூன்று ஆண்டு கால இடைவெளிகளிலேயே உலகம் முழுமைக்கும் போய்ச் சேர்ந்தது. மக்களைச் சென்றடைந்த 20 ஆண்டுகளில் சிந்திக்கத் தொடங்கி ஓட ஆரம்பித்து, உலகில் உள்ள எல்லாக் கலைகளையும் உள்வாங்கிக்கொண்டது. மக்கள் மனசுக்குள் குடிகொண்டு அவர்களை சிந்திக்கச் செய்தது. ஆனால், இது நடந்த தெல்லாம் அயல் நாடுகளில் மட்டும்தான். திரைப்பட மாணவனாக அயல் மொழிப் படங்களை எல்லாம் பார்த்தபோது அவர் கள் அத்தனையையும் 1940 ஆண்டு வாக்கிலேயே செய்துமுடித்துவிட்டதை எண்ணி மலைத்துப் போனேன்.
 
ஆனால், தமிழ் சினிமா இன்று வரை மக்களை மகிழ்ச்சிப்படுத்த மட் டுமே பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. அல்லது பெருமளவில் மாற்றங்கள் வந்துவிடக் கூடாது என கவலைபட்டுக் கொண்டிருக்கிறது. பல கோடி மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றபோது சில மூளைகள் மட்டும் மாற்றத்தை செய்யத் துடிக்கின்ற படைப்பாளர்களை வணிகம் என்னும் துப்பாக்கியைக் காட்டி பயமுறுத்துகிறது. எவ்வளவு முனைப்போடு சிந்தித்து திரைப்படத்தை உருவாக்கினாலும் அது திரையரங்குகளுக்குச் சென்றால்தானே மக்கள் பார்ப்பார்கள். எனவே வணிகர்கள் கேட்பதை செய்துகொடுத்துவிடுவோம் என அதற்கு மசாலா தூவி, சுவை கூட்டி, ஒப்பனை செய்த சினிமாவாக மாற்றப்பட்டு இறுதியாக திரையரங்குக்கு வருகிறது.
 
பிள்ளையார் பிடிக்க நினைத்து குரங்காக மாற்றம் கொண்டது போலத்தான் மாற்றங்களை செய்ய நினைக்கிற ஒவ்வொரு படைப்பாளனும் வணிகச் சூழலில் சிக்கிக்கொண்டு விழிபிதுங்கிச் சாகிறான்.
 
தன் எண்ண ஓட்டத்துக்கு முதலீடு செய்ய யாரும் முன்வராததால், வணிகர்களுடன் சமரசம் செய்துகொள்ள முடியாததால், தாயாரிப்பாளராகி அந்தப் படைப்பாளனும் வேறு வழியில்லாமல் அதே புதைகுழியில் விழுகிறான்.
 
எந்த மாற்றங்களைச் செய்தாலும் தங்களின் கல்லாப்பெட்டி நிரம்பி வழிகின்ற மாற்றங்களாக இருக்கவேண்டும் என உறுதியாக இருப்பவர்கள்தான் ரசனை வளர்ச்சிக்கிக்குத் தடை என்பது எவ ருக்குமே புரிவதில்லை. இது புரியாமல் ஆளாளுக்கு மதிப்பெண் இட்டுக்கொண்டும், படத்தை திறனாய்வு செய்துகொண்டும் விழுந்து கிடக்கும் படைப்பாளியை எழுந்து நடக்கவிடாமலும், புதிதாக எந்த படைப்புகளும் உருவாகாமலும் பார்த்துக்கொள்கிறார்கள்.
 
முதலீடு செய்ய யாரும் முன்வராத நிலையில் கந்துவட்டிக்குக் கடன் வாங்கிப் படத்தை முடித்தாலும், வாங்குவதற்கு ஆளில்லை. வேறு வழியின்றி மேலும் விளம்பரத்துக்குப் பணத்தைக் கொட்டி திரையரங்குகளில் இடம் கிடைக்காமல் காத்துக்கிடக்க வேண்டியிருக் கிறது. தணிக்கை வாரியத்தால் தணிக்கை சான்றிதழ் பெற்றத் திரைப்படங்கள் மட்டும் (தமிழில்) 460 படங்களுக்கு மேல் இருக்கும் என்கிறக் கணக்கைவேறு காட்டுகிறார்கள்.
 
