Jump to content

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. புதினால் ஆளப்படுகின்ற ரஷ்யாவை ஒரு பொறுப்புள்ள நாட்டின் தலைவராக வரப்போகின்றவர் எப்படி ஆதரிக்க முடியும் மேற்குலகநாடுகளில் வசதியாக இருந்து விளையாடி கொண்டிருக்கின்ற வளர்ந்த ஈழதமிழ் விளையாட்டு பிள்ளைகள் சிலராலே முடியும்.
  3. 1ஒருவருக்கு விருப்பமில்லாத விடயம் தங்களுக்கு உவப்பானதாக இருக்கிறது. ஒருவருக்கு சுதந்திரமாக இருக்க, சுயமாகச் சிந்தித்துத் செயற்பட ஆர்வம் ஆனால் தாங்களோ யாருக்கும் கீழ்ப்படிந்து, சொல்வதைக் கேட்டு வேலைசெய்ய, கிடைப்பதையுண்டு வாழ சித்தமாயிருக்கிறீர்கள். இதுதான் வேறுபாடு.
  4. Lindsey Graham நேற்று உக்ரெய்ன் அதிபரைச் சந்தித்துள்ளார். இவர் ட்றம்பின் ஆதரவாளரும் உக்ரெயினுக்கான அமெரிக்க உதவியை எதிர்த்தவரும் ஆவார். இச் சந்திப்பின் பின் குறைந்த வட்டியின் அடிப்படையில் தடைபட்டுள்ள 60 பில்லியன் டொலர் உதவியை உக்ரெயினுக்கு வழங்க இவரின் ஆதரவு கிடைக்கும் போல் உள்ளது. தேர்தலில் வெல்வதற்காகவே ஒரு நாளில் யுத்தத்தை நிறுத்துவேன் என்று சொல்லி வந்த ட்றம்ப் ரஸ்யாவை ஆதரிக்க முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்திருப்பார்.
  5. Today
  6. தமிழக அரசியல் எமக்கு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சீண்டத் தேவையில்லை. 👎🏿
  7. நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்! சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
  8. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பா. மன்றின் நடுவில் 8 பேரின் விடுதலை வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
  9. ஆமாம் .....40 ஆயிரமாகத் தான் இருக்கும் ஆனால் இது மிகவும் குறைவு கொஞ்சம் கூட கேட்டிருக்கணும் 🤣🤣🤣
  10. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று ஆரம்பமாகின்றது விவாதம்! சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. அந்த வகையில் இன்று காலை 9.30 மணி முதல், மாலை 5.30 மணி வரையிலும் நாளை (20) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் விவாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373909
  11. ஜனாதிபதிக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது. வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் வடக்கு- கிழக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரியதையடுத்தே, இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முற்பகல் குறித்த கலந்துரையாடலை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே 2 அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தோடு, இவ்விவகாரம் தொடர்பாக வவுனியா பிராந்திய அலுவலக ஒருங்கிணைப்பாளரின் அறிக்கை நாளை கிடைக்கப்பெறும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் எவரும் கைது செய்யப்பட்டவர்களை வந்து பார்வையிடவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373977
  12. வணக்கம் வாத்தியார்...........! பெண் : முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா ஆண் : முதல் கனவு முதல் கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா கனவலவே கனவலவே கண்மணி நானும் நிஜம் அல்லவா சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா ஆண் : எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி ஓடி இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன் பெண் : இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன் ஆண் : தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய் கண்களை கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாய் பெண் : இதயத்தை தொலைத்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய் பெண் : ஊடல் வேண்டாம் ஓடல்கள் ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு ஆண் : கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம் ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கி விடு பெண் : நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை வன பூக்கள் வேர்க்கும் முன்னே வர சொல்லு தென்றலை வர சொல்லு தென்றலை ஆண் : தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன் அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன் பெண் : சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய் மரக்கொத்தியே மரக்கொத்தியே மனதை கொத்தி துளை இடுவாய் உள்ளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய்.......! --- முதல் கனவே முதல் கனவே ---
  13. என்ன சொல்ல வருகிறீர்கள்....ஜேர்மனியில் சட்டம் தான் ஆட்சி செய்கிறது குற்றம் செய்தால் சட்டப்படி சிறைத்தண்டனை உண்டு எனக்கு தெரிந்த பலர் அனுபவித்து உள்ளார்கள் வேறு கடவுச்சீட்டு பாவித்து பயணம் செய்ய முற்பட்டபோது கையும் மெய்யுமாக. பிடிபட்டுள்ளார்கள்....இங்கே கூடாதா வாழ்க்கை என்ற பலரும் ஊரிலுள்ள உறவினர்கள் நண்பர்கள். ....அழைத்து விட்டுள்ளார்கள் .. .ஏன்?? எதற்காக?? இப்போது கூட இங்கே வருவதற்கு நிறைய பேர் முயற்சிகள் செய்கிறார்கள் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து ஆரம்பத்தில் குமாரசாமி அண்ணை சொன்ன விடயங்களை நானும் அனுபவித்து உள்ளேன் .. உதாரணமாக பக்கத்து சிற்றிக்கு போவதற்கு தடை ....அந்த நேரத்தில் பல தமிழர்கள் பல சிற்றிகளில். வெவ்வேறு பெயர்களில் பதிந்து பணம் எடுத்துள்ளார்கள். மட்டுமல்ல பிரான்ஸ் பெல்சியம,. ... ....போன்ற பல நாடுகளில் கூட பதிந்து பணம் எடுத்து உள்ளார்கள் இவையெல்லாம் உறுதியாக கண்டு பிடிக்கப்பட்டது அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது .. குறிப்பு, ...இலங்கை கடவுச்சீட்டுகளில் ...எல்லா நாடுகளுக்குமான. இலங்கை பாஸ்போர்ட் இல் ஜேர்மனியில் உள்ள இலங்கை தூதரகம். ......இலங்கைக்கு மட்டுமே திரும்பி போகலாம்” என்று அடித்து கொடுக்கிறது கொழும்பு விமான நிலையத்தில் திரும்ப வரும் போது பல மணிநேரம் மறித்து பணம் பறிக்கிறார்கள் .....முதலாவது உங்கள் நாட்டை திருத்த முயற்சிகள் செய்யுங்கள்
  14. Bhakshak (தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளார்கள்) என்று ஒரு திரைப்படம் சமீபத்தில் இணையத்தில் பார்த்தேன்.அனாதை இல்லத்தில் சிறுமிகளை எப்படித் துன்புறுத்துகிறார்கள் என்பதை விளக்குகிறார்கள். முடிந்தால் பாருங்கள்
  15. மயிலம்மா என்று கதையைத் தொடங்கி அஞ்சலையை கலியாணம் கட்டி…, அதுசரி சுவியர் உங்கள் உண்மையான பெயர் வாமன் இல்லையே?
  16. 40,000/= பொதி வண்டி தள்ளுபவர்களுக்கு கூலி ஒரு சூட்கேசிற்கு எத்தனை ரூபாக்கள் என்று அவர்களது ஜக்கெட்டில் போட்டிருக்கும் (தற்போது 250/= என நினைக்கிறேன்) டிப்ஸ் கோடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர்கள் உங்களிடமிருந்து காசு பார்ப்பதிலேயே குறியாக இருப்பார்கள். மேலதிகாரிகளிடம் முறையிடுவேன் என்று கூறி தப்பிக்க வேண்டியது தான்.
  17. தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024 இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார். https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/
  18. யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
  19. உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........! 😂 நன்றி ஏராளன் .......!
  20. அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார். விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார். செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன, அதிக வெப்பநிலையால் மென்மையான தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம் என்றும் அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
  1. Load more activity
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.