Jump to content
  • entries
    7
  • comments
    9
  • views
    9016

காவியத் தூது


ஆதிவாசி

827 views

காவியத் தூது

bird_flying_with_letter_md_wht.gif

கிளியினைத் தூது விட்டால்..

கிறுக்காய் ஆகுமென்றாய்!

கிள்ளை மொழியினைத் தூது விட்டால்..

கிளர்ச்சியைத் தூண்டுமென்றாய்!

நிலவினைத் தூது விட்டால்..

களங்கம் நிறையுமென்றாய்!

நீள்கடலினைத் தூது விட்டால்..

ஆழமோ புரியாதென்றாய்!

மலரினைத் தூது விட்டால்..

மதுவினைச் சொரியுமென்றாய்!

மானினைத் தூது விட்டால்..

மருட்சியைப் பெருக்குமென்றாய்!

முகிலினைத் தூது விட்டால்..

முனகலே மிஞ்சுமென்றாய்!

சகியினைத் தூதுவிட்டால்..

சச்சரவு ஆகுமென்றாய்!

தென்றலைத் தூது விட்டால்..

திசை மாறிப் போகுமென்றாய்!

திரு மடலினைத் தூது விட்டால்..

அந்தரெக்ஸைக் காவுமென்றாய்!

தொலைபேசித் தூது விட்டால்..

தொல்லைகள் கூடுமென்றாய்!

நினைவிலே தூது விட்டால்..

நீள்கதையாய் ஆகுமென்றாய்!

கண்களில் தூது விட்டால்..

கருத்தழிந்து கருகுமென்றாய்!

அன்னத்தைத் தூது விட்டால்..

அழுக்காறு நீந்துமென்றாய்!

ஓடையைத் தூது விட்டால்..

பள்ளத்தில் ஒடுங்குமென்றாய்!

வாடையைத் தூது விட்டால்..

வர்ணனுள் மாயுமென்றாய்!

இணையத்தில் தூது விட்டால்..

இதயங்கள் நோகுமென்றாய்!

இன்தமிழைத் தூது விட்டால்..

இக கவிஞர் மேய்வரென்றாய்!

இரவியைத் தூது விட்டால்..

இனிமையைப் பொசுக்குமென்றாய்!

இளமையைத் தூது விட்டால்..

இப்பிறவியில் முடியுமென்றாய்!

காவியத் தூதிற்கெல்லாம்

காரணம் சொன்னாய் தோழி!

ஏதடி என் காதல் சொல்ல

உன் இதயம் காட்டும் வழி?

0 Comments


Recommended Comments

There are no comments to display.

Guest
This blog entry is now closed to further comments.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.