Jump to content

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் 2014 செய்திகளும் கருத்துகளும்


Recommended Posts

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தகுதிச் சுற்று இன்று தொடக்கம்

 

                                                                              clt-20-20141_zps92428fcf.jpg

 

 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் - தகுதிச் சுற்று இன்று தொடக்கம்: மும்பை இண்டியன்ஸ் லாகூர் லயன்ஸ் மோதல்
 

 

pollard_2106154f_zpsd0cec092.jpg

6-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்று போட்டி இன்று தொடங்குகிறது. சர்வதேச அளவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இன்று (செப்டம்பர் 13) முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் செப்டம்பர் 16-ம் தேதி வரை தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெறு கின்றன. முதன்மை சுற்று செப்டம்பர் 17-ம் தேதி தொடங்குகிறது. பெங்களூர், ஹைதராபாத், சண்டீகர், ராய்ப்பூர் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெற வுள்ளன.

 

முதன்மை சுற்றில் 10 அணிகள் விளையாடுகின்றன. இதில் 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. இந்திய அணிகளில் ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2-வது இடம் பிடித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப், 3-வது இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் நேரடியாக முதன்மை சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. 4-வது இடம் பிடித்த மும்பை இண்டியன்ஸ் தகுதிச் சுற்றில் விளையாடுகிறது. இதில் தகுதி பெற்றால் மட்டுமே முதன்மை சுற்றுக்கு முன்னேற முடியும். மும்பை இண்டியன்ஸ் அணி சாம்பியன்ஸ் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் என்பது நினைவுகூரத்தக்கது.

 

தகுதிச் சுற்றில் 4 அணிகள் விளையாடுகின்றன. இதில் முதல் இரு இடங்கள் பிடிக்கும் அணிகள் முதன்மை சுற்றுக்கு முன்னேறும். முதன்மை சுற்றில் உள்ள 10 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவற்றுக்கு இடையே போட்டி நடைபெறும். இரு பிரிவுகளிலும் முதல் இரு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் இறுதி ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தும்.

ராய்ப்பூரில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் அணியும் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணியும் மோதுகின்றன. இதே மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் 2-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணி, பாகிஸ்தானை சேர்ந்த லாகூர் லயன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

மும்பை இண்டியன்ஸ் அணியில் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா காயம் காரணமாக வெளியேறிவிட்டதால், கிரண் போல்லார்ட் அணிக்கு தலைமை வகிக்கிறார். லாகூர் லயன்ஸ் அணிக்கு முகமது ஹபீஸ் கேப்டனாக இருக்கிறார். லாகூர் லயன்ஸ் அணி பாகிஸ்தானின் முதன்மையான 20 ஓவர் கிரிக்கெட் அணியாகும். இதில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அனைவருமே பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்தான். இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெறும் போட்டி குறித்து எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்குமோ அதே அளவு எதிர்பார்ப்பு இப்போட்டி குறித்து தீவிர கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. மும்பை இண்டியன்ஸ் அணியில் வெளிநாட்டு வீரர்கள் இருந்தாலும் அது இந்திய அணியாகவே கருதப்படுகிறது.

 

list_2106155a_zpsb37ab4ad.jpg

லாகூர் லயன்ஸ் அணியில் உள்ள முகமது ஹபீஸ், அகமது ஷெசாத், வஹாப் ரியாஸ், உமர் குல், நசீர் சம்ஷெத் ஆகியோர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள். எனவே இந்த ஆட்டம் மும்பை அணிக்கு சவால்மிக்கதாகவே இருக்கும்.

மும்பை அணியில் போல்லார்ட், மைக் ஹசி, கோரே ஆண்டர்சன், அம்பட்டி ராயுடு ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். பந்து வீச்சில் மலிங்கா, ஹர்பஜன் சிங், பிரவீண் குமார் ஆகியோர் எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பார்கள்.

பங்கேற்கும் அணிகள்

ஏ பிரிவு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (இந்தியா)

டால்பின்ஸ் (தென்னாப்பிரிக்கா)

பெர்த் ஸ்கார்சர்ஸ் (ஆஸ்திரேலியா)

சென்னை சூப்பர் கிங்ஸ் (இந்தியா)

தகுதிச் சுற்றில் தகுதி பெறும் அணி

பி பிரிவு

கிங்ஸ் லெவன் பஞ்சாப் (இந்தியா)

பார்படாஸ் ட்ரிடென்ட் (மேற்கிந்தியத்தீவுகள்)

ஹோபர்ட் ஹரிகேன்ஸ் (ஆஸ்திரேலியா)

கேப் கோப்ராஸ் (தென்னாப்பிரிக்கா)

தகுதிச் சுற்றில் தகுதி பெறும் அணி

தகுதிச் சுற்று அணிகள்

லாகூர் லயன்ஸ் (பாகிஸ்தான்)

மும்பை இண்டியன்ஸ் (இந்தியா)

நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் (நியூஸிலாந்து)

சதர்ன் எக்ஸ்பிரஸ் (இலங்கை)

இன்றைய ஆட்டங்கள்

நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் - சதர்ன் எக்ஸ்பிரஸ்

மாலை 4 மணி

மும்பை இண்டியன்ஸ் - லாகூர் லயன்ஸ்

இரவு 8 மணி

நேரடி ஒளிபரப்பு : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article6407546.ece

 

 

 

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் - வரலாறு, சாதனைகள்
 

 

ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்றது. அதே பாணியில் கிரிக்கெட்டில் உள்நாட்டில் 20 ஓவர் போட்டியில் சாதித்த அணிகள் வெளிநாடுகளில் வலுவாக உள்ள அணிகளுடன் மோதுவதே சாம்பியன்ஸ் லீக் போட்டி.

இந்தியாவில் ஐபிஎல் போட்டி பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து சாம்பியன்ஸ் லீக் போட்டி அறிமுகப்படுத் தப்பட்டது. 2008-ம் ஆண்டில் முதல்முறை யாக சாம்பியன்ஸ் லீக் நடத்த திட்டமிடப் பட்டது. எனினும் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதையடுத்து 2009-ம் ஆண்டு முதல்முறையாக சாம்பியன்ஸ் லீக் போட்டி நடத்தப்பட்டது. இப்போது 6-வது ஆண்டாக போட்டி நடைபெறவுள்ளது.

 

இதுவரை நடைபெற்ற 5 சாம்பியன் லீக் போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ் இருமுறை சாம்பியன் பட்டம் வென்றுள் ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், நியூசவுத் வேல்ஸ் புளு, சிட்னி சிக்ஸர் ஆகிய அணிகள் தலா ஒருமுறை சாம்பியனா கியுள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அணிகள் தவிர பிற அணிகள் சாம்பியன் ஆனதில்லை. 2009, 2011, 2013 ஆகிய ஆண்டுகள் இந்தியாவிலும், 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவிலும் சாம்பியன்ஸ் லீக் நடைபெற்றது. இப்போது தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்தியாவில் போட்டி நடைபெறவுள்ளது.

 

ரெய்னா முதலிடம்

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். மொத்தம் 19 ஆட்டங்களில் களமிறங்கியுள்ள அவர் 608 ரன்கள் குவித்துள்ளார். 94 ரன்கள் அடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது ஒரு இன்னிங்ஸில் அவரது அதிகபட்ச ரன் ஆகும். 4 அரை சதங்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 33.77

மும்பை இண்டியன்ஸ், ட்ரினிடாட் அண்ட் டோபாக்கோ அணிகளுக்காக விளையாடியுள்ள போல்லார்ட் இப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். அவர் 25 ஆட்டங்களில் 592 ரன்கள் எடுத்துள்ளார்.

 

டெல்லி டேர் டெவில்ஸ், நியூ சவுத் வேல்ஸ் அணிகளுக்காக விளையாடிய டேவிட் வார்னர் 556 ரன்களுடன் (13 ஆட்டங்கள்) 3-வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய முரளி விஜய் 497 ரன்களுடன் (19 ஆட்டங்கள்) 4-வது இடத்திலும் உள்ளனர்.

வெற்றிகளை குவித்த சூப்பர் கிங்ஸ்

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அதிக வெற்றிகளை குவித்த அணி என்ற பெருமையை சூப்பர் கிங்ஸ் பெற்றுள்ளது. இதுவரை 19 ஆட்டங்களில் களமிறங்கியுள்ள சூப்பர் கிங்ஸ் 11 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் பெற்றுள்ளது. ஓர் ஆட்டம் டையில் முடிந்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக மும்பை இண்டியன்ஸ் உள்ளது. அந்த அணி 19 ஆட்டங்களில் பங்கேற்று 10 வெற்றிகளையும், 7 தோல்விகளையும் பெற்றுள்ளது. இரு ஆட்டங்களில் முடிவு கிடைக்கவில்லை. மூன்றாவது இடத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி உள்ளது. 15 ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்த அணி 7 வெற்றிகளையும், 8 தோல்விகளையும் சந்தித்துள்ளது. ஹைவேல்ட் லயன்ஸ், வாரியர்ஸ் ஆகிய அணிகள் தலா 6 வெற்றிகளை பெற்றுள்ளன.

 

அதிக விக்கெட் எடுத்தவர்கள்

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ், டிரினிடாட் அண்ட் டோபாக்கோ அணிகளில் விளையாடிய டேயன் பிராவோ முதலிடத்தில் உள்ளார். அவர் 18 போட்டிகளில் பங்கேற்று 28 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடரஸ், டிரினிடாட் அண்ட் டோபாக்கோ அணிகளுக்காக விளையாடியுள்ள சுனில் நரைன் 15 ஆட்டங்களில் 27 விக்கெட் வீழ்த்திய 2-வது இடத்தில் உள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அஸ்வின் 25 விக்கெட்டுகளுடன் (19 ஆட்டங்கள்) 3-வது இடத்திலும், மும்பை இண்டியன்ஸ் வீரர் லசித் மலிங்கா 24 விக்கெட்டுகளுடன் (14 ஆட்டங்கள்) 4-வது இடத்திலும், டிரினிடாட் அண்ட் டோபாக்கோ அணி வீரர் ரவி ராம்பால் 23 விக்கெட்டுகளுடன் (18 ஆட்டங்கள்) 5-வது இடத்திலும் உள்ளனர்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6407556.ece

 

 


மும்பை இந்தியன்ஸ் கேப்டன் கெய்ரன் பொலார்ட்
 

 

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்ரன் பொலார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் கேப்டனான ரோகித் சர்மா காயம் காரணமாக விலகியதை அடுத்து ஹர்பஜன், மலிங்கா அல்லது பொலார்ட் கேப்டன் பொறுப்பிற்கு நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

 

இந்த நிலையில் பொலார்டை கேப்டனாக அறிவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம்.

