Jump to content

பாலித்தீவு (Bali) பயணக்கட்டுரை (படங்கள் இணைப்பு)


Recommended Posts

 பாலி இந்தோனேசியவில் உள்ள மிக அழகான‌ தீவு , அதிகளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அற்புத்தீவு.உலகிலுள்ள மிகச் சிறந்த சுற்றுலாத் தளங்களில் பாலி முக்கிய இடத்தினைப் பெறுகின்றது. இங்கு பெரும்பான்மையாக இந்துக்களே வாழ்கின்றனர் என்பது இன்னொரு சிறப்பு. இது சுந்தா தீவுகளுக்கு மேற்கேயும், ஜாவாவுக்கும் லொம்பொக் தீவுகளுக்கும் இடையில் அமைந்துள்ளது. பாலித் தீவு நாட்டின் 33 மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் டென்பசார் என்பதாகும். இங்கு பெரும்பான்மையாக இந்துக்களே வாழ்கின்றனர். இதன் கலை, கலாச்சாரம் குறிப்பாக நடனம், சிற்பம், இசை போன்றவை மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளன. இதனால் பாலித் தீவு இந்தோனீசியாவின் முக்கியமான சுற்றுலா மையமாகத் திகழ்கிறது.
 
அண்மையில் பாலிக்கு சுற்றுலா சென்ற‌ ஒருவரின் (திருகோவி.கண்ணன் ) பயணக்கட்டுரை வாசித்தேன் , நன்றாக இருந்தது. உங்களுக்காகவும் ஒரு சில பகுதிகளை இணைத்துள்ளேன்.பிடித்திருந்தால் சொல்லுங்கள் தொடர்ந்து இணைக்கின்றேன்.
 
bali-map.jpeg
 
1024px-Bali_Labeled.png
 
 
 
Bali-Wallpaper-Iphone-Mobile.jpg

 

 

Link to comment
Share on other sites

நன்றி திரு கோவி.கண்ணன்   

 

இந்துத் தீவு - பகுதி 1

 
தெற்காசிய சுற்றுலா பயணிகள் ஈர்ப்பில் முன்னனியில் இருக்கும் நகரங்களில் பேங்காக் மற்றும் பாலித் தீவு ஆகியவை குறிப்பிடத் தக்கவை. பேங்காக் தாய்லாந்தின் தலைநகர், பாலி -33 வது மாநிலமாக அறிவிக்கப்பட்ட இந்தோனேசிய தீவு. நான் இந்த இரு நகரங்களுக்கும் சென்று இருக்கிறேன், பாலி அண்மையில் (சென்ற வார இறுதியில்) சென்ற நகரம். ஒப்பிடத் தக்க அளவில் கிட்டதட்ட இரண்டுமே பயணிகளின் மனநிறைவின் பாராட்டைப் பெருகின்றன என்றாலும் பாலித் தீவினர் சுற்றுலாவாசிகளின் பாராட்டுதலைப் பெருவதில் முன்னிலையில் இருக்கின்றனர், காரணம் சுற்றுலா பயணிகளிடம் பணிவும் அன்பும் காட்டுவதில் பாலித் தீவினரே சிறந்தவர்கள்.

*****

சுற்றுலா செல்வதை விரும்பாதவர்கள் எவருமே கிடையாது, வாய்ப்புகள் வாய்க்கும் போது எல்லோருமே சென்றுவருகிறோம், என்னதான் நம்வீடே சுவர்கம் என்று கூறிக் கொண்டாலும் அதையும் தாண்டி பறந்த விரிந்த வெளியுலகம் அதன் வனப்புகளை கண்டுகளிப்பது அதற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பயணம் இவற்றை மனம் விரும்பத்தான் செய்கிறது. குறிப்பாக உண்ணுவது உறங்குவது உள்ளிட்ட த்னிமனித தேவை தவிர்த்த அன்றாடக் கடமைகளில் இருந்து ஓய்வு, சூழல்களில் இருந்து தற்காலிக விடுப்பு என்பவை சுற்றுலாக்களினால் ஏற்படும் நன்மை மற்றும் பொழுது மகிழ்தல். ஆனால் சுற்றுலா செல்வதை பொழுது போக்கு வகை என்றே சொல்கிறோம் காரணம் வெட்டிப் பொழுதின் போக்கிடம் என்பதாலோ என்னவோ.

இந்தக் கட்டுரையை பொரும்பாலும் சென்றுவந்த இடங்களின் விவரிப்பு (வர்ணனை) என்ற அளவில் எழுத வேண்டாம் என்றே நினைத்தே எழுதுகிறேன், சுற்றுலாவின் என்னுடைய கவனிப்புகள் பெரும்பாலும் எழுத்து சார்ந்தவையாக இருப்பதால் பொதுப் புத்தியைத் தாண்டித்தான் அவை எனக்குள் பதிய வைக்கப்படுகின்றன. அவற்றை எழுதும் போது சில சுவையாகவும், சில சுனக்கமாகவும் இருக்கும், என்னுடைய கட்டுரைகள் யாவும் முன்னோட்டங்களுடன் துவங்குவதன் மூலம் தொடர்ச்சியான வாசிப்பின் மன நிலையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு, அதற்காக மேல் பத்தியை திரும்பவும் படிக்க வேண்டாம், பழைய கட்டுரைகளிலும் கூட அவ்வாறே சில முன்னோட்ட வரிகள் எழுதப்பட்டு இருக்கும் என்பதை ஏற்கனவே வாசித்துவருபவர்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

*****

எனக்கு கிடைத்த பாலித் தீவு சுற்றுலா வாய்ப்பு வேலை செய்யும் நிறுவனத்தால் கிடைத்ததாகும், 2010 ஆம் ஆண்டின் வரவு செலவு போக குறிப்பிட்ட தொகையை பொழுது போக்கு செலவிற்காக எடுத்து வைத்திருந்தனர், இதுவரை சரியான நேரம் வாய்க்காததால் இந்த ஆண்டு உற்பத்தி கொஞ்சம் சுனங்கியதாலும் தற்போது அவற்றை சுற்றுலாவிற்கு பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் கொடுத்து என்னையும் சேர்த்து இருவரிடம் ஏற்பாட்டின் பொறுப்புகளை கொடுத்திருந்தனர். சுற்றுலா தேதி உள்ளிட்டவைகள் நான்கு மாதங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது, அப்போதைக்கு தாய்லாந்த் வெள்ளம் அச்சமூட்டியதால் நாங்கள் தேர்வு செய்த இடங்களின் ஒன்றான பாலியை மற்றவர்களின் ஒப்புதல் கிடைக்க இறுதி செய்தோம். திட்டமிட்டபடி கடந்த் பெப் 11 - 13(2012) வரை மூன்று பகல் இரு இரவுகள் பாலியில் சுற்றுலா மேற்கொள்வதாக் முடிவு செய்திருந்தோம்.

பாலி செல்லும் முன் பாலியைப் பற்றி தெரிந்து கொள்வோம் என்று தகவல்களைத் தேடினேன். என்னை வியப்படைத்த முதல் தகவல் அங்கு வசிப்பவர்களில் 92.29% விழுக்காட்டினர் இந்துக்கள், பாலி இந்தோனேசியாவின் பகுதி என்பதாலும் இந்தோனேசியா உலகில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை அடிப்படையில் மிகுதியாக வசிக்கும் நாடு என்று அறிந்துள்ளதாலும் இந்தத் தகவல் எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. உலகின் இந்து நாடு என்று சொல்லிக் கொள்ளும் நேபாளில் கூட இந்து மக்கள் தொகை 80.6 விழுக்காடு தான். இந்தியாவிற்கு 3000 கிமீ தள்ளி இருக்கும், சுற்றிலும் இஸ்லாமிய பெரும்பான்மை வசிக்கும் நாடுகளைக் கொண்ட இந்தத் தீவில் மட்டும் எப்படி ? வியப்பானது தானே! அதற்கான காரணம் பின்னர் அங்கு செல்லும் போது தான் தெரிய வந்தது.

சுற்றுலா முழுக்க முழுக்க தனியார் நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்திருந்தாலும், ஏற்பாட்டாளர் என்ற முறையில் என்னிடம் உடன் பணி புரியும் அண்மையில் திருமணமான பெண் தனது கணவருடன் தேன்நிலவாக கொண்டாட நினைத்து சேர்ந்து கொண்டவர் ஒருவர், அவர் நான் பணிபுரியும் நிறுவனத்தில் பணிபுரியும் மலாய் இஸ்லாமியர்களில் ஒருவர், உணவு குறித்த தனது எதிர்ப்(பார்)பை வெளிப்படுத்தினார்.'அங்கு ஹலால் உணவு கிடைக்குமா ?' என்று கேட்டார் பாலி இந்தோனேசியாவின் பகுதிதானே ? ஏன் கிடைக்காது ? என்ற என் கேள்விக்கு பாலி இஸ்லாமியர் வாழும் பகுதி இல்லையே ? என்றார் 'எனக்கு தெரியாத தகவல் என்ற அடிப்படையில் பார்க்கும் போது இங்கு பிறந்து வளர்ந்தவர்கள், தெற்காசிய பண்பாடு மற்றும் வரலாறுகள் தெரிந்தவர்கள் என்ற அடிப்படையில் பாலியைப் பற்றி நல்லாத் தெளிவாகத்தான் இருக்காங்க' என்று நினைத்தவாறு, சுற்றுலா நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள, சுற்றுலாவின் போது வழங்கப்படும் அனைத்து உணவுகளும், குறிப்பாக தெற்காசிய சுற்றுலா பயணிகளில் இஸ்லாமியர் உண்டு என்பதால் ஹலால் உணவு தான் ஏற்பாடு செய்யப்படும் என்று சொன்னார்கள். அந்தத் தகவலை அவரிடம் தெரிவித்தேன். எனக்கு என் கவலை சைவ உணவு கிடைக்குமா ? என்பது தான். இணையத்தைத் தேட வட இந்திய உணவகங்கள் சிலவற்றின் பெயர்கள் முகவரிகள் தென்பட்டன, அவற்றின் விலைகளும் அமெரிக்க வெள்ளி மதிப்பில் ஒரு பொழுதிற்கு 15 டாலர் என்ற அடிப்படையில் இருந்தது, (ஒண்ணும்) 'இல்லாத வாயிக்கு இலுப்பைப் பூ சர்கரை' - சைவ உணவு கிடைக்கவில்லை என்றால் போக்கிடம் உண்டு என்று தெரிந்து கொண்டேன்.

அன்றைய ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு 7000 இந்தோனேசியா ருபியா என்ற அடிப்படையில் தேவையான பணமாற்றங்களை செய்து கொண்டு, ஏற்பாட்டின் படி சென்ற சனிக்கிழமை சிங்கப்பூரில் இருந்து ஏர் ஏசியா வானூர்தி வழியாக நான் பணிபுரியும் நிறுவனத்தின் தலைமைகள் இருவருடன், உடன் பணிபுரியும் சிலரின் உறவினர், நண்பர்கள் மொத்தம் 35 பேர் புறப்பட்டோம், ஏர் ஏசியா மலேசியா நாட்டிற்கு சொந்தமானவை, தெற்காசியாவினுற்குள் குறைந்த கட்டண வானூர்தியாக செயல்படுகிறது, பயணம் காலை 7:30 மணிக்கு புறப்பட்டது, ஓடுதளத்தில் ஊர்ந்து சென்றது, ஓடுதளத்திலும் போக்குவரத்து நெரிசல், வானூர்த்திகள் ஒன்றன் பின் ஒன்றாக சைகளுக்கான காத்திருப்பில் வரிசை கட்டி நின்றன, ஒவ்வொரு வானூர்தியும் இரண்டு நிமிட இடைவெளியில் ஓட்டம் எடுக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. ஓட்டம் எடுக்கும் தளத்திற்கு நாங்கள் பயணம் செய்யும் வானூர்தி திரும்பும் போது சன்னல் வழியாகப் பார்க்க கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை வானுர்திகள் குறிப்பிட்ட இடைவெளியில் வரிசையாக ஊர்ந்து கொண்டிருந்தன, இப்படியான காட்சி முதன் முறையாக என்பதால் க்ளிக்கினேன்.
 
photo%2B%25282%2529.JPG
 
பறக்கத் துவங்கிய 10 ஆம் நிமிடம் வழக்கமாக எதுவுமே கொடுக்காத குறைந்த கட்டண சேவையில் ஊதிய ரொட்டி (Bun) பச்சைத் தண்ணீரும் கொடுத்தார்கள் என்பது ஆறுதல். இரண்டு மணி நேரப் பயணம் இடையே குட்டித் தூக்கம், வானூர்த்தி ஜாவா (இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா அமைந்துள்ள பெரிய தீவு) வைக் கடந்து மிகவும் தாழப் பறந்தது.
map.gif
 
photo%25280%2529.JPG
 
கிட்டதட்ட கடல் மேல் மிதந்து செல்வது போன்று இருந்தது, அப்படியே தரையிறங்க இந்திய பெருங்க கடலில், பாலி ஸ்டெரெய்ட் பகுதியில் இரு பெரும் நிலப்பரப்புகளை இணைக்கும் குறுகிய இடத்தில் அமைந்துள்ள டென்பசார் வானூர்தி நிலையத்தில் தரையிறங்கியது. இறங்கி நிறுத்தும் இடத்திற்கு திரும்பும் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரு நிமிட இடைவெளியில் வரிசையாக வானூர்திகள் இறங்கி இந்தத் தீவு சுற்றுலா வாசிகளின் மொய்கும் தீவு என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு இருந்தன.
 
denpasar_airport.JPG
 
photo%2B%25281%2529.JPG
 
வானூர்தி கதவுகள் திறக்கப்படும் முன் சன்னல் வழியாகப் பார்க்க பாலித் தீவின் முகப்பாக கோபுர வாயில்கள் தென்பட்டன, கதவுகள் திறந்து வெளியே செல்ல பாலி நடன மங்கையின் அழகான ஓவியம், அதைத் தாண்டி செல்ல முன்பு பார்த்த கோபுர வாயின் பின்பகுதி, அதைக் கடந்து 'வருகையின் போதான குடிநுழைவு' (visa on arrival) சோதனைகளை முடித்துக் கொண்டோம், இந்தோனிசாவின் எந்தப் பகுதிக்கும் செல்ல முன்கூட்டிய குடிநுழைவு அனுமதிகள் வாங்கத் தேவை இல்லை, வருகையின் போதே கடவுச் சீட்டு 6 மாதங்கள் செல்லுபடியாகத் தக்கது என்றால் வழங்குகிறார்கள். அதை மட்டும் பயணிகள் சரி பார்த்துக் கொண்டிருந்தால் போதும்.
 
photo%2B%25284%2529.JPG
 
photo%2B%25283%2529.JPG
 
 
entrygate.JPG
 
arrival.JPG
 
பெட்டிகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தோம். சுற்றுலா நிறுவனத்தின் முகவர் ஒருவரும் எங்களுடன் பயணித்தார். மற்ற ஏற்பாடுகளை கவனித்துக் கொள்வது அவர் பொறுப்பாக சுற்றுலா நிறுவனமே அவரையும் அனுப்பி இருந்தது. வானூர்தி நிலையத்தில் இருந்து தங்கும் நான்கு நட்சத்திர விடுதிக்குச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன, அங்கு பாலியில் வரவேற்பதற்கு மற்றும் ஒரு சுற்றுலா பாலித் தீவு முகவர் எங்களை எதிர்கொண்டு பயணப் பெட்டிகளை சேகரித்து மற்றொரு வாகனத்தில் ஏற்றி விடுதிக்கு அனுப்பினார், சுற்றுலாவிற்கு செல்லும் எங்கள் குழுவினர் அனைவருக்கும் மாலைகள் அணிவித்தனர். அவ்வாறு மாலை அணிவிப்பது எங்கள் நாட்டிற்கு வருகை தரும் நீங்கள் எங்களது விருந்தினர் மற்றும் மரியாதைக்குரியவர் என்பதனை வெளிப்படுத்தும் நிகழ்வாம். இளம் வயது பெண் தான் ஆண் பெண் அனைவருக்கும் மாலை அணிவித்தார்.
luggage.JPG
 
maalai1.JPG
 
maalai2.JPG
 
இந்தியாவில் ஒரு பெண் கணவன் தவிர்த்த பிற ஆண்களுக்கு மாலையிடுவது மரபு இல்லை, இங்கு பாலியில் இருக்கும் இந்து மதம், இந்திய மரபுகளில் மாறுபடும் முதல் காட்சியாக அதனை பதிவு செய்து கொண்டேன், எங்களை ஏற்றிக் கொண்ட குளிர் பேருந்து வானூர்தி நிலையத்தை விட்டுப் புறப்பட்டது, பாலி சுற்றுலா முகவர் தன்னை 'நியோமான்' அறிமுகப்படுத்திக் கொண்டு எங்களின் பயணத்திட்டத்தின் தொடர்பில் தனது ஏற்பாடுகள் எவை எவை என்று கரடு முரடான ஆங்கிலத்தில் பேசத் துவங்கினார்.
 
bus.JPG
 
nyoman.JPG
 
 
தொடரும்...

