All Activity

This stream auto-updates   

 1. Past hour
 2. புறோக்கர் பொன்னம்பலம் | EP 10
 3. ஓரிரு முறை 350 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டியுள்ளோம், ஆனால் 63/4 என்ற நிலையிலிருந்து அல்ல: விராட் கோலி படம்.| ராய்ட்டர்ஸ். கேதர் ஜாதவ் நேற்று 76 பந்துகளில் நொறுக்கிய 120 ரன்களில் ஆச்சரியகரமான சில ஷாட்கள் இருந்தது, அந்த ஷாட்களை தன்னால் நம்ப முடியவில்லை என்று கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து ஆட்டம் முடிந்து விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “இந்த இன்னிங்ச் தனித்துவமானது. எந்த ஒருநிலையிலிருந்தும் போட்டியை வெல்ல முடியும் என்ற தன்னம்பிக்கை இன்னொரு வீரரிடம் (ஜாதவ்) இருப்பது எனக்குமே உத்வேகமூட்டுவதாக உள்ளது. யாராவது ஒருவருக்கு வெற்றிக்கான பாராட்டை அளிக்க வேண்டுமென்றால் என்னைப் பொறுத்தவரை அது கேதர் ஜாதவ்வுக்குத்தான். இங்கிலாந்து அணியில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் வீசினர், அனைவரையுமே அவர் சிறப்பாக எதிர்கொண்டார். அதே போல் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இடமளிக்காமல் தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்தார். ஜாதவ் ஆடிய சில ஷாட்களை என்னால் நம்ப முடியவில்லை. அவர் தனது இயல்பூக்கமான ஷாட்கள் என்று அதை வர்ணித்தார், ஆனால் அதுதான் அவரது திறமை என்றே நான் கூறுவேன். 150% ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களைக் குவிப்பது, அதுவும் அனைத்துமே தெளிவான ஷாட்கள் என்பது தனித்துவமானது. அவர் காட்டடி சுழற்றல் செய்யவில்லை. அவர் ஒரு அசாதாரண வீரர், அதனால்தான் 6-ம் நிலையில் அவரை அணி நம்பிக் களமிறக்குகிறது. நான் கூட்டணி சேர்ந்து ஆடிய ஆட்டங்களில் இது சிறப்பான கூட்டணி ஆட்டமாகும். எதிர்த்தாக்குதல் ஆட்டம் என்பது சரிவரக் கைகூடியது. விழுந்த எந்த விக்கெட்டும் நல்ல பந்துகளில் விழவில்லை என்பதே என் கருத்து. நம் பிழையால் விழுந்த விக்கெட்டுகளாகும் அது. 150-160 ரன்களை இணைந்து கடந்து விட்டால் நமக்கு வாய்ப்பு இருக்கிறது என்ற உள்ளுணர்வு எங்கள் இருவருக்குமே இருந்தது. 2-வது இன்னிங்சில் பேட் செய்ய பிட்ச் இன்னும் நன்றாக இருந்தது. பந்தும் சீறிக் கொண்டு பவுண்டரிக்குச் செல்லும் வகையிலான அவுட் பீல்ட் அமைந்தது. அவ்வப்போது சிக்ஸர்கள் அடித்து எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முடிந்தது. 350 ரன்கள் இலக்கை இதற்கு முன்பும் ஓரிருமுறை விரட்டியுள்ளோம் ஆனால் 63/4 என்ற நிலையிலிருந்து அல்ல. இது உண்மையில் சிறப்பு வாய்ந்தது, இந்த இன்னிங்ஸ், வெற்றி, கூட்டணி ஆகியவை நீண்ட காலம் என் எண்ணத்தில் நீடிக்கும். நான் கேதர் ஜாதவ்வுடன் களத்தில் இருந்தது மகிழ்ச்சியளிக்கிறது, காரணம் நான் அவரை உற்சாகப்படுத்திக் கொண்டேதான் இருந்தேன். நியூஸிலாந்துக்கு எதிராக அவர் வெற்றி பெற வைக்க முடியாமல் போனதற்காக வருந்திக் கொண்டே இருந்தார். நான் அவரிடம் கூறியதெல்லாம், களத்தில்தான் கற்க முடியும் என்பதையே. வெளியே உட்கார்ந்து கொண்டு அப்படிச் செய்திருக்கலாம், இப்படி ஆடியிருக்கலாம் என்பதி அர்த்தமில்லை என்று அவருக்கு அறிவுறுத்தினேன். நம்மை நாம் இன்னும் கொஞ்சம் அதிகப்படியான நிலைக்குத் தள்ளிக் கொள்ள வேண்டும் அப்படி செய்தால் மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட இன்னிங்ஸை எப்படி ஆடுவது என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று கூறினேன். அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அப்போதுதான் அவரிடம் எதிர்மறை எண்ணங்கள் துளிர்விடும் வாய்ப்பு உள்ளது, எனவே அப்போதுதான் ஜாதவ்விடம் நான் இவ்வாறு கூறினேன். ஒருவர் இத்தகைய நெருக்கடி சூழலை எதிர்கொண்டு ஆட அதிகப் போட்டிகளை ஆடியிருக்க வேண்டிய அவசியமில்லை. களத்தில் கடினமான சூழலில் நம் மூளையை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம். நாம் அனைவருமே பந்துகளை அடிப்பதில் வல்லவர்கள், சிக்சர்கல், பவுண்டரிகள் நமக்குப் பிரச்சினையல்ல. ஆனால் ‘நாம் இதனை எப்படி செய்யப்போகிறோம், எனக்கு இது தெரியவில்லையோ என்று ஐயம் கொள்வதை விட பந்தை கவனித்து தங்களிடம் உள்ள உத்தியைக் கொண்டு எந்த ஒரு சூழ்நிலையிலிருந்தும் போட்டியை வெல்ல முடியும். அதிகமான போட்டிகள் ஆடினால்தான் ஆட்டத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்ற விதியெல்லாம் ஒன்றுமில்லை. 10 ஒருநாள் போட்டிகளிலேயே ஒருவருக்கு தேவையான புரிதல் ஏற்படும், அதற்கு 60, 70, 80 போட்டிகள் தேவைப்படாது. நானும் கேதரும் பேட் செய்த போது 5-6 வீரர்கள் பெவிலியனில் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை என்பதை அறிந்து கொண்டோம். ஓய்வறையில் இத்தகைய நம்பிக்கை வளர்ந்துள்ளது. அதாவது சிறப்பாக ஒன்றை சாதிப்போம் என்று நம்பிக்கை அனைவருக்கும் இருந்தது. கிறிஸ் வோக்ஸை அடித்த வாழ்விலே ஒருமுறை ஷாட் பற்றி... நான் இந்த ஷாட்டை ஆடவில்லை அது எப்படி அடிக்கப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை என்று பல தருணங்களில் நான் உணர்ந்ததை இப்போது மீண்டும் நினைக்கிறேன், அதாவது குறிக்கோள் வெற்றி என்று வரும் போது ஆட்டத்தை பற்றி அதிகம் யோசித்துக் கொண்டிருக்கக் கூடாது என்றுதான் நான் அனைவரிடமும் பேசி வருகிறேன். அதாவது ஆட்டத்தில் நாம் எங்கு இருக்கிறோம் நம் சொந்த ஸ்கோர் எவ்வளவு போன்ற எண்ணங்கள் தேவையில்லை. எப்போதும் அணி... அணி.. என்று மனனம் செய்து கொண்டிருந்தால் நாம் நம்ப முடியாத ஷாட்களே நமக்குக் கைகூடும். உத்வேகத்திலும், குறிக்கோளை எட்டுவதில் தீவிர கவனமும் இருந்தால் அத்தகைய ஷாட்கள் கைகூடும். பவுலிங்கில் 35 ஓவர்கள் வரை நன்றாக வீசினோம், கடைசி 15 ஓவர்களில் இங்குமங்குமாக வீசினோம், இதைப் பேசி விரைவில் தீர்வு காண்போம்” என்றார் கோலி. http://tamil.thehindu.com/sports/ஓரிரு-முறை-350-ரன்கள்-இலக்கை-வெற்றிகரமாக-விரட்டியுள்ளோம்-ஆனால்-634-என்ற-நிலையிலிருந்து-அல்ல-விராட்-கோலி/article9482867.ece?homepage=true