பொலார்ட் 2010ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார். இவர் மேற்கிந்திய தீவுகளின் 20 ஓவர் அணியான பார்படாஸ் டிரைடெண்ட்ஸ் அணியை தனது கேப்டன்சியில் சாம்பியன் பட்டம் வெல்ல இட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தன் சொந்த அணியை விடுத்து பொலார்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாம்பியன்ஸ் லீகில் விளையாட முடிவெடுத்தார்.

செப்டம்பர் 13ஆம் தேதி, அதாவது நாளை மறு நாள், மொகமது ஹபீஸின் லாகூர் லயன்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் எதிர்கொள்கிறது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/article6401705.ece

Link to comment
Share on other sites

சம்பியன் லீக் போட்டிகளில் இருந்து டில்ஷான் விலகினார்

இந்தியாவில் நடைபெறவுள்ள சம்பியன் லீக் போட்டிகளில் திலகரட்ன டில்ஷான் விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட்டின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் இருந்து சம்பியன் லீக் தொடரில் பங்குபற்றும் சதேர்ன் எக்ஸ்பிரஸ் அணியில் திலகரட்ன டில்ஷான் இருந்த போதும், குடும்ப தேவைகள் காரணமாக இந்த தொடரில் பங்குபற்றமுடியாமல் இருப்பதாகவும் அதற்க்கான அனுமதியை வழங்குமாறும்  டில்ஷான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவருக்கு அனுமதி வழங்கபட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

நாளைய தினம் சம்பியன் லீக் தொடர் இந்தியாவில் ஆரம்பிக்கவுள்ளது. முதற்ப் போட்டியில்  சதேர்ன் எக்ஸ்பிரஸ் அணி, நியூசிலாந்து நொதேர்ன் டிஸ்ட்ரிக்  அணியுடன் மோதவுள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/126596-2014-09-12-09-29-53.html

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் லீக் டாப் அதிவேக அரைசதங்கள்: தோனி முன்னிலை
 

 

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் தகுதிச் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கவுள்ள நிலையில், இந்தத் தொடரில் இதுவரை அடிக்கப்பட்டுள்ள அதிவேக அரைசதங்களில் தோனியின் அதிரடி அரைசதமே முன்னிலை வகிக்கிறது.

சன் ரைசர்ஸ் ஐதராபாத்திற்கு எதிராக தோனி இந்த அரைசதத்தை 16 பந்துகளில் அடித்து நொறுக்கினார். பத்ரிநாத் அவுட் ஆனவுடன் 15வது ஓவரில் களமிறங்கிய தோனி முதலில் ஜே.பி. டுமினி வீசிய பந்தை நேராக தூக்கி சிக்சருக்கு அடித்துத் தாக்குதலைத் தொடர்ந்தார்.

 

ஆனால் அன்று தோனியின் கோபத்திற்குச் சிக்கியவர் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் திசர பெரேரா. ஆட்டத்தின் 18வது ஓவரில் இவர் 34 ரன்களை வாரி வழங்கினார். அவரது மித வேகப்பந்தை 5 சிக்சர்கள் அடித்தார் தோனி.

தோனி மொத்தம் அந்த இன்னிங்ஸில் 8 சிக்சர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாசினார். 19 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். 16 பந்துகளில் அரைசதம் இதுவே சாம்பியன்ஸ் லீக் அதிவேக அரைசத சாதனை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்களில் வெற்றி பெற்றது.

 

கெய்ரன் பொலார்ட்:

2009ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டியில் கெய்ரன் பொலார்ட் 18 பந்துகளில் அரைசதம் விளாசியது அடுத்த இடத்தில் உள்ளது.

நியுசவுத்வேல்ஸ் அணிக்கு எதிராக டிரினிடாட் டுபாகோ அணிக்கு அவர் இந்த இன்னிங்ஸை ஆடினார். 7 ஓவர்களில் 80 ரன்கள் வெற்றிக்குத் தேவை ஆனால் பொலார்ட் அதிரடியில் 9 பந்துகள் மீதம் வைத்து டிரினிடாட் வென்றது.

18 பந்துகளில் பொலார்ட் 54 ரன்களை 5 சிக்சர் 5 பவுண்டரிகள் உதவியுடன் எடுத்தார்.

 

கிறிஸ் கெய்ல்:

2011ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டி ஒன்றில் டேவிட் வார்னர் நியுசவுத் வேல்ஸ் அணிக்காக சதம் எடுத்து 3வது அதிவேக அரைசத சாதனையை நிகழ்த்தினார். அப்போது அது 2வது அதிவேக அரைசத சாதனையாக இருந்தது.

ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு 200 ரன்களுக்கு மேல் வெற்றி இலக்கு. கிறிஸ் கெய்ல் இறங்கி 41 பந்துகளில் 92 ரன்களை விளாசினார். அப்போது 20 பந்துகளில் அவர் அரைசதம் கடந்தார். 8 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் இதில் அடங்கும்.

விராட் கோலி இதே போட்டியில் 49 பந்துகளில் 89 ரன்கள் எடுதார். 19வது ஓவரில் 204 ரன்கள் எடுத்து பெங்களூரு வெற்றி பெற்றது.

இதற்கு அடுத்தபடியாக 2013 சாம்பியன்ஸ் லீக் போட்டியில் டிரினிடாட் வீரர் எவின் லூயிஸ் 21 பந்துகளில் எடுத்த அரைசதமும், இதே ஆண்டு ஒடாகோ அணிக்காக ரியான் டென் டஸ்சாதே 21 பந்துகளில் எடுத்த அரை சதமும் உள்ளது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/article6408071.ece

Link to comment
Share on other sites

கேன் வில்லியம்சன் அதிரடியில் நியூசி.யின் நாதர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் வெற்றி
 

 

ராய்ப்பூரில் இன்று நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் இலங்கையின் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணியை நியூசி.யின் நாதர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

மழை காரணமாக அணிக்கு 10 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கையின் சதர்ன் எக்ஸ்பிரஸ் 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்தது.

 

தொடர்ந்து ஆடிய நாதர்ன் அணி 9.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நாதர்ன் அனிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது.

டாஸ் வென்ற நாதர்ன் அணியின் கேப்டன் ஃபிளின் முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

இலங்கையின் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணியில் துவக்க வீரர் எம்.டி.பெரேரா 20 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் குணதிலக 26 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு சதர்ன் அணியில் ஒருவரும் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. இடது கை வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் 2 ஓவர்கள் 12 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சதர்ன் அணி 92/5 என்று முடிந்து போனது.

இத்தனைக்கும் 6 ஓவர்களில் 5 கேட்ச் வாய்ப்புகளைக் கோட்டை விட்டது நியூசி.யின் நாதர்ன் அணி.

 

இலங்கை அணி பந்து வீச வந்தபோது குணதிலக ஒரே ஓவரில் 19 ரன்களை கொடுக்க 19 பந்துகளில் நாதர்ன் அணி 41 ரன்கள் என்ற அதிரடி துவக்கம் கண்டது. டெவிச் என்ற வீரர் அப்போது 14 ரன்களில் மஹரூஃப் பந்தில் அவுட் ஆனார்.

ஆனால் தொடர்ந்து நியூசி.யின் சர்வதேச வீரர் கேன் வில்லியம்சன் அபாரமாக பேட்டிங் செய்தார். அவர் 29 பந்துகளில் 7 பவுண்டரி ஒரு சிக்சர் சகிதம் 52 ரன்கள் எடுத்து 9வது ஓவரில் மஹரூஃப் பந்தில் பவுல்டு ஆனார். அதன் பிறகு 96/3 என்று வென்றது நாதர்ன்.

இன்று மற்றொரு போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக லாகூர் லயன்ஸ் டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article6408131.ece

 

Link to comment
Share on other sites

லயன்சிடம் வீழ்ந்தது மும்பை அணி

ராய்ப்பூர்: சாம்பியன்ஸ் லீக் தகுதிச் சுற்று போட்டியில் சொதப்பிய மும்பை இந்தியன்ஸ் அணி, லாகூர் லயன்ஸ் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

ஆறாவது சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடர், இந்தியாவில் வரும் 17ம் தேதி துவங்குகிறது. இதில் சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக பங்கேற்கின்றன.

மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு சட்டீஸ்கரில் உள்ள ராய்ப்பூரில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடக்கின்றன. நேற்று நடந்த தகுதிப் போட்டியில் மும்பை அணி, பாகிஸ்தானின் லாகூர் லயன்ஸ் அணியை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற லயன்ஸ் கேப்டன் முகமது ஹபீஸ், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

திணறல் துவக்கம்:

‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கிய மும்பை அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. அய்சாஸ் சீமா வீசிய போட்டியின் 4வது ஓவரில் லெண்டில் சிம்மன்ஸ்(7), ஜலஜ் சக்சேனா(0) அடுத்தடுத்து அவுட்டாகினர். அம்பதி ராயுடுவும்(3) ஏமாற்ற, 4.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 23 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

தாரே ஆறுதல்:

சிறிது நேரத்தில் மைக்கேல் ஹசி(28) நடையை கட்டினார். ‘அதிரடி’ கேப்டன் போலார்டு(6), இம்ரான் அலி பந்தில் ‘போல்டாக’, சிக்கல் ஏற்பட்டது. ஆதித்யா தாரே அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் ஹர்பஜன்(18 ரன், 2 சிக்சர்), பிரவீண் குமார்(20*) ஓரளவுக்கு கைகொடுக்க, மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 135 ரன்கள் மட்டும் எடுத்தது.

