Jump to content

பா.சிதம்பரம், நாராயணசாமி ஆகியோர் மீது கொலை முயற்சி! தமிழ்நாடு விடுதலை இயக்கத்தினர் மீது குற்றப்பத்திரிகை


Recommended Posts

தமிழகத்தில் செயற்பட்டு வரும் தமிழ்நாடு விடுதலை இயக்கத்தின் 6 உறுப்பினர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் 6 பேரும் முன்னாள் மத்திய அமைச்சர்களான பா.சிதம்பரம் மற்றும் வி.நாராயணசாமி ஆகியோரை, குண்டுத்தாக்குதல் மூலம் கொலை செய்ய முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய புலனாய்வு நிறுவனம் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

சுதந்திரமான தமிழ்நாட்டை நோக்காக கொண்டு தமிழர் விடுதலைப்படை என்ற பெயரில் இயங்கிவரும் இந்த இயக்கம் நக்ஸலைட் இயக்கமாக செயற்பட்டு வருகிறது.

குறித்த இரண்டு அமைச்சர்களும் கூடங்குளம் அணுமின்சார திட்டத்துக்கு ஆதரவளித்து வருகின்றமைக்கு எதிர்ப்பை காட்டும் முகமாகவே இந்த தாக்குதல் நடத்தப்படவிருந்தது.

நாராயணசாமியின் புதுச்சேரி வீட்டுக்கு அருகில் இந்த வருடம் ஜனவரியிலும் பெப்ரவரியில் மதுரையிலும் மூன்றாவது குண்டு சிதம்பரத்தின் வீட்டுக்கு அருகிலும் இருந்து மீட்கப்பட்டன. எனினும் இவை அதிஷ்டவசமாக வெடிக்கவில்லை.

குறித்த இயக்கம் 1990, 2000 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் செயற்பட்டு வந்தது. எனினும் பொலிஸாருடன் இடம்பெற்ற மோதல்களின்போது அதில் பலர் மரணமாகினர்.

இந்தநிலையில் குறித்த இயக்கத்தின் பழைய உறுப்பினர்களாக இருந்த குமார் மற்றும் கலை ஆகியோர் புதிய உறுப்பினர்கள் சிலரை தமது இயக்கத்துக்கு சேர்த்துள்ளனர். இவர்களே முன்னாள் அமைச்சர்கள் மீது குண்டுத்தாக்குதல் நடத்தவிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழர் விடுதலைப்படை 1987ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்திய அமைதிப்படையினர் அனுப்பப்பட்ட நிலையிலேயே உருவாக்கப்பட்டது.

1987 செப்டம்பர் முதலாம் திகதி குறித்த இயக்கத்தின் தலைவராக செயற்பட்ட தமிழரசன் என்பவரும் அவரது நண்பர்கள் சிலரும் கொல்லப்பட்டனர்.

இந்த இயக்கம் 2002ஆம் ஆண்டு மத்திய அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது.http://www.pathivu.com/news/34246/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.