 4. முதல் இன்னிங்ஸில் 595 ரன் குவித்தும் தோல்வியில் சாதனை படைத்த வங்கதேசம்! #NZvsBAN உள்ளூரில் மட்டுமே புலிகள் என அறியப்பட்டு வந்த வங்கதேசப் புலிகள் அயல் மண்ணிலும் பட்டையைக் கிளப்பத் தொடங்கியிருக்கின்றனர். வங்கதேசம் நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டன் பேசின் ரிசர்வ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தார். வேகப்பந்துக்கும், பேட்டிங் செய்வதற்கும் சொர்க்கபுரியாக திகழக்கூடியவை நியூசிலாந்து மைதானங்கள். நியூஸி மண்ணில் அந்த அணியை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்துவது என்பது லேசுப்பட்ட காரியம் கிடையாது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் டிரெண்ட் போல்ட், டிம் சவுத்தீ, நீல் வாக்னர், மிச்சேல் சான்டனர், காலின் டி கிராண்ட்ஹாம் என பிரதான பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து அணியில் இடம் பெற்றனர். மெஹந்தி ஹாசன், டஸ்கின் அகமது, கம்ருல் இஸ்லாம் ரபி, சுபாசிஸ் ராய் ஆகிய பந்துவீச்சாளர்கள் வங்கதேசம் பக்கம் இருந்தனர். இதில் டஸ்கின் அகமதுவைத் தவிர வேறு யாருக்கும் ஒரளவு கூட சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவம் கிடையாது. இதனால் வங்கதேச அணியை எளிதில் வீழ்த்திவிடமுடியும் என நம்பிக்கையோடு களமிறங்கியது நியூசிலாந்து. முதல் நாள் கடுமையான புயல் வீசியதால், கிரிக்கெட் ஆட்டம் அடிக்கடி தடைபட்டது. அன்றைய தினம் வெறும் 40 ஓவர்கள் விளையாட முடிந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 154/3 என்ற நிலையில் இருந்தது வங்கதேசம். மறுநாள் ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் இருவரும் இணைந்து ஒரு அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த இருவரையும் பிரிப்பதற்குள் மண்டை காய்ந்தது நியூசிலாந்து. இருவரும் சீராக பவுண்டரி விளாசிக்கொண்டே இருந்தனர். ஐந்து ரன்னுடன் அன்றைய தினம் ஆட்டத்தை தொடங்கிய ஷகிப் அல் ஹசன் அபாரமாக விளையாடி இரட்டைச் சதம் அடித்தார். முஷ்பிகுர் ரஹீமும், ஷகிப்பும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 359 ரன்கள் சேர்த்து வரலாற்றுச் சாதனை படைத்தனர். முஷ்பிகுர் ரஹீம் 260 பந்துகளைச் சந்தித்து, 23 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 159 ரன்களைக் குவித்த நிலையில் அவுட் ஆனார். அதற்கடுத்த சில ஓவர்களிலேயே ஷகிப்பும் நடையை கட்டினார். 276 பந்துகளில் 31 பவுண்டரிகள் உதவியுடன் 217 ரன்களை எடுத்து அவுட் ஆனார் ஷகிப். டாப் ரேட்டிங் அணியுடனான டெஸ்ட் போட்டியில், அதுவும் அந்த அணியின் சொந்த மண்ணில் வங்கதேச வீரர் ஒருவர் இரட்டைச் சதம் எடுப்பது வரலாற்றுச் சாதனையாகும். இரண்டாவது நாள் ஆட்ட நேர இறுதியில் 543/7 என இருந்தது வங்கதேசம். இரண்டாவது நாள் மட்டும் 389 ரன்களை அதிரடியாகச் சேர்ந்திருந்தது வங்கதேசம். மூன்றாவது நாள் வங்கதேச வீரர் சபீர் ரஹ்மான் அரை சதம் எடுத்த பிறகு 595/8 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது வங்கதேசம். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து, மெதுவாக இன்னிங்ஸை ஆரம்பித்து. தொடக்க வீரர் டாம் லாதம் நங்கூரமிட்டு ஒரு பக்கம் ரன்களை குவித்து கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் நிக்கோலஸ், வில்லியம்சன், சான்ட்னர் ஆகியோர் தங்கள் சார்பாக அரைசதம் விளாசினார். லாதம் 177 ரன்கள் எடுக்க, நியூசி 539 ரன்களுக்கு இன்னிங்ஸை இழந்தது. இதையடுத்து 56 ரன்கள் முன்னிலையுடன் ஆட்டத்தை ஆரம்பித்தது வங்கதேசம். இன்னும் இருநூறு ரன்களை சேர்த்திருந்தால் நியூசிலாந்துக்கு எளிதாக நெருக்கடியை தந்திருக்க முடியும் என்ற நிலையில் வங்கதேசம் சொதப்ப ஆரம்பித்தது. நீல் வாக்னர், சான்ட்னர் சுழற்பந்து வீச்சில் வங்கதேசம் சுருண்டது. முதல் இன்னிங்சில் இரட்டைச் சதம் அடித்த ஷகிப், இந்த இன்னிங்சில் டக் அவுட் ஆனார். முஷ்பிகுர் ரஹீம் காயமடைந்து ரிட்டையர்டு ஆனார். சபீர் ரஹ்மான் மட்டுமே அரைசதம் கடந்தார். இதையடுத்து 160 ரன்களுக்கு இன்னிங்ஸை இழந்தது வங்கதேசம். 217 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பேட்டிங் பிடித்த நியூசிலாந்து, டெஸ்ட் போட்டியை ஒருநாள் போட்டி போல ஆடியது. தொடக்க வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தாலும் வில்லியம்சனும், ராஸ் டெய்லரும் இணைந்து அணியை வெற்றி பெற வைத்தார்கள். குறிப்பாக கேன் வில்லியம்சன் 90 பந்துகளில் 15 பவுண்டரியோடு 104 எடுத்து நாட் அவுட்டாக இருந்து வெற்றிக்கு வித்திட்டார். வெற்றியை நெருங்கி வந்து கோட்டை விடுவது வங்கதேசத்துக்கு வாடிக்கையாக இருக்கிறது. வெற்றி மிதப்பில் தான் இந்த போட்டியையும் இழந்திருக்கிறது வங்கதேசம். கடைசி நாளில் மேஜிக் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதே சமயம் முதல் இன்னிங்சில் 595 ரன் குவித்த பிறகு ஒரு அணி தோல்வி அடைவது வரலாற்றில் இது தான் முதல் முறை. 122 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 586 ரன்கள் எடுத்தும், இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவியது. ஆஸ்திரேலியாவிடம் இருந்த அந்த மோசமான சாதனையை 122 ஆண்டுகளுக்கு பிறகு தனது வசமாக்கியிருக்கிறது வங்கதேசம். http://www.vikatan.com/news/sports/77901-bangladesh-lost-the-match-after-scored-595-runs-in-the-first-innings.art
 5. இவர்களுக்கு பள்ளி செல்வதே பிரச்னைதான்... காட்டில் நடந்து, ஆற்றை கடந்து பள்ளி செல்லும் மாணவர்கள் உங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயாராகிறது. 5ம் வகுப்பு படிக்கும் மாணவன் அவன். பள்ளிக்கு சைக்கிளில் செல்ல விரும்புகிறான். என்ன செய்வீர்கள்? அதட்டுவீர்கள். "வேண்டாம். பயங்கர டிராபிக். ஏதாவது வண்டி மோதுனா என்ன பண்றது. ஸ்கூல் வேன்ல போ. இல்லைனா அப்பா வேணும்னா கொண்டு வந்து விடவா" என செல்லம் கொஞ்சுவோம் அப்படித்தானே. அப்படி வேனிலோ, இரு சக்கர வாகனத்திலேயோ மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதே நமக்கு பெரிய டென்ஷன். 'லேட் ஆயிடுச்சு. அப்புறம் கேட்டுக்கு வெளியேதான் நிக்கணும்'னு மாணவர்களுக்கும் டென்ஷன். குழந்தைகள் பள்ளி செல்வது என்பது நமக்கும், குழந்தைகளுக்கும் மிகப்பெரிய டென்ஷன் தான். ஸ்மார்ட் ஸ்கூல், ஏசி பஸ், நடந்து செல்லும் தூரத்தில் பள்ளி என நமக்கு எல்லாம் கிடைக்கிறது. பெரிய தொலைவு இல்லாமல் அருகில் உள்ள பள்ளிக்கு சென்று படிக்க முடிகிறது. ஆனால் இப்படி போக்குவரத்து உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாத ஊர்களில் மாணவர்களின் நிலை என்ன? அப்படி ஒரு கிராமம் தான் கோவை காரமடை அருகே வனப்பகுதில் அமைந்துள்ள பூச்சமரத்தூர் கிராமம். இங்கு 25 குடும்பங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் வசிக்கிறார்கள். