24 hours

Showing topics posted in the last 1 days.

This stream auto-updates   

 1. Past hour
 2. சிலம்பம் சுற்றி பொங்கல் விழாவை கொண்டாடிய கனடா பிரதமர் :-- செய்தி
 3. Today
 4. இப்பிடியான வாழ்க்கைப்பிரச்சனைக்கு தனிப்பொடியள் சரிவரமாட்டினம் கண்டியளோ.... அனுபவம் வெறி வெறி இம்போட்டன் எல்லோ....
 5. ஈச்சங்காயும் பழமும் காய் சிவப்பு பழம் கறுப்பு
 6. கனடாவில் உள்ள ரோரன்ரோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் பாட கற்கை நெறிகளை ஊக்குவிப்பதற்காக 2 மில்லியன் டொலர் ரொக்க நிதி அன்பளிப்பு செய்யப்பட்டு உள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் பழைய மாணவனும், பிரபல தொழிலதிபரும், வட மாகாணத்தை சொந்த இடமாக கொண்ட கனேடிய தமிழருமான கலாநிதி ரவி குகதாசன் இவ்வன்பளிப்பை மேற்கொண்டு உள்ளார். இப்பல்கலைக்கழகத்தின் 51 வருட வரலாற்றில் தனிப்பட்ட நபர் ஒருவரிடம் இருந்து கிடைக்க பெற்று உள்ள மிக பெரிய அன்பளிப்பு இதுவே ஆகும். இந்நிதியில் 1.25 மில்லியன் டொலர் இவரின் இரு பிள்ளைகளின் பெயரிலான 10 வருட கால புலமைப் பரிசில் திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இவரின் அன்பளிப்பு நிதியை பயன்படுத்தி தமிழ் பாட கற்கை நெறிகளை விஸ்தரிக்க முடியும் என்றும் புலமை பரிசில்கள், பட்டய கற்கைகள், பட்ட பின் கற்கைகள் போன்றவற்றை வழங்குவதோடு ஈழ தமிழரின் கலை, கலாசாரம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை கனேடியர்களுக்கும், ஏனையோருக்கும் எடுத்து காட்டுகின்ற செயல் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்றும் இப்பல்கலைக்கழகம் பூரண நம்பிக்கை வெளியிட்டு உள்ளது. குகதாசனின் குடும்பம் 1974 ஆம் ஆண்டு வடக்கை விட்டு வெளியேறி பிரித்தானியா சென்றது. பின்பு கனடாவில் குடியேறியது. வட ஸ்கார்பரோவில் வசித்தனர். இவர் 1978 ஆம் ஆண்டு ஸ்கார்பரோ கல்லூரியில் சேர்ந்தார். அப்போது இப்பாடசாலையில் இவருடன் சேர்த்து இரு தமிழ் மாணவர்களே பயின்றனர். இவர் ரோரன்ரோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்தில் 1982 ஆம் ஆண்டு பி. எஸ். ஸி பட்டம் பெற்றார். 1986 இல் ரோரன்ரோ பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றார். இவரை முன்மாதிரியாக கொண்டு இன்னும் ஏராளமான தமிழர்கள் இப்பல்கலைக்கழகத்தில் தமிழ் பாட கற்கை நெறியை விஸ்தரிக்க இயலுமான பங்களிப்பு செய்ய வேண்டும் என்று குகதாசன் பகிரங்கமாக கேட்டு உள்ளார். - See more at: http://www.canadamirror.com/canada/78620.html#sthash.4epu5qHa.dpuf
 7. என்ன இது எங்கடை நல்லாச்சியின்ரை தலைவர் கொஞ்ச நாளாய் ஒவ்வொண்டாய் இரத்து செய்து கொண்டு வாறார்? எங்கையோ சிக்குதே? எதுக்கும் இந்தமாதம் 20ம்திகதிக்குக்கு பிறகு பாப்பம்.
 8. அவங்கள் இருந்த ரைமிலை...... தனிமனித சுந்திரம் அது இது எண்டு கன சொப்பன சுதந்திரங்கள் இல்லாமலிருந்தது எல்லோ.... இப்ப...... ஒவ்வொரு மனிதனுக்கும் சகல சுதந்திரமும் கிடைச்சு தலைக்கு மேலை நிக்குது.....புகுந்து விளையாடுங்க தம்பிகளா... அது சரி ஊரிலை உலகத்திலை நடக்காததா சிலோனினிலை நடக்குது...