எளிதான வெற்றி:

சுலப இலக்கை விரட்டிய லயன்ஸ் அணிக்கு அகமது சேஷாத்(34), நசிர் ஜாம்ஷெட்(26), முகமது ஹபீஸ்(18) வலுவான அடித்தளம் அமைத்தனர். நசிம்(6) நிலைக்கவில்லை. பின் அதிரடியாக ஆடிய உமர் அக்மல்(38*), ஆசிப் ராசா(14*) சேர்ந்து வெற்றியை உறுதி செய்தனர். லயன்ஸ் அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து எளிதான வெற்றி பெற்றது.

http://sports.dinamalar.com/2014/09/1410541062/pollardmumbai.html

Link to comment
Share on other sites

மும்பை அணிக்கு முதல் வெற்றி: சிம்மன்ஸ், ஹசி விளாசல்
செப்டம்பர் 14, 2014.

ராய்ப்பூர்: சாம்பியன்ஸ் லீக் தகுதிப் போட்டியில் சிம்மன்ஸ், மைக்கேல் ஹசியின் அதிரடி அரைசதம் கைகொடுக்க, மும்பை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பிரதான சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. இரண்டாவது தோல்வியை சந்தித்த சதர்ன் எக்ஸ்பிரஸ் அணி, அனேகமாக வாய்ப்பை இழந்தது.

 

ஆறாவது சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடர், இந்தியாவில் வரும் 17ல் துவங்குகிறது. இதில் சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக பங்கேற்கின்றன.

மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு சட்டீஸ்கரில் உள்ள ராய்ப்பூரில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடக்கின்றன. நேற்று நடந்த தகுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், இலங்கையின் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணிகள் மோதின. கடந்த போட்டியில் லயன்ஸ் அணியிடம் தோற்ற மும்பை அணி, இம்முறை கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியது. ‘டாஸ்’ வென்ற மும்பை கேப்டன் போலார்டு, ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

 

எக்ஸ்பிரஸ் அணிக்கு குசால் பெரேரா(8), லங்கா(9) ஏமாற்றினர். ஹர்பஜன், பம்ரா கட்டுக்கோப்பாக பந்துவீச, முதல் 6 ஓவரில் 27 ரன்கள் தான் எடுக்கப்பட்டன. பின் குணதிலகா (30), கேப்டன் ஜெஹன் முபாரக்(16), ஏஞ்சலோ பெரேரா(28), பிரசன்னா(15) ஓரளவுக்கு கைகொடுத்தனர்.

 

மகரூப் அதிரடி:

கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய பர்வேஸ் மகரூப்(22 பந்தில் 41 ரன்*, 3 பவுண்டரி, 2 சிக்சர்), கவுரவ ஸ்கோரை பெற்று தந்தார். எக்ஸ்பிரஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது.

கலக்கல் துவக்கம்:

சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு மைக்கேல் ஹசி, லெண்டில் சிம்மன்ஸ் சேர்ந்து ‘சூப்பர்’ துவக்கம் தந்தனர். எக்ஸ்பிரஸ் பந்துவீச்சை துவம்சம் செய்த இவர்கள், பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர். இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். ஹசி 60 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து வந்த போலார்டு வாணவேடிக்கை காட்டினார். இவர், பதிரனா ஓவரில் வரிசையாக இரண்டு சிக்சர் அடித்து விரைவான வெற்றி தேடித் தந்தார். மும்பை அணி 16.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து முதல் வெற்றி பெற்றது. சிம்மன்ஸ்(76), போலார்டு(20) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

 

http://sports.dinamalar.com/2014/09/1410718025/simmonsmumbai.html

Link to comment
Share on other sites

பாக்., லயன்ஸ் அணி சரண்டர்: நியூசி., அணிக்கு 2வது வெற்றி
செப்டம்பர் 14, 2014.

ராய்ப்பூர்: சவுத்தியின் ‘வேகத்தில்’ சிதறிய பாகிஸ்தானின் லாகூர் லயன்ஸ் 72 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இரண்டாவது வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்தின் டிஸ்டிரிக்ட்ஸ் அணி,  சாம்பியன்ஸ் லீக் பிரதான சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை உறுதி செய்தது.

ஆறாவது சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடர், வரும் 17ம் தேதி துவங்குகிறது. ஐ.பி.எல்., சாம்பியன் கோல்கட்டா, சென்னை, பஞ்சாப் உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக பங்கேற்கின்றன.

 

மீதமுள்ள இரு இடத்துக்கான தகுதிச்சுற்றில், 4 அணிகள் மோதுகின்றன. இதில், நேற்று பாகிஸ்தானின் லாகூர் லயன்ஸ், நியூசிலாந்தின் நார்த்தர்ன் டிஸ்டிரிக்ட்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற லாகூர் அணி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

வில்லியம்சன் ஏமாற்றம்:

டிஸ்டிரிக்ட்ஸ் அணிக்கு டெர்விசிச் 9 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். கடந்த முறை அரைசதம் விளாசிய வில்லியம்சன் (14), நேற்று ஏமாற்றினார். ஹாரிஸ் (20) நீடிக்கவில்லை.

 

அசத்தல் ‘ஜோடி’:

இதையடுத்து, பிளைன், வாட்லிங் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அதிரடியாக ரன்கள் சேர்க்க, ஸ்கோர் சற்று வேகமாக உயர்ந்தது.

சீமா ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி விளாசிய பிளைன், அரைசதம் எட்டினார். இவருக்கு ‘கம்பெனி’ கொடுத்த வாட்லிங்கும் அரை சதம் அடித்தார்.

கடைசி நேரத்தில் பிளைன் (53), வாட்லிங் (53), ஸ்டைரிஸ் (14) அவுட்டாகினர். 20 ஓவரில், டிஸ்டிரிக்ட்ஸ் அணி 6 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது. லாகூர் சார்பில் சீமா, 3 விக்கெட் கைப்பற்றினார்.

 

மிரட்டிய ‘வேகங்கள்’:

சற்று கடின இலக்கைத் துரத்திய லாகூர் அணிக்கு, சவுத்தி, பவுல்ட் இருவரும் பெரும் தொல்லையாக அமைந்தனர். இருவரும் மாறி மாறி விக்கெட் வேட்டை நடத்தினர்.

முதலில் ஜாம்ஷெத் (5), சவுத்தி வேகத்தில் போல்டானார். ஷெசாத்தை (2), பவுல்ட் வெளியேற்றினார். மீண்டும் அசத்திய சவுத்தி, கேப்டன் ஹபீசை (5), நீடிக்கவிடவில்லை.

உமர் அக்மல் (1), பவுல்ட் பந்தில் போல்டானார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், உமர் சித்திக்கை (3) சவுத்தி அவுட்டாக்கினார்.

லாகூர் அணி 19 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஆசிப், நசிம் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

இதற்கு கொஞ்சம் கூட பலன் கிடைக்கவில்லை. 17 பந்துகளில் 5 ரன்கள் மட்டும் எடுத்த ஆசிப், வகாப் ரியாஸ் (2) அடுத்தடுத்து அவுட்டாகினர்.

 

நசிம் ஆறுதல்:

இம்ரான் அலி (8), ரசூல் (4) கைவிட்டனர். லாகூர் அணி சார்பில் இரட்டை இலக்கை எட்டிய ஒரே வீரர் நசிம், அரைசதம் (58) அடித்து ரன் அவுட்டானார். லாகூர் அணி 18 ஓவரில், 98 ரன்களுக்கு  சுருண்டு, தோல்வி அடைந்தது.

 

http://sports.dinamalar.com/2014/09/1410711431/timsoutheecricket.html

 

Link to comment
Share on other sites

ஹபீஸின் கடைசி நேர அதிரடியில் வென்றது லாகூர் லயன்ஸ்

 

ராய்ப்பூரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் தகுதிச் சுற்று ஆட்டத்தில் லாகூர் லயன்ஸ் அணி அபார வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

முதலில் பேட் செய்த லாகூர் லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சதர்ன் எக்ஸ்பிரஸ் அணி 18 ஓவர்களில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து படுதோல்வி கண்டது.

 

164 ரன்களை அடித்தாலும் லாகூர் லயன்ஸ், மும்பை இந்தியன்ஸைக் காட்டிலும் நிகர ரன் விகிதத்தில் குறைவாகவே உள்ளது. ஆனால் நியூசிலாந்தின் நாதர்ன் டிஸ்டிரிக்ட்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற வேண்டும். நியூசிலாந்து அணி ஏறக்குறைய இறுதிக்குத் தகுதி பெற்று விட்டது என்றே கூறலாம். ஆனால் மும்பை இந்தியன்ஸிடன் தாறுமாறாகத் தோற்காமல் இருக்க வேண்டு என்பது நியதி.

 

டாஸ் வென்ற சதர்ன் எக்ஸ்பிரஸ் கேப்டன் முபாரக் முதலில் லாகூர் லயன்ஸை பேட் செய்ய அழைத்தார். ஷேஜாத் 21 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்து அபாயகரமாக ஆடினார். ஆனால் பர்வேஸ் மஹரூஃப் இவரையும், நசீர் ஜாம்ஷெட் (1) விக்கெட்டையும் ஒரே ஓவரில் வீழ்த்த லாகூர் அணி 8வது ஓவரில் 52/3 என்று சரிவு கண்டது.