ஒரு காட்சி இரண்டு காட்சிகள் கிடைத்தாலே போதும் என வெளியிட்டால் முதல் நாளிலேயே கள்ளப்படங்கள் வீதிக்கும், வீடு தேடியும் வந்து விடுகின்றன. இந்தத் திருடர்கள் போதாதென்று இணையதளத் திருடர்கள் ஒரு மணி நேரத்தில் வெளியிட்டுவிடுகிறார்கள். அத்துடன் உள்ளூர் தனியார் தொலைக்காட்சிகள் பல சிறிதும் பயமில்லாமல் படம் வெளியான இரண்டு நாட்களிலேயே ஒளிபரப்பி யாரும் திரையரங்குக்கு வராமலேயே செய்து விடுகின்றன. ஏற்கெனவே ஒளிபரப்புக்காக விலைக்கு வாங்கிக் கொண்டிருந்த தொலைக்காட்சிகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அவர்களுக்குப் பிடித்ததை மட்டும் வாங்குவதால் 95 விழுக்காடுப் படங் களுக்கு அதன் மூலம் கிடைத்த வருமானமும் நின்று போய்விட்டது. இதுபோக நேரம் கிடைக்காதவர்கள் சொந்த வாக னங்களிலும், பேருந்துப் பயணிகள் படுத் துக்கொண்டும் பார்த்து முடித்துவிடுவ தால் ஒவ்வொரு வார வெள்ளிக் கிழமைகளிலும் ஐந்து தயாரிப்பாளர்கள் பிச்சைக்காரர்களாகி தற்கொலை முடிவுக்குச் சென்று விடுகிறார்கள். இந்த வாரம் வெளியான தமிழ்ப் படங்கள் மட்டும் 11. பலகோடி முதலீடு செய்து பெரிய இயக்குநர்கள் பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்த வர்களின் நிலையும் இதுதான்.
 
இந்த எல்லாச் சிக்கல்களும் தெரிந்து தான் சிக்கல்கள் தீர்க்கப்படாமலேயே மேலும் மேலும் ஒவ்வொரு நாளும் ஒரு புதுப்படம் தமிழில் உருவாகிக் கொண்டி ருக்கிறது. தீர்த்துவைக்க ஒன்றிணையாத இத்துறையினரால், உலகமெங்கும் அறி வியல் தொழில்நுட்பத்தை வருமானமாக வளர்த்துக்கொண்ட திரைப்படக் கலை தமிழ்நாட்டில் மட்டும் செயற்கை மூச்சுடன் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
 
எல்லோராலும் கைவிடப்பட்ட தமிழ் சினிமாவுக்கு இயற்கை மூச்சுக் கொடுத்து, மீண்டும் நடக்கவிடும் முயற்சியாக சேரன் எனும் தனிமனி தன் போராடி ஒரு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். பணத்தை செல வழித்து படம் எடுக்கும் தயாரிப்பாள னுக்கு அந்தப் பணம் திரும்ப வருமென்று எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில், அவர் எல்லோரது கவனத்தையும் திருப்பியிருக்கிறார். எரிகிற வீட்டில் புடுங்குகிற வரைக்கும் லாபம் என தயாரிப்பாளனைப் பற்றிக் கவலைப்படாமல், அவனைக் கொன்று கொண்டி ருந்தவர்கள் திக்குமுக்காடிப் போய் இருக்கிறார்கள்.
 
இன்று மக்கள் ஏன் திரையரங்குகளுக்குத் தேடிச் செல்வது இல்லை? திரைப்படம் மக்களுக்கானது. அது மக்களுக்கான கலை. அதனை மக்களிடத்தில் செல்லாமல் பார்த்துக் கொண்டதன் விளைவுதான் பெரிய திரையில் இருந்த சினிமா இன்று சேரனால் வீடு தேடிப் போயிருக்கிறது.
 
