Jump to content

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. ஆதரவற்றோர் இல்லத்தை சிறுமிகள் கடத்தும் இடமாக பாவித்துள்ளார்கள்.
  3. "ஒவ்வொன்றாக குறிப்பிட்டு கேட்டால்தான் தருவீர்களா?" - தேர்தல் பத்திர வழக்கில் எஸ்.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் கேள்வி பட மூலாதாரம்,GETTY IMAGES 18 மார்ச் 2024 தேர்தல் பத்திர எண்களை பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 21-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 21-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அனைத்துத் தகவல்களையும் அளித்த பிறகு, இந்தத் தகவலை ஆணையத்திடம் சமர்ப்பித்ததாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச். 18) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “தேர்தல் பத்திரங்களில் இருந்து பெறப்படும் பணம் குறித்த முழுமையான தகவல்களை அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டும் என்று 2024 பிப்ரவரி 15-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது'' என தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ”அனைத்து தகவல்களையும் தர வேண்டும்” "அந்த உத்தரவின்படி, எஸ்பிஐ இரண்டு பகுதிகளாக தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஏப்ரல் 12, 2019 முதல், தேர்தல் பத்திரத்தை வாங்கும் நபரின் பெயர், பத்திரம் வாங்கப்பட்ட தொகை மற்றும் பிற தகவல்கள் உட்பட தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்கவும் உத்தரவிடப்பட்டது" என தெரிவித்தார். "இரண்டாம் பகுதியில், இடைக்கால உத்தரவு வரும் வரை அரசியல் கட்சிகள் எவ்வளவு தேர்தல் பத்திரங்களைப் பெற்றன, எத்தனை பத்திரங்களை பணமாக்கின என்ற விவரங்களை கேட்டிருந்தோம்" என தெரிவித்தார். “அந்த உத்தரவை நீங்கள் படித்தால், அதில் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மற்றும் அவை பணமாக்கப்பட்டது தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும் என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. முழுமையான தகவல்களை எஸ்பிஐ தரவில்லை என்பது தெளிவாகிறது” என்றார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, “எஸ்பிஐ தன்னிடம் உள்ள அனைத்து தகவல்களையும் தர வேண்டும். தேர்தல் பத்திரங்களின் எண்கள் மற்றும் சீரியல் எண்களையும் தர வேண்டும். தேர்தல் பத்திரம் தொடர்பாக இத்தகைய தகவல் எஸ்பிஐ-யிடம் இருக்கும் பட்சத்தில் அதனை தெரிவிக்க வேண்டும்” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார். பட மூலாதாரம்,ANI சரமாரி கேள்விகள் எஸ்பிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே, எஸ்பிஐ எந்த தகவலையும் மறைக்கவில்லை என்றார். "நீதிமன்ற உத்தரவின்படி கடந்த வியாழன் மாலை 5 மணிக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்திடம் அனைத்து தகவல்களையும் வழங்கியுள்ளோம். எந்த தகவலும் மறைக்கப்படவில்லை" என அவர் கூறினார். ”நீங்கள் (நீதிமன்றம்) குறிப்பிட்ட தகவலை கேளுங்கள், நாங்கள் தருகிறோம் என்பது போன்று எஸ்பிஐ அணுகுமுறை இருக்கிறது” என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறினார். "எஸ்பிஐ தலைவராக, உங்களிடம் உள்ள அனைத்து தகவல்களையும் நீங்களே பகிரங்கப்படுத்த வேண்டும்" என்றார். பத்திரத்தில் உள்ள எண் பாதுகாப்பு அம்சமா அல்லது தணிக்கையின் ஒரு பகுதியா என்று தலைமை நீதிபதி கேட்டார். இதற்குப் பதிலளித்த சால்வே, பத்திரத்தில் உள்ள எண் ஒரு பாதுகாப்பு அம்சம் என கூறினார். இதற்கு, "பத்திரத்தை பணமாக்க கிளைக்கு செல்லும்போது, பத்திரம் போலியா, இல்லையா என்பதை சரிபார்க்க இந்த எண் உள்ளதா?" என கேட்டார். ”இது ரூபாய் நோட்டு போன்றது” என சால்வே கூறினார். இந்த எண்களின் அடிப்படையில் என்ன தகவல் கிடைக்கும் என நீதிமன்றம் கேட்டது. இதைத்தொடர்ந்து எஸ்பிஐ தேர்தல் பத்திர எண்களை வழங்க வேண்டும் என்றும், அதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கூறினார். அசோசெம், ஃபிக்கி