 

Link to comment
Share on other sites

இந்துத் தீவு - பகுதி 2

 
பரந்து விரிந்த உலகில் நிலப்பரப்பு யாவும் ஒன்றே, அங்குள்ள தட்பவெப்பத்திற்கு ஏற்ப அந்நிலப்பரப்புகளின் மரம் செடி வகைகள் காணப்படும், அப்பகுதிகளில் பண்பாட்டிற்கு ஏற்றவாறு கட்டிடடங்கள் காணப்படும். இயற்கை அமைப்பு செயற்கை அமைப்புத் தவிர்த்து மனிதர்களின் தோற்றங்களில் மாற்றமும் நடை உடை பேச்சு வழக்கு மொழிகளில் மாற்றமிருக்கும், மனித குல இடப் பெயர்ச்சி எப்போதும் இனக் குழுவாகவே நடைபெற்றிருப்பதால் குறிப்பிட்ட நிலப்பரப்புகளில் குறிப்பிட்ட இன மக்கள் வசிப்பதில் வியப்பு இல்லை

எந்த ஒரு ஊர் நகரம் அல்லது நாடுகளில் நாம் முதன் முதலாக நுழையும் போது முதலில் நம் கவனத்திற்கு வருவது அங்கு வசிக்கும் மக்கள் தான். இந்தோனேசியா மற்றும் மலேசிய மக்களின் தோற்றங்களில் பெரிய வேறுபாடுகள் இல்லை. அடிப்படையில் தங்களது பண்பாட்டு சின்னங்களை வெளிப்படுத்த வேண்டிய இடத்தில் அதற்கேற்ற ஆடை அணிந்திருப்பார்கள், பாலினீஸ் என்கிற பாலிவாழ் இந்தோனேசியர்களுக்கும் பிற இந்தோனேசியர்களுக்கும் தோற்றத்தில் பெரிய மாற்றம் இல்லை, ஆஸ்ட்ரோனேசிய இனத்தினர் ,ஆனால் அவர்களின் உடை அமைப்புகள் அவர்களை கொஞ்சம் தனித்து காட்டுகின்றன.

 
கண்ணில் தென்பட்ட பாலினேசிய பெண்கள் யாரும் தலைக்கு முக்காடு போட்டிருக்கவில்லை, முக்காட்டை தவிர்த்த மலாய் பெண்களின் தோற்றத்தில் இருந்தார்கள். ஆண்களில் சிலர் இஸ்லாமிய தொப்பியின் அளவிளான துண்டால் அமைக்கப்பட்ட சிறிய தலைப்பாகை அணிந்திருந்தனர், கூடவே வேலைப்பாடுகளுடன் ஆனத் துண்டு ஒன்றை பேண்ட் அல்லது கைலிக்கு மேல் சுற்றி இருந்தனர். இது போல் துண்டு சுற்றிக் கொள்வது மலாய்காரர்கள், இந்தோனேசியர் மற்றும் பாலித்தீவினரின் உடைவழக்கத்தில் ஒன்றாக இருக்கிறது. மலாய் காரர்களின் தோற்றத்தில் பிற மதத்தவர் இல்லையா ? என்கிற கேள்விக்கு விடையாக பாலினீஸ் மக்கள் தெரிகிறார்கள்.

*******

எங்களை ஏற்றிக் கொண்டு பேருந்து விடுதியை நோக்கி புறப்பட்டது, ஏற்கனவே கூகுளில் தங்கப் போகும் இடம் பற்றி தெரிந்து வைத்திருந்தேன், திசைகள் குழப்பம் இல்லாமல் இருந்தது,  கு(ட்)டா பாலி என்கிற கடற்கரை பகுதியில் அமைந்திருந்து தங்கப் போகும் விடுதி, விமான நிலையைத்தை விட்டு பேருந்து வெளியே வந்ததும் கண்ணில் பட்ட காட்சிகள் குறிப்பாக குறுகிய சாலை கடைகளின் நெருக்கம், ஊர்த்திகள் இந்தியாவை நினைவு படுத்தியது. குதிரை வண்டிகளை பார்க்க முடிந்தது, வழிகாட்டுபவர் குறிப்பிட்டது போல் மேல் சட்டை இல்லாமல் ஆஸ்திரேலிய ஆடவர்கள் நடந்து சுற்றுவதையும் இருசக்கர ஊர்திகளிலும் அப்படியே பயணிப்பதை காண முடிந்தது.

 

IMG_4358.JPG
பாலினீஸ் சுற்றுலா முகவர் பேசத்துவங்கி இருந்தார், 'அனைவருக்கும் வணக்கம், என் பெயர் 'நியோமான்' நீங்கள் இங்கே மூன்று நாட்கள் தங்குகிறீர்கள், இன்றும் நாளையும் நீங்கள் செல்லப் போகும் இடங்கள் இவை இவை, இந்த மூன்று நாள் நான் உங்களுடன் இருந்து உங்களுக்கு செல்லும் இடம் பற்றிய தகவல்களை தெரிவிப்பேன், பாலி பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம், இங்கே பாலியில் இந்துக்கள் தான் பெரும்பான்மை, நானும் ஒரு இந்து, 90 விழுக்காடு இந்துக்கள் நிறைந்திருக்கும் இந்துத் தீவு இது, இந்து கலாச்சார சின்னங்களை நீங்கள் இங்கு பார்க்கலாம், ஆனால் எங்களது இந்து மதமும் இந்தியாவில் இருந்து வந்தவை என்றாலும் மதம் தொடர்பான எங்கள் பழக்கவழக்கங்கள், சடங்குகள் இந்தியாவிற்கு முற்றிலும் மாறுபட்டது, இன்றைக்கு எங்களுக்கு பெருநாள்(ஹரி ராயா), இது பாலியில் மட்டும் கொண்டாடப்படும் இந்து பண்டிகை, இதன் பெயர் குனிங்கன் (Kuningan)- களுங்கன்(Galungan)', எங்களுக்கு மிகவும் சிறப்பான நாள், பலர் விடுமுறை எடுத்து இருப்பார்கள்' என்றார், இந்துப் பண்டிகை என்ற அளவில் எங்கும்நான் இதுவரை இப்படி ஒரு பண்டிகை கேள்விப்பட்டது இல்லை.

"பாலி ஆஸ்திரேலியர்களின் இரண்டாம் வீடு, ஒவ்வொரு ஆஸ்திரேலியரும் பாலிக்கு வந்து செல்வதை பொழுது போக்காகக் கொண்டு இருக்கின்றனர், காரணம் இங்குள்ள உணவு, அழகான கடற்கரை பொழுது போக்கு கூடங்கள் மற்றும் விலை குறைவான பொருள்கள்' என்று சொல்லிக் கொண்டு வந்தார், எங்கள் தீவு இந்தோனேசியாவின் பகுதி என்றாலும் எங்களை பாலினீஸ் என்றே அழைத்துக்கொள்வோம், நாங்கள் 4 மில்லியன் இருக்கிறோம், எங்களது நிலப்பரப்பு 5000 சதுர கிலோ மீட்டர்கள், நீங்கள் வசிக்கும் சிங்கப்பூரைக் காட்டிலும் 6 மடங்கு பெரியது' என்றார்.

 
IMG_4361.JPG
 
IMG_4363.JPG
 
பேருந்து போக்குவரத்து நெரிசல் காரணமாக ஊர்ந்தே சென்றது, 'மட்டஹரி' என்ற பெருங்கடைப் பகுதியைக் கடக்கும் போது 'உங்களுக்கு தெரியுமா ? 2002 ஆம் ஆண்டு ஜவா தீவின் 'ஜமாயா இஸ்லாமியா' தீவிரவாதிகளினால், பாலியில் நடந்த குண்டு வெடிப்புகளில் ஒன்றாக, தற்கொலை தாக்குதலாக குண்டுவெடிப்பு நடந்த இடம் இது தான்' என்றார். அந்த இடம் மீண்டும் கட்டியெழுப்பப் பட்டு 'மட்டஹரி' மீண்டும் இயங்குகிறது என்றார். அந்த இடத்தை கடந்து பேருந்து வலது பக்கம் திரும்ப, வெளிச்சுவருடன், பாலி கோபுர நுழைவாயில் முகப்புடன் நீலக்கடல் (பாலி ஸ்ரெய்ட் பகுதி) தென்பட்டது, அங்கிருந்து மீண்டும் இடது பக்கம் திரும்பி பேருந்து ஊர்ந்து செல்ல அடுத்த 5 நிமிடத்தில் நாங்கள் தங்கப் போகும் 'ஹார்ரிஸ் - குட்டா ரிசார்ட்' என்னும் நான்கு நட்சத்திர விடுதி வந்துவிட்டது.
 
IMG_4365.JPG
 
IMG_4782.JPG

காலை மணி 12 ஐ நெருங்க, 35 பேர்களுக்கும் கிட்டதட்ட பகிர்தல் என்ற அடிப்படையில் 20 அறைகள் ஒதுக்கப்பட்டன, இணையாக வந்தவர்களுக்கும் பெரிய கட்டில்களும், தனித்தனியாக வந்தவர்களுக்கு அறைக்கு இருவர் என இரு தனிக் கட்டில்கள் உள்ள அறைகளும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டபடி ஒதுக்கப்பட்டது. சிறிது நேர ஓய்வுக்கு பிறகு அன்றைய சுற்றுலா திட்டத்தின் படி மதிய உணவை முடித்துக் கொண்டுசெல்ல வேண்டிய இடங்களுக்கு அழைத்துச் செல்ல பேருந்துகள் நின்று கொண்டிருந்தன.

அனைவரும் அறைகளில் இருந்து திரும்ப காலை மணி 12:30 ஐத் தாண்ட, பேருந்தில் ஏறி மதிய உணவிற்குச் சென்றோம், செல்லப் போகும் அரை நாள் சுற்றுலா எங்களில் 22 பேர் மட்டும் தனியாக ஏற்பாடு செய்திருந்தோம், மதிய உணவு, சுற்றுலா, தேவையான நுழைவுச் சீட்டு மற்றும் பயண வழிகாட்டல் உள்ளிட்டவற்றிற்கு ஒருவருக்கு 18 அமெரிக்க வெள்ளிகள் முன்கூட்டியே பேசப்பட்ட ஏற்பாட்டில் தான் அன்றைய அரை நாள் பயணம், எங்களில் வந்தவர்களில் சிலர் விடுதியில் ஓய்வெடுத்தார்கள், சிலர் தனியாகவே சென்றார்கள். அன்றைய சுற்றுலாவில் பார்க்க வேண்டிய இடங்களில் முதன்மையான ஒன்று 'உலுவாட்(டு) டெம்பிள்' எனப்படும் புகழ்பெற்ற பாலிக் கோவில்.

முதலில் மதிய உணவிற்காக சைனீஸ் உணவு விடுதி ஒன்றில் பேருந்து நின்றது, ஒரே சமயத்தில் 500 பேர் வரை அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு பெரியது, அங்கு கடல் உணவு எட்டுவகையிலும் சாற்றுடன் (சூப்), சோற்றுடன் எட்டு பேருக்கு ஒரு வட்ட மேசை என்ற அடிப்படையில் உணவு வழங்கப்பட்டது, எனக்கு அதில் உண்ணுவதற்கு எதுவும் இல்லை, என்னால் இவற்றை உண்ண முடியாது, எனக்கு மரக்கறி உணவுதான் வேண்டும் என்று கூறினேன், முன்கூட்டியே சொல்லி இருந்தால் சரியாக செய்திருப்பார்கள், ஏற்கனவே செய்யப்பட்டது என்ற அடைப்படையில் அப்போது சொல்லும் போது கொஞ்சம் தயங்கினாலும் உடனேயே ஒப்புக் கொண்டு கீரைச் சாறு, வதக்கிய கீரை, வேக வைத்த முட்டை கோசு மற்றும் சோயா கேரட் சேர்த்து செய்த ஒரு கொழ கொழ வகை தட்டுகளை கொண்டு வந்து வைத்தனர். இருந்த பசிக்கு இதுவே பெரிசு என்று முடிந்தவரை தின்றேன்.

IMG_4375.JPG

IMG_4372.JPG

IMG_4371.JPG

ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டது என்ற முறையில் என்னால் அவர்களுக்கு ஒரு ஆளுக்கான கடல் உணவு நட்டம் தான், அதற்காக தனியாக காசு ஏதும் கேட்கவில்லை, வேற நாடு வேற இடம் என்றால் முன்கூட்டியே ஏன் சொல்லவில்லை என்பதைக் காரணமாகக் கூறி பணம் பறிக்காமல் விட்டு இருக்கமாட்டார்கள். இங்கு (பாலிக்கு) வரும் சுற்றுலாவாசிகள் மனம் நோகும் படி எது நடந்தாலும் அவர்கள் திரும்ப வரத் தயங்குவார்கள் என்பதால் இது போன்ற நீக்கு போக்குகளை அவர்கள் நட்டப்பட்டாலும் கடைபிடிக்கிறார்கள் என்பதை உணர்த்தியது. தேவையற்ற தகராறுகள் சுற்றுலாவாசிகளின் வந்த நோக்கத்தை கொன்றுவிட்டு மன அமைதியை கெடுத்துவிடும் நாம் அதற்கு எந்தவிதத்திலும் காரணமாக அமையக் கூடாது என்பதில் பாலியில் சுற்றுலாவை நம்பி தொழில் செய்பவர்கள் எல்லோருமே கடைபிடிக்கிறார்கள் என்பதை பின்னர் நாட்களின் சில நிகழ்வுகளிலும் தெரிந்து கொண்டிருந்தேன். நான் வலுக்கட்டயமாக பணம் கொடுக்க முன் வந்தும் மறுத்துவிட்டார்கள், பணத்துக்காகத் தான் தொழில் என்றாலும் மறுமுறை வாடிக்கையாளர் திரும்ப வேண்டுமென்றால் சில நீக்கு போக்குகளை கடைபிடித்து தான் ஆகவேண்டும் என்று அவர்கள் பாடம் நடத்துவதாக உணர்ந்தேன்.

எங்களின் அன்றைய (சனிக்கிழமை பிற்பகல்) பயணத்திட்டத்தின் படி நாங்கள் செல்ல வேண்டிய இடங்கள் ஒரு கடற்கரை, மற்றும் ஒருகோவில், கோவிலுக்கு வர விருப்பமில்லாத மலாய் ஜோடி வேறொரு அரை நாள் நகரச் சுற்றுலாவிற்கு சென்றுவிட்டனர், அதற்கு நான் ஏற்பாடுகளை செய்திருந்தேன், ஆனால் எல்லோருமே அந்த உணவகத்தில் உணவு எடுத்த பிறகே பிரிந்து சென்றோம், எங்களுக்கு இப்போது கிடைத்திருந்தது வேறொரு சுற்றுலா வழிகாட்டி, அவர் தலைத் துண்டு அணியவில்லை. ஏற்கனவே முடி கொட்டிய தலைக்கு அது தான் காரணம் என்று நினைத்து தவிர்த்திருந்தாரோ என்னவோ. தானும் ஹிந்து என்று கூறிக் கொண்டு என்னைப் பற்றிக் கேட்டார், நான் தான் குறிப்பிட்ட சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்தவன் என்று கூறியதால் என்மீது கூடுதலான மரியாதை கூடவே நானும் இந்தியாவின் ஹிந்து மதத்தில் சேர்க்கப்பட்டவன் என்று அவரிடம் கூறியதில் அவருக்கு கூடுதலான மகிழ்ச்சி.

 
P1010168.JPG
 
பேருந்து தெற்கு பாலியின் கடற்கரை விளையாட்டுகள் நிறைந்த 'நூசாதுவா' என்ற இடத்தை நோக்கி பயணித்தது, வழியில் கடற்கரைக்கு பிரியும் சாலைப் பகுதியில் ஒரு பெரிய சிலை. 'டிராகனுடம் சண்டையிடும் பீமன்' சிலையாம், கடலில் தூக்கி வீசப்பட்ட பீமனை காப்பற்ற வரும் டிராகன் தன்னை தாக்கவருவதாக நினைத்து பீமன் சண்டை இடுவானாம், பீமன் பலசாலியாக இருந்தாலும் அறிவு குறைவு தான்' என்று கூறி மாகாபாரத் கதையின் ஒரு கிளைக்கதையாக அதனைக் குறிப்பிட்டார், எனக்கு தெரிந்த அளவில் மகாபாரதக் கதையில் டிராகன் எதுவும் வரவில்லை, ஆனால் மகாபாரதக் கதைகள் பலவடிவங்களில் உள்ளது என்று அறிவேன், அதன் ஒரு வடிவத்துனுள் இருக்கும் கதைகளினுள் இவைகள் இருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன்.
 