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில்தான் இந்த கிராமம் அமைந்துள்ளது. ஆனால் வெளி உலகுக்கான தொடர்பை அற்று தனித்தீவாகத்தான் காட்சியளிக்கிறது இந்த கிராமம். சுற்றிலும் காடு, நகரத்துடனான தொடர்பை துண்டிக்கும் ஆறு இவைதான் இந்த ஊரின் அடையாளங்கள். ஒரு தீப்பெட்டி வாங்க வேண்டும் என்றால் கூட இந்த ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டும். பாலங்கள் இல்லை. ஆற்றில் பெரு வெள்ளம் வந்தால் பல கிலோ மீட்டர் சுற்றித்தான் நகரத்தை அடைய முடியும். இந்த கிராமத்தில் இருந்து சில மாணவர்கள் தினமும் பள்ளி சென்று வருகிறார்கள். வீட்டில் இருந்து சிறுதூரம் நடந்து, அங்கிருந்து பரிசல் பயணம், பின்னர் மீண்டும் சிறு நடை, அங்கிருந்து பேருந்து என விரிகிறது இவர்களின் பள்ளியை நோக்கிய பயணம். இத்தனை கஷ்டமா என்கிறீர்களா? இன்னும் இருக்கிறது பரிசலை இயக்குபவர்களே இவர்கள்தான். நாம் அந்த கிராமத்துக்குச் சென்றிருந்தபோது சூரியன் அஸ்தமிக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. நகரத்தின் பேரிரைச்சலில் இருந்து அமைதியான அந்த கிராமத்தை அடைந்திருந்தோம். பில்லூர் அணை பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பஸ் வந்து நின்றது. பஸ்சில் இருந்து ஒரு மாணவி உட்பட 4 அரசு பள்ளி மாணவர்கள் இறங்கினர். கற்கள் நிறைந்த சாலையில் பயணிக்கத்துவங்கினார்கள். பள்ளியில் அன்று நடந்ததை பேசி சிரித்தபடியே மேடு-பள்ளம் நிறைந்த அந்த சாலையில் மிக கவனமாக பயணித்தனர். ஒரு பெரிய ஆலமரத்தை கடந்து பள்ளத்தில் இறங்க... அங்கு ஆறு. ஆற்றை பார்த்ததும் நமக்கு இருந்த அச்சமும், ஆச்சரியமும் அவர்களுக்கு சுத்தமாக இல்லை. மாணவர்களுள் ஒருவன் ஒரு மரத்தின் பின்னால் இருந்த ஃபைபர் பரிசல், துடுப்பை எடுத்து வந்தார். மிக சாதாரணமாக படகை ஆற்றின் கரையில் வைத்து மற்ற மாணவர்கள் ஏறச்சொல்லி, அந்த மாணவனும் பரிசலில் ஏறினார். இடது வலதாக துடுப்பை இயக்க, படகு மறுகரையை நோக்கிச் சென்றது. "நாங்க 6 பேர் சார். இப்படித்தான் தினமும் பரிசல்ல போவோம். அதெல்லாம் பயமில்லை. ரொம்ப வெள்ளம் வந்தா ஸ்கூலுக்கு போக மாட்டோம்" என நாம் கேட்ட அத்தனை கேள்விக்கு ஒற்றை ஒற்றை வார்த்தையாகவே பதில் சொன்னார்கள் மாணவர்கள். அங்கிருந்த மக்களிடம் பேசினோம். "தினமும் இந்த பசங்க ஸ்கூலுக்கு இப்படித்தான் போறாங்க. வீட்டுல இருந்து ஆற்றங்கரைக்குப்போய் பரிசல்ல துடுப்பு போட்டு அந்த கரைக்கு போகணும். அங்கிருந்து கவர்மென்ட் பஸ்சை புடிச்சு மறுகரைக்கு போய் அங்கிருந்து பஸ்ல ஸ்கூலுக்கு போவாங்க. சாய்ந்திரமும் இது தான்" என்றார்கள்.மறுபுறம் இதே ஆற்றில் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்கிறார்கள் சுற்றுலா பயணிகள். அச்சத்தோடு, 'லைஃப் ஜாக்கெட்' உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களோடு பயணிக்கிறார்கள். மாணவர்களிடம் ஆறு மீதான அச்சமும் இல்லை. அவர்களிடம் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லை. குழந்தைகளை எப்படியெல்லாம் நடந்து கொள்வது, சிறப்பான குழந்தை வளர்ப்பு ஆகியவை குறித்து நாம் தேடி தேடி அறிந்து குழந்தைகளை மிக கவனமாய் பாதுகாத்துக்கொண்டிருக்கிற இதே காலத்தில், பள்ளி செல்ல இத்தனை சிரமங்களை சந்திப்பது என்பது மனதை பிசையத்தான் செய்கிறது. நாம் கல்வி கற்பது என்பதே மிகப்பெரிய பிரச்னையாக பார்க்க பழகி இருக்கிறோம். ஆனால் பள்ளிக்கு செல்வது என்பதே இவ்வளவு பிரச்னையா என்பது அதிர்ச்சியளிக்கவே செய்கிறது. ஆனால் இதை சாதாரண பயணமாகவே கருதுகிறார்கள் அவர்கள். நமக்குதான் இது பெரிய சாதனையாக மலைக்க வைக்கிறது. ஆனால் நாம் நினைப்பதுபோல் இது சாதனை அல்ல... சாபம். அடிப்படை உரிமையான கல்வியை கற்க இந்த குழந்தைகளை இத்தனை சிரமங்களை எதிர்கொள்ள வைப்பது என்பது ஏற்கத்தக்கதல்ல. vikatan
 6. பிரெட்டிலும் செய்யலாம் உப்புமா! #BachelorRecipe சீக்கிரமா சமைக்கணும். சுலபமாவும் இருக்கணும். இதோ ஆண்களின் கிச்சனுக்குக் கைகொடுக்கும் 'பிரெட் உப்புமா' பேச்சுலர் ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: பிரெட் துண்டுகள் - 8 பெரிய வெங்காயம் - 1 பச்சைமிளகாய் - 1 இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன் தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன் சோயா சாஸ் - கால் டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு செய்முறை: பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிடவும்.பிறகு சதைப்பகுதியை சிறிய துண்டுகளாக அல்லது பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் தீயை மிதமாக்கி, தக்காளி சாஸ், சோயா சாஸ், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். தண்ணீர் நன்கு கொதிக்கும் போது நறுக்கி வைத்துள்ள பிரட் துண்டுகளைச் சேர்த்து நன்கு கிளறவும். பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை தூவி சூடாகப் பரிமாறவும். http://www.vikatan.com/news/health/77902-how-to-prepare-bread-uppuma-bachelorrecipe.art
 7. பஸ்ஸில் இருந்து இறங்கிய மனைவி இதுவரை வீடு திரும்பவில்லை ; கை, கால் கட்டப்பட்ட நிலையில் கணவன் மீட்பு வவுனியா ஓமந்தையில் இன்று காலை கை, கால் கட்டப்பட்ட நிலையில் நபரொருவர் ஓமந்தை காட்டுப்பகுதியில் ஓமந்தைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை மீட்டு வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலை திடீர் விபத்துப்பிரிவில் அனுமதித்துள்ளனர். சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கடந்த 30 ஆம் திகதி கணவன் மனைவி இருவரும் வவுனியா செட்டிக்குளத்தில் இறந்த உறவினர் ஒருவரின் இறுதிக்கிரியைக்கு சென்று கொண்டிருக்கும் போது வவுனியா தாண்டிகுளத்தில் மனைவி (நிஷாந்தன் யாழினி வயது 34) அவசரமாக கனகராயன்குளம் செல்லவேண்டியுள்ளதாக தெரிவித்து பேருந்திலிருந்து இறங்கியுள்ளார். எனினும் கணவன் உறவினரின் இறுதிக்கிரியைக்கு சென்றுள்ளார். மனைவி மாலையாகியும் வீட்டுக்கு வராததையடுத்து கணவரால் கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2 ஆம் திகதி கடமைக்காக குறித்த நபர் (தனபாலசிங்கம் நிஷாந்தன் வயது - 33 ) மன்னார் நோக்கி பேருந்தில் பயணித்துள்ளார். எனினும் இவர் மன்னாருக்கு செல்லவில்லை இதனையடுத்து குறித்த நபரின் தந்தையினால் மகனை காணவில்லையொன்று கனகராயன்குளம் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இன்றைய தினம் காலை ஓமந்தை பஸ்தரிப்பிடத்திற்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் கை,கால் கட்டப்பட்ட நிலையில் ஓமந்தை பொலிசாரால் தனபாலசிங்கம் நிஷாந்தன் மீட்கப்பட்டு வவுனியா விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதேவேளை, வவுனியா தாண்டிகுளத்தில் அவசரமாக கனகராயன்குளம் செல்லவேண்டியுள்ளதாக தெரிவித்து பேருந்திலிருந்து இறங்கிய மனைவியான நிஷாந்தன் யாழினி ( வயது 34) என்பவர் தொடர்பில் எவ்வித தகவலும் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில் மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/15461
