Jump to content

ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து…

தமிழ் ஈழம் என்ற முழக்கத்தின் கீழ் தலைமறைவு இராணுவ இயக்கங்களை ஆரம்பித்தவர்களுள் ஒபரோய் தேவனும் ஒருவர். எண்பதுகளில் ஒபரோய் தேவனைத் தெரியாதவர்களைக் கண்டிருக்க முடியாது. தமிழ் ஈழ விடுதலை இராணுவம் (Tamil Eelam Liberation Army(TELA ) என்ற இயக்கத்தை ஆரம்பித்து வழி நடத்தியவர் தேவன். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைப் போன்றே இராணுவ அமைப்பு ஒன்றைத் தோற்றுவித்து அதனைச் சுற்றி ஆதரவாளர்களையும், நடவடிக்கைகளுக்குப் பொருள் கூறுபவர்களையும் உருவாக்கிவிட்டால் விடுதலை கிடைத்துவிடும் என்று நம்பியவர்களில் ஒபரோய் தேவனும் ஒருவர்.

கொழும்பில் ஒபரோய் ஹோட்டலில் நிர்வாகியாக வேலை பார்த்ததால் ‘தேவன்’ ஒபரோய் தேவனானர். ஒபரோய் தேவனது இயற்பெயர் குலசேகரம் தேவசெகரம். ஆரம்பத்தில் தங்கத்துரை, குட்டிமணி, பிரபாகரன் போன்றவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்தார். புலிகளை வளர்த்த அன்டன் பாலசிங்கம் ஒபரோய் தேவனை வளர்ப்பதற்காக முயற்சித்த காலமும் 80 களைக் கடந்து சென்றிருக்கிறது.

தனது வேலையைத் துறந்து முழு நேர அரசியல் போராளியான ஒபரோய் தேவன் பறுவா என்ற பெயரிலும் அழைக்கப்பட்டார். திருனெல்வேலியில் மத்தியதர வர்க்கத்தின் உயர் அணியைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்த ஒபரோய் தேவன் தனது குடும்பம் முழுவதையும் போராட்டத்தில் ஈடுபடுத்தினார். ஆரம்ப காலத்திலிருந்தே இவரது வீடு போராளிகளின் மறைவிடமாகப் பயன்பட்டிருக்கின்றது.

ஒபரோய் தேவன் தனக்குத் தெரிந்தவற்றை எழுதி வைக்கும் பழக்கம் கொண்டவர். நேர்மையான போராளியாக அறியப்பட்ட தேவன் இலங்கை அரசின் பொருளாதார நிலைகளைத் தகர்க்க வேண்டும் என்று கூறி அதற்கான இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்.

14ம் திகதி ஓகஸ்ட் மாதம் 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஒபரோய் தேவனின் நாட்குறிப்பை கொலையின் பின்னர் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வெளியிட்டனர். ஒபரோய் தேவனால் உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலை இராணுவம் (TELA) தமிழீழ விடுதலைப் புலிகளால் ஒபரோய் தேவன் படுகொலை செய்யப்பட்டதன் பின் காஸ்ரோவாலும் அதன் பின் முரளிமாஸ்டரினாலும் தலைமை தாங்கப்பட்டு வந்தது.

அச்சு வடிவில் சிறிய நூலாக வெளிவந்த ஓபரோய் தேவனின் நாட்குறிப்பு பல்வேறு தவறுகள் நிறுவனமயமாகி வளர்ச்சி பெற்றதை தகவல்களாகத் தருகின்றது. ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து… என்ற நூல் இனியொருவில் தொடர்ச்சியாக வெளிவருகிறது.

ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து… (முதல் பாகம்)

22.07.1982:

மாத்தளையில் எட்டம் வகுப்புப் படிக்கும் போதே(1968 இல்) தமிழ்ப் பாடம் கற்பிக்கும் வாத்தியார், இஸாமிய ஆசிரியர்களோடு தமிழரசுக் கட்சியை ஆதரித்து வாக்குவதப்படுவேன், 1974 ஆம் ஆண்டு தை 1ம் திகதி யாழ்ப்பாணத்தில் குடியேறினேன். தமிழர் விடுதலைக் கூட்டணியின் கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளுக்குச் சென்று அவர்களது பேச்சால் கவரப்பட்டேன். 1974 ஆம் ஆண்டு தை 10 இரவு யாழ் நகரில் நடந்த சிறீலங்கா அரசின் வெறியாட்டத்தில் நானும் அகப்பட்டேன்.

தமிழ்ப் பெண்கள் துப்பாக்கி ஏந்திய படையினரால் காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்பட்டதை நேரில் கண்டேன். அதனைத் தொடர்ந்து 74 ஆனி எட்டம் நாள் சிவகுமாரனின் வீர மரணத்தால் உணர்ச்சியேற்றப்பட்டேன்.

தொடரும்…

http://inioru.com/?p=42037

Link to comment
Share on other sites

ராஜனி முடிந்து தேவன் தொடங்கியிருக்கு

 

புலிகளில் நான் சேரவேகூடாது என்று முடிவு எடுத்ததற்கு இவர் கொலையும் ஒரு காரணம் .எனக்கு தெரிந்த காலங்களில் என்னவொரு அருமையான பெடியன் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா குரு நாதா கிருபன் ஆடுகள் புல்லுசாப்பிட தோட்டத்தை திறக்கிறீர் நடக்கப்போவது வழமையானதுதான்.  :D


சிலதுகள் அசைபோடுதல் தாங்கேலாது .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராவணனின் நாட்குறிப்பிலிருந்து......ராமன் ஒரு புலி ஆதரவாளன் அன்று அவன் செய்த செயல் ஒரு மனித உரிமை மீறல்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா குரு நாதா கிருபன் ஆடுகள் புல்லுசாப்பிட தோட்டத்தை திறக்கிறீர் நடக்கப்போவது வழமையானதுதான்.  :D

சிலதுகள் அசைபோடுதல் தாங்கேலாது .

நாங்கள் பாறையிலும் பயிர் விளைவிக்கும் பரம்பரையாக்கும்! ஆடுகளை பட்டினி இருக்கவிடமாட்டோம் <_<

Link to comment
Share on other sites

ராஜனி முடிந்து தேவன் தொடங்கியிருக்கு

 

புலிகளில் நான் சேரவேகூடாது என்று முடிவு எடுத்ததற்கு இவர் கொலையும் ஒரு காரணம் .எனக்கு தெரிந்த காலங்களில் என்னவொரு அருமையான பெடியன் . 

 

உண்மைதான். பொன்னம்மா அக்காவின் பேரன். சரிதானே?

Link to comment
Share on other sites

உண்மைதான். பொன்னம்மா அக்காவின் பேரன். சரிதானே?

உங்கட வயசிற்கு பொன்னம்மா ,எனது வயசிற்கு ஒபரேய் தேவன்  :lol:

Link to comment
Share on other sites

ராஜனி முடிந்து தேவன் தொடங்கியிருக்கு

புலிகளில் நான் சேரவேகூடாது என்று முடிவு எடுத்ததற்கு இவர் கொலையும் ஒரு காரணம் .எனக்கு தெரிந்த காலங்களில் என்னவொரு அருமையான பெடியன் .

புலி 30 வருடங்களை கடந்திட்டுது.

Link to comment
Share on other sites

உங்கட வயசிற்கு பொன்னம்மா ,எனது வயசிற்கு ஒபரேய் தேவன்  :lol:

 

என் வயதுக்கு பொன்னம்மா...அக்கா வயதில் இருக்கிறார். தூரத்து உறவும்கூட. :D  
உங்க வயசுக்கு ஒப்பரே தேவன்... பேரன் வயதில் இருப்பாரோ. :lol:
Link to comment
Share on other sites

கிருபன் அடுத்த பதிவை இணையுங்கள் .

 

மறந்து போன சில நினைவுகள் வருகின்றன .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து (2)

தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது வெறும் உணர்ச்சிகளின் வினையாற்றலாகவே ஆரம்பமானது என்பது ஒபரோய் தேவனின் நாட்குறிப்பு விலாவாரியாகக் கூறுகிறது. நான்கு தசாப்தங்கள் அதே உணர்ச்சியை முன்வைத்து நடத்திச்செல்லப்பட்ட போராட்டம் நந்திக்கடலை இரத்தச் சிவப்பாக்கியது. உச்சி வெயிலும் உணர்ச்சிக் கதாபாத்திரங்களும் ஒபாரோய் தேவனின் ஒளிவு மறைவில்லாக் குறிப்புகளில் கண்முன்னே வந்து போகின்றன. தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதையும் புதிய அரசியலையும் அதனை நகர்த்திச் செல்லும் முன்னணிப் படையையும் வளரவிடாமல் தடுப்பதற்கு இன்றும் வெறியூட்டப்பட்ட மனிதர்கள் தெருக்களில் உலாவருகிறார்கள். ஒபரோய் தேவனின் நாட்குறிப்பு முற்போக்கு அரசியல் சார்ந்ததல்ல. வெறும் சம்பவங்களின் தொகுப்பு மட்டுமே. ஒவ்வொரு சம்பவங்களின் பின்னாலும் துருத்தலாகத் தெரியும் அரசியல் முள்ளிவாய்க்கால் போன்ற அழிவை அப்போதே முன்னறிவிப்பது போலிருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலைசெய்யப்ப்பட்ட ஒபரோய் தேவனின் வாக்குமூலம் மறைக்கப்பட்ட பல்வேறு சம்பவங்களை மக்கள் முன் வைக்கிறது.

