Jump to content

சென்னை கால்பந்து அணியில் கேப்டன் தோனி


Recommended Posts

சென்னை கால்பந்து அணியில் கேப்டன் தோனி
 

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் சென்னையின் எப்சி அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஆகிறார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி.

ஹிந்தி நடிகர் அபிதாப் பச்சனும் இந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஆவார். ஐபிஎல் பாணியிலான இந்த கால்பந்து போட்டி அக்டோபர் 12-ம் தேதி தொடங்க இருக்கிறது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, சவுரவ் கங்குலி ஆகியோரும் இதில் வெவ்வேறு அணிகளின் உரிமையாளராக உள்ளனர். இந்த வரிசையில் இப்போது தோனியும் இணைந்துள்ளார்.

தனது விளையாட்டு வாழ்க்கையின் முதல் கட்டத்தை கோல் கீப்பராக தொடங்கிய தோனி, பிறகு விக்கெட் கீப்பர் ஆனார். ஏற்கெனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/article6476175.ece

Link to comment
Share on other sites

  • Replies 86
  • Created
  • Last Reply

கால்பந்து போட்டிக்கு ஒத்துழைப்பு: தோனி வலியுறுத்தல்
அக்டோபர் 06, 2014.

சென்னை: இந்தியன் கால்பந்து லீக் தொடரில் பங்கேற்கும் சென்னை அணியின் உரிமையாளர்களில் ஒருவரானார் தோனி.     

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக் கேப்டன் தோனி, 33. ‘பைக்’ பிரியரான இவர், ‘மகி இந்தியா’ என்ற ‘பைக் ரேஸ்’ அணிக்கு உரிமையாளராக உள்ளார். ஐ.பி.எல்., தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்.      

இதனிடையே, ஐ.பி.எல்., பாணியில் இந்தியன் கால்பந்து லீக் (ஐ.எஸ்.எல்.,) தொடர், வரும் 12ம் தேதி துவங்குகிறது. இதில் மும்பை, கோல்கட்டா என, மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.      

 

இத்தொடரின் மீது, இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியில் சச்சின், சக உரிமையாளர் ஆனார். கோல்கட்டா அணியில் முன்னாள் கேப்டன் கங்குலி, கோவா அணியில் விராத் கோஹ்லி பங்குதாரராக இணைந்தனர். இவர்கள் வரிசையில் தோனியும் சேர்ந்துள்ளார். பாலிவுட் நடிகர் அபிஷேக்கிற்கு சொந்தமான சென்னை அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.      

ஏற்கனவே, சென்னை கிரிக்கெட் அணியின் கேப்டனாக அசத்தும் தோனி, கால்பந்து களத்திலும் குதித்திருப்பது, சென்னை ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.      

 

சென்னையின் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான தோனியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னையில் தனியார் ஒட்டலில் நடந்தது.                  

அப்போது, தோனி கூறியதாவது: நான் பள்ளி பருவத்தில், கால்பந்து விளையாடி வந்தேன். பின், கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். ஆனாலும், கால்பந்தின் மீது, ஆர்வம் உண்டு. இப்போது, நேரம் கிடைக்கும் போதெல்லாம், கால்பந்து பற்றி பேசுவது, விளையாடுவது என, இருக்கிறேன். ஐ.எஸ்.எல்., மூலம் இந்திய இளைஞர்கள் கால்பந்து பற்றி நிறைய கற்றுக்கொள்ளலாம்.

 

சென்னை மக்கள் கிரிக்கெட் போட்டிக்கு, அதிக ஒத்துழைப்பு தருவர். இதே ஆர்வத்துடன் கால்பந்து போட்டியை காண பொதுமக்கள் வரவேண்டும். கால்பந்து அரங்கம் நிரம்பி வழியவேண்டும்.                   

கடந்த ஏழு ஆண்டுகளாக, சென்னை மக்களுடன் பழகியதால், அவர்களில் கலாசாரம், பழக்க வழக்கம் உள்ளிட்டவை எனக்கு பிடித்துள்ளது.  அவர்களில் ஒருவனாக நான் உள்ளேன். மும்பை, கோல்கட்டா அணிகளில் உரிமையாளர் என்றால், ஏற்றுக்கொள்வது கடினம். ஆனால், சென்னை மக்கள், அவர்களில் ஒருவனாகவே என்னை ஏற்று கொண்டு உள்ளனர். அதனால்தான், நான் சென்னை அணியின் இணை உரிமையாளர் ஆனேன்.

 

http://sports.dinamalar.com/2014/10/1412615390/DhoniChennaiyinFCCoOwnerFootballTeam.html

Link to comment
Share on other sites

தென்னாசிய நாடுகளில் கால்பந்து போட்டிகள் பிரபல்யம் ஆவது மிகவும் மகிழ்வை தருகிறது. கிரிக்கெட் என்ற கிணற்று தவளையை விட்டு இலங்கை இந்திய விளையாட்டு ரசிகர்கள் வெளியே வர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றிகள் நவீனன்...! :)

Link to comment
Share on other sites

இந்தியன் சூப்பர் லீக் துவக்கம்: கால்பந்து ரசிகர்களுக்கு கொண்டாட்டம்
அக்டோபர் 11, 2014.

 

கோல்கட்டா: கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்த்த இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) தொடர் இன்று கோல்கட்டாவில் துவங்குகிறது.            

இந்தியன் சூப்பர் லீக் தொடரில் சென்னை, மும்பை, கோல்கட்டா, புனே, டில்லி, கோவா, கேரளா மற்றும் வடகிழக்கு யுனைடெட் என, மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.      இதற்கான துவக்கவிழா பாலிவுட் ஸ்டைலில் இன்று பிரமாண்டமாக நடக்கிறது.                 இதில் நடிகை பிரியங்கா சோப்ரா, வருண் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோருடன் 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் அசத்தவுள்ளனர். விழா மாலை 6 மணிக்குத் துவங்குகிறது. இதற்கு பின் நடக்கும் முதல் போட்டியில் மும்பை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.                  

 

முதல் போட்டி: இதில், ரன்பிர் கபூரின் மும்பை அணி தான் இப்போதைய நிலையில் வலுவானதாக உள்ளது. பிரான்சின் நிகோலஸ் அனெல்கா, சுவீடனின் பிரட்ரிக்குடன், இந்திய அணியின் ‘நம்பர்–1’ கோல் கீப்பர் சுப்ரதா பால், அனுபவ சையத் ரகிம் நபி உள்ளனர். மும்பை அணியின் அனெல்கா, இங்கிலீஷ் பிரிமியர் லீக் தொடரில் மோசமான சைகை செய்ததால், தடையில் உள்ளார். இன்று இவர் களமிறங்காதது ஏமாற்றம் தான்.                  

இது கோல்கட்டா அணிக்கு சாதகமாக அமையலாம். தவிர, உள்ளூர் கிளப் அணிகள் ஈஸ்ட் பெங்கால், மோகன் பகான், முகமதன் ஸ்போர்ட்டிங் ரசிகர்கள் ஆதரவும் கோல்கட்டாவுக்கு கிடைக்கலாம்.          