IMG_4376.JPG
 

பேருந்து கடற்கரைச் சாலையில் பயணித்தது, குறுகிய சாலை தான் ஒரு பேருந்து செல்ல எதிரே வர போதிய அகலம் உள்ள சாலை, இருபக்கம் சில வகை மரங்களினால் ஆன பசுமைகள் தென்பட்டன. கடற்கரையை அடைந்தோம். தெளிந்த நீல வண்ணத்தில் கடற்கரை, அலைகள் அற்றதாகவும், காண மிகவும் அழகாக இருந்தது. நிறைய வெள்ளைத்தோல் வெளிநாட்டினர் படகு நீர் சறுக்கு, வான்குடை ஆகியவற்றில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு இருந்தனர், கடற்கரை எங்கும் அங்கு சட்டையில்லாத கடற்கரை தொழிலாளர்கள், அவர்கள் படகுகளை செலுத்தவும், வான்குடைகளையும் வாடகைக்கு விட்டு அது சார்ந்த தொழிலில் மும்மரமாக இருந்தனர். ஆமைகளையும் அழிவில் இருக்கும் பிற கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாக்க இந்தோனேசியா முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும், ஆமைகளை உணவிற்கு கொல்வதற்கு தடை இருப்பதாகவும் வழிகாட்டி குறிப்பிட்டு இருந்தார்.

 
photo%2B%25282%2529.PNG
 
IMG_4377.JPG
 
P1010173.JPG
 
எங்களில் சிலர் அங்கு தொலைவில் இருக்கும் மற்றொரு தீவிற்கு கடல் ஆமைகளின் காட்சி கூடத்திற்கு செல்ல படகு ஏறினார்கள், கடலில் படகு பயணம், பாலி ஆமை என்பது தவிர ஆமையில் வேறென்ன சிறப்பு ? சிங்கப்பூரில் அதற்கு என்றே ஒரு குட்டித் தீவு உண்டு, எனவே ஆமை பார்கச் செல்லாமல் நானும் சிலரும் கடற்கரையின் ஓய்வுப் பகுதியில் காத்திருந்தோம்' ஒரு மணி நேரம் கழித்து மாலை 4 மணிக்கு அங்கிருந்து 'உலுவாட் கோவில்' நோக்கி பயணித்தோம்.
 
Link to comment
Share on other sites

 
இந்துத் தீவு - பகுதி 3
 
நாட்டுக்கு நாடு எதோ ஒரு தனித் தனியான பண்டிகைகள் உண்டு, இவை பெரும்பாலும் மதம் தொடர்பில் வருபவை, ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்மஸ் சீசன், இந்தியாவிற்கு தீபாவளி என்பது போல் பாலியில் கொண்டாடப்படும் பண்டிகைகள் தீபாவளி மற்றும் முன்பு சொன்ன குனிங்கன் - களுங்கன், பாலியின் தனித்துவமாக இந்தப் பண்டிகைகளின் முகங்களாக வாழ்த்து விளம்பரங்களும், தோரண அமைப்புகளும் காணப்பட்டன. உடலெங்கும் ஆணி அடிக்கப்பட்டு அதில் மாட்டப்படும் படங்களாக பண்டிகைகளை, மதச்சின்னங்களை அங்கங்கே அணிந்து கொண்டு இதில் எதிலும் க(ல)வரப்படாமல் சுத்துகிறது இந்த பூமி.

******

உலுவாட் டெம்பிளுக்கு செல்லும் வழியில் குனிங்கன் - களுங்கன் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தார் வழிகாட்டி, பின்னர் இணையத்தில் தேடி பார்த்த போது அது குறித்த மேலும் தகவல்கள் கிடைத்தன. ஆங்கில நாட்கள் தவிர்த்து பாலியர்களுக்கென்றே தனித்த இரு நாட்காட்கள் உள்ளது, ஒன்று 210 நாட்கள் கொண்டதாகவும், மற்றொண்டு 365 நாட்கள் கொண்ட நாட்காட்டி மதம் மற்றும் சடங்குகளுக்கு, அறுவடைகள் தொடர்பில் 210 நாட்கள் கொண்ட (Pawukon) நாட்காட்டி உள்ளது. இந்த நாட்காட்டி வழக்கப்படி பாலி இந்து குழந்தையின் முதல் பிறந்த நாள் 210 நாட்களில் வந்துவிடும். குனிங்கன் - களுங்கன் 210 நாள் நாட்காட்டி படி அவர்களின் கடைசி பண்டிகை, குனிங்கனில் பூமிக்கு வரும் கடவுள்கள் பத்து நாட்கள் தங்கிவிட்டு களுங்கன் அன்று செல்வார்களாம். இந்த நாட்களின் கடவுள்களை வரவேற்கும் முகமாக அனைத்து பாலி இந்து வீடு, கடைகள், நிறுவனங்கள் மற்றும் நிலங்களில் ஒற்றை மூங்கில் ஓலை அலங்காரம் செய்யப்பட்டு அவை உச்சி வளைவாக நிற்கின்றன, அடிப்பாகத்தில் கழுத்து உயரத்தில் மூங்கில்களால் மாடம் போல் செய்யப்பட்டதில் சிறிய ஓலைத்தட்டில் பூக்கள் மற்றும் உணவு பொருள் சிலவற்றை வைத்திருக்கிறார்கள். பாலியின் பண்டிகைகளில் பெரும்பாலானவை 210 நாட்களுக்கு ஒருமுறை திரும்பவரும்.
 
IMG_4609.JPG
 
நாங்கள் சென்ற சனிக்கிழமை 'களுங்கன்' அதாவது கடவுள்கள் திரும்பும் நாளாம், அன்று கோவில்களுக்குச் சென்றுவிட்டு அடுத்த நாள் உறவினர்கள் வீடுகளுக்குச் செல்வார்களாம், நகரெங்கும் வீடுகள் கடைகள் முகப்பில் மூங்கில் அலங்கார வரவேற்புகள் தென்பட்டன. பாலித் தீவு எங்கும் இவ்வாறான காட்சிகள் சாலை தோறும் காண முடிந்தது. கோவில்கள் 'புரா' என்று அழைக்கப்படுமாம், நாங்கள் சென்றது 'உலுவாட் புரா' மேலும் பார்க்க

http://baliwww.com/event/galungan.htm

வழிகாட்டி பாலி பண்பாடுகள் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தார், பாலியில் மட்டும் ஏன் இவ்வளவு இந்துக்கள் ? என்று கேட்டேன், ஜாவா தீவில் 400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இஸ்லாமிய மதமாற்றத்தை ஏற்க விரும்பாதவர்கள் அதிலிருந்து தப்பி தஞ்சமடைந்தது பாலி தான். எங்களுக்கு எங்கள் கல்சர் முக்கியம் அதைத் தற்காத்துக் கொள்ள சரியான இடம் என்று பாலிக்கு பல்வேறு இந்தோனேசிய பழங்குடிகள் மற்றும் இந்துக்கள் இங்கு குடியேறி பாலியினமாக மாறிக் கொண்டனர் என்றார். அவர் குறிப்பிட்டதை பின்னர் இணையத்தில் தேடிய போது பாலியை நோக்கி கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக மூன்று முறை பழங்குடி இந்துக்களின் இடப் பெயர்வு நிகழ்ந்திருப்பது தெரிந்தது, ஆகக் கடைசியாக நிகழ்ந்ததை அவர் குறிப்பிட்டு இருந்தார்.
 
அவ்வாறு அவர் சொல்லும் போது, தொடர்ந்து இஸ்லாமிய பிரச்சாரப்பதிவுகளை படிப்பதால் என்னவோ, 'ஏக இறைவனையும் இறுதித் தூதரையும் ஏற்றுக் கொண்டு நிரந்தர சொர்கமும் அங்கே நித்திய கன்னிப் பெண்களையும் பெற வேண்டிய பாக்கியத்தை உதறித்தள்ளிவிட்டு ஓடிவந்த அதிர்ஷ்டம் அற்றவர்கள் இவர்கள் தானா ? ஜாவா, மலேசியாவாழ் மக்களுக்கு வாய்த்த அதிர்ஷ்டம், அவர்களை நாடிய ஏக இறைவன் இவர்களை ஏன் நாடவில்லையோ?' இருந்த போதிலும் இறைவன் நன்கு அறிந்தவன்' என்று நினைத்துக் கொண்டேன்.

When Islam surpassed Hinduism in Java (16th century), Bali became a refuge for many Hindus. Balinese Hinduism is an amalgam in which gods and demigods are worshipped together with Buddhist heroes, the spirits of ancestors, indigenous agricultural deities and sacred places. Religion as it is practiced in Bali is a composite belief system that embraces not only theology, philosophy, and mythology, but ancestor worship, animism and magic. It pervades nearly every aspect of traditional life. Caste is observed, though less strictly than in India. With an estimated 20,000 puras (temples) and shrines, Bali is known as the "Island of a Thousand Puras", or "Island of the Gods".[48]
http://en.wikipedia.org/wiki/Bali


Main article: History of Bali
The origins of the Balinese came from three periods: The first waves of immigrants came from Java and Kalimantan in the prehistoric times of the proto-Malay stock; the second wave of Balinese came slowly over the years from Java during the Hindu period; the third and final period came from Java, between the 15th and 16th centuries, at the time of the conversion of Islam in Java, aristocrats fled to Bali from the Javanese Majapahit Empire to escape Islamic conversion, reshaping the Balinese culture into a syncretic form of classical Javanese culture with many Balinese elements.

பாலியினர் உணவு ஹலால் கிடையாது, ஒரு சில சடங்குகளின் போது பச்சை இரத்தத்தில் (பன்றி, கோழி) பழங்களை வெட்டிப் போட்டு சாப்பிடுவார்களாம், பன்றி இறைச்சி அவர்களின் உணவுக்களுக்குள் முக்கியமானது

பாலியின் விலையேறிய நிலங்கள் என்ற அளவில் நூசாதுவாவிற்கே அதிக விலையாம், ஒரு காலத்தில் இலவசமாக இங்கு குடியமற்விற்காக நிலங்கள் வழங்கப்பட்டதாம், இப்போது நடுத்தரவர்கம் வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளதாகவும், அங்கே பன்னாட்டி விடுதிகள் கட்டப்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டார். நூசாதுவாவின் எதிர்புறம் 3 கிலோ மீட்டர் தள்ளி அதே கடல் பகுதியில் கடலுக்கு 70 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலைப்பாங்கான அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது தான் உலுவாட் டெம்பிள், அங்கு நுழைவாயிலுக்கு அருகே பேருந்து நிற்க, கோவிலுக்குள் செல்வதற்கான கட்டுபாடுகள் குறித்து வழிகாட்டிக் கூறினார்.
 
IMG_4440.JPG
 
IMG_4389.JPG
 
IMG_4441.JPG
 
"மாதவிலகான பெண்கள் கோவில் வளாகத்தினுள் நுழைய அனுமதி இல்லை, ஏனெனில் இந்த இடம் புனித இடம், பாலியினர் தவிர்த்து பிறர் கோவில் வளாகத்தினுள் செல்லலாம் ஆனால் கோவிலின் மையப் பகுதிக்குச் செல்ல அனுமதி இல்லை, தவிர அரைக்கால் சட்டை அல்லது முட்டி தெரியும் படி ஆடை அணிந்திருப்பவர்களுக்கு அதை மறைத்து சுற்றிக் கட்டிக்கொள்ள இலவசமாக துண்டு வழங்கப்படுகிறது, மற்றவர்கள் அங்கு வழங்கப்படும் நாடக்களை இடுப்பில் சுற்றிக் கொள்ள வேண்டும்" என்றார்

"இங்கு குரங்குகள் ஏரளமானவை, மிகவும் அறிவுள்ளவை மற்றும் ஆபத்தானவை, உங்கள் உடைமைகளை பறித்துக் கொண்டுவிடும், எனவே மூக்கு கண்ணாடி, தோடு, கழுத்து சங்கிலி ஆகியவற்றை மறைவாக வைத்துக் கொள்ளவும் " என்று எச்சரித்தார்.
 
IMG_4390.JPG
 
கோவில் வளாகத்தின் மையப் பகுதிக்கு நுழைவாயிலில் நுழைந்து ஐந்து நிமிடம் நடக்க கோட்டை போன்ற சற்று உயரமான அமைப்பின் மேல் பழைய கோவில்கள் போல் காணப்பட்டன, அதற்கு முன்பே சுவர்களில் அங்கங்கே குரங்குகள் காத்துக் கொண்டு இருந்தன. மேலே ஏறிச் செல்லும் படிக்கட்டுகள் இருபக்கமும் குரங்கள் யாராவது ஏமாறுவார்களா என்று பார்த்தப்படி இருந்தன, அவைகளுக்கு பழங்கள் வெட்டப்பட்டு வைக்கப்பட்டு இருந்தன. கொஞ்ச தூரம் நடந்ததும் உடன் வந்த ஒரு பெண் அலறினார், செருப்பை கவ்விச் சென்ற குரங்கு ஒன்று அதை கடித்துக் கொண்டு இருந்தது, வேறு வழியின்றி அடுத்த செருப்பையும் கழட்டிப் போட்டு நடக்கத் துவங்கினார், இன்னும் சற்று மேலே மூக்குகண்ணாடியின் பாகங்கள் கிடந்தன. அதையும் தாண்டி மேலே செல்ல இடது பக்கம் பார்க்க செங்குத்தாக முடிவுற்ற பாறைகள் அதன் அடிப்பாகத்தில் கடல் அலை அலையாக மோதி ஆர்பறித்துக் கொண்டு இருந்தது.
 
இருந்தது.
IMG_4400.JPGIMG_4393.JPG
IMG_4399.JPG
 
IMG_4403.JPG
 
எட்டிப் பார்க்க கிடு கிடு பள்ளம். இன்னும் சற்று மேலே ஒரு 60 அடி அகலத்திற்கு உச்சி முடிவுற்றது அங்கே கோவில் கோபுரங்கள் தென்பட்டன, அதில் அன்றைய நாள் களுங்கன் என்பதால் பாலியினர் தங்கள் சடங்குகளை செய்து கொண்டிருந்தனர். அவர்களில் சிலருக்கு ஒரு முதியவர் ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். ஆர்வக்கோளாரால் அவர்கள் எடுத்துச் செல்லும் கூடைகளில் என்ன வைத்திருக்கிறார்கள் என்று கேட்க, திறந்து காட்டினார்கள், எல்லாம் அசைவம். அங்கு இந்து சாமிகள் அசைவம் தான் சாப்பிடுகின்றனர். விசாரிக்க அவர்களும் மும்மூர்த்திகளை வணங்குவார்களாம். எல்லாக் கோவில்களிலும் மும்மூர்த்திகள் உண்டு. கூடவே துட்ட தேவதைகளுக்கான பயமும் அவர்களுக்கு உண்டு, அவைகளுக்கான உணவை தரையில் வைத்துப் படைக்கின்றனர். மதில் மேல் காணப்பட்ட படையலில் கருவாட்டு துண்டு கூட இருந்தது. உச்சியின் கீழ் இறங்க வலது பக்கம் படிகள், மதில் சுவற்றை ஒட்டி அடுத்தப் பக்கம் பார்க்க அதே போன்று செங்குத்தாக முடிவுறும் மலைப்பகுதி மற்றும் இந்திய பெருங்கடல் காணப்பட்டது.IMG_4429.JPG
 
 
IMG_4425.JPG
 
IMG_4404.JPG
 
IMG_4409.JPGIMG_4439.JPG

IMG_4408.JPG

கோவிலுக்கு நேர் எதிரே மரங்கள் நிறைந்த திடல் ஏராளமான குரங்குகள், சுற்றுலாவாசிகள் இருந்தனர், ஒரு குரங்கு லாவகமாக ஒருவரின் கண்ணாடியை லபக்கிக் கொள்ள, அங்கு குரங்குகளிடம் இருந்து அதை பறித்து கொடுத்து பேரம் பேசி பணம் வாங்கிக் கொள்பவர்களும் இருந்தனர், அவர்களில் ஒருவர் குரங்கிடம் பழத்தை நீட்ட கண்ணாடியை தூக்கி எறிந்து பழத்தைப் பெற்றுக் கொண்டது, கண்ணாடி உடையாமல் இருந்தால் அதிர்ஷடம் பின் பக்கம் வீசி இருந்தால் கடலுக்கு இரை.
 
IMG_4424.JPG
(மேலே உள்ளபடத்தில் குரங்கு சுற்றுலாவாசியின் கண்ணாடியைத் தூக்கிக் கொண்டு உடைக்கத் துவங்கியது)
 
IMG_4426.JPG
 
IMG_4432.JPG
 
IMG_4446.JPG
சுமார் ஒரு மணி நேரம் சுற்றிப் பார்த்தோம் மாலை மங்கி இருந்து இரவு பொழுது விழிக்கத் துவங்கி இருந்தது. நாங்கள் பேருந்தில் ஏறி விடுதிக்கு வந்தோம், அன்றைய நாள் இரவு விருந்தை தான் அளிப்பதாக எங்கள் அலுவலக உடைமையாளர் கூறி இருந்தார். அதுவும் ஒரு கடற்கரை பகுதியில் தான், 7:30 மணிக்கு புறப்பட்டு போக்குவரத்தில் ஊர்ந்து செல்ல இரவு விருந்து நடக்கும் ஜிம்பாரான் பகுதிக்கு வர இரவு 8:30 ஆகி இருந்தது. கடற்கரை மணலில் மேசை நாற்காலி போடப்பட்டு அசத்தலான இரவு உணவு. எனக்கும் எதோ சைவ உணவு ஏற்பாடு செய்திருப்பதாகச் சொல்லி இருந்தனர்.
 