அப்போது கேப்டன் மொகமது ஹபீஸுடன், சாத் நசீம் என்பவர் இணைந்தார். ஹபீஸ் பிராமதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் இணைந்து 9 ஓவர்களில் 75 ரன்களைச் சேர்த்தனர். 25 பந்துகளில் 3 பவுண்டரிகள் அடித்த நசீம் அவுட் ஆகிச் செல்ல லாகூர் அணி 17வது ஓவர் முடிவில் 127/4 என்று இருந்தது.

ஆனால் மொகமது ஹபீஸ் சில பவுண்டரிகளையும் சிக்சர்களையும் விளாசி 40 பந்துகளில் 67 ரன்களை எடுக்க உமர் அக்மல் 11 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ லாகூர் லயன்ஸ் 164/6 என்ற சவாலான இலக்கை எட்டியது.

 

கடைசி 5 ஓவர்கள் தொடங்கும் போது லாகூர் லயன்ஸ் அணி 89/3 என்றே இருந்தது. 16வது ஓவரில் ஹபீஸ் புகுந்தார். செகுகே பிரசன்னா என்ற ஸ்பின்னரின் ஓவரில் ஒரு பவுண்டரி 3 தொடர் சிக்சர்களை அடித்து 25 ரன்கள் மொத்தம் சேர்க்கப்பட்டது ஆட்டத்தை மாற்றியது. பிறகு 19வது ஓவரில் ஜெயம்பதியை ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் விளாச ஸ்கோர் 150 ரன்களைக் கடந்தது. கடைசி 5 ஓவர்களில் 75 ரன்கள். அதுவும் கடைசி 50 ரன்கள் 17 பந்துகளில் விளாசப்பட்டது.

மஹரூஃப் அபாரமாக வீசி 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

தொடர்ந்து ஆடிய சதர்ன் எக்ஸ்பிரஸ் அணி டி.என்.சம்பத் (18) மூலம் 3.4 ஓவர்களில் 27 ரன்கள் தொடக்கத்தில் விளாசினார். ஆனால் இந்தத் தொடரில் அபாரமாக வீசி வரும் லாகூர் வேகப்பந்து வீச்சாளர் அய்ஜாஜ் சீமா பெரேரா (8), குணதிலக (0) ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹேட்ரிக் வாய்ப்பு பெற்றார். குணதிலக புல் ஆட முயன்று பந்து மட்டையில் பட்டு ஸ்டம்ப்களைத் தாக்கியது. ஒரு ஓவர் சென்று சம்பத்தையும் எல்.பி. செய்தார் அய்ஜாஜ் சீமா, சதர்ன் அணி 6வது ஓவரில் 36/3 என்று சரிந்தது. அய்ஜாஜ் சீமா 3 ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

கேப்டன் முபாரக் மட்டுமே அதிகபட்சமாக 35 ரன்களை எடுத்தார். ஆட்டத்தின் 13வது ஓவரில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ், பெரேரா, மற்றும் பிரசன்னா விக்கெட்டுகளைக் கைப்பற்ற 86/7 என்று ஆன சதர்ன் அணி அதன் பிறகு 109 ரன்களை மட்டுமே எட்டியது. தோல்வி தழுவி வெளியேறியது.

தங்களது பந்து வீச்சில் கடைசி 5 ஓவர்களில் ஆட்டத்தை கோட்டைவிட்டது இலங்கையின் சதர்ன் அணி. ஆட்ட நாயகன் ஹபீஸ்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/article6416385.ece

 

Link to comment
Share on other sites

சென்னை அணிக்கு வலு சேர்ப்பார் டிவைன் பிராவோ: தோனி
 

 

சென்னை அணிக்கு டிவைன் பிராவோ திரும்பியிருப்பது அணிக்கு வலிமையைக் கூட்டும் என்று கேப்டன் தோனி கூறியுள்ளார்.

நாளை ஐதராபாத்தில் சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகளின் பிரதான சுற்றில் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ், கம்பீர் தலைமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மேற்கிந்திய ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ திரும்பியுள்ளது அணிக்கு பெரிய வலிமை என்று கேப்டன் தோனி கூறியுள்ளார்.

"ஐபில் கிரிக்கெட் தொடர் சயமத்தில் டிவைன் பிராவோ காயமடைந்ததால் விளையாட முடியவில்லை. இதனால் அணியின் வலிமை, சேர்க்கை, மற்றும் உறுதித் தன்மை பாதிக்கப்பட்டது. அவர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளது வலு சேர்க்கும்.

இந்த முறை சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டிற்கு முன் 10 நாட்கள் கூட ஓய்வு கிடைக்கவில்லை. ஒருநாள் கிரிக்கெடி விளையாடி முடித்து இங்கிலாந்திலிருந்து வீரர்கள் திரும்பியுள்ளனர்.

என்னைப் பொறுத்தவரை நானே ஒரு நாள் முன்புதான் ஐதராபாத் வந்தேன். ஆகவே அணியினருடன் நேரம் செலவிடமுடியவில்லை. ஐபிஎல் கிரிக்கெட்டிற்குப் பிறகு மீண்டும் அணியுடன் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது.

 

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் கருத்தளவில் அபாரமானது. ஆனால் இந்திய அணிகள் விளையாடாத போட்டிகளில் ரசிகர்களை மைதானத்திற்கு ஈர்ப்பது பெரிய சவால். 2 அயல்நாட்டு அணிகள் விளையாடும் போது ரசிகர்கள் கூட்டம் பெரிதாக இருக்காது. ஆனால் இதுவும் சவால்தான்”

இவ்வாறு கூறினார் தோனி.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/article6415848.ece

Link to comment
Share on other sites

அதிரடி பேட்டிங் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்துமா கொல்கத்தா?
 

 

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் பிரதான சுற்றுப் போட்டிகள் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் பலமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்கிறது.

இந்த ஆட்டம் நாளை ஐதராபாத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கை எடுத்துக் கொண்டால் அதிரடி வீரர் டிவைன் ஸ்மித், பிரெண்டன் மெக்கல்லம், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சமீபத்தில் சதங்களை எடுத்த தென் ஆப்பிரிக்காவின் டுபிளேசி, கேப்டன் தோனி, அதிரடி பார்மில் உள்ள சுரேஷ் ரெய்னா, ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா, டிவைன் பிராவோ என்று ஒரே அதிரடிக் கும்பல் உள்ளது. இவர்களை சற்றே ஆட்டம் காண வைக்க கொல்கத்தா அணியில் மோர்னி மோர்கெல் இல்லை.

ஆனால் சுனில் நரைன், மற்றும் பேட் கம்மின்ஸ், உமேஷ் யாதவ் உள்ளனர். ஜாக் காலிஸ் இருக்கிறார்.

 

சென்னை அணியின் பந்து வீச்சும் நன்றாகவே உள்ளது. சுழற்பந்து வீச்சில் ஜடேஜா, அஸ்வின் இடம்பெறுவார்கள். வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் மோஹித் சர்மா, ஈஸ்வர் பாண்டே, ஆசிஷ் நெஹ்ரா இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை நெஹ்ராவுக்குப் பதிலாக ஜான் ஹேஸ்டிங்ஸ் இடம்பெற்றால் மெக்கல்லம் நீக்கப்படுவார். ஏனெனில் வெளிநாட்டு வீரர்கள் 4 பேர் மட்டுமே ஆடும் லெவனில் இடம்பெற முடியும்.

 

கொல்கத்தா அணியில் உத்தப்பா ஒரு மிரட்டல் வீரர். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் 16 இன்னிங்ஸ்களில் 660 ரன்கள் எடுத்துள்ளார். இவருடன் கவுதம் கம்பீர் தொடக்கத்தில் களமிறங்கலாம். மேலும் ஜாக் காலிஸ், மணீஷ் பாண்டே, அதிரடி மன்னன் யூசுப் பத்தான், டஸ்சாத்தே ஆகியோர் உள்ளனர்.

சென்னை அணி உண்மையில் பலம் மிகுந்த அணியாகவே தெரிகிறது.

மேலும் கொல்கத்தா அணி சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் இதுவரை சொதப்பியே வந்துள்ளது. இதுவரை குரூப் சுற்றைத் தாண்டியதில்லை என்பதே வரலாறு.

சாம்பியன்ஸ் லீகில் 10 அணிகள் மோதுகின்றன. தகுதிச் சுற்றிலிருந்து 2 அணிகள் தகுதி பெறும் அது இன்று தெரிந்து விடும்.

 

பிரிவு ஏ-யில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், டால்பின்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. 5-வது அணி தகுதிச்சுற்றின் மூலம் தகுதி பெறுகிறது.

“பி” பிரிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஹோபர்ட் ஹரிகேன்ஸ், கேப் கோப்ராஸ், பர்படாஸ் டிரைடென்ட்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. 5-வது அணி தகுதிச்சுற்றின் மூலம் பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெறுகிறது.

இரு பிரிவுகளிலும் டாப் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் மோதும்

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/article6416462.ece

 

 

 

 

Link to comment
Share on other sites

சாம்பியன் மும்பை இந்தியன்சை வெளியேற்றியது நியூசி.யின் நாதர்ன் நைட்ஸ்
 

 

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை தகுதிச் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது.

நேற்று நியூசிலாந்தின் நாதர்ன் நைட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மோசமாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் 132 ரன்களையே எடுக்க நியூசிலாந்தின் நாதர்ன் நைட்ஸ் 133/4 என்று வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 தகுதிச் சுற்று போட்டிகளிலும் வென்று நாதர்ன் நைட்ஸ் பிரதானச் சுற்றுப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றது.

பாகிஸ்தான் அணியான லாகூர் லயன்ஸ் அணியும் தகுதி பெற்றது. இந்த அணி இலங்கையின் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணியை வெளியேற்றியது.

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் மிகவும் சாதாரணமாக, தரமற்ற முறையில் அமைந்தது. நாதர்ன் நைட் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதீ, மிதவேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் ஸ்டைரிஸ் ஆகியோரது பந்து வீச்சில் திணறிய மும்பை இந்தியன்ஸ் 11வது ஓவரில் 46/5 என்று ஆனது.

