Jump to content

ஜல்லிக்கட்டு.



ஜல்லிக்கட்டை பற்றி விவாதங்கள் நடந்து வருகிறது. நாட்டு காளைகளின் தேவை பற்றி பல்வேறு தகவல்களை கொண்ட கட்டுரைகள்  இணையம் முமுக்க இருக்கிறது. எனக்கிருக்கும் கேள்வி ஏன் புல் ஃபைட் என்று மெக்ஸிகோவில் தினந்தோறும் காளைகள் கொல்லப்படுவதை கண்டு கொள்ளாத பீட்டா இங்கே மட்டும் வாரிக்கட்டிக்கொண்டு குரல் கொடுக்கிறது ? அதன் பின்னனி என்ன? வணிக நோக்கத்தை தவிர வேறு எதுவும் தெரியவில்லை..

பட்டுப்பூச்சிகளை கொன்று பட்டுப்புடைவையை கட்டிக்கொண்டு, பன்றியை கொன்று அதன் கொழுப்பினால் செய்த முகப்பூச்சை பூசிக்கொண்டு, எம் பசுக்களை கொன்று அதன் தோலை லெதர் செருப்பாய் போட்டுக்கொண்டு நீங்கள் தொலைக்காட்சியில் பேசும் ”காளைகளை காப்போம்”  எங்களுக்கு மிக அருவருப்பாய் இருக்கிறது.லட்ச கணக்கில் கொல்வதற்காகவே படைக்கப்படும் பிராய்லர் கோழிகளை நோக்கி உங்கள் குரல் எழவில்லை? மாமிசத்திற்காகவே வளர்க்கப்படும் ஆடுகளை கொல்வதற்கு உங்கள் இரத்தம் ஏன் துடிக்கவில்லை? அதெல்லாம் இருக்கட்டும் நீங்கள் சாப்பிடும் மஸ்ரூமிற்கு உயிரில்லை என்று சொன்னது யார் ? எங்கள் தேசத்தில், எங்கள் நிலத்தில் நாங்கள் வளர்க்கும் எம் காளைகளுடன் விளையாட , எங்களை கீழ்மையாய் நினைக்கும் ஒரு தேசத்தின் நிறுவனத்துடன்  நாங்கள் சமரசம் பேச வேண்டும் என்று நினைப்பதை போன்ற அடக்குமுறை வேறில்லை.

வேண்டுமானால் லட்ச கணக்கில் கொன்று தின்னும் உம் தேசத்து மக்களுக்கு சொல்லுங்கள் உங்கள் விலங்குகளின் மீதான கனிவையும்வும் பாசத்தையும். ” வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்”  என்றது எம் மண். காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடினான் என் பாட்டன். “ காக்கையையும், குறுவியையும், பயிரையும்” உயிராய் பார்த்த எங்களுக்கு நீங்கள் சொல்லி தெரியவேண்டியதில்லை எம் காளைகளை எப்படி காக்க வேண்டும் என்று...

 

 

From the category:

விம்பகம்

· 8165 images
  • 8165 images

Photo Information

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.