IMG_4448.JPG
 
(கீழே உள்ள படங்கள், இணையத்தில் எடுத்தவை, இது போன்ற காட்சிகள் அங்கங்கே காணப்பட்டன, பேருந்துனுள் இருந்து தெளிவாக எடுக்க முடியவில்லை)
 
 
 
 
 
சலாமத் குனிங்கன் - களுங்கன்
 
 
 
இந்த ஒருநாள் நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் ஒரு பதிவு மீதம் இருக்கிறது, முக்கியமாக பாலி வெடிகுண்டு தீவிரவாத தாக்குதல் பற்றி எழுத வேண்டியது உள்ளது, பதிவின் நீளம் கருத்தில் கொள்ளும் போது நிறைய எழுத இயலவில்லை மற்றும் ஒரே பகுதியில் அனைத்தையும் எழுதினாலும் படிக்க அலுப்பாகிவிடும். இறைவன் நாடினால்....தொடர்வேன்
 

 

Link to comment
Share on other sites

இந்துத் தீவு - பகுதி 4

 

மனித குல இடப்பெயர்ச்சி துவக்க காலத்தில் நீர் நிலைகளை நோக்கிய பயணமாக இருந்தது, உலக பண்டைய நாகரீகங்கள் அனைத்தும் அவ்வாறே அமைந்தது, தண்ணீர் தேக்கம் பற்றி தெரிந்திருக்காத சூழலில் வற்றாத ஆறுகளின் கரைகளில் மக்கள் கூட்டமாக வாழ்ந்தனர், பின்னர் ஓரளவு நாகரீகம் பெற்ற பின்னர் விவசாயம் செய்யக் கற்று நகரங்களை அதற்குள் அமைத்துக் கொண்டனர், மனித இனக்குழுவாக அடையாளங்கள் தெரிந்த பிறகு இட அபகரிப்பு அல்லது கைப்பெற்றுதல் என்ற அளவில் பல்வேறு நகரங்கள் பிற இன / மத பழக்கத்தைச் சார்ந்தவர்களால ஆக்கிரமிக்கப்பட்டு, நிலத்தில் வாழ்ந்த மண்ணின் மக்கள் துறத்தப்பட்டனர், கடந்த 1000 ஆண்டுகளில் இடப் பெயர்வு என்பது தப்பிச் செல்லுதல் அல்லது கைப்பற்றுதல் என்ற அளவிலேயே நடந்துவருகின்றன, ஆனால் இன்றைய இடப் பெயர்வுகள் யாவும் பொருளாதாரத்தை நோக்கிய பயணமாகவே இடம் பெயர்கின்றன, ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் குடியேறுபவர்களில் பெரும்பாலோர் பொருளாதார வளர்ச்சியை முன்னிட்டு தம் வாழ்வையும் சந்ததியினர் வாழ்வையும் மேம்பெடுத்தும் நோக்கில் அமைக்கிறது.

படித்தவர்கள் இடம் பெயர்கிறார்கள், படிக்காதவர்கள் பொருளீட்டி திரும்புகிறார்கள், உலகெங்கிலும் இடப்பெயர்சிகள் எந்த காலத்திலும் தவிர்க்க முடியாதனவாக இருந்தாலும், இன்றைய அல்லது அன்மைய நூற்றாண்டுகளின் இடப்பெயர்சிகளில் குழுவாக நடைபெறும் யாவும் தொடர்ந்து வசிக்கமுடியாத நிலையில் அல்லது துறத்தப்படுதல் என்ற நிலையில் நடைபெறுவதே. அன்மைய எடுத்துக்காட்டு இலங்கைத் தமிழர்களின் பிறநாடுகளை நோக்கிய இடப்பெயர்வு, அண்மைய நூற்றாண்டுகளில் நடந்தது என்ற அளவில் இந்தோனேசியாவின் வசித்த பாலி பழங்குடி மற்றும் பண்டைய இந்துக்கள் அதன் பல்வேறு பகுதிகளில் இருந்து விரும்பியும், வேறு வழியின்றியும் இடம் பெயர்ந்த இடம் பாலித் தீவு.

*****

நாங்கள் உலுவாட் புரா வை பார்த்துவிட்டு விடுதிக்கு திரும்பினோம், மாலை மங்கி சூரியன் மறையப் போகும் நேரம் விடுதி எதிரே இருந்த கடற்கரையை பார்வை இட்டுவிட்டு, இரவு உணவிற்காக கிளம்பினோம், திரும்பவும் உலுவாட் புரா இருந்த பகுதி தான், அதற்கு அரைத் தொலைவில் ஜிம்பாராங்க் என்ற பகுதியில் அமைந்த கடற்கரை உணவகம், இந்த இரவு விருந்திற்கான செலவை எங்கள் நிறுவன உரிமையாளர் ஒப்புக் கொண்டு இருந்தார். நபர் ஒன்றுக்கு சிங்கப்பூர் வெள்ளி 28. இந்த செலவில் சென்றுவரும் பேருந்து கட்டணம் மற்றும் உணவு ஆகியவை அடக்கம்.
IMG_4462.JPG

IMG_4461.JPG
இரவு 8 மணி ஆகி இருந்தது, 'டாமாஸ் காபே' என்கிற கடற்கரை உணவகம், பெரும்பாலும் கடலுணவு விரும்பிகள் அங்குவருவார்கள், அது போன்ற உணவு விடுதிகள் அங்கு கடற்கரையை ஒட்டி 100க் கணக்கானவை இருந்தது, உணவகத்தின் முகப்பு வரவேற்பில் நம்ம ஊர் பிள்ளையார் இருபக்கமும் மஞ்சள் குடைகள் சூழ இருந்தார்

.IMG_4485.JPG

 

IMG_4467.JPGIMG_4476.JPG

IMG_4471.JPG

 

IMG_4479.JPGஉள்ளே நுழைய பின்வாசல் வழியாக கடற்கரைப் பகுதியில் மேசை நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன, இருபக்கமும் அமர்ந்து சாப்பிட நீளவாக்கில் அவை போடப்பட்டு இருந்தன, வரவேற்பு பானமாக இளநீர் வெட்டி வைக்கப்பட்டு இருந்தது, எல்லோரும் அமர்ந்ததும் அருகே அமைக்கப்பட்ட மேடையில் அலங்காரத்துடன் வந்த இரு பெண்கள் இசைக்கேற்ற பாலி நடனம் ஆடினார்கள்.
IMG_4474.JPG

 

IMG_4477.JPG

 

IMG_4483.JPG

 

IMG_4482.JPG

இடையே தனித்தனியாக தட்டுகளில் நண்டு, மீன், இறா உள்ளிட்ட கடலுணவுகளும் சோறும் வழங்கப்பட்டது, எனக்கு அவித்த கீரை மற்றும் வேக வைத்த சோயா கட்டித் தயிர் சக்கை மற்றும் சோறு, ஏற்கனவே அன்று மதியம் உண்ட அதே வகை சைவ உணவு. கொஞ்சம் சாப்பிட திகட்டியது, பிறகு அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பாட்டில் கொடுத்தார்கள். கிட்டதட்ட 90 நிமிடங்கள் அங்கு இருந்துவிட்டு விடுதிக்கு திரும்பிக் கொண்டு இருந்தோம் இரவு 10:30 மணியை நெருங்கி இருந்தது. விடுதிக்கு சற்று தொலைவின் முன்பே விடுதிக்குச் செல்லாமல் பாதியிலேயே இறங்கி அந்தப் பகுதியின் இரவை பார்வை இட எங்களில் தனியாளாக வந்த ஆண்கள் மட்டஹரி பகுதியில் இறங்கி விடுதி பாதையின் எதிர்புறம் இடது பக்கம் நடந்தோம்.

அந்தப் பகுதி குட்டா - பாலி அங்கு பாலியின் பகல் என்பதே மாலையும் பின்னிரவு தான் என்று தெரிந்தது. பத்து விரலே மூலதனம் என்பதன் எடுத்துக்காட்டாக அருகருகே நிறைய மசாஜ் நிலையங்கள், அவற்றின் தோற்றம் தரம் ஆகியவற்றிற்கேற்ப ஒரு மணி நேர மசாஜுக்கு 50,000 ருபியா (9 சிங்கப்பூர் வெள்ளி) முதல் 150,000 ருபியா வரையிலும் விலைகளின் பட்டியல் இருந்தது. மாசாஜ் நிலையங்கள் பேங்காக்கை ஒப்பிட இங்கு இருமடங்கு எண்ணிக்கையில் இருந்தன. வலுக்கட்டாயமாக யாரையும் அவைகள் அழைக்கவில்லை, விரும்பியவர்கள் சென்று கொண்டு இருந்தனர்.

 
அந்த சாலையில் கைவினைப் பொருள்கள், துணிகள் ஆகிய சில கடைகளும் இருந்தன, அதைக் கடந்து அடுத்து சாலை சந்திக்கும் பகுதியில் வலது பக்கம் திரும்ப குட்டா - பாலி பகுதியின் புகழ் பெற்ற 'லெகியான் ஸ்ட்ரீட்' இந்த சாலை கடற்கரை சாலையில் இருந்து ஒரு கிமீ தள்ளி அதற்கு இணையாக நீண்டுள்ளது. இடையே குறுகிய சந்துகளாக இரண்டு சாலைகளையும் இணைக்கும் வழிகளும் கடைகளும் இருந்தன.

லெகியான் தெருவுக்குள் நுழைய கொஞ்சம் தொலைவில் டிஸ்கோ இசைகளின் ஒலி, அருகே செல்லச் செல்ல அவை இறைச்சல் என்ற அளவுக்கு காது பிளக்கும் அளவு டெசிபல்களில் கேட்டுக் கொண்டு இருந்தன, அந்த சாலையின் இருபுறமும் டிஸ்கோத்தே நிலையங்கள், அங்கு அரைகுரை ஆடைகளில் வெள்ளைக்கார ஆண் பெண்கள் ஆட்டமும் கொண்டாட்டுமாக களித்துக் கொண்டு இருந்தனர். பாலியின் மொத்த உற்சாகம் கொண்டாட்டங்களின் இடமும் அங்கு தான் குழுமி இருந்தது போன்று இருந்தது, கொஞ்சம் தள்ளி சாலை 'வி' வடிவில் பிரியும் அந்த இடத்தில் தான் பாலி குண்டுவெடிப்பின் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டு நின்று கொண்டு இருந்தது.
P1010359.JPG

IMG_4494.JPG

P1010361.JPG
கிட்டதட்ட 202 பேர் (அக் 12, 2002 நடந்த தீவிரவாத தாக்குதல் குண்டுவெடிப்பில்) உயிரழந்ததன் அடையாளமாம், சிலர் சோகத்துடன் புகைப்படம் எடுத்தனர். இறந்தவர்களில் 88 பேர் ஆஸ்திரேலியர் மட்டுமே, அடுத்ததாக இந்தோனேசியர் 38 பேர், இங்கிலாந்து நாட்டினர் 27 மற்றும் மேலும் இருபத்தைந்து மேற்கத்திய நாடுகளைச் சார்ந்த ஓரிருவர் என்ற பட்டியல்கள் பொறிக்கப்பட்டு இருந்தன.
 
 
IMG_4495.JPG
 
IMG_4489.JPG
 
IMG_4491.JPG
அங்கு நின்றபடி அங்கே அருகே நடைபெறும் கொண்டாட்டங்களையும் இந்த நினைவு சுவரையும் பார்க்க, குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் இந்த கொண்டாட்ட மனநிலையிலேயே மடிந்திருப்பார்கள், காயம்பட்டு தப்பியவர்களும், அவர்களின் உறவினர்களும் அந்தநொடிக்கு பிறகு கண்ணீரிலும் வேதனையிலும் வாடியிருபபர்கள் என்று நினைக்க முடிந்தது. எஞ்சியிருக்கும் அவர்களின் ஆற்றாமை மற்றும் சாபங்களை கிளறிவிடும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12 தேதியும் இந்த நினைவுத் சுவரின் பெயர்களும் ஈரம் காயமல் வைத்திருக்குமோ ? என்று நினைக்க முடிந்தது.

என்றோ நாம் மறந்த ஒரு நிகழ்வை இது போன்ற நினைவிடங்களுக்குச் செல்லும் போது நம்மையும் மீறிய சோகம் ஏற்படும் போது தான் அந்த பழைய நினைவுகள் முன்பு நம்மை எந்த அளவுக்கு பாதித்திருக்கின்றன, பிறருக்காக நாம் இரக்கம் கொள்ளக் கூடியவர்களா ? என்று அறிய முடியும். எம்ஜிஆர் சமாதிக்கு சென்று அழும் தொண்டனைப் போல், சிலர் முகம்வாடி இருந்தனர். 2002 பாலியில் குண்டுவெடிப்பு நிகந்த போது இங்கு சிங்கையில் 10 நாட்களுக்கு அந்த தகவல் எழுதப்பட்டு வந்தன, பாலிக்கு செல்லும் அனைத்து விமானங்களும் விலக்கப்பட்டு இருந்தன.

எனது அலுவலக நண்பர்களில் சிலர் ஒரு டிஸ்கோத்தே கிளப்புக்குள் நுழைந்தனர் நுழைவு கட்டணம் நபர் ஒன்றுக்கு சிங்கப்பூர் வெள்ளி மதிப்பில் 5 தான், அதற்கு இலவச பீர் பாட்டில் ஒன்றையும் தந்தார்களாம், உள்ளே செல்லும் அனைவரையும் மெட்டல் டிடெக்டரால் சோதித்தே அனுப்புகிறார்கள், எனக்கு உள்ளே செல்ல விருப்பம் இல்லை, உடல் அசதியாக இருந்தது, இரவு மணி 12 ஐ நெருங்க, அந்தப் பகுதியின் வரைபடம் ஓரளவு மனதில் ஓடியதால் குறுகிய சாலை ஒன்றில் நுழைந்தால் தங்கும் விடுதி வந்துவிடும் என்று நினைத்து தனிதே நடந்தேன்.
 
ஆள் அரவம் மிகுதியாக இல்லை, கொஞ்சம் தள்ளட்ட நடமாட்டம் இருந்தது, உள்ளே செல்லச் செல்ல கொஞ்சம் இருட்டு, ஆள் நடமாட்டமும் மிகக் குறைவு, எனக்கு முன்பு வெள்ளைகாரப் பெண்மணி ஒருத்தி அரை ட்ராயர் மற்றும் பனியன் மேலாடையுடன் சென்று கொண்டிருந்தாள், அடிக்கடி பாலிக்கு வருபவள் போல் தெரிந்தது, அருகே இரவு கொண்ட்டாட்டம் மற்றும் குடி இவற்றை நுகரும் ஆண் சமூகம் இந்த சூழலில் இரவு பணிரெண்டு மணிக்கு மேல் குறுகிய மற்றும் வெளிச்சம் குறைவான சாலைகளில் அளவு குறைவான உடையுடன் பெண்கள் நடமாட முடியுமா ? பாலியில் இவை மிகச் சாதாரணம் என்பதை பின்னர் நாட்களிலும் அவ்வாறான காட்சிகள் மூலம் உறுதியானது. இந்த தீவில் சுற்றுலாவாசிகள் பாலியின் லோக்கல் சமூகவிரோதிகளால் குறிவைக்கப்படுவதில்லை, காரணம் சுற்றுலாவாசிகள் இல்லை என்றால் பாலித் தீவும் செயல்படாது

கொஞ்ச தொலைவில் அந்தப் பெண்ணும் வேறொரு குறுகிய சாலைக்கு திரும்ப, நான் நினைத்தபடி கொஞ்சம் சுற்றலுடன் அந்த சாலை நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு அருகே உள்ள கடற்கரைச் சாலையில் முடிந்தது, விடுதிக்குச் சென்று நன்றாக குளித்துவிட்டு கொஞ்ச நேரம் தொலைகாட்சிப் பார்த்துக் கொண்டிருந்தேன், டிஸ்கோத்தேக்கு சென்றுவிட்டு அலுவலக நண்பர்களும் திரும்பி இருந்தனர், அடுத்த நாள் முழுநாள் சுற்றுலா, காலை 8 மணிக்கு உணவுகளை முடித்துவிட்டு காத்திருக்கச் சொல்லி இருந்தனர், வெறும் 4 மணி நேரம் தான் தூக்கம், காலை 7 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு, நண்பர் குளித்துவர காத்திருக்கும் வேளையில் தொலைகாட்சியை ஓடவிட்டு சானல்களை திருப்பி நேசனல் ஜியாகரபி சானலில் வைக்க நேற்றைய பின்னரவு பாலி வெடிகுண்டு நினைவகத்தை மீண்டும் கிளறிவிடும் 'செகண்ட்ஸ் ப்ரம் டிஸாஸ்டர் பாலி ப்ளாஸ்டிங்க்(Seconds From Disaster - The Bali Bombing)' ஆவணப்படம் ஓடிக்கொண்டு இருந்தது.

இது தற்செயலான காட்சியாக இருந்தாலும், நண்பர் பிறகு வரட்டுமே என்று நான் முன்கூட்டியே சாப்பிடப் போகமல் ஏன் தொலைகாட்சியை போட வேண்டும், அப்படியே போட்டு இருந்தாலும் நேசனல் ஜியாகரபிப் சானல் வரைக்கும் திருப்ப, அந்த காலை வேளையில் அவர்கள் அதையே ஏன் ஒலிபரப்ப வேண்டும் ? இதை அடிக்கடி ஒலிபரப்பினால் சுற்றுலாவாசிகள் பீதி அடையாமாட்டார்களா ? என்று எண்ண ....அந்த ஒலிபரப்பு அன்றைக்கு காலையில் தற்செயலாக வந்திருக்கிறது என்றே நினைத்து வியப்படைந்தேன்.