 8. வாட்டி வதைக்கும் வறட்சி : குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பில் முறைப்பாடுகளை 117 இலக்கத்துக்கு தெரிவியுங்கள்.! நாட்டில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பான முறைப்பாடுகளை 117 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார். தற்போது நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக 9 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 598 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்களில் அதிகமானவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது. http://www.virakesari.lk/article/15464
 9. "அரசியலில் இருந்து விலக போகிறேன்" : நிமால் சிறிபாலடி சில்வா தான் விரைவில் அரசியலில் இருந்து விடைபெறவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். பதுளை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். http://www.virakesari.lk/article/15463
 10. Today
 11. இந்த ஜெர்மன் வாகனம்கள் ஒருகாலத்தில் பாவனையில் முதலிடம். என்று கணணி புரோகிராம் உள்வான்கினமோ அன்று தொட்டு சனி 2005 முன்பு வாங்கிய பென்ஸ் போன்றவை நீண்ட உழைப்பு அதன்பின் வந்தவை ஏழரையை சேர்த்து கட்டி வைச்சு அனுப்பினம் முன்பு செர்விஸ் செய்யாமல் ஆறு ஆறுமாதம் ஓடலாம் இப்ப ஒருமாதம் போனாலே பொய்யாக பிழை செய்திகளை காட்ட தொடங்கும் நாங்களும் அடிச்சு பிடிச்சு கொண்டு போனால் உதிரி பாக பகல் கொள்ளையில் மாட்டுபட்டு சின்னாபின்னமாகி விடுவம் .
 12. இஞ்சாருமப்பா நானொருக்கால் இந்தியாவுக்கு போட்டு வாறன்......என்ன சாறி ...எத்தினை வேணுமெண்டு சொல்லுங்கோ வாங்கிக்கொண்டு வாறன்.மற்றது இட்டலிச்சட்டியும் வாங்க வேணுமெண்டல்லே சொன்னனியள்.......ஒரு பிரச்சனையுமில்லை......பக்கெண்டு எப்படியெண்டாலும் நமக்கு சந்ததிதான் முக்கியம்.
 13. மெக்சிகோவில் தயாரிக்கப்படும் பி.எம்.டபிள்யூ. கார்களுக்கு 35 சதவீத எல்லை வரி: டிரம்ப் எச்சரிக்கை ஜெர்மனி நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் பல்வேறு வடிவங்களில் விலையுயர்ந்த சொகுசு கார்களை தயாரித்து வருகிறது. தற்போது BMW 3 Series ரக கார்களை தயாரிப்பதில் துரித கவனம் செலுத்திவரும் இந்நிறுவனத்துக்கு சொந்தமான கார் தயாரிப்பு தொழிற்சாலையின் கிளை சீனாவில் இயங்கி வருகிறது. இதேவேளை அமெரிக்காவை அண்மித்துள்ள மெக்சிகோவில் புதிய தொழிற்சாலை திறப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அங்குள்ள சான் லூயிஸ் போட்டோசி நகரில் உருவாகிவரும் இந்த தொழிற்சாலையில் எதிர்வரும் 2019-ம் ஆண்டுக்குள் கார் தயாரிப்பு ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், ஜெர்மனி நாட்டின் பிரபல நாளிதழுக்கு சமீபத்தில் செவ்வியளித்துள்ள அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், மெக்சிகோவில் தயாரித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பி.எம்.டபிள்யூ. கார்களுக்கு 35 சதவீத எல்லை வரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். அவரது இந்த செவ்வி ஜெர்மனின் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி வருகிறது. http://globaltamilnews.net/archives/13874
 14. டெஸ்ட் போட்டிகளுக்கு குட்பை சொல்கிறாரா அதிரடி வீரர் டிவில்லியர்ஸ்? அதிரடிக்கு இன்னொரு பெயர் டிவில்லியர்ஸ். இவருக்கு 31 பந்தில் சதமடிக்கவும் தெரியும், 200 பந்துகளைச் சந்தித்து 31 ரன் எடுக்கவும் தெரியும். தான் சார்ந்த அணிக்கு, ஆட்டத்தின் போக்கைப் பொறுத்து எவ்வளவு ரன்கள் தேவையோ அதற்கேற்ப கியரை மாற்றி பேட்டிங் செய்யும் வல்லமை இவருக்கு உண்டு. மூன்று ஃபார்மெட்டுகளிலும் மிகச்சிறப்பாக விளையாடக்கூடிய தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் டிவில்லியர்ஸ். தென் ஆப்பிரிக்க அணியைச் சேர்ந்த டிவில்லியர்ஸ் கடந்த ஜூன் மாதத்துக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை. இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி தோற்றதால் ஹாஷிம் ஆம்லா கேப்டன் பதவியில் இருந்து விலக, கடந்த ஆண்டு டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றார் டிவில்லியர்ஸ். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு வேறு எந்த டெஸ்ட் தொடரையும் காயம் காரணமாக டிவில்லியர்ஸால் விளையாட முடியவில்லை. இதையடுத்து டிவில்லியர்ஸின் நீண்ட கால நண்பரும், தென் ஆப்பிரிக்க அணியின் சீனியர் பேட்ஸ்மேன்களில் ஒருவருமான ஃபாப் டு பிளசிஸ் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றார். ஃபாப் டு பிளசிஸ் தலைமையில் நியூசிலாந்து தொடரை ஜெயித்தது தென் ஆப்பிரிக்கா. அதன் பின்னர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டது. பேட்டிங் சூப்பர் ஸ்டார் டிவில்லியர்ஸ், பவுலிங் சூப்பர் ஸ்டார் ஸ்டெயின் ஆகிய இரண்டு பேரும் காயம் காரணமாக அவதிப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் இல்லாமலேயே அருமையாக விளையாடி டெஸ்ட் தொடரை ஜெயித்தது தென் ஆப்பிரிக்கா. இதையடுத்து டு பிளசிஸ் கேப்டன்சியின் மீது எல்லோரது பார்வையும் திரும்பியது. இந்நிலையில் டிவில்லியர்ஸ் தாமே மனமுவந்து டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், டு பிளசிஸ் தான் கேப்டன் பொறுப்புக்குச் சரியான நபர் என்றும் முன்மொழிந்தார். டிவில்லியர்ஸின் கோரிக்கையை ஏற்ற தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் ஃபாப் டு பிளசிஸை நிரந்தர டெஸ்ட் கேப்டனாக அறிவித்தது. இந்நிலையில், தற்போது