Jump to content

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. அல்..வாயான் ..என்பதை வைத்து ...அல்லாவின் ஆள் என்றொருவர் முதல் ஒரு திரியில் குறிப்பிட்டார்.. இப்ப நீங்கள் புளட் என்கிறியள் .. நான் ஏங்கைசாமி என் தலையை மோதுவன்...😁...சத்தியாமாச் சொல்லுறன்........... தான்.
  3. தகமைகளை வளர்த்து கொண்ட ஒருவர் 37 மணி நேரம் செய்து பெறும் சம்பளத்தை தகுந்த தகுதிகளை அடைய முடியாத ஒருவர் 60 மணி நேர உழைப்பில் அடையவேண்டி இருப்பது இயல்பே. இப்பவும் 60 மணத்தியாலம் வேலை செய்துதான் என் தேவையான வரவை அடைய முடியும் என்றால் நிச்சயம் செய்வேன். நீங்கள் வாரம் 60 மணத்தியாலம் வேலை செய்யும் 60+ வயது ஆட்களை காண்பதில்லையா? செக்கூரிட்டி வேலை செய்யும் அரைவாசி பேர் இப்படித்தானே? அங்கே எல்லாம் ஒரு ஷிப்ட் 12 தான். 48 அல்லது 60 தான் வழமை. ———- Gross ஆ take-home ஆ என அந்த வீடியோவிலும் சொல்லவில்லை என நானும் egg இல் hair புடுங்க விரும்பவில்லை.🤣 Take-home ஆகவே இருப்பினும் gross 3380 எனில் take-home 2022/2023 யில் 2700. 20023/2024 இல் 2750. இப்படி பார்த்தாலும் வீடியோவின் 10 இலட்ச கணக்கு சரிதான்.
  4. Today
  5. "The House of Representatives voted overwhelmingly to legalize same-sex marriage. The bill now goes to Thailand’s Senate. This would make Thailand the first country or region in Southeast Asia to pass such a law and the third in Asia, after Taiwan and Nepal. Mar 27 / 28, 2024 [CBC News, The new york times, The diplomat ::Asia, : AL JAZEERA .. etc ]" "ஒருபால் திருமணம்" / பகுதி 02 [நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம். நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக் களின் தவறுகளை ஆக்கபூர்வமாக அறிவியல் கண்ணோட்டத்துடன் விமர்சியுங்கள், அத்துடன் இதில் காணப்படும் கேள்விகளுக்கான, சந்தேகங்களுக்கான பதில்களை தரவுகளுடன் கூறுங்கள்] ஏன் ஒவ்வொரு சமுதாயமும், மனித குல வரலாற்றில், ஆதியில் இருந்து ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவை ஆதரித்தது அல்லது முதன்மை கொடுத்தார்கள்? ஏன் இந்த தனித்துவமான உறவு "திருமணம்" என்று அழைக்கப்படுகிறது? திருமணம் உண்மையில் தனித்துவமானதே, ஏனென்றால், இது உங்களுடன் தொடர்பில்லாத ஒருவருடன் உறவை உருவாக்கத் தேர்வு செய்வதுடன், அந்த தேர்வு பல பிணைப்புகளையும், உதாரணமாக, காதல் மற்றும் உடல் / பாலியல் கூறுகளையும் கொண்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குறுந்தொகை - 40, மிக ஆழமாக, சுருக்கமாக, அழகாக அந்த தனித்துவமான உறவை எடுத்து கூறுகிறது. என் தாயும் உன் தாயும் யார் யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் எந்த வகையில் உறவினர்? நான் உன்னையும், நீ என்னையும் எந்த வகையில் அறிவோம். அப்படி இருந்தும் நம் அன்பு உள்ளங்கள் ஒன்றோடொன்று கலந்துவிட்டன. செம்மையான நிலத்தில் (மணல் பாங்கோ, களர் பாங்கோ இல்லாத நிலத்தில்) பெய்த மழைநீர் போலக் கலந்து நிலைபெற்றுவிட்டன. (இனி நிலமும் நீரும் பயிரை வளர்க்கும்) "யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்? யானும் நீயும் எவ் வழி அறிதும்? செம் புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே." இப்பாடலில் செம்புலப்பெயல் நீர் போல என்ற உவமை நினைக்கும் போதெல்லாம் நயம் தருகிறது. செம்மண் நிலமும், எட்டாத உயரத்து வானமும் ஒன்றையொன்று நெருங்காத தூரத்தில் உள்ளவை. வானம் மழையைப் பொழிகிறது. நிலம் அதனை ஏற்கிறது. சிறிது நேரத்தில் ஒன்றின் பண்பு இன்னொன்றுடன் இணைந்து விடுகிறது. பிரிக்க முடியாத பிணைப்பு உருவாகிறது. செம்மண்ணின் நிறம், பெய்த மழை நீருக்கு வருகின்றது; நீரின் நெகிழ்ச்சித் தன்மை நிலத்துக்கு வருகிறது. அது நிலத்திற்கு செழிப்பைக் கொடுக்கிறது, அவ்வாறே இந்த தனித்துவ உறவும் மனித குலத்திற்கு செழிப்பு கொடுத்து அதன் தொடர் வளர்ச்சியையும் பாது காத்து ஊக்குவிக்கிறது. அது நடைபெறா விட்டால் இந்த விவாதமே தேவை வராது? இது மனித உறவுகளுக்கு குறிப்பிடத்தக்க நிலைத்தன்மையையும் (stability), தனித்துவமான ஒரு கருத்தையும் (பொருளையும்) தருகிறது, இல்லையெனில் அது முழுமையடையாது. இது ஒருபோதும் தனிநபர்களுக்கோ அல்லது தம்பதிகளுக்கோ மட்டும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். எம் மனித சமுதாயம் தொடரவும் வளரவும் இந்த தனித்துவமான உறவு ஒன்று மட்டுமே செயல்படுகிறது. இதைத்தான் திருமணம் என்கிறார்கள். ஆகவே அந்த இயல்பு இல்லாத எதையும் அதே சொற்களால் அழைக்கலாமா?, நீங்களே