 9. Yesterday
 10. இலங்கை இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றிய தீர்மானத்திலிருந்து அவர்கள் பின்வாங்க முடியாது. ஐ.நா. இந்த விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் - ஹுசைன், சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பைத் தளமாகக் கொண்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் - ஹுசைனை, கடந்த வாரம் ஜெனிவாவுக்குச் சென்று சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போதே, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நல்லிணக்கச் செயலணியின் மக்கள் கருத்து அறியும் அறிக்கை தொடர்பிலும் இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளது. போர்க்குற்ற விசா ரணைக்கு கலப்பு நீதிமன்றப் பொறிமுறையைக் கோரும் பரிந்துரை தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. இலங்கை அரசு கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை பன்னாட்டு நீதிபதிகளின் உள்ளடக்கத்தை ஏற்க மறுப்பது தொடர்பிலும் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் - ஹூசைன், "இலங்கை அரசுதான் இணை அனுசரணை வழங்கி 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஐ.நா. அந்த நிலைப்பாட்டில் இப்போதும் உறுதியாக இருக்கின்றது. அதிலிருந்து ஐ.நா. ஒருபோதும் பின்வாங்காது" என்று ஆணையாளர் உறுதியளித்தார். http://www.tamilwin.com/special/01/132001?ref=home
 11. வடக்கு கிழக்கு இணைப்பானது எம்மால் தான்தோன்றி தனமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருந்தார். வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கனடாவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 28 வருடங்கள் மேல் இருந்தே இந்த வடக்கு கிழக்கு இணைப்பு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் எனவே அது தான்தோன்றி தனமாக எடுக்கப்பட்ட விடையம் இல்லை என தெரிவித்தார். மேலும் தமிழர்கள் பகுதியில் அத்துமீறிய குடியிருப்பை மேற்கொள்ள அன்றைய ஸ்ரீமாவோ அரசு கண்ணும் கருத்துமாக இருந்தது. கிழக்கில் சிங்கள மக்களை வேண்டும் என்றே அரசு கொண்டுவந்து குடியேற்றியது. என குற்றம் சாட்டினார். அவ்வாறு குடியேறிய சிங்கள மக்கள் தன்னிடம் கூறும் போது தமிழர்கள் வாழும் பகுதியை உங்களுடையதாக்கி கொள்ளுமாறும் பலாத்காரமாகவே தங்களை கொண்டு வந்து அரசாங்கம் குடியேற்றினார்கள் என தெரிவித்தனர். அதன் பின்னர் அரசாங்கமானது தமக்கு தண்ணீர் வசதியோ, வேறு எந்தவித வசதிகளையோ செய்து தரவில்லை. அரசின் இந்த எண்ணத்தை நிறைவேற்ற தாங்களா கிடைத்தோம் என அவர்கள் கவலையடைந்ததாக தெரிவித்தார். மேலும் இவற்றை எல்லாம் அன்று இருந்த தமிழ் தலைமைகள் தடுக்காதமையே இன்று கிழக்கில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் சிங்கள மக்கள் உள்ளனர். வடக்கு கிழக்கில் தமிழர்கள் இன்றும் கூட இராணுவத்தினரின் உதவியுடன் அடித்து துரத்தப்படுகின்றார்கள். தற்போது கூட அகதிகளாக சென்று மீண்டும் நாட்டினை வந்தடைந்தவர்களுடைய இடங்கள் சிங்கள மக்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு “தாங்கள் உங்களுக்கு வேறு இடத்தில் காணிகளை தருகின்றோம்” என்று மத்திய அரசாங்க அலுவலர்கள் கூறுகின்றார்கள், இவ்வாறு எல்லாம் பற்றி பேசினால் எங்களை இனவாதி என முத்திரை குத்துவதாக முதல்வர் குற்றம் சுமத்தினார். http://www.canadamirror.com/canada/78578.html