 

சிம்மன்ஸ், ஹஸ்ஸி, ஜலஜ் சக்சேனா, தாரே, ராயுடு ஆகியோர் சடுதியில் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினர். ஸ்டைரிஸ் போன்ற சாதாரண வீச்சாளரிடம் 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது மும்பை.

தொடக்கத்தில் டிரெண்ட் போல்ட் மற்றும் டிம் சவுதீ அசத்தினர். இவர்கள் வீசியதை புரிந்து கொள்ளவே தடுமாறினர் மும்பை இந்தியன்ஸ் தொடக்க வீரர்கள். இதில் ஹஸ்ஸி 7 ரன்களில் சவுதீயிடம் காலியானார்.

 

பிறகு சக்சேனா, சிம்மன்ஸ், ஆதித்ய தாரே ஆகியோரை ஸ்காட் ஸ்டைரிஸ் வீழ்த்தினார். போல்ட் மீண்டும் பந்து வீச வந்து ராயுடுவை வீழ்த்தினார். பிறகு ஹர்பஜன் 10 ரன்களை எடுக்க 3 பவுண்டரிகளை அடித்த கெய்ரன் பொலார்ட் 31 ரன்களை எடுக்க, மலிங்கா 3 பவுண்டரிகள் ஒரு சிக்சரை தொடர்ச்சியாக அடிக்க ஸ்கோர் 132 ரன்களை எட்டியது.

இந்த இலக்கை எளிதில் தொடக்க வீரர்களே ஊதினர். டேவ்சிச் மற்றும் கேன் வில்லியம்சன் 9.4 ஓவர்களில் 84 ரன்களைச் சேர்த்தனர். வில்லியம்சன் மீண்டும் அபாரமாக விளையாடி 36 பந்துகளில் 7 பவுண்டரி ஒரு சிக்சர் சகிதம் 53 ரன்கள் எடுத்தார். டேவ்சிச் 39 ரன்கள் எடுத்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 17.2 ஓவர்களில் நாதர்ன் நைட்ஸ் வெற்றி பெற்றது. டேரில் மிட்செல் என்ற வீரர் மலிங்காவின் ஒரே ஓவரில் 15 ரன்கள் விளாசினார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/article6419379.ece

 

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் லீக் சுவாரஸ்யங்கள்

 

# சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ், டிரினிடாட் அண்ட் டொபாக்கோ ஆகிய 3 அணிகள் மட்டுமே சாம்பியன்ஸ் லீக்கில் 4 முறை விளையாடியுள்ளன. எந்த அணியும் 5 முறை பங்கேற்றதில்லை. ஹைவெல்ட் லயன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய இரு அணிகளும் 3 முறை விளையாடியுள்ளன.

 

# ஆஸ்திரேலிய வீரர் டிர்க் நேன்ஸ் 4 வெவ்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ளார். சாம்பியன்ஸ் லீக்கில் 4 அணிகளுக்காக களமிறங்கிய ஒரே வீரர் டிர்க் நேன்ஸ்தான். இவர் டெல்லி டேர்டெவில்ஸ், ஹைவெல்ட் லயன்ஸ், விக்டோரியா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்காக விளையாடியிருக்கிறார்.

 

# கிளன் மேக்ஸ்வெல், ஆண்ட்ரூ மெக்டொனால்டு ஆகியோர் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 3 அணிகளுக்காக சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடியுள்ளனர். மேக்ஸ்வெல், ஹேம்ப்ஸையர், மும்பை இண்டியன்ஸ், விக்டோரியா ஆகிய அணிகளுக்காகவும், மெக்டொனால்டு, லீசெஸ்டர்ஷையர், யுவா நெக்ஸ்ட், விக்டோரியா ஆகிய அணிகளுக்காகவும் ஆடியுள்ளனர்.

 

# சாம்பியன்ஸ் லீக்கில் ஓர் ஆட்டத்தில் அதிகபட்ச ரன்கள் குவித்த இந்தியர்களில் முதல் 3 இடங்களும் ரெய்னா வசமே உள்ளன. அவர், பெங்களூர், வயம்பா, சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக முறையே 94, 87, 84 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 3-வது அதிகபட்ச ஸ்கோரான 84 ரன்களை விராட் கோலி சமன் செய்துள்ளார்.

 

# சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் சுழற்பந்து வீச்சாளர் சுநீல் நரேனின் சராசரி 9.40 ஆகும். இதுதான் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் (5 இன்னிங்ஸ்களுக்கு மேல் பந்துவீசியது) சிறந்த பந்துவீச்சாக உள்ளது. சாம்பியன்ஸ் லீக்கில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் நரேன் (27 விக்கெட்டுகள்) 2-வது இடத்தில் உள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ 28 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

 

# சாம்பியன்ஸ் லீக்கில் பாகிஸ்தான் வீரர் மிஸ்பா உல் ஹக் ஓர் இன்னிங்ஸில் சராசரியாக 4.3 சதவீத சிக்ஸர்களை விளாசியுள்ளார். இது சாம்பியன்ஸ் லீக்கில் (குறைந்தபட்சம் 10 சிக்ஸர்கள் அடித்தவர்கள்) ஒரு வீரரின் சிறந்த சிக்ஸர் சதவீதமாகும். மிஸ்பா இதுவரை 3 இன்னிங்ஸ்களில் விளையாடி 13 சிக்ஸர்களை விளாசியுள்ளார். கிறிஸ் கெயில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடி 24 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அவருடைய சிக்ஸர் சராசரி 4 சதவீதம் ஆகும்.

 

# சாம்பியன்ஸ் லீக்கில் அதிக சிக்ஸர்களை விளாசியவர்கள் வரிசையில் மேற்கிந்தியத் தீவுகளின் கிரண் போலார்ட் முதலிடத்தில் உள்ளார். அவர் 45 சிக்ஸர்களை விளாசியிருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 13 போட்டிகளில் 27 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

 

# சாம்பியன்ஸ் லீக்கில் மிக மோசமாக பந்துவீசியவர் என்ற சாதனை இலங்கை வீரர் திசாரா பெரேராவிடம் உள்ளது. கடந்த சீசனில் சன்ரைஸர்ஸ் அணிக்காக விளையாடிய அவர் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக 3 ஓவர்களில் 60 ரன்களை வாரி வழங்கினார். ஓர் ஆட்டத்தில் அதிக ரன்களை வழங்கியவர் என்ற சாதனையை அரவிந்த் வைத்துள்ளார். அவர் 2011-ல் தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி 69 ரன்களைக் கொடுத்தார்.

 

# சாம்பியன்ஸ் லீக்கில் 5 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ள ஒரே வீரர் தென் ஆப்பிரிக்காவின் ஹென்றி டேவிட்ஸ்தான். அவர் அடித்த 5 அரைசதங்களுமே வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடிக்கப்பட்டவையாகும்.

 

# 2010-ல் வயம்பா அணிக்கு எதிராக சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி 70 ரன்களில் சுருண்டதே சாம்பியன்ஸ் லீக்கில் ஓர் அணி எடுத்த குறைவான ஸ்கோர். சாம்பியன்ஸ் லீக்கில் இரு முறை 100 ரன்களுக்குள் சுருண்ட ஒரே அணியும் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணிதான்.

 

# சாம்பியன்ஸ் லீக்கில் இதுவரை 6 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. சதமடித்த அனைவருமே கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளனர்.

 

# டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் நாடுகளில் வங்கதேசத்தை தவிர மற்ற அனைத்து நாடுகளைச் சேர்ந்த நடுவர்களும் சாம்பியன்ஸ் லீக்கில் பணியாற்றியுள்ளனர். இலங்கையிலிருந்து அதிகபட்சமாக 8 பேர் நடுவர்களாக செயல்பட்டுள்ளனர்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6418234.ece

 

Link to comment
Share on other sites

சென்னை அணி தோல்வி: ரசல் அதிரடியில் கோல்கட்டா அபாரம்

செப்டம்பர் 17, 2014.

ஐதராபாத்: சாம்பியன்ஸ் லீக் தொடரை சென்னை அணி தோல்வியுடன் துவக்கியது. கோல்கட்டாவுக்கு எதிராக சொதப்ப, 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பொறுப்பாக ஆடிய கோல்கட்டாவின் ரசல், டஸ்காட்டே அரைசதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர்.

ஆறாவது சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடரின் பிரதான சுற்று நேற்று துவங்கியது. ஐதராபாத்தில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில், கோல்கட்டா, சென்னை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

சென்னை அணிக்கு டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 37 ரன்கள் சேர்த்த போது ஸ்மித் (20) அவுட்டானார். யூசுப் பதான் ‘சுழலில்’ மெக்கலம் (22) சிக்கினார். உமேஷ் யாதவ் வீசிய 8வது ஓவரில், அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி விளாசிய ரெய்னா (28), சுனில் நரைனிடம் சரணடைந்தார். டுபிளசி (14) ஏமாற்றினார்.

தோனி ஆறுதல்:

பின் இணைந்த கேப்டன் தோனி, டுவைன் பிராவோ ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. உமேஷ் யாதவ் வீசிய 14வது ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த பிராவோ, கம்மின்ஸ் வீசிய 17வது ஓவரில் இரண்டு சிக்சர் விளாசினார். இவர், சுனில் நரைன் பந்தில் ரன் எடுக்க முடியாமல் திணறியது ரசிகர்களை முகம் சுழிக்க வைத்தது. பொறுப்பாக ஆடிய கேப்டன் தோனி, ரசல் வீசிய 15வது ஒவரில் இரண்டு பவுண்டரி அடித்தார். பின், உமேஷ் யாதவ் வீசிய 20வது ஒவரின் கடைசி பந்தை சிக்சருக்கு அனுப்பினார்.

சென்னை அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. தோனி (35), பிராவோ (28) அவுட்டாகாமல் இருந்தனர். கோல்கட்டா சார்பில் பியுஸ் சாவ்லா 2 விக்கெட் கைப்பற்றினார்.