       

‘ஒயிட் பீலே’: இந்த இரு அணிகளுக்கு அடுத்து கோவா சிறப்பாக உள்ளது. ஒயிட் பீலே’ என்றழைக்கப்படும், மூன்று முறை உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த பிரேசிலின் ஜிகோ, இந்த அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். தவிர, பிரான்சின் ராபர்ட் பைரஸ், மிரான்டா, மார்டின்ஸ் இருப்பது பலம்.                 

சென்னையில் யார்: தோனி சக உரிமையாளராக உள்ள சென்னை அணி, ‘சென்னையின் எப்.சி.,’ என்ற பெயரில் பங்கேற்கிறது. இதில் இத்தாலியின் மார்கோ மாட்டராசி, 41, மானேஜர் மற்றும் வீரர் என, இரண்டு வேலைகளை செய்யவுள்ளார். இவரது உலக கோப்பை அனுபவம் சென்னை அணிக்கு கைகொடுக்கும் என, நம்பலாம். இவர்களுடன் பிரான்சின் மிகைல் சில்வெஸ்ட்ரே, இந்தியாவின் அபிஜித் மண்டல், ஷில்டன் பால், பல்வந்த் சிங் உள்ளனர்.   

              

கேரளா கலக்குமா: சச்சினின் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு, இங்கிலாந்தின் 6 அடி, 4 அங்குல உயரமுள்ள கோல் கீப்பர் டேவிட் ஜேம்ஸ், 44, முக்கிய வீரராக உள்ளார். கிளப் அளவில் 536 போட்டிகளில் பங்கேற்ற இவரது அனுபவம் தான், இத்தொடரில் பலவீனமான அணியாக உள்ள கேரளாவை கரை சேர்க்கும் என்று நம்பப்படுகிறது.இத்துடன், டில்லி, புனே, வடகிழக்கு யுனைடெட் அணிகளும் கோப்பை வெல்லும் போட்டியில் குதித்துள்ளன.

பரினீத்தி சோப்ரா ஆதரவு     

இத்தாலி வீரர் அலெக்சாண்ட்ரோ டெல் பியரோ, 39, இடம் பெற்றுள்ள டில்லி அணி, ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது. ஏனெனில், இத்தொடரில் இடம் பெற்றுள்ள வீரர்களில் இவருக்குத் தான் அதிக சம்பளம் தரப்பட்டது. முதன் முறையாக கால்பந்து அணி வாங்கியுள்ள டில்லிக்கு, பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா, நடிகர் ஆயுஸ்மான் ஆதரவு தெரிவித்துள்ளனர். டில்லி களமிறங்கும் போட்டிகளில், இவர்கள் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றனர்.      

 

வீரர்கள் விகிதம்     

ஐ.பி.எல்., அணிகளில் 7 இந்தியா, 4 வெளிநாட்டு வீரர்கள் களமிறங்குவர். ஆனால், கால்பந்து அணிகளில் 6 உள்ளூர், 5 வெளிநாட்டு வீரர்கள் என, மொத்தம் 11 பேர் களமிறங்கலாம்.

 

கோல்கட்டா அதிகம்     

கால்பந்து லீக் தொடரில் ஒவ்வொரு அணியின் அடிப்படை ஏலத் தொகை ரூ. 12 கோடி. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி வாங்கிய கோல்கட்டா அணி தான், அதிகபட்சமாக (ரூ. 18 கோடி) ஏலம் போனது.      

 

போட்டிகள் எப்படி     

மொத்தம் உள்ள 8 அணிகள் ஒவ்வொரு அணியுடன் 2 முறை (உள்ளூர், வெளியூர்) விளையாடும். முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடம் பிடிக்கும் அணிகள், அரையிறுதிக்கு முன்னேறும்.     

அரையிறுதி ‘இரண்டு லீக் போட்டி’ அடிப்படையில் நடக்கும். இதில் வெல்லும் அணிகள், ஒரு போட்டி மட்டும் கொண்ட பைனலில் (டிச. 20) விளையாடும்.     

எடுபடுவார்களா ‘சீனியர்கள்’     

கால்பந்து லீக் தொடரில் இடம் பெற்றுள்ள டெல் பியரோ, 39, (டில்லி), மார்கோ மாட்டராசி, 41, (சென்னை), டேவிட் ஜேம்ஸ், 44, (கேரளா), உள்ளிட்ட பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் ‘சீனியர்களாக’ உள்ளது சற்று ஏமாற்றம் தான். இது ரசிகர்களிடம் எடுபடுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

 

http://sports.dinamalar.com/2014/10/1413043027/IndianSuperLeagueFootballOpeningCeremonyKolkata.html

Link to comment
Share on other sites

படை எடுக்கும் கிரிக்கெட், பாலிவுட் பட்டாளம்: கால்பந்து அரங்கில் மாற்றம் ஏற்படுமா
அக்டோபர் 12, 2014.

இந்தியன் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்கும் அணிகளின் உரிமையாளர்களாக கிரிக்கெட், பாலிவுட் நட்சத்திரங்கள் உள்ளனர். இதனால் கால்பந்து அரங்கில் விரைவான வளர்ச்சி ஏற்படும் என நம்பப்படுகிறது.

  கடந்த 2008ல் இந்தியாவில் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி–20’ தொடர் துவங்கப்பட்டது. இது உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தியன் பாட்மின்டன் லீக், கபடி லீக் வெற்றிகரமாக நடந்தது. இந்த வரிசையில் ‘இந்தியன் சூப்பர் லீக்’ (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர், இன்று கோல்கட்டாவில் பிரமாண்டமாக துவங்குகிறது. சென்னை, மும்பை, கோல்கட்டா, கேரளா என, மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த அணிகளின் உரிமையாளர்களாக பெரும்பாலும் பாலிவுட் நடிகர்கள் அபிஷேக் பச்சன் (சென்னை), ரன்பிர் கபூர் (மும்பை), ஹிருத்திக் ரோஷன் (புனே), ஜான் ஆபிரஹாம் (கவுகாத்தி) உள்ளனர்.

 

கிரிக்கெட் வீரர்கள்:

இவர்களுடன் இந்திய கிரிக்கெட் வீரர்கள், ஒவ்வொரு அணியிலும் சக உரிமையாளர்களாக  இணைந்து வருகின்றனர். முதலில் ‘கேரளா பிளாஸ்டர்ஸ்’ அணியில் ஓய்வு பெற்ற மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் சக உரிமையாளர் ஆனார்.

கோல்கட்டா அணியை வாங்கினார் முன்னாள் கேப்டன் கங்குலி. கோவா அணியில் விராத் கோஹ்லியும், சென்னை அணியில் கேப்டன் தோனியும் இணைந்தனர்.

 

நேரம் கிடைக்குமா:

இதில் தோனி, கோஹ்லி இருவரும் இன்னும் இந்திய அணிக்காக விளையாடி வருகின்றனர். இதனால், ‘டுவென்டி–20’ உலக கோப்பை, சாம்பியன்ஸ் லீக், சாம்பியன்ஸ் டிராபி, உலக கோப்பை, ஐ.பி.எல்., மற்றும் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என, தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், இவர்களால் கால்பந்து போட்டிகளில் கவனம் செலுத்த முடியுமா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

 

காரணம் என்ன:

இரண்டு மாதத்துக்கு தொடர் நடப்பது, 90 நிமிடங்களில் போட்டி முடிந்து விடுவது, அதிக செலவில்லாதது போன்ற காரணங்களால், இவர்கள் கவனம் கால்பந்து மீது திரும்பியிருக்கும் என்று தெரிகிறது. தவிர, கடந்த சில ஆண்டுகளாக ஐ.பி.எல்., தொடர் மீது ‘சூதாட்ட’ புகார்  எழுந்த  நிலையில், கால்பந்தில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமாக முடிவாக இருக்கலாம் என நினைத்திருக்கலாம்.