22.07.1982

மாத்தளையில் எட்டம் வகுப்புப் படிக்கும் போதே(1968 இல்) தமிழ்ப் பாடம் கற்பிக்கும் வாத்தியார், இஸ்லாமிய ஆசிரியர்களோடு தமிழரசுக் கட்சியை ஆதரித்து வாக்குவதப்படுவேன், 1974 ஆம் ஆண்டு தை 1ம் திகதி யாழ்ப்பாணத்தில் குடியேறினேன். தமிழர் விடுதலைக் கூட்டணியின் கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளுக்குச் சென்று அவர்களது பேச்சால் கவரப்பட்டேன். 1974 ஆம் ஆண்டு தை 10 இரவு யாழ் நகரில் நடந்த சிறீலங்கா அரசின் வெறியாட்டத்தில் நானும் அகப்பட்டேன்.

தமிழ்ப் பெண்கள் துப்பாக்கி ஏந்திய படையினரால் காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்பட்டதை நேரில் கண்டேன். அதனைத் தொடர்ந்து 74 ஆனி எட்டம் நாள் சிவகுமாரனின் வீர மரணத்தால் உணர்ச்சியேற்றப்பட்டேன்.

பின்னர் அதே ஆண்டு கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயின்றுகொண்டிருந்த உரும்பிராய் குலசிங்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது. மிகவும் துடிப்பானவர். நாட்டு விடுதலையில் தீவிர பற்று உடையவர். எதற்கும் பயப்படாத நெஞ்சுரம் கொண்டவர். எப்போதும் அரசைப் பயப்படவைக்க ஏதாவது வன்செயலில் ஈடுபட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று அவாக் கொண்டவர். அவரின் தொடர்பில் கிடைத்த அறிவுரைகளினால் கவரப்பட்டேன். அவரின் தொடர்பு கிடைத்த சில நாட்களுக்குள்ளேயே அவர் சிறீ லங்கா அரசால் கைதானார். அப்போது நான் வயதில் மிகவும் சிறியவனாகையால் (16 வயது), ஆவலோடு இளைஞர் பேரவையைச் சேர்ந்தவர்களோடு தொடர்பு கொள்ளும் போதெல்லாம் என்னை சிறுவன் என்ற கணக்கில் ஏளனமாகப் பார்ப்பார்கள். சிலர் நேரடியாகவே என்னிடம் ‘நீ சின்னப் பையன், கவனாமாயிரு, போலிஸ் பிடித்து உள்ளே தள்ளிவிடும்’ என்பார்கள்.

uttyogeswaran.jpg

யோகேஸ்வரன்

இந்நாட்களில் தமிழர் கூட்டணியால் நடத்தப்பட்ட அத்தனை மாநாடுகள், சட்டமறுப்புப் போராட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டேன். இப்படி இரண்டு ஆண்டுகள் கழிந்தன. 1976ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சிறையில் உள்ள இளைஞர்கள் தம்மை நீதி விசாரணை க்குட்படுத்து அல்லது விடுதலை செய் எனக் கோரி உண்ணாவிரதமிருந்தனர். அதற்கு ஆதரவாக வெளியில் (தமிழீழத்தில்) தமிழர் கூட்டணியும் பல இடங்களில் பரவலாக முழுநாள் உண்ணாவிரதப்போராட்டத்தைநடத்தியது. கொக்குவில் மஞ்சவனப் பதியிலும், நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவிலிலும் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தி கலந்து கொண்டேன். உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டதால் யாழ் மேயர் விசுவநாதன் முன்னாள் மேயர் நாகராசா,யாழ் எம்.பி.யோகேஸ்வரன், பல இளைஞர் பேரவைத் தலைவர்களின் தொடர்பு கிடைத்தது.

நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் நடந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருக்கையில் பகல் 2மணி அளவில் குலசிங்கம் அங்கு வந்தார். (உண்ணாவிரதத்திற்கு முதல் நாள் 12 இளைஞர்களை சிறிலங்கா அரசு விடுதலை செய்தது) அவரும் விடுதலை செய்யப்பட்டது அப்போதே எனக்குத் தெரியும். அவரக் கண்டதும் நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவேயில்லை.பலமணிநேரம் இருவரும் எம்மை மறந்த நிலையில் பேசிக்கொண்டிருந்தோம். அப்போ இவருடன் சிறையிலிந்து விடுதலை செய்யப்பட்ட சிறியும் சிலரும் அங்கு வந்தனர். குலசிங்கம் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியதை அடுத்து அவர்களோடு பல விடயங்கள் பற்றியும் பேசினேன்.

sriSabaratnam.jpg

சிறீ சபாரத்தினம் அல்லது சிறீ

அன்றிலிருந்து குலம்,சிறி ஆகியோரை சந்தித்து அடுத்து என்ன முறையில் இயங்கலாமென பேசுவோம். ஏனைய சிறை மீண்டவர்களையும் சந்தித்துப்பேசினேன். சிலர் மனதை சிறை வாசம் மாற்றியிருந்தது.தாம் போராட்டத்திலிருந்து ஒதுங்குவதாக மறைமுகமாகச் சொன்னார்கள்.

தொடர்ந்து குலம்,சிறியோடு தினமும் பல இடங்களும் சென்று விடுதலையில் ஆர்வமுள்ள இளைஞர்கள், ஏற்கெனவே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆகியோரைச் சந்தித்து பேசினோம்.

சிந்தித்த இளைஞர்களில் பலர் நாம் தொடர்பு கொள்ளும்போது தீவிரமாகப் பேசுகிறார்களே தவிர எம்மோடு சேர்ந்து இயக்க ரீதியாக இயங்கப் பின் வாங்கினர். இளைஞர்களின் இப் போக்கால் சிலர் மனவேதனை அடைந்து “சிறையால் வந்த நாம் மட்டும் தான் தொடர்ந்தும் போராடவேண்டும் போலுள்ளது” எனக் கூறினார்கள்.

என் பார்வையில் குலசிங்கம் மிக வேகமாக இயங்க வேண்டுமெனும் அவாவில் இருந்தார். அதன் காரணமாக சில பிழையான வன்முறையில் நாட்டமுள்ளவர்களோடு தொடர்பு கொண்டார். நானும் சிறியும் எவ்வளவோஎடுத்துக் கூறியும் அவர் தன் போக்கை மாற்றவில்லை. அதனால் அவர் திரும்பவும் தேடப்பட்டார். அப்போது அவருக்கு நான் முடியுமானவரை பாதுகாப்புக்கொடுத்தேன்.

sathyaseelan.jpg

1977 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சிறையில் இருந்த ஏனைய இளைஞர்களும் விடுதலை செய்யப்பட்டனர். காசிஆனந்தன், வண்ணைஆனந்தன், சேனாதிராசா,சத்தியசீலன் போன்றவர்கள் விடுதலை செய்யப்பட்டபோது நான் மிகவும் மகிழ்ந்தேன். நம்மை அவர்கள் சிறந்தமுறையில் வழி நடத்துவார்களென நம்பினேன். விடுதலை செய்யப்பட்டு யாழ்தேவியில் யாழ்ப்பாணம் வந்தவர்களை ஏனைய தோழர்களோடு வவுனியா வரை சென்று உணர்ச்சிகர கோசங்களை முழங்கியவண்ணம் அழைத்து வந்தோம். அடிக்கடி சந்தித்து அடுத்து என்ன செய்யலாமெனப் பேசுவோம்.

அவர்கள் வார்த்தைகளால் மட்டும் எம்மைத் திருப்திப் படுத்தினார்களே தவிர செயலளவில் எவ்வித நடவடிக்கையிலும் இறங்கவில்லை. இப்படியிருக்கையில் 1977 பொதுத்தேர்தல் வந்தது. உடுப்பிட்டி, நல்லூர், மட்டுநகர், கல்முனை,பொத்துவில், சம்மாந்துறை தொகுதிகளுக்கு சென்று தங்கி தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்களிக்கவேண்டிய அவசியத்தை மக்களுக்கு விளக்கினோம். பல கருத்தரங்குகளீல் கலந்துகொண்டுகொள்கை விளக்கமளித்தோம். அப்போ எனக்கு வயது 18. தமிழீழம் கோரிக்கைக்கு மக்கள் வாக்குமூலம் அளித்த அமோக ஆதரவை அடுத்து, த.வி.கூ.யினர் போராட்டத்தை நல்ல வழியில் எடுத்துச் செல்வர் என நம்பினேன்.

தொடரும்…

http://inioru.com/?p=42105

Link to comment
Share on other sites

குலசிங்கம் எனது நண்பரும் கூட ,உரும்பிராயை சேர்ந்த சிறுபான்மை இனத்தவர் .பல நாட்கள் பகலில் எங்களுடன் சந்தியில் நின்றுவிட்டு இரவு தேவன் வீட்டிற்குதான் தூங்க செல்வார் .இவரின் அண்ணா ஒருவர் பஸ் கொண்டக்ரராகவும் இருந்த ஞாபகம்.