நெஹ்ரா அசத்தல்:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய கோல்கட்டா அணி, ஆஷிஸ் நெஹ்ரா ‘வேகத்தில்’ திணறியது. இவர் வீசிய 3வது ஓவரின் முதல் பந்தில் காம்பிர் (6) அவுட்டானார். அடுத்த பந்தில் மணிஷ் பாண்டே ‘டக்–அவுட்’ ஆனார். மூன்றாவது பந்தை யூசுப் பதான் அடிக்காமல் விட, ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு நழுவியது. மோகித் சர்மா ‘வேகத்தில்’ யூசுப் பதான் (1) ஏமாற்றினார். மற்றொரு துவக்க வீரர் பிஸ்லா (2), நெஹ்ராவிடம் சரணடைய, கோல்கட்டா அணி 21 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

ரசல் அதிரடி:

ஈஷ்வர் பாண்டே பந்தை சிக்சருக்கு அனுப்பிய சூர்யகுமார் யாதவ் (19) நிலைக்கவில்லை. பின் இணைந்த டஸ்காட்டே, ரசல் ஜோடி பொறுப்பாக ஆடியது. மோகித் வீசிய 4வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த டஸ்காட்டே, அஷ்வின் பந்தில் சிக்சர் அடித்தார். மறுமுனையில் அசத்திய ரசல், ஜடேஜா வீசிய 11வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். அபாரமாக ஆடிய ரசல், மோகித் வீசிய 16வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் அடித்து, 22 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்த போது, நெஹ்ரா பந்தில் ரசல் (58) போல்டானார்.

டஸ்காட்டே அரைசதம்:

மறுமுனையில் பொறுப்பாக ஆடிய டஸ்காட்டே, அஷ்வின் பந்தில் சிக்சர் அடித்து அரைசதம் அடித்தார். கம்மின்ஸ் (8) ‘ரன்–அவுட்’ ஆனார். அடுத்து வந்த பியுஸ் சாவ்லா, பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். கோல்கட்டா அணி 19 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டஸ்காட்டே (51), சாவ்லா (4) அவுட்டாகாமல் இருந்தார். சென்னை அணி சார்பில் நெஹ்ரா 4 விக்கெட் வீழ்த்தினார்.

தோனி கோபம்

ஆட்டத்தின் 4வது ஓவரை மோகித் சர்மா வீசினார். முதல் பந்தை வீச ஓடி வந்த போது, கேப்டன் தோனி, மோகித்தை தடுத்து நிறுத்தி, ஈஷ்வர் பாண்டேவிடம் பந்தை வழங்குமாறு கூறினார். இதற்கு அம்பயர் மறுப்பு தெரிவித்தார். மோகித் பந்துவீச ஓடி வருவதற்கு முன், பவுலர்களை மாற்றிக் கொள்ளலாம். ஏற்கனவே ஓடி வந்ததால் மோகித் தான் பவுலிங் செய்ய வேண்டும் எனக் கூறினார். இதனால் தோனி லேசாக கோபமடைந்தார். இந்த ஓவரின் முதல் பந்தில், விக்கெட் வீழ்த்திய போதும், தோனியின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை.

நரைன் அசத்தல்

நேற்றைய போட்டியில், கோல்கட்டா அணி ‘சுழல்’ வீரர் நரைன் 4 ஓவர்கள் வீசி, 9 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இவர் ‘டுவென்டி–20’ அரங்கில் 4 ஓவர்கள் வீசி, 10 ரன்களுக்கு குறைவாக விட்டுக் கொடுப்பது இது 6வது முறை.

தோனி முதலிடம்

அனைத்துவித ‘டுவென்டி–20’ போட்டியில் அதிக முறை கேப்டனாக இருந்தவர்கள் பட்டியலில் சென்னை அணியின் தோனி (181 போட்டி) முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் கோல்கட்டாவின் காம்பிர் (97) உள்ளார்.

31

சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ அரங்கில் இலங்கையின் தர்மசேனா 31 போட்டியில் நடுவராக செயல்பட்டுள்ளார்.

http://sports.dinamalar.com/2014/09/1410977434/dhonichennaiipl.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் புகழும் மோகித் சர்மாவிற்கே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மும்பாய் அணியில் மாற்றம் வேண்டும்
கேரன் போலாட் தலைமையிலான மும்பாய் அணியின் விளையாட்டு படு மோசம்........பந்து வீச்சிலும் சரி துடுப்பாட்டத்திலும் சரி இரண்டிலும் சுதப்பல்............வயது போன மைக் ஹ்சி மும்பாய் அணிக்கு தேவை தானா , அதிரடியாய் விளையாடக் கூடிய இளம் வீரர்கள் இருக்கும் போது சென்னையில் இருந்து விடுபட்ட ஹசி மும்பாய் அணிக்கு தேவையா ..............................
Link to comment
Share on other sites

ரஸ்ஸல், டோஸ்சேட் அதிரடியில் சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா
 

 

ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் 20 ஒவர் கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. சென்னை நிர்ணயித்த 158 ரன்கள் இலக்கை 19 ஓவர்களில் கொல்கத்தா எட்டியது.

தடுமாற்றத்துடன் பேட்டிங்கை துவக்கிய கொல்கத்தா முதல் ஐந்து ஓவர்களில் 23 ரன்களுக்கு 4 ரன்களை இழந்தது. இதில் 3-வது ஓவரை வீசிய நெஹ்ரா, அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, கொல்கத்தாவை நிலைகுலையச் செய்தார். சிறிது நிலைத்து ஆடிய யாதவ், 19 ரன்களுக்கு வெளியேறினார். 11 ஓவர்களில் 107 ரன்கள் தேவை என்ற நிலையில், ரஸ்ஸல் மற்றூம் டோஸ்சேட் களத்தில் இணைந்தனர்.

 

சிறிதும் தாமதிக்காமல் சென்னையின் பந்துவீச்சை இருவரும் சிதறடிக்க, இலக்கை மெதுவாக கொல்கத்தா நெருங்கியது. 45 பந்துகளை சந்தித்த இந்த இணை, 80 ரன்களை அதிரடியாகக் குவித்தது. குறிப்பாக, மோஹித் சர்மா வீசிய 16-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி உட்பட 18 ரன்கள் வர, ஆட்டம், கொல்கத்தாவிற்கு சாதகமாக மாறியது. ரஸ்ஸல் 22 பந்துகளில், 2 பவுண்டரி, 5 சிக்ஸருடன் அரை சதத்தை எட்டினார். டோஸ்சேட் 38 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸருடன் அரை சதம் கடந்தார். ரஸ்ஸல் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், அந்த கட்டத்தில் கொல்கத்தாவின் வெற்றிவாய்ப்பு கைக்கு எட்டும் தூரத்திலேயே இருந்தது.

முடிவில் 19-வது ஓவரின் முடிவில் கொல்கத்தா அணி வெற்றி இலக்கை அடைந்தது. டோஸ்சேட் ஆட்டமிழக்காமல் 51 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆட்டநாயகனாக ரஸ்ஸல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

முன்னதாக முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. தோனி அதிகபட்சமாக 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் சகிதம் 35 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். 20 பந்துகளில் 5 பந்துகள் ரன் எடுக்காத பந்துகள் ஆகும்.

பேட் கமின்ஸ் வீசிய ஷாட் பிட்ச்சை மிட்விக்கெட்டில் ராட்சத அடி அடித்து சிக்சர் அடித்த தோனி இன்னிங்சின் கடைசி பந்தில் உமேஷ் யாதவின் ஃபுல் லெந்த் பந்தை லாங் ஆன் திசையில் காணாமல் அடித்து முடித்தார்.

 

சுனில் நரைன் அபாரமாக வீசி மீண்டும் ஒருமுறை தனது மதிப்பை நிலைநாட்டினார். அவர் 4 ஓவர்களில் 9 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து சுரேஷ் ரெய்னா (28) விக்கெட்டைக் கைப்பற்றினார். அந்தத் தீர்ப்பு சந்தேகத்திற்குரியதாக அமைந்த்து. ரெய்னா எல்.பி.ஆன அந்தப் பந்து நோ-பால் போல் ரீப்ளேயில் தெரிந்தது.

அதே போல் பியூஷ் சாவ்லா திறமையாக வீசி 4 ஓவர்கள் 26 ரன்கள் கொடுத்து ஸ்மித் மற்றும் டுபிளேசி விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இது சென்னை அணிக்கு சற்றே பின்னடைவை ஏற்படுத்தியது.

 

11 ஓவர்கள் கொல்கத்தாவின் ஸ்பின் ஆதிக்கத்தில் சென்னை அதிரடி வீரர்கள் 51 ரன்களையே குவித்து 4 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஆனால் வேகப்பந்து வீச்சில் 9 ஓவர்களில் 104 ரன்களை விளாசியது விக்கெட்டுகள் இல்லை.

கொல்கத்தா டாஸ் வென்று முதலில் பீல்ட் செய்ய முடிவெடுத்தது. டிவைன் ஸ்மித் 4 பவுண்டரிகளுடன் அதிரடி காண்பித்து 20 ரன்கள் எடுத்து சாவ்லா பந்தில் பிஸ்லா ஸ்டம்ப்டு செய்ய வெளியேறினார். மெக்கல்லம் 22 ரன்கள் எடுத்து யூசுப் பதான் பந்தில் எல்.பி ஆனார்.

ரெய்னா நிதானமாக ஆடி 24 பந்துகளில் 28 ரன்களை 3 பவுண்டரிகள் உதவியுடன் எடுத்தார். டுபிளேசி 14 ரன்களில் சாவ்லா பந்தில் ஸ்டம்ப்டு ஆனார்.

12.3 ஓவர்களில் 86/4 என்று இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் பிறகு தோனி (35), டிவைன் பிராவோ (28 ரன்கள், 28 பந்துகள் 2 பவுண்டரி 2 சிக்சர்கள்) ஆகியோர் நிலைத்து ஆட கடைசி 45 பந்துகளில் 71 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்தனர்.