IMG_4500.JPG


அரைமணி நேரம் அந்த ஆவணத்தைப் பார்த்தேன், மட்டஹரியில் தற்கொலை குண்டுவெடிப்பும், லெகியான் தெருவில் சரக்கு வாகனத்தில் (வேன்) வெடிகுண்டு நிரப்பட்டு வெடிக்க வைத்திருந்ததாகவும் தொலைகாட்சி ஆவணத்தில் காட்டினார்கள். ஆஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் பாலி அதிகாரிகள் விசாரணை நடத்தினார்களாம், தொடர்சியான மழையில் தடயங்கள் அழிந்து போய் இருக்க, துப்பு துலக்க திணறியதாகவும், பாலியைச் சேர்ந்த விசாரணை அதிகாரி கோவிலில் சாமி கும்பிடும் போது வந்த அலைபேசி அழைப்பில் வெடிகுண்டு வெடித்த வாகனத்தின் பதிவு எண் பற்றி துப்பு கிடைத்ததாக தகவல் கிடைத்ததாம். பொதுவாக சரக்கு வாகனத்தில் இருபுறமும் இருக்கும் வாகனப்பதிவு எண்ணுடன் பாதுகாப்பிற்காக மூன்றாவதாக ஒரு இடத்தில் ரகசியமாக பதிவு எண் பதிக்கப்பட்டு இருக்குமாம், வாகனத்தை தயார் செய்த தீவிரவாதி முன் பின் நம்பர் ப்ளேட்டுகளை மட்டும் அழித்து இருக்கிறான். மூன்றாவதாக ஒன்று இருப்பது அவனுக்கு தெரியாது, இந்த திட்டமிட்ட வெடிகுண்டு வெடிப்பை நடத்தியவர்கள் இந்தோனேசியாவின் மையத் தீவான ஜாவாவைச் சார்ந்த ஜமாலியா இஸ்லாமிய அமைப்பைச்சார்ந்தவர்களாம். மொத்தம் 9 பேர் குழுவாகச் செயல்பட்டதில் ஒருவர் தற்கொலை குண்டில் மாண்டுபோக மீதம் 8 பேரை அள்ளியது இந்தோனேசிய போலிஸ்.



குண்டுவெடிப்பு பற்றி பாலி இந்துக்கள் என்ன நினைத்தார்கள் ? இவை வெறும் வெள்ளைகாரர்களுக்கு மட்டுமான மிரட்டல் தானா ? பின்வரும் பதிவுகளின் இடையே பார்ப்போம். இறைவன் நாடினால் தொடரும்....
 
பிகு : நேற்று வெளியிட நேரமில்லை ஆகையால் 3, 4 பகுதிகளை இன்றே வெளி இடுகிறேன். இன்னும் ஐந்து அல்லது ஆறு பகுதிகள் வரும், அதில் பாலி இந்துக்களின் பண்பாடு, குடும்ப அமைப்புகள் மற்றும் பெயர்கள், மேடை நாடகம், எரிமலை, கடற்கோவில் ஆகியவை இடம்பெறும்.

 

Link to comment
Share on other sites

இந்துத் தீவு - பகுதி 5

 
நாகரீகம் என்பது வெற்றி பெற்ற இனம் பின்பற்றும் வாழ்வியல் முறைகள் என்ற புரிந்துணர்வே என்று பரவலாக பிற இனங்கள் அவர்களை பின்பற்றுவதில் இருந்து புரிய வைக்கப்படுகிறது. பொருளியல் மற்றும் பகட்டின் பகடையாக பயன்படுத்தப்படும் இவ்வித பிற இன வாழ்வியல் முறைகளை பின்பற்றுவதன் சலிப்பில் இருந்து தற்காலிக மீட்சி, இழந்ததைத் தேடுதல் என்ற அளவில் அவற்றை நோக்கிய பயணம் தான் கிராமிய கலைகள் பற்றிய ஆர்வம். எதையும் இழந்துவிட்டு தேடுவதுதான் அன்றும் இன்றும் வாடிக்கையாக நடைபெறும் மனிதனின் தேடுதலாக இருக்கிறது

******

இரண்டாம் நாள் பாலித் தீவு சுற்றுலாவில் எங்களுக்கு மிக முக்கியமான நாள், அன்று நாள் முழுவதும் சுற்றுலாவிற்கான திட்டமிடல் இருந்தது, விடுதியில் இலவச காலை உணவு, 40க்கும் மேற்பட்ட உணவு வகைகள், ப்ரட் வகைகள், பானங்கள். எது எது அசைவம், சைவம் என்று கண்டிபிடிக்க ஆர்வம் இல்லாததால், ப்ரட் மற்றும் ஓட்ஸ் வகை உணவுகளையும், கொஞ்சம் பழங்களையும், காஃபி குடித்துவிட்டு ஆயத்தமானேன், பிறர் அனைத்தையும் கட்டு கட்டினர். காலை 8:30 மணிக்கு சுற்றுலா பேருந்தில் ஏறி அமர்ந்தோம், நேற்றைக்கு வானூர்தி நிலையத்தில் இருந்து அழைத்துவந்த அதே வழிகாட்டி தான். பொதுவாக பாலித் தீவின் வழிகாட்டிகள், சுற்றுலாவாசிகள் விரும்பிக்கேட்கும் இடங்கள் தவிர்த்து செல்லப் போகும் இடங்களையும் பாலித் தீவினர் பின்பற்றும் பண்பாடுகள் பற்றி தான் நிறைய பேசுகிறார்கள். பேச்சினிடையே அவர்கள் பின்பற்றும் பண்பாடுகள், கலை பற்றிய பெருமிதம் அவர்களின் பேச்சில் இருந்து தெரியவருகிறது. நாங்கள் அன்று செல்லப் போகும் இடத்தில் முதலாவது 'பாரங் நடனம்'. விடுதியில் இருந்து 40 நிமிடங்களில் அந்த இடம் வந்துவிடும், இடையே பயணத்தின் போது, பாலித் தீவினர் பண்பாடு மற்றும் கலைகள் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தார்.

"பாலி இந்துத் தீவு (பதிவுக்கு தலைப்பிட இதுவே காரணம், பாலியை அவர்கள் Ba..lli என்றே கொஞ்சம் இழுத்துச் சொல்லுகிறார்கள்), இந்தோனேசியவிலுனுள் இந்துக்கள் பெரும்பான்மை பெற்ற தீவு, பாலி இந்துக்களின் தனி உரிமைகள் இங்கு சட்டமாக்கப்பட்டுள்ளது, இந்தோனேசிய அரசு எங்களை எங்கள் விருப்பப்படி வாழ அனுமதிக்கிறது, தன்னுடைய (இஸ்லாம்) மதம் சார்ந்த சட்டங்களை பாலியில் இந்தோனேசியா வலியுறுத்துவதில்லை, இந்தியாவில் இந்து மதத்திற்கு எங்கள் மதத்திற்கும் நிறைய வேறுபாடுகள், நாங்களும் சாதிகளை பின்பற்றுகிறோம், ஆனால் இந்தியாவில் இருக்கும் அளவிற்கு கட்டுப்பாடுகள் இல்லை (இதை சிலர் வருத்தத்தோடு குறிப்பிடுகிறார்கள், அட நாங்களே சாதிகளை ஒழிக்க இந்துத்துவாக்களிடம் முட்டிக் கொண்டு இருக்கிறோம், உங்களுக்கு அப்படி இல்லையேன்னு வருத்தமா ? என்று நினைத்துக் கொண்டேன்) , நாங்கள் நான்கு அடுக்கு சாதி முறையை பின்பற்றுகிறோம்" என்று கூறி நான்கு வருணங்களையும் அவற்றில் இருப்பவர்களின் வேலையையும் குறிப்பிட்டார்.

ப்ராமணா உயர் வகுப்பு, அவர்கள் தான் எங்கள் கோவில்களில் சடங்குகளையும் எங்களது பிறப்பு, திருமண, இறப்பு நிகழ்ச்சிகளை செய்து தருவார்கள், ஆனால் இங்கு இந்தியாவில் இருக்கும் தீண்டாமை கிடையாது, நாங்கள் ப்ராமணாக்களை மிகவும் மதிக்கிறோம். என்றார் (இது போல் இந்தியாவிலும் இருந்தால் என்ன பிரச்சனை ஆகிடப் போகிறது, அது தவிர்த்து உயர் பதவிகள், அரசியல் பதவிகள் முதற்கொண்டு, நகரத்தில் நல்ல வருமானம் தரும் கழிவறையையும் குத்தகை எடுத்துக் கொண்டு, அனைத்து பணம் கொழிக்கும் தொழில்கள், ப்யூட்டி பார்லர் என நடத்திக் கொண்டு நாங்கள் ப்ராமணர் உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டால் யார் தான் ஏற்பார்கள் ?, தவிர தீண்டாமைக்கு தூபமிட்டு கோவில்களின் கதவுகளை அடைத்துக் கொண்டு, நீ தீண்டத்தகாதவன், ஒதுக்கப்பட்டவன், சேரியில் வசிப்பவன் என்று தூற்றியதால் பலர் வேண்டாம்யா உங்க 'சோ' கால்ட் இந்து மதம் என்று ஓடிவிட்டார்கள்)
IMG_4604.JPG

IMG_4602.JPG
 

IMG_4597.JPG

IMG_4589.JPG

 
IMG_4510.JPG

நான்கு வருணம் இருந்தாலும் 90 விழுக்காடு சூத்திரர்களாகத் தான் அறியப்படுகிறோம் என்றார், எங்களுக்குள் பிரிவு என்பது தொழில் அடிப்படையிலானது மற்றபடி ஒருவர் இல்லாது எந்த நிகழ்வும் இங்கே நடைபெற சாத்தியமே இல்லை. என்றார்

பாலி இந்துக்கள் சாதிப்பகுப்பு பற்றிய சுட்டி


அடுத்து பாலியில் வைக்கப்படும் பெயர்கள் பற்றிச் சொன்னார். பாலித் தீவினர் பெயர்கள் புற உலகில் இருந்து மாறுபட்டவை, ஒருவரது பெயரில் ஆண்-பெண், பிறந்த வரிசை அமைப்பு, சாதி அடையாளம் மற்றும் தனிப் பெயர் ஆகிய நான்கு பகுதிகள் உண்டு. அதாவது ஒருவரின் முழுப் பெயரை வைத்து அவர் ஆணா பெண்ணா, அவர் பெற்றொருக்கு அவர் எத்தனையாவது குழந்தை, அவருடைய சாதி என்ன மற்றும் அவரது தனிப் பெயர் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்

முதல் குழந்தைக்கு 'வயான்(Wayan)', இரண்டாம் குழந்தைக்கு 'மேட்(Made), மூன்றாம் குழந்தைக்கு நியோமன்(Nyoman), நான்காம் குழந்தைக்கு கேடுட் (Kedut)'. இதன் தொடர்ச்சியில் ஐந்தாம் குழந்தை பிறந்தால் அதற்கு பெயர் 'அடுத்த வயான்', ஆறுக்கு 'அடுத்த மேட்', ஏழுக்கு 'அடுத்த நியூமான்', எட்டுக்கு 'அடுத்த கேடுட்'. ஒன்பதாம் குழந்தைக்கு 'கடைசி வயான்' இப்படியாக 12 குழந்தைகள் பிறக்கும் வரிசைக்கு பெயர் வைத்து அதன் படியே எந்த ஒரு குழந்தை அது ஆண் பெண் என்றாலும் வரிசைப்படி இருக்கும். பிறகு ஆண் பெண் குறித்த அடையாளம் 'I' (ஆண்) மற்றும் 'Ni' (பெண்) குறித்த அடையாளம், பிறகு சாதிப் பெயர்கள் இடம் பெறும், சூத்திரர்களுக்கு தனி அடையாள சாதிப் பெயர்கள் கிடையாது மற்றவர்களுக்கு உண்டு. பிறகு தனிப் பெயர்கள்.
IMG_4806.JPG

There's no special names for people from Sudra caste. They usually only use the names which denotes birth position. Traditionally they will only add word I for male and Ni for female in front of their names.

K'satria caste
Names for K'satria caste :
Anak Agung (male), Anak Agung Ayu or Anak Agung Istri (female)
Tjokorda, sometimes abbreviated as Tjok (male), Tjokorda Istri (male)
. The word Agung means "great", or "prominent". The word Tjokorda is a conjunction of the Sanskrit words Tjoka and Dewa. It literally means the foot of the Gods, and is awarded to the highest members of the aristocracy. A typical name might be Anak Agung Rai, meaning a Ksatrya,whose personal name means "The Great One". It is more difficult to differentiate sexes among the k'satrya people, though personal names often tell, like Putra, or Prince, for a boy, and Putri, or Princess, for a girl.

மேலும் பார்க்க சுட்டி

சாதி முறையைப் பின்பற்றாத பிற இந்தோனேசியர்கள் குறிப்பாக இந்தோனேசிய இஸ்லாமியர்களின்(மேகவதி சுகர்னோ புத்ரி), சீனர்களின் பெயர்கள் அண்மைவரையிலும் வடமொழிச் சார்ந்த பெயர்களே பின்பற்றப்படுகிறார்கள். கிறிஸ்துவத்தைப் பின்பற்றாத பிற நாடுகளில் குறிப்பாக தைவன், ஹாங்காக், சிங்கப்பூரில் சீனர்களிடையே கிறிஸ்துவ பெயர்கள் மிகவும் பயன்படுத்தப்படுபவை, 'Andrew Wong' 'Stephen Lee' போன்று ஆங்கிலப் பெயர்களுடன் குடும்ப பெயர்களை சேர்த்து வைத்துக் கொள்வார்கள், இதன் பொருள் அவர்கள் ஆங்கில நாகரீகத்தை அல்லது கிறிஸ்வது நாகரீகத்தை போற்றுகிறார்கள் என்று பொருளல்ல, வேறு காரணம் ஆங்கிலப் பெயர்களில் ஆண் பெண் பெயர்கள் ஏற்கனவே பலரால் அறியப்பட்டவை என்பதால் தான் முழு சீனப் பெயரை வைத்து ஒருவர் ஆணா பெண்ணா என்று அறிய முடியாது என்பதால் பல்சமூகமாக வசிக்கும் இடங்களில் கிறித்துவ பெயர்களை வைத்துக் கொள்கிறார்கள், முகம் தெரியாத ஒருவரை நிறுவனம் தொடர்பில் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் போது அவர் 'மிஸ்டர்' அல்லது 'மிஸ்' என தெரிந்து கொள்ள கிறிஸ்தவ பெயர்கள் பயன்படுகின்றன. இந்தோனேசிய பழங்குடி சமூகங்களாக இருந்து பல்வேறு மதத்தினராக வளர்ந்த பிறகும் முன்பு பின்பற்றிய வடமொழிப் பெயர்களையே தொடர்கிறார்கள், பாலித் தீவில் வடமொழிப் பெயர்களுடன் கூடுதலாக பிறந்த வரிசை, ஆண்-பெண் அடையாளம் மற்றும் சாதிப் பெயர்களும் இடம் பெறும்.

வழிகாட்டி 10 நிமிடம் பேசிக் கொண்டு இருந்தார், கடற்கரை நகரம் தாண்டி வயல்வெளி நிறைந்த கிராமங்களுக்கு நுழைந்தது பேருந்து, நெருக்கமான வீடுகள் கடைகள், பசுமைகள் என்பது தவிர்த்து நகரம் மற்றும் கிராமங்களுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை, காரணம் வீடுகளில் 95 விழுக்காடு பாலி கட்டிடக் கலையே பின்பற்றப்பட்டு இருந்தது, பெட்ரோல் பங்குகள் மற்றும் நான்கு மாடி கடைகள் கூட பாலி கட்டிடக் கலையின் முகப்புகளையே கொண்டு இருந்தன.

பாலியில் உயரடுக்கு மாடிக் கட்டிடங்களை காண முடியாது, அதற்கு தடையாம், இயற்கைச் சூழலை கெடுக்கிறது என்பதாக அவை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூடவே நிலநடுக்கத்திற்கு வாய்பான இடம் என்பதால் தென்னை மர உயரத்திற்கு மேல் பாலியில் வீடுகள் நிறுவனங்கள் கட்டத் தடை.