 12. மூட்டு வலிகள் வருபவர்கள் இப்படியான பாதுகாப்பு அல்லது நிவாரண அணிகளை அணிந்து பாருங்கள். சில வேளைகளில் நிவாரணம் தரலாம். உணவுவகைகளும் பல நோய் நொடிகளுக்கு காரணமாக இருந்தாலும்...... உலகளாவிய இன்றைய காலநிலைகளும்..... நாகரீக மாற்றங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பல வலிகளுக்கு நாகரீக உடைகளும் ஒரு காரணம்...... நிலத்தில் இருந்து சாப்பிட்ட காலம் போய் செற்றி சோபாவில் இருந்து சாப்பிடுகின்றோம். குந்தியிருந்து மலசலம் கழித்த காலம் போய் இன்று கதிரையில் அமர்ந்திருப்பது போல் காலைக்கடன்களை கழிக்கின்றோம். நிலத்தில் இருந்து சாப்பிட்டால் எல்லா அவயங்களுக்கும் பயிற்சி.. குந்தியிருந்து காலைக்கடன்களை கழிக்கும் போது பெருங்குடல் சிறுகுடல் தொடக்கம் சிறுநீரகம் வரைக்கும் புது நிவாரணம் கிடைக்கின்றதாம்..அழுத்தங்கள் மூலம் அனைத்தும் சுகம் பெறுமாம். எம் மூதாதையருக்கு இல்லாத வருத்தங்கள் இன்றைய சமுதாயத்தினருக்கு வருகின்றது கொஞ்சம் சிந்திக்கலாம். மொடேர்ன் வாழ்க்கை மோட்டு வருத்தங்கள். மூட்டு வலிகளுக்கு பாத அணிகள் மிக மிக முக்கியம். வலிகள் உள்ளவர்கள் வைத்தியம் சம்பந்தப்பட்ட பாத அணிகள் விற்பவர்களிடம் கலந்தாலோசித்து வாங்கவும். நிச்சயம் பலன் கிடைக்கும். விலைகள் அதிகம்.ஆனால் நல்ல பலன் கிடைக்கக்கூடும்.
 13. சிலம்பம் சுற்றும் கனேடிய பிரதமர்: வைரலான காட்சிகள்… கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று உலக தமிழர்களுக்கு தனது முகப்புத்தகத்தில் தமிழில் தைப்பொங்கல் வாழ்த்து கூறி அசத்தினார். இதனை தொடர்ந்து தமிழர்களின் ஆதரவு கனேடிய பிரதமருக்கு அதிகரித்ததே செல்கின்றது. தற்போது அவர் சிலம்பம் சுற்றும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாக பரவி வருகின்றது. கடந்த 2015 ஆம் ஆண்டில் கனடா நாட்டு தமிழர்கள் நடத்திய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் சிலம்பு சுற்றும் போது எடுக்கப்பட்ட புகைப்படமே அது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான சிலம்பம் சுற்றும் போட்டி நிகழ்வொன்றில் அவர் இன மத மொழி வேறுபாடின்றி கலந்து கொண்டிருந்தமையினை எடுத்துக்காட்டுகின்றது. மேலும் தமிழர்களின் பண்டிகைக்கு தமிழில் வாழ்த்துக்களை அவர் தெரிவித்திருந்தமையால், 2015 இல் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தினை தற்போது எல்லோரும் முகநூலில் பகிர்ந்து வருகின்றனர். http://www.canadamirror.com/canada/78572.html
 14. நீங்கள் சிறுது காலம் முன் எழுதிய கதைபோல் இதுவும்
 15. ஒரு புலி கொடியை பறக்க விடுங்க ஆதி முதல் அந்தம் வரை சொல்லுவினம் இது வால் வெட்டுக்கள் துப்பறிய முடியாது அவர்களால் முடியாது நம்புங்க சாமி நம்புங்க .