முடிவு எடுங்கள்? உங்களுக்கு அன்பும் துணையும் மற்றும் பாலியல் இன்பமும் தரக்கூடிய எந்த நபருடனும் நீங்க ஒன்றாக வாழலாம். அது உங்கள் விருப்பம், ஆனால் அதையும் திருமணம் என்று சொல்லலாமா என்பதே எம் வாதம். திருமணம் என்பது பொதுவாக சில முக்கிய தனித்துவ அடிப்படை இயல்புகளை கொண்டுள்ளது. எனவே அங்கு காணப்பட்ட முதன்மை இயல்பு முற்றாக இல்லாத ஒன்றிற்கும் அதே பெயரை குறிக்க முடியாது. அதனால் தான் அதை "ஒருபால் கூட்டு" (same sex union) என்று கூறலாம் என்கிறோம்? ஆண் - பெண் திருமணம், கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தை, ஒரு தலை முறையில் இருந்து மற்ற தலை முறைக்கு மாற்றுவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தான் மனித இனம் செழிக்கிறது. இதன் காரணமாகவே இந்த திருமணம் என்ற ஆண் - பெண் சங்கமம், முழு சமுதாயத்திற்கு நன்மை பயக்கிறது. உதாரணமாக, தமிழருக்கிடையில், கி மு 700 இல் முதல் தோன்றிய ஆண் - பெண் கூட்டு களவு என் அழைக்கப்பட்டது. இது தனக்கு ஒரு துணையை தேடிக் கொள்ளும் முறையாகும். என்றாலும் இது பல காரணங்களால் இடையூறுகள் அல்லது ஒருவரை ஒருவர் கைவிடுதல் ஏற்பட்டதால், தொல்காப்பியர் கூறியது போல, "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப" (கற்பியல்,4), பலர் அறியத் திருமணம் என்ற சடங்கு (கரணம்) நடத்தும் வழக்கம் சங்க காலத்தில் ஏற்பட்டது. எனவே, மனித குல வரலாறு எங்கும், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, உலகின் ஒவ்வொரு நிலப்பரப்பிலும், திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடை பெரும் ஒரு சமூக நெறியாக இருந்து வந்து உள்ளது. இவை வெறுமனே விதிவிலக்குகள் இல்லை! ஒரு பால் கூட்டை ஆதரிப்பவர்கள், நிகழ் காலத்திலும், அதை தொடர்ந்து வரும் காலத்திலும் சோதிக்கப்படாத ஒரு சமூக நடைமுறையாக, ஈடுசெய்ய முடியாத ஆண் மற்றும் பெண்ணின் மதிப்புகள் முக்கிய காரணியாக அமையாத, பாலின மதிப்புக்கள் அற்ற, ஒரு பால் கூட்டை, குடும்பம் ஒன்றிற்கு உண்மையில் பரிந்து உறைகிறார்கள். இது தான் பிரச்சனையாகிறது. ஏன் என்றால் அந்த குடும்பம் அடுத்த தலை முறைக்கு தானாக போகும் வாய்ப்பை இழந்து விடுகிறது. சில தம்பதியர் பிள்ளைகள் இல்லாமல் இருப்பது, சில தம்பதியர் பிள்ளை வேண்டாம் என்று இருப்பது, சில தம்பதியர் வயது போய் இருப்பது போன்ற சந்தர்ப்பங்களில் அடுத்த தலைமுறை எப்படி வரும் என்று சிலர் வாதாடலாம், ஆனால் இவை எல்லாவற்றிலும் அதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது அல்லது அவர்களுக்கிடையில் அதற்கான நோக்கம் இருக்கிறது என்பதை சிந்திக்க தவறி விடுகிறார்கள். ஒன்றை கட்டாயம் நீங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும், ஒரு பால் கூட்டுக்கு, புது பெயர் தேடாமல், இருக்கும் திருமணம் என்ற பெயருக்குள்ளேயே அதை அடக்க முற்படும் பொழுது, நீங்கள் அதன் கருத்தை அல்லது வரையறை விரிவுபடுத்தப் பட்டு, அதை உள்வாங்க வேண்டி உள்ளது. இதனால் முன்னைய தனித்துவமான கருத்து தொலைக்கப் பட்டு, அவை மேலும் மேலும் விரிவாக்கக் கூடிய நெகிழ்வு தன்மையை பெறுகிறது. எனவே கட்டாயம் வரும் காலத்தில் அது மேலும் விரிவு படுத்தப்படலாம் ?. உதாரணமாக, இரு சகோதரர்களுக்கு அல்லது சகோதரிகளுக்கு இடையில் அல்லது தாய்க்கும் மகளுக்கும் இடையில் ... ஏன் சிலவேளை ஒருவருக்கும் அவரின் செல்லப் பிராணிக்கும் இடையில் .. இப்படி நீட்டப் படலாம் , அப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு ? உலக வரலாற்றை நோக்கும் பொழுது பல ஆட்சியாளர்கள் ஓரின சேர்க்கையாளர்கள் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். என்றாலும் அவர்கள் திருமணம் செய்யும் பொழுது, கட்டாயம், உதாரணமாக ஆட்சியாளர் ஆணாக இருக்கும் தருவாயில், மற்றவர் பெண்ணாகவே இருக்கிறார். எனவே திருமணம் என்பது தன்னிச்சையான கட்டுமானம் அல்ல; அது ஒரு “கெளரவமான அமைப்பு“. இது ஆண் பெண் களின் வேறுபட்ட மற்றும் இணக்கமான இயல்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதனால் தான் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன், தொல்காப்பியர் இயம்பியவாறு சடங்குகளால் வலுப்படுத்தப் பட்டு சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு நன்றாகவே தெரியும், இதயத்திற்கு இரத்தத்தை உந்தி தள்ளும் செயல்பாடு உள்ளது, அப்படியே கண்ணுக்கு பார்க்கும் செயல்பாடு உள்ளது, எனவே கட்டாயம் மனித நிறுவனங்களுக்கு (human institutions) மிகவும் வெளிப்படை யாக ஒரு தேவை இருக்கும். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அப்படி தனித்துவமான ஒன்றும் இல்லை என்று நீங்கள் நம்பினால், திருமணம் கூட தேவை இருக்காது, அப்படி என்றால் அதைப்பற்றி வாதாடுவதை கூட இத்துடன் நிறுத்தி விடலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 03 தொடரும் "same-sex marriages" / Part 02 [You may have different opinions / beliefs from me. Your "comments" / "Answers" for any of my questions with facts and statistics as well as reasons concerning relevant issues are welcome. This will improve our understanding / knowledge further as well as correct our thoughts / actions. Please note that, I am not criticised any particular person / belief, only sharing my thought.] Why is it that every society throughout human history has favoured the relationship between a man and a woman who commit to one another? And why is it that this unique relationship is called “marriage,” and nothing else is? “marriage” is unique because it is about CHOOSING to create a relationship with some one not related to you that is a combination of many things including a romantic and physical / sexual component. Over 2000 years old Tamil Sangam poem ,Kurunthokai – 40, mention that The rain water mixes with red earth and attains its colour and characteristic. It cannot be separated back to rain water again. So have our hearts mingled together. Rain water and red earth aren’t related to each other. But their coming together makes the land fertile. Red earth is dry and waiting for the monsoon. Once the rain water falls on earth they become one and bring prosperity to the land. "My mom and yours, what are they to each other? My dad and yours, how are they related? You and me, how do we know each other? Yet, like rain fall on red earth, our hearts in love merged into one." "யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்? யானும் நீயும் எவ் வழி அறிதும்? செம் புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே." Because natural marriage— a union between a man and a woman— is humanly and historically [existed from primitive times] universal. Always exists to serve the family. It never exists solely for individuals or for couples. It is the physical, mental and spiritual unison of two souls. It brings significant stability and substance to human relationships, which is otherwise incomplete. It plays a crucial role in transferring the culture and civilisation from one generation to the other, so that the human race is prospered. The institution of marriage is beneficial to the society as a whole, because it is the foundation of the family, which in turn is the fundamental building block of the society. For example, the earliest known form of marriage amongst the Tamils appears to have been the "kalavu" [before 700 BC], the coming together of man and woman by mutual consent and sans any ritual like present day civil partnerships or living together. This however does not seem to have lasted long. Tolkappiyanar, the author of the Tolkappiyam tells us that the Aiyar 'the wise men of the community' formulated the marriage rituals as the "kalavu" or "free love" came to be abused ie When Kalaviyal created many sociological problems or rather when it was misused and abused by men, Karanams or sacraments were introduced to discipline the erred men. So, on every land mass, throughout human history, marriage between a man and a woman has been the social norm. There are simply no exceptions! And in each of those societies, the public purpose has centered on the well-being of children. Also in general two adults are necessary to commit to the rearing of those children. These two adults, normally of course the mother and father, Indeed, it appears that human nature requires marriage. same-sex marriage advocates are asking all of us to commit our society and coming generations to an untested social experiment