உள்ளூரில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மூன்றிலுமே அபாரமாக ஆடி, ஜெயித்திருக்கிறது தென் ஆப்பிரிக்க அணி. இதையடுத்து ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது தென் ஆப்பிரிக்க அணி. கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக அதிகம் கிரிக்கெட் ஆடிக்கொண்டே இருப்பதால் சோர்வு ஏற்படுவதாகவும், இதனால் எதாவது ஒரு ஃபார்மெட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாமா எனவும் தனக்கு நெருங்கிய நண்பர்களுடன் ஆலோசனை செய்திருக்கிறார் டிவில்லியர்ஸ், இது எப்படியோ மீடியாவில் வெளியாக, ‘ஆம், ஆலோசனை செய்தது உண்மைதான், ஆனால் தற்போது ஓய்வு பெறவில்லை’ என மறுத்தார் டிவில்லியர்ஸ். இந்நிலையில் இலங்கை டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் டுபிளசிஸ் பேசுகையில், "ஒருதின தொடரில் டிவில்லியர்ஸ் தலைமையில் விளையாடுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம். அவர் எங்களுக்காக டெஸ்ட் போட்டிகளிலும் ஆட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். ஒரு கேப்டனாக உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனை அணியில் வைத்திருக்க வேண்டும் என்பது எனது ஆசை" எனச் சொல்லியிருக்கிறார். தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் ரசல் டொமிங்கோ பேசுகையில் " டிவில்லையர்ஸுடன் உட்கார்ந்து பேச வேண்டும், அவரது எண்ணம் என்ன.. அவரது எதிர்கால திட்டம் என்ன என்பன குறித்து விரிவாக பேச வேண்டும். ஓய்வு பெறுவதா, இல்லை தொடர்ந்து விளையாடுவதா என்பதை டிவில்லியர்ஸ் தான் முடிவெடுக்க வேண்டும்" என கருத்து தெரிவித்திருக்கிறார். டிவில்லியர்ஸ் டெஸ்ட் போட்டிகளைக் காட்டிலும் லிமிட்டட் ஓவர்ஸ் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போதைக்கு தென் ஆப்பிரிக்க அணியை சாம்பியன்ஸ் டிராஃபியில் வழிநடத்தவும், 2019 உலகக்கோப்பையில் வழிநடத்தி கோப்பையை ஜெயித்து தருவதும் டிவில்லியஸின் திட்டம். டிவில்லியர்ஸுக்கு இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள், தென் ஆப்பிரிக்காவுக்கு பிறகு அவர் சொந்த ஊரைப் போல கருதுவது பெங்களூரைத் தான். மேலும் ஐ.பி.எல் போட்டிகளில் ஆடுவதன் மூலம் பணப்பயன்களும் ஏராளம் என்பதால் ஐ.பி.எல் போட்டிகளை எக்காரணம் கொண்டும் புறக்கணிக்க மாட்டார் எனத் தெரிகிறது. ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் லீக் போட்டிகளிலும் விளையாடுவதற்கு டிவில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்திருக்கிறார். உலகம் முழுவதும் பல்வேறு டி20 லீக் போட்டிகளில் ஆடினால், வருடத்தின் பாதி நாட்கள் தென் ஆப்பிரிக்க அணியுடன் நேரம் செலவிட முடியாது, இதனால் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த முடியாது. மேலும் தற்போது தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணிக்குள் டிவில்லியர்ஸ் வந்தால், நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் டுமினி வழிவிட வேண்டியதிருக்கும் எனபதால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவது குறித்த விஷயங்கள் டிவில்லியர்ஸ் மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றன, அவர் விரைவில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம் என தென் ஆப்பிரிக்க பத்திரிகைகள் கருத்து தெரிவித்திருக்கின்றன. http://www.vikatan.com/news/sports/77892-is-ab-devilliers-going-to-quit-test-cricket.art
 15. 500 சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷம் : 12 வருடங்களாக தேடப்பட்டு வந்த நபர் சிக்கினார் : இந்தியாவில் சம்பவம் (காணொளி இணைப்பு) இந்திய தலைநகரான டில்லியில் சுமார் 12 ஆண்டுகளாக 500 க்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்த நபர் நீண்ட நாட்களாக மேற்கொண்டு வந்த தீவிர தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர் டில்லி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுனில் ரஸ்தோகி(38), என்பவர் இதுவரை சுமார் 500 க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முற்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு இவர் செய்த குற்றத்திற்காக ருத்ராபூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் 6 மாத சிறை தண்டனை பெற்றுள்ளார். டில்லி, மேற்கு உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வீட்டிலிருந்து பள்ளிக்கு நடந்துச் செல்லும் சிறுமிகளை குறிவைத்து பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். கிழக்கு டில்லியில் உள்ள ஒரு தையல் கடை ஒன்றில் வேலை செய்து வந்த குறித்த நபர், வெவ்வேறு பகுதிகளுக்கு வேலை தேடி செல்லும் பேரில் இவ்வாறான குற்றச் செயல்களை புரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த நபர் மீது டில்லியில் 3 வழக்கு, ருத்ராபூரில் 2 வழக்கு, பிலாஸ்பூரில் ஒரு வழக்கு என 6 வழகுக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக டில்லி போலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 2004ஆம் ஆண்டு, மயூர் விஹார் பகுதியில் வசித்து வந்த சுனில் பக்கத்துவீட்டு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதையடுத்து, அவரையும், அவரது குடும்பத்தினரையும் அப்பகுதி மக்கள் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 13ஆம் தேதி பள்ளியிலிருந்து வீடு திரும்பிய 10வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து எவ்வித முறைப்பாடும் தெரிவிக்காத அந்த சிறுமியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, அவரது பெற்றோர்கள் பொலிஸ் நிலையில் முறைப்பாடு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த அங்க அடையாளங்களைக் கொண்டு குறித்த நபரை பொலிஸார் தேடி வந்த நிலையில், கடந்த ஜனவரி 12ஆம் திதி, புது அசோக் நகர் பகுதியிலும் 2 சிறுமிகள் கடத்தப்பட்ட சம்பவத்திலும் குற்றவாளியை தேடும் பணியில் பொலிஸார் தீவிரம் காட்டினர். இந்நிலையில், 9 மற்றும் 10 வயது மதிக்கத்தக்க சிறுமிகள் மாலை நேர வகுப்பு முடிந்து வீடு திரும்பும்போது, புதிய ஆடை தைத்து தருவதாகக் கூறி சிறுமிகளை கட்டுமானப் பணி நடைபெற்று வந்த கட்டிடத்தின் மாடிப்படி அருகே இழுத்துச் சென்று இருவரிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார். இதனால் பதற்றமடைந்த சிறுமிகள் கூச்சலிட்டதையடுத்து அங்கிருந்து குறித்த நபர் தப்பியோடியுள்ளார். இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் கொண்ட்லி கிராமத்தில் பதுங்கியிருந்த ரஸ்தோகியை பொலிஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், கடந்த 2004ஆம் ஆண்டு முதல் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்ட ரஸ்தோகியை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சுனில் ரஸ்தோகியின் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட ஏனைய சிறுமிகளை கண்டறிய டில்லி பொலிஸ் தனிப்படை அமைத்துள்ளது. அதன் மூலம் ரஸ்தோகி மீது மேலும் சில வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று டில்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/15458