இனி, ஒரு படைப்பாளி என்ன நினைக்கிறானோ அது சிதையாமல் எந்தத் தரகனிடமோ, வணிக முதலைகளிடமோ மாட்டாமல் மக்களிடத்தில் சென்று சேரும். இன்னும் புதிய படைப்புகளும், புதிய படைப்பாளர்களும் உலகத் தரத்துக்கு உருவாவார்கள். மக்களை வதைத்தெடுக்காத தூய்மையான திரையரங்குகள் மட்டுமே உயிர்பெறும் காலம் தொடங்கிவிட்டது.
 
முதலீடு செய்யும் முதலாளியான தயாரிப்பாளனுக்கு மலிவு விலையில் அம்மா உணவு. அவர்களின் பணத்தை பிடுங்கிக் கொண்டவர்களுக்கு நட்சத்திர உணவு விடுதியில் எல்லாமும். கடந்த காலங்கள்போல் மீண்டும் சினிமா, தயாரிப்பாளன் எனும் முதலாளிகளின் கைக்கு மாற வேண்டும். அது மாறுவதற்கான அத் தனைத் திட்டங்களையும் செயல்படுத்தி, போட்ட முதலீடாவது கிடைப்பதற்கு உத்தரவாதத்தை ஏற்படுத்த வேண்டும். தேங்கி நிற்கும் படங்கள் வெளியாக வேண்டும். அதுவரை புதியப் படங்கள் தயாரிப்பதையும் வெளியிடுவதையும் நிறுத்தி வைக்கலாம். அது மூன்று மாதமோ, ஆறு மாதமோ ஓர் ஆண்டோ ஆனாலும் ஆகட்டும். அப்போதுதான் செயற்கை மூச்சில் உயிர்வாழும் தமிழ் சினிமா யார் உதவியும் இல்லாமல் எழுந்து நடக்கும்.
 