where gender— shown in the irreplaceable value of male and female— is not essential to the family. The fact that some couples do not have children does not invalidate the fundamental basis of this institution. Heterosexual marriages between people who are infertile [sometimes miracles can happen / conceive offspring together, using their own genes?], or do not wish to have children [may change their mind in due course?], or old age are OK, since they are still “aimed” procreation, The binding of the family to the larger community over generations has led marriage to be considered a public good worthy of state recognition and support. This definition clearly sets marriage apart from other bonds in society. Broadening its [marriage] definition to include same-sex marriages would stretch it almost beyond recognition — and new attempts to broaden the definition still further would surely follow. On what principled grounds could the advocates of same-sex marriage oppose the marriage of two consenting brothers or sisters? Marriage is not an arbitrary construct; it is an “Honorable estate” based on the different, complementary nature of men and women — and how they refine, support, encourage and complete one another. Marriage clearly has been an institution based on reproduction. We know this for various reasons but the most striking is in royal records of various dynasties. We suspect that many rulers were gay and yet, when they married, it was to women. It is why marriage is reinforced by rituals and made legally binding. It’s for the children. Why should society care about the life-long love between a gay couple to the degree that we certify and sanctify it as we do a reproductive unit. Well, you may not believe that that heart has the function of pumping blood, or the eye of seeing ?, but surely human institutions quite explicitly have purposes. If we don’t think marriage – for example – has a purpose we should just abolish it. Problem solved. [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] Part 03 will follow
  6. ஈ - விசா பெற்றுக் கொள்வோருக்கு குடிவரவு குடியகழ்வு திணைக்களம் அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இணைய வழியில் ஈ - விசா பெற்றுக் கொள்வோர் www.immigration.gov.lk என்ற முகவரியை மட்டும் பயன்படுத்தி பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோசடிகளை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 17ம் திகதி முதல் புதிய விசா நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. மக்களை ஏமாற்றும் மோசடி போலி இணைய தளங்கள் மூலம் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஈ - விசா பெற்றுக்கொள்வோர் குடிவரவு குடியகழ்வு திணைக்கள இணைய தளத்தின் ஊடாக மட்டும் பிரவேசித்து விண்ணப்பம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு குடியகழ்வு திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/use-only-immigration-depts-webpage-for-e-visa-1714088994
  7. "The House of Representatives voted overwhelmingly to legalize same-sex marriage. The bill now goes to Thailand’s Senate. This would make Thailand the first country or region in Southeast Asia to pass such a law and the third in Asia, after Taiwan and Nepal. Mar 27 / 28, 2024 [CBC News, The new york times, The diplomat ::Asia, : AL JAZEERA .. etc ]" "ஒருபால் திருமணம்" / பகுதி 01 [நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம். நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை ஆக்கபூர்வமாக அறிவியல் கண்ணோட்டத்துடன் விமர்சியுங்கள், அத்துடன் இதில் காணப்படும் கேள்விகளுக்கான, சந்தேகங்களுக்கான பதில்களை தரவுகளுடன் கூறுங்கள்] திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும், ஒரு நிரந்தர மற்றும் பிரத்தியேக அர்ப்பணிப்புகளுடன் ஒன்றிணைவதுடன், இயற்கையாகவே (இயல்பாகவே அமையப்பெற்ற) குழந்தைகளை பெற்று ஒன்றாக வளர்ப்பதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது. அதாவது, ஆண் பெண் பாலியல் நடத்தைக்கு