 

.தேவனின் குறிப்பில் உள்ளது போல் இவர் பிழையான சிலருடன் தொடர்பிலும் இருந்தார் .பெயர்கள் எழுத விரும்பவில்லை .இவர்களில் சிலரும் குலசிங்கத்துடன் வருவார்கள் .வாமனை கட்டி வைத்து அடித்த நிகழ்வின் பின் அதில் ஒருவரை குலசிங்கதுடன் திரியும் ஆனந்தன் சுட்டார் .ஆனந்தனை பின்னர் இயக்கம் சுட்டது .

நாங்கள் அந்த நேரம் படிப்பு ,விளயாட்டு சுழட்டல் என்று திரிந்ததில் இவர்களுடன் கதைப்பதுடன் மட்டும் நிறுத்திக்கொண்டோம்.

 

.இவர்களுடன் திரிந்த பலர் மறைந்து போனார்கள் நாங்கள் அவர்களை மறந்து போனோம் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சிந்தித்த இளைஞர்களில் பலர் நாம் தொடர்பு கொள்ளும்போது தீவிரமாகப் பேசுகிறார்களே தவிர எம்மோடு சேர்ந்து இயக்க ரீதியாக இயங்கப் பின் வாங்கினர்
எங்களை மாதிரி சுழியன்கள .......
Link to comment
Share on other sites

அர்யுன் நீங்கள் குறிப்பிடும் ஆனந்தன் கனடாவில் இருந்து தாய்லாந்து போன இடத்தில் ஒரு விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார் என அறிந்த ஞாபகம். பல வருடங்களுக்கு முன்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து 03.06.1982 – யாழ் நகரத்தை முற்றுகையிட்ட மக்கள் எழுச்சி

ரெலா (TELA) இயக்கத்தின் தலைவராகவிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஒபரோய் தேவனின் நாட் குறிப்பிலிருந்து மூன்றாவது பகுதி இது. ஒபரோய் தேவனின் அப்பாவித்தனமான பதிவுகள் பல்வேறு உண்மைகளையும், ஈழப் போராட்டத்தின் அரசியலையும் உணர்த்துகிறது. தமிழரசுக் கட்சியின் தீவிர வலதுசாரி யூ,என்.பி அரச ஆதரவுப் போக்கைத் தொட்டுச் செல்லும் தேவனின் குறிப்புக்கள், பேரினவாத ஒடுக்குமுறை இளைஞர்களை ஆயுதமேந்தத் தூண்டியதற்கான ஆரம்பப் புள்ளிகளை கண்முன்னே கொண்டுவருகிறது. முள்ளிவாய்க்காலில் ஆயிரமாயிரமாய் மக்கள் கொல்லப்பட்டப்பட்ட போது மௌனமாகப் பார்த்துகொண்டிருந்த யாழ்ப்பாணச் சமூகம், போலிஸ் ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து நகரத்தை முற்றுகையிட்ட மக்கள் எழுச்சியை ஒபரோய் தேவன் தனது அரசியல் மொழியில் விபரிக்கிறார்.

ஒரு வேளை இந்திய அரசு இயக்கங்களை ஆயுதங்களால் வீங்கவைத்து மோதல்களால் போராளிகளை அழித்து போராட்டத்தை முள்ளிவாய்க்கால் வரை நகர்த்தி வந்திருக்காவிட்டால் மக்கள் போராட்டம் ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தமாக பரிணாமம் பெற்றிருக்க வாய்ப்பிருந்திருக்கும் என்பதை ஒபரோய் தேவனின் பதிவுகள் சிந்திக்கத் தூண்டுகின்றன.

மக்களைப் பார்வையாளர்களாக்கி எல்லாவற்றையும் ‘இயக்கம் பார்த்துக்கொள்ளும்’ என்ற சமூகப் பொதுப்புத்தி உருவாக்கப்பட்ட பின்னர் தான் இயக்கங்கள் மக்களிலும் அதிகமாகப் பலம்பெற்றன. இறுதியில் மக்கள் மீது இயக்கங்கள் தாக்குதல் நடத்தும் அளவிற்கு சிதைந்த்து சீரழிந்து போனது.

நடந்து முடிந்த ஆயுதப் போராட்டம் தொடர்பாக மட்டுமன்றி தமிழரசுக் கட்சியின் ஏகாதிபத்திய சார்பு அரசியலிலில் ஆரம்பித்து முழுமையான விமர்சனம் – சுய விமர்சனம் இன்றி புதிய போராட்டம் முளைவிட முடியாது என்பது தேவனின் தொடர் பதிவுகள் உணர்த்துகின்றன.

ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து 03.06.1982

sjv.jpg

தேர்தலில் வெற்றியீட்டிய 2 மாதம் வீரமுழக்கம் பேசியவர்கள், 5000 எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களை அணிதிரட்டுவோமென்றவர்கள் அரசு கொடுத்த சாதாரண கோட்டா ,வேலை வங்கிப்படிவங்களைப் பெற்றனரதைப்பங்கிடுகையில் தமக்கு வேண்டியவர்களுக்கு முன்னுரிமை வழங்கி தமிழ் மக்களுக்கு தஎம் மேல் வெறுப்பை ஏற்படுத்தினர் இதை எதிர்பார்த்த்க்ரசு மேற்படி சலுகைகளை கொடுத்ததால், மேற்படி நடவடிக்கைகளால் அரசு நம்மைப் பிளவுபடுத்தும் முதல் திட்டத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து அரசு இவர்களுக்கு அளித்த சிறுசிறு அதிகாரங்களால் தமிழ் முதலாளிகள் இலாபமடைந்தார்களே தவிர சாதாரண பொது மக்களல்ல. இவர்களின் இந் நடவடிக்கைகளால் நான் மிகவும் அதிருப்தி அடைந்திருந்தேன்.

இந் நாட்களில் சிறி(சிறீ சபாரத்தினம்),பரந்தன் ராயன், நான் வேறு பல இளைஞர்கள் ஒரு குழுவாக இயங்கிவந்தோம். பரந்தன், கிளிநொச்சியைச்சேர்ந்த பல இளைஞர்களும் சேர்ந்து இயங்கினர்.இந்நாட்களில் யாழ் பகுதியில் பல பள்ளி மாணவரகள், வேறும் சன சமூக நிலையங்கள் மூலமாக வேறு பல இளைஞர்களோடு தொடர்பு கொண்டு 25க்கும் மேற்பட்ட வகுப்புக்கள் நடத்தினோம்.

ஆர்வமாக முன்வந்தவர்க்ளை இயக்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்த்தோம்.இதில் குறிப்பிட்டமிக ஆர்வமானவர்களை தேர்வுசெய்து இராணுவ ரீதியிலான ஆயுதப் பயிற்சியும் அளித்தோம். இந்நாட்களிலேயே நானும் முதன் முதலாக ஆயுதங்களை இயக்கக் கற்றுக் கொண்டேன். (நாட்டின் எப்பகுதியில் இப்பயிற்சி அளீக்கப்பட்டதென்பதை குறிப்பிட விரும்பவில்லை.)தேர்தலி அமோக வெற்றி மீட்டிய த.வி.கூ. படிப்படியாக தேர்தல் வாக்குறுதிகளை மறந்து அரசு ஆதரவு நடவடிக்கைகளில் இறங்கியது. தமது வர்க்க நண்பர்கள் அரசுக் கட்டிலிலமர்ந்ததல்தான் அவர்கள் அரசுக்கெதிராக போராடமுன்வரவில்லையென அப்போது நம் உணரவில்லை. எம்மை தம்மில் நம்பிக்கை கொள்ள வைக்க, இடைக்கிடையே மிக உணர்ச்சிகரமாக பாராளுமன்றத்திலும், தமிழீழக் கூட்டங்களிலும் பேசிவந்தனர்.

சுதந்திரக் கட்சி ஆட்சியில் தலைவர் செல்வநாயகம் தலைமையில் த.வி.கூ. எத்தனையோஅகிம்சைப் போராட்டங்களை சாதாரண பிரச்சனைக்கெல்லாம் நடத்தியது. ஜ.தே .க. பல ஒடுக்குமுறை நடவடிகைகளில் ஈடுபடும்போதுகூட பேசாமல் அல்லது சாதாரண கண்டனக்குரலோடு மட்டும் நிறுத்தினர். தேர்தலில் வென்றவுடன் தமிழீழ தேசிய மன்றம் அமைப்போம் என்றவர்கள் அப்பேச்சை அப்படியே மாற்றி தக்க சமயம் வரும்போது மன்றம் அமைப்போம் என்றனர்.

இப்படி இருக்கையில் 1977 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) பற்றிக்ஸ் மைதானத்தில் இறுதி நாளாக நடந்த காணிவெல் விழாவிற்கு என் சக மாணவரோடு சென்றிருந்தேன். விழா முடிவுறும் நேரத்தில் இரவு 12 மணியளவில் நுளைவுச் சீட்டுப் பெறாமல் விழாவிற்குக் குடிபோதையில் நுளைந்த 10 இற்கு மேற்பட்ட சாவகச்சேரிப் போலிசார் சாதாரண பொது மக்களோடும் இளம் பெண்களோடும் தகாத முறையில் நடந்தனர். புது மணப் பெண்ணிண் மேனியில் கணவன் பக்கத்திலிருக்கும் போதே கை போட்டனர். இதைக்கண்டு கோபமடைந்த கணவன் அவர்களைப் பேச கோபம் கொண்ட போலிசார் அவரைத் தாக்கினர். அப்போ நாம் பிளாசா கடையில் இரவு உணவு உட்கொண்டுகொண்டிருந்தோம். நாம் சாப்பிடுகையில் போலிசார் பிளாசா கடை காசாளரிடம் தமக்கு உடனடியாக உணவு வேண்டும் எனக் கேட்டனர். கடையில் கூட்டம் அதிகமாகையால் மற்றவர்களுடன் நிரையில் வருமாறு காசாளர் கூற அவரைப் போலிசார் தாக்கினர்.