நான் கண்டவரை வேறெந்த நகரைக்காட்டிலும் பாலித் தீவு முழுவதும் 1000க் கணக்கான, லட்சக்கணக்கான கோவில்களால் நிரம்பியுள்ளது, அவர்கள் அதனை கடவுளின் நாடு என்று கேரளத்தவர் போன்று சொல்லிக் கொள்கிறார்கள், கேரளத்தவரை விட இவர்கள் சொல்வதில் பொருளும் உண்டு, ஆம் நான் கண்ட சாலைகள், பயணம் செய்த இடங்கள் அனைத்திலும் கோவில்கள் இல்லாத இடங்களே இல்லை. ஏன் எதற்கு இவ்வளவு கோவில்கள் ? வழிகாட்டி அதனையும் விளக்கினார்.
IMG_9339.JPG
 
 

IMG_9338.JPG

IMG_9099.JPG
 

IMG_4605.JPG

பாலி இந்துக்கள் பொதுவாக கூட்டுக் குடும்பமாக வசிப்பவர்கள், அவர்களின் குடும்பம் ஒவ்வொன்றிற்கும் குடும்பக் கோவில்கள் அவர்களின் வீட்டுச் சுற்றுவரினுள்ளேயே வெளியே தெரியும் படி கட்டப்பட்டுள்ளது, நம் ஊரில் குலதெய்வம் கோவில் என்று எதோ ஒரு வயல்காட்டில் ஆள் அரவம் அற்ற பகுதியில் இருப்பதைப் போல் இல்லாமல் இவர்கள் வீடும் கோவிலும் அடுத்து அடுத்து உள்ளது. 30 லட்சம் மக்கள் தொகையில் குடும்பத்திற்கு 10 பேர் என்று வைத்தாலும் 3 லட்சம் கோவில்கள் தேறும் போல் தெரிந்தது. அது தவிற கிராமத்திற்கு பொதுவான கோவில்கள் , உலுவாட் புரா போன்ற எல்லை கோவில்கள் என பெரிய கோவில்களும் பொது வழிபாடு தளமும் 100க் கணக்கானவை. ஒரு பெண் திருமணம் ஆன பிறகு அவளுக்கு குடும்பக் கோவிலில் உரிமை கிடையாது, ஒரே பெண்ணாக இருக்கும் போது மருமகனிடம் ஒப்படைக்கப்படுமாம், வாரிசே இல்லை என்றால் பொதுச் சொத்தாக்கப்படுமாம்.

பாராங் நடனம் நடைபெறும் இடத்தை அடைந்தோம்.
IMG_4514.JPG
தொடரும்....
Link to comment
Share on other sites

இந்துத் தீவு - பகுதி 6

 
பெரும்பாலும் நாட்டுப்புற கலைகளே ஒரு நாட்டின் கலை என்று முன்னிறுத்தப்படுகிறது, இதற்கு எந்த நாடும் விதிவிலக்கு இல்லை, இந்தியாவில் தேவதாசி பெண்கள் ஆடி வந்த சதிராட்டம் பின்னர் பரதக் கலை என்று பெயர் கொடுக்கப்பட்டு மாறுதல்கள் செய்து இந்தியக் கலையாக காட்டப்படுகிறது. நாடுகள் எவ்வளவு தான் பொருளாதார தன்னிறைவு பெற்றிருந்தாலும், ஒரு நாட்டின் அடையாளமாக காட்ட அந்நாட்டில் பின்பற்றப்படும் கலைகளே முன்னிறுத்தப்படுகிறது, ஆபாசம் அறுவெறுப்பு என்ற சொற்களை விழுங்கிவிட்டுப் பார்த்தால் அரைகுறை ஆடைகளுடன் தென் அமெரிக்க நாடுகளின் இடுப்பாட்டம் (பெல்லி டான்ஸ்) கூட ரசிக்கத் தக்கதே.

*****

பாரோங் நடனம் நடைபெறும் இடத்திற்குச் சென்றோம், சுமார் 250 பேர் அமர்ந்து பார்க்கத் தக்க அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது, பார்ப்பதற்கு நம்ம ஊர் டுரிங்க் டாகிஸ் போன்று இருந்தது, மேடையின் வலது புறம் பாலி இசைக்கலைகளுக்கான இடமும், வலப்புறம் மற்றும் எதிரே பார்வையாளர்களுக்கான இடமும் அமைக்கப்பட்டு இருந்தது. நிகழ்ச்சித் துவக்கத்தின் அறிகுறியாக பாலி இசையை இசைக்கலைஞர்கள் இசைத்தனர். இசைக்கருவிகள் அனைத்தும் பழங்காலக் கருவிகள், மூங்கில், தோல் போன்றவற்றால் செய்யப்பட்டவை, கிட்டதட்ட 10 இசைக்கலைஞர்கள் கின் கினி போன்ற மணி யோசை போன்று இசைக்க பாராங்க் நடனம் துவங்கியது. பாரங்க் நடனம் என்பது வெறும் நடனமாக இல்லாமல் ஒரு சிறிய கதை அதில் வேடமிட்டவர்கள் வந்து நடித்துப் போவார்கள், பெரும்பாலும் இந்தச் சிறிய கதைகள் இராமயணம் மகாபாரதம் இவற்றில் உள்ள கிளைக்கதைகளாகவோ, இடைச் சொருகலாகவோ இருக்கும். இந்தக் கதைகளில் நல்ல சக்திக்கும் தீய சக்திக்கும் நடைபெறும் போட்டி போராட்டத்தில் முடிவில் நல்ல சக்தி வெற்றி பெற்றதாக காட்சிகள் முடியும்.
P1010254.JPG
 

P1010244.JPG
 

P1010242.JPG
 

P1010232.JPG
 

IMG_9309.JPG
 

P1010258.JPG
 

நாங்கள் பார்த்த பகுதியில் மகாபாரத குந்தி மற்றும் சில பாத்திரங்கள் வந்ததன, முக்கிய பாத்திரமாக பாரோங் என்கிற சிங்கம் போன்ற விலங்கு மற்றும் ரங்க்தா என்கிற தீய சக்தி (பேய்) வேடங்களில் மேடையில் ஆடுகிறார்கள். பாரோங் பார்க்க சிறுவர்கள் பயப்படும்படி தோற்றம் இருக்கிறது, பேய் நீள தாடி வைத்து முகமூடிப் போட்ட உருவம், கெட்ட சக்தி வீரர்களை தற்கொலை செய்யத் தூண்ட பாரோங்க் காப்பாற்றுவதாகக் கதை. இது போன்ற கிளைக்கதைகள் நான் கேள்விப்பட்டதே இல்லை, இது பாலி வர்சன் மகாபாரதம் என்றே நினைக்கிறேன்.

நாடகத்தின் கருத்து மற்றும் கதை ஆகியவற்றின் மொழிப் பெயர்ப்புத் தாளை வரவேற்பு நுழைவாயிலில் கொடுத்துவிடுகிறார்கள், இம்மொழிப் பெயர்ப்பு சீனம், தாய், மலாய், இந்தோனேசியா, ஜப்பான், ஆங்கில மொழிகளில் கிடைக்கிறது, இதன்படி இங்கு வரும் சுற்றுலாவினர் பெரும்பாலும் ஆஸ்திரேலியர், ஜப்பானியர், தைவான் காரர்கள் மற்றும் அருகே உள்ள ஜாவா, மலேசியா நாட்டினர் தான் என்பது தெளிவாகியது.
சுற்றுலாவழிகாட்டி தெரிவித்தப்படி பாலிக்கு சுற்றுலா வருபவர்களில் 40 விழுக்காட்டினர் ஆஸ்திரேலியர், 15 விழுக்காட்டினர் ஜப்பானியர்கள், 10 விழுக்காட்டினர் தைவான் நாட்டினராம் மீதம் 35 விழுக்காடே உலகின் பிறப் பகுதியினர் என்றார்.

பாரோங்க் நடன மேடைகள் தீவில் 3 - 4 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார், ஒரு நாளைக்கு இரு காட்சி என்ற அளவில் ஒரு மணி நேர நிகழ்ச்சியாக நடக்கிறது, மறுமுறை பார்க்க கண்டிப்பாக அலுப்பு ஏற்படும், பாரோங்க் சிங்கம் தவிர்த்து வேறொன்றும் நன்றாக இல்லை, துவக்கத்தில் இரு பெண்கள் பாலி நடனம் ஆடினர்கள், பெரும்பாலும் இது மெதுவாக ஆடப்படும் குச்சுபுடி நடனம் மற்றும் ஜப்பானிய நடனத்தின் கலவை போன்று இருந்தது. ஆனால் ஒன்றே ஒன்று இந்தியாவில் இந்துக்கள் இராமாயணம் மகாபாரத்தைத் முற்றிலும் மறந்துவிட்டாலும் பாலித் தீவினர் அவற்றை வாழவைத்துக் கொண்டு இருப்பர். முன்பெல்லாம் இவ்வகை இராமயணம் மகாபாரதம் வெள்ளைத் திரைக்குப் பின், விளக்கொளியில் அட்டை உருவங்களால் ஆட்டிக் காண்பிக்கப்பட்டன, இப்போது அவை மேடை நிகழ்ச்சியாக உருப்பெற்றிருக்கிறதாம்.

தமிழகத்தில் கூட 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொம்மலாட்டம் என்ற கலைநிகழ்ச்சியும் அதில் வள்ளித் திருமணம் போன்ற நாடகங்கள் நடித்துக் காண்பிக்கப்படும். இப்போது அவை இருந்தாலும் பார்க்க ஆளில்லை. பொம்மை ஒன்றை கையில் மாட்டிக் கொண்டு செய்யப்படும் 'பப்பட் ஷோ' என்ற நிகழ்சியை வெகுவாக ரசிக்கிறார்கள், இந்நிகழ்ச்சியின் நீளம் குறைவு, கொஞ்சம் நகைச்சுவையாக இருக்கும் கூடவே செய்து காட்டுபவரின் திறமை ஆகியவற்றினால் ரசிக்கப்படுகிறது, பழங்கலைகள் எதுவும் முற்றிலுமாக மறைந்து போவதில்லை மேடை நாடகம் சினிமா ஆனது போல் வேறொரு வடிவங்களில் அவை வளர்ந்தே வருகின்றன. பொழுது போக்கு மனித வாழ்க்கையில் இன்றியமையாதவை ஆனால் காலத்திற்கேற்ப ரசனைகள் மாறும் அவ்வளவு தான். இன்றைய திரைப்படங்கள், டிவி சீரியல்கள் எதிர்காலத்தில் அல்லது ஐம்பது ஆண்டுகளித்துப் பார்க்கும் போது அவை செல்லும் சேதி என்ன ? ஒன்றும் தேறாது. அன்றைய மக்களின் மனநிலை அவர்களின் எதிர்ப்பார்ப்பு என்னவாகி இருந்தது என்பது மட்டுமே அதிலிருந்து உருவப்படும் தகவலாக அல்லது ஆவணமாக அமையும் இல்லையா ? ஆனால் என்றைக்கோ எழுதிய காப்பியங்கள் இன்றைக்கும் பொழுது போக்கு நிகழ்ச்சிகாகவும் வாழ்வியல் மேம்பாட்டிற்காகவும் போற்றப்படுகிறது என்பதை நினைக்கையில் நம்முடைய தற்போதைய பண்பாடு மற்றும் தற்போதைய பொழுது போக்காகக் நினைத்துக் கொண்டிருப்பவைகளில் ஒன்றுமே இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது ஆனாலும் அது உண்மை தானே ? கொலைவெறிப் பாடலும், செல்லமே சீரியலும் எதிர்காலத்தில் எந்த விதத்தில் பயன்படும் ?

பாராங்க் நடனம் முடிந்த பிறகு அடுத்து கைவினைப் பொருள்கள் விற்பனை செய்யும் Batik கடை இருக்கும் இடத்திற்கு பேருந்தில் அழைத்துச் சென்றார்கள். பாலித் தீவு சுற்றுலா தொழில் முதன்மையானது என்றாலு, ஓவியம், சிலை மற்றும் மரச் சிற்பங்கள் செய்வது மற்றும் விவசாயம் வேறு சில முதன்மையான தொழில்கள். Batik Keris என்னும் பெருங்கடைக்கு அழைத்துச் சென்றார்கள், சுற்றுலாவாசிகளை முன்னிருத்தி இயங்கும் கடை, வாங்கச் சொல்லி வற்புறுத்தவில்லை, பொருள்கள் வெளி சந்தையை ஒப்பிட மிகுதி தான், எங்களுடன் வந்தவர்கள் யாரும் எதையும் வாங்கவில்லை, இதற்கு முன்பே பேருந்தில் குளிர்சாதனம் பழுதடைந்ததால் வேறொரு பேருந்தை வரவழைப்பதாகச் சொல்லி இருந்ததால் அந்த இடத்தில் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. இது ஒருவேளை காத்திருக்க வைக்கும் உத்தியா ? என்பது அடுத்த முறை அங்கு செல்லும் போது தெரிய வரலாம்.IMG_4586.JPG
 

IMG_4585.JPG
 

IMG_4584.JPG
 

IMG_4582.JPG
 
பிறகு பேருந்தில் ஏறி எரிமலை பகுதி உள்ள வடக்கு பாலிப் பகுதியான கிண்டாமணி மலை பகுதிச் சென்றோம், அங்கு வெப்ப அளவு 20 டிகிரி வரை இருப்பதாக முன்கூட்டியே சொன்னார்கள்.
Link to comment
Share on other sites

இந்துத் தீவு - பகுதி 7

 
பாலித் தீவுக்கு சுற்றுப் பயணம் என்று முடிவானதும், பாலி பற்றி முன் பின் எதுவும் தெரியாத நிலையில் முதலில் தெரியவந்தது அங்கு எரிமலைகள் அதுவும் உயிரோட்டத்துடன் எப்பவும் வெடிக்கக் காத்திருக்கும் நிலையில், தற்போது பொறுமையுடன் அவை இருப்பது தெரியவந்தது, பனிப்பொழிவு. கடுங்குளிர், மலைப்பகுதிகள் போன்ற இயற்கைச் சூழல் நிறைந்த பல இடங்களுக்கு பயணித்து இருந்தாலும், முதன் முதலாக எரிமலையைப் பார்க்கப் போகிறோம் என்கிற ஆர்வம் பாலித் தீவு பயணத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் கூடி இருந்தது.

*******

பாலித் தீவில் சில எரிமலைகள் உள்ளன அவற்றில் மவுண்ட் அஹுங் உயரமானது, அதன் உயரம் 3000 மீட்டருக்கும் கூடுதலானது என்று வழிகாட்டி குறிப்பிட்டார், கடைசியாக பொங்கியது 1963 ஆம் ஆண்டாம், மவுண்ட் அஹுங் மேரு மலைக்கு ஒப்பானது என்பது பாலித் தீவினர் நம்பிக்கை, சிவனின் ஆணைப்படி கடலில் மிதந்து கொண்டு இருந்த தீவை மேருவின் பகுதியைப் பெயர்த்து எடுத்து அங்கே வைத்து அங்கே பாலி மக்களை குடி அமர்த்தினராம், இது கிட்டதட்ட பூமி அசையாமல் இருக்க அல்லாஹ் மலைகளை நட்டான் என்பது போன்ற கதைதான். மவுண்ட் அஹுங் தாய் மலை என்றும் சொல்லப்படுகிறது.

This mythical mountain of gods was mentioned in Tantu Pagelaran, an Old Javanese manuscript written in Kawi language from 15th century Majapahit period. The manuscript is describing the mythical origin of Java island, and the legend of moving some parts of mount Meru to Java. The manuscript explained that Batara Guru (Shiva) has ordered the god Brahma and Vishnu to fill the Java island with human beings. However at that time Java island was floating freely on the ocean, ever tumbling and always shaking. To make the island still, the gods decided to nail the island upon the earth by moving the part of Mahameru in Jambudvipa (India) and attaching it upon Java.[7] The resulting mountain is Mount Semeru, the tallest mountain of Java. மேலும் 

நாங்கள் பார்க்கப் போனது அதைவிட மூன்று மடங்கு உயரம் குறைவான 'மவுண்ட் பாதுர்' எங்கள் பேருந்து 'மவுண்ட் பாதுர் அல்லது குணுங் பாதுர்' என்கிற எரிமலை இருக்கும் பகுதியை ஒட்டிய மலைப்பகுதியின் ஊரான கிண்டாமணி நோக்கி பயணித்தது. நெல் வயல் பகுதிகள் ஆங்காங்கே இருந்தன, அப்பகுதி சமதளமாக இல்லாமல் இருந்தது, நிலத்தடி நீரை விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள், அவற்றினிடையே போக வர என இருவாகனங்களே கடக்கக் கூடிய குறுகிய சாலைகள் தான், வழியெங்கும் பாலி கிராமம், பாலியில் கிராமத்திற்கும் நகரத்திற்குமான வேறுபாடு மக்கள் நெருக்கமும் வீடுகளின் நெருக்கம் தான், பசுமைகள் அதிகமாகவும் வீடுகள் குறைவாக காணப்பட்டாலும் முன்பு சொன்னது போல் வீடுகளை ஒட்டிய அவர்களது குடும்பக் கோவில்கள், மற்றும் கிராமத்திற்கு பொதுவான கோவில்கள் தென்பட்டன.

உயரம் செல்லச் செல்ல வீடுகளின் எண்ணிக்கை குறைய மலைத் தோட்டங்கள் காணப்பட்டன, அவற்றில் எலுமிச்சை, ஆரஞ்சு, பம்ப்ளிமாஸ், மங்குஸ்தான், அண்ணாசி, மலை இலந்தை பழ மரங்கள், அவற்றில் சில காய்த்திருந்ததையும் காண முடிந்தது, அவற்றை பறித்து வந்து வீட்டு முன் குவியல்களாக கடைகள் போடப்பட்டிருந்ததையும் ஆங்காங்கே காண முடிந்தது. காஃபி தோட்டங்களும் அங்கு இருப்பதாக வழிகாட்டிக் குறிப்பிட்டார். கிண்டாமணி பகுதியை அடைந்தோம்.