 

புதிய அனுபவம்:

சக உரிமையாளர் என்ற பெயரில் குறைந்த முதலீடாக இருந்தாலும், வரும் ஆண்டுகளில் இது அதிகரிக்கும் என்பது உறுதி. கிரிக்கெட் வீரர்களான இவர்களுக்கு இந்தியாவில் எந்த விளையாட்டு எப்படி உள்ளது என்பது நன்றாகத் தெரியும்.

இம்முயற்சியால், இந்தியாவில் நீண்ட காலமாக துாங்கிக் கொண்டிருக்கும் கால்பந்து போட்டிகளை வெற்றிகரமாக தட்டி எழுப்பலாம். கால்பந்து லீக் காரணமாக, மைதானங்கள் புதுப்பிப்பது, புதிய புல்வெளி மைதானத்தில், இந்திய இளம் வீரர்களுக்கு, சர்வதேச வீரர்களுடன் விளையாடிய, புதிய அனுபவம் கிடைப்பது உறுதி.

மொத்தத்தில் பாலிவுட் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களிடம் அதிகமான பணம் உள்ளது. இவர்கள் இத்தொடரில் பணத்தை முதலீடு செய்வது, குறைந்தளவு ‘ரிஸ்க்’ தான். இதனால், கால்பந்து வளர்ச்சி அடைய வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

 

எதிர்கால திட்டம்

விராத் கோஹ்லி கூறுகையில்,‘‘எப்போதும் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கப் போவதில்லை. இதனால், எதிர்காலத்தை திட்டமிட்டு இதுபோன்ற சில முடிவுகளை எடுக்க வேண்டியதாயிற்று,’’ என்றார்.

 

டிக்கெட் எவ்வளவு

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளைக் காண, ரூ. 100 முதல் ரூ. 6000 வரையிலான டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. டில்லி மைதானத்தில் ஒரு டிக்கெட்டின் விலை அதிகபட்சமாக ரூ. 18 ஆயிரம் வரை உள்ளதாம். மொத்தத்தில், சராசரி குறைந்தபட்ச டிக்கெட் ரூ. 80, நடுத்தர ரக டிக்கெட்டுகள் ரூ. 300 ஆக உள்ளது. இது மிகவும் மலிவு தான் எனினும், முழுவதுமாக விற்குமா என்று தெரியவில்லை.

 

http://sports.dinamalar.com/2014/10/1413101791/dhonichennaiteam.html

Link to comment
Share on other sites

உண்மையில் மிகநல்ல சிந்தனை மாற்றம்.

Link to comment
Share on other sites

கோல்கட்டா அணி அசத்தல்: மும்பை அணி ஏமாற்றம்
அக்டோபர் 12, 2014.

கோல்கட்டா: இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரை கோல்கட்டா அணி வெற்றியுடன் துவக்கியது. நேற்று நடந்த லீக் போட்டியில், 3–0 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை தோற்கடித்தது.     

முதலாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. இதில் மும்பை, கோவா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. கோல்கட்டாவில் உள்ள சால்ட்லேக் மைதானத்தில் நேற்று நடந்த தொடரின் முதல் லீக் போட்டியில், கோல்கட்டா, மும்பை அணிகள் மோதின.           

ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் மும்பை அணி கேப்டன் சையத் ரகிம் நபி, இத்தொடரின் முதல் ‘மஞ்சள் அட்டை’ பெற்றார். பின், 18வது நிமிடத்தில் கிடைத்த ‘கார்னர்’ வாய்ப்பை மும்பை அணி வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. துவக்கத்தில் இருந்து துடிப்பாக விளையாடிய கோல்கட்டா அணிக்கு 27வது நிமிடத்தில் பிக்ரு டெபெரா லெமேசா, இத்தொடரின் முதல் கோல் அடித்தார். இதற்கு மும்பை அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் கோல்கட்டா அணி 1–0 என முன்னிலை வகித்தது.      

 

இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்து கோல்கட்டா அணிக்கு 69வது நிமிடத்தில் போர்ஜா பெர்ணான்டஸ் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து போராடிய மும்பை அணியின் கோல் அடிக்கும் முயற்சிகளை, கோல்கட்டா அணி கோல்கீப்பர் சுபாசிஷ் ராய் சவுத்தரி அருமையாக தடுத்தார். இதனால் மும்பை அணி வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் கோல்கட்டா அணி கேப்டன் லுாயிஸ் கார்சியாவுக்கு பதிலாக களமிறங்கிய அர்னால், ‘ஸ்டாப்பேஜ்’ நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அசத்தினார்.     

ஆட்டநேர முடிவில் கோல்கட்டா அணி 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

 

 

http://sports.dinamalar.com/2014/10/1413133674/IndianSuperLeagueFootballKolkataMumbai.html

Link to comment
Share on other sites

கால்பந்து லீக்: டில்லி–புனே ‘டிரா’
அக்டோபர் 14, 2014.

 

புதுடில்லி: டில்லி, புனே அணிகள் மோதிய சூப்பர் லீக் கால்பந்து போட்டி, கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில், நேற்று நடந்த லீக் போட்டியில் டில்லி டைனமோஸ், புனே சிட்டி அணிகள் மோதின. போட்டியின் துவக்கத்தில் இருந்து கோல் அடிப்பதை விட, டில்லி வீரர்களை தடுப்பதில் தான் புனே அணியினர் அதிக கவனம் செலுத்தினர்.

போட்டியின் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (90+1 வது நிமிடம்), டில்லி வீரர் சாண்டோஸ் அடித்த பந்து, கோல் போஸ்ட்டின் இடது புறம் பட்டு திரும்பியது.

முடிவில், போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது,

 

http://sports.dinamalar.com/2014/10/1413305302/DelhiDynamosFCPuneDrawSoccer.html

Link to comment
Share on other sites

தோனி–கோஹ்லி அணிகள் மோதல் *கால்பந்து லீக் தொடரில் ‘விறுவிறு’
அக்டோபர் 14, 2014.

 

படோர்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் இன்று தோனியின் சென்னை அணி, விராத் கோஹ்லி உரிமையாளராக உள்ள கோவாவை சந்திக்கிறது. இரு கிரிக்கெட் நட்சத்திரங்களின் அணிகள் மோதுவதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர், இந்தியாவில் நடக்கிறது. இதில் கோவாவில் உள்ள படோர்டாவில் இன்று நடக்கும் நான்காவது லீக் போட்டியில் சென்னை, கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 

வருகிறார் மாட்டராசி:

சென்னை அணிக்கு தற்காப்பு தான் பலம். ஐ.எஸ்.எல்., தொடரில் விளையாடும் நட்சத்திர வீரர்களில் மிக குறைந்த வயதுடைய இலனோ, 33, அசத்தலாம். இவருடன் இத்தாலியின் மாட்டராசி வீரராக மட்டுமன்றி, முதன் முறையாக பயிற்சியாளராகவும் செயல்பட உள்ளார்.