நாம் உணவகத்தை விட்டு வெளியே ஓடி வந்தோம். அங்கே மற்றப் போலிசார் நின்று கொண்டிருந்தனர். அப்போதான் அவர்கள் சிங்களப் போலிசார் என எமக்குத் தெரியும். கிட்டத்தட்ட பத்து பேர்வரை நின்றிருந்தார்கள். நான் எனது சக மாணவனைத் தாக்குதலுக்குத் தயாராகுமாறு கூறி மற்றவர்களைச் சிதறி ஓட வேண்டாம் என்று தடுத்தேன். போலிசார் எதிர்பாராத வகையில் கற்களாலும் பொல்லுகளாலும் பயங்கரமாகத் தாக்கினோம். எதிர்பார்த்தபடி போலிசார் பின்வாங்கினர். யாரையும் தப்பி ஓடவிடாது மயங்கி விழும்வரை தாக்கினோம். பின்பு மக்களை உடனடியாக மைதானத்தை விட்டுப் புறப்பட்டச் சொல்லிவிட்டு நாமும் புறப்பட்டோம்.

1977.jpg

இதன் எதிரொலியாக ஜுன் 15 ஆம் திகதி இரவு யாழ் நகரில் சென்றுகொண்டிருந்த பஸ், கார் லாரிகள் தாக்கப்பட்டன. நடத்துனர்கள் பயங்கரத் தாக்குதலுக்கு உள்ளானார்கள். 2வது படக்காட்சி முடிந்து வந்துகொண்டிருந்த மக்கள் திட்டமிட்டு அரசபடைகளால் பயங்கரமாகத் தாக்கப்பட்டனர். யாழ், பழைய புதிய வியாபார நிலையங்கள் தீக்கிரையாகின. பஸ் நிலையம் முன்னால் இருந்த அனைத்துப் பெட்டிக்கடைகளும் எரிக்கப்பட்டன. மறு நாள் காலை இச்செய்தி காட்டுத் தீ போல குடா நாடெங்கும் பரவியது. மக்கள் அணியணியாக யாழ் நகரை நோக்கிப் படையெடுத்தனர்.

காலை 9 மணியளவில் வங்கிக்குக் கடமை செய்ய போலிஸ் நிலையத்திலிருந்து ஆயுத பாணிகளாகச் சென்ற இரண்டு போலிசாரை மக்க்கள் தாக்கி அவர்களிடமிருந்த ஆயுதங்களைப் பறித்து உடைத்தெறிந்தனர்.ன் சந்தைக்கு ஜீப் வண்டியில் வந்த போலிஸ் அதிகாரி தாக்கப்பட்டார்.

அவர் வந்த வண்டி தீக்கிரையாக்கப்பட்டது.

இம் மக்கள் எழுச்சியால் போலிசார் பின்வாங்கினர். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போலிசார் காவல் நிலையத்திலிருந்து வெளியேவரப் பயந்து உள்ளேயே அடங்கியிருந்தனர். இந் நேரத்தில் நாம் மிக மிக உணர்ச்சி வசப்பட்டிருந்தோம். போலிசாரைத் தாக்க வேண்டும் என்று மனம் துடித்தாலும் கையில் தக்க ஆயுதங்கள் கிடைத்திருக்கவில்லை. இப்படியிருக்க ஏனைய மக்களோடு சேர்ந்து டயர்களை முக்கிய சந்திகளில் போட்டு எரித்து போலிசாரை நிலையத்தை விட்டு வெளியே வராமல் தடுத்தோம். பல மணிநேரம் களித்து ஜிப்பில் வெளியே வந்த போலிசார் வண்டியை மேலும் செலுத்த முடியாதவாறு தடுமாறினர்.

police_lanka.jpg

அத்தனை போலிசாரிடமும் துப்பாக்கி மற்றும் கவச அணிகள் இருந்தன. வண்டியைத் தடைகளை மீறிச் செலுத்த முடியாது தடுமாறிய போலிசாரை மக்கள் தாக்கினர். எதுவும் செய்ய முடியாத சூழ் நிலையில் போலிசார் ஆகாயத்தை நோக்கி வேட்டுக்களைத் தீர்த்து மக்களைப் பயமுறுத்தி மக்களைக் கலைந்து போகச் சொன்னார்கள். மக்கள் மாறாகக் கற்களால் போலிசாரைத் தாக்க சில போலிசார் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து போலிஸ் அதிகாரி மக்களைத் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கலைந்து போகுமாறு ஆணையிட போலிசார் மக்களை நோக்கி சிறிதும் கூசாமல் துப்பாக்கிப் பிரையோகம் செய்தனர். இதனால் நால்வர் அந்த இடத்திலேயே உயிர் துறக்க பலர் காயமடைந்தனர்.

உணர்ச்சி வசப்பட்ட நிலையில் நாம் சிங்கள வியாபார நிலையங்களையும் அரச வியாபார நிலையங்களையும் நாசப்படுத்தினோம். இதனால் பி.எம்.சி கட்டடம், லக்சலா, சலூ சலா, குணசேனா, சிற்றி பேக்கரி, வேறும் சில சிங்கள சிங்களவர் கடைகள் சேதமாக்கப்பட்டன. நாம் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் போது சாதாரண மக்கள் பா பொருட்களை எடுத்துச்சென்றனர். நாம் பல பெறுமதிவாய்ந்த பொருட்களை(தையல் இயந்திரம் உட்பட) சேதப்ப்படுத்தினோம். கட்டடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தில் இருந்து மட்டும் எமக்குத் தேவைப்பட்ட வாள்கள் கத்திகள் உட்பட வேறு ஆயுதங்களை எடுத்தோம். இச் செயல்களில் சிறீ (டெலோ சிறீ சபாரத்தினம்) முக்கிய பங்கு வகித்தார்.

இந்த நேரத்தில் வேறு சில இளைஞர்கள் டைனமைட் தவடிகளக் கொழுத்தி போலிசார் இருந்த பக்கம் வீசினர். போலிசாருக்கு எவ்வகையான வெடி மருந்து தம்மை நோக்கி வீசப்பட்டது எனத் தெரியாததால் பயந்து பின்வாங்கினர். இன்னொரு சந்தர்ப்பத்தில் போலிசாரை நோக்கி வீசப்பட்ட வெடுகுண்டு வெடித்ததில் தற்செயலாக அவ்வழியாக வந்த என் சக மாணவர் ஒருவரின் கை முறிவடைந்தது.

இதே வேளை குலசிங்கம் பல வீடுகளுக்குச் சென்று மக்களுக்குச் சொந்தமான துப்பாகிகளஒ பெற்று அவற்றைச் சாதாரணமாகத் தோளில் தொங்கப்போட்டபடி பலாலி வீதியால் வந்து வளாகத்தினுள் புகுந்து அங்கு பாதுகாப்பறையிலிருந்த துப்பாகிகளையும் பலவந்தமாகப் பறித்தார்.

http://inioru.com/?p=42224

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து(4) – கொள்ளையர்களால் கொல்லப்பட்ட குலசிங்கம்

எண்பதுகளில் பெருந்தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த இளைஞர்களில் ஒபரோய் தேவனும் ஒருவர். தமிழீழ விடுதலை இராணுவம் -TELA- என்ற அமைப்பை உருவாக்கி அதற்குத் தலைமை தாங்கியவர். புலிகளால் படுகொலை செய்யப்பட்ட இயக்கத் தலைவர்களுள் ஒபரோய் தேவனும் ஒருவர். திருனெல்வேலியைச் சேர்ந்த தேவன் ஆரம்பகாலப் போராளிகளுள் ஒருவர். தன்னெழுச்சியாக, ரெலோ இயக்கத்தின் தலைவராகவிருந்த சிறீ சபாரத்தினம் போன்றோருடன் தனது இராணுவக் குழுவை ஆரம்பித்த தேவன் புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட பலரோடு இறுதிவரை தொடர்பைப் பேணுகிறார். ஒபரோய் தேவன் கொலை செய்யப்பட்ட காலத்தில் வெளிவந்த அவரின் நாட்குறிப்பு இனியொருவில் தொடர்ச்சியாக மீள் பதிவிடப்படுகிறது. பல்வேறு தகவல்கள் போராட்டத்தின் ஆரம்பம் குறித்த தகவல்களை வெளிக்கொண்டு வருகிறது. தவறுகளும் சேர்ந்தே நிறுவனமயப்பட்டு மக்கள் எழுச்சிகள் அழிக்கப்பட்டு இராணுவக் குழுவாதமாக மாறும் ஆரம்ப காலம் எப்படி முள்ளிவாய்காலுக்கு முன்னுரை எழுதியது என்பதை தேவனின் ஒளிவு மறைவற்ற பதிவுகள் இன்று எமக்குச் சொல்கின்றன.