- சொல்லத் தோணுது…
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூலிக்கு மார் அடிக்கும்சிங்களவன் என்று சொல்லப்படாது...இது எங்களது சகோதரயாக்களின் தூர நோக்கு அரசியல் பார்வை(ராஜதந்திரம்.சாணக்கியம்) என்ற கோணத்தில் நீங்கள் பார்க்க வேணும் இன்று சிறிலங்கா அமேரிக்கா .இந்தியா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தினுள் வர போகின்றது இதை தடுத்து நிறுத்த ரஸ்யா,சீனா போன்ற  நாடுகளில் சகோதரயாக்கள் இராணுவ பயிற்சி எடுக்க வேணும்....இதில் மாற்று கருத்து ஒன்றுபட்ட சிறிலங்கா அம்பிகளுக்கு இருக்காது...அமெரிக்கா வந்து இறங்க ரஸ்யாவில் பயிற்சி பெற்ற தளபதிகள் எங்கன்ட லங்கா மாதாவை காப்பாற்றுவார்கள்
    • சில வேளைகளில் அமெரிக்கா ஈரானுடனான தன் வெற்றிக்காக ரஷ்யாவுடன்  உக்ரேனை பேரம் பேசப்படலாம். ரஷ்யாவும் அதற்கு சில வேளைகளில் சம்மதிக்கலாம். அமெரிக்காவிற்கு உக்ரேனை விட இஸ்ரேலும் மத்திய கிழக்கு அமைதியும் மிக முக்கியம் . பலஸ்தீன விடுதலை இரண்டாம் பட்சம்.😎 இப்படியான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பழைய கதைகள் உண்டுதானே. 😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்? Apr 16, 2024 16:24PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் முரசொலி களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பி.சிவநேசன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எம்.முருகானந்தம்போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஹூமாயூன் கபீர் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் முரசொலி 50% வாக்குகளைப் பெற்று தஞ்சாவூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எம்.முருகானந்தம் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹூமாயூன் கபீர் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தஞ்சாவூர் தொகுதியில் இந்த முறை முரசொலி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-murasoli-won-thanjavur-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்? Apr 16, 2024 17:09PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்எம்.கே.விஷ்ணுபிரசாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வே.மணிவாசகன் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கடலூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திட்டக்குடி,  விருத்தாச்சலம்,  பண்ருட்டி,  நெய்வேலி,  குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் 47% வாக்குகளைப் பெற்று கடலூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 21% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே.மணிவாசகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கடலூர் தொகுதியில் இந்த முறை எம்.கே.விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடிபறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cuddalore-constituency-congress-vishnuprasad-wins-dmdk-second-place/ மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்? Apr 16, 2024 18:21PM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? சிவகங்கை தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.எழிலரசி போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சிவகங்கை,  திருமயம்,  ஆலங்குடி, காரைக்குடி,  திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 50% வாக்குகளைப் பெற்று சிவகங்கை தொகுதியில் மீண்டும்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.எழிலரசி 8% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சிவகங்கை தொகுதியில் இந்த முறை கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/congress-candidate-karthi-chidambaram-won-sivagangai-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/   மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு? Apr 16, 2024 19:02PM IST  சூடுபிடிக்கிறது அரசியல் களம்…  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? திருப்பூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று ஆய்வு நடத்தினோம்.  தமிழ்நாட்டில் இருந்து உலகமே அறியும் வகையில் தொழில் நகராக உருவெடுத்துள்ளது டாலர் சிட்டியானதிருப்பூர். இங்கே தொழிலோடு விவசாயமும் சம அளவில் நடைபெறுகிறது. திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிட்டிங் எம்பி சுப்பராயனே  மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் அருணாசலம்  போட்டியிடுகிறார். பாஜக சார்பில்ஏ.பி.முருகானந்தம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி நிற்கிறார். திமுக கூட்டணி, அதிமுக, பாஜக இவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவும் திருப்பூர் களத்தின்இறுதி  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருப்பூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பூர் வடக்கு, திருப்பூர்தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 43% வாக்குகளைப் பெற்று மீண்டும்முந்துகிறார்.   அதிமுக வேட்பாளர் அருணாசலம் 36%  வாக்குகளைப் பிடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் 14% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 6% வாக்குகளை பெறுகிறார். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் தொகுதியில் இந்த முறையும் கம்யூனிஸ்ட் கொடியே  வேகமாக பறக்கிறது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-tiruppur-constituency-cpi-subburayan-wins-admk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை Apr 16, 2024 19:46PM IST 2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.  தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிற தமிழிசை செளந்தர்ராஜன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்செல்வி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,  தியாகராய நகர்,  வேளச்சேரி,  மயிலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 41% வாக்குகளைப் பெற்று மீண்டும் தென்சென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தர்ராஜன் 25% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, தென்சென்னை தொகுதியில் இந்த முறையும் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-south-chennai-dmk-thamilachi-thangapandiyan-wins-admk-jayavardhan-second-place/
    • க‌ருணாவுட‌ன் இருந்த‌ ப‌டிப்பு அறிவு இல்லாத‌ பிள்ளையான் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தில் இருக்கும் போது  கூலிக்கு மார் அடிக்கும் சிங்க‌ள‌வ‌ன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு  வ‌ட்டின‌ அமுக்கிற‌து  சின்ன‌ வேலை புத்த‌ன் மாமா🤣😁😂.......................................
    • நேற்று நம்ம ஈழத்து எம்.ஜி.ஆர் ஒர் யூ டியுப்பில் கதைக்கும் பொழுது, நீங்கள் மேற்கூறிய கருத்துப்பட கூறியிருந்தார்....தமிழ் மக்கள் பொங்கி ஏழ வேண்டும் ஆனால் அதிகமாக பொங்கி எழக்கூடாதாம் ..அதன் விளைவு பலாலிக்குள் நாங்கள் இப்ப போக முடியாமைக்கு காரணமாம்... நல்ல சகுணமாம் வெடிச்சத்தம் கேட்கின்றமையால் என கண் சிமிட்டுதிறார்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.