P1010266.JPG
 
 

IMG_4608.JPG

IMG_4613.JPG

IMG_4612.JPG

IMG_9346.JPG


ஊட்டிப் போன்று தட்பவெப்பத்துடன் உயரமான அகலம் குறைவான சமவெளி, அதனை அடுத்து பள்ளத்தாக்கு, பள்ளத்தாக்கில் பேருந்து மற்றும் மக்கள் விழுந்துவிடாமல் இருக்க, சிறிய தடுப்பு சுவர்கள், சாலைக்கு முதுகை காட்டியபடி தடுப்புச் சுவர் மீது மக்கள் சாய்ந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தனர். பார்க்கும் இடத்தில் இருந்து சுமார் 3 கிலோ தொலைவில் கருமணல் மலைக் குவியல் போன்று எரிமலை ஒன்று உயர்ந்து காணப்பட்டது. இது தான் எரிமலையா ? ஆம் என்று சொல்வது போன்று சுற்றிலும் புல் பூண்டுகள், பசுமைகள் எதுவும் இல்லை, கம்பீரமாக நிற்கும் எரிமலை உச்சியில் மேகக் கூட்டங்கள் உரசி நின்று கொண்டிருக்க, எரிமலை புகைவது போன்ற காட்சி. தற்போது எரிமலை அமைதியாக இருப்பதால், நெருங்கிச் சென்று பார்வையிடும் எரிமலை ஏற்றத்திற்கும் சுற்றுவாசிகளை இந்தோனேசியா அரசு அனுமதிக்கிறதாம். 5633 அடி உயரமுள்ள மவுண்ட் பாதுர் கடைசியாக சினத்தைக் காட்டியது 2000 ஆண்டில்.
P1010282.JPG
 
IMG_4619.JPG

அவற்றை இன்னும் தெளிவாகப் பார்க்க முடியும் என்று சொல்லிய வழிகாட்டி, கிண்டாமணியின் உயரப் பகுதியில் அமைந்திருந்த சீன உணவகத்திற்கு மதிய உணவிற்காக பேருந்தை நிறுத்தினார், உணவகத்தில் உணவுத் திருவிழாவிற்கு சமைத்ததைப் போல் 50க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இருந்தன. குளிர்பான வகைகள், வெட்டி வைக்கப்பட்ட பழங்கள் தவிர்த்து சாப்பிட எனக்கு ஒன்றும் இல்லை, சுற்றுலா நிறுவனம் ஏற்பாட்டின் படி எனக்கு சைவ உணவு ஏற்பாட்டில் சுடச் சுட நூடுல்ஸ் மற்றும் ப்ரைட்ரைஸ் எனப்படும் பொறித்த சோறு இரு தட்டுகளில் கொண்டு வந்து வைத்தனர்.
 
IMG_6535.JPG
IMG_4625.JPG

IMG_4621.JPG

IMG_4623.JPG

IMG_4620.JPG
 
நூடுல்ஸ் சுவையோ சுவை தின்று தீர்த்தேன், ப்ரைட் ரைஸுக்கு இடம் இல்லாததால் அரை தட்டு தான் உண்ண முடிந்தது, மற்றபடி பழம், பானமெல்லாம் குடித்துவிட்டு உணவகத்தின் கண்ணாடி தடுப்பைத் தாண்டி எரிமலையைப் பார்வையிட அமைக்கப்பட்ட பகுதியில் இருந்து பார்க்க, சுற்றிலும் பிறபகுதியில் வெயில் அடித்த வெளிச்சத்தால் மலை மின்னிக் கொண்டு இருக்க உச்சியில் முத்தமிட்ட மேகங்களும் வெட்கப்பட்டு விலக 'மவுண்ட் பாதுர்' எரி மலை மிகத் தெளிவாகத் தெரிந்தது.
IMG_6527.JPG

P1010279.JPG

P1010278.JPG

P1010280.JPG

IMG_6528.JPG
எரிமலை அந்தப் பகுதியின் முன்பு ஒரு கிமீ வரை குழம்புகளை ஓடவிட்டதன் தடம் படிந்து இருந்தது, தப்பிய பகுதிகளில் மரஞ்செடிகள் காணப்பட்டன, எரிமலையை இடது பக்கம் பள்ளத்தாக்கில் அழகிய ஏரி, அடுத்து 'மவுண்ட் அஹூங் எரிமலைப் மலைப்பகுதி', பள்ளத்தாக்கில் எரிமலைகளின் அடிவாரம் வரை மரங்கள் வீடுகள், பார்க்க கண்கள் வியந்தன, எங்கள் சுற்றுலா குழுவினர் குழுமி புகைப்படம் எடுத்துக் கொண்டோம். பாலியில் நான் எதிர்ப்பார்த்திருந்த அருமையான காட்சி அந்த இடத்தில் காணக் கிடைக்க மனமும் நிறைவு பெற்றது.

P1010284.jpg

P1010283.jpg
உறைந்த எரிமலை குழம்புகள் நுறைபாறை போன்று உள்ளது, நன்றாக அழுத்தமாக இருக்கிறது, அவை பெயர்த்து எடுக்கப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப் பயன்படுத்துகிறார்கள், அருகில் இருந்த ஏரியில் இருந்து தான் மொத்த பாலியும் தண்ணீர் தேவையை போக்கிக் கொள்கிறது, தண்ணீரில் கொஞ்சம் கந்தக வாடையும் குறைவான உப்பு சுவையும் இருப்பதால் என்னவோ அங்கு விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட பாட்டில் நீரின் சுவையும் அது போன்றே இருக்கிறது. நான் சுவை அறிந்த அளவில் சிங்கப்பூர் - மலேசியா தண்ணீர் சுவைக்குப் பிறகு தான் பிற.

அந்தப் பகுதியில் சுற்றுலாவாசிகளை மொய்த்து உடைகள் மற்றும் கைவினைப் பொருள்களை விற்கும் மக்கள் நிறைய இருக்கிறார்கள், அவர்கள் தோற்றத்தில் இருந்து ஏழைகள் என்று தெரிந்தது அவர்களில் சிறுவர்களும் பொருளை விற்க சுற்றுலாவாசிகளை பின் தொடர்ந்து நச்சுகிறார்கள். ஒருவரிடம் வாங்கிவிட்டால் ஒரு பத்து பேர் மொய்த்து அவர்களுடைய பொருள்களை வாங்க கெஞ்சுகிறார்கள், அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் சிறுவர்களும் இப்படி வருகிறார்களா ? அல்லது படிக்காமல் இந்த வேலைக்கு வந்துவிட்டார்களா என்று அறிய முடியவில்லை,IMG_9401.JPG
 
பரிதாபமாகவே இருந்தது, முதியோர்களும் இருந்தனர். பொருள் விலை ஐந்து மடங்கு கூடுதலாகச் சொல்லி குறைத்துக் கேட்க கேட்க படிகிறார்கள், நினைவிற்காக இரண்டு டி சர்டுகள் வாங்கினேன், இரண்டு டி சர்ட் 100K சொல்ல 40K விற்கு வாங்கினேன், எனது மற்ற நண்பர் பின்னர் சொன்னார் அவர் வாங்கியது இரண்டு டி சர்ட் வெறும் 20K தானாம், எனக்கு ஏமாற்றமாகத் தெரியவில்லை, இரண்டு டி சர்ட் 40K என்ற அளவில் சிங்கை வெள்ளிக்கு 7 தான் வரும், தரம் குறைவு தான் என்றாலும் அதே விலைக்கு சிங்கையில் வாங்க முடியாது. அவர் 3.5 வெள்ளிக்கு வாங்கி இருக்கிறார். அப்போது பறித்தது அடையாளமாக பழங்கள் தெரிந்ததால் அவற்றிலும் கொஞ்சம் வாங்கினேன், அதே அளவு பழங்கள் சிங்கையில் அதைவிட 4 மடங்கு கூடுதல் விலையாக விற்கப்படுகிறது.

சுமார் 2 மணி நேரம் உணவிற்காக மற்றும் சுற்றிப்பார்ப்பது என்ற அளவில் அங்கே கிண்டாமணியில் செலவிட்டு நான்கு மணி வாக்கில் அங்கிருந்து பாலித் தீவின் முதன்மையாக கருதப்படும் 'உபுட்(UBUD)' எனப்படும் கலாச்சார பண்பாட்டு மையமான கிராமம் நோக்கிப் புறப்பட்டோம்.
Link to comment
Share on other sites

இந்துத் தீவு - பகுதி 8

 

photo3.jpg

 
பண்பாடுகள் நாட்டுக்கு நாடு வேறுபடும், உலகில் நாம தான் உயர்ந்தப் பண்பாட்டை உடையவர்கள் என்று நினைத்துக் கொண்டுள்ளோம். நாட்டுக்கு நாடு பண்பாடுகளைக் கொண்டாடும் முகமாக அரச பரம்பரைகள் கொண்டாடப்படுகின்றன, அவர்கள் பயன்படுத்தியப் பொருள்கள் பொக்கிசமாக பாதுக்காப்படுகின்றன.

*******

எரிமலையைப் பார்த்துவிட்டு கிளம்பினோம், அதே மலைப்பகுதிப் பாதையில் ஒரு அரைமணி நேரப் பயணம் பிறகு உபுட் (UBUD) கிராமம் நோக்கிய சாலையில் பேருந்து சென்றது. மலைப்பாங்கு மற்றும் பள்ளத்தாக்கான பசுமையான பகுதிகளில் பயணம் இருந்தது, பாலித் தீவு பார்க்க கோழியும் முட்டையும் சேர்ந்த வடிவமாக இருக்கும், அதைக் குறிப்பிட்டுச் சொல்லிய வழிகாட்டி, எங்கள் நாட்டில் முதலீடு செய்பவர்களுக்கு கண்டிப்பாக லாபம் உண்டு என்பதைத் தான் எங்களது நாட்டின் வரைபடம் சொல்லுகிறது என்றார். பெரும்பாலும் வெளிநாட்டினர் முதலீடு என்பது பாலியில் சுற்றுலா சார்ந்தது தான், விடுதிகள் கட்டுவதில் வெளிநாட்டினர் மிகுதியாக முதலீடு செய்கின்றனர், அதனால் சுற்றுலாத் துறை வளர்ச்சி பாலியில் கனிசமாக உயர்ந்துள்ளது, 2002 அக்டோபர் பாலி குண்டுவெடிப்பின் பிறகு மூன்று மாதம் சுற்றுலாவாசிகள் இன்றி தீவு வெறிச்சோடிக் கிடந்ததாம் அரசு முயற்சி எடுத்து விடுதியில் தங்கும் செலவில் பல சலுகைகள் கொடுக்க முன்வந்த பிறகு நிலைமை வெறும் மூன்று மாதத்திற்குள் சரி ஆனதாம். தொடர்ந்து சராசரியாக 5 நிமிடத்திற்கு ஒருமுறை விமானங்கள் தரையிரங்கும் சுறுசுறுப்பான தீவில் விமானப் போக்குவரத்து நின்றால் நிலைமை எப்படி இருந்திருக்கும் ?

உலகெங்கிலும் இல்லாத நடைமுறை ஒன்றை வழிகாட்டி குறிப்பிட மிகவும் வியப்பாக இருந்தது, அதாவது பாலித் தீவினர் 'அமைதி நாள்' என்று மார்ச் மாதம் ஒரு விடுமுறை நாள் வழக்கில் வைத்திருக்கிறார்கள், அன்று மின்சார விளக்குகள் மற்றும் மின்சாரம் தொடர்பாக எதையும் இயக்கமாட்டார்களாம், குறிப்பாக பாலி இந்துக்கள் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்களாம், சாலையில் போக்குவரத்து என்பதே இருக்காதாம், ஆனால் அவசரத் தேவை என்பதற்காக காவல் துறை, மருத்துவமனை மற்றும் தீயணைப்புத் துறை மட்டுமே இயங்குமாம். அன்று 24 மணி நேரத்திற்கு பாலி டென்பசார் விமான நிலையத்தில் இருந்து எந்த ஒரு விமானமும் கிளம்பாது, எந்த ஒரு விமானமும் தரையிறங்காது என்றார். இது மிகவும் வியப்பானது. உலகில் எந்த ஒரு விமான நிலையத்தின் செயல்பாடுகள் முற்றிலுமாக நின்று போக இயற்கைப் பேரிடர், பனிமூட்டம், பனிப்பொழிவு அல்லது தீ ஆகிய காரணங்கள் மட்டுமாகத்தான் இருக்கும், ஆனால் பாலித் தீவில் கடைபிடிக்கும் அமைதி நாளுக்காக விமான நிலையமே மூடி இருப்பது பாலித் தீவின் வியப்புகளுள் ஒன்று.

ஏற்கனவே முந்தைய நாள் வந்துள்ள சுற்றுலா பயணிகள் என்ன செய்வார்கள் ? அவர்களுக்கு சுற்றுலா ஏற்பாடும் செய்யும் நிறுவனமும், விருந்தினர் விடுதிகளும் முன்கூட்டியே குறிப்பிட்ட நாளில் பாலியில் எங்கும் வெளியே செல்ல முடியாது, விடுதிக்குள் மட்டும் தான் இருக்க முடியும், விரும்பினால் தியானம் யோகம் இவை பயிற்றுவிக்கப்படுவதில் அன்று இணைந்து கொள்ளலாம் என்று கூறுவார்களாம், அதற்கு ஒப்புக் கொண்டு விருப்பமுள்ள சுற்றுலாவாசிகளே அன்று அங்கு இருப்பார்களாம். 90 விழுக்காட்டு மக்கள் அமைதி நாளை கடைபிடிக்கும் போது அதற்கு ஒத்துழைப்பாக 10 விழுக்காட்டு மக்களும் பிற வெளி நடவடிக்கை எதிலும் ஈடுபடமாட்டார்களாம். அமைதி நாள் அன்று வானம் மிகத் தெளிவாகத் தெரியும், நட்சத்திரங்கள் நிறைந்து காணப்படும் ஏனெனில் இரவில் மின் விளக்குகளே இல்லாததால் பாலித்தீவில் இருந்து பார்க்கப்படும் வானத்தின் கருமை நட்சத்திரங்கள் நிறைந்ததாக இருக்கும் என்றார்.

பாலித் தீவின் அமைதி நாள் பற்றி மேலும் தகவல்களை விக்கிப்பீடிய பகிர்ந்து கொள்கிறது: சுட்டி

உபுட் செல்லும் வழியில் மலைப் பாதை ஒன்றின் இடது பக்கம் சந்தைகள் நடந்தது, அந்த சந்தை பக்கத்து பெரிய தீவான ஜாவில் இருந்ந்து பொருள்கள் கொண்டு வந்து விற்கப்படுமாம், அவை ஜாவாத்தீவினரால் நடத்தப்படுகிறதாம், பாலித் தீவை ஒட்டி இருக்கும் ஜாவா தீவின் பகுதியில் உள்ளவர்கள் பாலியை நம்பித்தான் பிழைக்கிறார்கள்,ஒரு 30 நிமிட படகு பயணத்தில் அவர்கள் பாலியை அடைந்துவிடுவார்கள், எனவே ஜாவாவில் இருந்து அன்றாடம் பாலிக்கு வேலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை கனிசமான அளவில் உண்டு. அவர்களைப் பொருத்த அளவில் பாலி இந்தோனேசிய பகுதி தான் என்பதால் வந்து போக எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.
IMG_9427.JPG


பேருந்து உபுட் கிராமத்திற்குள் நுழைந்தது, பெயர் தான் கிராமம் ஆனால் நன்கு வளர்ச்சி பெற்ற சிறுநகர் போன்று தான் இருந்தது, அந்த உபுட் கிராமத்தின் சிறப்பு அது பாலித்தீவினரின் பாரம்பரியத்தின் துவக்கப் புள்ளியாக இருந்ததாம், இன்றும் பாலித் தீவினருக்கும் சுற்றுலாவாசிகளுக்கும் மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக உபுட் கிராமம் உள்ளது, அந்த கிராமத்தை உருவாக்கியவர் என்ற அளவில் ஒரு அரசரின் நினைவாக அவரது அரண்மனையும் அங்குள்ளது. அரண்மனைக்கு எதிரே உள்ள இடத்தில் மொத்த விற்பனை கடைகளை கட்டிக் கொடுத்து தன்னுடைய பார்வையில் அவற்றை மேம்படுத்தினாராம் அந்த அரசர். முன்பு பாலித்தீவில் விளையும் அரிசி உள்ளிட்ட அனைத்து வி ளைபொருள்களும் அந்த இடத்தில் தான் விற்க்கப்படுமாம், மருந்துப் பொருள்களும் மூலிகைகளும் அங்கு முக்கிய விற்பனை மையமாகச் செயல்பட்டதால் மூலிகை அல்லது மருந்தைக் குறிக்கும் பாலி மொழியில் அந்த இடத்தின் பெயர் 'உபுட்' என்று வழங்கப்படுகிறது.

உபுட் அரண்மனை அருகே பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கி பார்வையிடச் சென்றோம், நிறைய சுற்றுலாவாசிகள் அலைந்து கொண்டு இருந்தனர், அரண்மனையின் முகப்பில் பாலி சாயல் கோபுரவாயில்கள் இருபக்க சுற்றுச் சுவரின் மையப்பகுதியில் அமைந்திருந்தது, நுழைவாயிலின் இடது பக்கம் அமைந்துள்ள சற்று உயரமான மண்டபம் அரண்மனை பாதுகாவலர்கள் நிற்பதற்காக அமைக்கப்பட்டு இருந்தது, நுழைவாயில் வழியாகச் செல்ல உள்ளே திறந்தவெளி மேடைப் பகுதியில் மற்றொரு நுழைவாயிலும் வலது பக்கம் அமைச்சரவைக் கூடம் ஒன்றும் அதன் வலப்பக்கம் 'அரண்மனை மணி' ஒன்றும் இருந்தது, அந்த அரண்மனை ஒரு ஏக்கர் சதுர அளவில் அமைந்திருந்தது, உள்ளே செல்ல சரஸ்வதி உருவம் ஒன்று பொறிக்கப்பட்டு இருந்ததைப் பார்த்தேன்.