04.08.1982

jaffnas.jpg

அன்று முழுவதும் அரசை பாதிக்கக்கூடிய , நட்டமடையவைக்கக்கூடிய என்னென்ன காரியங்களைச் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து முடித்தோம். மாலை 7 மணி அளவில் அனுராதபுரத்திலிருந்து சிறிலங்கா ராணுவம் யாழ் நகருக்கு படையெடுத்து வந்தே மக்கள் கிளர்ச்சியை,எதிர்ப்பை அடக்கியது. டிரக் வண்டிகளில் ஏராளமான இராணுவத்தினர் ஆயுதபாணியாக தயார் நிலையில் யாழ் நகரில் ரோந்து வந்தனர். 1958 ஆம் ஆண்டுக்குப் பின் அன்று தான் இராணுவம் ஆயுதபாணியாகி யாழ் குடாநாடு முழுவதும் காவலில் ஈடுபட்டது எனது வாழ்நாளில் இராணுவமுற்றுகையைக் கண்டது அன்றே. இராணுவத்தினர் டிரக் வண்டிகளில் வெளியேறி ரோந்து வந்ததைப் பார்க்கப் பார்க்க எனது வேகம் பல மடங்காகியது. ஏதாவது ஒரு வகையில் இராணுவத்தினரைத் தாக்க வேண்டும் என்ற வெறியோடு வீடு வந்து சேர்ந்தேன்.

இரவு 8 மணியளவில் குலசிங்கம் வீட்டிற்கு வந்தார். அடுத்த நாள் பகல் யாழ்வளாக சிங்கள மாணவரை இராணுவபாதுகாப்போடு இ.போ.ச. வண்டிகளில் சிறிலங்காவிற்கு அனுப்ப முயற்சிகள் நடப்பதாகக் கூறினார். வளாக சிங்கள மாணவரை சிறிலங்காவிற்கு அனுப்புவதன் உள்நோக்கம் இவர்களை சிறிலங்காவிற்கு அனுப்பியதும், இராணுவமும் பொலீசாரும் சேர்ந்து தமிழீழத்திலுள்ள தமிழ் மக்களைத் தாக்குவதும், சிங்கள இனவெறியர் சிறிலங்காவில் உழைப்புக்காக வாழும் தமிழ் மக்களைத் தாக்கவுமாகும். உள்நோக்கைப்புரிந்து கொண்ட நாம் எப்படியும் வளாக சிங்கள மாணவரை சிறிலங்காவிற்கு செல்லவிடாமல் தடுக்க வேண்டுமென முடிவெடுத்தோம். அன்று இரவு முழுவதும் அடுத்த நாள் நாம் என்னென்ன வேலை செய்ய வேண்டுமென யோசித்து முடிவு செய்தோம். திட்டமிட்டபடி காலை செயற்படத் தொடங்கினோம். காலை கையில் 2 கைத்துப்பாக்கிகளோடு புறப்பட்டு அரசுக்குசொந்தமான ஜீப் வண்டியொன்றை கைப்பற்றி துப்பாக்கி வைத்திருப்போரின் வீடுகளிற்குச் சென்று 1,2 துப்பாக்கிகளைப் பலாத்காரமாகப் பெற்றோம்.

நாம் இந் நடவடிக்கையிலீடுபடும் போது உரும்பராய் ஆனந்தன் ஓட்டுமடச்சந்தி உட்பட இன்னும்சில இளைஞர்கள் சில துப்பாக்கிகளை பொலிஸ்காரர்களிடம் ப் பாறித்து அரசாங்க அதிபரின் ஜீப் வண்டியையும் பலாத்காரமாகப் பறித்து கூட்டுறவுச் சங்கங்களிலும்,வங்கிகளிலும் கொள்ளைஅடிக்கத் தொடங்கினார்கள்.

கூட்டுறவுக் கடைகளில் அரிசி,புளி மூட்டைகளை கொள்ளை அடித்து தமக்குவேண்டிய ஒருவரின் வீட்டில் இறக்குவதை நான் நேரில் கண்டேன்.மாலை 3 மணியளவில் கம் ஜீப்பை எரித்துவிட்டு குலசிங்கத்தோடு பேசி எமது ஜீப்புக்குள் வந்து ஏறினர். எமது முயற்சிக்குத் துணைபோவதாகக் கூறிவந்தார்கள் படிப்படியாக தம் வேலையைத் தொடங்கினர். எந்தெந்த வங்கிகள் எல்லாம் திறந்திருக்கிறதோ அந்தந்த வங்கிகளுக்குள் எல்லாம் சென்று கொள்ளை அடிக்க முற்பட்டனர்.வண்டியை நாம் பயன் படுத்தும் செய்தி கடற்படைக்கு எட்டியது. குளப்பிட்டி(கொக்குவில்) சந்தியில் வைத்து கடற்படையால் மறிக்கப்பட்டு, ஜீப்பில் இருந்த அத்தனை இளைஞர்களும் துப்பாக்கிப்பிடியால் பயங்கரமாகத் தாக்கப்பட்டார்கள். மூவர் மட்டும் கடற்படையினர் கண்ணில் மண்ணைத்தூவி தப்பியோடினர்.

சிறிது தூரம் சென்றதும். கடற்படையினர் துப்பாக்கிப்பிரயோகம் செய்தனர் . (எஸ்.எம்.ஜி) அன்று நான் உயிருடன் தப்பியது புதினமே. அன்றைய தினத்தை என் வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது. ஏதோ செய்ய முற்பட்டு பிழையானவர்களின் தொடர்பால் திசை மாற்றப்பட்டு இறுதியில் பிடிபட்ட இளைஞர்களால் எம் பெயர், முகவரி போலீசாருக்குக் கிடைத்து நாம் போலீசாரின் தேடுதலுக்குள்ளானதே மிச்சம்.

முன்பே பொலீசார் எந்நேரமும் வீட்டுக்கு வரலாமென எதிர்பார்த்து வேறு பாதுகாப்பான இடத்தில் தங்கியிருந்ததால் அவர்கள் பிடியிலிருந்து தப்பினேன் .தலைமறைவாக வாழும் அனுபவம் எனக்குப் புதியதே. மிகவும் அன்பாகப் பழகிய உறவினர் பாதுகாப்புத் தருவரென நம்பி அவர்களை நாடினேன். 90% மானவர் தாம் பயப்படுவதாக சொல்லாமல் சொல்லிக் காட்டினர் இறுதியில் என் நண்பர் சிங்களப் பகுதியில் வேலை செய்தாலும் அது மிகமிக ஒதுக்குப் புறமான இடமாக இருந்தாலும் அவருடனேயே தங்கினேன். பல நாட்கள் எந்த இயக்க வேலையையோ நடவடிக்கையிலேயோ ஈடுபடவில்லை. ஆகஸ்ட் 77 முதல் ஒக்டோபர் 77வரை,

santhathiyar.jpg

சந்ததியார்

இந் நாட்களில் சந்ததியார் பரந்தன் ஞானசேகரன் போன்றோர் கலவரத்தால் பாதிப்புற்று வந்த அகதிகளுக்கு தமிழீழப் பகுதிகளி பண்ணைகள் அமைத்து. புது வாழ்வு வாழ வசதி செய்து கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந் நாட்களில் குலசிங்கத்தோடு முழுத்தொடர்பும் அறுந்தது. மூன்று மாதத்திற்குப் பின் யாழ்ப்பாணம் திரும்பியதும் குலசிங்கம்,ஆனந்தன், சந்திரன் ஆகியோரோடும் கொள்ளையடித்த பணத்தோடும் பொலிசாரிடமிருந்து தப்பி மட்டுநகர் சென்று அங்கு வாழைச்சேனைப் பகுதியில் வாழ்ந்து வந்ததாகவும், குலசிங்கம் கொள்ளையடித்த பணத்தை தமக்கு நம்பிக்கையான த.இ.பே. தலைமை உறுப்பினரிடம் கொடுத்து விட்டு தாம் தப்பி இந்தியாவிற்கும் போவோமெனக் கூறினாராம்.

அதற்கு ஆனந்தன், சந்திரன் ஆகியோர் அப்படி முடியாது.கொள்ளை அடித்த பணம் தமதே, நாம் அவற்றைப் பங்குபோட்டுகொள்வோம் என்று கூறினர்.

அப்போதுதான் அவர்களின் உண்மைரூபத்தை அறிந்த மிக மிக மனவருத்ததுடன் 2,3 நாட்கள் சாப்பிடாமல் கொள்ளமல் இரவு வேளைகளில் அவர்களுடன் தங்காது வாழைச்சேனை பஸ் நிலையத்தில் சென்று படுத்ததாகவும் அறிந்தேன். குலசிங்கம் பணவிடையத்தில் தம்மோடு ஒத்துவராததால் அதிர்ப்தி அடைந்த ஆனந்தன், ஒரு நாள் குலசிங்கம் தான் தங்கும் பண்ணைக்குச் சென்று துவாயை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த குளத்தில் குளிக்கச் செல்ல, பின்னால் துப்பாக்கியுடன் சென்று குறிவைத்தவண்ணம்(குலத்தை நோக்கி) குலசிங்கத்தைக் கூப்பிட்டுள்ளான். குலசிங்கம் திரும்பிப்பார்க்கும் போது சரியாக அவன் மார்பை நோக்கிச் சுட்டுள்ளான். குலசிங்கம் அந்த இடத்திலேயே துடிதுடித்துச் செத்தாராம். பின்னர் அவரைக் குளத்தருகே புதைத்து, அது அந்த ஊர்மக்களுக்குத் தெரிய வந்ததும், ஆனந்த அப்போ வாழைச்சேனையில் வேலைசெய்த பொலிஸ் அதிகாரிக்கு 25000 ரூபா கொடுத்து அவர் ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் நாவல் நகரைச் சேர்ந்தவர் என்றும் கூறி அவர்களைச் சமாளித்தனர்.