 16. நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு பிணை.! ஹம்பாந்தோட்டையில் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 34 பேரில் 10 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று ஹம்பாந்தோட்டை பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, குறித்த 10 பேரை ரூபா 5 இலட்சம் கொண்ட 3 சரீர பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை, ஏனைய 24 பேரை எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை – மிரிஜ்ஜவிலவில் இம்மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்ற, சீன - இலங்கை தொழிற்சாலை வலயம் ஆரம்ப நிகழ்வின்போதே குறித்த ஆர்ப்பாட்ட இடம்பெற்றது. இதன்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில்; நேற்று இரவு 4 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/15459
 17. 85 வயதில் மீன்குழம்பு சமையலில் கலக்கும் கொடிவேரிப் பாட்டி! ஈரோடு மாவட்ட சுற்றுலாத் தலங்களில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையும் ஒன்று. இயற்கை சூழலில் அழகாய் அமைந்துள்ளது கொடிவேரி. இங்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள கடைகளின் மீன் வறுவலை சுவைக்காமல் செல்வதில்லை. எக்கச்சக்கமான கடைகள் இங்கே வந்துவிட்ட போதும் மிகச்சுவையான வறுவலும் மீன் குழம்பும் இங்கே கிடைத்தாலும் இந்த தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் என்னவோ அப்படியேதான் இருக்கிறது. பல தரப்பட்ட கடைகள் இங்கே முளைத்து விட்ட போதும் இங்கே பாட்டிகடை என்பது பிரசித்தம். அப்படியென்ன சிறப்பு அங்கே.. யார் அந்த பாட்டி என்று அறிந்துகொள்ள ஆவலுடன் அந்தக் கடைக்கு சென்றோம். நாம் யாரென்று அறியாத போதும், ‘வாங்கப்பா சாப்பிடுங்க.. சாப்பாடு எடுத்து வை’ என்ற சத்தம் காதினில் விழுந்தது. 85 வயது பாட்டி முதுமையிலும் நம்மை அன்போடு வரவேற்றார். அவரைப் பார்த்ததும் உழைத்து வாழ வயது ஒரு தடையே அல்ல என்பது நமக்குப் புரிந்தது. கால்கள் தள்ளாடும் வயதிலும் வார்த்தை தள்ளாடாமல் அவரின் வாழ்க்கையின் அனுபவங்களை நம்மோடு அழகாக பகிர்ந்துகொண்டார். “என் பேரு பழனியம்மாள். என் கணவர் பேரு காளியண்ணன். இங்கதான் மீன் பிடிக்கிறார். நான் இங்க வந்து 30 வருசத்துக்கு மேல ஆச்சு தம்பி. நான் இங்க மீன் கடை வச்சு இருக்கேன். நான் இங்க வந்தப்போ மொத்தமே ரெண்டு கடைதான் இருந்துச்சு. அப்போ அஞ்சு ரூபாய்க்கு மீன் குழம்பும் சாப்பாடும் செஞ்சி போட்டேன். வயிறு நிறைய நிறைய சாப்பிடலாம். அப்போ விலையெல்லாம் கம்மி.. அதனால அவ்வளோ கம்மியான பணத்துக்கு சாப்பாடு போட்டேன். அந்த விலையில இருந்து இப்போ முப்பது ரூபாய்க்கு விலையை ஏத்தியாச்சு., அதுக்கு முப்பது வருசம் ஆகிடுச்சு” எனச் சிரிக்கிறார் அந்த பாட்டி. அந்த சிரிப்பினில் தெரிந்தது குறைந்த விலையிலும் மற்றவர்களின் பசியை நிரப்பும் மகிழ்ச்சி. ஈரோடு கொடிவேரி அணையை சுற்றியுள்ள மக்களின் அழகியல் வாழ்க்கை... சிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க... “என்னோட பையனும் மீன் பிடிக்கிறதுன்னு போய் அஞ்சாவது மேல படிக்காம போய்ட்டான். இப்போ பேரனைத்தான் இங்கிலீசு மீடியம் படிக்க வைக்கிறோம்” என்றார். இவருக்கு உதவியாய் இருக்கும் இவரது மருமகள், “பாட்டி சும்மாவே இருக்க மாட்டாங்க.. ஏதாவது வேலை பார்த்துகிட்டே இருப்பாங்க. அதற்கு தகுந்த மாதிரி இங்க வர்றவங்களும் பாட்டி கடையை தேடி வர்றாங்க. அவங்க பாட்டி தான் எங்களுக்கு பரிமாறணும்னு சொல்வாங்க. பாட்டி மேல அவங்களுக்கு அவ்ளோ மரியாதை. இங்கே வருபவர்களில் நிறைய பேர் இங்கே உடைமைகளை வைத்துவிட்டு செல்வார்கள். அதில் தங்கம் நகை பணம் எல்லாம் இருக்கும். நான் கேட்பேன், ‘எப்படி இந்த மாதிரி நம்புறீங்க’னு. ‘பாட்டியை எங்களுக்குத் தெரியாதா’ன்னு சொல்வாங்க. அந்த அளவு பாட்டி மேல அவங்களுக்கு நம்பிக்கை. ஒருதடவை திருப்பூர்ல இருக்கிற பனியன் கம்பெனிகாரங்க இங்க வந்து கம்பெனியோட பில்-பணம் எல்லாத்தையும் விட்டுட்டு போயிட்டாங்க. அடுத்த நாள் வந்து தேடுனாங்க நான் பத்திரமா எடுத்து வச்சு இருந்து அவங்ககிட்ட கொடுத்துட்டேன். அதுக்கப்புறம் அவங்க அடிக்கடி இங்க வந்து பாட்டி கையால சாப்பிட்டுதான் போவாங்க. போன வாரம் கூட வந்து 300 ரூபாய் கொடுத்துட்டு போனாங்க. ஒருமுறை தனியார் தொலைக்காட்சியில பாட்டியோட மீன் குழம்பு சமையல் வந்துச்சு. அதுக்கப்புறம் பாட்டி கடைதான் இங்க ஃபேமஸ்” என்றார் அவரது மருமகள். ''இதுல பெருசா வருமானம் வரலையப்பா., 100 ,150 னு தினம் கிடைக்கும் அதுவும் எல்லாத்துக்கும் சரியாய் போகிடும். லீவு நாட்கள்ல 200, 300 னு கிடைக்கும் அவ்ளோதான். வேற எதுவும் எங்களுக்கு தெரியாதுப்பா'', 'பேசாமல் வீட்டில் ஓய்வு எடுக்கலாமே' என்று நாம் கேட்டதுக்கு “இத்தனை ஆண்டுகள் வர்றவங்க, போறவங்க முகத்தை பார்த்துட்டு இருந்து பழக்கமாகிடுச்சு திடீர்னு அவர்களை பார்க்காமல் இருக்க முடியலை. வீட்டில் இருந்து சும்மா சாப்பாடு சாப்பிடவும் முடியலை. அதான் என்னால எவ்ளோ முடியுமோ அவ்ளோ வேலை செய்கிறேன். இனிமேலும் செய்வேன். உழைக்கறதுல என்ன கஷ்டம் தம்பி?” என்று நம்மிடமே கேட்டு அடுத்து வந்தவர்களை கவனிக்க சென்றார். இக்காலத்தில் அதுவும் இந்த முதுமையடைந்த வயதில் உழைத்து உண்ண நினைக்கும் இந்த பாட்டி ஓர் அதிசயம்தான். நமது வாழ்த்துக்களை பாட்டிக்கு சொல்லிவிட்டு, பாட்டி கையால் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். .vikatan