 
 
நடுவே வசந்த மண்டபம் மற்றும் ஆலோசனைக் கூடம், ஓய்வு அறை, சமையல் அறை, அந்தப்புரம் போன்ற பகுதி மற்றும் உள்ளே அவர்களின் குடும்பக் கோவில், அந்த அரண்மனைப் பகுதியின் உள்ளே பலவகை மலர் செடிகளை வைத்து நந்தவனம் போன்று வைத்திருந்தனர்.


IMG_4663.JPG
அரண்மனை மட்டுமின்றி பாலித் தீவின் கோவில்களின் கதவுகள் ஒரு ஆள் நுழைவதற்கு ஏற்ற அளவில் குறுகியதாகவே உள்ளது, எதிரிகள் கூட்டமாக நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு அமைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை, கதவுகளில் தங்க முலாமோ தங்க வண்ணக் கலவையோ பூசப்பட்டு இருந்தது, அங்கிருந்த பொருள்கள் அனைத்தும் வேலைப்பாடுகள் நிறைந்ததாக இருந்தது, நான் உள்ளே சென்ற போது யாருமே அங்கு இல்லை, உள்ளே ஒரே ஒரு மண்டபப்பகுதியில் சில பெண்கள் சமையலுக்கு தேவையானததிச் செய்து கொண்டு இருந்தனர்,
 
IMG_4670.JPG
 

IMG_4668.JPG
 
IMG_4675.JPG

IMG_4669.JPG

IMG_4671.JPG
 
அவர்கள் அரசப்பரம்பரையைச் சார்ந்தவர்களாக இருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன், வேறொரு வழியாக வெளியே வரும் போது, ஒருவர் குறுக்கிட்டு, உள்ளே சென்றீர்களா ? என்று கேட்டார், ஆம் என்றேன், அப்படி என்றால் டொனேசன் 50K கொடுங்கள் என்றார், கொடுத்தேன், இந்தக் கட்டணம் இருப்பது தெரியாமல் உள்ளே சென்று வந்தது கொஞ்சம் வெட்கமாகனது. எதனால் உள்ளே பலர் சென்றுவரவில்லை என்று தெரிந்தது. வெளிநாட்டுக்காரர்களுக்கு இந்தோனேசிய 50K பெரிய தொகை அல்ல. அரண்மனை முகப்பு மண்டபத்தினும் பாரங்க் நடனமும் சுற்றுலாவாசிகளுக்காக சிறிய நிகழ்ச்சியாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது அரண்மணைக்கு வெளியே மக்கள் கூட பெரிய மண்டபமும் கட்டி வைத்துள்ளனர்.





IMG_4688.JPG

IMG_4678.JPG
 

IMG_4683.JPG
 
IMG_4692.JPG

IMG_4673.JPG

IMG_4693.JPG

அரண்மனை முகப்புக்கு எதிரே சாலையின் அடுத்தப்பக்கம் கைவினைப் பொருள்கள் விற்பனைக் கடைகள் 100க் கணக்கில் இருந்தன. மரச்சிற்பங்கள், பீங்கான் பொருள்கள், பித்தளைச் சிற்பங்கள், வாசனை திரவியங்கள், வேலைப்பாடுகள் நிறைந்த துணிகள் என்று சுற்றுலாவாசிகள் நினைவு பொருளாக வாங்கிச் செல்ல பொருள்கள் ஏராளமானவைகள் இருந்தன, விலை(?) நாலுமடங்கு சொல்லுவார்கள் நாம் குறைத்துக் கேட்டு வாங்க வேண்டும்,photo2.jpg
 
IMG_4652.JPG
 
IMG_4656.JPG

IMG_4655.JPG

IMG_4651.JPG

photo%2B%25288%2529.JPG


வெள்ளைக்காரர்களுக்கு 'விறைத்த ஆண் குறிகள்' மீது என்ன மோகமோ, அவர்களின் ரசனைக்காக மரச் சிற்பங்களாக பல்வேறு அளவுகளில் பல்வேறு வண்ணங்களில் செதுக்கி வைக்கப்பட்டு சாவிக் கொத்தாக பயன்படுத்தும் வளையத்துடன் மற்றும் சோடா பாட்டில் திறக்கும் காதுடன் ஆண் குறி மரச் சிற்பம் விற்கப்படுகிறது, இங்கு மட்டும் தான் என்பது இல்லை, மரச் சிற்பங்கள் விற்கும் அனைத்துக் கடைகளிலும் அவற்றைப் பார்கலாம், விமான நிலையக் கடைகளில் அவைகள் இருந்தன. பாலித் தீவு பூனைகளை போற்றும் தீவு, பாலித் தீவின் பூனைகள் வெள்ளை மற்றும் சாம்பல் நிறமானது, அவற்றை மரச்சிற்பங்களாக பல்வேறு வடிவங்களில் வடித்து வைத்திருக்கின்றனர்.

உபுட் கிராமத்தில் ஒரு மணி நேரம் இருந்தோம். பிறகு மேற்கு கடற்கரை நோக்கிய பயணம் பொன் மாலையும், சூரியன் மறைவையும் அங்கு தனிச் சிறப்பு வாய்ந்த கடற்கோவிலையும் பார்வையிடுவது தான் அன்றைய முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக இருந்தது, அது குறித்த அழகான படங்களுடன் அடுத்தப் பதிவு வரும்.
Link to comment
Share on other sites

இந்துத் தீவு - பகுதி 9

 
நான் கூர்ந்து பார்த்தவகையில் பாலியின் பண்பாடு மற்றும் கலைகளில் தென்னிந்திய சாயல் துளி கூட இல்லை, பிள்ளையார் சிலைகளைப் பார்க்க முடிந்தது, மும்மூர்த்திகள் தவிர்த்து பிற வழிபாட்டு தெய்வங்கள் குறிப்பாக தென்னகம் போற்றும் முருகனை காண முடியவில்லை, அவர்களின் கட்டிடக் கலை மற்றும் கோபுரங்கள் கொஞ்சம் பல்லவக் கட்டிடக் கலைச் சாயல் இருந்தது. பல்லவர்களின் காலம் 3 ஆம் நூற்றாண்டில் துவங்கி 9 நூற்றாண்டில் முடிவுகிறது. பாலியின் 8 முதன்மையான கோவில்கள் 16 ஆம் நூற்றாண்டு காலத்தவை என்கிறது தகவல்கள். இந்தோனேசியாவில் சோழப் பேரரசு அல்லது தென்னிந்திய மன்னர்களின் ஆளுகையில் நீண்ட நாள் இருந்திருந்தால் தென்னிந்திய கட்டிடக் கலையின் தாக்கங்கள் இருந்திருக்கும், பாலியின் கட்டிடக் கலையில் சீனக் கட்டிடக் கலைகளுடன் கூடிய வட நாட்டு சாயல்களே மிகுந்துள்ளது, அவர்களின் வழிபாடு முறை மற்றும் தெய்வங்கள் யாவும் (மும்மூர்த்திகள்) தவிர்த்து வடநாட்டு சாயலில் உள்ளது. பாலி மொழி Austronesian language மொழிப் பிரிவில்Malayo-Polynesian languages குழுமத்தைச் சார்ந்தது, அதில் ஓரளவு வடமொழிக் கலப்பும் உள்ளது. அவர்களின் எழுத்துவடிவம் பர்மிய, தாய்லாந்து மொழிகளைப் போன்று பிரம்மி வடிவம் கொண்டது, ஆனால் அவற்றின் பயன்பாடுகள் தற்பொழுது குறைந்து, லத்தீன் எழுத்துகளை எழுதப் பயன்படுத்துகிறார்கள் என்கிறது விக்கி ஆவணம். அந்த செயல்பாடு பாலி மொழி எழுத்துகளை முற்றிலும் அழித்துவிடும். பாலிக் கோவில்களில் பாலி மொழியின் எழுத்துகளைக் காணலாம்

bali_language.jpg

*****

உபுட் கிராமத்தில் இருந்து பேருந்து கிளம்பும் போது மாலை 4:30 ஆகி இருந்தது, அடுத்ததாக கடற்கரை கோவில் மற்றும் அங்கே சூரிய மறைவைப் பார்க்க வேண்டும் என்பது தான் திட்டம் அதன் படி பேருந்து 'டனலாட்' கடற்கரைப் பகுதியை நோக்கி பயணித்தது, பயணம் இரண்டு மணி நேரம் இருக்கும் என்றார்கள், பேருந்து பயணத்தினூடாக பார்வையிட எழில் நிறைந்த வெளிகள் இருந்தும் அன்றைய அலைச்சல் மற்றும் சோர்வு தூக்கம் வரவழைத்தது, இடையில் ஒரு இடத்தில் நிறுத்தி எங்களுடன் வந்தவர்கள் 'துரியன்' பழம் வாங்கித் தின்றனர் ,IMG_4636.JPGதுரியன் பழம் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம், அடர்ந்த வாடை அதைக் கெட்ட வாடை என்று சொல்ல முடியாது ஆனால் ஒரு சில வாசனை திரவியங்களைப் பூசிக் கொண்டால் அருகில் உள்ளவர் முகம் சுளிப்பார்கள் அது போன்றே பழவாசனைகள் அனைத்தையும் சேர்தால் போல் மணம் நாசியை முடக்கும், துரியன் பழச் சுவை ? பலாப் பழத்தை அரைத்து கூழாக்கி சுவைப்பது போன்று கொஞ்சம் தித்திப்பாகத்தான் இருந்தது, நன்கு உணவு சாப்பிட்டுவிட்டு இதைச் சாப்பிடக் கூடாது, அப்படிச் சாப்பிட்டுவிட்டும் ஏப்பம் விட்டால் ஏப்பக் காற்று பக்கத்தில் உள்ளவரை மயங்கி விழும்படி தாக்கும் வல்லமை பெற்றது :)

ஒரு மணி நேரத்தூக்கம் களையவும் டனலாட் பகுதி நெருங்கவும், சூரியன் மறைய 10 நிமிடங்களே இருந்தன. நாங்கள் சென்ற கோவில் பாலியின் மிக முதன்மையான 8 கோவில்களில் ஒன்று, பல அரச வம்சங்கள் பாலியில் இன்னும் வசிக்கின்றன, அவர்களுக்கு சொந்தமானது என்ற அளவில் கோவில்கள் பொதுமக்களால் வழிபடப்படுகிறது, டனலாட் என்றால் கடற் பகுதியாம் அந்தக் கோவிலுக்குள் செல்லும் பகுதி கடல் மட்டத்திற்கு 20 அடி உயரத்தில் உள்ளது, அங்கு இரு கோவில்கள் உள்ளன, ஒன்று 20 அடி உயர கரையில் இருந்து இயற்கையாக அமைந்த பாறைப் பாலத்தின் மீது பாதை போடப்பட்டு கடலுக்குள் இருக்கும் செங்குத்தான பாறைமேல் அமைக்கப்பட்ட கோவில், கொஞ்சம் இடது அல்லது வலது பக்கம் தள்ளி நின்று பார்க்க, டைனசர் கடல் நீரை கழுத்து நீட்டிக் குடிப்பது போன்ற தோற்றம், அடுத்த 500 மீட்டர் தொலைவில் முக்கியமான டனலாட் கோவில் கடலின் கரைப் பகுதியில் சற்று கடலினுள் உள்ளது, கடல் தண்ணீர் பெருகாத நாட்களில் கடற்கரையில் இருப்பது போன்றும் கடல் தண்ணீர் பெருகிய நாட்களில் அந்தக் கோவில் சிறிய கப்பல் மிதப்பது போன்றும் தோன்று(மா)ம். அன்று கடல் நீர் பெருக்கு இல்லை.

நாங்கள் சென்ற அன்று நான் முன்பு குறிப்பிட்டிருந்த களுங்கன் பெருநாளின் மறுநாள் என்பதால் அன்று(ம்) பாலி இந்துக்கள் இந்தக் கோவில்களுக்கும் குடும்பம் குடும்பமாக வந்து சடங்குகள் செய்து கொண்டிருந்தனர், வசதிபடைத்தவர்கள் சிற்றுந்திலும், வசதி குறைந்தவர்கள் சிறிய லாரி போன்ற உந்திகளிலும் வந்தனர். டைனசர் போன்ற தோற்றம் உள்ள அந்தக் கோவிலை அடுத்து கடற்கரையின் உயரப் பகுதியில் இருந்து தீர்தம் விழும் கடற்கரைப் பகுதி ஒன்று உள்ளது அங்கு பாலி இந்துத் தலைவர் (அவர்கள் மொழியில் ப்ராமணா) வருபவர்களுக்கு ஆசிக் கொடுத்து நெற்றியில் அரிசிகளை பதித்துவிட்டார், எங்கள் அலுவலகத்து புத்தமதச் சீனர்கள் அங்கு சென்று ஆசி பெற்று வந்தனர்.

IMG_4701.JPG

 

தொலைவில் இருந்து பார்க்க டைனசர் கழுத்து நீட்டியது போல் இருக்கும் இந்த கோவில் டனலாட் கோவில் அருகே அமைந்துள்ள மற்றொரு சிறிய கோவில் இதன் பெயர் Pura Batu Balong

 

IMG_4702.JPG

அதன் நுழைவாயில்

 

IMG_4703.JPG

 

அங்கு செல்லும் சிறிய பாதை

 

IMG_4712.JPG

 

அதனுள் சென்று வழிபடுபவர்கள் (கடல் மட்டத்தில் இருந்து 20 அடி உயரம் கைப்பிடிச் சுவர் கிடையாது)

 

IMG_4705.JPG

 

சூரியன் மறைய ஐந்தே நிமிடங்கள் மீதம் இருந்தன, நான் கடலுக்குள் இருக்கும் அடுத்த கோவில் பகுதிக்குச் சென்றேன். மேற்கு வானம் செந்நிரமாக காட்சி தந்தது, கொஞ்சம் மேகக் கூட்டங்கள் இருந்ததால் சூரியன் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் மெல்ல மெல்ல சூரியன் கீழிறங்க அந்த மேற்குக்கடலில் பொன்னிறம் மின்னிக் கொண்டு இருந்தது, சாரை சாரையாக பாலி இந்து மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வழிபாட்டுக் கூடைகளுடன் டனலாட் கடல்கோவிலுக்குச் சென்று கொண்டு இருந்தனர்.

 

IMG_4714.JPG

 

கோவிலுக்குச் செல்லும் வழி கடற்கரை என்றாலும் அவை பாறை மேடுகள் குண்டு குழிகள் நிரம்பியவாகவே இருந்தது, அவை எரிமலை குழம்புகளால் ஏற்பட்ட பாறைகள் என்பது பார்க்கும் போதே தெரிகிறது, எரிமலைகள் உருகி பரவி இந்தத் தீவை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். கோவிலுக்கு அருகே சென்றேன், கடற்கரைச் சுற்றிலும் சுற்றுலாவாசிகள் கோவிலையும் சூரிய மறைவையும் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர்.

 

IMG_4723.JPG

 

IMG_4716.JPG

 

 

IMG_4729.JPG

P1010293.JPGIMG_4736.JPG

டனலாட் கோவில் சிதைந்த கப்பல் போன்ற வடிவப் பாறைக் குன்றையும் அவற்றினுள் சிறிய குகைகளும் இருக்கும் குன்று, அதன் மீது வழிபாட்டுத் தளம் இருக்கிறது, நம்மால் கோவில் அருகில் மட்டும் தான் செல்லமுடியும், குன்றின் மீது ஏறுவதற்கோ, மேலே இருக்கும் கோவிலில் நுழைவதற்கோ அனுமதி இல்லை, பாலியைச் சேர்ந்த இந்துக்கள் தவிர்த்து வேறு எவருக்கும் அங்கு இருக்கும் கோவில்களில் நுழைந்து வழிபட அனுமதி கிடையாது. நானும் இந்து மதம் தான் உள்ளே வழிபடப் போகிறேன் என்றால் விடமாட்டார்கள். சீக்கிய மதத்தில் சீக்கியர்கள் மட்டும் இருப்பது போல், பாலி இந்துக்கள் என்றால் அதில் பாலித் தீவை சேர்ந்தவர்கள் மட்டும் தான் என்று புரிந்தது. பாலி இந்துயிசம் என்பது இந்திய இந்து மதச் சாயலில் பவுத்த சமண மதங்களையும் சேர்ந்த கலவையே, ஆனால் நாங்கள் புத்தரை வணங்கமாட்டோம் என்றே சுற்றுலா வழிகாட்டி என்னிடம் தெரிவித்து இருந்தார். என்னால் 3 நாள் சுற்றுலாவை பத்து இடுகைகளாக எழுத முடிகிறது என்றால், ஜெயமோகன் போன்றவர்கள் பாலிக்குச் சென்று வந்தால் 'இந்து ஞானமரபு பற்றி' 10 தொகுப்பாக, தொகுப்புக்கு 2000 பக்க அளவில் நாவல்கள் எழுத முடியும்,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.