04 January 2018 11:00 PM

This event repeats every year forever


"மாமனிதர்" குமார் பொன்னம்பலம், நினைவு வணக்க நாள்.
"மாமனிதர்" குமார் பொன்னம்பலம் அவர்களின் மறைவுக்கு, தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்க ளின் இரங்கல்  செய்தி.
தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்.
07.01.2000
தாயக தேசத்தின் விடுதலையை தணியாத இலட்சியமாக வரித்து, அந்த உன்னதமான இலட்சியத்திற்காக அரும்பணி ஆற்றிவந்த ஒரு அபூர்வமான மனிதரை நாம் இழந்துவிட்டோம். விடுதலைக்காக எரிந்து வந்த ஒரு இலட்சியச் சுடர் அணைந்துவிட்டது. பகைவனின் கோழைத்தனத்திற்கு தமிழினப் பற்றாளர் ஒருவர் பலியாகிவிட்டார்.
திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள் அரசியல் சுயநலன்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனித்துவமான மனிதர். ஒரு புரட்சிகரமான அரசியல்வாதி. நேர்மையுடன், நெஞ்சுறுதியுடன் மனித நீதிக்காக குரலெழுப்பிவந்தார். சிங்களத்தின் தலைநகரில் தனித்துநின்று சிங்கள பேரினவாதத்திற்கு சவால் விடுத்து வந்தார். ஆபத்துக்கள் சூழ்ந்திருந்தபோதும் அஞ்சா நெஞ்சத்துடன் அநீதியை எதிர்த்து போராடியவர்.
திரு.பொன்னம்பலம் அவர்கள் ஒரு உயரிய தேசப்பற்றாளர். தமிழீழ தாயகத்தில் ஆழமான பாசம்கொண்டவர். தமிழர் தேசம் தன்னாட்சி உரிமைபெற்று சுதந்திர நாடாக உருவாகவேண்டுமென ஆவல்கொண்டவர். ஆயுதப் போராட்டம் வாயிலாகவே தமிழரின் விடுதலை சாத்தியமாகும் என்பதில் அசையாத நம்பிகைகொண்டவர். அதனால் பகிரங்கமாகவே எமது விடுதலை இயக்கத்தையும், எமது இயக்கத்தின் கொள்கையையும் ஆதரித்தார். எமது விடுதலைப் போராட்டத்தை நியாயப்படுத்தி உலக அரங்கில் குரல்கொடுத்துவந்தார். நேர்மைத் திறமையுடன், அற்புதமான துணிச்சலுடன் அன்னார் ஆற்றி அரும்பணி மிகவும் பாராட்டத்தக்கது.
திரு.குமார் பொன்னம்பலம் அவர்களின் இனப்பற்றிற்கும், விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது நற்பணியை கெளரவிக்கும் முகமாக “மாமனிதர்” என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு அழித்துவிடுவதில்லை. எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அன்புடன்,
வே.பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்.
################################################
  
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்... மாமனிதர் விருது வழங்கிய நிகழ்வில் திரு.குமார் பொன்னம்பலம் அவர்களின் மனைவி, பிள்ளைகள்.

Event details


நாட்காட்டி 0 Comments · 0 Reviews

09 January 2018 11:00 PM - 09 January 2018 11:00 PM

This event repeats every year forever


வரலாற்றின் கறைபடிந்த அத்தியாயங்களுள் ஒன்றாக காணப்படும்,  4 ஆவது உலகத்  தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தினம். 
கடந்த 1974ஆம் ஆண்டு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின்,
 இறுதி நாளன்று.. ஏற்பட்ட கலவரத்தில் 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
உலகலாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த குறித்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல்,
அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு, 
அங்கு பொலிஸாரை அனுப்பி ஏற்படுத்திய கலவரத்தில் இந்த படுகொலை சம்பவம் அரங்கேறியது.

Event details


நாட்காட்டி 0 Comments · 0 Reviews

16 January 2017

கேணல் கிட்டு, லெப்.கேணல் குட்டிசிறி உட்பட.... பத்து மாவீரர்களின்  நினைவுநாள். 
சதாசிவம் கிருஸ்ணகுமார்  என்னும் இயற்பெயர் கொண்ட கேணல் கிட்டு,  இவர் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவராக அறியப்படுபவர். இவர் தனது பதினெட்டாவது வயதில் 1979 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நெருங்கிய உறவினர் ஆவார். மேலும் கிட்டு, 1991 ஆம் ஆண்டு கொழும்பில் யுத்த நிறுத்த காலத்தில் தனது காதலியான சிந்தியாவை திருமணம் செய்து கொண்டார். சிந்தியா ஒரு மருத்துவக் கல்வி மாணவி ஆவார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இராணுவப் பயிற்சி பெற்றார். 1983 ஏப்ரல் 7 இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். அதன் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு.... யாழ்ப்பாணம், கந்தர்மடம்  வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஜூலை 23 இல் இராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொண்டார்.
1983 இன் இறுதிக் காலத்தில் இந்தியாவுக்குப் பயிற்சிக்காகச் சென்ற இயக்கத்தின் முதல் குழுவில் கிட்டு இடம் பெற்றார். பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 2 இல் நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்தினார். அதே நேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கேப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 9 தில் போரினால் மரணமடைய அவரின் இடத்திற்கு கிட்டு நியமிக்கப்பட்டார். யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். காவல் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார். 1987 மார்ச் இறுதியில் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்தார். இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்றார் கிட்டு. கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது.
1989 இல் இலங்கை அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டன் சென்றார். பின்னர் லெப். கேணல் குட்டிசிறி உட்பட 10 பேருடன் குவேக்கர்ஸ் இன் சமாதானச் செய்தியுடன் சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் தமிழீழம் திரும்புகையில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து கொல்லப்பட்டார்.

Event details


நாட்காட்டி 0 Comments · 1 Review