தற்காப்பு வீரர் மைக்கேல் சில்வெஸ்ட்ரே, ஐரோப்பிய அனுபவம் பெற்ற பெர்னார்டு மென்டி (பிரான்ஸ்), கடைசி வரை சோர்வடையாமல் இருப்பது சென்னைக்கு சாதகம்.

இந்திய அணியின் துடிப்பான இளம் வீரர் ஜீஜே, 23. ஐ–லீக் தொடரில் மோகன் பகான் அணிக்காக மிரட்டினார். இவர், இன்று சென்னைக்கு கைகொடுக்கலாம்.

 

கோவா தாக்குதல்:

கோவா அணியை பொறுத்தவரை தாக்குதல் ஆட்டத்தில் வலுவானது. நட்சத்திர வீரர் பிரான்சிஜ் ராபர்ட் பைரசிற்கு, 40 வயதாகி விட்டாலும், பலரையும் ஏமாற்றி பந்தை கொண்டு செல்வதில் வல்லவர். இங்கிலீஷ் பிரிமியர் லீக் தொடரில் இவர் இடம் பெற்றிருந்த ஆர்சனல் அணி தொடர்ந்து 49 போட்டிகளில் (2003–04) தோல்வியடையாமல் வலம் வந்தது.

தவிர, கிளப்போர்டு மிராண்டா, அர்னாலின் உள்ளிட்டோர் அசத்தலாம். ‘ஒயிட் பீலே’ என்றழைக்கப்படும் பிரேசிலின் ஜிகோ பயிற்சியாளராக இருப்பது கூடுதல் பலம்.

 

சையது காயம்

ஐ.எஸ்.எல்., தொடரின் முதல் போட்டியில் கோல்கட்டாவிடம் வீழ்ந்தது மும்பை. இதில் மும்பை அணி கேப்டன் சையது ரகிம் நபியின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால், 3 வாரங்கள் சையது நபி போட்டிகளில் பங்கேற்க முடியாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://sports.dinamalar.com/2014/10/1413308468/chennaiyinfcgoacitysoccerleague.html

 

Link to comment
Share on other sites

ஐஎஸ்எல் கால்பந்து வெற்றியோடு தொடங்கியது சென்னை
 

 

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோவா எப்.சி. அணியைத் தோற்கடித்து வெற்றியோடு தொடங்கியுள்ளது.

கோவாவின் ஃபட்ரோடாவில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடின. 6-வது நிமிடத்தில் கோவா அணி கோல் வாய்ப்பை கோட்டைவிட, 8-வது நிமிடத்தில் சென்னைக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பு இலனோவால் வீணானது. 17-வது நிமிடத்தில் சென்னை வீரர் அபிஷேக் தாஸ் மஞ்சள் அட்டையால் எச்சரிக்கப்பட்டார்.

 

இதன்பிறகு 32-வது நிமிடத்தில் சென்னை வீரர் போஜன் ஜோர்டிச்சிடம் பந்து செல்ல, அவர் தனசந்திரா சிங்கிற்கு பந்தை கிராஸ் செய்தார். அவர் தலையால் பந்தை நிறுத்தி, இலனோவிடம் கொடுக்க, அதை அவர் பல்வந்த் சிங்கிடம் அனுப்பினார்.

அப்போது அதை சரியாக வாங்கிய பல்வந்த் சிங், கோல் கம்பத்தை நோக்கி அடித்தார். அதை கோவா கோல் கீப்பர் தடுக்க முயன்றார். ஆனாலும் பலன் கிடைக்காததால் கோல் வலைக்குள் புகுந்தது பந்து. இதனால் சென்னை 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

 

36-வது நிமிடத்தில் சென்னை வீரர் இலனோ, கோவா வீரர் பயர்ஸை கீழே தள்ள அவரை மஞ்சள் அட்டையால் எச்சரித்தார் நடுவர். அதேநேரத்தில் கோவாவுக்கு ப்ரீ கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் கோவா அந்த வாய்ப்பை வீணடிக்க, 42-வது நிமிடத்தில் கோவா வீரர் பிரபீர் தாஸ், சென்னை வீரர் பல்வந்த் சிங்கை கீழே தள்ள, சென்னை அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. முதல் வாய்ப்பை கோட்டைவிட்ட இலனோ, இந்த முறை 23 யார்ட் தூரத்தில் இருந்து துல்லியமாக கோலடிக்க முதல் பாதி ஆட்டநேர முடிவில் சென்னை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் கோலடிக்க தீவிரம் காட்டிய கோவா அணிக்கு 65-வது நிமிடத்தில் கோல் கிடைத்தது. இந்த கோல், யூனஸ் பென்கெலான் கொடுத்த கிராஸில் கிரிகோரியால் அடிக்கப்பட்டது.

 

இதன்பிறகு இரு அணிகளும் அவ்வப்போது வீரர்களை மாற்றியபோதும் பலனில்லை. கோவா அணிக்கு சில கோல் வாய்ப்பு கிடைத்தாலும், அதை கோலாக்க முடியவில்லை. இறுதியில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

நார்த் ஈஸ்ட்-அட்லெடிகோ இன்று மோதல்

கவுகாத்தியில் இன்று நடை பெறும் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.அணியும், அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும் மோதுகின்றன.

 

முதல் இந்தியர்

இந்த ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் கோலடித்ததன் மூலம் ஐஎஸ்எல் போட்டியில் கோலடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பல்வந்த் சிங் தட்டிச் சென்றார். ஐஎஸ்எல் போட்டியில் எதிரணியின் சொந்த மண்ணில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமை சென்னைக்கு கிடைத்தது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/article6505758.ece

 

Link to comment
Share on other sites

முதல் பக்கம்

கோல்கட்டாவுக்கு இரண்டாவது வெற்றி

அக்டோபர் 16, 2014

கவுகாத்தி: இந்தியன் சூப்பர் லீக் போட்டியில், கோல்கட்டா அணி இரண்டாவது வெற்றி பெற்றது. நேற்று நடந்த லீக் போட்டியில் 1–0 என, யுனைடெட் அணியை வீழ்த்தியது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் மும்பை, கோல்கட்டா, சென்னை, கேரளா உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

நேற்று கவுகாத்தியில் நடந்த லீக் போட்டியில் அத்லெடிகோ டி கோல்கட்டா அணி, வடகிழக்கு யுனைடெட் அணியை அதன் சொந்த மண்ணில் சந்தித்தது. தங்களது முதல் போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற்றிருந்தால், துவக்கத்தில் இருந்தே அனல் பறந்தது.

பிக்ரு அசத்தல்:

சூப்பர் லீக் தொடர் மற்றும் கோல்கட்டா அணிக்காக முதல் கோல் அடித்த பிக்ரு (எத்தியோப்பியா), நேற்றும் அசத்தினார். போட்டியின் 15 வது நிமிடத்தில் லுாயிஸ் கார்சியாவிடம் இருந்து பெற்ற பந்தை, அப்படியே மார்பில் வாங்கிய பிக்ரு, கோலாக மாற்றினார்.