இச்செய்தி யாழ் பொலிசாருக்குத் தெரிய வந்ததும், அவர்கள் அப்பிணத்தைத் திரும்பக் கைப்பற்றி, குலசிங்கத்தின் மச்சானை(இராணுவ அதிகாரி) கொண்டு அவரை அடையாளப்படுத்தினர்.

குலசிங்கத்தின் மறைவு என்னை மனவேதனைக்கு உள்ளாக்கியது, என்னைப் பல வழிகளிலும் சிந்திக்க வைத்தது. சரியான கொள்கையின்றி, விடுதலையில் உறுதியானவர்களின்றி, வெறும் கொள்ளையை மட்டும் நோக்கமாகக் கொண்டவர்களை நம்பி, அவர்களோடு சேர்ந்து நடவடிக்கைகளில் இறங்கியதால் ஏற்பட்ட விளைவு இது. குலசிங்கத்தின் மறைவை அறிந்து அவரோடு பழகிய விடுதலை விரும்பிகள் த.இ.பேரவை உறுப்பினர்கள், விடுதலை இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் மனவேதனை அடைந்ததனர்.

இன்று வரை அவர் விடுதலையில் கொண்டிருந்த ஆர்வத்தையோ, மன உறுதியையோ, ஆயுதப் போராட்டத்தில் அவர் கொண்டிருந்த நம்பிக்கையையோ, அந்த வழியில் அவர் வேகமாகச் செயற்பட்டதையோ யாரும் குறைத்து மதிப்பிடவில்லை. பிழையான சேர்க்கைக்குப் பதில் நல்ல இளைஞர்களோடு விடுதலையில் நம்பிக்கை கொண்ட இளைஞர்களோடு, தொடர்புகொண்டு நிதானமாகப் போராடியிருந்தால் இன்றி தம்மைத்தாமே தலைவர்கள் என்று கூறுபவர்கள் திகைக்கும் வண்ணம் ஒரு சிறந்த ஆற்றல் உள்ள போராட்ட வீரனாகப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றிருப்பார்.

தொடரும்…

http://inioru.com/?p=42348

Link to comment
Share on other sites

குலசிங்கம் எனது நண்பரும் கூட ,உரும்பிராயை சேர்ந்த சிறுபான்மை இனத்தவர் 

 

அடடே ...  அண்ணை  சிறுபான்மை இனத்துக்கை ஒரு சிறுபான்மை இனத்தை கண்டு பிடிச்சு இருக்கிறார்...   

 

அது சரி அண்ணை இனம் எண்டால் என்ன...?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனம் எண்டால் என்ன...??

இது மிகவும் கடினமான கேள்வி. இதற்கு பதில் தேடுவதை விட பிரமாவும் திருமாலும் அடிமுடி தேடிய கதையைப் படித்தால் கொஞ்சம் பிரயோசனமாக இருக்கும்.

Spoiler

தான் ஆக்குவதனாலேதான் காப்பதற்கு உயிர்கள் இருப்பதால் ‘தானே பெரியவன்’ என்று பிரம்மாவும், தான் காப்பதினால்தானே எவரும் உயிரோடிருப்பதால் ‘தானே பெரியவன்’ என்று விஷ்ணுவும் வாதித்துக் கொண்டிருந்தனர். இந்த வாதம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்ததால், அவர்களின் தொழிலை நம்பி இருந்த அனைவரும் பாதிக்கப்பட்டனர். வாதம் ஒரு முடிவுக்கும் வராது முற்றிக்கொண்டு இருந்ததால், முழு முதற் கடவுளாகிய பரமசிவன் அவர்கள் முன் ஆகாயத்திற்கும் பூமிக்கும் பரவியிருக்கும் ஒரு அக்னிப் பிழம்பாகத் தோன்றினார். அசரீரியாக ‘எவர் முதலாவதாக தனது அடியையோ முடியையோ காண்கிறாரோ, அவரே பெரியவர்’ என்று கூறுகிறார். அவர்களிருவரும் தங்கள் தங்கள் பெருமையிலேயே மூழ்கியிருந்ததால், தம் முன் வந்தவர் யார் என்று கூட அறிய இயலவில்லை. உடனே விஷ்ணு ஒரு வராஹ உருவம் எடுத்துக்கொண்டு பூமியைத் துளைத்துக்கொண்டு அடியைக் காணவும், பிரம்மன் ஓர் அன்ன வடிவம் எடுத்துக்கொண்டு மேலே பறந்து சென்று முடியைக் காணவும் சென்றனர்.

சிறிது காலம் சென்ற பின் அடியைக் காண இயலாத விஷ்ணு சற்று சோர்வடைந்ததும், அசரீரியாக வந்திருப்பவர் பெரியவர் என்பதை உணர்ந்தார். மேலே பறந்து சென்ற பிரம்மாவோ, மேலேயிருந்து விழுந்து கொண்டிருந்த தாழம்பூ ஒன்றைப் பார்த்து, ‘அங்கிருந்து நீ வருவதால், நான் முடியைப் பார்த்துவிட்டதாக சாட்சி சொல்ல வா’ என்று அழைத்துக் கொண்டு அவரிடம் சென்று அவ்வாறே கூறினார். உண்மை நிலையை உணர்ந்ததற்காக விஷ்ணுவை ‘எல்லா இடங்களிலும் விஷ்ணுவிற்குக் கோவில்கள் இருக்கும்’ என வந்தவர் வாழ்த்தினார். பொய் சொன்ன பிரம்மாவிற்கு கோவில்கள் எங்கும் இருக்காதென்றும், பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூஜைக்கு ஆகாதென்றும் சாபமிட்டார்.

ஆருத்ரா தரிசனத்தன்று அந்த நீள் நெடுஞ்சுடர் தோன்றியது என்றும், அதன் தாபம் தாங்காது விஷ்ணு முதற்கொண்டு அனைத்து தேவர்களும் வேண்டிக்கொண்டதால் அதுவே மலை உருவாகத் திருவண்ணாமலை ஆனது என்றும் புராணம் கூறுகிறது. இந்த நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில் தான், ஒவ்வொரு சிவன் கோவிலிலும், சிவனுக்குப் பின்புறம் பிரகாரத்தில் லிங்கோத்பவர் சிலை உள்ளது. அதற்கு மஹா சிவராத்திரி அன்று நள்ளிரவில் அபிஷேகம் நடக்கும்.

இவ்விரு கடவுளர்களும் தங்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்திருப்பார்கள் என்று நம்பக்கூடும். இதிலிருந்து நாமும் சில உண்மைகளை உணரக்கூடும். அதாவது, ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு என்பதை உணரவும், அதே போன்று மற்றவர் பொறுப்புகளை மதிக்கவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நம் பொறுப்புக்கு நமக்கு எவ்வளவு சுதந்திரம் உளளதோ, அதே போன்று மற்றவர் பொறுப்பையும் அதன் விளைவுகளையும் நாம் சார்ந்திருக்கிறோம். இதனை உணர்ந்தால் எந்தச் சமூகம் தான் வளர்ந்து முன்னேற முடியாது? இந்நிகழ்ச்சியை அலசினால் இது தவிர மேலும் பல உண்மைகளையும் உணரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடே ...  அண்ணை  சிறுபான்மை இனத்துக்கை ஒரு சிறுபான்மை இனத்தை கண்டு பிடிச்சு இருக்கிறார்...   

 

அது சரி அண்ணை இனம் எண்டால் என்ன...?? 

தான் பெரும்பான்மை என்பதை அவர் சொல்லாமல் சொல்லி நிற்கின்றார் .

Link to comment
Share on other sites

தான் பெரும்பான்மை என்பதை அவர் சொல்லாமல் சொல்லி நிற்கின்றார் .

 

இடைக்கிடை அவருக்கை இருக்கும் பூனை வெளியாலை எட்டி பாக்குது இல்லை...?? 

Link to comment
Share on other sites

பூனை புலி என்று எல்லாம் இல்லை ,உள்ளதை உள்ளபடி கதைக்க வேண்டும்.  நடிக்க கூடாது ,எம்மவருக்கு அது கை வந்த கலை .நாங்கள் அந்த நிலையெல்லாம் தாண்டி பலவருடங்கள் .

 

தலித் ,சிறுபான்மை என்று அவர்களே தங்களை சொல்லிக்கொள்கின்றார்கள் ,நாங்கள் இலங்கையில் சிறுபான்மையினர் என்று தானே சொல்லிக்கொள்கின்றோம் .இதில் என்ன தப்பிருக்கு .