ஒரு அங்கீகாரம் வழங்கி அவர்களை ஒன்றாக குடும்பமாக வாழ வைப்பது திருமணம் என்று பொதுவாக சொல்லப்படுகிறது. அது மட்டும் அல்ல குடும்பங்கள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறை வரை ஒரு கலாச்சாரத்தின் மதிப்பைக் [culture's values] கடத்தும் ஒரு கட்டமைப்பாகவும் செயல்படுகிறது. எனவே, இதற்கு புறம்பாக, எதாவது ஒன்றைத் திருமணம் என்று அழைப்பது திருமணம் ஆகா. திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான உடன்படிக்கை ஆகும். இது அதன் இயல்பாகவே, குழந்தைகளின் இனப்பெருக்கம் அவர்களின் கல்வி, வாழ்க்கைத் துணைகளின் ஒற்றுமை மற்றும் நல்வாழ்வு நோக்கி தம்பதியர்களுக்கு அறிவுறுத்துகிறது அல்லது கட்டளையிடுகிறது. ஆனால் ஒருபால் திருமணத்தை ஆதரிப்பவர்கள் அல்லது அதை ஊக்கிவிப்பவர்கள், இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றையே முன்மொழிகிறார்கள். அதாவது இரு ஆண்களுக்கு இடையில் அல்லது இரு பெண்களுக்கு இடையில் இதை முன்மொழிகிறார்கள். இது சுயமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காணப்படும் உயிரியல், உடலியல் மற்றும் உளவியல் வித்தியாசங்களையும், அதனால் திருமணத்தில் இணைந்து அவர்கள் காணும் வாழ்வின் முழுமையையும் மறுக்கிறது. அது மட்டும் அல்ல, மனித இனத்தின் பெருக்கம் மற்றும் குழந்தைகளை அவர்களின் இயற்கையான இரு பெற்றோர்களுடன் வளர்வதையும் தடுக்கிறது. அதாவது, சிலவேளை அதில் ஒருவருக்கு வேறு யாராவதின் மூலம் ஒரு அல்லது பல குழந்தை இருந்து அவர்களுடன் வாழ நேரிட்டால், ஒரு பால் திருமணம் அந்த குழந்தைகளுக்கு தாய் அல்லது தந்தையின் முழுமையான பங்கை உணர முடியாமல் தடுத்து விடுகிறது. டார்வின் தனது இயற்கைத் தேர்வு என்ற அத்தியாயத்தில், வெற்றிகரமான உயிரினங்கள், இறக்கும் தன் மூத்தவர்களை ஈடு செய்வதற்கு தேவையானதை விட, அதிக சந்ததிகளை ஒவ்வொரு தலைமுறையிலும் உருவாக்குகின்றன என்கிறார். மேலும் பல்வேறு இயக்கங்களின் தாக்கங்களைச் சமாளிக்கவல்ல தனிப்பட்ட உயிர் மற்றும் உயிரினங்கள் செழித்துத் தமது நன்மை பயக்கும் உயிர்ப் பண்புகளைத் தமது அடுத்த தலைமுறைக்குச் செலுத்தி, உயிர்வாழ்வு மற்றும் இனப்பெருக்கத்தை தக்கவைக்கும் என்கிறார். உதாரணமாக ஒரு பால் உறவு, இயற்கையானது என்றால் அது ஏன் இனப்பெருக்கம் செய்யவில்லை ?.ஏனென்றால் அந்த இனம் தொடர்ந்து பிழைத்து வாழ அது மிக மிக முக்கியம். ஒருபால் மக்களுக்கு திருமணத்தை மறுப்பதால், அவர்களை மற்றொரு நபருடன் அன்பான அர்ப்பணிப்புக்கு மறுப்பதாக நீங்க ஒருவேளை நினைக்கலாம்?. உண்மையில் அது தவறு. மக்கள் எல்லா நேரமும் மற்றவர்களை நேசிப்பதுடன் அர்ப்பணிப்பும் செய்கிறார்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் திருமணம் என்று கூறுவதில்லை, ஏனென்றால் அந்த உறவிற்கு என தனிப்பட்ட இயல்புகள் உண்டு. வேண்டும் என்றால், குழப்பம் இல்லாமல் இந்த ஒருபால் உறவுகளுக்கு வேறு ஒரு பெயரை வைக்கலாம் ?. உதாரணமாக ஒருபால் கூட்டு (same sex union) அல்லது அப்படியான வேறு இன்னும் ஒரு சொல். அதன் வரைவிலக்கணமும் அதற்குத் தக்கதாக, ஒரே பால் இனத்தை சேர்ந்த இருவர், அன்பு அல்லது நட்பு, பாலுறவு, பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக, இனப்பெருக்கம் ஆற்றல் அற்ற ஒரு கூட்டு இதுவாகும் என்று வரையறுக்கலாம். ஆனால் திருமணம் என்று இனப்பெருக்கம் ஆற்றல் அற்ற ஒரு உறவுக்கும், இனப்பெருக்கம் ஆற்றல் உள்ள ஒரு உறவுக்கும் ஒரே மாதிரி வைப்பது தான் பிழை என்கிறோம்? ஒரு பால் உறவு அல்லது தற்பால்சேர்க்கை என்பது, ஒருவர் தனது பாலை சேர்ந்த இன்னும் ஒருவருடன் பாலியல் தொடர்பு வைப்பது ஆகும். உதாரணமாக ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் ஆகும். உலக வரலாற்றில், வெவ்வேறு கால கட்டங்களில், ஒரு பால் உறவு பல்வேறு விதமாக அங்கீகரிக்கப்பட்டும் , பொறுத்துக்கொள்ளப்பட்டும், தண்டிக்கப்பட்டும் மற்றும் தடைசெய்யப்பட்டும் வந்துள்ளது. பண்டைய உலகில் ஒரு பால் உறவுகளுக்கான பல ஆதாரங்களை, அதிகமாக பண்டைய கிரீஸ், ரோம், பண்டைய மெசொப்பொத்தேமியா, சீனாவின் சில பகுதி, மற்றும் இந்தியாவின் இதிகாசங்களிலும் புராணங்களிலும் சில ஆலய சிற்பங்களிலும் காண்கிறோம். எனவே ஒரு பால் உறவு ஒன்றும் புதிது அல்ல. என்றாலும் எந்த சந்தர்ப்பத்திலும் முன்னைய காலத்தில் சந்ததிகளை உற்பத்தி செய்ய இயலாமை காரணமாக, இதை ஒரு திருமண பந்தத்தில் ஏற்கப் படவில்லை. கிரேக்க தத்துவ ஞானி பிளாட்டோ தன்னுடைய நூலில் தற்பால் சேர்க்கை உள்ள ஆண்களே வீரம் நிறைந்தவர்களாக இருப்பர் என்று சொல்லுகிறார். கிரேக்க தொன்மவியலில் கிரேக்க கடவுளர்களிடையே