போட்டியில் 42வது நிமிடத்தில் கோல்கட்டா அணியின் கோல் ஸ்கோரை சமன் செய்யும் வாய்ப்பை வீணடித்தார் துர்கா போரோ. இரண்டாவது பாதியில் (56 வது நிமிடம்) கோல்கட்டா வீரர் கார்சியா, தலையால் முட்டிய பந்து கோல் போஸ்ட்டுக்கு வெளியே சென்று வீணானது. 69 வது நிமிடம் யுனைடெட் அணி அடித்த கோல், ‘ஆப் சைடு’ என்று மறுக்கப்பட்டது.

முதல் ‘ரெட் கார்டு’:

போட்டியின் 53வது நிமிடம் ‘எல்லோ கார்டு’ பெற்ற கோல்கட்டா வீரர் போர்ஜா, 84வது நிமிடத்தில் யுனைடெட் வீரர் பெர்டாசை பிடித்து இழுக்க, இரண்டாவது ‘எல்லோ கார்டு’ பெற்றார். ஒரே போட்டியில் தொடர்ந்து இரு முறை இப்படி நடந்ததால், உடனடியாக ‘ரெட் கார்டு’ பெற்ற போர்ஜா, மைதானத்தை விட்டு வெளியேறினார்.

போட்டியின் 90வது நிமிடம் கோல்கட்டா வீரர் போடி, மற்றொரு கோல் அடித்தார். முடிவில், கோல்கட்டா அணி 2–0 என, வெற்றி பெற்றது.

http://sports.dinamalar.com/2014/10/1413481034/FikruTeferasoccer.html

Link to comment
Share on other sites

கிரிக்கெட் களத்தில் கால்பந்து: இன்று மும்பை,புனே மோதல்
அக்டோபர் 17, 2014.

 

மும்பை: கால்பந்து களமாக மாற்றப்பட்ட, டி.ஒய்.பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில், மும்பை, புனே அணிகள் இன்று மோதுகின்றன.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.,) தற்போது நடந்து வருகிறது. இதுவரை நடந்த லீக் போட்டிகளின் முடிவில், கோல்கட்டா அணி(6 புள்ளி) முதலிடத்தில் உள்ளது. சென்னை (3), வடகிழக்கு யுனைடெட் (3) அணிகள் அடுத்த இரு இடங்களில் உள்ளன.

இன்று நடக்கும் லீக் போட்டியில் மும்பை அணி, புனேயை சந்திக்கிறது. முதல் போட்டியில் கோல்கட்டாவிடம் என, மும்பை அணி (0–3) தோல்வியடைந்தது.

தவிர, அணியில் முக்கிய வீரர்கள் அனெல்கா, பிரடீ இல்லாத நிலையிலும், 57 சதவீதம் பந்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

 

தவிர, பயிற்சியாளர் பீட்டர் ரெய்டு தாக்குதல் ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தினார். இருப்பினும், கேப்டன் முகமது நபி காயம் காரணமாக பங்கேற்க முடியாதது சோகம் தான். இதனால், மானுவல் பிரெட்ரிக்கிற்கு பொறுப்பு அதிகரித்துள்ளது.

புனே ‘டிரா’:

டில்லிக்கு எதிரான முதல் போட்டியை போராடி ‘டிரா’ (0–0) செய்தது புனே அணி. இதனால், இன்றைய போட்டியில் வெற்றிக்கு முயற்சிக்கலாம். இதற்கு நட்சத்திர வீரர் டேவிட் டிரஸ்குயட், மாக்பெர்லின் உதவ காத்திருக்கின்றனர்.

மாறிய ஆடுகளம்:

மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’ போட்டிகள் நடந்தன. தற்போது  கால்பந்து களமாக மாற்றப்பட்டுள்ள. இதில் தான் இன்று போட்டி நடக்கவுள்ளது.

 

 

http://sports.dinamalar.com/2014/10/1413564302/soccerisl.html

Link to comment
Share on other sites

ரா செய்தது டில்லி: சொந்த மண்ணில் கோல்கட்டா ஏமாற்றம்
அக்டோபர் 19, 2014.

 

கோல்கட்டா: கோல்கட்டா, டில்லி அணிகள் மோதிய பரபரப்பான ஐ.எஸ்.எல்.,  லீக் போட்டி 1–1 என ‘டிரா’ ஆனது.                             

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா, டில்லி அணிகள் மோதின.      

துவக்கம் முதலே இரு அணி வீரர்களும் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 7வது நிமிடத்தில் டில்லி அணியின் நட்சத்திர வீரர் டெல் பியரோ ‘எல்லோ கார்டு’ பெற்றார். இவர் 15வது நிமிடத்தில் உதைத்த பந்து ‘கோல் போஸ்டுக்கு’ வெளியே சென்று வீணானது. தன் பங்கிற்கு கோல்கட்டாவின் பிக்ருவும் (20வது நிமிடம்) கோல் வாய்ப்பை வீணடித்தார். இதனால் முதல் பாதி கோல் எதுவுமின்றி முடிந்தது. விறுவிறுப்பான இரண்டாவது பாதியில் கோல்கட்டாவின் பிக்ருவை, எதிரணியின் ரேமேக்கர்ஸ் மடக்க, கோல்கட்டாவுக்கு 49வது நிமிடத்தில் ‘பெனால்டி கிக்’ வாய்ப்பு கிடைத்தது. இதை ஜெப்ரி(ஸ்பெயின்) கோலாக மாற்றினார்.

 

இதன் மூலம், இத்தொடரில் ‘பெனால்டி’ வாய்ப்பில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். ஆட்டத்தின் 73வது டில்லி அணியின் எலைஸ்(செக் குடியரசு) அருமையாக கோல் அடிக்க, போட்டி 1–1 என சமநிலையை எட்டியது. டில்லி அணி கேப்டன் டெல் பியரோ(இத்தாலி) பந்தை கடத்தி செல்லும்போது, எதிரணியின் டென்சில் தடுத்ததால், இரு அணி வீரர்களுக்கு இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆட்டத்தின் 83, 89வது நிமிடத்தில் இரண்டு ‘எல்லோ கார்டு’ வாங்கிய கோல்கட்டாவின் ராகேஷ், ‘ரெட் கார்டு’ பெற்று வெளியேறினார். இதனால் 10 வீரர்களுடன் கடைசி கட்டத்தில் கோல்கட்டா அணி விளையாடியது. முடிவில், போட்டி 1–1 என ‘டிரா’ ஆனது.

 

இன்னொரு ‘டிரா’: கவுகாத்தியில் நடந்த கோவா, வடகிழக்கு யுனைடெட் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியும் 1–1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. கோவா தரப்பில் அர்னாலின்(17வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். பின் சர்ச்சைக்குரிய முறையில் வழங்கப்பட்ட ‘பெனால்டி’ வாய்ப்பில் வடகிழக்கு  அணிக்கு கொக்கே(36) கோல் அடித்தார்.

http://sports.dinamalar.com/2014/10/1413737042/DelhiKolkattaIndianSuperLeagueFootball.html

 

Link to comment
Share on other sites

சென்னை அணியில் கேமரூன் வீரர்
அக்டோபர் 19, 2014.