 18. கிட்டு குறித்து அமெரிக்காவின் தகவல்கள்! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான கிட்டு குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தொகுத்து எடுத்து இருந்த தகவல்கள் மிகவும் சுவாரசியமானவை. சொந்தப் பெயர் சதாசிவம் கிருஷ்ணகுமார். பிரபாகரனுக்கு நெருங்கிய உறவினர்களில் ஒருவர் என்று அறியப்படுகின்றார். கரையார் என்கிற சாதியைச் சேர்ந்தவர். சொந்த இடம் வல்வெட்டித்துறை, தமிழில் மாத்திரம் பேசக் கூடியவர். ஆங்கிலத்தில் கொஞ்சம் விளங்கிக் கொள்வார் போல் தெரிகிறது. 10 ஆம் வகுப்பு வரை படித்து இருக்கின்றார். யாழ். பிராந்திய தளபதி. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனுக்கு ஏதேனும் நேருமாக இருந்தால் அந்த இயக்கத்தை தொடர்ந்து கொண்டு நடத்தக் கூடியவராக உள்ளார். புலிகள் இயக்கத்தின் இரண்டாவது பெரும் தலைவர். பிரபாகரனின் லெப்டினண்ட். பிரபாகரனின் கட்டளைகளை அமுல் படுத்துபவர். சிறுத்தையின் தோலிலான துப்பாக்கி உறை வைத்திருக்கின்றார். இவரது வளர்ப்புப் பிராணியாக குரங்கு ஒன்று உள்ளது. இதன் பெயர் 'பில்'. நாய்கள் கூட்டம் ஒன்று இவரைச் சூழ நின்றதாக இவரை பேட்டி எடுக்க சென்று இருந்த வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார். கிட்டு மிகவும் மோசமான சாரதி. இவர் மோட்டார் தாக்குதல் ஒன்றில் 1986 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் படுகாயம் அடைந்தார் என்று இலங்கை இராணுவ தரப்பு கூறுகின்றது, மோட்டார் தாக்குதல் ஒன்றில் ஒரு காலை இழந்தார் என்று தமிழர் தரப்புச் செய்திகள் கூறுகின்றன. இவர் காரை பயன்படுத்தாமல் தற்போது ஸ்கூட்டி ஒன்றில் சுற்றித் திரிகின்றார் என்று யாழ்ப்பாண செய்திகள் கூறுகின்றன. இதற்கு இரு காரணங்கள் இருக்கலாம். ஒரு வேளை இவர் இயக்கத்தில் பதவி நிலை இறக்கப்பட்டு இருக்கலாம். அல்லது இலங்கை அரசு யாழ்ப்பாணம் மீது விதித்திருந்த எரிபொருள் தடையால் ஏற்பட்ட தாக்கமாகவும் இருக்கலாம். ஒரு வேளை கிட்டு அவரின் காரை சேதப்படுத்தி இருந்திருக்க கூடும். இயற்கைக்கு மாறுபட்ட ஒருவர் என்று நாம் மேல் குறிப்பிட்டு இருந்த ஊடகவியலாளர் கிட்டு குறித்து கூறி உள்ளார். "மேக்கோ ஸ்வாக்கர்" ஒன்று இவரிடம் உள்ளது. சிறுத்தையின் தோலிலான துப்பாக்கி உறைக்குள் ஏ.கே 47 வைத்திருக்கின்றார். மக்னம் 357 சுழல் துப்பாக்கியும் இவரது ஆயுதமாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு முறை காரில் யாழ்ப்பாணத்தில் சுற்றுப் பயணம் சென்று கொண்டிருந்தபோது கிட்டு காரை திடீரென நிறுத்தி விட்டு பிஸ்டலை வெளியில் எடுத்து காகங்களை நோக்கி சுட்டார் என்றும் மேற்சொன்ன ஊடகவியலாளர் கூறி உள்ளார். கைது செய்யப்படுகின்ற இடத்து, தற்கொலை செய்கின்றமைக்காக நெஞ்சில் சயனைட் குப்பி அணிந்து உள்ளார் கிட்டு. அரச படைகளுடன் சேர்ந்து செயல்படுகின்றார் என்று சந்தேகிக்கப்படுகின்ற தமிழ் இளைஞர்கள் விடயத்தில் மிகவும் கொடூரமாக நடந்து கொள்கின்றார். யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் அதிபர் எட்வின் ஆனந்தராஜாவை சுட்டுக் கொன்றார். இராணுவத்துடன் சேர்ந்து உதைபந்து விளையாடினார் என்பதே ஆனந்தராஜா மீது காணப்பட்ட குற்றம். கிட்டு இயல்பாகவே மிகவும் கோபக்காரர் என்றும் வன்முறையாளர் என்றும் இராணுவ தரப்பு கூறுகின்றது. கிட்டுவின் வீட்டில் அண்மையில் இயக்க உறுப்பினர்களுக்கு கூட்டம் ஒன்று நடந்தது என்றும் இயக்க உறுப்பினர்கள் வீட்டுக்கு வெளியில் சைக்கிள்களை நிறுத்தி வைத்திருந்தனர். வானத்தில் அந்நேரம் இலங்கை இராணுவத்தின் உலங்கு வானூர்திகள் திரிந்தன. எச்சரிக்கை அடைந்த கிட்டு வெளியில் நிறுத்தி இருந்த சைக்கிள்களை அப்புறப்படுத்த சொல்லி வந்திருந்த உறுப்பினர்களுக்கு கட்டளை இட்டார் என்றும் ஆனால் கட்டளையை நிறைவேற்றுகின்றமையில் உறுப்பினர்கள் தாமதித்தனர். இதனால் பொறுமை இழந்த கிட்டு கோடாரி ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியில் வந்து சைக்கிள்களை கொத்தினார் என்றும் இச்செய்திகள் கூறுகின்றன. இவரது அரசியல் கொள்கை என்ன? என்பது சரியாக தெரியவில்லை. இராணுவ தமிழ் தேசியவாதமாக இருக்கக் கூடும். புலிகள் புரட்சிகர சோசலிஷ்டுகள் என்று ஒரு முறை கூறி இருக்கின்றார். கிட்டுவுக்கு தமிழ் வைத்தியர் ஒருவர் மீது காதல். அவ்வைத்தியரை திருமணம் செய்ய இருக்கின்றார். போரை விட காதலில் அதிக ஈடுபாடு வந்து விட்டது போலும்? பிரபாகரனுக்கும் கிட்டுவுக்கும் இடையில் முறுகல் என கொழும்பு ஊடகங்கள் கடந்த மாதங்களில் சொல்லிக் கொண்டு இருந்தன. கிட்டு மாயமாக மறைந்து விட்டார் என்றும் ஒரு வேளை பிரபாகரனால் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் எழுதி இருந்தன. கிட்டு- பிரபா முறுகல் இலங்கை இராணுவத்தால் கட்டிச் சமைக்கப்பட்ட கதையாக இருக்கக் கூடும். புலிகள் சின்னாபின்னமாகிக் கொண்டு இருக்கின்றார்கள் என்கிற பிரசாரத்துக்காக இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட உத்தியாக இருக்கக் கூடும். கொழும்பில் உள்ள அமெரிக்க 1987 ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இத்தகவல்கள் கிடைக்கப் பெற்று உள்ளன. http://eelamtimes.com/
 19. மணமகள் தேவை கண்டிசன் நம்பர் ஒண்ணு சேலைகட்டத்தெரிந்த வெள்ளைக்கரப்பெண்ணாக இருக்க வேண்டும்.
 20. நானும் சும்மாதான் இருக்கன் என்னாலும் உதவி செய்ய முடியும்
 21. 10% இற்குள் நான் இருப்பதால் உதவி செய்ய தேவையில்லை. ஏதோ வெளிநாட்டில் இருப்பவனெல்லாம் போராட்டத்தை சாட்டி இருப்பது மாதிரியும் ஊரில் இருப்பவனெல்லாம் போராட்டத்திற்காக இருந்ததாகவும் நினைப்பு. உங்களுக்கும் வசதி வாய்ப்பு ஏற்பட்டிருந்தால் நீங்களும் பெட்டி படுக்கைகளோடு வெளிநாட்டிற்கு வந்திருப்பீர்கள். வளருங்க மக்கா வளருங்க