 

ஆஸி. வேகப்புயல் கமின்ஸ் 4 ஓவர்களில் 49 ரன்கள் கொடுத்தார். உமேஷ் 43 ரன்கள் கொடுத்தார். யூசுப் பத்தான் 3 ஓவர்கள் 16 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

கொல்கத்தா அணியில் உத்தப்பா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கம்பீர் ஆவேசம்:

ஆட்டத்தின் 19வது ஓவரை கமின்ஸ் வீச 4வது ஷாட் பிட்ச் பந்தை தோனி புல் ஆடி சிக்சருக்கு விரட்ட, 6வது பந்தை சற்றே வைடாக வீசினார் கமின்ஸ், தோனியின் பலவீனம் அது. ஆனால் பந்து வைடிற்கான வெள்ளைக்கோட்டைக் கடக்காமல் இருந்த போதே நடுவர் வைடு என்றார். இதனால் ஆத்திரமடைந்த கம்பீர் நடுவரிடம் கடுமையாக, கோபாவேசமான முகத்துடன் கைகளை அசைத்து சில வார்த்தைகளை பகிர்ந்து கொண்டார். இது சர்ச்சையாகுமா என்பது பிறகே தெரியவரும்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/article6420021.ece

 

Link to comment
Share on other sites

பந்து வீச்சிற்கான ரன் அப் ஆரம்பித்த பிறகு பவுலரை மாற்ற முயன்ற தோனி

பொதுவாக அடுத்த ஓவரை யார் வீசுவது என்பதை கேப்டன்கள் முன்கூட்டியே தீர்மானித்து விடுவார்கள். ஆனால் தோனி இதற்கும் விதிவிலக்கு.

பவுலர் பந்து வீசுவதற்கான ரன் அப் தொடங்கிய பிறகு அவரை நிறுத்தி வேறொரு பவுலரை வீசக்கூறினார் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி.

சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்கு நேற்று கொல்கத்தா அணியின் ஆந்த்ரே ரசல் தனது அதிரடி மூலம் அதிர்ச்சி அளித்தார்.

சென்னை இன்னிங்சின் போது கொல்கத்தா வீச்சாளர் பாட் கம்மின்ஸ் ஒரு பந்தை தோனிக்கு மட்டையில் சிக்காதவாறு வீச நடுவர் வைடு என்று அறிவித்தார். ஆனால் அது வைடு அல்ல. இதனால் ஆத்திரமடைந்த கவுதம் கம்பீர் நடுவரிடம் கையை ஆட்டி பயங்கரமாக சத்தம் போட்டார்.

நடுவர் அவரிடம் ஏதோ கெஞ்சும் பாவனையில் கூற முயன்றார். லட்சம் ரசிகர்கள் பார்க்கும் ஒரு சர்வதேச அளவிலான போட்டியில் நடுவரை ஒரு கேப்டன் பகிரங்கமாக வசைபாடுவதன் அநாகரிகம் பற்றி கம்பீர் அறியவில்லை. வர்ணனையாளர்களும் கம்பீரின் இந்தச் செயலைக் கண்டிக்காமல் ‘கம்பீர் மிகவும் தீவிரமானவர்’, ‘அவர் அப்படித்தான் கடினமாக தனது கிரிக்கெட்டை ஆடுகிறார்’, ‘ஆக்ரோஷமான அணுகுமுறை’ என்று பாராட்டித் தள்ளினர்.

இது ஒரு புறமிருக்க கொல்கத்தா தனது 158 ரன்கள் இலக்கைத் துரத்தக் களமிறங்கிய போது, சென்னை பவுலர் ஆஷிஷ் நெஹ்ரா 2 விக்கெட்டுகளைச் சாய்க்க கொல்கத்தா 10/2 என்று ஆனது.

அப்போது 3வது ஓவரை வீச மோகித் சர்மா வந்தார். பந்தை எடுத்துக் கொண்டு ரன் அப் செய்யவும் தொடங்கிவிட்டார். ஆனால் 'உள்ளுணர்வு’ அறிவுறுத்துவதன் பேரில் கேப்டன்சி செய்து வருவதாகக் கூறப்படும் தோனி, மோகித் சர்மாவின் ஓட்டத்தை நிறுத்தி பந்தை ஈஷ்வர் பாண்டேயிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினார்.

ஆனால் நடுவர் சரியாகத் தலையிட்டு இந்த நிலையில் பவுலரை மாற்ற முடியாது, மோகித் சர்மாவே தொடர வேண்டும் என்றார். அங்குதான் தோனியின் அதிர்ஷ்டம் இருக்கிறது. மோகித் சர்மா பந்தை யூசுப் பத்தான் ஆடி டுபிளேசியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். நடுவர் வென்றார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-

%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/article6422673.ece

http://youtu.be/nyYnVjgkLd8

Link to comment
Share on other sites

பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி

செப்டம்பர் 17, 2014.

மொகாலி: சாம்பியன்ஸ் லீக் தொடரை பஞ்சாப் அணி வெற்றியுடன் துவக்கியது. ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியாவில், 6வது சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. மொகாலியில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில், ஐ.பி.எல்., அணியான பஞ்சாப், ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஜார்ஜ் பெய்லி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

பெரேரா அசத்தல்:

முதலில் களமிறங்கிய ஹோபர்ட் அணிக்கு, கேப்டன் டிம் பெய்ன் (15) ஏமாற்றினார். திசாரா பெரேரா ‘வேகத்தில்’ பென் டங்க் (26), பிலிஜார்டு (27) நடையை கட்டினர். ஜோனாதன் வெல்ஸ், 28 ரன்களுக்கு ‘ரன்–அவுட்’ ஆனார். பிர்ட் (28), அவானாவிடம் சரணடைந்தார்.

ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்தது.

சேவக் ஏமாற்றம்:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு, துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. போலிஞ்சர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில், சேவக் ‘டக்–அவுட்’ ஆனார். அடுத்து வந்த விரிதிமன் சகா (11), டேவிட் மில்லர் (0) ஏமாற்றினர். மற்றொரு துவக்க வீரர் மனன் வோரா (18), சோபிக்கவில்லை.

மேக்ஸ்வெல் நம்பிக்கை:

பின் அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல், 25 பந்தில் 43 ரன்கள் எடுத்து நம்பிக்கை தந்தார். அடுத்து, கேப்டன் ஜார்ஜ் பெய்லி, திசாரா பெரேரா ஜோடி பொறுப்பாக ஆடியது. குல்பிஸ் வீசிய 18வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி விளாசிய பெய்லி, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

பஞ்சாப் அணி 17.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பெய்லி (34), பெரேரா (35) அவுட்டாகாமல் இருந்தனர்.

http://sports.dinamalar.com/2014/09/1410967459/baileypunjab.html

Link to comment
Share on other sites

பஞ்சாப் அணி விளையாடியும் மொஹாலி மைதானத்தில் பாதி சீட் காலி!

 

 

மொஹாலி: சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளை பார்க்க மொஹாலி மைதானத்தில் ரசிகர்கள் அதிக அளவில் வராததால் நாற்காலிகளில் ஈயாடின. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நேற்று இரவு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியின் 2வது ஆட்டத்தில் உள்ளூர் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஆஸ்திரேலியாவின் உள்ளூர் அணியான ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியும் மோதின. பஞ்சாப் அணி விளையாடியும் மொஹாலி மைதானத்தில் பாதி சீட் காலி! ஆனால் 28 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட மொஹாலி மைதானத்தில் பாதி இருக்கைகள்கான் நிரம்பியிருந்தன.

 

அதே நேரம் சமீபத்தில் முடிந்த ஐபிஎல் போட்டிகளின்போது மைதானம் நிரம்பி காணப்பட்டது. இதுகுறித்து போட்டியை பார்க்க வந்த பள்ளி மாணவன் அன்குஷ் கூறுகையில், ஐபிஎல் போட்டிகளின்போது செய்யப்பட்ட விளம்பரம் தற்போது அளிக்கப்படாதது கூட்டம் குறைய காரணமாக இருக்கலாம் என்றார். மற்றொரு ரசிகர் ஹர்மீத் சிங் கூறுகையில், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி குறித்து பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாதது ரசிகர்களின் குறைவான வருகைக்கு காரணமாக இருக்கலாம் என்றார்.

 

 

Read more at: http://tamil.oneindia.in/news/sports/poor-response-clt20-mohali-211264.html

Link to comment
Share on other sites

வில்லியம்சன் சதம்: டிஸ்டிரிட்க்ஸ் வெற்றி
செப்டம்பர் 19, 2014.

 

ராய்ப்பூர்: மழையால்  பாதிக்கப்பட்ட சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ போட்டியில், வில்லியம்சன் சதம் அடித்து கைகொடுக்க, நார்த்தர்ன் டிஸ்டிரிக்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில், ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி கேப் கோப்ராஸ் அணியை வீழ்த்தியது.     

      

இந்தியாவில், 6வது சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. ராய்ப்பூரில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில், நியூசிலாந்தின் நார்த்தர்ன் டிஸ்டிரிக்ட்ஸ், தென் ஆப்ரிக்காவின் கேப் கோப்ராஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கோப்ராஸ் அணி கேப்டன் ஜஸ்டின் ஆன்டாங், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.                 

வில்லியம்சன் விளாசல்: டிஸ்டிரிக்ட்ஸ் அணிக்கு ஆன்டான் தேவ்சிச், வில்லியம்சன் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. கோப்ராஸ் அணி பந்துவீச்சை நாளா புறமும் சிதறடித்த இவர்கள், சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். கிளைன்வெல்ட் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய தேவ்சிச், அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்த போது தேவ்சிச் (67) அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் டேவிட் பிளைன் ‘டக்–அவுட்’ ஆனார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த வாட்லிங் (32) ஓரளவு கைகொடுத்தார். ஸ்காட் ஸ்டைரிஸ் (0), மிட்சல் (0) வந்த வேகத்தில் நடையை கட்டினர். மறுமுனையில் அசத்திய வில்லியம்சன், பிலாண்டர் பந்தில் சிக்சர் அடித்து சதத்தை பதிவு செய்தார்.      