 

சென்னை: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் சென்னை அணிக்காக கேமரூனின் மத்திய கள வீரரான எரிக் டிஜம்பா–டிஜம்பா, ஹெய்தியை சேர்ந்த முன்கள வீரரான ஜீன் மவுரிஸ் எடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து சென்னை அணியின் மானேஜரும் வீரருமான மார்கோ மாட்டராசி கூறுகையில்,‘‘சில பிரச்னைகள் காரணமாக பியரி டில்மேன்(சுவீடன்), எடுவர்டோ சில்வா லெர்மா(ஸ்பெயின்) ஆகியோரை ஒப்பந்தம் செய்ய இயலவில்லை. இவர்களுக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த டிஜம்பா, மவுரிஸ் விளையாட இருப்பது மகிழ்ச்சியான விஷயம். ‘விசா’ கிடைத்ததும், இவர்கள் இந்தியா வர உள்ளனர்,’’என்றார்.

 

http://sports.dinamalar.com/2014/10/1413736905/IndianSuperLeagueFootballChennaiCameroonPlayers.html

Link to comment
Share on other sites

2026 உலக கோப்பை இறுதிஆட்டம்.

 

இந்தியா எதிர் ஜெர்மனி  :icon_mrgreen:  சும்மா  நினைக்கவே புல்லரிக்குது .

Link to comment
Share on other sites

விதி மீறிய புனே அணி: அபராதம் விதிக்கப்படுமா
அக்டோபர் 20, 2014.

 

மும்பை: மும்பை அணிக்கு எதிராக விதிகளை மீறி செயல்பட்ட புனே அணிக்கு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிகிறது.      

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.,) தொடரில், மும்பை, புனே அணிகள் மோதிய போட்டி, மும்பையில் நடந்தது. இதில் மும்பை அணி 5–0 என, வெற்றி பெற்றது.      

ஐ.எஸ்.எல்., விதிப்படி விளையாடும் 11 பேர் கொண்ட அணியில், 6 இந்திய வீரர்கள், 5 வெளிநாட்டு வீரர்கள் களமிறங்கலாம். குறிப்பிட்ட சில நேரத்தில் 5 இந்திய வீரர்கள், 6 வெளிநாட்டு வீரர்களை விளையாட அனுமதிக்கலாம். ஆனால், மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில், இந்த விதியை புனே அணி மீறியுள்ளது. அதாவது போட்டியின் 61 வது நிமிடத்தில் மூன்றாவது முறையாக மாற்று வீரரை களமிறக்கியது புனே அணி.

 

இதனால், அந்த நேரத்தில் புனே அணியில் 4 இந்திய வீரர்கள் மட்டும் விளையாடியுள்ளனர். வெளிநாட்டு வீரர்கள் எண்ணிக்கை 7 ஆக இருந்துள்ளது. இது ஐ.எஸ்.எல்., விதிகளை மீறிய செயல். இதனால், புனே அணிக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து ஐ.எஸ்.எல்., நிர்வாகிகள் கூறுகையில்,‘‘ புனே அணியின் செயல் குறித்து கட்டுப்பாட்டுக்குழு ஆராய்ந்து வருகிறது. இதன் முடிவு குறித்து விரைவில் வெளியாகும்,’’ என்றார்.

 

 

http://sports.dinamalar.com/2014/10/1413825884/ISLFCPuneCityunderscrutinyforallegedbreachof.html

Link to comment
Share on other sites

சச்சின்–தோனி அணிகள் மோதல்: கால்பந்து தொடரில் ‘விறுவிறு’
அக்டோபர் 20, 2014.

 

சென்னை: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் லீக் போட்டியில் தோனியின் சென்னை அணி, சச்சினின் கேரள அணியை சந்திக்கிறது.            

இந்தியன் சூப்பர் லீக்(ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் தற்போது நடக்கிறது. இன்று நடக்கும் லீக் போட்டியில் தோனி இணை உரிமையாளராக உள்ள சென்னை அணி தனது சொந்தமண்ணில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை சந்திக்கிறது.      

 

மாட்டராசி பயிற்சியில் கோவா அணிக்கு எதிரான முதல் போட்டியில் 2–1 என, வென்ற உற்சாகத்தில் உள்ளது சென்னை. அணியிலுள்ள மான்செஸ்டர் சிட்டியின் முன்னாள் வீரர்  எலானோ புளுமர் (பிரேசில்), ‘பிரி–கிக்’ வாய்ப்பில் அடித்த கோல் மறக்க முடியாதது. இந்த அசத்தலை இவர் இன்றும் தொடர முயற்சிக்கலாம்.            

இதேபோல, இத்தொடரில் கோல் அடித்த முதல் இந்திய வீரர் பல்வந்த் சிங், கவுர்மாங்கி சிங், பெர்னார்டு உள்ளிட்டோரும், சென்னை அணிக்கு கைகொடுக்க காத்திருக்கின்றனர்.           

 

வெற்றி கிடைக்குமா: வட கிழக்கு யுனைடெட் அணிக்கு எதிரான போட்டிக்கு முன், கேரளாவின் சக உரிமையாளர் சச்சின், வீரர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் பேசினார். இருப்பினும், முதல் போட்டியில் அடைந்த தோல்வி காரணமாக, புள்ளிப்பட்டியலில் கேரளா கடைசி இடத்தில் உள்ளது. அணியின்  நட்சத்திர வீரரான இங்கிலாந்து கோல் கீப்பர் டேவிட் ஜேம்சைத் தான் பெரிதும் நம்பியுள்ளது.            

சோப்ரா எப்படி: கடந்த முறை பல வாய்ப்புகளை மைக்கேல் சோப்ரா, வீணடித்தார். இன்று அணியின் வெற்றிக்கு உதவலாம். இவர்களுடன் இந்தியாவின் ஹொசைன், இஷ்பாக் அகமது, சந்தேஷ், நிர்மல் சேத்ரி சாதிப்பார்களா எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதேபோல, வடகிழக்கு அணிக்கு எதிராக துணிச்சலாக போராடிய இளம் இந்திய வீரர் சபீத், மீதும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

http://sports.dinamalar.com/2014/10/1413825295/ChennaiyinFCKeralaBlastershomematch.html

 

Link to comment
Share on other sites

சென்னை அணி வெற்றி : சச்சின் அணிக்கு மீண்டும் அடி
அக்டோபர் 20, 2014.

சென்னை: சச்சினின் கேரள அணிகள் எதிரான ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் லீக் போட்டியில் தோனியின் சென்னை அணி, வெற்றி பெற்றது.

 

இந்தியன் சூப்பர் லீக்(ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் தற்போது நடக்கிறது. இதன் லீக் போட்டியில் தோனி இணை உரிமையாளராக உள்ள சென்னை அணி, தனது சொந்தமண்ணில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை சந்தித்தது.  

மாட்டராசி பயிற்சியில் கோவா அணிக்கு எதிரான முதல் போட்டியில் 2–1 என, வென்ற உற்சாகத்தில் களமிறங்கிய சென்னை அணி துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது.

போட்டியின் முதல் பாதியின் 14வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சென்னை வீரர் எலான்கோ கோலாக மாற்றினார். இதற்கு பதிலடி கொடுக்க போராடிய கேரள அணிக்கு ‌போட்டியின் 25வது நிமிடத்தில் அந்ந அணி வீரர் ஆர்ஜி அடித்த பந்து கோல் போஸ்டில் பட்டு திரும்பியது. தொடர்ந்து போராடிய அந்த அணி்ககு 32வது நிமிடத்தில் புல்கா அடித்த பந்தும் கோல் போஸ்டை தாண்டிப்போனது ஏமாற்றியது. தொடர்ந்து போராடிய கேரள அணி  வீரர்களால் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதையடுத்த முதல் பாதியில் சென்னை அணி 1-0 என முன்னிலை பெற்றது.