மனுக்கள் தள்ளுபடி இதனிடையே, தேர்தல் பத்திரங்களில் உள்ள பிரத்யேக சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிடக்கூடாது என ASSOCHAM, FICCI ஆகிய நிறுவனங்களும் மனுத்தாக்கல் செய்திருந்தன. ஆனால் இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுவரை என்னென்ன தகவல்கள் வெளியாகியுள்ளன? பட மூலாதாரம்,GETTY IMAGES தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள் வியாழக்கிழமை மாலை வெளியிடப்பட்டன. அந்தத் தகவலின்படி, இந்த காலகட்டத்தில் பாஜக ரூ.6,987 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை பணமாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில், ரூ. 1,600 கோடிக்கும் அதிகமான தேர்தல் பத்திரங்களை பணமாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கியது. இந்த நிறுவனம் மொத்தம் 1,368 பத்திரங்களை வாங்கியது, அதன் மதிப்பு ரூ.1,360 கோடிக்கும் அதிகமாகும். இருப்பினும், எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு நன்கொடை அளித்தது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. சில கட்சிகள் நன்கொடையாளர்களின் பெயர்களை வெளியிட்டன தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவேற்றம் செய்தது. தேர்தல் ஆணையம் 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து செப்டம்பர் 2023 வரை இந்தத் தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் சமர்ப்பித்திருந்தது. தற்போது தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் அத்தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளது. சில கட்சியினர் தங்களுக்கு யார், எவ்வளவு மதிப்பிலான பத்திரங்களை வழங்கினர், எப்போது பணமாக்கினோம் என்பது போன்ற முழுமையான தகவல்களை சமர்ப்பித்துள்ள நிலையில், பல கட்சியினர் எந்தெந்த பத்திரத்தில் இருந்து எவ்வளவு பணம் பெற்றனர் என்பதை மட்டும் தெரிவித்துள்ளனர். முக்கிய அரசியல் கட்சிகளில், அதிமுக, திமுக, மத சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் தங்களுக்கு யார் நன்கொடை அளித்தனர் என்பது குறித்த தகவல்களை அளித்துள்ளனர். சிக்கிம் ஜனநாயக முன்னணி மற்றும் மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி போன்ற சிறிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை எங்கிருந்து பெற்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி பாஜக சொல்லும் காரணம் என்ன? அதேசமயம், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு ஆகிய கட்சிகள் 2019-ம் ஆண்டு வரை நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை மட்டும் அளித்துள்ளன. நவம்பர் 2023-ல் இந்த கட்சிகள் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த போது, நன்கொடையாளர்கள் பற்றிய தகவலை தெரிவிக்கவில்லை. இவைதவிர, பெரும்பாலான கட்சிகள் நன்கொடை அளித்தவர்கள் குறித்து தகவல் தரவில்லை. இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய பயனடைந்த கட்சிகளில் முதலிடத்தில் பாஜகவும் இரண்டாவது இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் கட்சியும் உள்ளன. இந்த மூன்று கட்சிகளும் நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதில் மௌனம் காத்துவருகின்றனர். கடந்த ஆண்டு, தேர்தல் ஆணையத்திடம், பாஜக தாக்கல் செய்த மனுவில், “அரசியல் நிதியில் கணக்கு வைப்பதற்கும், நன்கொடையாளர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்காக மட்டுமே தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அத்தகைய சூழ்நிலையில், அச்சட்டத்தின் கீழ், நன்கொடையாளர்களின் பெயர்களை கட்சி அறியவோ அல்லது அதன் பதிவுகளை வைத்திருக்கவோ தேவையில்லை. நன்கொடையாளர்களின் பெயர்கள் பற்றிய பதிவுகள் எங்களிடம் இல்லை” என தெரிவித்தது. https://www.bbc.com/tamil/articles/c994d1gdpzvo