 

அரசியலில் நீங்கள் எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னமும் ரொம்ப அதிகம் தம்பிமாரே .(புலிகளில் இருந்தவர்களுக்கும் அதற்கும் வெகு தூரம் என்று தெரியும் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து (5) -தனி நபர் படுகொலைகளின் ஆரம்பம்

‘ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து’ ஐந்தாவது பகுதி பதியப்படுகிறது. 10 ஆண்டு கால ஆயுதப் போராட்ட வரலாற்றின் ஆரம்ப காலம் மக்களை அணிதிரட்டுவதிலிருந்தோ, ஆயுதப் போராட்டத்திற்கு புரட்சிகர மக்கள் பிரிவுகளை ஆதார சக்திகளாக இணைத்துக் கொள்வதிலிருந்தோ ஆரம்பிக்கவில்லை. தனி நபர் படுகொலைகள், இலங்கை அரச பெரும்பான்மைக் கட்சிகளை அழித்தல் போன்ற தனி நபர் இராணுவ வன்முறைகளிலிருந்தே ஆரம்பமானது. ஒரு புறத்தில் பலமான மக்கள் அணிகளைக் கொண்டிருந்த கம்யூனிச இயக்கங்கள் தேசிய விடுதலைப் போராட்டம், தேசிய இன முரண்பாடு குறித்து கோட்பாட்டுரீதியான தவறான முடிவுகளை முன்வைத்து போராட்டத்திலிருந்து அன்னியப்பட்டிருந்தன. உணர்ச்சிவயப்பட்ட சாகசவாத இளைஞர் குழாமின் தன்னிச்சையான தாக்குதல்கள் மக்களைப் பார்வையாளர்களாக்கியது. போராடப் பயிற்றுவிக்கப்பட வேண்டிய மக்கள் வேடிக்கை பார்க்கப் பழக்க்கப்படுத்தப்பட்டனர். மக்கள் பலத்தில் தங்கியிருக்க வேண்டிய இயக்கங்கள் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த காலம் இது. தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலைசெய்யப்பட்ட ஒபரோய் தேவனின் நாட்குறிப்பு ஒளிவு மறைவற்ற வரலாற்று ஆவணம்.

09.08.1982

1977 அக்டோபர் மாதம் யாழ் வந்து பரந்தன் ராஜனோடு தொடர்பு கொண்டேன். அவர் அப்போதுவேறு இளைஞர்களோடு பண்னைகள் நடத்திக் கொண்டிருந்தார். நானும் அவர்களோடு சேர்ந்து பண்னையில் தங்கி விவசாயப் புத்தகங்கள் படித்து கலந்துரையாடல் ஆகிய பணிகளில் ஈடுபட்டேன். அப்போ சிறி(சிறீ சபாரத்தினம் -TELO), குட்டிமணி, தங்கண்ணாக்களோடு சேர்ந்து இயங்கிக் கொண்டிருந்தார். ராஜன் நாட்டுவிடுதலையில் மிகவும் பற்றுடையவராயிருந்தாலும் கிளிநொச்சி தொகுதியில் சில்லறை விடையங்களுக்கெல்லாம் பிரச்சனைப்பட்டு பலரைப் பகைத்துக் கொண்டார்.

சக உறுப்பினர்களோடு பழகும்போது தன்னை எப்போதும் எல்லோரையும்விட வல்லவர் போலவும் தான் உயர்ந்தவர் என்ற போக்கில் நடந்து கொள்வார். இதனாலேயே சிறி அவர் தொடர்பை அறுத்தார். சிறி தான் ஏன் ராஜனோடு சேர்ந்து இயங்கவிரும்பவில்லை என இறுதிவரைக் எனக்குக் கூறவில்லை. அதே குறைபாடுகளை நானும் ராஜனிடம் கண்டே விலகினேன்.

thangathurai.jpg

தங்கத்துரை

விலகிய காலம் தொட்டு சிறி, தங்கண்ணாவோடேயே (தங்கத்துரை) சேர்ந்து இயங்கி வந்தேன். எமது இயக்கத்திற்கான தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டேன். அந்நாட்களில் நான்சார்ந்த இயக்கத்தால் துப்பறியும் இலாகா பொலீஸ் அதிபர்(யாழ்ப்பாணம்) பத்மநாதன். பொலீஸ் அதிபர் குமார், துப்பறியும் பொலிசார் சம்பந்தன் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். திரு. அருளம்பலம் (சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்) திரு. வினோதன்( சிறிலங்கா சு.க.அமைச்சர்) திரு.கணேசலிங்கம் யாழ் ஜக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் ஆகியோரை கொலை செய்ய முற்சிகள் நடந்தன. வல்வெட்டித்துறையில் ஓர் ஆணும் பெண்ணும் ( கணவன் மனைவி) இயக்க உறுப்பினர்களைக் காட்டிக் கொடுத்தற்காக சுட்டுக் கொல்லப்பட்டனர்.

எமது இயக்க உறுப்பினர் இருவரை இராணுவ வீரர்கள் இருவர் கைது செய்து அழைத்துச் செல்கையில் தொண்டமானாறு இராணுவ முகாமருகிலேயே சென்று துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவ்விருவரும் மீட்கப்பட்டனர். துப்பாக்கி முனையில் நாம் இயக்க உறுப்பினரை அழைத்துச் சென்ற இராணுவத்தினர் ” என்ர அம்மா, நான் செத்தேன்” எனக்கத்திய வண்ணம் புறமுதுகு காட்டி ஓட்டமெடுத்தனர்.

1979 பங்குனி மாதம் எனக்கு கொழும்பில் சப்பாத்து தொழிற்சாலையில் கணித லிகிதர் பதவி கிடைத்தது. சக உறுப்பினர் கொழும்பில் நான் இருப்பது இயக்கத்திற்கு பல விதத்திலும் நன்மையே எனக் கருதி என்னை வேலைக்கு செல்லச் சொல்லி வற்புறுத்தினர். நான் சென்று 5 மாதம் வேலை செய்தேன். இயக்க நடவடிக்கைகளீலிருந்து போராட்டத்திலிருந்து நான் விலகியது போன்ற உணர்வு ஏற்பட்டு தினமும் என்னை வாட்டியது. சேர்ந்து ஜந்தாம் மாதமே யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் யாழ் வந்து சேர்ந்தேன். வீட்டாரின் திட்டுதலுக்காளானேன்.

1979 ஆனி மாதம் இயக்க உறுப்பினரோடு சேர்ந்து பண்ணைக்குப் புறப்பட தயாராகும் போது (புறப்படுவதற்கு முதல் நாள் இரவு 10:30 மணியளவில்) கொழும்பில் பிரபல 5 நட்சத்திர கோட்டலிற்கு வேலைக்குப் போகும்படி வற்புறுத்தினர். நான் மறுத்துவிட்டேன். சிறியிடம் என்னை எப்படியும் அனுப்பும்படி வற்புறுத்தினர். ஒன்றும் செய்ய முடியாத கட்டத்தில் வேலைக்குச் சென்றேன். வேலைக்குச் சேர்ந்த அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் நடந்த தொடர்வன்முறைப் போராட்டத்தினால் கிலி கொண்ட அரசு, யாழ் மாவட்டத்திற்கு பொறுப்பாக( போராளிகளை கைது செய்ய அல்லது கொன்று குவிக்க) பிரிகேடியர் திஸ்ச வீரதுங்காவையும் அவருக்கு துணையாக பல இராணுவவீரர்களையும் யாழ்ப்பாணத்திற்கு அணூப்பி வைத்தது.

thissa.jpg

திஸ்ச வீரதுங்க

பயங்கரவாத தடுப்புச் சட்டம் என்ற போர்வையில் காவல் துறையினருக்கும், இராணுவ வீரருக்கும் யாழ் குடாநாட்டில் வாழும் தமிழ் மக்களை வேண்டியதெல்லாம் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது. பிரிகேடியர் புரட்சியாளர்களைக் கைது செய்ய அல்லது அழிக்க பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுத்ததால் நம் இயக்க முக்கிய உறுப்பினர் அனைவரும் தன் இந்தியாவிற்கு தப்பிச் சென்றனர். இதனால் எனக்கும் இயக்கத்திற்கு மிடையேயான தொடர்பு அறுந்தது. சில காலம் அடுத்து என்ன செய்வதெனத்தெரியாது தவித்தேன். இடக்க உறுப்பினரை ஏறக்குறைய 6 மாதம் வரை காணாததால் தனியாக என்னால் முடிந்ததை நாட்டிற்கு செய்வோமென்ற முடிவுக்கு வந்தேன். எம் இயக்கத்திற்கு அப்போ பெயர் ஏதும் வைக்காததால் “தமிழ் ஈழ விடுதலை இராணுவம்” என்ற பெயரில் இயக்க வேலைகளைத் தொடர்வது என முடிவெடுத்தேன்.

அந்த அடிப்படையில் முதலில் கொழும்பில் படிக்கும் இளைஞ்ர்களோடு, தொழிலில் (அரசு,தனியாரிடம்) ஈடுபட்டிருப்பவரோடும் தொடர்பு கொண்டு தமிழீழ விடுதலையை அடைய இயக்க ரீதியாக கட்டுப்பாடோடு ஒன்றுபட்டுப்போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினேன். பலர் நழுவினர்.சிலர் சேர்ந்து போராட முன்வந்தனர். இப்படி கொழும்பில் ஏறக்குறைய 40 நம்பிக்கையான உறுப்பினர்களையும் யாழ் ,திருமலையில் பல இளைஞர்களையும் சேர்த்தேன்.