தற்பால் சேர்க்கை இருந்தமையும், அது போலவே இந்து புராணமான, கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம் பாகம் 5, 2. அசுர காண்டம், 32. மகா சாத்தாப் படலம், 29 ஆவது பாடலில், திருமாலை பார்த்து, சிவபெருமான், உன்னைக் புணரும் வேட்கை எமக்கும் உண்டு; நீ கொண்ட வேடம் மிக இனிது என்கிறார். அதற்கு பாடல் 33 இல், திருமால், சிவபெருமானை நோக்கி, ஆடவர் ஆடவரோடு கூடும் வழக்கம் இல்லை. ஆதலால் எம்பெருமானே! நீர் அடியேனை புணர்தல் முறையோ? என்று கேட்பதை காண்கிறோம். "அன்பில் ஆடவர் ஆடவ ரோடுசேர்ந் தின்ப மெய்தி யிருந்தனர் இல்லையால் முன்பு கேட்டது மன்று முதல்வநீ வன்பொ டென்னைப் புணர்வது மாட்சியோ" [2 - அசுரகாண்டம் / 32 - மகா சாத்தாப் படலம் or 1463] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 02 தொடரும் "same-sex marriages" / Part 01 [You may have different opinions / beliefs from me. Your "comments" / "Answers" for any of my questions with facts and statistics as well as reasons concerning relevant issues are welcome. This will improve our understanding / knowledge further as well as correct our thoughts / actions. Please note that, I am not criticized any particular person / belief, only sharing my thought.] Marriage is the union of a man and a woman who make a permanent and exclusive commitment to each other of the type that is naturally (inherently) fulfilled by bearing and rearing children together. That is, Calling something marriage does not make it marriage. Marriage has always been a covenant between a man and a woman which is by its nature ordered toward the procreation and education of children and the unity and wellbeing of the spouses. The promoters of same-sex “marriage” propose something entirely different. They propose the union between two men or two women. This denies the self-evident biological, physiological, and psychological differences between men and women which find their complementarity in marriage. It also denies the specific primary purpose of marriage: the perpetuation of the human race and the raising of children. It is in the child’s best interests that he be raised under the influence of his natural father and mother. A child of a same-sex “marriage” will always be deprived of either his natural mother or father. He will always be deprived of either a mother or a father role model. That is Same-sex “marriage” ignores a child’s best interests. Darwin had said under the "Natural selection" after long observation that "Successful species produce more offspring in each generation than are needed to replace the adults who die . . . The species would thus have changed or evolved to favour traits that favour survival and reproduction." If being gay was natural then why cant same sex couples reproduce? Reproduction is the key to any speicies survival. You may argued that denying them marriage is denying them the ability to have a loving commitment with another person. Frankly, that’s just not true. People love others and commit to others all the time—But we just don’t always call it “marriage.” Homosexuality defined as sexual interest in and attraction to members of one’s own sex. The term gay is frequently used as a synonym for homosexual; female homosexuality is often referred to as lesbianism. At different times and in different cultures, homosexual behaviour has been variously approved of, tolerated, punished, and banned. There is history of recorded same-sex unions around the ancient world, mainly in ancient Greece and Rome, ancient Mesopotamia, in some regions of China, .... Also There are examples in ancient Indian epic poetry of same-sex depictions and unions by gods and goddesses as well as Famous erotic images on Khajuraho temple [Chhatarpur District, Indian state of Madhya Pradesh] include women embracing other women and men displaying their genitals to each other. So, Same-sex relationships