  4. கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய வாகனம் தொடர்பில் விசாரணை! 19 MAR, 2024 | 11:08 AM விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் ஆஜராகும் போது பயன்படுத்தியதாக கூறப்படும் வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்டது என முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்ட இந்த வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக மாத்திரமே என்பதுடன் இதில் கைதிகளை ஏற்றிச்செல்ல முடியாது எனும் நிபந்தனையை மீறி கெஹலிய ரம்புக்வெல்ல இந்த வாகனத்தை பயன்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இரகசிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/179097
  5. 19 MAR, 2024 | 11:21 AM வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் இன்று செவ்வாய்க்கிழமை (19) வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அது தொடர்பான வழக்கு இன்றையதினம் நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த 8 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதிபதி வழக்கினையும் தள்ளுபடிசெய்தார். குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, அன்ரன் புனிதநாயகம், அருள், க.சுகாஸ், தலைமையில் பல சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர். https://www.virakesari.lk/article/179099
  6. காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை செய்த இஸ்ரேலிய படையினர் - தொடர்கின்றது ஊடகவியலாளர்களை இலக்குவைக்கும் இஸ்ரேலின் நடவடிக்கை Published By: RAJEEBAN 19 MAR, 2024 | 10:56 AM காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய படையினர் 12 மணிநேரத்தின் பின்னர் அவரை விடுதலை செய்துள்ளனர். காசாவின் அல்ஸிபா மருத்துவமனையில் ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய படையினர் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அல்ஸிபா மருத்துவமனையை இலக்குவைத்து நான்காவது தடவையாக இஸ்ரேல் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்த செய்திசேகரிப்பதற்காக சக ஊடகவியலாளர்களுடன் அல்ஜசீராவின் அல்கூலும் மருத்துமவனைக்கு சென்றிருந்தார். அல்ஜசீராவின் செய்தியாளரை இஸ்ரேலிய படையினர் இழுத்துச்சென்றனர், அவரது ஊடக உபகரணங்களை அழித்தனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஊடகவியலாளர்களிற்கான அறையில் குழுமிய ஏனைய ஊடகவியலாளர்களையும் கைதுசெய்தனர் என விடுதலை செய்யப்பட்ட பின்னர் அல்ஜசீரா ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கண்கள் கைகளை கட்டிய இஸ்ரேலிய படையினர் அவர்களை நிர்வாணமாக்கி தாக்கினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாராவது அசைந்தால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வோம் என இஸ்ரேலிய படையினர் எச்சரித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் எனது சகாக்கள் சிலரும் விடுதலை செய்யப்பட்டனர் என்பதை அறிகின்றேன் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். காசாவின் மீது இஸ்ரேல் கடந்த ஐந்து மாதங்களாக மேற்கொண்டு வரும் தாக்குதல் குறித்த செய்திகளை வெளியிடும் செய்தியாளர்களிற்கான தளமாக அல்ஷிபா மருத்துவமனை காணப்படுகின்றது. அல்ஜசீரா செய்தியாளரை கைதுசெய்து சித்திரவதை செய்தனர் தாக்கினார்கள் என அல்ஜசீராவின் மற்றுமொரு செய்தியாளரான ஹனி மஹ்மூட் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179096
  7. Today
  8. 🙏🏾 🌺 உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
  9. ஒருவரின் சுயமரியாதையை கேள்விக்குள்ளாக்கும் விடயம் தங்களுக்கு கேலிக்கிரியதாகிவிட்டது வருத்தத்திற்குரியது. ☹️
  10. தனியாக இருப்பவர்களிடம் போய் கேட்டுப்பாருங்கள் நீ ஏன் தனியாக இருக்கின்றாய் என அதற்கு அவர்கள் சொல்லும் பதில் தனியாக இருப்பது பிடிக்கும் என்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.... அவர்கள் மற்றவர்களால் பலமுறை காயப்படுத்தப்பட்டிருப்பார்கள். அதனாலேயே அவர்கள் தனிமையை நாடுகின்றார்கள்.