 

பின் விறுவிறுப்பாக துவங்கிய இரண்டாவது பாதியின் ஆரம்பம் முதல் கேரள அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்த துவங்கினர். கடுமையான போராட்டத்திற்கு பின் போட்டியின் 50வது நிமிடத்தில் கேரள அணிக்கு ஹூமே ஒரு கோல் அடிக்க போட்டி 1-1 என சமநிலையை எட்டியது. இதற்கு சென்னை வீரர் மென்டி 63வது நிமடத்தில் பதிலடி கொடுத்தார். தொடர்ந்து போராடிய கேரள அணி வீரர்களால் கடைசிவரை கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

இறுதியில், சென்னை அணி, 2-1 என்ற கோல் கணக்கில் கேரள அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இத்தொடரில்  தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்த சென்னை அணி 6 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

 

http://sports.dinamalar.com/2014/10/1413825295/ChennaiyinFCKeralaBlastershomematch.html

Link to comment
Share on other sites

மெண்டியின் அபார கோலின் உதவியுடன் சென்னையின் எவ். சி. அணி வெற்றி: அமிதாப், ரஜினி, சச்சின் இணைந்து பார்வையிட்டனர்
2014-10-23 10:40:08

 

7400_gallery-image-200528100_zps2405275f

சென்னை ஜவர்ஹலால் நேரு விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற மிகவும் உக்கிரமான இண்டியன் சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் எவ்.சி. அணியை எதிர்த்தாடிய சென்னையின் எவ்.சி. அணி 2 க்கு 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றியீட்டியது.

சுப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவ் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் கண்டுகளித்த இப் போட்டி ஆரம்பித்தது முதல் இறுதி வரை விறுவிறுப்பைத் தோற்றுவிப்பதாக அமைந்தது.
குறிப்பாக சென்னையின் பேர்னார்ட் மெண்டி கரணம் அடித்தவாறு பின்னோக்கி உதைத்து போட்ட வெற்றி கோல் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.

7400_Bernard-Mendy-of-Chennaiyin-FC-reci
போட்டியின் 12ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனல்டியை இலக்கு தவறாமல் கோலினுள் புகுத்திய எலானோ, சென்னையின் அணியை முன்னிலையில் இட்டார்.


இதனைத் தொடர்ந்து இரண்டு அணியினரும் கடுமையாக மோதிக்கொள்ள போட்டியின் 50ஆவது நிமிடத்தில் கேரளா சார்பாக கோல் நிலையை லெய்ன் ஹியூம் சமப்படுத்தினார்.
இதனை அடுத்து போட்டி உக்கிரத்தன்மையை எட்டியது.

7400_Balwant-Singh-of-Chennaiyin-FC-reci
போட்டியின் 63ஆவது நிமிடத்தில் சற்று உயர்வாக வந்து பந்தை கரணம் அடித்தவாறு பின்னோக்கி உதைத்து கோலினுள் புகுத்திய பேர்னார்ட் மெண்டி, அரங்கில் குழுமியிருந்த அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தி சென்னையின் வெற்றிக்கு அடிகோலினார்.
ஹீரோ இண்டியன் சுப்பர் லீக் போட்டிகளின் 10ஆவது போட்டியில் எவ். சி. கோவா அணியும் அத்லெட்டிகோ டி கொல்கத்தா அணியும் ஃபட்டோர்டா ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் இன்று மோதவுள்ளன.

7400_gallery-image-1223651731_zps66e4833

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=7400#sthash.TAx9LooP.dpuf

Link to comment
Share on other sites

கோவாவை வீழ்த்தியது கொல்கத்தா

 

இன்டியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துப் போட்டியில் கோவாவுக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா வென்றது. இதன்மூலம் 10 புள்ளிகளுடன் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

கோவாவிலுள்ள பட்ரோடா மைதானத்தில் நேற்று நடந்த ஐஎஸ்எல் போட்டியில் முதல் பாதியில் கோவா ஆதிக்கம் செலுத்தியது. 22 நிமிடத்தில் கோவாவின் ஆந்ரே சான்டோஸ் கோலடித்தார். இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் கோவா முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில், கொல்கத்தா பதிலடி கொடுத்தது. 72-வது நிமிடத்தில் கவின் லோபோ கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தார். பின்னர், 84-வது நிமிடத்தில் மீண்டும் கோலடித்து கோவா ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தார்.

 

கொல்கத்தாவுக்கு பதிலடி கொடுக்க கோவா வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் வீணாயின. கூடுதல் நேரத்திலும் கோவா வீரர்களால் கோலடிக்க முடியவில்லை. இதையடுத்து 2-1 என்ற கணக்கில் கொல்கத்தா வென்றது. மொத்தம் 4 போட்டிகளில் ஆடியுள்ள கொல்கத்தா ஒன்றில் கூட தோற்காமல் 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/article6528483.ece

Link to comment
Share on other sites

மோரிட்ஸ் அசத்தல் தொடருமா: இன்று மும்பை – யுனைடெட் அணிகள் மோதல்
அக்டோபர் 23, 2014.

 

நவி மும்பை: இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில் மும்பை, வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதுகின்றன. இதில் ‘ஹாட்ரிக்’ நாயகன் மோரிட்ஸ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, மும்பை அணியின் வெற்றிக்கு மீண்டும் கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.     

முதலாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. இதில் கோல்கட்டா, கோவா, சென்னை உள்ளிட்ட 8 அணிகள் ‘ரவுண்டு ராபின்’ முறையில் லீக் சுற்றில் மோதுகின்றன. நவி மும்பையில் இன்று நடக்கும் லீக் போட்டியில், பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரின் மும்பை சிட்டி அணி., மற்றொரு பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமின் வடகிழக்கு யுனைடெட் அணியை சந்திக்கிறது.     

 

கோல்கட்டாவுக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் தோல்வி கண்ட மும்பை அணி, புனே அணிக்கு எதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 5–0 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து அசத்திய மும்பை அணியின் பிரேசில் வீரர் ஆன்ட்ரி மோரிட்ஸ் இன்றும் கைகொடுக்கலாம். தலா ஒரு கோல் அடித்த இந்தியாவின் சுபாஷ் சிங், பிரான்சின் ஜோஹன் லெட்ஜெல்டர் மீண்டும் அசத்தலாம்.     

 

காயத்தில் இருந்து மீண்ட கேப்டன் சையது ரஹிம் நபி, லஜங்பர்க் (சுவீடன்) ஆகியோர் இன்று அணிக்கு திரும்பலாம். இவர்களை தவிர, தீபக் மன்டால், பீட்டர் கோஸ்டா, லால்ரின்டிகா ரால்தே, ராம் மாலிக், அபிஷேக் யாதவ், நடாங் பூட்டியா, ரோகித் மிர்சா, சுஷில் குமார் சிங் உள்ளிட்ட இந்திய வீரர்களுடன் மானுவல் பிரைட்ரிச் (ஜெர்மனி), பிரான்சிஸ்கோ சேவியர் பெர்ணான்டஸ் (ஸ்பெயின்), டியாகோ மானுவல்  பெர்ணான்டஸ் ரிபைரோ (சுவிட்சர்லாந்து), டியாகோ பெர்ணான்டோ நடாயா (அர்ஜென்டினா) உள்ளிட்ட வௌிநாட்டு வீரர்களும் கைகொடுக்கும் பட்சத்தில் சுலப வெற்றி பெறலாம்.     