           

டிஸ்டிரிக்ட்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 206 ரன்கள் குவித்தது. வில்லியம்சன் (101 ரன்கள், 49 பந்து, 5 சிக்சர், 8 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார்.                 

மழை குறுக்கீடு: கடின இலக்கை விரட்டிய கேப் கோப்ராஸ் அணிக்கு ஸ்டியான் வான் ஜில் (0), முதல் பந்தில் அவுட்டாகி ஏமாற்றினார். ஹசிம் ஆம்லா (20) பெரிய அளவில் சோபிக்கவில்லை. கோப்ராஸ் அணி 7.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால், போட்டியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி 33 ரன்கள் வித்தியாசத்தில் நார்த்தர்ன் டிஸ்டிரிக்ட்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வில்லியம்சனம் ஆட்ட நாயகன் விருது வென்றார்.           

 

முதல் வீரர்           

நேற்று அபாரமாக ஆடிய நார்த்தர்ன் டிஸ்டிரிக்ட்ஸ் அணியின் வில்லியம்சன், 6வது சாம்பியன்ஸ் லீக் தொடரில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.           

* இது, சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட 7வது சதம். முதன்முதலில் 2009ல் கேப் கோப்ராஸ் அணியின் ஆன்ட்ரூ புட்டிக், ஒடாகோ அணிக்கு எதிராக 104 ரன்கள் எடுத்தார்.                                               

* டில்லி, நியூ சவுத் வேல்ஸ் அணிகளுக்காக விளையாடிய டேவிட் வார்னர் இரண்டு முறை சதம் அடித்துள்ளார். இவர், 2011ல் சென்னை (135 ரன்), பெங்களூரு (123 ரன்) அணிகளுக்கு எதிராக தலா ஒரு சதம் அடித்தார்.                                               

* கேப் கோப்ராஸ் அணியின் ஆன்ட்ரூ புட்டிக் (102 ரன், எதிர்–ஒடாகோ, 2009), தெற்கு ஆஸ்திரேலியாவின் டேனியல் ஹாரிஸ் (104 ரன், எதிர்–பெங்களூரு, 2011), ஒடாகோ அணியின் நெய்ல் புரூம் (117* ரன், எதிர்–பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், 2013), லயன்ஸ் அணியின் குயின்டன் டி காக் (109* ரன், எதிர்–ஒடாகோ, 2013) ஆகியோர் தலா ஒரு முறை சதம் அடித்தனர்.

 

 

http://sports.dinamalar.com/2014/09/1411149919/WilliamsonNorthernDistrictsCapeCoprasChampionsLeagueCricket.html

Link to comment
Share on other sites

கடைசி 2 பந்துகளில் 2 சிக்சர்: மிட்செல் மார்ஷ் அதிரடியில் பெர்த் அணிக்கு வெற்றி
 

 

மொஹாலியில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்டின் ஏ-பிரிவு ஆட்டத்தில் டால்பின்ஸ் அணியை பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி பரபரப்பான முறையில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.

 

வெற்றி பெறத் தேவையான 165 ரன்களை எடுக்கக் களமிறங்கிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 19வது ஓவர் முடிவில் 149/3 என்று இருந்தது. கடைசி 6 பந்துகளில் வெற்றிக்குத் தேவை 16 ரன்கள். மிட்செல் மார்ஷ் களத்தில் 27 ரன்களுடன் ஆடி வந்தார்.

கடைசி ஓவரை டால்பின் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஃபிரைலிங்க் வீசினார். முதல் பந்து யார்க்கராக அமைய அதனை லாங் ஆனில் தட்டிவிட்டு 2 ரன்கள் எடுக்க முயன்றார் ஆனால் 1 ரன்னே எடுக்க முடிந்தது. 2வது பந்தில் 15 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்டன் ஆகர் அவுட் ஆக, 4 பந்துகளில் வெற்றிக்குத் தேவை 15 ரன்கள்.

டர்னர் என்பவர் களமிறங்கி டீப் ஸ்கொயர் லெக் திசையில் 2 ரன்களை எடுத்தார். பிறகு 4வது பந்தில் லாங் ஆனில் 1 ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை மிட்செல் மார்ஷிற்கு அளிக்கிறார்.

2 பந்துகள் 12 ரன்கள் தேவை. 5வது பந்தில் மிட்செல் மார்ஷ் கிட்டத்தட்ட அரை கிரவுண்ட் மேலேறி வந்து ஃபுல்டாஸை மிட்விக்கெட்டில் அபாரமான சிக்சருக்குத் தூக்கினார். 6வது பந்தும் யார்க்கர் முயற்சி தோல்வியடைய தாழ்வான ஃபுல்டாஸை நேராக தூக்கி சிக்ஸ் அடிக்க பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியினர் உற்சாகத்தில் மைதானத்தை மொய்க்கத் தொடங்கினர். இதன் மூலம் இந்த அணி 4 புள்ளிகள் பெற்றுள்ளது.

 

மிட்செல் மார்ஷ் 26 பந்துகளில் 40 நாட் அவுட். முன்னதாக பெர்த் கேப்டன் ஆடம் வோஜஸ் 7 ரன்களில் வெளியேற, சி.ஜே.சிம்மன்ஸ் 36 பந்துகளில் 5 பவுண்டரிகள் 23 சிக்சர்களுடன் 48 ரன்களை விளாசினார். சிம்மன்ஸ், ஒயிட்மேன் இணைந்து 5 ஒவர்களில் 55 ரன்களை விளாசினர். சிம்மன்ஸ் அவுட் ஆனவுடன் மிட்செல் மார்ஷ், ஒயிட் ஆகியோர் இணைந்து 6 ஓவர்களில் 49 ரன்கள் சேர்த்தனர். ஒயிட்மேன் 32 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 45 எடுத்து அவுட் ஆனபோது பெர்த் அணி 15.5 ஒவர்களில் 118/3 என்று இருந்தது. 25 பந்துகளில் வெற்றிக்குத் தேவை 47 ரன்கள்.

 

ஆஸ்டன் ஆகர் இறங்கி 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்தார். இவர் 19வது ஓவரில் அடித்த 2 பவுண்டரிகள் முக்கியமாக அமைந்தது.

முன்னதாக டாஸ் வென்ற டால்பின்ஸ் கேப்டன் வான் விக் பேட் செய்ய முடிவெடுத்தார். ஆனால் முதல் ஓவரிலேயே கேப்டன் வான் விக் மற்றும் செட்டி ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, டெல்போர்ட் 2வது ஓவரில் அவுட் ஆனார். ஸ்கோர் 12/3 என்று ஆனது.

அதன் பிறகு கே.ஏ.மகராஜ் என்ற வீரர் இறங்கி 22 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 29 ரன்கள் எடுத்தார். ஆனால் இவரும் 6வது ஓவரில் அவுட் ஆக ஸ்கோர் 45/4 என்று இருந்தது. டி.ஸ்மித் என்பவர் இறங்கி 21 ரன்கள் எடுத்தார். இவர் அவுட் ஆகும் போது ஸ்கோர் 10.2 ஓவரில் 75.

ஆனால் ஸோண்டோ என்பவர் கடைசி வரை நின்று 50 பந்துகளில் 63 ரன்களை எடுத்தார். கடைசியில் பெலுக்வாயோ என்பவர் 14 ரன்களை எடுக்க கடைசி ஓவரில் 2 சிக்சர்களை வாரி வழங்கி தோல்விக்கு இட்டுச் சென்ற பவுலர் ஃபிரைலிங்க் 6 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 15 ரன்கள் எடுத்தார். இதனால் அந்த அணி 164 ரன்களை எட்டியது.

ஆட்ட நாயகனாக மிட்செல் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டார். தற்போது பிரிவு பி-ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகளின் பார்படாஸ் டிரைடண்ட்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக 9 ஓவர்களில் 80 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-2-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article6430018.ece

Link to comment
Share on other sites

பஞ்சாப் மீண்டும் வெற்றி
செப்டம்பர் 20, 2014.

 

மொகாலி: பார்படாஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ போட்டியில், டேபஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆறாவது சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதன் ‘பி’ பிரிவு லீக் போட்டியில் பஞ்சாப், வெஸ்ட் இண்டீசின் பார்படாஸ் அணியை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

பார்படாஸ் அணிக்கு பெர்கின்ஸ் (10) ஏமாற்றினார். முனவீரா 26 பந்தில் 50 ரன்கள் எடுத்தார். கார்டர் (20), பிராங்க்ளின் (10), ஹோல்டர் நீடிக்கவில்லை.

பார்படாஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. அரைசதம் கடந்த ரெய்பர் (60) அவுட்டாகாமல் இருந்தார்.

கடின இலக்கைத் துரத்திய பஞ்சாப் அணிக்கு வோரா (27), சகா (14) நிலைக்கவில்லை. ‘அபாய’ மேக்ஸ்வெல் (16), சேவக் (31), பெய்லி (7), பெரேரா (0) என, அடுத்தடுத்து அவுட்டாக, திடீர் திருப்பம் ஏற்பட்டது.

ராம்பால் வீசிய 19 வது ஓவரில், மில்லர், அக்சர் படேல் இணைந்து 20 ரன்கள் எடுக்கப்பட வெற்றி எளிதானது. கடைசியில் மில்லர் ஒரு ‘சூப்பர்’ சிக்சர் அடிக்க, பஞ்சாப் அணி 19.4 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மில்லர் (46), அக்சர் படேல் (23)

அவுட்டாகாமல் இருந்தனர்.

 

 

http://sports.dinamalar.com/2014/09/1411235442/millerpunjab.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.