 16. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈரானுக்கான விஜயத்தை இரத்து செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விஜயம் இரத்து செய்யப்பட்டமை குறித்து ஜனாதிபதி செயலகம் ஈரான் தூதரகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 23ஆம் திகதி ஈரானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். தற்போது அந்த விஜயத்தை திடீரென இரத்து செய்துள்ளார். இதேவேளை, ஈரானிய அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விஜயத்தினை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். எனினும் தற்போது இந்த விஜயம் எதற்காக இரத்து செய்யப்பட்டது என்பது குறித்த காரணங்கள் இதுவரையும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/statements/01/131950?ref=home
 17. சரியான பதில்: அம்மி, குழவி பதில் அளித்த அனைவருக்கும் பாராட்டுக்கள் காட்டுக்கை கருப்பியும், சிவப்பியும் சிரிக்கிறார்களாம், அது என்ன? (உயிருள்ளது அல்ல )
 18. கொஸ்கம - சாலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பினால் சேதமடைந்த சொத்துக்களின் பெறுமதி ஆயிரத்து 329 மில்லியன் ரூபா என அரசாங்கம் மதிப்பிட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எஸ்.எஸ்.லியனவல தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சேதமடைந்த சொத்துக்களுக்கு இதுவரை ஆயிரத்து 41 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். அனர்த்தத்திற்கு உள்ளான சிலர் இழப்பீட்டுத் தொகை போதாதென்று குறிப்பிட்டமையால் இரண்டு மூன்று தடவை மதிப்பீடுகளை மேற்கொள்ள நேர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். எஞ்சியுள்ள இழப்பீட்டுத் தொகையையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். http://www.tamilwin.com/community/01/131959?ref=home
 19. போர்க்குற்ற விசாரணைக்கு கலப்புப் பொறிமுறையை நல்லிணக்கச் செயலணியின் அறிக்கை பரிந்துரைத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் செய ல ணியின் உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. செயலணியின் அறிக்கை வெளியீட்டில் ஜனாதிபதி மைத்திரிபால கலந்துகொள்ளவில்லை. செயலணியின் பரிந்துரைக்கு தேசிய அரசின் அமைச்சர்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறானதொரு சூழலிலேயே, நல்லிணக்கச் செயலணியின் 11 உறுப்பினர்களையும் சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால திட்டமிட்டுள்ளார். ஜனாதிபதியுடன் சந்திப்பு இடம்பெறப் போவதை, நல்லிணக்கச் செயலணியின் செயலாளர் பாக்கியசோதி சரவணமுத்து உறுதி செய்தார். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங் கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பொறிமுறைகள் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்று மக்கள் கருத்து அறிவதற்காக நல்லிணக்கச் செயலணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உருவாக்கப்பட்டது. மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தி கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி அறிக்கை தயாரிக்கப்பட்டது. அறிக்கை கையளிப்புக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பல தடவைகள் நேரம் கோரப்பட்டன. மூன்று தடவைகள் இறுதி நேரத்தில் அறிக்கை கையளிப்பு இடைநிறுத்தப்பட்டன. டிசம்பர் மாதம் 21ஆம் திகதி இறுதித் தடவையாக அறிக்கை கையளிப்பு ஒத்திவைக்கப்பட்ட போது, ஜனவரி 3 ஆம் திகதி அறிக்கை கையளிப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. அன்றைய தினமும் ஜனாதிபதி மைத்திரிபால அறிக்கையைப் பெற்றுக்கொள்ளத் தவறினால், அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் என்று நல்லிணக்கச் செயலணி அறிவித்திருந்தது. ஜனவரி 3ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால அறிக்கையைப் பெற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த போதும், அந்த நிகழ்வில் அவர் பங்கேற்கவில்லை. ஆனாலும், அறிக்கை திட்டமிட்டபடி அவரின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. போர்க்குற்ற விசாரணைக்கு கலப்பு நீதிமன்றப் பொறிமுறைக்கு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதற்கு தேசிய அரசின் அமைச்சர்கள் பலரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமது நிலைப்பாட்டை இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை. இந்த நிலையில் நல்லிணக்கச் செயலணி யின் உறுப்பினர்களைச் சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார். அடுத்த வாரம் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. http://www.tamilwin.com/politics/01/132000?ref=home