 22. 2009 க்கு பின்னர் பல மாவீரர் நாள்கள், பெரிய நினைவஞ்சலிகள் இறந்தவர்களுக்காக வைக்கப்பட்ட போதிலும் இதுவரை குறித்த முன்னாள்போராளிகளுக்கு குறிப்பாக பாதி உடற் திறனை இழந்தவர்களுக்கு காத்திரமான உதவிகள் வழங்கப்படவில்லை,வடமாகாண சபையால் முள்ளந்தண்டு பாதிக்கப்படோருக்கு என்று தொடங்கப்பட்ட இல்லம் என்ன ஆனதென்றே தெரியவில்லை.ஒத்துக்கப்பட்ட அரச நிதிகளை வடமாகாணசபை ஊழல்வாதிகள் முற்றாக விழுங்கியதை தவிர எந்தவித உருப்படியான காரியமும் நடைபெறவில்லை.வெளிநாட்டிலிலுள்ள புலம்பெயர்ந்தோர் தங்கள் விடுமுறை வருகையில், குடும்ப விழாக்கள் நடத்தும்போதும் தெளிக்கும் சில பேனை கொப்பி சைக்கிள் கோழிக்கூடு கோழிக்குஞ்சுகள் தவிர இதுவரை எவரும் குறித்த நலிவுக்குழுவின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த விரும்பியதாக தெரியவில்லை.துயிலுமில்லங்களை துப்பரவு செய்வதும் வெளிநாடுகளில் அதன் மாதிரிகளை அமைத்து அங்கு 30,000 மக்களுடன் லண்டன் அதிர்ந்து என்று பெருமைப்படுவோர், இனவிடுதலைக்கு போராடி உடலில் போராட்ட வடுக்களை சுமந்து, வாழும் எச்சங்களாக இன்றும் அல்லலுறுவோரை ஏன் பாதுகாக்க தயங்குகிறீர்கள் என்று புரியவில்லை.தென்னிந்திய சினிமாவில் முதலிடவும் நடிகர்சங்க கட்டடத்துக்கு பெருநிதிக்கொடை வழங்கவும் வலுவுள்ள, ஐக்கிய ராச்சிய பணக்காரர்களில் ஒருவராக பெயரடுத்த லைக்கா முதலாளி போன்றோர் தாங்கள் வருமானவரிகளிலிருந்து விலக்குப்பெற தாயின்பெயரில் சங்கம் வைத்து வாகனங்களில் வலம்வந்ததைத்தவிர என்ன செய்தார்கள் என்று இன்றுவரை புரியவேயில்லை.தமிழின் பெயரில் சங்கம் நடத்தும் பிரித்தானியாவில் இருக்கும் பாதிரியாரின் சங்கமும் முன்னாள் விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு வேலைத்திட்டங்களை செய்துமுடித்த சங்கங்களும் தம்முள் அதிகாரப்போட்டியிடுவதை தவிர என்ன பங்களிப்புச்செய்கின்றன என்பதும் தெரியவில்லை.விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு நிதிதிரட்டல் மையமாக தொழிப்பட்டு இன்றும் இயங்குகின்ற TCCஎன்ன பங்களிப்பு செய்கிறார்கள் என்று விளங்கவில்லை.நல்லாட்சியில் நாங்கள் தெரிவுசெய்த TNA தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர் கஞ்சா அறிமுகத்துக்கு விற்பனைக்கும் ஏகபோக தொழிலதிபராக மாறியதும் பிரதமர் ஜனாதிபதி போன்றோரே பெயர் சொல்லி சுட்டிகாட்டுமளவு அவரே எங்கள் இனத்தை வேரறுப்பதும் சகிக்கமுடியவில்லை.வெளிநாடு சென்ற 90 வீதமானோர் போராட்டத்தை அல்லது புலிகளில் அங்கம்வகித்தோம் அல்லது புலிகளால் உயிர் அச்சுறுத்தல் என்றே அடைக்கலம் பெற்றது பெறுவது ஒரு பொதுப்படை.ஆனால் அவர்களுக்கு பொருளாதார நல்வாழ்வளித்த குறித்த கூட்டத்துக்கு சிறிதளவாயினும் உதவிபுரியாமை மிகவும் வருந்தத்தக்கது,உண்மையை கூறின் உங்களில் எத்தனைபேர் உயர்கல்வித்தகமையினால் வெளிநாடு சென்றீர்கள் உங்களை அண்ணா அக்கா கணவன் மனைவி அங்கு அழைத்திருப்பினும் உங்களை அழைத்தோர் எப்படி அங்கு சென்றனர்?உலகத்தில் தமிழன் என்று தொட்டதுக்கெல்லாம் புகழும் நீங்கள் உங்கள் சொந்த இனவிடுதலைக்காக போரிட்டு வருந்தும் குறித்தோரை கைவிடுவது நியாயமா?குடும்பமே எங்கள் இனத்தின் பண்பு, அங்கு பிழைகள் நிகழின் அதனை சுட்டிக்காட்டி எங்களின் பிழைகளை நாம் திருத்துதல் நன்று.இறுதியாக உங்களிடம் ஒன்றை வேண்டிக்கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்,பல அந்நிய நிதி நிறுவனங்கள் எங்கள் மண்ணில் படையெடுத்து சுரண்டிச் செல்கிறார்கள் அதனால் கடந்த இறுதிப்பகுதியில் இரு தற்கொலையும் வவுனியாவில் நடந்தது,வெளிநாட்டிலுள்ள நீங்கள், ஏன் ஆகக்குறைந்தது ஒரு கடன் நிறுவனம் அல்லது ஒரு தவணை முறை சார்ந்த நிறுவகங்களை திட்டடங்களை அமூல்படுத்த விரும்பவில்லை?தனிநபராக செய்யவிரும்பாவிடில் கூட்டு நிறுவனமாக ஆரம்பியுங்கள் அதற்குரிய காப்புறுதிகளை செய்து இங்கு வாருங்கள்,உங்களுக்கு இது வியாபாரமாகவும் எங்களுக்கு அது பொருளாதார ஊக்கியாகவும் இருக்குமே சிந்தியுங்கள்.பயனாளிகளை அல்லது சேவை பெறுவோரை சமூகத்துணையுடன் அதிகாரிகளின் துணையோடு பரீட்ச்சார்த்தமாக தெரிவுசெய்யுங்கள்.இலவசமாக எங்களுக்கு வேண்டாம்,நீண்டகால கடனாக வட்டியில்லாமல் அல்லது குறைந்த வட்டியுடன் பொருத்தமான முயற்சியை நீங்களே தெரிவு செய்து தாருங்கள், நிச்சயம் நாங்கள் முன்னேறி உங்களது கடன்களை நன்றியோடு திருப்பித்தருவோம்.தயவுசெய்து சிங்கள அரசை சாட்டு சொல்லாதீர்கள் நீங்கள் வர்த்தக நிறுவனத்தை அல்லது மனிதநேய உதவிகளை வழங்கும்போது குறித்த சட்டதிட்டங்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்இது UN முகவரகங்கள் மற்றும் ஏனைய தொண்டுநிறுவனங்களுக்கும் பொருந்தும் அவர்களும் இலங்கை சட்டங்களூடு தான் உதவிகளை செய்கிறார்கள்.நீங்கள் உதவிக்கு வரும் அமைப்பாக வந்தால் இப்போது வரிசலுகைகள் 2% வரை குறைப்பட்டுவிட்டது முதலீட்டுச்சபை பல சலுகைகளையும் வழங்குகிறது தயவு செய்து வாருங்கள் உதவுங்கள் உங்களை நாம் காலம்காலமாக மறக்கமாட்டோம்.வெளிப்படையாகவே கூறுகிறேன் நீங்கள் இன்று விடுமுறையில் வந்தால் நந்தவனம் செல்லவேண்டிய தேவையில்லை முன்னர் போல மாதத்துக்கு ஒருமுறை அல்லது வருடத்தில் என்று வெளிநாடுகளில் பங்களிப்பு நிதி வழங்கவேண்டிய நிலை இல்லை.ஒளிவீச்சு மற்றும் ஏனைய படைப்புக்களை நிதி செலுத்தி பெற்றுக்கொள்ளவேண்டிய சந்தர்ப்பங்கள் அறவே இல்லை, ஆயுதத்துக்கு என போராட்ட பங்களிப்பு என்று நிதிகளை வழங்க தேவை ஒன்று இன்றில்லை,இறுதித்தடவை ஒரே ஒரு முறை மனமிரங்கி உங்கள் இரக்ககுணத்தை இந்த வலுவிழந்த சமூகத்தில் காட்டுங்கள் அவர்களும் அவர்களது பிள்ளைகளும் வாழும் இறுதிக்காலம் வரை நன்றியோடிருப்பர், நீங்கள் உதவப்போகும் ஒரே ஒரு தமிழ்த் தலைமுறை இது மட்டுமே.ஒருவரை ஒருவர் எதிரெதிராக கைகாட்டி அவர் செய்யட்டும் என்று தப்பிக்காதீர்கள். இந்த ஒருமுறை காத்திரமான உயர்ந்த உதவிகளை வெளிப்படை கணக்குப்பேணல்கள் நிதிக் கையாளுகை நியமங்களுடன் அமுல்படுத்தி உதவி செய்யுங்கள். உங்களில் பலரும், உங்களது பிள்ளைகள் பலரும் துறைசார் வல்லுனர்களாக இருக்கிறீர்கள்.நான் உங்களின் இனத்தவன், நீங்கள் என் குடும்ப அங்கத்தவர்கள், உங்களோடு சண்டையிடவும், அன்பை பரிமாறவும், பிழையை சுட்டிக்காட்டிடவும் எனது பிழைகளை தேவைகளை உங்களுக்கு சொல்லவும் உரிமையுண்டு என்ற எண்ணத்தில் உங்கள் முன் அவர்களுக்காக உங்கள் முன் 2017ம் ஆண்டு தொடக்கத்தில் வெளிநாட்டில் வாழும் உங்கள் வீடுகளின் முன் நின்று கையேந்திக் கேட்க்கிறேன், தயவுசெய்து மனமிரங்குங்கள்.புலிகளின் முரண்பாட்டு கொள்கையாளரே தயவு செய்து சேறடிக்காதீர்கள், நான் கேட்பது இங்கு நலிவுற்றவருக்கான பிச்சை உங்களோடு கருத்து மோதலை செய்யவில்லை.இதனை பொறுமையோடு வாசிக்கும் அனைவர்க்கும் உங்கள் பெறுமதியான நேரங்களை செலவிட்டமைக்கு மிகுந்த நன்றிகள்.எதிர்பார்ப்போடு,சிவகுருபரன். http://inioru.com/
 23. 2017 தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்புகள் என்ன?
 24. இந்த ஒரு வேலைக்கு என்றாலும் எங்களை தேடினீர்களே ........? ரொம்ப நன்றி அக்கா !
 1. Load more activity