  11. America கெளதிகளிடம் அடிவாங்கி மொக்கவீனப்படுவது பற்றி செய்திகள் வாசிப்பதில்லையோ???
  12. இப்போது இவை எல்லாம் கிடைக்கும் பெற்றுக் கொள்ளுங்கள் சிறையும். இருந்தீர்கள் ஜேர்மனியில் சிறையில் இருப்பது நல்லது சுகமான அனுபவம் வாழ்க்கை என்று கேள்வி பட்டேன் உண்மைய??? 🤣
  13. விடியற்காலை 3 மணி. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது . கணவன் மட்டும் எழுந்து போனான் . கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர் நின்று கொண்டிருந்தார். “சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க வந்து தள்ளி விட முடியுமா?” என்று அந்த குடிகாரர் கேட்டார். கணவனோ “முடியவே முடியாது, ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டு கதவை சாத்திட்டு படுக்கப் போய் விட்டான் . “யாரது?” என்று மனைவி கேட்டாள் . “எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்” “நீங்க உதவி செஞ்சீங்களா?” “இல்லை, காலைல 3 மணி, மழை வேற பெய்யுது எவன் போவான்?” “3 மாசம் முன்னாடி நம்ம கார் ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி? கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்” என்றாள் மனைவி. கணவன் எந்திரிச்சான், ட்ரஸ் பண்ணிக்கிட்டு மழையில் நனைஞ்சுகிட்டே வெளியே போனான். இருட்டுல, மழையில் சரியா தெரியாதாதால சத்தமா கேட்டான். “ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?” “ஆமா சார்” “ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே, இப்ப செய்யலாமா?” “ஆமா சார் வந்து கொஞ்சம் தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்” “எங்கே இருக்கீங்க? “இங்கதான் ஊஞ்சல் மேல உட்கார்ந்திருக்கேன் வாங்க வந்து தள்ளிவிடுங்க....” அட நன்னாரிப் பயலே.... Ha ha ha
  14. இது கேள்வி இது பதில் முடியாது ஏனெனில் புடின் கொல்வதில்லை இன்னொரு நபர் தான் கொல்லப்போகிறார்,....எனவே… காலம் கடந்தும் உண்மை வெளியில் வரும்
  15. “ஒரு நாற்பது எடுத்துத் தாங்க” “எங்கே எடுப்பது? “நான் கூட்டீற்றுப் போறன்” கேட்க்கிறேன் என்று குறை நினைக்க வேண்டாம் நாற்பது என்றால் நாற்பது பவுன்ஸ ஆ ? அங்கு பொதி வண்டி தள்ளி வருபவர்களுக்கு எவ்வ்ளவு டிப்ஸ் கொடுக்க வேண்டும். ?
  16. புட்டின். ..இரண்டு ஆண்டுகளுக்கு முன் உக்கிரேன் போர் தொடங்கும் போதும் சொன்னார் நடந்ததா ?? இல்லை இவர் சொன்ன உடனும். மூன்றாவது உலகப்போர் வரும் என்பதில்லை ஒருசில செயல்கள் நடக்கலாம் பெரும்பாலானவை நடப்பதில்லை இது ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும் ....புட்டின்,..பைடன். மோடி,.........நினைப்பது எல்லாம் நடந்து விடவில்லை நடந்து விடப்போவதுமில்லை
  17. நான் ஜேர்மனிக்கு வந்து சுகபோக வாழ்க்கை வாழவில்லை. 1982 ம் ஆண்டு வந்தேன். படிக்க அனுமதியில்லை வேலை செய்ய அனுமதியில்லை அடுத்த ஊர் செல்ல அனுமதியில்லை மணித்தியாலம் ஒரு ஜேர்மன் மார்க்குக்கு கட்டாய வேலை செய்ய வேண்டும் வீதி பெருக்குதல்,குப்பை அள்ளுதல். வேறு நாட்டுக்கு போக அனுமதி கேட்டேன் அதுவுமில்லை. வேறு நாட்டுக்கு செல்ல எத்தனித்தேன். சிறை வைத்தார்கள். ஜேர்மனி சுக போக வாழ்க்கை???? மண்ணாங்கட்டி வாழ்க்கை.😡
  18. உண்மையை சொல்லணும் உங்கள் பொதியில் 39 கிலோவா 41 கிலாவா இருந்தது?