நான் தனியாக இயங்குவதைக் கேள்விப்பட்ட EROS மற்றும் லண்டனிலிருந்து வந்த TLO ஆகியோர் என்னைத் தம்மோடு சேர்ந்து இயங்குமாறு அழைத்தனர். நான் வேண்டிய உதவிகளைச் செய்வதாகக் கூறினேன். சேர மறுத்தேன். காரணம் தங்கண்ணா, சிறியில் வைத்திருந்த நம்பிக்கையே. இவர்களது மன உறுதியோடு, செயற்படும் வேகத்தோடு அவர்களை ஒப்பிடவே முடியாது. TLO உதவிகளை என்னிடம் கேட்டனர். தயங்காது செய்து கொடுத்தேன். அவர்கள் என்னோடு மிக அன்பாகப் பழகினர். மகேஸ்வரன் என்னும் இளைஞர் 1972 இல் இங்கிலாந்து சென்று பிரபல்ய வளாகத்தில் பொறியியலாளராக 2 வருடத் தேர்ச்சி பெற்று இறுதியில் நாட்டு விடுதலையே எனப் போராட நாட்டிற்கு வந்தார். பனாகொடை, மட்டக்களப்பு ஆகிய சிறைகளிலிருந்து தைரியமாகத் தப்பி வரலாறு படைத்தார்.

தொடரும்…

http://inioru.com/?p=42424

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து (6) - ரெலோவில் இணைந்துகொள்ளும் பிரபாகரன்

thevan.jpg

ஒபரோய் தேவன்

மகேஸ்வரன் என்னும் இளைஞர் 1972 இல் இங்கிலாந்து சென்று பிரபல்ய வளாகத்தில் பொறியியலாளராக 2 வருடத் தேர்ச்சி பெற்று இறுதியில் நாட்டு விடுதலையே எனப் போராட நாட்டிற்கு வந்தார். பனாகொடை, மட்டக்களப்பு ஆகிய சிறைகளிலிருந்து தைரியமாகத் தப்பி வரலாறு படைத்தார்.

தமிழ் ஈழம் விதலை அடைய வேண்டும் என்பதில் மிக உறுதியாயிருந்தார்.குலசிங்கம் போல் வேகமாக செயற்பட வேண்டுமெனும் எண்ணம் கொண்டவர். நான் வாங்கிக் கொடுத்த கருவிகளோடு செயலில் இறங்கி அரசால் கைது செய்யப்பட்டு இன்றும் மீண்டும் கைதாகி பனா கொடை இராணுவ முகாமில் காவலில் உள்ளார், அவரோடு சேர்ந்து ஜவர் அதே முகாமில் காவலில் உள்ளனர்.இவர் எந்த ஒரு இயக்கத்தோடும் சேர்ந்து கட்டுப்பாட்டோடு இயங்காததாலேயே மிகக் குறிய காலத்தில் கைது செய்யப்பட்டார், தொடர்ந்து 2 வருடங்கள் சிறையில் இருப்பதால் அவர் சிறிது மனத் தளர்வடைந்திருப்பதாக தெரிகிறது.

அரசு தற்போது தமிழ் ஈழப் புரட்சியாளர்களை நசுக்க பல தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.இப்போது தமிழீத்தில் உள்ள சூழ்நிலையைச் சரியாக ஆராய்ந்து செயலில் இறங்குவது விவேகமில்லை என நான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் அதைக் கேட்கவில்லை.

ஆம் ஆண்டு கொழும்பு சட்டக் கல்லூரியில் தமிழ் மன்ற இயக்குனர் குழு தேர்தல் நடந்தது. அதில் ஜ.தே.க. கூட்டணி என இருகோஸ்டிகளாகப் தமிழ் மாணவர் பிரிந்து தேர்தலில் நின்றனர். த. கூட்டணி சார்பில் நின்ற தலைவர் எனது நண்பர். எம் அமைப்பில் உறுப்பினராகைருந்தவர். அவர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். தோத்ததும் பத்தாதென ஜ.தே. க. ஆதரவு இளைஞர்களால் (குடிபோதையில்) தாக்கப்பட்டார். அந்நண்பர் தேர்தல் முடிவு வெளியாகும் போது ஏதும் பிரச்சினைகள் வரலாமென என்னிடம் ஏற்கனவே கூறியிருந்தார். அதனால் நான் வேறு நான்கு தோழர்களோடு பிரச்சனை வந்தால் சமாளிக்கும் ஆயத்துடனே அங்கு செய்ன்றேன்.

எதிபார்த்தபடி தாக்குதல் நடக்கையில் நான் எவ்வளோ எடுத்துச் சொல்லியும் ஜ.தே. க. செவி சாய்க்காத்தால் நாம் எம்மிடருந்த கருவிகளைக் கையிலேந்தி களத்தில் இறங்கினோம். ஏறத்தாழ 40 பேரோடு 4 பேர் நாம் போராடினோம்.

அவர்கள் தரப்பில் மூவர் கத்திக் குத்துக்கு ஆளாகினர். அவ்வளவுதான். இரத்தத்தைக் கண்டதும் அத்தனை பேரும் மாயமாய் மறைந்தனர் . அதிலிருந்து சட்டக் கல்லூரியில் அரசியல்ரீதியாக தமிழ் மன்றம் என்ன முடிவெடுத்தாலும் நான் முறுக்கிட்டு வேறு கருத்தைக் கூறினால் பெரும்பாலனவர்கள் அதை ஏற்றுக் கொள்வர். சட்டமன்ற (தமிழ்) விழாக்களுக்கும், தமிழ்மன்ற கூட்டங்களுக்கும் நான் அழைக்கப்பட்டேன். அங்கு படிக்கும் யாழ் மாணவர்கள் பலருக்கு நான் விடுதலை இயக்கத்தோடு தொடர்புள்ளவன், எனத் தெரியுமாதலாலேஎயே எனக்கு அழைப்பு கிடைத்தது.

அவ்றோ விமானம் விடுதலை இயக்கத்தினரால் தாக்கப்பட்டதும் கொழும்பில் பதட்டநிலை ஏற்பட்டது. வெள்ளவத்தை. வத்தளை,ஜாஎல, இரத்மலானையில் அங்காங்கே தமிழர் வீடுகள் தாக்குதலுக்குள்ளாகின. அப்போ எனது இயக்க உறுப்பினரோடும் வேறு தமிழ் இளைஞர்களையும் சேர்த்து பல முக்கிய எமக்கு ஆதரவாளர் வீடுகளில் சில நாட்கள் முழு இரவும் நித்திரை இல்லாது ஆயுதபாணியாக காவல் காத்தோம்.

Sri_Sabaratnam.jpg

சிறீ அல்லது சிறீ சபாரத்தினம்

இப்படியிருகையில் நவம்பர் மாதமளவில் சிறி,குட்டிமணி ஆகியோர் யாழ் வந்தனர். தாம் பல திட்டங்களோடு வந்திருப்பதால் பிரச்சாரம் ,உறுப்பினர் சேர்த்தல் ஆகிய வேலைகளை விட்டு. தரும் வேலைகளைச் செய்யச்சொன்னார்கள். தை மாதம் தங்கண்ணாவும் வந்துசேர்ந்தார். அந்நாட்களில் செட்டி சுதந்திரமாக உலாவுவதை அறிந்து( அரசிற்கு தகவல்கொடுப்பவர் , தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவராக இருந்தார்) 18- 3- 81 அன்று அவரை கல்வியங்காடு சந்தையில் வைத்து சுட்டுக் கொன்றோம்.

அடுத்து முழு இலங்கையையே கலக்கிய, முழு இலங்கையையே அதிசயிக்க வைத்த, தமிழ் இளைஞர்களால் இப்படியும் செய்ய முடியுமா என தமிழ் ஈழ மக்களைத் திகைக்க வைத்த (82 இலட்சத்தொகை) 25 – 3- 81 அன்று நீர்வேலி வங்கிக் கொள்ளையை நடத்தினோம்.(வழக்கு தற்போது நடப்பதால் பாதுகாப்பை முன்னிட்டு அதை விவரிக்க விரும்பவில்லை).

இந்நாட்களில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் உட்பிளவுகள் , தனிப்பட்ட பூசல்கள் காரணமாக ) கலைக்கப்பட்டு அதை வழிநடத்திய பிரபாகரன் எம்மோடு வந்து சேர்ந்தார். அவர் எமது இயக்க தலைவரோடு என்ன என்ன பேசினார் என்பதை இயக்க உறுப்பினர் அனைவரும் அறிவர்.

prabaharan-225x145.jpg

பிரபாகரன்

அண்ணா! நான் புலிகள் இயக்கத்தைக் கலைத்துவிட்டேன் . நீங்கள் என்னை உங்களோடு சேர்த்து இயங்க அனுமதிக்கா விட்டால் நான் தற்கொலை செய்வேன். நான் ஒரு சாதாரண உறுப்பினராகவேஇருந்து செயல்பட விரும்புகிறேன்,நான் மீண்டும் எனது தாய் இயக்கத்திலேயே சேர விரும்புகிறேன் எனக்கூறியே எம்மோடு வந்து சேர்ந்தார். அவர் எமது இயக்கத்தில் சேர்க்கப்படுவதை சிறி, இராசுப்பிள்ளை ஆகியோர் வன்மையாக எதிர்த்தனர். ஆனால் இறுதியில் தலைவரின் முடிவிற்கு கட்டுப்பட்டு அவர்கள் இம்முடிவை ஏற்றனர்.

11.08.1982

தொடரும்…

http://inioru.com/45155/%e0%ae%92%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8b%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf-6/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.