were not terribly uncommon in older civilizations. However, due to their inability to produce offspring, they could not constitute a marriage the same way that one man and one woman, or one man with many women could. These Same-sex marital practices and rituals were just a civil union & It was a legally recognized arrangement similar to marriage [But not marriage], created primarily as a means to provide recognition in law for same-sex couples & it did not involve a religious ceremony binding the couple. At the same time, many of these relationships might be more clearly understood as mentoring relationships between adult men and young boys rather than an analog of marriage & in none of these same sex unions is the Greek word for "marriage" ever mentioned. Hindu epic has many examples of deities changing gender, manifesting as different genders at different times, in some cases, these are same-sex interactions. Sometimes the gods condemn these interactions but at other times they occur with their blessing. For example, In the Bhagavata Purana, Vishnu takes the form of the enchantress, Mohini, in order to trick the demons into giving up Amrita, the elixir of life. Shiva later becomes attracted to Mohini and spills his semen on the rocks which turn into gold. In the Brahmanda Purana, Shiva's wife Parvati "hangs her head in shame" when she sees her husband's pursuit of Mohini. In some stories Shiva asks Vishnu to take on the Mohini form again so he can see the actual transformation for himself. For example, The Tamil text Kanda Puranam narrates about Shiva's request and Vishnu's agreement to show his illusionary Mohini form, that he assumed for the distribution of amrita. Shiva falls in love with Mohini and proposes a union with her. Mohini-Vishnu declines saying that union of two men was unfruitful as per Kachiyappa Sivachariyar's Kantha Puranam, songs 1463 "அன்பில் ஆடவர் ஆடவ ரோடுசேர்ந் தின்ப மெய்தி யிருந்தனர் இல்லையால் முன்பு கேட்டது மன்று முதல்வநீ வன்பொ டென்னைப் புணர்வது மாட்சியோ" [2 - asura kANdam / 32 - mahA sAththap padalam or 1463] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] Part 02 will follow
  8. இதில் நரியார் ஒரு விளையாட்டு விளையாட நினைத்திருக்காலாம்... UMA திட்டம்....... ஈரான் சனாதிபதியிடம்...UMAR...என்றுதான் ..கூறப்பட்டிருக்கும்...ஒரு எழுத்து மிஸ்யாகிவிட்டது என்றிருப்பர்.. அமெரிக்காவிடம் ... அது ,,,,USA ..தான்... ஒரு எழுத்து மிஸ்சாகிவிடது என்று பீலாவிடத்தான்..நரி திட்டம் போட்டது.. அதுக்கு ஈரான் சனாதிபதி ந்ரிக்கு மேலாலை...உழுதுபோட்டார்.... அமெரிக்காவின் அந்தக் கடுபுத்தான் இது எப்புடி நரியின் திட்டத்தை கண்டு புடிச்சிட்டேன் ......புள ட் ரிலேசன் ..இல்லையா🙃
  9. இப்பவும் உங்களால் 60 மணித்தியாலங்கள் வேலை செய்ய முடியுமா? மேலும் சிறீலங்காவில் Gross ஐ சொல்லும் பழக்கமில்லை…
  10. பத்து இலட்சத்தை 400 ஆல் வகித்த £2500. சரிதானா? இது யூகே புலம்பெயர் தமிழ் சமூகத்தில் நிச்சயம் எடுக்கும் சம்பளம்தான். London living wage மணிக்கு £13.15. கிழமைக்கு 60 மணி வேலை எனில் (5x12 hour shift) = 13x60= £780 ஒரு வருடம்= 780x52= £40560 ஒரு மாசம் = 3380. ——— பின்னே? பெற்றாரை பார்க்காமல் வேறு என்ன கடமை இருக்க முடியும்? ஆனால் அங்கே எம் சொத்தை பாதுகாப்பது முதல் பல கடமைகளையும் நாம் outsource பண்ணி விட்டுத்தான் இருக்கிறோம். ஒருவனோ, ஒருத்தியோ தன் வீட்டில், நகரில் இருந்து செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் இன்னொருவர் தலையில்தானே கட்டி உள்ளார்கள் புலம்பெயர்ந்தோர். அதைத்தான் அந்த வீடியோவில் சொல்கிறார்கள்.
  11. உங்களுக்கு எனது கேள்வி புரியவில்லை என்று நினைக்கின்றேன். எத்தனை பேர் புலம் பெயர் தேசங்களில் பத்து இலட்சம் ரூபா மாத சம்பளம் பெறுகிறார்கள்? வயோதிபர்களை பார்ப்பது தான் கடமையா?
  12. அறுதி பெரும்பான்மையானோர் செய்கிறார்கள். இல்லாவிடில் நாட்டில் கோவில்களும், தேவாலங்களும் வயோதிபர்களால் நிரம்பி வழியும்.
  13. Yesterday
  14. அப்போ அங்கே இருப்பவர்கள் எல்லோரும் தங்கள் கடமைகளை செய்தார்கள் என்று நினைக்கிறீர்களா?