 

கொக்கே நம்பிக்கை: கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் துவக்கிய வடகிழக்கு யுனைடெட் அணி, கோல்கட்டாவுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. பின், கோவா அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியை ‘டிரா’ செய்தது. கேரளா, கோவா அணிகளுக்கு எதிராக தலா ஒரு கோல் அடித்து வெற்றிக்கு உதவிய ஸ்பெயின் வீரர் கொக்கே மீண்டும் சாதிக்கலாம். அணியின் தடுப்பாட்டம் கேப்டன் மிகுயல் கார்சியாவை (போர்ச்சுகல்) நம்பி உள்ளது. பிரிதம் குமார் சிங், மிலன் சிங், மசாம்பா லோ சம்போவ் (செனகல்), டோ டாங்–ஹுயன் (தென் கொரியா), பிலிப் டி காஸ்ட்ரோ (பிரேசில்) உள்ளிட்டோர் எழுச்சி கண்டால் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பலாம்.

 

http://sports.dinamalar.com/2014/10/1414084272/IndianSuperLeagueFootballMumbaiNorthEastUnitedMoritz.html

Link to comment
Share on other sites

வடகிழக்கு அணி அசத்தல் வெற்றி: மும்பை திணறல்
அக்டோபர் 24, 2014.

நவி மும்பை: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில், வடகிழக்கு யுனைடெட் அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் மும்பை அணி திணறியது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நவி மும்பையில் நேற்று நடந்த லீக் போட்டியில், பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரின் மும்பை சிட்டி அணி., மற்றொரு பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமின் வடகிழக்கு யுனைடெட் அணியை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் மும்பை அணியின் ‘ஹாட்ரிக்’ நாயகன் மோரிட்ஸ் (பிரேசில்) கோல் அடிக்கும் வாய்ப்பை வீணடித்தார். இதேபோல 14வது நிமிடத்தில் மும்பை அணியின் நடாங் பூட்டியா கொடுத்த பந்தை சுபாஷ் சிங் கோலாக மாற்ற தவறினார். கொக்கேவிடம் இருந்து ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் பெற்ற பந்தை, வடகிழக்கு யுனைடெட் அணியின் பிலிப் டி காஸ்ட்ரோ (பிரேசில்) கோலாக மாற்றவில்லை. தொடர்ந்து போராடிய இரு அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலை வகித்தது.

 

பின், இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட வடகிழக்கு யுனைடெட் அணிக்கு, 58வது நிமிடத்தில் கொக்கே கொடுத்த பந்தை மடோங்கா (ஜாம்பியா) கோலாக மாற்றினார். ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் இரண்டாவது முறையாக ‘எல்லோ கார்டு’ பெற்ற மும்பையின் பாவெல், ‘ரெட் கார்டு’ பெற்று வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (90+2) வடகிழக்கு யுனைடெட் அணியின் பிலிப் டி காஸ்ட்ரோ (பிரேசில்) ஒரு கோல் அடித்து வலுவான முன்னிலை பெற்றுத் தந்தார். கடைசி நிமிடம் வரை போராடிய மும்பை அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் வடகிழக்கு யுனைடெட் அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 4 லீக் போட்டியில் 2 வெற்றி, ஒரு ‘டிரா’, ஒரு தோல்வி உட்பட 7 புள்ளிகளுடன் வடகிழக்கு யுனைடெட் அணி 2வது இடத்துக்கு முன்னேறியது.

 

 

http://sports.dinamalar.com/2014/10/1414169218/northeastunitedsoccer.html

Link to comment
Share on other sites

ஹாட்ரிக் வெற்றி பெறுமா சென்னை: இன்று டில்லி அணியுடன் மோதல்
அக்டோபர் 24, 2014.

 

புதுடில்லி: இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில், சென்னை, டில்லி அணிகள் மோதுகின்றன. இதில் சென்னை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர், நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. இதில் மும்பை, கோல்கட்டா, புனே உள்ளிட்ட 8 அணிகள் ‘ரவுண்டு ராபின்’ முறையில் லீக் சுற்றில் பங்கேற்கின்றன. டில்லியில் இன்று நடக்கும் லீக் போட்டியில், டில்லி டைனமோஸ் அணி, தோனி இணை உரிமையாளராக உள்ள சென்னை அணியை சந்திக்கிறது.

 

கோவா அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் துவக்கிய சென்னை அணி, இரண்டாவது போட்டியில் கேரளாவை தோற்கடித்த உற்சாகத்தில் உள்ளது. முதலிரண்டு போட்டியில் தலா ஒரு கோல் அடித்த எலானோ புளுமர் (பிரேசில்) இன்றும் கைகொடுக்கலாம். இத்தொடரில் கோல் அடித்த முதல் இந்திய வீரரான பல்வந்த் சிங்குடன், கேரளாவுக்கு எதிராக கடைசி நேரத்தில் ஒரு கோல் அடித்து வெற்றிக்கு உதவிய பெர்னார்டு மெண்டி (பிரான்ஸ்) மீண்டும் அசத்தலாம். மார்கோ மாட்டராசி (இத்தாலி), போஜன் (சுவீடன்), எரிக் டிஜம்பா–டிஜம்பா (கேமரூன்), ஜீன் மவுரிஸ் எடு (ஹெய்தி) உள்ளிட்ட அனுபவ வீரர்கள் இருப்பது கூடுதல் பலம் சேர்க்கிறது. இந்திய வீரர்களான அபிஷேக் தாஸ், கவுரமாங்கி சிங், அந்தோனி பார்போசா, டேன் பெரைரா, பிரதீப், சுக்விந்தர் சிங், ஜிஜெ லால்பெக்குலா உள்ளிட்ட இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்யலாம்.

 

புனே அணிக்கு எதிராக கோல் எதுவுமின்றி ‘டிரா’ செய்த டில்லி அணி, கோல்கட்டாவுக்கு எதிராக 1–1 என ‘டிரா’ செய்தது. இப்போட்டியில் ஒரு கோல் அடித்து தோல்வியை தவிர்க்க உதவிய எலைஸ்(செக் குடியரசு) இன்றும் கைகொடுக்கலாம். நட்சத்திர வீரர் அலெக்சாண்ட்ரோ டெல் பியரோ (இத்தாலி), வான் ஹவுட் (பெல்ஜியம்), ஹவுபென் (நெதர்லாந்து), மார்டென் (டென்மார்க்), ஜங்கர் (டென்மார்க்) உள்ளிட்டோருடன் இந்தியாவின் பிரான்சிஸ் பெர்னாண்டஸ், ஸ்டீவன் தியாஸ் அசத்தும் பட்சத்தில் முதல் வெற்றியை பதிவு செய்யலாம்.

 

http://sports.dinamalar.com/2014/10/1414170526/dhonichennaisoccer.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.