 20. யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் மூன்று இடங்களில் வாள்வெட்டு - குழு மோதல்கள் இடம்பெற்றன. காது, மூக்கு என்பன இந்த மோதல்களில் துண்டாடப்பட்ட நிலையில் 11 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடாநாட்டில் சில வார அமைதியின் பின்னர் மீண்டும் தலைதூக்கியுள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மக்கள் அச்சமும் - பீதியும் அடைந்துள்ளனர். அச்சுவேலி தெற்கு கரதடி, ஏழாலை வடக்கு, அரியாலை முள்ளிப் பகுதியிலேயே இந்த மோதல்கள் - வாள்வெட்டுச் சம்பவங்கள் நடைபெற்றன. அச்சுவேலி தெற்கு கரதடியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் நடந்த மோதலில் 7 பேர் படுகாயமடைந்தனர். அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவுக்கும், ஆவரங்கால் மேற்கைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவுக்கும் கடந்த சனிக்கிழமை கைலகலப்பு நடைபெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த மோதல் சம்பவம் நடைபெற்றது என்று பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆவரங்கால் மேற்கைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், அச்சுவேலி தெற்கு கரந்தடிக்குச் சென்று மோதல்களில் ஈடுபட்டதாக முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனப் பொலிஸார் கூறினர். இந்த மோதல்களின்போது, வாள் வெட்டில் காது, மூக்கு, கண் என்பன துண்டாடப்பட்ட நிலையில் இளைஞர்கள் 7 பேர் அச்சுவேலி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். மேலதிக சிகிச்சைக்காக உடனடியாகவே அவர்கள் அனைவரும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அரியாலை முள்ளிப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே மோதல் நடைபெற்றது. இதன்போது வீடுகள் மீது கல் வீச்சுத் தாக்குதலும் நடத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. வாள்வெட்டில் படுகாயமடைந்த 4 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிஸார் சம்பவ இடத்துக்குச் செல்வதற்குள் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர் தப்பிச் சென்று விட்டனர். ஏழாலை வடக்கில் நேற்றுமுன்தினம் 7 மணியளவில் காரில் சென்று கொண்டிருந்தவர்களை, மூன்று இளைஞர்கள் மறித்துள்ளனர். அவர்களிடம் பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளனர். கத்தி, வாள் ஆயுதங்களைக் காண்பித்து அவர்கள் மிரட்டியும் காரில் இருந்தவர்கள் பணம் வழங்கவில்லை. இதனையடுத்து காரில் பயணம் செய்தவர்களைத் தாக்கியுள்ளனர். மயானத்தில் கிரியை முடித்து திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்தப் பகுதி கிராம அலுவலர் மீதும், மூவர் கொண்ட இளைஞர் குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு உடனேயே தகவல் வழங்கிய போதும் இரண்டு மணி நேரத்தின் பின்னரே சம்பவ இடத்துக்கு அவர்கள் வருகை தந்ததாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சுமத்தினர். யாழ். குடாநாட்டில் சில வாரங்களாக வாள்வெட்டுச் சம்பவங்கள் ஓய்ந்திருந்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் திடீரென மூன்று இடங்களில் வாள்வெட்டுச் சம்பவம் நடைபெற்றமை மக்களை மீண்டும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. http://www.tamilwin.com/community/01/131995?ref=home
 21. இதெல்லாம் மிருகவதையில்லை கண்டியளோ...... சும்மா கொஞ்சி விளையாடுற விளையாட்டுக்கள்.... இது கொடுமையானது.... வெள்ளைக்காரன் மிருகங்களை கேட்டுட்டுத்தான் அதுகளோடை விளையாடுவான் எண்டு நான் நினைக்கிறன்...
 22. மாவீரர்களுக்கு வீரவணக்கம்.
 23. அறுவது தாண்டீற்றுதா ? அப்ப இனிப் பரவாயில்லை யாயினி வெந்தயத்தை பொடி செய்து கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் இடுப்பு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். - இது நான் சொல்லவில்லை. பாட்டிவைத்தியத்தில் இருந்து வெட்டி ஒட்டியது. கால்சியம் அதிகம் உள்ள உணவுகளான பால், கீரை, தானியங்கள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்ப்பது மிக முக்கியம். இது எலும்புகளை வலுப்படுத்த உதவும். பச்சை காய்கறிகளில் கால்சியம் அதிகமாக உள்ளதால் காய்கறிகளை விரும்பி உண்ணுங்கள். சோயா தானியத்தில் மிக அதிகம் கால்சியம் உள்ளதால் இதை உணவில் சேர்த்துக்கொள்ள பழகுங்கள். காபி அதிகம் பருகுவதைத் தவிர்ப்பது நல்லது, இது உடலில் இருந்து கால்சியம் வெளியேறுவதை அதிகப்படுத்தும். மீன் உணவுகளை தினம்தோறும் சேர்த்துக் கொள்வது நல்லது. மேற்கூறியவை இலகுவாகக் கிடைக்கும் பொருட்கள். இவற்றைக் கொண்டு முயன்று பார்க்கலாம். முக்கியமாக வைட்டமின் D குளிகையை ஒரு ஒருநாளுக்கு ஒன்று கட்டாயம் எடுங்கள். இது நாமே கடைகளில் வாங்க முடியும். இங்கு வைத்தியர்கள் எலும்புத் தேய்மானத்துக்கு இதனையே பரிந்துரைக்கின்றனர்.
 1. Load more activity