  15. அது எல்லாருக்குமானதல்ல. கொடுக்க வேண்டிய இடத்தில் பலர் இருக்கிறார்கள். அங்கே இருப்பவர்கள் தியாகத்தில் இங்கே வந்து சேர்ந்தோர். அங்கே அக்கா வயதான பெற்றாரை பார்கிறார் என்ற தைரியத்தில் இங்கே மனைவியுடன் டூர் போவபர்கள். எனக்கு தெரியும் ஒரு வயோதிப தம்பதி - பிள்ளைகள் இருவரையும் ஐரோப்பா அனுப்பி விட்டு இன்றும் உடல் உழைப்பில் வாழ்கிறார்கள். பலர் அனுப்பும் பணம் - தாம் அங்கே நின்று செய்ய தவறிய கடமைகளுக்கான விலை. இந்த கொமெண்டை நான் இந்த சூழமைவில்தான் பார்க்கிறேன். 👆🏼👇
  16. “பத்து இலட்சம் ரூபா, பதினைந்து இலட்சம் ரூபா, இருபது இலட்சம் ரூபா சம்பளம் எடுப்பம் “ என்றே வருகிறது…. வெளிநாட்டில் இருபது இலட்சம் ரூபா வருடாந்த சம்பளம் பெற்று என்ன செய்யலாம்? U.K. இல் £ 5000
  17. வெறும் தென்னம் ஈக்குக்களால் கட்டி வைத்துள்ளார்கள் மொக்கு சிங்களவர்+ஹிந்தியர் 🤣. கொசுறு இதில் 50 மாடி பெரிய கட்டிடம் முழுக்க அப்பார்மெண்டாம் என செய்தியில் வாசித்தேன். இதன் அருகில் உள்ள சங்கிரில்லா + கோல்பேஸ் 1 தொகுதி பற்றி எழுதினேன் அல்லவா? அங்கே ஒரு studio flat £350K போகிறது. இது தோராயமாக இலண்டன் புறநகர் (suburb) zone 4/5 இல் ஒரு ஸ்ருடியோவின் விலைக்கு நிகராக வருகிறது. எனது யூனிவர்சல் கிரெடிட் (சோசல்) மிஞ்சும் காசில் ஒன்றை வாங்கி விட யோசிக்கிறேன்🤣🤣🤣.
  18. இந்தியா பக்கம் போயிட வேண்டாம். சந்தனக்கட்டைகள் காணாவிட்டால் உங்களுக்கு பிரச்சனையாக போயிடும்
  19. பத்து இலட்சம் சம்பளம் அதில் பத்தாயிரம்தான் தருவோம் என்றல்லவா வருகிறது வீடியோவில்? அதுவும் மாசத்துக்கா வருடத்துக்கா என்று சொல்லவில்லை. எனது கணக்கில் மாச சம்பளம் என எடுத்தால் £30K வருகிறது? இது யூகேயின் median salary க்கு கிட்டத்தானே? (நான் கணக்கில் வீக் என்பதால் எனக்கே குழப்பமாய் உள்ளது🤣). ஆனால் இங்கே எண்ணிக்கை பொருட்டல்ல. பத்தாயிரம்/பத்து இலட்சம் எனும் ratio தான் பொருள் என நினைக்கிறேன். பிகு இந்த வீடியோவும், அண்மைகாலமாக யாழில் ஊர் புதினம் பகுதியில் வெளிவரும் செய்திகளும், பின்னூட்டகளும், புலத்தமிழருக்கும், புலம்பெயர் தமிழரில் உரக்க கத்தும் சிறுபான்மைக்கும் உள்ள இடைவெளி பெரிதாகி வருவதையே காட்டுகிறது என நான் நினைக்கிறேன். இது நல்ல விசயம் அல்ல. ஆனால் புலம்பெயர் தமிழரின் உரக்க கத்தும் குழுவின் ஊர் யதார்த்தபுரிவின்மையே இந்த இடைவெளிக்கு மிக பெரிய காரணி. இதை கண்டு வந்து சொல்பவர்கள் மீதே காண்டாவதில் ஒரு பயனுமில்லை.
  20. மன்சூர் அலிகான் 1994 காலப்பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவு . (அப்பொழுது நான் இந்தியாவில் இருந்தேன். ) 1999 இல் Dr கிருஷ்ணசாமியின் புதிய தமிழகத்தில் சேர்ந்து சட்டசபை தேர்தலில் பெரியகுளத்தில் கிட்டதட்ட ஒரு இலட்சம் வாக்குகளை பெற்று 3 ஆம் இடத்தை பிடித்தார். ( புதிய தமிழகம் இம்முறை அதிமுக கூட்டணி). 2009 இல் சுயேட்சையாக கேட்டார். (நாடாளுமன்ற தேர்தல்). 2019 இல் நாம் தமிழர் கட்சி சார்பாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். அதன் பிறகு ‘தமிழ்த் தேசிய புலிகள்’ என்ற கட்சியை உருவாக்கினார். இப்பொழுது காங்கிரஸ். அடுத்தது ?
  21. போன டிசம்பர் மாதம், நாதமுனியோடு சேர்ந்து ஒரு மானஸ்தர், சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைகாரன் காலில் விழலாம், இலங்கை தமிழ் மக்கள் இனி மேற்கை, இந்தியாவை, யாரையும் நம்பாது - சிங்களவரோடு நேரடியாக பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என எழுதினார். அந்த நல்லிணக்க நாயகனை நான் தேடுகிறேன்🤣. அரோ ஹரா!
  22. 20 இலட்சம் மாத சம்பளம் U.K. இல் என்றால் அண்ணளவாக வருடம் £ 95,000. இந்த வருமானம் பெறுவோர் எவ்வளவு? ஏன் அவைக்கு கொடுக்க வேண்டும்?
  1. Load more activity
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.