  19. எனக்கு மேற்குலகில் நடக்கும் சில பல அரசியல் கொள்கைகள் எப்படி பிடிப்பதில்லையோ அது போல் கிரம்ளின் அரசியல் கொள்கைகளும் சில பிடிப்பதில்லை. இருந்தாலும் புட்டினுக்கு ரஷ்யாவில் பலத்த ஆதரவு இல்லை என்று சொல்வதற்கில்லை. அவர் பின் பலமான ரஷ்ய மக்கள் பின் நிற்கின்றார்கள். இதை பல ஊடகங்களே சொல்லி நிற்கின்றன. ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மேற்குலகு லிபியாவிலும் ஈராக்கிலும் எதை செய்து கிழித்தார்கள் என இன்றும் எனக்கு புரியவில்லை? மாறாக உள்நாட்டு கலவரங்களை உருவாக்கி மக்களை அகதிகளாக்கியது தான் மிச்சம். எனவே இந்த மேற்குலகு தங்களுக்கு பிடிக்காத அரசாட்சி உள்ள நாடுகளை குட்டை குப்பைகளாக்கியதுதான் மிச்சம். மேற்குலகுடைய சேட்டைகளின் பாதிப்பில் இலங்கை பிரச்சனையும் அடங்கும். மேற்குலகு எவ்வளவிற்கு தீவிரமாக நேட்டோ எனும் போர்வையில் ரஷ்யாவை ஒடுக்க நினைக்கின்றதோ அந்த அளவிற்கு ரஷ்ய தேசியவாதிகளும் உருவாகிக்கொண்டுதான் இருப்பார்கள். இருக்கின்றார்கள். ரஷ்யர்களும் தமது நாடு தமது கொள்கை என்ற வீராப்புடன் இருப்பதை நாமும் ஏற்றுக்கொண்டே ஆகும் சூழ்நிலை அல்லது கட்டாயமும் உண்டு. இன்றைய ரஷ்யா அன்று சோவியத்யூனியனாக இருந்த போது ஐரோப்பாவிடம் இருந்த பரஸ்பர பொருளாதார ஒப்பந்தங்களும் அரசியல் புரிந்துணர்வுகளும் இன்று இல்லாமல் போனதின் காரணம் என்ன? இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பேச்சுவார்த்தைகள் தானே பல பிரச்சனைகளை தீர்த்து வைத்தது. அந்த பேச்சுவார்த்தைகள் ஏன் இன்று நடை பெறவில்லை? ஆயுத முன்னேற்றமா அல்லது ஆயுத பரீட்சார்த்தமா? ரஷ்ய தேர்தல் நேர்மையாக நடந்ததா இல்லையா என்பதற்கப்பால் ரஷ்ய அதிபர் புட்டின் பின்னால் பெரும்பான்மை மக்கள் நிற்கின்றார்கள் என்பது கண்கூடு.தேர்தல் முடிவை விட அவர் பக்கம் மக்கள் நிற்கின்றார்கள்.இது வெளிப்படையாகவே தெரிந்த விடயம் நாம் அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என புட்டின் சொல்வதும் மேற்குலகினர் நவீன ஆயுதங்களை பயன்படுத்துவோம் என சூளுரைப்பதும் ஒரே குட்டைக்குள் ஊறிய மட்டைகள்.
  20. எல்லோரும் எச்சரிக்கை மட்டும் தான் விடுவர், ஏனெனில் புத்தியுள்ள தலைவர்களுக்கு status quo மாறாமல் இருப்பதே முக்கியம். இடையிடையே முன் யோசனை குறைந்த தலைவர்களும் அமைப்புகளும் - புரின், ஹமாஸ், நெரன்யாகு- போன்றவை மட்டும் சும்மா சண்டையைத் துவங்கி விட்டு முடிக்கவோ, தப்பவோ முடியாமல் நெரிபடுவினம்.
  1. Load more activity
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.